பி.எஃப்.ஏ.எஸ் நச்சு ரசாயன ஆலை: ஏகாதிபத்தியங்களின் குப்பைத் தொட்டியாகி வரும் இந்தியா!
“எந்தவொரு சமூகமும் தங்களின் வேலைவாய்ப்புக்காகத் தங்கள் ஆரோக்கியத்தையோ, உயிரையோ பலி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு ஆபத்து என்று நிராகரித்த ஒரு நச்சுப் பொருளை, நம் நாட்டிற்குள் கொண்டு வந்து ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மீண்டும் விற்க அனுமதிக்க முடியாது.”
அன்று பெரும்பத்து.. இன்று ஆலங்குளம் சாதிய தாக்குதல் | ஆதிக்கச்சாதி சங்கங்களின் பின்னால் ஆர்.எஸ்.எஸ்.
அன்று பெரும்பத்து.. இன்று ஆலங்குளம் சாதிய தாக்குதல்
ஆதிக்கச்சாதி சங்கங்களின் பின்னால் ஆர்.எஸ்.எஸ்.
https://youtu.be/HbhgdqHrapc
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
தூய்மைப் பணியாளர் மாரியம்மாள் மீதான தாக்குதல்: காண்ட்ராக்ட்மயத்தை ஒழிக்காமல் தீர்வில்லை
தொழிலாளர்களை மிகக் கடுமையான முறையில் சுரண்டும் காண்ட்ராக்ட்மயத்தை - தனியார்மயத்தை ஒழிப்பதே இதற்கான தீர்வாகும். மாணவர்கள், இளைஞர்கள், மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் இதற்கான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
பாலஸ்தீனம்: போர் நிறுத்தத்திற்குப் பின்பும் தொடரும் இனப்படுகொலை
ஒன்பது வயது அப்துல் கரீம் அஜீஸ் தனது வலது காலை இழந்தான். ஓராண்டு கழித்து அவனது தந்தை இஸ்ரேலின் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டார். காலை நீக்கிய பிறகான வாழ்க்கைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டான். ஆனால், அவன் இழந்த குழந்தைப் பருவத்திற்கான ஏக்கத்தை அழிக்கவில்லை. அந்தக் குழந்தை, தன்னால் மீண்டும் ஓட முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தன் தாயிடம் கூறி வருகிறான்.
உ.பி, ஹரியானாவைத் தொடர்ந்து, ராஜஸ்தானிலும் தொழிலாளர் போராட்டம் மாபெரும் வெற்றி!
வேறு வழி இல்லாமல் அரசுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு நெட்டித் தள்ளப்பட்டது நேப்பினோ நிர்வாகம். பேச்சுவார்த்தை முடிவில் தொழிற்சங்க உறுப்பினர் ஆறு பேர் இடை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்வதாகவும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைக் கூடிய விரைவில் முடித்துத் தருவதாகவும் ஒப்புக்கொண்டது. உடனடியாக தற்காலிகப் பொருளாதாரப் பலன்களாக சில கூடுதல் படிகளைத் தருவதாகவும் ஏற்றுக் கொண்டது.
சேலம் – வாழப்பாடி: மூடப்பட்டுள்ள கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையை மீண்டும் பயன்பாட்டுக் கொண்டு வருக!
சின்ன கிருஷ்ணாபுரத்தில் மூடிக் கிடக்கும் கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையைச் சீரமைப்பதன் மூலம், விவசாயிகளுக்குப் பலனும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இது வாழப்பாடி பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | வெளியீடு | மின்னிதழ்
“தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?” வெளியீட்டை மின்னிதழ் வடிவில் பெற 9840249210 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
ஆகாஷ் கொட்டடிப் படுகொலை: 80 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம்
ஆகாஷ் கொட்டடிப் படுகொலை:
80 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம்
https://youtu.be/nrNZffC5bqc
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
ஆலங்குளம் சாதிய தாக்குதல்: தென் மாவட்டங்களில் தொடரும் ஆதிக்கச்சாதி வெறியாட்டம்!
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் பகுதியைச் சேர்ந்த ‘தேவேந்திர குல வேளாளர்’ சாதியைச் சேர்ந்த 6 பேர் மீது அதே ஊரைச் சேர்ந்த மறவர் சாதி கும்பல் சாதிவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கிறித்துவ மதத்தைப் பின்பற்றுவோராக உள்ளனர்.
நீட் தேர்வு என்னும் தூக்குக் கயிறு
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த ஆண்டிலிருந்தே பல்வேறு காரணங்களால் மாணவர் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மே 20: ஆன்லைன் மருந்து விற்பனையை எதிர்த்து மருந்தகங்கள் முழு அடைப்பு போராட்டம்!
வெளிநாட்டு நிதியுதவி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆன்லைன் மருந்தகங்கள், அதிகப்படியான தள்ளுபடிகளை (Deep Discounting) வழங்குகின்றன. இதனால் இந்தியாவில் உள்ள சுமார் 12.4 லட்சம் சிறு மற்றும் உரிமம் பெற்ற சில்லறை மருந்து வணிகர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் என 40 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
ஜம்மு – காஷ்மீர்: எட்டாவது ஆண்டாக பக்ரீத் கொண்டாட்டத்திற்குத் தடை விதித்த மோடி அரசு!
பாசிச கும்பலால் 2019-ஆம் ஆண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஈத் (பக்ரீத்) மற்றும் பிற முக்கிய மத வழிபாட்டு நாட்களின் போது ஈத்கா மைதானம் மற்றும் ஜாமியா மசூதியில் மக்கள் வழிபாடு நடத்துவதற்குத் தொடர்ந்து தடை விதித்து வருகிறது. எட்டாவது ஆண்டாகவும் இத்தடை நீடிக்கிறது.
நெய்வேலி: நிலம் கையகப்படுத்துவதை என்.எல்.சி. நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் | ம.அ.க
மக்களுக்கு அதீத பாதிப்புகள் ஏற்படுவதை அரசே ஒப்புக்கொள்ளும் நிலையில், மீண்டும் நிலங்களைக் கையகப்படுத்தி என்.எல்.சி.க்கு கொடுப்பது மக்களுக்கு எதிரான செயலாகும். “எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலத்தை வழங்க மாட்டோம். எங்களின் பூர்வீக நிலங்களில் எங்களை வாழ விடுங்கள்” என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சென்னை: 61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்
அதிகாலை நான்கு மணிக்கு போதையிலிருந்த கும்பல், அவரை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடும் இடமான மாநகராட்சி பூங்காவில் இத்தகைய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகாரில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை சரி என்று பாசிஸ்டுகளுக்கு பச்சைக்கொடி காட்டும் உச்ச நீதிமன்றம்!
குடியுரிமையைச் சோதிப்பது, சட்டவிரோத குடியேற்றத்தைக் கண்டடைவதற்கான அதிகாரம் உள்துறை அமைச்சகத்திற்கே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் குறுக்குவழியில் இப்பாசிச நடவடிக்கையில் ஈடுபட்டதை தற்போது உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. ஆகவே கொள்ளை புற வழியாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தும் பாசிச மோடி அரசின் நோக்கத்தை அங்கீகரித்து நிறைவேற்றித் தந்துள்ளது உச்ச நீதிமன்றம்.

























