privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைசின்ன சங்கரனை குண்டர் சட்டத்தில் கைது செய் ! கொதிக்கிறது ஃபேஸ்புக் !

சின்ன சங்கரனை குண்டர் சட்டத்தில் கைது செய் ! கொதிக்கிறது ஃபேஸ்புக் !

-

ச்ச ராஜாவின் தந்தையார் “தமிழ் – சமஸ்கிருதம்” அகராதி தயாரித்து, அதை வெளியிடும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்த போது சபை நாகரீகத்துக்காகக் கூட எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்தார் சின்ன‘வாளு’. அதனை பல முகநூல் பதிவர்களும் கண்டித்துள்ளனர். இதே விஜயேந்திரன், தேசிய கீதம் பாடும் போது மட்டும் எழுந்திருக்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஏன் எழுந்திருக்கவில்லை என்றால் அப்போது அவர் தியானம் செய்தாராம். இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறது, காஞ்சி சங்கர மடம். அவாளின் கொழுப்புத் திமிரை ஆக்ரோசமாக கேள்வி கேட்கிறார்கள் நமது தமிழ் ஃபேஸ்புக் பதிவர்கள்.

– வினவு

*****

 Arul Doss Borntowin

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் , மதக் கலவரத்தை தூண்டும் எச்.ராஜா , மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து பேசி வரும் நித்தியானந்தா பெண் சீடர்கள் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் பொதுவானதே .

__________

__________

KR Athiyaman

அந்த நிகழ்ச்சியில் எதுக்கு தமிழ் தாய் வாழ்த்து ஒலிபரப்பனும் ? அருமை தெரியாதவர்கள், அடிப்படை சபை நாகரீகம் தெரியாதவர்கள் chief guestஆ இருக்கும் நிகழ்ச்சியில் இதை இசைத்தது தான் தவறு.

_______________

Nelson Xavier

கல்கி கிருஷ்ணமூர்த்தி இல்ல திருமண விழாவில் வீட்டார் அன்போடு தந்த குங்குமத்தை நெற்றிப் பட்டையில் இட்டும், திருச்சியில் இராமசாமி அய்யர் கட்டிய மகளிர் கல்லூரி திறப்பு விழாவில் சமஸ்கிருதத்தில் ஒலித்த இறை வாழ்த்துப் பாடலுக்கு சபை மரியாதைக்காக எழுந்து நின்ற பெரியாரின் அணுகுமுறைதான் இந்த மண்ணின் பெருமிதம்.

யாருக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்பதல்ல, யாரிடமிருந்து பாடம் கற்கப் போகிறோம் என்பதே எப்போதும் முக்கியம்

_________

“தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர்,
மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்”

-தந்தை பெரியார் திராவிடர் கழகம் .

_______________

Thiru Yo

செத்துப்போன தனது தாய்மொழிக்காக ‘தியானமிருந்த’ விஜயேந்திரனை இப்படி வறுத்தெடுக்கலாமா?

_______________

Panuval Mugund

இனி தேசிய கீதம் பாடும் போது தியானம் செய்வோம் என்று உறுதி ஏற்ப்போம்

-காஞ்சி பாறைகள்

_______________

_______________

Poornachandran Ganesan

ஓர் ஆள், மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்கவில்லை. தேசியகீதம் பாடுமபோது மட்டும் எழுந்து நிற்கிறார். தமிழ அவருக்குத் தாய்மொழியாக இல்லாமல் போனால் போகிறது. மேடை மரபைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லையா? எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்தந்த நாட்டின் மரபுகளுக்கு மரியாதை கொடுத்து எழுந்து நிற்பதுதான் நல்லொழுக்கம். அதெல்லாம் இவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல், தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்ற காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

நேற்று (23.1.2018) சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூனியர் காஞ்சி சங்கராச்சாரியாரான விஜயேந்திரர், ஆளுநர் மற்ற சிலரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நேரத்தில் எழுந்து நிற்காமல், இறுதியில் தேசியகீதம் என்ற ஜன கன மண பாட்டுப் பாடப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றுள்ளார் என்ற செய்தி இன்றைய (24.1.2018) டெக்கான் கிரானிக்கள் ஆங்கில நாளேட்டில் வந்துள்ளது!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு!

ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந்து, பிறழ் சாட்சிகள் 83 பேர்களின் தயவால் கொலைக் குற்றத்திலிருந்து, புதுவை செஷன்ஸ் கோர்ட்டில் விடுதலை பெற்று, மேல்முறையீடு செய்யாது தப்பித்துக் கொண்டதால், வெளியில் நடமாடும் இவர், அந்த சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அதுவும் ஆளுநர் போன்றவர்கள் எழுந்து நின்ற நிலையில்கூட, எழுந்து நிற்க மறுத்து, அடாவடித்தனமாக அப்படியே அமர்ந்திருப்பது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

இது அவை நாகரிகத்திற்கேகூட அவமரியாதை அல்லவா?
தமிழ் நீஷ பாஷை – சமஸ்கிருதம் தேவ பாஷை என்று கருதும் – கூறும் புத்திதானே இதற்கு மூலகாரணம்?

தந்தை பெரியார் கட்டிக் காத்த தனிப் பண்பாடு

தள்ளாத வயதில்கூட, கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளில், கடவுள் வாழ்த்து பாடப்பட்ட நேரத்திலும், நாட்டுப் பண் இசைக்கப்பட்டபோதும் எழுந்து நின்று அவை நாகரிகத்தினைப் பேணிக் காப்பாற்றிய வரலாறு நாடறிந்த ஒன்று அல்லவா!

இன்னமும் மொழியிலும் உயர்வு- தாழ்வு மனப்பான்மை, பேதத்தன்மை, பார்ப்பனர்களிடம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும்!

மன்னிப்புக் கேட்கவேண்டும் சங்கராச்சாரியார்!

தமிழ்நாட்டிலிருந்து கொண்டு, தமிழர்களிடம் காணிக்கை கணிசமாகப் பெற்றுக்கொண்டு பிழைக்கும் பார்ப்பன மடாதிபதியின் தமிழ் அவமதிப்பை – தமிழர்கள் புரிந்துகொள்வார்களா – அம்மேடையில் அமர்ந்திருந்த பட்டிமன்றப் புலவர் சாலமன் பாப்பையா உள்பட?

தமிழர்களே அடையாளம் காண்பீர்! சங்கர மடம் இதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்!

-கி.வீரமணி, தலைவர்
திராவிடர் கழகம்.

_______________

Karthik Meka

வள்ளலாரை ஏற்று கொள்வதும் தமிழ் அய்யா வழியை ஏற்று கொள்வதும் தமிழ். காஞ்சி மடத்தை விரட்டுவதும் தமிழ். நித்தியானந்தாவை விரட்டுவதும் தமிழ்.

தமிழுக்கு ஆக்கவும் தெரியும் அழிக்கவும் தெரியும்.

_______________

Shankar A

இப்படி தமிழர்களையும் தமிழையும் தொடர்ந்து அவமதிப்பீர்கள். நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா ? உங்களுக்கு தமிழகத்தில் என்ன வேலை ? வெளியேறுங்கள்.

_______________

_______________

Mathava Raj

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எல்லோரும் எழுந்து நிற்கும்போது நீ ஏன் எழுந்து நிற்கவில்லை என்று கேட்டால், அந்த நேரம் அவாள் தியானத்தில் இருந்ததாகவும், கடவுள் வாழ்த்தின் போது பெரியவாள், சிறியவாள் எல்லாம் தியானத்தில் இருப்பதுதான் வழக்கம் என்றும் ஒரு விளக்கம் மடத்திலிருந்து தரப்பட்டு இருக்கிறது.

தமிழ் மொழியை, தமிழர்களை துச்சமாக மதித்து விட்டு அதற்கு இப்படியொரு திமிரான விளக்கம் அளிக்க பார்ப்பனிய பீடங்களுக்கு மட்டுமே இங்கு சாத்தியமாகும்.

அந்த எழவு தியானத்தை எழுந்து நின்று செய்தால் என்ன, மடத்தின் குடி முழுகியாப் போய்விடும்?

_______________

Keetru Nandhan

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி விஜயேந்திரனால் தமிழர்களின் மனம் புண்பட்டு விட்டது. எனவே மனோன்மணியம் சுந்தரனார் சமாதிக்குச் சென்று அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது…

அவர் மன்னிப்பு கேட்கும்வரை, இக்கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களும் காஞ்சி மடத்தின் முன்பு தொடர் போராட்டங்களை அறிவிக்க வேண்டும்.

_______________

ராஜா ஜி

தமிழ்த்தாய் வாழ்த்தை முழுவதும் பாடினால் மட்டுமே ஆரியம் நடுநடுங்கும், 1970-இல் கலைஞரின் பெருந்தன்மையால் விடுபட்ட இந்த வரிகளை பாடி மனோன்மணியம் சுந்தரம்பிள்ளைக்கு நன்றி சொல்லுவோம்;
இதோ பாடல் வரிகள்…..?

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.
இதை இணைத்தே பாடுவோம், ஆரிய கூட்டம் நடுங்கட்டும்…..

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.

_______________

Kasi Krishna Raja

கல்வி அறிவற்ற ஒரு தற்குரி பிராமணன் ஒரு அடி மேலே…உயர் தமிழறிவு பெற்ற பேராசான் பாப்பையா ஓரடி கீழே…இது தான் பிராமண ஹிந்தியா…நீ பண்ணிய செயலுக்கு பாப்பையாவும் இந்நேரம் தீவிர தமிழ் தேசியவாதியாகியிருப்பார். தமிழன் மதமற்றவன். உன் அஸ்திவார செங்கல்லை ஓவ்வொன்றாக உருவுவோம்.

_______________

R T Muthu

விழா தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிறைவின் பொழுது தேசிய கீதமும் இசைப்பது என்பது தமிழ்நாட்டில் யாவரும் பின்பற்றும் நடைமுறை என்று , சின்னசங்கரனுக்கு அந்த காமாட்சி கூட, அசரீரி சொல்லவில்லையா?

_______________

மலையமான் தே.கி.

ஆண்டாள் டிஸ்சார்ஜ்ட்; சங்கராச்சாரி சின்னது அட்மிட்டட்..(பெருசும் அட்மிட்டட் தான்)

_______________

Villavan Ramadoss

ஐ திங்க்,

நாம ஈக்வலா ஓட்ட வேண்டியது சாலமன் பாப்பையாவையும்தான். சோறு திங்கிறது இங்க, பில்லை கட்டுறது அங்கயா?? ஜயேந்திரா, என்னை வாழ்த்தும்போது ஏண்டா ஏந்திரிக்கல?

_______________

ராஜா ஜி

ஏற்கனவே வைரமுத்து – ஆண்டாள் பிரச்சினையில் மாட்டிக்கிட்டோம்,
இப்போ விஜயேந்திரன் பிரச்சினை வேறு வந்துவிட்டதே!
– புலம்புறது யாரு தெரியுமா?

வைரமுத்துவை அழைத்து, விழா ஏற்பாடு செய்த தினமணி வைத்தியநாதய்யர் செய்யாத தப்புக்கு அய்யங்கார் ஜீயரிடம் மன்னிப்பு கேட்டுட்டார்.

எச்.ராஜா சர்மா முன்னிலையில் தமிழை அவமதித்த சங்கரரை , சர்மாஜி என்ன சொல்லி திட்டப்போகிறார்?
சர்மாஜியை நித்தியானந்த சீ.டிகள் என்ன அர்ச்சனை செய்யப் போகிறார்கள்?
நைனார் நாகேந்திரன் யாருக்கு என்ன விலை வைக்கப்போகிறார்?
தலை உருளப்போகிறதா?
நாக்கை வெட்ட வேண்டுமா?
மாமிகள் தலைமையில் போராட்டம் தொடங்கிய ஜீயர் என்ன செய்யப்போகிறார்?
2000 சிப்ஸ் விஞ்ஞானி எஸ்.வி.சேகரின் வாய்மூலம் என்ன?

_______________

Sivasankaran Saravanan

தேசியகீதம் பாடினால் எழுந்து நில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தலை வணங்கு, தேசிய கொடியை கண்டால் வணக்கம் செலுத்து என்றெல்லாம் நிர்ப்பந்தப்படுத்துவதற்கு நாம் நீதிமன்றம் போல கொடுங்கோலர்கள் அல்ல.

ஆனால் தேசியகீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க தெரிந்த விஜயேந்திரருக்கு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது தெனாவட்டாக உட்கார்ந்திருந்தார் என்றால் அது நிச்சயமாக தமிழர்களையும் தமிழையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான்.

என்னதான் அவர்கள் தமிழ்நாட்டில் உண்டு, தமிழர்களின் உழைப்பை உறிஞ்சி கொழுத்தாலும் ஆரியக்கூட்டம் தங்களை தமிழர்களாக உணரமாட்டார்கள் என்பதற்கு இதுவே சான்று!

தமிழ்த்தாயை அவமானப்படுத்தி ஒட்டுமொத்த தமிழர்கள் மனதையும் புண்படுத்திய சங்கராச்சாரி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்!

_______________

வினோத் களிகை

செய்யாத தவறுக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்க சொன்னார்கள்

இப்போ (இந்து) தமிழரால் பிழைப்பு நடத்தும் காஞ்சி சின்னவா தமிழ்த்தாயை அவமரியாதை செய்துட்டா

மன்னிப்பு கேட்பாரா? மன்னிப்பு கேட்க செல்வார்களா?

_______________

இரவிக்குமார்

“ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் ”
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே…

என்றிருந்த தமிழ்த்தாய் வாழ்த்தில் ஏன், கலைஞர் 1970-ல் ” ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் ” என்ற வரிகளைக் கலைஞர் ஏன் உருவினார்?

அங்கிருந்து துவங்குகிறது திராவிடத்தின் வாயடைத்தது…

அத்தகைய திருத்தம் செய்தவர், “செயல் மறந்து வாழ்ததுதுமே” என்பதைச் “செயல் புரிந்து வாழ்த்துதுமே” என்று திருத்தியிருந்தால் அது வரவேற்கத் தக்கதாயிருந்திருக்கும்…

அன்றிலிருந்தே தமிழை வளர்க்கும் செயல் மறந்துதான் போனார்கள் திராவிடக் கட்சியினர்…

அதன் நீட்சிதான், இன்றும் தமிழ் முழுமையான ஆட்சி மொழியாகவில்லை, கல்வி மொழியாகவில்லை, வழக்கு மொழியாகவில்லை, மருத்துவ மொழியாகவில்லை, பொறியியல் மொழியாகவில்லை…

திராவிடக் கட்சியின் தலைகள் பலரும், தமிழ்ப்பள்ளி துவங்கவில்லை… ஆங்கிலப் பள்ளிகளைத் திறந்து, அங்கே தமிழில் பேசினால், பேசுகிற மாணவருக்குத் தண்டனை வழங்கும் வழக்கத்தை இயல்பாக நிறுவினர்…

தமிழ் கற்காமலேயே மிக்குயர் கல்வி வரை ஒருவர் தமிழ்நாட்டில் மட்டுமே கற்க முடியும்…

உலகத் தமிழ் மாநாடுகளைப் படாடோபமாய் நடத்தி என்ன பயன்?

தமிழர் நாவுகளிலிருந்து தமிழை அறுத்தெறியும் கொடுமையை இவர்களின் புற்றீசல் ஆங்கிலப் பள்ளிகள் செவ்வனே செய்கின்றன…

அதோடு ஏற்கெனவே உள்ள வடக்கு அபாயங்களான இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு…

தமிழ் இத்தனை இடிகளையும், துரோகங்களையும் தாண்டித்தான் மக்கள் நாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது…

_______________

பெருமாள்சாமி சுப்புராஜ்

தமிழ் மொழியை அவமரியாதை செய்த விஜயேந்திரன் காஞ்சிபுரம் மடத்தின் வாசலில் நின்று கொண்டு அங்கு வருவோர் போவோர் காலில் எல்லாம் ஒரு நாள் விழ வேண்டும் அப்போதுதான் செய்த தவறுக்கு தமிழகம் ஓரளவுக்கு அமைதியாகும் . தமிழுக்காகவே ஆண்டாள் பிரச்சினையில் குரல் கொடுத்த ராஜா இதை வலியுறுத்துவார்