Friday, June 9, 2023
முகப்புபன்றிக் காய்ச்சல்: முதலாளிகளின் பயங்கரவாதத்தை முகமூடிகள் தடுக்குமா?
Array

பன்றிக் காய்ச்சல்: முதலாளிகளின் பயங்கரவாதத்தை முகமூடிகள் தடுக்குமா?

-

முதளாளித்துவ பன்றி

பன்றிக்காய்ச்சலால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சிலர் இறந்திருக்கின்றனர். இவர்கள் இறப்பதற்கென்றே சென்னையின் மருத்துவமனைகளில் பத்திரிகையாளர்கள் பரபரப்பு செய்திகளுக்காக காத்துக்கிடந்ததை ஒரு ஊடக நண்பர் தெரிவித்திருந்தார். வைரஸை கருணாநிதிதான் கப்பலில் இறக்குமதி செய்து தமிழகத்தில் பரப்பியதைப்போன்று ஜெயா டி.வி கொண்டாடுகிறது. வேறு சில நாடுகளிலும் சிலர் இந்த நோயினால்பலியாகிருக்கின்றனர். முகமூடிகளும், மாத்திரை, மருந்துகளும் அமோகமாக விற்பனையாவதை பார்த்து மருந்து முதலாளிகள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். உண்மையில் இந்த நோயின் தோற்று வாய் எது? முதலாளிகளின் இலாபத்திற்கும் இந்தக் காய்ச்சல்  பரவுவதற்கும் என்ன தொடர்பு? எதிர்கால நோய்தொற்று போர்முறைகளுக்கு இந்தக் காய்ச்சல் ஒரு முன்னோட்டமா? நீங்கள் எங்கேயும் படிக்க முடியாத செய்திகளையும், உண்மைகளையும் எடுத்துரைக்கும் புதிய ஜனநாயகம் கட்டுரையை இங்கே மீள்பதிவு செய்கிறோம்.. பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்கு மின்னஞ்சல், ட்விட்டர், குறுஞ்செய்திகள் வழியாக செயல்படும் நண்பர்கள் இந்தக்கட்டுரையையும் பரப்பினால் அந்த வராக அவதாரத்தின் பிரம்மாக்களை மக்களுக்கு அறிமுகம் செய்யலாம்.

கடந்த நூற்றாண்டில், உலகை ஆட்டிப்படைத்த பெரியம்மை, பிளேக், போன்ற கொள்ளை நோய்கள், அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் அவ்வப்போது தோன்றும் புதுப்புது கொள்ளை நோய்கள், உலகையே அச்சுறுத்தி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பறவைக் காய்ச்சல், சிக்குன் குனியா என வகை வகையான நோய்கள் தோன்றிப் பரவின. இந்நோய்களால் பல்லாயிரக்கணக்காண மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் வந்திருக்கும் புதுவித நோய்தான் பன்றிக் காய்ச்சல். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற வளர்ந்த நாடுகளை இந்த நோய் ஆட்டிப் படைக்கிறது. இந்நோய்க்குப் பயந்து பல நாடுகள் தங்களது எல்லைகளை மூடி வருகின்றன. பத்திரிக்கைகளும், இதர செய்தி ஊடகங்களும் இந்த நோய் குறித்து மக்களை எவ்வளவு பயமுறுத்த முடியுமோ அந்தளவுக்குப் பயமுறுத்தி வருகின்றன. அமெரிக்கா சென்று திரும்பிய சில இந்தியர்களுக்கு இந்தக் காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகள் பரவியதால், மக்களிடையே பெரும்பீதி கிளம்பியுள்ளது. விமான நிலையங்களில் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்கிறார்கள். அவர்களில் உடல் வெப்ப நிலை அதிகமாக உள்ளவர்களைத் தனியறையில் (குவாரண்டைன்) தடுத்து வைத்து விடுகிறார்கள். சாதாரணமாக ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ, புளூக்காய்ச்சலாக இருக்குமோ எனும் அச்சத்திற்காளாகிறார்கள்.

பொதுவாக, இன்புளுயன்சா என்னும் வைரஸ் தாக்குவதால் மனிதர்களுக்குச் சாதாரணமாக ஏற்படும் நோய்தான் புளூ காய்ச்சல் . இது கடுமையான காய்ச்சலையும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தக் கூடிய தொற்றுநோயாகும். ஆண்டு தோறும் இது பல லட்சம் பேரைத் தாக்குகிறது. அவர்களில் குறிப்பாகக் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் ஆகியோரை இது கடுமையாகப் பாதிக்கிறது. இதனால் சிலர் இறந்தும் போகிறார்கள். ஆனால், பன்றிக் காய்ச்சல் எனப்படும் ‘ஸ்வைன் புளூ’ பன்றிகளிடையே தோன்றி, அவற்றிற்கு அருகில் வேலை செய்து, தொடர்ந்து அங்கேயே வசிக்கும் மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்நோய் மனிதனைத் தாக்கும் போது சுவாசத்தைப் பாதித்து மரணத்தை ஏற்படுத்துகிறது.

மெக்சிகோவின் கிழக்குப் பகுதி நகரான லா கிளோரியாவில்தான் முதன் முதலாக இந்த நோய் தோன்றியது. அந்நகரில் உள்ள பன்றிப் பண்ணை ஒன்றிலிருந்து நகருக்குப் பரவிய வைரஸ் மெக்சிகோ முழுவதும் பரவி, அண்டை நாடுகளான அமெரிக்கா, கனடா ஆகியவற்றுக்கும் பரவி, தற்போது ஐரோப்பாவிற்குள்ளும் ஊடுருவிவிட்டது.

pig-factory-farmsமுதலாளித்துவ நாடுகளின் நவீன பண்ணைகளில் பல லட்சம் பன்றிகள் ஒன்றாக அடைத்து வைத்து வளர்க்கப் படுகின்றன. லாப வெறியோடு, சிறிய இடத்தில் நகரக் கூட இடமில்லாமல் இவற்றை ஆண்டுக்கணக்காக வைத்திருக்கின்றனர். பன்றிகளைக் கொழுக்க வைப்பதற்கெனக் கொடுக்கப்படும் இரசாயனம் கலந்த உணவுகளும், அப்புறப்படுத்தப் படாமல் கிடக்கும் டன் கணக்கிலான கழிவுகளும், இத்தகைய பண்ணைகளை கிருமிகளின் உற்பத்திச் சாலைகளாக மாற்றியுள்ளன. மெக்சிகோவில் நோய் தோன்றிய பண்ணை ஸ்மித் பீல்டு நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்தப் பண்ணையிலிருந்து மட்டும் ஆண்டு தோறும் 10 லட்சம் பன்றிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனம் 2006ஆம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 2 கோடியே 60 லட்சம் பன்றிகளை ஏற்றுமதி செய்துள்ளது. தங்களது பண்ணையின் சுகாதாரத்தைப் பறைசாற்ற இந்த நிறுவனம் பல்வேறு தரச் சான்றிதழ்களைக் காட்டினாலும், சுகாதாரம் என்னவோ காகிதத்தில் மட்டுமே உள்ளது.

இந்த நிறுவனத்தைப் போல அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் கோடிக்கணக்கான பன்றிகள் இந்த லட்சணத்தில்தான் வளர்க்கப்படுகின்றன. பன்றிக்காய்ச்சலைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதும் பத்திரிக்கைகள் எதுவும் ‘இன்டென்சிவ் பார்மிங்’ எனும் அதிதீவிர உற்பத்திமுறையைப் பற்றியோ, அதனைக் கையாளும் முதலாளிகளின் லாப வெறிதான் இந்த நோய்க்குக் காரணம் என்பதைப் பற்றியோ எழுதுவதே இல்லை.

இந்நோய் தோன்றிய ஒரு சில வாரங்களிலேயே மெக்சிகோ முழுவதும் பரவி அந்நாட்டையே செயலிழக்க வைத்துவிட்டது. நாடு முழுவதும் அறிவிக்கப்படாத ஊரடங்கு நிலவுகிறது, எல்லா நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மே 1 அன்று நடக்கும் தொழிலாளர் பேரணி கூட அங்கு நடைபெறவில்லை. அதே சமயம் இந்நோயைக் கட்டுப்படுத்த அரசால் முடியவில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கூட நோய்த்தடுப்பூசி போட முடியாத நிலையில்தான் மெக்சிகோ அரசு உள்ளது. மெக்சிகோவின் எல்லையைத் தாண்டி அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ள இந்தக் காய்ச்சலை அமெரிக்காவாலும் தடுக்க இயலவில்லை. அமெரிக்க அரசு ஏற்கெனவே எல்லா சமூக நலத் திட்டங்களையும் ஒழித்துக் கட்டிவிட்டதுடன், சுகாதாரத் துறையை முற்றிலும் தனியார் மயமாக்கிவிட்டது. நோயிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொறுப்பு மக்களிடமே விடப்பட்டுள்ளது. மக்களோ மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் பிடியில் உள்ளனர். ஏற்கெனவே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க மக்களைத் தற்போது பன்றிக் காய்ச்சல் பாடாய்ப் படுத்துகிறது.

எல்லா அழிவுகளிலும் லாபம் தேடும் முதலாளித்துவம் பன்றிக்காய்ச்சலையும் விட்டு வைக்கவில்லை, புளு வைரஸிற்கு மருந்துகளை தயாரித்து விற்கும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு அடித்தது யோகம். அவை மருந்துகளையும், தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்து குவிக்கின்றன. ஊடகங்களைத் தங்கள் பக்கம் வளைத்துக் கொண்டு உலகம் முழுவதும் இந்நோய் தாக்குவது உறுதி என்று பீதியூட்டி தங்களது சந்தையை விரிவுபடுத்தி வருகின்றன. பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கியதும் இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு மதிப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதே இதற்குச் சாட்சி. கடந்த முறை பறவைக் காய்ச்சல் வந்த போதும் இவற்றின் மதிப்பு இதே போல உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

பணம் மருத்துவம்இவ்வாறு ஒருபுறம் மருந்துக் கம்பெனிகள் லாபம் ஈட்டினாலும், மற்றொருபுறம் பன்றி இறைச்சியினால் நோய் பரவும் என்ற பீதியின் காரணமாக, பன்றி இறைச்சி ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் பன்றி இறைச்சி ஏற்றுமதியாளர்களைக் காக்க உலக சுகாதார நிறுவனம் களத்தில் இறங்கியது. பன்றி இறைச்சியின் மூலம் காய்ச்சல் பரவாது என்று பிரச்சாரம் செய்தது. பன்றிக் காய்ச்சல் என்ற பெயரையே ‘மெக்சிகன் காய்ச்சல்’ என்று மாற்றிவிட்டது. இதன் மூலம் காய்ச்சல் பரவுவதற்குக் காரணம் மெக்சிகர்கள்தானே ஒழிய, பன்றிகள் அல்ல என்று மறைமுகமாகக் கூறுகிறது.

கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு பண்ணையில் 220 பன்றிகளுக்கு இந்தக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்தப் பண்ணை நிர்வாகமும், கனடா அரசும் பண்ணையில் வேலை பார்த்த ஒரு மெக்சிகத் தொழிலாளியிடமிருந்துதான் பன்றிகளுக்குக் காய்ச்சல் பரவியதாகக் கூறியது. ‘ஏன் பன்றிகளிடமிருந்து அந்தத் தொழிலாளிக்கு நோய் பரவியிருக்கக்கூடாது’ எனக் கேட்டால் கனடா பன்றிகளுக்குத் தானாக புளூ காய்ச்சல் வராது, அவற்றிற்கு தொழிலாளர்களிடமிருந்துதான் பரவியிருக்கும் எனக் கூறித் தொழிலாளியைப் பன்றியை விடக் கேவலமாகச் சித்தரிக்கின்றனர்.

பன்றிக் காய்ச்சல் பன்றிகளிடமிருந்து தோன்றி மனிதர்களுக்குப் பரவியதாகக் கூறினாலும், இது வல்லரசுகள் நடத்தும் உயிரியல் ஆயுதப் போருக்கானதொரு சோதனை எனவும் கூறுகின்றனர். தற்போது அனைத்து முதலாளித்துவ நாடுகளும் இச்சோதனைகளின் மூலம் பல்வேறு புதிய வைரஸ்களை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றன. அவற்றைச் சோதித்துப் பார்க்க அமெரிக்காவே கூட மக்களிடையே பரவச் செய்திருக்கக்கூடும். ஆனால் இது போன்ற சோதனைகளை தேச நலன் என்ற பெயரில் மூடி மறைத்துவிடுகின்றனர்.

மே 5ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 1500 பேர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். 30 பேர் இறந்திருந்தனர். அமெரிக்காவில் மட்டும் 109 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர், ஒருவர் உயிரிழந்திருந்தார். இப்போது இந்நோய் கட்டுப்படுத்த முடியாதபடி பரவி வருகிறது.

உலகப் பணக்கார நாடான அமெரிக்காவிற்கே இந்த நிலையென்றால், ஏழை நாடுகளை இந்நோய்த் தாக்கும்போது அம்மக்களின் கதி என்ன ஆவது? ஏற்கெனவே அமெரிக்கா தனது ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அத்துடன் மருத்துவக் கழிவுகளையும், ரசாயனக் கழிவுகளையும் அந்நாடுகளில் கொட்டி, சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் மாசுபடுத்தி வருகிறது. தூத்துக்குடியிலும், சென்னையிலும் அமெரிக்காவிருந்து கொண்டுவந்து கொட்டப்பட்ட குப்பைகளில் வெடிமருந்துகளும், வெடிக்காத குண்டுகளும் பல ஆண்டுகளாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, கொச்சி துறைமுகத்திலிருந்து கோவைக்குக் கொண்டுவந்து கொட்டப்பட்ட கழிவுகளில் பயன்படுத்தப் பட்ட ஊசி, குளுகோஸ் பாட்டில் உட்பட மருத்துவக் கழிவுகள் மலை மலையாகக் குவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தனது கழிவுகளை ஏழை நாடுகளுக்குப் பரிசளித்துப் பழகிய அமெரிக்கா, பன்றிக் காய்ச்சலை மட்டும் அந்த நாடுகளுக்குப் பரவாமல் கட்டுப்படுத்தி விடுமா?

இந்தியாவில் சுகாதாரத்துறையை வேகமாகத் தனியார்மயப்படுத்தி வருகின்றனர். மக்களுக்கு கிடைத்து வந்த கொஞ்ச நஞ்ச மருத்துவ உதவிகளையும் அரசு திட்டமிட்டு நிறுத்திவருகிறது. அரசுதனியார் கூட்டுச் சுகாதாரத் திட்டம் என்ற பெயரில் அரசு மருத்துவமனைகள் கொஞ்சம் கொஞ்சமாக விற்கப்படுகின்றன. இந்நிலையில் இங்கு பன்றிக் காய்ச்சல் பரவினால் அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும். இந்திய சுகாதார அதிகாரிகள், பன்றிக்காய்ச்சலை இந்தியா எளிதில் எதிர்கொள்ள முடியும் என்றும், அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் பேட்டியளித்துள்ளனர். ஆனால் தமிழக மக்களைத் தாக்கிய சாதாரண சிக்குன் குனியா நோயையே தடுத்து நிறுத்த முடியாத இவர்கள்தான், பன்றிக் காய்ச்சல் போன்ற வெகு வேகமாகப் பரவும் நோய்களிலிருந்து மக்களைக் காக்கப் போகிறார்களாம்.

காற்று, நிலம், நீர் என அனைத்தும் மாசுபட்டு, சுற்றுச் சூழல் நாசமானாலும் பரவாயில்லை, புதிது புதிதாகக் கொடிய நோய்கள் உருவாகி மக்களெல்லாம் செத்து மடிந்தாலும் பரவாயில்லை. தங்களது லாபம் மட்டும் குறையாமல் இருந்தால் போதும் – என லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முதலாளித்துவம் இயங்கி வருகிறது. அரசும், முதலாளிகளின் நலனைக் காப்பதிலேயே குறியாய் உள்ளது, மக்களின் அழிவில் கூட முதலாளிகள் லாபம் சம்பாதிக்க உதவுகிறது.

இந்நிலையில் நாம் என்ன செய்யப் போகிறோம்? இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமான முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டப் போராடப் போகிறோமா? அல்லது இப்போதைக்குப் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொண்டு அடுத்து வரவிருக்கும் புது நோய் ஒன்றிற்காகக் காத்திருக்கப் போகிறோமா?

புதிய ஜனநாயகம், ஜூன்’2009

புதிய ஜனநாயகம், ஜூன்’2009 மின்னிதழ் வடிவில் PDF கோப்பாக பெற இங்கே சொடுக்கவும்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஏழையின் கண்கள் என்ன விலை?

பணமில்லையா, ஹார்ட் அட்டாக் வந்து சாகட்டும் !

பெற்ற மகளை விற்ற அன்னை !

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

  1. பன்றிகளை குற்றவாளியாக்காதீர்கள்!…

    பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகள் பரவியதால், மக்களிடையே பெரும்பீதி கிளம்பியுள்ளது. இதன் பி…

  2. டாக்குடர், எனக்கு கொஞ்ச நாளா முட்டி நோவு.
    முதலாளித்துவம்தான் காரணமா இருக்கும்னு தோழர் சொல்றார்.

    முதலாளித்துவம் ஒழிக.. முட்டி நோவு, குடல் புண்ணுக்கெல்லாம் காரணம் முதலாளித்துவம்தான். மருந்து சாப்பிட்டு புரட்சியை கெடுத்துடாதீங்க தோழர்னு அட்வைசு பண்ணுறார் தோழர்.

    என்ன செய்யறது?

    மழை பெஞ்சா முதலாளித்துவம் காரணம், மழை பெய்யலைன்னா முதலாளித்துவம் காரணம்னு எது நடந்தாலும் புரட்சிக்கு ஆள் புடிக்கிற உங்க விளையாட்டு நல்லா இருக்கு.

    • ஏய்! ஜிம்ப்பலக்கடி பம்பா,

      எந்த சீபீஎம் மோலே, ரமேஷ் குட்டி நன்னா இருக்கேளா?.ஆமா அச்சுக்கும் விச்சுக்குக்ம் சண்டையாமே? நாட்டாமை தலைய பிச்சுண்டு இருக்கார்? இங்க வந்து புலம்புறீயேம்மா?

      சரி சரி இன்னொருக்கா வேசம் போடும் போது கொண்டயை மறச்சுட்டு வரீயா? அப்புடியே தோட்டத்துக்கு போன வருதுக்குட்டி என்ன ஆனாருன்னு சொன்னா தேவலை.

  3. என்னது தோழரே?

    பன்றி காய்ச்சலுக்கு இந்து பார்ப்பனிய பயங்கரவாதம் காரணமில்லையா?

    உங்களை நம்பி உங்கள் பின்னால் வர இருக்கும் கோடிக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்களை இப்படி நட்டாற்றில் விட்டுவிட்டீர்களே?

    உடனே இந்த கட்டுரையில் முதலாளித்துவம் என்று இருக்கும் இடங்களிலெல்லாம் இந்து பார்ப்பனிய பயங்கரவாதம் என்று மாற்றி எழுதுங்கள்.

    இல்லையேல் இஸ்லாமிய தோழர்கள் உங்கள் அணியிலிருந்து வெளியேறுவார்கள்.

    இஸ்லாமிய தோழர்களிடம் நம்பிக்கை துரோகம் செய்யவேண்டாம். விளைவுகள் கடுமையாக இருக்கும்.

  4. அருமை வினவு தோழர்களே, உங்கள் எழுத்தின் தாக்கம் எதிரிகளை பீதியடைய செய்கிறது என்பதற்கு ஒரே ஆளால் கிறுத்துவ/இசுலாமிய பெயர்களில் மேலே எழுதப்பட்டுள்ள இரு கருத்துக்களே சாட்சி. ‘அந்த பன்றிகள்’ மட்டுமல்ல ‘இந்த’ … பாவம்தான் 🙁

  5. நல்ல கட்டுரை…..பணக்காரன் வீட்டு குப்பை ஏழையின் வீட்டில் என்பது தனிமனிதனுக்கு மட்டுமல்ல…உலக நாடுகளுக்கும் நன்றாகப் பொருந்தும்

  6. If capitalism is the problem what to do with the viruses becoming resistant to drugs and appearence of new viruses or their strains that were unknown earlier. Do you know anything about resistance to antibiotics and why that happens. Dont come with an answer that it is all because of overuse of antibiotics and capitalism. Are you against factory farming? Are you against the growing animals for production of meat on such a massive scale ? This cut and paste ‘journalism’ of yours is sham.
    You know neither the problem nor the science. About answers, you simply say no to something
    but development of resistance by viruses is a natural reaction in the evolutionary process. No marxist
    can do anything about it.

    • Yes,u very well known about the resistance to drugs and the evolutionary process…..all u said is correct….but eventhough there might be the hidden truth for the cause of this mexican flu..this might be the trial test for biological warfare…..

      as said by vinavu , capitalism is the solitary reason for these kind of problems….capitalistic mind only think for bulk farming without prior safety measuremnts…eventhough its speeks about the bio-ethics its mere a paper tiger for them……

      ..why cant u c the other side of the coin…after all u are not seeing the other side of the coin,then how come u see the edges of coin (ie) the thinking beyond the dailys like The Hindu,Indian express,Times of india etc

      • Well, if this would have been a test for biological warfare,then they would have tested in countries like india and africa, they wont release in mexico and spearding to Europe and USA,as they care well about their health. part of Vinau article is true, the pigs were developed such condition for several years would have the mutated virus strain that ultimately affects humans but connecting this to the capitalism may not be the reason, but now all pharmaceutical company owners would feel very happy that their products would sell a lot and they would yearn lot of money.

  7. Dear manithan, Since you know everything about science especially about anti biotics can you explain the evolution of influenza virus into the H1N1. Under which circumstance this evolution occurs. Why these didn’t happen to pigs that are home reared in countries like India. Hope that you will answer from your divine knowledge and will not copy paste any article or quote some one who said about this.

  8. சமீப நாள்களில் நாளிதழ், தொலைக்காட்சி என எங்கு பார்த்தாலும், பன்றிக் காய்ச்சல் அடிக்கிறது! இந்த கட்டுரையின் தேவை இப்பொழுது அதிகம். ஆகையால், இந்த பதிவை என் தளத்தில் மீள் பதிவு செய்கிறேன். நன்றி.

  9. லக்கிக்கு லொள்ளு ரொம்ப அதிகமாயிட்டுருக்குது வேட்டு வெச்சாதான் சரிபடும்

  10. //முதலாளித்துவ நாடுகளின் நவீன பண்ணைகளில் பல லட்சம் பன்றிகள் ஒன்றாக அடைத்து வைத்து வளர்க்கப் படுகின்றன.//

    என்னே அறிவியல் கண்டுபிடிப்பு? கம்யூனிச நாடுகள் எல்லாம் என்ன காற்றோட்டமான வெட்டவெளியிலா பன்றிகளை வளர்க்கின்றன?

    பு.ஜ. கட்டுரையின் ஆழம் , நம்பகத்தன்மைக் கீழே:

    //பன்றிக் காய்ச்சல் பன்றிகளிடமிருந்து தோன்றி மனிதர்களுக்குப் பரவியதாகக் கூறினாலும், இது வல்லரசுகள் நடத்தும் உயிரியல் ஆயுதப் போருக்கானதொரு சோதனை எனவும் கூறுகின்றனர். தற்போது அனைத்து முதலாளித்துவ நாடுகளும் இச்சோதனைகளின் மூலம் பல்வேறு புதிய வைரஸ்களை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றன. அவற்றைச் சோதித்துப் பார்க்க அமெரிக்காவே கூட மக்களிடையே பரவச் செய்திருக்கக்கூடும். ஆனால் இது போன்ற சோதனைகளை தேச நலன் என்ற பெயரில் மூடி மறைத்துவிடுகின்றனர்//

    யூகத்திலேயே கட்டுரைகளை எழுதலாம் என்ற தர்மம் தான் ‘புதிய ஜனநாயகம்’…

    • Biological war என்று கேள்விப்பட்டதில்லையா?

      அதுவும் ஒரு கோணம் என்கிற சந்தேகத்தைத் தான் கட்டுரை எழுப்பியிருக்கிறது.

      • ஆட்டோ சங்கர் “ஈ” படம் பார்க்கல போல இருக்கு. இது மசாலா படமாக இருந்தாலும், உயிரி போர் பற்றி விளக்கியிருக்குது. படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

      • ஆர்.கே மற்றும் கோனா மானா –

        சரிங்க…கண்ண திறந்து வைத்ததற்கு. பு.ஜ.வின் ‘அறிவியல்’ கட்டுரைகள் சீக்கிரம் உலக காமடி அரங்கத்தில் இடம் பெற வாழ்த்துக்கள் !

      • இன்டென்சிவ் farming செய்யும் அமெரிக்கா-மெக்சிக்கோவில் தான் இந்த வைரஸ் உருவாகியுள்ளது. திறந்த வெளியில் பன்றிகள் வளார்க்கப் படும் நம்மூர் கிராமங்களில் இந்த வைரஸ் உற்பத்தியாகவில்லையே. இது ஏன்?

        ஆட்டோ சங்கர், தங்கள் “அறிவியல்” பார்வையால் தெளிவுபடுத்தவும்.

    • Mechanised animal farming is common is all industrialised nations ; and in communist nations too this was the norm. hence the argument is invalid.

      and pencillin and many many life saving drugs were invented by private pharma companies and marketed world wide, saving billions of lives. and prices of drugs drop in due course of time due to free market competition and expiring of patents. the reason why drug cos price their products with huge profit margin (for that individual drug ) is the enormous cost of research and development for new drugs. may be one in twenty attempts succeed. but the net profit of cos are not huge. ok. anyway, without profits there will be no incentive for new investment and research. you may not understand this.

      try “nationalising” these drung cos and run it on socilaistic model ; you will know the result for yourself. But for the pioneering effrots of pharma majors, many many new drugs and vaccines would not have been available with us now. any idea about Indian govt IDPL in Delhi and its performance and losses ?

  11. பன்றிக் காய்ச்சல்: முகமூடிகள் தடுக்குமா?…

    பன்றிக்காய்ச்சலால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சிலர் இறந்திருக்கின்றனர். இவர்கள் இறப்பதற்கென்றே சென்னையின் மருத்துவமனைகளில் பத்திரிகையாளர்கள் பரபரப்பு செய்திகளுக்காக காத்துக்கிடந்ததை ஒரு ஊடக நண்பர் தெரிவித்திருந்தார். https://www.vinavu.com/2009/0

  12. // ஆனால் தமிழக மக்களைத் தாக்கிய சாதாரண சிக்குன் குனியா நோயையே தடுத்து நிறுத்த முடியாத இவர்கள்தான், //

    இன்று சிக்குன்குனியா இருக்கா தோழர்

    எப்படி காணாமல் போனது

    அரசின் நடவடிக்கை எடுக்காமல் காணாமல் போயிருக்குமா

    மனசாட்சியுடன் பேசுங்கள் தோழர்

  13. //volution of influenza virus into the H1N1. Under which circumstance this evolution occurs. //

    அதற்கு antigenic drift, antigenic shift என்று இரு நடைமுறைகள் உள்ளன

    கடந்த 300 ஆண்டுகளாகவே இன்ப்ளுயென்சா மனிதனை தாக்கி வருகிறது. அதற்கு காரணம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு காரணங்கள்தான்

    1889ல் நீங்கள் கூறிய intensive farming கிடையாது. ஆனால் இன்ப்ளூயென்சா இது போல் உலகம் முழுவதும் பரவியது

  14. //பன்றிக் காய்ச்சலுக்கு எதிரான புரட்சி இன்றைய இமாலயத் தேவை என்பதை உணர்ந்தோம் தோழர்//

    முதலாளித்துவ பன்றிகளின் முடை
    நாற்றத்தில் முடங்கிப்போனது
    பன்றிகள் மட்டுமல்ல
    மனிதர்களும் சேர்த்துத்தான்……

    மீண்டும் உயிர்த்தெழுகிறது
    முதலாளித்துவம்
    உயிர் குடிக்கும் நோய்களாய்
    தசாவதாரமெடுத்து….

    பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், எய்ட்ஸ்
    எல்லாம் முதலாளித்துவத்தின்
    கள்ளக்குழந்தைகள்

    நக்கல் தலைவர்கள்
    முதலாளித்துவத்தாலேயே
    பிணமாயிருப்பார்கள்

    முதலாளித்துவம்
    மக்களை கொல்லும் கம்யூனிசமே
    அதனை வெல்லும்- மக்களையும் காக்கும்

    சுத்தியலும் அரிவாளும்
    நாளை முதலாளித்துவத்தின் மண்டையை
    பிளக்கும்
    அப்போது
    முதலாளிய ஆன்மாவோடு கொடிய நோய்களும்
    சொர்க்கத்துக்கு இடம் பெயந்திருக்கும்

    • இப்படி கோராமையாக ஒரு கவிதையை வாசிக்க நேரும் என்று தெரிந்திருந்தால் இங்கே பின்னூட்டமே போட்டிருக்க மாட்டேன் தோழர் 🙁

      • அய்யா, இது தங்களுக்காக எழுதப்பட்டதல்ல

        முதலாளித்துவத்தின் கோரத்தால் உருவாக்கப்படும் கொடிய நோய்களால், வறுமையினால் எல்லோரும்தான் சாகிறார்கள். நான் உட்பட, ஆனால் நீங்கள் நக்கல் செய்து போட்ட பின்னூட்டம் சரியா? அதை பற்றி ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள். எவன் செத்தால் என்ன எனக்குத்தேவை லாபம் பணம் போட்டவனின் தேவை, அப்படித்தான் தான்முதலாளித்துவம் தன்னை உயிர்ப்பித்து கொள்கிறது . இத கோரத்தோடு கம்ப்பேர் பன்ணுங்கள் இந்த கவிதை கோர மாக இராது.

  15. இரண்டு நாட்கள் முன் எனக்கு ஈ-மெயிலில் வந்த ஒரு விஷயம் கீழே

    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    I agree with you that swine flu awareness is needed, but there is no need to be panicky and join the publicity propaganda carried out by media and others which acts as a vehicle to spread misconception than to spread scientific information.

    These are few facts about swine flu when discussed with the leading epidemiologists.

    1) Swine flu, that is H1N1 flu is not new, first detected in 1987.

    2) Infective stage of flue is 5 days, 1 day before and 4 days after onset of symptoms

    3) The best way to prevent it spreading is asking patient having symptoms of flu like fever cough and running nose to take rest at home for 4 days so he does not
    transmit it.

    4) Masks are of limited value if any, in this disease, it can spread through droplets on your skin, through contact etc, and I have seen that the masks in Pune are
    worn as fashion statement, while walking on road today morning I saw people wearing masks coming out for a morning walk with their dogs!, many wearing
    masks around their necks, and so on, infact these masks shall act as the vehicles to carry the virus, instead, avoiding crowded places or cinema halls or malls
    where air conditioners are on, is advisable, because you get re-circulated air, where the virus density multiplies

    5) Death after H1N1 flu is not common, infact infections like measles is taking toll of thousands more every year, and we are oblivious of the facts. Swine flu is being
    blown out of proportion by media trying to create hysteria among lay people.

    6) Fever accompanied by respiratory distress, should be immediately notified which is likely to be a complication of H1N1 flu

    7)The mortality is less than .01 percent of those affected, that means may be one in 10,000 affected is likely to suffer the life loss.

    8) If you remember, 2 years ago SARS was blown out of proportion, what happened? Humans develop immunity to the virus, the same is going to happen, we
    develop immunity in due course of time, the virus is in the air, you can not stop it, our body is already developing the immunity so nothing to panic.

    We need to take care of children and elderly who have less immunity and do not let them go to crowded places that is all .

    WE MUST START THIS CAMPAIGN OF NOT TO BE AFRAID OF THIS FLU AND LET YOUR DAILY WORK CONTINUE AS NORMAL, NO MASKS FOR ORDINARY CITIZENS, HEALTH CARE WORKERS OR SPECIFIC EXPOSED TO LOT OF CROWDED ENVIRONMENTS MAY BE BENEFITTED, NOT PROVEN.

    I am amazed to hear that people are selling masks of Rs. 20 each which are available to less than Rupee 1 in the market. See who is getting benefited?

    Please spread the scientific info, do not join the band wagon and stick to science, that should be the order of the day.

    ++++++++++++++++++++++++++++++++++++++++

  16. இந்த கட்டுறை மீண்டும் பதிவிட்டதிற்கு நன்றி.

    ஆந்தரக்ஸ், பறவை காய்ச்சல், சிக்குன்குனியா, வைரல் பீவர், அந்த வகையில் இப்போது பன்றி காய்ச்சல். (அடுத்த மூன்று மாதத்திற்கு பிறகு எருமை காய்ச்சல் வரும்)

    ஆண்டுக்கு இரண்டு என்ற வகையில் தொடர்ச்சியாக வந்துகொண்டுயிறுக்கிறது.

    தொடர்ச்சியாக நிகழகூடிய பூமியியல் மாற்றமும், ரசாயன உணவு பொருட்களை உட்கொள்வதலும், மனிதனின் எதிர்ப்பு சக்தி குறைந்து சாதரன நோய்க்குகூட மனிதன் இறந்துவிடுகிறான்.
    ஆனால் இதுவெல்லம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பவை. இப்படி கொத்து கொத்தாக இறப்பவை என்பது சற்று சிந்திக்க வைக்க்றது.
    எச்.ஐ.வி. என்ற வைரஸ் முதன் முதலில் போலியோ சொட்டு மருந்தின் மூலம்தான் தென் ஆப்பிரிக்க நாடுகளில் பறப்பியதாக இன்றளவும் கூறபட்டுவறுகிறது.
    இவையெல்லாம் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் லாப வெறிக்காக உருவாக்கப்படும் புதிய நோய்கள் என்பதை நம்மால் மறுக்க முடிவியவில்லை.
    இந்தியாவில் காட்சி மற்றும் அட்சி ஊடகங்கள் தனியார் மருந்து கம்பெனியுடனும், மருத்துவ மனைகளுடன் இனைந்துகொண்டு மக்களிடம் மிகப்பெறும் பீதியூட்டி வருகிறது.
    தமிழகத்தில் தனியார் மருத்துவர்களுக்கு இந்த நோயை குணப்படுத்த பயிற்சி அளிக்கபடுகிறது.
    தனியார் மருத்துமனைகள் இந்த நோய் இருக்கா இல்லையா என்பதை கண்டறிய சுமர் பதினைந்தாயிறம் கேட்கிறது.
    அரசு மருத்துவமனைக்கு சென்றாலோ இல்லாதவர்க்கும் இந்த நோய் வந்துவிடுமோ என்ற பயம் மக்களுக்கு. அரசு எல்லா சேவைத்துறையிலும் இருந்து விலகிகொண்டிருக்கிறது.
    தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற தாரக மந்திரத்தின் பெயரால் இந்த நாடும், நாட்டு மக்களின் உயிரும் நம்மிடம் இருந்து பிரிக்கப்படுகிறது.
    இந்த நோய் போய் அடுத்த நோய் இன்னும் சில மாதங்களில் வரும் இருப்பவர்கள் அப்பொதவது உணருங்கள் இதுதான் “பயாலாஜிகல் வார்” என்று.

  17. கரக்டு தோழர் , இதே மாதிரி 50 வருசம் முன்னாடி பிளாக் நோய் வந்ததற்க்கு காரணம் என்னனு கண்டு பிடிச்சு அமரிக்க முதளாளிதுவத்தை கிழிச்சு காயப்போடுவோம் , அப்பதான் புரச்சி வெடிக்கும் ,

    வாழ்க மாவோ , வாழ்க ஸ்டாலின் , ஒழிக அமரிக்கா

    • மாற்று மருத்துவம் இதழில் டாக்டர் புகழேந்தியின் பேட்டியில்,

      “இந்தியாவில் 1994 பிளேக் நோய், 1996 டெங்கு சுரம், 2001 மூளைக்காய்ச்சல் (சிலிகுரி) போன்ற நோய்கள் உயிரி போர்முறை உத்திகள்……

      எய்ட்ஸ் கிருமி உயிரி போர் யுத்தத்திற்காக செயற்கையாக தயாரிக்கப்பட்டகிருமி. மேலும் பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் AIDS தொற்றும் வாய்ப்பு 0-1-1% என்றே கணக்கிடப்பட்டுள்ளது. இரத்தம் மூலமே 90% க்கும் மேல் பரப்பப்படுகிறது.

      மேலும் ஒரு செய்தி – பல ஆப்ரிக்க நாடுகளில் பெரியம்மை தடுப்பூசி அதிகம் பயன்படுத்தப்பட்ட நாடுகளில் AIDS அதிகமாகவும், குறைவாக பயன்படுத்தப்பட்ட நாடுகளில் AIDS குறைவாகவும் இருப்பதிலிருந்து எய்ட்ஸ் பரவ அம்மை தடுப்பூசியும் முக்கிய காரணம் என்பது உறுதியாகிறது. எய்ட்ஸ் நோய் அமெரிக்காவில் மஞ்சள் காமாலை தடுப்பூசி மூலமும், ஆப்ரிக்காவிலும் பெரியம்மை, போலியோ தடுப்பூசி மூலமும் பரப்பப்பட்டிருக்கிறது.”

  18. கடந்த 4, 5 நாட்களாக இந்த பன்றி காய்சல் செய்தி பரவும் வேகத்தை வைத்து நான் சில தோழர்களிடம் இது நிச்சயமாக மருந்து கம்பெனிகளின் வேலைதான் என சொல்லி வந்தேன். இன்று அதை கட்டுரையாக பார்க்கிற போது இதை பலர் படிக்க வேண்டும் என எண்ணுகிறேன். கூவம் நதிக்கரையிலும், சேரிகளிலும், தெரு ஓரங்களிலும் வசிக்கும் அன்றாடங் காய்ச்சிகள் ஒருபுறம் ‍ ஊடகங்களை பார்த்து அஞ்சும் நடுத்தரம் மறுபுறம் .. இருதரப்பு மக்களையும் முட்டாளாக்கி சம்பாதிக்கும் முதலாளியும் அரசியல் வாதிகளும் என்றும் மேல்புரம்

  19. # தமிழக அரசு இரண்டு கோடி மாத்திரைகள் விநியோகிக்கப் போவதாக அறிவித்துள்ளது ( மூன்று நாட்களுக்கு முன் வந்த தினத்தந்தி செய்தி )

    # ஒரு முகமூடியின் விலை 350/ என்று சென்னையில் விற்பதாக நேற்று ”டைம்ஸ் நௌ” சேனலின் ஸ்டிங் ஆபரேஷனில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது ( நாடெங்கும் இதே நிலை தான்)

    # உலகம் முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கான மாத்திரைகளுக்கு கடுமையான டிமாண்ட் ஏற்பட்டுள்ளது

    ஆனால் இப்படி ஊதிப்பெருக்க வைக்குமளவிற்கு / மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் அளவிற்கு பன்றிக்காய்ச்சல் ஒரு கடுமையான ஆட்கொல்லி நோய் அல்ல. தினசரி பன்றிக்காய்ச்சல் பற்றிய செய்திகளுக்கே பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் இடம் கொடுக்கிறார்கள்.

    நன்றாக கவனித்தீர்களென்றால் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு ஒரு தரம் இப்படி ஏதாவது ஒரு நோயைப் பற்றிய பய பீதியை பரப்புகிறார்கள்.

    இதனாலெல்லாம் யாருக்கு லாபம்? மருந்துக் கம்பெனிகள் / ஸ்டாகிஸ்டுகள் / பதுக்கல்காரர்கள் தான் இதிலிருந்து பெரும் லாபமீட்டுகிறார்கள். இங்கே நான் வாழும் ஊரில் தெருத்தெருவாக முகமூடிகளுடன் மக்கள் அலைகிறார்கள்.. பேருந்தில் பயணம் செய்யும் மக்கள் முகங்களை கர்சீப்பால் கட்டிக் கொண்டு போகிறார்கள்.. வெளியே தெரியும் கண்ணில் மரண பீதி தெரிகிறது… மக்களை பயபீதியில் தள்ளி அதன் மூலம் லாபம் சம்பாதிப்பது முதலாளிகள் தான்..

    இன்னைக்கு பன்னி – நாளைக்கு எருமை -நாளான்னைக்கு வேறு ஏதோ.. இப்படி தொடர்ந்து மக்களின் அச்சத்தின் மூலம் பெரும் பணத்தை அறுவடை செய்யப்போவது முதலாளிகள் தான்.

    பன்றிக்காய்ச்சலில் சாகிறவர்களைக் காட்டிலும் அதிகமான பேர் பசியால் சாகிறார்கள் இந்தியாவில் – ஒவ்வொரு நாளும்.

    பன்னிக்காய்ச்சலுக்கு தனியாரிடம் மருந்து வாங்கி மக்களிடம் விநியோகிக்கும் அரசாங்கம் பசிக் ‘காய்ச்சலுக்கு’ மக்களுக்கு இது வரை மக்களுக்கு என்ன மருந்தை விநியோகித்திருக்கிறது?

    லக்கிலுக், நீங்கள் போடும் கிறுக்கன் வேடம் உங்களுக்கு சுத்தமாகப் பொருந்தவே இல்லை. நீங்கள் ஒரு காரியக் கிறுக்கன் என்பது எல்லாருக்கும் பட்டவர்த்தனமாக தெரிந்தே உள்ளது.. எனவே இப்படி சீரியஸான விஷயத்திலெல்லாம் உங்கள் அசிங்கமான மூக்கை நீட்டிக் கொண்டிராமல் இருப்பது நல்லது.

  20. நன்பர்களே,

    இந்த மெக்சிகன் ஸ்வைன் ஃப்லூ எனப்படும் பன்றிக்காய்ச்சல் ஒரு உயிரியல் ஆயுதம் எனும் சந்தேகம் நாளுக்கு நாள் வலுப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனை புறங்கையால் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது என்பதே நிதர்சனமாக இருக்கிறது. இப்போது பரவிவது மெக்சிகன் ஸ்வைன் ஃப்லூ என்பது பழைய ஸ்வைன் ஃப்லூ வைரஸின் மேம்பட்ட வடிவமாக இருக்கிறது.

    இது பறவைக் காய்ச்சல் ( ஏவியன் ஃப்லூ ), மனிதக் காய்ச்சல் ஏ மற்றும் பி வகை ( ஹுயூமன் ஃப்லூ டைப் ஏ & டைப் பி ), ஆசிய பறவைக் காய்ச்சல், ஐரோப்பிய பறவைக் காய்ச்சலின் டி.என்.ஏ கூறுகளை தனது உள்ளடக்கமாய்க் கொண்டிருக்கிறது. திடீரென்று பல கண்டங்களில் பிரத்யேகமாகக் காணக்கூடிய வைரஸ்களின் டி.என்.ஏ கூறுகள் ஒன்றினைந்து ஒரு வைரஸாக
    உருப்பெற்றது எவ்வாறு? இப்படி வடிவத்தில் வேறுபட்ட டி.என்.ஏ கூறுகள் ஒரு குறுகிய காலகட்டத்தில் ஒன்றினைந்து ஒரு
    புதிய வைரஸாக உருப்பெருவது பரிசோதனைச் சாலையில் மாத்திரமே சாத்தியம்.

    ஸ்பேனிஷ் ஃப்லூ, ஆப்ரிக்காவில் அழிவை ஏற்படுத்திய எபோலா வைரஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று
    வினோத தொற்று நோய்க் கிருமிகள் பரவிய விதம் ( pattern ) கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கிறது.

    இப்படி பல டி.என்.ஏ கூறுகள் இணைவது ஒரு வகையான ம்யூடேஷன் ( mutation) என்கிறார்கள்.. ம்யூடேஷன்
    இயற்கையாகவும் ஏற்படும் ஆனால் அதற்கு பல பத்தாண்டுகள் ( சில சமயம் நூற்றாண்டுகள் கூட ) ஆகலாம். ஆனால்
    ஒரு பரிசோதனைச் சாலையிலே தான் இப்படி ஒரு குறுகிய கால அளவில் பல நோய்க் கிருமிகளின் டி.என்.ஏ கூறுகளை
    இணைப்பது சாத்தியம்.

    தற்போது உயிரியல் போர் என்பது இனரீதியில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் தாக்கியழிக்கும் வகைப்பட்ட வைரஸ்களை
    உருவாக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் பல பில்லியன் டாலர்களை இது போன்ற ஆயுதங்களை
    உருவாக்க வாரியிறைக்கிறார்கள்.

    இங்கே தமிழ் பதிவுகளின் / பதிவர்களின் பெரும்பாலான கண்ணோட்டம் என்பது இது போன்ற விவாதங்களை முன்னெடுக்க முயலும் போது
    “இது கம்யூனிஸ்டுகள் எழுதியது – அப்படின்னா அதை எதிர்த்தே ஆக வேண்டும்” என்று நெருப்புக் கோழி பூமிக்குள் தலையைப் புதைத்துக்
    கொள்வதைப் போன்றே இருப்பது வருத்தத்திற்குரியது.

    ஏதோ குமுதத்தில் ஒரு பலான தொடரை எழுதினோமா.. நாலு துட்டு பார்த்தோமா.. நாலு அல்லக்கைகளை கூட சேர்த்துக் கொண்டோ மா என்ற அளவில் மட்டுமே தங்கிவிடுவதே தங்கள் லட்சியமாக சிலர் வைத்திருப்பது வருத்தமளிக்கிறது. அது போன்ற குப்பைகள் அடைந்த உயரத்தையே
    தமது லட்சியமாக அல்லக்கைகள் கொள்ள முயற்சிப்பது கேவலமாக இருக்கிறது

    சீரியஸான இந்தப் பதிவில் அதன் உள்ளடக்கத்தைப் பற்றிய எந்தக் கருத்தும் இல்லாமல் நைய்யாண்டி செய்வதும் நகைச்சுவையாய் மறுமொழிவதும்
    தங்கள் மனசாட்சிப்படிதான் செய்கிறார்களா என்று அவர்களை அவர்களே சுயபரிசீலனைக்குட்படுத்திக் கொள்ளட்டும்.

    இனையத்தில் தேடியதில் கிடைத்த சில வீடியோக்கள்

    http://www.youtube.com/watch?v=m5Uc38-8hqU
    http://www.youtube.com/watch?v=RnSX_jS0STA
    http://www.youtube.com/watch?v=zngY06RQbPs

    பறவைக்காய்ச்சல் வைரஸ் மனிதக் கண்டுபிடிப்பாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்ட இந்தோனேசிய சுகாதாரத்துறை அமைச்சர் – http://www.presstv.ir/detail.aspx?id=92794&sectionid=3510212

  21. வினவு கம்யூனிஸ்டாக இருப்பதினாலேயே வினவு எதை எழுதினாலும் சிலர் எதிர்த்துக்கொண்டே இருக்கின்றனர். இவர்கள் கம்யூனிச எதிர்ப்பு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
    தேவைக்கேற்ற உற்பத்தி முறையைக் கொண்டதுதான் கம்யூனிசம். முதலாளியின் லாபவெறிக்கேற்ற உற்பத்தி முறையைக் கொண்டதுதான் முதலாளித்துவம். இதில் எது சிறந்த‌து என எதிர்ப்பாளர்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

  22. மீண்டும் தொடரும் பண்றிகாய்ச்சல் போர்:
    ————————————–

    பன்றி காய்ச்சல் நோய், பாதிக்கப்பட்ட நபரின் தும்மல் மற்றும் இருமலின் மூலமாக பரவுகிறது எ‌ன்று‌ம் காய்ச்சல், தொண்டைவலி, இருமல், உடல்வலி, தலைவலி, சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள்.

    இது தொட‌ர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பன்றி காய்ச்சல் நோய் சாதாரணமாகவும், சில வேளைகளில் மட்டும் தீவிரமாகவும் உடல் நிலையை பாதிக்கும். குறிப்பாக வயதானவர்கள், சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல் நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் தீவிரமாக உடல் நிலையை பாதிக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதாலும், `டாமிபுளு’ மருந்துகளை உட்கொள்ளுவதாலும் இறப்பினை தவிர்க்க முடியும். பன்றிக்காய்ச்சல் நோய், பாதிக்கப்பட்ட நபரின் தும்மல் மற்றும் இருமலின் மூலமாக பரவுகிறது. காய்ச்சல், தொண்டைவலி, இருமல், உடல்வலி, தலைவலி, சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.

    உலகளவில் 19406 பேரும்,
    இந்தியாவில் இதுவரை பன்றிகாய்ச்சலால் சுமார் 1041 பேர் பலியாகியுள்ளார்கள், சுமார் 29000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.(வெப் துனியா)

    சனிகிழமை(28-2-2015) மட்டும் 36 பேர் பலியாகியுள்ளார்கள்

    ராஜஸ்தான் 267 பேர்
    குஜராத் 256 பேர்
    மத்திய பிரதேசம் 151 பேர்
    மராட்டியம் 131 பேர்

    மற்றும் தெலுங்கானா, பஞ்சாப், ஹரியாணா என நாடு முழுவதும் பெரும் அச்சுருத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    வளர்ச்சி வளர்ச்சி என்று வாய்கிழிய மேடைகளில் பேசினால் வந்து விடுமா?

    பன்றிகாய்ச்சல் மக்களை காவு வாங்கிகொண்டிருக்கும் இவ்வேளையில் மத்திய சுகாதாரத்துறை ”இந் நோயை குணப்படுத்த மருந்துகள் தயார் நிலையில் உள்ளது எனவும், நோய் முற்றிய பிறகுதான் மருத்துவமணைக்கு வருகிறார்கள்” என்று அபாண்டமாக மக்கள் மீது பழியை சுமத்தும் இந்த அரசமைப்பை ஆப்பரேஷன் பண்ணாமல் ஒன்றுமே செய்ய இயலாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க