privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விதோழர் லெனினின் சாதனைகள் ! வீடியோ

தோழர் லெனினின் சாதனைகள் ! வீடியோ

-

தோழர் லெனின் சிலை இடிப்புக்கு நாடு முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. பாஜகவின் ஊடக பேச்சாளர்களும், பொறுப்பில் இருப்போரும், ”லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு?, கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? “ என எக்காளத்துடன் பேசுகின்றனர். பார்ப்பனக் கொழுப்பின் பிண்டமான சுப்பிரமணிய சாமி, லெனின் ஒரு தீவிரவாதி என்றும், பல மக்களைக் கொன்றவர் என்றும் கூச்சநாச்சமில்லாமல் பேசியுள்ளார்.

லெனினைக் கண்டு இக்கும்பல் அலறுவது ஏன்? கொஞ்சம் வரலாற்றுரீதியாகப் பார்ப்போம். தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயர்களை தூங்க விடாமல் செய்த தோழர் பகத்சிங் தனது ஆதர்சன நாயகனாக குறிப்பிடுவது தோழர் லெனினை மட்டுமே. தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு வரை அவர் படித்துக் கொண்டிருந்தது, லெனினுடைய நூல்களைத்தான். சோசலிச புரட்சி ஒன்றே, சகல ஒடுக்குமுறைகளில் இருந்தும் இந்திய மக்களை விடுதலை பெறச் செய்யும் என்றார் பகத்சிங். லெனின் பிறந்தநாளுக்கு சிறையில் இருந்து ரசியாவிற்கு வாழ்த்துத் தந்தி அனுப்பினார் பகத்சிங்.

வெள்ளைக்காரனின் காலை நக்கி அவனிடம் மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்து, வெளியே வந்த ’வீர்’ சாவர்க்கரின் வாரிசுகளுக்கு, ஆங்கிலேயனின் சிம்ம சொப்பனமான பகத்சிங்கின் ஆதர்சன நாயகனான லெனினை எப்படிப் பிடிக்கும்?

இதோ லெனினின் சாதனைகள் – ரசியப் புரட்சி தோற்றுவித்த உலகளாவிய சாதனைகளை இந்தக் காணொளியில் காணுங்கள் …

 

 

  1. இசையும் வாசகங்களின் பொருளமைதியும் இவற்றில் ஊடாடிய உணர்ச்சியும் என் கண்களைக் கலங்க வைத்துவிட்டன.நாதியற்ற மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய சக்திகளின் முன்வரிசையில் நாம் உள்ளோம் என்பதற்கு இந்தத் தொகுப்பே சாட்சி. சலிப்பையும் சோர்வையும் எப்போதும் விரட்டும் ஆற்றலை இத்தொகுப்பு கொண்டிருக்கிறது. உருவாக்கிய தோழர்களுக்கு நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க