Friday, September 22, 2023
முகப்புபரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!
Array

பரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!

-

பத்ரி

தில்லைக் கோவிலை அரசு மேற்கொண்டதை அடுத்து அதிர்ச்சியடைந்த இந்து மதவெறி அமைப்புக்கள் அரசு நிர்வாகத்தால் அந்தக் கோவில் சீரழியும் என அரற்றினார்கள். அதையே தினமணி தலையங்கம் எழுதி வழிமொழிந்தது.

உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் பார்ப்பன மேல்சாதியினரிடத்தில் இருந்தபோது எவ்வளவு கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பது நீதிக்கட்சி காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்டன. இதெல்லாம் பழங்கதையென்றால் இப்போதைய நிலவரம் என்ன?

சங்கரமடத்தில் கொலை முதல் காமக்களியாட்டம் வரை எல்லாம் நடந்திருக்கின்றன. திருவாடுதுறை ஆதீனத்தில் இளையவர் பெரியவரைத் தீர்த்துக்கட்ட போட்ட திட்டம், தில்லைக் கோவிலின் ஆண்டு வருமானம் வெறும் முப்பதாயிரம் ரூபாய் எனக் கணக்கு காட்டும் தீட்சிதர்களின் கொள்ளை.. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) இருக்கும் பரகால ஜீயர் மடம். இந்த மடத்தில் நடக்கும் கூத்துக்கள் பற்றி குமுதம் ரிப்போர்ட்டர் 29.01.09 இதழில் அதன் நிருபர் ஷானு விரிவாகப் பதிவு செய்திருக்கின்றார்.

திருவரங்கத்தில் இது போன்று பல ஜீயர் மடங்கள் இருக்கின்றன. இவற்றுக்கு ஏராளமான சொத்துக்களும், அந்த சொத்துக்களை மடத்தின் அதிகாரபீடத்தில் உள்ளவர்கள் பினாமிகள் மூலம் தனியார் வசம் விற்பதும், அதில் ஏராளமான ஊழலும், இதற்கு உதவ மறுக்கும் சாமியார்களை ஊழல் செய்யும் சாமியார்கள் வெளியே தெரியாமல் கொலை செய்வதும் இங்கே சகஜம். வைணவத் தலமான திருவரங்கம் இந்திய அளவில் புகழ் பெற்றிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதும் அவர்கள் இந்த மடங்களுக்கு தான தர்மம் செய்வதும், அது பின்னர் ஸ்வாகா செய்யப்படுவதும் இங்கு வாடிக்கைதான்.

பெருமாளைப் பாடும் பாகவதர்கள் வந்தால் தங்குவதற்காக அந்தக்கால பணக்காரர்கள் சிலர் கட்டிய மடம்தான் இந்த பரகால ஜீயர் மடம். மடத்திற்கு திருச்சியைச் சுற்றி பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த வருமானத்தைக் கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதும், மடத்தில் உள்ள சாமிக்கு பூஜை செய்வதும் நடைமுறையாம். இம்மடத்தின் சொத்து மதிப்பு அறுபது கோடிக்கு அதிகமாம்.

ஒரிசாவிலிருந்து வந்த பார்ப்பனரான பத்ரி நாரயண ராமானுஜதாசன் ஆரம்பத்தில் இம்மடத்திற்கு சமையல்காரராக வந்தவர். பின்னர் மடத்தின் இன்றைய ஜீயரான லக்ஷ்மண நாராயண ஜீயரின் பலவீனங்களை அறிந்து கொண்டு அதற்கான தேவைகளைச் செய்து கொடுத்து, அவரை மடக்கி பவர் ஆஃப் அட்டர்னிவாங்கிக் கொண்டு அடுத்த ஜீயராகப் போகின்றவர் என்ற தகுதியில் சொத்துக்களை அனுபவித்து வருகிறார். சைவ ஆதீனங்களைப் போல வைணவ ஜீயர்கள் பிரம்மச்சாரிகள் கிடையாது. எல்லா ஜீயர்களும் பேஷாக ஒன்றுக்கு இரண்டாகக்கூட திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளைப் பெற்றெடுத்து சுபமாக வாழ்க்கை நடத்தலாம். இது ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்யமாட்டார்கள், புராட்டஸ்டண்டு பாதிரியார்கள் திருமணம் செய்யலாம் என்பதோடு ஒப்பிடத்தக்கது.

மற்றபடி பாதிரியார்களும், ஆதீனங்களும் தத்தமது பாலியல் தேவைகளைக் கள்ளத்தனமாக அனுபவிப்பது வேறு விசயம். ஆனால் ஜீயர்களுக்கு இப்படி வசதி இருப்பதால் மடத்திற்கு வரும் பக்தைகளைப் பணத்தால், வசதியால் மடக்கிப் பெண்டாளுவது திருவரங்கத்துக்கே தெரிந்த விசயம். அப்படித்தான் திருச்செங்கோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவியான செல்வி என்ற பெண் தன் தோழியுடன் இந்த மடத்திற்கு வந்தார். எப்படியோ அந்தப் பெண்ணை வசியம் செய்து கொண்ட பத்ரி அவளது பெற்றோருக்கு தெரியாமல் மறைத்தும் வைத்திருக்கின்றார். இத்தனைக்கும் இந்த பத்ரிக்கு ஒரிசாவைச் சேர்ந்த கோதாராணி என்ற மனைவியும் உண்டு.

ஆனால் நாளொன்றுக்கு ஒரு மாது என்று அனுபவிக்கும் வசதி கொண்ட பத்ரி மனைவியை எல்லாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. 83 வயதான ஜீயரும், கோதாராணியும் அங்கே ஆயுள்கைதிகளைப் போல காலந்தள்ளுகிறார்கள். அறுபது கோடி சொத்து என்பதால் பத்ரிக்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என எல்லா மட்டங்களிலும் செல்வாக்கு உண்டு.

இந்நிலையில் செல்வியின் பெற்றோர் தமது மகள் காணாமல் போனது குறித்தும், அவள் பத்ரியின் கட்டுப்பாட்டில் இருப்பதை வைத்தும் திருவரங்கம் காவல் நிலையத்தில் அழுதவாறே புகார் கொடுத்தனர். அதனால் செல்வியின் பெற்றோருடன் அந்த மடத்திற்கு சென்ற போலீசாரை பத்ரி திமிருடன் எதிர்த்தார். இது இந்துத் துறவியின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல், இந்துப் பீடத்தின் மீது தாக்குதல், இந்து மதம், அதன் சம்பிரதாயங்கள் மீது தாக்குதல் எனச் சாமியாடியிருக்கின்றார். உயர்மட்ட அதிகாரிகளுக்கும் போன் போட்டு இந்தியிலும், ஆங்கிலத்திலும் புகார் செய்திருக்கின்றார்.

இதனால் பதறிய போலீசு அவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி செல்வியை மீட்டு வந்தனர். செல்வியோ தான் மேஜர் என்றும், தான் பத்ரி சாமியாருடன்தான் வாழப் போவதாகவும் பேச, செல்வியின் தந்தை வயது கொண்ட பத்ரியோ, சட்டப்படி தான் செல்வியைத் திருமணம் செய்வதில் என்ன தவறு எனப் போலீசிடம் சட்டம் பேசியிருக்கின்றார். எனவே இந்தப் பிரச்சினையைப் போலீசார் திருவரங்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு தள்ளி விட்டனர். அதன்பிறகு அங்கு நடந்த பஞ்சாயத்தில் செல்வி கவுன்சிலிங் செய்யப்பட்டு பெற்றோருடன் அனுப்பப்பட்டார்.

ஒரு செல்வி போனால் என்ன இன்னும் ஓராயிரம் செல்விகள் கிடைப்பார்கள் என்பதனாலோ என்னவோ பத்ரி அலட்டிக் கொள்ளாமல் மடத்திற்கு திரும்பினார். இவ்வளவுக்கும் இந்தத் திமிரெடுத்த ஒரியாப் பார்ப்பானுக்கு பிளட் கேன்சராம். அதனால் செல்வி கோவிலுக்குச் சென்று அங்கே படுத்துக் கிடக்கும் பெருமாளிடம் தன் வாழ்க்கையில் பாதியைப் பத்ரிக்கு கொடுக்குமாறு வேண்டிக்கொள்ள அதைப் பெருமாளும் அங்கீகரித்து விட்டதாகவும் இந்தப் பத்ரி காவல்நிலையத்தில் பேசியிருக்கிறான் என்றால் என்னத்தைச் சொல்ல?

தற்போது இந்த மடத்தின் தொண்டுக் கிழமான லக்ஷ்மண நாராயண ஜீயரைக் காணவில்லையாம். எனவே அடுத்த ஜீயர் நான்தான் என பத்ரி தன்னைத்தானே நியமித்துக் கொண்டார். உண்மையில் பெரிய ஜீயரைப் பத்ரி கொன்று விட்டதாகவும், அவரை அடுத்த ஜீயராக்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஒரு வைணவ ஐயங்கார் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார். மடத்தின் அதிபர் பதவியைக் கைப்பற்றுவதில் இந்த ஆன்மீகவாதிகள் கொலை வரைக்கும் போவார்கள் என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

இரத்தப் புற்றுநோயினால் சாகப்போகின்ற பார்ப்பன ஐயங்கார் ஜீயருக்கே இவ்வளவு கொழுப்பு இருக்கின்றது எனில் நோயில்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் ஜீயர்களை நினைத்தால் திகிலாக உள்ளது. ஒரு தில்லைக் கோவிலை அரசுடைமையாக்கியதைப் போல எல்லா ஜீயர், ஆதீனங்களையும் அரசு கைப்பற்றி மடத்தலைவர்களுக்கு மடத்திலேயே ஏதாவது எடுபிடி வேலைகள் கொடுப்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி!

மற்றபடி பெண்டாளும் ஒரு ஃபிராடு சாமியாரைக் கைது செய்யப் போனால் அது இந்துமதத்திற்கு ஆபத்து வருகிறது, இந்துமத சம்பிரதாயங்களின் மீதான தாக்குதல் என்றால் இதைவிட இந்து மதத்தை நாம் கேவலப்படுத்தத் தேவையில்லை. திருவரங்கத்தானைப் பார்ப்பதற்கு பாரததேசம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கு இந்த ஜீயர்களின் உண்மைக் கதைகளை முத்து காமிக்ஸ் போல படக்கதையாகப் பல்வேறு மொழிகளில் வெளியிட்டால் அது நிச்சயம் இந்துமதத்திற்கு செய்யப்படும் பேருதவியாக இருக்குமே!

-புதிய கலாச்சாரம், மே’2009

புதிய கலாச்சாரம் மே 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

தொடர்புடைய பதிவு

‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !

  1. Like this there are 100s and 1000s in allover india…ISKON for example, SAIBABA……why dont you write about Arulmigu AMMA ADHIPARASHAKTHI, melmaruvathur : for sure you will find hell lot of interesting stuffs ..As a former student from Adhiparashakthi college, i know what is happening there …imagine a person who started as a shcool teacher became now a multi millionnaire, how could it be possible without this hindu religion cheating .Then another one started in vellore as AMMA and developed a GOLD temple worth in millions, could you write something about this and try to find how do they get money for these activites………i guess these two guys may be having money more than what kalainger and co has………………………………………..you see if you want become rich in oneday like in rajinis movies best thing is to start regilous business so that you can very safe and you can girls by side in name of hindu gods so and so………

  2. ஜீயராக இருக்க வேண்டுமானால் சன்னியாசம் வாங்கிக் கொள்ள வேண்டும்.திருமணம் ஆனவர்கள் சந்நியாசியான பிறகே ஜீயராக பொறுப்பேற்க முடியும்.ஒரு மடத்தில் முறைகேடு நடந்தால் அதைக் களைவதும்,சட்டபூர்வ
    நடவடிக்கை எடுப்பதும் சரி. அதற்காக அரசு ஏன் அனைத்து மடங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்..
    ‘திருவரங்கத்தில் இது போன்று பல ஜீயர் மடங்கள் இருக்கின்றன. இவற்றுக்கு ஏராளமான சொத்துக்களும், அந்த சொத்துக்களை மடத்தின் அதிகாரபீடத்தில் உள்ளவர்கள் பினாமிகள் மூலம் தனியார் வசம் விற்பதும், அதில் ஏராளமான ஊழலும், இதற்கு உதவ மறுக்கும் சாமியார்களை ஊழல் செய்யும் சாமியார்கள் வெளியே தெரியாமல் கொலை செய்வதும் இங்கே சகஜம்.’

    அப்படியா, எத்தனை கொலைகள் என்று சொல்ல முடியுமா.ரிப்போட்டர் எழுதுவதை
    எடுத்துப் போட்டு எழுதுபவர்கள் திருச்சி ம.க.இ.க மூலம் இதெல்லாம் உண்மையா என்று கேட்டறியலாமே.
    ஜீயர் மடம் என்று கிடையாது. வைணவ மடங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஜீயர் என்று அழைக்கப்படுவார். ஒவ்வொரு மடத்திற்கும் கோடிகளில் சொத்து கிடையாது. அன்றாட செலவிற்கான வருமானம் இல்லாத மடங்களும் உண்டு, கோயில்களும் உண்டு. ஸ்ரீரங்கத்தில் எத்தனை ஏழைஐயங்கார்கள், ஏழை மடங்கள் என்று கணக்கெடுத்தால் உண்மை உங்களுக்கு புரியும்.
    பார்பன வெறுப்பு, இந்து மத வெறுப்பு என்று வெறுப்பினை வளர்க்கும் உங்களுக்கு பிரச்சாரம் செய்ய ரிப்போட்டர் போன்றவை போதும்.இதே குமுதத்தினை நீங்கள்திட்டுவீர்கள், நீங்களே அவை எழுதுவது உண்மை என்று எடுத்துக்
    கொண்டு பயன்படுத்துவீர்கள்.

    அப்போது விமர்சனம் கிடையாது.வெட்கமாக இல்லையா இப்படி நடந்து கொள்ள.

    • மனிதன்,

      தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ மடங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், கோடிக்கணக்கில் சொத்துக்களும் இருப்பது உண்மைதானே. இதைச் சொன்னால் அன்றாட செலவிற்கு வழியில்லாத மடங்களும் இல்லையா என்று கேட்பதன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? சாமியார்களில் கூட ரவிசங்கர் போன்ற காஸ்ட்லியான சாமியாரும், ஏழை மக்களுக்கு குறி சொல்லும் வேப்பிலை அன்றாடங்காய்ச்சி சாமியார்களும் இருப்பதால் கோடிகளில் குறி சொல்லும் நவீன சாமியார்கள் இல்லை என்றாகிவிடுமா?

      திருவாடுதுறை ஆதினத்தை போட்டுத்தள்ள சின்ன ஆதினம் முயன்றதும், மதுரை ஆதினம் இளைய ஆதினத்தை துரத்த்யதும், சங்கர மடத்தில் ஜெயேந்திரன் ஏழை அய்யரானா சங்கர்ராமனை கூலிப்படை வைத்து முடித்தது என ஒவ்வொரு மடத்திலும் நிறைய திகில் கதைகள் உள்ளன. அயோத்தியில் நடக்கும் கொலைகளில் பெரும்பான்மை சக சாமியார்களை போட்டுத்த்தள்ளும் சாமியார்களின் கொலைதான் என்பதை சர்வே கூறுகிறது அயோத்தி சாமியார்களின் கிரிமனல் கொலைகளை அறிய இந்த லிங்கில் சென்று பாருங்கள்.
      http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3643:2008-09-06-19-13-09&catid=68:2008

      இந்தக்கட்டுரையில் குறிப்பிடப்படும் பத்ரி மூத்த ஜீயரை பரலோகம் அனுப்பினாரா, பணயக்கைதியாக வைத்திருக்கிறாரா என்பது தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்காக நடந்து வருகிறது. இதில் போலீசு பத்ரிக்கு ஆதரவாக இருப்பதாக நீதிபதி கண்டித்திருக்கிறார். இதெல்லாம் எல்லா செய்தி சேனல்களிலும் வந்திருக்கிறது. எனவே இது குமதம் ரிப்போர்ட்டருக்கு மட்டும் சொந்தமான ஒன்றல்ல. இந்த செய்திகள் எல்லாம் ஏதோ நாங்கள் பார்ப்பன- இந்து மதவெறுப்பில் உள்ளதால் நாங்களே புனைந்த கதையென அவதூறு செய்கிறீர்கள். அந்த அவசியம் இல்லாமல் இந்து மதமும், பார்ப்பனியமும் அவையாகவே அம்பலப்படுத்திக் கொள்கின்றன.

      ஏதோ ம.க.இ.க சொல்லிதான் இந்த பத்ரி இத்தனையும் செய்த்தாகக் கூட கூறுவீர்களோ?

      வினவு

      • //சங்கர மடத்தில் ஜெயேந்திரன் ஏழை அய்யங்காரானா சங்கர்ராமனை கூலிப்படை வைத்து முடித்தது என ஒவ்வொரு மடத்திலும் நிறைய திகில் கதைகள் உள்ளன.//

        சங்கர் ராமன் அய்யர் என்று நினைக்கிறேன்.

      • தவறினைத் திருத்திவிட்டோம், சுட்டிக்காட்டியமைக்கு நன்றி வித்தகன்

      • I agree with you. But in the same time, you should not mention about the whole cast for some persons mistake. For example, in Chennai ” roudism” are done by low cast people, can you blame all in this case.
        Telling you about this, do not consider me as Iyyar or Iyangar. If any one who is doing wrong tell about them. Please do not blame the whole cast.
        Thanks
        Surya

    • இது மனிதனோட குரல் இல்லையே, கோட்சில்லா குரல் போலல்வா இருக்கிறது.. எல்லாம் ஸ்ரீமன் ஸ்ரீனிவாசனுக்கே வெளிச்சம்…

    • //அன்றாட செலவிற்கான வருமானம் இல்லாத மடங்களும் உண்டு, கோயில்களும் உண்டு // அப்படீன்னா அத ஏன் வச்சுக்கிட்டு கஷ்டபட வேண்டும். பேசாம நல்ல வருமானம் இருக்கற மடங்களோட இனச்சிட்டு வேற வேலய பாக்கலாமே.

      • வாங்க மனிதன்,

        நீங்க இன்னும் பரிணாம வளர்ச்சி அடையாமலேயே மனிதன்னு போட்ட்டுகிட்டது முதல் தப்பு, அப்புறம் ஒரு ஏழை பிராமணனா இருந்துகிட்டு மரியாதை இல்லாம பேசுனது ரெண்டாவது தப்பு சோ
        வேறவழியில்லாம இத எழுத வேண்டியதா இருக்கிறது.

        அவ்வளவு கஷ்டப்பட்டு, ஏழையா, பிச்சக்காரனா இருந்துகிட்டு ஒரு வெங்காயத்துக்கும் நீங்க வேலை செய்ய வேண்டாம் எல்லாத்தையும் மூடிக்கொண்டு போங்க, காசக்கொடுத்து கோயில் கட்டுன மக்களுக்கு சாமிய பத்திரமா பாத்துக்க தெரியாதா என்ன?

        சரி ஏழை பீராமனரே எப்ப கோயிலை காலிபண்ணிட்டு அம்பிகளோட தனிக்குடித்தனம் போகப்போறேள். நல்லா ஞாபகம் வையுங்கோ வெளியே போனா உழைச்சு சாப்பிடனும் உழைச்சு
        உழைச்சு உழைச்சு……. என்ன இது மட்டும் காது கேட்காதே.

        கலகம்

  3. //ஸ்ரீரங்கத்தில் எத்தனை ஏழைஐயங்கார்கள், ஏழை மடங்கள் என்று கணக்கெடுத்தால் உண்மை உங்களுக்கு புரியும்.//
    இந்த கணக்கெல்லாம்… தில்லையில் தீட்சிதர்கள் கொடுத்த கணக்கு மாதிரி தான். இந்த கணக்கு உண்மை என்றால் ‘மனிதன்’ அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என சொல்லியுள்ள வினவுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். ஏன் கோபம் கொள்ள வேண்டும்?

  4. u know the condition of natarajar temple at chidambaram at present u come and see the temple is going downi when it was taken by government .last ani thirumanchanam festival was not celebrated better way .u know about dikshithars none of them had not sell any property that belongs to natarajar temple because he is the only god and it is the only job for them to give and get food,so come to chidambaram see the condition and then talk about natarajar temple and dikshithars

  5. //ஸ்ரீரங்கத்தில் எத்தனை ஏழைஐயங்கார்கள், ஏழை மடங்கள் என்று கணக்கெடுத்தால் உண்மை உங்களுக்கு புரியும்.//

    அது என்னவென்று தெரியவில்லை,நான் அடிக்கடி இந்த வார்த்தைகளை “இட ஒதுக்கீடு”
    பற்றி பேசும்போதும் மற்றும் இதுபோன்ற சர்ச்சைகளின் போதும் கேட்க்கிறேன்.
    ஏனையா, அய்யர் அல்லது அய்யங்காரில் ஏழைகள் மற்றும் சாப்பாட்டுக்கே வழி இல்லாதவர்கள் இருக்ககூடாதா? வறுமை என்ன எங்கள் பரம்பரை சொத்தா?

    யாரும் பட்டினியால் வருந்தக்கூடாது என்றல் நியாயம். அது என்ன “எவ்வளவு பிராமின்கள் ஏழைகளாக இருக்கிறார்கள் தெரியுமா” என்று அடிக்கடி நீட்டி முழக்குகிறீர்கள்?

  6. //நான் அடிக்கடி இந்த வார்த்தைகளை “இட ஒதுக்கீடு” பற்றி பேசும்போதும் மற்றும் இதுபோன்ற சர்ச்சைகளின் போதும் கேட்க்கிறேன். ஏனையா, அய்யர் அல்லது அய்யங்காரில் ஏழைகள் மற்றும் சாப்பாட்டுக்கே வழி இல்லாதவர்கள் இருக்ககூடாதா? வறுமை என்ன எங்கள் பரம்பரை சொத்தா?//

    இளங்கோவன்… நானும் பிறந்ததிலிருந்து எத்தனையோ பிராமண ஆதரவு/ பார்ப்பன எதிர்ப்பு வாதங்களைக் கேட்டிருக்கிறேன். மேற்குறிப்பிடப் பட்டிருக்கும் உங்களது வரிகளில் இருக்கும் எளிமையும் உண்மையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. வெகு சில சமயங்களில்தான் கன்னத்தில் அறைந்தாற்போல் விழும் வார்த்தைகளில் நம் உள்ளக் குறைகளும் தெரியும். இந்த சுய ஞானோதயத்தைப் பற்றி இப்போது முழுதாக விளக்க நான் விரும்பாத காரணத்தால் சுருக்கமாக நன்றி மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

    • மச்சி, இதென்ன பப்ளிக் டாய்லெட்டா, டாக்டர் பிஸ்வாஸ் போஸ்டர் மாதிரி விளம்பரம் ஒட்டிட்டு போறியே? அட்லீஸ்டு பதிவ பத்தி ஒரு பின்னூட்டம் போடு மாமு!

    • நாராயணா இந்த சக்கரை தொல்லை தாங்க முடியலடா. சக்கரை மாம்ஸ் உங்க ரேஞ்சுக்கு எழுதுற கூட்டம் தான் நிறைய இருக்கே இங்கே வந்து ஏன் உங்க குரங்கு வித்தைகளை காட்ட வேண்டும்

  7. இந்த தளத்திலிருந்து ஒதுங்கி இருக்க போகிறேன் என்று சொன்ன அடுத்த நாள் இந்த பதிவை பார்த்தேன். மீண்டும் எழுத வேண்டியதாகிவிட்டது. http://thamizmani.blogspot.com/2009/06/blog-post_28.html
    தமிழ்மணியின் வசவுகள் ஒரு பொருட்டல்ல. ஆனால் இந்த க்வான்த்சர்வ் விஷயம் என்ன என்று வினவு குழுவினர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
    சரி வந்ததற்கு இந்த பதிவை பற்றியும் ஒரு வார்த்தை. பாலியல் வக்ரங்கள் புரிந்த பத்ரி கொழுப்பெடுத்த அய்யாங்கார் பார்ப்பான். ஃப்ராடு. சரிதான். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் எழுத்தப்பட்ட திருச்சபை பாலியல் வக்ரங்கள் பதிவில் பாதிரியார்கள் கொழுப்பெடுத்து அலையவில்லை. ஃப்ராடும் இல்லை. ஏன்?
    இத்தனைக்கும் திருச்சபை விஷயத்தில் நம்பகத்தன்மை அதிகம் – குற்றம் சாட்டுபவர் திருச்சபையை சேர்ந்தவர். முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்று அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். சென்சேஷன் குறிக்கோள் கொண்ட ஒரு இன்வெஸ்டிகேடிவ் பத்திரிகை மட்டுமே இப்படி சொல்லவில்லை. ஆனால் திருச்சபை பதிவில் அப்படி சொல்கிறார்கள், இப்படி சொல்கிறார்கள் என்று எழுதப்படுகிறது. இங்கே ரிப்போர்ட்டரின் ரிப்போர்ட் வேத வாக்காக இருக்கிறது. ஏன்?
    இரண்டு பதிவும் ஒரே விஷயத்தை பற்றி பேசுகின்றன. திருச்சபை பதிவு மிக அமைதியாக தொனியில். இன்னொன்று தேர்தல் கூட்டத்தில் பேசுபவர் தொனியில். அட இரண்டு பதிவுக்கும் நடுவில் நாலைந்து மாதம் கேப் இருந்தாலாவது இடைக்காலத்தில் ஏதோ நெஞ்சம் கொதித்துவிட்டது என்று நினைத்துக் கொள்ளலாம். இரண்டு நாள்தான் கேப். அப்படி இருக்கும்போது இந்த வித்தியாசமான அணுகுமுறை ஏன்?

    • ஆர்.வி, இரண்டு கட்டுரைகளுமே வினவின் பதிவுகள் அல்ல, புதிய கலாச்சாரம் மே இதழில் வெளிவந்தவை. அது கட்டுரைக்கு கீழேயும் குறிப்பிடப்ட்டுள்ளது. வினவு எழுதாத பதிவிற்கு நீங்கள் வினவை விமர்சனம் செய்ய முடியாது. கட்டுரைகள் இரு வேறு நபர்களால் எழுதப்படும் வாய்ப்பு இருக்கிறதல்லவா அதனால் கூட தொனி மாறிப்போயிருக்கலாமே.. இதே புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த இயேசுவே நீரும் இல்லை- அன்னை தெரசா கட்டுரையின் தொனி பற்றிய உங்கள் கருத்து என்ன?

      தமிழ்மணி சொல்லியிருக்கும் அவதூறு உண்மையா என்பது உங்களுக்கே தெரிந்திருக்குமே. நீங்கள் வினவு தளத்திற்கு வரும் போது Quantserve alert வருகிறதா? எனக்கு தெரிந்த வரை Quantserve, google analytics, alexa போன்ற ஒரு சேவை. மற்றபடி வோர்ட்பிரஸ் தளம் வைத்திருக்கும் உங்களுக்கு IP பற்றி தெரிந்திருக்கும் 🙂 , தமிழ்மணிக்கு அவ்வளவு அறிவு கிடையாது

    • Mr.RV
      That is a very good decision you took to not see this webpage please do that and dont write your nonsense comments and dont waste our valuable time to read your comments, i dont find anything good criticism from your comments….

      • இல்லை முருகன். நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன். பிராமணா எதிர்ப்புக்கு ஒரு காட்டமான மொழி மற்ற இனக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்ட கொஞ்சம் சாந்தமான மொழியை உபயோகிப்பது தவறு என்றுதானே அவர் சொல்கிறார்? நடுநிலையான கருத்துக்களை நிலை நாட்ட விழையும் எந்த இயக்கமும் பின்பற்ற வேண்டிய விதி அதுதானே? பிராமணர்களும் உங்கள் பேச்சைக் கேட்டுத் திருந்த வேண்டுமென்றால் உங்கள் குரல் நடுநிலையாக ஒலிப்பது நல்லது தான்.

        ஆர்.வியுடன் நானோ நீங்களோ எல்லா விதத்திலும் ஒத்துப் போக மாட்டோமென்றாலும் மாற்றுக் கருத்தைக் கேட்டுக் கொள்வது நல்லதுதான். இல்லையேல் ஒருவரை ஒருவர் ஆமோதித்துக் கொள்ளும் பஜனைக் கச்சேரியாக இந்த விவாதத் தளம் மாறி விடும்.

      • முருகன்,

        வித்தகன் சொல்வது போல மாற்றுக்கருத்தை அனுமதிப்பதும், விவாதிப்பதும் நல்லதுதானே! இதனால் நாம் சரியெனக் கருதும் கருத்தை நடைமுறையில் அதை ஏற்க விரும்பாதவர்களை எப்படி ஏற்கச்செய்வது என்பதை நம் முயற்சியில் கற்றுக் கொள்ளும் அனுகூலம் இருக்கிறதல்லவா?

        வினவு

      • முருகன்,

        உங்களுடைய வழமையான கருத்துகள் மீது எனக்கு எப்பொழுதுமே நல்ல மதிப்பு உண்டு. ஆனால், RV பற்றிய உங்கள் கருத்து மனதிற்கு உறுத்தலாக உள்ளது.

        ஐக்கியநாடுகள் சபையும் இன்னர் சிற்றி பிரஸ் என்ற ஊடகமும் போல் சண்டையும் மாற்றுக்கருத்துகளும் வந்தால் தான் சில விடயங்களின் மறுபக்கங்கள் என்னைப்போன்றவர்களுக்கு புரிகிறது.

      • //ஐக்கியநாடுகள் சபையும் இன்னர் சிற்றி பிரஸ் என்ற ஊடகமும் போல் சண்டையும் மாற்றுக்கருத்துகளும் வந்தால் தான் சில விடயங்களின் மறுபக்கங்கள் என்னைப்போன்றவர்களுக்கு புரிகிறது.// ஆஹா, மாற்றுக்கருத்துக்கு கொடுக்கும் உதாரணங்களை பாருங்களேன். உங்களைப் போன்றவர்களுக்கு ஒரே கருத்தை இரண்டு விதமாக சொல்வது தானா மாற்றுக் கருத்து? புதினத்திற்கு பதிவு மாற்றுக்கருத்து. பதிவுக்கு தமிழ்வின் மாற்றுக்கருத்து. எல்லாமே புலிப் புகழ் பாடும்
        இணையத்தளங்கள். இதிலென்ன மாற்றுக்கருத்து, மண்ணாங்கட்டி?

      • I am sorry for this comment…. sometime i realise somepeople write there comments just to say something and i dont find anything informative thats what the reason..but later i realised i also wrote something just to say something……it wont happen in future….

    • ஆர்.வி,

      திருச்சபை பாதிரியார்களின் பாலியல் வக்கிரங்கள் குறித்த ஜெஸ்மியின் புத்தகத்தில் அது ஒரு போக்காகத்தான் குறிப்பிடப்படுகிறது. மேலும் திருச்சபையின் தலைமையே இந்த ஊழல்களை பெயரளவிற்காவது ஒத்துக்கொண்டு சப்பைக்கட்டு கட்டுகிறது. ஆனால் பத்ரியின் மீதான பாலியல் புகார், மற்றும் கொலை ஒரு அப்பட்டமான தெளிவான ஆள்மீது கூறப்படுகிறது. இதற்கு பத்ரி இது இந்து மதத்தின் மீதான தாக்குதல் என ஆவேசம் பொங்க பேசுகிறார். எனில் யாருக்கு கொழுப்பு இருக்கிறது?

      திருச்சபை குறித்த கட்டுரையில் மோசடி என்ற வார்த்தை எல்லா மதங்களுக்கும் சேர்த்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு மதத்தை விட மற்றொரு மதம் தேவலை என்ற அணுகுமுறை இல்லை.

      ஆனால் ஆர் வியிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம். பாதிரியார்களும், போப்புகளும், மௌல்விகளும் எந்த சாதியிடம் இருந்து வேண்டுமானாலும் வரலாம். ஆனால் சங்கரச்சாரிகள், ஜீயர்கள், ஆதினங்கள் போன்ற இந்து மத மடங்களுக்கு இன்னின்ன ‘உயர்ந்த’ அல்லது பார்ப்பன வேளாள சாதிகளில் இருந்துதான் சாமியார்கள் வர முடியும் என்ற ஏற்றத்தாழ்வு ஏன் சார்?

      ஏன் ஒரு பள்ளரோ, பறையரோ, சக்கிலியரோ சங்கரச்சாரியகவோ, ஜீயராகவோ வரமுடியாது? இந்த இலட்சணத்தில் சங்கராச்சாரி இந்துக்களின் லோக குருவாம். வெட்கமாக இல்லை?

      இப்படி இந்தியாவில் பெரும்பான்மை உழைக்கும் மக்களை சூத்திரன் அதாவது வேசிமகன், பஞ்சமன் அல்லது சண்டாளன் என இழித்தும், பழித்தும், அடிமையாகவும் நடத்தும் பார்ப்பன இந்துமதத்தை ஒரு மதம் என்று எவரும் ஏற்க முடியாது. அது ஒரு குற்றவியல் சட்டத் தொகுப்பு. அதில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு மட்டும் தண்டனை.

      ஏசுநாதரோ, முகமது நபியோ அவர்கள் வாழ்ந்த காலத்தில் அடிமைப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடினார்கள். அந்த மதங்களும் கோட்பாடு என்ற அளவில் அந்த மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரே விடுதலையை அளிக்கின்றன. ஆனால் நீங்கள் ரோஷம் பொங்க ஆதரிக்கும் இந்து மதம் மட்டும் பெரும்பான்மை மக்களை இழிவான பிறவிகள் என ஒடுக்குகிறது.

      எனவே இந்தியாவில் ஒரு சுபீட்சமான சமூகம் மலரவேண்டுமெனில் பார்ப்பன இந்து மதம் அதன் கோட்பாடு, புராணம், சாத்திரங்கள், மடங்கள் அத்தனையும் ஒழிக்கப்படவேண்டும். அதனால்தான் உங்கள் புரிதலில் பார்ப்பனிய இந்து மதத்தை நாங்கள் கடுமையாக தாக்குவதாக தெரிகிறது. நல்லது அந்த கடுமையை இன்னும் பல மடங்குகளில் மக்களிடம் பிரச்சாரம் செய்வோம். ஏனெனில் இந்திய மக்களின் விடுதலை இதன்றி இல்லை.

      ஆர். வி இறுதியில் உங்கள் உள்ளத்தில் ‘இந்து மனம்தான்’ இருக்கிறது என்பது வருத்தத்தை தருகிறது. அதை கழுவி சுத்தமாக்கும் பணியை நீங்கள் விரும்பவில்லை என்றாலும் பொறுமையுடன் செய்யத்தான் விரும்புகிறோம்.

      வினவு

      • திருச்சபை பாலியல் வக்ரங்கள், ஜீயர் பாலியல் வக்ரங்கள் ஆகிய இரு பதிவுக்கும் தொனி மாறி இருப்பதும், ஒன்றில் மட்டும் காட்டமான மொழி பயன்படுத்தப்படுவதும் உண்மைதான் என்று சொன்னதற்கும், பத்ரிக்கு மட்டும்தான் கொழுப்பு, பாதிரிக்கு இல்லை என்று நீங்கள் நினைப்பதை தெளிவாக்கியதற்கும் நன்றி! (அரை டிக்கெட், கவனிக்கவும் – இவை வினவின் கருத்துகளேதான், இந்த புதிய ஜனநாயகத்தில் யாரோ எழுதியதை வினவு கவனிக்காமல் போட்டுவிடவில்லை.)

        Consistent application of a value system என்பது எனக்கு மிக முக்கியம். Value system என்பது பிறந்த ஜாதி, மதம், நிறம், genotype, உயரம், தலையில் இருக்கும் முடியின் அளவு ஆகியவற்றை வைத்து மாறுபடக் கூடாது என்பதில் நான் மிக உறுதியாக இருக்கிறேன். நீங்கள் பார்ப்பனர், ஹிந்து, ஸ்டாலின், சீனா, சுப்ரமணிய சாமி, கருத்துரிமை போன்ற பல விஷயங்களில் வேறு வேறு value system வைத்து பார்க்கிறீர்கள். இன்னும் பச்சையாக சொன்னால் உங்கள் பல நல்ல கருத்துகளை ஸ்டாலின், சீனா, மாவோ ஆகிய விஷயங்களில் சமரசம் செய்துகொள்கிறீர்கள். ம.க.இ.க. தலைவர் ஒருவர் பார்ப்பன ஜாதியில் பிறந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தானோ என்னவோ பார்ப்பன ஜாதியில் பிறந்த அயோக்கியர்களை பற்றி பேசும்போது உங்கள் குரல் மிக காரமாக ஒலிக்கிறது, மதம், ஜாதி விஷயத்தில் சம்பந்தப்பட்ட மற்ற அயோக்கியர்களை பற்றி பேசும்போது தணிந்து ஒலிக்கிறது. ஒரு holier than thou attitude தெரிகிறது.

        இதை ஏற்றுக் கொண்டு விவாதிக்கும் பொறுமை எனக்கில்லை. பொறுமை இல்லாதது என் குறைதான். அதே நேரத்தில் உங்கள் பல செயல்கள் பாராட்ட வேண்டியவை (சிதம்பரம் கோவில், ஜேப்பியார் கல்லூரி தொழிற்சங்கம், ஆஃப்ரிக்கா பற்றிய பதிவுகள்) என்பதிலும் எனக்கு மாற்று கருத்து இல்லை. வீணாக ஒவ்வொருவ் பதிவையும் திசை திருப்பாமல், எப்போதாவது கருத்து சொல்பவனாக விலகி நிற்கும் என் முடிவு சரியானதுதான் என்று தோன்றுகிறது.

        இந்த quantserve விஷயத்தை தயவு செய்து தெளிவுபடுத்துங்கள். அரை டிக்கெட் நினைப்பது போல இல்லை, எனக்கும் இவை பற்றி ஒன்றும் தெரியாது. உங்களை அறியாமலே ஏதாவது spyware இருந்து தொலைக்கப் போகிறது. (அரை டிக்கெட், alexa-வும் spyware-தானே?)

        ஒன்றை மறந்துவிட்டேனே! என்ன நானா சங்கர மடத்தில் அடுத்த மடாதிபதியை தேர்ந்தெடுக்கிறேன்? இல்லை பள்ளர் பறையர் மடாதிபதி ஆவது தவறு என்று ஏதாவது கருத்து சொல்லி இருக்கிறேனா? உங்களை ஹிந்து மதத்தில், பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் செய்யும் தவறுகளை பற்றி எழுதக் கூடாது என்று சொல்லி இருக்கிறேனா என்ன? “கருத்துரிமை காவலன்” ஆன நான் அந்த மாதிரி சொல்வது இயலாத காரியம். நீங்கள் தவறாக புரிந்துகொண்டுவிட்டீர்கள். சங்கர மடத்துக்கும், திருவாவடுதுறை ஆதீனத்துக்கும், வகஃப் கமிட்டிக்கும், வாடிகனுக்கும், நாகூர் தர்காவுக்கும், அமிர்தசரஸ் SGPC-க்கும், ஒரே அளவுகோல் வைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் சங்கர மடத்தை பற்றி எழுதினால் ஏன் சிரியன் church-ஐ பற்றி எழுதவில்லை என்றெல்லாம் கூட எனக்கு கேள்வி இல்லை. என்றாவது சிரியன் சர்ச்-ஐ பற்றி எழுதினால் அதே value system-உடன் எழுத வேண்டும் என்பது மட்டுமே என் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு பல பதிவுகளில் – ஜீயர் vs திருச்சபை ஒரு உதாரணம்தான் – உடைக்கப்படுவது எனக்கு சலிப்பை தருகிறது.

        வாழ்த்துக்கள்!

        • //இந்த quantserve விஷயத்தை தயவு செய்து தெளிவுபடுத்துங்கள். அரை டிக்கெட் நினைப்பது போல இல்லை, எனக்கும் இவை பற்றி ஒன்றும் தெரியாது. உங்களை அறியாமலே ஏதாவது spyware இருந்து தொலைக்கப் போகிறது. (அரை டிக்கெட், alexa-வும் spyware-தானே?)//

          ஆர்.வி

          வினவுத் தளத்தில் எந்த வகையான spywareம் எங்களுக்கு தெரிந்து மட்டுமல்ல தெரியாமலும் கிடையாது. கூடுதலாக quantserveமும் கிடையாது. வினவை தினமும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கிறார்கள். அவர்கள் எவருக்கும் நமது நகைச்சுவை திலகம் தமிழ் மணியின் கணினியில் வந்த்து போல ஒற்றாடல் செய்தி வந்த்தாக எமக்கு தகவல் இல்லை. வினவு தளத்தை பார்க்காமலே தீடிரென்று பார்ப்தற்கு வந்த தமிழ்மணிக்கு மட்டும் அந்த ஒற்றுவேலை வந்த்து என்று அந்த மகான் தெரிவிப்பதற்கு காரணம் இதைக் காட்டி பயமுறுத்தி சில வாசகர்களையேனும் வினவிற்கு வராமல் செய்துவிட்டால் என்ற நப்பாசைதான். மற்றபடி ஆர்.வி உங்கள் மீது ஒரே ஒரு வருத்தம் மட்டும் உள்ளது. எங்களையும் அந்த மகான் தமிழ்மணியின் பெயரை உச்சரிக்கவைத்துவிட்டீர்களே? (இதைக்கொண்டாடும் விதத்தில் அந்த மகான் ஒரு நூறு பதிவுகள் எழுதி வினவை சாபமிடுவார்)

          வினவு

          • ஆர்.வி, alexa toolbar என்பது spyware தான். நான் சொன்னது http://alexa.com/ போல quantserve ஒரு statistics தளம், spyware அல்ல, இதை அந்த தமிழ்மணி கொடுத்த சுட்டியில் quantserve owner தனது பின்னூட்டம் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார். எனது கணிணியில் பல மணிநேரம் வினவு மற்றும பிற தமிழ் தளங்கள் wordpress and blogger திறந்துதான் இருக்கும் இதுவரை எனது anti-virus ஒரு அபாய அறிவிப்பும் செய்ததில்லை. தமிழ்மணியின் சீப்பான அவதூறுகளில் இதுவும் ஒன்று. RSS அனுதாபிக்கு அவதூறு செய்ய கற்று கொடுக்க வேண்டுமா என்ன?

            கட்டுரை பற்றி வினவு உங்களுக்கு கூறிய பதிலில் நானும் உடன் படுகிறேன்.

            stalin, mao பற்றிய கற்பனை செய்திகளை கொண்டு நீங்கள் விவாதிப்பது தவறு, முன்னமே அந்த அவதூறுகளை அம்பலப்படுத்தும் கட்டுரைகளுக்கான சுட்டியை உங்களுக்கு கொடுத்தேன்…நீங்கள் அதை இன்னமும் படிக்கவில்லையா?

            ஒரு அனாமதேயமான தமிழ்மணி வினவை பற்றி அவதூறு எழுதிய அவதூறை பொய்தான் என்பதை உணர நீண்டநாள் வினவு வாசகரான உங்களுக்கே விசாரணை தேவைபடுகிறது. சம்பளம் கொடுத்து ஆயிரக்கணக்கான அறிவு ஜீவிகளை கைகூலிகளாக்கி பொதுவுடமை தலைவர்களை பற்றி எழுதப்பட்ட பொய்களை அப்படியே எங்களை நம்பச்சொல்கிறீர்களே?

      • //நீங்கள் தவறாக புரிந்துகொண்டுவிட்டீர்கள். சங்கர மடத்துக்கும், திருவாவடுதுறை ஆதீனத்துக்கும், வகஃப் கமிட்டிக்கும், வாடிகனுக்கும், நாகூர் தர்காவுக்கும், அமிர்தசரஸ் SGPC-க்கும், ஒரே அளவுகோல் வைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்//ஆர்வீ அவர்களுக்கு,
        அதாவது இந்துமதம் உருவாக்கப்பட்டதே மற்ற மற்ற உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்காகத்தான். முசுலீம் கிறித்துவ மதங்கள் ஆரம்பக்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயல் பட்டிருந்தாலும் பிற்பாடு அவையும் மக்களை சுரண்ட ஆரம்பித்து விட்டன. ஆனால் இந்து மதம் மட்டும் தான் பிறப்பின் பெயரால் சாதியில் பார்ப்பன ஆதிக்கத்தை நிறுத்துகிறது. முன்னரே வினவு சொன்னது போல எந்த தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்திருந்தாலும் ஒரு மவுல்வியாகவோ அல்லது பாதிரியாகவோ ஆக முடியும் அதில் ஆதிக்க சாதிவெறியர்களின் வெறித்தனம் என்பதெல்லாம் தவிர அம்மதம் அனுமதிக்கிறதா இல்லையா. அதை ஏன் இந்து மதம் அனுமதிப்பதில்லை?

        நீங்கள் சங்கர மடத்துக்கு பொறுப்பல்ல, ஆனால் இந்த கேடுகெட்டத்தனத்தை எதிர்க்கலாம் அல்லவா?

        கலகம்

      • //இந்துமதம் உருவாக்கப்பட்டதே மற்ற மற்ற உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்காகத்தான். முசுலீம் கிறித்துவ மதங்கள் ஆரம்பக்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயல் பட்டிருந்தாலும் பிற்பாடு அவையும் மக்களை சுரண்ட ஆரம்பித்து விட்டன. ஆனால் இந்து மதம் மட்டும் தான் பிறப்பின் பெயரால் சாதியில் பார்ப்பன ஆதிக்கத்தை நிறுத்துகிறது.//

        என்ன கலகம் உலக மகா அயோகியத்தனத்தை ஒரு தலைமேல மட்டும் வச்சா எப்படி? எல்லா மதங்களுமே பெருவாரி மக்களை ஒரு சிறுபான்மை ஆளத்தான் உருவாகின.

        இஸ்லாமும் கிறித்துவமும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான மதங்களாக ஒரு காலத்தில் இருந்தன என்று நீங்கள் சொல்வதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம்

        1. நீங்கள் இந்த மதங்கள் உருவான காரணங்களையும் முறைகளையும் பற்றிக் கற்றுணரவில்லை.

        2. அல்லது அதைப் பற்றிய ஒருதலைப் பட்சமான வரலாறை மட்டும் (அந்தந்த மதங்களின் ஆதிக்க வர்க்கக்கங்களின் – பார்ப்பனீயவாதிகளின் – கண்ணோட்டத்தை மட்டும்) படித்திருக்கிறீகள்.

        3. உண்மை வரலாறு உங்களுக்குத் தெரிந்தாலும் உங்கள் வாக்குவாதத்திற்கு வசதியாக இருக்கட்டுமென்பதால் இந்து மதம் மட்டுமே மற்ற மதங்களை விட ஈனமானது என்கிறீர்கள்.
        இப்படி செய்வது நாணயமின்மை என்பதால் முதல் இரண்டு காரணங்களில் ஒன்றுதான் உங்கள் இடுகைக்கு பின்புலம் என்று நான் கருதிக் கொள்கிறேன்.

        மதம் – இறை வழிபாடு என்று வந்து விட்டாலே இறைவனுக்கு அருகில் உள்ள கூட்டம் – புரோகிதர், மவுல்வி, பாதிரி, பூசாரி, ரபி – எல்லோருமே எவனோ எழுதியதை ஊரெல்லாம் தன்னை வணங்க வைக்க உபயோகிப்பது நாடு இனம் மதம் மொழி கடந்த காட்டுமிராண்டித்தனம். மற்றபடி நீங்கள் சொல்வதற்கு மேலேயே இந்து மதத்தைத் திட்ட விரும்புகிறேன் – ஆனால் அதே அளவுக்கு மற்ற மதங்களையும் திட்ட சரக்கு உள்ளது. எனக்கு இதைப் பற்றியுள்ள கருத்துக்களைத் தொகுத்து ஒரு நீள் கட்டுரையாக எழுதும் எண்ணம் இருக்கிறது. உயிரின் மேல் உள்ள ஆசையால் அடக்கி வாசிக்கிறேன்.

        • எழுதுங்கள் வித்தகன், வினவு இருக்கையில் பயம் எதற்கு?

          மற்ற மதங்களும் இந்து மதமும் ஒன்றில்லை என்பதற்கு ஒரே கராணம் மற்ற மதங்கள் எதுவும் தமது மதத்து உறுப்பினர்களை மதத்தின் சமூக வாழ்க்கைக்கையில் அனுமதிப்பதற்கு பிறப்பில் எற்றத்தாழ்வு பார்ப்பதில்லை. இந்து மதம் மட்டும்தான் சமூக வாழ்க்கைக்கு சாதி ரீதியான ஏற்றத்தாழ்வை பிறப்பை வைத்து தீர்மானிக்கிறது. இன்றும் அந்த அம்சத்தில் வலுவாக இருக்கிறது. மற்றபடி எல்லா மதங்களும் ஓடுக்குபவர்களின் மதங்களாக மாறி விட்டன என்பதும் அதை நாம் அம்பலப்படுத்துவதும் தேவை என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் இந்தியாவில் இந்து மதத்திலிருந்து நமது மக்களை விடுவிப்பதற்கு விசேட அக்கறை செலுத்துவதிலும் தவறில்லையே?

          வினவு

          • வினவு, தளம் தருவதற்கு நன்றி. இது சம்பந்தமான என் கருத்துக்கள் பல வேறுபட்ட தலைப்புகளில் பேச வேண்டிய விஷயங்களாகக் கலந்து, கலைந்து கிடக்கின்றன. தனிக் கட்டுரையாகத்தான் உருவாக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனக்கென்று ஒரு இணைய தளம் உருவாக்க எண்ணியிருந்தேன். அதனால்தான் பாதுகாப்பு குறித்த யோசனை. வினவு தள கட்டுரைகளில் கலையரசன் ஆப்பிரிக்கா பற்றி எழுதும் அளவுக்கு சிறப்பாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்குக் கோர்வையாகவும் அதிகம் குறைபாடுகள் இல்லாமலும் எழுத எனக்கு அவகாசமும் கொஞ்சம் ஆராய்ச்சியும் தேவைப் படுகிறது. அதோடு ஆங்கிலத்தில் இருக்கும் தன்னம்பிக்கை தமிழில் இன்னும் வரவில்லை. என்ன தலைப்பில் என்ன காரணத்தால் நான் எழுத விரும்புகிறேன் என்று சற்று யோசித்து உங்களுக்கு மின்னஞ்சலில் தெரியப் படுத்துகிறேன். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

            //இந்தியாவில் இந்து மதத்திலிருந்து நமது மக்களை விடுவிப்பதற்கு விசேட அக்கறை செலுத்துவதிலும் தவறில்லையே?//

            தவறே இல்லை. வெளிக் கொண்டு வரத் தொடர்ந்து முயற்சிகள் நடக்கட்டும். ஆனால் மற்ற மதங்களில் சேர்ந்து கொள்வது தீர்வு அல்ல. எரியும் அடுப்பு எண்ணைச் சட்டி ரெண்டுமே வேண்டாம்.

      • சிறு திருத்தம். என் முந்தைய இடுகையில் “இறைவனுக்கு அருகில் உள்ள கூட்டம்” என்ற என் வரியின் தொனி எனக்கு ஏதோ கடவுள் நம்பிக்கை இருப்பது போல் (குறைந்த பட்சமாக “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” அல்லது “இயற்கையே இறைவன்” உட்டாலக்கடி) காட்டுகிறதோ என்ற அச்சம் வந்துவிட்டது. “ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்குகிறது” என்று யார் சொன்னாலும் எனக்கு குமட்டிக் கொண்டு வந்துவிடும் அளவுக்கு நான் கடைந்தெடுத்த நாத்திகவாதி.

      • வித்தகன் அவர்களுக்கு,

        ஆயர் முதல் ஜீயர் வரை அனைவரரும் உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள் தான் அதில் மாற்று கருத்து இல்லை. நீங்கள் சொல்வது போல கற்றுணர வேண்டிய அவசியம் கண்டிப்பாய் இருக்கிறது. அதாவது இங்கு விளக்க வந்ததே பார்ப்பனீய மதமான இந்துமதம் எந்த அளவுகோலில் உருவாகிறது என்பதுதான். நான் கூறியது தவறெனில் கண்டிப்பாய் திருத்திக்கொள்கிறேன்.

        மதத்திற்கு சப்பை கட்டோ, நாணயமின்றியோ நடக்க வேண்டிய அவசியமும் இல்லை. பார்ப்பன இந்து மதம் உருவானதே பிறப்பின் அடிப்படையில் மக்களை அடிமைப்படுத்துவதற்காகத்தான், கற்றுக்கொள்வதற்குக்குத்தானே விவாதம்.

        தெளிவான விளக்கம் கொடுத்தால் வசதியாயிருக்கும் , இல்லை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பினாலும் சரி. இங்கேயே விவாதித்தால் தான் நன்றாக இருக்கும்

      • நாம் பேசுவது பெரும் விவாதமாக இருக்காது. நாம் என்ன ஷியா-சுன்னி, தேவர்-தலித், கத்தோலிக்க-பிடாடஸ்டண்டு, பார்ப்பன-சூத்திர சண்டையா போடப் போகிறோம்! மத சம்பந்தமான பேச்சுக்களில் பொதுவாக நாத்திகர்கள் மத்தியில் ஒருமித்த கருத்துக்கள்தான் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

        என் கருத்து என்னவெனில்…. இந்து மதம் வருணாசிரம அடிப்படையில் செய்துள்ள அநியாயங்களைச் சுட்டிக் காட்டித் திட்டும் போது மற்ற மதங்களை உயர்வாகக் காட்டவேண்டிய அவசியம் இல்லை என்கிறேன் அவ்வளவுதான். அவர்களைத் திட்டினால்தான் இவர்களைத் திட்ட வேண்டும் என்று மதவாதிகள் சொல்வது போல் நான் சொல்லவில்லை. இந்தக் கோபத்தின் வீரியத்தை இழக்காமல் இருங்கள், சரி. ஆனால் அதே நேரம் அவர்களையும் உத்தமர்களாக்கி விடாதீர்கள். எல்லாருமே கூட்டுக் களவாணிகளே!

      • / / ஏசுநாதரோ, முகமது நபியோ அவர்கள் வாழ்ந்த காலத்தில் அடிமைப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடினார்கள். அந்த மதங்களும் கோட்பாடு என்ற அளவில் அந்த மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரே விடுதலையை அளிக்கின்றன//

        போராட்டம் = ?!

        கோட்பாடு = அடக்குமுறை

        விடுதலை = ஜிகாத், சிலுவை போர், இன்ன பிற..

        சூப்பரப்பு..

  8. Communist leaders are not above human. You followers belief every words come from their mouth are as gospel truth.You people has been brain washed by your leaders to accept what ever they say as Ten
    Commandment. Be realistic and ask question to get the truth in future.

  9. மக்களை ஏய்ப்பதில் ஆயருக்கும் ஜீயருக்குமிடையே வேறுபாடில்லை என்பது உண்மை தான். பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் என்பதால் விசேசமாக ஜீயர்களை அணுகியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு மேலோட்டமாக தெரியும் உண்மை. பார்ப்பனராக பிறக்கும் ஒருவர் அக்கிரகாரத்தோடு முடங்கி விடுவதில்லை. தன் சாதியின் மேலாதிக்க நிலையையும் அது சமூகத்தில் உண்டாக்கியிருக்கும் பிளவையும் மிக இளம் பருவத்திலேயே கண்ணுறுகிறார். தன் வர்க்க நலன் இதனைப் பேணுவதிலே இருப்பதை அறிய நேரும் போது அவர் தவிர்க்க முடியாமல் பார்ப்பனீயத்தின் பாதுகாவலர் ஆகிறார். இதனை இயல்பு என்று பரிசீலிப்பதற்கில்லை. பார்ப்பனீயம் என்பது ஜனநாயகத்துக்கும் சகோதரத்துவத்துக்கும் எதிரானது என்பதை தெரிந்து கொள்ள பெரியாரையும், அம்பேத்கரையும் படித்துத் தான் ஆக வேண்டும் என்ற அவசியமில்லை. அக்கிரகாரத்தை விட்டு ஒரு எட்டுக் கால் எடுத்து வைத்தாலே அதன் பயங்கரத்தை உணர முடியும். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் மட்டுமே அனுதாபத்தோடு அணுகப்பட வேண்டியவர்கள் என்பது என் கருத்து.

  10. தூக்குத் தண்டனை கைதிகளுக்காக போராட்டம் நடத்த: ஒரு மில்லியன் டாலர்கள்
    துலுக்கத் தீவிரவாதிகளை விடுவிக்க போராட்டம் நடத்த: 500000 டாலர்கள்.
    கவர்மெண்ட் கட்டும் அணைகளை கட்டக்கூடாது என்று போராட்டம் நடத்த: 250000 டாலர்கள்.
    மோடிக்கு எதிராக போராட்டம் செய்ய: வெறும் 100000 டாலர்கள் மட்டுமே

    புத்தாண்டு சிறப்பு சலுகை 50% டிஸ்கவுண்டுடன் கூடிய பாக்கேஜ் உண்டு.

    அழைக்கவேண்டிய நபர்கள்:

    அருந்ததி சுசான்னா ராய்
    எஸ்.ஏ.ஆர்.கீலானி
    டீஸ்டா செடல்வாத்

    பாகிஸ்தானிலிருந்து போன்கால்கள் இலவசம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க