privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபோக்குவரத்துத் தொழிலாளிகளை வஞ்சிக்கும் அரசு - பத்திரிக்கை செய்தி

போக்குவரத்துத் தொழிலாளிகளை வஞ்சிக்கும் அரசு – பத்திரிக்கை செய்தி

-

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு
பத்திரிக்கை
செய்தி                                                                                                                                                                                                         05.01.2018

மிழக அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கையை ஒட்டி நடந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தன்னிச்சையாக முடிவு அறிவித்ததை பெரும்பான்மைத் தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை. ஆவலுடன் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கவில்லை என்பதால் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஊதிய உயர்வு ஒப்பந்தக் காலம் முடிந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் அமைச்சரும், அதிகாரிகளும் தொழிலாளர்மீது அக்கறையின்றி பேச்சுவார்த்தையைத் தள்ளிப் போட்டே போகின்றனர். போக்குவரத்துத் துறை நட்டத்தில் இயங்குவதாகக்கூறி, கடந்த 10 நாட்களுக்கு முன்னால் இயங்குகின்ற பேருந்துகளை குறைத்துள்ளது, தமிழக அரசு. இதனால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து கூட்ட நெரிசலில் முட்டி மோதி பயணம் செய்கின்றனர்.

தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகை ரூ.7,000 கோடியை யாருடைய அனுமதியுமின்றி அரசு அதிகாரிகள் எடுத்துச் செலவு செய்துள்ளனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் உடனடியாகக் கிடைப்பதில்லை. ஓரிரு ஆண்டுகள் காத்திருந்து தவணை முறையில்தான் அவர்கள் பெறுகின்றனர். இந்த ரூ.7,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன, சங்கங்கள். இதுபற்றி 4-ம் தேதி பேச்சுவார்த்தையில் மவுனம் சாதித்துள்ளார், அமைச்சர். யார் பணம், யார் எடுத்து வீணடிப்பது? போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு இவையெல்லாம்தான் காரணம். ஜனவரி 4-ம்தேதி அனைத்து பிரச்சனைகளையும் பேசி முடிப்பதாக வாக்குறுதி அளித்து பேச்சு வார்த்தையின்போது தன்னிச்சையாக அமைச்சர் அறிவித்ததுதான், தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு அடிப்படைக் காரணம். சங்கங்களுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தமாட்டேன் என ஆணவமாக அறிவிக்கிறார் அமைச்சர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்மீது பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு, மக்கள் சேவையில் ஈடுபட்ட பேருந்துகளை மறித்தனர் போன்ற பொய்க் காரணங்களைக் காட்டி போலீசை வைத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது, தமிழக அரசு. போராட்டத்தை ஒடுக்குவதற்கு அ.தி.மு.க. சங்க நிர்வாகிகளைக் கொண்டு பேருந்துகளை ஓட்டுவது, தினக்கூலி ஓட்டுநர்கள் தேவை என பஸ் டிப்போக்களில் விளம்பரப்படுத்தி அடியாட்களைக் கொண்டு பேருந்துகளை இயக்குவது போன்ற நயவஞ்சக செயல்களில் ஈடுபட்டு வருகிறது, திவாலான அ.தி.மு.க. அரசு. இதை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. போராடுகின்ற தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம்..

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

உழைக்கும் மக்களே,

  • அரசின் வஞ்சகத்தால் வாழ்வுரிமை இழந்து போராடுகின்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் சரியானதே!
  • அரசின் செயல்பாடுகள் போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்குவதன் ஒரு பகுதி! கட்டண உயர்வைத் திணிப்பதற்கான சதி!
  • நமக்கு எதிரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் அல்ல! தகுதியிழந்த அரசு இயந்திரம்தான்!
  • ஊழல், பென்சன் பணம் கொள்ளை, அதிகார முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் – அமைச்சர்களை செருப்பால் அடித்து விரட்டுவோம்!

இவண்,
அ.முகுந்தன்,
தலைவர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

***

நாள் 5-1-2018

பத்திரிக்கைச் செய்தி

போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வுரிமைப் போராட்டம் வெல்லட்டும்!
அனைவரும் ஆதரிப்போம் ! !

போக்குவரத்து தொழிலாளர்கள், செய்த வேலைக்கு உரிய ஊதியம் கேட்கிறார்கள். இது அவர்களின் உரிமை. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ. எம்.பிக்கள், நீதிபதிகள், ஆகியோருக்கு கேட்காமலேயே பலமடங்கு சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. போக்குவரத்து கழகம் நட்டத்தில் இயங்குவதாக எடப்பாடி அரசு சொல்கிறது. இதற்கு காரணம் அரசின் ஊழலும், நிர்வாக முறை கேடும்தானே தவிர, தொழிலாளிகள் காரணம் அல்ல.

அரசு போக்குவரத்து கழகத்தில் பணிசெய்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.1700 கோடி. இது வரை வழங்கப்பட வில்லை. சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகை ரூ.3000 கோடி, ஓய்வூதிய பங்களிப்பு தொகை ரூ.1500 கோடி, கூட்டுறவு நிறுவனங்களுக்காக பிடித்த தொகை ரூ.500 கோடி பிறவற்றையும் சேர்த்தால் சுமார் ரூ 7000 கோடி. அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தைதான் கேட்கிறார்கள்.

நியாயமான ஊதிய உயர்வு, அவர்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதிய பயன் அனைத்தும் பல முறை பேச்சு வாரத்தை நடத்தி உறுதி அளித்த பிறகும் இன்று வரை அமுல்படுத்தாத தமிழக அரசுதான் குற்றவாளி. இந்த போராட்டத்திற்கு தொழிலாளிகளை தள்ளியதே அதிமுக எடப்பாடி அரசும், போக்குவரத்து கழகமும் தான்.

வேலை நிறுத்தப் போராட்டம் திடீரென நடத்தப்படவில்லை. இருவருடங்களாகவே தமிழகம் முழுவதும் கோரிக்கைகளை விளக்கி கோடிக்கணக்கான அளவில் பிரசுரம் அச்சடித்து மக்களிடம் கொடுத்துள்ளார்கள். வாயில் கூட்டம், ஒருவார காலம் காத்திருப்பு போராட்டம் என அரசின் கவனத்தை ஈர்த்து எச்சரிக்கை விடுத்து நடத்தினார்கள். இதெல்லாம் பொது மக்கள் அனைவருக்கும் தெரியும். இது அவர்கள் பிரச்சினை என கருதி ஒதுங்கி இருந்தோம்.
இதுநாள் வரை மக்கள் அனைவரையும் வெயில், மழை, பண்டிகை என பாராமல் தினம்தோறும் பேருந்தை இயக்கி சரியான நேரத்தில் அனைவரும் வேலைக்குச் செல்லவும், ஊருக்குப் போகவும் உழைத்த தொழிலாளர்கள்தான் இன்று போராடுகிறார்கள். பல ஆயிரம் பேருந்துகள் ஓட்டுவதற்கு லாயக்கற்றவை. எந்தவித பராமரிப்பும் இல்லை. உயிரை பணயம் வைத்து ஓட்டி வருகிறார்கள். அவ்வாறு ஓட்டியதில் பலர் உயிரை இழந்திருக்கிறார்கள். அரசு போக்குவரத்து கழகமே தொழிலாளிகள் பணத்தில்தான் இயங்கி வருகிறது என்பதை அனைவரும் சிந்தித்துப் பாரக்க வேண்டும்.

குற்றவாளி ஜெயாவிற்கு நினைவிடம், தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என கோடிகளை கொட்டி இறைக்கும் எடப்பாடி அரசு, போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்க முயற்சிக்கிறது. பஸ்கள் ஓடவில்லை, மக்கள் துன்பப்படுகிறார்கள் என்ற காரணத்தை காட்டி, துரோகத்தாலும், போலீசு அடக்குமுறையாலும் தொழிலாளர்கள் போராட்டத்தை வீழ்த்தலாம் என நினைக்கிறது ஆளும் கட்சி மற்றும் அதிகார வர்க்கம். உயர் நீதிமன்றமும் இதற்கு துணைபோகிறது. இதை பொது மக்கள் அனுமதிக்க கூடாது. போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை முழுமையாக அனைவரும் ஆதரித்து துணை நிற்க வேண்டும்.

வழக்கறிஞர். சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க