privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாடெங்கு பெயரில் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கொள்ளை !

டெங்கு பெயரில் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கொள்ளை !

-

ருந்துகள், மருத்துவக் கருவிகள் மற்றும் நோயறி சோதனைகளுக்கு 1737 விழுக்காடு வரை தாறுமாறாக விலையேற்றம் செய்து தனியார் மருத்துவமனைகள் கொள்ளை இலாபம் அடித்திருப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. போர்டிஸ் உள்ளிட்ட நான்கு ‘புகழ் பெற்ற’ கார்ப்பரேட் மருத்துவமனைகளில் இவ்வாய்வினை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) நடத்தியதில் இது தெரிய வந்துள்ளது.

சிறுமி ஆத்யாவை படுகொலை செய்த போர்டிஸ் மருத்துவமனை

சமீப காலங்களில் இத்தனியார் மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் இதர நோய்களினால் ஏற்பட்ட மரணங்களின் போது பாதிக்கப்பட்டவர்களிடம் அதிகபடியான கட்டணத்தை வசூலித்ததாக குறிப்பாக இந்நான்கு மருத்துவமனைகள் மீது வழக்குகள் பதியப்பட்டதைத் தொடர்ந்து அவற்றில் ஆய்வு நடத்தியதாக அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அம்மருத்துவமனைகளிடம் பெறப்பட்ட 69,34,764 ரூபாய் மதிப்பிலான மருத்துவ இரசீதுகளை கொண்டு இந்த ஆய்வினை அந்த ஆணையம் மேற்கொண்டது.

புதுடெல்லியில், டெங்குவினால் பாதிக்கப்பட்டு முறையான சிகிச்சையளிக்கப்படாமல் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்த சிறுமி ஆத்யாவின் பெற்றோரிடம் இருந்து 16 இலட்சம் ரூபாயை போர்டிஸ் தனியார் மருத்துவமனை கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது.

ஆணையத்தின் அதிகார வரம்பு

ஆயினும் இம்முறைகேடு அம்பலமானதாலேயே அத்தனியார் மருத்துவமனைகளை சட்டரீதியாக தண்டிக்க முடியாது. அதாவது மருத்துவ இரசீதுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெரும்பாலான செலவுக்கள் இவ்வாணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வராது.

இவ்வாணையம் விலை நிர்ணயம் செய்திருக்கும் அட்டவணை (விலை நிர்ணயிக்கப்பட்ட) மருந்துக்களின் (scheduled formulations) எண்ணிக்கை 871. இதில் வராத இதர மருந்துகள் அனைத்தையும் முதலாளித்துவ ‘சுதந்திர சந்தை’ தான் தீர்மானிக்கும். இவ்வட்டவணை மருந்துக்கள் அனைத்தும் தேசிய இன்றியமையா மருந்துக்கள் பட்டியலில் (National List of Essential Medicines) இடம் பெற்றவை. இவற்றை மட்டுமே இந்த ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியும்.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மருத்துவ இரசீதுகளில் பெரும்பான்மையானவை இவ்வாணையத்தால் கட்டுப்படுத்தப்பட முடியா ‘வகையறாக்களை’ச் சேர்ந்தவை. இரசீது கட்டணத்தில் 25 விழுக்காடாக இவை இருக்கின்றன.

இதற்கு அடுத்ததாக ஆய்வுகளுக்கான கட்டணங்கள் 16 விழுக்காடு இருக்கின்றன. மருத்துவ ஆலோசனை மற்றும் மேற்பார்வை, நடைமுறைகள் மற்றும் அறை வாடகை ஆகியவற்றுக்கான செலவு 12 விழுக்காடு வருகிறது. அறுவைச்சிகிச்சைக்கான கட்டணம் 1 விழுக்காட்டை விட குறைவாகவே இருக்கிறது. மேலும் இரசீதுகளில் அட்டவணை மருந்துக்கள் வெறும் 4 விழுக்காடே இருக்கின்றன.

கொள்ளை இலாபம் அடிப்பதற்காக அட்டவணையில் இடம் பெறாத மருந்துக்களை தனியார் மருத்துவமனைகளும் அதன் மருத்துவர்களும் தங்களது மருந்தகங்களில் வழங்கப்படும் மருந்துகளை வாங்குமாறு பரிந்துரைக்கின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

மருத்துவ நிறுவனங்கள் சட்டம், 2010-ன் படி இந்த அடாவடியான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் எங்களிடமோ அல்லது மைய அரசிடமோ இல்லை என்றும் மாநில அரசுகள் இதை கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றன என்று கூறுவதன் மூலம் இப்பிரச்சினையில் இருந்து நழுவப் பார்க்கிறது இவ்வாணையம்.

கொள்ளை இலாபம் எப்படி கிடைக்கிறது?

இந்த அடாவடியான விலையேற்றத்தால் இலாபம் அடைவது மருத்துவ பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அல்ல, தனியார் மருத்துவமனைகளே என்கிறது இந்த ஆய்வு.

சட்டப்படி 350 விழுக்காடும் சட்டத்திற்கு புறம்பாக 1737 விழுக்காடும் கொள்ளை அடித்திருக்கின்றன

நோயாளிகளுக்கான மருத்துவ கருவிகள், ஆய்வுகள் மற்றும் மருந்துக்கள் உள்ளிட்ட அனைத்தையும் தங்களது மருத்துவமனைக்குள்ளேயே வாங்குமாறு கட்டாயப்படுத்துவதன் மூலம் தனியார் மருத்துவமனைகள் இதை சாதிக்கின்றன.

மருந்துக்கள், மருத்துவக் கருவிகள், மருத்துவ ஆய்வுகள் ஆகியவற்றுக்கான கட்டணங்களை இம்மருத்துவமனைகள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. இவை ஒட்டுமொத்த செலவில் 45 விழுக்காடு வரை பிடிக்கின்றன. இதனால் நோயாளிகள் தொடக்கத்தில் கணக்கிட்ட கட்டணத்தை விட கடைசியில் 4 மடங்கு அதிகமாவதாக புகார் தெரிவிகின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

என்ன சாதித்திருக்கிறது இந்த ஆணையம்?

ஆணையத்தின் சொந்த ஆய்வின் மூலமாகவே இதை நாம் பார்க்கலாம்.

அட்டவணை மருந்தான ப்ரோபோஃபோல்(propofol) மயக்க மருந்தின் கடை விலை 80.96 ரூபாய். இதை இத்தனியார் மருத்துவமனைகள் பாதி சந்தை விலையில் வாங்கி அதன் விலையை 357 விழுக்காடாக ஏற்றி அதிகபட்ச சில்லறை விலை (MRP) போட்டு மோசடி செய்திருக்கின்றன.

விலை நிர்ணய பட்டியலில் வராத (அதாவது ஆட்டவனையில் வராத) மாரடைப்பிற்கு பயன்படுத்தப்படும் அட்ரேனோர் (Adrenor) மருந்தின் கடை விலை 13.64 ரூபாய். அதை 14.70 ரூபாய்க்கு சந்தையில் வாங்கிய மருத்துவமனைகள் அவற்றில் 28 மருந்துக்களின் விலையை 5,318 ரூபாய் என்று நோயாளிக்களுக்கு மொய் எழுதியிருக்கின்றன. இதன் இலாப விகிதம் 1192 விழுக்காடு மட்டுமே. இதுவே ஒருமுறை பயன்படுத்தும் ஊசிகளுக்கு 1596 விழுக்காடு அளவிலும் மருத்துவக் கருவிகளுக்கு 1271 விழுக்காடு அளவிலும் இந்நான்கு தனியார் மருத்துவமனைகளும் கொள்ளை இலாபம் அடித்துள்ளன.

அறுவை சிகிச்சைக்கான முகமூடிகள், கையுறைகள் உள்ளிட்டவைகளுக்கு கொள்முதல் விலையில் 1737 விழுக்காடு இலாபம் பார்த்திருக்கின்றன இம்மருத்துவமனைகள். இப்படி இலாப விகிதங்களில் ஏற்ற இறக்கங்களை தான் இந்த ஆணையம் சாதித்திருக்கிறது.

புரியும்படி சொல்வதானால் சட்டப்படி 350 விழுக்காடும் சட்டத்திற்கு புறம்பாக 1737 விழுக்காடும் சுதந்திர சந்தை பெற்றெடுத்த நடுத்தர வர்க்கத்தினரிடம் பகல் கொள்ளை அடித்திருக்கின்றன இத்தனியார் மருத்துவமனைகள். அவ்வர்க்கத்தின் பெயரால் ஏழைகளுக்கான அரசு மருத்துவமனைக் கட்டமைப்பு நொறுக்கப்பட்டிருப்பது இன்னொரு பரிமாணம். தனியார் மயம் மக்களின் உடல்நலத்திற்கு எமன் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

செய்தி ஆதாரம்
Private Hospitals, Including Fortis, Making Profits up to 1737%: Drug Price Regulator’s New Study
சிறுமி ஆத்யாவை படுகொலை செய்த போர்டிஸ் மருத்துவமனை !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க