privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாதுருப்பிடித்த கத்தியும் உலகத்தரம் வாய்ந்த தலை நகரமும் !

துருப்பிடித்த கத்தியும் உலகத்தரம் வாய்ந்த தலை நகரமும் !

-

ந்திராவின் கிழக்கு கோதவரி மாவட்டம், அக்கிவேடைச் சேர்ந்தவர் ரூபாதேவி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு 12.02.2018 அன்று  பிரசவவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கிவேடு அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அப்போது பரிசோதித்த டாக்டர் குழந்தை திரும்பி இருப்பதாகக் கூறி இனிமா வழங்கி அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தனர்.

அச்சமயம் டாக்டர், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தக் கூடிய கத்தி துருபிடித்திருப்பதாகக் கூறி, ரூபாதேவியை பீமாவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். இதனால், ஆத்திரமடைந்த ரூபாதேவியின் உறவினர்கள் டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வலியால் துடித்துக்கொண்டு இருந்த ரூபாதேவியை பீமாவரம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து, அக்கிவேடு டாக்டர் ராம்பாபு கூறுகையில், ‘கடந்த வாரம் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்தோம். அப்போது அதில் இருந்த ரத்தக் கறையை சரியான முறையில் தூய்மை செய்யாததால், கத்தி துருப்பிடித்து உள்ளது. அதனால், தான் வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும படி தெரிவித்தோம்’ என்றார்.

நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஓருவருக்கு இனிமா வழங்கப்பட்ட பிறகு சிகிச்சை செய்யப்படாமல் ஏறக்குறைய 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற வினோதம் இந்தியா போன்ற ஏழை நாடுகளைத் தவிர வேறு எங்கு சாத்தியம்?

இனிமா கொடுக்கப்பட்ட எவராயினும் அவருக்கு எளிதில் உடல் அசதி வருவது இயல்பு, அப்படி இருந்த நிலையில் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான கத்தியைக் கூட தயார் நிலையில் வைத்துக் கொள்ள முடியாத அவல நிலையில் தான் அரசு மருத்துவமனைகளின் தரம் உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் தவித்துக்கொண்டிருக்க ஆளும் தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வில்லை என பாஜக -வுடன் செல்லச் சண்டை நடத்தி வருகிறார். இவர்கள் கருதும் அந்த ‘சிறப்பு அந்தஸ்தில்’ ஏழை மக்களுக்கு இடமில்லை என்பது மட்டும் நிச்சயம்.

ஏற்கனவே ஆந்திராவின் புதிய தலை நகராக அமராவதி நகரம் தேர்வு செய்யப்பட்டு, 33,000 ஏக்கர் பரப்பளவுள்ள தரமான விளை நிலங்களின் மேல் ஏறக்குறைய 58,000 கோடி அளவிலான பணத்தை வாரியிறைப்பதென்று சந்திரபாபு நாயுடு அரசால் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் ஒரே ஒரு துருப்பிடித்த கத்தியை வைத்துக்கொண்டு ஒரு அரசு மருத்துவமனையை நிர்வகிப்பது, உழைக்கும் மக்களின் உயிருக்கு ஒரு இமியளவு கூட மதிப்பில்லை என்பதையே எடுத்துரைக்கிறது!

மேலும் :

கத்தி துருப்பிடித்துவிட்டதாக கூறி கர்ப்பிணியை திருப்பி அனுப்பிய டாக்டர்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க