privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

இனி ஒபாமா இருக்கும் இடம்தான் மோடிக்கு அயோத்தி. அனுமானுக்கு கணையாழி...ஆர்.எஸ்.எஸ். சுக்கு அணு உலை...
கட்டாயம் கவிதைக்கு மெய்யழகுதான் இருக்கிறது. அதனை தரிசிக்க வாசகர்களை அழைக்கிறது புத்தகம் - அதாவது "புரட்சிக்கு ஏங்கும் காலம்".
கனவுகளையும் திவாலாக்கி கடைசிச் சொட்டு உதிரத்தையும் உறியும் அமெரிக்க - கார்ப்பரேட்டுகளை வால்ஸ்ட்ரீட்டில் துளைத்தெடுத்தது அந்தக் குரல்....
அச்சம் தவிர் நண்பா! சங்கமாய் சேர்ந்து அடி! சாதிக்க முடியாதது அல்ல ஐ.டி!
இயற்கையின் மடி அறுக்கும் எந்திரங்கள் நம் தாய் மீது, ஆற்றை அழிக்கும் வன்முறைக்கு எதிராக ஆயிரம் கரங்களாய்ச் சேரு!
விளைநிலத்தின் நாளத்திற்குள் ஓடும் நீரை அத்துமீறி உறிஞ்சிடும் கோக்கையும் பெப்சியையும் கண்டு கொதிக்காத கௌரவம் காதலின் தவிப்புக்கு ‘ரெட்டைக்குவளை’ வைக்கிறது. - தோழர் கோவன் கவிதை
ராமனுக்கு கோயில் கட்ட சூலங்கள்! அந்நிய மூலதனத்துக்கு தேசத்தையே வாரிக் கொட்ட துடைப்பங்கள்! நாட்டையே அமெரிக்கக் குப்பையாக்கி விட்டு நாடகமாடும் தர்ப்பைகள்!
எனக்கு, புண்ணாக்கும், பருத்திக்கொட்டையும் மானியத்தில் தந்ததால் - ஆவின் அழிந்ததென்று அவிழ்க்கும் பொய்நாக்கைப் போல ஒரு அருவருப்பை என் சாணிப் புழுவிலும் சத்தியமாய் நான் பார்த்ததில்லை!
அம்மாவின் தினசரிக் கும்பல் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா லேப்டாப்.. என்று கத்துவது உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா? அதை நினைத்தாவது அழுதுவிடு!
"கடந்த காலத்தை மறந்துவிடுங்கள்; மிகப் பழைய கவிஞர்களை மறந்து விடுங்கள்; ஆயுதப் புரட்சியை உயர்த்திப் பிடிக்கும் புதிய போர்க்குணம் மிக்க கவிஞர்களைப் போற்றுங்கள்."
தலையில் ஓடும் வியர்வை மூக்கு நுனியில் சூரிய முட்டையாய் உடையும், உச்சி சூரியனை பிடிவாதக் கால்கள் மிதித்து மேலேறும் கொத்தாகப் பேப்பர் பார்க்கையில் படிக்கல் சூடு மனதில் குளிரும்.
காய், கனிச் சந்தையில் கருவாடு விற்கலாமா? என வக்கணை பேசும் அக்கிரகாரமே! செய்திப் பத்திரிகை என்று அரசு சலுகையை அள்ளிக் கொண்டு விளம்பரத்திலும் விலைக்கு செய்தி போட்டும் நீ கடை நடத்தலாமா?
விளைந்து கொடுத்த காவிரிப் படுகைமேல் வெட்டு விழுந்தால், வெளியேறப் போவது மீத்தேன் அல்ல - எங்கள் விவசாயி வர்க்கத்தின் நெருப்பு! உழவு நடந்தால் ஊரே வாழும் - மீத்தேன் இழவு நடந்தால் ஊரே சுடுகாடாகும்!
"தெற்கோதும் தேவாரத் தேனிருக்க செக்காடும் இரைச்சலென வடமொழியா?" என, பார்ப்பனத் திமிருக்கு பதிலடி தந்தார் பாரதிதாசன்!
தமிழச்சி மார்பை மறைக்கவும் சேலை அணியத் தடை, இதுதான் நிலப்பிரபுத்துவ நிலை, "முழங்காலுக்கு கீழே சேலையை இழுத்துவிட்டது யாரு? மணலி கந்தசாமி பாரு" என தாழ்த்தப்பட்ட கூலி விவசாயப் பெண்களின் நடவுப் பாடல் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்தால் விளைந்தது!

அண்மை பதிவுகள்