முகப்புஏழ்மையை ஒழிப்பானாம் சினிமா கந்தசாமி !
Array

ஏழ்மையை ஒழிப்பானாம் சினிமா கந்தசாமி !

-

கந்தசாமி

(படத்தை பெரியதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்)

“ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்தியாவின் கருப்புப் பணம் அறுபத்துநான்கு இலட்சம் கோடிகள் பற்றிய செய்தி ஒரு பக்கம். வறுமையின் கொடுமையால் தனது மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட ஏழ்மைத் தாயைப் பற்றிய செய்தி மறுபக்கம். உலகிலுள்ள ஏழை மக்களில் முப்பது சதவிகிதம் இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்றொரு அதிர்ச்சி செய்தி வேறொரு பக்கம். செய்தித்தாள்களில் இந்தச் செய்திகளையெல்லாம் பார்க்கும் போது இந்தக் கொடிய ஏழ்மையையும், ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே வளமையில் செழிப்பதையும் மாற்ற, ஒரு சூப்பர் ஹீரோ பிறக்க மாட்டானா என்ற அதீத ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இந்தப் படம். இந்தியாவின் ஏழ்மையைப் போக்க முடியுமென நிரூபித்துக் காட்டும் செல்லூலாய்ட் அவதாரம்தான் இந்த ‘கந்தசாமி’ ” என்கிறார் இயக்குநர் சுசி கணேசன், குமுதம் இதழில்.

ஏழ்மையை இதற்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது என்பது ஒருபுறமிருக்க, ஏழைகளின் அவலத்தை துடைக்க வந்த இந்த சினிமாவின் பட்ஜெட்டும் ஏழைகளைப் போல இருக்கும் என நீங்கள் நினைத்தால் தவறு.

இதற்கு இயக்குநர் என்ன கூறுகிறார் என்றால் கதையே பிரம்மாண்டத்தை டிமாண்ட் பண்ணும் கமர்ஷியலான கதையாம். ஏழைகளை கடைத்தேற்ற வந்த நாயகன் விக்ரமின் காஸ்ட்யூமிற்கு மட்டும் முக்கால் கோடி, ஏழைகளுக்கு தொண்டு புரியும் நாயகனை குஷிப்படுத்தும் ஸ்ரேயாவின் கர்ச்சீப் துணி காஸ்ட்யூம் ஒண்ணேகால் கோடி, இருவரும் டூயட் பாடும் மெக்சிகோ ஷூட்டிங்கிற்கு எட்டுக்கோடி, இத்தாலி படப்பிடிப்பிற்கு இரண்டு கோடி, ஏழ்மையை க்ராபிக்ஸ்ஸில் காட்டுவதற்கு மூன்று கோடி இப்படி ஏழைப்பங்காளான் கந்தசாமியின் மெகா பட்ஜெட் நீள்கிறது. எதையும் பிரம்மாண்டமாக நடத்திக்காட்டும் தாணு இந்தக் கருமத்தின் பாடல் வெளியீட்டிற்காக இத்தாலியிலிருந்து அழகிகளை குத்தாட்டம் ஆடுவதற்காக கொண்டு வருகிறாராம்.

கந்தசாமி எனும் சூப்பர்மேன் கோலத்தில் விகரம் எதையே முறைத்துப் பார்க்க பக்கத்தில் அடுத்தவன் கண்ணீரை துடைப்பவனே கடவுள் என்ற தலைப்பில் இந்தப் படத்திற்காக வரும் விளம்பரங்களை நீங்களும் பார்த்திருக்கலாம். அதில் பூஜையன்று இந்த படக்குழு இரண்டு கிராமங்களை தத்து எடுத்ததையும், பாடல் வெளியீடன்று முப்பது கிராமங்களை முப்பது வி.ஐ.பிகள் தத்து எடுக்கப் போவதாகவும் மார் தட்டியிருந்தார்கள். புரட்சிப்புயலின் சீடரான கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த ஏழைகளுக்கான கலைப்படைப்பை மார்கெட் செய்யும் இந்த தத்தெடுப்பு நாடகத்திற்கு எத்தனை ஆயிரங்களை பிச்சை போட்டார்கள் என்ற பட்ஜெட் ரகசியத்தை மட்டும் தெரிவிக்கவில்லை. அது அநேகமாக ஸ்ரேயா அணியும் உள்ளாடைகளின் விலையை விட நிச்சயமாக அதிகமிருக்காது.

அதே விளம்பரத்தின் இறுதியில் எல்லாம் அரசாங்கமே செய்து விடும் என இருக்காமல் நாமே உழைத்து முன்னேற வேண்டுமாம் என்ற அரதப் பழசான தத்துவத்தையும் பொறித்திருந்தார்கள். உன்னால் முடியும் தம்பி என்ற இந்த சுய முன்னேற்ற கப்சாவின் யோக்கியதயை அமெரிக்க ரிடர்ன் எம்.எஸ். உதயமூர்த்தியிடம் கேட்டால் அழுது புலம்புவார். ஏதோ முன்னேறுவதற்கான வழி தெரியாமல்தான் இந்த நாட்டின் ஏழைகள் கால் வயிற்றுக் கஞ்சி குடித்துக்கொண்டும், வழி தெரிந்த சுறுசுறுப்பான அம்பானி போன்ற அறிவாளிகள் பத்தாயிரம் கோடி செலவில் வீடு கட்டியும் வாழ்கிறார்கள்! அம்பானிகள் அம்பானிகளாக ‘முன்னேற’ வேண்டுமென்றால் ஏழைகள் மேன்மேலும் ஏழைகளாக மாறினால்தான் முடியும். இதைத்தான் ஒரு வர்க்கத்திடமிருந்து எடுக்காமல் இன்னொரு வர்க்கத்திற்கு கொடுக்க முடியாது என்றார் மார்க்ஸ்.

அது போகட்டும், தமிழ் சினிமா முண்டங்கள் இப்படி காஸ்ட்லியாக ஏழ்மையை ஒழிப்பதற்கு பதில் அரசாங்கத்திடம் சொல்லி ஏழைகளை ஆங்காங்கே குண்டு போட்டு கொன்றுவிட்டால் சுலபமாக ஏழ்மையை ஒழித்துவிடலாமே?

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…


  1. ஏழ்மையை ஒழிப்பானாம் சினிமா கந்தசாமி…

    ஏழ்மையை இதற்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது என்பது ஒருபுறமிருக்க, ஏழைகளின் அவலத்தை துட…

  2. //அது போகட்டும், தமிழ் சினிமா முண்டங்கள் இப்படி காஸ்ட்லியாக ஏழ்மையை ஒழிப்பதற்கு பதில் அரசாங்கத்திடம் சொல்லி ஏழைகளை ஆங்காங்கே குண்டு போட்டு கொன்றுவிட்டால் சுலபமாக ஏழ்மையை ஒழித்துவிடலாமே?//

    ஆஆ இப்படி சொல்லாதீங்க இவனுங்க செஞ்சாலும் செய்வாங்க. நம்ப முடியாது. ஆனா ஒண்ணுங்க நீங்க ஓவரா விமர்சனம் பண்ற மாதிரி தெரியுது. இண்டியன் படம் பார்த்து லஞ்சம் வாங்கிறது நின்னு போகலயா? எங்க அம்பி அன்னியன் பார்த்து திருந்தினவங்க இல்லியா? அதே மாதிரி கந்தசாமி பார்த்து வறுமை ஒழிஞ்சு போகும்னு நம்புங்க. நம்பி்க தாங்க வாழ்கை. மனத தளர விடாதீங்க.

  3. ஏனுங்க இந்த இவரு தான் கலப்பல்லி தாணூங்களா?

    தலைவன் ஈழத்துக்குன்னு செயா வூட்டுல நாயாகிடக்க நம்ம பல்லியோ வெளி நாட்டுல இருந்து அம்மாக்கள கூட்டியாந்தாரா?

    ஏப்பா தாணு நீ உன்னோட ஆளு வைகோவ வச்சு படம் எடுத்தீன்னா நல்லா ஓடும் . கருணா செயான்னு எத்தன பேருக்கு சோடியா நடிச்சாரு தெரியுமா.

    தலைவன் ஈழத்துக்கு அமைதிப்படய அனுப்புனது தப்புன்னு சொல்லுவான்

    சீடனோட படத்துல “எங்கள வரவேற்க நாதியில்ல” அப்படீன்னு ராணுவவீரன் புலம்புவான்.

    வைகோ & கோ -க்கு ஆஸ்கரே கொடுக்கலாம்.

  4. ராமாயணம், மஹாபாரதம் என்ன வேலையை செய்ததோ அதே அயோக்கிய வேலையை இந்த கந்தசாமியும் செய்யும்!

    • ராமாயணம், மஹாபாரதம் என்ன வேலையை செய்தது சொல்ல முடியுமா?
      சும்மா பேச்சுக்கு ஏதாவது எழுதக்கூடாது. வாடிகன் நிறுவனத்தின் அடிவருடியாக இருந்துக்கொண்டு, சொந்த நாட்டை விலை பேசியவர்கள்தானே நீங்கள். அன்று வெள்ளக்காரன் அடிச்சிற்று போன பணத்துல பத்து சதவீதம் இருந்துதுன்னா இன்னக்கி இங்கே வறுமையே இருந்திருக்காது. சுயனலத்துக்காக நாட்டை (கூ)காட்டி …. …….

      • there is an 100 cores of story is there, how u are become very good rich people in world. so….. if u want u can use it or otherwise u can go for ur own way (to make all the people richer in the world- for me i have only another 30 years in my life-see u bye

  5. தமிழனின் எழுதப்பட்ட விதி இம்மாதிரியான படம் வருவது..

    கந்தசாமி (இனி நான் எனது initialலுடன் அரங்க. கந்தசாமி என்றே எழுதலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்)

  6. கந்தசாமி கதையே ஒரு சூப்பரு ஹீரோ வந்து ஒலகத்த காக்குறதாம். நாமதான் சூப்பர்மேனிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி வரைக்கும் பல பேரு ஒலகத்த காப்பாத்துனத பாத்தாச்சு இப்ப வேட்டி கட்டிகினு நம்மாளு கூட ஜொய்ய்ய்யினு வானத்துல பறக்கறத பாப்போமே… அப்புடியே மேலேன்து துட்டா கொட்டினா ஏயைங்க எல்லாம் பொறுக்கிகினு டாடா பிர்லா கணக்கா ஆயிடுவாங்கல்ல.. ஆனா 100 கந்தசாமிங்க இருக்குற அமெரிக்கா ஏன் திவாலாச்சுனுன்னே தெரியல?

  7. கூச்சம், தயக்கம் போவதற்கு மாத்திரை கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதேபோல் ஏழ்மை தொலைவதற்கு கந்தசாமி மாத்திரை வந்திருக்கிறது. ‘நான் கடவுள்’ பார்த்து பிச்சைக்காரர்களைப் பற்றி தெரிந்து கொண்டவர்கள் கந்தசாமியை பார்த்து ஏழ்மையை தெரிந்து கொள்வார்கள். சமூக அக்கரை கொண்ட படம் என்னும் சான்றிதழோடு. ஈழக்கவலை எனக்கும் உண்டு என வெள்ளைப்பூக்கள் பாடலைப்போட்டு ஏஆர் ரகுமான் காட்டியது போல் தானுவும் தன்னை சமூக அக்கரை கொண்டவராக காட்டிக்கொள்ளட்டும்.

    தோழமையுடன்
    செங்கொடி

  8. Ungalukku vinvida cinema thavira veru ontrum illaya
    ithu our padaipaiiyin sundanthiram, mudinthal parungal illa vittal thavirkkavum
    you are giving indirect advertisement to them
    better discuss other than cinema ( oru padaipaliyin sudanthirathil thalai ida yarukkum sudanthiram illay) athu sari cinema vil nalla karuthu sonnal mattum taminadu thirunthi viduma.athu oru kelikkai ulagam ayya.

    • இந்திய நாட்டில் கருத்துச் சுதந்திரம் பலமுறை நன்றாகவே பல் இளித்திருக்கிறது. மக்களை பின்னுழுக்க, எல்லாவித ஆபாசங்களை காண்பிக்க, சுதந்திரம் இங்கு அனுமதிக்கும். மக்களை முன்னேக்கி செலுத்த நீங்கள் ஏதேனும் கருத்து சொன்னால், சுதந்திரம் கிடையாது. ஈழ விசயத்திலேயே ‘கருத்து சுதந்திரம்’ பலருக்கும் அறிந்த விசயம் தானே!

    • // oru padaipaliyin sudanthirathil thalai ida yarukkum sudanthiram illay//

      ஒரு
      ‍‍‍‍‍‍‍‍‍‍‍படைப்பாளியின் படைப்பை பாராட்டுவதும் விமர்சிப்பதும் பார்வயாளரின் உரிமை மட்டுமல்ல கடமை!

      //
      athu sari cinema vil nalla karuthu sonnal mattum taminadu thirunthi viduma.athu oru kelikkai ulagam ayya.//

      அரசியல் மாற்றம் மக்களிடம் பரப்பபடும் கருத்தாலேயே ஏற்பட்டிருக்கிறது!

  9. சுசி. கணேசனின் முதல் படம் 5 ஸ்டார் படம் பார்த்து ரசித்தவன் நான். 5 கல்லூரி நண்பர்களின் வாழ்க்கைப் பற்றிய கதை அது. பிறகு, கமர்சியல் ஏணி ஏறி, இன்றைக்கு இயக்குநர் சங்கரைப் போல கனவு தொழிற்சாலையில் படம் குப்பையாய் படம் எடுக்கிறார். தயாரிப்பாளர் தாணு நிறைய அபாயகரமான ஆள். பட்ஜெட்டை ஏற்றிவிடுவதில் கில்லாடி. ஏற்கனவே நடிகர்களும், இயக்குநர்களும் தனது கடுமையான உழைப்புக்காகவும், கிரியேட்டிவிட்டிகாகவும் கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார்கள். தனக்கு கால்சீட் வேண்டும் என்பதற்காக, ஒன்றுக்கு இரண்டாக தருகிற தயாரிப்பாளர் இந்த ஆள். இதை தனது பேட்டிகளில் அவரே சொல்கிறார். இதில் இரண்டு அபாயங்கள் இருக்கிறது. குறைந்த செலவில், ந்ல்ல படங்கள் வருவதை தடுக்கிறது. மக்களின் ரசனை மட்டத்தையும் வெகுவாக கீழிறிக்கிவிடுகிறது. அதனால் நல்ல படங்கள் வரும்பொழுது வசூலிலி தோற்றும் போய்விடுகிறது.

    எங்களுக்கு கட்டுரைகள் தருவதற்காக பலான குமுதத்தை வாராவாரம் படிக்கும் உங்களை நினைக்கையில் பரிதாபமாகவும் இருக்கிறது.

  10. படத்தில் எழுத்துக்கள் தெரிகின்றன. அதை சொடுக்கினால் கூட குழ்ப்பமாக தெரிகிறது. என்னால் படிக்க இயலவில்லை.

  11. இந்த கனவான்கள் படம் எப்படி வேண்டுமானாலும் எடுக்கட்டும்…
    ஆனால் அதை விற்பனை செய்ய சமூக அக்கறை சாயம் கொடுக்க வேண்டாம்…

    • பின்னே உங்களைப் போல இணையத்தில் இலவசமாக கருத்துக் கொடுத்துக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? படம் எடுக்கட்டும். வியாபாரம் செய்யட்டும். அதில் நல்லது நடந்தால் நடக்கட்டும். உங்களைப் போல குறை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதற்கு அது எவ்வளவோ மேல். .

      • //பின்னே உங்களைப் போல இணையத்தில் இலவசமாக கருத்துக் கொடுத்துக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? படம் எடுக்கட்டும். வியாபாரம் செய்யட்டும். அதில் நல்லது நடந்தால் நடக்கட்டும். உங்களைப் போல குறை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதற்கு அது எவ்வளவோ மேல்//

        வித்தகா ! கெட்டது நடந்தால் உங்கள புடிக்கலாமா
        சமுதாயத்தை கெடுக்கும் சினிமா கழிசடை நாய்கள் ஆபாசமான காட்சி
        கதையைமப்பில்லாத படங்களை எடுத்தாலே அதுவே நல்லது தான்
        அதை இந்த கூத்தாடி நாய்களால் செய்யமுடியுமா?

        ஆனால் இந்த சீரழிவு ஆபாசக் கழிசடைகள் பெண்களை அவுத்து போட்டு ஆடவிட்டு காசை பொறுக்கி அதன் மூலம் கிராமத்தை தத்தெடுக்கிறேன் என்று
        பித்தலாட்டம் செய்கின்றன , விபச்சாரிகளின் மூலமாக விபச்சாரத்தனத்தை பரப்புகின்றன , இதன் மூலம் எதாவது நல்லது நடக்குமா? நடக்கும் என்று சொல்பவன் எப்படிபட்டவனாக இருக்க முடியும்?

        கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று எதையாவது உளராதிர்கள்
        சீரழிவு சினிமா ஆபாசக் கழிசடைத்தனத்துக்கு ஜால்ரா போடும் உம்மை போன்றவர்கள் சமுதாயத்தில் பரவியுள்ள புற்று நோய்கள்,

      • அது சரி, நாலு கிராமத்துக்கு நல்லது பண்றேன்னு சொல்லி நாலாயிரம் பேருக்கு கஞ்சா வித்து அந்த பணத்துல கொஞ்சமா நாலு கிராமத்துக்கு நல்லது பண்றது ரொம்ப சரிதான். கஞ்சா விக்கிறது உங்க தொழில்னா அத செஞ்சிட்டு போங்க. ஆனா அந்த பணத்துல நாலு கிராமத்துக்கு நல்லது பண்றேன்கிறது கஞ்சா விற்பதை நியாயபடுததாது.

  12. எத்தனையோ பேர் படம் எடுக்கிறார்கள் , பிரம்மாண்டமான படம் , மீடியம் பட்ஜெட் படம் என்று, அதில் ஒருவர் ஒரு கிராமத்தை தத்து எடுக்கிறார். ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு இது மேல் அல்லவா.

    ஆக நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், அவர்கள் தத்து எடுப்பது தவறு என்றா? இனிமேல் சினிமா எடுப்பவர்கள் எந்த கிராமத்திற்கும் எதுவும் செய்யக்கூடாது என்று நினைக்கறீர்களா?

    அவர்கள் அந்த கிராமத்திற்கு என்ன செய்தார்கள் என்று உங்களுக்கும் எனக்கும் தெரியாது , வேண்டுமானால் போய் விசாரித்து செய்தி வெளியிடலாம். அந்த ஆதாரம் இல்லாமல் இதையும் பழித்தால்……………….

    • //ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு இது மேல் அல்லவா.// ஒன்றுமே செய்யாமல், தானுண்டு தன் குடும்பம் என்று இருப்பதற்கு, இலக்கிய குப்பைகளும் ஒரு காரணம்.
      ஜெயங்கொண்டான் படத்தில்… கதாநாயகன் அவருக்கே பிரச்சனை வந்தாலும், ஒதுங்கி ஒதுங்கி போவார். இறுதியில் அவர் காரணம் சொல்வார். நானும் கையில் ஆயுதம் எடுக்க முடியும். எனக்கு கமிட்மென்ட்ஸ் இருக்கு! அதனால் தான் என்பார். //
      தத்து எடுப்பது தவறு என்றா?//
      இது எப்படி இருக்கிறது என்றால், விஸ்ப்பர் வாங்கினால், அதில் ஒரு ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு போகும் என்பார்களே! இது ஒரு மார்க்கெட்டிங் முறை! மனிதநேய மார்க்கெட்டிங்!

    • இவர்கள் (சினிமாக்காரர்கள் ) என்ன செய்வார்கள் என்ற லட்சணம் கும்பகோணம் பள்ளிகளில் இறந்த குழந்தைகளின் பெற்றோரை கேட்டல் தெரியும் . அது போலதன இந்த கிராம தத்து எடுப்பும் தோழர் கோகுலே

  13. 1. அவர்கள் இஷ்டப்படி படம் எடுப்பது அவர்கள் உரிமை. படம் பிடிக்கவில்லை, படத்தின் மார்க்கெட்டிங் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள்.
    2. மார்க்கெடிங் மோசமான முறையில் நடக்கிறது, படத்தை புறக்கணியுங்கள் என்றாவது வெளிப்படையாக அழைக்கலாம். சும்மா புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
    3. நீங்கள் ஒரு கமர்ஷியல் திரைப்படத்தில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? சூப்பர்மன் காமிக்ஸில் என்ன கம்யூனிசம் பற்றிய விளக்கமா இருக்கும்? இது உங்கள் எதிர்பார்ப்பின் தவறு!
    4. மார்க்கெட்டிங் உத்தியோ, என்னவோ, புல்லுக்கு இறைத்த நீர் நெல்லுக்கும் புசிகிறது. ஏதோ நாலு கிராமத்துக்கு நல்லது நடக்கிறது. அதையும் ஏன் குறை சொல்கிறீர்கள்?

    • டேய், வினவு போஸ்ட்’ல மட்டும் விஜய் டிவி மாதிரி முதுகு சொறி “கவறேஜா” இருக்கும்? அதை எதிர்பார்த்து இங்க வந்தது உன் கேனத்தனம். (+ எந்த படத்தை பத்தி என்ன எழுதனுங்கறது வினவோட இஷ்டம் அதனால..இத்யாதி இத்யாதி.) வந்துட்டான் வெளக்கென்ன!

      • வெட்டி அவர்களுக்கு,

        ஆர்வீ கருத்துரிமையின் பாதுகாவலர் அவரின் பேச்சினை ரொம்ப சீரியசாக எடுத்துக்கொண்டு திட்டாதீர்கள்.அத்வானிக்கும்,ஹிட்லருக்கும்,ஆபாச நாயகன் சங்கராச்சாரிக்கும்(இன்ன பிற கருமங்களுக்கும்) கூட கருத்துரிமை வேண்டும் என்பார். அந்த நாய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ? அவர்களும் பாதிக்கப்பட்டதை பற்றி பேசும் போது கருத்துரிமை ஆகா ரெண்டு பேருக்கும் பாருன்க்க ஈக்வல் ரைட்ஸ் என்பார்.உன்கருத்துரிமையால் என் உயிர் போவுது என்றாலும் இப்படி சொல்லி கத்து எந்த நாயாவது (அரசு) காப்பாத்தும் ஆனா அது அவன் உரிமை , கத்தறது உன் உரிமை என்பார்.ஆகா என்ன நாட்டாமை ஆர்வீ சூப்பர் தீர்ப்புல கொல்லறதுக்கு உரிமை உண்டு கத்துறதுக்கும் உரிமை உண்டு.——-

        எடுத்தவுடனே திட்ட ஆரம்பித்தால் இவரை போன்ற கருத்துடையவர்கள் உங்களின் கருத்தினை படிக்க வாய்ப்பில்லை. கேவலமாக விமர்சனம் செய்யலாம் அதையும் அண்ணன் ஆர்வீ அவர்கள் உங்களின் கருத்துரிமையாக அங்கீகரிப்பார். அவர் பேசுவதை விளையாட்டாக சும்மா ஜுஜுஜுன்னு எடுத்துக்கோங்க. ஏங்க அவரை திட்டுறதால் கோவித்துக்கொண்டு போய்விட்டால் யாருங்க காமெடிக்குன்னு போயி ஆளபுடிக்குறது? அப்படியே வித்தகன் அவர்களுக்கு எழுதிய விமர்சனதையும் பார்க்கவும்—

        ஆர் வீ அண்ணே ஆரம்பிங்க? எப்புடி இதுவும் என்ற உரிமைங்கோ.

    • கேள்வி மட்டுமே கேட்கும், அசவுகரியமான கேள்விகளை சவுகரியமாக கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் கலகம் அவர்களே,

      உங்களுக்கு பதில் எழுதலாமா வேண்டாமா என்று இரண்டு மனதில் இருந்தேன். சரி நீங்கள் கூசாமல் பொய் சொல்லும்போது நான் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடாது என்று தோன்றியதால் மட்டுமே இந்த பதிலை எழுதுகிறேன்.

      // ஆர்வீ சூப்பர் தீர்ப்புல கொல்லறதுக்கு உரிமை உண்டு கத்துறதுக்கும் உரிமை உண்டு.——- //
      இப்படி கொல்லறதுக்கு உரிமை உண்டு என்று எங்கே சொல்லி இருக்கேன்னு கொஞ்சம் காட்ட முடியுமா?. நீங்கள் இப்படி எழுதி இருப்பது எனது அடிப்படை நியாய உணர்வுகளை மிகவும் இழிவுபடுத்துகிறது. உங்களுக்கு சவால் விடுகிறேன் – இப்படி நான் சொன்னதாக காட்டுங்கள் இல்லை என்றால் மன்னிப்பு கேட்டுவிட்டு மூடிக் கொண்டு போய்விடுங்கள்.

      அசவுகரியமான கேள்வி எழுந்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது உங்கள் பழக்கம் என்று எனக்கு நன்றாக தெரியும். இந்த விஷயத்தில் உங்கள் மவுனமும் உங்களை குற்றவாளியாகவ் காட்டும் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

      • ஆர்வீ,

        தாங்கள் தான் கருத்துரிமையின் காவலர் போன்று ஒருமுறை நடந்த விவாதத்தில் தெரிவித்தததை இப்போது இங்கே சொன்னது தவறு வினவின் பதில்களையடுத்து விவாதத்தை திசைதிருப்பும் நோக்கத்திற்கு அறிந்தோ அறியாமலோ ஈடுபட்டது தறுதான் அதை சுயவிமர்சனமாக ஏற்கிறோம்.மேலும் ஆர்வீ மீது மீது வைத்த வாதத்தை திரும்பப்பெறவில்லை. கலகம் ஓடவில்லை.அதற்கான அவசியம் இங்கு இல்லை .ஆர்வீயை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு அவர் வைத்த வாதம் குறித்து தெளிவாக புரியும்.

        வினவு அவர்களுக்கு தவறினை சுட்டிகாட்டியதற்கு நன்றி

      • //தாங்கள் தான் கருத்துரிமையின் காவலர் போன்று ஒருமுறை நடந்த விவாதத்தில் தெரிவித்தததை இப்போது இங்கே சொன்னது தவறு//

        எழுத்து பிழைக்கு மன்னிக்க

        ஆர்வீ தான் கருத்துரிமையின் பாதுகாவலர் என கூறவில்லை ஆனால் அவரின் விவாதம்தான் அப்படி கூறின

      • வழக்கம் போலவே நழுவுகிறீர்கள். நீங்கள் கருத்துரிமையின் காவலர் என்று எழுதியதை பற்றி நான் எதுவும் சொல்லாதபோது அதை ஏன் இழுக்கிறீர்கள்? தாரளமாக சொல்லுங்கள், என் வாதங்கள் பலவற்றில் நான் கருத்துரிமை காக்கப் பட வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு எழுதி இருக்கிறேன். உங்கள் தொனி என்னை கேவலபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்படுகிறது, ஆனால் அதை பற்றி எல்லாம் எனக்கு அக்கறை இல்லை.

        நான் குறிப்பிட்ட பகுதி நீங்கள் நான் கொலை செய்ய எல்லா உரிமையும் இருக்கிறது என்று சொன்னதாக எழுதியதை பற்றி. இது பொய். நீங்கள் பொய் சொல்கிறீர்கள். வாதம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், என்னை இழிவு படுத்த வேண்டும் என்பதற்காக பொய் சொல்கிறீர்கள். என் fundamental values-ஐ தவறாக சித்தரிக்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்கிறீர்கள். இதற்காக – பொய் சொன்னதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்கத்தான் வேண்டும். மீண்டும் என் போன மறுமொழியிலிருந்து கட் பேஸ்ட் செய்கிறேன்.

        // // ஆர்வீ சூப்பர் தீர்ப்புல கொல்லறதுக்கு உரிமை உண்டு கத்துறதுக்கும் உரிமை உண்டு.——- //
        இப்படி கொல்லறதுக்கு உரிமை உண்டு என்று எங்கே சொல்லி இருக்கேன்னு கொஞ்சம் காட்ட முடியுமா?. நீங்கள் இப்படி எழுதி இருப்பது எனது அடிப்படை நியாய உணர்வுகளை மிகவும் இழிவுபடுத்துகிறது. உங்களுக்கு சவால் விடுகிறேன் – இப்படி நான் சொன்னதாக காட்டுங்கள் இல்லை என்றால் மன்னிப்பு கேட்டுவிட்டு மூடிக் கொண்டு போய்விடுங்கள். //

        மீண்டும் சம்பந்தம் இல்லாமல் எதையாவது எழுதாதீர்கள்.

      • ஆர்வீ,

        அது விளக்கம் கொடுப்பதற்காக சொன்னது ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க. // ஆர்வீ தான் கருத்துரிமையின் பாதுகாவலர் என கூறவில்லை ஆனால் அவரின் விவாதம்தான் அப்படி கூறின//

        ஏனெனில் நான் எங்கே கருத்துரிமை காவலன் என்று சொன்னேன் என விவாதத்தை திசை திருப்பக்கூடாதென்பதற்காகத்தான்.

      • கலகம் விளக்கம் கொடுக்க கூசாமல் பொய் சொல்வாராம், எல்லாரும் கேட்டுக்கங்க! விளக்கம் கொடுக்கனும்னா இன்னிக்கு நான் கொலை செய்வது தப்பில்லைன்னு சொன்னேன்னு சொல்வாராம்; நாளைக்கு நான் கொலை செஞ்சேன்னு சொல்வார்; அடுத்த நாள் நான் அவர் வீட்டில் புகுந்து அவரையே கொலை செஞ்சுட்டேன்னு சொல்வார். குறிப்பிட்டு எழுதினதுக்கே பதிலை காணோமாம், இவர் கருத்துருமை பத்தி நான் ஏதாவது சொல்லிவிடப் போகிறேன்னு பதில் எழுதினாராம்! கூரை ஏறி கோழி பிடிக்காதவன்…

        இனி மேலும் இதற்கெல்லாம் பதில் எழுதி என் நேரத்தை வீனடிக்க முடியாது.

        இன்னும் தவறாக சொல்லிவிட்டேன் என்று ஒரு வார்த்தை சொல்லாத அயோக்கிய சிகாமணிக்கு hats off!

      • அவர்கள் இஷ்டப்படி படம் எடுப்பது அவர்கள் உரிமை = ஆர்வீ சூப்பர் தீர்ப்புல கொல்லறதுக்கு உரிமை உண்டு கத்துறதுக்கும் உரிமை உண்டு ithu koodava puriyala?

  14. சினிமாவை சினிமாவா பாருங்க. சினிமாங்கிறது வாழக்கைன்னு நினைச்சா எப்படிங்க? நீங்களுமா?

  15. //ஏதோ நாலு கிராமத்துக்கு நல்லது நடக்கிறது.//

    அது சரி, நாலு கிராமத்துக்கு நல்லது பண்றேன்னு சொல்லி நாலாயிரம் பேருக்கு கஞ்சா வித்து அந்த பணத்துல கொஞ்சமா நாலு கிராமத்துக்கு நல்லது பண்றது ரொம்ப சரிதான். கஞ்சா விக்கிறது உங்க தொழில்னா அத செஞ்சிட்டு போங்க. ஆனா அந்த பணத்துல நாலு கிராமத்துக்கு நல்லது பண்றேன்கிறது கஞ்சா விற்பதை நியாயபடுததாது.

    • கந்தசாமி மாதிரி ஒரு படம் எடுப்பது ஏறக்குறைய கஞ்சா விற்பது மாதிரி என்று சொல்கிறீர்கள். அப்புறம் பேச என்ன இருக்கிறது – முட்டாள்தனமான கருத்துகளை சொல்ல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்பதை தவிர?

      • கந்தசாமி மாதிரி படம் எடுப்பது கஞ்சா விற்பது இல்லை வறுமையை ஒழிக்கத்தான் என்று நம்புவது தான் அறிவாளித்தனம் என்றால்… மேலே பேச என்ன இருக்கிறது?

        இது மேலுள்ள நண்பர் ‘விடுதலை’ யின் பதில் நண்பர் ‘வித்தகன்’க்கு

        //ஆனால் இந்த சீரழிவு ஆபாசக் கழிசடைகள் பெண்களை அவுத்து போட்டு ஆடவிட்டு காசை பொறுக்கி அதன் மூலம் கிராமத்தை தத்தெடுக்கிறேன் என்று
        பித்தலாட்டம் செய்கின்றன , விபச்சாரிகளின் மூலமாக விபச்சாரத்தனத்தை பரப்புகின்றன , இதன் மூலம் எதாவது நல்லது நடக்குமா? நடக்கும் என்று சொல்பவன் எப்படிபட்டவனாக இருக்க முடியும்?

        கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று எதையாவது உளராதிர்கள்
        சீரழிவு சினிமா ஆபாசக் கழிசடைத்தனத்துக்கு ஜால்ரா போடும் உம்மை போன்றவர்கள் சமுதாயத்தில் பரவியுள்ள புற்று நோய்கள்,//

  16. //1. அவர்கள் இஷ்டப்படி படம் எடுப்பது அவர்கள் உரிமை. படம் பிடிக்கவில்லை, படத்தின் மார்க்கெட்டிங் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள்.//

    காந்தியின் குரங்குகள் அப்படி செய்யும். சமூக அக்கறையுள்ளவர்கள் அப்படியெல்லாம் வாழமுடியாது ஆர்.வி.

  17. நண்பர்கள் விடுதலை மற்றும் என் வழி தனி வழி ஆகியோருக்கு,

    இதுவரை பேசியது கிராமங்களைத் தத்தெடுப்பதாகச் சொல்லிக் கொண்டு கோடி கோடியாக செலவு செய்து படமெடுப்பது பற்றி. அது தவறென்று நீங்கள் சொல்ல, ஏதோ அப்படியாவது தேவைப் படுபவர்களுக்கு உதவி கிடைக்கிறதே என்று நான் சொன்னேன். வெறுமென இணையத்தில் கருத்து சொல்பவர்களை விட அல்லது இதே கோடிகளைக் கொட்டிப் படமெடுத்து ஒன்றும் செய்யாதவர்களை விட இவர்கள் தேவலை என்று நான் சொல்கிறேன்.

    இப்போது திடுமென்று திரைப்படங்களில் உள்ள விஷயங்கள் (content) பற்றிப் பேச ஆரம்பித்து விட்டீர்கள். ஆபாச உடை, விபச்சாரிகள் மூலம் விபச்சாரம், என்ன என்னவற்றை பற்றியெல்லாம் படமெடுக்கலாம் என்று பேசுகிறீர்கள். இது தனி விவாதம். இதற்கும், படமெடுப்பதோடு கிராமங்களைத் தத்தெடுப்பதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அல்லது இனிமேல் நீங்கள் கதை, காட்சி அமைப்பு, கதாநாயகியின் உடை எல்லாம் பரிசீலனை செய்து அந்தப் படத்துடைய இலாபத்தில் ஒரு பகுதி சமுக சேவைக்குச் செலவு செய்ய தகுதியானதுதானா என்று முடிவு செய்யப் போகிறீர்களா?

    தணிக்கை குழு என்று ஒன்று இருக்கிறது. பொது மக்களின் தேவை என்று ஒன்று இருக்கிறது. கதை சொல்லும் குழுவினரின் ரசனை யும் திறமையும் (திறமையிமையும்) இருக்கிறன. இவை எல்லாம் கலந்துதான் ஒரு படம் எடுக்கப் படுகிறது. ரசிக்கப் படுகிறது. அல்லது ஒதுக்கப் படுகிறது. இதில் கலாசாரப் பாதுகாவலர்களுக்கு வேலை இல்லை. அப்புறம் எது சரி எது தவறென்று முடிவு செய்பவர்களுக்கு என்ன தகுதி என்று ஆராய வேண்டியிருக்கும். இதெல்லாம் அவர்களுக்கும் தேவையில்லை. உங்களுக்கும் வேண்டாம்.

    • வித்தகன்,

      தகுதி என்பது என்ன ? விமரிசனம் செய்பவர்களுக்கு ஒருதகுதி வேண்டும் அது மக்களை படிப்பது மக்களுக்காக பேசுவது, மக்கள் விரும்பித்தான் ஒரு திரைப்படம் வெளிவருகிறது என்பதில்லை. ஒரு படைப்பாளி தன் கருத்தினை பொதுக்கருத்தாக மாற்ற முயல்கிறான் .அது பொது மக்களின் விடுதலைக்காக இருக்கும் போது சரியானதே. ஆனால் சமூக சீரழிவையே சமூகத்தின் கருத்தாக மாற்றும் அல்லது சமூக மாற்றத்துக்கு இதுதான் தீர்வு என ஒன்றைகூறும் போது ஏன் அதை விமர்சிக்கக்கூடாது. அதற்கு பல டிகிரியோ அல்லது இயக்குனர் இமயத்திடம் தொண்டு வேலை பார்த்திருப்பது தகுதியல்ல. திரைப்படம் யாருக்காக எடுப்பதாக சொல்கிறார்கள் . அவர்கள் கேள்வி கேட்காமல் பின்னே யார் கேட்க வேண்டும்.

      என்னை அல்லது அதை கேள்வி கேட்டால் தகுதி பற்றி பேச நேரிடுமெனில் என்ன அர்த்தம்?கண்டிப்பாய் கேள்வி தேவைதான் தகுதி அது இளையராசாவுக்கோ அல்லது கமலகாசனுக்கோதான் குத்தகை விடப்பட்டதல்ல.

      தற்போது கலை மக்களுக்காகத்தான் இருக்கிறதா? நீங்கள் சொல்லலாம் இப்போது மக்கள் தானே ரசிக்கிறார்கள். மக்களுக்காக என்பது மக்கள் அடிமைத்தனத்தையும் பிற்போக்குதனத்தையும் ஊக்குவிப்பதற்கு எனில் அது கலை அல்ல. எது ஒன்று உங்களால் தகுதி குறைவு என்று கூறப்பாட்டாலும் மக்களுக்காக அவர்களின் விடுதலைக்காக உருவாக்கப்பட்டிருந்தால் அதுதான் கலை.

      ஒரு விசயத்தினை பற்றி விவாதிக்கும் போது அதன் உட்கூறுகளை விமர்சிப்பது தவறாகாது.அப்படித்தான் பாரதியையும் விமர்சனம் செய்யவேண்டும்,செய்யப்பட்டார்.
      படத்தின் ஒரு பாடல் மட்டும் ஏழைகளுக்காக பரிந்து பேசி ஆனால் அப்படம் முழுக்க
      முழுக்க மக்களை இழிவு படுத்தியிருந்தால் என்ன செய்ய வேண்டும்.பாட்டை மட்டும் ரசியுங்கோ என்பீர்களா.

      இவன் இதைத்தான் பேச வேண்டும் என்பது எங்கிருந்து வருகிறது தெரியுமா? நீ இதைத்தான் பேச வேண்டுமென்ற ஆண்டான் அடிமை கோட்பாட்டிலிருந்து உருவானது . மேலும் திறமை என்பது என்ன ஒரு ஆபாசப்படம் எடுப்பவனை அது அவன் திறமை எனக்கூறுவீர்களா?அப்படித்தான் இந்த கந்த சாமி படமும் இதுவரை வந்த பல கந்தசாமிகளும் மக்களின் இன்னல்களுக்கு தீர்வு வறுமைக்கு விடிவெள்ளி பணக்காரர்கள் தானே முன்வந்து தான தர்மம் செய்வது என்பதுதான்.அந்த அடிப்படையில் சில கிராமங்களை தத்து எடுப்பதாக கூறுகிறார்கள்.

      நீங்கள் இப்படியாக சில கிராமத்துக்கு விமோசனம் கிடைக்கிறதே எனக்கூறலாம். அது விமோசனமா அல்லது விளம்பரமா? மக்களின் வறுமையும் இங்கு முதலாளியால் வியாபாரமாக்கப்படுகிறது.

      இப்படி முதலாளிகள் சிரித்துக்கொண்டு இருக்கும் போது மக்கள் தட்டினை ஏந்தி கொண்டிருப்பதால் வறுமை ஒழியாது.மாறாக மக்கள் ஆயுதமேந்தி முதலாளியை அழவைக்கும் போது உழைக்காத சொத்தினை நட்ட ஈடின்றி பறிமுதல் செய்யப்படும் போது வறுமை தானாய் வறுமையாகும்.

      இப்போது சொல்லுங்கள் வறுமையை தீர்க்க விவசாயத்தினை காக்க்க மூடிய ஆலைகளை திறக்க என்ன செய்ய வேண்டும் இப்படி என்ன தத்துஎடுங்க தத்துஎடுங்க என கியூவில் நிற்க வேண்டுமா அல்லது ஆளும் வர்க்கத்துக்கு ஊது குழலாய் இருந்து அவர்களின் கருத்தினை பரப்பும் நாய்களை விரட்டியடிக்க வேண்டுமா?

      ஈழத்தின் மக்களுக்காக என் ஜி ஒ வுடன் சேர்ந்து சேவை செய்யப்பொவதாய் சொல்லும் நீங்கள் முதலில் என் ஜி ஒ பற்றி படியுங்கள் அவைகள் எதற்காக உருவாக்கப்பதென தெளியுங்கள்.அப்புறம் தெரிந்து கொள்வீர்கள்.

      எப்படியும் காசு கிடைத்தால் போதும் எனில் மானம் என்பதற்கு அர்த்தம் இருக்காதல்லவா.

      கலகம்

      • கலகம். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஏறக்குறைய எல்லாவற்றுடனுமே ஒத்துப் போகத் தயாராக இருக்கிறேன். இரண்டே இரண்டு விஷயங்கள்.

        1. கலாசாரப் பாதுகாவலன், மக்களுக்காகப் பேசுபவன் ஆகிய பொறுப்புகள் கொஞ்சம் சிக்கலானவை. உதாரணத்திற்கு பால் தாக்கரேவும், ராமதாஸும், தாலிபான்களும் இதைத்தான் செய்ய விழைகிறார்கள். மக்களுக்குத் தேவையானதை நாங்கள் தேர்வு செய்வோம் என்று சொல்லி தனக்குப் பிடித்ததைத் திணிக்க முயற்சிக்கிறார்கள். இவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் பரவத்தான் இந்த வழக்கம் அடி வகுக்கிறது. இவர்கள் விருப்பப்படி வாழ்ந்தால் சமுதாயம் முன்னேறும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதனால்தான் என்ன இருக்க வேண்டும், கூடாது என்று பிரித்துச் சொல்பவர்களுக்கு உள்ள தகுதி ஆராயப் பட வேண்டும் என்கிறேன். இது பூமாலை என்பதால் குறைந்தபட்சமாக புத்திசாலிக் குரங்கு கையில் தர முயற்சிப்போம்.

        2. இலங்கைத் தமிழர்கள் முகாம் செல்லும் முயற்சி இன்னும் கனியவில்லை. பல சிக்கல்கள் உள்ளன. இன்னும் இரண்டு வாரத்தில் கைகூடவில்லை என்றால் என்னால் டிசம்பர் வரை ஒன்றும் செய்ய முடியாது. நடக்காமல் அதைப் பற்றிப் பேசுவது எனக்கு சரியாகப் படவில்லை.உங்களுக்குத் தெரிந்த NGO க்கள் சுலபமாக விசாவுக்கு வழி வகுப்பார்கள் என்றால் கொஞ்சம் சொல்லுங்கள். உதவியாக இருக்கும்.

        விளக்கமான பதிவுக்கு நன்றி.

  18. அறுபதாயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் பணத்தில் தொகுதிக்கு முப்பது கோடி செலவு செய்யும் அரசியல்வாதிக்கும் இந்த கிராமம் தத்தெடுக்கும் திட்டத்துக்கும் என்ன வித்தியாசம்?

    • ஸ்பெக்ட்ரம் மூலம் வரும் பணம் ஊழல் செய்து சம்பாதித்தது. படம் எடுப்பது நாணயமான தொழில்தான். சினிமா என்றாலே மக்களை ஏமாற்றுவது என்று ஒரு குறுகிய வரையறை கொடுத்து குற்றவாளிகளையும் திரைப்படம் எடுப்பவர்களையும் ஒரே தட்டில் வைக்காதீர்கள். எவ்வளவு மோசமான (தரத்தில்) படம் எடுத்தாலும் அது சமுதாய ஊழல் செய்பவர்களுக்கு (பொதுப் பணத்தைத் திருடும் அரசியல் வாதிகள், மருந்தில் கலப்படம் செய்பவர்கள், கள்ள நோட்டு அடிப்பவர்கள், போதைப் பொருள் விற்பவர்கள், கடத்தல் செய்பவர்கள், ஆயுத வியாபாரிகள், திருடர்கள்) சமமான குற்றம் அல்ல.

    • இந்த கேள்விக்கு வித்தகனால் பதில் சொல்ல முடியவில்லை கீழே பாருங்கள் தடுமாறுகிறார்,,,,
      (பொதுப் பணத்தைத் திருடும் அரசியல் வாதிகள், மருந்தில் கலப்படம் செய்பவர்கள், கள்ள நோட்டு அடிப்பவர்கள், போதைப் பொருள் விற்பவர்கள், கடத்தல் செய்பவர்கள், ஆயுத வியாபாரிகள், திருடர்கள்)

      இவர்களோடு ஆபாச சினிமா கழிசைடகளை ஒரே தட்டில் அல்ல ஒரே டம்ளரிலேயே வைக்கலாம், வித்தகன் சமாளிக்க பார்க்கிறார் அதற்கும் ஒரு திறமை வேண்டும் அந்த வகையில் அவர் வித்தகன்தான்,

      • என்ன விடுதலை புரியாத மாதிரிப் பேசுகிறீர்கள்? படம் என்ன தரத்தில் எடுக்கப்பட்டாலும் திரைப் படத் தொழிலை களவாணித் தனத்தோடு சமப் படுத்திப் பேசுவது எந்த வகையில் சரிப் படும்? இதில் என் கருத்தில் எங்கே தடுமாற்றம்? படம் எடுப்பது சட்ட பூர்வமாக ஒப்புக் கொள்ளப் பட்ட தொழில். எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும், மட்டமாக இருந்தாலும் விளம்பரம் எப்படி செய்தாலும் விளம்பரமே இல்லாவிட்டாலும் யாரும் விருப்பத்திற்கு மாறாக ஏமாற்றப் பட்டு படத் தயாரிப்பாளர்கள் சொத்து சேர்ப்பது என்பது நடக்காத விஷயம். படம் பார்க்காமல் இருந்தாலே போதும். அவர்களுக்கு அடி விழும்.

        அரசியல்வாதிகள் ஊழல் செய்து சொத்து சேர்ப்பது என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயம். அது சட்டத்துக்குப் புறம்பானதும் ஆகும். அதே போல்தான் நான் பட்டியலிட்டிருக்கும் மற்றக் குற்றங்களும். சமுதாய விழிப்புணர்வும், சட்ட பூர்வமான முயற்சிகளும், நாணயமானவர்களுக்குள் ஒற்றுமையும் இருந்தால்தான் இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியும். திரைப்படம் தயாரிப்பதைப் போய் இவற்றோடு சேர்ப்பது கோபத்தை நீர்த்துப் போக வைக்குமே தவிர வேறு ஒன்றும் சாதிக்காது.

  19. //ஒரே தட்டில் வைக்காதீர்கள். எவ்வளவு மோசமான (தரத்தில்) படம் எடுத்தாலும் அது சமுதாய ஊழல் செய்பவர்களுக்கு (பொதுப் பணத்தைத் திருடும் அரசியல் வாதிகள், மருந்தில் கலப்படம் செய்பவர்கள், கள்ள நோட்டு அடிப்பவர்கள், போதைப் பொருள் விற்பவர்கள், கடத்தல் செய்பவர்கள், ஆயுத வியாபாரிகள், திருடர்கள்) சமமான குற்றம் அல்ல.//

    அப்படியா?….. பல ஆயிரம் கோடிகளில் பிசினஸ் நடக்கும் திரைப்படத் தொழிலுக்கு அடிப்படை ஏழை உழைக்கும் மக்களிடம் இருந்து பிடுங்கும் காசுதான். அப்படி பிடுங்கும் காசுக்கு அவர்கள் அந்த ஏழை மக்களுக்கு கொடுப்பது என்ன? கழிசடைத்தனத்தையும், போதை மயக்கத்தையும் தான்.

    சரவண பவன் கொள்ளைக்காரன் கூட கொடுக்கிற அநியாய 30 ருபாய்க்கு எதையாவது தருகிறான். திரைப்பட கொள்ளைக்காரன் என்ன தருகிறான்? நமீதாவின் அரைக் கிலோ சதையையா?

    சராயம் விற்பது, பூசாரியாக இருப்பது, திரைப்படம் என்ற பெயரில் மக்களை கலாச்சார-பொருளாதார-அரசியல் ரீதியாக ஒட்டச் சுரண்டுவது, போதை மருந்து விற்பது இவையெல்லாம் ஒன்றே….

    • //பல ஆயிரம் கோடிகளில் பிசினஸ் நடக்கும் திரைப்படத் தொழிலுக்கு அடிப்படை ஏழை உழைக்கும் மக்களிடம் இருந்து பிடுங்கும் காசுதான். அப்படி பிடுங்கும் காசுக்கு அவர்கள் அந்த ஏழை மக்களுக்கு கொடுப்பது என்ன? கழிசடைத்தனத்தையும், போதை மயக்கத்தையும் தான்.//

      மக்களிடம் காசு பிடுங்கப்படுவதில்லை. அவர்களாகவேதான் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டாமென்றால் யாரும் கையை முறுக்கிப் பிடுங்கப் போவதில்லை. உங்கள் கோபம் திசை மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையேல் அதன் வீரியம் வீணாகிவிடும். சினிமாக்காரர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையே இல்லை.

  20. ஒட்டுமொத்த சினிமாக்களையும் சினிமா தொழிலையும் குறை கூறவில்லை என்பது கவனிக்கப்படாமல் நல்ல படங்களையும் குப்பைகளையும் ஒரே தட்டில் வைத்து இரண்டுக்கும் வக்கலத்து வாங்கப்பட்டுள்ளது. என் வீட்டு வரவேற்பறைக்கு வரும் குப்பைகளை நான் விமர்சனம் செய்து தான் தீரவேண்டும். ஆனால் அதை விடுத்து என்னை அவற்றை பார்க்காமல் விடச் சொல்வது எப்படி நியாயமாகும். அதை பார்க்காமலேயே எப்படி நான் அதை குப்பை என்று உணர முடியும்? தவிர மக்களை இதுபோன்ற கிராம தத்தெடுப்பு திட்டம், தங்க காசு திட்டம் என்று கூறி ஏமாற்றிதான் இவர்கள் காசு பிடுங்குகிறார்கள். அதையும் குறை சொல்லாதே என்றால் எப்படி.

    • சாமிகளா, எனக்கு என்ன சினிமாக்காரர்கள் மாமனா மச்சானா வக்காலத்து வாங்க? அல்லது உங்கள் கருத்துக்கெல்லாம் வீம்புக்கு எதிர் கருத்து சொல்லுவதற்கு நான் உங்களுக்கு ஜென்ம வைரியா என்ன? எனக்கு வினவு தளத்தின் விவாதங்களும் கருத்துக்களும் பிடித்திருக்கக் கொண்டுதானே தினமும் படிக்கிறேன். மாற்றுக் கருத்து சொன்னாலே புற்று நோய், சமாளிப்பதே என் வேலை என்றெல்லாம் வர்ணித்து காமெடி பண்ணாதீர்கள்.

      சரி. எல்லா சினிமாக் காரர்களயும் திட்டவில்லை என்கிறீர்கள். அபப்டியானால் பல கோடி செலவு செய்து கிராமங்களைத் தத்தெடுக்காத தயாரிப்பாளர் கந்தசாமி தயாரிப்பாளரை விட உயர்ந்தவர் என்கிறீர்களா?

      • //சரி. எல்லா சினிமாக் காரர்களயும் திட்டவில்லை என்கிறீர்கள். அபப்டியானால் பல கோடி செலவு செய்து கிராமங்களைத் தத்தெடுக்காத தயாரிப்பாளர் கந்தசாமி தயாரிப்பாளரை விட உயர்ந்தவர் என்கிறீர்களா?//

        இது மிகச்சிறந்த புரிதல், மிகச்சிறந்த கேள்வி….யார் காமெடி பண்றாங்கன்னு இப்ப புரியுது…

  21. நண்பர்களே,

    பின்னூட்டமிடுபவர்களை தனிப்பட்ட முறையிலும், அவர் ஏற்கனவே வேறொரு கட்டுரைக்கு உங்களது கருத்துக்கு மாறாக கருத்து கூறியிருந்தார் என்ற முன்முடிவான முறையிலும் அணுகுவது, விமரிசிப்பதை தவிர்க்குமாறு கோருகிறோம். இதன் மூலம் விவாதங்களை சிறப்பாக நடத்துவதற்கு நீங்களும் உதவி புரியலாம்.

    கந்தசாமி படக்குழுவினர் தங்கது பட விளம்பரத்திற்காக சில கிராமங்களை தத்து எடுத்திருப்பதாக கூறியிருக்கும் அதே நேரத்தில் இந்த கிராமங்களில் உடனடியான மாற்றம் எதிர்பார்க்கவேண்டாமெனவும், இது நீண்ட கால நோக்கு எனவும் எச்சரிக்கையாக அறிவித்திருக்கின்றனர். இந்த நீண்ட கால நோக்கில் அந்த கிராமங்களின் கோவில் வெள்ளையடிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு சில மேசை, நாற்காலிகள் வழங்கப்படுவதைத் தவிர வேறொன்றும் நடக்கப்போவதில்லை.

    எந்தப்பயனுமின்றி ஒரு விவஸ்தை கெட்ட பாடலுக்காக வெளிநாடு சென்று சில கோடிகளை இரைக்கும் இந்த பகல் கொள்ளைக்காரர்களின் இந்த நடிப்பு ‘மனிதாபிமானத்தை’ சில நண்ர்கள் ஏதோ பயன் கிடைக்கிறது என்று பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    இப்படி ஏதோ ஒரு பயன் இருக்கிறது என்றால் அஞ்சா நெஞ்சன் அழகிரி மதுரை ஏழைகளுக்கு ஒரு வாக்குக்கு தலா 500 ரூபாய், சேலை, வேட்டி என அள்ளி வழங்கியதைப் போன்று நிச்சயமாக வினவு ஏழைகளுக்கு சேவை புரிய முடியாது. எனில் அழகிரியை போற்றூவீர்களா? எல்லா பெரிய ரவுடிகளும் இத்தகைய உதவிகளை செய்துதான் சில கிராமங்களை தனது சமூக அடிப்படையாக வைத்திருக்கின்றனர்.

    மாநகரங்களில் வசிக்கும் பணக்காரர்கள் அவ்வப்போது ஏற்படும் மனிதாபிமான அரிப்பை தீர்ப்பதற்காக பிறந்த நாளன்று ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று இனிப்பு கொடுத்து தங்களை மாபெரும் மனிதாபிமானியாக காட்டிக் கொள்வர். இவர்களுக்கென்றே பல இல்லங்கள் மிருகக் காட்சிசாலை போல மனிதக்காட்சி சாலையாக நடத்தப்படுகின்றன. ஏழ்மையையும், ஆதரவற்ற நிலையையும் உருவாக்கும் இந்த சமூக அமைப்பில் எல்லா விதமான எதிர்மறை பங்குகளையும் செய்யும் இந்த ஜென்மங்கள் ஏழ்மையை ஒழிக்கப் பயன்படாமல் அதே நேரத்தில் ஏழ்மையை ஒழிக்க நினைப்பதாக காட்டிக் கொள்ளும் இந்த அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்ல? இது பற்றி ‘ இன்னும் எத்தனை உதவும் கரங்கள் ?’ என்று புதிய கலாச்சாரத்தில் ஒரு நல்ல கட்டுரை வந்திருக்கிறது. அதை கூடிய விரைவில் பதிவு செய்கிறோம்.

    இறுதியாக ஏழ்மையை உருவாக்கும் மூல காரணத்திற்காக ஒரு அடி கூட எடுத்து வைக்காமல் இருப்பதற்குத்த்தான் இந்த ஜிகினா மனிதாபிமானங்கள் உதவுகின்றன. என்ன இருந்தாலும் அதில் பயனிருக்கிறதே, என்று இழுப்பவர்கள்தான் இந்த துப்பாக்கிகளின் எளிய இலக்கு.

    நட்புடன்
    வினவு

  22. //இப்படி ஏதோ ஒரு பயன் இருக்கிறது என்றால் அஞ்சா நெஞ்சன் அழகிரி மதுரை ஏழைகளுக்கு ஒரு வாக்குக்கு தலா 500 ரூபாய், சேலை, வேட்டி என அள்ளி வழங்கியதைப் போன்று நிச்சயமாக வினவு ஏழைகளுக்கு சேவை புரிய முடியாது. எனில் அழகிரியை போற்றூவீர்களா? எல்லா பெரிய ரவுடிகளும் இத்தகைய உதவிகளை செய்துதான் சில கிராமங்களை தனது சமூக அடிப்படையாக வைத்திருக்கின்றனர்.//

    இன்னிக்கு கூட எங்க அழகிரி அண்ணாச்சி டில்லியில் பரிதவித்த சுற்றுலா சென்ற நாற்பதுக்கும் மேற்ப்பட்ட தமிழ் குடும்பங்களை ரயிலில் சிறப்பு கோச் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளாராக்கும். இப்படி தமிழர்களுக்கு உதவுவதுதான் அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியும் தந்துள்ளார் தெரிஞ்சுக்கங்க… அதுவும் அவரை விமான நிலையத்தில் பரிதவித்த குடும்பங்கள் ‘அண்ணாச்சி’ என்று சப்தமிட்டு அழைத்ததை கூட அந்த ஆங்கில பத்திரிகை சொல்லி இருக்கிறது தெரியுமா…

  23. //மாநகரங்களில் வசிக்கும் பணக்காரர்கள் அவ்வப்போது ஏற்படும் மனிதாபிமான அரிப்பை தீர்ப்பதற்காக பிறந்த நாளன்று ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று இனிப்பு கொடுத்து தங்களை மாபெரும் மனிதாபிமானியாக காட்டிக் கொள்வர். இவர்களுக்கென்றே பல இல்லங்கள் மிருகக் காட்சிசாலை போல மனிதக்காட்சி சாலையாக நடத்தப்படுகின்றன. ஏழ்மையையும், ஆதரவற்ற நிலையையும் உருவாக்கும் இந்த சமூக அமைப்பில் எல்லா விதமான எதிர்மறை பங்குகளையும் செய்யும் இந்த ஜென்மங்கள் ஏழ்மையை ஒழிக்கப் பயன்படாமல் அதே நேரத்தில் ஏழ்மையை ஒழிக்க நினைப்பதாக காட்டிக் கொள்ளும் இந்த அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்ல?//

    விவசாயிகளுக்கு கடன் வாங்காமல் வாழ ஒரு வழி சொல்லாமல், வாறவன் எல்லாம் அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்து சாதனை படைப்பதும் பின் மீண்டும் அவர்களை கடனில் தள்ளுவதும் போலதான் இதுவும்…

  24. aalum vargathil kootaniyana media, cinema ahivatrai pokku, adimai matrum pothai mayamana karuthukkalai parapuvathai thulliyamaga parthu avatrai vimarsipathan moolamaga samooga matrathirkana kalai, elakkiam ahivatrai makkal sariyaha kandu kollvatharkaha puratchihara muyarchi ulaikum makkalai sentradaya en nenjartha valthukal

  25. நான் தொடர்ந்து வினவு படித்து வருகிறேன், தமிழ் உலகில் மிக சரியான இணைய தளம். இதில் வரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே .தொடருட்டும் உங்கள் பனி, வாழத்துக்கள் .
    அன்புடன் ப . செல்வராஜ் நீலாங்கரை சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க