privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைபிக்பாஸ் இன்று என்ன பொய் சொல்வார் ? மனுஷ்யபுத்திரன்

பிக்பாஸ் இன்று என்ன பொய் சொல்வார் ? மனுஷ்யபுத்திரன்

"பிக்பாஸ் எதிரிகளைப் பார்த்து கேலியாக சிரிப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார். இப்போது பிக் பாஸ் இல்லத்தின் சுவர்களெங்கும் தன்னைப்பற்றிய கேலிச்சித்திரங்கள் நிறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்." - சீசன் 2-வில் ‘பிக்பாஸின்’ எண்ண ஓட்டங்களை அறியத்தருகிறார் மனுஷ்யபுத்திரன்!

-

பிக்பாஸை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் !

ல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த
பிக்பாஸை இப்போது எல்லோரும்
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

பிக்பாஸ் சீசன் 2-வின் முக்கிய மாற்றம்
எல்லோரும் கண்டுபயந்த பிக்பாஸ்
இப்போது எல்லோரையும் கண்டு
பயப்படுகிறார்

பிக்பாஸ்
எதிரிகள் தன்னைக்கொல்ல வருகிறார்கள்
என்று துர்க்கனவு கண்டு அலறுகிறார்
இது எத்தனையாவது முறை
என்று மக்கள் காது குடைந்தபடி
அதை கவனமின்றி கேட்கிறார்கள்

தான் தந்திரமாக
ஆட்டத்திலிருந்து வெளியேற்றிய
பழைய பங்கேற்பாளர்களை
தேடிப்போகிறார் பிக் பாஸ்
அவர்கள் குறுவாள்களுடன்
பிக்பாஸை கட்டித்தழுவுகிறார்கள்

பிக்பாஸ்
ரகசியக் கதவுகள் வழியாக
வீட்டின் ஒவ்வொரு அறையிலும் நுழைந்து
தன் அதிகாரத்தை விரிவுபடுத்திக்கொண்டேயிருந்தார்
இப்போது எதிரிகள்
அவரது அறைக்குள் நுழைய
நூறு ரகசிய வழிகளை உண்டாக்கி விட்டனர்

56 இன்ச் ’மார்பன்’

தனது ஆட்டத்தின்
ஒவ்வொரு விதியும்
இப்போது சுலபமாக மாற்றப்படுவதை
பிக்பாஸ் பார்க்கிறார்
அவரது விதியின் திசைகளில்
ஏன் திடீரெனெ காற்று
மாற்றியடிக்கிறது என்று குழம்புகிறார்.

அகன்ற மார்புகளுடன்
உரத்த குரலுடன்
அவர் தன் உத்தரவுகளை
எந்த மறுப்பும் இன்றி
பிறப்பித்துக்கொண்டிருந்தார்
இப்போது முகம் தெரியாதவர்கள்
அவரை வெல்கிறார்கள்
எந்த வெளிச்சமும் இல்லாதவர்களால்
அவர் வழிமறிக்கப்படுகிறார்

பிக்பாஸ் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்
வேறு வேறு முகமூடிகள்
அணிந்துவரக் கூடியவர்
தேச பக்த முகமூடி
வளர்ச்சியின் முகமூடி
கடைக்கோடி மனிதனின் முகமூடி
கனவானின் முகமூடி
எதேச்சதிகாரியின் முகமூடி
பரிசுத்தத்தின் முகமூடி
கடவுளின் முகமூடி

பிக்பாஸ் இல்லத்தின் பொழுதுபோக்கே
தினமும் ஒவ்வொருவரும் இந்த முகமூடிகளை
அணிந்து கேலி நாடகங்கள் நடத்துவதுதான்
பிக்பாஸ் தான் எவ்வளவு திட்டமிட்டு தயாரித்த முகமூடிகள்
மாறுவேட போட்டிகளின் ஆடைகளாவதை
அவரால் நம்ப முடியவில்லை

வழக்கம்போல
ஒரு ஆவேசமான பிரசங்கத்தை
நிகழ்த்துவதுதான் எல்லாவற்றையும்
சரி செய்யும் என பிக்பாஸ்
முடிவு செய்கிறார்
பேசத்தொடங்கியதும்
கூட்டத்திலிருந்து ஒரு பெண் கத்துகிறாள்
அவசரத்தில் மறந்துவிட்டீர்கள்
ஜிப்பை ஒழுங்காக போடுங்கள்

பிக்பாஸ் இல்லத்தின்
ஒழுங்கீனங்களை மாற்ற
தியான வகுப்பின்
ஆசிரியராக அமர்கிறார் பிக்பாஸ்
அவர் கண்களை மூடினால்
மக்கள் கண்களை திறந்துகொள்கிறார்கள்
அவர் ஆசனத்தில் அமர்ந்தால்
மக்கள் தலைகீழாக நிற்கிறார்கள்

பிக்பாஸ் இல்லத்தின் அதிருப்தியை சமாளிக்க
சிறப்புச் சலுகையாக
பெட்ரோல் விலையில்
ஒரு பைசா குறைக்கிறார்
பிக்பாஸ்
அதை மணியார்டரில்
அவருக்கே திருப்பியனுப்புகிறார்கள்

பிக்பாஸ் எல்லோர் தலையிலும்
ஒரு ரகசிய கேமிராவை வைத்துவிட்டோம்
என்று நிம்மதியாக இருந்தார்
எல்லாக் கேமிராக்களும்
இப்போது அவர் தலை நோக்கி திரும்பியிருக்கின்றன
அவர் ஒரு பழைய பொய்யை சொல்லும்போது
போரடிக்கிறது
புதியபொய் ஏதேனும் சொல்லுங்களேன்‘ ‘
என்கிறார்கள் செல்லமாக
அவர் ஒருபெயரை தவறாக சொல்கிறார்
ஒரு சம்பவத்தை தவறாக சொல்கிறார்
ஒரு வரலாற்றை தவறாகச் சொல்கிறார்
அவர் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்
தேசமெங்கும்
அலை அலையாக சிரிப்பொலி பரவுகிறது
பிக்பாஸ் இல்லத்தில்
பிக்பாஸ் இன்று என்ன பொய் சொல்வார் என
பந்தயம் கட்டி விளையாடுகிறார்கள்

பிக்பாஸ் எதிரிகளைப் பார்த்து
கேலியாக சிரிப்பதை
ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார்
இப்போது பிக் பாஸ் இல்லத்தின்
சுவர்களெங்கும் தன்னைப்பற்றிய
கேலிச்சித்திரங்கள் நிறைந்திருப்பதைக் கண்டு
அதிர்ச்சியடைகிறார்.

பிக் பாஸ் இல்லத்தில் தான் உருவாக்கிய குழப்பங்களை
தன்னால் இனி ஒருபோதும் சரிசெய்ய முடியாது என்பது
பிக்பாஸிற்கு இப்போது புரியத்தொடங்கியிருக்கிறது
அது அவரை நிம்மதியற்றவராக்குகிறது
அவர் தனக்குத்தானே ஆகாயத்தில்
ஒரு பறக்கும் விமானத்தில்
தனக்கான பிக்பாஸ் இல்லத்தை உருவாக்குகிறார்
எந்நேரமும் அதிலேயே குடியிருக்கிறார்
ஜன்னலின் வழியே
ஆகாய நீலத்தின் அச்சுறுத்தும்
வெறுமையை காண்கிறார்
தரையிரங்கும்போது
என்ன நடக்கும் என்ற சஞ்சலங்கள்
அவரை ஆட்கொள்கின்றன

பிக்பாஸ் இல்லத்திற்கு
பிக் பாஸ்
முதல்முறை வந்தபோது
அதன் வாசலில் மண்டியிட்டு
மண்ணை முத்தமிட்டார்
அதன்பிறகு
அவர் ஒருபோதும் அந்த வீட்டில் நுழைய
விரும்பியதே இல்லை

இப்போது இந்த சீசன் 2 வின் முடிவில்
அந்த வீட்டின் கதவுகள்
தனக்கு இனி
நிரந்தரமாக மூடப்பட்டுவிடுமோ
என்று அவ்வளவு பயப்படுகிறார்

பிக்பாஸ் இல்லத்தில்
சீசன் 2 வில்
பிக்பாஸிற்கு எதிராக
விரிவான ரகசிய திட்டங்கள் தீட்டப்படுகின்றன
பிக்பாஸ் இப்போது பாதுகாப்பற்று உணர்வதுபோல
வேறெப்போதும் உணர்ந்ததில்லை.

நன்றி: மனுஷ்யபுத்திரன்

  1. இந்த பிக் பாஸ் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு தனது ஜெகஜ்ஜால ஊழல் வித்தைகள் மூலம் மறைமுகமாக வழி ஏற்படுத்தி கொடுத்ததோடு சமச்சீர் கல்வி என்னும் தண்டத்தை கொண்டு வந்து மாணவர்களின் தலையில் கட்டி ஒரு பதிமூன்று ஆண்டு காலம் தமிழ்நாட்டை நாறடித்த வாழும் வள்ளுவத்தைப் பற்றியும் யாராவது கவிதை எழுதி தொலைத்தால் தேவலை.

  2. Mr.Periyaswamy what is the problem with “சமச்சீர் கல்வி “?
    You know what is the cut off mark in NEET-86 that is less than 12%.
    -35 (Minus 35) is the cut off in JEE.
    We know what was the Matriculation syllabus.At the school level you want PRIVATE SCHOOL but at college level GOVERNMENT COLLEGES,specially in Medical college and Engineering in ANNA University

  3. //We have built airports in areas where previous govts. failed to build roads: Modi//
    This is the latest lie from our Prime Minister.
    All our north Eastern States and border states have Airports(Before building roads) not from Congress periods only.
    Even before Independence

  4. நீட் என்பது அடிப்படையில் நெகட்டிவ் மதிப்பெண்கள் கொண்ட ஒரு போட்டி தேர்வு. பிளஸ் டூ தேர்வு என்பது தகுதிகாண் தேர்வு. ஆகவே தகுதிகாண் தேர்வு மதிப்பெண்களை போட்டித் தேர்வு மதிப்பெண்களோடு ஒப்பிடுவது அடிப்படையிலேயே தவறு. ப்ளஸ் ஒன் பாடத்தையே படிக்காமல் பிளஸ்2 பாடத்தை இரண்டு ஆண்டுகள் மனப்பாடம் செய்து 1200க்கு 1100 க்கு மேல் மார்க் எடுக்கும் மோசமான கல்வி முறை உலகில் வேறு எங்குமே இல்லை. இந்த சமச்சீர் கல்வியில் தான் இதெல்லாம் நடக்கும். மேலும் சமச்சீர் கல்வியில் படித்த மாணவர்கள் உயர் படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் மாநில அரசின் நிறுவனங்களையே சுற்றி சுற்றி வரவேண்டிய அவல நிலை. வேறு எங்கும் போக முடியாது. இந்த மோசமான கல்வி முறையால் நம் மாநிலத்துக்குள்ளேயே இருக்கக்கூடிய மத்திய அரசு நிறுவனங்களில் கூட நம் மாநில மக்கள் இடம்பெறுவதற்கு இயலாமல் உள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த மாதிரி ஒரு மோசமான நிலை இல்லை. மொக்கையான மனப்பாடத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்விமுறையை மோசம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

  5. ஒரு மாநிலத்தில் அரசுப்பள்ளி ஆனாலும் தனியார் பள்ளி ஆனாலும் ஒரே ஒரு பாடத்திட்டம் தான் இருக்க வேண்டும் என்பது சரியான எண்ணம் தான். அது வரவேற்கத்தக்க கொள்கை. ஆனால் அந்த பாடத்திட்டம் அண்டை மாநிலங்களோடு கூட ஒப்பிட தகுதி இல்லாத ஒன்றாக இருக்க வேண்டும் என யார் சொன்னது?

  6. //நீட் என்பது அடிப்படையில் நெகட்டிவ் மதிப்பெண்கள் கொண்ட ஒரு போட்டி//
    But cut off should not be in NEGATIVE SCORE or as low as 12%.
    In an Old Tamil cinema Mr.Nagesh had few children and not able to meet family expenditure.
    He seeks a Doctor advise what to do? to “Not to have further child”
    Doctor tells in the cinema-Don’t do any thing -you will not have any further child.
    The same thing here – You don’t answer any question than you get 35 marks more than cut off of -35 (Minus thirty five of JEE cutoff)

    //ப்ளஸ் ஒன் பாடத்தையே படிக்காமல் பிளஸ்2 பாடத்தை இரண்டு ஆண்டுகள் மனப்பாடம் செய்து…//
    This was with the problem of private schools not of Government schools.
    Now ப்ளஸ் ஒன் also has Board examination.These marks taken for merit now.

    //மற்ற மாநிலங்களில் இந்த மாதிரி ஒரு மோசமான நிலை இல்லை.//

    Yes all UP,Bihar ,Odisha and Assamesse become CONSTRUCTION DOCTORS in our Chennai and suburbs high rise buildings.
    And also they all become SECURITY ENGINEERS in Tamil nadu

  7. //நீட் என்பது அடிப்படையில் நெகட்டிவ் மதிப்பெண்கள் கொண்ட ஒரு போட்டி//
    But cut off should not be in NEGATIVE SCORE or as low as 12%.
    In an Old Tamil cinema Mr.Nagesh had few children and not able to meet family expenditure.
    He seeks a Doctor advise what to do? to “Not to have further child”
    Doctor tells in the cinema-Don’t do any thing -you will not have any further child.
    The same thing here – You don’t answer any question than you get 35 marks more than cut off of -35 (Minus thirty five of JEE cutoff)

    //ப்ளஸ் ஒன் பாடத்தையே படிக்காமல் பிளஸ்2 பாடத்தை இரண்டு ஆண்டுகள் மனப்பாடம் செய்து…//
    This was with the problem of private schools not of Government schools.
    Now ப்ளஸ் ஒன் also has Board examination.These marks taken for merit now.

    //மற்ற மாநிலங்களில் இந்த மாதிரி ஒரு மோசமான நிலை இல்லை.//

    Yes all UP,Bihar ,Odisha and Assamesse become CONSTRUCTION DOCTORS in our Chennai and suburbs high rise buildings.
    And also they all become SECURITY ENGINEERS in Tamil nadu

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க