privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

அழகான சிவப்பு ரோஜாக்களுடன் புன்னகை பூக்கும் பாதைகளினூடே காசா பிள்ளைகளை பெறுகிறது அதன் குழந்தைகள் அதிகாலைப் பனியில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் காசா மீண்டும் கருவுற்றிருக்கிறது ஆனால் காசாவின் கருவுக்கல்லவா சதிகாரர்கள் குறி வைத்திருக்கிறார்கள் காசாவின் தாய்மார்கள் எல்லாம் கதி கலங்கிப் போயிருக்கிறார்கள் ரத்தம் வழிந்த கைகளின் ஊடாக குழந்தைகள் மீது போர்வைகளைப் போர்த்துகிறார்கள் ஆனால் சிலரோ ராக்கெட்டுகளை அல்லவா அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்களின் பாசாங்குத்தனத்தால் தாய்மார்களின் செவிப்பறைகள் கிழிந்து போயிருக்கின்றன ஆனாலும் நீதி ஆடையின்றி அம்மணமாய் உலாவிக் கொண்டிருக்கிறது எங்களுக்கு ஏன் என்று புரியவில்லை உங்களது பெரும் வெறுப்பால் எமது...
ஏன் குண்டு வீசி குழந்தைகளைக் கூட கொல்கிறார்கள்? என் மகளின் கேள்விக்கு ஒரு தாயாய் நான் எப்படி பதில் கூறுவேன்! எப்படிச் சொல்வது? வியட்நாம் ஈராக் சிரியா ஆப்கானிஸ்தான் ஈழம் பாலஸ்தீனம் … நாளை இங்கேயும் அந்த குண்டுகள் விழக்கூடும் மகளே என்று! எப்படிச் சொல்வது? கிரிக்கெட் போட்டியை ரசிப்பது போல் குண்டுகள் வீசப்படுவதை குழந்தைகள் கொல்லப்படுவதை ரசிப்பவர்கள் இங்கேயும் உண்டு என்று! எப்படிச் சொல்வது? இஸ்ரேல் அமெரிக்க இந்திய உலக உழைக்கும் மக்கள் போரை வெறுக்க ஆள்பவர்கள் போரை மட்டுமே விரும்புகிறார்கள் என்று? ஒன்று மட்டும் சொல்லி வைக்கிறேன் என் மகளுக்கு ஆணித்தரமாக! உழைக்கும் மக்களின் கரங்கள் ஒன்றிணையும்...
சொற்களின் கூட்டுக்குள் ஓர் மௌனப் பறவை! தனிமைப் பெருவெளியில் நின்றபடி பெயர் தெரியாத அப்பறவை பெருந்துயரத்தில் ஆழ்ந்திருந்தது! துடைத்தெறிய முடியாத துயரம் அதன் கண்களில்! நூற்றாண்டு களைப்பைச் சுமந்திருந்தது அதன் உடல்! துயரத்தின் நிலத்திலிருந்து வந்திருக்க வேண்டும் அப்பறவை! நான் கேட்டபோது மெல்ல என் காதுகளில் பாலஸ்தீனத்திலிருந்து வருவதாகச் சொன்னது ஒரு சமயம்! ஈழத்திலிருந்து என்றது மற்றொரு சமயம்! பொய் சொல்கிறதா உற்றுப் பார்த்தேன்! அதன் சிறகுகளில் குண்டு துளைத்த துளைகள் இருந்தன! அலகின் நுனி பெயர்ந்து உணவைக் கொத்துவதற்கு சிரமப்பட்டது! ஒற்றைக் கால் சேதமடைந்திருந்தது! அதிகமாகப் பேசவில்லை அப்பறவை! உனக்கு ஏற்பட்ட துயரத்தை...
அவர் ஆளுநராம்.. அவர் இருப்பது மாளிகையாம்.. அதன் மீதாம்.. குண்டாம்.. வீசப்பட்டதாம்.. (ஆளுநர் கூறுகிறார்) ரவுடி காணவில்லையாம்.. போலீஸ் தேடுகிறதாம்.. அவர் ஏற்கெனவே கமலாலயத்தில் குண்டு வீசியவராம்.. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரி இல்லையாம்.. தமிழ்நாட்டில் உள்ள சின்ன குழந்தைகூட இந்த கிள்ளைக் கதையை கேட்டு சிரிக்கிறது. சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
மருது பாண்டியர்கள் தேடப்படுகிறார்கள்! ஜம்புத்தீவு பிரகடனம் மீண்டும் உயிர்த்தெழுகிறது வரலாறு மருது உயிர்த்தெழக் கோருகிறது மருது உயிர்த்தெழும்போது கூடவே தொண்டைமான்களும் உயிர்த்தெழுகிறார்கள் இப்போது சற்று அமைதியாக இருப்போம் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் அன்றும் சாத்தியமானவைகளை பற்றி பேசாமலா இருப்பர்? மருதிருவர் சாத்தியமானவையை அல்ல; சரியைப் பேச வேண்டும் என்றார்கள் ஈன ஐரோப்பியரை அழித்து ஒழிக்காமல் வாழ்வில்லை என்றான் சின்ன மருது அதிகாரப் பீடத்தை நத்திப் பிழைப்போர் தலையில் இடியாய் இறங்கியது மருதுவின் குரல் இரத்த சொந்தங்கள் 500 பேருடன் திருப்பத்தூர்...
அக்டோபர் 20-ஆம் தேதியன்று தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் (Khan Yunis) இஸ்ரேலின் குண்டுவீச்சில் “ஆக்சிஜன் இஸ் நாட் ஃபார் தி டெட்” (Oxygen is Not for the Dead) என்ற நாவலின் ஆசிரியரும் கவிஞருமான ஹெபா அபு நாடா (Heba Abu Nada) கொல்லப்பட்டார். பாலஸ்தீன கலாச்சார அமைச்சகம் இத்தகவலை...
உங்கள் பீரங்கி குண்டுகள் எங்கள் உயிரை பலியிடலாம் ஆனால், இவற்றில் எதுவுமே எங்கள் குரலை ஒடுக்கிவிடாது!
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி தோழர் பகத்சிங் 117-வது பிறந்த நாள் உன்னோடு நான்... சோர்விலும் ஏக்கத்திலும் தளர்விலும் எப்போதும் என்னுடன் இருக்கிறாய் தடுமாறும் போது எனை நம்பிக்கையூட்டி அழைத்துச் செல்கிறாய் துவளும் போதும் உன்னுடைய தியாகம் என்னை சுட்டுப் பொசுக்குகிறது அடக்குமுறைகள் அச்சுறுத்தும் போது உனது வீரம் எனை எள்ளி நகையாடுகிறது உறவுகளில் லயித்து கிடக்கையில் உன் உறுதி எனை விழிப்படையச் செய்கிறது மக்களுக்காக வாழும் வாழ்க்கையே உன்னதமானதென்ற உன் வாழ்வே எமக்கு ஒளி சமரசமற்ற உன் கம்யூனிச சித்தாந்தமே எமக்கு வழி மருது
எதற்கு வாழ்த்துகிறீர்கள்? உலகம் அறிந்த தலைவர் நாடு போற்றும் பிரதமர் G20-இன் நாயகன் சந்திரயான்-3 விட்ட சாதனையாளன் தாடி வளர்க்கும் சன்னியாசி ‘பாரத’ பிரதமர் மோடிக்கு இன்று பிறந்தநாளாம்! காவி கும்பலும் கார்ப்பரேட் களவாணிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாழ்த்து சொல்கின்றனர்! எதற்காக இந்த வாழ்த்துக்கள் எல்லாம்? பாரத தாயின் புகழ் பாடி மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி வேடிக்கை பார்த்ததற்கா? ஏழைகளை ஒட்டச்சுரண்டி இந்திய நாட்டை அம்பானி-அதானி கார்ப்பரேட்களிடம் அடகு வைத்ததற்கா? “மனிதர்கள் மிருகமானால்” என்ற படத்தை குஜராத் கலவரத்தில் நேரலையில் காட்டியதற்கா? பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டிய மக்களை பார்ப்பனியம் பழக...
எந்த ஆயுதமேந்த........ ஈரெட்டு இட்லிகளை எடுக்க முடியும் ஒரு அவியலில்.. வேகும் நேரத்தில் விருப்பமான ஓர் முழு பாடலையும் பாடிட முடியும் என்னால்.. புத்துணர்ச்சி தரும் புரட்சி பாடலாகவும் இருக்கலாம் அல்லது என் மீதான கழிவிரக்கத்தினைச் சொல்லும் சோகப்பாடலாகவும் இருக்கலாம்... அடுக்களைவிட்டு வெளியே போய் முகங்கழுவி புத்துணர்ச்சி பெறுவதற்கான சிறிய அளவிலான நேரமும் கிடைக்கும்.. அதனாலேயே இட்லி எனக்கு பிடித்தமானதாக இருக்கலாம் அதற்காக இட்லி அவித்து கொண்டே இருக்க முடியாது காலம் முழுவதும்... தோசை சுடுவதென்பது வரமுமல்ல வட்ட தோசையாய் வராவிடில் குறைசொல்ல...
மணிப்பூர் தாய்மார்கள் கும்பல் பாலியல் வன்முறையில்..... சிதறிய குருதியை துடைத்துக் கொண்டே சொல்லட்டுமா ? வந்தே மாதரம் !
அனிதா, ஜெகதீஷ் போல முடிவெடுக்காதீர்கள் என கலங்குபவர்களே! ஃபயாஸ்தின்கள் களமிறங்குகிறார்கள் கரம் கொடுப்போம்!
வியாக்கியானம் புதிதல்ல... முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டுகிறது என முன்னறிந்து சொன்ன மார்க்சின் தீர்க்கமாக பார்வை புதிது!
லட்சம் பேர் திரண்டோம் ஆலையை மூடினோம்! கோடிகளாய் திரள்வோம்! அவன் இடத்தை அவனுக்கே கல்லறையாக்குவோம்!
உன்னை தேர்ந்தெடுத்த - நாங்கள் பஞ்சத்தில் வாட நீ-லஞ்சத்தில் எங்களை வேட்டையாட கட்டுகிறாய் ஒரு கோட்டை.

அண்மை பதிவுகள்