90களின் ஆரம்பத்தில் “பெரியாரை வீரமணி கும்பலிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!” என புதிய ஜனநாயகத்தில் வந்த தொடர் கட்டுரை அரசியல் உலகில் பெரும் விவாதத்தையும் கிளப்பி போயஸ் தோட்டத்து பூசாரியாக மணியாட்டிக் கொண்டிருந்த வீரமணி கம்பெனியை முற்போக்கு உலகில் அம்பலப்படுத்தியது. அப்போது கம்பெனியார் ம.க.இ.கவின் மீது கொலைவெறியுடன் விடுதலையில் பார்ப்பனத் தலைமை இன்னபிற அவதூறுகளை வீசிக்கொண்டிருந்தனர். அப்போது இப்போதைய பெ.தி.க தோழர்களும் அங்கேதான் இருந்தனர். இந்தக் கட்டுரையின் தொடர்விளைவாகவும் ம.க.இ.கவின் இந்துத்தவ மற்றும் ஜெயாவை எதிர்த்த போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்ற காலத்தில் திராவிடர் கழகத்திலிருந்து பெ.தி.க தோழர்கள் வெளியேறினார்கள். அதற்கு முன்னரே வீரமணி அரசியல் ரீதியில் சமாதியானார்.
கோபாலபுரத்திற்கும், தோட்டத்திற்கும் மணியாட்டிக்கொண்டிருந்ததன் பின்னே மாபெரும் பொருளாதார நலன்கள் இருந்தன. வட்டிக்கடையும், சுயநிதிக்கல்லூரியும் என பெரியார் ஆரம்பித்த இயக்கத்தை லிமிடெட் கம்பெனியாக மாற்றியிருந்த வீரமணி தனது அல்லக்கைகளை வைத்து பெரியார் திடலில் அவ்வப்போது ஏதோ அரிப்புக்கு கூட்டம் நடத்தி களப்பணியாற்றுவதாக பீலா காட்டிக் கொண்டு மறுபுறம் தனது சொத்துக்களை பெருக்குவதற்காகவும், பாதுகாக்கவும் ஆளும் கட்சிகளை அண்டிப்பிழைத்தார். இத்தனை ஆண்டுகள் ஆகியும் இவ்வளவு கோடிக்கணக்கில் வருமானத்தை பெருக்கியும் பெரியாரின் படைப்புகளை வெளியிடுவதற்கு கூட துப்பில்லாமல் விடுதலையிலும், உண்மையிலும் மருத்துவ நலன், தன்னம்பிக்கை, ஊட்டச்சத்து, வாழ்வியல் சிந்தனைகள் என தூரதர்ஷனில் மாமிகள் நடத்தும் அரட்டைகளை அரங்கேற்றி வந்தார்.
இதனூடாக பெரியார் தி.க தோழர்கள் பெரியார் படைப்புக்களை முழுமையாக கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்ட போது மட்டும் அதை நிறுத்துவதற்கு கருணாநிதியை வைத்தும் நீதிமன்றத்திலும் தடை வாங்கியிருந்தார். பெரியார் கருத்துக்கள் மக்களிடம் போய்ச்சேரக்கூடாது என இந்தக் கருப்பு பார்ப்பனர் செய்த வாதங்கள் குருவாயுரப்பனுக்கே பொறுக்காது.
ஆனாலும் நீதிமன்றத்தில் பெரியாரின் கருத்துக்களை சொந்தம் கொண்டாடுவதற்கு சட்டப்பூர்வ ஆதாரங்கள் இல்லையெனவும், பெரியார் படைப்புக்களை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் எனவும் பெரியார் தி.க தொடுத்த வழக்கில் நீதிபதி சந்துரு தீர்ப்பளித்திருக்கிறார். இதற்கு முதற்கண் பெரியார் திராவிடர் கழக தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். உடனே வெகுண்ட வீரமணி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இருப்பினும் இந்த தீர்ப்பை இப்படியே இப்போதைக்கு தொடருமென பதிளிக்கப்பட்டிருக்கிறது. இனி ஐயா டெல்லிக்கு உச்சநீதி மன்றத்திற்கு படையெடுப்பார். எத்தனை கோடி செலவானாலும் இந்த வழக்கில் வெல்லுவதற்கு எல்லா சின்னத்தனமான வேலைகளையும் செய்வார். எனினும் அவை வெற்றிபெறப் போவதில்லை. அதற்குள் பெரியாரின் படைப்புக்கள் தோழர்களால் வெளியிடப்படும் என நினைக்கிறோம். உச்சநீதிமன்றமும் வீரமணிக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதற்கான முகாந்திரங்கள் எதுவுமில்லை.
கண்ட கண்ட அனாமதேயங்களின் படைப்புக்களையெல்லாம் நாட்டுடைமையாக்கி நவீன புரவலராக மார் தட்டும் கருணாநிதி பெரியாரின் படைப்புகளை மட்டும் வீரமணிக்கு உதவும் பொருட்டு அப்படி ஆக்காமல் இருந்து மற்றொரு துரோகமும் செய்திருக்கிறார். பெரியவர் இப்படி தனது இறுதி காலத்தில் துரோகப் பட்டங்களை நிறைய பெறுவது குறித்து தொண்டர்களே கவலைப்படுவதில்லை. நாம் மட்டும் ஆதங்கப்பட்டு என்ன ஆகப்போகிறது?
ராஜீவ் கொலையின் பின்னாளில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகமெங்கும் ம.க.இ.க வீச்சாக இயக்கம் நடத்திய நாளில் சென்னையில் ஒரு கூட்டம் நடத்துவதற்கு கூட பெரியார் திடலை தருவதற்கு பயந்து கொண்டு மறுத்தவர்தான் இந்த வீராதி வீரமணி. இன்றைக்கு ஈழத்திற்காக என்னவெல்லாம் அழுது புரண்டு நடிக்கிறார். கருணாநிதி மட்டுமல்ல வீரமணியும் தனது இறுதி காலத்தில் துரோகப் பட்டத்தோடுதான் வாழப்போகிறார். வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
வீரமணியின் இணையத்தளபதியாக விடாமல் தினசரி நான்கைந்து பதிவுகள் போட்டுத்தாக்கும் தமிழ் ஓவியாவிற்கு இந்த தருணத்தில் சில கோரிக்கைகளை வைக்கிறோம்.
நண்பரே நாத்திகப் பிரச்சாரம் எப்போதும் தேவையுள்ள ஒன்றுதான். ஆனாலும் மக்களின் எல்லா வாழ்க்கைப்பிரச்சினைகளை பேசி போராடும் முழுமையில்தான் அதையும் செய்ய முடியும். இல்லையேல் அதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆளில்லாத சிவன் கோவிலில் ஐயர் கொட்டாவி விட்டுக்கொண்டே பூஜை செய்து சிவனை எழுப்பமுயன்று தோற்று தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்களை விரட்டிவிட்டு வீடு சென்று தயிர்சாதம் உண்டு முடங்குவது போல உங்களின் அன்றாடப்பணியும் கணினியில் அப்படி ஆகிவிட்டது. எங்களுக்கும் உண்மையிலேயே வருத்தமாகத்தானிருக்கிறது. உங்கள் தளத்தை யாரும் அதிகம் பார்ப்பதில்லை, எதைக்குறித்தும் விவாதமும் நடப்பதில்லை. “யாரோ” 5 பேர் ஓட்டு மட்டும் போடுவதால் தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில் உங்கள் பதிவுகள் தினமும் நான்கைந்து வந்து விடுகின்றன. இனி தினமும் ஒன்று மட்டும் போட்டால் எங்களைப் போல ஏழை பதிவர்களுக்கு உதவியாய் இருக்கும்.
மற்றபடி பெரியாரை அவரது வீரியத்துடன் கொண்டு செல்லும் பணியினை நாங்கள், தோழர் மதிமாறன், மற்றும் பெரியார் திராவிட கழக தோழர்கள் முதலானோர் பார்த்துக் கொள்கிறோம். இனி நீங்கள் திடலுக்கு சென்று மானமிகுவை சந்தித்து அவரை நல்வழிப்படுத்தும் பணியினை செய்யலாம். அப்படி செய்த மறுகணமே நீங்கள் திடலை விட்டும் கழகத்தை விட்டும் நீக்கப்படுவீர்கள். அப்புறம் என்ன செய்யலாம்? நீங்கள் சாயம் போன கருப்புச்சட்டையை கடாசி விட்டு எங்களைப் போன்றவர்கள் அணியும் விறுவிறுப்பான செஞ்சட்டையை அணியுங்கள். காத்திருக்கிறோம்.
கட்டுரையில் ஒரு தவறு!
நீதிபதி சந்துரு தீர்ப்பினை எதிர்த்து வீரமணி மேல் முறையீடு செய்து அதன்படி தீர்ப்பினை செயல்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டிருப்பதை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஏற்று உத்தரவிட்டிருக்கிறது. மேலும் மேல் முறையீடும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கில் பழைய நிலையே அதாவது பெரியார் திராவிடர் கழகம் புத்தகத்தை வெளியிடுவதற்கான தடை நீடிக்க்கிறது. இந்த மேல் முறையிட்டில் இந்த வெளியீட்டின் மூலம் பெ.தி.கவினர் நிறையா சம்பாதிப்பார்கள், தங்களுக்கு நட்டம் ஏற்படும் என வீரமணி சேட்டு வெட்கம் கெட்டு குறிப்பிட்டிருக்கிறார். ஆக பெரியாரை வீரமணி கும்பலிடமிருந்து விடுதலை செய்ய சட்டபூர்வ போராட்டம் மட்டும் போதாது, மக்கள் அரங்கிலும் போராட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்பது புரிகிறது.
கட்டுரையில் இந்த மேல்முறையீட்டின் விவரங்களை தெரிந்து கொள்ளாமல் தவறாக வெளியிட்டமைக்கு மன்னிக்கவும்.
வீரமணி கும்பல் – பெரியார் விடுதலை !…
வீரமணியின் இணையத்தளபதியாக விடாமல் தினசரி நான்கைந்து பதிவுகள் போட்டுத்தாக்கும் தமிழ் ஓவியாவிற்கு இந்த தருணத்தில் சில கோரிக்கைகளை வைக்கிறோம். https://www.vinavu.com/2009/07/30/periyar-viduthalai/trackback/…
பெரியாரின் கருத்துக்களை முன் காலத்தில் அவர் நடத்திய போராட்டங்கள் மூலமாக மட்டுமே தெரிந்து கொண்டவர்களும், அல்லது அதே போராட்டங்களையும் பதங்களையும் காலம் மாறி விட்டதை உணறாமல் ஒப்புக்குப் பயன் படுத்தி வந்த இந்தக் கால தி.க. வினர் மூலமாகத் தெரிந்து கொண்டவர்களும், ஈ.வே.ரா. பற்றிய குறுகிய புரிதலில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தி.க. சாயம் பூசாமல் அவர் எண்ணங்களைப் படிக்கும் போது இன்னமும் கூட அறிவு பூர்வமாக அவரை நாம் எடுத்தாள முடியும்.
//மற்றபடி பெரியாரை அவரது வீரியத்துடன் கொண்டு செல்லும் பணியினை நாங்கள், தோழர் மதிமாறன், மற்றும் பெரியார் திராவிட கழக தோழர்கள் முதலானோர் பார்த்துக் கொள்கிறோம். //
அவசியம் ஆரம்பியுங்கள்.
குடியரசு வெளியிட பெ.தி.க.விடம் வீரமணி 15 லட்சம் கொடுத்துவிட்டு
வெளியிட்டுக் கொள்ளுங்கள் என பேரம் பேசியுள்ளது ஆனால் பெதிகவினர் நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம் என மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
ம்ம்ம்ம்ம்…. தயாராக இருங்கள் தோழர்களே!
பார்ப்பனத்தலைமை – ருக்மாங்கதஅய்யர் – மறைமுகத் தலைமை – இந்திய தேசிய பூணூல் போன்ற ”அதிபயங்கர” உளவுத் தகவல்களுடன் சாயம் போன கருஞ்சட்டைகளின் சலிப்பூட்டும் லாவணியாட்டம் வெகுவிரைவில் ஆரம்பமாகப் போகிறது.
போதாக்குறைக்கு உ.பிக்களின் ”அமங்கலப்”பார்வைக்கு வேறு ஆளாகியிருக்கிறோம்.. பார்ப்பனீயத்தை எதிர்த்து எப்படியெல்லாம் பாய்ச்சல்காட்டப் போகிறார்கள் என்று இனிமேல் தான் பார்க்கப் போகிறீர்கள்.
பெரியார் திராவிடர் கழகத்திற்கு எனது புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இருப்பினும், நீதி நிர்வாகத்தையும் அரசு நிர்வாகத்தையும் சமரசமின்றிச் சாடிவந்த பெரியார் நீதிமன்றத்தின் மூலமாக விடுவிக்கப்பட்டது வருந்தத்தக்க ஒரு நிகழ்வு. பெரியாரின் ஆதரவாளர்களைத் திரட்டி வீரமணியிடமுள்ள அத்துனை சொத்துக்களையும் மீட்டு நாட்டுடைமையாக்கியிருக்க வேண்டும். அதற்கு வீச்சான, சமரசமற்ற போராட்டம் வேண்டும். வீரமணி பெரியாரைச் சிறை வைத்ததன் மூலம் தனது பகுத்தறிவுக்குத் தானே குழிதோண்டிக் கொண்டார். அக்குழிக்குள் அவரை அடக்கம் செய்ய நீதிமன்றத்தின் மூலமாக ஒரு கைப்பிடி மண் போடப்பட்டிருக்கிறது. மீத வேலைகளைச் செய்து முடிக்க வேண்டிய கடமை நம்முடையது.
ஒருவழியாக நீதிமன்றத்தின் மூலமாகப் போராடியாவது பெரியாரை மீட்டெடுத்தாகிவிட்டது. மீதமுள்ள திராவிடர் கழக சொத்துக்களையும் மொத்தமாக பறித்தெடுக்க வேண்டியதுவும் அவசியமாகிறது.
இதைச் செய்வதனால் ஒன்றும் வீரமணிக்கு சோற்றுப்பஞ்சம் வந்துவிடப் போவதில்லை. அமெரிக்காவுக்கு நமது நாட்டைக் கூட்டிக் கொடுக்கும் என்.ஜி.ஓ. வேலைகளை அவர் ஒரு தொழிலாக நடத்திவருவதால் வீரமணியை அமெரிக்கமாமா தத்தெடுத்துக் கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
தோழர்கள் அசுரன் மற்றும் ஏகலைவன், உங்கள் மின்னஞ்சல் பெட்டியை பாருங்கள் அல்லது வினவை தொடர்பு கொள்ளுங்கள்.
karunnidhi, veeramani unmaiyil uppu pottu thinpavarkalaga irunthal thukkil thonguvarkal ithai padithal
//நீங்கள் சாயம் போன கருப்புச்சட்டையை கடாசி விட்டு எங்களைப் போன்றவர்கள் அணியும் விறுவிறுப்பான செஞ்சட்டையை அணி//
ஏன் பாதியில் விடப்பட்டுள்ளது?
பெ.தி.க தோழர்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி!
//உங்கள் தளத்தை யாரும் அதிகம் பார்ப்பதில்லை, எதைக்குறித்தும் விவாதமும் நடப்பதில்லை. “யாரோ” 5 பேர் ஓட்டு மட்டும் போடுவதால் தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில் உங்கள் பதிவுகள் தினமும் நான்கைந்து வந்து விடுகின்றன. இனி தினமும் ஒன்று மட்டும் போட்டால் எங்களைப் போல ஏழை பதிவர்களுக்கு உதவியாய் இருக்கும்.//
அனாவசியமான, அபத்தமான வரிகள்.
தோழர் போராட்டம் விடுபட்ட வார்த்தைகளை சேர்த்து விட்டோம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
அனாவசியமான, அபத்தமான வரிகள் என்பது ஒரு விமர்சனம். ஒரு வரிக்கு பதில் சொல்வதும், மற்றொரு வரியை கண்டு கொள்ளாமல் விடுவதும் சரிதானா என சிந்திக்க வேண்டுகிறேன். ஒரு அரசியல், அமைப்புச் சீரழிவுக்கு இட்டுச் சென்றுள்ள வீரமணியின் அயோக்கியத்தனத்தை தோலுரிக்கும் அதே நேரத்தில் அவரது ஆதரவாளர் என்ற காரணத்துக்காக தமிழ் ஓவியாவின் தளத்திற்கான வருகை குறித்த நையாண்டி எந்த வகையில் ஒரு சரியான, பண்பட்ட அரசியல் விமர்சனம்?
தோழர் போராட்டம்,
வினவில் எல்லா வாசகர்களின் கருத்துக்களுக்கும் நாங்களே பதில் சொல்லுவதில்லை. வினவின் கருத்துக்களை தவறென்று விமரிசிப்பதை வாசகர்கள் விவாதிப்பதையே வரவேற்கிறோம். நாங்கள் தெரிவிக்கும் கருத்துக்களினால் விவாதம் ஒரு தரப்பாக முடிந்து விடக்கூடாது என்பதாலும் இது சரியென கருதுகிறோம். தமிழ் ஓவியாவின் தளத்தில் விவாதம் நடக்கவில்லை என்பது வீரமணியின் நிறுவனமயமான வறட்டுத்தனமான நாத்திகப்பிரச்சாத்தின் விளைவுதான் என்பதையே அப்படி ‘நக்கலாக’ குறிப்பிட்டுள்ளோம். மற்றபடி இதையும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம். இத்தனை நாள் வரை தன்தலைவரின் பிரச்சார பீரங்கியாகவே ஓவியா செயல்படுகிறார். தலைமையின் தவறுகளை தெரிந்தே ஆதரிக்கும் உறுப்பினர்களை பாவம்பார்த்து விடுவது சரியான அரசியல் அல்ல, இடித்துரைக்கவும், நகைத்துரைக்கவம் வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கும் ‘இங்கிதமான, நாகரீகமான, நாசுக்கான, பண்பட்ட’ வகைகள் மூலம் வீரமணியின் தவறுகளை தெரிந்தே ஆதரிக்கும் அன்பர்களை மன்னிப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. மற்றபடி இது உங்கள் புரிதல்படி எவ்வளவு பண்பற்றதாக இருந்தாலும் அதுவும் ஒரு அரசியல் விமரிசனம்தான். நன்றி
வாங்க தோழர் போராட்டம், இப்படி எதாவது கிசும்பா எழுதுனாதான் பின்னூட்டம் போடுவீங்களா 🙂 எப்படியோ தொடர்ந்து வந்து உங்க கருத்துக்கள் வினவுல வரனும்
ஈ.வே.ரா வை பெரியார் என்று அழைக்காவிட்டால் திட்டுவதில் ஆரம்பித்து அவரது உருவத்திற்கும், இமேஜிற்கும் (தமிழில் எப்படி சொல்வது?) ஒரு தனித்துவம் கொடுத்து, அவரை தனது கட்சியின் சொத்தாக மாற்றியதன் மூலம், அவரது நாத்திகத்தை ஒரு தத்துவமாக வளர விடாமல் அரசியலாக மட்டுமே ஆக்கியது இக்கால தி.க. வினரின் மிகப் பெரிய பிழை. நான் நாத்திகம் பேசும்போது “போடா நீயெல்லாம் கருப்புச்சட்டை பெரியாரிஸ்ட்தானே” என்று பொதுப் படுத்தி விட்டு தி.க. வின் குறைக்கெல்லாம் நாத்திகர்கள் பதில் சொல்லவேண்டும் போல காட்சிப் படுத்துவது நாத்திக எதிர்ப்பாளர்களுக்கு வசதியான ஆயுதம். ஒரு வேளை பெரியாரின் எழுத்துகள் பொதுவுடமை ஆகிவிட்டால் அதன் சாராம்சத்தைப் பரப்ப தி.க. சாராத நாத்திக வாதிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
//நீங்கள் எதிர்பார்க்கும் ‘இங்கிதமான, நாகரீகமான, நாசுக்கான, பண்பட்ட’ வகைகள் மூலம்//
முதலாவதாக ‘இங்கிதமான, நாகரீகமான, நாசுக்கான, பண்பட்ட’ வகைகளை நான் எதிர்பார்ப்பதாக உங்களிடம் கூறவில்லை. எதிரிகள்
பதிலளிக்கவே வழியில்லாத ஒரு தீர்க்கமான அரசியல் விமர்சனத்தில், அனாவசியமான வரிகளின் மூலம் குறிப்பிட்ட பகுதியை எதிரிகள் பிடித்துக் கொண்டு தொங்குவதற்கு நாமே வழி ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறேன். இதோ, இந்த மொத்த விமர்சனத்தின் எந்தப் பகுதிக்கும் பதிலளிக்க வழியில்லாமல், தனது பதிவுத் தள புள்ளி விபரங்களை அளித்து ‘கண்ணியமாக’ தமிழ் ஓவியா முடித்துக் கொண்டு விட்டார். இதற்கு நாம்தான் வாய்ப்பளித்திருக்கிறோம் என்பதை நீங்கள் மறுக்க முடியுமா?
மற்றபடி இந்த கண்ணியக் கருமாந்திரங்களில் எல்லாம் ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. கடைந்தெடுத்த அயோக்கியர்கள் கண்ணியவான் வேடம் போடவும், சரியான கருத்துக்களைச் உரக்கச் சொல்லும் நாம், கடிநாய் கம்யூனிஸ்டுகள் என்று பெயரிடப்படவும், நாமே வழி சமைக்கிறோம் என்பதைத்தான் நான் வலியுறுத்துகிறேன். மேற்படி இதே தமிழ் ஓவியாவிற்கும், எனக்கும் கீற்று குழுமத்தில் நடந்த விவாதத்தை கீழே இணைத்துள்ளேன். ‘இங்கிதமான நாகரீகமான, நாசுக்கான, பண்பட்ட’ வகைகள் குறித்த எனது புரிதலுக்கு கீழ்க்காணும் உரையாடலே சான்று.
தமிழ் ஓவியா Thu, Jan 1, 2009 at 7:25 AM எழுதியது
கழகத் தோழர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்!
தமிழர் தலைவர் பெயரை
கி. வீரமணி என்றே விளம்பரம் செய்யவும்
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் பெயரை கழகத் தோழர்கள் விளம்பரம் செய்யும் பொழுது பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் வகையில் அவர் பெயருக்கு முன் உள்ள முன்னெழுத்தை (Initial) பலவாறாக வெளியிட்டு வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி மாநாட்டில் (6.9.2008) பெயருக்குமுன் தந்தை பெயரோடு தாயாரின் பெயரும் இடம்பெறவேண்டும் என்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில், நானே முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லித் தான் தாயாரின் பெயரான மீனாட்சி அம்மாள் என்பதில் உள்ள மீ யையும் இணைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
மகளிர் மாநாட்டுத் தீர்மானத்தில் உள்ள பெண்களுக்கான உரிமைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அதனை அறிவித்தார்.
அதேநேரத்தில், பல்வேறு ஆவணங்கள், அலுவலக முறைகளில் ஏற்கெனவே பதிவாகியுள்ள கி. வீரமணி என்பதை மாற்றி அமைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாலும், திட்டமிட்டே ஊடகங்கள் குழப்ப முயலுவதாலும், கழகத் தோழர்கள் ஒரே மாதிரியாக இல்லாமல் பலவாறாக விளம்பரம் செய்வதாலும் இவற்றைத் தவிர்க்க மானமிகு கி.வீரமணி என்று மட்டும் தமிழர் தலைவர் அவர்களின் பெயரைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கழகத் தோழர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாயார் பெயர் –
அடுத்து தந்தையார் பெயரில் உள்ள முன்னெழுத்துகளை (Initial)இணைத்து வரும் காலத்தில் பதிவு செய்வதைக் கட்டாயமாகக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
போராட்டம் Fri, Jan 2, 2009 at 10:43 AM எழுதியது.
கவலை வேண்டாம். மக்கள் எப்பொழுதுமே அவரை மானங்கெட்ட வீரமணி என்றே அழைத்து வருகிறார்கள். சந்தேகமிருந்தால், தோழர் கேடயம் எழுதிய காசு,பணம் தந்தால் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் வீரமணி!, உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதை வாழ்வியல் சிந்தனையாக கொண்டிருக்கும் வீரமணி!!!, வாழ்வியல் சிந்தனையா? வக்கிர சிந்தனையா?, அட நம்புங்க… சத்தியமா இது ‘சுயமரியாதை’ இயக்கம்தான்… முதலான கட்டுரைகளை படித்துப் பார்க்கலாம்.
தமிழ் ஓவியா Sat, Jan 3, 2009 at 9:24 AM எழுதியது.
எழுத்தில் ஒரு நாகரிகம் வேண்டும். இந்தக் கட்டுரைகளை ஏற்கனவே படித்து விட்டேன். படித்து விட்டு கோபம் வரவில்லை மாறாக இதை எழுதியவர்களை நினைத்து பரிதாபம்தான் வந்தது. பெரியார் சொல்லுவாரே “பைத்திய்காரன் முதலிலேயே நல்லா உளறுவான், அதிலே கள்ளையும் குடுடிச்சிட்டு உளறுனா” எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்குது இந்தக் கட்டுரைகள்.
ஆரோக்கியமாக விவாதம் செய்தால் அதில் ஒரு முடிவு கிட்டும். உங்களை போன்றவர்களிடம் விவாதம் செய்வது நேரக்கேடு. உங்களுக்கு இந்தப் பதிலே போதும் . ஆதலால் இத்துடன் இவிவாதத்தை முடித்துக் கொள்கிறேன்.
போராட்டம் Mon, Jan 5, 2009 at 11:06 AM எழுதியது.
//எழுத்தில் ஒரு நாகரிகம் வேண்டும்.//
பெரியாரை ‘நாகரிகம்’ கருதி பார்ப்பனர்கள் எவ்வாறு ஒதுக்கினார்களோ, ஒதுக்குகிறார்களோ, அதே போல ‘நாகரிகமாக’ எமது கருத்துக்களை ஒதுக்குகிறீர்கள் போலும்.
//உங்களை போன்றவர்களிடம் விவாதம் செய்வது நேரக்கேடு. ஆதலால் இத்துடன் இவிவாதத்தை முடித்துக் கொள்கிறேன்.//
அக்கட்டுரைகள் எழுப்பும் கேள்விகளில், விமர்சனங்களில் குறைந்தபட்சம் ஒரு விடயத்திற்கு கூட பதிலளிக்காமல் தாங்கள் விவாதத்தை முடித்துக் கொண்டது சாலச் சிறந்தது. தங்களுடைய நேரத்தை வீணாக்கியதற்காக மன்னிக்கவும். தாங்கள் வழக்கம் போல் சுயமரியாதையைக் கைவிட்டு, நிறுவனங்களையும், அறக்கட்டளைகளையும் வைத்து காசு பார்க்கும் சமூகத் தொண்டை ஆற்றலாம். பவள விழாக்களை நடத்திக் கொண்டிருக்கலாம்.
//ராஜீவ் கொலையின் பின்னாளில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகமெங்கும் ம.க.இ.க வீச்சாக இயக்கம் நடத்திய நாளில் சென்னையில் ஒரு கூட்டம் நடத்துவதற்கு கூட பெரியார் திடலை தருவதற்கு பயந்து கொண்டு மறுத்தவர்தான் இந்த வீராதி வீரமணி./// உண்மையான காரணம், வீரமணி 1991 வரை புலிகளை மறைமுகமாக பல விதங்களில் ஆதரித்தார்.
1991 ராஜீவ் கொலைக்கு பின், தமிழகத்தில் பல ஆதாரவாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டு மிகவும் பயந்து விட்டார். சிறைவாசத்தில் இருந்து தப்புவதற்க்கும், “சொத்துக்களை” பாதுகாக்கவும் அன்றைய முதல்வர் ஜெவிடம் சரணடைந்தார். அதை நியாயப்படுத்த பல சப்பை கட்டு கட்டினார்.
மற்றபடி, நல்ல கட்டுரை.
உண்மையான பதிவு. தோழர் ஸ்டாலின் (http://kedayam.blogspot.com) வீரமணியைப் பற்றி ஒரு தொடர் (காசு,பணம் தந்தால் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் வீரமணி! ) அழகாக எழுதி உள்ளார். அதனையும் பார்க்கவும்
…90களின் ஆரம்பத்தில் “பெரியாரை வீரமணி கும்பலிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!” என புதிய ஜனநாயகத்தில் வந்த தொடர் கட்டுரை-ல் உலகில் பெரும் விவாதத்தையும் கிளப்பி வீரமணி கம்பெனியை முற்போக்கு உலகில் எவ்வளவு தான் அம்பலப்படுத்தினாலும்… பெரியாரின் வாள் ஏந்தி களத்தில் நிற்க தைரியமில்லாத நபர்களை பேசுவதில் என்ன பயன் வீரத்தை அடகுவைத்து எடைபோட்ட வீரமணியையு மறக்கவில்லை மக்கள்…, காதெறுப்பேன்,தலையறுப்பேன்னு சொன்னவனை தன் மஞ்சள் போர்வையால் மூடிய தாத்தாவையு மறக்கவில்லை மக்கள்…, என்பதை நாம் அறிவோம்! இனியாவது களத்தில் கொண்டு செல்ல செஞ்சட்டை அணிந்து நிற்பார்களா!!.. பொருத்திறுந்து பார்ப்போம்
பெ.தி.க தோழர்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி!
90களில் வந்த ““பெரியாரை வீரமணி கும்பலிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்” கட்டுரையை இப்போது அவசியம் கருதி (பு.ஜ.) அனுமதியோடு இணைய பிரசுரம் செய்யுங்கள்.
மக்களின் எல்லா வாழ்க்கைப்பிரச்சினைகளை பேசி போராடும் முழுமையில்தான் நாத்திகத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.
வெறும் நாத்திகம் பேசுவோற்கு தேவையான வாக்கியம்
அவசரப்படாதீர்கள் நண்பர்களே. பணபலமும், அரசியல் பலமும் அவ்வளவு எளிதாக பெரியாரை விடுவிக்க விடாது. நேற்று வேறொரு டிவிசன் பெஞ்ச் முன்பு மேற்படி வழக்கை அப்பீல் விசாரணக்கு கொண்டு வந்து, நீதிபதி சந்துருவின் உத்தரவிற்கு தடை வாங்கி விட்டார்களே. அந்த பெஞ்சில் உள்ள ஒரு நீதிபதி மறைந்த முரசொலி மாறனின் உறவினர் என்றும் கேள்வி. அதற்கும் அதே பெஞ்சில் வந்த மத்திய அமைச்சர் ராஜா ஜூனியர் விகடன் பத்திரிக்கைக்கு எதிராக செய்த அப்பீல் வழக்கில் தடை உத்திரவு பெறப்பட்டதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்று கேட்காதீர்கள்.
http://timesofindia.indiatimes.com/NEWS/City/Chennai/Raja-case-HC-restores-gag-order-on-Tamil-mag/articleshow/4835674.cms
Good
கட்டுரையில் ஒரு தவறு!
நீதிபதி சந்துரு தீர்ப்பினை எதிர்த்து வீரமணி மேல் முறையீடு செய்து அதன்படி தீர்ப்பினை செயல்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டிருப்பதை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஏற்று உத்தரவிட்டிருக்கிறது. மேலும் மேல் முறையீடும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கில் பழைய நிலையே அதாவது பெரியார் திராவிடர் கழகம் புத்தகத்தை வெளியிடுவதற்கான தடை நீடிக்க்கிறது. இந்த மேல் முறையிட்டில் இந்த வெளியீட்டின் மூலம் பெ.தி.கவினர் நிறையா சம்பாதிப்பார்கள், தங்களுக்கு நட்டம் ஏற்படும் என வீரமணி சேட்டு வெட்கம் கெட்டு குறிப்பிட்டிருக்கிறார். ஆக பெரியாரை வீரமணி கும்பலிடமிருந்து விடுதலை செய்ய சட்டபூர்வ போராட்டம் மட்டும் போதாது, மக்கள் அரங்கிலும் போராட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்பது புரிகிறது.
கட்டுரையில் இந்த மேல்முறையீட்டின் விவரங்களை தெரிந்து கொள்ளாமல் தவறாக வெளியிட்டமைக்கு மன்னிக்கவும்.
பெரியாரின் நூல்கள் பரவுவதைத் தடுக்க வீரமணி நீதிமன்றம் சென்று விடாப்பிடியாகப் போராடி பெரியாரின் சிந்தனைகள் பரவுவதைத் தடுக்கிறார். ஆனால் அதே நேரத்தில் அவர் எழுதிக் கழிக்கும் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூல்களை கோவை பாரதியார் பல்கலையில் பாடமாக்கும் அளவிற்கு லாபி செய்திருக்கிறார். வீரமணிக்கு வாய்த்திருக்கும் கைக்கூலிகளும், பொறுக்கிகளும் அந்நூல்களை விற்றுத்தள்ள லேகியம்ம் விற்கும் மோசடிப்பேர்வழிகளைப் போல அந்நூலைப் பற்றி அளந்து தள்ளுகின்றனர். விடுதலை பத்திரிக்கையில் அதனை ஒரு எழுத்தாளர் வீரமணியின் நூலை ‘உரைநடைத் திருக்குறள்’ என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார். இந்நூல் பல பதிப்புகளைக் கண்டு தமிழ்நாட்டை நாசப்படுத்திக்கொண்டும் பெரியாரின் நூல்கள் நீதிபதியின் பேனாவுக்காகக் காத்தும் கிடக்கும் கொடுமையை எண்ணும்போது நமக்கெல்லாம் கொதிக்கின்றது.வீரமணி எழுதிக் கழிக்கும் ‘வாழ்வியல் சிந்தனை’யின் மகிமையை கேடயம் எனும் வலைப்பதிவு சென்ற ஆண்டு புட்டுப் புட்டு வைத்திருந்தது. அதனைப் படித்து விட்டு வீரமணி கும்பலை எதனைக் கொண்டு சாத்தலாம் என்று முடிவூ செய்யுங்கள். 1)http://kedayam.blogspot.com/2008_08_01_archive.html
2
) http://kedayam.blogspot.com/2008_09_01_archive.html அன்புடன் செங்கதிர்
poda dubuku
வினவு ,
விரமணியை தவிர்த்து .. கருஞ்சட்டைக்கும் செஞ்சட்டைக்கும் என்ன வித்தியாசம்? விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.. இதையெல்லாம் மீறி பெரியாரின் கருத்துகள் பரவலாக்க்ப்பட வேண்டம் என்பதும், முறையாக வட நாட்டவர்களுக்கும் அறிமுக படுத்த பட வேண்டும் என்பதும் என் ஆசை…
அக்னிபார்வை,
நீங்கள் பாட்டுக்கு சுலபமாக கேள்வி கேட்டுவிட்டு போய்வீட்டீர்கள். கருப்புக்கும், சிவப்புக்கும் உள்ள வித்தியாசத்தை எழுதவேண்டுமென்றால் ஒரு நூறு பக்கங்களாவது தேவைப்படும். இதற்கு தீர்வு நேரில் சந்தித்தால் பேசி விளக்கமளிக்கலாம். எழுதினால் கை ஒடிந்து விடும் அளவு சிரமப் படவேண்டும் தோழர். ஒரு மாதத்திற்குள் வினவில் ஆரம்பிக்கப்படும் மார்க்சியக் கல்வியில் இதைப் பார்க்கலாம்.( நாங்கள் பாட்டுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறோம். நிறைவேறுமா?) உடனடியாக என்றால் நேரில் வாருங்கள். மற்றபடி இந்தக் கேள்விக்கு பின்னூட்டமிடும் தோழர்கள் சுருக்கமாக எடுத்துரைக்குமாறு கோருகிறோம். நன்றி அக்னி.
சரி பொருத்திருந்து தெரிந்துகொள்கிறேன்
விரமணியை
pesama vattikku koduthu vangittuppokattum vidunga dhana
pesama avarai vattiththozhi pakkavidunga dhana
பழம்பெரும் முற்போக்கு சிந்தனையாளர் ரவி சீனிவானசின் கட்டுரைகள்
http://ravisrinivas.blogspot.com/2009/07/blog-post_30.html
http://keetru.com/literature/essays/ravi_srinivas.php
ம்ம்ம்ம்ம்ம்ம் வீரமணி கலைஞ்ர் குமபல் எல்லாம் ஊரரிந்த துரோகிகள் ஆனால் ம.க.இ.க அமைப்பிற்கும் அதற்கு காவடி தூக்கும் வினவுக்கும் திடிரேன பெரியார் பாசம்.. பிள்ளகிபிடிக்கிற வேலைய ஆரம்பிச்சாசா நடக்கட்டும்
வினவுக்கு வினை செய்ய ஆள் கிடைக்கவில்லை போலும் அதன் ஆசிரியரை சீண்ட வந்துள்ளது. ஆமாம் உங்களுக்கு ஆசிரியர் மேல் கடுப்பா இல்லை அவர் பெரியாரியலை யாருடைய தயவும் இல்லாமல் உலகமயமக்கியுள்ளார் என்ற கடுப்பா. நீங்கள் வேண்டுமானால் இயக்கம் எப்படி நடத்த வேண்டும் என்று அவரிடம் கற்றுக்கொள்ளலாம். உங்களால் வினை தான் செய்ய முடியுமே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. ஏதோ பெரியாரியலை உலகுக்கு எடுத்து செல்ல மிகவும் அரும்பாடுபட்டு தினமும் தெரிவில் நின்று தொண்டை கிழிய கத்தியவர்கள் போல ஒரு பதிவு வேறு. வீரமணி இல்லை என்றால் நீங்களே இன்று பெரியாரியலை தொட்டுக்க கூட பேசமாட்டீர்கள் தோழர்களே. புத்தர் , காந்தி கொள்கைகள் எப்படி ஆனது அதுபோல போயி இருக்கும். முதலில் செஞ்சட்டை போட்டுகொண்டு a+b ஹோல் கொயர் என்று பேசுவதை நிறுத்திவிட்டு எல்லாருக்கும் புரியுற மாறி பேசுறதுக்கு பழகுங்க அப்புறம் நீங்க வெளுத்துப்போன கருஞ்சட்டை செய்ற வேலைய செய்யலாம்.
ஏதோ பெரியார் மேல ரொம்ப பொறுப்பு உள்ளவர்கள் போல படம் போட்டு விளக்க வந்துவிட்டார்கள். உண்மையிலேயே பொறுப்பு உள்ளவர்கள் என்ற வருடத்திற்கு குறைந்த பட்சம் 10 பேருக்காவது பெரியார் கொள்கையை எடுத்து சொல்லி அவர் வழியில் நடக்க உதவுங்கள். அதனை விட்டு வீரமணியிடம் இருந்து பெரியார் கொள்கையை விடுதலை வாங்கி விட்டார்களாம். கேட்கவே வெட்கமாக இருக்கிறது பெரியாரின் திடலில் இருந்து பெரியாரை விடுதலை வந்குகிரதம் இந்த கூட்டம். தான் வீட்டிலயே இருந்து கொண்டு எனக்கு விடுதலை என்று கூறுவதை போன்று உள்ளது.
இதோ பெரியார் சொல்லுகிறார் கேட்டு கொள்ளுங்கள் ………………
“நல்ல கல்வி அறிவுள்ளவர்; தொழில் ஆற்றலுள்ளவர் ; பொறுப்பானவர். அவர் நினைத்திருந்தால், ஆசைபட்டிருந்தால் நமது இயக்கம் அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செயிதிருந்தாலும் நல்ல அளவுக்கு பணம் சம்ப்பாதித்து இருப்பார். இதனையெல்லாம் விடு பொதுத் தொண்டு செய்யவேண்டும் மென்ற கருத்துடன் செய்து வருகிறார். தங்களுடைய வாழ்வு தங்களுக்காகவே இருக்க கூடாது. பொதுமக்களுக்கு எதாவது தொண்டு செய்யவேண்டுமென்கிற தன்னலமட்ட்ற தன்மைக்காகவும் நிறைய பாராட்ட கடமைப்படிருக்கிறேன்.” ( விடுதலை 25.02.1968 )
செஞ்சட்டை ஏன் பெரியார் தி.க வை தொட்டக இழுக்கிறது. வேறு ஏதும் வினை செய்யவோ?
/இதோ பெரியார் சொல்லுகிறார் கேட்டு கொள்ளுங்கள்//
அய்யா, நீர் எல்லாம் பெரியாரின் தொண்டர் எனக் கூறிக்கொள்ள வெட்கமாக இல்லை.. பெரியார் 1968 இல் கூறிய ஒரு வாக்கியத்தை 2009 ம ஆண்டு கூறுவது… எப்படி சரியானது ஆகும்.. எதையும் பகுத்து அறிந்து பார் என்ற பெரியாரின் அடிப்படை கொள்கையையே மறந்து பொய் விட்டீரே..இந்த வாக்கியத்தின் படி வீரமணி 1968 இல் ஒழுங்காக இருந்தார் என்றுதான் அர்த்தப் படுத்திக் கொள்ள முடியும்… அதற்கு மேல் என்ன விளங்கிக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை..
செஞ்சட்டைகள் ஏதோ திராவிடர் கழகத்திற்கும் அதன் தலைமைக்கும் ஏதோ புதிதாக வினை செய்வது போன்று அந்த வினைக்கு ஆதரவாக பல தோழர்கள் மறுமொழி இடுவது, ஒருபக்கம் சிரிப்பாகவும் இன்னொரு பக்கம் நுனிப்புல் மேயிபவர்கள் இவளவு பேர் இருகிறார்களா என்ற ஆச்சரியத்திலும் வியக்க வைக்கிறது.
இந்த வினை செய்யும் வேலையே செஞ்சடைகள் அய்யா காலத்திளிரிந்து இன்று ஆசிரியர் காலம் வரை இதனையே தொழிலாக கொண்டு இயங்கிவருகிறது. ஆதனால்தான் இன்று வரை அவர்களையும் வளர்த்துக்கொள்ள வில்லை அவர் கொள்கையில் செல்லும் அடுத்தவர்களையும் வளரவிடுவதில்லை. என்னே ஒரு பொதுநலம்? இதற்க்கு மறு மொழி போடுவதற்கு நம்மை போன்ற பெரியார் தொண்டர்கள் வேறு கருத்து சண்டை போட வேண்டியுள்ளது. இந்த செஞ்சட்டை என்ன மனதில் வைத்து இந்த பதிவு போட்டது என்பதை மறுமொழி இடும் உண்மையான பெரியார் தொண்டர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
இதோ ஏ.எஸ்.கே என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட ஏ.எஸ்.கிருஷ்ணமாச்சாரி அவர்கள் ” பெரியாரும் அம்பேத்கரும்” நூலில் சொல்லுகிறார் கேளுங்கள் தோழர்களே……….
“1934-1935 – ல் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியில் நான் உறுபினராக சேர்ந்தேன்; அன்று முதல் இன்று வரை (ஏன் மூச்சு உள்ளவரை) இந்த கட்சியில் இருந்து வருகிறேன்;வருவேன். பெரியார் ஈ.வே.ரா அவர்கள் பல தடவை எனிடம் கூறியுள்ளார்.
நீங்கள் செயவேண்டிய வேலையை நான் செய்து வருகிறேனே, அப்படி இருக்க ஏன் திரு… என்னை தாக்கி கொண்டே இருக்கிறார்?
அதாவது, கடவுள் எதிர்ப்பு, ஜாதி பிரிவினை, தீண்டாமை, சமுதயக்கொடுமை, இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்முனிஸ்டு கட்சியின் வேலை அல்லவா? நான் அந்த வேலையயை செய்து வருகிறேனே….அவ்வாறிருக்க கம்முனிஸ்டு கட்சி என்னை எதிர்ப்பதேன்? என்று பெரியார் அவர்கள் என்னிடம் வினயமாகவும், உருக்கமாகவும் பன்முறை கேட்டு வந்துள்ளார். இது முற்றிலும் உண்மை. பெரியார் அவர்களை பற்றி சரியான கணிப்பு பல தோழர்களுக்கு இல்லை என்பது ஏன் கருத்து. இந்த நூலை எழுதுவதுற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்”
எவளவு தெளிவாக ஏ.எஸ்.கே அவர்கள் கூறியுள்ளார் அன்றே. இது இன்றைய திராவிடர் கழகத்தின் தலைமை ஆகிய ஆசிரியர் அவர்களுக்கும் மிக பொருத்தமாகும்.
புரிதல் இல்லாமல் ஏதோ வந்தோம் மறு மொழி இட்டு சும்மா வேதேண்டவததிர்க்கு பேசியதே பேசிக்கொண்டு (சொத்து சேர்த்தார், என்ன செய்து கிழித்தார், துரோகி) இருப்பது விவாதத்திற்கு ஒத்துவாறது தோழர்களே.
இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே செஞ்சட்டை இந்த பதிவை ஏன் போட்டார் என்று.
பெரியாரே இன்றைக்கு இருந்திருந்தாலும் இந்த செஞ்சட்டை தன்வேலய கண்பித்து கொண்டுதான் இருக்கும். இது தெரியாமல் மறு மொழி இட்டு சண்டை இட்டு கொல்லாமல் பெரியாரின் கொள்கைகளை உங்களால் மக்களுக்கு எவளவு கொண்டு செல்லமுடியும் என்று யோசியுங்கள். அதனை விட்டு வீரமணிக்கு பலபிசெகம் செய்றோம், கூஜா பிடிகுறோம், துரோகி கூட்ட தலைமை…….இதெல்லாம் ஒரு பொளப்பா. …..
உங்களால முடிஞ்ச உங்கள சுற்றி இருக்குற நாலு பேருக்கு பெரியார் கொள்கைய எடுத்து சொல்லி பெரியார் கொள்கைய வளங்க. அத விட்டுபுட்டு சும்மா அந்த காலத்துல பெரியார் பாராட்டுனது இந்த காலத்துக்கு ஒத்துவராது. இப்போ புதுசா எழுந்து வந்து இன்னொரு முறை எங்க காலத்துல ஒரு முறை நேர பாராட்டனும் அப்படினெல்லாம் சொல்லபடாது. சுதந்திரம் வாங்குறதுக்கு முன்னாடி படிச்சி வாங்கின கோல்ட் மெடல் இப்போ காமிக்க கூடாது இன்னொரு முறை நீ இந்த காலத்து படிப்ப படிச்சி வாங்கு அப்படின்னு ஒரு 90 வயசு ஆள பார்த்து கேக்குற மாறி இருக்கு. நிறைய பேருக்கு புரிதல் இல்லை ஆனாலும் என்ன பண்ணுறது……..!
அதெல்லாம் சரி மாப்ள தீட்சிதர் குடுமிய புடிச்சு ஆட்ட ஏன் உங்க கொய்யா வரல… கருப்பு சட்டை கருப்பு, சேப்பு, வெள்ளையா மாரிப்போன மருமம் என்ன…???
யாழ்விழி……
நேரடியாக விஷயத்திற்கு வாருங்கள்..
பெரியாரின் படைப்புகள் யாருக்கு சொந்தம்?
எந்த மக்களுக்காக பெரியார் 96 வயதிலும், வயிற்று வலியோடு பாடுபட்டாரோ,
அந்த மக்களுக்கு சொந்தமா? இல்லை அது தனிநபரின் சொத்தா?
மக்களுடையது என்றால், அந்த படைப்புகளை யார் அச்சடித்து மக்களிடம் கொண்டு சென்றால் என்ன?
பெரியாரின் படைப்புகளுக்கு, பெரியாரின் சிந்தனைக்கு வாரிசுரிமை / சொத்துரிமை கேட்பது என்பதே, பெரியாரை இழிவு படுத்துவதாக நான் கருதுகிறேன். நீங்கள்?
இல்லை.. பெரியாரின் சிந்தனை / படைப்புகள், தனிநபர் / ஒரு குழு (கழகம்/ நிறுவணம்) க்கு தான் சொந்தம் என்று கூறுவது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஆதி
மன்னிக்கவும்……
தவறுதலாக யாழ்விழி என்று அடிப்பதற்கு பதில் யாழினி என்று அடித்து விட்டேன்.
இனி எச்சரிக்கையுடன் அடிக்கிறேன்.
ஆதி
It is very good and we also note that justice sundru also unhappy about veeramany acting
At last Periyar must be laughing in his grave. Thanks to the court verdict to free Periyar from PDK.
இன்றைக்கு பெரியாரை பாது காக்கிறோம் என்றும் அவரது கருத்துகளை பரப்புகிறோம் என்றும் சொல்லுபவர்களை அதற்காக வழக்கு தொடுதவர்கலையும் பார்த்து கேட்கிறேன் .
வாலி என்ற பார்பன கவிஞர் பாபா திரைப்படத்திலே ஒரு பாடல் வரியில் “அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி ” என்று பெரியாரையே ராஜாஜியாக மாற்றினர் …பிறகு திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் வழக்கு தொடர்ந்ததின் காரணமாக அவர்களாகவே அந்த வரியை நீக்கினர்….
சொத்து கணக்கு போடும் சோடைகளே
நீஙகள் ஏன் இதற்க்கு வழக்கு தொடுக்க வில்லை .அபோது எங்கே போனது உங்கள் பெரியாரின் பற்று ?
டெல்லி ல பெரியார் மையம் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்ட போது எங்கே போனது உங்கள் பெரியாரின் பற்று ?
மாறாக இன்று இரண்டு டெல்லி பெரியார் மையங்களை உருவாகியது யார்?
பெரியார் காலத்தில் 15 இலட்சமும் மணியம்மையார்
காலத்தில் 60 இலட்சமும் வீரமணி காலத்தில் 80 இலட்சமும் வரி பாக்கி கட்ட வேண்டும் என்று கூறி பெரியாரின் அறக்கட்டளைகளை முடக்க நினைத்த போது அதை எல்லாம் வென்று இன்று பெரியாரின் அறக்கட்டளைகள் அனைத்தும் பெரியாரின் பெயரை சொல்லும் படி செய்தது யார்?
பெரியாருக்குகாக வழக்கு தொடுப்பவகள் நிறுவியர் பெரியார் சிலைகள் எத்தனை.?பெரியார் படிப்பகங்கள் எத்தனை ?
———————————————————————————————————————————–
பெரியார் ஈ.வெ.ரா.(6.6.1964)-விடுதலையில் எழுதியது
வீரமணி அவர்கள் M.A.,B.L. பட்டம் பெற்றவர்.நல்லா கெட்டி கார தன்மையும் புத்தி கூர்மையும் உள்ளவர்.அவர் MA BL பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கிய உடன் மாதம் ரூ 300,ரூ400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலயே மாதம் ரூ 500 ரூ 1000 தொழில் வளம் பெற்று வரும் நிலயை கண்டவர் .இந்த நிலையில் அவர் ஒரு சாதரண ஏழை குடும்பத்தை சார்ந்த வராகவும் இருந்து வந்தவர் .இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்வித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொது தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால் ,இது போல மற்றொருவர் ,வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லல வேண்டும் .அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்க படி பயன் படுத்தி கொள்ளா விட்டால் அது நம்முடைய அறியமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்க தலைமை பிரச்சாரகராகவும்,நமது “விடுதலை ” ஆசிரியராகவும் பயன்படுத்தி கொள்ள முன்வந்து ,அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் “விடுதலை”யை ஒப்படைத்து விட்டேன் .
“விடுதலை ” பத்திரிக்கையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்!
இனி “விடுதலை”க்கு உண்மையான பிரசுர கர்த்தாவாகவும் ஆசிரியராகவும் வீரமணி அவர்கள் தான் இருந்து வருவார் .
எந்த நிலையில் வீரமணி அவர்கள் இந்த பொறுப்பை ஏற்கிறார் என்றால் “விடுதலை”யை நான் நிறுத்தி விட போவதை அறிந்த சிலர் “விடுதலை “பத்திரிகை காரியாலயத்தையும் அச்சு இயந்திரங்களையும் மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வாடகைக்கு கேட்டு கொண்டிருந்த நிலையில் அதை வாடகைக்கு கொடுப்பதை விட நிறுத்தி விடுவதே மேல் என்று நம்முடைய நண்பர்கள் எல்லாரும் நமக்கு வேண்டுகோளும் அறிவுரையும் விடுத்தது கொண்டிருக்கும் நிலையில் ,இயக்க நலத்தையே குறியாக கொண்டு பொறுபேற்க முன்வந்தார் .ஆகவே “விடுதலை”யின் 25 ஆம் ஆண்டு துவக்கத்தில் லட்ச ரூபாய்களை “விடுதலை” நடப்புக்காக செலவிட்டு நஷ்டமடைந்த நிலையில் ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும் தியாகத்தையும் சுயநலமற்ற தன்மையையும் கருதி “விடுதலை”யை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்க படுகிறது .
இதற்க்கு பொதுமக்கள் இல்லாவிட்டாலும் ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் ,நம் மக்களிடம் எந்த குணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நன்றி காட்டுகிற குணம் என்பது பெரிதும் கிடையாது .கிடையவே கிடையாது .அது இல்லாவிட்டலும் நம்பிக்கை துரோகம் செய்யாமலாவது இருப்பது என்பது அரிது மிக மிக அரிது .ஆதலால் விடுதலை க்கு பொது மக்கள் ஆதரவு பெரிதும் இருக்காது என்பதோடு பல தொல்லைகள் ஏற்பட்டும் வருகிறது என்பதோடு மேலும் வரவும் கூடும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை .இது எனக்கு அனுபவம் .
ஆனால் இயக்க தோழர்களை ,எனது இயக்கத்தில் இருந்து மனிதர்கள் ஆகி எனக்கு இயக்கத்துக்கும் கத்தி தீட்டும் ,தீட்டி வெளியேறிய தோழர்களை தவிர்த்து ,மற்ற இன்று இயக்கத்தில் இருக்கும் அதுவும் இயக்கத்தால் எந்த பலனும் அடயாமல் அவர்களது பணத்திலேயே வாழ்ந்து கொண்டு அவரவர்கள் நேரத்தை செலவு செய்து கொண்டு பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்து இயக்க வளர்ச்சிக்கு இரவும் பகலும் பாடுபடும் உண்மைத் தொண்டர்களான இயக்க தோழர்களை வேண்டி கொள்கிறேன் .
விடுதலை பத்திரிகை, நண்பர் வீரமணி அவர்கள் ஏகபோக நிர்வாகத்தின் கீழ் நல்லா நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால் ,இப்போது இருப்பதை விட இன்னும் குறைந்தது 2500 சந்தா தாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டு ஆகவேண்டும் .இதற்க்கு பெரிதும் தஞ்சை மாவட்டத்தையே நம்பி இருக்கிறேன் .ஓர் ஆண்டுக்குள் மேலும் 5000 சந்தா பெருகி ஆகவேண்டும் .அது 2 மாதத்திற்கு அப்புறம் பார்த்து கொள்ளலாம்.இப்பொது உடனடியாக 2 மாதத்தில் 2500 சந்தாக்கள் அதிகமாகச் சேர்க்கப்பட வேண்டும் .இன்று நமது இயக்கம் இதுவரை இருத்த அளவை விட உச்ச நிலையில் இருக்கிறது .இது உண்மை என்பதை மெய்ப்பிக்க வேண்டுமானால் இது தான் பரீட்சை .
ஆதலால் நான் வீரமணி அவர்களை பாராட்டி இந்த முயற்சியோடு இந்த ஆசையோடு விடுதலை யின் 25 ஆவது ஆண்டில் அதை மறு பிறவி எடுக்கும்படி அதை அவரிடம் ஒப்புவிக்கிறேன் .
இயக்கத் தோழர்கள் இந்த வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றி ,எங்களை பெருமை படுத்தி விடுதலை யை வாழவைத்து வீரமணி அவர்களையும் உற்சாக படுத்தும்படி கேட்டு கொள்கிறேன் .
நாளை முதலே தோழர்கள் இந்த காரியத்தில் இறங்கி செயல் முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மாவட்டத்தில் இத்தனை இத்தனை சந்தாக்கள் சேர்த்து தருகிறோம் என்பதாக எனக்கு உறுதி வார்த்தை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டி கொள்கிறேன் .
நமது இயக்கம் நமது பத்திரிகை செய்துள்ள பணிகளை மக்களிடம் சொல்லுங்கள் .இது மறைந்தால் என்ன ஆகும் என்பதை விளக்குங்கள் .
அதிகாரிகளை ,அரசாங்க சிறிய உத்தியோகஸ்தர்களை ,வியாபாரிகளை விவசாய பொது மக்களை தைரியமாய் அணுகுங்கள் .வேட்கபடாதிர்கள் .தமிழ் நாடு மக்கள் இன உணர்ச்சியையும் சமுதாய உணர்ச்சியையும் பரிச்சை பார்ப்பதில் நமக்கு கவுரவக் குறைவு வந்து விடாது .
ஆண்டு மாத காலம் 60 நாள்களில் 2500 சந்தா .தினம் 42 சந்தா ,13 மாவட்டங்களில் 13 மாவட்டத்தில் 100 வட்டங்கள் (தாலுக்காகள்) பொது வாக ஒரு மாவட்டத்திற்கு 200 சந்தாக்கள் வீதமாகும் .இது கூட நம் கழக முயற்சிக்கு விடுதலை மறு பிறப்புக்கு கைகூட வில்லை என்றால் நம் நிலை என்ன என்பதை தோழர் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டுமென்று வேண்டி இந்த வேண்டு கோளை விண்ணப்பமாக தமிழ் நாடு மக்களிடம் சமர்ப்பிக்கிறேன் .
-விடுதலை(6.6.1964)
எப்படி இருந்த வீரமணி இப்படி ஆயிட்டாரு….
1964 இல் வீரமணி எப்படிப்பட்டவேர் என்பதை பெரியார் அப்பொழுது இருந்த வீரமணியின் செயல்பாடுகளை பார்ந்து, ஆராய்ந்து எழுதியதுதான் இந்த கட்டுரை …
நீர் உண்மையிலுமே வீரமணியை நம்பினால், அதிகம் வேண்டாம் கடந்த பத்து ஆண்டுகளில் வீரமணியின் செயல்பாடுகளை, அரசியல் நிலைப்பாடுகளை பற்றி விரிவாக எழுத திராணி உண்டா?
இப்படி பெரியார் என்றோ ஒரு மனிதனைப் பற்றி சொன்னதை இன்றும் மந்திரம் போல் ஓதும் உனக்கும் கோவிலில் அண்டிப்பிழைக்கும் பார்ப்பானுக்கும் என்ன வேறுபாடு… அவனும் தான் சொல்கிறான்.. எங்களின் வேத வாக்கியத்தின் படி.. நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று…
உங்களின் கூற்றுப்படி 1964 ம் 2009 ம் ஒன்றா..? ஒரு மனிதனின் செயல்பாடுகளை வைத்து அவனை மதிப்பிட வேண்டுமா அல்லது… அவனைப்பற்றி 5௦ வருடங்களுக்கு முன்பு ஒருவர் நல்லவர் என கூறியருப்பதை வைத்து மதிப்பிட வேண்டுமா?
//வாலி என்ற பார்பன கவிஞர் பாபா திரைப்படத்திலே ஒரு பாடல் வரியில் “அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி ” என்று பெரியாரையே ராஜாஜியாக மாற்றினர் …பிறகு திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் வழக்கு தொடர்ந்ததின் காரணமாக அவர்களாகவே அந்த வரியை நீக்கினர்….// தவறான தகவல் முதலில் பெரியார் திக வினர்தான் வழக்கு போட முடிவெடுத்தார்கள் இதை அறிந்த தரங்கெட்ட வீரமணி கும்பல் போட்டிக்காக
வழக்கு தொடர்ந்தது , பெரியார் திக இல்லையென்றால் வழக்காவது வாழக்காயாவது,
இங்கே வீரமணிக்கு கட் அவுட்டு வைத்து பாலாபிசேகம் பண்ணும் பின்னூட்டங்கள் (யாழ்-சேரன) ஒரே எழுத்து நடையில் இருக்கே …. டபுள் ஆக்டா? வினவு பிளீஸ் எக்ஸ்பிளெய்ன் தி மேட்டர்
அப்படியே ஐயா வீரமணி போயஸ் தோட்டத்துல போய் மணியாட்டிக்கிட்டு பூசாரி வேல பாத்தத பத்தி பெரியார் என்ன எழுதியிருக்காருன்னு ஒரு கட் அன்ட் பேஸ்ட் பண்ணிடுங்கப்பா…பிண்ணியமா போகும்
//வீரமணியின் இணையத்தளபதியாக விடாமல் தினசரி நான்கைந்து பதிவுகள் போட்டுத்தாக்கும் தமிழ் ஓவியாவிற்கு இந்த தருணத்தில் சில கோரிக்கைகளை வைக்கிறோம்.
நண்பரே நாத்திகப் பிரச்சாரம் எப்போதும் தேவையுள்ள ஒன்றுதான். ஆனாலும் மக்களின் எல்லா வாழ்க்கைப்பிரச்சினைகளை பேசி போராடும் முழுமையில்தான் அதையும் செய்ய முடியும். இல்லையேல் அதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆளில்லாத சிவன் கோவிலில் ஐயர் கொட்டாவி விட்டுக்கொண்டே பூஜை செய்து சிவனை எழுப்பமுயன்று தோற்று தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்களை விரட்டிவிட்டு வீடு சென்று தயிர்சாதம் உண்டு முடங்குவது போல உங்களின் அன்றாடப்பணியும் கணினியில் அப்படி ஆகிவிட்டது. எங்களுக்கும் உண்மையிலேயே வருத்தமாகத்தானிருக்கிறது. உங்கள் தளத்தை யாரும் அதிகம் பார்ப்பதில்லை, எதைக்குறித்தும் விவாதமும் நடப்பதில்லை. “யாரோ” 5 பேர் ஓட்டு மட்டும் போடுவதால் தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில் உங்கள் பதிவுகள் தினமும் நான்கைந்து வந்து விடுகின்றன. இனி தினமும் ஒன்று மட்டும் போட்டால் எங்களைப் போல ஏழை பதிவர்களுக்கு உதவியாய் இருக்கும்.//
தி.க. பற்றியும்,தி.க.தலைவர் வீரமணி அவர்கள் பற்றியும் உங்களின் கருத்துக்களை 1985 முதல் படித்து வருகிறேன். எனவே உங்களுடன் வாதம் செய்வது என்பது அல்லது உங்களுடன் கொள்கை ரீதியாக ஒத்துப் போவது என்பது உண்மையான பெரியார் தொண்டனான என்னால் முடியாது என்பதால் இது நாள் வரை எந்த விவாதத்திலும் கலந்து கொள்ள வில்லை.
இப்போது கூட இந்தப் பிரச்சினை குறித்து உங்களிடம் விவாதிக்க விருமபில்லை. ஆனால் எனது வலைப்பூவான தமிழ் ஓவியா பதிவுகளை “யாரும் அதிகம் பார்ப்பதில்லை” என்று எழுதியுள்ளீர்கள். அதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை தெரிவிக்க எனக்கு வந்த மின்னஞ்சல்களின் முகப்புப் பக்கத்தை அப்படியே தருகிறேன். படியுங்கள்.பாருங்கள். உண்மை புரியும்.
இதோ ஆதாரம்:
246 இல் 1-50 பழையது › மிகப்பழையது »
உரையாடல்கள்
தேர்வு செய்: எல்லாம், எதுவுமில்லை, படித்தது, படிக்கப்படாதது, நட்சத்திரமிட்டது, நட்சத்திரமிடாதது
Tamilish Service
Made Popular : ஜாதி சாகிறது -மனிதன் பிழைக்கிறான் எப்படி? – Hi tamiloviya, Congrats! Your story titled ‘ஜாதி சாகிறது …
8:49 am
Thirunavukarasu
[keetru.com] Re: ‘குடிஅரசு’ வழக்கு தடையை நீடிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு – Thank you very much for sending kudiarasu article.we expecting more and more like this. with …
ஜூலை 28
Tamilish Service
Made Popular : இந்துயிசம் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன? – Hi tamiloviya, Congrats! Your story titled ‘இந்துயிசம் பற்றி …
ஜூலை 28
நட்சத்திரமிட்டது
Tamilish Service
Made Popular : ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவா… – Hi tamiloviya, Congrats! Your story titled ‘ஜகத்குரு காஞ்சி …
ஜூலை 28
mujeeb rahman
[தந்தை பெரியார்] இஸ்லாத்தில் தீண்டாமையா???????? – அண்ணல் அம்பேத்கார் (இக்கட்டுரையில் …
ஜூலை 28
Tamilish Service
Made Popular : கைம்மாறு கருதாதற்குப் பெயர்தான் தொண்டு! – Hi tamiloviya, Congrats! Your story titled ‘கைம்மாறு …
ஜூலை 28
Tamilish Service
Made Popular : உலக நாடுகள் -தூரப்பார்வை -செர்பியா – Hi tamiloviya, Congrats! Your story titled ‘உலக நாடுகள் …
ஜூலை 28
Tamilish Service
Made Popular : கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால்… – Hi tamiloviya, Congrats! Your story titled ‘கடவுள் என்று …
ஜூலை 27
Tamilish Service
Made Popular : சீதை பிடித்து வைத்த மணல் லிங்கத்தை சிதைத்த அனுமான் வால் அறுந்து விட்டதாம்! – Hi tamiloviya, Congrats! Your story titled ‘சீதை பிடித்து …
ஜூலை 27
editor, நான் (3)
RE: enathu e mail – Thank you for your mail. Adhikaalai team will contact you asap. Hav’a Wonderful Day
ஜூலை 27
Tamilish Service
Made Popular : சூத்திரர்களுக்கு வேதம் ஒதக் கூடாதாம் என்ன கொடுமை! – Hi tamiloviya, Congrats! Your story titled ‘சூத்திரர்களுக்கு …
ஜூலை 26
Tamilish Service
Made Popular : வேளாண்மை விஞ்ஞானி எனப்படும் பார்ப்பனரின் ஏமாற்று வேலை – Hi tamiloviya, Congrats! Your story titled ‘வேளாண்மை விஞ்ஞானி …
ஜூலை 26
eraeravi ravi (2)
pl visit – era.eravi,editor http://www.kavimalar.com pl visit http://www.tamilauthors.com http://www.kalaivilakku.net http://www.wtrfm …
ஜூலை 26
Tamilish Service
Made Popular : சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ… – Hi tamiloviya, Congrats! Your story titled ‘சிருங்கேரி …
ஜூலை 25
Tamilish Service
Made Popular : பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய்விடும் – Hi tamiloviya, Congrats! Your story titled ‘பக்தி வந்தால் …
ஜூலை 25
Tamilish Service
Made Popular : பெரியார் சிலைக்குக் கீழே கடவுள் மறுப்பு வாசகம் ஏன்? – Hi tamiloviya, Congrats! Your story titled ‘பெரியார் …
ஜூலை 24
Tamilish Service
Made Popular : கடவுள் பக்தி இதைத்தான் கற்றுக்கொடுத்ததா? – Hi tamiloviya, Congrats! Your story titled ‘கடவுள் பக்தி …
ஜூலை 24
Tamilish Service
Made Popular : ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு கருணாவே காரணம் மனைவி குற்றச்சாற்று – Hi tamiloviya, Congrats! Your story titled ‘ஈழத் தமிழர்களின் …
ஜூலை 24
Tamilish Service
Made Popular : உலக நாடுகள் -தூரப்பார்வை – செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்-செயின்ட் லூசியா – Hi tamiloviya, Congrats! Your story titled ‘உலக நாடுகள் …
ஜூலை 24
நான், postmaster (2)
ஆலோசனை வேண்டி – Hello maarimuthu pazhani, This is a one-time automated message. Your email to me was delivered …
ஜூலை 23
Tamilish Service
Made Popular : ஜாதி ஆதாரங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்!. – Hi tamiloviya, Congrats! Your story titled ‘ஜாதி ஆதாரங்கள் …
ஜூலை 23
Tamilish Service
Made Popular : தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்ன சங்கராச்சாரியார் நாட்டு மக்களுக்குச் ச… – Hi tamiloviya, Congrats! Your story titled ‘தீண்டாமை …
ஜூலை 23
Tamilish Service
Made Popular : உலக நாடுகள் -தூரப்பார்வை – ரஷியா -2 – Hi tamiloviya, Congrats! Your story titled ‘உலக நாடுகள் …
ஜூலை 22
Haresh Maha
orkut – Haresh wants to be your friend on orkut! – Hi maarimuthu, Haresh Maha has requested to be your friend on orkut. To confirm or reject this …
ஜூலை 22
Tamilish Service
Made Popular : கொடிது கொடிது கோவிலுக்குப் போதல்! – Hi tamiloviya, Congrats! Your story titled ‘கொடிது கொடிது …
ஜூலை 21
Tamilish Service
Made Popular : பால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா? மதப்பிரச்சினையா? – Hi tamiloviya, Congrats! Your story titled ‘பால்ய விவாகம் …
ஜூலை 21
Tamilish Service
Made Popular : உலக நாடுகள் -தூரப்பார்வை -போர்த்துகல்-கத்தார் – Hi tamiloviya, Congrats! Your story titled ‘உலக நாடுகள் …
ஜூலை 21
Tamilish Service (2)
Made Popular : கடவுளைக் கேவலப்படுத்தும் கயவர்கள் யார்? பக்தர்களா? கடவுள் இல்லை என்பவர்களா? – Hi tamiloviya, Congrats! Your story titled ‘கடவுளைக் …
ஜூலை 21
Tamilish Service
Made Popular : சூரியகிரகண மூடநம்பிக்கையை முறியடிப்போம்! – Hi tamiloviya, Congrats! Your story titled ‘சூரியகிரகண …
ஜூலை 20
Tamilish Service
Made Popular : சந்திரன் (நிலா) பற்றிய கட்டுக் கதைகளும், உண்மைகளும் – Hi tamiloviya, Congrats! Your story titled ‘சந்திரன் (நிலா …
ஜூலை 20
Tamilish Service
Made Popular : இந்துக்களின் கொடிய வழக்கம் -பகுதி -2 – Hi tamiloviya, Congrats! Your story titled ‘இந்துக்களின் …
ஜூலை 20
Bharathi Dhasan
[keetru.com] Re: The other side of EVR ! பெரியாரின் மறு பக்கம் ! – தோழர்களே இது சம்மந்தமா நம்ம தமிழ் …
ஜூலை 17
Kumaran R
[தந்தை பெரியார்] naanthaan evr… – நான் தான் … ஈ.வெ.ராமசாமி பேசுகிறேன் …
ஜூலை 15
விடுதலைவீரபத்திரன்
அதிகாலை – கலைஞரின் பிரமாண்டமான “பொன்னர் …
ஜூலை 11
மகிழ்நன் பா
அவிழும் முடிச்சுக்கள்:அருட்தந்தை ஜெகத் கஸ்பார்-பிரத்தியேக நேர்காணல் – அவிழும் முடிச்சுக்கள்:அருட்தந்தை …
ஜூலை 11
hamora
[தந்தை பெரியார்] இஸ்லாத்தில் ஜாதி,ஜாதீயம்,தீண்டாமை – தென்இந்தியாவில் கி.பி. ஏழாம் …
ஜூலை 8
♥ athisivam.b@Chennai ♥
FW: [muththamiz] Re: பார்ப்பனரான எம்.எஸ்.சுவாமிநாதன் – அறிவியல் மேதையா? மோசடிப் பேர்வழியா? – முத்தமிழ் குழு நிர்வாகி muththamiz@gmail.com Yahoo …
ஜூலை 7
Tamilish Service
New comment on your story “இசுலாத்திலும் ஜாதியா?” – buruhani commented on your story ‘இசுலாத்திலும் ஜாதியா …
ஜூலை 4
♥ foryouths@beyouths.com.
[தந்தை பெரியார்] ♥ 12 நாட்களில் தலைவருக்கு மீசை அடர்த்தியாக வளர்ந்தது எப்படி? ♥ – Untitled-1+copy.jpg] ஓடும்நதி……..! http://www.odumnathi.blogspot.com …
ஜூலை 3
♥ foryouths@beyouths.com.
[keetru.com] ♥ பிரபாகரன்””என்ட ரெண்டு பிள்ளையளையும் தமிழீழ மண்ணுக்காய் கொடுத்திட் டேனப்… – Untitled-1+copy.jpg] ஓடும்நதி……..! http://www.odumnathi.blogspot.com …
ஜூலை 3
மகிழ்நன், Prince, Arun (6)
Fwd: தமிழ் தேசியம் – ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம் – நண்பர்கள் இந்த இணைப்பையும் படிக்க …
ஜூலை 3
நான் .. beyouths, selvii (9)
[keetru.com] நான் தமிழனென சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன் – பெரியார் – நல்ல வேடிக்கை! தமிழில் பரதேசி …
ஜூலை 2
மகிழ்நன் பா
நாளை விடியும் இதழாசிரியர் பி.இர.அரசெழிலன் செவ்வி – வணக்கம், நாளை விடியும் இதழாசிரியர் …
ஜூலை 1
Osai Chella
Come Join My Network at Digg – Hi this is Osai Chella , a member of Digg and would like to send you an invitation. With Digg you …
ஜூலை 1
Soma .. ஜஸ்டிஸ் (33)
: NEWS: SPREAD THE WORD AROUND – நண்பர் ஆதிசிவன் உங்கள் கோபம் …
ஜூன் 30
AT Thamarai
[keetru.com] 02.07.2009 periyarmulakkam – You received this message because you are subscribed to the Google Groups “keetru …
இணைப்பு ஜூன் 30
beyouths .. tamizachi (3)
[தந்தை பெரியார்]