பிரதமர் மோடி தற்போது லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் நேற்றைய (18.04.2018) பேட்டி அனைத்து ஆங்கில செய்தி சேனல்களிலும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. #GoBackModi

சொந்த நாட்டில் பத்திரிகையாளர்களை சந்திக்கத் துப்பில்லாத சூரர் லண்டனில் முன்தயாரிக்கப்பட்ட திரைக்கதையில் டைமிங்கில் பதில்களை அள்ளிவீச அவருக்கு அப்ளாஸ்கள் குவிகின்றன.

ஆனால் கடந்த 12-ஆம் தேதி ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே குரலாய் “காவிரியைத் தடுக்கும் தமிழினப் பகைவன் மோடியே திரும்பிப்போ !” என முழங்கியது. இதனை இருட்டடிப்பு செய்தன வட இந்திய ஊடகங்கள்.

உலகளவில் டிவிட்டரில் பலரால் பின்தொடரப்படும் நபர்களில் ஒருவர், சமூகவலைதளங்கள் மூலம் எப்போதும் இளைஞர்களுடன் தொடர்பில் இருப்பவர் என்று மார்தட்டிய மோடியின் 56 இன்ச் பலூனை வெடிக்கச்செய்தது “#GoBackModi” எனும் குண்டூசி.

திருவிடந்தையில் நடந்த மொத்த நிகழ்ச்சியிலும் முகத்தில் ஈஆடாமல் சவக்களையுடன் தான் அமர்ந்திருந்தார் மோடி. மெய்நிகர் உலகில் மட்டுமல்ல மெய்யுலகிலும் அவருக்கு பாடம் கற்பித்தது தமிழகம். டெல்லியின் அதிகாரம் இங்கு செல்லுபடியாகாது என்பதை நிரூபித்தன தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பதிவு செய்கிறோம்.

*****

”காவிரியைத் தடுக்கும் தமிழினப் பகைவன் மோடியே திரும்பிப்போ !”
– தமிழகம் தழுவிய அளவில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திய  கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

சென்னையில்…

சென்னை கிண்டி பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் தோழர்கள் நடத்திய மோடி எதிர்ப்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

விழுப்புரத்தில்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கம்பத்தில்…

தேனி மாவட்டம் கம்பம் பகுதில் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மோடியின் உருவப்படம் எரிக்கப்பட்டது மேலும் மோடியின் ‘திரு உருவத்திற்கு’ செருப்படி பூஜையும் செய்யப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கோவையில்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்: மக்கள் அதிகாரம்.

**********

குடந்தை மாணவர்கள் போராட்டம் !

“காவிரியில் அநீதி ! துரோகி மோடியே வெளியேறு !” என்ற முழக்கத்தின் அடிப்படையில் 12.04.2018 அன்று குடந்தை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பு.மா.இ.மு சார்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் பலரும் ஆர்வமாக தாங்களாகவே வந்து மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புப் பட்டை அணிந்து கொண்டனர். இறுதியாக கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
குடந்தை – 9790215184.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க