privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாபாலாவின் நாச்சியார் – நக்கலைட்சின் நோச்சியார் !

பாலாவின் நாச்சியார் – நக்கலைட்சின் நோச்சியார் !

-

யக்குநர் பாலாவின் நாச்சியார் படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. பிதமாகன் விக்ரம் போல ஜி.வி பிரகாஷ் ஓடுகிறார், ஆடுகிறார், பார்க்கிறார். ஜோதிகா கடைசியில் தே … பயலே என்கிறார். இத்தகைய ஆணாதிக்க வார்த்தையை பயன்படுத்தலாமா, ஜோதிகாவுக்கு அடுக்குமா என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் சூடுபிடித்தது.

ஒரு கதையில் அதன் பாத்திரத்திற்கேற்ற உரையாடல்கள் வருவதில் என்ன பிரச்சினை? நடிகர் பிரகாஷ் ராஜ், மோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் இந்துமதவெறி வசனங்களை பேசித்தான் நடிக்க வேண்டும். மோடியை எதிர்க்கும் அவர் இத்தகைய வெறிப்பேச்சுக்களை பேசலாமா என்று கேட்பது அபத்தம்.

ஒரு படத்தில் குறிப்பிட்ட சமூகப் பின்னணியில் ஒரு இயக்குநர் படம் எடுக்கிறார். அதற்கேற்ப பாத்திரங்களையோ, வசனங்களையோ வைக்கிறார். இதில் பிரச்சினை ஏதுமில்லை. ஆனால் அந்த சமூகப் பின்னணியோ இல்லை பாத்திரங்களின் வகை மாதிரியோ யதார்த்தமாக இல்லை, தவறாக இருக்கிறது என்று விமரிசிப்போர் இயக்குநரை தாராளமாய் விமரிசிக்கலாம்.

அந்த வகையில் பாலா படங்களில்  நடிப்போரோ இல்லை பேசப்படும் வசனங்களோ பிரச்சினை இல்லை. மாறாக பாலாவின் அகவுலகமே பிரச்சினையாக இருக்கிறது. அதனால்தான் கடைசியாக வந்த தாரை தப்பட்டையில் அவரது ரசிகர்களே வெறுப்படைந்தனர். ஊரோடு முரண்படும் விட்டேத்தி சாமியார்கள் எப்போதும் கஞ்சாவோடும், கடுப்போடும் சுற்றி வருவதைப் போன்ற பாத்திரங்களை வைத்தே பல்வேறு நேரங்களில் பாலா படமாக எடுக்கிறார்.

எந்தக் கதையும் அவரது சன்னிதானத்தில் படைக்கப்படும் போது மேற்கண்டவாறு அரையும் குறையுமாக சமைக்கப்படுகிறது. சமூகத்தோடு முரண்படும் ஒரு கதாபாத்திரத்தை இயல்பாக காட்ட தெரியாத அல்லது விரும்பாத பாலா இப்படி எதிர்மறை வில்லத்தனம் நிரம்பிய சூப்பர்மேன்களாக காட்டுகிறார். அதையே எத்தனை தடவை பார்ப்பது என்பது ரசிகர்களது பிரச்சினை!

இதோ பாலாவின் பாத்திரங்களை ‘அழகாக’ காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் நக்கலைட்ஸ் நண்பர்கள்! வாழ்த்துக்கள்!

இது பாலாவின் நாச்சியார்!

இது நக்கலைட்சின் நோச்சியார்!


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. இறுதியில் அந்த உருவம் குறித்த கேலி தேவைதானா??… இது உங்களுக்கு உறுத்த வில்லையா?

  2. சினிமா உலகில் நடிப்பவர்களுக்கு எதார்த்தமான உடைகள் என்பது கிடையாது … கல்லூரியில் படிக்கும்
    பெண்களுக்கு அவர்கள் பாேடுகிற உடைகளை பார்த்தாலே புரியும் … அந்த ஒரு விஷயத்தில் ” பாலா ” அவர்களை பாராட்டத்தான் வேண்டும் … எவ்வளவுக்கு எவ்வளவு அழுக்காக நடிப்பவர்களை காட்ட முடியுமாே அந்தளவுக்கு காட்டியும் … ஒப்பனைகளில … நடிகர்களின் ” டிரேட் மார்க்” என்பதை மாற்றிய ஒரே நபர் இவராகத்தான் இருக்கும் … மீண்டும் பாலாவின் படங்களை பார்த்த பிளாஷ்பேக்குக்கு அழைத்து சென்ற நக்கலைட்ஸ் டீமுக்கு … நன்றி….!

  3. பாலா பதித்துள்ள முத்திரைகள் என்னென்ன என்பதை நக்கலைட்கள் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளனர். நன்று.

Leave a Reply to Afshana பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க