privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபகத்சிங் நினைவு நாள் : மாணவர் - இளைஞர்களுக்கு ஓர் அறைகூவல் !

பகத்சிங் நினைவு நாள் : மாணவர் – இளைஞர்களுக்கு ஓர் அறைகூவல் !

-

மார்ச்-23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஐகுரு நினைவு நாளில் உறுதியேற்போம்!

Chennai RSYF Bagath Singh Memorial (16)

  • நாட்டைக் காக்க மாணவர்கள், இளைஞர்களுக்கு ஓர் அறைகூவல்!
  • லெனின் – பெரியார் சிலைகளை உடைத்து இந்துமதவெறியாட்டம் போடும் கார்ப்பரேட் கைக்கூலிகளான RSS – BJP -யை நாட்டிலிருந்தே விரட்டியடிப்போம்!
  • சாகர்மாலா, ஹைட்ரோகார்பன் என நாட்டை சூறையாடும் கார்ப்பரேட் கொள்ளைக்கு முடிவுகட்டுவோம்!
  • மக்கள் அதிகாரத்தை படைப்போம்!

என்ற முழக்கங்களின் அடிப்படையில் சென்னை மதுரவாயல் பகுதி பு.மா.இ.மு சார்பில் 23.3.2018 அன்று காலை 9.00 மணியளவில் உறுதியேற்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் தோழர்கள், பகுதி மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ம.க.இ.க-வின் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன. இசைச் சமர் பறை இசைக்குழுவின் சிலம்பாட்டம் மற்றும் பறை இசை இசைக்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை. தொடர்புக்கு : 94451 12675.

*****

“மார்ச் 23  பகத்சிங் – ராஜகுரு – சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள்… ஏகாதிபத்திய எதிர்ப்பு நாள்! நாம் என்ன செய்யப் போகிறோம்?” என்ற தலைப்பின் கீழ், 23.03.2018 அன்று காலை 8 மணி அளவில் குடந்தை அரசு கலைக் கல்லூரி வாயில் முன்பு கூட்டம் நடத்தப்பட்டது.

மேலும் கல்லூரி மாணவர்களுக்கு பகத்சிங் – சுகதேவ் – ராஜகுரு படம் பொறித்த பேட்ச் அணிவிக்கப்பட்டது. மேலும் கல்லூரி வளாகச் சுவர்களில் பகத்சிங் படங்கள் ஒட்டப்பட்டன.

மதியம் 2:00 மணி அளவில் “மீண்டும் அடிமைகளா! நாம் என்ன செய்ய போகிறோம்!”  என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை பு.மா.இ.மு. தோழர் பகத் தலைமை ஏற்று நடத்தினார். கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளான பகத்சிங் – சுகதேவ் – ராஜகுரு ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது .

இக்கூட்டத்தில் பு.மா.இ.மு செயலாளர் தோழர் எழிலன் பகத் சிங் பற்றி உணர்ச்சி ஊட்டும் வகையில் உரையாற்றினார்.

இதை தொடர்ந்து பு.மா.இ.மு குடந்தை கலை கல்லூரி செயலாளர் தோழர் தமிழ் அமுதன் மற்றும் தோழர் அபிமன்யு ஆகியோர் “மீண்டும் அடிமைகளா!” என்ற தலைப்பில் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக உரையாற்றினர். சிறப்பு விருந்தினராக மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மக்கள் அதிகாரம் தோழர் உரையாற்றியது , மாணவர்களுக்கு தாங்களும் பகத்சிங்கின் வாரிசுகள்தான் என்ற உணர்வை உண்டாக்கியது.

மாணவர்கள் மத்தியில் அவர்களது ஆர்வத்தை தூண்ட கல்லூரியில் 2 நாட்களுக்கு முன்னரே அனைத்து இடங்களிலும் பகத்சிங் அவர்களின் முகம் மறைக்கப்பட்ட உருவம் வரையப்பட்டு கேள்விகுறி இடப்பட்டது. அதற்கு பதிலளிக்க அமைப்பின் தொடர்பு எண் தரப்பட்டிருந்தது. அன்று ஒரே நாளில் 100 -க்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டு பேசினர். அதில் 50 -க்கும் மேற்பட்டோர் அந்த படத்தில் இருப்பது யார் என்று சரியாக கூறினர். ”ஏன் பகத்சிங்கின் படம் ஒட்டியுள்ளோம்?” என்பதை தோழர்கள் விளக்கிக் கூறினர்.

சரியாக பதில் கூறியவர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு  அவர்களுக்கு “பகத்சிங் ஒரு வீர வரலாறு” என்ற புத்தகம் கல்லூரி ஆசிரியரால் வழங்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
குடந்தை, தொடர்புக்கு : 97902 15184.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க