Tuesday, October 3, 2023
முகப்பு கடத்தல் தொழில்: பெரிய மனிதர்களின் பொழுது போக்கா?
Array

கடத்தல் தொழில்: பெரிய மனிதர்களின் பொழுது போக்கா?

-

கடத்தல்

டாடா, பிர்லாக்களின் வரிசையில் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் தொழில் குடும்பங்களில் மஃபத்லால் குடும்பமும் ஒன்று. இக்குடும்பத்தின் மருமகளான ஷீதல் மபத்லால் கடந்த ஜூன் முதல் வாரத்தில் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இலண்டனில் இருந்து மும்பை திரும்பிய ஷீதல் மபத்லால், தன்னிடம் 20,000 ரூபா பெறுமான நகைகள் மட்டுமே இருப்பதாகவும், அவையும் தனது சோந்த பழைய நகைகள் என்பதால் சுங்க வரி எதுவும் கட்டத்  தேவையில்லை என எழுதிக் கொடுத்துவிட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றார். அவர் மீது சந்தேகங்கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரது பெட்டியைத் திறந்து பார்த்தபொழுது அதிர்ந்தே   போ விட்டார்கள். கிட்டத்தட்ட 55 இலட்சம் ரூபா பெறுமான பலவிதமான தங்க, வைர நகைகள் ஷீதல் மபத்லாலின் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதற்குண்டான 18 இலட்ச ரூபா சுங்க வரியைக் கட்டாமல் நகைகளைக் கடத்திக் கொண்டு போவிட முயன்ற ஷீதல் மபத்லால் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

குளுகுளு அறைகளிலேயே வாழ்ந்து பழகிய, பஞ்சு மெத்தைகளிலேயே படுத்துப் பழகிய ஷீதல் மபத்லால், ஒரேயொரு இரவுப்பொழுதை சிறையில் ஓட்டை மின்விசிறிக்கு அடியில் கழிக்க நேர்ந்துவிட்ட அவலத்தை எண்ணி, மும்பை நகரின் மேட்டுக்குடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் கண்ணீர் வடித்துள்ளனர். ஷீதல் மபத்லால் செய்த குற்றம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

இப்பயங்கரத்தைக் கேள்விப்பட்ட மேட்டுக்குடி கும்பலைச் சேர்ந்த ஒருவர், “நம்மைக் குறி வைக்கிறார்கள்; இனி நாம் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தமது சக நண்பர்களிடம் சோன்னதாக “அவுட்லுக்” ஆங்கில ஏடு குறிப்பிட்டுள்ளது. இதன் பொருள், ஒரு காலத்தில் மும்பை மாநகரைக் கலக்கி வந்த கடத்தல் மன்னன் மஸ்தானை, மேட்டுக்குடி கும்பல் தொழில் போட்டியில் வென்றுவிட்டது என்பதுதான். உதாரணத்திற்குச் சோல்ல வேண்டும் என்றால், புகழ் பெற்ற இந்தி நடிகர் அமிதாப்பச்சன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலண்டனில் இருந்து திரும்பிய பொழுது ஒரு கோடி ரூபா பெறுமான பொருட்களைச் சுங்க வரி செலுத்தாமல் கடத்த முயற்சி செய்த பொழுது மாட்டிக்கொண்டு, பின்பு அதற்கு 36 இலட்ச ரூபா வரியும் அபராதமும் செலுத்திச் சிறைக்குப் போகாமல் தப்பித்துக் கொண்ட “கிரைம்” கதை உள்ளிட்ட பல சம்பவங்கள் இப்பொழுது ஒன்றன்பின் ஒன்றாக அம்பலத்துக்கு வருகின்றன.

இச்சம்பவங்களைக் கேள்விப்படும் பாமர மக்கள் வேண்டுமானால், ஷீதல் மபத்லாலையும் அமிதாப்பச்சனையும் குற்றவாளிகளாகக் கருதலாம். ஆனால், மேட்டுக்கடி கும்பலோ ஷீதல் மபத்லாலைக் கைது செய்து சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்த சட்டங்களைத்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார்கள்.

‘‘உயர்தரமான சட்டை ஒன்றின் விலையே 20,000 ரூபாயாக இருக்கும் இந்தக் காலத்தில், ஒரு பெரிய முதலாளியின் மனைவியின் பெட்டியில் 50 இலட்ச ரூபா பெறுமான நகைகள் இருப்பது அதிசயமா?”
“அழகு நிலையத்துக்குக்கூட 50 இலட்ச ரூபா பெறுமான நகைகளை அணிந்து போ வரும் ஷீதல் போன்றவர்கள் இலண்டனில் இருந்து வெறும் கையுடனா திரும்ப முடியும்?”

‘‘உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கி வரும் இவ்வேளையில், இந்தியச் சட்டங்கள் இன்னும் பழமையானதாக, பிற்போக்குத்தனமாக இருக்கின்றன. சட்டம் எங்களைக் காந்திய வழியில் வாழச் சொல்கிறதா?” ‘‘தாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் நபர் மபத்லாலின் மனைவி என்று தெரிந்தவுடனேயே அதிகாரிகள் அவரை விடுவித்திருக்க வேண்டும்; மாறாக, ஷீதலைக் கடத்தல் பேர்வழி போல நடத்தி அவமதித்துவிட்டார்கள். அபராதத் தொகையை வாங்கிக்கொண்டு ஷீதலை வழியனுப்பி வைப்பதை விட்டுவிட்டு, அவரைக் குற்றவாளியாக்கி விட்டார்கள். ஷீதல் போன்றவர்களுக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை யெனும்பொழுது, பிறகு யார்தான் பாதுகாப்பாக வாழ்ந்துவிட முடியும்?” இவையனைத்தும் மும்பையைச் சேர்ந்த மேட்டுக்குடி கும்பலின் வாயிலிருந்து பொங்கி வழிந்திருக்கும் விமர்சனங்கள். அவர்களைப் பொருத்தவரை ஷீதல் தவறு செய்யவில்லை. சட்டம்தான் தவறு செய்துவிட்டது.

இக்கும்பல் அலட்டிக் கொள்வது போல சுங்கத் துறைச் சட்டங்கள் ஒன்றும் அவ்வளவு கடுமையானதாக இல்லை. இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே இரட்டை வரி விதிப்பு முறை உள்ளது. இதன்படி இங்கிலாந்திலோ அல்லது இந்தியாவிலோ வரி செலுத்தினால் போதும். அங்குமிங்குமாக இரண்டு முறை சுங்கத் தீர்வைக் கட்ட வேண்டிய தேவையில்லை. இதனைப் பயன்படுத்திக்கொண்டுதான் ஷீதல் இங்கிலாந்தில் வரி கட்டாமல் இந்தியாவிற்குப் பறந்து வந்தார். இந்தியாவில் தனது குடும்பத்திற்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு வரி கட்டாமல் தப்பிவிடலாம் எனக் கணக்குப் போட்டிருந்தார். “ஷாப்பிங்” செய்வதற்காக அடிக்கடி இலண்டனுக்குப் பறந்து போவரும் ஷீதலின் இந்தக் கணக்கு, அவருக்குப் பலமுறை சுங்கத் துறை அதிகாரிகளை ‘ஏமாற்றி’விட்டுப் ஆடம்பரப் பொருட்களைக் கடத்திவரப் பயன்பட்டிருக்கிறது. இந்த முறை அவரது கணக்குத் தப்பிப் போனதற்கு, மபத்லால் குடும்பத்திற்குள் நடந்து வரும் சோத்துத் தகராறுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், சுங்கத் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்படும் ஆடம்பரப்  பொருட்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாக்கும் குறைவானதாக இருந்தால், கடத்தலில் ஈடுபட்ட நபரைச் சிறையில் அடைக்க வேண்டியதில்லை; பிணையில் விட்டுவிடலாம் என உச்சநீதி மன்றமும் தாராள மனத்தோடு ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறது. இத்தீர்ப்பைக் காட்டித்தான் ஷீதல் சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே பிணையில் வெளியே வந்துவிட்டார்.

உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு, கொஞ்சமாகக் கடத்தி வராதீர்கள் என அறிவுறுத்துகிறது என்று கூறலாம். அயல்நாடுகளில் இருந்து ஆடம்பரப் பொருட்களைக் கடத்தி வரும் மேட்டுக்குடி குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இச்சலுகையைப் போன்று, ஏதாவதொரு சலுகை பல்வேறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டோ அல்லது போலீசின் பொ வழக்குகளில் சிக்கிக் கொண்டோ பிணையில்கூட வெளியே வரமுடியாமல் சிறைக்குள்ளிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய விசாரணைக் கைதிகளுக்கும் காட்டப்பட்டிருந்தால், அவர்களுள் பலருக்குச் சட்ட விரோதமான சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய அவலம் நேர்ந்திருக்காது.

பணத்திலும் செல்வாக்கிலும் புரளும் மேட்டுக்குடி கும்பல், தங்களின் ஆடம்பர வக்கிர வாழ்விற்கு இடையூறாக எந்தவொரு சட்டமும் இருக்கக் கூடாது என்றே விரும்புகிறார்கள். அப்படி ஏதாவதொரு சட்டமிருந்தால், அதனை மீறுவதற்குத் தங்களுக்குத் தார்மீக உரிமையும் நியாயமும் இருப்பதாகக் கருதிக் கொள்கிறார்கள். உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சட்டத்தை மீறிப் போராடினால், அவர்களைத் தயங்காமல் சமூக விரோதிகளாக, தீவிரவாதிகளாக முத்திரை குத்தும் அரசாங்கம், மேட்டுக்குடி கும்பல் சட்டத்தை மீறும்பொழுதோ, சட்டங்களைச் சீர்திருத்த வேண்டும் எனப் புது பல்லவி பாடுகிறது.

புதிய ஜனநாயகம், ஜூலை-2009

புதிய ஜனநாயகம் ஜூலை 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

சத்யமேவ பிக்பாக்கெட் ஜெயதே!

செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!

  1. தங்களின் ஆடம்பர வக்கிர வாழ்விற்கு இடையூறாக சட்டம் இருக்கக் கூடாது என்கிறார்கள். அப்படி சட்டமிருந்தால், அதனை மீறுவதற்குத் தங்களுக்குத் தார்மீக உரிமை இருப்பதாகக் கருதுகிறார்கள். https://www.vinavu.com/2009/08/03/smuggle/trackback/

  2. // உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு, கொஞ்சமாகக் கடத்தி வராதீர்கள் என அறிவுறுத்துகிறது என்று கூறலாம். // நல்ல வரிகள். காவல்துறை நண்பர் சொன்னார் – “ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டுவதாக மிரட்டினால் 1 வருடம் சிறைதண்டனை. உண்மையில் ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி விட்டால் 6 மாதம் தான் சிறைதண்டனை” – என்று. இந்திய சட்டங்களில் யோக்கியதை இதுதான்.

  3. gross generalisations. what percentage of the “upper class” feel as you try to portray ? any proofs ?
    the majority of industrialists do not feel for that women and consider that she deserve the punishment of the law. disprove me. a gossip quip from outlook is not proof, ok. does CII or FICCI or any other organisation object or try to fight for her legally. or did they try to “influence” the law ? corruption and tax evasion is there to a large degree. no doubt. but this kind of generalisations is not correct.

    • generalization of what sort. this is a known secret throughout india and infact across the globe that money and caste plays a vital role in any judicial outcome. this was evident in Jessica lal case, sanjeev nanda’s case and so on. though finally justice was served to some extent justice delayed is also justice denied. i believe you just live in a state of denial with regards to this. as for CII or FICCI i dont think u seem to know who or what they are. on the whole the article is not an onslaught on the ‘upper class’ but rather on the influence money and status can bring about in any judicial proceedings.

  4. மதிப்பவனுக்குதான் சட்டம், மிதிப்பவனுக்கில்லை. இது மேட்டுக்குடி, நடுக்குடி மற்றும் கீழ்குடி என எல்லாக் குடிகளுக்கும் பொருந்தும். தினமும் போக்குவரத்து சிக்னலை மீறுபவர்களில் ஏது ஏழை, பணக்காரன், உயர் சாதி, மேல்சாதி வித்தியாசம்?. இங்கு அவிழ்த்துவிட்ட ஜனநாயாகம்தான் தலை விரித்து ஆடுகிறது.

  5. இந்தியாவில் சட்டம் , நீதி இவை சாதி, மதம், வர்க்கம் பார்த்துதான் எழுதப்படுகின்றன…
    உதாரணமாக சஞ்சய் தத் வழக்கில் இப்பொழுது சஞ்சய் தத் எதுவும் செய்யாத அப்பாவி போல் நடமாடிக்கொண்டு இருக்கிறார்.. அவரது வழக்கில் இருந்து விடுவிக்க கூறப்பட்ட காரணங்களில் ஒன்று அவர் முன்னா பாய் படத்தில் அவர் மக்களுக்கு நன்மை செய்யும் வேடத்தில் நடித்து அவர் மக்கள் மனதில் இடம் பெற்றதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பது… இந்த கொடுமையை யாரிடம் போய் சொல்வது…
    சிதம்பரம் தீட்சிதன் திருட்டு வழக்கு ஒரு அருமையான உதாரணம்…. திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட தீட்சிதன் மீது இன்று வரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை… அந்த சிதம்பரம் கோவிலில் உள்ள ஒரு சொம்பை ஒரு சாதாரண மனிதன் திருடினாலும் போலிசு மட்டும் அல்ல, மக்களும் சேர்ந்து அவனுக்கு லாடம் கட்டுவார்கள்.. இதுவே ஒரு முஸ்லிம் இந்த செயலை செய்து இருந்தால், அத்வானியும், செயாவும் பாராளுமன்றத்தில் அமர்க்களம் பண்ணி இருப்பார்கள்…
    சட்டம், நீதி எல்லாம்… சாதி, மதம், பணம், வர்க்கம் இவற்றிற்கு கட்டுப்பட்டதுதான்…

  6. இந்த பதிவை படிக்கும் நம்மிள் எத்தனை பேர், திருட்டு வீசீடி பார்க்காதவர்கள் ? விற்பனை வரியை ஏய்க்க,
    பில் இல்லாமல் பண்டங்களை வாங்கியவர்கள் ? பத்திரப்பதிவு செலவை குறைக்க, குறைந்த அளவில் பத்திரத்தில் எழுதி, மீதத்தை கருப்பு பணத்தில் கைமாத்தியவர்கள் ? இன்னும் பற்பல சில்லரை விசியங்களில்,
    பெரும்பாலானோர் அரசின் விதிகளையும், வரிகளையும் ஏய்க்கிறோம் தான். இலவசங்கள் மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு பல ஏழைகள் வாக்குகளை விற்க்கின்றனர். அதாவது லஞ்சம் அங்கேதான் தொடங்குகிறது.
    ஊழலில் அளவுகள் மாறுகின்றது. ஆனால் நேர்மையானவன் என்று யாரும் இருக்கமுடியாது.

    ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் இப்படி இல்லை. அன்று கடும் வறுமை, கல்லாமை, சாதியம்,
    நிலப்பிரவுத்தவம் இருந்தன. ஆனால் அடிப்படை நேர்மை இந்த அளவு கெடவில்லை. இதற்க்கான காரணிகள்
    பற்றிய எமது பழைய பதிவு :

    http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_2745.html

    நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

  7. 5ரூபாய் லஞ்சம் கொடுப்பவனையும், 5லட்சம் லஞ்சம் கொடுப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறார்.
    5 ரூபாய் கொடுப்பவன் அலையவிட்டே கொன்னுடுவாங்கன்னு தப்பித்ற்காக தருகிறார். பணக்காரனோ, முதலாளியோ கோடிகளை ஏய்க்க 5 லட்சம் தருகிறான்.
    இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எவனும் யோக்கியன் இல்லை என்ற வாதத்தை வைத்துக்கொண்டு, திருடன்களை தப்பிக்க விடக்கூடது.

  8. இதற்காக மீடியாக்கள் செய்யும் மாமாத்தனம் சொல்லி மாளாது ! இந்தியாவின் அழிவிற்கு நான்கு காரணமாக இருக்கலாம் ! ஒன்று மீடியா, இரண்டு கேடு கட்ட அரசுயல் வாதி, மூன்று சீரழிக்கும் சினிமா, நான்கு சமூக அமைப்பு. நிச்சயம் அழிவு! பாவம் பாமரர்கள் !

  9. ////5ரூபாய் லஞ்சம் கொடுப்பவனையும், 5லட்சம் லஞ்சம் கொடுப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறார்.///

    அய்ந்து ரூபாய் லஞ்சம் / வரி ஏய்ப்பு அல்ல அது. நான் சொல்லும் விசியங்களும் பல ஆயிரம் அல்லது சில லச்சங்கள் மதிப்புள்ள விசியங்கள் தாம். மேலும், இது போன்ற வரி ஏய்ப்பை செய்பவர் நடுத்தர மற்றும் அதற்கும் கீழே உள்ளோரும் தான்.

    அய்ந்து ரூபாய் லஞ்சம் தரும் பொது ஜனம், பின்னர் அரசு வேலை பெற்று, அதே அலுவலகத்தில் வேலை பார்க்க நேரிட்டால், அதே அய்ந்து ரூபாய் லஞ்சம் வாங்குபார். லஞ்சம் வாங்காத அலுவலர்கள் மிக மிக குறைந்த சதமே.

    இன்று “சிறு” தொகைகளை ஏய்க்கும் மக்கள், நாளை சந்தர்பம் வந்தால், “பெரிய” தொகைகளையும் ஏய்க்க முனைவர் என்பதே இங்கு முக்கிய விசியம். பலரும் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவது சகஜம் தான்.
    நேற்று பத்தாயிரம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்தவர், நாளை பல கோடிகள் வரி ஏய்ப்பு செய்வார். திருபாய் அம்பானி ஒரு ஏழையாக பிறந்தவர். குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தவர்தாம் என்பதை மறக்க வேண்டாம். பின்னாட்களில் வரி ஏய்ப்பு பற்றும் பல பித்தலாட்டங்கள்…

    • அதியமான்,

      உங்கள் பார்வை அரசியலற்ற பாமரதனமான பார்வை.
      அரசு பற்றி, அதன் அதிகார வர்க்கம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற என்று சொல்லப்படுகிற முதலாளி மற்றும் நிலபிரபுத்துவ சக்திகள் – இவர்களுக்கு ஊடான உறவில் இருக்கிறது வரி ஏய்ப்பு, லஞ்சம் மற்றும் இன்னபிற மறைமுக பேரங்கள்.

      • அதியமான்,

        உங்கள் பார்வை அரசியலற்ற பாமரதனமான பார்வை.
        அரசு பற்றி, அதன் அதிகார வர்க்கம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற என்று சொல்லப்படுகிற முதலாளி மற்றும் நிலபிரபுத்துவ சக்திகளின் அனனத்து கட்சி பிரதிநிதிகள் – இவர்களுக்கு ஊடான உறவில் இருக்கிறது வரி ஏய்ப்பு, லஞ்சம் மற்றும் இன்னபிற மறைமுக பேரங்கள்.

  10. குருத்து,, உங்க பார்வைதான் பாமரத்தனமான, மார்கிசச வரட்டுவாதம் என்கிறேன். வெறும் பழையா தியரிக்ளையே ஒப்பிக்காமல், ந்டைமுறை யாதார்தம் பற்றி விவாதம் செய்ய முயற்சி செய்யுங்கள். இத்தனை ஊழல் மற்றும்
    நேர்மையற்ற மக்களை வைத்துகொண்டு புரட்சி எப்படி கொண்டுவருவீர் ? உண்மையான ‘எதிரிகள்’ உங்கள்
    அணியில் தான் அதிகம் இருப்பர். அவர்களை எப்படி களை எடுப்பீர் அல்லது “திருத்துவீர்” ?

  11. முதலாளி அதியமானுடைய‌ கூற்றின் படி மக்களிடம்
    நல்ல பண்புகளே இல்லை என்றாகிறது.
    மக்களிடமுள்ள‌ பிழைப்புவாத,காரியவாத பண்புகளின்
    விளைவாக பல‌ நற்பண்புகளை கைகழுகி விடுவது
    என்கிற போக்கு அதிகரித்துள்ளது என்பது உண்மை தான்.
    எனினும் அனைவரையும் அவ்வாறு முத்திரை குத்திவிட முடியாது.
    பெரும்பான்மை உழைக்கும் மக்கள் இன்னும் நேர்மையுடன் தான்
    வாழ்வை நடத்துகிறார்கள்.அந்த நேர்மை,நியாய உணர்ச்சி
    இருப்பதால் தான் முதலாளிகளைப் போல திடுடாமல்
    தற்கொலை செய்து கொல்கிறார்கள்.
    அதியமான் சொல்வதைப் போன்று இருக்குமானால்
    நாட்டில் கொள்ளையடிப்பதற்கு ஒன்றும் மிச்சம் இருக்காது.

    மக்களிடம் லஞ்சம்,ஊழல்,ஏமாற்று எல்லாம் இருப்பது
    மட்டும் நன்றாக தெரிகிறது ஆனால் வெளியே
    பெரியமனிதர்களாக காட்டிக்கொண்டு உள்ளுக்குள்
    திருடனாக இருக்கும் இதுபோன்ற மேட்டுக்குடி
    வெள்ளைப்பன்றிகளை கையும் களவுமாக பிடித்த
    பிறகும் கூட இவருக்கு proof வேண்டுமாம்!

    செம்புரட்சி கண்டிப்பாக வரும் அதியமான்
    ஆனா அப்ப உங்ககிட்டயிருந்து மக்கள்
    பறிமுதல் செய்வதற்கு ஒன்றுமே மிச்சமிருக்காதுன்னு
    நினைக்கிறேன்,
    ஏன்னா அதற்குள் நல்லவர்களான,வல்லவர்களான
    என்றென்றும் உங்களுடைய‌ பாசத்திற்குரிய
    முதலாளிகள் உங்களை
    விழுங்கிவிடுவார்கள்.

  12. ///முதலாளிகளைப் போல திடுடாமல்
    தற்கொலை செய்து கொல்கிறார்கள்.////

    திவாலான முதலாளிகள் மற்றும் தொழிலதிபர்கள் தற்கொலை செய்து கொள்வதும், ஊரை விட்டே ஓடுவதும் மிக அதிகம். திருடர்கள் என்பது உமது வாதம். இல்லை, அவர்கள் தாம் ஹீரோக்கள் என்பது எமது வாதம். ஓ.கே. இந்த விவாதம் இங்கே நடக்க காரணமான (டெலெகாம் மற்றும் கணணி துறை) முதலாளிகளும், தொழில்முனைவோரும் தான் எமது ஹீரோக்கள். but for their efforts and pioneering spirit we would not be talking here comrade.

    //துபோன்ற மேட்டுக்குடி வெள்ளைப்பன்றிகளை கையும் களவுமாக பிடித்த
    பிறகும் கூட இவருக்கு proof வேண்டுமாம்! ///

    நான் கேட்ட ஆதரம் குற்றம் பற்றி அல்ல. “மேட்டுகுடியினர்” இதை பற்றி என்ன நினைத்தனர்/ செயலாற்றினர் என்பது பற்றிய ஆதாரம் தான். முதலில் முழுசா படித்துவிட்டு பிறகு உளரவும். :))

    செம்புரட்சி வரட்டும். மகிழ்ச்சி. (but when ? ) ஆனால் நீவீர் நினைப்பது போல் பெரு முதலாளிகள் சிறு தொழில்களை விழுங்குவது சாத்தியமில்லை. இந்த பூச்சாண்டியை காட்டித்தான் இந்தியாவை 1991 வரை நாசம் செய்தீர்கள். நடைமுறை புரியாது உமக்கு.

  13. இதுபோன்ற மேட்டுக்குடி வெள்ளைப்பன்றிகளை கையும் களவுமாக பிடித்த
    பிறகும் கூட இவருக்கு proof வேண்டுமாம்.

    அதியமான் இது போன்ற கருப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க