முகப்புபணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...
Array

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்…..15-வது பாராளுமன்றம்…

-

எங்கப்பா டாக்டர் அதனால நானும் டாக்டர்.

எங்கப்பா பாடகர் அதனால் நானும் பாடகர்.

எங்கப்பா பத்திரிகை நடத்தினார் அதனால நானும் நடத்துகிறேன்.

எங்கப்பா சினிமா இயக்குநர் அதனால் நான் ஹீரோ…

எங்கப்பா முதல்வர் நான் துணை முதல்வர்.

எங்கப்பா மத்திய அமைச்சர் நான் எம்.பி.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...அரசியல், சினிமா, ஊடகம் என எல்லா துறைகளுமே வாரிசுகளால் நிரம்பி வழிகிறது. வலிக்காமல் அப்பாவின் கல்லாவில் அமர்ந்து விடுகிற இவர்களுக்கு கிடைப்பதோ இளைஞர்கள், திறமையானவர்கள், துடிப்பானவர்கள் என்கிற பட்டம். உலகிலேயே ஆகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொண்ட இந்திய நாடாளுமன்றம் இன்று அரசியல் வாரிசுகளின் களியாட்டக் கூடாரமாக ஆகியிருக்கிறது. எல்லா மாநில வாரிசுகளும் பொழுதுபோக தேர்ந்தெடுத்திருக்கும் கிளப்தான் இந்த பாராளுமன்றம்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களின் பிரதிநிதிகள் என்று மார்தட்டிக் கொண்டவர்கள் இப்போது வாரிசுகளை டில்லிக்கு அனுப்பி பதவிகளைப் பெற்றிருக்கிறார்கள். பெரும் கோடீஸ்வரர்கள், ராஜ குடும்பத்தினர், தொழிலதிபர்கள், முன்னாள் இராணுவ அதிகாரிகளின் பிள்ளைகள் என்று இந்தச் சமூகத்தின் செல்வாக்குப் பெற்ற பெரிய மனிதர்கள் இவர்களின் பிள்ளைகள் இவர்களின் அடுத்த வாரிசுகளாக பாராளுமன்றத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதோடு இப்போது வெறுமனே எம்.பிக்களாக மட்டுமே இவர்கள் இருந்து விட்டுப் போவதில்லை.பதவிகளைக் கைப்பற்றி மக்கள் பணத்தை விஞ்ஞான ரீதியில் கொள்ளையடிக்கும் கொள்ளைக் கும்பலாகவும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். கொள்ளையடிப்பதும் அதிலிருந்து எப்படித் தப்புவது என்பதும் இவர்களுக்கு கைவந்த கலை.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...காஷ்மீர்ல் தொடங்கி நாம் பார்த்தோமானால் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா காஷ்மீர் மாநில  முதல்வராக உள்ளார். அவரது மருமகன் சச்சின் பைலட் இணைஅமைச்சர். பரூக் அப்துல்லாவோ மத்திய எரிசக்தித்துறை அமைச்சர். ஆந்திராவில் என். டி.ராமாராசின் மகள் புரந்தேஷ்வரி இணை அமைச்சர். சரத்பவார் மகள் சுப்ரியா சுலே எம்.பி. முலயாம்சிங் யாதவ்வின் மகனும் எம்.பி, பிஜூபட்நாயக்கின் மகன் நவீன் பட்நாயக் ஒரிசாவின் முதலமைச்சர். ராஜஸ்தானின் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த  ஜோதிராதித்ய  சிந்தியா – தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர். தமிழகத்திலிருந்து கருணாநிதியின் வாரிசுகள் அனைவருக்கும் கேபினெட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி.

மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் சகோதரர் திலீப், மகாராஷ்டிர மாநில அமைச்சராக உள்ளார். தேஷ்முக்கின் மகன் அமித்தும் எம்.பி.காங்கிரஸ் கட்சி அல்லது அவரது ஆதரவாளார்கள் என்று இருக்கிற அனைவருமே தங்களின் வாரிசுகளை இம்முறை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்.

சுனில்தத், சரத்பவார், அர்ஜூன்சிங், என ஒவ்வொரு மாநிலத்தையும் பட்டா போட்டு ஆண்டு கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதற்கு பிஜேபி மட்டும் விதிவிலக்கல்ல. மும்பையின் தாதா பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...பால்தாக்கரேயின் ஒட்டு மொத்த குடும்பத்தின் கையில்தான் கட்சி இருகிறது. பிரமோத் மகாஜன், அத்வானி, என அனைவரின் குடும்பமுமே கட்சியையும் பதவியையும் பங்கிட்டுக் கொண்டிருக்கிறது. பீகார் லல்லுவுக்கு, சட்டீஸ்கர் சிபுஷோரனுக்கு, கேரளா கருணாகரனுக்கு (ஆனால் கேரளாவில் இவர்களுக்கு பலத்த அடி). தமிழ்நாடு கருணாநிதிக்கு  என இந்தக் கேவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு அமைச்சரையும், அரசியல்வாதிகளின் குடும்பப் பின்னணியையும் ஆராய்வத்ற்குள் போதுமடா இந்தக் கேவலம் என்றாகி அப்பாடா என்று அமர்ந்தால் அறிவிப்பு வருகிறது, மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் என்று… இந்தக் கேவலத்தை முதன் முதலாக துவங்கி வைத்தது யார்? என்று பார்த்தால் இந்திய அரசியலில் வாரிசு அரசியலை தொடங்கி வைத்தது நேரு மாமாதான்.

INDIA-POLITICS-CABINETஇந்திய அமைச்சரவையிலேயே இளவயது அமைச்சர் என்று புகழப்படும் அகதா சங்மாவுக்கு வயது 28. அகதாவின் அப்பாதான் முன்னாள் காங்கிரஸ் பிரமுகரும் சபாநாயகருமான பி.ஏ.சங்மா. இவர் சோனியாவை இத்தாலி நாட்டுப் பெண்ணை இந்தியாவின் அன்னையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூவியவர். சோனியா பிரதமராவதை கடுமையாக எதிர்த்து வந்தவர். இப்போது அதே சோனியா அவரது மகள் அகதா சங்மாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கிறது என்றால், இப்போது மட்டும் இத்தாலித் தாய் இந்தியத் தாயாகிவிட்டாளா? என்ன?

பதவியேற்ற பிறகு கௌகாத்தியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அகதா, “சோனியாவை அப்பா விமர்சித்தது எல்லாம் பழைய கதை, இப்போது ராகுல்காந்தி பிரதமராவதற்கு எந்தத் தடையும் இல்லை”” என்றிருக்கிறார். ஸ்டாலின் துணை முதல்வரானதற்கு ராமதாஸின் மகன் அன்புமணி வாழ்த்துச் சொல்வதையும், சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரமும், கனிமொழியும் சேர்ந்து கருத்து அமைப்பைத் துவங்கியதை இத்தோடு இணத்து சிந்தித்துப் பார்க்கவும்.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...இந்த வாரிசுகளின் தகப்பனார்கள் வாக்குகளை நம்பி மக்களிடம் மண்டியிட்டு பிச்சை எடுத்தது போலெல்லாம் இவர்கள் எடுப்பதில்லை. கருணாநிதியின் அரசியல் வாரிசுகளான தயாநிதியும்,அழகிரியும் அவரவர் தொகுதியில் என்ன கேவலங்களை எல்லாம் செய்தார்கள் என்பதை எல்லோரும் வேடிக்கை பார்த்தோம். அதே கேவலத்தைத்தான் எல்லா வரிசுகளும் செய்கிறார்கள். ஓட்டு என்றால் தங்களுக்கு மட்டும்தான் மக்கள் ஓட்டுப் போட வேண்டும். தொழில் என்றால் தாங்கள் மட்டுமே செய்ய வேண்டும். கட்சியில் தங்களுக்கு இணையாக வேறு யாரும் வளர்ந்து விடக் கூடாது அல்லக்கைகளுக்கு மட்டுமே கட்சியில் இடம் என்று வெளிப்படையாக ஒளிவு மறைவில்லாமல் செய்லபடுகிற இந்த ரௌடிவாரிசுகளுக்கு மக்கள் கொடுத்திருக்கும் அடை மொழியோ துணிச்சலானவர், சொன்னதை செய்து முடிக்கக் கூடியவர் என்பதுதான்.அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என்று நினைக்க வேண்டாம். ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை என்பதுதான் இங்கு பிரச்சனை. ஆனால் ஜெவின் வாரிசு அரசியல் பங்கை இங்கே சசிகலா குடும்பம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...தொழில் வளர்ச்சி, ஹைடெக் சிட்டி, நகரை தூய்மையாக வைத்தல், புகையிலை ஒழிப்பு, என்று மக்களுக்கான நிவாரணங்களைப் பேசுதல் என்பதோடு அந்நிய மூலதனங்களை கொண்டு குவிப்பதன் மூலம் மக்களை நேர் வகிடாக பொருளாதார ரீத்யீல் தரம் பிரித்து வறுமைப் பட்ட மக்களை நகரத்தை விட்டு துரத்தியரடிப்பது அல்லது நவீனக் கொத்தடிமைகளாக ஏழைகளை சுவீகரிப்பது என்பதுதான் இவர்களின் மனதில் உதிக்கும் மக்கள் திட்டம்.

மற்றபடி,

இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் உரிமை, சிவில் உரிமை, தமிழ், தமிழர், ஈழம், சமூக நீதி என இவர்கள் எந்த பொதுப் பிரச்சனை குறித்தும் கருத்துச் சொல்ல மாட்டார்கள். வேறு எந்த சண்டை சச்சரவுகளுக்கும் போகவும் மாட்டார்கள். ஆனால் தொழில் பாதிக்கிறது என்றால் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் எரித்து குடும்பத்துக்குள்ளேயே அடித்துக் கொள்வார்கள். ஆனால் பதவியும் அதிகாரமும் பறி போய் விடுமோ என்றால் காலில் விழுந்து நக்காத குறையாக நக்கி அடித்துத் துரத்தியவர்களிடமே அண்டி நாயைப் போல அடங்கி ஒடுங்கிவிடுவார்கள். இதற்கு இந்த திருட்டுக் குமபல் வைத்திருக்கும் பெயர் பெருந்தன்மை.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...கடந்த 16-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான போது ஆங்கில சேனல் ஒன்று தயாநிதியிடம் பேட்டி எடுத்தது. அந்தப் பேட்டியில் தயாநிதி சொன்னது என்ன தெரியுமா, “இலங்கைப் பிரச்சனை ஒரு பிரச்சனையே அல்ல. அதை தமிழக மக்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை “என்று பேசிவிட்டு “ஈரோட்டில் ஜெயித்த மதிமுக எம்பி எங்கள் கட்சிக்கு  வந்தால் வரவேற்போம்”” என்றார். என்ன கேவலம் பாருங்கள். சுரணை உள்ள எந்த பத்திரிகையாளனும் “அப்படி என்றால் எதற்கு உங்கள் தாத்தா போர் நிறுத்தம் கேட்டு உண்ணாவிரதம் இருந்தார்,அப்போ அது நாடகம் என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்களா? “என்று ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...பதவி போதை இவர்களை கொலை செய்யத் தூண்டுகிறது. சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து தப்பிக்கத் தூண்டுகிறது. சமீபத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் பல நூறு கோடி ரூபாய் லஞ்சம் பெற்று சிக்கினார் சுமதி ரவிச்சந்திரன் என்ற பெண் பாஸ்போர்ட் அதிகாரி. அவரது உயர் கல்விச் சான்றிதழே தவறு என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது. அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது நீதிமன்றம். அடுத்த நாள் அந்த நீதிபதி மாற்றப்பட்டார். அடுத்த சில நாட்களில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அப்படி என்றால் அவரைக் காப்பாற்றியது யார்? என்ற கேள்வியை  எந்த மீடியாவும் கேட்கவில்லை. அவர் யாரின் வாரிசு என்றும் எந்த மீடியாவும் சொல்லவில்லை. அவர் மாநில கல்வி அமைச்சர் அன்பழகனின் நெருங்கிய உறவுக்காரப் பெண். காங்கிரஸ் கட்சியின் ஜெயந்தி நடராஜனின் தாயாரும் சுமதி ரவிச்சந்திரனின் தயாரும் அக்காளும் தங்கையுமாம். மத்திய மாநில அரசுகளின் செல்வாக்குள்ள சுமதி நூறு கோடி அல்ல எத்தனை கோடி வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம், அவரை எந்த இந்தியத் தண்டனைச் சட்டமும் தண்டிக்கப் போவதில்லை.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...சரி தலைவர்கள்தான் இபப்டி என்றால் அரசியல் கட்சிகளின் ஏனைய பொறுப்பாளர்கள் மட்டும் விடுவார்களா என்ன? மாவட்டம், வட்டம், என்று ரௌடிகளாக அரசியலுக்கு வருகிறவர்கள், வந்து கொண்டிருப்பவர்கள், வரப்போகிறவர்கள் மட்டும் சாதாரண தொண்டனுக்கு வழிவிடுகிறானா?என்ன தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்கிற ரீதியில் மாவட்ட செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் என எல்லோருமே அவர்களின் வாரிசுகளை அரசியலுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். விளைவு தொண்டன் காசு கொடுத்தால் வேலை பார்க்கிறேன் என்று பணத்தை வாங்கிவிட்டு கட்சிக்கு வேலை பார்க்கிறான். காசு வரவில்லை என்றால் எந்தக் கட்சி காசு கொடுக்குமோ அந்தக் கட்சிக்கு வேலை செய்கிறான். அல்லது வேலை செய்யாமல் இருந்து விடுகிறான். ஏனென்றால் முன்னரெல்லாம் வேலை செய்ய பணம் கொடுப்பார்கள். இப்போது வேலை செய்யாமல் இருக்கவும் பணம் கொடுக்கிறார்கள்.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...இந்த தேர்தல் நடைமுறையில் எதையும் நம்மால் சாதிக்க முடியாது என்பதை நாம் உணர்ந்து கொண்டோம். ஈழத்தில் நாம் ஏமாற்றப்பட்டோம், நமது வேலை பறிபோனது, விலைவாசி அச்சுறுத்துகிறது,  கல்வி, சுகாதாரம், என வாழ்வதற்கான அனைத்து உரிமைகளுமே மக்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இதை இனியும் மக்களாட்சி என்று நம்பிக் கொண்டிருக்கிற நாம் நாளை மன்னாராட்சியை எதிர் கொள்ள நேரிடும். வரும்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான சாட்சிதான் இன்றைய பாராளுமன்ற போலி ஜனநாயகம். அரசியல் ஆதாயம் உள்ள, கோடீஸ்வரர்களையும், பண்ணைகளையும், தொழில் முதலாளிகளையும் பாதுகாக்கவே வாக்குச் சீட்டும், பாராளுமன்றமும், இவர்கள் ஜனநயகம் என்னும் பெயரில் மன்னராட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஓவ்வொரு ஐந்து வருடமும் காத்திருந்து இவர்களை துரத்தி விடலாம் என்று ஏமாந்ததுதான் மிச்சம். வாரிசுகள் மேல் வாரிசுகளாக வந்து கொண்டே இருக்கும் இவர்களை அடியோடு வெட்டி வீச இனி இந்த நாட்டுக்குத் தேவை புதிய ஜனநாயகப் புரட்சி. ஆமாம் எப்படி ஈழத்துக்காக நமது இரத்தம் கொதிக்கிறதோ அதே கொதிப்பு பணக்காரர்களைக் காக்கும் அவர்களை மட்டுமே உருவாக்கும் இந்த அமைப்புக்கு எதிராகவும் வர வேண்டும்.

— தொம்பன்

( எமது நண்பர் தோழர் தொம்பன் வினவில் ஏற்கனவே சட்டக்கல்லூரி ‘கலவரம்’ தொடர்பாக “ஆனந்த விகடனின் சாதிவெறி” என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். இத்தளத்தில் அவ்வப்போது எழுதுவார் )

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…


 1. பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்…..15-வது பாராளுமன்றம்……

  எங்கப்பா டாக்டர் அதனால நானும் டாக்டர்.எங்கப்பா பாடகர் அதனால் நானும் பாடகர்.எங்கப்பா முதல்வர…

 2. அமெரிக்க இரோபியா நாடுகளில் உள்ள மக்கள் தனி மனித ஒழுக்கம் பற்றி அவ்வளவாக கவலைபடுவதில்லை. ஆனால் அவர்களை ஆள்பவர்கள் ஒழுக்க சீலர்களாக இருக்க வேண்டும் என்று எதிபார்க்கின்றனர். ஆனால் இங்கோ இரண்டு பெண்டாட்டிக்காரன் முதல் தறுதலை வாரிசுகள் வரை ஒழுக்க கேட்டின் சிகரங்களே நம்மை ஆள்பவர்களாக இருக்கின்றனர். மக்களோ காசு கொடுத்த கட்சிக்கு தவறாமல் ஓட்டுப் போடும் யோக்கிய சிகாமணிகளாய் உள்ளனர்…என்னே விந்தை.

 3. முதலில் நமது வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம். மதுரையில் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இனிப்புகள் வழங்கப்படுகின்றன. மதுரை அமர்க்களப்படுகிறதாம்.

  மதுரையை ‘கூடல் மாநகரம்’. கோவில் மாநகரம்’ என்றும், அந்த மண்ணை அன்னை மீனாட்சி ஆள்கிறாள் என்பார்கள். அதெல்லாம் பக்தியில் திளைப்பவர்களும், அரசியல் வாடை சிறிதும் இல்லாத பாமர ஜனங்கள் சொல்வது. மதுரையை ‘அண்ணன்’ ஆள ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன.
  continue… http://socratesjr2007.blogspot.com

 4. ஓவ்வொரு ஐந்து வருடமும் காத்திருந்து இவர்களை துரத்தி விடலாம் என்று ஏமாந்ததுதான் மிச்சம்.இனி இந்த நாட்டுக்குத் தேவை புதிய ஜனநாயகப் புரட்சி
  தினமும் இப்படியே கோபமாய் யோசித்து, தூங்கி, கனவு கண்டு, விழித்து..விழித்துவிட்டதாய் நினைத்து.. ஒவ்வொன்றும் பொய்யாகிப்போகும்போது

 5. The Ecstasy of the ultimate success is the driving force for crossing the failures and withstanding to fight the battle… The efforts serve as the fuel. As P Sainath had rightly titled one of his articles in The Hindu , how long are we going to pull on with such “Unbearable Lightness Of Seeing” – Ippadiyum Soranayatru Irukka Mudiyuma?!

 6. தமிழ்நாட்டில் மார்க்சிய-லெனினிய பொதுவுடைமை அமைப்புகளில் தோழர்களின் வாரிசுகள் அப்பாவை தொடர்ந்து கட்சிக்குள் பலர் வருவதில்லை. பல தோழர்களின் வாரிசுகளை தொடர்ச்சியாக கவனித்து இதைச் சொல்கிறேன். காரணம் – வெளிப்படையானது. என்ன வர்க்கமாய் இருந்தாலும், வர்க்க இறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
  அர்ப்பணிப்புடன் வேலை செய்யவேண்டும். வேலை செய்தால் தான், பொறுப்புகளே தரப்படும்.அதனால் வருவதில்லை.

  இதையே, ஓட்டு கட்சி தலைவர்களின் குடும்பத்தில் தலைகீழாய் இருக்கிறது. பதவிகளுக்காக அப்பாவை, மாமானாரை மிரட்டுகிறார்கள். இதிலும் காரணம் – வெளிப்படையானது. பதவி, அதிகாரம், புகழ் கிடைக்கிறது. இறங்கி வேலை செய்ய வேண்டியதில்லை. ராசா புள்ளை ராசா. வண்ணான் புள்ளை வண்ணான். இது தான் வருணாசிரமம். இந்து தர்மம்.

  • எங்களுக்கு தெரிந்து பல தோழர்களின் பிள்ளைகள் தோழர்களாக மாறியிருக்கின்றனர். சில விதிவிலக்குகள் இருக்கலாம். இதனால் மா.லெ அமைப்புகளில் அப்பாவை தொடர்ந்து பிள்ளைகள் வருவதில்லை என்பதை பொதுமைப்படுத்த முடியாது. அடுத்து பொறுப்புக்கள், வேலைகள் இவற்றின் அளவினை வீச்சினை மற்ற ஓட்டுக்கட்சிகளின் அளவுகோலின்படி பார்க்க முடியாது. உங்கள் ஒப்பீடு மா.லெ அமைப்புகளை சரியாக அணுகவில்லை எனக் கருதுகிறோம்.

   நட்புடன்
   வினவு

 7. இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா, அய்ரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா ஆஸ்திரேலியா என எங்கும் இதே பிரச்சனைதான். இந்த வாரிசுகளின் பிடியில் சிக்கி வட்டம், மாவட்டம் முதல் நாடு வரை நாசமாய் போகிறது. இதே கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதி ஊர் பெயர்களை மாற்றினால் எங்கும் பொருந்தும். கட்டுரையின் கடைசியில் தொம்பன் என்று இருக்கிறது, அவர் கட்டுரையின் ஆசிரியரா, எப்பவும் இருக்கும் அறிமுகம் இல்லையே?

 8. ”எந்த மீடியாவும் கேட்கவில்லை” என எழுதியுள்ளீரே, எல்லா மீடியாவும் அவர்களுடையதாயிற்றே! மிச்ச மீடியாக்காரன் அடி, உதை, உயிருக்கு பயந்து கேட்கவில்லை 🙂

 9. வண்க்கம் அமெரிக்காவில கில்ட்டன் என்னத்த பெரிசா கிலிச்சாரு
  வயத்தரிச படாம வாழ்த்த பாருங்கள் அய்யா

 10. நல்ல கருத்து. வருணாசிரமம் எப்படி பிறப்பால் தொழிலை நிர்ணயித்ததோ அதேதான் அரசியலிலும் தொடர்கிறது. பேரறிஞர் டி.ஆர். பாலு 15 வருடங்கள் முன்பே சொன்னார். “என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு டாக்டரும் வக்கீலும் இருக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகளும் என் பிள்ளைகளும் விளையாடும் போது, நான் டாக்டர், நான் வக்கீல், நான் எம்.எல்.ஏ. என்று சொல்லிக் கொண்டுதான் விளையாடுகிறார்கள். வக்கீல் மகன் வக்கீலாக விரும்பும் போது என் மகன் அரசியல்வாதி ஆவ விரும்புவதில் என்ன தவறு?” என்று தன் மேதமையை ஒரு பேட்டியில் காட்டிப் புல்லரிக்க வைத்தார். போகப்போக அரசியல்வாதி என்ற ஒரு சாதி உருவாகி அரசியல் அவர்கள் குலத் தொழிலாகவும், தேர்தல் அவர்கள் குலதெய்வ பூசையாகவும் ஆக வாய்ப்பு உள்ளது.

  • டி.ஆர். பாலுவின் கமெண்டை படிக்கும்போது வினவு சொன்ன ஒரு கருத்து நினைவுக்கு வந்தது.

   டாக்டர் ருத்ரன் என் ஜெனோடைப்தான் என் கருத்துகளை முடிவு செய்கிறது என்று ஒரு முறை ஒரு தவறான கருத்தை எழுதி இருந்தார். அதற்கு வினவு அளித்த விளக்கம் – நீங்கள் வளர்ந்த/வாழும் சூழ்நிலை உங்கள் கருத்துகளை முடிவு செய்கிறது, அந்த சூழ்நிலையை உடைத்து வேறு கருத்துகளை உருவாக்குவது ரொம்ப கஷ்டமான விஷயம், நிறைய பேருக்கு அது சாத்தியம் இல்லை, இதைத்தான் டாக்டர் ருத்ரன் ஜெனோடைப் என்று குறிப்பிடுகிறார். ஜெனோடைப் வளர்ப்பை பற்றி இல்லை என்பது சவுகரியமாக மறக்கப்படுகிறது, அது வேறு விஷயம். வளர்ப்பை பற்றி வினவுக்கு உள்ள கருத்து இது என்று கொள்கிறேன்.

   டி.ஆர். பாலுவும் இந்த ரூட்டில்தான் போகிறார். ஒரு அரசியல் குடும்பத்தில் வளரும் பிள்ளைகளுக்கு அரசியல் ஆர்வம் அவர்களது சூழ்நிலையால் இயல்பாக விளைகிறது, அரசியலில் நுழைய தோதான சூழ்நிலையும் அமைகிறது, அதனால்தான் அரசியல் குடும்பத்து வாரிசுகள் அரசியல்வாதிகள் ஆகிறார்கள் என்று நினைக்கிறார். அது சரியா தவறா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்; அது தவறு என்றால் வினவு வளர்ப்பு பற்றி சொன்ன கருத்து சரியா?

   • பார்ப்பான் மகன் பார்ப்பன விழுமியங்களோடுதான் வளருவான் என்பது உண்மை. ஆனால் அந்த விழுமியங்கள் தவறு. அது போலத்தான் இதுவும். ஊரை கொள்ளையடிக்க அவர்களுக்கு இயல்பான விருப்பம் இருக்கிறது, வாய்ப்பும் இருக்கிறது அதர்காக கொள்ளையடிப்பது சரியாகுமா? இது உங்களுக்கு புரியவில்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை..

   • அரசியல் குடும்பத்தில் வளரும் வாரிசுகளுக்கு சூழ்நிலையால் கிடைக்கும் ‘அரசியல் ஆர்வம்’ என்பது ஏதோ மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நல்ல உணர்வு அல்ல. தந்தையின் உதவியில் முக்கியமான பதவிகளைக் கைப்பற்றும் வசதி, அதிகார வெறி, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள், தேர்தல் மூலம் அமைச்சர் முதலான பதவிகளைக் கைப்பற்றும் கனவு முதலான உணர்வுகள் சங்கமிக்கும் சுயநலவெறிதான் அந்த உணர்வு. ஒரு அடிமட்டத்து தொண்டனது குடும்பத்திலும், ஒரு அமைச்சரின் குடும்பத்திலும் இருக்கும் வாரிசுகளுக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடும் சூழ்நிலை நிலவுகின்றது என்றால் இரண்டும் ஒன்றல்ல. தொண்டனது வாரிசு சுவரொட்டி ஒட்டுவான், அமைச்சரின் பிள்ளை ஆட்சியில் ஏதோ ஒரு பதவியைக் கைப்பற்றுவான்.

    வினவு

   • அரை டிக்கெட்,

    // ஊரை கொள்ளையடிக்க அவர்களுக்கு இயல்பான விருப்பம் இருக்கிறது, வாய்ப்பும் இருக்கிறது அதர்காக கொள்ளையடிப்பது சரியாகுமா? //
    என்ன நான் எழுதியதை சரியாக படிக்கவில்லையா? மீண்டும் ஒரு முறை. // அது சரியா தவறா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் // நான் கொள்ளை அடிப்பது சரி என்று எங்கே சொல்லி இருக்கிறேன், நீங்கள் ஏன் இப்படி நான் என்ன சொன்னேன் என்பது பற்றி ஒரு தவறான முடிவுக்கு வருகிறீர்கள்?

    // பார்ப்பான் மகன் பார்ப்பன விழுமியங்களோடுதான் வளருவான் என்பது உண்மை. ஆனால் அந்த விழுமியங்கள் தவறு. //
    நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. ஆனால் மிக தவறான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்.

    நீங்கள் சொல்லும் விழுமியங்கள் என்ன – பிறப்பினால் ஏற்றத்தாழ்வு பார்ப்பது. ஒவ்வொரு “பார்ப்பான்” மகனும் இந்த விழுமியங்களோடு வளர்வான் என்று நீங்கள் சொல்வதற்கும் ஜெனோடைப் வாதத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அப்புறம் கவுண்டன் மகன், செட்டி மகன், தேவன் மகன், பள்ளன் மகன், துலுக்கன் மகன் என்ன “விழுமியங்களோடு” வளர்கிறான்? அவனும் ஜாதி பார்க்கிறானே? ஒரு வேளை அவனும் பார்ப்பான் ஆக இருப்பானோ?

    இதை பற்றி பல முறை பேசிவிட்டோம். புதிதாக நான் என்ன சொல்லிவிடப்போகிறேன், நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்? உங்களுக்கு ஒரு ஜாதியில் பிறந்த அத்தனை பேரையும் அவர்கள் பிறப்பை வைத்து இழிவுபடுத்துவதை விடவே முடியாது போலிருக்கிறது.

    வினவு,
    // அரசியல் குடும்பத்தில் வளரும் வாரிசுகளுக்கு சூழ்நிலையால் கிடைக்கும் ‘அரசியல் ஆர்வம்’ … //
    நான் இப்போது அரசியல் ஆர்வம் சரியாய் தவறா என்பது பற்றி பேச வரவில்லை. டி.ஆர். பாலு சொன்னதும், நீங்கள் முன்னாள் ஒரு முறை சொன்னதும் ஒரே ரூட்டில் இருப்பதை மட்டுமே சுட்டி காட்டுகிறேன்.

 11. உலகத்தில் எங்காவது ஒரு நேர்மையான குடும்பத்தை உங்களால் உறுதி படுத்தி சொல்லமுடியுமா?

 12. //ராசா புள்ளை ராசா. வண்ணான் புள்ளை வண்ணான். இது தான் வருணாசிரமம். இந்து தர்மம்.//
  //வருணாசிரமம் எப்படி பிறப்பால் தொழிலை நிர்ணயித்ததோ அதேதான் அரசியலிலும் தொடர்கிறது//

  அப்போ அரசியல்வாதி தான் பார்ப்பானா? பூணூல் போட்டவன் இல்லையா?

  • யார் பார்ப்பான் என்பதைப் பற்றி யாரும் பேசவில்லையே சுரேஷ் ராம்! பூணூல் போட்டாலும் பூணூல் போடாவிட்டாலும் பிறப்பால் பார்ப்பானாக இருந்தாலும் சூத்திரனாக இருந்தாலும் வருணாசிரமம் பார்ப்பவன் பற்றி மட்டும்தான் பேசுகிறோம். அரசியல்வாதி என்ற தனி சாதியில் பூணூலாவது சுன்னத்தாவது!

   • பணக்கார வாரிசுகள் மட்டுமல்ல…ஏழைப் பங்காளர்களும் இந்த வாரிசு விசயத்தில் சளைத்தவர்கள் அல்ல…மேலுள்ள கட்டுரையில், தலித் மக்களின் அடையாளச்சின்னம், முன்னாள் உதவி பிரதமர் திரு ஜகஜீவன் ராம் அவர்களின் மகள் தான் இப்போதைய முதல் பெண் சபாநாயகராகப் போகிற மீரா குமார் என்பதை சொல்லவில்லை. அரசியல் வியாபாரிகளில் மேல்சாதி, கீழ்சாதி, உயர் சாதி, தாழ்ந்த சாதி, பணக்கார சாதி, ஏழை சாதி என்றெல்லாம் எதுவும் இல்லை. அவர்கள் ஒரே சாதிதான்…பணம் பண்ணும் சாதி.

 13. இது மக்களாட்சியல்ல!
  பணக்காரர்கள் நடதும் சர்வாதிகாரம்!
  ஆதாரம் இதோ இந்த‌ 15வது பன்றிதொழுவம்!

 14. Even as we discuss the sons and daughters of Karunanidhi, the life of C.N.A. Parimalam, son of DMK founder C.N. Annadurai, offers a study in contrast. A government doctor, Parimalam committed suicide by jumping into a well in Chennai’s Nungambakkam area in March last year. He was 67. He is said to have ended his life because he was worried about the expenses his family was incurring for his heart ailment. The high ideals Parimalam had imbibed from his father forbade him from seeking financial support from either of the two big Dravidian parties that live off his father’s legacy.
  With a deified figure like Annadurai as a father, it would not have been difficult for Parimalam to make a career in politics. MGR apparently offered him the Dindigul Lok Sabha seat in the ’70s and Karunanidhi the Chennai Central seat in the ’80s, but he chose to stay away from politics as his father was opposed to any form of dynastic perpetuation.

  Parimalam, along with Ilangovan, Rajendran and Gowthaman, was among the four adopted children of Annadurai, who had none of his own. All were his sister’s grandchildren. After Parimalam retired from government service, he was dutifully engaged in collecting Annadurai’s speeches, writings, plays and rare photographs.

  Tamil writer-journalist Vaasanthi, who recalls meeting Parimalam in 2005, says he had told her how his father’s life had been an “open book”. Annadurai was not bothered about money and perhaps wasn’t even aware if his wife Rani had to pinch his pockets for household expenses. In truth, it was Anna’s aunt who ran the house, managed finances and built the family’s small house. They did not even have funds for the upkeep of the house. His father’s only wish was to own a small farm where he would retire one day and catch up with his reading and writing. “When Annadurai died, people saw how his family lived. That was proof of his integrity. Later too, the family conducted itself with dignity,” says Vaasanthi.

  The only time the family received something from the government was when Jayalalitha as chief made all writings of Annadurai state property and paid royalty. The Karunanidhi government is also said to have offered money to Parimalam’s children after his death, but the family could not be reached for confirmation.
  http://www.outlookindia.com/full.asp?fodname=20090608&fname=Cover+Story&sid=3

  • நேர்மையான அரசியல்வாதிகளின் குடும்பங்களுக்கு இந்த கதிதான் இங்கு நேரும் என்றால் அப்புறம் ஏன் இன்றைய அரசியல்வாதிகள் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்க எண்ணமாட்டார்கள்???? எங்கே தவறு நடக்கிறது????

  • அய்யா சுரேசு,
   ஒங்க அண்ணாவின் நேர்மையப் பத்திப் பேசுறது இருக்கட்டும்.. ஒங்க அண்ணா சீக்கிரம் இறந்திட்டாரு.. அவரு உயிரோட இருந்து 80, 90 கள் வரைக்கும் இருந்திருந்தா இத விடக் கூடுதலாவே பண்ணி இருப்பாரு.. சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் போன்றவற்றின் அரசியல் அடிச்சுவடியே ஒங்க கொண்ணாதான் தெரிஞ்சுக்கோங்க.. இந்தப் பிழைப்புவாதத்தின் பிதாமகனை சரியாகப் படம்பிடிக்கும் கட்டுரை ஒன்னு இருக்குது பாருங்க…
   http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4168:2008-10-03-19-47-17&catid=68:2008&Itemid=27

   • நீங்கள் இணைப்பு கொடுத்திருந்த கட்டுரையை படித்தேன். அண்ணாவின் பிழைப்பு வாதம் தோலுரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அத்தனை மோசடிகளிலும், தில்லுமுல்லுகளிலும், கேவலங்களிலும் அண்ணா பணத்திற்க்காக சோரம் போனார் என்று சொல்லவில்லையே. அவர் பணத்திற்காக ஊழல் எதுவும் செய்ததாக இல்லை.அவருக்கு பின் வந்த அவரது தம்பிமார்கள் தான் பணம், குடும்ப நலன் போன்றவற்றிற்காக இப்போது மக்கள் பணத்தை கொள்ளை அடித்து கொண்டிருக்கிறார்கள்.

   • நீங்கள் சொல்வது போல் அண்ணா சீக்கிரம் இறக்காமல் இருந்திருந்தால் இந்த தம்பி அவருக்கும் பிறந்த நாள் கொண்டாடி கல்லா கட்டி இருப்பார்….அதனால என்ன இப்ப இறந்த நாள் கொண்டாடி கல்லா கட்டுகிறார் என்கிறீர்களா…அதுவும் சரிதான்.

   • சந்தர்ப்பவாதமும் பிழைப்புவாதமும்தான் ஊழலுக்கும் கழிசடைத்தனத்துக்கும் ஊதாரித்தனத்துக்கும் அடிப்படையாக இருக்கிறது.. அண்ணா கோடு போட்டார்.. ரோடு போடுமுன் மண்டையைப் போட்டார். இருந்திருந்தா.. அண்ணா பேரு பெத்த அண்ணாவாகி இருப்பார். 40களில் பொடி டப்பியோடு திரிந்த அண்ணா, 50களில் கைத்தறித் துணி சுமந்த அண்ணா ஆட்சியைப் பிடிக்கச் சற்று முன் தன்னளவிலும் தன் அணிகள் அளவிலும் பரிமாண மாற்றம் பெற்றிருந்தது கண்கொள்ளாக் காட்சி.. ஆதாரத்துக்கு அவர் நடத்திய கடைசி கட்சி மாநாடு;- விருகம்பாக்கம் மாநாடும் சரி அன்னார் மெரினாவை சினிமாக்கலைஞர்களால் சரிகை சுற்றி ஆடவைத்த உலகத்தமிழ் மாநாடும் சரி .. அண்ணலின் ஊதாரித்தனம் வளர்ந்த கதையைச் சொல்லும்.. அது சரி.. ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே வைத்து தேனி-மதுரை பஸ் ரூட்டை தேசியமயமாக்காமல் தடுக்க போ.வ.துறை அமைச்சர் கருணாநிதி வாங்கிய முதல் லஞ்சம் கொண்ணாவின் கடைக்கண் படாமலா நடந்தது? அதாவது அண்ணா குட்டை வெட்டியது 67இல் முட்டை யிட்டது 68, 69 இல் கொசு வளர்ந்தது 70களில்.. அண்ணா என்பவர் புற்றுநோயால் மரணிக்காமல் இருந்திருந்தால் அவரே புற்றுநோயாகி இருப்பார்.. ஊழலோடு 3 பாசிஸ்ட்களை உருவாக்கித் தருவதற்கு அவரின் சாவும் காரணமாகி விட்டது.

 15. …அப்புறம் வாரிசுகள் என்பதில் கட்சி தலைவர்களின் ‘தொடுப்புகள்’ ஆன சினிமா நடிகைகளும் அடங்குவர்…இவங்களைப் பத்தி எல்லாம் வினவில் எழுத முடியாது என்று நினைக்கிறேன்… அதற்கென வேறு பத்திரிகைகள் உள்ளன…

 16. நான் இந்தக் கட்டுரையை எழுதிய போது மீராகுமார் சபாநாயகர் ஆகவில்லை. தவிரவும் உண்மையில் அவர் பாபு ஜெகஜீவன் ராமின் மகள் என்பது சபாநயகராக அவர் தன் பொறுப்பை ராஜிநாமா செய்த பிறகே தெரியும். ஒரு முஸ்லீமை இந்திய ஜனாதிபதியாக்குவது, கண் தெரியாத ஒருவரை நீதிபதியாக்குவது, தலித் ஒருவரை ச்பாநாயராக்குவது இதெல்லாம் இன்று காமெடியான நாடகங்கள்தான். ஏனென்றால் கோமாளி அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போதுதான். குஜராத் படுகொலை நடந்தது. மிகவும் சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால் மோடியும் அப்துல்கலாமும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நெருங்கிய நண்பர்களாம். பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட போது கலாம் அமைதியாக இருந்த போதே தெரிகிறது. ஒரு மைனாரிட்டியாக அந்த இடத்தில் ஒரு கணமேனும் இருக்க முடியாது. அது மாதிரிதான். மீராகுமாரும்,.இவர் சபாநாயகர் ஆன உடன் காயர்லாஞ்சில் கொல்லப்பட்ட தலித்துக்களோ, இல்லை என்றால் உத்தபுரத்தில் சுவருக்குப் பின்னால் சேரியில் வாழும் தலித்துக்களோ உயர்வு பெறுவார்கள் என்பதும். இந்திய ஜன்நாயக்ம் என்பது பாம்பு மாதிரி அது பல படங்களை எடுத்து ஆடுகிரது,. அப்படியான ‘படங்கள்’தான் இவை. மீராகுமார் சபாநாயகர் ஆகலாம். ஆனால் மேலவளவு முருகேசன் பஞ்சாயத்து தலைவர் ஆக முடியாது. இந்த ‘படங்களி’ன் உண்மைத் தன்மை இதுதான். கண் தெரியாதவர் நீதிபதியாகி விட்டால். மறுக்கப்பட்ட – படுகிற நீதி ஏழைகளுக்கு கிடைத்து விடுமா? என்ன? தேசியக் கொடியை எரித்தவர்களுக்கு ஜாமீன் வழங்க சென்னை நீதிமன்றம் என்ன நிபந்தனை போட்டது தெரியுமா? தேசியக் கொடியை உயிருக்கு மேலாக நினைக்க வேண்டும்! இந்தியர் அனைவரும் உடன் பிறந்தோர் என்று எழுதிக் கொடுத்தால் ஜாமீனால் இது எவளவு பெரிய மோசடியான வன்முறை.

 17. //நான் இந்தக் கட்டுரையை எழுதிய போது மீராகுமார் சபாநாயகர் ஆகவில்லை. தவிரவும் உண்மையில் அவர் பாபு ஜெகஜீவன் ராமின் மகள் என்பது சபாநயகராக அவர் தன் பொறுப்பை ராஜிநாமா செய்த பிறகே தெரியும்.//

  இது போல் இன்னும் வெளியில் தெரியாத எத்தனை வாரிசுகள் சப்தம் இல்லாமல் பணம் பண்ணிக் கொண்டு இருக்கின்றனரோ…யார் அறிவர்?

  //ஒரு முஸ்லீமை இந்திய ஜனாதிபதியாக்குவது, கண் தெரியாத ஒருவரை நீதிபதியாக்குவது, தலித் ஒருவரை ச்பாநாயராக்குவது இதெல்லாம் இன்று காமெடியான நாடகங்கள்தான்.//

  இது போன்ற வெகு ஜன நாடகங்களைத்தான் ஊடகங்கள் மக்களுக்கு அள்ளி அள்ளி தருகின்றன…மக்கள் அதை எல்லாம் ரசிகின்றனரோ இல்லையோ அவர்கள் ரசிப்பதாக மற்றவர்களை நம்ப வைக்கிறார்கள்…

 18. //இதை இனியும் மக்களாட்சி என்று நம்பிக் கொண்டிருக்கிற நாம் நாளை மன்னாராட்சியை எதிர் கொள்ள நேரிடும்.//
  ஜனநாயக போர்வைக்குள் தற்போது நடப்பதே மன்னராட்சிதான் என்று நம்பத்தோன்றுகிறது – தங்களுடைய கட்டுரையை வாசிக்கும்போது

 19. இந்தக் கட்டுரையில் சுமதின்னு ஒரு அம்மா சம்பாதிச்சதப் பத்திப் பேசி இருக்கீங்க.. வாஸ்தவம்தான்.. அவங்களோட சேர்ந்து பாஸ்போர்ட் ஊழல் பண்ணின இன்னொரு அம்மாவைப் பத்தியும் பாக்கணும்.. அவங்க டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தினவங்க.. அவங்க அப்பாதான் விபி சிங்கை காங்கிரசு அணியில் இருந்தும் காப்பாத்த ஒரு ஓட்டுப் போட்ட அப்துல்சமது எம்பியாம்.. விபிசிங் கொண்டுவந்த மண்டல் துருப்புச்சீட்டுக்காக ஒரு ஓட்டுப் போட்ட சமதுவப் பத்தி புகழாரம் சூட்டும் விபிசிங் பக்தகோடிகள், இந்த அம்மாவின் நாறிப்போன ஊழலைப் பத்தி ஏன் வாயவே திறக்கலை?

 20. நன்றாக உள்ளது கட்டுரை, தொடரவும், 200 வருட அடிமை பாரம்பரியம் மிக்கவர்கள் நாம், அவ்வளவு விரைவில் ஓட்டு போட கற்று கொள்ள முடியுமா என்ன?

 21. Payr anbu mikka papyriorgalay ennai pattri eppadi eayn vivathekereergal. Nann enna ungaluku trogam seytheyn. Unalukellam oru manivi eru makkal enako kanaikl adangatha mannivegal , makkal athalal avargali kappatra naan padai padugeraynada udanperapukalay.

  Ennnum kooruvaynada…………………

 22. நான் புதிதாக வந்தவன். உங்கள் படைப்பு நிறைய சிந்திக்க வைகிறது.
  தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!

 23. அரசியல் ஒரு தொழில் இதுல சேர்ந்தா நல்லா லாமம் பாக்கலாம் ,இப்படிபட்ட தொழில வாரிசுக்கு குடுக்காம போக நம்ம ஊர் அரசியல் வியாயதிகள் என்ன இழிச்சவாயர்களா ,மக்கள் தான் விழிப்புணர்வு அடையனும் இந்த கட்டுரைய படிச்சவன் மட்டும் தான் பார்ப்பான் எல்லாருக்கும் விழிப்புனர்வு வரணும் பத்திரிக்கைகள் இத பத்தி எழுதனும் அப்பதான் மக்களுக்கு போய் சேரும் அனா அதுக்கு வழி இல்ல பத்திரிக்கை நடத்துரது டீ வி நடத்துரது எல்லாம் அரசியல் வாதிகள் அவர்களோட பினாமிகள் ,எங்க மக்கள் விழிப்புணர்வு அடைய விடவே மாட்டாங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க