privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கஅஃப்ரசுல் கானைக் கொன்றவர்களைத் தூக்கிலிடு ! - குடும்பத்தினர் கதறல்

அஃப்ரசுல் கானைக் கொன்றவர்களைத் தூக்கிலிடு ! – குடும்பத்தினர் கதறல்

-

ராஜஸ்தானில் லவ் ஜிகாத் என்னும் பெயரில் எரித்துக் கொல்லப்பட்ட அஃப்ரசுல் கானின் குடும்பத்தினர் நம்பிக்கையற்றுக் காணப்படுகின்றனர். “அவரை ஒரு மிருகத்தைப் போல அடித்துக் கொன்று, அந்தப் படங்களையும் வெளியுலகிற்கு பகிர்ந்தவர்களைத் தூக்கிலிடவேண்டும்” என அவர்கள் கோரியுள்ளனர். இதன் பின்னணியில் சதி உள்ளதாகவும் கூறியிருக்கிறார்கள் அஃப்ரசுலின் குடும்பத்தினர்.

மேற்கு வங்கத்தின் மால்டா நகரைச் சேர்ந்த 47 வயதான முசுலீம் தொழிலாளி அஃப்ரசுல், இந்து பெண்ணை காதலித்ததாகக் கூறி எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்துத்துவ வெறியன் ஷாம்புலால் ரெகர் என்பவன் நேரடியாக இந்தக் கொலையில் ஈடுபட்டிருப்பதோடு, தனது 14 வயது மருமகனையும் இக்கொலையை படமெடுப்பதற்கு ஈடுபடுத்தியுள்ளான்.

கொலையாளி ஷம்புலால் ரீகர் – உள்படம் கொலை செய்யப்பட்ட தொழிலாளி அஃப்ரசுல் கான்

ஷாம்புலாலையும் அவனது மருமகனையும் கைது செய்த ராஜஸ்தான் டிஜிபி, “இது ஒரு கொடூரமான கொலை. சாதாரண மனிதனால் இத்தகைய கொலையை செய்திருக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

போலீசிடமிருந்து தகவல் கிடைத்ததும், கொல்கத்தாவிலிருந்து 325 கிமீ தொலைவில் உள்ள அஃப்ரசலின் வீட்டில் அவரது உறவினர்கள் துக்கத்தோடு குவிந்துள்ளனர். அஃப்ரசலின் மனைவி குல்பகர் பீபி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், “எனது கணவரை கொடூரமாக கொன்று அதனை அனைவருக்கும் படமெடுத்துக் காட்டியவர்களை தூக்கிலிட வேண்டும். எனக்கு நீதி வேண்டும். அவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காகவே கொல்லப்பட்டிருக்கிறார். நேற்று மதியம் 3 மணியளவில் இராஜஸ்தான் போலீசில் இருந்து அழைப்பு வந்தது. எனது கணவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.

அவரது மகள் ரெஜினா கான் “ கடந்த செவ்வாய்க் கிழமை தான் நாங்கள் அவரோடு பேசினோம். அவர் எங்களோடு தொலைபேசியில் தினமும் பேசுவார். ‘லவ் ஜிஹாத்’ என்றால் என்னவென்று கூட எங்களுக்குத் தெரியாது. அவருக்கு பேரன் – பேத்திகள் இருக்கிறார்கள். அவர்கள் எனது தந்தையை, தீயிட்டு எரிப்பதற்கு முன்பு, மிருகம் போல குதறியிருக்கிறார்கள். அதனைச் செய்தவர்களும் என் தந்தை பட்ட வேதனையைப் பட வேண்டும் என நான் விரும்புகிறேன். அந்த வீடியோவையும், கொல்லப்படும் போது ஆதரவற்ற நிலையில் எனது தந்தையின் கதறலையும் நான் பார்த்தேன்” என்று கூறியிருக்கிறார்.

மூன்று பெண்களின் தந்தையான அஃப்ரசுல், தனது இளைய மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய, இம்மாத இறுதியில் சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தார். சொந்த ஊரில் இருக்கும் சிறு அளவு நிலம் அவரது குடும்பத்தைப் பராமரிக்கப் போதுமானதாக இல்லாத காரணத்தால்தான் கடந்த 12 ஆண்டுகளாக அஃப்ரசுல் இராஜஸ்தானில், முறைசாரா தொழிலாளியாக பணிபுரிந்து வருவதாகவும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அவர் வீட்டிற்கு வந்து செல்வார் என்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

அஃப்ரசுலின் குடும்பத்தினர்

அஃப்ரசுலின் உறவினரான ஜீனத் கான், “ இதில் சதி இருக்கிறது. இதில் பெரிய நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஒரு தொழிலாளியால் என்ன செய்ய முடியும்? சமூக வலைத்தளங்களில் இந்தக் குற்ற நடவடிக்கை பிரபலப்படுத்தப்பட்டதன் பின்னணியை வைத்துப் பார்க்கும் போது இதற்குப் பின்னர் மிகப்பெரிய சதியும், செல்வாக்குள்ள நபர்களும் சம்பந்தப்பட்டிருப்பதையே காட்டுகிறது. எங்களுக்கு இராஜஸ்தானில் உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் இப்போது போலீசு நிலையத்தில் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

இச்செய்தி வெளியானவுடன், அஃப்ரசுலின் கிராமத்தினர்கள் அவரது வீட்டில் குவியத் தொடங்கிவிட்டிருக்கின்றனர். அஃப்ரசுலின் உடல் வருவதற்காகவும், அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகவும் காத்திருக்கின்றனர். அங்கு பலரும் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். அஃப்ரசுல் கடவுளுக்குப் பயந்த மனிதர் என அவர்கள் கூறுகின்றனர்.

அஃப்ரசுலின் அண்டை வீட்டுக்காரரான ஜிவல் சௌவுத்ரி, ”எனக்கு அவரை பல ஆண்டுகளாகத் தெரியும். இதுவரை மோசமான பின்னணி எதுவும் அவருக்குக் கிடையாது. அவர் ஒரு நல்ல மனிதர். கடவுளுக்குப் பயந்தவர்.” என்று கூறியுள்ளார். “அவரது ஏழ்மையான குடும்பத்தை இனி யார் பார்த்துக் கொள்வார்கள்?, அவரது இளைய மகள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு இவர் மட்டும் தான் வருமானம் ஈட்டித் தருபவராக இருந்தார்.” என மற்றொரு அண்டை வீட்டுக்காரரான இப்ரஹீம் கூறினார்.

மூலக்கட்டுரை : நன்றி – The Indian Express


 

  1. இந்த RSS,BJP பாசிச கும்பலை அனைத்து உழைக்கும் மக்களும் நேருக்கு நேர் நின்று மோதி அழிக்கவில்லையெனில் இந்தியா முழுமைக்கும் பற்றிப்பெருகிவிடும் என்ன செய்யப்போகிறோம்?

  2. இந்தக் கொடூரத்தைச் செய்த அந்த மிருகத்தை ,மிகக் கொடூரமான முறையில் தண்டிக்க வேண்டும்.. அது மன்ற கொடூர மனம் படைத்ல மிருகங்களுக்கு ,தவறு செய்ய பயம் ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கவேண்டும்…

  3. அப்ஃரசுலின் மனைவியின் கோபம் நியாயமானது. கொலைக்கான காரணம் அறியப்பட வேண்டும். கொலைக் குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும். கொலைகாரனை நடுவீதியில் மக்களின் கண் முன்னால் நிறுத்தி கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். அதை உலகம் முழுவதும் பார்க்கும் வகையில் நேரலையில் ஒளிப்பரப்ப வேண்டும். இது தான் வருங்கால இந்தியாவை பாதுகாக்கும். இந்தியர்களைப் பாதுகாக்கும்.

  4. இதுக்கு பதில் சொல்ல வரமாட்டாரு மாட்டு மூளை மணிகண்ட ஹிந்துத்துவா!

  5. ஒரு போலீஸ் அதிகாரியே ஒரு சாதரண மனிதனால் இந்தக் கொலையை செய்திருக்க முடியாது என்று கூறுகிறார் எனில் இந்துமதவெறி நிரம்பித் திளைத்த அந்த கொலைபாதகனை நாம் மிருகத்தோடு கூட ஒப்பிட முடியாது.எந்த ஜனநாயக விழுமீயங்களுக்கும் கட்டுப்படாத வெறியர்களாகத்தான் இளைஞர்களை உருவாக்கி வைத்திருக்கிறது சங்கபரிவார பாசிசக் கோ ழைகள்.தமிழகத்தையும் இப்படியான வெறி பிடித்த
    மதவெறி பூமியாக மாற்றுவதுற்குத்தான் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள் தமிழக தாமரை பாசிஸ்ட்டுகள்.இன்னும் எத்தனை அப்ரசெல்களையும் கெளரி லங்கேஸ்களையும் நாம் இழப்பது? இஸ்லாமிய விந்தணுவும் இந்து கருமுட்டையும் இணைந்தால் குழந்தைதானே பிறக்கும்? மதவெறியர்களே நீங்கள் அடித்துக்கொல்வதற்கு என்ன சுக்ரீவனா பிறக்கப்போகிறது?அரசே கொலைகாரக் கயவர்களை எந்த நீர்க்கச்செய்யும் விசாரணை எதுவுமின்றி தூக்கிலிடு.நாடெங்கிலும் இந்துமதவெறியை வளர்க்கும் அனைத்து மதவெறி அமைப்புகளையும் தடைசெய்.அதன் சொத்துக்களை பறிமுதல் செய்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரித்துக்கொடு. இப்பீனி பாரெங்கும் பரவாமல் நாட்டைக் காப்போம்.இஸ்லாமிய தீவிரவாதம் இதற்கு தீர்வில்லை என்பதை இஸ்லாமிய சொந்தங்களுக்கு உணர்த்தி அவர்களையும் அனைத்து ஜனநாயக முற்போக்கு புரட்சிகர இயக்கங்களுடன் ஒன்ராய் சேர்த்து மதவெறியர்களை வீதியில்
    நின்று மோதி வீழ்த்துவோம்.ஆயுதங்களும் ஒருநாள் நியாயத்தை உணரும் நாம் “இடம்” மாற வேண்டும் என்று.

  6. இஸ்லாமிய சகோதரர்களுக்கு …….,

    வணக்கம். உங்க முன்னாள் சில கருத்துகளை வைக்க விரும்புகின்றேன்.

    இந்திய -பாகிஸ்தான் பிரிவினையை விரும்பி போராடி பெற்றது முஸ்லிம்கள் தானே? அப்போது பாக்கிஸ்தானில் இருந்து ஹிந்துகள் இந்தியாவுக்கு வந்தது போன்று(அத்வானி கூட அகதியா தான் பாக்கிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்தாரு)(முஸ்லிம் லீக் தலைவர் கூட மும்பையில் இருந்து இஸ்லாமாபாத்சென்று விட்டாரே!அதே போன்று அனைத்து முஸ்லிம்களும் சென்று பாகிஸ்தான் சென்று இருக்கவேண்டியது தானே? இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவருமே பாக்கிஸ்தான் சென்று மகிழ்வாக வாழ வேண்டியது தானே? தடுத்தது யாருங்க..?

    எதுக்குங்க முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து கொண்டு கொடைச்சல் கொடுகிறீங்க? பாகிஸ்தானுக்கு போகாமல்?

    பாகபிரிவினை நடந்தாச்சு அப்புறம் முஸ்லிம் சகோதரர்கள் எதுக்கு இன்னும் இந்தியாவில் இருகனும் சொல்லுங்க?

    இஸ்லாமிய மத அடிப்டையில் தானே காஷ்மீரை தனிநாடாக கேட்கிண்றீகள்? சரி காஷ்மீரை அப்படியே முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடுகின்றோம் (ஜம்முவை அல்ல) அங்கேயாவது இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிமகளும் போய் சேர தயாரா? அதுக்கு பின்னும் இந்தியாவில் இருந்து கொண்டு கொடைச்சல் தரக்கூடாது சரியா சகோ?

    • குமாரின் கருத்து எனக்கு பிடிச்சிருக்கு … நீங்கள் மாணவர் குமார் அல்ல, குருஜி குமார்..

      • எவனோ ஒரு ஹிந்த்டுதுவா வெண்ண இதுபோன்று வழக்கை உச்சி குடுமி நீதி மன்றத்தில் போட்டு தி.மிஸ்..ரா போன்ற ஹிந்த்த்துவா சிலிப்பர் செல் “தல” கிழ் கண்ட வாதத்தை முன்வைத்து

        “””ஜின்னா தனி நாடு கோரிதானே இந்திய அரசியல் அமைப்பு சபைக்கான தேர்த்தலில் தன் இந்திய முஸ்லிம் லீக் கட்சியை பங்கேற்க வைத்தார்? அவரின் கோரிக்கைக்கு அஆதரவு தெரிவித்து தானே ஒருங்கிணைந்த இந்திய முஸ்லிம்கள் அவருக்கு ஆதரவு அழைத்து வெற்றி பெற வைத்தார்கள்? இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையை ஆதரித்த இந்திய முஸ்லிம்கள் ஏன் இன்னும் இந்திய குடியுரிமையுடன் வாழ வாழவேண்டும்? நியாயபடி அவர்கள் பாக்ஸ்தான் குடியுரிமையுடன் தானே வாழனும் பாகிஸ்தானில்?”””

        ஆமாம் முஸ்லிம்கள் எல்லாம் இந்திய குடியுரிமை அற்றவர்கள் அவர்கள் இந்தியாவில் அகதிகள் என்று தீர்ப்பை எழுதினால் அதுக்கு என்ன செய்விங்க…?

        அதுக்கு தான் இந்த விசயத்தையே இங்கே கொண்டுவந்து பேசினேன்…

        மேல் முறையீட்டில் வழக்கு கான்சிடுடன் பேஞ்சுக்கு போறப்ப என்ன வாதத்த நாம முஸ்லிம் மக்களுக்கு ஆதரவா நாம வைப்பது?

        கீழ் கண்டபடி வாதாடி எளிதில் வெல்லலாம்…

        “”ஒரு வேலை மத அடிப்டையில் தனி நாடு கோரிய ஜின்னாவுக்கு ஆதராவக 1947 க்கு முன் நடைபெற்ற அரசியல் சாசன சபைக்கு தேர்தலில் முஸ்லிம்கள் ஆதரித்ததால் அவர்களை நாம் அகதிகளாக கருதினாலும், அவர்களுக்கு பிறந்த சந்ததிகள் இந்தியாவில் பிறந்ததால் அவர்கள் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் சரத்து 5(a) படி இந்தியர்களே , இந்திய குடியுரிமை பெற்றவர்களே என்று சரியான வாதத்தை முன்வைத்து வெல்ல முடியும் அல்லவா?”

        இனி பாருங்க மோடியின் ஆட்சியில் மைனாரிர்ரிகளுக்கு எதிராக எதுவும் நடக்குங்க… மனிதாபி மானம் உள்ள நாம் தான் நம் சகோதரர்களை காக்க எல்லா தளங்களிலும் போராடவேண்டும்…….

        நான் கல்லூரியில் குருவா இருந்தவன் தான் ஆனால் குரு ஜீ கிடையாதுங்க…

    • 1. இந்தியா ஒன்றும் ஜின்னாவின் அப்பன் வீட்டு சொத்தும் அல்ல, ஜின்னாஹ் ஒன்றும் ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் தலைவரும் இல்லை, ஜின்னாஹ் கேட்டவுடன் இந்தியாவை பிரித்து கொடுக்க, எங்கே முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி ஜாதி மத பேதத்தை போக்கி நம்மை சுண்டலுக்கு கையேந்த விட்டு விடுவார்களோ என்று என்று எண்ணிய இந்துத்வ தலைவர்கள் இந்திய பாகிஸ்தான் பிரிவினையை உண்டு பண்ணினர்

      2. இந்தியா பாகிஸ்தான் பிரியும் போது இந்தியா மத சார்பற்ற நாடாகவும் பாகிஸ்தான் முஸ்லீம் நாடாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆகையால் இந்தியா ஒன்று ஹிந்துக்களின் சொத்தல்ல, இந்திய சுதந்திரத்துக்கு பெரிதும் பாடுபட்டவர்கள் முஸ்லிம்கள்; ஆனால் ஒரு ஆர் எஸ் எஸ் தலைவர் கூட ஈடுபடவில்லை, மன்னிப்பே கடிதம் எழுதி கொடுத்த கேவப்பிறவிகள்

      3. காசுமீரை தருவதற்கு நீ யார்? வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியா அது பிடிக்கவில்லை என்றால் நீ கபர்ஸ்தான் போயிடு

      • சகோ ஆசாக் , வா போ என்று ஒருமையில் பேசும் நிலைக்கு வந்துட்டீங்க சகோ ஆசாக்…. நீங்க அப்படியே தொடரலாம்… நான் என் நாகரிகத்தின் அடிப்டையிலேயே பேசறேன் வாங்க போங்க என்று… என்ன சரிங்களா?

        விசயத்துக்கு வருவோம். இந்திய அரசியல் சாசன சபைக்கான தேர்த்தல்… அதில் இந்திய முஸ்லிம் லீக் அதாங்க திரு ஜின்னா வின் கட்சி 70க்கும் மேலான இடங்களில் வெற்றி பெறுகிறது… எதன் அடிப்டையில் ? மத அடிபடையிலான தனி நாடு கோரிக்கை அடிபடையில்… வென்ற பின் திரு ஜின்னா அவர்கள் இந்திய அரசியல் நிர்ணய சபை கூறுவதனை புரகனிக்ன்றார்… அப்புறம் இந்திய அரசியல் நிர்ணய சபையில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியாவுக்கு என்று தனியாக அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்படுத்துகின்றன..இப்படி தாங்க போவுது இந்திய -பாக்கிஸ்தான் பிரிவினை… பாகிஸ்தான் பிரிவினைக்கு ஈரான், ஆப்ப்கநிச்தான் வரைக்கும் அகண்ட பாரதம் பேசும் ஹிந்துத்துவா வெண்ணைகள், பாசிஸ்டுகள் எப்படி அஆதரவு தெரிவித்தார்கள் என்று நீங்க தான் விளக்கனும் சகோ…!

        என்னுடைய வாதம் என்ன என்றால் இந்தியா ஒன்றும் இந்துகளின் சொத்து கிடையாது தான்… அதே நேரத்தில் மத ரீதியான பிரிவினையை துண்டியவ்ர்கள் அப்படி தனி நாடு பெற்றவர்கள் எல்லாம் பாக்கிஸ்தானுக்கு சென்று இருக்கனும் அல்லவா? அதாவது இந்திய முஸ்லிம் லீக் கடைசியாய் அந்த தேர்தலில் ஆதரித்த இன்றைய முஸ்லிம்களின் மூதாதையர்கள்..அவர்கள் பாகிஸ்தானுக்கு போகல…சரி அவர்களை அகதியாக கருதலாம் என்கின்றேன்.

        அதே நேரத்தில் அவர்களின் சந்ததிகள் இந்தியாவில் பிறந்தது இருபதால் இந்திய அரசியல் சாசன சட்டம் சரத்து 5(a) படி அவர்கள் இந்தியர்களே என்கின்றேன்.

        முஸ்லிம்களின் சுதந்திர போராட்ட தியாகம் எப்படி பட்ட தியாகம் என்பதற்கு அவற்றின் சிறப்பம்சங்களை தொகுத்து தனியான புத்தகமே எழுதலாம்… ஹிந்துதுவாகள் இந்திய சுதந்திரத்துக்கு செய்த துரோகங்களை பட்டியல் இட ஒரு புத்தகம் போதாது… வெள்ளையனிடம் மன்னிப்ப்பு கடிதம் எழுதி கொடுத்த rss தலைவர் முதல் வாஜிபாய் வரைக்கும் அனைத்துமே துரோக வரலாறே…

        காஸ்மிரிகள் எந்த அடிப்படையில் தனி நாடு கோரி போராடிகிட்டு இருக்காங்க என்ற எனது இந்த கேள்விக்கான உங்க விடையில்தான் உங்களுக்கு நான் பதில் அளிக்க முடியும்…சகோ…

      • இந்த விடயத்தில் அசாக்குடன் ஆமோதிக்கிறேன், இந்துவாவாதிகளின் பெரும் பயம் இசுலாம் பரவினால் அவர்களின் கட்டுகோப்பான சாதியம் மற்றும் சுரண்டல் எல்லாம் பறந்துடும். வெள்ளையனை நக்கி பிழைத்த ,பிழைத்து கொண்டிருக்கும் இந்த நாய்கள் நாட்டுக்கு உரிமை கோரவோ தேச பக்தி பற்றி பாடம் எடுக்கவோ எந்த மயித்து தகுதியும் இல்லததுங்க…இப்ப கூட பாருங்க அவுந்து போன கோமணத்தை கட்ட வழியில்ல காங்கிரசு காரன் பாகிஸ்தான் காரன் கூட சதி செயர்ரானாம் ஏன்டா வெக்கமில்ல? சதி செய்ய காங்கிரசு நரிகளுக்கு பாகிஸ்தான் காரன் தான் பழக்கணும?

        குமார் என்னதான் செக்சன் போட்டு பேசினாலும் , இந்த மானகெட்ட பொழப்புக்கு பிச்ச எடுக்கலாம்

        • இந்த விவாதத்தில் பொறுமையா, பொறுப்பா, நியாயமா ஒரு எதிர் கருத்தை கூட எடுத்து வைக்காத நீங்க தான் சின்னா அறிவு பிச்சை வாங்கிகிட்டு வரனும்… அதுவரைக்கும் காத்து இருக்கேன்… சரியா?

        • நிலை தடுமாறி பேசிகிட்டு இருக்கீங்க சின்னா! இந்திய -பாக்கிஸ்தான் பிரிவினையின் போது முஸ்லிம்கள் பாக்கிஸ்தானுக்கு போய் இருந்தால் இந்தியாவில் மத பிரச்சனைகள பின்னுக்கு தள்ளபட்டு பொருளாதார ரீதியான வர்க்கப்போர் என்றோ நடந்து இன்று இந்தியாவில் சிகப்பு கொடி பறந்துக்கொண்டு இருக்கும்… நம்ம வ்ர்க்கபோருக்கு எடுக்கும் நிலைப்பாடு போன்று தான் எதிராளி RSS காரனும் அவனுக்கு சாதகமான வழிகளில் மதவாதத்தின் மூலமாக முழுமையாக ஆட்சியை பிடிக்க முயன்று கொண்டு இருக்கான் அல்லவா?

          RSS காரன் முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கும் வரைக்கும் தான் இத்தகைய மதவாத அரசியலை செய்துகொண்டு இருக்கமுடியும்…

          ஆனால் இனி அப்படி பட்ட நிலை ஏற்பட சாத்தியம் இல்ல… (முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து வெளியேறுவது) எனவே மதத்தை கடந்து அவர்களை-முஸ்லிம்களை முற்போக்கு சக்திகளுக்கு கைகொடுத்து ஜனநாயக பூர்வ போரத்தில் பங்கேற்க்க வரசொல்லுங்க சின்னா…

          //இந்துவாவாதிகளின் பெரும் பயம் இசுலாம் பரவினால் அவர்களின் கட்டுகோப்பான சாதியம் மற்றும் சுரண்டல் எல்லாம் பறந்துடும்.//

      • சகோ ஆசாக் , நீங்க வைத்த பாயிண்டில் இரண்டாவது பாயிண்டில் எனக்கு ஒரு டவுட்டு! என்ன டவுட்டு என்றால் இந்திய – பாக்கிஸ்தான் பிரிவினையின் போது இந்தியா மத சார்பற்ற நாடாக தான் ஆயிற்று (குறைந்த பச்சம் பெயர் அளவுக்காவது இந்திய அரசியல் சாசன சட்டத்தில் கூட நேரு மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் இன்புலியன்சில் மத சார்பற்ற நாடாக தான் எழுதப்ப்பட்டு இருக்கு).

        இப்ப விஷயம் என்ன என்றால் பாக்கிஸ்தான் மட்டும் எதுக்கு முஸ்லிம் நாடாக பிரகடன படுத்திக்கொண்டது சகோ ஆசாக் ? இப்ப பிரிவினைக்கான நோக்கம் தெளிவாக தெரிகின்றதா உங்களுக்கு? இந்தியாவில் இருந்து முஸ்லிம் மக்களுக்கு என்று தனியா நாட்டை அதாங்க பாக்கிஸ்தானை பெறனும். அதே நேரத்தில் இந்தியாவிலும் முஸ்லிம்கள் இருக்கனும் அது மட்டுமே இந்த பிரிவினையின் நோக்கம்..இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் எல்லாம் அப்போதே பாக்கிஸ்தானுக்கு போயிட்டு இருந்திர்கள் என்றால் எந்த பிரச்னையும் மத ரீதியா ஏற்பட்டு இருக்காது இல்லவா? இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எல்லாம் ஒண்ணுமே தெரியாத அப்பாவியா நடிகாதிங்க சகோ ஆசாக்! எப்படி RSS காரர்களுக்கு இந்தியாவை ஹிந்து நாடாக மாற்ற என்னமோ அது போன்றே முஸ்லிம்களுக்கு பாக்கிஸ்தான் என்ற நாட்டை பெற்று அதனை முஸ்லிம் நாடாக பிரகடன படுத்திய பின்னும் இப்ப நீங்க வாழும் இந்தியாவையும் முஸ்லிம் நாடாக தானே விருப்பம்…

        • குறுக்கிட மன்னிக்கணும்,
          போக விருப்பம் இல்லாமல் தானே இருந்தார்கள்? முசுலிம் தேசியத்தை விரும்பியிருந்தால் அன்றே சென்றிருப்பர்களே, அப்போதே எல்லா முஸ்லிம்களும் சேந்து கூட்டு சதி செய்தார்கள் (பாதி பேர் போக மீதி இங்கிருப்பது) என்கிறீர? மாட்டுக்கறி தொடுவது தெரிந்தாலே அடித்து கொல்லப்படும் அபாயம் இருக்கும் நாட்டை மாற்ற எந்த அறிவுள்ள முசுலிமாவது நினைத்து பார்ப்பானா? ராணுவத்தில் இருக்கும் முஸ்லிம்கள் (ஜெனெரல்கள் கம்மன்டர்கள் உட்பட) சண்டை மூண்டால் பாகிஸ்தான் நோக்கி சுட வேண்டி இருக்கும் என்பது தெரிந்து தானே சேர்ந்தார்கள்? அது கூட சதியா? அரசாங்கத்துக்கே இல்லாத கவலை உங்களுக்கு எதுக்கு குமார்??

          //ப்ப நீங்க வாழும் இந்தியாவையும் முஸ்லிம் நாடாக தானே விருப்பம்…//

  7. அடா அடா அடா என்னே நேர்த்தியாக அழகாக சட்ட ரீதியாக முசுலிம் ‘சகோதரர்களை’ பாகிஸ்தான் போக சொல்றாரு குமார், யார்ரா அவன் போன்ல டிப்ஸ் பாத்து வாதம் பண்ணும் மொக்கை நாராயணனை எல்லாம் விவாதத்துக்கு அனுப்புறது. என்னொரு லா அபைடிங் நந்தலாலா கெடைசிருக்காரு..

  8. குமார் அவர்களே ஒரு மூளையில் ஒரு சிந்தனை இருப்பதே நல்லது.நீங்கள் உங்களை அறிந்தே மணிகண்ட குமாராக பரிணமிக்கிறீர்கள்.உண்மையிலேயே உங்கள் போக்கு பார்ப்பனீயத்தை நேரடியாக ஆதரீக்கும் மணீகண்டண்களை ஆபத்தானது.உங்கள் கருத்து பாசிச வடிவிலானது என்பதை நீங்கள் உணர இந்தக்கேள்விக்கு பதில் தந்தால் போதும். மோடிகளின் காட்டாட்சியில் தலித் சொந்தங்கள் உரித்து வீசப்படுகின்றனரே அவர்களை ஒட்டுமொத்தமாக “இந்து”நேபாள நாட்டிற்கு போகச்சொல்லி விடலாமா?

  9. நெப்போலியன் மற்றும் ஆர் , மேல் உள்ள எனது கருத்து குடியுரிமை பற்றியது. இது போன்று பல்வேறு case law க்கள் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புகளாக வந்து உள்ளன. நான் முன்பே கூறியது போன்று இனி பாருங்க மோடியின் ஆட்சியில் மைனாரிர்ரிகளுக்கு எதிராக எதுவும் நடக்குங்க… மனிதாபி மானம் உள்ள நாம் தான் நம் சகோதரர்களை காக்க எல்லா தளங்களிலும் போராடவேண்டும்…….அடுத்து நேப்பாளம் ஒன்றும் இந்து தேசம் அல்ல… அது காவிகளின் தேசமும் அல்ல… அங்கிருந்த ஹிந்து ராஜாவும் நாட்டை விட்டு ஓடிவிட்டார்.. இப்ப அங்கே காவிக்கு பதிலாக சிவப்பு தான் பறந்து கொண்டு இருக்கு…இந்தியாவில் பிறந்த எவரையும் முஸ்லிம்கள் உடபட மோடி உட்பட வெளியேற்ற இயலாது… காரணம் அவர்கள் இந்தியாவில் பிறந்தவர்கள். வேண்டுமானால் மோடி போன்றவர்களை மக்கள் தளத்தில் தண்டிக்கலாம்…

    மேல் உள்ள கருத்துக்கள் அத்வானிக்கு பொருந்தாது அவர் பிறந்து வளர்ந்த பாக்கிஸ்தானிலும் ,பின்பு குடிபுகுந்த இந்தியாவிலும் குற்றவாளியாக நிற்பவர் அவர். அங்கே ஜின்னாவை கொலை செய்ய முயன்றவர், இங்கே பாபர் மசூதியை இடித்த குற்றத்துக்காக குற்றவாளியாக நிற்பவர். அவருக்கான குடியுரிமை சரியானது தானா என்று இந்திய அரசியல் சாசன சட்டப்படி சரியானது தானா என்று அறிய ஆவணங்களில் அவர் எப்போது இந்தியாவுக்குள் நுழைந்தார் என்று தேடிகொண்டு உள்ளேன்.

    • முஸ்லிம்களை பாகிஸ்தான் போகச்சொல்லி RSSகாரனை விட கேவலமாகப் பேசுகிறார் குமார் மணிகண்டன். பெரும்பான்மையினர் கருத்திற்கு எதிராக ஒற்றை முஸ்லிம்கு கூட இந்தியாவில் இருப்பததற்கு சகல உரிமையும் உண்டு என்பதை தன்னை கம்யூனிஸ்ட் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் குமாருக்கு விளங்கவில்லை.
      காஷ்மீர் விடுதலைப் போராட்டத்திற்கு மதவாதம்தான் காரணம் என்று எவ்வளவு அறிவுபூர்வமாக விளக்குகிறார்!!!
      இதில் தான் குருஜி அல்ல குரு என்றுவேறு தன்னை சிலாகித்துக் கொள்கிறார்.
      ஆசாக் அவரை ஒருமையில் பேசியது சரிதான் என்று படுகிறது.

  10. சகோ கார்த்திகேயன் , RSS காரனை விட கேவலாமாக நான் பேசுவதாக கூறும் போதே நீங்க RSS காரர்களை நல்லவர்களாக காட்ட முயலுவது தான் வெளிப்படுகிறது. சரி பரவாயில்லை…போவட்டும்…நான் விசயத்துக்கு வரேன்.இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஒருங்கிணைந்த இந்தியாவில் (பாக்கிஸ்தான் உட்பட்ட) தான் தொடங்கபட்டது என்பதனை அறிவிர்கள் என்றே நினைகின்றேன். அந்த கட்சியின் முதன்மையான நோக்கமே மத அடிபடையில் முஸ்லிம்களுக்கு என்று தனி நாடு கோருவதாக தான் இருந்தது. அந்த கோரிக்கையின் மூலமாக தான் அவர்கள் முஸ்லிம்களுக்கு என்று ஒதுக்கபட்டு இருந்த இடங்களில் இந்திய அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் பங்கேற்றார்கள் என்றும் அந்த தேர்தலில் அவர்கள் 70க்கும் மேலான இடங்களில் இந்திய முஸ்லிம் லீக் ஜின்னாவின் தலைமையில் வென்றார்கள் என்ற விசயத்தையும் தங்களுக்கு நினைவுட்ட விரும்புகின்றேன். நிற்க…

    அடுத்ததாக அப்ப்படி வென்றவர்கள் தனி நாடு கோரிக்கை தொடர்பாக அரசியல் நிர்ணய சபை கூடிய தருணத்தில் அதனை புரகனித்தார்கள் என்ற விசயத்தையும் நினைவில் நிறுத்துங்க சகோ..

    இதனை எல்லாம் செய்தவர்கள் வெறும் ஜீனானா மட்டுமே பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமே என்று நீங்க சொல்லிட்டு போயிட முடியாது. ஏன் என்றால் அந்த அரசியல் நிர்ணய சபை தேர்தலில் ஒருங்கிணைந்த இந்தியாவில் இருந்த அத்துனை முஸ்லிம்களும் தான் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் ஊடாக இந்திய-பாக் பிரிவினையை ஆதரித்தார்கள்…அப்ப மத அடிபடையிலான இந்த பிரிவினையை ஆதரித்தவர்கள் என்ன செய்யணும்? இந்த கேள்வியை உங்களிடம் எழுப்ப விரும்புகிறேன்.

    என்னுடைய பதில் என்னவென்றால் அவர்கள் ஒருங்கிணைந்த முஸ்லிம் லீக் கட்சியை ஆதரித்தவர்கள் பாக்கிஸ்தானுக்கு தானே சென்று இருக்கவேண்டும் என்பது எனது கருத்து. சரி போகல… அப்ப குடியுரிமையில் அவர்கள் நிலை என்னவாக இருந்து இருக்கனும்? அகதிகள் என்ற நிலையில் தானே அவர்கள் இருந்து இருக்கனும்.(பிரிவினையை ஆதரித்தவர்கள்) அவர்களின் பிள்ளைகள், சந்ததிகள் வேண்டுமானால் இந்திய பிரஜைகள் என்ற அந்தஸ்தை பெறமுடியும்… எப்படி என்றால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம்* 5(a) மற்றும் 5(b) படி….அவர்கள்(முஸ்லிம் சந்ததியினர்) இந்தியர்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது.என்னுடைய கருத்தில் என்ன தவறு என்று விரிவாக கூற முயலலாம் நீங்க..! RSS யை விட மோசமானவன் என்ற முத்திரை எல்லாம் வேலைக்கு ஆகாது சகோ….

    பாகிஸ்தான் பிரிவினை நடை பெறும் வரைக்கும் அமைதியாக இருந்த இந்திய முஸ்லிம்கள் அதற்கு அப்ப்புறம் தான் இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து பிரிந்து தனி கட்சியை தொடங்கினார்கள் என்பது வரலாறு … வரலாற்றை யாருமே மாற்றி எழுத முடியாது சகோ….

    கடைசியான விஷயம் காஷ்மீர் விடுதலைப் போராட்டத்த்தை எதன் அடிபடையில் நடத்துகின்றார்கள் என்பது… மத அடிபடையிலா? இல்லது இன அடிபடையிலா? இதற்கான விடையை சகோ ஆசாக் அல்லது நீங்க அளிப்பதன் மூலமாக தான் நாம் காஸ்மீர் விடுதலை போராட்டத்தை ஆதரிபதா அல்லது நியுட்ரலாக இருபதா என்று முடிவுக்கு வர முடியும்…(ஆனால் நான் காஸ்மீர் விடுதலை போராட்டத்தை எந்த தருணத்திலும் எதிர்க்கவில்லை என்று உறுதியாக கூறுகின்றேன்).

    * 5(a) இந்தியாவில் பிறந்தவர்கள் இந்திய குடியுரிமைக்கு தகுதியானவர்கள்…
    * 5(b) பெற்றோர்கள் இந்தியாவில் பிறந்து இருந்தால் அவர்கள் குழந்தைகள் இந்திய குடியுரிமைக்கு தகுதியானவர்கள்…

  11. என்னங்க குமார் இது

    //சகோ கார்த்திகேயன் , RSS காரனை விட கேவலாமாக நான் பேசுவதாக கூறும் போதே நீங்க RSS காரர்களை நல்லவர்களாக காட்ட முயலுவது தான் வெளிப்படுகிறது//

    ஒருவரை discredit செய்ய வேண்டுமென்றால் வலுவான காரணங்களை காட்ட வேண்டும், என்ன மொக்கை வாதம் நீங்க செய்வது? rss கரனை விட கேவலமாக என்றால் உடனே rss ஐ நல்லவன் என சொல்கிறார் என்பதா? சின்னபுள்ளதனமா இருக்கு

    • ஆமாம் ஆமாம் உங்களுக்கு உங்க அறிவுக்கு சின்ன புள்ள தனமா தான் இருக்கும்! ஒருத்தன் RSS காரனை விட கேவலம் என்றால் அப்ப RSS காரன் எந்த விசயத்தில் முந்தையவரை விட நல்லவன் என்று சொல்லவேண்டிய பொறுப்பும் உங்களுக்கு இருக்கு இல்ல… சொல்லுங்க பார்கலாம்?

      உதாரணத்துக்கு ஒருத்தனை கோட்சே என்ற கொலைகாரன்னை விட படு மோசமானவன் என்று சொன்னால் அப்ப கோட்சே அந்த படு மோசமான கொலைகாரனை விட எப்படி சிறந்தவன் என்று நீங்க தான் சொல்லணும் சின்னா?

      புரியுதா தர்க்கம்?

      • மிகச் சரியாக சொன்னீர்கள் குமார். RSS, காவிப் போர்வையில் அதற்கான குணத்திற்கு நேர்மையாக இருக்கிறார்கள். நீங்கள் சிகப்பு போர்வையில் இதைக் கூறுவதால் உங்களைவிட அவர்கள் சிறந்தவர்கள்தான்.

        • சகோ கார்த்திகேயன், ஒரு பக்கம் RSS காரன் ஹிந்துமத வெறியை தூண்டி அதன் மூலம் இப்ப இருக்கும் ஆட்சியை முழுமையாக முயலுகின்றார்கள்.. அதே நேரத்தில் சிறுபான்மையினர் என்ற போர்வையில் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பிரதேசங்களில் எல்லாம் முஸ்லிம்கள் தங்கள் மத வெறியை தூண்டி RSS காரனின் செயல் திட்டத்துக்கு உடன்தையாகின்றார்கள். இதனை சொன்னால் நான் RSS காரர்களை விட கேவலமானவனா? இருக்கட்டும்…

          முதலில் மத சிறுபான்மையினரை RSS சின் செயல் திட்டத்துக்கு உடந்தை ஆகாமல், அவர்கள் மதவாத கட்சியாக அணிதிரளாமல் , முற்போக்கு சக்திகளுடன் ஒருங்கிணைய சொல்லுங்க… அப்ப தான் மதவாத பிர்ச்சைகளை கடந்து வர்க்க போரும் அதன் ஊடாகத்தான் புதிய ஜனநாயக பூர்வமான தொழிலாளர் ஆட்சியும் இந்தியாவில் சாத்தியம் ஆகும்…

          என்னுடைய இந்த வாதத்துக்கு யார்வேண்டுமானாலும் பதில் அளிக்களாம்.. குறிப்பாக முஸ்லிம் சகோதரர்களின் கருத்தை எதிர்பார்க்ன்றேன்…

        • Mr. Student

          Past: He was a student,

          Present: He is a Student

          Future: (Always) Will be a Student.

          He never learned from the past. He is not learning from the present. He will not learn anything in the future. Because he is in the same class always like a failed student.

          From my prospective, learning is not only about the intelligence (Capacity) but also a man’s intention / desire to learn. If someone does not want to learn, No one can’t teach him anything.

          Where are you Mr. Student ?

          • திருவாளர் ஆர் என்கின்ற நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுங்க… என் கருத்துகள் அடிபடையில் விவாதிக்க துப்பு இல்லாமல் என்னுடைய வெங்காயத்த உரிச்சிக்கிட்டு இருப்பது சரியா? இந்த பொழப்புக்கு சும்மா இருந்து இந்த விவாதத்தை வேடிக்கை பார்கலாம் நாட்டாம…!

              • என் கருத்தில் குழம்பம் என்றால் எப்படி, எங்கே குழப்பம் என்று சொல்லணும் திருவாளர் ஆர் அவர்களே… அதனை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் நிகழகலாம், எதிர்காலம், இறந்த காலம் என்று ஸ்கூல் பையன் போல பிராட்க்டிஸ் பண்ணிகிட்டு வினவில் உளவகூடாது இல்லையா நீங்க…. உங்க tens எல்லாவற்றையும் தாண்டி ஆங்கிலத்தில் போனடிக்ஸ்(phonetics) அளவுக்கு சொல்லி கொட்டுதுட்டு தான் எங்க ஆசிரியர்கள் என்னைய பயியிர்ருவித்து இருக்காங்க நாட்டாம…

                  • உங்களை போன்ற மொக்கை மகாராஜாக்கள் இருக்கும் வரைக்கும் வினவில் கொஞ்சம் காமடிகளும் நடந்துகொண்டு தான் இருக்கும்… வினவு வாசகர்கள் சிரிக்க வேண்டாமா? அதுக்கு தான் நீங்க இருக்கீர் அல்லவா?

          • “மரணம் என்னை விழுங்கும் வரை, ஒரு மாணவனாக நான் படித்துக் கொண்டே இருப்பேன்’’.
            -கார்ல் மார்க்ஸ்

          • புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
            பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
            – லெனின்

          • எல்லாரும் பாத்துங்கப்பா, மாணவர் குமார் ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆனா இடைக்கிட அப்பிடி இப்படி எதாச்சும் காவித்தனமா எதாசும் சொல்லுவாரு, நீங்க கண்டுக்கபிடாது.

            • திருவாளர் R என்பவருக்கு கொடுத்த பதிலில் முதிரிகொட்டை மாதிரி வந்து பேசிகிட்டு இருகாரு சின்னா! யாராவது உங்க கனவில் வந்து மாணவன் குமார் அதாங்க நான்… மார்சிஸ்டு கம்யுனிஸ்டு கட்சியை சேர்த்தவர் என்று சொல்ல்லிருந்தா அந்த கனவை அப்படியே தொடராமல் எதுக்கு வினவில் வந்து கனவு கவிதையை எழுதிகிட்டு இருக்கீங்க சின்னா? இப்படி கனவு காண்பதற்கு பதிலா பல் வேறு சமுக நிலைகளில் நிலபிரபுத்துவம் முந்தியதா இல்ல முதலாளித்துவம் முந்தியதா என்று ஆராய்சி பண்ணுங்க… அதுவே தெரியலையே உங்களுக்கு!

      • நல்லா புரியுதுங்க தர்க்கமகாபிரபு
        எந்த விசயத்தில் நல்லவனா rss காரன் ? rss காரன் வெளிப்படையாக இசுலாமிய வெறுப்பை உமிழ்கிறான், நீவிர் சட்டரீதியாக என்றும் சிகப்பு போர்வையை போத்திகின்னும் நஞ்சை கக்குகிரீர். அந்த விசயத்தில் அவன் நல்லவன். இப்ப சொல்லுங்க நேரடியாக மோதும் எதிரி கேவலமா? மறைமுகமாக சீரழிக்க முயல்பவன் கேவலமா? (அட ஒங்கள இல்லைங்க, சத்தியமாதா ஒங்கள இல்லைங்க)

        • சின்னா மற்றும் திருவாளர் ஆர், சகோதரர் கார்த்திகேயனுக்கு நான் அளித்து உள்ள பதில் (பின்னுட்டம் 11.1.1.1) தான் உங்க இருவருக்கும்… உங்க அவரூறு வதந்திகளுக்கு புதுசா ஏதும் பதில் என்னிடம் இல்ல…

  12. சின்னா மற்றும் கார்திகேயன் இந்த விவாதத்தை என் மீதான தனி நபர் தாக்குதலாக தான் கொண்டு போக முயற்சிகின்றார்கள்… என் வாதத்தில் உள் நுழைந்து அதில் உள்ள நிறை குறைகளை பக்குபாய்வு செய்ய எந்த முயற்சியையும் எடுத்துக்கவே இல்ல என்ற வருத்தமான செய்தியை துயரமாக தெரிவத்த்துகொள்கின்றேன்.

  13. எல்கே அத்வானி அவர்கள் இந்தியா விடுதலை அடைந்து பத்து ஆண்டுகளுக்கு பின் தான் 1957ல் தான் இந்தியாவுக்கே வந்து இருக்காரு . அதுவரைக்கும் அவர் பாகிஸ்தானில் தான் இருந்து இருகாரு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் குடியுரிமை பற்றிய சரத்துகளில் எதுவும் அவர் இந்திய பிரஜை என்பதற்கு ஆதரவாக இல்லை…. அப்படி என்றால் அவர் இன்று பெற்று உள்ள இந்திய குடியுரிமை என்பது போலியானது.

    ஒரு வேலை பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் 1956க்கு பின் இந்திய பிரஜை ஆகணும் என்றால் அதுக்கு எந்த சட்டத்தில் இடம் இருக்கு என்று RSS மற்றும் பிஜேபியினர் தான் பதில் சொல்லணும்!

    இந்திய குடியுரிமை சட்டம் 1955 படி அவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக பாபர் மசூதி இடிப்பு தீவிரவாத குற்றத்தில் ஈடு பட்டமைக்காக அவர் பெற்று உள்ள இந்திய குடியுரிமை அவருக்கு எதிராக கோர்டில் தீர்ப்பு எழுதபடும் போது நீக்கப்பட சட்டத்தில் இடம் உண்டு…..

    • அத்வானி விசயத்தில் இந்திய குடியுரிமை சட்டம் 1955 என்ன சொல்லுது என்றால்…,

      அதன் பிரிவு 7D வெளிநாட்டில் இருந்து(பாகிஸ்தானில் இருந்து) இந்தியாவுக்கு வந்து குடியுரிமை பெற்றவர் (அத்வானியை போன்று)இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது மரியாதை செலுத்தவில்லை என்றால்(பாபர் மசூதியை இடித்தது போன்ற குற்றங்கள் செய்தால் )இந்திய அரசு அவரின் (அத்வானியின்) இந்திய குடியுரிமையை ரத்து செய்யும்…

  14. பாபர் மசூதி இடிப்பு கேஸின் அத்வானி மீது எந்த எந்த IPC யில் கேஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றால்…. சதி திட்டம் தீட்டுதல் IPC 120(B) ..,(criminal conspiracy under section 120(b) of the Indian Penal Code.) ஜெயா மீதும் இதே கேசு இருந்தது…. ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் மீதும் இதே பிரிவின் படி தான் தணடனை கொடுக்கபட்டது…

    இந்த வழக்கில் அவர் தன்டிக்கப்ப்டால் அடுத்தது அவரை இந்திய பிசஜையில் இருந்து விளக்க சாத்தியங்கள் அதிகம்…அடுத்ததா பிரதமராக வரும் ஈழ தமிழர் கொலைகாரர் ராஜ்வ் காந்தியின் தவப் புதல்வன் ராகுல் காந்தியிடம் மண்டியிடபோறாரு அத்வானி…!

    அது மட்டும் அல்ல இன்னும் பல்வேறு பிரிவுகளின் அவர் மீது இதே குற்றத்துக்காக வழக்கு பதியபட்டு உள்ளது….!

    he is facing charges under IPC sections 153 A (promoting enmity between groups on grounds of religion, race, place of birth, residence, language, etc., and doing acts prejudicial to maintenance of harmony), 153 B (imputations, assertions prejudicial to national integration) and 505 (statements conducing to public mischief) read with sections 147 (punishment for rioting) and 149 (every member of unlawful assembly guilty of offence committed in prosecution of common object).

    இவர் இந்த பிரிவுகளில் தண்டிக்கபடனும் அப்புறம் குடியுரிமை பறிக்கப்படனும் , அப்புறம் தனக்கு என்று நாடு இல்லாமல் அலையணும் இவர்…!

  15. குமார் அவர்களே ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏதாவது கருத்து
    சொல்லி வைக்கணும் என்று அருள் கூர்ந்து முயலாதீர்கள்.உங்கள் கருத்தை பதிவு செய்து விடுகிறீர்கள்.அது குறித்து மாற்றுக்கருத்து வரும்போது நீங்கள் பதிவிட்ட கருத்துக்கு மாறாக நீங்களே வேறு தளத்தில் நின்று விளக்குகிறீர்கள்.ஏன் இந்த யாருக்கும் பயன்பெறாத காலவிரையம்? சரி உச்ங்கள் வாதப்படியே வைத்துக்கொள்வோம்.இஸ்லாமியர்கள் சிறு பகுதியினர் எங்களுக்கு மத அடையாளம் கொண்ட பாகிஸ்தான் வேண்டாம் மதசார்பற்ற இந்தியா போதும் என்று முடிவெடுத்து உண்மையான இந்தியர்களாகவே வாழ்ந்து வுரும் இஸ்லாமிய உறவுகளை அந்தப் பண்பிற்காகவே அவர்களும் இந்தீய மண்ணின் புதல்வர்களே என்று நாம் அவர்களுக்கு துணை நிற்க வேண்டாமா?ஏன் பாகிஸ்தானுக்கு போகவில்லை என்று கேட்பது பாசிச சீந்தனை என்று உங்களுக்கு உணரவீல்லையெனில் நீஜுங்கள் யாருக்கானவர் என்று கேள்வி எழுவதை எப்படித் தடுப்பது?நீறைய விஷயங்களை பதிவு செய்கின்றீர்கள் அது மக்களுக்கானதா அல்லது மணீகண்டன் போன்றோர்களுக்கானதா என்று முடிவு செய்யுச்கள்.அந்த முடிவுக்குப் பின் ஒரு திசையீன் வழி பயணியுங்கள்.உச்சபட்சமாக பரிசீலிப்பீர்கள் என்ற நம்பீக்கையில்…

    • நண்பர் நெப்போலியனின் அன்பான ஆலோசனை சகோ குமாரின் மண்டையில் ஏறுவதற்கு எல்லா தெய்வங்களையும் பிரார்த்திக்கிறேன்!
      (ஐயையோ! கடவுள் நம்பிக்கை பற்றி ஆரம்பிச்சிர போறாரு சகோ குமாரு…..)

      • சகோதரர் கார்திகேயன், உங்க கடவுள் நம்பிக்கை உங்கள் தனிபட்ட விசயமாக இருக்கும்வரைக்கும் அதன் மீது என்னக்கு என்ன பிரச்னை வரமுடியும்…ஆனால் பாருங்க என்னது கருத்துகளை நேரடியாக அறிவு பூர்வமாக எதிர்கொள்ளாமல், அவற்றுக்கு எதிர்கருத்துகளை எடுத்துவைக்க இயலாமல்தெய்வங்களை பிராதிகின்றேன் என்கின்ரீகள் அல்லவா அதுல தாங்க பிரச்சனையே இருக்கு? என்ன பிரச்னை என்றால் இல்லாத தெய்வங்கள் எப்படிங்க என் சிந்தனையை மாற்றமுடியும்? சொல்லுங்க பார்கலாம்..?

  16. சகோதரர் நெப்போலியன், நீங்க முழுமையாக என்னுடைய கருத்துகளை படிகின்றீகள் என்பதனை என்னால் உணரமுடிகின்றது…நன்றி. நான் வேறு வேறு தளங்களில் நின்று பேசுவதாக நீங்க நினைக்க காரணம் உங்க புரிதலில் உள்ள குறைபாடே… நான் ஒரே தளத்தில் அதுவும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிபடையில் தான் என் வாதங்களை வைக்கின்றேன். இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையின் கூடாக இன்னும் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் பிரச்சனைகளை குறிப்பாக மத ரீதியான பிரச்சனைகளை அதனுடாக வர்க்க போர் தடைபட்டுகொண்டு இருதனை தான் என்னுடைய கருத்துகள் வாயிலாக எடுத்து வைக்கின்றேன். இன்று இங்கே வாழும் முஸ்லிம் சகோதரர்களை நான் ஒன்றும் இந்திய குடிமக்கள் இல்லை என்று சொல்லவில்லையே சகோ…!அவர்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 5(a) மற்றும் 5(b) படி இந்திய குடிமக்கள் தானே? அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு? அவர்களின் முததையர்கள் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆதரவாக இந்திய அரசியல் நிர்ணய சபையில் ஜின்னாவுக்கு வாகளித்தவ்ர்கள் , அப்படி வாக்களித்த பின்னும் அவர்கள் பாக்கிஸ்தானுக்கு போகாததால் அவர்களை அகதிகள் அந்தஸ்தில் வைக்க வேண்டும் என்கின்றேன்… அதில் என்ன தவறு என்று எனக்கு விளக்க நீங்க முயலாமே சகோ?

    அடுத்து இப்ப எழுப்பட்டும் கேள்வி 1957 ல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த அத்வானிக்கு இந்திய குடியுரிமை கொடுத்தது சரியா?

    சரி என்று வைத்துகொண்டாலும் இப்ப அவர் இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு கீழ் படியாமல் அவர் செய்து உள்ள பாபர் மசூதி இடிப்பு குற்றம் காரணமாக அவர் குடியுரிமை பறிக்கப்டலாம் தானே? அவரின் குடியுரிமையை பறிக்க இந்திய குடியுரிமை சட்டம் 1955 பிரிவு 7(d) யின் கீழ் இடம் உள்ளது தானே? அவர் மீதான IPC பிரிவுகள் :

    IPC sections 153 A (promoting enmity between groups on grounds of religion, race, place of birth, residence, language, etc., and doing acts prejudicial to maintenance of harmony),

    IPC 153 B (imputations, assertions prejudicial to national integration)

    IPC 505 (statements conducing to public mischief) read with sections 147 (punishment for rioting) and 149 (every member of unlawful assembly guilty of offence committed in prosecution of common object).

    இவற்றின் கிழ் அவர் தண்டிக்க படும் நிலையில் அவர் குடியுரிமை கண்டிப்பாக பறிக்கப்டவேண்டும் என்ற கோரிக்கையை நாம் மக்கள் மன்றத்தில் எழுப்பி அதனை நீதிமன்றத்தில் உறுதி செய்யவேண்டும் சகோ…

  17. குமார் அவர்களே முஸ்லீம்கள் இந்தியர்களே என்று நீங்கள் ஒப்புக்கொண்டு அடுத்த வரிகளிலேயே அவர்களை அகதிகள் லிஸ்ட்டில் சேர்க்கிறீர்கள்.இதுதான் நீங்கள் முரண்படும் ஒரு கருத்தில் வேறு வேறு தளத்தில் உங்களின் பதில்கள் என்கிறேன்.டெல்லி நிர்பயா என்ற அப்பாவீ இளம்பெண் ஓடும் பேருந்தில் சீரழீக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.இந்த பயங்கரவாதத்தைப்பற்றி காவி காலிகள் என்ன சொன்னார்கள்.அவள் துகிலுரியப்படும் போது அண்ணா என்று அழைத்து கெஞ்சியிருந்தால் கயவர்கள் அவளை விட்டுருப்பார்களாம்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் காவிகளின் அக்கருத்துப்பற்றி? ஏனெனில் உங்கள் பாகிஸ்தான் ஏன் போகல கருத்துக்கள் காவிக் காலிகளோடுதான் இப்படி நீங்கள் ஒத்துப்போகிறீர்கள்.இதில் வேறு முஸ்லீம்கள் பாகிஸ்தான் போயிருந்தால் இந்தியாவில் புரட்சி வந்திருக்கும் என்கிறீர்கள்.அபத்தமாக இல்லையா உங்களுக்கு இது என்ன?இஸ்லாமிய சொந்தங்களை பாகிஸ்தானுக்கு ஏன் போகல என்ற கேள்வியே பாசிசத்தின் உச்சம்.அதை விவாதப்பொருளாக மாற்றுவது என்பது அயோக்கியத்தனத்தின் உச்சம்.உங்களின் பல கிளை கொண்ட சிந்தை முறையை மாற்றுங்கள்.இல்லையேல் ஒரு பத்து பேர் கொண்ட உங்கள் நண்பர்கள் குழுவில் விவாதியுங்கள்.உண்மையான உணர்வான சமரசமில்லாத நண்பர்களாயின் அவர்கள் சொல்வார்கள் உங்களை உங்களுக்கே “யாரென்று”.

    • இன்னும் உங்களுக்கு புரிந்தலில் குறைபாடு இருக்கு என்றே நம்புறேன் நெப்போலியன்…பொறுமையா ,தெளிவா படிங்க என்னுடைய கருத்துகளை…

      1.இன்று இங்கே வாழும் முஸ்லிம் சகோதரர்களை நான் ஒன்றும் இந்திய குடிமக்கள் இல்லை என்று சொல்லவில்லையே சகோ…!அவர்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 5(a) மற்றும் 5(b) படி இந்திய குடிமக்கள் தானே? அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?

      2.அவர்களின் முததையர்கள் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆதரவாக இந்திய அரசியல் நிர்ணய சபையில் ஜின்னாவுக்கு வாகளித்தவ்ர்கள் , அப்படி வாக்களித்த பின்னும் அவர்கள் பாக்கிஸ்தானுக்கு போகாததால் அவர்களை அகதிகள் அந்தஸ்தில் வைக்க வேண்டும் என்கின்றேன்… அதில் என்ன தவறு என்று எனக்கு விளக்க நீங்க முயலாமே சகோ?

      //குமார் அவர்களே முஸ்லீம்கள் இந்தியர்களே என்று நீங்கள் ஒப்புக்கொண்டு அடுத்த வரிகளிலேயே அவர்களை அகதிகள் லிஸ்ட்டில் சேர்க்கிறீர்கள்.இதுதான் நீங்கள் முரண்படும் ஒரு கருத்தில் வேறு வேறு தளத்தில் உங்களின் பதில்கள் என்கிறேன்.//

      டெல்லி நிர்பயா என்ற அப்பாவீ இளம்பெண் படுகொலை விசயம், நுங்கம்பாக்கம் சுவாதி விஷயம் எல்லாம் இந்த அளவுக்கு பப்ளிசிட்டி ஆனதுக்கு அவர்கள் இருவருமே ஹிந்து மதத்தின்சாதியத்தின் உயர்நிலையில் இருபது தானே காரணம்..என் அறிவுக்கு தெரிந்தவரைக்கும் பிஜேபி அல்லது rss அமைப்பை சேர்த்தவர்கள் நீங்க கூறும் வியாக்கியானத்தை பேசியதாக எனக்கு தெரியல…பேசியவர்கள் பிஜேபி கார்களா என்றும் தெரியல… ஆனால் ஒரு விசயம் கண்டிப்பாக என் நினைவில் இருக்கு… முலாம் சிங் யாதவ் அவர்கள் அந்த நிற்பாயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை அவர்கள் யாதவ் சமுகத்தை சேர்த்தவர்கள் என்ற காரணத்துக்காக அவர்களை தூக்கில் போடக்கூடாது என்று குரல் எழுப்பியுள்ளார் நெப்போலியன்.

      நிர்ப்யா வழக்கை இந்த குடியுரிமை பிரச்சனையுடன் தொர்ர்பு செய்வதே திசை திரும்பும் செயல தான்…

Leave a Reply to மாணவன் குமார் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க