முகப்புஆலயத்திற்குள் மட்டுமா, கருவறைக்குள்ளும் நுழைவோம்!
Array

ஆலயத்திற்குள் மட்டுமா, கருவறைக்குள்ளும் நுழைவோம்!

-

கண்டதேவி தேரோட்டம்

இந்தியா முழுவதும் தலைவிரித்தாடும் சமூகக் கொடுமையாக சாதி இருக்கிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். ஆனால் தமிழ்நாடு மட்டும், சாதிய ஒடுக்கு முறைக்கெதிராகப் போராடிய முன்னோடி மாநிலம் என்றும், சுயமரியாதை இயக்க பூமி இது என்றும் சோல்வதில் நமக்கெல்லாம் பெருமை இருந்தாலும், இன்றைக்கு நடைமுறை என்னவாக இருக்கிறது? ‘சமத்துவப் பெரியாரின்’ ஆட்சியில் சாதிக் கொடுமை ஒழிந்திருக்கிறதா எனும் கேள்விக்கு மதுரையைச் சேர்ந்த “எவிடென்ஸ்” எனும் தன்னார்வ நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வு விடையளிக்கிறது.

தென்மாவட்டங்களில் சுமார் 85 கிராமங்களில் அந்நிறுவனம் நடத்திய கள ஆவில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பல கோவில்களில் தாழ்த்தப் பட்டோருக்கு எதிரான சாதிப்பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. பல கோவில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு அன்னதானம் செய்வது அனுமதிக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டோர் கோவில்களுக்குக் கால்நடைகளைத் தானம் செய்வது ஏற்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டோர் 69 கோவில்களில் நுழைய முடியாது. 72 கோவில்களில் நுழைய முடிந்தாலும், கோவிலுக்குள் வழிபடக்கூடிய பொதுவான இடங்களில் அனுமதி இல்லை. 52 கோவில்களில் இவர்களுக்குப் பரிவட்டம் கட்ட அனுமதி இல்லை. 33 கோவில்களில் தேர் இழுக்க அனுமதி இல்லை. 64 கோவில்களில் பூசை வைக்கவோ, கோவில் விழாக்களில் கலைநிகழ்ச்சி நடத்தவோ உரிமை இல்லை.  54 கோவில்களின் சப்பரமோ, தேரோ இம்மக்களின் தெருக்களிலோ காலனியிலோ வலம் வருவதில்லை. தென்மாவட்டங்களில் கோவில் கொடைகளில் ஆதிக்கச் சாதியினரின் சப்பரங்கள் சுற்றிவரும் பாதைகள் சேரி தவிர்த்த தெருக்களில் மட்டுமே – துல்லியமாக தங்களின் ஆதிக்க எல்லையை மறு உறுதி செய்யும் வகையில்தான் உள்ளன.

அண்மைக்காலங்களில் கோவிலில் வழிபாட்டு உரிமை கேட்கும் ஒடுக்கப்பட்டோர் மீது ஆதிக்க சாதிவெறியர்கள் தாக்குவதும் படுகொலைகள் செய்வதும் தொடர்ச்சியாக நடக்கிறது. திருப்பித் தாக்கப்படும் சூழல் நிலவினால் ஆதிக்க சாதியினர், உத்தப்புரத்தில் செய்ததைப் போல கூண்டோடு ஊரை விட்டு வெளியேறி மிரட்டி, அரசு உதவியுடன் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுகின்றனர்.

கடந்த ஓராண்டில் தமிழகம் எங்கும் பரவலாக ஒடுக்கப்பட்டோர் மீது இவ்வாறு வன்கொடுமைகள் இழைக்கப்பட்டு வருகின்றன.

  • அருப்புக்கோட்டை கல்லூரணியில் கோவில் திருவிழாவில் தீச்சட்டி ஊர்வலம் நடத்த முயன்ற அருந்ததியினர் மீது சாதிவெறிக் கும்பல் கற்களை வீசித்தாக்கியது.
  • செஞ்சி சோரத்தூர் காலனியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரின் கோவில் வழிபாட்டுரிமை வன்னிய சாதிவெறியர்களால் மறுக்கப்பட்டு வந்தது. நீதிமன்றத் தீர்ப்பும் சாதித்திமிரை அசைக்கவில்லை. சாமிக்குப் பொங்கல் வைத்த தாழ்த்தப்பட்டோர் மீது போலீசு தடியடி நடத்திப் பலரைக் கைது செய்தது.
  • சேலம் கவுண்டம்பட்டி திரௌபதி அம்மன் கோவிலில் நுழையும் உரிமையை தாழ்த்தப்பட்டோர் நீதிமன்றம் சென்று போராடி வாங்கியதும், அம்மனையே ஆதிக்க சாதியினர் ஒதுக்கி வைத்தனர்.
  • நெல்லை மாவட்டம் படர்ந்தபுளி கிராமத்தில் மாரியம்மனை ஒடுக்கப்பட்டோர் வழிபட விடாமல் தேவர் சாதிவெறியினர் தடுத்து வந்தனர். நீதிமன்றத்தில் உரிமை வாங்கி வந்தாலும், தேவர்சாதியினர் கோவிலையே இழுத்துப் பூட்டி சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.
  • நெல்லை மாவட்டம் செந்தட்டியில் கோவில் வழிபாட்டுப் பிரச்சினையை ஒட்டி, ஆதிக்க சாதித்திமிர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இருவரை கொடூரமாக வெட்டிக் கொன்றுள்ளது.

ஆதிக்கசாதி வெறியர்களைப் பொறுத்த மட்டில், கோவில்கள் தங்கள் சாதி ஆதிக்கத்தின் தூண்கள் என்றுதான் கருதுகின்றனர். பக்தி எல்லாம் இரண்டாம்பட்சம்தான். தாழ்த்தப்பட்டோர் கோவிலில் சம உரிமை கேட்டாலோ, சாமியையே சாதிவிலக்கம் செய்யும் அளவிற்கு பக்தியை விட சாதிவெறிதான் கோலோச்சுகிறது.

கோவிலில் மட்டுமல்ல, செத்த பிறகு தாழ்த்தப்பட்டோரின் பிணங்களை எரிக்கக் கூட பொது சுடுகாட்டில் சாதிவெறியர்கள் அனுமதிப்பதில்லை. திருச்சி மாவட்டம் திருமலையான்பட்டியில் அரசு நிதியில் கட்டப்பட்ட சுடுகாட்டில் ஆதிதிராவிடர்களின் பிணங்களை எரிக்க சாதி இந்துக்கள் அனுமதி மறுப்பதைக் கண்டுகொள்ளாத காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் ரத்தினம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

செய்தியாகப் பதிவாகாத சாதிய வன்கொடுமைகளோ நாள்தோறும் நூற்றுக்கணக்கில் நடைபெற்றுக் கொண்டுள்ளன. ஆனால் துணைமுதல்வர் ஸ்டாலினோ, புதிதாக பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் 29 ஊர்களில் எழுப்பப்படும் என்று அறிவித்ததும், சாதியை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கை இது என தி.மு.க.வின் செல்லப்பிராணி கி.வீரமணி தெளிவுபடுத்துகிறார்.

கோவில்களில் வழிபாட்டு உரிமை வேண்டிய தாழ்த்தப்பட்டோர் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடந்த போதெல்லாம் அதற்கெதிராகப் போராட முன்வராமல், காங்கிரீட் சமத்துவபுரம் சாதியை ஒழிக்கும் என நம்மை நம்பச் சோல்லுகிறது தி.மு.க. அரசு. தலித் விடுதலை எனும் இலட்சியத்தோடு ஆரம்பிக்கப்பட்ட டஜன்கணக்கான இயக்கங்களும் இத்தகைய கொடுமைகளுக்கெதிராகத் தொடர்ச்சியாகப் போராடுவதில்லை. மேலும் தாழ்த்தப்பட்டோர் மட்டும் தனியாகப் போராடி சமத்துவ உரிமைகளைப் பெற்றுவிடமுடியாது; ஆதிக்கசாதிகளில் இருக்கும் ஜனநாயக சக்திகளும் புரட்சிகர இயக்கங்களும் தாழ்த்தப்பட்டோரும் ஒருங்கிணைந்து போராடுவதைத் தவிர இதற்கு மாற்றுவழியும் கிடையாது.

புதிய ஜனநாயகம், ஜூலை-2009

புதிய ஜனநாயகம் ஜூலை 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

இந்து மதம் கேட்ட நரபலி !

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!

  1. தமிழகம் சாதிய ஒடுக்கு முறைக்கெதிராகப் போராடிய முன்னோடி மாநிலம் என்றும், சுயமரியாதை இயக்க பூமி இது என்றும் சோல்வதில் நமக்கெல்லாம் பெருமை இருந்தாலும், இன்றைக்கு நடைமுறை என்னவாக இருக்கிறது? https://www.vinavu.com/2009/08/04/temple/trackback/

  2. அப்ப ஆலயத்தின் கருவறைக்குள் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று ஒப்புகிறாயா..

    உங்க காட்டு கும்பளுத்தான் நம்பிக்கை இல்லையே.. அப்புறம் என்ன மயித்துக்கு..

    • கட்டுரைக்கு சம்பந்தமில்லாமல் உளறும் வள்ளல்
      இது சமூகநீதி சம்பந்தமானது தாழத்தபட்டவர்கள் இந்த சாதி அமைப்பினால்
      எவ்வளவு பாதிக்கபடுகிறார்கள்? தாழ்த்தபட்டவர்களிலும் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் பெருவாரியாக இருக்கிறார்கள் அவர்களை கோயிலுக்கு போகவைத்து இறை நம்பிக்கை ஏற்படுத்துவது நோக்கமல்ல,
      ஆனால் அவர்களை கீழ்சாதி என்று சொல்லி அவர்களின் அடிப்பைட உரிமையை மறுக்கும்போது தாழத்தபட்டவர்களின் உரிமைக்கு போராட
      கம்யூனிஸ்டோ, நாத்திகனாகவோ இருக்க வேண்டிதில்லை குறைந்தபட்சம்
      ஜனநாயகவாதியாகவாவது இருந்தாலே போதுமானது,

      வள்ளல் போன்று வெறும் எதிர் கருத்து பதியும் நோக்கத்திற்காக
      யாரும் பின்னூட்ம் இடாதீர்கள்,

    • “நீங்கள் எல்லாம் தேவடியா மக்கள் (சூத்திரன்).. அதனால கருவறைக்குள்ளே நுழையக்கூடாதுடா” அப்படின்னு ஒரு கூட்டம் என்னைச் சார்ந்த மக்களைச் சொல்லி அவமரியாதை செய்கிறது. இதுதான் இந்துமதம். பக்தனாய் இருக்கும் சூத்திர சகோதரனுக்கு மத உணர்வு மானத்தை இழக்க வைத்திருக்கலாம்.. ஆனால் கடவுள் நம்பிக்கை எனக்கில்லா விட்டாலும் எனக்கு மான உணர்ச்சி என்பது இருபப்தால் என் உடன்பிறப்புக்களை அவமானம் செய்வது தாளாததால் வந்திருக்கும் சுயமரியாதை உணர்வின் வெளிப்பாடுதான்…கோவில் நுழைவில் கருவறை நுழைவில் நாத்திகர்களும் முன்கை எடுப்பது… இதெல்லாம் மானமுள்ளவர்களின் பிரச்சினை…

    • யோவ் ஏய்யா காட்டுக் கூச்சல் போடற,, அவிங்களுக்கு நம்பிக்க இருந்தா என்ன இல்லா காட்டி என்ன… நீ ஏன் என்னைய உள்ள வுடமாட்டேங்கற அதுக்கு ஓளுங்கு மரியாதய பதிலச சொல்லு பிறகு திட்டு

    • நீங்கள் எவ்ளோ நல்லவர்னு .உங்களைபோன்றவர்களால்தான். இன்னும் இது மாதிரி மத வெறி நாய்கள் வாலாட்டிக்கொண்டு இருக்கிறது நீங்கள் எவ்ளோ நல்லவர்னு .உங்களைபோன்றவர்களால்தான். இன்னும் இது மாதிரி மத வெறி நாய்கள் வாலாட்டிக்கொண்டு இருக்கிறது

    • உள்ளே இறைவன் இருந்து, அவன் இறைவனாகவே இருந்திருப்பானேயானால், சமூக நீதிக்கு பங்கம் வந்திருக்காதே.

    • கொலை செய்த ஜெயேந்திரனையும், கருவறைக்குள் கலவி புரிந்த தேவநாதன் போன்றவர்கள் மட்டும் தான் கருவறைக்குள் போக வேண்டும் என்று சொல்கிறீர்களா வள்ளல்?

  3. டேய் வள்ளல் ! எங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம்பிக்கை உள்ளவர்கள் பாதிக்கப்படக் கூடாதே என்ற நல்ல எண்ணம் தான். உங்கள் கதைகளில்தான் இராவணுக்கெதிராகப் போர் புரிய இராமனுக்கு இராவணனே வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தருவான். ஆனால் எனது கடவுள் நம்பிக்கை உள்ள சகோதரர்கள் கேவலப்படுத்தும் போது மட்டும் நாங்கள் வரக்கூடாதா ?

  4. அடேய் அறிவு கேட்ட நம்பி.. நீயே கதை என்று சொல்கிறாய். அப்புறம் என்ன புடுங்கறதுக்கு உங்க கருமமெல்லாம், உன் லாஜிக் உனக்கே இடிக்கவில்லையா.

    • வாடா வவ்வாலு நீ ஒரு முடிவோடதான் வந்துருக்கியா

      நண்பர்களே வள்ளலு என்ற பெயரில் எழுதும் லூசு கட்டுரையை திசைதிருப்பும்
      நோக்கில் பிளான் பண்ணி வந்திருக்கு, உசாரா இருங்க.
      ஆரோக்கியமா விவாதம் பண்ணுங்க
      இந்த திருட்டு நாயிக்கு பதில் சொல்லி
      டைம் வேஸ்ட் பண்ணாதிங்க.

      • செத்து சுண்ணாம்பாகி உளுத்துப்போன புதைகுழி தத்துவத்துக்கு பெயின்ட் அடித்து வியாபாரம் செய்யும் உன்னை போன்றவர்களுக்கு எது நிலையான கொள்கை.. a

    • இதே சிதம்பரம் கோவிலுக்கு என் மனைவியுடன் மூன்றாண்டுகள் முன்பு சென்றிருந்த போது ஒரு பிராமண பூசாரி பக்கவாட்டில் இருந்த பிரகாரத்தில், ஒரு “சைடு” சாமி சிலையின் கருவறைக்கு வெகு அருகில் என் மனைவியை அழைத்து நிறுத்தி, பூசை செய்து பிரசாதம் கொடுத்தார். இதைப்பார்த்த வேறு ஒரு பெண்மணி – நடுத்தர வயது, பிராமணர் அல்லாதவர் என்பது தோற்றத்திலிருந்து தெரிகிறது – முகத்தில் மகிழ்ச்சி பொங்க “இங்க வாங்க” என்று தன் கணவரை அழைத்த படி ஓடி – ஓடி என்றால் ஓடோடி – வந்தார். அவரை “அங்கேயே இருங்க” என்று ஒற்றை வரியால் கடுப்பான முகத்துடன் பூசாரி எட்ட நிறுத்தி விட்டார். அந்த அம்மா பாவம். இன்னமும் அப்பாவியாக இந்த உலகம் எல்லோருக்கும் சமமென்று எண்ணிக் கொண்டு “ஏங்க?” என்று உண்மையான சந்தேகத்துடன் கேட்டார். அதற்கு அவரது கணவரே “ஏய், இங்க நில்லுன்னு சொல்றாருல்ல?” என்று அதட்டி அடக்கி விட்டார்.

      என் மனைவிக்குத் தந்த பிரசாதமே அடுத்த படியாக தள்ளி நிறுத்தப் பட்ட அந்தப் பெண்மணிக்கும் கொடுக்கப் பட்டது. அவரும் வாங்கிக் கொண்டு, கொஞ்சம் வாடிய முகத்துடன், நகர்ந்து விட்டார். அவரை சில அடிகள் தள்ளி நிறுத்தியதால் எனக்கு ஏற்பட்ட கோவத்தை அந்தப் பூசாரியிடம் காட்டும் போது அந்த ஆள் பம்ம ஆரம்பித்தார். அந்தப் பெண்மணியின் காதில் விழாமல் தான் சண்டையை ஆரம்பித்தேன். பதில் சொன்னால்தான் காசுதருவேன் என்ற ரீதியில் பேசினேன். அந்த ஆளுக்கும் கோவம் வர ஆரம்பித்தது. குரலை உயர்த்திப் பேசி அந்தக் கட்டிடம் முழுவதையுமே நாறடித்து விடுவது என்றிருந்தேன். ஆனால் என் மனைவி கெஞ்சிக் கூத்தாடி என்னை வெளியே கொண்டு வந்து விட்டார். கல்யாண நாள், கோவிலுக்குள் வருவேன், யாருடனும் வம்பு செய்ய மாட்டேன் என்ற உடன்பாட்டில் அவருடன் சிதம்பரம் சென்றதை மீண்டும் மீண்டும் நினைவூட்டி எனக்கு வாய்ப்பூட்டு போடப் பட்டு விட்டது. முன்பொரு முறை தேனியில் எனக்கு நல்ல குவளையில் காபி கொடுத்த கடைக்காரர் வேறொருவருக்கு மண்குவளையில் கொடுத்த போது அங்கேயே காபியைக் கொட்டி விட்டு வந்தது போல் இங்கும் செய்யாததில் எனக்கு இன்னும் கோவம்தான்.

      அந்தக் கோவிலையும் அதிலுள்ள கடவுள் சிலைகளையும் சாக்கடைக்கும் கீழாக மதிக்கும் என்னை (பிறப்பால் பிராமண சாதி என்பது முகத்தில் எழுதி ஒட்டப் பட்டிருப்பதால்) அந்தக் கருவறைக்கு அருகில் அழைத்த பூசாரி; அந்த ஆள் பூசை செய்யும் போது நான் அதை மதிக்காமல் யாரையோ சைட் அடித்துக் கொண்டிருந்தாலும் நான் கோவமாகக் கேள்வி கேட்கும் போது “அதில்ல சார்.. அது வந்து பாத்தேள்னா..” என்று குழைந்த ஒரு கோழை, அந்தச் சிலையை எல்லாம் வல்ல சக்தியாக வணங்கும் ஒரு பெண்மணி அத்தனை மகிழ்ச்சியுடன் ஓடி வந்த போது தடுத்தது எந்த நூற்றாண்டிலும் தவறு. இந்த நூற்றாண்டில் மாபெரும் சமூகக் குற்றம்.

      அந்தப் பெண்மணியின் சிரித்த முகமும் தடுக்கப் பட்டபோது வந்த அதிர்ச்சியும் “ஏண்டா இந்தக் கருமாந்திரத்தக் கொண்டாடுறீங்க? முட்டாள்களா” என்று திட்ட வைக்கிறது.

      ஆதிக்க சாதியனரை வெளியேற்றி எல்லாக் கோவில்களும் எல்லோருக்கும் சமமென்று ஆகும் வரை போராட்டங்கள், வன்முறை இல்லாமல் , நடக்க வேண்டும். அதை விட சிறப்பு, கடவுள் இல்லை என்ற உண்மையை உணர்ந்து வழிபாடு சாராத விஷயங்களில் உள்ள சமூக வேறுபாடுகள் களையப் படுவதை முதல் வேலையாகக் கொள்ள வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இதில் தலையிடக் கூடாது என்ற வாதத்திற்கு வளைந்து கொடுக்கக் கூடாது. இது சமூகப் பிரச்சினை. நடுநிலையோடு முடிவெடுக்க நாத்திகர்களால்தான் முடியும். இதற்கு கடந்த கால வரலாறே சாட்சி.

      • எல்லாம் சரி வித்தகன்
        பிராமணர் என்று பார்ப்பான்களை அழைக்கிறீர்களே
        உங்களை பார்ப்பான் என்று அழைப்பதை எது தடுக்கிறது?

      • //பிராமணர் என்று பார்ப்பான்களை அழைக்கிறீர்களே
        உங்களை பார்ப்பான் என்று அழைப்பதை எது தடுக்கிறது?//

        பிராமணர் இல்லாதவர்களை சூத்திரன் என்று அழைக்க விடாமல் எந்த உணர்வு தடுக்கிறதோ அதே உணர்வுதான் பார்ப்பான் என்றும் அழைக்க விடாமல் தடுக்கிறது.

        பிராமணன் என்பதும் பிராமணன் அல்லாதவன் என்பதும் அடையாளச் சொற்கள். பார்ப்பான் என்பதும் சூத்திரன் என்பதும் இழித்துப் பேசும் சொற்கள் என்று கருதப் படுகின்றன. எனக்கு யாரையும் பிறப்பால் இழித்துப் பேசுவதில் விருப்பம் இல்லை.

    • வள்ளல் எனும் வைரஸ் கிருமியே உன் கொள்கைதான் என்ன மழை வேண்டி கழுதைக்கு கல்யாணம் செய்து வைப்பதா

  5. தேவையான கட்டுரை!

    சிதம்பரத்தில் தீட்சித பார்ப்பன நாய்கள் ஒரு பிற்படுத்தபட்டவரை
    ஒடுக்குகின்றனர்,

    பிற்படுத்தபட்டவர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் கோயில்களில் தாழத்தபட்டவர்களை சாதிவெறிநாய்கள் ஒடுக்குகின்றனர்,

    அடிமையாக இருந்து கொண்டே ஆண்டானாக நினைக்கும் மனோபாவம்
    எப்போது மாறும்?

  6. //அந்தக் கோவிலையும் அதிலுள்ள கடவுள் சிலைகளையும் சாக்கடைக்கும் கீழாக மதிக்கும் என்னை (பிறப்பால் பிராமண சாதி என்பது முகத்தில் எழுதி ஒட்டப் பட்டிருப்பதால்) அந்தக்
    கருவறைக்கு அருகில் அழைத்த பூசாரி; //

    சூப்பர்!
    அண்ணன் ஆர்வீ போன்றவர்கள் இப்போதாவது திருந்தவேண்டும்

  7. “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” சாதிக் கொழுப்பெடுத்த தத்துவம்!!!

    4‍வருணங்களையும் அதற்குரிய கடமைகளையும் படைத்தவன் நானே என்று சொன்னான் கிருஷ்ணன்.அந்த கடமைகளை பலன்களை எதிர்பாராமல் செய்ய வேண்டும்.என‌ சொன்னதைதான் இப்பொழுது ஏதோ பெரிய சூத்திரம் போல பிதற்றுகிறார்கள்.

    =இதே விசயத்தைத்தான் நரமாமிச நரேந்திர மோடி குஜராத்தில் தனது புத்தகத்தில் எழுதியுள்ளான். அங்குள்ள மலமள்ளும் சாதியைச் சேர்ந்தவர்கள் செய்வது தவம் என்று குறிப்பிட்டு தனது புத்தகத்தில் எழுதியுள்ளான்.மோடிநாய்..

    =கிருஷ்ணன் மேலும் ஒரு படி சென்று இந்த தர்மம் எப்பொழுதெல்லாம் மீறப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அவதரித்து மீண்டும் (சாதிய) தர்மத்தை நிலைநாட்டுவேன் என்று சொல்லியுள்ளான்.

    =கீதாவின் சாரம் எனப்படும் இந்த பிற்போக்கு தத்துவம், இந்திய சமுகத்தை ஆயிரம் வருட இருட்டில் தள்ளி “இந்தியாவின் வளர்ச்சியையே முடக்கி போட்ட ஒரு நாசகர தத்துவமாகும்”. வரலாற்றுப் பூர்வமாக இந்த தத்துவத்தின் கதை இது என்றால், — யாதார்த்தத்திலும் இந்த தத்துவம் சாத்தியமில்லை. ஏனேனில் பலனை எதிர்பாராமல் கடமையை செய்வது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை.

  8. வயோதிப காலத்தில் நான்நடும் புளியமரம் எனக்கு பலன்தரவில்லையே என்று புலம்புவதில் பயனில்லை. நான்சிறுவனாக இருந்தபோது கண்ட சாதிக்கொடுமையின் வக்கிரம் இன்று எவ்வளவோ தணிந்துள்ளது. சாதிக் கொழுப்பு கரைந்துவருவது சாத்தியமாகியுள்ளது. ஐந்திலே வளையுங்கள் ஐம்பதில் தானாகவளையும்.

  9. The lower-caste(so called) is not against of any higher caste(so called) . They are just opposing the concept which not only divides but ditches literally. I personally feel the temples and the land belong to the Dravidians and the Aaryas just came with empty hands to this land and they claim that they are the sons and daughters of God. The only drawback with the Dravidian was they believed these were white and the lust maade on the white skin the listen to the nonsense concepts. Even now a days no brahmin is cleaning public tiolets, no auto driver in Brahmin, all the high class jobs like IAS, Judges have been by them. We need another periyar with more power to screw the blind concepts.

  10. The concept of Aryan/Dravidian divide itself is debunked by scientists who have analysed the genes and found both to be of the same stock.How long are you going to fight against shadows.Politicaaly EVR/CNA might have required to web their own theories in those days.You need to think of something to fabricate history now

  11. இந்தியாவின் கட்டமைப்பு சாதிகள் தான். இந்த விவாதம் எதிர்மறை ஆகதான் முடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க