privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகாவி பயங்கரவாதிகள் ஆட்சியில் காவி மயமாகும் உத்திரப்பிரதேசம் !

காவி பயங்கரவாதிகள் ஆட்சியில் காவி மயமாகும் உத்திரப்பிரதேசம் !

-

எல்லாம் காவி மயம்…

கார்ட்டூன் நன்றி: சதீஷ் ஆச்சார்யா

த்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்த நாள் முதல் யோகி ஆதித்யநாத் அனைத்திற்கும் காவி பெயிண்ட் அடித்து வருகிறார். லக்னோவில் கைசர் பாக் என்ற இடத்தில் 80 ஆண்டுகள் பழமையான ஒரு காவல் நிலையம் மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்தில் அமைந்துள்ளது. முதல்வர் யோகி இந்த காவல் நிலையத்தை இப்போது காவி நிலையமாக மாற்றியுள்ளார். நாடே காவி மயமாகும் போது காவல் நிலையத்தை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?

யோகியின் அடாவடித்தனம் இத்தோடு முடியவில்லை. காவி நிறத்துக்கு மாறிய புத்தகங்கள், புத்தக பைகள், அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் துண்டுகள் மற்றும் நாற்காலிகள், பேருந்துகள், தலைமைச் செயலக கட்டிடம், முதல்வர் இல்லம் இப்படி எங்கு பார்க்கினும் காவி மயம் தான்.

இந்த காவி அராஜகத்தின் உச்சகட்டமாக காலங்காலமாக பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும் ஹஜ் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் சில நாட்களுக்கு முன்னர் காவி நிறத்துக்கு மாறியது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து வெள்ளை நிறம் பூசப்பட்டது.

காவி வர்ண்ணம் பூசப்பட்ட ஹஜ் அலுவலகம்.

விவசாயிகளின் விவசாயக் கடனை ரத்து செய்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய யோகி ஆதித்யநாத் செப்டம்பர் 13, 2017 -இல் உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஏழை விவசாயிகள் சிலரை அழைத்து கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கினார். உ.பி மாநில விவசாயிகளின் மொத்த கடன்களையும் தள்ளுபடி செய்ய 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்தது. ஆனால் நடந்ததோ, சுமார் 35,000 விவசாயிகளுக்கு 9 காசு முதல் 100 ரூபாய் வரை கடனை ரத்து செய்து நாடு முழுவதும் அம்பலப்பட்டார் யோகி.

இந்த காவி மயமாக்கும் செலவுகளை வைத்து பல ஆயிரம் விவசாயிகளின் விவசாயக் கடனை ரத்து செய்திருக்கலாம். ஆனால் பார்ப்பன பாசிச பாஜக அரசுக்கோ விவசாயிகளை விட காவி மயம் தான் முக்கியம் என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவையில்லை.

செத்துப் போன ஜெயா ஆட்சி அமைத்தவுடன் ஜோசியக்காரக் கூட்டம் சொன்னபடி அவருக்கு ‘ராசியான’ பச்சை உடையை அணிவதை வழக்கமாக்கினார். பிறகு தமிழகத்தின் பல்வேறு அரசு இடங்களில் பச்சை திணிக்கப்பட்டது. அதே போன்று ‘இந்து ராஷ்டிரத்தை’ நிலை நாட்டுவதற்கு கொலைகள் போக இப்படி காவி பெயிண்ட் அடிக்கும் வேலையை யோகி செய்து வருகின்றார். பெயிண்ட் அடிப்பதில் கூட பாசிஸ்டுகள் எப்படி ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள் பாருங்கள்!

மேலும் :