தண்ணி வந்தது தஞ்சாவூரு – காவிரிப் பாடல்

காவிரி நீர் வராததால் நாம் எதையெல்லாம் இழந்தோம் என்பதை அறியத் தரும் இப்பாடல், அதன் மூலம் காவிரி மீட்பு போராட்டத்திற்கு இசையால் உற்சாகப்படுத்துகிறது.

1

க்கள் கலை இலக்கியக் கழகம் 1994-ம் ஆண்டு வெளியிட்ட “அடிமைச் சாசனம்” பாடல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல் “தண்ணி வந்தது தஞ்சாவூரு”.

காட் ஒப்பந்தமும், டங்கல் திட்டமும் ஆதிக்கத்தை துவங்கியிருந்த 90 களின் மத்தியில் வெளிவந்த இந்த இசை அன்னியர்களின் சுரண்டலை இயல்பாய் எதிர்க்கும் விவசாயிகளின் நினைவை மீட்டு வருகிறது. காவிரியில் தண்ணீர் வரும் நாள் எப்படி தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கும் தஞ்சையில் ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என்பதை உணர்த்துகிறது.

இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக தமிழகம் போராடுகிறது. ஓடம் போன காவிரியில் இனி ஒட்டகம் போகுமோ என்று நம் உழவர்கள் அச்சப்படுகிறார்கள். எதை இழந்தோம் என்பதை அறியத் தரும் இப்பாடல், அதன் மூலம் காவிரி மீட்பு போராட்டத்திற்கு இசையால் உற்சாகப்படுத்துகிறது.

பாடல் வரிகள்:

ஏ… தண்ணி வந்தது தஞ்சாவூரூ, தஞ்சாவூரு….
மடை திறந்தது மாயவரம், மடை திறந்தது மாயவரம்…..

ஏ….ஓடையில தண்ணி வந்தா…
நாணல் தலையாட்டும்….
ஓடிவரும் நீரைக்கண்டா….
காத்தும் சிலுசிலுக்கும்….

வாய்க்கா வரப்புல பாட்டுச்சத்தம்..
வானத்து மொத்தமும் கேட்டு நிக்கும்..
காலு கழுவும் எங்க புள்ளைங்களும்
பாட்டுச் சத்தத்த கேட்டு நிக்கும்…

(ஏ தண்ணி..)

ஏ…பொன்னுமணி நெல் வெளையும்…
மண்ணு எங்க மண்ணாகும்…
போகம் நூறு ஈன்று தரும்..
தாயாக எங்க நிலம்….

கொண்டக்கதிருல பூ மணக்கும்…
வண்டல் படிஞ்ச நெல் மணக்கும்…
வெளைஞ்சு நிக்கிற நெல்லு கதுருல
வயலும், வரப்பும் மறஞ்சுடும்…

(ஏ தண்ணி..)

பொன்மலையா போர் உசரும்…
போட்டி வச்சு பொலி உசரும்…
பொங்கலோட தை பிறக்கும்…
செங்கரும்பு வாசல் வரும்…

மாசிப் பங்குனி மத்தாளம் கொட்டும்…
சித்திரை வெயில் வந்து வெருட்டும்…
தாகங்கொண்ட நிலம் காத்திருக்கும் –தண்ணி
காற்றிடம் தூது சொல்லி விடும்…

(ஏ தண்ணி..)

1 மறுமொழி

  1. ர் தனிமனித வக்கிரங்களுக்குத் தீனி போடும் கலைஞனுக்கும் உழைக்கும் மக்களின் பாடுகளையும் கனவுகளையும் பாட்டாய் வடிக்கும் கலைஞனுக்கும் இடையில் உள்ள அடிப்படையான வேறுபாட்டை உணர்த்துவன!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க