privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

புரட்சிக்குக் குறைவாக எதையும் ஏற்காத பிடிவாத புரட்சியாளரின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது?
பயிர், பச்சை இன்றி உயிர் பிச்சை கேட்கும் கால்நடைகள். கழுநீர் நனைய வழியின்றி உலர்ந்த மோவாயை நாவால் வருடி காம்பு காயும் பசுக்கள். இலை தழை தேடி ஏமாந்து தன்நிழல் மேயும் ஆடுகள். இறுகி, இறுகி ஈரப்பசையற்றுப் போன நிலம் இறுதியில் விவசாயியின் நெஞ்சில் வெடிக்கிறது.
ஒரு சாவு எவ்வளவு பிரபலமடைகிறதோ, அதற்கேற்ப காசு கொடுக்க வேண்டும், இதற்கெனெ ஒரு தனி அமைச்சரவை, விரைவில் உருவாக்கபோகிறோம். - தூத்துக்குடி படுகொலை குறித்த மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை.
’புதிய சூரியனுக்கு அனுமதி இல்லை' - நவீன மராத்தி தலித் கவிதைகலின் ஆங்கில நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைகள்.
வியாக்கியானம் புதிதல்ல... முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டுகிறது என முன்னறிந்து சொன்ன மார்க்சின் தீர்க்கமாக பார்வை புதிது!
தேசப்பற்றுக்கு திரையரங்கில் ஜனகனமன, தோசை சட்னிக்கு உணவகத்தில் ஜிஎஸ்டி ! மாடு விற்க ஐந்து ஆவணம், மாட்டிகிட்ட கண்டெய்னருக்கு மூன்றுமாத திரைக்கதையில் மக்கள் காதில் மலர் ஆரணம் !
ரிலையன்பிரெஷ் அம்பானியிடம் வாயை மூடிக்கொண்டு கேட்டதைக் கொடுத்தவன், தலைச்சுமை வியாபாரப் பெண்ணிடம் தத்துவம் பேசினான்!
விவசாய நிலத்தை யாருக்கு விலை பேச போகிறாய் ? விடியும் என நம்பி ஓட்டு போட்டவர்களை ஏன் வீதியிலே நிறுத்துகிறாய்
இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. எங்கள் மீது கட்டவிழ்த்துவிடும் உங்களின் மாட்டரசியலை.. நாங்கள் வகுப்பெடுத்தால் - நீங்கள் உங்கள் இரண்டு செவிப்பறைகளையும் இழக்க நேரிடும்..
நெற்கதிர்களை நேர்த்தியாக அறுப்பதில் அப்பா லாவகமானவர் ஏதோ ஒரு சிந்தனையில் கதிர்களை இழுத்து அறுத்தபோது விரல்களையும் சேர்த்து அறுத்துக்கொண்டார் அன்று - அறுவடை நிலத்தில் சிந்திய அந்த குருதித்துளிகள் மண்ணுக்கு உரமாகிப்போனது.
ஏன் குண்டு வீசி குழந்தைகளைக் கூட கொல்கிறார்கள்? என் மகளின் கேள்விக்கு ஒரு தாயாய் நான் எப்படி பதில் கூறுவேன்! எப்படிச் சொல்வது? வியட்நாம் ஈராக் சிரியா ஆப்கானிஸ்தான் ஈழம் பாலஸ்தீனம் … நாளை இங்கேயும் அந்த குண்டுகள் விழக்கூடும் மகளே என்று! எப்படிச் சொல்வது? கிரிக்கெட் போட்டியை ரசிப்பது போல் குண்டுகள் வீசப்படுவதை குழந்தைகள் கொல்லப்படுவதை ரசிப்பவர்கள் இங்கேயும் உண்டு என்று! எப்படிச் சொல்வது? இஸ்ரேல் அமெரிக்க இந்திய உலக உழைக்கும் மக்கள் போரை வெறுக்க ஆள்பவர்கள் போரை மட்டுமே விரும்புகிறார்கள் என்று? ஒன்று மட்டும் சொல்லி வைக்கிறேன் என் மகளுக்கு ஆணித்தரமாக! உழைக்கும் மக்களின் கரங்கள் ஒன்றிணையும்...
எத்தனை படைகளைக் குவித்தாலும் மெரினாவின் அலைகள் ஓயாது ! தமுக்கத்தின் ஈரம் காயாது ! வ.உ.சி. திடல் சாயாது ! உரிமையின் மூச்சு அடங்காது!
ஜெயலலிதா சட்டையைக் கழட்டச் சொன்னால் வேட்டியையும் சேர்த்துக் கழட்ட தயாராயிருக்கும் சரத்குமார் வாழும் நாட்டில், ஜெயிலரின் உத்திரவை சட்டை செய்யாத மாணவர்களின் உறுதியான தன்மானத்தைப் பார்த்து வியந்து நின்றார்கள் வேடிக்கைப் பார்த்த விசாரணைக் கைதிகள்.
கேட்பவர்கள் பாதிரியார்களாகவும் கேட்கப்படுவது பரிசுத்த ஆவியாகவுமிருந்தால் கேள்வி நியாயம்தான் ---- கேட்பவர்கள் அறிவாளிகள். கேட்கப்படுவதோ - பாவம் நாட்காட்டி!
நிலம் நழுவுகிறது; வேர் அறுபடுகிறது; ஊர் சிதைகிறது; ஆறு பாதி புதைத்த பிணமாக கிடக்கிறது; கழுத்தை நெறித்தது போதுமா?

அண்மை பதிவுகள்