Wednesday, June 7, 2023
முகப்புகுமுதத்தின் ராகுல்காந்தி ENCOUNTERED BY வினவு !
Array

குமுதத்தின் ராகுல்காந்தி ENCOUNTERED BY வினவு !

-

ராகுல் காந்தி

விடைபெறுகிறார் பிரபாகரன் என்று அவருக்கு 83 ஆம் பக்கத்தை ஒதுக்கியிருக்கும் குமதம் காங்கிரசின் குலக்கொழுந்தும், ராஜீவ் – சோனியாவின் பட்டத்து இளவரசரும், இந்தியாவின் அடுத்த பிரதமருமான ராகுல் காந்தியின் பத்து மேன்மைகளை 2ஆம் பக்கத்தில் வெளியிட்டு யாருக்கு முதலிடம் என்பதில் நன்றி விசுவாசத்தைக் காட்டியிருக்கிறது. குமுதத்தின் அந்த பத்து வரலாற்றுப் புகழ்மிக்க சாதனைகளை வினவு என்கவுண்டர் செய்கிறது.

குமுதம்: டெல்லியில் உள்ள ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படிக்க ராகுலுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இடம் கிடைத்ததாம்.

வினவு: இதனால் ராகுல் எந்த விளையாட்டில், எந்த இந்திய அணியில் விளையாடினார் என்று  தேடாதீர்கள். பிரதமரின் பிள்ளையை நன்கொடை வாங்கி சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகத்திற்கு பயமிருந்திருக்கும் என்பதால் இந்த ஸ்போர்ட்ஸ் கோட்டா!

குமுதம்: உங்களுக்கு ராகுல்வின்சியைத் தெரியுமா? இது ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு ராகுல் கொடுத்த பெயர். ராகுல் காந்தி என்றால் எல்லோருக்கும் தெரிந்து விடும் என்பதால் இந்த மாற்றமாம்.

வினவு: ராகுல் காந்தி படிப்பில் மகாமட்டம் என்பது உலகறிந்த விசயம். இதில் ஹார்வர்டில் எப்படிச் சேர்த்துக் கொண்டார்கள் என்பதும் மகா ரகசியம். இந்த தலைமறைவு வாழ்க்கையில் அவர் தனது கொலம்பியா தோழியுடன் ஊர்சுற்றி விட்டு இப்போது பிரதமர் இமேஜூக்குகாக அந்த அப்பாவிப் பெண்ணை கழட்டி  விட்டதாக அறிகிறோம். உண்மையா?

குமுதம்: விமானப் பயணங்களின் போது ராகுல் மறக்காமல் எடுத்துச் செல்வது புத்தகங்கள். அரசியல், வரலாறு, பன்னாட்டு உறவுகள் உட்பட சற்று கனமான டாபிக்குகள் ராகுலின் சாய்ஸ்.

வினவு: தமிழ் சினிமா ஷூட்டிங்குகளில் நடிகைகள் ஆங்கிலமே தெரியாவிட்டாலும் பந்தாவுக்காக ஆங்கில கிரைம் நாவல்களைப் படிப்பதாக பேட்டியில் அளப்பார்கள். கல்லூரியின் பாபா பிளக்ஷிப் பாடத்திட்டத்தை படிப்பதற்கே ஸ்போர்ட்ஸ் கோட்டா தேவைப்பட்டவர் இப்படி கண்ட கண்ட கனதியானதை எல்லாம் படிக்கிறார் என்றால்…..?

குமுதம்: வெளிநாடுகளில் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பியபோது அவரது ஆசை மும்பையில் ஒரு அவுட் சோர்ஸிங் கம்பெனி நடத்த வேண்டும் என்பதுதான்.

வினவு: காங்கிரசு ஆட்சியில் இந்தியாவையே முழுதாக விற்றுவிட்டு அவுட்சோர்சிங் செய்கின்ற வேளையில் ராகுல் அந்த சின்ன ஆசையை மறந்ததில் என்ன வியப்பு?

குமுதம்: நிருபர்களுக்கு ராகுல் ‘நோ கமெண்ட்ஸ்’ சொல்கிற ஒரே கேள்வி, “அமிதாப்பச்சன் பற்றி என்ன நினைக்கிறீங்க?” அமிதாப் குடும்பம் என்றாலே ராகுலுக்கு அல்ர்ஜியாம்.

வினவு: டாடி இந்திய அமைதிப் படையை ஈழத்திற்கு அனுப்பி எத்தனை தமிழ் மக்களைக் கொன்றார் என்று கேட்டால் அவருக்கு அலர்ஜி இல்லாமல் போகுமா என்ன?

குமுதம்: அரசியலில் இல்லாத தனது நண்பர்கள் மூலம் உத்தரப் பிரதேசத்தில் அடிக்கடி ரகசிய கருத்துக் கணிப்புகள் நடத்தி, மக்களின் நாடி பிடித்துப் பார்ப்பது ராகுலின் வழக்கம்.

வினவு: செட்டி நாட்டு சிதம்பரத்திற்காக தேர்தல் பரப்புரை செய்ய சிவகங்கை வந்த ராகுலுக்கு எமது தோழர்கள் கருப்புக்கொடி காண்பித்து முழக்கமிட்டதும் அவரது பேர்&லவ்லி முகம் இருண்டுபோனது. அடுத்த முறை இங்கும் கணிப்பு எடுத்து விட்டு வரவும்.

குமுதம்: மிதுன ராசிக்காரரான ராகுலுக்கு வாட்ச், மோதிரம் அணிவதில் விருப்பம் கிடையாது. அக்கா கட்டிய ராக்கியை தனது சென்டிமெண்ட்டாக நினைத்து தேர்தலின்போது அணிந்திருந்தார்.

வினவு: தங்கை பிரியங்காவை அக்காவாக குமுதம் ஏதோ தமிழ்நாட்டு அக்காவை நினைத்து எழுதிவிட்டது போலும். போகட்டும். தங்கை பாட்டி இந்திராவின் சேலையை சென்டிமெண்ட்டாக அணிந்து தேர்தல் பரப்புரை செய்து எல்லோரிடமும் இதுதான் இந்திரா சேலை என பீற்றினாராம். அதுபோல அப்பாவின் குர்தாவை ராகுல் அணியலாம். இதையெல்லாம் நியூசாக்கி காசு பார்ப்பதற்கு இளித்தவாய இந்தியர்கள்தான் இருக்கிறார்களே.

குமுதம்: அக்கா பிரியங்கா காந்தியின் செல்லக் குழந்தைகள் மிராயாவும், ரைகானும்தான் ராகுலின் ஃபேவரைட் புஜ்ஜிமாக்கள்.

வினவு: பின்னே ஈழத்தில் பெற்றோரை குண்டுவீச்சில் இழந்து கதறிக்கொண்டிருக்கும் குழந்தைகளா அவருக்கு பிடிக்கும்?

குமுதம்: ராகுலுக்குப் பிடித்த விளையாட்டுகள் ஸ்குவாஷூம், செஸ்ஸும், ஸ்கூபா டைவிங்கும்.

வினவு: டாடிக்கு விமானம் ஓட்டுவது பிடிக்கும். மம்மிக்கு என்ன பிடிக்கும்?….சிங்கள விமானங்கள் போடும் குண்டுகள்…..?

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

  1. குமுதத்தின் ராகுல்காந்தி ENCOUNTERED BY வினவு ! -…

    விடைபெறுகிறார் பிரபாகரன் என்று அவருக்கு 83 ஆம் பக்கத்தை ஒதுக்கியிருக்கும் குமதம் காங்கிரசின…

  2. // குமுதம்: உங்களுக்கு ராகுல்வின்சியைத் தெரியுமா? இது ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு ராகுல் கொடுத்த பெயர். ராகுல் காந்தி என்றால் எல்லோருக்கும் தெரிந்து விடும் என்பதால் இந்த மாற்றமாம்.//
    ராகுல்வின்சி என்ற ஐரோப்பிய கடவு சீட்டில்தான் ஐயா இதுநாள் வரை உலகம் சுற்றினார், அந்த பெயரைதான் படிக்கவும் கொடுக்க முடியும். இதான் விஷயம், பாதுகாப்பு என்பதெல்லாம் சும்மா! இந்தியன் என்றால் உலகம் சுற்ற நிறைய விசா முறைகள் உண்டு, இன்றும் அவர் இத்தாலி குடிமகன்!

  3. வா பகையே… வா…
    வந்தெம் நெஞ்சேறி மிதி.
    பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
    வேரைத் தழித்து வீழ்த்து.
    ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
    நினைவில் கொள்!”
    ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
    ஆயினும் போரது நீறும், புலி
    ஆடும் கொடி நிலம் ஆறும்.
    பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
    பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
    பைகளும் ஆயுதம் ஏந்தும்.
    மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
    மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
    சிங்கள கூட்டங்கள் ஓடும்.
    Paaya Theriyum.Pathunga Theriyum.Payapada Theriyaathu.
    Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.
    ( Nile Raja )

  4. நீண்ட நாட்களுக்கு பிறகு, சிரித்தப் பதிவு. இதற்கு முன்பு ஜெயமோகனும், சாருவும் குலைத்து கொண்ட பதிவு நினைவுக்கு வந்தது. இப்படி அடிக்கடி எழுதுங்கள்.

    இந்த தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது… அப்பா போலவே இமிடேட் செய்ய டிரையினிங் எடுத்தாராம்.

    இப்படி பட்ட ராகுல் வருங்கால பிரதமர் என்பது நினைத்துப் பார்க்க முடியவில்லை. ராசுக்குட்டி படத்தில் செம்புலி சொன்ன வசனம் தான் நினைவுக்கு வருகிறது. அப்படி ஒரு நிலை வந்தால்… வராது… ஒருவேளை வந்தால்.. குண்டு கட்டி குதிச்சுடுவேன்.

  5. இது என்ன வேலையத்த வேலையாக இருக்கிறதே! இந்த மாதிரி பதிவுகளை எழுதி ஏன் உங்கள் நேரத்தையும் எங்கள் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்? இதையா வினவிடமிருந்து எதிர்பார்க்கிறோம்?

    • இந்தத் திரு RV யைப் பார்த்தாலே அலர்யியாக இருக்குதுங்கோ. தொல்லை தாங்க முடியல்லை. இப்பிடியும் ஒரு தமிழனா.

      • ஆர்.வி. இந்த தளத்தில் எங்கேயும் தன்னை தமிழனாய் அடையாளப்படுத்தியதாய் எனக்கு நினைவில்லை.

      • நன்றி இரங்குவோன் அவர்களே! இவர் இன்னுமொரு கிந்திக்காரரோ அல்லது பார்பனரோ எல்லாம் அந்த ……. வெளிச்சம்.

    • நான் நேரடியாகவே கேட்கிறேன் இந்திய , ஒரு திருத்தம் கிந்திய அரசுகள் தமிழினம் மேல் செய்த கொடுமைகளுக்கு இந்தப் பாப்பான்களும் காரணம் என்பதனையாவது உங்களால் புரிய முடியமா? அண்ணாவை அடக்கியது போல் பிரபாகரனை அழித்தாயிற்று(உங்கள் கூற்றுக்கமைய)இனியென்ன என்று நிம்மதியாக இந்திய வடநாட்டு ஆதிக்க வர்க்கம் மகிழலாம். ஆனால் தமிழினத்தினது சுயநிர்ண உரிமைக்கான போரை உலக அரங்கிலே பல பிரபாகரன்கள் முன்னெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்!

      • கவிஞர் தாமரை சொன்னது.
        “போரில் 50 பேர் பலியானார்கள்!
        500 பேர் புலியானார்கள்!”

  6. நீங்கள் என்னதான் கிண்டல் அடித்தாலும் அவர் அடுத்த இந்திய பிரதமர்.உங்களை போல் உள்ளவர்கள் புலம்பி கொண்டே இருக்க வேண்டியதுதான்.

    • அவர் ஆவுறது ஒருபுறம் இருக்கட்டும். இதுல உங்க கருத்து என்ன? ராகுல் பிரதமர்னா ஓட்டு போட்டு ஆதரிப்பீங்களா? எதிர்ப்பீர்களா?

    • சரி ஃபைசல் அவர்களே! ‘எங்களைப்போல்’ உள்ளவர்கள் புலம்பிக்கொண்டிருப்பதாகவே இருக்கட்டும். ‘உங்களை’ப்போன்றவர்கள் என்ன செய்வதாய் உத்தேசம்? உருப்படியாய் ஏதாவது இருந்தால் ‘எங்களைப்போன்றவர்களும்’ தயங்காமல் ”’உங்களை’ப்போன்றவர்களோடு” சேர்ந்து செயல்படத்தயார்!

      • கலைஞர் வீட்டு கன்றுக்குட்டி அடுத்த தமிழக முதல்வர்!
        நேரு வீட்டு நாய்க்குட்டி அடுத்த பாரதப்பிரதமர்!
        என்னே ஜனநாயகம்!

  7. சிவப்பா இருக்காரு, நாட்டுக்கு உயிரைக் கொடுத்த ராஜீவ் மகன், நல்லவராத் தான் இருப்பாருன்னு பல பேரு வோட்டு போடுற வரைக்கும் இந்த ராகுல், பேகுல் எல்லாத்தையும் நாம சகிச்சுக்க வேண்டியது தான்.

    • என்னது… ராஜீவ் நாட்டுக்காக உயிரைக்கொடுத்தாரா?

  8. //குமுதம்: அக்கா பிரியங்கா காந்தியின் செல்லக் குழந்தைகள் மிராயாவும், ரைகானும்தான் ராகுலின் ஃபேவரைட் புஜ்ஜிமாக்கள்.

    வினவு: பின்னே ஈழத்தில் பெற்றோரை குண்டுவீச்சில் இழந்து கதறிக்கொண்டிருக்கும் குழந்தைகளா அவருக்கு பிடிக்கும்?

    குமுதம்: ராகுலுக்குப் பிடித்த விளையாட்டுகள் ஸ்குவாஷூம், செஸ்ஸும், ஸ்கூபா டைவிங்கும்.

    வினவு: டாடிக்கு விமானம் ஓட்டுவது பிடிக்கும். மம்மிக்கு என்ன பிடிக்கும்?….சிங்கள விமானங்கள் போடும் குண்டுகள்…..?//

    இது இரண்டும் சூப்பர்!

    • ஹிந்துவை எரித்தவர்களின் முகவரி தேவை. குமுதம் பற்றி பேசவேண்டியிருக்கிறது.
      (கருத்துரிமை காவலர்களான ஆர்வி முதலியவர்கள் வரிந்துகட்டிக்கொண்டு வரப்போகிறார்கள்)

  9. Dear Mr RV, Sattire is a integral part of alternative politics and vital for revolutinaries ! Try to interpret in that perspective ! Even, if its a waste of time, as you claim(!) , you could have as well stopped reading it as soon as u realised (may be after reading 2 or 3 lines) its a waste of ur time ! What made you read the whole article ?

    • யாழினி, இதற்கு பேர் சடையரா? நீங்கள் இதை சடையர் என்று சொல்வதுதான் கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கிறது.

  10. //’கலைஞர் வீட்டு கன்றுக்குட்டி அடுத்த தமிழக முதல்வர்!
    நேரு வீட்டு நாய்க்குட்டி அடுத்த பாரதப்பிரதமர்!
    என்னே ஜனநாயகம்!//
    ப.சி. வீட்டு …குட்டி அடுத்த மத்திய மந்திரி.

  11. You Are Posting Really Great Articles… Keep It Up…

    We recently have launched a website called “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
    http://www.namkural.com.

    நன்றிகள் பல…

    – நம் குரல்

  12. Dear RV, The more perspective you gain, the more you understand the sattire ! You are stuck in a pre conceived notion about vinavu (their standpoint) and try to interpret that way ! Hence, the gap in understanding ! Read More… Attain a perspective that would convince you own self first… that seems to be missing !

    • யாழினி,

      நீங்கள் கவுண்டமணி டேய் முள்ளம்பன்றித்தலையா என்று கூப்பிட்டால் விழுந்து விழுந்து சிரிக்கும் டைப் போலிருக்கிறது. அடுத்தவரை வெறுமே திட்டுவது சடையர் இல்லை. சரி சிரித்துக் கொள்ளுங்கள், அது உங்கள் உரிமை. அதற்காக மற்றவர்களும் அதை ரசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

      இந்த தளத்தில் என் மனநிலையை பற்றி நிறைய ஃப்ரீ அட்வைஸ் கிடைக்கிறது. இல்லாவிட்டால் நான் எங்கே வசிக்கிறேன், நான் தமிழனா, ஹிந்திக்காரனா, சீனனா, நான் வளர்ந்த சூழ்நிலை என்ன, என் பிறப்பு, அட நான் கருவுற்ற நேரத்தை பற்றி கூட பல வித யூகங்கள். கருத்துகளுக்கு பதில் சொல்பவர்கள்தான் குறைவாக இருக்கிறார்கள். முடிந்தால் என் கருத்துகளுக்கு பதில் சொல்லுங்கள். இசைவு ஏற்பட்டால் மிக நல்லது. இசைவு ஏற்பட வழி இல்லை என்றால் அதை ஏற்றுக்கொண்டு மேலே நடப்போம். இந்த சிம்பிள் விஷயம் கூட புரியாது என்றால் நான் மேலே நடக்கிறேன், எனக்கு வேறு வேலை இருக்கிறது.

      • ஆர் வி,

        அடுத்த பிரதமர் எனப் புகழப்படும் ராகுல் காந்தியின் ஆளுமையை அவரைப் பற்றி புகழ்ந்துரைக்கப்படும் செய்திகளிலிருந்தே வடிகட்டி தந்திருக்கிறோம். இதில் நீங்கள் எதில் மாறுபடுகீறீர்கள், அல்லது ராகுல் காந்தியை உங்கள் அபிமானத் தலைவராக எற்றுக்கொண்டீர்கள் என்றால் ஏன் என விளக்கலாமே? இதை விட்டு நகைச்சுவை ப்ற்றிய வகுப்பும், உங்களைப்பற்றிய கழிவிரக்கமும் எதற்கு?

        நட்புடன்
        வினவு

      • Vinavu,
        //அடுத்த பிரதமர் எனப் புகழப்படும் ராகுல் காந்தியின் ஆளுமையை அவரைப் பற்றி புகழ்ந்துரைக்கப்படும் செய்திகளிலிருந்தே வடிகட்டி தந்திருக்கிறோம்.//

        oruvarai ippadi thaan pugazhnthuraippargala!!!!! allathu, Ivai Rahulin Pugal entru kumutham varaiyaruthullatha?

  13. வினவு,

    // இதில் நீங்கள் எதில் மாறுபடுகீறீர்கள்,… //
    இசைவு தெரிவிப்பதற்கோ, மாறுபடுவதற்கோ இந்த பதிவில் நீங்கள் என்ன கருத்தை எழுதி இருக்கிறீர்கள்? கவுண்டமணி செந்திலை முள்ளம்பன்றித்தலையா என்று திட்டினால் அதில் என்ன கருத்து இருக்கிறதோ அவ்வளவுதான் இங்கேயும் இருக்கிறது என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன். நீங்கள் மீண்டும் என் கருத்தை கேட்கிறீர்கள்.

    உங்கள் கண்ணில் இது நகைச்சுவை; யாழினியின் கண்ணில் இது நகைச்சுவையை வெளிப்படுத்தும் சடையர்; என் கண்ணில் இது ஒரு கொடுமை. இந்த பதிவுக்கு பதில் எழுதினால் உங்கள் “நகைச்சுவையின்” தரத்தை பற்றிதான் எழுதமுடியும்.

    // இதை விட்டு நகைச்சுவை ப்ற்றிய வகுப்பும், உங்களைப்பற்றிய கழிவிரக்கமும் எதற்கு? //
    யாழினி இது ஒரு சடையர் என்று எனக்கு விளக்குகிறார்; சடையர் எந்த விதத்தில் பயன்படுத்தப்படும் என்று வக்குப்பு எடுக்கிறார்; இதை எப்படி படிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுக்கிறார். இது ஒரு சடையராக எனக்கு தெரியவில்லை என்று சொன்னால் நான் உங்கள் குழுவை பற்றி என்ன நினைக்கிறேன், நகைச்சுவையை பற்றி என்னுடைய புரிதலில் உள்ள குறைப்பாடுகளை எப்படி நீக்கலாம் என்று வகுப்பு எடுக்கிறார். ஆனால் நீங்கள் நான் நகைச்சுவை பற்றி வகுப்பு எடுக்கிறேன் என்று எழுதுகிறீர்கள். எழுதுவதற்கு முன்னால் என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது என்று படியுங்கள்!

    கழிவிரக்கமா? நான் என்ன கலைஞரா? யாழினிக்கு சடையர் என்றால் என்னவென்று தெரியவில்லை, உங்களுக்கு கழிவிரக்கம் என்றால் என்னவென்று தெரியவில்லை.

    • // இசைவு தெரிவிப்பதற்கோ, மாறுபடுவதற்கோ இந்த பதிவில் நீங்கள் என்ன கருத்தை எழுதி இருக்கிறீர்கள்? கவுண்டமணி செந்திலை முள்ளம்பன்றித்தலையா என்று திட்டினால் அதில் என்ன கருத்து இருக்கிறதோ அவ்வளவுதான் இங்கேயும் இருக்கிறது //

      அபாண்டம், அவதூறு…..!!!

      நட்புடன்
      வினவு

  14. Dear RV, இதில் நீங்கள் எதில் மாறுபடுகீறீர்கள், அல்லது ராகுல் காந்தியை உங்கள் அபிமானத் தலைவராக எற்றுக்கொண்டீர்கள் என்றால் ஏன் என விளக்கலாமே? — ??Apart from your comments on my imposition of thoughts and lecturing etc., Why not we get into this healthy discussion.

  15. ராகுல் தன சகோதரி கட்டிய ராகியை வைத்திருப்பதும, சகோதரி குழந்தைகளிடம் பிரியமாக இருப்பதும் உங்களால் இந்த பதிவில் தவறாக பேசப்படுகிறது. அவர் அமிதாபை பற்றிய கேள்விக்கு நோ கமென்ட் என்று சொன்னால் அதற்கு காரணம் இலங்கை அலர்ஜி என்று மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள். இதற்கும் முள்ளம்பன்றித்தலையாவுக்கும் என்ன வித்தியாசம்? அவதூறு மட்டுமே நிறைந்த இந்த பதிவுக்கு அப்புறம் எப்படி வக்காலத்து வேறு வாங்குகிறீர்கள்? சுட்டிக் காட்டினால் அது அவதூறு ஆகிவிடுகிறது!

    யாழினி, மாறுபட என்ன இருக்கிறது இந்த பதிவில் என்று மூன்றாவது முறையாக கேட்கிறேன். சும்மா திட்டுவது நகைச்சுவை இல்லை என்று சொல்லிவிட்டேன். இதற்கு மேல் எப்படி புரியவைப்பது என்று எனக்கு தெரியவில்லை. ராகுல் காந்தி இது வரை செய்திருப்பது இந்த தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசை மீண்டும் கொஞ்சம் நிற்க வைத்திருப்பதுதான். அதை பற்றி பெரிதாக சொல்ல எதுவுமில்லை. பொறுத்திருந்துதான் அவர் என்ன செய்கிறார் என்று பார்க்க வேண்டும்.

    • Dear RV,

      Why don’t you include these following items also?

      ///குமுதம்: ராகுலுக்குப் பிடித்த விளையாட்டுகள் ஸ்குவாஷூம், செஸ்ஸும், ஸ்கூபா டைவிங்கும்.

      வினவு: டாடிக்கு விமானம் ஓட்டுவது பிடிக்கும். மம்மிக்கு என்ன பிடிக்கும்?….சிங்கள விமானங்கள் போடும் குண்டுகள்…..?////

      ////குமுதம்: விமானப் பயணங்களின் போது ராகுல் மறக்காமல் எடுத்துச் செல்வது புத்தகங்கள். அரசியல், வரலாறு, பன்னாட்டு உறவுகள் உட்பட சற்று கனமான டாபிக்குகள் ராகுலின் சாய்ஸ்.

      வினவு: தமிழ் சினிமா ஷூட்டிங்குகளில் நடிகைகள் ஆங்கிலமே தெரியாவிட்டாலும் பந்தாவுக்காக ஆங்கில கிரைம் நாவல்களைப் படிப்பதாக பேட்டியில் அளப்பார்கள். கல்லூரியின் பாபா பிளக்ஷிப் பாடத்திட்டத்தை படிப்பதற்கே ஸ்போர்ட்ஸ் கோட்டா தேவைப்பட்டவர் இப்படி கண்ட கண்ட கனதியானதை எல்லாம் படிக்கிறார் என்றால்…..?/////

      ////
      குமுதம்: உங்களுக்கு ராகுல்வின்சியைத் தெரியுமா? இது ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு ராகுல் கொடுத்த பெயர். ராகுல் காந்தி என்றால் எல்லோருக்கும் தெரிந்து விடும் என்பதால் இந்த மாற்றமாம்.

      வினவு: ராகுல் காந்தி படிப்பில் மகாமட்டம் என்பது உலகறிந்த விசயம். இதில் ஹார்வர்டில் எப்படிச் சேர்த்துக் கொண்டார்கள் என்பதும் மகா ரகசியம். இந்த தலைமறைவு வாழ்க்கையில் அவர் தனது கொலம்பியா தோழியுடன் ஊர்சுற்றி விட்டு இப்போது பிரதமர் இமேஜூக்குகாக அந்த அப்பாவிப் பெண்ணை கழட்டி விட்டதாக அறிகிறோம். உண்மையா?/////

      Am I correct?

    • ஆர்வீ ஒரு அரை கிறுக்கு !
      புத்தியில்லாத பெரும்பான்மையான பிராமின்களை போலவே எழுதுகிறார்

  16. Rahul did M.Phil from Cambrige University. At college level sports quota is often an excuse to give admission to the applicants influential families who will not have good marks. Stephens is no exception.It is a minority institution.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க