வினவு!

பெண் புன்னகையின் பின்னே….. – ரதி
உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 5

பெண், எனது பெயர், இனம் மற்றும் இன்ன பிற, இத்யாதிகள் எல்லாமே இது தான். எனக்கு பல கோடி முகங்கள். பல கோடிப் பெயர்கள். எனக்கு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுகிறார்கள். இது மகிழ்ச்சியல்ல. வேதனையே. என் உரிமைகள் பிறப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் பிறகேன் எனக்கென்றோர் தினம். இயற்கையின் படைப்பில், விஞ்ஞான கண்டுபிடிப்பில் ஆண், பெண் எனப்பிறப்பது ஒன்றும் தனியொருவரின் சாதனையல்ல. பெண்ணாய் பிறப்பது வரமா, சாபமா என்ற விதண்டாவாதங்களை விலக்கிவிட்டு நானும் சாதாரண மனிதப் பிறவியாகவே பார்க்கப்படவேண்டும்.

பெண் என்றால் சிசுக்கொலை, உடன்கட்டையேறுதல், கற்பழிப்பு, துன்புறுத்தல், வன்முறை என்ற வடிவங்களில்தான் நான் நூற்றாண்டுகளாய் எத்தனையோ நாட்டில், எத்தனையோ ஊரில் துன்புறுத்தப்பட்டேன். இன்றும் துன்புறுத்தப்படுகிறேன். என் உடம்பை துன்புறுத்துபவர்கள் உள்ளத்தை சும்மா விடுவார்களா. அதையெல்லாம் பட்டியலிட்டு மாளாது. என் உள்ளச்சுமைகள் என்னை அழுத்தினாலும் இதழ்களில் புன்னகையை கடை விரிக்கத்தவறுவதில்லை. என் வலிகளை எனக்குள் புதைத்து நான் எப்போதுமே புன்னகைக்க வேண்டும். அப்படித்தான் எனக்கு எழுதப்படாத சமூக விதிகள், விழுமியங்கள் கற்றுக்கொடுத்திருக்கின்றன.

என் அறிவைப்பற்றியும் நான் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். என் கற்பூர மூளை சட்டென்று பற்றிக்கொண்டால் பெண் என்று ஓரங்கட்டப்படுவேன். அதையே காற்றில் கரைய விட்டால் எல்லா சமூக சம்பிரதாயங்களிலும் உள்வாங்கப்படுவேன். என்ன! எனக்குத்தான் வாயை, அறிவை மூடிவைக்க சிரமப்படவேண்டியுள்ளது. மனிதன் மிருகங்கள் போல் வேட்டையாடி திரிந்த காலங்களில் நான் ஆணுக்கு அடிமை சேவகம் செய்ததில்லை. என் உடற்கூறா அல்லது சமூக கலாச்சார ஏற்பாடுகள், அபத்தங்கள் இவற்றில் எது என் உரிமைகளை மட்டும் காலவெள்ளத்தில் மூழ்கடித்து என் சடலத்தை மட்டும் கரையேற்றியிருக்கிறது?

என் தடைகளையெல்லாம் தாண்டி நூற்றாண்டு காலமாய் மெல்ல, மெல்ல கோழிக்குஞ்சாய் என் ஓடுகளை உடைத்து வெளியேறி இப்போது நான் என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் சொல்கிறேன்.

ஆணின் உயிர்க்காற்று நான். அவனுக்காய் நான் மகளாய், தங்கையாய், அக்காவாய், தாயாய், தாரமாய், மற்றும் எல்லா “ய்” களாகவும் ஆண்டாண்டுகாலம் உடனிருக்கிறேன். வறுமைக்கோடு என் வாழ்வில் ஓவியங்களை வரையவில்லை என்றால் என் வாழ்விலும் பெரும்பாலும் சந்தோசங்கள் நிரம்பியிருக்கும். இவற்றையெல்லாம் விட அதிர்ச்சியானது “Female Circumcision”. அற்ப விடயத்திற்காய் என் பெண்ணுறுப்பை அறுத்துப்போடும் இழிசெயல். ஏனென்று நான் கேள்வி கேட்டால், இது என்னை, அதாவது பெண்ணை திருமணத்திற்கு தயார்ப்படுத்தலாமாம்.

இது எனக்கிழைக்கப்படும் அநியாயம் என உலக சுகாதார ஸ்தாபனமே கண்டித்தாலும், அவர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இன்றும் தொடர்கிறது. இது என் அறியா வயதில் உடலுக்கு இழைக்கப்படும் கொடுமை. இந்த கண்டங்களை தாண்டி நான் குமரியானதும் எனக்கு பிரச்சனை என் பருவமும் ஆண்களும்தான். என் அறிவை பருவம் விழுங்கும் ஆபத்து இருக்கிறது என்று அறியாவிட்டால் என் வாழ்வில் அத்தனையும் பாழாய்ப்போகும். அதை சிலர் அக்கறையோடு அறிவுரையாய் சொன்னால் அதை ஓர் ஏளனப் பார்வையில் என் வயது அலட்சியம் செய்யும்.

என் பருவமும் ஹோர்மோன்களும் காந்தமாய் ஆண் என்ற இரும்பை கவர்ந்து அவனோடு காதலாகி, கல்யாணமாகி, கடுப்பாகி அங்கேயும் நான் தான், பெண், அதிகம் காயப்படுகிறேன். ஆனாலும், விதிவிலக்காய் பெண் என்ற காந்தத்தை இரும்புகள் கவர்ந்திழுப்பதும் அதில் காந்தம் தன்னிலை மறப்பதும் பின்னர் கண்ணீர் வடிப்பதும் பெண்ணுக்கே உரிய பேதமைகள். நான் எழுதப்பட்ட சட்ட விதிகளால் பாதுகாக்கப்படுவதை விட எழுதப்படாத சமூகவிதிகளால் அதிகம் ஆளப்படுகிறேன், அவஸ்தைப்படுகிறேன். காதலாகட்டும், கல்யாணமாகட்டும் பெண் எப்போதுமே வீட்டுக்கு கட்டுப்படவேண்டும் என்பது ஓர் சமூகவிதி.

காதல், கல்யாணத்தில் நான் படும் காயங்கள், வடுக்கள் என் வீட்டுச் சுவர்களைத் தாண்ட அனுமதிப்பதில்லை. அதனால் என்னோடு என் உணர்வுகளுக்கு என் மனதிலேயே சிதை மூட்டிகொள்ளப் பழகிக்கொண்டேன். காலங்காலமாய் நான் திருமணத்திற்கே தயாற்படுத்தப்படுகிறேன். திருமணம் அபத்தமா? எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால், திருமணம் என் அடிப்படை உரிமைகளை கபளீகரம் செய்தால் அதை அபத்தம் என்று கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.

உலக இயங்குவிதிகள், சமூக ஒழுங்குகள் மாற நானும் கல்வியில், தொழிலில், விளையாட்டில் என்று ஒரு சில படிகளைத் தாண்டி முன்னேற முயன்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு தடையையும் தாண்டி எனக்காய் விதிக்கப்பட்டிருக்கும் மகள், மனைவி, தாய் என்ற கடமைகளோடு என் வீட்டின் பொருளாதார சுமையையும் கட்டியழுதுகொண்டு பொதிமாடாய் அல்லும் பகலும் அல்லாடுகிறேன். கல்விதான் பெண்களின் விடுதலைக்கு சிறந்தவழி. அந்த கல்வியில் கரை சேர்வதற்குள் காதல், கல்யாணம் என்று கதவை தட்டுகிறது. பெண்ணுக்கு சிறகுகள் கொடுக்கும் இந்த உணர்வுகள்தான் பின்னர் அதளபாதாளத்திலும் அவளை விழவைக்கின்றன.

விழுந்த பின் எழமுடியாமல் தவிக்கும்போது ஒன்று காலம் கடந்துவிட்டிருக்கும். அல்லது ஓர் ஆணின் அன்புக்காய், அரவணைப்புக்காய் மனம் தேவையற்ற விட்டுக்கொடுப்புகளுக்கு பழகிப்போய் இருக்கும். அந்த பலவீனம் ஆணுக்கு பலமாகிப்போகிறது. பெண்ணே! காதலியாய், மனைவியாய் காதலி, காதலிக்கப்படு அது உன் பிறப்புரிமை. அந்தக் காதலுக்காய் அன்புக்காய் எத்தனை விட்டுக்கொடுப்புகள்! பெண்ணுக்கு பூட்டப்பட்ட விலங்குகள் கண்ணுக்கு தெரிவதில்லை. அது தெரிவதில்லை என்பதாலேயே என் அடிமைத்தனத்தை அனுமதித்துக்கொண்டிருக்கிறேன்.

வேலைத்தளத்திலும் ஓடாய்த்தேய்ந்து பின்னர் பெண் தான் வீட்டு வேலையும் கட்டி அழவேண்டும் என்ற Stereo Type சிந்தனைகள் கால காலமாய் சமூகத்தில் புண்ணாய் புரையோடிப்போய்க் கிடக்கிறது. அதை நான் செய்யாவிட்டால் அது ஓர் குற்ற உணர்வாக எனக்குள் உருவெடுக்கும்படி என்னை என் வீடும், சமூகமும் என்னை பழக்கியிருக்கிறது. “ஏண்டி, உன் புருஷன் கசங்கின சட்டைய போட்டிட்டிருக்கானே, அதை அயர்ன் செய்து  குடுக்க மாட்டியா” என்று யாராவது ஒருவர் என் பவித்திரமான பதிவிரதத்தை பழிசொல்லக்கூடாதல்லவா. ஏன் ஓர் ஆண் தன் அன்றாட, சொந்த வேலைகளை கவனிக்க ஓர் பெண்ணின் அடிமை சேவகம் தேவைப்படுகிறது?

இதைப்படிப்பவர்கள் யாராவது இல்லை நான் என் மனைவியை அடிமைச்சேவகம் செய்ய ஏவுவதில்லை, என் மனைவிக்கு நான் வீட்டு வேலைகளில் சின்ன, சின்ன உதவிகள் செய்து அவள் புன்னகையை ரசிக்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பெண் என்ற உழைக்கும் இயந்திரத்தின் வேலைகளை இப்போதெல்லாம் ஓரளவுக்கு இலத்திரனியல் இயந்திரங்கள் பகிர்ந்துகொள்வதால் சிலர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள்.

வீட்டின் பொருளாதார சுமையை பகிர்ந்துகொள்ள வேலை என்ற பளுவை வேறு சுமந்துகொண்டிருப்பவர்களை அவர்களின் வலிகளை பேசாமல் இருக்க முடியாது. ஏறக்குறைய ஓர் நூறு அல்லது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் நான் கணவனையும் குழந்தைகளையும்தான் கவனித்துக்கொண்டிருந்தேன். உலகப்போர்களுக்குப் பின்னால்தான் நான் வேலைதலங்களுக்கும் பணிகளுக்கும் பழக்கப்படுத்தப்பட்டேன் என்று அறிவாளிகள், ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். எறும்பாய் ஊர்ந்து என்னில் சிலபேர் இப்போது விண்வெளியை, நிலவைத்தொட்டிருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சந்தோசம்.

என் சிந்தனையை அலைக்கழிக்கும் விடயம் என்னவென்றால், இன்னும் மூன்றாம் உலக நாடுகளில் நிலவுக்குக் கீழே என் பெண் இனம் ஒருவேளை உணவுக்காய் கல்லும், மண்ணும், குப்பையும் சுமந்துகொண்டிருக்கிறதே! அந்த உழைக்கும் பெண்களின் தலைவிதியை யார் மாற்றுவார்கள்? ஓரிரு பெண்களை விண்வெளியைத் தொட வைத்துவிட்டு ஒரு கோடிப்  பெண்களை அடிமாடாய் வேலைவாங்குவது எந்த விதத்தில் நியாயம்? Malls, Restaurants, House keeping (Cleaning), Factories etc. எங்கெல்லாம் இன்று அடிமாட்டு ஊதியத்திற்கு ஆள் வேண்டுமோ அங்கெல்லாம் என் பெண் இனம் குடும்பத்தை கட்டிக்காக்க குறைந்த பட்ச கூலிக்காய் மாரடித்துக்கொண்டிருக்கிறது. இதே வேலைகளை ஆண்கள் செய்தால் அவர்களுக்கு கூலி கொஞ்சம் அதிகமாக கொடுக்கப்படவேண்டும். அது ஆணின் உழைப்பல்லவா. கணணி, தொழில் நுட்பம் ஆகட்டும் இல்லை வீட்டு வேலையாகட்டும் ஆணின் உழைப்புக்கு எப்போதுமே மதிப்பும் ஊழியமும் மதிப்பாகவே கொடுக்கப்படவேண்டும் என்பது ஓர் பாரபட்சமான அணுகுமுறை.

ஊடகங்கள் என்னை எதற்கும் குறியீடாகவே பார்க்கும் அவலமும் கொஞ்சமல்ல. வியாபாரப் பொருளுக்கும், போதைக்கும் நான்தான் குறியீடு. தாய்மைக்கும் நான்தான் குறியீடு. Car, Motorcycle, Cell Phone, Underwear, Shaving sets & Cream என்று ஆண்கள் உபயோகிக்கும் பொருட்களுக்கும் நான்தான் தொலைக்காட்சியில், விளம்பரத்தில் அரையும், குறையுமாய் அழகு காட்ட வேண்டும். எனக்கு ஒரேயொரு விடயம் மட்டும் புரிவதில்லை. பெண் விளம்பரங்களில் அழகு காட்டாவிட்டால் யாருமே எந்தப்பொருளையுமே தொடமாட்டார்களா?

இதெல்லாம் வெறும் Cliche` என்று பலர் வாதாடினாலும் அல்லது ஒதுக்கினாலும் அதை மீண்டும், மீண்டும் செய்துகொண்டிருந்தால் நாங்கள் மீண்டும் அதைப் பேசவேண்டியுள்ளது. அது தவிர, ஓர் பேச்சு வழக்கில் உள்ளது போல், ஆணின் போதைக்கும் பெண்தான் ஊறுகாய். சாமானியனின் போதை, சாமியார்களின் போதை எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள பெண் தான். அவரவர் தகுதிக்கும், தராதரத்திற்கும் ஏற்றாற்போல் பெண் பலியாகிறாள் என்பதற்கு சமூகத்தின் எல்லா நிலைகளிலும், அளவுகளிலும் நிறைந்திருக்கும் அவலங்களே சாட்சி. அதை நான் அதிகம் பேசவேண்டியதில்லை. தாய்மை பற்றி நான் பேசவே வேண்டியதில்லை. அதற்கு எந்தப்பெண்ணும் சன்மானம் கேட்பதில்லை. அது இயற்கை அளித்த வரம். விவாதப்பொருளல்ல.

இப்போது பொதுவாய் பெண்ணாய் பேசாமல் இந்த பதிவை எழுதியவர் என்கிற ரீதியில் பேசுகிறேன். சமூகத்தில் எல்லா தரங்களிலும் (Level) பெண் உடல், உள ரீதியாக துன்புறுத்தப்படுகிறாள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. நீண்ட நாட்களுக்கு முன் பெண்கள் பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரை படித்ததாய் ஞாபகம். அதில் குறிப்பிட்டிருந்தார்கள் சமூகத்தின் எல்லா தரங்களிலும் பெண்ணுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதாக. ஆனால், மத்திய, செல்வந்த வர்க்கங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வெளியே அதிகம் கசிவதில்லை என்று. ஆக, இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், சமூகத்தில் நல்ல நிலைகளில் இருப்பவர்கள் கூட பெண்களின் உரிமைகளை மதிப்பதில்லை என்பதைத்தான் அந்த கட்டுரை எனக்கு உணர்த்தியது.

இதை இந்த ஆண்கள் எங்கிருந்து கற்றுக்கொள்கிறார்கள்? அல்லது எது அவர்களை பெண்ணை ஓர் இரண்டாந்தர குடியைப் போல் பார்க்க வைக்கிறது? என்னைக்கேட்டால் இந்த சமூகமும், அதன் பெண்ணுக்கான கற்பிதங்கள், ஊடங்கங்கள்தான் அவற்றை ஆண்கள் புத்தியில் திணிக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. இதற்கெல்லாம் நாங்களும் மெளனமாய் அங்கீகாரம் வழங்கிக்கொண்டிருக்கிறோம். இந்த மகளிர் தினத்திலாவது இந்த சமூக ஏற்பாடுகள், பெண்ணின் மன அழுத்தங்கள் பற்றி கொஞ்சம் பேசுவோம், சிந்திப்போம், செயற்படுவோம்.

-       ரதி.

ரதி ஈழத்தைச் சேர்ந்தவர். இனவெறிப் போரினால் அகதியாகி இப்போது கனடாவில் வாழ்கிறார். வினவில் “ஈழத்தின் நினைவுகள்” எனும் தொடர் எழுதுகிறார்.

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

பேஸ்புக்கில் வினவு

வினவை டிவிட்டரில் தொடர்க

வினவை ஆதரியுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சமூகம் > பெண்

அவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது? – தீபா
உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 4

பெண்கள் தினத்தை ஒட்டி என்னையும் கட்டுரை எழுத அழைத்திருக்கும் வினவுத் தோழர்களுக்கு என் நன்றி.

பெண்ண‌டிமைத்த‌ன‌ம், பெண் விடுத‌லை போன்ற‌ சொற்றொட‌ர்க‌ளைச் சிறு வ‌ய‌தில் அறிந்த‌ போது அவை எல்லாம் ஏதோ பெரிய‌ம்மை, ப்ளேக் நோய் போன்ற‌ பெருவியாதிக‌ள்; அவை இக்கால‌த்தில் முற்றாக‌ அழிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன; அதைப்ப‌ற்றியெல்லாம் க‌வ‌லைப்பட‌வே தேவையில்லாத‌ கால‌த்தில் வாழ்வ‌தாக‌ ந‌ம்பினேன். ப‌தின்ம‌ வ‌ய‌தில் முத‌ல் முத‌லாக‌க் க‌ண் திற‌ந்து என் தாயின் வாழ்க்கையையும், மாமியின் வாழ்க்கையையும் உற்றுப் பார்க்கும் வரை.

அவர்கள் என்னதான் மறுத்தாலும், தங்கள் வாழ்க்கைக்குச் சப்பைக்கட்டு கட்டினாலும், அவ‌ர்க‌ளின் ஆத‌ர்ச‌ க‌ண‌வ‌ரான‌ என் த‌ந்தை என்கிற‌ ஆல‌ம‌ர‌த்தின் நிழ‌லில் வெளுத்துச் சாம்பிய‌ செடிகள் என்றுதான்

தோன்றும்.

ஆண்தான் உய‌ர்ந்த‌வன்; பெண் அவ‌னுக்கு அடுத்த‌ ப‌டிதான் என்ற ந‌ம்பிக்கை என‌க்கும் அக்காவுக்கும் சிறுவய‌து முத‌லே ஊட்ட‌ப்ப‌ட்ட‌து. வீட்டில் அப்பா, தாத்தா ஆகியோரை ‘நீங்க‌ வாங்க’ என்று மரியாதையாகவும், அம்மா, பாட்டியை ‘நீ வா’ என்று ஒருமையிலும் விளிப்போம்.

என‌க்கும் என் அண்ண‌னுக்கும் சின்ன‌ வ‌ய‌தில் ஆகாது. சண்டை போட்டுக் கொண்டே இருப்போம்; போட்டியும் இருக்கும். அவ‌னோடு போட்டியிடுவ‌த‌ற்கே என‌க்குத் த‌குதியில்லை என்று என் ம‌ண்டையில் அடிக்க‌ப்பட்ட‌து என் ப‌தின்ம‌ வ‌ய‌தில். “அண்ண‌ன் சாப்பிட்ட‌வுட‌ன் அவ‌ன் த‌ட்டையும் சேர்த்து எடுத்துட்டுப் போ!” என்றார் அம்மா. அப்போது அவ‌னுட‌ன் எனக்கு ஏதோ சண்டை. ஆம்பளை த‌ட்டெடுக்க‌க் கூடாது, துடைப்ப‌த்தை எடுக்கக்கூடாது என்று காரணம் வேறு. நான் அதைச் செய்த போது என் மனம் வெதும்பியதும் அவன் கொக்கரித்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது.

திரும‌ண‌த்துக்குப் பின், ச‌மைக்க‌த் தெரியுமா என்று கேட்ட கணவனை அச‌த்த‌ வேண்டும், பாராட்டு ம‌ழையில் ந‌னைய‌ வேண்டும் என்று சில நாள் வ‌ரிந்து க‌ட்டிக் கொண்டு ச‌மைத்தேன்.  என்றைக்கு அது என் வேலைதான் என்று Taken for granted ஆன‌து என்றே புரிப‌டவில்லை. (திடீரென்று ஒரு நாள்  தான் மூளையில் அந்த பல்பு எரிந்தது!) அதற்கப்புறம் எனக்கு அதில் முன்பிருந்த ஈடுபாடு இல்லை. (இல்லை என்பதால் லேசான குற்ற உணர்வுதான் இருக்கிறது!)

தனிப்பட்ட முறையில் யோசித்தால், இதெல்லாம் ஒரு குறையா? வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுமை, மாமியார் கொடுமைன்னு நாட்ல‌ எத்த‌னை பெண்க‌ள் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌டுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளை எல்லாம் பார்த்தால் ந‌ம‌க்கென்ன‌ குறை என்றும் தோன்றுகிற‌து.

இந்த‌க் குறுகிய‌ ம‌ன‌ப்பான்மைதான், ஒப்பிட்டுப் பார்த்துத் தன்னளவில் மட்டும் திருப்தியோ ஆத‌ங்க‌மோ அடையும் ம‌ன‌ப்பான்மையாலும்தான் பெண்க‌ளுக்குப் பொருளாதார‌ச் சுத‌ந்திர‌ம் அடைந்திருந்தாலும் இன்னும் முழுச்சுத‌ந்திர‌ம் கிடைக்க‌வில்லை என்று நினைக்கிறேன். இத‌ற்கு இன்னும் ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் இருக்கலாம்.

தோன்றுவதில் சில:

முதலாவது, ப‌யம்; குடும்பம் சமூகம் மீதுள்ள அளவற்ற பயம். குடும்ப‌த்தில் எல்லாரையும் அனுச‌ரித்துப் போக‌வேண்டும் என்று நமக்குக் க‌ற்றுத் த‌ர‌ப்ப‌ட்டிருக்கிறது. இன்னும் ந‌ம் நாட்டைப் பொறுத்த‌வ‌ரை பெண் என்ப‌வ‌ள் ஆணை ம‌ட்டும‌ல்ல‌,அவ‌ன் குடும்ப‌த்தையும் சேர்த்தே திரும‌ணம் செய்து கொள்கிறாள்.

அதனால்தான்: நண்பனாக, காதலனாக இருந்த போதெல்லாம் ‘டா’ போட்டுப் பேசியவனைத் திருமணமானதும் கஷ்டப்பட்டு ‘நீங்க’ என்று பேசியாக வேண்டிய கட்டாயம், அதற்கு மறுக்கும் மறு நொடியே அவன் தன் கணவன் முகத்தைக் காட்டி “இப்போது மரியாதையில் அழைக்கச் ச‌ம்ம‌த‌மா, நான் இனி உன் ந‌ண்ப‌ன் இல்லை” என்ப‌து போல் ந‌ட‌ந்து கொள்வ‌தும் ந‌ட‌க்கிறது.

மாம‌னார் பூர்விக வீட்டை விட்டு வரமாட்டார் என்ப‌த‌ற்காக, அலுவ‌ல‌க‌த்துக்கு அருகில் வீடு மாற்றிக் கொள்ளாம‌ல், தின‌மும் நான்கு ம‌ணிக்கு எழுந்து, எல்லோரும் எழுந்திருக்கும் முன் வீட்டு வேலைகளை முடித்து, ச‌மைய‌ல் செய்து கணவனுக்குக் கட்டி வைத்து, தனக்கும் எடுத்துக்கொண்டு முப்பத்தைந்து கிலோமீட்ட‌ர் ப‌ஸ்ஸிலும் ஷேர் ஆட்டோவிலும் ப‌ய‌ணம் செய்து அலுவ‌லக‌த்துக்கு வ‌ந்து தூங்கி விழும் புதும‌ண‌ப்பெண்க‌ள் இருக்கிறார்கள்.

எவ்வளவு தான் படித்தாலும் உயர்பதவியில் இருந்தாலும் ஜோசியம் ஜாதகம் போன்ற அழுக்குகளை விட்டொழிக்க முடியாமல் தொங்கிக் கொண்டிருப்பதனால்தான்: காத‌லித்துத் திரும‌ண‌ம் செய்து கொண்ட‌வ‌ன், ஆண்மைய‌ற்ற‌வ‌ன் என்று மருத்துவரீதியாகத் தெரிந்த பின்னும், ஜோசிய‌ர் அடித்துச் சொல்லி இருக்கிறார் என்ற நம்பிக்கையில், இல்லறம் ஆரம்பிக்கும், குழ‌ந்தைப் பேறுவ‌ரும் என்று ஆண்டுக்கணக்கில் க‌ன்னித் த‌வ‌ம் புரிந்து கொண்டு கணவன் வீட்டுக்குச் ச‌ம்பாதித்துக் கொட்டும் ஆஃபிஸ‌ர் பெண்க‌ள் இருக்கிறார்கள்.

ஊர் உல‌க‌ம் என்ன‌ சொல்லுமோ? குழ‌ந்தைக்குத் த‌க‌ப்ப‌ன் அவ‌ன் தானே.. என்ற‌ ம‌றுகலால்தான்: திரும‌ண‌மாகிப் ப‌த்தே மாத‌ங்க‌ளில் குழ‌ந்தையைப் பெற்று, அடுத்த ஆண்டிலேயே தொட‌ர்ந்த‌ ம‌ன‌க்க‌ச‌ப்புகளாலும் கொடுமைக‌ளாலும் பிரிந்து சென்றாலும், இன்னொரு திரும‌ண‌த்தை நினைத்தும் பார்க்க‌ முடியாம‌ல் எதிர்கால‌மே இருண்டுவிட்ட‌தாயக் க‌ண்ணீரில் நாட்க‌ளைக் க‌ரைக்கும்

பேதைக‌ள் இருக்கிறார்கள்.

கல்வி என்ப‌து ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌ ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டும் க‌ருவியாக‌ இருப்பதும் இன்னொரு முக்கிய‌ கார‌ண‌ம்.ப‌டிப்ப‌தும் வேலைக்குச் சென்று ச‌ம்பாதிப்ப‌தும் ஓர‌ள‌வு த‌ன்ன‌ம்பிக்கையைப் பெண்க‌ள் ம‌ன‌தில்

விதைத்தாலும், தங்கள் வாழ்க்கையைத் த‌ன்போக்கில் த‌ங்க‌ளுக்குப் பிடித்த‌ வ‌கையில் தீர்மானித்துக் கொள்ளும் சுத‌ந்திர‌ம் பெரும்பாலான பெண்களுக்கு இன்னும் இல்லை.

மேலும்,

சிக‌ப்ப‌ழகும், க‌ருமையான‌ நீண்ட‌ கூந்த‌லும், ச‌ம்க்கி ஒர்க் வைத்த‌ ப‌ட்டுப் புட‌வைக‌ளும்தான் உங்க‌ள‌து அத்தியாவ‌சிய‌த் தேவைகள். மிருதுவான சப்பாத்தியும், வெள்ளை வெளேரென்ற சட்டைக் காலரும், (“மிஸஸ் கிட்ட சொல்லு பிரஷ் பண்ண…ஹி ஹி!”) அப்ப‌ழுக்க‌ற்ற‌ கிச்ச‌ன் மேடைக‌ளும் உங்க‌ள் க‌ட‌மைகள்.

உங்க‌ளைப் பார்த்த‌ மாத்திர‌த்தில் ஆண்க‌ள் வாய் பிள‌ப்ப‌தும் த‌டுமாறிக் கீழே விழுவ‌தும்தான் உங்க‌ள் பெருமைக‌ள் என்று விள‌ம்ப‌ர‌ங்க‌ளும், ஊட‌க‌ங்க‌ளும் நமக்குத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் போது வேலைக்குப் போய் வ‌ந்த‌ மிச்ச‌ நேரத்தில் இந்த டார்கெட்டுகளை அடையத்தானே உழைத்துக் கொண்டிருக்கிறோம்!

டிவியை நிறுத்தி விட்டு நிறைய படிப்போம். நிதானமாக மாற்றிச் சிந்திப்போம். மீட்டெடுப்போம் நமக்கான உலகத்தை.

பெண்ணாக‌ப் பிற‌ந்த‌த‌ற்குப் பெருமைப்ப‌டும் வித‌மாக‌, என்னைக் கவ‌ர்ந்த‌ பெண்க‌ள் அனைவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ பெண்க‌ள் தின‌ வாழ்த்துக்கள்!

-          தீபா

தீபா

ப‌டிப்பு: க‌ட்டிட‌ப் பொறியிய‌ல்

வ‌சிப்ப‌து: சென்னையில் க‌ண‌வ‌ர் குழ‌ந்தையுட‌ன்

வேலை: த‌னியார் நிறுவ‌ன‌த்தில்

வ‌லைப்பூ ஆர‌ம்பித்த‌ நோக்க‌ம்:  முதலில் எழுதிப் ப‌ழகத்தான். ஒத்த‌ சிந்த‌னையுடைய‌ ப‌லரின் ந‌ட்பு கிடைத்த‌தும், நல்ல எழுத்துக்களை வாசிப்பதும் என்னை உயிர்ப்புட‌ன் வைத்திருக்க‌ உத‌வுகிற‌து.

தீபாவின் வலைப்பூ: http://deepaneha.blogspot.com/

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

பேஸ்புக்கில் வினவு

வினவை டிவிட்டரில் தொடர்க

வினவை ஆதரியுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சமூகம் > பெண்

பெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து… – உமா ருத்ரன்.
உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 3

எனக்கு இதை எழுதக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. காலேஜில் மெரிட்டில் சேர்ந்தவர்கள் பக்கத்தில் சிபாரிசில் நுழைந்து உட்கார்வதோடு மட்டுமல்லாமல் கேள்வியெல்லாம் கேட்டு அலட்டல் பண்ணுவது போலவும் இருக்கிறது. பின்னர், ஒரு பதிவு கூட ஒழுங்காக எழுதாத என்னையும் பெண் பதிவர் குழுவில் சேர்த்து மகளிர் தினத்தையொட்டி எழுதச்சொன்னதை வேறென்பது?! மறுத்தாலோ என் மேலேயே எனக்கு மரியாதை போய் விடும் அளவுக்கு இருந்தது வந்த அழைப்புக் கடிதம். அதனால் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று துணிந்து விட்டேன்.

நண்பர் ஆணாதிக்கம், இன்றைய பெண்கள் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டிருக்கிறார். எனக்கு பதில் சொல்ல நிறையத் தகுதிகள் கிடையாது. நான் இதை ஒரு பொய்யான தன்னடக்கத்தோடு சொல்லவில்லை. நிஜமாகவே நான் அவ்வளவு ஆணாதிக்கத்தினால் பாதிக்கப்பட்டேனா என்று நீண்ட நாட்களுக்குப்பின் யோசித்துப் பார்க்க வேண்டி வந்தது. எனக்கு அவர் கேட்டிருந்ததுக்கான பதிவாக இது அமையுமா என்று தெரியவில்லை. என்னுடைய சில அனுபவங்களையும் அதன் மூலம் வந்த அறிவையும் வேண்டுமானால் பகிரலாம்… இது மேலோட்டமாக இருந்தால் மன்னிக்கவும். எனக்கு எழுதிய பின் அப்படித்தான் தோன்றியது. ஆனாலும், பல பெண்கள் என்னைப் போல இருக்கிறார்கள் என்பதால் இதை அனுப்பி வைக்கிறேன்.

நான் சுதந்திரமானவளா?

அவசரப்படாமல் கொஞ்சம் என்னைப் புரிந்து கொண்டால் நான் இப்போது  A சென்டர் பெண். சரி தப்பு மீறி என் இன்றைய நிலை அதுதான். வேலையில் நல்ல பதவியில் இருக்கிறேன். பொருளாதார சுதந்திரம் உண்டு. கார் வாங்கி ஒட்டுகிறேன். உள்நாடு வெளிநாடு என்று தனியாக அலைகிறேன். பல நாட்டவரைச் சந்திக்கிறேன். தெரியாதவர்களோடு உணவருந்த வெளியே செல்கிறேன்; சில சமயம் சேர்ந்து ஒரே வீட்டில் அவர்களோடு தங்குகிறேன். அலுவலகத்தில் பல ஆண்கள் சில பெண்கள் எனக்காக/என்னோடு வேலை செய்கிறார்கள். இரவு கண்ட நேரத்திற்கு வீட்டிற்கு வருகிறேன்.

வீட்டில் மகாராணி. சுவாதீனம் சோம்பேறியாக்கும் அளவுக்கு உண்டு. வீட்டில் எல்லா விஷயத்திலும் seat in the table  உண்டு. என்னவாவது செய்து கொள் – டென்ஷன் ஆகாமல் இருந்தால் போதும் என்ற ஒரே விதி. நான் எதற்காகவாவது கவலைப்படாத வரையில் யாருக்கும் என்னைப் பற்றி கவலையில்லை.ஆனாலும், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வர லேட்டாகும்போது விசாரித்து ஃபோன் வரவில்லையென்றால் என்ன இப்படி கை கழுவி விட்டு விட்டார் என்று தோன்றுகிறது.

நான் ஒரு முடிவெடுக்கும் முன்பு அவரைக் கேட்க வேண்டும் என்றால் புரிந்து கொண்டு ஆமோதிப்பவர்கள், அவர் என்னைக் கேட்டுக் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னால் அவரை “Hen Pecked” என்று கேலி பேசுவது கடுப்பாக இருக்கிறது. அவர் கோபத்தில் ஏதாவது சொல்லிவிட்டால்… சுத்தமாக இருட்டி மூடி விடுகிறது.

வீட்டில் இருக்கும் போது ஆஃபிசில் செய்யாத வேலைகள் ஞாபகம் வருகின்றன. ஆஃபிஸில் இருக்கும் போது வீட்டில் இல்லாத குற்ற உணர்வு வருகிறது.

அவ்வப்போது ரோட்டில் ஆண் டிரைவர்கள் நான் பெண் என்பதால் தவறு மட்டுமே செய்திருக்க முடியும் என்று நம்புகிறார்கள். நான் வீட்டில் செய்ய மறந்த வேலைகளைப் போய் செய்யுமாறு ஞாபகமூட்டுகிறார்கள்.

பிளம்பர், எலெக்ட்ரீஷியன், கார்பெண்டர், கார் மெக்கானிக், மேஸ்த்ரி போன்ற டெக்னிக்கல் வேலை செய்பவர்கள் பொதுவாக நான் சொல்வது தவறு அல்லது எனக்குப் புரியாது என்று அலட்சியப் படுத்துகிறார்கள். நான் சொன்னதையே அவர் சொன்னால் கேட்டுக் கொள்கிறார்கள். “அவர் வயதும் தாடியும்தான் காரணம்… அவருக்கு ரிமோட் பயன்படுத்தவே நான் தேவை” என்று நானும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் சில சமயம் சுருக்கென்று இருக்கத்தான் செய்கிறது.

அலுவலகத்தில் diversityக்காக பெண்களை சில விஷயங்களில் உப்புக்கு சப்பாணியாகச் சேர்த்துக் கொள்வதைப் பார்க்கும் போது எரிச்சல் வருகிறது. பிரசவத்திற்குப்பின் வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண் ஊழியர்களை அல்லது பகுதி நேர வேலை செய்யும் பெண்கள் பற்றி இளக்காரமாகப் பேசிக் கேட்கும் போது கோபம் வருகிறது.

கணவரின் மேலாளர் என்ற முறையில் சில கஷ்டப்படும் மனைவிகள் என்னை அணுகி “வேலையிலிருந்து அனுப்பி விடு”, “இரவு வேலையாக மட்டும் கொடு” என்னும் போதெல்லாம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் தவிர வேறு வழியில்லை என்று மட்டும்தான் சொல்ல முடிந்திருக்கிறது.

தான் பெண் என்பதை சரியாக வேலை செய்யாத போது சமாளிப்பதற்காக பயன்படுத்தும் பெண்களும், ஆண்களை manipulate செய்யும் பெண்களும், சட்டத்தைக் கொண்டு ஆண்களை அலைக்கழிக்கும் பெண்களும் – ஆதிக்கம் செலுத்தும் ஆண்களை விட அபாயகரமானவர்களாகத் தெரிகிறார்கள்.

ஆஃபிஸில் நல்ல நண்பர்கள் கூட, ஆண்கள் கோபமாக விவாதித்தால் aggressive என்றும், பெண்கள் கோபமாக விவாதித்தால் (என்ன, கொஞ்சம் குரல் கிறீச்சீட்டு விடுகிறது) emotional  என்றும் சொல்வது விநோதமாக உள்ளது. அலுவலகத்தில் என்றாவது என்னை மீறி அழுதுவிட்டால் மறுநாள் விடியவே வேண்டாமென்று தோன்றுகிறது.

பல இடங்களில் வேலை பார்த்த, பல பெண்களின் அனுபவத்தில் – பொதுவாக ரொம்ப முக்கியமான பொறுப்பான வேலை, பயிற்சி என்றால் முதலில் ஆண்களைத்தான் அணுகுவார்கள்; அதே சமயம் கஷ்டமான அல்லது கோபத்திலிருக்கும் வாடிக்கையாளரை சமாதானப்படுத்தப் பெண்களைத் தேடி முன் நிறுத்தவும் செய்வார்கள் என்று தெரிகிறது.

எப்படியோ Glass Ceiling  கார்ப்பரேட் உலகத்தின் ஒரே உண்மை – சில விதிவிலக்குகளைத் தவிர. “இந்தப் பழம் புளிக்கும். கொஞ்சம் கீழேயே இருந்தால்தான் வீட்டு வாழ்க்கையையும் கொஞ்சம் வாழ முடியும்” என்று சமாதானம் செய்து கொள்ள முடிகிறது. பணத்தேவை கருதி கணக்கில் வராத நாட்களாக வருடங்களும் போய்க் கொண்டிருக்கின்றன.

இப்படி என் சொந்தக் கவலையெல்லாம் மீறி வசதி இருக்கும் போது நேரம் காலம் பார்த்து, பெண்ணின் மஞ்சள் நீராட்டு விழாவை ஸ்கூல் ஃபீஸூக்காக கொடுத்த பணத்துடன் கடன் வாங்கியாவது விமர்சையாகக் கொண்டாட ஆசைப்படும் வீட்டு வேலை செய்து கொடுப்பவரை நினைத்தால் ஆயாசமாக இருக்கிறது.

தேவநாதனின் பெண் குழந்தைகளை பள்ளியில் தொடரத் தடை செய்பவர்களையும், வன்புணர்ச்சிக்குள்ளான 12 வயது சிறுமி போலீசில் புகார் சொன்னதால் பள்ளியை விட்டு அனுப்பப் பார்ப்பவர்களையும் ஏதாவது செய்தால் கண்டிப்பாக முக்தி நிச்சயம் என்றே தோன்றுகிறது. Child Abuse என்று கேள்விப்பட்டால் பாடத்தில் சொல்லப்பட்ட Pedophilic என்ற வெறும் வார்த்தையையும் அதன் காரணங்களையும் தாண்டி அந்த கொடுமைக்காரன் மீது பாயத் தோன்றுகிறது.

மொத்தத்தில் கஷ்டப்படும் பிற பெண்களைப் பார்த்து holocaust survivor’s guilt  வருகிறது.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி, ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிக் கொண்டிருப்பதைப் போல சில பெண்கள் முன்னேறிக்கொண்டிருக்கும் அதே சமயம் பல பெண்கள் பின்னே போய்க் கொண்டிருக்கிறார்களோ என்று கவலையாக இருக்கிறது.

இதற்கு உருப்படியாக என்ன செய்யலாம் என்று தீர்மானமாகவில்லை. பெண்ணியவாதிகள், பெண்கள் இயக்கம் என்றெல்லாம் கேட்டால் ரொம்பத் தயக்கமாக இருக்கிறது.

எப்படி இப்படி ஆனேன்?

நான் வளர்ந்தபின் சுதந்திரமாக இருப்பதற்காக, வளர்க்கப்பட்டேனா?

மிருகங்களை விட மனிதர்கள்தான் சுய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளுமளவு வளர பல வருடங்கள் ஆகின்றதே. இந்த சார்புள்ள சூழலில் இருந்து சுதந்திரமானவளாக வளருவதுதான் எனக்கு சிறிது கடினமானதாக இருந்துள்ளது. நம்மால் நமக்கே உபயோகமாய் இருக்க முடியாத நிலை, வயது.

எனக்கு இருக்கும் கொஞ்ச அறிவைப் பயன்படுத்தி நான் தேர்வு செய்யும் எந்த உறவும் நன்றாக இருப்பதற்கும் நாசமாய்ப் போவதற்கும் நான் மட்டுமே காரணம் என்று எல்லாச் சமயங்களிலும் சொல்லமுடியாது என்றாலும், என் பொறுப்பின் பங்கு அதில் அதிகமுள்ளது. ஆனால் தான் சுதந்திரமாக இல்லை என்று புரிந்து கொள்வதற்கும், சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று முயற்சி செய்வதற்கும் கூட வளர்ப்பின் பாதிப்பு தேவையாகிறது.

என் பிறந்த வீட்டில், நெருங்கிய உறவினர் வீடுகள் உட்பட, பெண் குழந்தைகள் மட்டுமே. ஒவ்வொரு முறை குழந்தை பிறந்த செய்திக்குப் பின் “இதுவும் பொண்ணாப் போச்சு, போ!” என்ற அங்கலாய்ப்பு நான் மூத்த பேத்தி என்பதால் கேட்டிருக்கிறேன். நானும் வீட்டில் அடுத்து பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்று பெரியவர்களோடு சேர்ந்து கொண்டு கவலைப்பட்டிருக்கிறேன். நான் பிறந்து 9 வருடங்கள் கழித்து பிறந்த ஒரே தங்கையை அவள் பிறந்த அன்று பார்த்து தம்பியாகப் பிறக்கவில்லையே என்று அழுதிருக்கிறேன்.

பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லித்தான் வளர்க்கப்பட்டேன். ஆனால் அறிவு வளர்கையில் இப்படியும் இருக்கலாம் என்று படிக்க, பார்க்க, கேட்க முடிந்தது. அப்படி இருக்க ஆசைப்படுவதில் நாலில் ஒன்றாவது பெற பெற்றவரில் ஒருவரது ஆதரவாவது இருந்தது. தான் செய்ய முடியாததை என்னை செய்யவைக்க வேண்டி வந்த ஆசையா, இல்லை, பிள்ளைப்பாசமா என்று நான் புரிந்து கொள்ளும் முன்பே கிடைக்காத மூன்றை நினைத்து, கிடைத்த ஒன்றிற்கும் நன்றி மறந்திருக்கிறேன். “ஆம்பிளையாக வளர்கிறேன்! அடங்காப்பிடாரியாக ஆகிவிட்டேன்” என்று பேச்சு கேட்டால் இன்னும் கொஞ்சம் வீடு கட்டி ஆட்டம் காட்டி இருக்கிறேன். நான் வருத்தப்பட்டால் கலங்கிவிடும் சில உறவினர்களால் தப்பிப் பிழைக்க விடப்பட்டிருக்கிறேன்.

ஆரம்ப பதின் வயதுகளில் பெண் ஆண் இருவருக்கும் வளர்ந்த பின் உள்ள பொதுவான எதிர்காலம் நான் வளர்ந்த ஒரு சிறிய டவுனில் உள்ளவர்களைப் பார்த்துப் புரிந்த பின் பயந்து நடுங்கியிருக்கிறேன். இரவு வேளைகளில் தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டு பெற்றவர்கள் என் எதிர்காலத்தைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டு கேட்டிருக்கிறேன். ஒரு முறை, அவர்கள் ஜெயகாந்தனின் “அக்கினிப் பிரவேசம்” படித்து விட்டு, “இப்படியெல்லாம் நம் பெண்ணுக்கு நடந்து விடக்கூடாது; அதனால்தான் அவள் விருப்பத்திற்கு விடக்கூடாது” என்று (நாமொன்று எழுத அவர்களாக ஒன்று புரிந்து(!) கொண்டு படிக்கும் சில பதிவுலக நண்பர்கள் போல) பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் அவர்கள் பெற்ற பெண்ணாய் மழை நாட்களில் எங்கும் வெளியே செல்லாமல் கொஞ்ச நாள் வீட்டிலேயே இருந்தும் பார்த்தேன்!

சினிமா பாடல்கள் கேட்கக் கூடாது, யாரும் வீட்டுக் கதவைத் தட்டினால் பெண்கள் போய் திறக்கக் கூடாது என்ற விதிகளுக்கிடையில், வீதியில் நான் சைக்கிள் ஓட்டினதே ஒரு சாதனை ஆகியது. சல்வார் கமீஸ் இமாலய சாதனையாகியது. பத்தாம் வகுப்பில் தாவணி போட மறுத்தது பெரும் புரட்சி வெடித்ததாகக் கருதி அடக்கப்பட்டது. இப்போது நினைத்தால் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றும் விஷயங்கள் ஏன் என்னை அப்போது அவ்வளவு பாதித்து வெறுப்பாக்கின என்று இன்றும் புரியவில்லை. ஏதோ நான் மட்டுமே அடக்கி ஆளப்படுகின்ற victim என்ற உணர்வு. காப்பாற்ற ராஜகுமாரர்கள் மட்டும் வரப்போவதில்லை என்ற ஒரே தெளிவு. புத்தகங்கள் மட்டும் கிடைத்திருக்கா விட்டால்? நினைக்கவே பயமாக இருக்கிறது.

நான் படித்த புத்தகங்களும், பேசிக் கேட்ட சில படைப்பாளிகளும் எதையோ திருகி விட்டனர்; சினிமாவில் நடிக்க ஊரை விட்டு சென்னை வரும் இளைஞர்களைப் போல, எள் விற்ற காசில் சினிமா எடுக்க ஆசைப்படுபவர்களைப் போல, நானும் பத்தாவதோடு படிப்பை நிறுத்தி வேலைக்கு தயாராவது என்ற முடிவு எடுத்து விட்டேன். ஒன்று மட்டும் தெரியும் – “+2 வரை பொறுக்க முடியாது! பொருளாதார சுதந்திரம்தான் என் சர்வரோக நிவாரணி!”

என்றோ சுஜாதா படித்து, அவரால் கேம்பஸ் இன்டர்வியூ செய்யப்பட்ட பக்கத்து வீட்டு அண்ணன் பேசியதைக் கேட்டு கம்ப்யூட்டர் என்ற வார்த்தை மட்டும் நிலாவிடம் ஒட்டிக்கொண்ட ஜீனோ போல என்னோடு ஒட்டிக்கொண்டது. “15 வயசில கல்யாணம் பண்ணலைன்னா பின்னாடி கல்யாணத்தில் பிரச்சினை வரும். எட்டுல சனி” என்ற இரவு நேரப் பேச்சுக்கள் பீதி, பேதியைக் கிளப்ப, பத்தாவது ரிசல்ட் வந்தவுடன் அறிவித்து விட்டேன். “நான் இனிமே ஸ்கூல்க்கு போகப்போறதில்லை. கம்ப்யூட்டர் படிக்கப் போறேன்.” சுத்தமாக எந்த காலேஜ், எந்த இன்ஸ்ட்டிட்யூட், எந்த கோர்ஸ் என்று ஒண்ணும் தெரியாது. பேப்பரில் பார்த்த ஒரு விளம்பரம் மட்டும் கலங்கலாக ஞாபகம்.

அதற்கப்புறம் மூன்று வருடங்கள் ஹாஸ்டல், ஆறு மாதங்கள் கழித்து சென்னை மாநகரில் முதல் சம்பளம். Mission Accomplished but Partially பணம் சம்பாதிக்கும் பச்சைமண்!

பிறகு ருத்ரனைச் சந்தித்தல், அவரால் எல்லாவகையிலும் என் இப்போதைய வளர்ச்சி, உறவினர்களின் எமோஷனல் ப்ளாக்மெயில், நான் என் சுயநலம் பேணல், காசுக்காக அமெரிக்க வாசம், பெற்றோர் ஒரு வழியாக சமாதானமாதல் என்று பல அத்தியாயங்கள் தாண்டி, இப்போது.

என்னில் பிறர் குற்ற உணர்ச்சி ஏற்படுத்த முயலும் நேரங்களில் மரத்துப்போய் கடினமாக நின்றிருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் சுயநலமாக இருக்கிறேன் என்றபோது நான் என் நிலையில் அழுத்தமாக இருக்கிறேன் என்று என்னையே தேற்றிக் கொண்டிருக்கிறேன்.

இதில் எவ்வளவு என்னால் மட்டுமே முடிந்தது, இதில் எந்த நல்லது கெட்டதுகளுக்கு நான் மட்டுமே பொறுப்பு, இதில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் இருக்கிறதா, கடவுள் காப்பாற்றியதா என்றெல்லாம் பகுத்துப் பார்க்கும் அளவுக்கு என்னால் இன்னும் அன்னியப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

என்ன சொல்ல வந்தேன்?.

இவ்வளவு நேரம் சுய புராண கொசுவத்திக்குப் பிறகு என்ன சொல்ல வந்தேன் என்றால்,

ஒரு பெண் மணந்து கொள்வதா, வேண்டாமா என்று தீர்மானிப்பது முதல், மணப்பதானால் யாரை மணந்து கொள்வது என்பதைத் தீர்மானிக்கவும் அவளுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. அவள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை என்பதால் அவள் பொறுப்பும் அதிகம். சுதந்திரம் வேண்டுமென்றால் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது. அலுவல், தொழிலும் அப்படியே.

மணந்தபின் வரும் உறவு முறைகளைச் சந்திக்க, சமாளிக்க அதற்குமுன் அவள் முழுவதும் தயாராகி இருக்க வேண்டும் – தேவைப்பட்டால் அந்த உறவுகளைத் துறந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தன் வாழ்க்கையை மீண்டும் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளவும் தயாராகி இருக்க வேண்டும். சொல்வது எளிது! ஆனாலும் அந்த நேரத்து விரக்தியை மீறி மீண்டு வரத் துணிவு, தேவை என்றவுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தன்னிறைவுக்கான தகுதிகள் -அந்த நிலைக்கு வருவதற்கு முன்னரே தேவை.

இதற்கு அவள் வேண்டுவதெல்லாம் அந்த வயது, நிலைக்கு வரும்வரை அவள் தேர்ந்தெடுக்காத மற்ற உறவுகள் (பெற்றோர் முதல் சமூகம் வரை) அவளை எல்லா வகையிலும் வளர விடுதல் மட்டுமே. முடிந்தால் அந்தக் காலம் வரை அவள் வாழ்க்கையில் உள்ள ஆண்களும் பெண்களும் அவள் சரியான தேர்வுகளைச் செய்ய, தன் மனதின் குரலை கேட்டுப் பழக்கப் படுத்த உதவினாலே அது ஞாலத்தின் மாணப் பெரிது.

பள்ளிக்கல்வி கற்றுக் கொடுப்பதை விட இலக்கியம் கற்றுக் கொடுக்கும் என்பது, என் வாழ்க்கைப் பாடம். எப்படியும் கல்வி, பொருளாதார சுதந்திரம் ஆண் பெண் எல்லோருக்கும் கண்டிப்பாகத் தேவை. அதைத் தவிர, தன்னளவில் ஒரு பெண் செய்ய வேண்டியதாக நான் நினைப்பது:

உணர்வு பூர்வமான சார்பு நிலையிலிருந்து வெளியே வரமுடியாது – அதனால், அதைப் பற்றிய புரிதலாவது வேண்டும். உணர்வுகளை வைத்துச் செய்யப்படும் ப்ளாக்மெயில், குற்றவுணர்ச்சி ஏற்படுத்தி குளிர்காயப் பார்க்கும் கயமையை அடையாளம் கண்டு விலகுவது.

பெற்றோர் உறவினரிடமிருந்துப் பெற்ற சுதந்திரத்தை கணவன், பிள்ளையிடம் இழக்காமலிருப்பது.

பெற்ற பெண்ணை அடிமையாக இருக்கவும், ஆணை ஆதிக்கம் செய்யவும் பழக்காமல் இருப்பது.

மண வாழ்க்கையில் மட்டுமல்ல பொதுவாகவே, எந்த சண்டை போட வேண்டும் எந்த சண்டையை ஆரம்பிக்க வேண்டாம் என்று தேர்வு செய்யப் பழகுவது. Sometimes it is better to give up fighting wars to win battles

பிறர் செய்ய வேண்டியதாக நான் நினைப்பது:

ஒரு நாள், “மகளிர் தினமா! யாராவது அபத்தமாய் மனிதர்களாய் இருப்பதைக் கொண்டாட வேண்டுமா?” என்று எல்லோரும் கேட்குமாறு ஆக வேண்டும். சீக்கிரமாய் இந்த நாள் வர முடிந்ததைச் செய்யுங்கள்.

வீட்டிலும் வெளியிலும் ஆண்தான் அல்லது பெண்தான் செய்ய வேண்டிய வேலை என்று நிறைய வேலைகள் இல்லை. Dignity of Labour ஐ வீட்டிலும் ஆரம்பிக்கலாம்.

“உங்கள் வீடு மதுரையா? சிதம்பரமா?” என்று கேட்டு லொள்ளு பண்ணாமல் திருச்செங்கோடாய் இருக்க உதவி செய்யுங்கள். “Who wears the pants in your house?” என்பது அபத்தம். பாண்ட்டோ ஸ்கர்ட்டோ எப்போது எந்த சைஸாக இருக்கிறது, யார் அதை அணிந்தால் அந்த நேரம் பொருத்தம் என்பது அவரவர் முடிவு செய்ய வேண்டியது.

-   உமா ருத்ரன்

உமா ருத்ரன்:

படித்தது: கணினி தொழில்நுட்பப் பட்டயம், மனவியல் முதுநிலை, மேலாண்மை முதுநிலைப் பட்டயம், தர மேலாண்மை முதுநிலை, ஆய்வுப்படிப்பு இப்போதைக்கு ஆசை மட்டுமே.

பிடிப்பது: சினிமா, இலக்கியம், கலை, இசை

வேலை: தனியார் கணினி தொழில் நுட்ப நிறுவனமொன்றில் மேலாளர்

வாழ்வது: கணவர் டாக்டர் ருத்ரனுடன் சென்னை.

உமா ருத்ரனது வலைப்பூ: http://umarudhran.blogspot.com/

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

பேஸ்புக்கில் வினவு

வினவை டிவிட்டரில் தொடர்க

வினவை ஆதரியுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சமூகம் > பெண்

திருச்சி: மகளிர் தினத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் !!
மகளிர் தினத்தில் பெரும்பாலான அமைப்புக்கள் இனிப்பு கொடுத்தும், பரிசு கொடுத்தும் சடங்காக கொண்டாடப்படும் நிலையில் அந்த தினத்தையே பெண்களின் போராட்ட நாளாக கொண்டாடும் மரபே நமக்குத் தேவைப்படுகிறது.

மார்ச்-8 அன்று திருச்சியில் இயங்கும் பெண்கள் விடுதலை முன்னணி (ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) சார்பில் ‘விலைவாசி உலகத்தரம், பட்டினியே இனி நிரந்தரம்’ எனும் தலைப்பில் ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

ஆர்ப்பட்டத் தலைவர் தோழர்.நிர்மலா (தலைவர், பெ.வி.மு) பேசும்போது “மகளிர் தினம் 1857ல் பெண் தொழிலாளர்களின் போரட்டத்தால் உருவாகி, 1911ல் சோசலிச போராளி கிளாரா ஜெட்கினால் உலக அளவில் கடைபிடிக்கும் தினமாக அறிவிக்கப்பட்டது, இன்று மகளிர் அமைப்புகள் பெண் சுதந்திரம் எனும் பேரில் அரங்குகளில் கூத்தடிக்கும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது, ஆக இது ஒரு போரட்ட தினமே என்று பெ.வி.மு    அனுசரிப்பதை”விளக்கினார்.

மைய கலைக்குழு தோழர் அஜிதா பேசும் போது பெண்கள் இன்று போக பொருளாகவும், வியாபாரத்திற்க்கு விளம்பரமாகவும், கணவனின் தேவையை நிறைவேற்றும் எந்திரமாகவும் இருக்கும் நிலையை சுட்டிக்காட்டியும், பெண்கள் தமது மன கஷ்டங்களை தீர்க்க வாய்ப்பாக சாமியார்களிடம் சரணடைவது,  தம்மை இழப்பது என இருக்கும் நிலையை கடுமையாகச் சாடினார்.

சிறுமி சுபா, கல்வியில் தனியார்மயம் நுழைந்து ஏழைகளுக்கு கல்வியை மறுத்துள்ளது என குரல் கொடுத்தார்.ம.க.இ.க தோழர் ராஜா பேசும் போது, விலைவாசி உயர்வின் தாக்கம் பெண்களை அதிகளவில் தாக்குவதும், அதற்கெதிரான போராட்டம் கட்டியமைக்க வேண்டியுள்ளதையும்,

இன்று காவல்துறையின் பாலியல் துன்புறுத்தலால் பெண்கள் பாதிக்கப்படுவதற்க்கு எந்த நீதியும் கிடைப்பதில்லை என்பதையும், இன்று அம்பலமாகி சந்தி சிரிக்கும் சாமியார்களின் அயோக்கியத்தனத்தையும் சாடினார்.

மேலும் இன்று மறுகாலனிய தாக்குதலால் விலைவாசி,வேலையிழப்பு, விவசாயம் நசிவு போன்ற கொடுந்தாக்கத்தை மக்கள் சந்திக்கும் வேளையில், பழங்குடி மக்களின் போராட்டம் மண்னைக்காக்க போர்க் குணத்துடன் நடப்பதை படிப்பினையாக எடுத்து நாமும் போராட வேண்டும், பெண்களின் உரிமைக்கான போராட்ட தினமே இது என்றார்.

பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு ஆதரவளித்தனர். பொதுமக்கள் வெயிலையும் பொருட்படுத்தாது பங்கேற்றனர். மையக்கலைக்குழு தோழர்களின் துயரம் பருப்பு நாடகம்,பாடல்கள் கூடிநின்ற மக்களுக்கு உணர்வூட்டியது.

தகவல்: பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

பேஸ்புக்கில் வினவு

வினவை டிவிட்டரில் தொடர்க

வினவை ஆதரியுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சமூகம் > பெண்

என் தோழி என்ன தவறு செய்தாள்? – சந்தனமுல்லை
உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 2

சந்திராவை தெரியுமா உங்களுக்கு…சத்தமாக்கூட பேசமாட்டா. பேசறதே அவ்வளவு மெலிதான குரலா இருக்கும். ‘கோவம் வந்தா கூட உன் குரல் இப்படித்தான் இருக்குமா சந்திரா’- ன்னுக்கூட கேட்டிருக்கேன்…அதுக்கும் ஒரு சின்ன புன்னகைதான். எங்க பேட்ச்லே எல்லோரும் வேலைக்குப் போகணும்ன்ற லட்சியத்தோடவெல்லாம் படிக்கலை. படிச்சுட்டு முதல்லே கல்யாணம், அப்புறம் சூழ்நிலை அனுமதிச்சா வேலைன்ற மாதிரி சில பேரு இருந்தாங்க. அந்த சில பேருலே சந்திராவும் ஒருத்தி. அவங்களோட அந்த மாதிரி மனநிலைக்கு நிறைய காரணங்கள் இருந்தது. சந்திராவுக்கு அப்பாவோட ரிடையர்மெண்ட் காரணமா இருந்துச்சு. ரிடயர்டு ஆகிறதுக்குள்ளே பொண்ணோட கல்யாணத்தை முடிச்சுடணும்னு எல்லா மத்திய தர பெற்றோருக்கும் இருக்கும் நெருக்குதல்தான்.

கடைசி செமஸ்டர் நெருங்கும்போதே சிலருக்கு ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை, அமெரிக்க மாப்பிள்ளை’ன்னு ஃபிக்ஸ் ஆகி இருந்தது. எல்லோரும் எல்லோருடைய கல்யாணத்துக்கும் கண்டிப்பா போகணும்-ன்ற ப்ராமிஸோட பிரிஞ்சோம். அதே மாதிரி ஆரம்பத்துலே நடந்த மூணு நாலு கல்யாணத்துக்கு ஒண்ணா போனோம். கல்யாணம் ஆனவங்கள்ளாம், அதுக்கு அப்புறம் நடந்த கல்யாணங்களுக்கு வரலை. ஒண்ணு கண்டம் தாண்டி போயிருப்பாங்க இல்லேன்னா உடல்நிலை இடம் கொடுக்காது. இதுலே ஒரு ஆச்சர்யம், யாருக்கெல்லாம் முதல்லே கல்யாணம் நடக்கும்னு கணக்கு பண்ணி வைச்சிருந்தாங்களோ அதுலே சிலருக்கு மாப்பிள்ளை அமையாம இருந்துச்சு. சந்திராவும் மாப்பிள்ளை அமையாத  லிஸ்ட்லே இருந்தா.

நானும் லதாவும் வேலை தேடி சென்னை வந்துட்டோம். எங்க ஆஃபிஸிலே ஏதாவது வேலை காலி ஆகற மாதிரி அல்லது புது வேலை வாய்ப்பு உருவாகற மாதிரி இருந்தா எல்லோருக்கும் ஃபோன் பண்ணி சொல்வோம். சந்திராவோட ஊர் உடுமலைபேட்டை. அவங்கப்பாவோட வேலைன்னாலே ஆழியார்ன்ற ஊரிலே இருந்தாங்க. நாங்க சந்திராவை கூப்பிடும்போதெல்லாம், ‘எங்க அம்மா அனுப்ப மாட்டேங்கறாங்கப்பா, யாராவது பார்க்கணும்னா உடனே ஊருக்கு வர முடியாது’ -ன்னு சொல்லி மறுத்துடுவா. கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சவால் விட்டிருந்த நானும் வீட்டுக்கு அடங்கி கல்யாணமாகி பெங்களூர் போயிருந்தேன்.

எங்கள் க்ரூப் மெயில்லே சந்திரா ஒரு மெயில் அனுப்பியிருந்தா. ‘நானும் பெங்களூரிலேதான் இருக்கேன், நீ எங்கே இருக்கே’ன்னு அவ தங்கியிருந்த முகவரி,மொபைல் நம்பர் எல்லாம் கொடுத்திருந்தா. ஏதோவொரு கம்ப்யூட்டர் பயிற்சி நிலையத்துலே டெஸ்டிங் கோர்ஸ் படிச்சுக்கிட்டிருக்கா. அவங்களே வேலைக்காக நேர்முகத்தேர்வு ஏற்பாடு செய்வாங்க. அதில் தேர்ச்சி அடைந்து வேலை பெறுவது நமது சாமர்த்தியம்.  ஒருநாள், வீட்டுக்கு வந்து கொஞ்சம் டாக்குமெண்ட்ஸ், நேர்முகத்தேர்வுக்கு தயார்படுத்திக்கற மாதிரி எல்லாம் பேசிட்டு போனா. அப்போ சந்திரா சொன்னது என்னன்னா, ஜாதகம் பொருந்தி வர்ற எல்லா மாப்பிள்ளைங்களும் பொண்ணு வேலைக்கு போகலைன்னு நிராகரிக்கறாங்க. ஒரு சிலர் நேரடியாகவே நிராகரிக்கறாங்க. அதனாலே அம்மாவே என்னை ஏதாவது வேலை தேட சொல்றாங்க. ஆனால், இவ்ளோ நாள் வேலை செய்யாமல் இரண்டு வருட இடைவெளிதான் ரொம்ப இடிக்குது.

இதைச் சொல்லும்போதும் சந்திராக்கிட்டே கோவத்தையோ இல்லே எரிச்சலையோ பார்க்கலை. அதே சமயம், நம்பிக்கை இல்லாமலும் இல்லை. இதை எல்லாம் அனுபவிக்கறதுதான் நம்ம வாழ்க்கைன்னு அவ அமைதியா ஏத்துக்கிட்ட மாதிரிதான் இருந்தது. நானா இருந்தா, அம்மாக்கிட்டே எரிஞ்சு விழுந்திருப்பேன். என் கல்யாணத்துக்கு வச்சிருக்கற காசை தாங்க, ஏதாவது பேங்க்லே போட்டுட்டு வட்டியை வச்சு ஜாலியா இருப்பேன்னு சண்டை போட்டிருப்பேன். சந்திராவுக்கு விதவிதமா ட்ரெஸ் செஞ்சுக்கறதுலே ஆர்வம், என்னை மாதிரியே. நாங்க ரெண்டு பேரும் அம்மா புடவையை ஹாஸ்டலுக்கு எடுத்துட்டு வந்து நாங்களே டிசைன் செஞ்சு தைக்க கொடுப்போம். பெங்களூர்லேயும் சந்திரா நல்ல டைலரை கண்டுபிடிச்சிருந்தா. வாரா வாரம் எங்கேயாவது போய் துணி வாங்கிட்டு வர்றதுதான் அவளுடைய பொழுதுபோக்கா இருந்துச்சு. அவளுக்கு ரொம்ப ஈடுபாடுன்னா – அந்த ட்ரெஸ் டிசைனிங்தான்.

அந்த கோர்ஸ் முடியறப்போவே சந்திராவுக்கு கோயமுத்தூர்லேயே வேலையும் கிடைச்சது. ஊருக்குப் போன ஆறுமாசத்துலே அவளுக்கு நிச்சயமும் ஆயிடுச்சு. மாப்பிள்ளையும் உடுமலைப்பேட்டைதான். ஆனா, அவர் வேலை செய்றது சென்னையிலே தாம்பரத்துலே ஆஃபிஸ். குடியிருக்கிறது பெருங்களத்தூர். அதனாலே இப்போ சந்திரா சென்னையிலே வேலை தேட ஆரம்பிச்சா. ஆனா, எதுவும் அமையலை. இப்போ வேலை செய்யிற இடத்துலே, வீட்டுலே இருந்துக்கூட வேலை செய்யலாம்னு வசதி இருந்தது போல. அதனாலே கல்யாணமாகி பெருங்களத்தூர் வந்தப்பறம் சந்திரா வீட்டுலே இருந்து வேலை தொடர்ந்துக்கிட்டு இருந்தா. அப்புறம், எப்போவாவது ஒரு வாரம் மட்டும் கோயமுத்தூர் போய் ஆஃபிஸிலே வேலை செய்யணும். அந்த சமயங்கள்லே மட்டும் அம்மா வீட்டுக்கு போய்ட்டு அங்கிருந்து ஆஃபிஸ் போய்ட்டு வர ஏற்பாடு.

கல்யாணத்துக்கு போக முடியாததாலே, சென்னையிலே இருக்கற நண்பர்கள் எல்லோரும் ஒரு நாள் சந்திராவை நேரிலே போய் பார்த்துட்டு வரலாம்னு பேசிக்கிட்டோம். ‘நீ எந்த வாரம் இருப்பேன்னு சொல்லு சந்திரா, நாங்க வந்து பாக்கறோம்’- னு சொல்லியிருந்தோம். ஒரு ஆறு மாசம் போயிருக்கும். நடுவிலே பேசிக்கிட்டு இருந்தப்போ தெரிஞ்சது, சந்திரா கருவுற்றிருப்பது. இப்போ போலாம், அப்போ போலாம்னு கடைசிலே ஒரு சில வாரங்கள் கழிந்தன. கடைசியா ஒருநாள் போன் பண்ணினா மொபைல் ரீச் ஆகவே இல்லை. ஒரு சில வாரங்கள் கழிச்சு, விஷயம்  தெரிஞ்சது, சந்திரா ஒரேயடியா உடுமலைக்கே போயிட்டான்னு .

சந்திரா சொன்னதெல்லாம் இதுதான் – டைவோர்ஸுக்கு அப்ளை பண்ணியிருக்கா. அவ ஹஸ்பண்ட் ஒரு சந்தேகப்பேர்வழி, அவ சம்பாரிக்கிறதை அவங்க அம்மா வீட்டுக்கு கொடுக்கறதா சண்டை போட்டிருக்கான். ஏடிஎம் கார்டு, அதோட கடவு எண் எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு அவளுடைய அத்தியாவசிய தேவைக்குக் கூட அவன் கிட்டேதான் கேக்க வேண்டிய நிலை. வீட்டு வேலைக்கு உதவியா யாரையும் வேலைக்கு வைச்சுக்கக் கூடாது. அவ ப்ரெக்னெண்டா இருந்தாலும் மெட்ரோ வாட்டர் எல்லாம் சந்திராவே போய்தான் தெருமுனையிலிருந்து எடுத்துக்கிட்டு வரணும். யாருக்கிட்டேயும் மொபைல்லே பேசக்கூடாது. வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. ஒரு கட்டத்தில் இதையெல்லா தாங்க முடியாமல் சந்திரா திணறி போயிருக்கிறாள். மீறி கேட்டதற்கு சண்டை வந்திருக்கிறது. சண்டை வலுத்து, ‘என் வீட்டை விட்டு போ’ -ன்னு ராத்திரி 12 மணிக்கு வெளியே தள்ளி கதவை சாத்தியிருக்கிறான்.

கையில் மொபைலோ,காசோ எதுவும் இல்லாத நிலையில், சந்திரா அவளோட குடும்ப நண்பருக்கு ஃபோன் பண்ணியிருக்கா. அவர்,  கிண்டியிலிருக்கும் அவரது வீட்டுக்கு கூப்பிட்டுட்டு போயிருக்கார். உடனே ஊருக்குப் போகணும்னு சந்திரா அப்போவே பஸ் ஏத்திவிட சொல்லியிருக்கா. மறுநாள் மதியம் வீட்டுக்கு வந்து சேர்ந்த சந்திராவுக்கு இந்த உளைச்சல், அலைச்சல் காரணமா கருக்கலைந்து ஒரு வாரம் நர்சிங் ஹோம்லே இருந்துருக்கா. அவன்கிட்டே, சந்திராவோட அப்பா பேசினதுக்கு மரியாதை இல்லாமே சந்திராவைப் பத்தி தப்பா பேசியிருக்கான். அவங்க சீர்வரிசையா கொடுத்த எந்த பொருளையும் திருப்பி தர முடியாது, கோர்ட் கேஸுன்னு போனா எனக்கு சாதகமாத்தான் வரும், உனக்குத்தான் வீண் செலவு, எந்த நகையும் கொடுக்க முடியாது, என்ன பண்ணனுமோ பண்ணிக்கோன்னும் சொல்லியிருக்கான்.

இது எல்லாம் நடந்தது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி. இப்போ சந்திரா கோயமுத்தூர்லே வேலை செய்றா. அம்மா-அப்பா கூட உடுமலையிலே இருக்கா. அம்மா கவலையிலே உடம்பு அடிக்கடி சரியில்லாமே போகுதுன்னு கவலைப்பட்டா. கேட்டுக்கிட்டிருந்த எனக்கு ஒரு சுனாமி வந்து போன மாதிரி இருந்தது. அப்புறம் சொன்னாள், ‘நல்ல வேளை நீங்கெல்லாம் வராதது, வந்திருந்தா அதுக்கும் என்னை டார்ச்சர் பண்ணியிருப்பான், ஏன் வந்தாங்க எதுக்கு வந்தாங்கன்னு’. ஆனா, அதே ஊரிலே இருந்தும் சந்திராக்கு தேவைப்பட்டப்போ உதவ முடியலையேன்னு கஷ்டமா இருந்தாலும், எல்லார்மேலேயும் எனக்கு கோவமா வந்தது.

சந்திரா சொல்லும் வரை ‘யாரு இப்போல்லாம் வரதட்சிணை வாங்கறாங்க’ ன்னுதான் மேம்போக்கா நினைச்சுக்கிட்டிருந்தேன். போடறதை போடுங்கன்னு சொன்னாலும் வேலைக்கு போனா வர்ற காசும் (மறைமுகமான ) வரதட்சிணையாதானே கணக்காகுது.பொண்ணு வேலைக்குப் போகணுமா இல்லையான்னு மாப்பிள்ளைகள்தான் முடிவு செய்கிறார்கள், சந்திராவின் அனுபவப்படி. வரதட்சிணை வாங்கினா வர்ற காசை விட சம்பளமா நிறைய காசு வருதேன்னு கணக்கு பண்றதை நினைச்சு எரிச்சலா வந்தது. என்னதான் பொண்ணுங்க படிச்சு வேலைக்குப் போனாலும் சம்பாரிக்கிற காசை கணவன் கையிலே கொடுத்துட்டு வீட்டு வேலை செஞ்சுக்கிட்டு இருக்க வேண்டிய நிலைமை இருக்கத்தான் செய்யுது.

இன்றைய இளைஞர்களுக்கு திருமணத்தின் மூலமாக கிடைப்பது கூடுதலான ஒரு ஏடிஎம் கார்டு – அதை முன்வைத்தே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

சந்திராவின் கணவனது அருவருப்பான நடத்தையைப் பற்றி  சொல்வதற்கு என்ன இருக்கிறது….அதைப்பற்றிய கேள்விகளையும் பதில்களையும் உங்களிடமே விட்டு விடுகிறேன்.

என்னதான் பொண்ணை படிக்க வைச்சாலும், வேலைக்குப் போய் சுயமா இருக்கறதை விட கல்யாணம்தான் முக்கியம்னு நம் சமூகத்து பெற்றோர்கள்  நினைப்பது ஏன்?

பொண்ணை ஏன் தன்னோட கடமையா, குடும்பத்து மானமா, கௌரவமா இன்னொரு வீட்டுக்கு போக வேண்டியவளா, சுமையா, செலவா நினைக்கறாங்க? (என்னோட  ஃப்ரெண்ட் லஷ்மி சொன்னது இது, கசின்ஸ் எல்லாம் சேர்ந்தால்  லஷ்மிதேவி ஈக்வல் டூ செலவுன்னு சொல்லுவாங்க-ன்னு)

பெண்கள் வேலைக்கு போறாங்க, வெளியுலகத்தை பார்க்கறாங்க என்றதையெல்லாம் தாண்டி உண்மையான் பொருளாதார விடுதலை கிடைச்சிருக்கான்னா சந்தேகம்தான். வீட்டில் நிலைமை அப்படியேதான் இருக்கு. ஐடியில் வேலைப் பார்க்கும் பெண்களைத்தான் மணமகன் சமூகம் எதிர்பாக்குது. ‘உன்னோட  சம்பளத்தை என் கையிலே வர வைக்கறேனா இல்லையா பார்’-ன்னு மருமகள்கிட்டே சண்டை போட்டு மகனைப் பிரிச்சு வைச்ச மாமியாரை எனக்கு தெரியும். உண்மையில் பொருளாதார சுமைகளை சுமப்பதில் இருவருக்கும் சம உரிமை கிடைத்திருக்கிறதுன்னு வேணும்னா சொல்லிக்கலாம். மத்தபடி, பெண்கள் நிலை வீட்டில் இன்னும் மாறலை.

இது சந்திராவின் வாழ்க்கை மட்டுமல்ல. தேவிகாக்கள், அனுக்களின் கதையும் இதுதான். அவர்களின் வாழ்க்கை உணர்த்துவதெல்லாம் ‘இந்த பொருளாதார சந்தையில் பெண்ணும் ஒரு சரக்கு. அவளும் ஒரு நுகர்பொருள்’ என்ற எண்ணத்தைத்தான்.

இதற்காக குடும்பம் என்ற ஒன்றே தேவையில்லை என்றெல்லாம் சொல்ல வரவில்லை.  எந்த சராசரி மனிதருக்கும், பெண்ணுக்கும் சரி – ஆணுக்கும் சரி குடும்பம் இல்லாத வாழ்க்கை என்பது நடைமுறையில் சிக்கலானது. ஆணுக்கு குடும்பத்துக்குள் இருக்கும் அதே உரிமைகள் பெண்ணுக்கும் இருக்கட்டுமே. பெண்ணும் அதே சுதந்திர காற்றை சுவாசிக்கட்டுமே.

சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவைப் பாத்த்தேன். ஆணும் பெண்ணுக்கு சமையல் வேலைகளில் உதவ வேண்டுமென்பதாக. அதில் காணக்கிடைக்கும் சில பின்னூட்டங்கள் கொஞ்சம் சமையலறையிலிருந்து வெளியில் வந்திருக்கும் பெண்ணை  திரும்ப சமையலறைக்கு எடுத்துச் செல்வதாக இருந்தன.  ‘ஆண் சமையலில் உதவலாம், தப்பில்லை, எப்போதெனில்  மனைவிக்கு உடல்நலம் சரியில்லா வேளைகளில் உதவலாம், மற்ற நேரங்களில் மனைவியே சமையலுக்கு பொறுப்பு, என்ற ரீதியில்! இது வெளியிலே ஜான்நாயகம்..ஆனால் உள்ளுக்குள்ளே  சர்வாதிகாரம். ‘கொஞ்சம் உதவுவோம்’ என்ற சொல்லுவதில் வெளிக்காட்டிக்கொள்ளப்படும் ‘பெருந்தன்மை’!!

அதுக்காக ஆண்கள் சமையல் வேலைகளில் உதவுவதே இல்லையா என்று சண்டைக்கு வராதீர்கள்.

‘இது என் ஹஸ்பெண்ட் செஞ்ச சாம்பார் சாதம்’னு நண்பர்களுடன் ஒன்றாக லஞ்ச் சாப்பிடும்போது சொல்கிறேனென்று வைத்துக்கொள்ளுங்கள். ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? அடிபபாவி என்றோ அல்லது கிண்டல் தொனியோதான் பதிலாக கிடைக்கும். ஏதோ செய்யக்கூடத மகாபாவத்தை நாம் செய்ய வைத்துவிட்டது போல. கொஞ்சம் நஞ்சம் வரும் ஆண்களையும் இப்படிக் கிண்டல் செய்து ஓட்டிவிட்டால்…..ம்ம்…சில சமயங்களில் ஆண்களின் ரெப்-ஆக  பெண்களே  இருக்கிறார்கள்.

இன்று இவ்வளவு பேசிக்கொண்டிருக்குபோது NDTV-யில் நடந்துக் கொண்டிருப்பது என்ன?  ராகுல் மகாஜன் மூன்று பெண்களில் எந்த பெண்ணை தேர்ந்தெடுப்பார் என்றுதானே?

-          சந்தனமுல்லை.

சந்தனமுல்லை – ”எம் சி ஏ பட்டதாரி. பள்ளி படிப்பை இந்து மேனிலைப் பள்ளி,ஆம்பூரிலும், கல்லூரி படிப்பை அன்னை தெரசா மகளிர் பல்கலை., கொடைக்கானலிலும் முடித்தேன். தற்போது,  ஒரு தனியார் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். மகள் மற்றும் கணவருடன் சென்னையில் வசித்து வருகிறேன். எனது சிறுவயது நினைவுகளை பதிவு செய்ய  தொடங்கிய வலைப்பூ, தற்போது  மகளுடனான தருணங்களையும், சமூகத்தில் என்னை பாதித்த  நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கிறேன். ”

சந்தனமுல்லையின் வலைப்பூ: http://sandanamullai.blogspot.com/

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

பேஸ்புக்கில் வினவு

வினவை டிவிட்டரில் தொடர்க

வினவை ஆதரியுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சமூகம் > பெண்

பெண் ஏன் இப்படியானாள்? – தமிழச்சி
இதோ வந்துவிட்டது. மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் [International Women's Day]

வருடத்திற்கு ஒருமுறை ஏதேதோ தினங்களும், விழாக்களும் வருகின்றன.   அதுபோலத்தானே இந்த மகளிர் தினமும் என்று பெண்களாலேயே நினைக்கப்படும் அளவிற்கு மேட்டுக்குடியினராலும், விளம்பர நிறுவனங்களாலும்,  அரசாங்கத்தாலும் நடத்தப்படும் ‘ஃபேஷன் ஷோ’ போல் ”பெண்களின் குரல்” [Women's veice] ஆக்கப்பட்டிருக்கிறது.

சாதாரண பெண்கள் ஒன்றுக்கூடி சாதனைப் பெண்களின் போராட்டங்களை ஒப்புவித்துவிட்டு பின்னர் அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களுக்கு பல் இளித்துவிட்டு மேடை அலங்காரிகளாக ஒவ்வொரு வருடமும் காட்சியளிக்கும் ‘ஷோ’க்களைக் கண்டு ஆற்றாமையே மிஞ்சுகிறது.

பெண்களுக்காக சர்வதேச அமைப்புகள் ஏற்படுத்தி அனைத்து நாட்டு பெண்ணியவாதிகளையும் ஒன்றிணைத்து பெண்ணுரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1857-இல் நியூயார்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி போராட்டங்களை முன்னெடுத்த அசாத்தியமும், அம்மாநாட்டில் பிரேரிக்கப்பட்ட புரட்சிகர தீர்மானங்களான சட்ட சீர்திருத்தங்கள் மூலம் சலுகைகள், திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை, தொழில், கல்வியில் அதிக வாய்ப்பு, வணிகத்துறையில் வாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்தும், வேலை வாய்ப்புகள், கருச்சிதைவு உரிமை, குழந்தைப் பராமரிப்பில் ஆணுக்குரிய சலுகை, விவாகரத்து உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டு பெண்கள் வென்றெடுத்த உரிமைகள்தான் இன்று பல நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.

சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியில் [14.06.1789] போராடிய பெண்கள், “ஆண்களுக்கு நிகராக பெண்களும் நடத்தப்பட வேண்டும்” என்றும், “வேலைக்கேற்ற ஊதியமும், எட்டு மணிநேர வேலையும், வாக்குரிமை பெண்களுக்கும் வேண்டும்” என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பிரான்ஸ் மன்னனுக்கு எதிராக போராடி வென்றெடுத்த வெற்றி ஐரோப்பிய பெண்களுக்கும் நம்மாலும் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தைக் கொடுத்து அவர்களும், போராடி வென்ற பெண்ணிய உரிமைகளும்….

இன்றைய நம் தமிழச்சிகளுக்கு இல்லாமல் போய்விட்டதே ஏன்?

இன்றைய காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட போராட்டங்களுக்கான சூழல்கள் எதுவும் இல்லை என்று சமாதானம் சொல்லாதீர்கள்.

சென்ற மாதம் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘அஜ்மல்கான்’ என்பவர் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்ததையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் பர்தா அணிவதும், முகத்தை மறைக்க ஹிஜாப் அணிவதும் மத சம்பிரதாயம் என்றும், பெண்களை அவர்களின் கணவன் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்க்கவேண்டும் என்பது அய்தீகம் என்றும், ஆனால் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியாமலும், ஹிஜாப் அணியாமலும் உள்ள ஒளிப்படங்கள் வாக்காளர் பட்டியலில் அச்சிடப்பட்டுள்ளது என்றும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சட்டப் பிரிவு 25-இன்படி மதப் பாதுகாப்புப் பிரிவுக்கு எதிரானது என்று வழக்கு.

வாக்காளர் உண்மையானவரா, போலியா என்று அறிந்து கொள்ளத்தான் புகைப்படங்கள். அதிலும் முகத்தையும், கண்களையும் மறைத்துள்ள படத்தை வெளியிட வேண்டும் என்றால் வாக்காளர் உண்மையானவரா என்று எப்படி அறிந்து கொள்வது?

இவ்வழக்கு தாக்கல் குறித்து தமிழ்நாட்டு மகளிர் சங்கங்கள் எந்த எதிர்வினையாவது செய்ததா? இல்லையே, ஏன்?

மதப் பிரச்சனைக்குள் நுழைய வேண்டுமா என்னும் யோசனை! இந்த சிந்தனை தடங்கள் பெண்ணியத்திற்கு ஆபத்தானது. உலகில் பெண்ணியத்திற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் மதங்களின் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்ததால்தான் பெண்கள் போராளிகளாக முடிந்தது. உரிமைகளை வென்றெடுக்கவும் முடிந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் [IDEOLOGY], வர்க்கம் [CLASS], உயிரியல் [BIOLOGY], சமூகவியல் [SOCIOLOGICAL], பொருளாதாரமும் கல்வியும் [ECONOMICS AND EDUCATION], சக்தி [FORCE], மானுடவியல் [ANTHOROPOLOGY], உளவியல் [PHYCHOLOGY] என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக ‘கேட் மில்லட்’ பெண்ணிலை குறித்து குறிப்பிட்டிருக்கிறார். அதனுடன் மார்க்சியப் பெண்ணியம், தேசியப் பெண்ணியம், மேலைப் பெண்ணியம், இஸ்லாமியப் பெண்ணியம், தலித் பெண்ணியம் என பன்முகத் தன்மையில் நம் சமுகத்தில் பெண்ணிய நோக்கு விரிகிறது.

தமிழ்நாட்டு பெண்ணியவாதிகள் இதுவரை எந்த கோணத்தில் பெண்ணியத்திற்காக போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்?

தமிழ்சூழலின் பெண்ணியம் குறித்து பேசுவதென்றால் ஓர் ஆஸ்திகவாதிகளால் நிச்சயம் முடியாது.

“இன்று பெண்ணுரிமையைப் பற்றி பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம்? இதைப் பற்றிப் பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா? நாம் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா? இது விஷயத்தில் நம்முடைய ஆராய்ச்சியோ, முடிவோ நமக்கு ஆதாரமா? அல்லது இது விஷயத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் முடிவே நமக்கு ஆதாரமா? என்பவனற்றை முதலில் நாம் யோசித்துப் பார்த்த பிறகே விஷயத்தைப் பற்றி பேசவேண்டும். ஏனென்றால் பெண்கள் விஷயத்தில் இன்று உலகில் உள்ள மதங்கள் எல்லாம் ஏற்கனவே ஒரு முடிவுகட்டி விட்டது. அம்முடிவுகள் வேதமுடிவு, கடவுள் வேதத்தின் மூலமாய்ச் சொன்ன முடிவு என்று சொல்லப்படுகிறது.

கிறிஸ்தவர்களுடைய வேதத்திலும், முகமதியர்களுடைய வேதத்திலும், இந்துக்கள் வேதத்திலும் பெண்களுக்குச் சம உரிமை இல்லை. சில உரிமைகள் இருந்தாலும் அவை வரையறுக்கப்பட்டு அதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது என்ற தீர்ப்பில் இருக்கிறோம். ஆகவே இப்போது நமது ஆராய்ச்சியின் பயனாய் ஒரு முடிவு வருவோமானால் அம்முடிவு நமது மத வேத கட்டளையை மீறி நாஸ்திகமாவதா? அல்லது ஆஸ்திகத்துக்கு பயந்து நமது முடிவுகளைக் கைவிட்டு விடுவதா? என்பதை முதல் தீர்மானித்துக் கொண்டு பிறகு இந்த வேலையில் இறங்க வேண்டும். இல்லாவிட்டால் நமது வேலைகள் எல்லாம் வீண் வேலையாகப் போய் விடாதா?” என்கிறார் பெரியார். [ஆதாரம்: பெரியார் களஞ்சியம். தொகுதி: 5, பக்கம்: 211]

எத்தனை பெண்கள் ‘நாத்திகம்’ பேசத் தயாராக இருக்கிறார்கள்?

இந்தியாவில் பெண்களில் 70 சதவீதம் குடும்ப வன்முறைக்கு [Domestic Violence] உள்ளாக்கப்படுகின்றனர் என்று 2005-இல் எடுக்கப்பட்ட கணக்கு குறிப்பிடுகிறது. அதில் பெரும்பான்மை மதச்சார்பான வரதட்சணை பிரச்சனையும் முக்கியமானது.

குடும்ப வன்முறையில் [Domestic Violence] இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் ஐரோப்பாவில் எப்பொழுதோ வந்துவிட்டது. இந்தியாவில் 2005-இல் தான் சட்டங்கள் உருவாக்கப்பட்டன என்றால் பெண்ணுரிமையில் எந்தளவு பின்தங்கிய நிலையில் இந்தியா இருந்திருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். இருந்தும் பெண்கள் இச்சட்டங்கள் துணையை நாடுவதும் மிகக் குறைவு.

“உற்பத்தி சக்தி உள்ளவர்கள் ஏற்படுத்தும் உறவே சமுதாய நிர்வாகம்” என்கிறார் கார்ல் மார்க்ஸ்.

பொருளாதார ரீதியாக கணவனைச் சார்ந்திருக்கும் பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு அனுசரித்தே செல்கிறார்கள். கார்ல் மார்க்ஸ் கூறியது போல உற்பத்தி சக்தி உள்ள ஆண் பொருளாதாரத்தை ஈட்டுகிறான். வீட்டில் இருக்கும் பெண்ணின் உற்பத்தி சக்தி என்பது குடும்ப பொறுப்புக்கள் என்னும் பேரால் எந்த பலனும் அவளுக்கின்றி வீணடிக்கப்படுகிறாள். அதில் சோர்வு தட்டிவிடக்கூடாது என்பதற்காக ‘பெண்ணின் சகிப்புத் தன்மை என்பது குடும்பத்திற்கு நல்லது என்ற போதனையே அவளுக்கு படிப்பித்திருக்கிறது’ சமூகம்.

துணிந்து கணவன் மீது போலிசில் புகார் செய்யும் பெண்களை மிக மோசமானவர்களாகவே இந்த சமூகம் அடையாளப்படுத்துகிறது.

இப்படி பல சமூக அழுத்தங்களுடன் பெண் என்ன செய்கிறாள்? தன் பிரச்சனையை எப்படி எதிர்நோக்குகிறாள்?

பொருளாதார விடுதலைதான் பெண் விடுதலையின் முதல் படி.

அப்படிப் பார்த்தால் முன்னெப்போதைக் காட்டிலும் பெண்கள் படிப்பதும், வேலைக்குப் போவதும் அதிகரித்திருக்கிறது.

காலை 7 மணிக்கெல்லாம் தூக்கம் கலையாத தந்தைமார்களின் தோளைப்பற்றியபடி வந்து இறங்கி, பொறியியல் கல்லூரிப் பேருந்துகளில் அவசரம் அவசரமாக ஏறி, அமர்ந்த மறுகணமே படிக்கத் தொடங்கும் மாணவிகள்; சிறுவர் உழைப்பு தடை செய்யப்பட்டுவிட்டதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக ஓட்டல்களில் மேசை துடைத்துக் கொண்டிருக்கும் பெண் சிப்பந்திகள்; தினம் 5, 6 வீடுகளில் வேலை செய்யத் தோதாக சைக்கிளில் விரையும் வீட்டு வேலை செய்யும் பெண்கள்; டிபார்ட்மென்டல் ஸ்டோர் காமெராக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தமக்குள் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் விற்பனைப் பெண்கள்; மாலை நேரத்தில் ஆயத்த ஆடை நிறுவனங்களிலிருந்து களைத்துக் கசங்கி வெளியேறும் இளம் பெண்கள்  – இவர்களெல்லாம் கடந்த பத்து ஆண்டுகளில் உழைப்புச் சந்தையில் புதிதாக நுழைந்திருப்பவர்கள்.

இந்தப் பொருளாதார சுதந்திரம் ஒரு பெண் என்ற முறையில் கூடுதல் சுதந்திரத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளதா? அல்லது பெண்ணடிமைத்தனம் புதிய வடிவங்களில் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை கவனித்தீர்களானால் பெண்களின் சுமைகள் இன்னும் அதிகரித்திருக்கிறதே தவீர ஒரளவுக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறது என்றாலும் அச்சுதந்திரத்தை பெண் எப்படி உபயோகப்படுத்துகிறாள் என்பதையும் கவனித்தாக வேண்டும்.

புராணக்காலந்தொட்டே பெண்ணை உடலால் மதிப்பிடும் ஆண் பார்வை மாறவில்லை. இன்று அது நவீனமாக்கப்பட்டிருக்கிறது பெண் இதை உணரவில்லை. அல்லது உணரவும் விரும்புவதில்லை. சமூகம் அங்கீகாரத்திற்காக சமூகத்தோடு அனுசரித்துச் செல்வதே பாதுகாப்பானதாக பெரும்பான்மையான பெண்கள் நினைக்கிறார்கள். இது அடிமைத்தனத்தின் வெளிப்பாடே.

மாற்றம் என்பது இயற்கையாய் எல்லாத் துறையிலும் நடந்து வந்தாலும் நமக்கு அவசியம் வேண்டியதான மாற்றங்கள் நமக்கு நலமாக்கிக் கொள்ளும் மாற்றங்கள் பற்றி சிந்திக்க வேண்டியதும், அப்படிப்பட்ட மாற்றத்தில் ஈடுபட வேண்டியதும் அறிவுடைமையாகும்.

படித்த பெண்களில் இருந்து சாதாரண பெண்கள் வரை அரசியல் சமூகம் குறித்த விவாதங்களை பேசவிரும்புவதில்லை. அரசியல் சமூக விமர்சனங்கள் என்பது ஆண்களுக்கு உரியதாக நினைக்கிறார்கள். தங்கள் கருத்துக்களை முன்வைக்கும் போதுகூட தமக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாகவே  இருக்கிறார்கள். புரட்சிகரமான சிந்தனைகளை குறித்து விவாதிப்பதென்றால் தாங்கள் கேவலமாக விமர்சிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சுகிறார்கள்.

வேறு சில பெண்கள் தங்கள் சுதந்திரம் என்பது எவை என்பதற்கு தங்களுக்கு ஏற்ப எல்லை வகுத்திருக்கிறார்கள். ஜீன்ஸ் போடுவதும் இரவு கேளிகை விடுதிக்கு செல்வதும் ஆணைப்போல் புகைப்பிடிப்பதும் சுதந்திர பாலியல் உறவும் பல ஆண்களை நண்பர்களாக வைத்திருப்பதும் இரவு நெடுநேரம் வெளியில் சுற்றிவிட்டு வருவதும் பெண்கள் விடுதலைக்கு போதுமானதாக நினைத்துவிடுகிறார்கள்.

பெரியார் சொல்கிறார்:

“பெண்களால் வீட்டிற்கு, சமூதாயத்திற்குப் பலன் என்ன? என்று பாருங்கள். எங்கு கெட்டபேர் வந்துவிடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைப்பது. அது எதற்கு?ஆணின் நலத்துக்குப் பயன்படுவதற்கும், ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஒரு உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? என்று சிந்தித்துப்பாருங்கள்.”

-என்று 1946-இல் பெண்கள் நிலை குறித்து கேள்வி எழுப்புகிறார். 64-வருடங்களுக்கு பிறகும் பெண்களிடம் இதே கேள்வியை கேட்கும் நிலையில்தான் பெண்கள் இருக்கிறார்கள். கல்வி அறிவு இருந்தும் முற்போக்கு சிந்தனைகள் இல்லாமல் தனித்து இயங்கும் தன்மையற்றும் இருக்கிறார்கள்.

பெண்கள் இதுவரையில எந்த வாய்ப்புகளையும் பெண்ணியத்தின் முன்னேற்றத்திற்காக சரியான முறையில் பயன்படுத்தியது கிடையாது.

பதிவுலகில் கூட சிலவிதிவிலக்குகள் தவிர பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு, சமையல், அல்லது ஆண்களை பிரச்சினையில்லாமல் ஆசீர்வதிக்க முயலும் கொஞ்சல்களுமாகவே பதிவுகள் செல்கின்றன. பேஸ் புக் டிவிட்டரில் கூட நான்கு வரி கொஞ்சல்களுக்கு நாற்பது ஐம்பது ஆண்களின் பின்னுட்டங்களும் பெண்களுக்கு திருப்தியைத் தருகிறது.

சமீபத்தில் பேஸ்புக்கில் அண்ணா யுனிவர்சிட்டியில் ஆசிரியராக பணிபுரியும் ஆங்கிலக் கவிதாயினி எழுதியிருந்தார்:

“நான் பச்சை குத்தியிருப்பதைக் கண்டு என் அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அதனால் இன்னும் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் காமுறும் இடங்களில்” என்று 3 வரி வார்த்தைகளுக்கு ஐம்பது பின்னுட்டங்கள் எப்படி வந்திருக்கும்?

சமூகக் கிளர்ச்சிகளில் ஈடுபாடில்லாத பெண்கள் வார்த்தைக் கிளர்ச்சிகளில் ஆணோடு கொள்ளும் தொடர்பால் எந்த மாற்றம் வந்துவிடக்கூடும்?

ஒரு பெண்பதிவர் காத்திரமான ஒரு நிலைப்பாட்டை சாதி, மதம், ஆணாதிக்கம் குறித்து எழுதினால் அதனை ஆண்கள்  விரும்புவதில்லை. பெண் பதிவர்கள் அப்படி எழுதுவதற்கு சுதந்திரமான வெளியாக பதிவுலகம் மாறவில்லை. சில விதிவிலக்குகள் தவிர பெயர், படம், முகவரி போன்றவற்றை மறைக்க வேண்டிய நிலையே பதிவுலகில் உள்ளது.

ஆணாதிக்கத்தை, தனிப்பட்ட முறையில் பேசித் திருத்த முடியாது. ஏனென்றால் அது தனிப்பட்ட விவகாரம் அல்ல. கணவன், அண்ணன், தந்தை என்ற தனி மனிதர்களின் மூலம்தான் அது வெளிப்படுகிறது என்ற போதும் அது ஒரு சமூக ஒடுக்குமுறை. எனவே பொதுவெளியில்தான் அதன் அழுக்கைத் துவைத்து அலச வேண்டும்.

இதுதான் இன்றைய தமிழ்சமூகத்தில் பெண்கள் நிலை. பெண்கள் ஒடுக்குமுறையில் இருந்து மீளவேண்டுமானால் சமூகக் களப்போரில் நுழையாவிட்டாலும் இணையத்திலாவது பெண்களில் சகல இடங்களிலும் ஒடுக்க முற்படும் போக்கை விமர்சிக்கவும் தங்கள் செயல்பாடுகளை ஆராயவும் தொடங்க வேண்டும்.

மகளிர் தினத்தில் மட்டும் பெண்ணுரிமை பேசி வாழ்த்து பரிமாறிக் கொள்வதால் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதுடன் முடித்துக் கொள்கிறேன்.

-          தமிழச்சி

தோழர் தமிழச்சி பிரான்சு நாட்டில் வசிக்கிறார்.      இணையத்தில் பெரியாரின் படைப்புக்களை அறிமுகம் செய்து வருவதோடு காத்திரமான      சமூகவிடயங்களையும் தொடர்ந்து எழுதிவருகிறார். மேலும் PERIYAR AWARENESS MOVEMENT – EUROPE  , பிரான்சு நாட்டில் பதிவு செய்யப்பட்ட ((பதிவு எண்: 0772014997)) பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின் அமைப்பாளராகவும் இருக்கிறார்.

அவரது இணைய முகவரி: http://tamizachi.com/

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

பேஸ்புக்கில் வினவு

வினவை டிவிட்டரில் தொடர்க

வினவை ஆதரியுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சமூகம் > பெண்

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம் – பங்கேற்க அழைக்கிறோம்!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளின் தொழில் வளர்ச்சி முற்றிலும் சமூகமயமாகியிருந்தன. முதலாளித்துவ சமூகம் பல நாடுகளில் வேர் விட்டிருந்தது. உற்பத்தி சமூகமயமாகியிருந்த காரணத்தால் பெண்கள் அதிகம் வேலைக்குப்போவது சாத்தியமாகியிருந்தது.

வீடு, குடும்பம், கணவன், குழந்தை என்ற குறுகிய கட்டமைப்பிலிருந்து பெண்கள் ஆண்களைப்போல பொது வெளிக்கும் நுழைந்திருந்தார்கள். வீட்டு வேலையோடு, தொழிற்சாலை வேலை அவர்களை கசக்கிப்பிழந்திருந்தாலும் சிந்தனையில் சமத்துவத்துக்கான வேட்கையும் முளைவிட ஆரம்பித்திருந்தன.

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பணிநேரத்தைக் குறைக்கக் கோரி பெண் தொழிலாளர்கள் போராட ஆரம்பித்திருந்தனர். 1908இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 15,000 பெண் தொழிலாளிகள் வேலைநேரத்தைக் குறைக்கக் கோரியும், ஊதிய உயர்வு மற்றும் வாக்குரிமை கேட்டும் ஊர்வலம் சென்றனர்.

அமெரிக்க சோசலிசக் கட்சியின் சார்பாக 1909 முதல் தேசிய அளவில் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. 1910இல் கோபன்ஹென் நகரில் சர்வதேச உழைக்கும் மகளிர் அமைப்புக்கள், பிரதிநிதிகள் சார்பாக நடந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில்தான் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிளாரா செட்கின் என்ற புகழ்பெற்ற தலைவர் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை முன்வைத்தார். பிரதிநிதிகள் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்.

இதன்படி 1910 இல் மார்ச் 19 இல் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நாளில் சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சமத்துவ, அரசியல், பொருளாதார உரிமைகளுக்காக அணிதிரண்டனர். இதே ஆண்டில் நியூயார்க் நகரின் ஜவுளித் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 140 பெண் தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் இத்தாலிய மற்றும் யூத இனத்தைச் சேர்ந்த அகதிகளே அதிகம். இந்த விபத்து பெண் தொழிலாளிகளின் அவல நிலையை உலகிற்கு தெரிவித்தது.

முதல் உலகப் போரில் ஈடுபட்ட ரசியாவில் ஜாருக்கும், போருக்கும் எதிராக போல்ஷ்விக்குகள் காட்டிய எதிர்ப்பு பெண்களிடமும் எழுந்தது. போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமைதியை வேண்டியும் ரசியப் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பிப்ரவரி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. ரசியாவில் ஜூலியன் காலண்டரில் வரும் இந்நாள் மற்ற நாடுகளில் கிரிகோரியன் காலண்டர் படி மார்ச் – 8 இல் அனுசரிக்கப்பட்டது.

இதன்பிறகு மார்ச் -8 என்பது சர்வதேச உழைக்கும் மகளிர் தினமாக வரலாற்றில் இடம்பெற்று கடைபிடிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கம்யூனிச நாடுகளிலும், மற்ற நாடுகளின் சோசலிசக் கட்சிகள் சார்பாகவும் இந்த தினம் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. தற்போது உலகமெங்கும் மகளீரின் பல்வேறு அமைப்புக்களால் மகளிர் தினம் பிரபலமாயிருக்கிறது.

அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் பெறவேண்டி போராடச் சொல்லும் மகளிர் தினம் இன்று காதலர் தினம் போல மகளிருக்கு ஏதோ ஒருபரிசு கொடுத்து வாழ்த்துக் கூறுவது என்று நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. மறுபுறம் இடதுசாரி மற்றும் சமூக அக்கறை கொண்ட பெண்கள் அமைப்புக்கள் இந்த தினத்தின் வரலாற்றுச் செய்தியை ஏந்தி போராடவும் செய்கின்றன.

பெண் அடிமைத்தனத்துக்கு எதிரான பல பதிவுகள் வினவு தளத்தில் இடம்பெற்றிருக்கின்றன. பெண் பதிவர்கள், வாசகர்கள் படித்திருக்கக் கூடும்.

பொருளாதார விடுதலைதான் பெண் விடுதலையின் முதல் படி. அப்படிப் பார்த்தால் முன்னெப்போதைக் காட்டிலும் பெண்கள் படிப்பதும், வேலைக்குப் போவதும் அதிகரித்திருக்கிறது. காலை 7 மணிக்கெல்லாம் தூக்கம் கலையாத தந்தைமார்களின் தோளைப்பற்றியபடி வந்து இறங்கி, பொறியியல் கல்லூரிப் பேருந்துகளில் அவசரம் அவசரமாக ஏறி, அமர்ந்த மறுகணமே படிக்கத் தொடங்கும் மாணவிகள்; சிறுவர் உழைப்பு தடை செய்யப்பட்டுவிட்டதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக ஓட்டல்களில் மேசை துடைத்துக் கொண்டிருக்கும் பெண் சிப்பந்திகள்; தினம் 5,6 வீடுகளில் வேலை செய்யத் தோதாக சைக்கிளில் விரையும் வீட்டு வேலை செய்யும் பெண்கள்; டிபார்ட்மென்டல் ஸ்டோர் காமெராக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தமக்குள் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் விற்பனைப் பெண்கள்; மாலை நேரத்தில் ஆயத்த ஆடை நிறுவனங்களிலிருந்து களைத்துக் கசங்கி வெளியேறும் இளம் பெண்கள்  – இவர்களெல்லாம் கடந்த பத்து ஆண்டுகளில் உழைப்புச் சந்தையில் புதிதாக நுழைந்திருப்பவர்கள்.

இந்தப் பொருளாதார சுதந்திரம் ஒரு பெண் என்ற முறையில் கூடுதல் சுதந்திரத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளதா? அல்லது பெண்ணடிமைத்தனம் புதிய வடிவங்களில் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறதா? இந்த அடிமைத்தனத்தை பெண்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? அல்லது எத்தகைய அடிமைத்தனங்களை விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்? ஏன்?

பத்தாண்டுகளுக்கு முன்னர் கூட ஜீன்ஸ் போட்ட பெண்ணையும், தனியாக இருசக்கர வாகனத்தை ஓட்டும் பெண்ணையும் சமூகம் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த நிலை இருந்தது. இன்று இல்லை. கடைகளில் தொங்கும் அரை அம்மணப்படங்களைப் பார்ப்பதிலும் இப்போது அதிர்ச்சி இல்லை. பெண் என்பவளை ஒரு பிள்ளை பெறும் எந்திரமாகக் கருதி நடத்திய காலம் மாறியிருக்கிறது என்றாலும், பெண்ணை உடலால் மதிப்பிடும் ஆண் பார்வை மாறவில்லை. அதனை அங்கீகரித்து மகிழும் பெண்ணின் சிந்தனையும் மாறிவிடவில்லை. குடும்பம் என்ற பாசச்சிறையில் ஆயுட்கைதியாகப் பெண்ணும், வார்டனாக ஆணும் இருக்கும் நிலையையும் பொருளாதார சுதந்திரம் மாற்றிவிடவில்லை.

பதிவுலகில் கூட பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு, சமையல், இன்னபிற ஆபத்தில்லாத விசயங்களாக இருக்கின்றன. ஆண்களின் பாராட்டையும் பெறுகின்றன. ஒரு பெண்பதிவர் காத்திரமான ஒரு நிலைப்பாட்டை சாதி,மதம்,ஆணாதிக்கம் குறித்து எழுதினால் அதனை ஆண்கள்  விரும்புவதில்லை. பெண் பதிவர்கள் அப்படி எழுதுவதற்கு சுதந்திரமான வெளியாக பதிவுலகம் மாறவில்லை. சில விதிவிலக்குகள் தவிர பெயர், படம், முகவரி போன்றவற்றை மறைக்க வேண்டிய நிலையே பதிவுலகில் உள்ளது.

பெண் வயிற்றில் பிறந்து பெண்ணால் வளர்க்கப்பட்டு, பெண்ணோடு வாழ்பவர்கள்தான் எனினும், பெண்ணின் துயரங்களையும், விருப்பங்களையும், உணர்வுகளையும் ஆண்கள் தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்ள விரும்புவதுமில்லை. இனிய இல்வாழ்க்கை என்று கருதப்படும் மண உறவில் பிணைக்கப்பட்டிருக்கும் பெண்களின் நிலையும்கூட இதுதான்.

பொதுமேடையில் ஊரறியப் பேசமுடியாத பல விசயங்களை தனிப்பட்ட உரையாடல்களில் மனம் விட்டுப் பேசிக்கொள்ள முடியும். கணவன் மனைவி முரண்பாடுகள் வரும்போது தனியே மனம் விட்டுப் பேசி தீர்த்துக் கொள்ளுமாறுதான் பலரும் ஆலோசனை கூறுகின்றனர். ஆனால் ஆணாதிக்கத்தை, தனிப்பட்ட முறையில் பேசித் திருத்த முடியாது. ஏனென்றால் அது தனிப்பட்ட விவகாரம் அல்ல. கணவன், அண்ணன், தந்தை என்ற தனி மனிதர்களின் மூலம்தான் அது வெளிப்படுகிறது என்ற போதும் அது ஒரு சமூக ஒடுக்குமுறை. எனவே பொதுவெளியில்தான் அதன் அழுக்கைத் துவைத்து அலச வேண்டும்.

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி, உங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் எழுதுமாறு பெண் பதிவர்களையும் வாசகர்களையும் கோருகிறோம். மார்ச் மாதம் முழுவதும் அதனை வெளியிட எண்ணியிருக்கிறோம். உழைக்கும் பெண்களின் அனுபவப் பதிவுகளும் அவற்றை ஒட்டி எழும் விவாதங்களும் பதிவுலகில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விழைகிறோம். ஆதரவு தாருங்கள்!

நன்றி.

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

பேஸ்புக்கில் வினவு

வினவை டிவிட்டரில் தொடர்க

வினவை ஆதரியுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சமூகம் – பெண் – பதிவுகள்

குமுதம் ‘மாமா’வுக்கு ம.க.இ.க கண்டனம்! ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்!!
நித்தியானந்தனை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்ததில் குமுதத்திற்கு மிக முக்கியமான பங்குண்டு. பல ஆண்டுகளாக இந்த பொறுக்கியின் ஆன்மீக பீலாக்களை விதவிதமான போஸ்களில் அச்சடித்து நடுத்தர வர்க்கத்திடம் கொண்டு சென்ற குமுதம் பத்திரிகை இன்று என்ன சொல்கிறது?

தனது குற்றம் குறித்து கடுகளவும் கவலைப்படாத குமுதம் கூரூப் பத்திரிகைகள் இன்று கூட்டத்தோடு கூட்டமாக நித்தியானந்தனைக் கும்முகின்றன. இந்த அயோக்கியத்தனத்தையும், நித்தியானந்தன் என்ற அயோக்கியனை அறிமுகம் செய்து வளர்த்ததைக் கண்டித்தும் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பெண்கள் விடுதலைமுன்னணியின் சென்னைக் கிளைத் தோழர்கள் குமுதம் அலுவலகம் முன்பு 6.2.2010 சனிக்கிழமையன்று காலையில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதியிலிருந்து அபிராமி திரையங்கு அருகிலிருக்கும் குமுதம் அலுவலகத்தை நோக்கி முழக்க அட்டைகளுடன் ஊர்வலாமய் விண்ணதிர முழக்கங்களுடன் வந்தார்கள். இந்த தீடீர் ஆர்ப்பாட்டத்தை எதிர்பார்த்து போலீசார் தயாராக குமுதம் அலுவலக வாசலில் குழுமியிருந்தனர்.

போலீசின் தடையையும் மீறி சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மக்கள் நித்தியானந்தனையும், அதற்கு ஒத்தூதிய குமுதத்தையும் கண்டிப்பதை ஆதரித்தனர். சாலைப் போக்குவரத்து ஒரு மணிநேரத்திற்கு முடங்கினாலும் மக்கள் அதை இடைஞ்சலாகப் பார்க்காமல் விசயத்தை கேட்டறிந்து உவகை கொண்டனர்.

இறுதியில் போலீசின் தள்ளுமுள்ளுவிற்குப்பிறகு ஏ.சி, டி.சி அதிகாரிகளோடு காரசாரமான விவாதத்திற்குப் பிறகு தோழர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். நித்தியானந்தாவை உருவாக்கியும் இப்போது அம்பலப்பட்ட பிறகு கிசுகிசு மூலமும் காசுபார்க்க்கும் இந்த ஊடக விபச்சாரிகளை மக்களிடம் அடையாளம் காட்டிய இந்த நிகழ்வில் எழுப்பட்ட முழக்கங்கள்:

மன்னிப்புக் கேள்! மன்னிப்புக் கேள்!

நித்யானந்தனை வளர்த்துவிட்ட

குமுதமே மன்னிப்புக்கேள்!

தடைசெய்! தடைசெய்!

தமிழக அரசே தடைசெய்!

சாமியார்களின் பிரச்சாரத்தை

தடைசெய்! தடைசெய்!

கைதுசெய்! கைதுசெய்!

நித்யானந்தனைக் கைதுசெய்!

பறிமுதல்செய்! பறிமுதல்செய்!

அவன் சொத்துக்களை பறிமுதல்செய்!

விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!

சாய்பாபா, பிரேமானந்தா,

சங்கராச்சாரி, தேவநாதன்,

கல்கி, நித்தியானந்தா

கழிசடைகளை விரட்டியடிப்போம்!

அடித்து விரட்டுவோம்! அடித்து விரட்டுவோம்!

காவியுடைக்க கிரிமினல்களை

நாட்டைவிட்டே அடித்து விரட்டுவோம்!

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

பேஸ்புக்கில் வினவு

வினவை டிவிட்டரில் தொடர்க

வினவை ஆதரியுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !

ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!

சாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்!

ஆன்மீகச் சந்தை ஒரு முன்னுரை – டாக்டர்.ருத்ரன் !

சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !

முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்!

தமிழகம் முழுவதும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்களால் கொண்டு செல்லப்பட்ட சுவரோட்டிகளைக் கீழே பார்க்கலாம்.

ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!
( ஜெயேந்திரர் அறைக்குள் நித்யானந்தா திடீரென  ஓடி வர, சன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஜெயேந்திரர் வெடுக்கென நிறுத்திவிட்டு ஐயோ நானில்ல நானில்ல சின்னவன்தான் அவள என்னமோ பண்ணான் என்று பதறுகிறார். “அய்யோ நான்தான் ஸ்வாமி, நித்யானந்தா… காப்பாத்துங்க” என்று கத்துவதைப் பார்த்தபிறகு தெம்பாக நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜெயேந்திரர்.)

ஜெயேந்திரன்: வாடா, வா, நான் வேற எந்தப் பக்கத்துலேந்து அருவா வருமோன்னு பயந்துண்டு இருக்கேன். நீ என்னடான்னா இப்படி ஓடி வர்ற! அது சரி டி.வி, பத்திரிக்கைலாம் நார்ற மாதிரி என்னடா இப்படி பண்ணிட்டே! அபிஷ்டு.

நித்யானந்தா: பெரியவா மன்னிக்கணும், அன்னிக்கு தீர்த்தம் கொஞ்சம் ஓவரா போயிடுச்சு, ஏதோ புத்தி கெட்டுட்டேன் பெருசு பண்ணாதிங்க, காப்பாத்தி வுடுங்க!

ஜெயேந்திரன்: தத்தி, இப்படியா பண்ணுவா! கதவத்திற காத்துவரட்டும்னு ஏதோ புத்திசாலித்தனமா கிறுக்கிண்டு கெடக்குறியேன்னு பாத்தேன், கடைசில கதவத் திறந்தா ரஞ்சிதால்ல வந்துட்டா ஹீ..ஹீ.. என் சமத்தல்லாம் பாத்தும் இப்படியா பப்ளிக் பாக்குற மாதிரி பண்றது! கிரகச்சாரம்! சரி சரி வுடு! ஆனானப்பட்ட விஸ்வாமித்திரனே அப்சரஸ்களை பாத்து அப்செட் ஆகுறப்ப,நீ ரஞ்சிதாவைப் பாத்தோன்னேயே இன்ஜின் ஜாம்  ஆயிட்டே!

நித்யானந்தா: என்ன சாமி லோக்கலா பேசுறீங்க?

ஜெயேந்திரன்: பின்னே ஜகத்குருன்னா சான்ஸ்கிரீட்ல குழஞ்சு கான்கிரீட்ல புரளுவேன்னு பாத்தியா! பர்னசாலை குடிசைல ரிஷிபத்தினிகளோடும் விளையாண்டவா நாம், பைவ் ஸ்டார் ஓட்டல்ல பிஷி செட்யூல் நடிகையோடும் புரண்டவா நாம்! இதெல்லாம் ஒரு மேட்டரா போடா அசடு!

நித்யானந்தா: நல்லவேளை நான் கூட நடந்ததுக்கு வருத்தமோன்னு நெனச்சேன், இனிமே ஜாக்கிரதையா இருக்குறேன் ஸ்வாமி.

ஜெயேந்திரன்: என்ன ஜாக்கிரதையோ! என்ன யோக்யதையோ! என்னயே எடுத்தக்கோ! எவிடன்ஸ் இல்லாம காமா சோமான்னு பண்ணேனேனோ, என்னல்லாம் பாத்து என்னத்தக் கத்துண்டியோ மண்டு… மண்டு! என்ன தப்பு வேணாலும் பண்ணின்டு மூஞ்சை நமோ நாராயணான்னு வச்சிக்கத் தெரியாம என்ன சாமியார்டா நீ! என்னக் கூடத்தான் பேப்பர்ல எழுதுனா, டி.வி.ல காட்டுனா. அனுராதா ரமணன் சொன்னா, அவா சொன்னா, இவா சொன்னான்னு வந்துச்சே ஒழிய எவிடன்ஸ் கிளிப்பிங்ஸ் எதனாச்சும் வந்துச்சா? காரியத்துல நீட்னஸ் வேணும், சம்போகம் பண்றவாள்ளாம் சங்கராச்சாரி ஆக முடியாது! அதுக்கெல்லாம் ஷ்பெஷல் பொஷிஷன் வேணுண்டா அம்பி!

நித்யானந்தா: உண்மைதான் ஸ்வாமி, உங்கள கன்சல்ட் பண்ணாம கோடம்பாக்கத்து பக்கம் தல வச்சது தப்புதான்! இந்த விசயத்துல நீங்கதான் காப்பாத்தணும், உங்களதான் தெய்வமா நம்பி வந்துருக்கேன்.. பயமா இருக்கு!

ஜெயேந்திரன்: இதுக்கெல்லாம் பயப்படறதிலிருந்தே தெரியறது நீ ஒரு அப்ரன்டீசுன்னு, தோ பக்கத்துல இருக்குற சின்னவன் பண்ணாததையோ நீ பண்ணிட்ட! பல பொம்மனாட்டி வாழ்க்கையை பாழடிச்சிட்டு எதுவுமே நடக்காதது மாதிரி தேமேன்னு உட்கார்ந்திருக்கான் பாரு! இல்ல என்னப் போல வர்ற பொம்மணாட்டியை எல்லாம் கையை புடிச்சு இழுத்தியா! இதுக்கெல்லாம் பயந்தா காஷாயம் கட்ட முடியாதுடா அம்பி! என்ன நம்பி வந்துட்டீல கவலையை விடு.. ஏன் கெடந்து பயப்படற? வேண்ணா தோ வீடியோ பாத்துக்கோ, ரிலாக்ஸ் பண்ணிக்கோ.. தாகசாந்திக்கு பாரின் தூத்தம் இருக்கு, எடுத்துக்கோ வேற ஏதாவது ‘புஷ்பம்’ வேணும்னா கேளு நம்ப தேவநாதன் இப்ப வெளிலதான் இருக்கான், ப்ரீயா சப்ளை பண்றேன் வச்சுக்கோ… எக்காரணம் கொண்டும் தப்பு பண்ணறதுக்கு மட்டும் நம்பள மாதிரி சாமியார்லாம் பயப்படக் கூடாது! புரியர்தா? .. ரிலாக்ஸ்டா அம்பி.. ரிலாக்ஸ்.

நித்யானந்தா: நீங்க என்னமோ சாதாரணமா சொல்லிட்டீங்க, நக்கீரன்ல படமா போடுறான், சன் நியூஸ்ல பிட்டு படமாவே காட்டுறான்.. திரும்ப தொழில் பண்ண முடியுமோன்னு பயமா இருக்கு ஸ்வாமி!

ஜெயேந்திரன்: என்னமோ நக்கீரன்ல போட்டானாம், சன்னுல காட்டுனானாம்! படம் போட்டு காசு பார்க்க புவனேஸ்வரி, பிலிம் காட்டி கல்லா கட்ட ரஞ்சிதான்னு போவியா! கிடந்து பேத்துற.. என்னக் காட்டாத படமா.. இந்த மானம், வெட்கம், சூடு, சுரணையல்லாம் லோகத்துல இந்த மனுஷாளுக்குத்தான். நம்பள மாதிரி ஆளுக்கெல்லாம் “சுக்கில புத்தி சுகமோ பவ”டா! மொதல்ல அசமஞ்மாட்டம் உளறி கொட்றத நிறுத்து! என்னப்பாரு ஸ்டேசன்ல வச்சு கேட்டப்ப கூட வாயத் திறந்தேனோ! ஹீ…ஹீ..ன்னு சிரிச்சிண்டே மழுப்பினேன். சட்டம், இ.பி.கோல்லாம் சாதாரண லாட்ஜ் போட்டு பண்றவாளுக்குத்தான், நம்பள மாதிரி மடத்த போட்டு பண்றவாளுக்கு சட்டம் மல ஜலத்துக்கு சமன்டா! வெளிக்கி போக வாழை இலையே நறுக்கிக் கொடுத்தாண்டா போலீசு.. போவியா..!

நித்தியானந்தா: இல்ல ஸ்வாமி தொடர்ந்து நக்கீரன்ல…

ஜெயேந்திரன்: போட அசடு! சும்மா நக்கீரன், நக்கீரன்ட்டு, அவனும் நம்பள வச்சி நாலு காசு பாக்க வேணாமா! யார் அவுத்துப்போட்டாலும் அவனுக்கு காசு! என்ன வச்சிக் கூடத்தான் ஒரு ரெண்டு மாசம் சம்பாதிச்சான். கொறஞ்சா போயிட்டேன். இவ்ளோ எழுதுறானே, என்னைக்காவது அவன் நம்பள தூக்குல போடு, மடத்தை புடுங்குன்னு சொல்லிருக்கானா, படத்தை பிரண்ட்ல போடுன்னுதானே சொல்றான்.. என்ன இருந்தாலும் அவன் நம்ப ஆளுடா.. (கண்ணடித்து சைகை காட்டுகிறார்!)

நித்தியானந்தா: எவ்ளோ பத்திரிக்கைக்கு நாம விளம்பரம் கொடுத்திருப்போம், நம்ம எழுதுறத வச்சு சம்பாதிச்சிருப்பான் பிரச்சனைன்னு வந்தோன்ன யோக்கியனா நடிக்கிறாங்களே! என்ன உலகம் ஸ்வாமி இது!

ஜெயேந்திரன்: அட போடா, சதா இதையே பேத்திண்டு! குமுதம் நீ எழுதுற போஸ் போட்டு குந்தவச்சு  சம்பாதிச்சன், நக்கீரனும் சன்னும் உன்ன படுக்க வச்சு சம்பாதிக்கறன்னு போவியா! என் கவலைல்லாம் கஷ்டப்பட்டு காரியம் பண்ணி கேஸ் ஆடறவா நாம, கடையப் போட்டு சி.டி. விக்கிறவா அவாளா! இந்த டிஸ்ட்டிரிப்பியூட் ரைட்ஸையாவது நமக்கு தர்றதில்லையோ, ஏமாத்திடறாளே! இந்து தர்மத்தோட ரைட்ஸை யாருக்கும் விட்டுத்தர முடியாதுன்னு நம்ப ராமகோபாலனை வச்சி என்ன பண்றேன் பாரு நீ!

நித்தியானந்தா: நம்ம சாரு கூட…

ஜெயேந்திரன்: யாருடா அவ? பாக்க நன்னா இருப்பாளா? வட நாட்டவளா?

நித்தியானந்தா: இல்ல சாமி சாரு நிவேதிதா, எழுத்தாளர், நம்ம மடத்தோட தீவிர விசுவாசி, அவர் புண்ணியத்துல தான் நம்ம குமுதம் மேட்டர்லேருந்து மிட்நைட் குவாட்டர் வரைக்கும் தடையில்லாம் போயிகிட்டிருந்தது… இப்ப அவர் பப்ளிக்கா என்ன திட்டி எழுதறார், ஆஸ்ரமத்துக்கு இதனால இமேஜ் போயிடுமோன்னு பயமா இருக்கு

ஜெயேந்திரன்: அடப்போடா இப்படி உலகம் தெரியாதவனா இருக்கியே? இவால்லாம் நம்மால பொழைக்கறவாடா… நாளைக்கே கரன்சி கடாட்சத்துக்காக மறுபடியும் பாராட்டி எழுதப்போறா.. இப்ப என்ன திட்டி எழுதாதவாளா?  அதனால என்ன காஞ்சி மடம் என்ன கொலாப்ஸா ஆயிடுத்து.. இந்த மாதிரி பப்ளிசிடில்லாம் நமக்கு அசெட்றா அம்பி.  இப்படியெல்லாம் நேஷ்னல் லெவல்ல நாலு பெரிய மனுஷா பார்வைக்கு போனாதானேடா நம்ம பொழைப்பும் ஓடும், ஏறுனது சன்னோட டீ.ஆர்.பி மட்டுமில்ல, ஞாபகம் வச்சுக்கோ.

நித்யானந்தா: இதெல்லாம் ஒரு பக்கம்னா, இந்து மக்கள் கட்சின்னு இன்னொரு குரூப் வேற கௌம்பிட்டான் ஸ்வாமி! என்னால இந்து மதத்துக்கே தீராத அவமானம்னு படத்தை போட்டு எரிக்கிறான், மடத்தப்போட்டு உடைக்கிறான்! பேசி ஆஃப் பண்ண ஏதாவது ரூட் இருந்தா சொல்லுங்களேன்.

ஜெயேந்திரன்: (ஹி..ஹி..ஹி.. பலமாக சிரித்துவிட்டு பக்கத்தில் முந்திரிப்பருப்பை அமுக்கும் சின்னவனைப் பார்த்து)ஏய்.. கேட்டியோ…என்னாலயும், உன்னாலயும் அவமானப்படுத்த முடியாத ஹிந்து மதத்தை இவன் பண்ணிட்டானாம்.. ரொம்ப ஆசைதான் இவனுக்கு…

நித்தியானந்தா: ஸ்வாமி என் நிலைமை புரியாம சிரிக்கிறீங்க!

ஜெயேந்திரன்: போடா தத்தி! கட்சின்னா நாலு கல்லு உடத்தான் செய்வான்! அப்பப்போ காசை விட்டெறிஞ்சின்னா, அவா ஏண்டா கல்ல விட்டெறியறா! நோக்கு சரியா டீல் பண்ணத் தெரியல, காட்டுறத காட்டுனா படியுறான். இப்ப ஊரே நாறுச்சு என்ன ஏதும் பண்ணாளோ!

நித்யானந்தா: எங்கிட்ட காட்டறதுக்கு பூணூல் இல்லியா ஸ்வாமி!

ஜெயேந்திரன்: இப்ப தெரியறதா, தல இருக்கறச்சே வால் ஆடப்படாது!  (சின்னவன் உள்ளே சென்றதை உறுதி செய்து பார்த்தபடி) பேசாம சின்னவன் இல்லாத நேரமா ரஞ்சிதாவை இங்க தள்ளிட்டு வர்றதை வுட்டுட்டு, தானே ராஜா, தானே மந்திரின்னா இப்படித்தான். என்ன, பத்து பொம்பளயக் கெடுத்துருப்பியா… அதுக்குள்ள பரமஹம்சர்ன்னு பட்டம் வச்சிட்டா எப்படி? பட்டம் வச்சவன்லாம் பெரியவாளா ஆக முடியாது! படுக்கை விரிச்சவன்லாம் ஜெயேந்திரன் ஆக முடியாது! மண்டு, மண்டு!

நித்யானந்தா: தப்புதான் ஸ்வாமி! நீங்க வேற வதக்காதீங்க, பேரு கெட்டதைக் கூட வேற ரூட்ல சரி கட்டலாம்.. இந்து மதத்தையே கெடுத்துட்டேன்னு கோர்ட்டு, கேசுன்னு போயி பேலன்ஸ் போயிடுமோன்னு பயமா இருக்கு! தவிர போலிச்சாமியார்னு பேரு வந்துருச்சே! தொழில்ல கேரண்டியும், செக்யூரிட்டியும் இல்லாம வெளிநாட்டுக்காரங்க எப்படி முதல் போடுவாங்க இனிமே.. அத நெனச்சாதான் உத்திராட்சை உறுத்துது.

ஜெயேந்திரன்: ஏண்டா கெடந்து புலம்புற.. நிலம சீராகுற வரைக்கும் ரூட்ட காஞ்சிபுரத்துக்கு மாத்தி வுடு, அந்த ஒரு லோடு சந்தனக் கட்டய நம்ம மடத்துக்கு எக்ஸ்போர்ட் பண்ணு! கஞ்சா பொட்டலத்த விபூதிப் பொட்டல ஸ்டைல்ல நம்மகிட்ட எக்ஸ்சேஞ்ச் பண்ணு! இங்கே எவன் வர்றான் பாக்குறன்..

அத வுட்டுட்டு இந்து மதம் போலிச்சாமியார்னு இல்லாதது, பொல்லாதத நெனச்சு ஏன் புலம்புற.. மொதல்ல வாய மூடுறா அபிஷ்டு! எதுடா போலி? கேட்டுக்கோ பொம்மணாட்டியோட சரசமாடுறது, பரமாத்மா, ஜீவாத்மா ஒன்னு சேர தேகாத்மாக்கள சாந்தி பண்றது, லட்சம் மர்டர், பத்தாயிரம் ரேப், ஆயிரம் கனவு சீன், ஜாதிக்கேத்த நீதி இதாண்டா ஒரிஜினல் ஹிந்து மதம்! நான் சொல்றேண்டா.. ஹிந்து மதத்துக்கு என்ன விட அத்தாரிட்டி யார்ரா? அவா சொல்றா.. இவா சொல்றானுட்டு கிடந்து பேத்துற.. ஆதி சங்கரர் சௌந்தர்ய லகரி படிச்சிருக்க்கியோ… அந்த அம்பாளையே அவர் த்ரீ டைமன்ஷன்ல பாத்தார்! அவர் வர்ணிச்சுக் காட்டுனார், நாம வாழ்ந்து காட்டுறோம். இந்திரன் அகலிகையோட ஆம்படையான் வேஷத்துலேயே போய் அவளைக் கெடுத்தான் அதனால என்ன அவன் இமேஜ் கொறஞ்சா போனான்.

நம்ம ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பண்ணாத ஆலிங்கனமா.. உருவாத புடவையா? ஏன் அரியும், அரணும் சேர்ந்து அரிகரசுதன் அய்யப்பன்னு ஒரு புரொடக்ட்டே இருக்கு.. எக்ஸ்ட்ரீம்லி ஹிந்துமதமே ஒரு செக்ஸ்ட்ரீம்லிடா! நம்ப படைப்புக் கடவுள் ப்ரம்மா… ரெடிமேடா சரஸ்வதியை படைச்சு அவளை தானே பெண்டாண்டுட்டன்! இன்னும் எவ்ளவோ இருக்கு!… இதாண்டா ஒரிஜினல் ஹிந்துமதம்… ஹிந்து மதத்தின் இந்தத் தர்மங்களை கட்டிப்புடிச்சு காப்பாத்தறவன்தான் ஒரிஜினல் ஹிந்து சாமியார்! இத வுட்டுட்டு ஒழுக்கமா இருக்கணும், நேர்மையா இருக்கணும்னு, எவனாவது சொன்னா அவன்தாண்டா டூப்பு! அவன்தாண்டா போலிச்சாமியார்! புரியறதா…

தசரதனுக்கு பொம்மனாட்டி அறுபதினாயிரம், மகாபாரதத்துல அஞ்சு பேருக்கு ஒருத்தி.. போறுமா? இன்னும் வண்ட வண்டையா சொல்லலாம், தொண்டை காயறது, டேய் ஜலம் கொண்டாடா! அசமஞ்சம் இப்பவாவது புரியறதா.. இதான் ஹிந்துமதம், இதான் ஹிந்து தர்மம்… இத ஒழுங்கா கடைபிடிக்கிறவாதான் ஒரிஜினல் சாமியார்.. இதாண்டா மேட்டரே! சும்மா கேனத்தனமா உளறாம ஆக வேண்டியதப் பாரு!

நித்தியானந்தா: நல்லவேளை ஸ்வாமி நான் கூட பாதை மாறி போயிட்டோமோன்னு நெனச்சுகிட்டிருந்தேன். உங்களப் பாத்து சம்பாஷணை செஞ்சோன்னதான் மனசே தெளிவாச்சு.. என்ன இருந்தாலும்..

ஜெயேந்திரன்: இன்னும் ஏண்டா இழுக்குற… ஏன் பயந்து சாகுற.. நீ என்ன என்னை மாதிரி என்ன, அப்ளே டூ மர்டரா? இல்ல அட்டம்ப்ட் டூ ரேப்பா? எதுவுமில்ல.. அவளும் ஒரு கேசு.. நீயும் ஒரு கேசு… அவளா வந்தா…. நீயா போன.. சட்டப்படி யார் என்னடா பண்ண முடியும்? அதிகபட்சம் ரோட்ல கத்றவாளுக்காக ஒரு 420 போடுவா… கோர்ட்டுல கத்றவாளுக்காக பிராத்தல் கேஸ் ஐபிசி 371,372 போடுவா.. மத்தபடி நம்பள யாராவது அடிக்க வந்தா அவாள தூக்கி உள்ள போடுவா.. நீ வேண்ணா கோர்ட்டுக்கு போயிப்பாரு, நம்மள பாத்து ஜட்ஜே அவா கன்னத்துல போடுவா.. போடா டேய்! போடா!நாம் பாக்காத கேஸா… சங்கரா! சங்கரா!

நித்யானந்தா: ஸ்வாமி செக்சன்லாம் அத்துப்படியா பேசறத பாத்தா.. விட்டா நீங்களே வெளுத்து வாங்கிடுவீங்க போல இருக்கே…

ஜெயேந்திரன்: பீனல் கோடெல்லாம்… இந்த பூணுல் கோடுக்கு அடக்கம்டா அம்பி.. இந்த மாதிரி சப்ப மேட்டருக்கெல்லாம் நான் எதுக்குடா? பிராத்தல் கேசுக்குன்னே பேமஸ் நம்ப சுப்பிரமணிய சாமி.. அவனிருக்கான் பயப்படாதே! சிதம்பரம் கோயில்ல சரக்கடிச்சிட்டு சாமிக்கே பேக்போஸ் கொடுத்துண்டு குஜால் பண்ற தீட்சிதாளுக்கெல்லாம் அவன்தான் கேசாடறான்.. கேஸ் ரொம்ப சிக்கலாச்சுன்னா, நம்ம துக்ளக் சோ இருக்கானோல்யோ, அண்டர்கிரவுண்ட் டெண்டரெல்லாம் அவன் பார்ப்பான்.. நீ பயப்படவே தேவையில்ல.. கருணாநிதி காலையே சுத்திண்டு நம்ம எஸ்.வி.சேகர். இருக்கன். அவன விட்டு காத கடிச்சா போதும்.. ஒரு அறிக்கைக்கு மேல தாண்டிடாம பாத்துக்கலாம்.. பேசாம நா சிக்னல் கொடுக்கற வரைக்கும் அடக்கிண்டிரு.. அதுக்குள்ள வேற எவனாவது மாட்டுவன் உன் கேஸை மறந்துடுவா..

பொய்யில்லடா.. என்ன எடுத்துக்கோ கத கந்தலாகியும் இன்னும் பந்தல் போட்டு ஆசிர்வாதம் பண்ண கூப்புடுறா, பாதாறவிந்த்த்த சேவிக்கிறா… இதுல ஜோக் என்னான்னா, பசங்களுக்கு ஒழுக்கம், காண்டக்ட் சர்ட்டிபிகேட் கொடுக்க என்ன கூப்புடுறா.. ஒண்ணு தெளிவா புரிஞ்சுக்கோ.. நாம எவ்வளவு பேரு குடியக் கெடுத்தாலும் பயப்படறதுக்கு இங்க என்ன நக்சலைட் ஆட்சியா நடக்கறது.. எல்லாம் நாம சுவிட்சைத் தட்டுனா கண்ணடிக்கிற ட்யூப்லைட் ஆட்சிதான் .. பேசாம கட்டின பசுமாதிரி சைலன்டா இரு! பிளே எ வெயிடிங்க கேம், கம் பேக்.. கீப் கோயிங்!

நித்யானந்தா: என்னமோ நெனச்சிட்டு வந்தேன் பெரியவா, பெரியவாதான், பெரியவா அனுக்கிரஹம் என்னைக்கும் வேணும்…

ஜெயேந்திரன்: ஹி… ஹி… உன் வயசுடா என் சர்வீசு, மொதல்லயே வந்திருந்தா டிரெயினிங் பக்காவா இருந்திருக்கும்… சரி போகட்டும்,  அந்த ரூம்ல வேற ட்ரஸ், விக்கெல்லாம் இருக்கு..  காஞ்சி தேவநாதன் மாதிரி மேக் அப்லாம் மாத்திண்டு பாத்துடா பின்பக்கமா எஸ்கேப் ஆயிடு…. இனிமேலாவது சமத்தா இரு!!

(நித்யானந்தா கிளம்ப, பகவானே! இந்த ஹிந்து தர்மத்தைக் காப்பாத்த நேக்கு நீதான் சக்தி கொடுக்கணும்… முணுமுணுத்துக் கொண்டே சிரமப்பட்டு குச்சியை ஊனி தன் உடலைத் தூக்கி எழுந்தபடியே.. டேய், சின்னவனே.. நக்கீரன் ஆன்லைன்லேருந்து அந்த நித்யான்ந்தன் ஃபுல் வீடியோவ டவுன்லோட் செஞ்சியே அத போடுறா … என உள்ளுக்குள் போனார் ஜெயேந்திரர்.)

—ஸ்பாட்ரிப்போர்ட்– வினவுக்காக – துரை.சண்முகம்.—

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

பேஸ்புக்கில் வினவு

வினவை டிவிட்டரில் தொடர்க

வினவை ஆதரியுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பாரு நிவேதிதா – சுயமோகன் ஒரு லடாய் !

தில்லு துர யாரு? நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு !!

சாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்!

குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !

ஆன்மீகச் சந்தை ஒரு முன்னுரை – டாக்டர்.ருத்ரன் !

கட்டைவிரல் கேட்கும் நவீன துரோணாச்சாரியர்கள் – டாக்டர் ருத்ரன் !

சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !

பரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!

முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்!

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் எஸ்கேப் !!

உ.ரா.வரதராஜன் மரணமும் சி.பி.எம்மின் அரசியல் ஒழுக்கக் கேடும்!!
மார்க்சிஸ்டு கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல்கள், அதிகாரப் போட்டி, கழுத்தறுப்புகள் ஆகியவை ஊரறிந்த விசயங்கள் என்பதால் உ.ரா.வரதராசனின் மரணம் குறித்து இதுவரை எழுதாமல் இருந்தோம்.

ஆனால் இப்போது பரிதாபத்துக்குரிய பலிகடாவாக உ.ரா.வரதராசனும், வெறுக்கத்தக்க வில்லனாக மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்களும் சித்தரிக்கப்படுகின்றனர். பின் தொடரும் நிழலின் குரல்கள் பாகம் 2க்கான கதையை ஜெயமோகன் அசை போடத்தொடங்கிவிட்டார். மார்க்சிஸ்டு கட்சி மட்டுமல்ல, மொத்த கம்யூனிஸ்டு இயக்கமுமே இப்படித்தான், என்று பல தியாகசீலர்கள் புழுதிவாரித் தூற்றத் தொடங்கிவிட்டதால் நாம் இதில் தலையிட வேண்டியதாக இருக்கிறது. (ஜெயமோகனிடம் பொங்கும் கம்யூனிஸ்டு அபிமானம் பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுவோம்)

உ.ரா வரதராசனின் மரணம் எழுப்பும் கேள்விகள் மார்க்சிஸ்டு கட்சித் தலைமையிடம் கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்திருக்கின்றன. ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாகத் தொந்திரவு செய்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதனால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று காரத் விளக்கம் அளித்தார்.

அந்தக் குற்றச்சாட்டு உண்மையாயின் அது நடவடிக்கைக்கு உரியதே. அதுவும் கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரிய மத்தியக் குழு உறுப்பினர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் இத்தகைய தவறினை செய்யும்போது அவர் மீதான நடவடிக்கை சற்றுக் கடுமையாக இருப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.

மாறாக, அவர் தவறே இழைக்காமலிருந்து, பதவிக்கான கோஷ்டித் தகராறில் எதிர் கோஷ்டியினர் புனைந்த அவதூறுதான் அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு என்று கூறப்படுவது உண்மையானால், இது தற்கொலையாகவே இருந்தாலும், கொலைக்கு நிகரானது.  சட்ட மொழியில் கூறினால் தற்கொலைக்குத் தள்ளுதல் என்ற குற்றம்.

இவற்றில் எது உண்மை என்று பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே, வரதராசன் மத்தியக் கமிட்டிக்கு கொடுத்த கடிதம் வெளிவந்து விட்டது.

இந்தக் கடிதத்தின் நம்பகத்தன்மையை மார்க்சிஸ்டு கட்சி மறுக்கவில்லை. கடிதத்திலிருந்து தெரியவரும் உண்மை இதுதான்.

வரதராசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக, மணவிலக்கு செய்ய அவரது மனைவி முடிவு செய்திருக்கிறார். அத்தகையதொரு சம்பவம் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கக் கூடும் என்பதனால், அதனைத் தடுப்பதற்காக வாசுகி உள்ளிட்டோர் வரதராசனின் மனைவி சரசுவதியிடம் பேரம் பேச நியமிக்கப் பட்டிருக்கின்றனர். வரதராசன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். மணவிலக்கு என்ற முடிவை அவரது மனைவி மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பேரம். உன் மீது ஒழுங்கு நடவடிக்கை வரப்போகிறது என்று மனைவி சரசுவதி தன்னிடம் முன்கூட்டியே தெரிவித்ததாகவும் வரதராசன் மத்தியக் கமிட்டிக்கு கொடுத்த தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இக்கடிதத்தையே மேற்கோள் காட்டி, இதுதான் நடந்தது என்று வரதராசனே கூறியிருக்கும்போது, கட்சிக்குள் அதிகாரப்போட்டி, என்று அவதூறு செய்கிறார்களே என்று அங்கலாய்க்கிறார் தமிழ்ச்செல்வன்.

ஆனால் நான் எந்தப் பெண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை. என்மீது குற்றம் சாட்டும் பிரமீளா என்ற அந்தப் பெண்ணைக்கூட விசாரிக்காமலேயே மாநிலக் குழு என்மீது நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார் வரதராசன். அதுமட்டுமல்ல, இதைவிடக் கேவலமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், மாநிலக் கமிட்டியிலும், மத்தியக் கமிட்டியிலும் கவுரவமாக அமர்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையையும் தனது கடிதத்தில் போட்டு உடைக்கிறார். இது எதையும் மத்தியக் கமிட்டி கண்டு கொள்ளவில்லை.

கட்சிக்குள் கோஷ்டித்தகராறு இல்லை என்று நிரூபிக்க முயலும் தமிழ்ச்செல்வனும் வரதராசன் கூறும் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கண்டு கொள்ளவில்லை.

இனி அடுத்து வேறு ஏதாவது கடிதங்களோ ஆவணங்களோ வெளியாகும் வரையில், இப்போதைக்கு வரதராசன் கடிதம்தான் நம்பத்தக்க ஆவணம் என்பதால் இதனையே அடிப்படையாகக் கொண்டு இப்பிரச்சினையைப் பரிசீலிப்போம்.

மத்தியக் கமிட்டி உறுப்பினர் என்றால் கணவன் மனைவிக்கு இடையே முரண்பாடு வரக்கூடாது என்பதில்லை. வரலாம். அதனைத் தீர்த்து வைக்க முயல்பவர்கள் யார்மீது தவறு என்று பார்த்து கண்டிக்க வேண்டும். இணைந்து வாழவே முடியாது என்ற நிலை இருந்தால் மணவிலக்கு செய்ய அனுமதித்து விட வேண்டும். அதுதான் தீர்வு. தலைவர் டைவோர்ஸ் செய்தால், ஊடகங்கள் அதை அவலாக்கி மெல்லக்கூடும் என்பதும் உண்மைதான். தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை ரத்து செய்து புதிய தாம்பத்தியத்தை தொடங்கும் மார்க்சிஸ்டு கட்சி ஊடகங்களின் கேலிப்பொருளாகவில்லையா? அதற்கெல்லாம் கவலைப்படாத கட்சித்தலைமை விவாகரத்து குறித்து இவ்வளவு கவலை கொண்டது என்பதைத்தான் நம்ப முடியவில்லை.

கவலைப்படுபவர்கள் பிரச்சினையைத் தீர்க்க யோக்கியமான வழியை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும். உன் புருசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று மனைவியிடம் பேரம் பேச ஒரு குழு. அந்தப் பேரத்தின் அடிப்படையில் மாநில, மத்தியக் கமிட்டிகளின் ஒழுங்கு நடவடிக்கை! அதனால்தான் குற்றம் சாட்டிய பெண்ணிடம் கூட விசாரணை நடத்தாமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நடவடிக்கைதான் மார்க்சிஸ்டு தலைமையின் நோக்கம் குறித்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. பதவிப்போட்டியிலிருந்து உ.ரா.வரதராசனை அகற்றுவதற்குக் கிடைத்த ஆயுதமாக, எதிர் கோஷ்டியினர் அவரது மனைவியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பாலியல் தொந்தரவு செய்ததாக வரதராசன் மீது சாட்டப்பட்ட குற்றம் உண்மையா, அரை உண்மையா, முழுப்பொய்யா, அல்லது ஜோடனையா என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை காலப்போக்கில் அதுவும் தெரிய வரலாம். ஆனால், அவர் குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு இத்தனை கடுமையான தண்டனையை மார்க்சிஸ்டு தலைமை எடுத்திருக்கிறது என்பதைத்தான் நம்பமுடியவில்லை.

ஒரு தோழர் மார்க்சிஸ்டு கட்சியில் உள்ளவர், அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள். மாநிலக்குழு உறுப்பினர்கள் எல்லோரும் அக்மார்க் ராமர்களா சொல்லுங்கள் என்று கட்சி உறுப்பினர்கள் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருப்பதாக தமிழ்ச்செல்வன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். இதைத்தான் வரதராசனே தன் கடிதத்தில் கேட்டிருக்கிறாரே, அதை வசதியாக மறந்து விட்டார் போலும் தமிழ்ச்செல்வன்!

இன்று மார்க்சிஸ்டு உறுப்பினர்கள் மத்தியிலும், அந்தக் கட்சியின் யோக்கியதை தெரிந்த அதன் அனுதாபிகள் மத்தியிலும் நடைபெறும் விவாதத்தின் சாரம் கீழ்க்கண்டவாறு இருக்கிறது.

அடுத்தவன் பெண்டாட்டியை சின்னவீடாக வைத்திருப்பவனெல்லாம் கட்சிப் பதவியில் இருக்கும்போது, பாலியல் தொந்திரவுக்கு ஒழுங்கு நடவடிக்கையா?

கட்டைப் பஞ்சாயத்து செய்வது, போலீஸ் ஸ்டேசனில் புரோக்கர் வேலை பார்ப்பது, தொழிற்சங்கத் தலைவராக இருந்து தொழிலாளிகளுக்கு துரோகம் செய்து சொத்து சேர்ப்பது போன்றவையெல்லாம் அங்கீகரிக்கப்படும் கட்சியில், எஸ்.எம்.எஸ் அனுப்புவது நடவடிக்கைக்கு உரிய குற்றமா?

குடும்பத்தில் பார்ப்பனச் சடங்குகள் அனைத்தையும் பேணுபவர்கள், வரதட்சிணை, மொய் முதலான எல்லா அசிங்கங்களையும் அங்கீகரித்து வக்காலத்தும் வாங்குபவர்கள் குற்றவாளிகள் அல்ல, வரதராசன் குற்றவாளியா?

சகல விதமான ஒழுக்கக் கேடுகளும் கட்சியின் அங்க இலட்சணமாகி விட்டதால், இந்த ஒழுக்கக் கேடுகளில் எது பெரியது- எது சிறியது, எது மன்னிக்க முடியாதது- எது மன்னிக்கத்தக்கது என்பதுதான் இப்போதைய விவாதப் பொருள்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்றொரு பொன்மொழியை கவுண்டமணி ஏற்கெனவே கூறியிருக்கிறார் என்ற போதிலும், எதெல்லாம் சாதாரணம் என்ற பிரச்சினை தீர்க்கப்படவில்லை. காலந்தோறும் அது மாறிக்கொண்டே இருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவுடனே பதவி விலகவேண்டும் என்ற மரபு மாறி, எஃப்.ஐ.ஆர் போட்டால்தான் விலக வேண்டும் என்று ஆகி, பின்னர் கூற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை பதவியில் இருக்கலாம் என்று ஆகி, அதுவே மேலும் முன்னேறி, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால்தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெளிவு படுத்தப்பட்டு, கடைசியாக அப்படித் தண்டனை விதிக்கப்பட்டாலும், அப்பவும் நான் ராஜா என்று பதவியில் இருக்கலாம் என்று அம்மா நிரூபித்துக் காட்டினார்.

ஒழுக்கக் கேடுகள் மற்றும் குற்றங்களில் எவை சகஜமானவை, எவை சகித்துக் கொள்ளக் கூடியவை, எவை சகிக்க முடியாதவை என்று ஒவ்வொரு கட்சிக்காரனுக்கும் ஒரு மனக்கணக்கு இருக்கிறது. மார்க்சிஸ்டு தொண்டரும் இதற்கு விதிவிலக்கல்ல.

குற்றங்களுக்கான தரவரிசைப் பட்டியலை குற்றவியல் சட்டம் என்று அழைக்கலாம். தனிநபர் ஒழுக்க நெறிகளுக்கும் அரசியல் அறம் சார்ந்த விழுமியங்களுக்கும் அப்படி ஒரு தரவரிசைப் பட்டியலை உருவாக்க முடிவதில்லை. சட்டங்கள் திருத்தப்படுவதைக் காட்டிலும் நூறு மடங்கு வேகத்தில் ஒழுக்கம் மற்றும் அறம் குறித்த மதிப்பீடுகள் மாறிக்கொண்டிருக்கின்றன.

வரதராசனுக்கு ஆதரவாகவும் மார்க்சிஸ்டு கட்சித் தலைமைக்கு எதிராகவும் மார்க்சிஸ்டு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் நிலவுகின்ற பொதுக் கருத்தின் உளவியலை ஒரு வரியில் இப்படித் தொகுத்துக் கூறலாம்: பாலியல் தொந்திரவு செய்த குற்றத்துக்காக இராவணன் மீது தசரதன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

வரதராசன் மீதான குற்றச்சாட்டு உண்மை என்றே வைத்துக் கொள்வோம். பாலியல் தொந்திரவு என்ற அந்தக் குற்றத்தின் உட்கிடை என்ன? ஒரு ஆண் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையில் தன் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், அந்த நம்பிக்கையின் வழியாகப் பெற்ற அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி, ஒரு பெண்ணை அவர் துன்புறுத்தியிருக்கிறார். ஒரு கணவன் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார். இதற்குத்தான் ஒழுங்கு நடவடிக்கை.

பாலியல் ஒழுக்கம் என்ற தளத்திலிருந்து அரசியல் ஒழுக்கம் என்ற தளத்துக்கு சற்று நகர்ந்து சென்று ஒரே ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். சென்ற சட்டமன்றத் தேர்தலில் புத்ததேவுக்கு வரலாறு காணாத வெற்றியை வழங்கிய தொகுதிகளில் ஒன்று நந்திக்கிராம். அந்தத் தொகுதியின் மக்களுக்குத் தெரியாமலேயே, அவர்களுடைய ஒப்புதல் இல்லாமலேயே அவர்களது மண்ணை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை பேசினார் புத்ததேவ். எதிர்ப்பை துப்பாக்கி முனையில் ஒடுக்கினார். குண்டர்களை ஏவினார்.

அந்த எதிர்ப்பு என்பது மம்தா நக்சலைட்டு கூட்டு சதி என்று வியாக்கியானம் செய்து மார்க்சிஸ்டு தொண்டர்களை உசுப்பேற்றி விட்டது கட்சித் தலைமை. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர்தான் இது மேற்கு வங்க மக்களின் கூட்டுச் சதி  என்ற உண்மை மார்க்சிஸ்டு கட்சியினருக்கு லேசாக உரைக்கத் தொடங்கியது. இருந்த போதிலும் ஆபரேசன் கிரீன் ஹன்ட் நடவடிக்கையில் சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்கும் முதல் தளபதி புத்ததேவ்தான்.

தம்மை நம்பி வாக்களித்த மக்களின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைப்பதோ, சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் குறைந்த பட்ச பொதுத்திட்டத்துக்காக எந்த சிதம்பரத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்களோ அதே சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்பதோ மார்க்சிஸ்டு கட்சியினர்க்கு அறம் கொன்ற அதிர்ச்சியை உருவாக்கியதாகத் தெரியவில்லை.

ஏனென்றால் அவர்களுடைய பார்வையில் அது political. இது personal.    அது உணர்ச்சியற்றது. இது உணர்ச்சி பூர்வமானது.

அரசியல் ஒழுக்கம் என்பது படுபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும்போது, தனிநபர் ஒழுக்கம் மட்டும் அந்தரத்தில் ஒளிவிட முடியும் என்பது ஒரு மூட நம்பிக்கை.

தங்குவதற்கு ஒரு வீடும், உத்திரவாதமான சோறும், உடுத்துவதற்கு மாற்று உடையும் இல்லாமல், கால் போன இடமெல்லாம் அலைந்து, கிடைத்தைத் தின்று, வயலே பாயாய் வரப்பே தலையணையாய் படுத்து உறங்கும் ஒரு பரதேசியிடம் துறவுக்குரிய ஒழுக்கத்தை எதிர்பார்க்கலாம்.

நிலங்கள், சுயநிதிக் கல்லூரிகள், பைனான்சு கம்பெனிகள், ரியல் எஸ்டேட் வியாபாரம் என்று நிறுவனமாகி விட்ட காஞ்சித் துறவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்த்தார் சங்கரராமன். அந்த மூட நம்பிக்கைக்கு உரிய தண்டனை வரதராஜப் பெருமாள் சந்நிதியில் வைத்தே அவருக்கு வழங்கப்பட்டது. பருப்பும் நெய்யும் தின்று தினவெடுத்த ஆதீனங்கள், திடீர் சாமியார்களிடம் ஆன்ம விமோசனம் தேடிப் போகும் பெண்களுக்கோ படுக்கையறையிலும், கருவறையிலும் ஞானம் அருளப்படுகிறது.

சொல்லுக்கும் செயலுக்கும் முரணின்றி வாழ்தல் என்ற நெறியும், அதற்கான முயற்சியும்தான் கம்யூனிஸ்டுகளைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது. முதலாளித்துவமே கம்யூனிசம், தேர்தல் வெற்றியே புரட்சி என்ற நடைமுறையைக் கொண்டிருக்கும் ஒரு கட்சியில் அறம் என்ற ஒரு பொருள் அந்தரத்திலா உயிர்வாழ முடியும்?

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணியாற்றியவர், நேர்மையானவர், உழைப்பாளி, திறமைசாலி என்ற பல்வேறு காரணங்களுக்காக மார்க்சிஸ்டு தொண்டர்கள் இன்று வரதராசன் மீது அனுதாபம் கொள்ளலாம். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து மனம் குமுறலாம். ஆனால் இந்த அநீதியின் ஆணிவேர் கட்சியின் அரசியலில் இருக்கிறது.

அச்சுதானந்தனுக்கும் பின்னாரயி விஜயனுக்கும் கேரளத்தில் நடந்து கொண்டிருப்பது கொள்கை மோதலா, அதிகார மோதலா? அவர்கள் மீது காரத் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும், வரதராசன்மீது எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! மார்க்சிஸ்டு கட்சியின் யோக்கியதை புரியும்.

சி.பி.எம்மின் செங்கொடி இன்னமும் பறந்து கொண்டிருக்கலாம். பறப்பனவெல்லாம் உயிருள்ளவை அல்ல. அறம் உயிருள்ளது. அது தனிநபர் ஒழுக்கத்தில் மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கத்திலும் உயிர்த்திருக்கிறது. சி.பி.எம்மின் அரசியல், அமைப்பு முறை ஒழுக்கக் கேட்டிற்கு பலியானவர் வரதராஜன். அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

பேஸ்புக்கில் வினவு

வினவை டிவிட்டரில் தொடர்க

வினவை ஆதரியுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்]  !

புரட்சிக்கு ‘சே’குவேராவும் பொறுக்கி தின்ன ‘ஜெ’யலலிதாவும் !

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? – சி.பி.எம். இன் நில அபகரிப்பு

லால்கர்: சி.பி.எம்.- காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்!

மூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப் பித்து !

தேர்தல் 2009 – சி.பி.ஐ.க்கு மாமியும், சி.பி.எம்.க்கு சாமியும் !

வீழ்ந்தது ஈழம்! ‘மார்க்சிஸ்டு’ மனமகிழ் மன்றம் கொண்டாட்டம்!!

அமர்நாத் – சோம்நாத்

இலட்சாதிபதி கம்யூனிஸ்ட் தா.பாண்டியன்!

CPI(M) கட்சியில் மோடி பக்தர்கள் !

டைஃபியின் (DYFI) குத்தாட்டப் புரட்சி !

‘கோலி’வுட்டை வளைக்க ‘போலி’ கம்யூனிஸ்டுகள் சதி!

அடிவாங்கினால் பொன்னாடை! இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive!!

“சந்திப்பு” தோழர் செல்வபெருமாள் மரணம் !!

முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்!

சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி

மாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’!