வினவு என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற புரட்சிகரப் பண்பாட்டு அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வினவின் நோக்கம்.
இந்து பத்திரிகைக்கு லெட்டர் டு எடிட்டர் எழுதுபவருக்கும் வலைப்பூவின் பதிவருக்கும் என்ன வேறுபாடு? முன்னவரின் கொள்கை வேகமும், நோக்கமும் பின்னவருக்கு உண்டா? இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பல குளியலறைப் பாடகர்களை வலைப்பூ, மேடைக் கலைஞர்களாக மாற்றியிருப்பது உண்மையே. எனினும் இந்த வலைப்பூ மோகம் இளம்பருவக் கோளாறாக, சம்சார சாகரத்தில் மூழ்குமுன் இளமைக்கு வாய்க்கப்பெற்ற ஒரு உல்லாசப் படகுச் சவாரியாக ஆகிவிடக்கூடாது என்பதே எம் விருப்பம்.
வயிற்றுப் பாட்டுக்காக எங்கோ ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு விரட்டப்பட்ட மதுரைக்காரரும், கனடாவில் கோப்பை கழுவும் ஒரு ஈழத்தமிழரும், சென்னையின் ஒரு ஐ.டி தொழிலாளியும் ஒரே நேரத்தில் வினவின் பதிவுகளைப் படிக்கிறார்கள். மொழி எனும் வரம்பைக் கடந்துவிட்டால் ஒரு கருப்பினத் தொழிலாளியும், வெள்ளையினத் தொழிலாளியும் கூட நம் கலந்துரையாடலில் பங்கேற்க முடியும்.
“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றார் கார்ல் மார்க்ஸ். உலகத் தொழிலாளி வர்க்கத்தைச் சூறையாடும் உலக முதலாளித்துவத்தையும், அதன் பங்குச் சந்தை சூதாடிகளையும், உலகப் பணக்கார வர்க்கத்தின் உல்லாச வக்கிரங்களையும் ஒரு சொடுக்கில் பரப்புகிறது இணையம். வங்கி முதலாளிகளின் நிதிமோசடியால் வீடிழந்த அமெரிக்கனின் உணர்வையும், வேலையிழந்த சென்னை ஐ.டி தொழிலாளியின் உணர்வையும் ஒரு வலைப்பூவால் இணைக்க முடியாதா?
தேசத்தால், நிறத்தால், இனத்தால் வேறுபட்ட உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையை, போராட்டத்தை, எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, அவை குறித்த கருத்துகளை பரிமாறிக் கொள்வதன் மூலம் பொதுவானதோர் கனவை, இலட்சியத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியாதா? முடியும் என்றே நம்புகிறோம்.
இது கொஞ்சம் பேராசைதான். இணையம் எனும் இந்த மெய்நிகர் உலகில் (virtual world) ஒரு பதிவர், தன் மெய்யுடலை மறைத்துக் கொண்டு கருத்துகளை மட்டும் உலவச்செய்யலாம் என்ற சாத்தியம், இணையத்தை ஒரு மெய்நிகர் திண்ணையாக்கியிருப்பதையும் காண்கிறோம்.
எள்ளல், அங்கதம், சம்பிரதாயமின்மை, கலகம் என்ற வண்ணங்களை இழந்து வலைப்பூக்கள் சீருடை அணிவகுப்பு நடத்தத் தேவையில்லை. அதே நேரத்தில் திண்ணைகளுக்கு வண்ணம் தீட்டுவதால் பயனும் இல்லை.
அரட்டையாளர்கள் கேள்வி கேட்பதில்லை. பதிலும் அளிப்பதில்லை.
அறிவியலின் உன்னதத்தை ‘சொடுக்குப் போட்டு’ அழைக்கும் பல பதிவர்களின் கைகள் அரசையும் மதத்தையும் கைகூப்பித் தொழுகின்றன. சாதியின் விரல் பிடித்து நடக்கின்றன. சமூக அநீதிகள் கண்டு நடுக்கம் கொள்கின்றன அல்லது எனக்கென்ன என்று தோளைக் குலுக்குகின்றன.
அரட்டைக்கும் செயலின்மைக்கு இணையம் வழங்கியிருக்கும் இந்த வாய்ப்பை உதறுங்கள் என்று கோருவதற்காகத்தான் எமது வலைப்பூவுக்கு வினவு, வினை செய் என்று பெயரிட்டிருக்கிறோம்.
மெய்யுலகத்தின் அநீதிகளிலிருந்து மக்களை விடுவிக்கும் பணியை மெய்நிகர் உலகமும் ஆற்ற வேண்டும் என்பதே எம் அவா. மாற்றுக் கருத்து கொண்டோர் உரையாட வருக. ஒத்த கருத்துள்ளோர் வினையாற்ற வருக.
நாம் மெய் நிகர் மனிதர்களல்ல, மெய் மனிதர்கள்.
தொடர்புக்கு
அலைபேசி - (91) 97100 82506
மின்னஞ்சல் - vinavu@gmail.com-
வினவின் கட்டுரையாளர்கள்
தேடல்
-
- வினவின் பக்கம் on Facebook
இப்போது விவாதத்தில்....
- ஆங்கிலம் – லத்திக்கம்பை ஆதரிக்கும் வழக்கறிஞர் விஜயன் !! (31)
- நண்பன்: .// The HC hears only revision petitions and arguments by lawyers from appeals of cases. ok. try to know the...
- கொள்ளை போகும் இந்திய வளங்கள் (14)
- நண்பன்: நல்ல பதிவு.மக்கள் கலை இலக்கியக் கழகம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு மீண்டும் அடிமை ஆகி வருகிறது என்று...
- இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்! (அவசியம் படிக்க) (18)
- போதெம்கின்: நன்றி அநாமதேயன் & வினவு. படித்துக் கொண்டிருக்கிறேன்.
- விந்தைமனிதன்: கண்டிப்பா இன்று இரவு படிச்சிட்டு வரேன்… ஆனா பெருமூச்சு மட்டும் தான் என் பின்னூட்டமா இருக்கும்னு...
- ஆதவன்: நல்ல மொழிபெயர்ப்பு முயற்சி. படித்துக் கொண்டிருக்கின்றேன்
- சுந்தரராஜன்: இந்த கட்டுரையை சிறு வெளியீடாக கொண்டு வரலாம். அணு சக்தி மற்றும் ஆற்றல் எதிர்ப்பு பணியில்...
- சுந்தரராஜன்: அருமையான ஆங்கில கட்டுரையை, (இயன்ற அளவுக்கு) எளிமையான தமிழில் மொழி பெயர்த்துள்ளீர்கள். நன்றி!
- செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்? (145)
- வழிமறிச்சான்பட்டி பக்கி: விஞ்ஞானி செங்கொடி மருது, ஒங்க பார்வைக்கி இங்கே கிழே உள்ள வாரிகள் படவில்லை அதுக்கும் சேத்து...
- செங்கொடி மருது: திரு எப்போதும் வென்றான் அவர்களுக்கு : ********************************...
- common man: neenga oru vuyira padashuteenga ok. antha vuyirukana udambayum padashuta romba nalla erukume . ethuku...
- எப்போதும் வென்றான்: கட்டுரை ஆசிரியர் தோழர் மருதையன் அவர்களே… சிந்தடிக்கா(Synthetica) என்பது சரியா?...
- “காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு!” (55)
- அக்காகி: @ rammy சீனா – திபெத் பற்றி அப்புறமா பேசி கொண்டே ரம்மி ஆடலாம்.. இப்ப காஷ்மீரில் பற்றி எரிந்து கொண்டு...
- அக்காகி: @ rammy if it is integral part of india, why dont you go to the street to protest against Human Rights...
- அக்காகி: @ rammy Hope you know english…. proceed reading further…. Kashmir: finding the face of the...
- செங்கொடி மருது: உங்களை போய் யாராவது முட்டாளாக்க முடியுமா திருவள்ளுவன் அவர்களே?.. (அறிவாளியையோ அல்லது ஏதோ ஒரு...
- செங்கொடி மருது: அப்புறம் ரம்மி .. உங்க கிட்ட முக்கியமான விசயம் கேக்கனும்ன்னு நினைச்சேன் .. ஆமா ஐ. நா சபை எதுக்கு இதுல...
- சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!! (125)
- rajavamsam: 100% ரைட் சார்.
- எப்போதும் வென்றான்: நல்லதொரு விழிப்புணர்வூட்டும் பதிவுன்னாலும்… இதிலே ஒரு பெருங்குறை என்னானா… எங்க...
- செம்மொழி மாநாடு: கலைஞர் எதற்காகக் கூச்சப்படவேண்டும்? (57)
- செ.தமிழ்செசலெவம்.: தமிழக அரசாங்கம் சிரிப்பா சிரிப்பதைக்கண்டு ஈழத்தமிழனுக்கும் சிரிப்பு வரும் வகையில் படைக்கப்பட்ட...
- Kannan: \\இந்த அடிதடியில் தமிழறிஞர்களுக்கு நாற்காலி கிடைக்காததா பிரச்சினை? மிதிபட்டுச் சாகாமல் தப்பினார்களே, அதுவே...
- ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் ! (61)
- புவனேசுவரி: முக்குலத்தோரின் புதிய வீராங்கனை !! (32)
- JAMES FRIEDRICH: இன்னா நைனா சிங்கம்! ரொம்ப உதார் உடுரே,உன் தலைவன் தொல்.திருமாவளவை போய்க் கேளு,உனக்கு சென்னையில்...
- Littleboy: கைது செய்யப்பட்டாலே குற்றவாளியா? உங்களுக்கு ஊர் பாசம் மட்டும் நியாயமா?
- மதுரைசிங்கம்: பாரதிராஜா,வைரமுத்து,கருணாஸ்,விவேக், இலங்கை ஆறுமுகத்தொண்டைமான்…இவர்கள் அனைவரும் முக்குலத்தோர்...
- //குறுக்கு வெட்டு – 24.08.2010// கலைஞர் கம்பெனி பிரைவேட் லிமிடெட்! (11)
- //குறுக்கு வெட்டு – 25.08.2010// பார்ப்பனியத்தின் பெண்ணடிமைத்தனம்!! (13)
- mootoo: வினவு பாணியில சொல்ல வேணுமுன்னா “கேப்டன் தொண்டு ஆத்துரதுக்கு அரசியலுக்கு வந்தார் என்பது...
- புலவன் புலிகேசி: அதான் அவரோட குட்ம்ப மக்களை எல்லாம் ஒன்னா சேத்தா ஒரு கிராமமே வருமே. ஒரு கிராமத்துக்காக உழைக்கிறவரப்...
- Anand: Rakshabanda nukkum parpannukum ennaya sambandam ?, vadakilaerunthu enna vanthalum athu ellam parpann odathaa?...
- ஆங்கிலம் – லத்திக்கம்பை ஆதரிக்கும் வழக்கறிஞர் விஜயன் !! (31)



