Thursday, September 19, 2024
முகப்புஉலகம்ஈழம்கருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்!

கருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்!

-

karunanithi-perani-cartoon(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

ஈழத்தில் ஆயிரம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை ஒரு புலி கூட தப்பி விடக்கூடாதென ராஜபக்ஷேவின் சிங்கள ராணுவம் மக்களை கொன்று குவித்து வருகிறது. அன்றாடம் வரும் உயிரிழப்புக்களின் சோகம் தமிழகத்தில் வெறும் புள்ளிவிவரங்களாய் நீர்த்து போகிறது. அ.தி.மு.க ஆதரவில் நெடுமாறனின் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையும், தி.மு.க ஆதரவு நல உரிமைப் பேரவையும் மாறி மாறி தேர்தல் காலத்தில் பத்தோடு ஒன்றாக ஈழம் குறித்த அழுகுணிக் குரலை ஒலிக்கின்றன.

குஜராத்தில் முசுலீம்களை இனப்படுகொலை செய்த பா.ஜ.கவையும், ஈழப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கும் அ.தி.மு.கவின் ச்சிகலா நடராஜனையும் அருகில் வைத்துக் கொண்டு நெடுமாறன் ஈழத்திற்காக கண்ணீர் விடுகிறார். அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ம.க, சி.பி.ஐ முதலான கட்சிகளெல்லாம் மத்திய அரசும், கருணாநிதியும் ஒன்றும் செய்வில்லை என லாவணி பாடுகிறார்கள். இதே மத்திய அரசில் இவ்வளவு நாளும் பொறுக்கித் தின்ற ராமதாஸ் இதைச் சொல்வதற்காக கூச்சப்படுவதில்லை.

போயஸ் தோட்டத்தில் புரட்சித் தலைவியின் மூன்று நிமிட தரிசனத்திற்காக மூன்று மணிநேரம் காத்திருந்து

நாலு சீட்டு கூட தரமறுக்கும் அம்மாவிடம் ராப்பிச்சைக்காரனைப் போல மன்றாடும் இந்த வீரர் ஈழத்தில் பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடுமென சவடால் அடிக்கிறார். கோமாளிகள் வீர வசனம் பேசினால் எப்படி?

செவ்வாய்க்கிழமை நெடுமாறன் பேரவை ஆர்ப்பாட்டம் செய்ததற்காக தாங்களும் கணக்குக் காட்ட வியாழக்கிழமை தி.மு.க ஈழத்தில் போரை நிறுத்துமாறு ஊர்வலம் நடத்துகிறது. போரை நடத்துபவர்களே அதை நிறுத்தச் சொன்னால் அதன் பொருளென்ன? தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈழத்தில் ஏதாவது நடந்து மக்களின் உணர்வு தனக்கு எதிராக திரும்பக்கூடாது என்பதற்காத்தான் இந்த நாடக ஊர்வலம்.

ராமேஸ்வரத்தின் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கப்பற்படையால் சுடப்படுகிறார்கள். அதைக் கூட தடுக்க வக்கற்ற கருணாநிதி ஈழத்திற்காக நாடகமாடுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்? விஷவாயுக் குண்டுவீச்சால் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கரிக்கட்டையாக எரிந்து கிடக்க இந்த குண்டை அளித்தும், படையை வழிநடத்தியும் உதவி செய்வது இந்திய அரசுதான் என்பது இப்போது உலக நாடுகள் எல்லாமும் அறிந்த விசயம். அத்தகைய அரசில் அமைச்சர்களாய் பங்கேற்று ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க யாரை எதிர்ப்பதாக ஏய்க்கிறது?

அழகரி என்ற ரவுடி தனதுமகன் என்ற ஒரே காரணத்திற்காக எம்.பியாக்கி பார்க்கத் துடிக்கும் கருணாநிதிக்கு ஈழத்தின் துயரம் என்னவென்று தெரியுமா? எம். பிக்கள் ராஜீனாமா, மத்திய அரசுக்கு தந்தி, மனித்ச் சங்கிலி, உண்ணாவிரதம், எல்லாம் முடிந்து விட்டது. மிச்சமிருப்பது கோவணம் கட்டிய ஊர்வலம்தான. அதுதான் சுயமரியாதை அற்ற இந்த ஜன்மங்களுக்கு சரியாகப் பொருந்தும்.

தமிழகத்தில் எவ்வளவு தீவிரமாக ஈழம்பற்றிய உணர்ச்சி மேலோங்கியதோ அவ்வளவு சீக்கிரம் வற்றிப் போவதற்கு இந்த துரோகிகளே முழு முதல் காரணம். இதைத் தாண்டி தமிழக மக்களிடமும், இளைஞர்களிடமும் ஈழத்தில் நல்லது ஏதும் நடக்காதா, நாம் ஏதாவது செய்யவேண்டாமா என்ற ஆதங்கம் இருக்கிறது. ஆனால் அதை ஓட்டுப் பொறுக்குவதற்கான முகாந்திரமாக எல்லாக் கட்சிகளும் மாற்றிவிட்டன.

தி.மு.க நடத்தும் ஊர்வலத்தில் ஈழத்தில் குண்டு போட்டு தமிழனைக் கொல்லும் காங்கிரசு கட்சியும் கலந்து கொள்கிறதாம். இவ்வளவு நாளும் இந்தக் காங்கிரசை எதிரி என பிலாக்கணம் வைத்த திருமாவளவனும் இந்த ஊர்வலத்தில் மானங்கெட்டு கலந்து கொள்கிறாராம். இவர்களையெல்லாம் நம்பி ஏதாவது செய்வார்கள் என எண்ணிய ஈழத்தமிழ் மக்கள் இப்போதாவது  இவர்களைப்பற்றி புரிந்து கொள்ளவேண்டும்.

இன்று உலகமெங்கும் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களால் செய்ய முயன்ற அனைத்தையும் செய்து போராடுகிறார்கள். அந்தப் போராட்டங்களோடு தமிழகமக்களும், மாணவர்களும் இந்த ஓட்டுக் கட்சிகளைப் புறந்தள்ளி தனியாக, எழுச்சியான போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும். அந்தப் போராட்டம் இந்திய அரசின் கழுத்தைப் பிடித்து உலுக்குவதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஈழத்தின் இறுதி மூச்சை காப்பாற்ற நாதி இருக்காது.

  1. கருணநிதியின் கறுப்பு சாயம் வெளுத்து விட்டது. இந்த துரோகிகள் ஈழ மக்களின் மரணத்திலும்
    ஓட்டு வியாபாரமாக்க துடிக்கின்றன. வெட்க கேடான நிலமையில் நாம் இருக்கிறோம்
    துரோகிகளை திட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை அது உதவ போவதும் இல்லை.

    ஓட்டு பொறுக்கி அரசியல் மாயைகளில் இருந்து வெளியேறி புரட்சிகர சக்திகளாய் ஒன்று திரண்டு மக்கள் அதிகாரத்தை பெறாதவரை இது போன்ற துரோகங்களும் இதற்கு மக்களை பழக்கப்படுத்தும் துரோகிகளின் துரோகமயமாக்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

  2. தமிழ்த் துரோகி மு.க. வின் இன்னோர் நாடகம் நடந்து முடிந்திருக்கிறது. அதில் துணை நடிகர்களாக மானங்கெட்ட ஆரெம்வீ, திக.கோழைமணி,கோமாளிஅனந்தன்,புலி.திருமா,காதறுமொய்தீனு,பு.பா.மற்றும் நீதிக்கட்சி (தறு)தலை வர்கள் திறம்பட போட்டி போட்டு நடித்தனர்.
    சில்லரையை பெற்றுக்கொண்ட திக.வீரமணி, ‘தமிழருக்கெல்லாம் தலைவர் கலைஞர் சொன்னால் கல்லரை வரை போவோம்’ என்கிறார்.
    கோமாளிஅனந்தனோ, ‘தமிழகத் தமிழரிலிருந்து ஈழத்தமிழர்வரை காத்து நிற்பது காங்கிரஸ் மட்டும்தான்!’ என்கிறார்.
    தமிழக விடுதலைப் புலி திருமாவோ, ‘உலகம் முழுதும் சுற்றி வந்து உண்மையான தமிழனைக் கண்டேன்; அவர்தான் தமிழினத் தலைவர் கலைஞர். அதனாலே நாம் (ரெண்டு சீட்டுகளுக்காக) அவர் வழி நடப்போம். நான் சிறுத்தை அல்ல புலிதான்.புலி,புலி.புளி. இடிச்சபுளிதான்!’ என்று உறுமுகிறார்.
    மேலும் மற்ற தறுதலைத் தலைவர்களும் இதே ரீதியில் முழங்கித் தள்ளினர்.
    எத்தனை எத்தனை பம்மாத்துகள், பசப்பு வார்த்தைகள். எதிர்த்து யாரும் கேட்க மாட்டார்களென்ற மமதையிலேயே இவனுங்க இப்படி பிலிம் காட்டிட்டுத் திரியறானுங்கப்பா……..
    இறுதியில் பேசிய (நடித்த) ஈழமக்களின் கழுத்தறுத்த கருணாநரி ஈழ மக்களைக் காக்க அன்னை சோனியாவிடம் பிச்சை கேட்கிறார். ராசபக்சேவை சரித்திரம் மன்னிக்காதென சாபமிடுகிறார்.
    முதலில் தன்னை இந்த சமுதாயம் மன்னிக்கிறதாவென பார்க்க வேண்டும்.
    அதனால் மஹாஜனங்களே,
    சிந்திப்பீர்!
    செயல்படுவீர்!

  3. யார் என்ன சொன்னாலென்ன எழுதினாலென்ன தேர்தல் நாளன்று சரியாக ஓட்டுச்சாவடிக்கு வந்து விடுவார்கள் என்று இறுமாந்திருக்கும் அனைத்து ஓட்டுக்கட்சிகளுக்கும் இந்த தேர்தல் ஒரே ஆப்பாக அடிக்கவேண்டும்

    தோழமையுடன்
    செங்கொடி

  4. தமிழ் நாட்டை சேர்ந்த பல பார்பன அதிகரிகள் HINDRAF எனும் மக்கள் சக்தி இயக்கத்திற்கு பேருதவி புரிந்துகொண்டு உள்ளனர் . பல உலகளாவிய பார்பனர்களை தமிழன் அல்ல என முத்திரை குத்தி ஒடுக்கி வைத்த காரணத்தால் அவர்களால் தங்களால் இயன்ற மற்றும் தங்கள் தொடர்புகளை பயன்படுத்தி ஈழ பிரச்சனைக்கு இயன்றதை செய்ய இயலாமல் உள்ளனர் . மேலும் திராவிடர் ஆரியர் பிரிவு ஏற்படுத்தி வட நாட்டினர் ஈழ பிரச்சனையில் ஈடுபடுவதி தவிர்க்கிறார்கள். தமிழர்கள் ஏன் தங்களை தனிமைபடுத்தி கொள்கிறார்கள்?

  5. சரணடையத்தயாராகுங்கள்
    கட்டளைகள் பிறக்கின்றன
    சரணடை … சரணடைந்து விடு

    பிணங்களால் சரணடைய
    முடியாது
    ஆனால் சரணடைந்த பிணங்களால்
    சொர்க்கத்தில் மலந்தின்று
    வாழமுடியும்

    கருணா டக்ளஸ் கருணாநிதி
    வைகோ ராமதாசி என வரிசைகள்
    செல்ல செல்ல
    நீண்டு கொண்டே இருக்கின்றன

    நாளை சொர்க்கத்தின் கதவுகளை
    உடைப்போம் அப்படியே உங்கள்
    தலைகளையும்

    உயிர் வாழ
    ஒரே தீர்வு தான் உழைத்து வாழ்
    கண்டிப்பாய் நீங்கள்
    செத்துப்போவீர்கள்

    ஏனெனில் உழைப்பைவிட
    சாவது உங்களுக்கு
    -நரக வேதனையை தராது.

  6. கருத்துப்படம், அருமை.
    இராமேசுவரம் மீணவர்களையே காப்பற்ற முடியாத முதலமைச்சர்,ஈழத்தமிழ் மக்கழுக்காக படம் காட்ட மட்டும் முடியும் என்பதை நிருபித்துள்ளார்.

  7. ஈழத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் ஒரு பக்கத்தில் மன வேதனையைத் தந்தால் அதைவிட தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் சிலரின் பேச்சுக்கள் இன்னும் அதைவிட வருத்தம் தருகின்றன.
    திருமாவளவன் மீது நான் நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருந்தேன்,தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் அநியாயம் எங்கே நடந்தாலும் யாருக்கு நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்கக் கூடியதாகவும் கொள்கை மிக்க ஒரு தலைவர் தமிழ் நாட்டுக்கு எதிர்காலத்தில் கிடைப்பார் என்றும் நினைத்திருந்தேன் ,ஆனால் அவர் என்று ஈழத் தமிழருக்காக அம்மா மடிப்பிச்சை தாருங்கள் என்று சோனியா காந்தியிடம் கேட்கிறார்.
    அண்ணா திருமா
    ,இப்படி எல்லாம் மடிப்பிச்சை கேட்டு உங்கள் மதிப்பையும் ,ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்தாதீர்கள்.அதைவிட ,அடங்காத் தமிழர்கள் என்று காலனித்துவ ஆட்சிக் காலத்திலேயே சொல்லப்பட்ட அடங்கா மண் வன்னியின் வன்னித் தமிழர்கள் தங்கள் உயிர் போவதை மேலாகக் கருதுவார்கள்.
    விடுதலைப் புலிகளின் தலைவரை அவர் பிடிபட்டால் மரியாதையுடன் நடத்துமாறு முதல்வர் கருணாநிதி சொன்னார் என்றும் ஒரு செய்தி கூறுகிறது.
    அய்யா கருணாநிதி
    ,அப்படி நடத்துவதற்கு அவர் முதலில் பிடிபட வேண்டும் .
    விடுதலைப் புலிகளின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு தெரியும் உண்மையான புலி வீரர்கள் ஒருபொழுதுமே எதிரியிடம் உயிருடன் பிடிபடுவதில்லை என்று,,அதற்காகத்தான் அவர்கள் கழுத்தில் நச்சு வில்லையைக் கட்டிக் கொண்டு திரிகிறார்கள் என்று.
    இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா ?
    வீரர்கள் சாகலாம் ,ஆனால் அவர்கள் விதைத்த உணர்வுகள் சாகாது
    போர் முடியலாம் ,ஆனால் போராட்டங்கள் அதன் குறிக்கோளை அடையுமட்டும் முடியாது.
    புலிகளின் தலைவர் பிரபாகரன் சொன்னமாதிரி ,
    போராட்டத்தின் பாதைகள் மாறலாம் ,வடிவங்கள் மாறாலாம் ஆனால் அதன் இலக்கு மாறாது.
    ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்காக அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தப் போராட்டம் அதன் இலக்கை அடையுமட்டும் தொடரும்
    -வானதி

  8. சொற்கள் இல்லை உள்ளம் கொதிக்கிறது…………இவர்களை இந்த ஓட்டுப் பொறுக்கிகளை நிர்வாணமாக ஓடவிடும் நாள் வரும், வரும்படி கட்டியமைக்க வேண்டும், கட்டியமைப்போம்

  9. தமிழ்நாட்டு பிரபாகரன் என்று தன்னைத்தானே அழைக்கும் திருமாவளவன், உலகத்தமிழர்களின் தலைவர்(?) என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் கொ(க)லைஞர் கருணாநிதி, அப்பப்போ அந்தர் பல்டி அடிக்கும் ராமதாஸ், ஜெயலலிதாவோடு கூட்டு சேர்ந்து கொண்டு ஈழத்தமிழர்களை காபாற்ற வேண்டும் என கூறும் வைகோ; இவர்களின் உண்மையான அரசியல் கோட்பாடு தான் என்ன?

    சோனியா காந்தியிடமிருந்தும் அவரின் காங்கிரசிடமிருந்தும் இவர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள்?

    ஆனால், ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழ்நாட்டு உறவுகள் மேற்சொன்ன அரசியல்வாதிகளின் நாடித்துடிப்பை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.

  10. எல்லாம் முடிந்துவிட்டது மை டியர் ஃபிரண்ட்ஸ், லெட் அஸ் ஸ்டார்ட் ஃபரம் த பிகினிங்

  11. //அந்தப் போராட்டங்களோடு தமிழகமக்களும், மாணவர்களும் இந்த ஓட்டுக் கட்சிகளைப் புறந்தள்ளி தனியாக, எழுச்சியான போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும்.//

    தனியாக போராடுவதை விட, ஒரு இயக்கமாக செய்தால் எழுச்சி இருக்கும். ஆனால், பல இயக்கங்கள் கை விட்டபின் நம்பிக்கையற்று இருக்கும் உண்மையான தமிழர்களுக்கு இயலாமைதான் இப்போது மிச்சம்.

  12. அன்பான தமிழ்நாட்டு உறவுகளே, உங்களிடம் ஓர் அன்பான் வேண்டுகோள். தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் அவர்கள் உங்கள் வாக்குகளை வாங்குவதற்காக கடந்த ஓரிரு நாட்களாக நிறையவே நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார். புலிகள் தலைவர் பிரபாகரன் தன் நண்பர் என்கிறார் ஒரு தொலைக்காட்சியில் பின்னர் அதற்கு சிறியதாக ஒரு மறுப்பு அறிக்கை விடுகிறார். வாக்குகளை வாங்கும் இந்த மீடியா ஸ்டன்ட் (Media Stunt)இனை நம்பாதீர்கள்.

    அடுத்து, ஈழத்தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசுக்கு தந்தி அனுப்புகிறேன் என்கிறார். இவர் ஈழத்தமிழர்களை காப்பாற்ற 1940 களின் பாணியில் தந்தி தான் அனுப்ப வேண்டுமென்பதில்லை. ஒரு தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல் என எவ்வளவோ முறைகள் இருக்கின்றன. அதுதவிர, இவர் இன்னும் எவ்வள‌வோ ஆக்கபூர்வமான முறைகளில் ஈழத்தமிழர்களை காப்பாற்றலாம். காலத்தே செய்யும் பணி ஞாலத்தில் பெரிது என்பார்கள். அது இவருக்கு தெரியுமோ தெரியாது? ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் தமிழன் வன்னியில் கொல்லப்பட்டுக்கொண்டிருக்க நீங்கள் தந்தி என்றும் கவிதை என்றும் எங்க்ள் வெந்த புண்ணீல் வேல் பாய்ச்சாதீர்கள்.

    தன் உறவுகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஆறரை கோடி மக்கள் உங்களிடம் முறையிட்டால், நீங்கள் என்ன செய்கிறீகள்? அவர்களை பிரதிநிதிக்துவப்படுத்தாமல் உங்கள் ஆட்சி நாற்காலியை காப்பாற்ற போலி நாடகங்களை அர்ங்கேற்றிக்கொண்டிருகிறீர்கள். உங்களுக்கு மனச்சாட்சியே கிடையாதா? ஈழத்தமிழன் மரண ஓலம் உண்மையிலேயே உங்கள் காதுகளின் விழவில்லையா?

    இறுதியாக, இப்பொழுது பொது கடையடைப்பு. ஏன் அய்யா இந்த நாடகங்கள் எல்லாம்? எங்களை செத்துமடிய விடுங்க்ள். எங்களுக்காக முதலைக்கண்ணீர் விடாதீர்கள். போலி நாடகங்க்ளை அரங்கேற்றாதீர்கள்.

  13. அதே போல் தமிழகதை சேர்ந்த பல துறை சார்ந்தவர்கள் தங்களுக்கு மத்திய அரசால் வழங்க பட்ட விருதுகளை திரும்ப கொடுத்தால் ,தமிழரின் ஒற்றுமையை இந்தி பேசும் வடநாட்டானுக்கு விளங்கும்.

    சிங்களவன் இலங்கை தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று எண்ணுவது போல்,இந்தியா ,இந்தி பேசுபவனுக்கு தான் சொந்தம் என்று எண்ணுகிறார்கள்,

    அத்னால் தான் தமிழனின் கொரிக்கையை செவி மடுக்காமல் ,ஈழ தமிழனை அழிக்க மத்திய அரசு உதவி செய்கிறது.

    அதுமட்டுமல்ல,தமிழக மீனவர்களை தாக்கி சொல்லும் இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்கிறது.

    ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் தான் அனுப்பினார் என்று சொல்லி அவரை கைது செய்து,ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லும் இந்திய அரசு ,இலங்கை இராணுவன் ,நம் தமிழ மீனவர்களை கொன்று வருகிறதே,ஆகவே இலங்கை இராணுவத்தின் தளபதியையும் ,அதன் தலைவ்ராக உள்ள அதிபரையும் ஏன் கைது செய்து ,இந்திய அர்சிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா ஏன் கோரவில்லை.

    அதுபோல் ,மும்பை தாக்குதலில் கைதானவன் ,தன்க்கு பாகிஸ்தான் இராணுவம் தான் ஆயுதம் கொடுத்தது ,பயிற்சி கொடுத்தது என்று கூறியுள்ளான்,அதற்க்காக பாகிஸ்தான் இராணுவ தளபதி மற்றும் அந்நாட்டு அதிபரை கைது செய்ய இந்தியா இதுவரை ஏன் முயவில்லை.

    சராசரி மனிதன் கொல்லபட்டால் பரவாயில்லை.ராஜிகாந்தி மட்டும் கொல்லபட்டால் ,கைது என்பீர்கள்.

    மும்ப்பை இறந்தவர்கள் இந்தியர்கள் அல்லவா?தமிழக மீனவர்கள் இந்திய பிரஜை அல்லவா?

  14. ப்ரியங்கா பிரபாகரன் ஒரு குற்றவாளி ,அவருக்கு மன்னிப்பு கிடையாது என்கிறார்.

    ராஜிவ் காந்தி கொல்லபட்டதில் பல சந்தேகங்கள் உள்ளன்.அக்கட்சியை சேர்ந்தவர்கள் மீது கூட சந்தேகம் எழுந்துள்ளது விசாரணையில்.

    பிராபகரன் என்ற தனி மனிதன் மீது சந்தேகம் கொண்டு இந்தியா இந்த போரை ஆதரிக்கிறது.
    இது வெட்ட வெளிச்சம்.

    அப்படியே ,பிரபாகரன் குற்றவாளி என்று வைத்து கொண்டாலும்.ஒரு தனி மனிதனை அழிப்பதற்க்காக ,சோனியாகாந்தியும் காங்கிரஸும் ஆயுத உதவி வழங்கி பல்லாயிரம் அப்பாவி ஈழ தமிழர்களை கொன்று குவிக்கிறது.

    ஆயிரகணக்கான ஈழதமிழ் மக்களை கொன்று ,பிரபாகரனை அழிக்க நினைப்பது எப்படி நியாயமாகும்,

    ஆயிரகணக்கான ஈழ தமிழர்களை குழந்தைகள்,முதியவர்கள்,பெண்கள் என்று பாராமல் கொன்று குவிப்பதற்கு சோனியா காந்தியையும்,ப்ரியங்கா மற்றும் காங்கிரஸையும் யார் மன்னிப்பார்கள்,

    இது என்ன நியாயம்.

    சோனியா காந்தியே நீ உன் கணவரை இழந்ததற்காக ,எத்தனை பெண்கள் தங்கள் ,தாலியை இழக்க வேண்டும்,எத்தனை பெண்கள் தங்கள் குழந்தைகளை இழக்க வேண்டும்,எத்தனை ஆண்கள் தங்கள் மனைவி மற்றும் பெற்றோரை இழக்க வேண்டும்,.

    இத்தனை பேரின் இரத்தத்தில் தான் உன் ,வெறி அடங்குமா?

    அத்மட்டுமல்ல,.உன் தனி பட்ட காழ்புணர்ச்சியால் ஈழ தமிழரின் உரிமை போராட்ட்ட்த்தை அல்லவா நீ சிதைத்து விட்டாய்.

    இதை வரலாறு என்றும் மன்னிக்காது

    • Same question to LTTE also. They killed our PM Rajiv. He is not a single individual person. He was our future. Now LTTE understood they can not fight with powerful nation India.

      • உன்ன பெத்தத உங்கம்மா ஒரு கழுதையை வாங்கி வளத்து இருக்கலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க