privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஉருளை விவசாயிகளை வீதியில் வீசிய பாஜக அரசு !

உருளை விவசாயிகளை வீதியில் வீசிய பாஜக அரசு !

-

த்தரப்பிரதேசத்தில் உருளைக்கிழங்கின் மொத்த விற்பனை விலை, கிலோவுக்கு வெறும் இருபது பைசாவாக சரிவடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சிக்கு மிகை உற்பத்திதான் காரணம் எனக் கூறுகிறது அரசு தரப்பு.

உண்மையான காரணம் என்ன?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உருளைக்கிழங்கு சுமார் 72,000 ஹெக்டேர் அளவிற்கு பயிரிடப்பட்டு வருகிறது. ஆக்ரா உட்பட பெரோசாபாத், மதுரா மற்றும் மணிப்பூரியும் நாட்டில் உருளைக்கிழங்கு  உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கடந்த 2017 ஜூலை மாதம் உ.பி. -யில் ஐம்பது கிலோ உருளைக்கிழங்கு அடங்கிய மூட்டையின் மொத்த விற்பனை விலை ரூ.400  அதே மூட்டையின் விலை தற்போது ரூ.10 ஆக குறைந்துள்ளது. அதாவது, ஒரு கிலோ உருளையின் விலை 20 பைசா மட்டுமே. இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக ஆக்ராவில் மட்டும் சுமார் 2.5 லட்சம் டன் உருளைக்கிழங்கு விற்பனையாகாமல் வீணாகியுள்ளது.

உற்பத்திச் செலவு, வாகன போக்குவரத்து செலவு, குளிர்பதன கிடங்கிற்கான வாடகை என உருளையின் அடக்க விலையே மூட்டைக்கு சில நூறு ரூபாய் ஆகிறது. இந்நிலையில் தற்போதைய விலை வீழ்ச்சி விவசாயிகளின் கழுத்தை நெருக்கியுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் நஷ்டத்தை தவிர்ப்பதற்காக தாங்கள் உற்பத்தி செய்த உருளையை  குளிர்பதன கிடங்கில் இருந்து எடுக்காமல் தவிர்த்து வருகின்றனர்.

விவசாயிகள் உருளையை  எடுத்துக் கொள்ளாத நிலையில்,  மாவட்டம் முழுவதும் உள்ள 240 குளிர்பதன கிடங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆயிரக் கணக்கான டன் உருளைக்கிழங்கு அழுகத் தொடங்கியுள்ளன. அழுகிய உருளைக்கிழங்குகளை மூட்டை மூட்டையாக வீதியில் கொட்டி வருகின்றனர் விவசாயிகள்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் நீலகிரியில் உற்பத்தி செய்யப்பட்ட உருளையின் விலையும் கடும் வீழ்ச்சியடைந்தது. அதுவரையில்  நாற்பது கிலோ மூட்டை ரூ.1,400 முதல் 1,800 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் மாதம் ஒரு மூட்டை உருளையின் விலை ரூ.100 – ரூ.150 க்கு வீழ்ச்சியடைந்தது. இதனால் விவசாயிகள் கடனாளியாகினர்.

உ.பி. சடாபாத் குளிர்பதன கிடங்கின் வெளியே கொட்டப்பட்ட அழுகிய உருளைக்கிழங்குகள் (படம் : நன்றி – இந்தியன் எக்ஸ்பிரஸ்)

கடந்த 2014 -ம் ஆண்டு பஞ்சாபில் உருளையின் விலை வீழ்ச்சி காரணமாக மொத்த உற்பத்தியையும் வீதியில் வீசினர் விவசாயிகள். அதே போல் நடப்பாண்டில்மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் வெங்காயம், தக்காளி, பால் போன்ற உணவுப்பொருட்களின்  விலை வீழ்ச்சியின் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளை  வீதியில் கொட்டி மிகப்பெரும் போராட்டத்தை நடத்தினர்.

உற்பத்தி அதிகரித்தது தான் விலை வீழ்ச்சிக்குக் காரணம் என அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமேயாகும். முறையற்ற ஏற்றுமதி இறக்குமதி கொள்கையால் ஒட்டுமொத்த நாட்டின் தேவை குறைவாக இருப்பினும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கார்ப்பரேட் பெருமுதலாளிகளை வாழவைப்பதே இந்த அரசின் திட்டம்.

கடந்த 2016 -ம் ஆண்டு, செப்டம்பரில் உருளையின் மீதான இறக்குமதி வரியைக் குறைத்தது மத்திய அரசு. அதேபோல, கோதுமைக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. பாமாயில் இறக்குமதி வரியை 12.5% -லிருந்து 7.5% -மாக குறைத்துள்ளது. இந்தியாவில் எண்ணெய் வித்துகளின் உற்பத்தி 40% -மாக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையிலும் மத்திய அரசு பாமாயில் இறக்குமதி வரியைக் குறைத்தது.

இந்த இறக்குமதி  வரி குறைப்பின் விளைவு தான் வெங்காயம், தக்காளி தொடங்கி தற்போது உருளைக்கிழங்கு வரை அனைத்து விவசாய விளைபொருட்களும்  விலை வீழ்ச்சியைச் சந்தித்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.  உலக அளவில் உருளை உற்பத்தியில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருந்தாலும் இங்கு உருளை விவசாயிகள் நட்டமடைவதற்கு இதுவே முக்கியக் காரணம்.

விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றி விவசாயத்தை கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்கத் துடிக்கிறது இந்த அரசு. அதன் காரணமாகவே, இத்தகைய கடும் விலை வீழ்ச்சியையும், அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளையும் கண்டும் காணாமலும் விட்டுவிடுகிறது இந்த அரசு. அதே போல, வறட்சி சமயங்களிலும் விவசாயிகளைக் கைகழுவி விட்டுவிடுகிறது அரசு.

தனது விளை பொருளுக்குத் தானே விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் விவசாயிகளின் கைகளில் வரும் போதுதான் விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.

மேலும் :


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க