privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசிறுமி ஆத்யாவை படுகொலை செய்த போர்டிஸ் மருத்துவமனை !

சிறுமி ஆத்யாவை படுகொலை செய்த போர்டிஸ் மருத்துவமனை !

-

ழு வயதான ஆத்யாவுக்கு கடந்த ஆகஸ்டு 27, 2017 அன்று திடீரென காய்ச்சல் வந்துள்ளது. துவண்டு போன ஆத்யாவின் பெற்றோர் அவளை தில்லியை அடுத்துள்ள துவராகாவில் உள்ள ராக்லாண்டு மருத்துவமனையில் ஆகஸ்ட் 29 -ம் தேதி சேர்க்கிறார்கள். ஆகஸ்டு 31 -ம் தேதி ஆத்யாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமி ஆத்யா

ராக்லேண்டு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவு வசதி தமது மருத்துவமனையில் இல்லையென்றும், குருகாவ்னில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சேர்க்கும் படியும் கூறியுள்ளனர்.

அதே நாளில் போர்டிஸ் மருத்துவமனையில் தங்களது குழந்தையைச் சேர்த்து விட்டதாகச் சொல்கிறார் தந்தை ஜெயந்த். சேர்த்த அன்றே ஆத்யாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்திய போர்டிஸ் மருத்துவர்கள், அடுத்த மூன்று நாட்களுக்கு மயக்கநிலையிலேயே குழந்தையை வைத்துள்ளனர். நான்கைந்து நாட்களாகியும் குழந்தையின் நிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடியாமல் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே நின்று கண்ணாடி வழியே மயக்க நிலையில் இந்த தங்கள் பிள்ளையைப் பார்த்துக் கொண்டே இருந்துள்ளனர் அவளது பெற்றோர்.

செப்டெம்பர் 14 -ம் தேதி வரை குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. மேலும், அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்பதே தெரியாத நிலையில் தொடர்ந்து இன்குபேட்டரில் வைத்து லட்சக்கணக்கில் காசைக் கறந்துள்ளது போர்டிஸ் மருத்துவமனை. ஒவ்வொரு நாளும் சுமார் நாற்பது ஊசிகளை அந்தக் குழந்தையின் உடலில் ஏற்றியுள்ளனர் – ஒவ்வொன்றுக்கும்  பல்லாயிரம் ரூபாய் கறந்துள்ளனர்.

சாதாரண மருந்துக் கடைகளில் 500 ரூபாய் விலையில் விற்கப்படும் மெரோலான் எனும் மருந்தை 4,491 ரூபாய் விலையில் விற்றுள்ளனர். சிப்லா நிறுவனத்தால் மெரோகிரிட் எனும் வணிகப் பெயரில் தயாரிக்கப்படும் இதே மருந்தின் விலை 3,100 – இதற்கு 65,362 ரூபாய் பில் போட்டுள்ளனர். இவ்விரண்டு மருந்துக் குப்பிகளையும் சுமார் 21 முறை ஆத்யாவின் உடலில் ஊசி மூலம் ஏற்றியுள்ளனர். ஆத்யா போர்டிஸ் மருத்துவமனையில் இருந்த 14 நாட்களில் 2700 கையுறைகளைப் பயன்படுத்தியதாகச் சொல்லி அதற்காக 17,142 ரூபாய் பில்லில் சேர்த்துள்ளனர்.

போர்டிஸ் மருத்துவமனையில் சேர்த்த ஏழாவது நாளில் ஆத்யாவின் மூளை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவளது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருவதாகவும் தெரிவித்த மருத்துவர்கள், செப்டெம்பர் 9,10,11 -ம் தேதிகளில் அவளுக்கு டயாலிசிஸ் செய்துள்ளனர். இந்த நாட்களில் ஆத்யாவின் உண்மையான பிரச்சினை என்ன, அவளது உடல் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அவளது பெற்றோருக்குத் தெரிவிக்க எந்த மருத்துவரும் முன்வரவில்லை. செப்டெம்பர் 14 -ம் தேதியன்று ஆத்யாவின் மூளை 70 -ல் இருந்து 80 சதவீதம் செயலிழந்து விட்டதாகவும், ஏதாவது ஒரு வாய்ப்பில் அவள் தேறிவந்தாலும் அவளால் இயல்பாக செயல்பட முடியாதெனவும் தெரிவித்துள்ளனர்.

ஜெயந்திடம் இவ்வாறு தெரிவித்த மருத்துவர்கள், அதே நேரம் அவளது தாயைத் தனியே சந்தித்து ஆத்யாவின் உடலில் உள்ள பிளாஸ்மா முழுவதையும் மாற்றும் சிகிச்சை ஒன்றை முயற்சித்துப் பார்க்கலாம் என்றும் அதற்கு 20 லட்சம் வரை செலவாகும் என்றும் சொல்லி மேலும் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே 15.79 லட்சம் வரை செலவழித்த பின்னும் 80 சதவீத மூளை செயலிழந்து போன குழந்தையின் உடலை வைத்துக் கொண்டு மேலும் பணம் பறிக்க திட்டமிடுவதை உணர்ந்த அவளது பெற்றோர், வெண்டிலேட்டரில் இருந்து தனது குழந்தையின் உடலை எடுத்து விடுமாறு கூறியுள்ளார்.

தந்தை ஜெயந்தின் கோரிக்கையானது மருத்துவர்களின் பரிந்துரைக்கு எதிரானது என எழுதி வாங்கிக் கொண்ட மருத்துவர்கள், இறுதியில் ஆத்யாவைக் குற்றுயிரும் குலையுயிருமாக அவளது பெற்றோரிடம் ஒப்படைக்க சம்மதித்துள்ளனர். அதற்கு முன் சல்லி பைசா பாக்கியில்லாமல் மொத்தமாக வசூலித்துக் கொள்ளவும் தயங்காத மருத்துவமனை, ஆத்யாவை எடுத்துச் செல்ல தங்களது மருத்துவமனை ஆம்புலன்சைக் கூட வழங்கவில்லை.

செப்டெம்பர் 14 -ம் தேதியன்று மதியம் 2 மணிக்கே வெண்டிலேட்டரில் இருந்து ஆத்யாவை வெளியே எடுத்து விட்ட போர்டிஸ் மருத்துவமனை, அன்றைக்கு இரவு 11:30 மணிக்குத் தான் அவளது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். மீண்டும் ராக்லேண்டு மருத்துவமனைக்கே தங்கள் பிள்ளையை எடுத்துச் சென்றுள்ளனர் அந்தப் பெற்றோர். அங்கே ஆத்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்துள்ளனர்.

ஆத்யாவுக்கு ஆன்யா என்றொரு சகோதரி உண்டு. இருவரும் இரட்டைக் குழந்தைகள். தற்போது தனது சகோதரிக்கு என்னவானது என்று கேட்டு அழும் ஆன்யாவைச் எப்படிச் சமாதானம் செய்வதென்றே தமக்குத் தெரியவில்லை என்கிறார் ஜெயந்த். ஆத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் அவளது தாய் தீப்தி கருவுற்றிருந்திருக்கிறார். போர்டிஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட மனவுளைச்ச்சல் தாளாமல் தீப்தியின் வயிற்றிலிருந்த கரு சிதைந்து போயிருக்கிறது.

அடுத்தடுத்து நடந்த இழப்புகளால் சோர்ந்து போயிருந்த அந்தக் குடும்பம், தற்போது போர்டிஸ் மருத்துவமனைக்கு எதிராக வழக்குத் தொடர முடிவெடுத்துள்ளது; சமூக வலைத்தளங்களிலும் தங்களுக்கு நேர்ந்த அநீதியைக் குறித்து எழுதி வருகின்றனர்.

போர்டிஸ் அளித்த கடைசி பில்லின் சுருக்கமான விவரங்கள் கீழே :

அனுமதிக் கட்டணம் – ரூ 1,250
இரத்த வங்கி – ரூ 61, 315
பரிசோதனைக் கட்டணம் – ரூ 29, 290
மருத்துவர் கட்டணம் – ரூ 53, 900
மருந்துகள் – ரூ 3, 96, 732.48
உபகரணங்களுக்கான கட்டணம் – ரூ 71,000
சோதனைகளுக்கான கட்டணம் – ரூ 2, 17, 594
மருத்து முறைகளுக்கான கட்டணம் – ரூ 2, 85, 797
மருத்துவ உபகரணங்கள் – ரூ 2, 73, 394
இதர செலவுகள் – ரூ 15, 150
அறை வாடகை – ரூ 1, 74,000
தள்ளுபடி – ரூ 20,000
மொத்தம் – ரூ 15, 79, 322.48

***

ருத்துவ சேவையைக் கார்ப்பரேட் தொழிலாளாக கருதும் இது போன்ற கிரிமினல் கும்பல்கள், ஒருபுறம் நவீன மருத்துவம் சாதாரண ஏழை மக்களுக்கு கிடைக்காமல் பார்த்துக் கொள்கின்றனர். ஓரளவு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு குழந்தைகளின் மேல் இருக்கும் பாசம் மற்றும் நோய்களைக் குறித்து இருக்கும் அறைகுறைப் புரிதலை பயன்படுத்திக் கொண்டு அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்வதையே கார்ப்பரேட் மருத்துவமனைகள் செய்கின்றன. சமீபத்தில் தான் அபோல்லோ மருத்துவமனையிடம் சிக்கிக் கொண்ட ஹேமநாதனின் கதையைக் கேள்விப் பட்டோம்.

கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகளின்  லாப வேட்டையை உத்திரவாதப்படுத்தும் பொருட்டு, தொடர்ந்து வரும் மத்திய மாநில அரசுகளும் அரசு மருத்துவமனை வலைப்பின்னலைத் திட்டமிட்டு சிதைத்து வருகின்றது. “கையில் காசு உடலில் உயிர்”  என்பதையே தாரக மந்திரமாக கொண்ட தனியார் மருத்துவமனைகளே கதியெனும் நிலைக்கு மக்கள் திட்டமிட்டு ஆளாக்கப்படுகின்றனர். நவீன மருத்துவம் கற்கப்படும் நிலையில் இருந்தே (மருத்துவக் கல்லூரிகளில் இருந்தே) ஏழைகள் நுழைந்து விடக்கூடாது என்பதை உத்திரவாதப்படுத்தவே நீட் போன்ற தேர்வுகளையும் அறிமுகம் செய்துள்ளனர்.

மருத்துவ கார்ப்பரேட் கிரிமினல்கள் மக்களுக்கு நவீன மருத்துவத்தை அந்நியப்படுத்தி வைத்திருப்பதால் வேறு வழியின்றி விஞ்ஞானமல்லாத, விஞ்ஞானத்தால் உறுதி செய்யப்படாத மருத்துவ முறைகளை நோக்கி ஏழைகள் நெட்டித் தள்ளப்படுகின்றனர். இவ்வாறு நவீன மருத்துவம் அழைத்து வரும் செலவுகளைக் கண்டு மிரண்டு போகும் மக்கள், சேலம் லாட்ஜு வைத்தியர்கள், ஹீலர் பாஸ்கர் போன்ற பித்தலாட்டக்காரர்களை நாடிச் சென்று ஏமாந்து போகின்றனர்.

தற்போது ஆத்யாவின் நிலை சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் இருப்பதால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் விசாரணை செய்யப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எனினும், மறந்தும் கூட அவரது வாயில் இருந்து அரசு மருத்துவமனை வலைப்பின்னல் மீண்டும் வலுப்படுத்தப்படும் என்று வரவில்லை. வரவும் வராது. ஏனெனில், இந்த மொத்த அரசும் அதன் ஒவ்வொரு உறுப்புகளுமே தனியார் கார்ப்பரேட் கிரிமினல் கும்பல்களின் லாப வேட்டைக்கு விளக்குப் பிடிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவும், குற்றமிழைக்கும் தனியார்மருத்துவ மனைகளுக்கெதிராகவும் உடனுக்குடன் தெருவில் இறங்கிப் போராடுவது அவசியம்.

மேலும் :


  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. சந்தடி சாக்கில் நீட் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்… வினவின் செயல் சரியல்ல.

  2. இடம் பொருள் ஏவல் பார்த்தோ நீட் எதிர்ப்பை பதிய வேண்டும் மணிகண்டன்..இந்த குடும்பத்தின் அவலத்தில் காசு பார்த்த தனியார் மருத்துவமனையை பற்றி தங்கள் கருத்தென்ன? 2700 கையுறைகளை பயன்படுத்தி என்ன புடுங்கினார்கள்? அனிதா மருத்துவராயிருந்தால் அரச ஆஸ்பத்திரியில் உண்மையை கூறி அந்த குடும்பத்தை மேலும் வருத்தாமலாவது இருந்திருப்பார்களே? உங்களுக்கும் ‘மேன்மக்களுக்கும்’ ஆச்சாரமான ‘உயர்தர’திறமையான மருத்துவ ரோபோட்களை உருவாக்கதானே நீட் வடிகட்டி? ஆனால் பாருங்க என்னதான் இரத்தம் மாற்றி தங்க கட்டிலில் படுத்தாலும் ஒரு நாள் சாகத்தான் போறீங்க செத்து அழுகதண் போகுது இந்த மேட்டுக்குடி உடம்பு

    • என்னை பொறுத்தவரையில் நீட் மிகவும் அவசியமான ஒன்று காரணம் அடிப்படை அறிவு இல்லாமல் பலர் பணம் இருப்பதால் மருத்துவர் ஆகிறார்கள். அந்த நிலை நீட் தேர்வின் மூலம் கலையப்படுகிறது. மேலும் இந்த பிரச்சனைக்கும் நீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

      மோடி செய்யும் அனைத்தையும் கண்மூடி தனமாக எதிர்ப்பது சரியல்ல.

      போர்டிஸ் மருத்துவமனையின் செயல் சரியல்ல தான்… ரமணா படத்தில் வருவது போல் தான் அவர்களின் செயல் உள்ளது. அதற்கான தீர்வு என்ன ?

    • என்னை பொறுத்தவரையில் அனிதாவின் மரணத்திற்கு காரணம் தமிழக அரசியலும், கல்வி நிலையங்களும் தான். அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக 11 ம் பாடங்களை நடத்தாமல் நேரடியாக 12 ம் வகுப்பு பாடங்களை சொல்லி கொடுத்து மாணவர்களின் புரிந்துகொள்ளும் சிந்திக்கும் திறமையை மழுங்ககடித்து இருக்கிறார்கள். மனப்பாடம் செய்வதால் மட்டும் ஒருவர் சிறந்த மாணவர் ஆக மாட்டார்.

      கேரளா கர்நாடக ஆந்திர போன்ற அண்டை மாநில மாணவர்கள் எல்லாம் நீட் தேர்வில் பெரும் போது தமிழக மாணவர்களால் மட்டும் ஏன் முடியவில்லை. காரணம் நம் கல்வி தரம் அனிதா மரணத்திற்கு மெடிக்கல் காலேஜ் சார்பாக போராட்டங்களை நடத்திய அரசியல்வாதிகள் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

      • பாஸ் உங்களுடைய அறிவு வீங்கி கபாலத்தை விட்டு வெளியே வந்து விடும் போலிருக்கிறது. சரி சிறுமி ஆத்யா படுகொலையானதுக்கும தமிழக பாடத்திட்டத்திற்கும் என்னைய சம்மந்தம்?

        அப்போ போர்டிஸ் ல வேலை பாக்குற மருத்துவர்கள் எல்லாம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து நீட் எழுதாதவர்களா? உண்மையிலேயே கருத்துன்னு ஒன்னு எழுதுன அதா ரெண்டு பெரு படிப்பாங்கனு காறி துப்புவாங்கன்னு கொஞ்சமாவது சூடு சொரணை இருக்கா?

        • சரி சிறுமி ஆத்யா படுகொலையானதுக்கும நீட்டிற்கும் என்ன சம்பந்தம் ?

          நீங்கள் திட்டுவது என்னை அல்ல வினவை 🙂

          • அப்போ போர்டிஸ் ல வேலை பாக்குற மருத்துவர்கள் எல்லாம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து நீட் எழுதாதவர்களா? அதனால தான் அந்த சிறுமி செத்து போயிடுச்சா?.

            //போர்டிஸ் மருத்துவமனையின் செயல் சரியல்ல தான்… ரமணா படத்தில் வருவது போல் தான் அவர்களின் செயல் உள்ளது. அதற்கான தீர்வு என்ன ?//

            வக்கனையா கேள்வி மட்டும் கேக்க தெரியுதுல்ல…..இதுக்கு மோடிகிட்ட என்ன தீர்வு இருக்குனு சொல்லுங்க..

            • இதற்கு மோடி மட்டும் அல்ல யாரிடமும் தீர்வு இல்லை, காரணம் மக்களின் பேராசை மனநிலை (காசு சம்பாதிப்பதே குறிக்கோளாக வாழ்க்கை மாறி இருக்கிறது) மனிதன் அடிப்படையில் மிகவும் சுயநலவாதி, மரணத்தில் கூட தான் சம்பாதித்த பணம் செல்வாக்கு தன்னோடு வர வேண்டும் என்று நினைப்பவன்…

              இந்த பேராசை நிலை புத்தர் காலத்திலும் இருந்து இருக்கிறது, அக்பர் காலத்திலும் இருந்து இருக்கிறது தற்போதும் இருக்கிறது.

              இதற்கு தீர்வு பக்தி (உடனே எப்படி என்று கேட்காதீர்கள், அதற்கு பெரிய கட்டுரை எழுத வேண்டியிருக்கும்)

              உங்கள் பார்வையில் சொல்வது என்றால் கம்யூனிசம்.

              நான் கம்யூனிசத்தை நம்புவதில்லை, கம்யூனிசம் இதற்கான தீர்வாக இருக்க முடியாது காரணம் கம்யூனிசம் பேராசையை அடக்குமுறை அதிகாரம் மூலம் கட்டுப்படுத்துகிறது நிச்சயம் அது நிரந்தர தீர்வு அல்ல (உதாரணம் ரஷ்யா)

              நான் என்ன சொல்கிறேன் என்று புரிந்துகொள்ளாமல் தீட்டுவீர்கள் (இதை தான் வினவு உங்களை போன்றவர்களுக்கு சொல்லி கொடுத்து இருக்கிறது)

              • ஆமா சாரே….பக்தி பல்லாயிரம் ஆண்டுகளாக இங்க இருக்கு..அப்புறம் ஏன் பேராசைய தடுக்கல. உண்மையில் இங்கே பக்தியை வைத்து கள்ள கட்டிக்கிட்டு இருக்கனுங்க. ஒன்னு மோடி மாதிரு கேடிபசங்க அறியனைல உகாறாங்க.. அல்லது
                பாபா ராம்தேவ் மாதிரி கார்பொரேட் சாமியார்கள் மல்டி பில்லியனர்கள் ஆகிறாங்க..

                இன்றைய இந்துத்வா பக்தி என்பது பார்பனியமும் கார்போறேட்டும் இணைந்த அருமையான காக்டைலாக இருக்கிறது.

                கிருஷ்ணன் கோபியருடன் உல்லாசமாக இருந்தது பேராசையா இல்லை ஆசையை வெறுத்ததா? சிவபுராணம், கந்தபுராணம் கருடபுராணம் கதைகளில் வரும் கடவுள்கள் எல்லாம் பெண்கள் மேல் மோகம் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்தனவே அது அசையா பேராசையா இல்லை முற்றும் துறந்த மோன நிலையா?

                சொல்லுங்க பாஸ்.

  3. நேர்மைக்கு உதாரணமானவர் … என்று மார்தட்டிக் காெள்பவர்கள்… ஆட்சியிலுமா … இந்த அவலம் …? இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க பாேகிறார்கள் … எடுப்பார்களா …?

  4. மக்களின் பேராசையா? முதலாளிகளுக்கும் நடுத்தர வர்க்கத்துக்கும் நீங்கள் சொல்வது வேண்டுமானால் பொருந்தலாம், ஆனால் அடிப்படை வாழ்கை வசதிகளுக்கு ஏங்கும் மக்களுக்கு இந்த போதனை பொருந்துமா? செருப்படி கிடைக்கும் மணிகண்டன். ஆன்மிகம் என்ற பெயரில் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். தீர்வில்லை என புலம்புவதாக நடிக்கவேண்டாம், மக்கள் ஆட்சியில் அடிப்படை தேவைகள் நிறைவேரினாலே அது சொர்க்கபுரி. இதில ஏனுங்க அக்பர் புத்தரை எல்லாம் வம்புக்கிளுன்கிரிங்க? தீர்வு பக்தியா? ஹஹஹஹா மொக்கை போடுவதுகூட நாசூக்காக போடவேண்டும், எப்படி திங்க வழியிள்ளதபோதும் எல்லாம் அவன் செயல் என தேவாரம் படிக்கவா? மறுபடியும் செருப்படி கெடைக்கு.

    சதியால் வீழ்ந்த சோவியத் யூனியனை எத்தனை நாள்தான் கம்யூனிச வீழ்ச்சி என மூலம் தள்ள கத்துவீர்கள்? கம்யூனிசம் வீழ்த்திருந்தால் இப்போது நீங்கள் கம்மெண்டே போட தேவை இருக்காதே? உங்களை போன்றோர் கத்துவதே கம்யூனிசம் நீருபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருப்பதற்கு சான்று,

    • தெருவில் பூ விற்கும் பூக்கார அம்மாவை உங்கள் வார்த்தைகளின்படி அடித்தட்டு மக்களாக சொல்லலாம்மா ? 10 ரூபாய்க்கு விற்க வேண்டிய ஒரு முழம் பூவை 50 ரூபாய்க்கு அல்லது 100 ரூபாய்க்கு விற்பது எந்த வகையை சேர்ந்தது என்று சொல்ல முடியும்மா ? அது பேராசை இல்லாமல் வேறு என்ன ?

      பேராசை என்பது மனிதனின் இயல்பு அது ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரனாக இருந்தாலும் சரி மாற்ற முடியாது… முதலாளித்துவம் மனிதனின் இந்த பேராசையில் தான் வளர்கிறது கம்யூனிசம் இதே காரணத்தினால் தான் தோல்வி அடைந்து இருக்கிறது (பொதுவுடைமை மனித இயல்புக்கு எதிரானது)

      ஹிந்து மத பக்தி தான் தீர்வாக இருக்கும் என்பது என் வாதம் 🙂 நான் ஏன் இதை சொல்கிறேன் என்பதை புரிந்துகொள்ளும் தெளிவு உங்களை போன்றவர்களிடம் கிடையாது.

  5. தப்புதப்புதப்புதப்புதப்பு …பூக்கார அம்மா கைகறிகரர் நொங்குவிற்கும் அம்மா போன்றோரிடம் பேரம் பேசி அறிவாற்றலை நிரூபிக்கும் உங்கள் நடுத்தர வர்க்க மூளை இப்படித்தான் யோசிக்கும், 1 முழம் பூ பத்து ரூபாய் தான் என எந்த புண்ணியவான் மதித்தது? மலிவு உழைப்பை கொடுத்து கொடுத்தே தேய்ந்த மக்கள் கொஞ்சம் உரிய விலையை கேட்டவுடன் பேராசையா? வெறும் அலைக்கற்றை தரவு பாவனைக்கு அவன் சொல்லும் விலையில் ரீசார்ஜ் செய்ய ஒன்னும் குடையாது. அந்த விலையை கேட்கும் அவர்கள் கூட தங்கள் உழைப்பின் மதிப்பு தெரியாமல் ஒரு குற்ற உணர்வுடனே இருப்பார் அப்படியே அவர்கல் சொல்லும் விலையை கோமான்கள் நீங்கள் அப்படியே கொடுத்துதள்ளிட்டாலும்..

    மறுபடியும் தப்புதப்புதப்புதப்புதப்புதப்பு…
    முன்னமே சொல்லியிருக்கிறேன், விலங்கு உள்ளுணர்வுகளில் உயிர்வாழும் முதலாளித்துவம் மனிதத்துக்கு எதிரானதா? இல்லை எல்லாருக்கும் சம முன்னேற்றத்தை தரும் கம்யூனிசம் மனிதத்துக்கு எதிரானதா? முதலாளித்துவமே மனிதத்தை மறுப்பது தானே? மனிதமே பறிபோகிறதே இதில் எங்கே மனித இயல்பை பற்றி அது கவலை படும்? மனிதம் பேராசை கொண்டது என அறிவிக்க நீங்கள் யார்?

    ஹிந்து மத பக்தி (எந்த மயிர் மண்ணாங்கட்டி மத பக்தியோ) என்ன செய்கிறது என்பதை தான் கண்கூடாக பார்க்கிறோமே , அது சரி ஐயா ஒண்ணுமில்லை ஆனா திங்க சோறு வேணும் ஏன்னு சிரிக்கும் ஆட்கள்அல்லவா நீங்கள், எமக்கு தெளிவு பத்தாது தான். ஜெமொவிடம் போய் கொஞ்சம் உள்ளொளி பால் குடித்து வருகிறேன் வரட்டுமா

    • நான் முன்பே சொன்னது போல் உங்களை போன்றவர்களுக்கு நான் சொன்னது புரியாது (புரிந்துகொள்ளவும் முயற்சிக்கவில்லை) கம்யூனிசம் (எந்த மயிர் மண்ணாங்கட்டி கொள்கையோ — நீங்கள் பயன்படுத்திய வார்த்தை தான்) உங்களுக்கு வெறுப்பை வளர்க்க தான் கற்று கொடுத்து இருக்கிறதே தவிர சிந்திக்க கற்று கொடுக்கவில்லை…

      10 ரூபாய்க்கு விற்க வேண்டிய பூவை அநியாயத்திற்கு 50 ரூபாய் 100 ரூபாய் விற்றால் உரிய விலை என்று சொல்கிறீர்கள் சரி அப்படி என்றால் போர்டிஸ் செய்ததை நியாயப்படுத்துகிறீர்களா ? ஏன் நீ 1000 ரூபாய் மருந்தை அநியாயமாக 5000 ரூபாய்க்கு விற்கிறாய் என்று கேட்டால் அவர்களும் நீங்கள் சொல்லும் இதே பதிலை தான் சொல்வார்கள்.

      இங்கே 100 ரூபாய்க்கும் 5000 ரூபாய்க்கும் இருக்கும் ஒற்றுமை பேராசை தான்.

      10 ரூபாய்க்கு விற்க வேண்டிய பூவை 100 ரூபாய்க்கு விற்பதை உங்களது கம்யூனிசம் சரி என்று சொல்கிறது என்றால் 1000 ரூபாய்க்கு விற்க வேண்டிய மருந்தை 5000 ரூபாய்க்கு விற்பதை முதலாளித்துவம் சரி என்கிறது. இரண்டுமே பகல் கொள்ளை தான்.

      பொதுவுடைமை என்பது மனித இயல்புக்கு எதிரானது, நான் எனது என்னுடையது என்பது தான் மனிதனின் இயல்பு.

      அது சரி எந்த பூக்காரம்மா பேரம் பேசுகிறார் என்று சொல்லமுடியும்மா ? இப்போது எல்லாம் சென்னையில் பூக்காரம்மாவிடம் பேரமே பேச முடியாது.

      • மணிகண்டன்,

        உண்மையில் வெத்துவேட்டுக்களை தான முழங்கி கொண்டிருகின்றீரே ஒழிய வேற ஒரு வெங்காயமும் இல்லை.

        சரி யதார்த்தமாக பேசுவோம்.

        10 ரூபாய் பூ 50 ரூபாய்க்கு விற்றால் ஒருவேளை அது அதிக விலையாக இருந்தாலும் யாருக்கு என்ன பிரச்சினை. உண்மையில் காசு இருக்கிறவன் அத வாங்குறான். இல்லாதவன் அத வாங்கலனா சாமி கண்ண குத்திப்புடுமா என்ன?. இங்க இது ஒன்றும் நீர் முழங்கும் வெத்துவேட்டு போல மக்களின் வாழ்வாதார பிரச்சினையாக இல்லை.

        இப்போ போர்டிஸ் வருவோம் அல்லது வேறு எந்த எழவா வேணும்னா இருக்கட்டும். முதலில் அந்த 1000 ரூபாய் மருந்தை 5000 ரூபாய்க்கு விற்றால் என்ன நடக்கும்? போர்டிஸ் போகனும்னாலே ஒன்று பணக்காரனா இருக்கணும் அல்லாது கைமீறி கடன் வாங்கணும் இல்லையென்றால் பாடுபட்டுளைத்த பணத்தையெல்லாம் அவன்கிட்ட கொடுக்கணும். அவ்வளவு காசு இல்லைதான் சாக தான் நேரிடும். ஒருவேளை உயிர் பிழைத்தாலும் பணக்காரனகா இல்லையென்றால் கடைசி வரைக்கும் கடனை கட்டியே சாக வேண்டி இருக்கும். இங்கே இது ஒரு வாழ்வாதார பிரச்சினையா இருக்கு.

        சோ அடுத்தவாட்டி கருத்து பதியும் முன்னர் உங்க பசங்ககிட்டயாவது இல்லை பேரபசங்ககிட்டயாவாது எப்படி பேசறதுன்னு கேட்டுகிட்டு வாங்க.

        • சரி யாருக்கும் பாதிப்பு இல்லையென்றால் எவ்வுளவு வேண்டுமானாலும் விலை வைத்து விற்றுக்கொள்ளலாமா ? அதை தான் உங்கள் கம்யூனிசம் சொல்கிறதா ?

          அப்படி பார்த்தால் போர்டிஸ் மருத்துவமனைக்கு பணக்காரர்கள் தான் வருகிறார்கள் அவர்களுக்கு மருந்துகளின் விலை ஒரு பொருட்டே இல்லை… உங்களின் வார்த்தைகளின்படி போர்டிஸ் செயல் சரி என்றே சொல்ல வேண்டும்.

        • ஏன் சார் ஊர் உலகத்தில் போர்டிஸ் மட்டும் தானா இருக்கு ? அங்கே போனால் தான் உயிர் பிழைக்க முடியும்மா ? டெல்லி AIIMS பாண்டிச்சேரி ஜிப்மர் என்று நாட்டில் எவ்வுளவோ சிறந்த அரசு மருத்துவமனைகள் இருக்கிறதே அங்கே எல்லாம் போக கூடாது என்று உங்களை யாரும் தடுக்கவில்லையே… அங்கே எல்லாம் அனைத்தும் இலவசம் சிகிக்சை பெற்று போகும் போது உங்களுக்கு மருந்தும் இலவசமாக தருவார்கள்.

    • என்னை பொறுத்தவரையில் மனித தன்மைக்கும் கம்யூனிசத்திற்கும் சம்மதமே கிடையாது…

      கம்யூனிசம் அதிகபட்சம் அதிகாரம் அடக்குமுறை மூலம் மனிதனை கட்டுப்படுத்தலாம் ஆனால் அவனின் அடிப்படை குணத்தை என்றுமே மாற்ற முடியாது. ரஷ்யா இதற்கு சிறந்த உதாரணம்… நீங்கள் என்ன படிக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், எங்கே வாழ வேண்டும் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது அதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் அது உங்களின் அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமையில் கம்யூனிசம் என்ற பெயரில் தலையிடும் போது மனித இயல்பு அதை ஏர்க்காது…

      ரஷ்யா சிதறிய போது நடந்த விஷயங்களை நீங்கள் படித்து பார்த்தால் நான் சொல்வது மிக சரி என்று புரிந்துகொள்ள முடியும்.

      முதலாளித்துவம் மனிதனின் அடிப்படை இயல்பான சுயநலனை அடிப்படையாக கொண்டது அதனால் தான் அது உலகம் முழுவதும் வெற்றி பெற்று இருக்கிறது (இந்த காரணத்தினால் மட்டும் முதலாளித்துவம் சரி என்று நான் சொல்லவில்லை)

      மண்ணாசை பெண்ணாசை பொருளாசை போன்ற மனிதனின் அடிப்படை இயல்பை தன்னுணர்தல் மூலம் பக்தி மாற்றுகிறது

      • மணிகண்டன்,

        முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டதா. சூரியன் மேற்கில் உதித்து விட்டதா? எப்படி எந்த வகையில் வெற்றிபெற்று விட்டது என்பதை சொல்லாமல் சும்மா குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த கணக்காக அடித்து விட படாது.

        பாஸ்….மனிதரின் அடிப்படையான குணம் மாறாது என்கின்றீர்கள் அப்புறம் பக்தியின் மூலம் மாற்றலாம் என்கின்றீர்கள் சுயமுரணாக இருக்கிறதே….நீங்கள் வைத்திருக்கும் கருத்திலே உங்களுக்கு நம்பிக்கை இல்லையே…..

        மனிதரின் குணநலன்கள் பிறப்பின் அடிப்படையில் அல்ல(சில அடிப்படை அம்சங்கள் இருக்கலாம் – அது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும்) சுற்றுசூழல் அடிப்படையிலேயே அமைகிறது என்பதற்கு Nature vs Nurthure என்று அறிவியல் உலகில் வாதமே நடைபெற்று முடிந்துவிட்டது. நீர் இன்னும் ஆதிசங்கரனின் கயிறா பாம்பா என்ற மோன நிலையிலேயே இருக்கின்றீர்களே? உங்களை எல்லாம் வைத்துகொண்டு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

  6. எந்த மயிர் மண்ணாங்கட்டி என்றது அனைத்து மத நம்பிக்கைகளையும் குறிப்புடத்தான், தங்கள் ஹிந்து உள்ளத்தை புண்படுத்தியிருப்பின் மன்னிக்கவும், அனைத்து மனிதர்களையும் நேசிப்பது கம்யூனிசம் அவர்தம் மேம்பாடு சமாந்திரமாய் இருக்க கோருவது கம்யூனிசம். ஏமாற்றும் திறமையுள்ளவன் ஏமாற்றட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டட்டும் என அனுமதிப்பது மு.துவம், இதைவிட வேறெப்படி சுருக்கமாக போர்டிஸ் மருத்துவமனையின் கொள்ளையையும் பூக்கார அம்மா உரிய விலை கேட்பதையும் ஒன்றாக பார்க்கும் உங்களுக்கு சொல்வதென தெரியவில்லை. ஆம் கம்யூனிசம் வெறுப்பை கற்று தருகிறது, சுயநல வெறுப்பை சுரண்டல் வெறுப்பை. பொதுவுடமையே விலங்கு மனிதனாக பரிணமித்ததன் அடையாளமாக இருக்க முடியும், அதைவிட்டு விலங்கு உள்ளுனர்சியில் பிழைப்பை ஓட்டும் மு.துவம் அல்ல.

    கம்யூனிசம் எங்கெங்க என்ன படிக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், எங்கே வாழ வேண்டும் என்பதில் சர்வாதிகாரம் செலுத்துகிறது ??? கொஞ்சம் விளக்க முடியுமா????
    மு.துவதில் தான் சுதந்திரம், அடிப்படை உரிமை என சுரண்ட விட சுதந்திரம் அடிமைப்படுத்த சுதந்திரம் பூமியை கொள்ளையடிக்க சுதந்திரம் என மாறுவேடத்தில் வெகுசில நரிகள் மொத்த மனித சமுதாயத்தையும் பூமியையும் அழிவுக்கு இட்டு செல்ல ‘சுதந்திரம்’ கொடுக்க பட்டுள்ளது. ஒரு அப்பில் பழத்தை அளவுகணக்கின்றி அரித்து மேலும் அரிக்க முடியாமல் தானும் செத்து ஆப்பிளையும் அழித்து தானும் மாண்டு போகும் புழுவை போன்றது மு.துவம், இதை வெற்றி பெற்று உள்ளது என சொல்லும் உங்களை எந்த ஆஸ்பத்திரியில் சேர்ப்பது?

    மறுபபடியும் பக்தி பக்தி என புலம்பும் உங்களை புரிய முடியவில்லை, எப்படி பசித்தாலும் எல்லாம் ஒன்றுமில்லை என தியானத்தில் இருக்கவா? தன்னுனர்தல் (அதாங்க self realization) உள்ளுணர்வு , பிரபஞ்ச உள்ளுணர்வு எல்லாம் சோறு போடாதுங்க மணிகண்டன் XDD, சோறுக்காக போராடுவதுதான் வழி மக்களுக்கு, எங்கே நீங்க வேணும்னா ஒரு நாள் ‘எல்லாம் தன்னுரவே மாயையே அவன் செயலே’ என திங்காம குடியாம இருந்துபுட்டு கம்மென்ட் போடுங்க பார்ப்போம் , மவனே நாறிடும் XDD…போங்க மணிகண்டன் காமிடி பண்ணாம

    • ஒரு கம்யூனிஸ்ட் தேசத்தில் நீங்கள் நினைத்தை செய்ய முடியாது. ஒரு உதாரணம் நீங்கள் சீனா தலைநகருக்கு வேலை செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டால் போக முடியாது, அதற்கு முன் அனுமதி வாங்க வேண்டும்… சோவியத் யூனியனிலும் அப்படி தான். ஆனால் நீங்கள் டெல்லி சென்ற வேலை தேட வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் யாரிடமும் அனுமதி வாங்க தேவையில்லை உடனே போகலாம் எந்த தடையும் கிடையாது. இது ஒரு சிறிய உதாரணம் தான்

      ரஷ்யா சீனா போன்ற நாடுகளிலும் இயற்க்கை வளங்களை நிலக்கரி பெட்ரோல் போன்ற பல காரணங்களுக்காக பயன்படுத்துகிறார்கள் (உங்கள் வார்த்தைகளின்படி சுரண்டுகிறார்கள்). என்ன ஒன்று அவர்கள் கம்யூனிசம் பொதுவுடைமை என்ற பெயரில் சுரண்டுகிறார்கள் இவர்கள் முதலாளித்துவம் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள், ஒரு வித்தியாசம் ஜனநாயக நாட்டில் இதற்கு எதிராக நீங்கள் போராடலாம் கம்யூனிஸ்ட் நாடுகளில் போராட்டம் உரிமைகள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

      மோடி ஒழிக என்று நீங்கள் வாய் கிழிய கத்தலாம் மேடை போட்டு பேசலாம் ஆனால் சீனாவில் Xi ஒழிக என்று சொன்னால் முதலில் நீங்கள் இருக்க மாட்டிர்கள், ஸ்டாலின் ஒழிக என்று நினைக்க கூட முடியாது.

      அவ்வுளவு ஏன் ஸ்டாலின் ஒழிக என்று நான் சொல்லும் கருத்தை கூட வினவு வெளியிட மாட்டார்கள், கம்யூனிஸ்ட்களின் கருத்து சுதந்திரம் அந்தளவுக்கு மிக மோசமானது.

      என்னை பொறுத்தவரையில் கம்யூனிஸ்ட் கொள்கையை விட ஜனநாயகம் முதலாளித்துவம் மேல் அந்த ஜனநாயகத்தில் பக்தி கடவுள் நம்பிக்கை அவசியம் என்று நினைக்கிறேன்

      • ஐயோ ஐயோ…..சுரா பானத்தை குடித்துவிட்டு வந்து என்று சொன்னால் கூட பாவம் சும்மா முகர்ந்து பாத்துவிட்டு வந்து இப்படியெல்லாம் உளறபடாது…..

        முதலில் கம்யுனிசம் என்றால் என்ன முதலாளித்துவம் என்றால் என்ன மற்றும் இந்த இரு உற்பத்தி முறைகளும் எப்படி இயங்குகின்றன என்பதை மேலோட்டமாகவாவது படித்துவிட்டு வந்து இங்கே உளறிக் கொட்டினால் ஓரளவிற்காவது மற்றவர்கள் விவாதம் செய்ய பயனுள்ளதாக் இருக்கும்.

        இன்று கம்யுனிச நாடுகள் எங்கும் கிடையாது. வேண்டுமென்றால் கம்யுனிசத்தின் கூறுகளை கொண்ட அரசுகள் இருக்கலாம். அப்படி பார்த்தல் இந்தியாவை ஏன் ஸ்காண்டிநேவியன் நாடுகள் கூட உமக்கு கம்யுனிச நாடுகள் என்று தோற்றம் தரலாம்.

        இன்றைய ரசியாவும் சீனாவும் உற்பத்தி அடிப்படையில் முதலாளித்துவ நாடுகளே. சீனா ஏன் இன்னும் வளரும் நாடுகள் பட்டியலில் இருக்கிறது என்றால் அந்நாட்டில் தாராளமயம் தனியார்மயம் அமெரிக்காவில் இருப்பது போல இன்னும் முழுவீச்சில் இல்லை இலலயுஎன்றால் அதுவும் வளர்ந்த நாடுகள் பட்டியலில் எப்போதே சேர்ந்து இருக்கும்.

        லூகாஸ் சான்செல் மற்றும் தாமஸ் பிக்கெட்டி எனும் புகழ்பெற்ற முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் பிரிட்டிஷ் ராஜ் முதல் பில்லியனர் ராஜ் வரை என்ற ஆய்வறிக்கையில் கூறியிருப்பதை படியுங்கள் அல்லது அதன் சரத்தை இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த லூகாஸ் சான்செல் கூறுவதை கேட்பதற்காவது பசு சாணி அடைத்த உம்கல காதுகளை திறவுங்கள்.

        http://www.thehindu.com/opinion/interview/income-inequality-in-india-at-its-highest-level-since-1922/article19645881.ece

        1) In Russia, the move from a communist to a market economy was extremely brutal, in a few years, Russia moved from extreme equality to extreme inequality. Today Russia has similar level of inequality as in India. Interested readers can go to our open-access website, WID.world to check all this data by themsleves

        2) China also liberalised and opened up after 1978, and in doing so, experienced a sharp income growth as well as a sharp rise in inequality. This rise, however, halted in the 2000s. Today, inequality is currently at lower level there than in India (top 1% income share at 14% versus 22% in India, according to our estimates).

        முதலில் முதலாளித்துவத்தை பற்றி அறிவதற்கு முதலாளித்துவம் கூறுவதை காது கொடுத்து கெட முயற்சி செய்யுங்கள். அப்புறம் கடவுள் நம்பிக்கை தும்பிக்கை பற்றியெல்லாம் பேசலாம்……

        • சோவியத் யூனியன் ஒரு பூலோக சொர்க்கம் என்று சில நாட்களுக்கு முன்பு தான் வினவு ஒரு கட்டுரை வெளியிட்டது, இன்று என்ன என்றால் சோவியத் கம்யூனிஸ்ட் நாடே இல்லை என்று சொல்கிறீர்கள் சீனா கம்யூனிஸ்ட் நாடு இல்லை என்கிறீர்கள் ?

          சரி கம்யூனிசம் சாத்தியம் இல்லை என்று நீங்களே சொல்லும் போது ஏன் வீணாக கம்யூனிசம் பேசி கொண்டு இருக்கிறீர்கள் ?

          கம்யூனிசம் பற்றி என் மிக முக்கிய குற்றசாட்டு அது மக்களை அடிமைகளை போல் நடத்தும் என்பதே ஆனால் நீங்கள் ரொம்ப வசதியாக அதற்கு பதில் சொல்லாமல் வேறு ஏதோ பேசி கொண்டு இருக்கிறீர்கள்.

          • மணிகண்டன் கம்யூனிஸ்டுகள் தேனாறு பாலாறுக்கெல்லாம் கியாரண்டி குடுத்து ஆட்சிக்கு வந்து மக்களை சுரண்டும் கும்பல் அல்ல. பிரிவினையும் தேசியவாதமும் தூண்டிவிடப்பட்டு உடைக்கப்பட்ட சோவியத் யூனியனின் வீழ்ச்சியை எப்படி கம்யூனிசத்தின் முடிவென / சாத்தியம் இல்லை என கூறுவீர்கள்? நீங்கதான் கம்யூனிசத்துக்கு கில் சுவிட்சியா?

            பெயருக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி எனினும் மு.துவ தில் மூழ்கி போன சீனாவில் இருந்தே நாம் வருவதாக நம்பிகொண்டிருக்கிரீரோ? பிரிய முடியாத டாங்கோ ஆட்டத்தில் அமெரிக்காவுடன் சிக்கிவிட்ட சீன மு.துவத்தின் ‘சாதனைகளை’ சந்திக்க தொடங்கிவிட்டது (விக்காமல் கிடக்கும் பிளாட்டுகள், வழமையாகிவிட்ட ‘smog’..போன்றவை வெறும் ஆரம்பமே)
            நாம் எப்போதைய்யா இப்போதைய சீனாவை எமது கம்யூனிச ரோல்மாடல் என்றோம்? உங்களுக்கு கரித்துகொட்ட வேண்டுமேன்பதட்காய் ஏன் சீனாவோடு எம்மை கோத்து விடுகிறீர்?

Leave a Reply to சின்னா பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க