privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராட்டத்தில் நாங்கள்தமிழை ஆட்சி மொழியாக்கு ! திருச்சி - குடந்தை மாணவர் போராட்டம் !

தமிழை ஆட்சி மொழியாக்கு ! திருச்சி – குடந்தை மாணவர் போராட்டம் !

-

தன்னுரிமையை நிலைநாட்ட தமிழகமே திரண்டெழு!  திருச்சியில் பு.மா.இ.மு தோழர்கள் ஆர்ப்பாட்டம்!

“பள்ளி ,கல்லூரிகளில்,பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு! அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு! அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு!”

ஆகிய முழக்கங்களை முன்வைத்து 27.2.18 அன்று திருச்சியில் மாலை 5.00 மணி அளவில் தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு, என்ற முழக்கத்துடன் மத்திய பேருந்து நிலையம்,விக்னேஷ் ஹோட்டல் அருகில் 80 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது. இதில் பல்வேறு மாணவர் அமைப்பு தோழர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் துவக்கமாக தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டத்துடன் துவங்கியது. ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாக முதலில் AISF தோழர் சூர்யா “இன்று ஆளும் மத்திய அரசினால் நீட் தேர்வு திணிக்கப்பட்டு தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்து – இந்தி – இந்தியா என்ற கொள்கையை அமல்படுத்த தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டத்துடன் இப்போ இருக்கிற வேலையும் உறுதியில்லாமல் இருக்கிறது. இந்த பி.ஜே.பி அரசு தொடர்ந்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெரியார் பிறந்த மண் நம் தமிழ்நாடு ஆதலால் தொடர்ந்து நம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.

அடுத்ததாக ஆக்ஸ்ஃபோர்ட் கல்லூரி மாணவர் தர்மராஜ், “தமிழ்நாட்டில் மாணவர்களின் போராட்டம் தொடந்து நடந்து கொண்டே இருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும். மீனவ மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் விதமாக சாகர் மாலா திட்டம் மத்திய அரசினால் திணிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. சென்னை ஐஐடி யில் அறிமுக நிகழ்ச்சியில் தமிழ்மொழி அவமானப்படுத்தப்பட்டது.

சங்கராச்சாரிகளும், காவி மையங்களும், இந்த BJP கும்பலும் தமிழ்மொழியையும், தமிழ் பண்பாட்டையும் அழிக்க கூடிய வேலையை செய்கிறார்கள். இதை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்” என கூறினார்.

அடுத்ததாக முற்போக்கு மாணவர் கழகம் தோழர் மதன், “இன்று மொழி உரிமையை நிலைநிறுத்த வேண்டிய போராட்டம் நடைபெறுகிறது. சமீபத்தில் அரசானை 92 -ன் படி கல்வி உதவித் தொகையை இந்த அரசு நிறுத்தியுள்ளது. இதனால் 1 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது. பெரியார் மண்ணில் காவி கும்பலை அனுமதிக்க முடியாது. இது போன்ற புரட்சிகர மாணவர்கள் உள்ளவரை தொடந்து எல்லா பிரச்சனைக்கும் எதிராக போராடுவோம்” என்று கூறினார்.

போராசிரியர் ஸ்டீபன் என்பவர் கலந்து கொண்டு மொழி உரிமைக்கான நமது கோரிக்கைகளை நிறைவேற்ற நாம் எவ்வாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே முக்கியம். சமூக நீதி, சமூக பொருளாதாரம், இந்தியாவின் அனைத்து இனங்களுக்கும் சமமாக கொடுக்கப்பட வேண்டும் என்கிற சட்டம் உள்ளது. ஆனால் இது இப்போது இல்லை. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஆகிய ஆகியோர்களிடம் நமது கோரிக்கைகளை அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என கூறினார்.

அடுத்ததாக பு.மா.இ.மு தோழர் சுரேந்தர் “தமிழ்நாட்டில் நவோதயா பள்ளி திணிப்பு, NEET அனிதா கொலை, GST -யால் சிறு தொழில் வீழ்ச்சி என அனைத்து திட்டங்களும் மக்களுக்கு எதிராக உள்ளது. எடப்பாடி தன்னுடைய சொத்துக்களை பாதுகாக்க மோடி காலை நக்கி பிழைக்கிறார். இங்கு மக்களுக்காக அரசா? அரசிற்காக மக்களா? அதிகாரிகள், அரசியல்வாதிகள் மக்களின் சேவர்கள், ஆனால் அப்படியா உள்ளது. ஆகையால் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு இந்த அரசு கட்டமைப்பில் இல்லை. இந்த அரசு கட்டமைப்பு அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. மக்கள் போராட வீதியில் இறங்கினால் மட்டுமே பிரச்சனைகளை சரி செய்ய முடியும்” என்று கூறினார்.

கடைசியாக பு.மா.இ.மு தோழர் மணிமாறன் “இன்றைக்கு ஆளும் BJP அரசு 16 மாநிலங்களின் வெற்றியையும் அதன் அனுபவங்களையும திரட்டி, தமிழ்நாட்டை நோக்கி வந்துள்ளனர். இதை நாம் ஒன்று சோ்ந்து முறியடிக்க வேண்டும். அதிகார வர்க்கம், என்பது கண்ணுக்கு தெரிந்தவா்கள் மட்டுமல்ல. அரசு துறை அதிகாரிகள், பல்கலைகழகங்கள், NGO போன்று பல்வேறு வடிவங்களிலும் நம்முடன் கலந்துள்ளனர். பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் போராட்டத்திற்காக தீர்வு ஏன் கிடைக்கவில்ல என்று மாணவர்கள் கேட்கின்றனர். போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கும் போலிஸ்காரர்கள், போராசிரியர்கள் போன்றவர்களையும், கண்ணுக்கு தெரியாத பகட்டான பொறுக்கிகளையும் அடையாளம் காண வேண்டும். அரசியல்வாதிள் பேருந்தில் உள்ள டயரே. அடிக்கடி காற்று அடிச்சு கொஞ்ச காலம் ஓடும். ஆனால் வண்டியில் உள்ள இன்ஜின்தான் முக்கியம். அதுதான் அரசு அதிகார வர்க்கம். அதைத்தான் நாம் மாற்ற வேண்டும். ரஜினி, கமல் போன்ற கோமாளிகள் எல்லாம் இங்கே தேவையில்லை. மேலும் நாம் போராடுவதில் உற்சாகம் குறையாமல், தொடர்ச்சியாக போராட வேண்டும், மெரினா போன்ற எழுச்சியை மீண்டும் நாம் நிகழ்த்திக் காட்டுவோம்” என்று கூறினார்.

மகஇக தோழர்கள் கல்வி சார்பாகவும் பார்ப்பனியத்திற்கு எதிராகவும் பாடல்கள் பாடியது மாணவர்களுக்கு மேலும் உற்சாகம் அளித்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
திருச்சி.

*****

குடந்தை காந்தி பூங்கா அருகில் பு.மா.இ.மு சார்பாக தோழர் பகத் தலைமையில் 27, பிப்ரவரி காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை “பள்ளி ,கல்லூரிகளில்,பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு! அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு! அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு!” என்ற கோரிக்கையை முன்வைத்து   கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது….

தோழர்கள் தமிழ் அமுதன், எழிலன், தஞ்சை அமைப்பாளர் குஸ்த்தினா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
குடந்தை, தொடர்புக்கு : 96297 01560.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க