privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்சுப்பிரமணியசாமி மீது வழக்கு! போர்க்களமாகிறது உயர்நீதிமன்றம்!!

சுப்பிரமணியசாமி மீது வழக்கு! போர்க்களமாகிறது உயர்நீதிமன்றம்!!

-

பிற்பகல் 4 மணி
போர்க்களமாகிறது உயர்நீதிமன்றம்!
சுப்பிரமணியசாமி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு!
சு.சாமியைக் கைது செய்!
உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் கொந்தளிப்பு! வழக்குரைஞர்கள் மீது போலீசு வன்முறை!

நேற்றைய உயர்நீதி மன்ற முட்டை நிகழ்வை ஒட்டி வழக்குரைஞர்கள் 20 பேர் மீது கொலை முயற்சி, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 2 பேரைக் கைது செய்து விட்டது போலீசு.

இன்று உயர்நீதி மன்ற வளாகத்தில் வழக்குரைஞர் சங்கத்தின் கூட்டம் நடந்த்து. நடைபெற்றுள்ள சம்பவம் என்பது ஈழப்பிரச்சினைக்காக வழக்குரைஞர்கள் நடத்திவரும் போராட்டத்தின் அங்கம். ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராகவும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகவும் செயல்ப்பட்டு வரும் சு.சாமி, வழக்குரைஞர்களையும் தமிழ் மக்களையும் கேவலப் படுத்தும் விதத்தில், “புலிகளிடம் காசு வாங்கிக் கொண்டு பேசும் கூலி வக்கீல்கள், இவனெல்லாம் வக்கீலானா இப்படித்தான் இருக்கும்” என்றெல்லாம் நீதிமன்ற அறைக்குள் பேசியிருக்கிறார். மேலும் நீதிமன்றப் புறக்கணிப்பு நடைபெறும் கொந்தளிப்பான சூழலில், தனக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத சிதம்பரம் வழக்கில் ஆஜராவதாக கூறிக்கொண்டு, நீதிமன்றத்தின் நேரம் துவங்கு முன்னரே உள்ளே வந்து அமர்ந்து கொண்டு, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார். எனவே சு.சாமி மீது வழக்கு தொடர வேண்டும் என்பது வழக்குரைஞர்களின் கோரிக்கை.

போலீசு வழக்கு பதிவு செய்து விட்டது. அடுத்த கணமே வழக்குரைஞர்களை வன்முறையாகப் பிடித்துச் செல்ல போலீசு முயன்றது. விளைவு. உயர்நீதி மன்ற வளாகம் இந்தக் கணத்தில் போர்க்களமாகிக் கொண்டிருக்கிறது.

வழக்குரைஞர்களுக்கு எதிராக போலீசின் வன்முறை உயர்நீதி மன்ற வளாகத்தின் உள்ளே இதோ இந்தக் கணம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.