privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்மூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப் பித்து !

மூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப் பித்து !

-

wrap

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கொள்கைக்கான கூட்டணி என்பதெல்லாம் காலாவதியாகி, இத்தனை தொகுதிகள் கொடுத்தால் இந்தக் கூட்டணி; இல்லையேல் அந்தக் கூட்டணி என்பதாக ஓட்டுக் கட்சிகளின் பிழைப்புவாதம் நாடெங்கும் நாறுகிறது. கூட்டணிக் குழப்பமே நாட்டின் மையமான அரசியலாக மாற்றப்பட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் இக்கட்சிகளும் ஆட்சிகளும் அடித்த கொள்ளைகள், அடக்குமுறைகள், துரோகங்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு வருகின்றன.

ஈழத் தமிழ் மக்கள்  மீது சிங்களஇந்திய அரசுகள் நடத்திவரும் கொடூரமான போரை எதிர்த்து சவடால் அடித்துவந்த திருமாவளவன் 2 சீட்டுக்காக கருணாநிதியிடம் பம்மிப் பதுங்கிவிட்டார். மருத்துவர் அண்ணன் ராமதாசு, அன்புச் சகோதரி பாசிச ஜெயலலிதாவின் காலடியில் விழுந்து கிடக்கிறார். தமிழினவாதக் குழுக்களோ, காங்கிரசு  துரோகிகளை தேர்தலில் வீழ்த்துவது என்ற பெயரில் பாசிச ஜெயா, பா.ஜ.க.வுக்கு மறைமுகமாகச் சேவை செய்யக் கிளம்பிவிட்டனர். இப்பிழைப்புவாதிகளின் துரோகங்கள் மூடிமறைக்கப்பட்டு, ஈழவிவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஓட்டுச்சீட்டு சந்தர்ப்பவாதக் கூட்டணியை தமிழகத்தின் மையமான அரசியலாக்கப்பட்டு வருகிறது.

காங்கிரசும், பா.ஜ.கவும் கடந்த தேர்தலில் வென்ற தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற முடியுமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது. தமிழகத்தில் முன்பு காங்கிரசு  தி.மு.க. கூட்டணியிலிருந்த பச்சோந்தி ராமதாசின் பா.ம.க.வும் இடதுவலது போலி கம்யூனிஸ்டுகளும் கூட்டணியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவுடன் கூட்டணி கட்டிக் கொண்டுள்ளனர். ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவியின் கட்சி காங்கிரசின் வாக்கு வங்கிகளைச் சிதறடித்து விடும் என்று கூறப்படுகிறது. உ.பி.யில் முலயம்சிங், பீகாரில் லல்லுபிரசாத் யாதவ்  ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் காங்கிரசுக்கு அற்பமான இடங்களை மட்டுமே ஒதுக்கியுள்ளனர். மகாராஷ்டிராவில், சரத்பவார் கட்சியும் காங்கிரசும் கூட்டணி கட்டிக் கொண்டுள்ள போதிலும், இன்னமும் தொகுதிப் பங்கீட்டில் கழுத்தறுப்புகள் நீடிக்கின்றன. இதேபோல, மே.வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுடன் காங்கிரசு கட்சி கூட்டணி கட்டிக் கொண்டுள்ள போதிலும், தொகுதிப் பங்கீட்டில் நாய்ச் சண்டை தொடர்கிறது.

காங்கிரசின் நிலைமை இப்படியிருக்க, பா.ஜ.க.வின் நிலைமையோ அதைவிடக் கேவலமாக உள்ளது. பா.ஜ.க.வில் நாற்காலியைப் பிடிப்பதற்கான கோஷ்டிச் சண்டை புழுத்து நாறுவது ஒருபுறமிருக்க, ஒரிசாவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி கட்டிக் கொண்டிருந்த பிஜு ஜனதா தளம் இப்போது பா.ஜ.க.வைக் கை கழுவி விட்டது. மகாராஷ்டிராவில் சிவசேனாவும், பா.ஜ.க.வும் கூட்டணிக் கட்டிக் கொண்டாலும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறிகள் நீடிக்கின்றன. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்களிடம் நிலவும் அதிருப்தி காரணமாகவும், கட்சியில் புழுத்து நாறும் கோஷ்டி சண்டைகள் காரணமாகவும் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் சுருங்கிவிட்டன.

இப்படி பா.ஜ.க.வும் காங்கிரசும் பலவீனப்பட்டுப் போயுள்ள நிலையில், அவற்றுக்கு மாற்று என்ற பெயரில் காங்கிரசு  பா.ஜ.க.வுடன் கூட்டணி சேராத பிழைப்புவாதக் கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணியை இடது வலது போலி கம்யூனிஸ்டுகள் உருவாக்கியுள்ளனர். ‘இந்த மூன்றாவது அணியிலுள்ள கட்சிகள் மொத்தத்தில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால், நாடாளுமன்ற தொங்கு நிலை ஏற்பட்டு, இந்த அணியின் ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உருவாகும் புதிய கூட்டணியால் இந்த அணியே ஆட்சியில் அமரும்’ என்று போலி கம்யூனிஸ்டுகள் வாக்கு சதவீத கணக்கு போடுகின்றனர்.

இதனால் தற்போதைய, தேர்தல் கூட்டணியை விட, தேர்தலுக்குப் பிறகு உருவாகும் கூட்டணிதான் பெருத்த எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்துள்ளது. ஒன்று, போலி கம்யூனிஸ்டுகள் மற்றும் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகளின் ஆதரவோடு காங்கிரசு ஆட்சி அமைவது; இரண்டு, காங்கிரசின் ஆதரவோடு போலி கம்யூனிஸ்டுகள் மற்றும் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகளின் ஆட்சி அமைவது; மூன்று, பா.ஜ.க.வுக்குக் கூடுதல் இடங்கள் கிடைத்தால் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகள் அதனுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி கட்டிக் கொண்டு ஆட்சியமைப்பது என்கிற வாய்ப்புகளே நிலவுகின்றன.

இதிலே, பா.ஜ.க., காங்கிரசு மட்டுமின்றி, மூன்றாவது அணியுடனும் கூட்டணி சேராமல், தனி ஆவர்த்தனம் செய்கிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி. அதேசமயம், மூன்றாவது அணியுடன் நட்பும் பாராட்டுகிறார். பா.ஜ.க.  காங்கிரசு அல்லாத மூன்றாவது அணி ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்தால், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் தன்னையே பிரதமராக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். அவர் மட்டுமல்ல; போலி கம்யூனிஸ்டுகளும் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகளின் தலைவர்களும் தேர்தலுக்கப் பிந்தைய இழுபறியில் தாமும் பிரதமராகி விடலாம் என்று நப்பாசையுடன் கணக்கு போடுகின்றனர்.

மூன்றாவது அணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைப்பது கடினம்தான் என்றாலும், ஒருவேளை காங்கிரசு ஆதரவு ஆட்சிமைக்க வாய்ப்பு கிடைத்தால், அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் காங்கிரசுக்கு ஆதரவளிக்க நேர்ந்தால், இடதுசாரிகள் இம்முறை மைய அரசில் பங்கேற்க வேண்டும் என்று உபதேசித்திருக்கிறார், பழம் பெரும் சி.பி.எம். தலைவரான ஜோதிபாசு. இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் எந்த ஆட்சி அமைந்தாலும் அந்த ஆட்சியை வெளியிலிருந்து கண்காணித்து நெறிப்படுத்தும் வேலையை மட்டும் செய்து கொண்டிராமல், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில், அந்த ஆட்சியில் பங்கேற்கும் கூடுதல் பொறுப்பையும் இடதுசாரிகள் ஏற்க வேண்டும் என்றும், 1996இல் நடந்ததைப் போல ‘வரலாற்றுத் தவறை’ச் செய்து விடக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

1996இல் சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவரும் மே.வங்க முதல்வருமான ஜோதிபாசுவைப் பிரதமராக்க மூன்றாவது அணியின் கட்சிகள் பரிந்துரைத்த போது, சி.பி.எம். கட்சித் தலைமை அதை ஏற்காமல் ‘வரலாற்றுத் தவறு’ என்று சாடி, தடுத்து நிறுத்தி விட்டது. அப்போதைய சி.பி.எம். கட்சித் திட்டத்தில், மாநில அரசில் சி.பி.எம். கட்சி பங்கேற்கலாம் என்ற விதி இருந்தபோதிலும், மைய அரசில் பங்கேற்பது பற்றி குறிப்பாக எந்த விதியும் வகுக்கப்படவில்லை என்று அப்போது கட்சித் தலைமை தனது நிலையை நியாயப்படுத்தியது. பின்னர் 2000வது ஆண்டில் நடந்த கட்சியின் சிறப்புப் பேராயத்தில் இந்த விதி திருத்தப்பட்டு, மைய அரசிலும் பங்கேற்கலாம் என்று மாற்றப்பட்டது. அதைக் காட்டியே இப்போது ஜோதிபாசுவும் மீண்டும் அந்த வரலாற்றுத் தவறைச் செய்து விடக் கூடாது என்று கட்சிக்கு வழிகாட்டுகிறார். இதை வரவேற்று பக்கமேளம் வாசிக்கத் தொடங்கிவிட்டார், சி.பி.எம்.மின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான யெச்சூரி. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டங்களை நடத்தி புரட்சி செய்யப் போவதாக நாடகமாடி வந்த சி.பி.எம். கட்சி, கடைசியில் மைய அரசிலும் பங்கேற்று நாற்காலி சுகம் தேடும் இழிந்த நிலைக்குச் சென்று விட்டது.

எந்தக் கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றும், மீண்டும் நாடாளுமன்ற தொங்குநிலைதான் ஏற்படும் என்றும், தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய கூட்டணி உருவாகி நிலையான ஆட்சி அமையும் என்றும் முதலாளித்துவ அரசியல் நோக்கர்களும் போலி கம்யூனிஸ்டுகளும் மதிப்பீடு செய்கின்றனர். ஆனால் தொங்கு நிலையானாலும் தொங்கா நிலையானாலும் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக மூடுதிரையின் பின்னே, அதிகாரவர்க்க போலீசு இராணுவ நீதித்துறை அடங்கிய அரசு எந்திரம் இருந்து கொண்டு நிரந்தரமாக நிர்வாகத்தை நடத்தி வருகிறது. அதைக்கொண்டு ஆளும் வர்க்கங்கள் சட்ட ரீதியாகத் தமது அடக்குமுறை சுரண்டலை நடத்தி வருகின்றனர். இத்தகைய அரசியலமைப்பு முறை தொடர்வதற்குத் தடையாகி நாடாளுமன்ற அராஜகம் முற்றினால், ஆளும் வர்க்கங்கள் பாசிச அல்லது இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவவும் தயங்காது. உலகெங்கும் முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியின் தர்க்க ரீதியான தவிர்க்க முடியாத அங்கமாகவே இது தொடர்கிறது. ஆகவே, தொங்கு நிலையில் இருப்பது நாடாளுமன்ற அமைப்பு முறை மட்டுமல்ல; முதலாளித்துவ ஜனநாயக அரசியலமைப்பு முறை முழுவதும்தான்.

இத்தகைய கேடுகெட்ட முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையைத்தான் இப்போலி கம்யூனிஸ்டுகள் முட்டுக் கொடுத்து தூக்கிப் பிடிக்கின்றனர். அழுகி நாறும் முதலாளித்துவ அமைப்பு முறைக்குள்ளேயே தீர்வுகளைத் தேடி, நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பது, வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவது என்ற பெயரில் காங்கிரசுக்கு வால் பிடித்துச் செல்கின்றனர்.

தேர்தலுக்குப் பின்னரும் வகுப்புவாத சக்திகள் அதிகாரத்துக்கு வருவதைத் தடுப்பது என்ற பெயரில் காங்கிரசை உள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ ஆதரிக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர்.

இப்@பாலி கம்யூனிஸ்டுகள் காங்கிரசுடன் முரண்பட்டு நிற்பதாகக் காட்டிக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல; அந்நிய நாடுகளுடனான எந்தவொரு ஒப்பந்தத்தையும் விவாதித்து, வாக்கெடுப்பு நடத்தி நாடாளுமன்ற ஒப்புதல் பெற்ற பிறகுதான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறுவதற்கு இந்திய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. அமெரிக்காவுடனான இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல; உலக வங்கிஐ.எம்.எஃப் மற்றும் உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களும் இப்படித்தான் இந்நிய நாடாளுமன்றத்துக்கு மேலானதாக, அதன் வாக்கெடுப்பு விவாதத்துக்கு வராமலேயே நடைமுறைப்படுத்தப் படுகின்றன. அந்நிய நாடுகளுடனான துரோகத்தனமான ஒப்பந்தங்களை எதிர்த்து முறியடிக்கும் அதிகாரமே இல்லாத நாடாளுமன்றம், நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகமிழைத்து வரும் ஓட்டுக் கட்சிகள் இவை பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே தேர்தல் நாடகம் முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு, வெளிநடப்பு முதலான கூத்துக்கள் நடக்கின்றன.

காங்கிரசுடனான தேர்தல் அரசியல் கூட்டு வைத்துக் கொள்வதற்காகவும் மதச்சார்பின்மை போலி நாடகமாடுவதற்காகவும் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதாக இப்போலி கம்யூனிஸ்டுகள் பித்தலாட்டம் செய்து வருகின்றனர். மற்றபடி, பாபர் ம‹தி இடிப்பு முதல் சேது சமுத்திர திட்ட எதிர்ப்பு வரை எல்லா விவகாரங்களிலும் இந்துத்துவா கும்பலுடன் சமரசப் போக்கைக் கடைபிடிப்பதே இப்போலி கம்யூனிஸ்டுகளின் கொள்கையாக உள்ளது. மும்பை, குஜராத், ஒரிசா என மதச் சிறுபான்மையினருக்கு எதிராக இந்துவெறி பயங்கரவாதிகள் நடத்திய படுகொலைஅட்டூழியங்களுக்கு எதிராக அறிக்கைகள்அடையாள எதிர்ப்புக்கு மேல் இப்போலிகள் வேறெதுவும் செய்யவில்லை. அதேபோல, மதச்சார்பின்மை நாடகமாடி முஸ்லிம் ஆதரவாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டு, ஓட்டுக்காக இஸ்லாமிய மதவெறியர்களின் நிலையைச் சந்தர்ப்பவாதமாக ஆதரிக்கும் இப்போலி கம்யூனிஸ்டுகளும் அதன் இடது சாரி அரசும் வங்கதேச மருத்துவரும் எழுத்தாளருமான தஸ்லிமா நசுரீனை நாடு கடத்தின.

தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் எனும் ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கத்துக்கு மனிதமுகம் கொடுப்பது என்கிற தோரணையோடு, மாற்றுக் கொள்கை என்ற பெயரில் மறைமுக ஆதரவளிப்பது; மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரில் சிங்கூர், நந்திகிராம விவசாயிகளிடமிருந்து விலைநிலங்களைப் பிடுங்கி அவர்களை ஒடுக்கி, பன்னாட்டு உள்நாட்டுத் தரகு முதலாளிக்குத் தாரை வார்ப்பது; சிறு வணிகர்களை ஒழிக்கும் ரிலையன்ஸ், வால்மார்ட் முதலான ஏகபோகங்களுக்கு நடைபாவாடை விரிப்பது என்று பலநூறு வழிகளில் இப்போலி கம்யூனிஸ்டுகள் மக்கள் விரோதநாட்டு விரோத நடைமுறையைக் கொண்டுள்ளனர். மொத்தத்தில், போலி கம்யூனிஸ்டுகளுக்கும் ஆளும் வர்க்க கூட்டணிக் கட்சிகளுக்குமிடையே அடிப்படையில் வேறுபாடு ஏதுமில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, மதச்சார்பற்ற மூன்றாவது அணி, இடது சாரி கூட்டணி என்ற வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டு விரோதமக்கள் விரோத மறுகாலனியாதிக்க கூட்டணி ஒன்று மட்டுமே ஓட்டுக் கட்சிகளிடம் உள்ளது.

இதனால்தான் எந்தவொரு ஓட்டுக் கட்சிக்கும் அவற்றின் கூட்டணிக்கும் ஆதரவு அலை வீசவில்லை. எதிர்ப்பு அலையுமில்லை. ஓட்டுக் கட்சிகளும் முன்னிறுத்திப் பேச முக்கியமான விசயமோ, கொள்கையோ இல்லை.

போலி கம்யூனிஸ்டுகளின் மூன்றாவது அணியில் பங்கேற்கும் கட்சிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தவெறி பா.ஜ.க. வுடன் மாறிமாறி கூட்டுச் சேர்ந்தவைதான். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் ஏகாதிபத்திய மறுகாலனியாக்கத்துக்கு விசுவாசமாகச் சேவை செய்பவைதான். சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக் ஆகியோர் அப்பட்டமான ஏகாதிபத்திய அடியாட்களாகச் செயல்பட்டு, மக்கள் போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்கியவர்கள். பாசிச ஜெயலலிதாவோ பார்ப்பன பாசிசத்தையும் தமிழின எதிர்ப்பையும் தனது சித்தாந்தமாகவே கொண்டுள்ளார். மக்களால் வெறுத்தொதுக்கப்படும் இத்தகைய கழிசடை அரசியல் சக்திகளுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு அலங்காரம் செய்து மீண்டும் இச்சக்திகள் அரசியல் அரங்கில் வேரூன்ற மூன்றாவது அணியின் மூலம் போலி கம்யூனிஸ்டுகள் ஏற்பாடு செய்து தருகின்றனர். அதன் மூலம் இம்மக்கள் விரோத பாசிச சக்திகளை மக்கள் நலனில் அக்கறை கொண்ட முற்போக்கு சக்திகளாகக் காட்டி மக்களை ஏ#த்து வருகின்றனர்.

அனைத்துலக முதலாளித்துவத்தின் பெருந்தோல்விபொருளாதாரச் சரிவின் காரணமாக எழும் நெருக்கடிகளின் சுமைகளை ஏகாதிபத்தியவாதிகள் உழைக்கும் மக்கள் மீது சுமத்திவருவதை எதிர்த்து ஏகாதிபத்திய நாடுகளிலேயே மக்கள் போராட்டங்கள் வெடித்துப் பரவுகின்றன. முதலாளித்துவத்தை எதிர்த்து சோசலிசமே ஒரே தீர்வு என்று மக்கள் போராடி வரும் நிலையில், இந்தியாவிலும் அத்தகைய போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டிய சூழலில், மனித முகம் கொண்ட மாற்றுப் பொருளாதாரத் திட்டம் என்ற பெயரில், ஏகாதிபத்திய மறுகாலனியாக்கத்துக்கு விசுவாசமாக இப்போலி கம்யூனிஸ்டுகள் செயல்பட்டு வருகின்றனர். மைய அரசில் தாமும் பங்கேற்பதன் மூலம், மக்கள் போராட்டங்களைத் திசை திருப்பி நாடாளுமன்றத் தேர்தல் மூலம் இன்றைய முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே தீர்வுகாண முடியும் என பிரமையூட்டி மக்களை மோசடி செய்து வருகின்றனர்.

இப்படி நாடாளுமன்ற மோசடி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையூட்டி, பாசிசபிழைப்புவாத சக்திகளுக்கு முற்போக்கு அலங்காரம் செய்து சந்தர்ப்பவாத கூட்டணி கட்டி மக்களை ஏய்த்து வரும் இப்போலி கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தாமல், மறுகாலனியாக்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவே முடியாது. எந்த அதிகாரமோ, உரிமையோ இல்லாத உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சிக்கு”ரப்பர் ஸ்டாம்ப்”பாகச் சீரழிந்து விட்ட நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தில், மறுகாலனியாதிக்கத் தாக்குதலுக்குத் தீர்வு காணவும் முடியாது. போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, நாடாளுமன்ற அரசியலமைப்பு முறைக்கு வெளியே மக்கள் போராட்டங்களின் வழியே ஓர் அரசியல் புரட்சியைச் சாதிப்பதன் மூலம் மட்டுமே இம் மறுகாலனியாதிக்கத்தை முறியடிக்க முடியும். பதவிப்பித்து கொண்ட இப்போலி கம்யூனிசத் துரோகிகளாகத் திரைகிழித்து தனிமைப்படுத்துவதன் மூலம் மட்டுமே இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் முடியும்.
 ________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 09

 ________________________________________________

  1. நேற்று தீவுத்திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில்…
    ஏ.பி. பரதன்
    “அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரத போராட்டம் நடத்தி, இலங்கை பிரச்சனையை உலக அளவிற்கு கொண்டு சென்றார்.”

    what a comedy! what a comedy!

  2. நேற்று நடந்த அதே பொதுக்கூட்டத்தில்… சிபிஎம் பிரகாஷ் காரத்
    “தமிழகத்தின் வெற்றிதான் டெல்லியில் ஒரு மாற்று அரசை, மதசார்பற்ற அரசை உருவாக்குவோம் என்று நம்புகிறோம்”.

    இதுவும் எப்பேர்ப்பட்ட காமெடி?

    அத்வானி ஜெயலலிதாவோடு பேச்சுவார்த்தை நடக்கிறது என்றார்.

    உடனே, பத்திரிக்கையாளர்கள் கேட்டதும், ஜெயலலிதா “அதெல்லாம் இல்லை” என்றது.
    பிறகு, தேர்தலுக்கு பிறகு, கூட்டணி மாறலாம் என்று சொல்லியிருக்கிறது.

    இந்த ஜெயலலிதாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட்.

  3. ………………………………………….

    என்னதான் முக்கினாலும்
    பொய்களால் கரிப்பை ஜெயிக்க முடிவதில்லை
    ஆதிக்கசாதியின் மூத்திரத்தில்
    தொடங்கி விவசாயியை குடித்த
    யூரியா வரை எல்லாம் கரிக்கத்தான்
    செய்கிறது………

    என்ன செய்வது
    வாயில் கரிப்பை வைத்துக்கொண்டு
    எங்களால் பொய்யாய்
    சிரிக்கத்தெரியவில்லை…..

    எலிமருந்தில் மூவர்ண தேனைத்தடவி
    வருகிறார்கள்
    ம்!
    எல்லோரும் நாக்கை நீட்டுங்கள்
    நக்காதவன் எல்லாம் தேசத்துரோகிகள்.

    http://kalagam.wordpress.com/

  4. என்னதான் முக்கினாலும்
    பொய்களால் கரிப்பை ஜெயிக்க முடிவதில்லை
    ஆதிக்கசாதியின் மூத்திரத்தில்
    தொடங்கி விவசாயியை குடித்த
    யூரியா வரை எல்லாம் கரிக்கத்தான்
    செய்கிறது………

    என்ன செய்வது
    வாயில் கரிப்பை வைத்துக்கொண்டு
    எங்களால் பொய்யாய்
    சிரிக்கத்தெரியவில்லை…..
    எலிமருந்தில் மூவர்ண தேனைத்தடவி
    வருகிறார்கள்
    ம்!
    எல்லோரும் நாக்கை நீட்டுங்கள்
    நக்காதவன் எல்லாம் தேசத்துரோகிகள்

    http://kalagam.wordpress.com/

  5. //இத்தகைய கேடுகெட்ட முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையைத்தான் இப்போலி கம்யூனிஸ்டுகள் முட்டுக் கொடுத்து தூக்கிப் பிடிக்கின்றனர். அழுகி நாறும் முதலாளித்துவ அமைப்பு முறைக்குள்ளேயே தீர்வுகளைத் தேடி, நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பது, வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவது என்ற பெயரில் காங்கிரசுக்கு வால் பிடித்துச் செல்கின்றனர்.

    ///

    i see. i suppose the Maoists manical attacks against
    innocent poll officials and policemen during polls and its agenda in stopping people from voting is the right method to counter these capitalistic democracy.

    Your ultimate is aim is a system where there will be no democracy or free elections but a single party rule with a tyranical politburea and power mongers,.

    it is funny that you talk about democracy and elections here..

  6. பருப்பு மாதிரி ப்லோக் எழுதுவதை நிறுத்து. துரோகி கருணாநிதிதான் ப ம க வை செவிடன் பேச்சி கேட்டு கிட்டு துரத்தினான். அவனை பொய் கேள் வேற வசனம் பேசி துரத்திட்டு நாயா ராமதாஸ் பின்னல் ஏன் அலைந்தான் என்று. கடைசி வரையில் தொகுதிக்காக இழுத்தடிக்கவே சீட்டு பேரம் எல்லாம்.

    மீண்டும் சொல்கிறேன் அரை வேக்காடு மாதிரி எழுதாதே …

  7. //ஜனநாயக மூடுதிரையின் பின்னே, அதிகாரவர்க்க போலீசு இராணுவ நீதித்துறை அடங்கிய அரசு எந்திரம் இருந்து கொண்டு நிரந்தரமாக நிர்வாகத்தை நடத்தி வருகிறது. //

    புதிய பார்பனீயத்தின் பார்பனன் — நீதித்துறை ஆகவும் க்ஷத்ரியன் — போலீசு இராணுவ துறை ஆகவும் வைசியன் — வியாபாரிகள் அதிகாரவர்க்கம் ஆகவும் மனு தர்மம் மறு அவதாரம் எடுத்து நம் போன்ற சூத்திரர்களை ஏமாற்றி வருகிறது !!

  8. அருமையான பதிவு வினவு…
    அதுவும் மிகச்சரியான நேரத்தில்;
    சரியாக வினவியுள்ளீர்கள்

    பதவிக்கு முன்பு அனைவரும் சமம்தான்.

    ஒரு பழமொழி இருப்பதுபோல்..

    நானும் நல்லவந்தான் சந்தர்ப்பம் அமையாதவரை.

    –நட்புடன்
    மஸ்தான் ஒலி

  9. போலிகளுக்கு இன்னொரு சவுக்கடி !

    கம்யூனிசம் என்ற பெயரை வைத்து கொண்டு பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக செயல்படும்
    இந்த எதிர் புரட்சி கும்பலை அம்பலபடுத்தும் வேலையை தொடர்ந்து சிறப்பாக செய்யவேண்டும்.

  10. எது ஆபாசம்?!

    காணக் கூசுகின்றவற்றை அப்பட்டமாகக் கடைவிரிப்பதற்குப் பெயர்தான் ஆபாசம்.

    ஆபாசம் எங்கு இருக்கிறது என்று கேட்டால், நாம் எளிதில் சினிமாவையும் டி.வி. நிகழ்ச்சிகளையும் சுலபமாகப் பட்டியலிட்டுவிடலாம்.

    ஆனால், நம் பட்டியலில் இதுவரை இடப்பெற்றிறாத ஆபாசக் காட்சி ஒன்று தேர்தலுக்குத் தேர்தல் கடைவிரிக்கப்படுகிறது. அந்தக் காட்சி இரு தினங்களுக்கு முன்னதாக தமிழகத்தின் அனைத்து செய்தி, காட்சி, அச்சு ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.

    சென்னை தீவுத்திடலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நடைபெற்ற மேடை நாடகத்தில் அரங்கேறிய ஆபாசக் காட்சி நம்ம ஷகிலா, நமீதா அக்காக்களை விஞ்சுவதாக இருந்தது, தோழர்களே!

    வலது புறத்தில் சி.பி.ஐ. தா.பாண்டியன் தொடங்கி இடப்புறத்தில் சி.பி.எம். வரதராசன் வரை; இடையில் வை(சை)க்கோ, ராம(அம்மா)தாசு, நம்ம காம்ரேடுகளான து.(த்து…) ராசா, பரதன், பிரகாஷ்காரத், போன்ற கயவர்களுக்கும் கோமாளிகளுக்கும் இடையில் தமிழகத்தின் ‘அம்மா’வும் அணிவகுத்து கைகளை உயரேதூக்கி நாட்டு மக்களுக்கு பல்லைக்காட்டிய காட்சி இருக்கிறதே; இதனினும் இழிவான ஆபாசக்காட்சியை நீங்கள் வேறெங்கும் கண்டதுண்டா, தோழர்களே!

    தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வை ஆதரிப்போம் என்கிற செய்தி அம்மா முகாமிலிருந்தும் அத்துவானி முகாமிலிருந்தும் அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. மலத்திற்கு ஒப்பான இச்செய்தி நம்ம காம்ரேடுகளின் வாயில் அல்வாவைப்போல திணிக்கப்படுகிறது. காம்ரேடுகளும் எப்படியாவது மூன்றாவது அணி நம்மை ‘அந்த’ நாற்காலியில் கொண்டு சேர்க்கும் என்கிற மயக்கத்தில் இருப்பதால் இந்த கேவலங்களையெல்லாம் கண்டுகொள்ளாதது போல நடிக்கிறார்கள்.

    ஈழத்துரோகிகளும் எதிரிகளும் தேர்தல் முடியும்வரை ‘தொப்புள் கொடி….’ உறவுகளுக்காக கூப்பாடு போட்டு ஓட்டுப் பொறுக்கிக்கொண்டு, தேர்தல் முடிந்தவுடன் ஒன்று கலக்கவிருக்கிறார்கள். இத்தனை அசிங்கத்தையும், ஆபாசங்களையும் சிறிதும் சலனமின்றி நாம் பார்த்துக் கொண்டிருப்பது இழிவானது. எவன் வெற்றி பெறுவான் என்று ஜூ.வி., நக்கீரன் பத்திரிக்கைகளின் செய்திகளுக்குள் நுழைந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது தேவையற்றது. பணத்திற்காகவும் பதவிக்காகவும் எதையும் செய்யத்துணியும் இந்த ஓட்டுப் பொறுக்கிகளை சரியாக அடையாளம் கண்டு கொள்வதோடு, மக்களிடமும் அம்பலப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டிய கடமையை உணர்வோம்!

    ஏகலைவன்.

  11. பா.ஜ.க.-காங்கிரசுடன் நந்திகிராமத்தில் தொடங்கிய நக்சலிச கள்ளக்கூட்டு தமிழகத்தில் வினவு மூலமாக பரவ ஆம்பித்துள்ளது. அதைத்தான் இந்தத் தலைப்பும் பறைசாற்றுகிறது. இவ்வளவு காலமாக மதவாத எதிர்ப்பு – அணு ஒப்பந்தம் – அமெரிக்கா எதிர்ப்பு என்று காங்கிரஸ் மீது வசை பாடிய வினவு நக்சலிச கும்பல் தற்போது அவர்களுக்கு மறைமுகமாக ஒத்து ஊதும் வேலையை நன்றாகவே செய்கிறது. எப்படியிருந்தாலும் தான் ஒரு என்.ஜீ.ஓ. அமைப்புதானே அரசின் ஆதரவு இல்லாமல் காலத்தை ஓட்ட முடியாதல்லவா அதான் இப்படி பா.ஜ.க. – காங்கிரசு காலை நக்குகிறது இந்த போலி நக்சலிச கும்பல்.

    கம்யூனிசத்தை எதிர்ப்பவன் பாசிஸ்ட்டாகத்தான் இருக்க முடியும். எனவே வினவு கும்பலின் பாசிச கோயபல்சு பிரச்சாரம் காலையில் ஒரு இரயிலில் ஒரு பெரியவரால் தோலுரிக்கப்பட்டது. குளத்திற்கு பயந்து குண்டி கழுவாமல் போனால் குண்டிக்குத்தான் பிரச்சனை என்று தலையில் கொட்டியனுப்பினர். இன்னொரு பெரியவர் களத்தில் எல்லாம் குஸ்தி போடும் போது கிட்டப் போவாதே கிட்டப் போவாதேன்னு சொல்றீயே நீ எப்பத்தான் குஸ்தீ போடப்போன்னு புதிய ஜனநாயகவாதிகளை கேட்க தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டது அந்தக் கும்பல். சத்தீஸ்கரில் 18 பேர் உயிரை பறித்து பெரிய புரட்சியை செய்து விட்டது நக்சலிச கும்பல். தமிழகத்தில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்! என்ன ஓட்டுப் பெட்டிகளை தூக்கிக் கொண்டு ஓடப்போகிறீர்களா? இதுதான் புரட்சியோ! கழிவுகளின் வாரிசே வினவுதான்.

  12. The third front has no ideological commitment to fight in this election. The mentors of the front- the left parties think politics is about number game and winnability has become the ultimate aim for them. This was evident from their haste in forging alliance with BJD in Orissa and ADMK in TN. What a steep fall is this. The person who uses abusive and filthy language on the naxal tradition in the above reply too has the syndrome of taking people as fools. Who actually had licked the boots of Congress for four years. We also know the story of three dogs fighting for bread which belongs to people. Dogs can go with their fight till people get a stone. Moses who freed the Jews from the yoke of king Phraoh did not think of rest on his long march to Israel. Every night he used to think of the safe return of the jews to the promised land. I think a revolutonary party must have the will of Moses.

  13. //நேற்று நடந்த அதே பொதுக்கூட்டத்தில்… சிபிஎம் பிரகாஷ் காரத்
    “தமிழகத்தின் வெற்றிதான் டெல்லியில் ஒரு மாற்று அரசை, மதசார்பற்ற அரசை உருவாக்குவோம் என்று நம்புகிறோம்”.///

    மதச் சார்பற்ற அரசை உருவாக்க வேண்டி போன தேர்தலில் தோலர்கள் (எழுத்துப் பிழையல்ல) வெளியிட்ட பிரசூரத்தில் இருந்த வரிகள் கீழே:

    “””
    “மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற தமிழகத்தை ஆளும் செல்வி ஜெயலலிதா அம்மையார் இன்று சங் பரிவாரங்களின் ஊதுகுழலாக மாறியுள்ளார்”

    “இனப் படுகொலைக்கு பின்னரும் நரேந்திர மோடி முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஒரே முதல்வர் செல்வி ஜெயலலிதாவாகும்”

    “இது பிஜேபிக்கும், அதிமுகவுக்கும் இடையே உள்ள உறவை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது”

    (ஆதாரம்: இந்தியா: எந்த திசையில்? ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு கேட்க்கும் CPIயின் சிறு கையேடு)
    “””

    சந்திப்பு போல கூலிக்கு கூவுபவர்களுக்கு டேப்ரிக்கார்ட்ரை ஆன் ஆப் செய்வது தவிர்த்து வேறொன்றும் தெரியாது.எப்போ பார்த்தாலும் கோய்யாயிச-கொம்மாயிச-கோத்தாயிசஎன்று உளறிக் கொட்டுவார்கள். இவர்களுக்காகவே ஒரு சிறப்பு பின்னிணைப்பு:

    சேது சமுத்திரம் திட்டம் வந்தால் இந்தியாவே வல்லரசாகிவிடும்என்று தோலர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் மதச்சார்பற்ற அரசின் தானைத் தலைவியான ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில், சேது பாலத்தை அது ராமர் பாலம் என்பதால் தனது அரசு இடிக்காதுஎன்றுஎழுதியுள்ளார். இதயே திரித்து இட்டுக் கட்டி(மார்க்ஸையே திரித்தவர்களுக்கு ஜெயலலிதாஎம்மாத்திரம்) சிபிஐன் ஜனசக்திஎழுதியுள்ளது: “நவீன விஞ்ஞான முடிவுகளின் அடிப்படையில் சேது சமுத்திர திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றாது” என்றுஎழுதியுள்ளனர்.

    ராமன் பேண்ட இடம், மோண்ட இடம் இதன் அடிப்படையில் செயல்படுவது தோலர்களுக்கு நவீன விஞ்ஞானமாக தெரிகின்ற பட்சத்தில், இவர்களால் ஜெயலலிதா தலைமையில் மதசார்பற்ற அரசு அமைக்க முடியும்என்பதையும் நாம் நம்பியே தீர வேண்டும். இல்லையென்றால், நம்மையெல்லாம் கோய்யாயிச-கொம்மாயிச-கோத்தாயிச புடுங்கிகள்என்று புலம்பும் டேப்ரிக்கார்டரை ஆன் செய்து டார்ச்சர் செய்வார் சந்திப்பு.

    கலகக்காரன்

  14. தோலர் கரத்தின் மதசார்பற்ற அரசு அமைக்கும் வெறியை அவரது பின்வரும் வசனத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.

    “”
    மதசார்பற்ற அரசு அமைப்பதற்காக சிபிஎம்எதையும் செய்யும்.
    “”

    ஆனால் இதன் அர்த்தம் காங்கிரசுடன்எதிர்கால கூட்டணி சேரும் முகாந்திரத்திற்கான தயாரிப்புதான். தோலர்கள் ஜெயலலிதாவிடம் நடத்திய தேர்தல் பேர சண்டையை பார்த்த பொழுது சிபிஎம்எதையும் செய்ய தயார்தான் ஆனால் தேர்தலில் சீட்டு பேரம் படிவதில் விட்டுக் கொடுக்க மட்டும் தயார்இல்லைஎன்பதும் புரிந்தது.
    கட்டுரையின் தலைப்பு மிகப் பொருத்தமாக இருப்பதை சந்திப்பின் பொருமல் நிரூபிக்கிறது.

  15. //http://poar-parai.blogspot.com/2008/12/cpi.html// சிபிஐன் மத சார்பற்ற பித்தலாட்டத்தை மேலேயுள்ள கட்டுரையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது

  16. அம்பேத்கார் சட்டக் கல்லூரி வாசலில் தேவர் சாதி வெறியன் அடிவாங்கிய சம்பவத்தை வைத்து ஓட்டுப் பொறுக்க முடிவு செய்து களம் இறங்கியுள்ளார் தேவர் தா. பாண்டியன் ஸாரி… தோலர் தா. பாண்டியன்.ஏற்கனவே இதனை தனது பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் பேசி சாதி வெறி கிளப்பிய இந்த கம்மூனிஸ்டு தலைவர், போன வார ஜனசகதியில் (எழுத்துப் பிழையல்ல), தேவர் சாதி வெறியன் கல்லூரி வாசலில் அடிவாங்கும் புகைப்படத்தை போட்டு கட்டுரைஎழுதியுள்ளார். தேவர் சாதி வெறியர்களே அந்த சம்பவத்தை மறந்தாலும், தா. பாண்டியன் அதனை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்துவதற்கான காரணத்தை அவரது வீட்டில் கார்எரிக்கப்பட்ட போது உடனே வந்து கூட இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்ட வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவரிடம் கேட்டால் ஒருவேளை பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.ஏனேனில் அவர் தேவர் சாதி சங்கத்தைச் ேர்நத ஒரு முக்கிய பல்லி (எழுத்துப் பிழையல்ல).

    இதே போல தேவர் சாதி, ஆதிக்க சாதி வெறியர்களுடன் பல வகைகளில் கூட்டணி கண்டவர்கள்தான் சந்திப்பு கட்சியான சிபீஎம். இதனை அவர் மறுத்தால் நாம் தக்க முறையில் பதில் தந்து அம்பலப்படுத்த் தயார். இவர்கள் மதசார்பற்ற அரசு அமைப்பது இருக்கட்டும், முதலில் சாதி வெறி சார்பற்ற நடைமுறையை பழக்கத்தில் கொண்டு வர முடியுமாஎன்று முயற்சி செய்யட்டும்.

    கலகக்காரன்

  17. ஈழம் பத்தின பதிவு படித்து உங்க கருத்தை சொல்லுங்க

    ttp://sureshstories.blogspot.com/2009/04/blog-post_20.html

  18. அம்பி,

    செயா வூட்டுக்கு கழுவறதுக்கு போனாளே உங்க ஆத்துக்காரர் வருதய்யர்,பாண்டித்தேவர் எல்லாம் ,3 சீட் தந்ததுக்கே இப்படி முக்கி முக்கி கால வாயால சுத்தம் பண்ணுறீங்களே 10 சீட் தந்தா என்னன்ன செய்யுவீங்களோ.சந்திப்ப்பு குப்பத்தொட்டி விடுத்ல எல்லாம் பதில் சொல்லுங்கோ

  19. மத்த எல்லா இடத்துலயும் சாதி பாத்து வேட்பாளர்களை நிறுத்தும் சிபிஐ. தென்காசியில் தா. பாண்டியனின் சாதி வெறிக்கு தோதாக வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    தேர்தலில் பொறுக்கி தின்பதே ஒரு மோசடி, இதில் சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவது பக்கா மோசடி, இதில் தாழ்த்தப்பட்டவர்களை இழிச்சவாயர்கள் ஆக்குவது உலகமகா மோசடி. இதில் எல்லாவற்றிலும் தா. பா தலைமையில் சிபிஐயும், கரத் தலைமையில் சிபீஎம்மும் வெற்றி நடை போடுகிறார்கள்.

    http://thatstamil.oneindia.in/news/2009/04/18/tn-tenkasi-cpi-candidate-faces-the-music-from-sc.html

    தென்காசி சிபிஐ வேட்பாளருக்கு எதிராக தலித்கள் போஸ்டர்

    சங்கரன்கோவில்: தென்காசி தனி தொகுதியில் சிபிஐ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லிங்கத்திற்கு எதிராக சங்கரன்கோவிலில் தலித் பிரிவினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு நிலவுகிறது.

    தமிழ்நாடு மள்ளர் மீட்பு களம் என்ற அந்த அமைப்பு சார்பில் சங்கரன்கோவிலில் 2 விதமான போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.

    அதில், தென்காசி தொகுதியில் 3 லட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்களை கொண்ட தேவேந்திரர்களின் உரிமையை தடுத்து 30 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கும் சமுதாயத்திற்கு வாய்ப்பளித்து ஜனநாயகத்தை மீறி சர்வதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் இந்திய கம்யூ கட்சியே வேட்பாளரை மாற்று. வேட்பாளரை மாற்றாமல் தேவேந்திரர் குடியிருப்புக்குள் நுழையாதே என்று ஒரு போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மற்றொரு போஸ்டரில் மள்ளர்களின் தொகுதியாக விளங்கும் தென்காசி தொகுதியை மாற்று சாதியினரின் தொகுதியாக்கிய இந்திய கம்யூ கட்சியின் அயோக்கியதனத்தை வீழ்த்துவோம். தா.பாண்டியனின் சாதி வெறித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இவண் தமிழ்நாடு மள்ளர் மீட்பு களம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று போஸ்டரை கிழித்து அப்புறப்படுத்தினர்.

  20. ஐயா சந்திப்பு, ம.க.இ.க ஓட்டுப் பெட்டிகளை தூக்கிக் கொண்டு ஓட முடியாது ஏனென்றால் இங்க ஓட்டுப் பெட்டிகளே கிடையாது. அப்புறம் போயஸ் தோட்டத்திலிருந்து உங்களுக்கு கிடைத்த பொட்டியல் அடுத்த ஜேகே ரித்தீஸ் போலநீங்களும் நிக்கலாமே! உங்களுக்குத்தான் கொளுகையே இல்லையே?

  21. http://thatstamil.oneindia.in/news/2009/05/08/tn-cm-says-his-health-is-fine-tells-cadres-to-work.html
    தமிழகத்துக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்டுகள்…!

    கடல்சார் பல்கலைக்கழகம் தங்கள் மாநிலத்தில் அமைத்திட மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக போராடினர்.

    அக் கடல்சார் பல்கலைக்கழகத்தை, திமுகவைச் சேர்ந்த கப்பல், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தமிழ்நாட்டில் அமைத்திட நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தார்.

    தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் ஆகியோர் அந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் நாடாளுமன்ற ஓய்வு மண்டபத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.

    இது தமிழக நலனுக்காக போராடுவோம் என்று வாய்கிழிய பேசும் கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டுக்கு செய்த துரோகம் இல்லையா?

  22. ஏற்கனவே சில மாதம் முன்பு, மதச் சார்பற்ற அரசு அமைப்பதற்காக எதையும் செய்ய தயாராக இருப்பதாக சொல்லி காங்கிரசுக்கு சட்டி தூக்க இருப்பதை மறைமுகமாக காட்டினார் கரத். அதை தொடர்ந்து காங்கிரசும், கரத்தும் மாற்றி மாற்றி சில பல செண்டிமெண்டு ஸ்டேட்டுமெண்டுகளை சில வாரங்களாக விட்டனர். இப்பொழுது பூனை முழுமையாக வெளிவந்து விட்டது.

    16க்கு பிறகு காங்கிரசுக்கு சட்டி தூக்குவது குறித்து முடிவு செய்வார்களாம்.

    ஏற்கனவே இவர்களுடைய மூன்றாவது அணியில் பேர்வாதிப் பேர் காங்கிரசுக்கு ஓடத் தயாராக இருப்பவர்கள்தான். அதில் முன்னணியில் இருப்பது ஈழத் தாய் ஜெயலலிதா. எனவே மூன்றாவது அணியின் உயிரை காப்பாற்ற தோழர்கள் இந்த தியாகத்தை செய்கிறார்கள் போல உள்ளது.

    இன்னும் அந்த கட்சியில் இருக்கும் சுயமரியாதையுள்ள ஆட்களை நினைத்தால்தான் பரிதாபகரமாக உள்ளது.

    காங்கிரசுக்கு ஆதரவா?: 16க்குப் பின்னர் முடிவு-காரத்
    http://thatstamil.oneindia.in/news/2009/05/11/india-will-think-of-supporting-cong-after-may-16.html

    கொல்கத்தா: காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தரும் பேச்சுக்கே இடமில்லை என்று இது நாள் வரை கூறி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இறுதிக் கட்ட தேர்தல் நடைபெறப் போகும் கடைசிகட்டத்தில், அதுகுறித்து பரிசீலிப்போம் என இப்போது கூறியுள்ளது.

    இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் காரத், முதலில் தேர்தல் முடியட்டும். முடிவுகள் வெளியாகட்டும். மே 16ம் தேதிக்குப் பிறகு அதுகுறித்து யோசிக்கலாம்.

    அரசு அமைப்பது குறித்து இடதுசாரி கட்சிகள் அனைத்தும் சேர்ந்து முடிவெடுக்கும்.

    மத்தியில் மதச்சார்பற்ற அரசு வர வேண்டும் என்பதே இடதுசாரிகளின் நோக்கம். தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்குமே குறைவான எம்.பிக்கள்தான் கிடைப்பார்கள். எனவே மதச்சார்பற்ற அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ்தான் முடிவெடுக்க வேண்டும்.

    அதிமுக, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகியவை காங்கிரஸ் அல்லாத முன்னணியிலேயே நீடிக்கும் என நம்புகிறோம்.

    நிச்சயம் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது. அதை நாங்கள் அனுமதிக்கவம் மாட்டோம்.

    3வது அணிக்கு ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. எங்களது அணி கட்டுக் கோப்பாகவே உள்ளது. தற்போது தனியாக போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலுக்குப் பின்னர் எங்களுடன் இணையும். அனைவரும் சேர்ந்து காங்கிரஸ், பாஜகவுக்கு இணையான அணியாக உருவெடுப்போம் என்றார் காரத்.
    Tags: india, election 2009, left parties, prakash karat,

Leave a Reply to கலகக்காரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க