privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஇணையக் கணிப்புரஜினியின் டிசம்பர் 31 அறிவிப்பு : கருத்துக் கணிப்பு

ரஜினியின் டிசம்பர் 31 அறிவிப்பு : கருத்துக் கணிப்பு

-

ஆர்.கே.நகர் அத்தியாயம் முடியும் தறுவாயில் அடுத்த ‘பரபரப்பு’ வந்து விட்டது. வரும் டிசம்பர் 31 அன்று அரசியலுக்கு வருவது பற்றி திருவாளர் ரஜினி அறிவிக்கிறாராம். இலண்டன் பிபிசி முதல் தில்லி என்டிடிவி வரை அலச ஆரம்பித்துவிட்டார்கள். என்றால் தமிழின் நடுப்பக்க கருத்து கந்தசாமிகள் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ரஜினியின் 67-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 66, 65, 64……….50 பிறந்த நாட்களில் என்னென்ன பேசினார்களோ அவையே சலிக்காமல் மீண்டும் புதிய மேக்கப்பில் வருகின்றன.

டிசம்பர் 26 முதல் ஆறு நாட்களுக்கு அடையாள அட்டை வைத்துள்ள ஆறு மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்திக்கிறாராம். புகைப்படமும் எடுக்கிறாராம். ரஜினியின் சமீபத்திய அரசவைப் புலவரான தமிழருவி மணியன் இந்த நாட்களின் திரைக்கதையை எழுதியிருப்பார் போலும்.

உதவி இயக்குநர்கள் விதந்தோதும் இயக்குநர் மகேந்திரன் முதல் நாள் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அவரும் ரஜினியைப் போன்ற தலைவர் யாருமில்லை, அவருடைய அறிவிப்பிற்காக காத்திருப்பதாக பேசியிருக்கிறார்.

பிறகு பேசிய ரஜினி “காலா படப்பிடிப்பு, மழை, மனம் சரியில்லாத காரணத்தால் ரசிகர்களை சந்திப்பது தள்ளிப்போனது” கூறியிருக்கிறார். மனம் சரியில்லாத காரணத்தால் காலா படப்பிடிப்பு ரத்தாகவில்லை, ரசிகர் சந்திப்புதான் ரத்தாகியிருக்கிறது. முன்னது பணம், பின்னது அடிமைத்தனம் என்பதால் விளக்கம் தேவையில்லை.

சென்ற முறை போர், வீரம் என்று ஆக்சன் ஹீரோ வேடம் போட்டவர் இந்த முறை, வியூகம், கஷ்டம் – நஷ்டம், தயக்கம் என ‘அறிவு’ வேடம் போடுகிறார்.  இறுதியில் வரும் 31 அன்று அரசியலுக்கு வரப்போவதாகத் தெரிவிக்கவில்லை என்றும் அரசியல் குறித்து அறிவிக்கப் போவதாக மட்டும் கூறியதாக தனிச்சிறப்பாக விளக்கியிருக்கிறார். இதை சாதாரண பாப்பையா பாணியில் ஆய்வு செய்தாலும், அவர் அரசியலுக்கு வரவில்லை என பொருள் கொள்ளலாம்.

எனினும் வரும் நாட்களில் பல்வேறு நிலைய வித்வான்களின் வாசிப்போடு ரஜினி அரசியல் பற்றி ஊடகங்களில் பீறாய்ந்து பேசப்படும். காதுகள் கவனம்.

இன்றைய கருத்துக் கணிப்பு

ரஜினியின் டிச 31 அறிவிப்பிற்கு என்ன காரணம்?

  • காலா – எந்திரன் 2.0 பட மார்கெட்டிங்
  • கமலுக்கு தான் குறைவில்லை என்று காட்ட
  • அட போங்கப்பா வினவுக்கு வேறு பிரச்சினை கிடைக்கவில்லை
  • தமிழருவி மணியனின் மாபெரும் சதித் திட்டம்
  • ரசிகர்களை தொடர்பில் வைத்திருக்க வேறு நாதியில்லை
  • சலிப்பூட்டும் நாடகம்
  • தமிழக மக்களின் முட்டாள்தனத்தில் அவ்வளவு நம்பிக்கை

(மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்)

  1. முட்டாள்களாக மாற்றப் பட்டிருக்கும் மக்களை மாற்ற….இவ்வளவு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் வேறு வழியே இல்லையா? ஜாதி, மதங்களை… புரட்சி எண்ணம் கொண்ட சிந்தனையாளர்களால்,புரட்சியாளர்களால் மாற்ற முடியாதா?.

    • Mkkal muttalkalaga maariyatharkku karaname-இவ்வளவு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளthuthan.
      It(Digi world) contains more misinformation than information.

  2. He is just a business man, he knows how to promote his movies. but he should not cheat people and his fans about his false statement. Vishal is 100% better than this guy. Even TN people started loving TTV Dinakaran due to his Guts and way he handled BJP and PM.

  3. “எனினும் வரும் நாட்களில் பல்வேறு நிலைய வித்வான்களின் வாசிப்போடு ரஜினி அரசியல் பற்றி ஊடகங்களில் பீறாய்ந்து பேசப்படும். காதுகள் கவனம்.”

    அதெல்லாம் சரி வினவு.

    ரஜினி முக்கியமில்லை, அவரை யாரும் மதிப்பதில்லை, மக்கள் ஆதரவு இல்லை, அரசியல் கட்சிகள் அவரை பொருட்டாக மதிக்கவில்லை, சமூகத்தளங்களில் அவரை கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள்.

    அப்புறம் நீங்க எதுக்கு தனியா ரஜினியை பற்றி எழுதணும்? 🙂 பொறாமை படாதீங்க, மக்கள் ஆதரவு இருந்தால் வெற்றி பெற போகிறார் இல்லையென்றால் தோல்வி அடையப்போகிறார்.

    நீங்க வைக்கிற கருத்துக்கணிப்பு எல்லாம் நியூஸ் 7, சன் டிவி, ஜெயா டிவி வைக்கிற கருத்து மாதிரி. நம்மை நாமே சமாதானப்படுத்திக்கும் ஒரு முயற்சி அவ்வளவே!

    காலம் பதில் கூறும். பார்ப்போம்.

    • ஆம் அம்பானியை பத்தி எழுதுவது வயித்தெரிச்சல் தான், மக்களின் உழைப்பை சுரண்டி கொளுத்து அதே மக்களுக்கு ரோல் மாடலாக வலம் வருகிரானே எனும் வயித்தெரிச்சல்.

      ரஜினியை பத்தி எழுதுவது பொறாமை தான், சிந்தனைகளிலும் செயல்களிலும் எங்கோ சென்றிருக்க வேண்டிய இரண்டு மூன்று தலைமுறைகளை முடியை கோதிவிட்டும் சிகரெட்டை போட்டு பிடித்தும் மொக்கை ஆன்மிகம் பேசியும் சீரழித்தவணை ஏதோ தேவபிறவி ரேஞ்சுக்கு தூக்கி பிடிக்கிறார்களே எனும் பொறாமை.

    • வினவு சீமான் போன்றவர்களுக்கு ரஜினி என்றால் கிலி பயம்… நல்லவர்களை பார்த்து தீயவர்கள் (வினவு) பயப்படத்தானே செய்வார்கள்.

      • ஆமாமா // உங்க நல்லவரு ஒக்கிப் புயலுக்கு அப்படியே போயி புடுங்கிட்டாரு ….

        • சும்மா உங்களை (வினவு கூட்டங்கள்) மாதிரி ஒன்றுமே செய்யாவிட்டாலும் விளம்பரத்திற்காக போட்டோவிற்கு போஸ் கொடுப்பார் என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்களா ? ரஜினி அவர்களின் உதவிகள் விளம்பரம் இல்லாமல் செய்யப்படுபவை…

          • ஆம் சில மாதங்களுக்கு முன்பு தெருவில் இருந்த ஒரு பாட்டியை அப்படிதான் அள்ளி சென்று இரண்டு ஆயிரம் செலவு செய்து சாப்பாடும் போட்டு திரும்பவும் அதே தெருவில் வந்து போட்டு சென்றவர் தான் இந்த ரஜினி…

            எனக்கு என்னவோ இந்த மணி மேல மைல்டா டவுட்டு இருக்கு. வேணுமுன்னே சும்மனாச்சும் தூங்கிகிட்டே கமெண்ட் போடுறாரா? இப்படி ஒரு மொக்க பீச நான் பத்தே இல்லை. அதான் கேக்குறேன்.

    • றஜனி அரசியலுக்கு வருவது தொடர்பாக கருத்து தெரிவிக்க கூடாது என சொல்கிரீரா ?

  4. தலைவர் ரஜினி அவர்கள் அரசியல் கட்சி துவங்கப்போவது நிச்சயம். உங்களை போன்ற **** ஊடங்கள் தான் செய்திகளை திரித்து வெளியிடுகின்றன. தலைவர் ரஜினி தான் அடுத்த தமிழக முதல்வர்.

    • எப்படியாவது பாடையில் போவதற்குள் ஒரு வாட்ஸ்அப் கட்சியாவது கட்ட சொல்லுங்கள்.

    • கட்டவுட்டுக்கு பால் ஊத்த நீங்க இருக்கும்போது ரஜனிதான் முதல்வர் மட்டும் அல்ல பிரைம் மினிச்டர் கூட ஆகலாம். மூடதனத்தின் எல்லை தான் என்ன ?

  5. காலையில் இந்தச் செய்தித்தாள்களின் படங்களை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. நமக்குப்பிடித்த ஒருவரை உலகமே முக்கியமாகப் பார்ப்பதில் வரும் மகிழ்ச்சி அது. ஆனால் நேற்று ரஜினி பேசிய உரையின் பதினாலு நிமிடங்களில் வெறும் நான்கு நிமிடங்கள் மட்டுமே அரசியலைப் பற்றி பேசினார், அது முக்கிய பத்திரிக்கைகளின் தலைப்புச்செய்தியாக இருக்கிறது. மக்கள் தங்கள் கேட்க விரும்புவதைக் கேட்கிறார்கள். தற்போதைய அரசியல் சூழலில் தங்கள் குரலைப் பதிவு செய்ய பலரும் பொதுக்கூட்டம், ப்ரஸ் மீட், பத்திரிக்கைகள் பேட்டி மற்றும் சமூக வலைத்தள நடவடிக்கைகள் என கடும் முயற்சிகள் செய்துகொண்டிருக்கும் நிலையில் வேறொரு நிகழ்ச்சியில் வெறும் 4 நிமிடம் பேசியது இவ்வளவு பரபரப்பாகி இருப்பது ரஜினியின் செல்வாக்கை காட்டுகிறது.”இந்த முறையும் ஏமாற்றி விடுவார், வெறுப்பாக இருக்கிறது” என்றும் சில குரல்கள். “அவர் வரவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? அவர் வந்தால் உடனடியாக ஆதரிப்பீர்களா” என்று கேட்டால் பதிலில்லை. ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தாலும் அவருக்கு வெறுப்படைய காரணம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ரஜினி சொல்வதை சொல்லட்டும், அதை கவனிக்கலாம் எனவே பொதுவாக மக்கள் ஆர்வத்துடன் இருப்பதை கவனிக்க முடிகிறது. அவர் என்ன சொல்லவேண்டும் என முடிவு செய்து காத்திருப்பவர்கள் தான் என்ன நடந்தாலும் வருத்தப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்.

    ஒருமுறை பாகிஸ்தான் நமது இந்திய ராணுவ வீரர்கள் சிலரை முறை தவறிக்கொலை செய்தது; இந்தியாவைக் கடுமையாகச் சீண்டும் செயல் அது. உடனே பதிலடி கொடுக்கப்போகிறோமா, என்ன செய்யப்பபோகிறோம் என இந்திய ராணுவத் துணைத் தளபதியிடம் கேட்கப்பட்டது. அந்த சூழலில் அவர் சொன்ன பதில் மிக உறுதியானது.

    “பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியை நாம் நினைக்கும் இடத்தில், நாம் நினைக்கும் நேரத்தில் கொடுப்போம் என்றார். (
    Will respond to Pakistan at time and place of our choosing). எதிரி எதிர்பார்க்கும் செயலைத் தவிர்த்து, நமது செயல்பாட்டை முடிவெடுப்பதை நாமாகவே செய்வதில் இருப்பதில் இருக்கும் உறுதி அது.

    ரஜினியின் அரசியல் நிலைப்பாடு பற்றி எழுப்படும் எதிர்மறைக் கேள்விகள், கிண்டல்கள் அனைத்தும் அவரை சீண்டும் செயல்கள் தான். அவர்களுக்கு இன்று ரஜினியும் அப்படி ஒரு பதிலைச் சொல்லி இருக்கிறார்.

    • அண்ணன் ரசினிகாந்து ஒக்கிப் புயலுக்கு என்ன புடுங்கினார் ?

      நீட் தேர்வுக்கு என்ன புடுங்கினார் ?

      போர் வரட்டும்னு ஒக்காந்திருந்தாரா ?.

      இல்ல பொண்டாட்டிக்காரி வாடகை கொடுக்காம, சம்பளம் கொடுக்காம ஏமாத்திட்டு வர்ற அழகை ரசிச்சிட்டு இருந்தாரா ?..

      அந்தப் பொணம் எல்லாம் அரசியலுக்கு வந்தா என்ன வராட்டி என்ன ?

      இந்தப் புடுங்கி விக் வச்சிக்கிட்டு அதுல இருக்குற போலி முடிய கோதி விட்டா ஆட்சி நடந்திடும்னு நெனச்சிக்கிட்டான் போல ..

      பணம் இருக்கவன் கால்ல விழாதன்னு சொல்லிட்டு, தான் கால்ல தன்னோட ரசிகனை விழ வச்ச கிரிமினல் தானய்யா உங்க தொலைவன் ரசினி காந்து

      • ஜனநாயகத்தில் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமையுள்ளது, ரஜினி அரசியலுக்கு வந்தால் நான் கண்டிப்பாக ரஜினிக்கு வாக்கு அளிப்பேன். ரஜினி போன்ற நல்லவர்கள் தான் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்.

        • எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது அம்பி, நீங்க என்ன தான் பொம்மைங்களை வச்சு பொம்மைங்கள புகழ்ந்து பொதுபுத்தியை வடிவமைக்க முயன்றாலும், ஜனங்க கொட்டாவி விட்டு எந்திரிக்க தொடங்கியாச்சு, செல்லாது செல்லாது இனி. புதுசா யோசிங்க. இது கமலை ஆட்டுவித்த அதே கைதான்னு தெரியு நல்லா. நீங்கெல்லாம் யார் ஆச்சிக்கு வந்தாலும் ஷேமமா இருக்க கும்பலாச்சே , முக்கியமா ரஜினிய உண்மையான மொக்கை பீசாவே உள்ளுக்குள் சிரிக்கும் நரிகள் ஆச்சே , என்ன நடந்தது ? ஏனிந்த திடீர் ‘ரசிக’ எழுச்சி?

    • அப்போ இந்திய இராணுவமும் ரஜினி மாதிரித்தான். ரஜினி அரசியல் ஸ்டன்ட் அடிக்கிற மாதிரி தான் இந்திய இராணுவமும் சர்ஜரி ஸ்ட்ரைக் பண்றங்கனா நல்லா விளங்கிடும்…….

      அப்புறம் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்த பிறகும் எல்லையில் வீரர்கள் மாள்வது குறையவில்லையே ஏனய்யா?

      https://scroll.in/article/862632/there-has-been-no-drop-in-indian-soldiers-deaths-on-the-loc-since-the-surgical-strikes-last-year

      • அட சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்றால் அது ஒரு தாக்குதல் முறை அவ்வளவே, இதை எதோ இந்தியாவுக்கு மட்டும் தெரிந்த மாறி இவர்கள் கும்மியடிச்சது தான் பெரிய சிரிப்பு,சிறிலங்கா கடல்படை கூட மீனவர்களை தாக்கிவிட்டு சர்ஜிகல் அடி என கூறலாம், இவர்கள் ஏதோ புதிய வார்த்தையா சொன்ன ஜனங்க நம்புவாங்க என எண்ணியதன் கேளிகூத்தே அது. அடுத்தது என்ன ‘ஆம்புஷ் ஸ்ட்ரைக்கா? எல்லா ஸ்ட்ரைக்கும் நடக்குது என்ன பாகிஸ்தான் காரனின் மயித்தை கூட புடுங்காத ஸ்ட்ரைக், மிக சிறந்த ஒப்பீடு செல்வம் ரஜினியும் இந்திய ராணுவமும்.

    • னிதானமாக எலுத தெரிந்த உமக்கு நிதானமாக சிந்திக்க தெரியவில்லையா என நினைக தோன்ருகிரது. கவலையாக உல்லது.

  6. The Im-potent double bore gun unable to ‘satisfy’ mylapore mafia. So the age-old Ex-potent (extraordinary potential) hero was put into the game of tamilnadu politics by mylapore mafia. If he refuses to play the game then the impotent-tax department may tortures him. Because of this reason the Ex-potent hero (but presently Im-Potent) participate the game. We tamils feel pity on his age and defeat him all 234 constituency so that he may be relieved from mylapore mafia.

Leave a Reply to கிரி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க