Tuesday, June 28, 2022
முகப்பு அஹமதியா: பிணத்தைக் கூட சகிக்காத இசுலாமிய வெறியர்கள்!
Array

அஹமதியா: பிணத்தைக் கூட சகிக்காத இசுலாமிய வெறியர்கள்!

-

அஹமதியா: பிணத்தைக் கூட சகிக்காத இசுலாமிய வெறியர்கள்!

இசுலாத்தில் ஒரு பிரிவான அஹமதியாக்கள் பஞ்சாப் மாநிலத்தில் தோன்றிய ஒரு இசுலாமியப் பிரிவினர். நபியின் தூதர்கள் மீண்டும் தோன்றுவார்கள் எனப் பல விசயத்தில் இவர்கள் மைய நீரோட்ட முசுலீம்களுடன் ஒன்றுபட மாட்டார்கள். ஒரிறைத் தத்துவம், ரமலான் நோன்பு, மெக்கா புனிதப்பயணம் என இப்படி ஒற்றுமைகள் இருந்தாலும் மற்ற முசுலீம்கள் இவர்களை ஏறறுக்கொள்ளாததோடு வெறுத்து புறக்கணிக்கவும் செய்கின்றார்கள். பாகிஸ்தானில் இவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதும் உண்டு.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த நிசார் அஹம்மது என்பவரின் 36 வயது மனைவி மும்தாஜ் பேகம், தலைமையாசிரியையாகப் பணியாற்றியவர். மூளைக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருடைய உறவினர்கள் உரிய அனுமதி பெற்று பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள முசுலீம்களின் நல்லடக்க இடத்தில் மும்தாஜின் உடலைப் புதைத்திருக்கிறார்கள்.

இறந்து போனவர் அஹமதியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை உள்ளிட்ட முசுலீம் அமைப்புகள் அங்கே உடலைப் புதைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடினர். தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அய்யூப்பின் கவனத்திற்கு இப்பிரச்சினை வந்தது. அவரது உத்திரவின் பெயரில் மும்தாஜின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்யப்பட்டது.

இசுலாமிய நாடுகளில் நபிகளை ஏற்றுக்கொள்ளவில்லை, குரானைத் திருத்த முயன்றார்கள்என்றெல்லாம் கூறி அஹமதியா பிரிவினைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பலவிதமான அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றார்கள். இவ்வகையில் பாக். இல் சில அஹமதியாக்கள் அவ்வப்போது கொல்லப்படுவதும் உண்டு. மேலும் அந்நாட்டில் முசுலீம்கள் என்பதற்கு பதிலாக அவர்களைச் சிறுபான்மையினர் என்றே வகைப்படுத்துகிறார்கள். இந்தியாவிலும் மைய நீரோட்ட முசுலீம்கள் அனைவரும் அஹமதியா முசுலீம்களைத் தமது பகைவர்களாகத்தான் பார்க்கின்றார்கள்.

ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய நபிகளையும், குரானையும் இன்றும் மாற்றமின்றி ஏற்க வேண்டும் என்ற மூடநம்பிக்கை முசுலீம்களிடம் வலுவாக இருக்கின்றது. அனால் நடைமுறையில் இந்த நம்பிக்கைகளைக் கள்ளத்தனமாகவோ, பணக்காரனுக்காகவோ இவர்கள் மீறத்தான் செய்கின்றார்கள். இறுதியில் கடுமையான ஒழுக்கத்தின்பாற்பட்ட மதம் என்பது ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்துக்கும் மட்டுமே ஓதப்படுகின்றது. மேலும் இசுலாமியப் பெண்கள் ஏதாவது சில சுதந்திரமாகத் தமது கருத்துக்களைத் தெரிவித்தால் மறுகணமே அவர்கள் மீது பாய்ந்து குதறுவதற்கும் தயாராக இருப்பார்கள் இசுலாமிய வெறியர்கள்.

இசுலாமிய மாற்றுப் பிரிவு ஒன்றினைச் சேர்ந்த பெண்ணின் உடலை புதைத்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்த மதவெறியர்கள், அதைத் தோண்டியெடுத்து அனுப்பியிருக்கின்றார்கள் என்றால் அவர்களது கொலைவெறி மற்றும் மதவெறியை எவரும் புரிந்து கொள்ளலாம். அதுவும் அரசின் தலைமைக் காஜியே இந்தப் பாதகச் செயலுக்கு உத்திரவிட்டிருப்பதால் மற்ற வெறியர்களின் நிலைமையைத் தனியாக விளக்க வேண்டியதில்லை.

இசுலாமிய அடிப்படைவாதம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு இந்தியாவில் பலமாக இல்லை. ஏனென்றால் இங்கே அது சிறுபான்மையினரின் மதம். மற்றபடி இந்து மதவெறியர்களுக்கும், இசுலாமிய மதவெறியர்களுக்கும் மதம் என்ற அளவில் பெரிய வேறுபாடில்லை.

நோய் வந்து இறந்த ஒரு பெண்ணை தமது மதத்தின் மாற்றுப் பிரிவினைச் சேர்ந்தவள் என்பதற்காகவே சகிக்க முடியவில்லை என்றால், இந்த முசுலீம் ஜமா அத்துகள் மற்ற விசயங்களில் எவ்வளவு வக்கிரத்தோடு நடந்து கொள்ளும் என்பதை யூகித்துக் கொள்ளலாம். முக்கியமாக வரதட்சிணைக் கொடுமை வழியே பல ஆண்கள் தமது மனைவிகளைச் சுலபமாக விவாகரத்து செய்வதை இந்த ஜமா அத்துகள் சுலபமாக நிறைவேற்றுகின்றன. இதில் மட்டும் ஆணாதிக்கத்தின் தயவு காரணமாக மதக் கோட்பாடுகளெல்லாம் வீதியில் தூக்கி வீசப்படுகின்றன. எப்போதுமே வறியவர்களுக்கும், எளியவர்களுக்கும் மட்டும்தான் விதிக்கப்பட்டிருக்கின்றன போலும் மதக் கட்டுப்பாடுகள்.

இப்படிப் பெண்களையும், ஏழைகளையும் ஒடுக்கும் இசுலாமிய மதவெறியர்கள் சற்றே மேலோட்டமான சீர்திருத்தம் பேசும் அஹமதியாக்களை முழுமையாக வெறுப்பதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றது. அதன்படி நாளையே இவர்களது அதிகாரங்களும், வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் செல்லுபடியாகாமல் போய் விடுமோ என்ற அச்சம் காரணமாக அஹமதியாக்களை துரோகிகள் போலச் சித்தரிக்கின்றார்கள்.

சமீபத்தில் தலித் சீக்கியர்கள் நிகழ்த்திய கலவரத்தைப் பார்த்தோமேயானால் அவர்களது சீக்கியக் குருக்களை ஆதிக்கசாதியின் சீக்கியக் குருக்கள் மதம் என்ற பெயராலேயே நிராகரித்தனர். இந்த ஆதிக்கசாதி வெறியர்கள், நாடு கடந்தும் தங்களது குருக்களைக் கொன்றதாலேயே பஞ்சாபில் பெரும் கலவரம் நடந்தது.

இசுலாத்திலும் இப்படி மதரீதீயாக ஒடுக்கப்படும் பெண்களும், ஏழைகளும், அஹமதியாக்களும் ஒன்று சேர்ந்து மதவெறியர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டி போர்க்குணமிக்க முறையில் போராட்டங்களைத் துவக்க வேண்டும். அப்போதுதான் இசுலாமிய வெறியர்களை மக்கள் அரங்கில் வைத்துத் தண்டிக்க முடியும். மதத்தின் உள்ளேயே மாற்றுப் பிரிவினைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாதென்றால், அது என்ன வெங்காய மதம்?

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு -2009

புதிய கலாச்சாரம் ஆகஸ்டு  2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

   • Hello Brother,
    You know about islam? If you don’t know ask somebody or find search engine or read QURAN PROPERLY then you can command about islam.
    Islam is straight and scientifically proofed.
    You said in islam have is lot of correction so you don’t know about islam .
    MOHAMMED is prophet only QURAN is give from “ALLAH” there is correction QURAN is not written in human being its came from “ALLAH” . So don’t do stupid commands. FIRST READ QURAN PROPERLY

    Thanks

    • Hello Mr islam

     It has been proven already by every civilization and all the etnic cultures that islam is the only stupid things that make difference among human beings.If you want I will quote some of your quran verses.

     You are not only the nill for other concepts and also making fool others by simply forcing to accept your concept, which has been dis proven by scienctifically and moraly.One more thing, only according to islam , allah ,mohmmed, hadesh etc etc has been proposed.Nothing more than that.You must understand that hundreds of epics ,poems, moral stories has been written in my tamil culture before your islam., and all these morals like tirukural has been proven that our (tamil)cultural perspectives are for better than 500% of your quran.So mind your stupid words .

      • ||mr.lenin “”If you want I will quote some of your quran verses. “”” can u quote some verses of quran>>>????|| Mr. Mohamed Ziyad below are some Quran Verses…

       Islamic Tolerance!!!

       The below one is really a master piece!!!
       Slay the idolaters wherever you find them, and take them captives, and besiege them, and lie in wait for them in every ambush. (Koran 9:5)

       There is disgraceful punishment for the unbelievers. Koran 2:90

       Surely the unbelievers are your open enemy. [Koran 4:101]

       Surely Allah has prepared a disgraceful chastisement for the unbelievers. [Koran 4:102]

       Allah is an enemy to unbelievers. (Koran 2: 98)

       A Muslim may not be killed if he kills a non-Muslim (Al Bukhari Vol 9:50)

       Anyone who kills a believer intentionally will have his reward in hell, to remain there. God will be angry with him and curse him, and prepare awful torment for him. (Only applies to believers) Koran 4.92

       These all are just samples from Islamic verses – but if we go in depth it’s full of killing and intimating the non Islamic people, but still they call Islam is a peaceful religion…!!!

   • mr.Anonymous, இன்னமும் பிறைக் கணக்கை சரியென்று கூறுவது! எந்த வகையான நம்பிக்கை.

   •  அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்அபசகுனம் என்பது (எதிலாவது இருக்கமுடியும் என்றால்) பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில்தான் (இருக்கமுடியும்). இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.   இது எந்த வகையான நம்பிக்கை!  

 1. இந்து மதவெறியர்களுக்கும், இசுலாமிய மதவெறியர்களுக்கும் மதம் என்ற அளவில் பெரிய வேறுபாடில்லை. நூற்றூக்கு நூறு உண்மை.
  அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் ஆயிரம் வருடத்திற்கு முன்பு கூறப்பட்ட குர்ஆனையும் ஹதீதையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும் எனக்கூறும் மூடர்கள். மாற்றுக்கருத்திற்கு இடங்கொடாதவர்கள். மாற்று மததினரை சகோதரர்கள் என்பார்கள். ஆனால் உள்ளுக்குள் காபிர்கள்,சைத்தான்கள் என கருதுவர்.
  இந்தியாவில் சிறுபான்மையனராக இருப்பதாலேயே இவர்களின் மதவெறி வெளித்தெரிவதில்லை. இந்தியாவில் சுன்னத்துல் ஜமாத் தனது சொத்தையும்,இருப்பையும் பாதுகாப்பதிலேயே குறியாக உள்ளது. இது இஸ்லாமிய மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்த கோழை அமைப்பு.

   • மதம் என்றால் என்ன? மார்க்கம் என்றால் என்ன? அதன் வரையறைகளை நீங்களே கூறுங்களேன்.

   • Hello Brother,
    “Madham” mean “Verry” ” Maarkam” mean “Vazhi” (follow).
    I have to ask you please put your original name don’t write acting name (acting like muslim)

   • Hi Mr.Sathik,ISLAM Not Tell Anything Like U R Saying,We Have To Obey Others Religion & Cultures,ISLAM Saying To Treat Others Like A Brothers & Sisters,May Be AHAMATHIA’s Try To Change Somthing In ISLAM But If U R Seeing Soudhi Arabia,Kuwait,UAE & Gulf Countrys Rullers They R Totaly Spoilling ISLAM’S,Daily They R Using Drugs,Womens,Music & Etc.,, No One Ask Any Question To Them,Oru Thavan Sethathuku Appurama Avan Inner Wear Ra Open Panni Check Pannu Nu THIRU KURAN La Engaium Sollala,

   • Mr. sathik,
    tell the correct definition of Matham (Religion). Dont escape from explain it. We know, most of the Islamic no no.. other thanthe Imam nothing kown about Islam. Their faith is blind

  • from your thought u r a sadist. ur aim is to attack muslim anyway. u don,t hav any right to taulk about quran and prophat. if u need go though quran and prophat word and analyse if u find any mistake in your mind then point out that matter.

   but u go through hindus history its no one can accept

   • மைதீன் அவர்களே, நீங்கள் பிறர் மதத்தை இழிவுபடுத்தலாம். ஆனால் பிறர் மட்டும் உன் மதத்தை குறைகூறவோ விமர்சிக்கவோ கூடாது. இதற்குப் பெயர்தான் மத வெறி.

  • dai un original name eluthuda muthala thairiyam illamal yeanda un karuthai sollra islam markathai patri vivaram therinthu illa i endral vivaram therintha varhalidam kelu apuram commend pannuda

   • என் ஒரிஜினல் பெயரே இஸ்லாமிய பெயர் தான் சகோதரா. . . .,எனக்கு நாம் சார்ந்துள்ள மதத்தில் எழுந்த சந்தேகத்தை தீர்ப்பீர்களா . சந்தேகம் ஓன்று . நம் சகாக்கள் கள்ள தொடர்புக்காக பெண்களை கொலை செய்கின்றனர் .அனால் எல்லா ஜாமத்திலும் வரதட்சணைக்கு கமிசன் வாங்கும் பழக்கம் உள்ளது . அதற்கு எதிராக நம்மை இது போல கிளர்த்து எழ செய்ய மறுப்பது எது . மதத்தில் புரைஒடிபோன ஆண் ஆதிக்க சிந்தனைய சொல்லவும் .சிந்திக்கவும் .

  • நீங்கள்  சொல்லுவது முற்றிலும் தவறு தயவுச் செய்து நீங்கள் முழுமையாக இஸ்த்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

  • muslim madha veriyargal nu sollura thambi ana ungaluku madham theva illa na vai alavula pesureenga unga jaathi certificate la hindu ……nu kuripidra un jaathi yaum podura….anga elutha vendiyathu thana naan jaathi,mathathai verupavan nu eluthu thambi naalaiku nee jail la irupa..unga veetu ladies pottu vaikama iruka thaali kattama iruka deepavali,pongal nu celebrate pannama irukeengala ungala maari aalu ellam thaani adichitu eluthama unmai yum elthungada,,,kadavul illa nu sollura neenga thaanda oru nalaiku athigama sollura vaarthai yae kadavul thaan da..unga oeriyar veetla yae saamy photo irukuthu en unga veetlayum etho oru moolaila saamy photo irukum…saamy illa nu sollura apparam un peruku pakkathila kandhaswamy,munu swamy,moonu thaalu swamy nu vaichu irukum swamy veriyargala ,first un sootha kaluvu athuku apparam oorula ulla sootha kaluvalam…………stalin

   • முதல்ல நீங்க‌ தண்ணீ அடிக்காம உன் மொகரையை நல்லா கழுவிட்டு பிறகு நிதானமா படிச்சுட்டு எழுதுங்க சார்.

  • oru aattai vanki abdullah endru peyar vaithaal .,adhu muslim aadu endraki vidadhu .,.,sillaraithanamana muslimkal indha ahmadiyakkal.,neenkal ondrai kavanikka vendum .kalima +marumai+thoodhar .,idahai nambinaalthaan origional muslim .,ippo puriyudha .,vinavu

 2. சுலாமிய மாற்றுப் பிரிவு ஒன்றினைச் சேர்ந்த பெண்ணின் உடலை புதைத்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்த மதவெறியர்கள், அதைத் தோண்டியெடுத்து…. https://www.vinavu.com/2009/08/24/ahmadiyya/trackback/

 3. வரலாற்று ரீதியாக இசுலாம் ஒரு முற்போக்கான மதம்தான். குறிப்பாக வாடிகானிடத்திலிருந்து அறிவியலை பாதுகாக்கும் வேலையை கூட ஒரு காலத்தில் செய்தது. கணிதம், வானியல், மருத்துவம் உள்ளிட்ட பல அறிவியல் துறைகளில் இசுலாமிய அறிஞர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அய்ரோப்பாவின் ஜனநாயகம்/அறிவியல் வளர்ச்சியில் ்மூர் மன்னர்களின் ஆட்சிக்காலம் குறிப்பிடத்தக்கது..

  நிற்க

  இதற்கு நேர் எதிராக இன்று இசுலாம் சீர் இழந்து பிற்போக்கானதாக மாறிப்போய்விட்டது என்ற உண்மையை உணர்ந்து அதற்க்கெதிராக பிரச்சாரம் செய்வதும், போராடுவதும் உலக பாட்டாளி வர்க்க கடமைகளுள் ஒன்று.

  ஒவ்வொரு மதமும் தான் செல்வாக்காக இருக்கும் இடங்களில் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கே பயன்படுகிறது.

  • உங்கள் வார்த்தையை திருத்தி கொள்ளுங்கள்
   //இதற்கு நேர் எதிராக இன்று இசுலாம் சீர் இழந்து பிற்போக்கானதாக மாறிப்போய்விட்ட//
   இஸ்லாம் சீர் இழக்கவில்லை. சீர் இழக்காது . ஒரு சில இஸ்லாமியர்கள் சீர் கெட்டு விட்டனர்.

   • அதேமாதிரிதான் கம்யூனிசம் சீர் இழ்க்கவில்லை. ஒரு சில கம்யூனிஸ்டுகள் சீர்கெட்டுவிட்டனர்

   • குரானை முதலில் நீங்கள் சரியாக படித்ததுண்டா . கரணம் இங்கே ஒவொரு குரானிலும் ஒவொரு விளக்கம் தரப்படிகிறது . உதரணமாக கித்தால் என்ற வார்த்தைக்கு மூன்று வித விளக்கம் நீங்கள் கேள்விப்படலாம் . நீங்கள் கேட்டிருபீர்களா என்று தெரியவில்லை . இது ஒரு சாம்பிள் தான் இது போல எராளமாக உள்ளது. இந்த எதிர்ப்பு கூட அதமதிய போன்ற சிறு பன்மைய்னர் மீது தானே தவிர .மற்ற அமைப்புகளுக்கு இல்லை உதாரணம் தவ்கீத் ஜமாஅத் தா மு மு க அழ உம்மா போன்ற மற்று சிந்தனையை ஏன் எதிர்ப்பதில்லை /a

  • உங்கள் கருத்து தவறு.இசுலாமிய அடிப்படை வாதத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளால் தான் பலபிரிகள் தோன்றியதும் பிரிவுற்றவர்களே தர்க்கவியலிலும் அறியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதிலும் முன்னனியில் இருந்தனர். சன்னி முஸ்லீம்கள் குர்ஆனையே தமக்காகன முழுநிறைவான கல்வியாகவும் அறிவியலாகவும் கருதினர். உலக முழுவதுமே வருடத்திற்கு 365 1/4 நாட்களாக (கலிலியோவைப்) பின்பற்றினாலும் குறைபாடுள்ள சந்திரக்கணக்கை இன்று வரை பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதே ஒரு எடுத்துக்காட்டாகும்.

 4. islam is based on pure faith on God Almighty. If anyone doesnt follow or doesnt believe His Book ( Holy Quran ) or His Messengers ( Prophet Mohammed PBUH and other prophets mentioned in Quran and Hadeedh ) will be out of this Religion. Hence this sect of people, when they doesnt believe or accept Prophet Mohammed PBUH was the final messenger, are naturally out of Islam. So, they should be treated as Non Muslim ( Muslim means True Believers ) Thats why the body was taken out and burried some other place. We always treat all ( muslims and non muslims ) as brothers and sisters as humans. But when it comes the believe, we accept only those who has true faith in GOD and His guidance.

 5. who write this article. completely wrong articles.islam, there is no dividing parts this lady mouth problem. if it is true I do not belive it.u find & check write again true. islam is not madham.it is guidness for all people.theer is no,sunnath,ahamadia&etc.

  thanks.abu abudhabi

 6. ரஷ்ய தோழர்களை செருப்பால் அடித்து துரத்திய மதவெறியர்கள் , சீனாவில் அடங்காமல் திரியும் மடவெறியர்கள் , அவர்களை என்ன செய்யலாம் தோழர் ?

 7. mr editor ur pool person i know very well abt u and ur artical>u thugt u only best person all over world.otherwise alperson pool?????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!mr pool vinau first u read quran and history of islam wth prohpert mohamed after u says abt islam and write that.if i know tamil type i will use unrespect words againts u.mr poolvinu.u read quran wthout any think any calculation ok pool pool vinau

  • இஸ்லாமியர்கள் மற்ற மதங்களை பற்றி விமர்சிக்கும்போது ஜாலியாக பேசுவார்கள். அவர்களின் மதத்தை பற்றி பேசினால் உடனே கோபம் வந்துவிடும்.

   • Hello Brother,
    We are not angry. You don’t know about islam. Islam means PEACE. First you have to read “QURAN & HADEES” properly then ask question i will answer you.

   • we are not angry, but we exactly know you are not muslim, so why you need to show your name as a mulsim. anyhow if you can just find a one sentence in the Quran whihc is not suitable for this world. that would be very useful for us to give up/ accept another concept..

 8. வினவு. உங்களுக்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது அப்படி என்ன காழ்புணர்ச்சி. எதற்காக இந்த பதிவை பதிவு செய்திர்கள். உங்கள் மத வெறியை காட்டி விட்டிர்கள்.

  // ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய நபிகளையும், குரானையும் இன்றும் மாற்றமின்றி ஏற்க வேண்டும் என்ற மூடநம்பிக்கை முசுலீம்களிடம் வலுவாக இருக்கின்றது// இது மூட நம்பிக்கை அல்ல. இது தான் உண்மை மற்றும் உண்மையான நம்பிக்கை. Muslims and Islaam is seem to be Aliens and Aliens Religion until you peoples(non believers) understand what islaam is and what Quran is.
  உண்மையான முஸ்லிம்கள் எப்போதும் பிற மதங்களை இழிவு படுத்தியது கிடையாது.
  ஆனால் பிற மதத்தினர் முஸ்லிம்களையும் இஸ்லாமையும் இழிவு படுத்துவது வேடிக்கையாக உள்ளது. இல்லை வேதனையாக உள்ளது.

  • அன்புள்ள நிஜாம்,

   முஸ்லிம்கள் மற்ற மதத்தினரைக் கேலி செய்வதில்லையா..?

   நாள்தோறும் இந்து மதத்தைக் கேலி செய்து தி.மு.க மேடைகளில் பாடியவர் நாகூர் ஹனீபா.
   இது பற்றிய மேல் விவரங்களை திரு.சுப்பு எழுதும் போகப்போகத் தெரியும்
   பத்தியைப் பார்க்கவும்..

   http://www.tamilhindu.com/2009/09/subbu-column-33/

   வெங்கடராமன்.

   • dear friends,
    naggor aniba was wrong. let us not justify it. i have been reading vinavu, this article and comments regularly. i have also seen poga poga theriyum by subbu in http://www.tamilhindu.com.subbu has not written a word against islam . his objection is only to the muslims who use dmk platform to attack hinduism. it is not fair to attack subbu for his pro hindu views.
    i am thrilled to read liyakhat`s writing about the incident in prophet muhammad`s life. he stood up when the body of a dead jew passed by.
    p.a.sheik dawood writes about the magnanimity of the nagoor muslims in allowing the bodies of non-hindus to be buried in the muslim burial ground. such incidents should be publicised.
    ashiq`s explanation about the `killing of kafirs` is a revelation.i would request him to quote the verse in the holy quran indicating the number of the verse.
    i pray for peace among all human beings.
    yours
    pandian

  • மிக நல்லது. அதேபோல் உண்மையான இந்துக்களும், கம்யுனிச்டுக்களும் பிற மதங்களைப்பற்றி தவறாகப் பேசமாட்டார்கள். முஸ்லிம்கள் எதற்கெடுத்தாலும் குரானைப் படி படி என்கிறீர்களே? நீங்கள் எப்போதாவது அர்த்தமுள்ள இந்துமதம், வேதங்கள் படித்ததுண்டா? சொல்லுங்கள்?

 9. குர்ஆனில் இறைவன் சொல்லப்பட்டதாக ஒரு வசனம்,”உலகம் அழியும் வரையில் இக்குர்ஆனை நாமே(அல்லா) பாதுகாப்போம்(எந்த எழுத்துப்பிழையுமின்றி).” இவ்வாறு இறைவனால் பாதுகாப்புக் கொடுக்கப்பட்ட குரானில் எப்படி திருத்தம் செய்ய முடியும். மேலும் குர்ஆனின் வசனங்களுக்கு ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் வேறு வேறு விளக்கங்கள் தருகின்றனர். அறிவியலின் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றுகின்றனர். இவ்வாறு மாற்றுவது கூட திருத்தம்தானே. இல்லை ஒருவேளை அல்லாவிற்கு அரபி மட்டும்தான் தெரியுமோ! அரபியில் மட்டும்தான் பாதுகாப்பாரோ! பார்ப்பனக் கடவுள்களுக்கு சமஸ்கிருதம் மட்டுமே புரிவது போல.

  • ஆம் தோழரே திரு குரல் குரானுக்கு முந்தியே வந்தது அதுவும் பாதுகாக படுதே . அப்போ அதுவும் இறை வேதமோ

 10. இசுலாமிய நண்பர்களே,

  இந்த இடுகைக்காக வினவின் பக்கம் வந்ததற்கு நன்றி. வினவில் இந்து மதவெறியை அம்பலப்படுத்தி பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம். அந்த நேர்மையில்தான் இக்கட்டுரையும் வெளியிடப்பட்டிருக்கிறது. இங்கே அஹமதியாக்கள் தங்களை முசுலீம்கள் என்றே கருதுகின்றனர். நீங்கள் மறுக்கிறீர்கள். அதற்காக புதைத்த பிணத்தைக்கூட தோண்டி எடுத்து அப்புறப்படுத்தியது என்ன நியாயம்? அதற்கு பதிலளிக்காமல் குரான் படித்தீர்களா என்றெல்லாம் பத்தாம் பசலித்தனமாக கேட்பது ஏன்?

  • வினவு . நீங்கள் abdul kader உடைய பின்னுட்டத்தை படிக்க வில்லையா . அது தான் பதில்.

   Peoples who doesnt accept Allah, His Messangers, His Malaks and his Quran all together are non- muslims. Ahmadia’s doesnt accept Muhammed(PBUH). Thats why they are non-muslims. They can say they are muslims, but the truth is they are non-muslims.

   • Islam means Jihad, killing the innnocent, subressing the women ie. only we are seeing nothing else, they never tollorate any critisim but they will say every thing other than islam is is wrong and they expect others to keep quiet.

   • Mr Ramkumar.
    எங்க இருந்து எல்லாரும் இப்படி கிளம்பி வறிங்க ?? U peoples only know what Medias are portraying about Islaam. and Never want to understand..
    உங்கள எல்லாம் எங்களால திருத்தவும் முடியாது..

  • I understood that u don’t know anything about Islam. U don’t need to read quran for publishing a news. but you should know something about the religion before you write about it. Islam is not started in 5th century. Muhammad is a last messenger who made an Islamic revolution in the world as the people were missed their right path which was shown by previous prophets. Allah says in quran he sent more than 1,30,000 prophets from the starting of this world. Prophet muhammed had stand up from sitting position when a dead body of a jew taken across them. One of a shahaba come near to prophet muhammed and said its a jew’s dead body. Prophet replied to him that we should stand up whenever a dead body cross across us whoever they may be(whether muslim or non muslim). that is Islam preches. Dont see islam through the muslim who doesn’t know about islam and follow a man who guide then right way or wrong way. Those people who follows quran & Hadhees are correct muslims and they wont behave like you mensioned above. I suggest you to visit http://www.irf.net, http://www.onlinepj.com, http://www.jaqh.org, which will teach you something about islam if you wish. May allah will so you the right path soon. Insha Allah. I apologise to you if my writing hurted you in anyway.
   Thanking you.

 11. அஹமதியக்கள் இஸ்லாமியர்கள் அல்ல. அவர்களின் கொள்கைகள் இஸ்லாத்துக்கு முரண்பட்டவை. இஸ்லாமியர்களை பிரித்தாளுவதற்கான ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிதான் இந்த அஹமதியாக்கள். இஸ்லாமை பற்றி எதுவும் தெரியாத ஒருவர் எழுதி இருக்கும் கருத்து இது. உலகின் எந்த இஸ்லாமிய நாடும் அஹமதியக்களை முஸ்லிம்களாக அங்கிகரிக்கவில்லை .

 12. மேலும் இஸ்லாமியர் அல்லாதவர்களை இஸ்லாமிய இடுகாட்டில் அடக்கம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

  • சுனாமி வந்தபோது பல இடங்களில் பிணங்களை மொத்தமாக புல்டோசரில் அள்ளி புதைத்தனர். அதுவும் இசுலாத்திற்கு விரோதமானதுதானே? சுடுகாட்டில் கூட மற்ற மதங்களுக்கு இடமில்லை என்றால் நண்பரே உங்கள் மதத்தின் மனிதாபிமான யோக்கியதை நன்றாக தெரிகிறது.

 13. ஒருவன் முஸ்லீமாக இருக்க என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும். கொஞ்சம் விளக்குங்களேன்.

  • பூம்….பூம்….மாடாகயிரு மீரினால் சொர்க்கத்தின்கதவு மூடப்படும் பஞ்சையாக பக்கிரியாக கஞ்சிக்கில்லாமல்சாகு எதியோபியா சோமாலியாபோல|| மறுமையில் 3வேலை கஞ்சினிச்சயம்.இதுதான்வழி{மர்க்கம்} மதம்? யானைக்குவருமே அது.

 14. நண்பர் நிஜாம் அவர்களே, முதலில் நீங்கள் குர்ஆனை நன்றாக படியுங்கள். யூதர்களைப் பற்றி 100 சதவீதம் முட்டாள்கள்,துரோகிகள்,மூடர்கள் என்றே எழுதப்பட்டுள்ளது.
  இங்கு மறுமொழி எழுதும் இஸ்லாமிய நண்பர்கள் குர்ஆனை படித்திருக்கிறார்களா?
  எனது உண்மையான பெயரே அஸ்கர் தான்

  • Brother Askar, Well, u studied Quran. Allah Almighty only saying Jews are Kafirs and so and so, through Quran, that we are accepting Allah has the all right to say this but Men are not. Quran also says “dont irritate other religions”. “Lakum deenukum valiya deen”. why dont u mention this.

   • “Lakum deenukum valiya deen”. ”. இந்த ஒரு வாக்கியம் மட்டுமே மற்றவரை ஏமாற்ற நீங்கள் பயன்படுத்த தோதானது. குர்ஆனில் யூதர்களைப் பற்றிய வசனங்களையும் விளக்குங்களேன்.

   • உண்மையான முஸ்லீமுக்கு என்னென்ன பண்புகள் வேண்டும்? கூறுங்கள். எத்தனை நபர்கள் தேறுகிறீர்கள் பார்ப்போம்.

   • நிஸாம்,
    “lakkum dheenukkum valiya dheen”என்ற வசனம் எதற்கு எந்த காலச்சூழ்நிலையில் கூறப்பட்டது என்பதை கொஞ்சம் படித்து பாருங்களேன்.பிறகு
    நான் கூறிய இன்னும் “அவன் உறுதியான மலைகளை அவர்களை(மனிதர்களை)க் கொண்டு அது ஆடாமலிருப்பதற்காக நாம் அமைத்தோம்”. என்ற வசனத்திற்கு என்ன விளக்கம். நீங்கள் தீனை டீன் டீன் என எழுதியுள்ளீர்கள். பார்த்து எழுதுங்கள் அரபியில் டீனுக்கு வேறு அர்த்தம் இருக்கப்போகிறது. அப்புறம் …ரகம் தான்.
    மேலும் நான் கூறிய குரான் வசனங்களுக்கு எனது சொந்த கருத்தை எதையும் கூறவில்லை. மொழ்பெயர்ப்பாளர்களின் பெயரை குறிப்பிட்டுள்ளேன். தவறிருந்தால் அவர்களுக்கு பத்வா கொடுக்கவும். அவர்கள் எழுதிய குரானை தடை செய்யவும்.

   • இலக்கும் தீனுக்கும் வலியதீன், இந்த வரிகள் முகம்மது நபியை குறைஷிகள் சமூகப் ழுறக்கணிப்புச் செய்து ஊரைவிட்டு தள்ளி வைத்து உணவு தண்ணி எதுவும் பெற முடியாமல் தடுத்துவிட் நிலையில் முகம்மது நபியின் பாட்டனார் மனம் சகிக்காது குறைஷிகளிடம் சமாதானம் போசியபோது குறைஷிகள் “எங்கள் கடவுளை முகம்மது ஆறுமாதம் வணங்கட்டும், நாங்கள் அல்லாவை ஆறுமாதம் வணங்குகிறோம்” என்ற கோரிக்யை வைத்தபோது முக்கது நபி கூறிய சொற்றொடர். உங்கள் மதம் உங்களுக்கு எனது மதம் எங்களுக்கு என்பது இதன் பொருள். ஆனால் இதைன முகம்மது தான் அரசியல் ரீதியாக பலமடைந்தபோது தானே தன் அறிவுறையை மீறி மக்கா மற்றும் அதன் சுற்று புறமுள்ள ஊர்களிலும் உள்ள தெய்வச்சிலைகளையும் உருவ வழிபாட்டினரையும் அடித்து நொறுக்கியதே வரலாறு. அதிகார பலம் கிடைத்ததும் இலக்கும் தீனுக்கும் காலில் போட்டு மிக்கப்பட்டுவிட்டது,

 15. வினவு,
  உங்களுக்கு இது தேவையா?
  வந்தோமா, ஹிந்துக்களை திட்டிநோமா, ஏதாவது ஆபாசமா எழுதினோமா ன்னு இல்லாமல் எதுக்கு இப்படி முஸ்லிம் பத்தி எழுதறீங்க?

  அடுத்த முறை ஸ்ரேயாவுக்கும் ஸ்னேஹாவிற்கும் ஆறு வித்தியாசங்கள் பற்றி கட்டுரையை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.

   • ஒரு ஆர் எஸ் எஸ் காரனுக்கும் இஸ்லாமியனுக்கும் கருத்து ஒற்றுமை சபாஷ் இதில் தெரிகிறது மதங்களின் உண்மை முகம் ……………………………………………………………..

  • சினேகா விற்கும் நமிதவிற்கும் உள்ள வித்யாசம் வினாவை விட சங்கரச்சரியும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருமே அறிவர் 

   • முஹம்மத் அவர்களே ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் குருஜி பத்தி உங்களுக்கு எதாவது தெரியுமா தேவை இல்லாமல் எதுக்கு அவர்களை வம்ம்புக்கு இழுக்ரீர்கள் ஜெய் குரு தேவ்

 16. அடக்கம் செய்த பொணத்த தோண்டி வேறு இடத்துல புதைக்கிற அளவுக்குத்தான் மனிதாபிமானம் இருக்கு போலிருக்கு. இதுக்கும் மற்ற மதத்துல உள்ள ஜாதி வெறிக்கும் ரொம்ப பெரிய வித்தியாசமில்லை.

  அந்த பச்ச அட்ட போட்ட புத்தகத்த வச்சுக்கிட்டு இவங்க பண்ற ரவுசு தாங்க முடியலப்பா

  மொத்தத்தில் ஆயிரம் பெரியார் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது.

 17. இந்தியாவில் மட்டும் அல்ல உலகிலேயே அதிக இஸ்லாமிய மக்கள் இருக்கும் இந்தோனேசியாவிலும் “தீவிர” முஸ்லீம்களின் வன்முறைகள் அஹ்மதியா முஸ்லீம்களின் மேல் ஏவப்பட்டு உள்ளன… அவர்களின் மசூதிகள் எரிக்கப்பட்டு உள்ளன, அஹ்மதியா முஸ்லீம்கள் நகரத்தை விட்டு வெளியேற சொல்லி வற்புறுத்தப் பட்டு உள்ளனர்…
  மதவாதிகள் என்னதான் மதம் மனிதனை மேம்படுத்தும் என கூறினாலும், இல்லவே இல்லாத கடவுளுக்காக மனிதத்தை காவு கொண்ட பின்தான் மதம் உறங்கும் போல தெரிகிறது…

  வேதனை.. வெட்கக்கேடு…

 18. சகோதரர்களே , இஸ்லாத்தை பற்றி தெரியாமல் , சிற்றறிவில் பேசாதீர்கள் , முதலில் உலகத்தில் அனைவரையும் சகோதர்களாக ஏற்ற தாழ் வின்றி சமமாக பார்க்கும் மார்க்கம் இஸ்லாம்..ஆண்டியும் அரசனும் பேதமில்லாமல் தொழுதிடும் தலமே பள்ளி வாசல் . மற்ற மதத்தினர் போல் செய்யும் தொழிலை மய்யமாக வைத்து பாகு படுத்தி இவன் தீண்ட தகாதவன் என்று இஸ்லாத்தில் யாரையும் ஒதுக்கு வதில்லை .

  • //ஆண்டியும் அரசனும் பேதமில்லாமல் தொழுதிடும் தலமே பள்ளி வாசல் .//
   பிணத்திற்கு மட்டுமே தனி வாசல்
   இது தான் நீதி !
   மனு நீதி!!

 19. இந்த கால கட்டத்தில் மிகவும் கவணிக்க பட வேண்டிய விசயங்கள்
  மணித மிருகங்கள் என்னத்தை ஓதி கிலித்தார்கள் ஒழுக்கமற்றவ்ர்கள்
  இவர்களை போல் உள்ளவர்களை திருத்துவதற்க்கு 100 நபிகள் வந்தாலும் முடியாது

 20. வினவு. உங்களுக்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது அப்படி என்ன காழ்புணர்ச்சி. எதற்காக இந்த பதிவை பதிவு செய்திர்கள். உங்கள் மத வெறியை காட்டி விட்டிர்கள்.

  // ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய நபிகளையும், குரானையும் இன்றும் மாற்றமின்றி ஏற்க வேண்டும் என்ற மூடநம்பிக்கை முசுலீம்களிடம் வலுவாக இருக்கின்றது// இது மூட நம்பிக்கை அல்ல. இது தான் உண்மை மற்றும் உண்மையான நம்பிக்கை. Muslims and Islaam is seem to be Aliens and Aliens Religion until you peoples(non believers) understand what islaam is and what Quran is.
  உண்மையான முஸ்லிம்கள் எப்போதும் பிற மதங்களை இழிவு படுத்தியது கிடையாது.
  ஆனால் பிற மதத்தினர் முஸ்லிம்களையும் இஸ்லாமையும் இழிவு படுத்துவது வேடிக்கையாக உள்ளது. இல்லை வேதனையாக உள்ளது.

  • சுய விமர்சனம் தேவை,
   ஒருவர் மற்ற மதத்தை விமர்சனம் செய்யும் போது ஆர்ப்பரிப்பதும் , ஒப்புக்கொள்வது மட்டுமல்ல, அந்த விமர்சனத்திற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பதே கேள்வி. இந்துவை விமர்சனம் செய்ய 4 வேதங்களை படிக்க வேண்டும் , முசுலீமுக்கு குரானை படிக்கவேண்டும் ,கிறித்துவத்தை விமர்சிக்க பைபிளை படிக்க வேண்டும் என கூறும் நல்லுலகச்சான்றோரே.
   ஏன் முசுலீம் மதத்தில் குரான் சொன்னபடி நடக்காதவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். பள்ளப்பட்டியில் வட்டிக்குவிடும் முசுலீம்களுக்கு தனி வழிபாட்டிடம் உள்ளதை மறுக்க முடியுமா? முதலில் நீங்கள் உங்கள் மதத்துக்கு நியாயமாக நடக்கிறீர்களா என்ன?
   ஆம் எனில் கந்து வட்டி விடும் எத்தனை பேரை தண்டித்தீர்கள்? பிணத்தை தோண்டிய உன்னால் உன் மனதை தோண்ட முடிகிறதா? முடியவில்லையா அதுதான் மதத்தின் அவலம்.தன் மதத்தை பற்றி யாராவது சொன்னால் வரிந்து கட்டிக்கொண்டு வரும் வள்ளல்களே என் கேள்விக்கு பதில் சொல்வீர்களா?

   தொடங்குங்கள் எமது தோழர்கள் முடித்து வைப்பார்கள், மாற்ற்த்துக்கு நீங்கள் தயாரா?

   கலகம்

   • இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் . ஆனால் அதில் இருப்போர் அனைவரும் இனியவாராக இருக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம்.
    இஸ்லாத்தில் பலர் இனியவர்கள் ஆனால் சில கருப்பு ஆடுகளும் உண்டு .
    வட்டி , வரதட்சனை வாங்காதே என்று கூற தான் முடியும் . அவர்கள் பின்னால் சென்று கண்காணிப்பது இயலாத காரியம் . தேவை இல்லாத ஒன்று . அவர்கள் பாடு அவர்களோடு. உணர்ச்சி வச பட்டு எழுதாமல் நடை முறைக்கு சாத்திய மனதை கேட்கவும் ? முதலில் வினவு மட்டும் தான் என்று நினைத்தேன் தற்போது கழகமும் சேர்ந்து கொண்டது. அடுத்து எந்த பதிவாளர் வரபோகிறார் ??

   • // சுய விமர்சனம் தேவை,
    ஒருவர் மற்ற மதத்தை விமர்சனம் செய்யும் போது ஆர்ப்பரிப்பதும் , ஒப்புக்கொள்வது மட்டுமல்ல, அந்த விமர்சனத்திற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பதே கேள்வி. இந்துவை விமர்சனம் செய்ய 4 வேதங்களை படிக்க வேண்டும் , முசுலீமுக்கு குரானை படிக்கவேண்டும் ,கிறித்துவத்தை விமர்சிக்க பைபிளை படிக்க வேண்டும் என கூறும் நல்லுலகச்சான்றோரே. //
    இதை படித்தபோது சிரிப்பு வந்துவிட்டது. வினவு கூட இதற்கு விலக்கில்லையே? கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசம் ஏன் தோற்றது என்ற கேள்வி எழுந்தபோது கம்யூனிசத்தை யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கிறார்கள், அதை நன்கு படித்த நிபுணர்களுக்கே சிக்கலான கேள்வி இது, இரண்டு வருஷமாவது கட்சியில் சேர்ந்து பணி புரிந்தால்தான் கொஞ்சமாவது புரியும் என்ற பதில் நினைவிருக்கலாம். 🙂

    • ஆர்.வி,
     நடப்பு வாழ்க்கைப்பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதற்கு நடப்பு வாழ்க்கையின் சரி,தவறிலிருந்து பார்த்தாலே போதுமானது. அப்படி ஒரு விதியை அமல்படுத்தினால் தவிர்க்க இயலாமல் அது கம்யூனிசத்தை அறிந்து கொள்வதில்தான் நிற்கும். கேரளாவில் “நிங்கள் என்னை கம்யூனிஸ்டு ஆக்கி” என்றொரு புகழ் பெற்ற நாடகம் இதை தெளிவாக விளக்கும். அடுத்து கம்யூனிசத்தின் மீதான தவறுகளெல்லாம் ஆர்வியின் மண்டைக்குள் தானாக உதித்த்தில்லை. அது டன் கணக்கில் முதலாளித்துவ அவதூறுகளின் பாதிப்பில் எழுந்தவை. இதை நேர்மறையில் புரிய வைப்பதற்காகவே கம்யூனிசத்தை படியுங்கள் என்றோம். நல்லது நீங்கள் கம்யூனிசத்தை படிக்கவேண்டியதில்லை. ஆனால் இந்த வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு எது என்று உங்கள் சொந்த ஆய்வைமுன்வையுங்களேன்? அதை தராளமாக விவதிப்போமே! அதே போல இசுலாம் பெண்களின் பிரச்சினைகளுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருந்தே தீர்வு தேடப்படவேண்டும். அதை விடுத்து குர்ஆனிலும், ஹதீசிலும் விளக்கம் தேடுவது அந்த பெண்ணை கொடுமை செய்வதிலேயே முடியும். இந்த உலகின் வாழ்க்கைப் பிரச்சினைகளை நாங்கள் மார்க்ஸின் பத்தகங்களிலிருந்து கண்டுபிடித்து தீர்வுகள் தேடுவது கிடையாது. மார்க்சியம் சமூகத்தை ஆய்வு செய்வதற்கான அறிவியல். அந்த அறியவியலை சரியாக பயன்படுத்தும்போது சரியான தீர்வுகளை வந்தடைய முடியும். இதைத் தாண்டி இந்த உலகில் முதலாளித்துவத்தின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகள் எதுவும் சொல்லப்பட்டதில்லை. ஒருவேளை ஆர்.வி வேண்டுமானல் முயற்சிக்கலாம்.

   • mr kalagam.pallapatti yil vattiku vidum muslimkaluku thani valipaatidam ullathu ena ean poyyai ealuthuhirai?Thodangi vitten un tholargalai mudithu vaikka anuppi vai .

 21. இன்னும் எத்தனை தமிழக தெருக்களின் வழியாக அரிஜன மக்களின் பிணம் கொண்டு செல்ல தடை உள்ளது தெரியுமா, அதை பற்றி எப்போதாவது கருத்து சொல்லி இருக்கிறீரா Mr. So Called Psedo Secularist Vinavu.

 22. வணக்கம்.மாறி மாறி காரி துப்பி கொள்கிறார்கள்.குடை பிடிக்காமல் உங்கள் பதிவினூடே வலம் வர முடியாத அளவுக்கு,சுனாமி ஏற்பட்டபோது நாகூரில் சகோதர ஹிந்துக்களின் பிணங்கள் முஸ்லீம்களின் அடக்கஸ்தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது உங்களுக்கு தெரியும்தானே? ஆனாலும் இப்போது நடந்தது கொஞ்சம் ஓவர்தான்.நீங்கள் இன்னொரு விடயத்தையும் யோசிக்க வேண்டும்.எப்போது தங்கள் கொள்கைகளுக்கும் இதர பெருவாரி முஸ்லீம்களின் கொள்கைகளுக்கும் வேறுபாடு என்று தெரிந்ததோ அப்போதே தங்களுக்கு என்று அடக்கத்தலத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டியதுதானே? ஆனால் இதுபோலெல்லாம் நடக்கவேண்டும் என்பது ஏன் அவர்களின் உள்நோக்கமாக இருக்ககூடாது? சாதாரண மனிதர்கள் நெறி பிறழ்வதற்கு மதங்கள் என்ன சார் செய்யும்? பாவம்.அதை விட்டு விடுவோம்.

 23. அன்புள்ள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,
  மதங்களிலேயே மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மதம் இஸ்லாம் தான் என்பது இங்கு பின்னூட்டமிடும் மாற்று மதத்தினரின் கருத்துக்களை வைத்து மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது. ஒரு நிகழ்வைப் பற்றி கருத்து சொல்வதென்றால் அதைப் பற்றிய முழுமையான செய்திகளை தொகுத்து கொண்டு கருத்து வெளியிடல் வேண்டும். தான்தோன்றித்தனமாக கருத்துக்களை வெளியிடுவது என்பது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்காது. இஸ்லாமியர்களுக்கு சொந்தமான ஒரு சுடுகாட்டில் புதைத்த அஹமதிய மதத்தை சார்ந்த ஒரு பெண்மணியின் உடலை இஸ்லாமியர்கள் தோண்டி எடுத்து கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்து விட்டார்கள். எனவே இவர்கள் இஸ்லாமிய மத வெறியர்கள் என்பது வினவின் (அதாவது ம.க.இ.க தோழர்களின் ) வாதம். முஸ்லிம்கள் குறித்த ஒரு செய்தி என்றால் அதைப்பற்றிய பத்து சதவிகித உண்மையை கூட அறிந்து கொள்ளாமல் செய்தி வெளியிடும் ஊடகங்களின் மத்தியில் வினவு ஒன்றும் விதிவிலக்கில்லை என்பது இந்த கட்டுரையின் மூலம் இன்னும் தெளிவாகிறது.

  தங்களுக்கு சொந்தமான சுடுகாட்டில் வேறொருவரின் பிணத்தைக் கூட இவர்கள் புதைக்க விட மாட்டார்கள். அந்தளவுக்கு இஸ்லாமியர்கள் மதவெறியர்கள் என்ற ஒரு கருத்தையும் இக்கட்டுரை முன்வைக்கிறது. ஆனால் உண்மையோ வேறு விதமாக இருக்கிறது. தூய இஸ்லாத்தை பொறுத்தவரை ஒருவர் இறந்து விட்டால் அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அதற்கு உரிய மதிப்பளிக்க சொல்கிறது. உதாரணமாக ஒரு யூதரின் பிணம் நபிகள் நாயகத்தை கடந்து செல்கையில் அமர்ந்திருந்த நபிகள் எழுந்து நின்றதாக தான் உண்மையான வரலாறு சொல்கிறது. இதை கட்டுரை எழுதிய சகோதரர் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

  நாங்கள் 1400 வருடங்களுக்கு முன்னர் உள்ளதை எல்லாம் கவனத்தில் கொள்ள மாட்டோம். தற்காலத்தை மட்டும் தான் கவனத்தில் எடுப்போம் என்று நம்முடைய காம்ரேடுகள் சொன்னால் அவர்களுக்கு இதோ ஓர் நிகழ்கால உதாரணம். நாகூர் என்ற ஒரு ஊர் கண்டிப்பாக பலபேருக்கு தெரிந்திருக்கும். சுனாமி என்னும் ஆழிப்பேரலை கடலோர மக்களை எல்லாம் காவு கொண்ட போது அதற்கு பலியான பல மாற்று மத சகோதரர்களின் உடல்கள் மாற்று மத சகோதரர்கள் என்று தெரிந்தே நாகூர் இஸ்லாமிய சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. வேண்டுமானால் நாகூரில் வசிக்கும் மாற்றுமத சகோதரகளிடத்தில் யார் வேண்டுமானாலும் இது குறித்து விசாரித்து கொள்ளலாம். அப்படி புதைக்கப்பட்ட பிணங்களை எல்லாம் வெளியே ஏன் இஸ்லாமியர்கள் தோண்டவில்லை? உண்மையில் இஸ்லாமியர்கள் வெறியர்களாக இருந்தால் அந்த பிணங்களையுமல்லவா தோண்டியிருக்க வேண்டும்?

  பிரச்சனை பிணத்தை புதைத்ததில் இல்லை. மாறாக அது இஸ்லாமிய பெண்மணியின் உடல் என்று பொய்யான ஆதாரங்களை கொடுத்து அதை புதைத்ததில் தான் ஆரம்பிக்கிறது. அஹ்மதியாக்களை பொறுத்தவரை அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை. குர்ஆணையும் நபிவழியையும் (ஹதீஸ்களையும்) நம்புவர்கள் தான் இஸ்லாமியர்கள். அந்த வகையில் அஹமதியாக்கள் இஸ்லாத்தை சாராத ஒரு புது மதத்தை சார்ந்தவர்களாகவே கருதப்படல் வேண்டும். அவர்கள் தங்களுக்கு சூட்டிக்கொண்ட பெயர்கள் இஸ்லாமிய பெயர்களாக இருப்பதால் எல்லாம் அவர்கள் இஸ்லாமியர்களாக முடியாது. அதைப்போல
  இஸ்லாத்தின் சாயல் அவர்களிடம் மிகுதியாக காணப்படுவதால் அவர்கள் இஸ்லாமியர்கள் என்றும் எவ்வாறு முடிவு செய்ய இயலும்? சீக்கியர்களிடத்தில் இந்து மதத்தின் சாயல் மிகுதியாக காணப்படுகிறது. அதற்காக அவர்களை இந்துக்கள் என்றா முடிவு செய்கிறோம்? ஒரு வகையில் சீக்கியர்களிடத்தில் இருக்கின்ற தைரியம் இந்த அஹமதியாக்களிடத்தில் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் சீக்கியர்கள் தங்களை இந்துக்களின் சாயல் அதிகமாக இருப்பதால் இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. புதுமதத்தினராகவே (சீக்கியர்களாகவே) அழைத்துக் கொண்டனர்.

  பொய்யான ஆதாரத்தை காட்டி முஸ்லிம்களின் சுடுகாட்டில் உடலை புதைத்த அஹாமதியாக்களின் இந்த செயல் , இஸ்லாமிய சமூகத்தில் பொய்யை சொல்லி குழப்பத்தை ஏற்படுத்த நினைத்த சதியாகவே முஸ்லிம்கள் இதைப் பார்த்தனர். எத்தனையோ பிறமத உடல்களை புதைக்க இடம் கொடுத்த முஸ்லிம்கள் இந்த விடயத்தை பெரிதுபடுத்த காரணமும் இதுவே. அஹமதியாக்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் பாபர் பள்ளிவாசலை உடைக்க சென்ற குழுவில் அவர்களும் இடம் பெற்றிருந்தனர் என்பதே.

  புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்திருக்க வேண்டுமா என்றும் சிலர் கேட்கின்றனர். பிரச்சினைகள் இனி தொடராமல் தீர்க்கும் எனில், அதில் தவறொன்றும் இல்லை. தனி மதமான அவர்கள் தங்களுக்கு தனி மயானம் அமைத்துக் கொள்வதை எந்த ஒரு இஸ்லாமியனும் தடுக்க போவதில்லை. பின்னர் எதற்கு இஸ்லாமியர் என்று பொய்யான சான்றிதழ்கள் கொண்டு வந்து பிரச்சனையாக்க வேண்டும். காவல் துறை எத்துனையோ பிணங்களை எடுத்து சோதனை செய்கிறது. அது பிரச்சனையோடு தொடர்புடையதே தவிர , மனிதாபிமானத்தோடு முடிச்சுப் போடுகிற செய்தி அல்லவே.

  சி.பி.ஐ. , சி.பி.எம். போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அக்கட்சியை சார்ந்தவர்களையும் பார்த்து போலி கம்யூனிஸ்ட்கள் என்றும், அவர்கள் போலிகள் நாங்கள் தான் உண்மை கம்யூனிஸ்ட்கள் என்று கொக்கரித்து காட்டு கூச்சல் போடும் வினவு வகையறாக்கள் அதுவும் உளுத்துப் போன கம்யூனிச சித்தாந்தத்திற்காக இத்தகைய வகைப்படுத்துதலை (அசல்கள் , போலிகள் என்று ) நிலைநிறுத்த முயலும் போது இந்த உலகம் அழியும் நாள் வரை நிலைத்து நிற்கும் இஸ்லாத்தில் போலிகளை அடையாளப்படுத்தும் போது வினவு சினம் கொள்வது ஏனோ?

  • சரியாக சொன்னீர்கள் சகோதரரே.
   ஆனால் புதைக்க பட்ட உடலை தோண்டி எடுப்பது சரியல்ல . கபூரில் அப்பெண்மணி கேள்வி கேட்க பட்டு இருப்பார் . அதன் பின் அதை தோண்டி எடுப்பது சரியா ? நிச்சயம் சரியல்ல.

  • உண்மை நிலையை புரிந்து கொள்ளவேண்டும் என நினைப்பவருக்கு அருமையான பதில்.

  • நண்பர் ஷேக் தாவூத் அவர்களே,

   அஹ்மதியாக்களுக்கும், உங்களுக்கும் யார் இறுதி நபி என்பதில்தான் பிரச்சனை, முக்காலமும் தெரிந்த, உள்ளும் புறமும் அறிந்த, மறைவானவற்றின் சாவியை கையில் வைத்திருக்கும் உங்கள் ஏக இறைவன் முகம்மது தான் இறு நபி என்று சொல்லாமல் போனதேனோ? குழப்பமான வசனங்களுக்கு நீங்கள் உங்கள் விருப்பப்படி பொருள் கூறுகிறீர்கள், அவர்கள் அவர்கள் விருப்பப்படி பொருள் கூறுகிறார்கள். இதில் போலி என்ன? அசல் என்ன?

   உளுத்துப்போன கம்யூனிச சித்தாந்தம் என்று எப்படிச்சொல்கிறீர்கள்? ரஷ்யா நொருங்கிவிட்டதாலா? அப்படி என்றால் இன்று இஸ்லாத்தை முழுமையாக கடைப்பிடிக்கும் ஒரு நாட்டை காட்டமுடியுமா உங்களால்? அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அப்படி ஒன்று இல்லையென்றால், இஸ்லாம் புழுத்துப்போன ஒன்று என்று சொல்லலாமா?

   சிபிஎம், சிபிஐ போன்றவற்றை போலிகள் என்று கூற அனேக காரணங்கள் உண்டு. இலக்கையே தொலைத்து நிற்பவர்கள் அவர்கள்; நீங்களோ ஒரே ஏகத்துவக் குட்டையில் நின்று கொண்டு கிழக்குக்கும் மேற்கிற்கும் அர்த்தம் தேடிக்கொண்டிருப்பவர்கள்.

   தோழமையுடன்
   செங்கொடி

   • அன்புள்ள செங்கொடி அவர்களே,

    இஸ்லாத்தைப் பற்றி ஒரு விமர்சனம் வைக்கும்போது அந்த கருத்தைப் பற்றி இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர்ஆன் ஹதீஸில் என்ன சொல்லியிருக்கிறது என்பதைப் பற்றி (முழுக் குர்ஆணையும் வாசிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. விமர்சனத்தின் விடயத்தை பற்றிய செய்திகளைத் தான் அறிந்து கொள்ள சொல்கிறேன்.) அறியாமலே கருத்து சொல்லுவது என்பது கண் தெரியாதவன் சரியான வழி காட்டுகிறேன் என்று சொல்லி காட்டுப் பாதையில் மக்களை அழைத்துச் செல்வதற்கு ஒப்பானது. முக்காலமும் தெரிந்த, உள்ளும் புறமும் அறிந்த, மறைவானவற்றின் சாவியை கையில் வைத்திருக்கும் அகிலத்தின் ஏக இறைவன் மிகத்தெளிவாகவே முகம்மது நபி தான் இறுதி நபி என்று குர்ஆனில் சொல்லியிருக்கிறான். பகுத்தறிவோடு படித்துப் பார்த்தால் கண்டிப்பாக இந்த உண்மை விளங்கும். அத்தியாயம் 33 வசன என் 40 மிகத் தெளிவாகவே சொல்லுகிறது. ஹாத்தமுன் நபி என்று மிகத்தெளிவாகவே முஹம்மது நபியைப் பற்றி இந்த வசனம் சொல்லுகிறது. “ஹாத்தமுன்” என்ற வார்த்தைக்கு (sealed) அதாவது முத்திரை என்பது பொருளாகும். இங்கு சிலர் முத்திரை என்ற தமிழ் வார்த்தைக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. அதாவது சிறப்பானவர் என்ற பொருளை முன்வைக்கின்றனர். ஆனால் மூலமொழி எந்த பொருளை தருகிறது என்று பார்ப்பதே அறிவுடமையாகும். ஹாத்தமுன் என்ற அரபி வார்த்தைக்கு “(sealed)” என்பதே சரியான அர்த்தமாகும்.

    மேலும் இவ்வுலகில் இறைத்தூதராக தெரிவு செய்யப்படுபவருக்கு வேதங்களை கொடுக்காமல் இருந்ததில்லை என்னும் கருத்தை வலியுறுத்தும் வசனமும் குர்ஆனில் இருக்கிறது. அத்தியாயம் 35 வசன என் 25 ல் போய் தாராளமாக பார்த்துக்கொள்ளலாம். எனவே அஹமதியாக்கள் நபி என கூறும் மிர்சா குலாம் எந்த ஒரு வேதத்தையும் கொண்டு வரவில்லை. இந்த குர்ஆண் வசனங்களை வைத்தே அஹமதியாக்கள் போலிகள் என்பதை எவரும் விளங்கிக்கொள்ளலாம். அசலையும் போலியையும் கண்டுபிடிக்க குர்ஆன் மற்றும் ஹதீஸை தெளிவாக படித்தாலே போதுமானது.

    விருப்பபடி குர்ஆனுக்கு பொருள் கூறுகிறீர்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் செங்கொடி அவர்களே, எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்? உதாரணமாக ஒரு தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒருவர் சுய விருப்பபடி பொருள் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்க வேண்டுமானால் குற்றச்சாட்டு வைத்தவருக்கு கண்டிப்பாக தமிழும் ஆங்கிலமும் தெரிய வேண்டும். இரண்டு மொழியையும் தெரிந்த ஒருவர் தான் அத்தகைய குற்றச்சாட்டை வைக்க முடியும். ஏனெனில் மூலமொழியும் மொழிபெயர்க்கப்பட்ட மொழியும் தெரிந்தால் தான் அது சரியான விளக்கமா அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ள இயலும். அந்த அடிப்படையில் அரபி மொழி தெரிந்தால் மட்டுமே இத்தகைய குற்றசாட்டை நீங்கள் வைக்க இயலும்? அரபி மொழியில் எத்தகைய அறிவை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் விளக்குங்களேன். அல்லது உங்களுக்கு அரபி மொழி தெரியவில்லை என்றால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றே நீங்கள் கருத்து சொல்லியிருப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும்.

    உளுத்துப்போன கம்யூனிச சித்தாந்தம் என்று சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை எதிர்வினையாற்ற உங்களுக்கும் உரிமையிருக்கிறது. ஆனால் நாம் வைக்கும் குற்றச்சாட்டு வெறுமனே யூகங்களின் அடிப்படையில் இருக்க கூடாது. அது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்காது. நான் உளுத்துப்போன சித்தாந்தம் என்று கம்யூனிசத்தை சொல்வதற்கான காரணத்தை எம்மால் ஒரே வரியில் சொல்லிவிட முடியும்.
    “நடைமுறைப் படுத்தியதால் தோற்றுப்போன சித்தாந்தம் கம்யூனிசம்’. அதனால் தான் இன்று கம்யூனிசம் அதல பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது. கம்யூனிசம் என்று சொல்லி உருவாகிய நாடுகளான ருஷ்யாவின் , சீனா மியான்மரின் இன்றைய நிலை என்ன? உருவாகிய காலத்திலேயே மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து தானே அது உருவாகியது. தனிமனிதனின் உணர்வுகளுக்கு எத்தகைய முக்கியத்துவமும் கொடுக்காத இந்த சித்தாந்தம் எப்படி மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தும்? அதனால் தான் மீண்டும் சொல்கிறேன் கம்யூனிசம் உளுத்துப்போன சித்தாந்தம் என்று. ஆனால் இஸ்லாத்தின் கொள்கைகளை பொறுத்தவரை அது நடைமுறைப் படுத்திய காலங்கள் வரலாற்றின் பொற்காலமாகவே எல்லோருக்கும் இருந்தது. நபிகள் நாயகம் இஸ்லாமிய பேரரசின் ஆட்சியாளராக இருந்தபோது இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிகளாக இருந்த யூதர்கள் பாதுகாப்புடனேயே வாழ்ந்தார்கள். அப்படி அவர்கள் வாழ்ந்ததற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் நபிகள் நாயகத்தின் பாதுகாப்புக் கவசம் கூட ஒரு யூதரிடம் தான் அடமானம் வைக்கபட்டிருந்தது. அதேபோல நபிகளாரின் காலத்திற்குப் பிறகு அவரின் தோழர் உமருடைய ஆட்சிக்காலத்தில் பறந்து விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் யூதர்களும் கிறித்தவர்களும் மிகவும் பாதுகாப்புடனும் கண்ணியமாகவும் வாழ்ந்தனர் என்பதை வரலாற்றை படித்தாலே விளங்கும். அதனால் தான் காந்தி அவர்களும் உமருடைய ஆட்சி போலவே இந்தியாவில் ஆட்சி மலர வேண்டும் என்று ஆசைப்பட்டார். இன்று இஸ்லாத்தின் பெரும்பான்மையான கொள்கைகளை அமுல்படுத்தும் சவூதி அரேபியா மற்ற நாடுகளை விட மிகவும் தரமாக தானே இருக்கிறது. அது முழுமையாக இஸ்லாமிய கொள்கைகளை அமுல்படுத்தினால் இன்னும் சிறப்பாகவே முன்னேறும். இஸ்லாமிய நாடு என்று வெறுமையாக பெயர் சூட்டிக் கொண்டு கொள்கைகளை அமுல்படுத்தாத நாடுகளான பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான், இராக் போன்ற நாடுகள் சீரழிவதற்கு காரணம் இஸ்லாத்தை சரியாக கடைபிடிக்காததே. இஸ்லாமிய கொள்கைகளை கடைபிடிக்காததால் தோற்றுப்போன நாடுகளை வேண்டுமானால் பட்டியலிடலாமே தவிர நடைமுறைப்படுத்தியதால் தோற்றுப்போன ஒரு நாட்டையும் உங்களால் காட்ட இயலாது.

    சி.பி.ஐ., சி.பி.எம் போன்ற கட்சியை சார்ந்தவர்களால் போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப்படும் உங்களுக்கும் (ம.க.இ.க., மாவோயிஸ்டு போன்ற இயக்கங்கள் ) , உங்களால் போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப்படும் சி.பி.ஐ., சி.பி.எம் போன்ற கட்சிகளுக்கும் இடையே அசல் போலியை எவ்வாறு நாங்கள் கண்டுபிடிக்க இயலும் என்பதை எங்களுக்கு கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும் செங்கொடி அவர்களே. இதற்கு காரல் மார்க்ஸ் , லெனின், ஸ்டாலின் , மா. சே போன்றவர்கள் ஏதாவது விளக்கம் அளித்திருக்கிறார்களா? இலக்கு இலக்கு என்று சொல்கிறீர்களே அந்த இலக்கு தான் என்ன?

    சகோதரத்துவத்துடன,
    பி.ஏ. ஷேக் தாவூத்.

 24. உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலும் அவரவர்களுடைய சமுதாயத்திற்கென்று தனி சுடுகாடு வைத்திருப்பார்கள் இதில் எந்த தவரும் கிடையாது.இதில் எந்தவொரு பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக தங்களுக்கென அந்தந்த சமுதாயமும் வைத்திருக்கும்.முஸ்லிம்களும் அப்படித்தான் வைத்திருக்கிறார்கள் இதில் முஸ்லிம்களை மட்டும் அடக்கம் செய்வார்கள்.

  “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது இஸ்லாத்தின் அடிப்படை.எல்லா நபிமார்களும் போதித்ததைத்தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் போதித்தார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை பின்பற்றியவரகள் ஏழை பணக்காரன்,கறுப்பன் வெள்ளையன் என்று எந்தவொரு பாகுபாடுமில்லாமல் ஒரே சமுதாயமாக வாழ்ந்து வந்தார்கள்.புதிதாய் இஸ்லாத்திற்கு வந்தவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையையே ஆட்டிப்பார்ப்பதுமில்லாமல் நபிகளாருடைய சொல்லை மதிக்காமல் போனதால்தான் தங்களுடைய ஜாதியையும் உள்ளே நுழைத்து பிரிவினையை ஏற்படுத்த முயலுகிறார்கள்.இவர்களுள் ஒரு கூட்டம்தான் இந்த அஹமதிய —-கள்(இவர்களை முஸ்லிம்கள் என்று சொல்ல மனம் வரவில்லை அதனால்தான் —-கள் என்று குறிப்பிடுகிறேன்).முஸ்லிம் என்றால் தூதர்களை நம்பவேண்டும் இறைவனுக்கு அடி பணியவேண்டும் ஆனால் அஹம்மதிய —-களிடம் அது இல்லை.இந்த அஹம்மதிய —-கள் இந்த உண்மையை நம்பி எங்களிடம் வந்தால் அவர்களை எங்களுடைய கொள்கை சகோதரர்களாக முஸ்லிம்களாக ஏற்றுகொள்வோம்.பெயரளவில் இஸ்லாமியர்களாக காட்டிகொள்ளும் இவர்கள் பிடிவாதத்தை விடவில்லையென்றால் இஸ்லாத்தை விட்டு வெளியேரி,எந்த மதம் பிரிவினையை ஆதரிக்கின்றதோ அந்த மதத்தில் போய் சேர்ந்துகொள்ளட்டும் அதைப்பற்றி இஸ்லாமியர்களுக்கு எந்த கவலையுமில்லை.இது அஹமதிய —–களுக்கு மட்டுமில்லை,”இறைவனும் அவனுடைய திருத்தூதர்களின் மார்க்கமாகிய இஸ்லாத்தில்” பிரிவினையை ஏற்படுத்த நினைக்கும் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது.நீங்கள் (இறைவனுடைய மார்க்கத்தை பிரிக்க எண்ணம் கொண்டு)செய்து வந்த பாவங்களை
  எண்ணி வருந்தி அவனிடம் பாவ மன்னிப்பு தேடிக்கொண்டு
  மார்கத்தில் சகோதரர்களாய் வாழ கற்றுகொள்ளுங்கள்.

  ஒரு உண்மை முஸ்லிமாகிய என்னுடைய கருத்தையும் இங்கு பதிவிடுகிறேன்.அந்த பெண்ணுடைய உடலை முஸ்லிம்களுடைய இடத்தில் புதைத்ததே தவறு.சரி ஏதோ செய்துவிட்டார்கள் என விட்டிருக்கலாம்.இனிமேல் முஸ்லிமல்லாதோரை புதைக்கக்கூடாதென்று சட்டமாவது (அ) கோர்ட்டில் கேஸாவது போட்டிருக்கலாம்.அதை விட்டுட்டு பிணத்தை தோண்டியெடுத்து மனசாட்சியே இல்லாமல் நடந்துகொண்டார்கள் இது மிகவும் கண்டனத்துக்குறியது.

  “ஒருநாள் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களுடன் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.அப்பொழுது ஒரு பிணம் அவரை கடந்து சென்றது உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த பிணம் கடந்து செல்லும் வரை அமராமல் நின்றுகொண்டிருந்தார்கள்.இதைப்பார்த்த அவரது தோழர்கள் “இறைத்தூதர் அவர்களே ஒரு காஃபிர்(ஏக இறைவனை மறுப்பவ)ருடைய பிணத்திற்க்கு ஏன் மரியாதை செலுத்துகிறீகள் என்று கேட்டனர்.அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாராகவேண்டுமானாலும் இருக்கட்டுமே “அவரும் ஒரு மனிதர்தானே” என்று கூறினார்கள்.

  பிணத்திற்கு எப்படி மரியாதை செலுத்தவேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழகாக காட்டி கொடுத்திருந்தும் இவர்கள் மறந்தது இவர்களுடைய அறியாமையை அழகாய் படம் பிடித்து காட்டுகிறது.

  இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களைத்தான் பின்பற்றுகிறோம் என்று சொல்கிறார்களே தவிர அஹமதிய —–களுக்கும் இவர்களுக்கும் எந்தவொரு வித்தியாசமுமில்லை.

  • //ஒரு உண்மை முஸ்லிமாகிய என்னுடைய கருத்தையும் இங்கு பதிவிடுகிறேன்.அந்த பெண்ணுடைய உடலை முஸ்லிம்களுடைய இடத்தில் புதைத்ததே தவறு.சரி ஏதோ செய்துவிட்டார்கள் என விட்டிருக்கலாம்.இனிமேல் முஸ்லிமல்லாதோரை புதைக்கக்கூடாதென்று சட்டமாவது (அ) கோர்ட்டில் கேஸாவது போட்டிருக்கலாம்.அதை விட்டுட்டு பிணத்தை தோண்டியெடுத்து மனசாட்சியே இல்லாமல் நடந்துகொண்டார்கள் இது மிகவும் கண்டனத்துக்குறியது.//

   இந்த வார்த்தைய சொல்றதுக்கு என்னங்க கஷ்டம். மதத்தை விடுத்து ஒரு மனிதன் சொல்லலாம். எத்தனை பேரு இங்க பொங்கி எழுந்தவங்க வாயில இது வந்துச்சு?( யாரொ ஒருவர் மட்டும் சொல்லி இருந்தாரென்று நினைக்கிரேன்)இதை தவிற அனைத்தையும் சொன்னா பொதுவா படிக்கும் எங்களுக்கு என்ன தோணும்? என்ன சொல்லிடாங்கன்னு இந்த தாண்டு தாண்டராங்கன்னுதானே?

   இறையடியான் சார் பொதுவா இந்த மாதிரி குற்ரசாட்டு வரும்போது முதலில் சாதாரன மனிதம் சார்ந்த பதிலை சொல்லிவிட்டு அதன் பின் மார்கத்துக்குள் போங்கள். பாருங்க அத்தனை பேரும் சொல்லும் பதில் மார்க்கம் தெரியாத எங்களுக்கு எதைஎதையோ சொல்றாங்களே எதுக்கு இப்படி.. அப்படீன்னா தப்பு எதோ இருக்குமோன்னுதான் நினைக்க தோணுது

   என் பதிலை புரிந்து கொள்ளா முடியும் என்று நம்புகின்றேன்.

 25. Rules and regulation is diffrent from each and every country and places. In bombay sexworker got licence. In tamil nadu its punishable > sO YOU CANT SAY Tamil peoples iS STUPIT THEY NOT GIVE RESPECT TO HUMENBEINGS(SEX WORKERS). MOHAMMED is prophet already said , In future more than 70 gangs of muslim peoples try to change rules and regulation . Once they not followup quran words how they said MUSLIM. Muslim means who belive one god and prophet. In peters road masque for only for allow muslim . One muslim deadbody cannot allow in Hindu graveyard . Because that deadbody is muslim. Who is follow hindu rulkes and regulation they only allow they grave yard. I cant come to your home for staying untill you accept me. IT is simple logic that lady not followup True Muslim rules and regulation. SOthats the reason her deadbody not allowed in muslim grave yard. IF iam not follow up indian rules and regulation then how can i Say iam Indian CITIZEN. SO finally i Give this matter to GOD . HE only true person give the coorect answer to you in Judgementday. I believe I am also present in that day behind you. We surly stand that line in future.

 26. உலகில் கம்யூனிசம் ஆட்சி செய்தால் எவனும் வாந் திறந்து பேசமுடியாது , அவதூறாலோ அல்லது கொன்றோ ஒழிப்பார்கள் ,

  இஸ்லாம் இங்கே ஆட்சி செய்யுமோ அங்கே எவனும் மனதுக்குள் கூட நினைக்க முடியாது , உடனே பத்வாதான் ,

  வினவு , வஙக தேச பெண் எழுத்தாளரின் நிலை என்ன ?

  • தஸ்லிமா நஸ்ரின் ஒரு அர வேக்காடு . இஸ்லாமை பற்றி முழுமையாக தெரியாமல் அவர் எழுதும் எழுத்துக்கு மதிப்பு தர கூடாது. அவருடைய கருத்துகளை படித்தாலே உங்களுக்கே புரியும் அவருடைய புரிதல் லட்சணம். அரகுறைய படிச்சுட்டு கருத்து சொன்ன பத்வா தராம வெங்காயமா தருவாங்க !!

   • நிஜாம்,

    என் கண்ணில் உங்கள் மறுமொழி அரைவேக்காடு கூட இல்லை, கொஞ்சம் கூட வேகாத மாதிரி இருக்கிறது. உங்களுக்கு ஃப்த்வா கொடுக்க நான் யாரை அணுக வேண்டும்?

   • First know the rules for giving fatwa. ஏன் உங்கள் பதிவு எல்லாம் வழ வழ கொழ கொழ ன்னு அழுகி போன வாழைபழம் மாதிரி இருக்கு?

   • நிஜாம்,

    என் பதிவு எனக்கு பிடிக்க வேண்டும், உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒரு வேளை எனக்கு வாழைப்பழம் பிடிக்குமோ என்னவோ? ஆனால் என் கேள்விக்கு பதில் இல்லையே? எனக்கு ஃபத்வா பற்றி தெரியாததால்தான் உங்களை கேட்கிறேன், தெரிந்தவர்தானே சொல்ல வேண்டும்?

   • ஃப்த்வா கொடுகிறது என்ன சின்ன பிள்ளைக்கு மிட்டாய் கொடுக்கிறதா?

   • நிஜாம்,

    உங்களுக்கும் தெரியாது என்றால் ஒத்துக் கொள்ளுங்களேன்! சும்மா உதார் விட்டுக்கிட்டு!

    உங்கள் கண்ணில் அரை வேக்காட்டாக தெரிபவர்களுக்கு ஃபத்வா கொடுக்கலாம் என்றால் உங்களை மாதிரி உதார் பேர்வழிகளுக்கு நானும் தாராளமாக கொடுக்கலாம்.

  • //Nowhere in Quran it talks about killing of Kafirs except one verse “Kill them wherever you find them”. But it is really really painful to see how people interpret this verse. they leave the verse before and after that and they stick only with this verse. This command was given during a war(badr) between Muslims and Kafirs. The sentence before that says “If they initiate the war, go and kill them before they kill you. Kill them wherever you find them. If they surrender take them to the safest place and provide what they want”. This is the entire meaning of that verse. That is why we say Islam is the largely misunderstood way of life. //
   இது Aashiq சொன்னது.
   தஸ்லிமா நஸ்ரின் அவர் படித்ததில் “Kill the kafirs” என்பதை மட்டும் எடுத்து கொண்டார். பாதியை படித்தும் படிக்காமலும் விட்டு விட்டார். அதனால் தான் நான் அரைவேக்காடு என்று சொன்னேன்.
   இது ஒரு உதாரணம் தான். அதனால் தான் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேரியதாகவோம் சொன்னார். இதை பற்றியும் இன்னும் பலவற்றை பற்றியும் புரிதல் இல்லாமல் அவர் புத்தகத்தில் எழுதியுள்ளார். மனிதர்களோடு சேர்த்து மார்கத்தையும் குறை கூறினார் . எழுதிய பதிவில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

  • இல்லாத கடவுளுக்காக இததனை பேர் அடித்துக்கொள்கிறீர்களே? முடிந்தால் மற்றவருக்கு நல்லது செய்யுங்கள், நீங்களும் கடவுள் தான். தூனிலும் துரும்பிலும் இருப்பவன் உன்னிலும் இருப்பான்.

 27. முகமது நபியின் காலம் ஆறாம்-ஏழாம் நூற்றாண்டு, நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல ஐந்தாம் நூற்றாண்டு இல்லை.

  கல்லறை ஒரு சொத்து. இங்கே யார் புதைக்கபடலாம் என்பதை சொத்துக்கு உரிமையாளர்கள்தான் முடிவு செய்யவேண்டும். புதைத்த பிணத்தை தோண்டி எடுப்பது distasteful ஆக இருக்கலாம். ஆனால் அது அவர்கள் உரிமை. அங்கே ஒரு கிருஸ்துவரின்/ஹிந்துவின் பிணம் புதைகப்பட்டு பிறகு தோண்டி எடுக்கப்பட்டிருந்தால் வினவும் புதிய கலாச்சாரமும் அதை கண்டித்து எழுதுவீர்களா? கல்லறை பராமரிப்புக்கு அஹ்மதியா அமைப்புகளிடமிருந்து பணம் வாங்கப்படுகிறதா? அப்படி பணம் வாங்கப்படவில்லை என்றால் உரிமை மட்டும் எங்கிருந்து வரும்?

  அரசாங்கத்தின் தலைமை காஜி என்று எழுதி இருக்கிறீர்கள். மத சார்பில்லா அரசில் அரசாங்கத்தின் தலைமை காஜி எங்கிருந்து வந்தார்? தலைமை பூசாரி, தலைமை பாதிரியார் எல்லாம் இருக்கிறார்களா என்ன? இது என்ன கூத்து? வினவு இந்த போலி மதசார்பின்மையை பற்றியும் எழுதலாமே?

  உங்கள் கண்டனத்தை நான் ஆதரிக்கவில்லை என்றாலும் நாகரீகமாக அதை பதிவு செய்திருக்கிறீர்கள். கொழுபெடுத்த துலுக்க காஜி என்றெல்லாம் எழுதவில்லை. இதே அணுகுமுறை தொடரட்டும்!

  • நண்பர் ஆர்.வி , வாழும்போதுதான் நாம் சாதி, மதம், நிறம், மொழி என பல வேறுபாடுகளால் வாழ்கிறோம்… இறந்த பின் கூட ஒருவரின் உடல் மற்ற மதத்தினரின் உடலின் அருகில் இருக்காது என்ற கொள்கையை பார்க்கும் பொது, மெய்யாலுமே நாம் ஆறாவது அறிவை அடைந்து விட்டோமா என சந்தேகமாக உள்ளது…

   • பகத்,

    இது எனக்கு சொந்தமான இடத்தில் யார் புதைக்கப்பட வேண்டும் என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்ற அளவில் மட்டுமே பார்க்கப்பட வேண்டிய விஷயம். என் வீட்டில் வாடகைக்கு வருபவர்கள் அசைவம் சமைக்கக்கூடாது என்று சொல்ல எனக்கு உரிமை உண்டல்லவா? அய்யர்களை மட்டும்தான் குடிவைப்பேன், திருச்சிக்காரர்கள் மட்டும்தான் குடிவரலாம், தி.க.காரர்கள் மட்டும்தான் குடி வரலாம், என் பழைய காலேஜில் படித்தவர்கள் மட்டும்தான் குடிவரலாம், எம்.எஸ்.வி. பக்தர்கள் மட்டும்தான் குடி வரலாம் என்று சொல்ல எனக்கு எல்லா உரிமையும் உண்டு. இதில் அய்யர்கள் விதி ஜாதி வெறியாக இருக்கலாம்; திருச்சிக்காரர்கள் விதி என் சொந்த ஊர் மீது எனக்குள்ள பற்றாக இருக்கலாம். தி.க.காரர்கள் விதி என் கொள்கைப்பற்றாக இருக்கலாம்; காலேஜ், எம்.எஸ்.வி. விதிகள் என் eccentric குணமாக இருக்கலாம்; உங்களுக்கு அய்யர்கள் விதியை தவிர வேறு எதுவும் தவறாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் என் இடத்தை நான் என்ன செய்ய வேண்டும் என்று அடுத்தவர்கள் சொல்ல முடியாது – என் எண்ணங்கள், நோக்கங்கள், motivation தவறாக இருந்தாலும் கூட. நமக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை, சரியாகப்படவில்லை என்ற காரணத்துக்காக அடுத்தவர்கள் அதை செய்ய உரிமை அற்றவர்களாக ஆகிவிட மாட்டார்கள். எதோ ஒரு முஸ்லிம் அமைப்புக்கு சொந்தமான இடத்தில் யார் புதைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்தால், அப்புறம் அந்த இடத்தில் யாருமே புதைக்கப்படக்கூடாது என்று நான் தீர்மானிக்கலாம். அங்கே கோவில் கட்ட வேண்டும் என்று ராம கோபாலன் தீர்மானிக்கலாம். அங்கே கால்ஜே கட்ட வேண்டும் என்று ஜேப்பியார் தீர்மானிக்கலாம். டாஸ்மாக் வைக்க வேண்டும் என்று குடிமகன்கள் தீர்மானிக்கலாம்.

    காஜி செய்தது சட்ட ரீதியாக தவறில்லை. நியாய ரீதியாக? நிச்சயமாக உங்களுக்கும் வினவுக்கும் தவறாக தெரிகிறது. இங்கே வந்திருக்கும் பல முஸ்லிம்களுக்கு சரியாக தெரிகிறது. எனக்கு அது மிக distasteful ஆக – இதெல்லாம் ஒரு விஷயமா, ஏன் இந்த காஜி மிக அற்பத்தனமாக நடந்துகொண்டார் என்று தோன்றுகிறது. ஆனால் நடைமுறைப்படுத்த முடியாத நியாய ரீதியை விட நடைமுரைப்படுத்தப்படக்கூடிய சொத்துரிமை சட்டம்தான் எனக்கு பெரிதாக தெரிகிறது. அற்பத்தனத்தை எல்லாம் தண்டிக்க முடியாது.

    கண்ணம்மா பேட்டை சுடுகாடு ஹிந்துக்களுடையது என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் அங்கே புதைக்க அனுமதித்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

    • பார்ப்பனியம், முதலாளித்துவம் என்றால் என்ன என்பதற்கு ஆர்.வி அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறார். என் தெருவில், வீட்டில், சுடுகாட்டில், தெருக்குழாயில், கோவிலில் என் சாதி மட்டும்தான் இருக்கும் என்பது பார்ப்பனியம். இதில் மற்றவர்கள் பிறப்பில் தாழத்தப்பட்டவர்கள் வந்தால் எனக்கு அவை அசுத்தமாகிறது. இதை தீண்டாமை என்ற பெயரில் நீங்கள் வாதிட்டால் இவை என் சொத்து நான் மட்டுமே பயன்படுத்தும் உரிமை உள்ளது என வாதிடுவேன். ஆக பார்ப்பனியம், முதலாளித்துவம் இரண்டையும் இணைத்தமைக்கு நன்றி ஆர்.வி

     பார்ப்பன இந்து மதம் மட்டுமல்ல, கிறித்தவ, இசுலாம் மதங்களும் இதே வாதத்தைத்தான் வைக்கின்றன. ஆர்.வி பார்ப்பனியத்தைக் காப்பாற்றுவதற்காக இசுலாமிய வெறியர்களை காப்பாற்ற நினைக்கிறார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சித்தாந்தம் அவ்வளவாக நல்லது இல்லை ஆர்.வி. பரிசீலியுங்கள். மதம் என்று வந்து விட்டால் அனைத்துமதவாதிகளும் ஒன்று சேர்வது வியப்பல்ல. ஒரு வேளை இத்தகைய மதவாதிகள் ஆட்சிக்கு வந்தால் நாத்திகர்களான கம்யூனிஸ்டுகளுக்கு என்ன தண்டனை என்று தெரியவில்லை?

     • என்ன வினவு, உண்மையிலேயே புரிந்துதான் பேசுகிறீர்களா? என் வீடு என் தனிப்பட்ட உரிமை; வீதி பொது இடம். என் வீட்டுக்குள் நீங்கள் வரலாமா கூடாதா என்று தீர்மானிக்கும் உரிமை என்னுடையது – உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனக்கு ஜாதி வெறி, மத வெறி, மொழி வெறி, ஆணாதிக்க வெறி, கொள்கை வெறி எது இருந்தாலும் என் வீட்டுக்குள், என் அறைக்குள் வைத்துக்கொள்வது என் உரிமை. அய்யர்/தலித்/முஸ்லிம்/ஆண்கள்/தமிழர்கள்/ம.க.இ.க.வினர் மட்டும்தான் என் வீட்டுக்குள் வரலாம் என்று விதி போட எனக்கு எல்லா உரிமையும் உண்டு. வீதிக்குள் யார் வரலாம், யார் வரக்கூடாது என்று சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை. நானே நூறு ஏக்கர் நிலம் வாங்கி அங்கே ஒரு ரோடு போட்டால் அதற்குள் நீங்கள் வரலாம், வரக்கூடாது என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. அந்த நூறு ஏக்கர் நிலத்தில் என் சொந்த செலவில் கோவில் கட்டினால் அதற்குள் யார் வரலாம் யார் வரக்கூடாது என்று சொல்ல எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. சிதம்பரம் கோவில் (ஜும்மா மசூதி, சாந்தோம் சர்ச், அம்ரித்சர் குருத்வாரா) பொது சொத்து. மக்கள் பணத்தில் கட்டப்பட்டது. நீங்கள் எழுதியதிலிருந்து அந்த கல்லறை எதோ ஒரு முஸ்லிம் அமைப்பின் சொத்து என்று அனுமானிக்கிறேன். அது அரசு சொத்தாக இருந்தால் காஜி வாயை மூடிக்கொண்டு போக வேண்டியதுதான்.

      என்ன கம்யூனிச “வெறி” தலைக்கேறி தனி உடமை, பொது உடமை எல்லாவற்றையும் குழப்பி கொள்கிறீர்களே! ஒரு வேளை எழுதுவதை கொஞ்சம் கொஞ்சமாகவாவது குறைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருப்பதால் என் வாயை பிடுங்குகிறீர்களோ? 🙂

      • ஒரு இஸ்லாமியருக்கு உடலில் உள்ள உறுப்பை மாற்றினால்தான் அவர் உயிருடன் வாழமுடியும் என்ற நிலையில் அவர் இது என்னுடைய உடல் எனக்கு இஸ்லாமிய நபரின், அதுவுன் அஹமதிய அல்லாத இஸ்லாமிய நபரின் உறுப்பை தேடுங்கள் என யாரும் கேட்பார்களா..?

       • முஸ்லிம் மக்கள்ட்ட போயி லாஜிக்கா பேசறீங்களே பகத்…..முன்னெல்லாம் வட இந்திய முஸ்லிம்கள்தான் மதவெறி நிரம்பியவர்களாக இருந்தார்கள் (வட இந்திய “இந்துக்களும்தான்) இப்போது தமிழ் (!!) முஸ்லிம்களும் வெறியேற்றப்பட்டுள்ளார்கள்……பள்ளிக்காலத்தில்..சக முஸ்லிம் மாணவர்களை அவர்களின் பிறப்புருப்பை சொல்லி கிண்டல் செய்வோம்..யாருமே அதை சீரியஸாக எடுத்துக்கொண்டதில்லை…இப்போது நடந்தால் பள்ளியிலேயே கொலை விழும் .அரேபியாவில் பெட்ரோல் இருக்கும்வரை இதுதான் விதி!!!

       • ஒரு நல்ல “ஹிந்து” எப்படி பிராமணருக்கு அடிமையோ அதுபோல நல்ல முஸ்லிம் அராபியருக்கு அடிமை….these people are religious slaves! ஆன்மீக உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அந்தரங்கமானது. இது இவர்களுக்கு புரியவே புரியாது. பிற மதத்தவரை “non-believers” என்பதிலிருந்தே இவர்களின் “சகிப்புத்தன்மை” புரியவில்லையா?..பார்க்கப்போனால் பிராமணர்கள் முஸ்லிம்களைவிட ஆயிரம் மடங்கு மேல் போலிருக்கிறது!

        • இறைவனையும் அவனது வேதத்தையும் அவனது தூதர்களையும் நம்பிக்கைக் கொண்டவனை இறை நம்பிக்கையாளன் என்று கூறும் இஸ்லாம் இவற்றை ஏற்காதவனை இறை நம்பிக்கையற்றவன் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது. இந்திய திருநாட்டில் பிறந்தால் இந்திய பிரஜை என்றும் வெளிநாட்டில் இருந்து விசிடிங் வந்தவனை அயல் நாட்டவன் என்று சொல்லுவது குற்றமா? அயல் நாட்டவன் தன்னை அப்படி கூறக்கூடாது என்றால் அவனும் இங்கே சிடிசன் ஆகினால் தானே அவனை இந்திய பிரஜை என்று கூறமுடியும். இந்த சிம்பிள் லாஜிக் புரியாமல் ஏன் தன விதண்டவாதம் பண்றீங்களோ தெரியலே.

         • You are really a B….R….I…..L….L…..I…..A….N….T………….!
          (But, even Sonia had become indian citizen, she was not accepted as PM by many “broad minded politicians”….why?)

       • ஒரு உண்மையான முஸ்லீம் உயிரே போனாலும் அஹமதியாக்களின் உடல் உறுப்பை ஏற்கமாட்டான். நண்பரே, ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தில் ஒரு அணு அளவைக்கூட கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதி இல்லை. இறைவனின் கட்டளைகள் தெளிவாக, எளிமையாக இருந்தாலும் மாற்ற முடியாது. அப்படி இருப்பதால் தான் உங்களைப் போன்று கடவுளை மறந்து கேடுகெட்ட வாழ்க்கையை நாங்கள் இன்னும் தழுவாது நேர்வழியில் இருக்கிறோம். உங்கள் விமர்சனங்களை உங்கள் மதத்தோடு வைத்துக்கொள்ளுங்கள்.

        • காபிர்களுடை உடல் உறுப்புகளையும் இரத்தத்தையும் மட்டும் ஏற்களாமோ! அல்லாவுக்கு இணைவைப்பவர்கள் எம் போன்ற காபிர்கள்தாம். அகமதியாக்கள் இணை வைப்பதில்லை.

        • //ஒரு உண்மையான முஸ்லீம் உயிரே போனாலும் அஹமதியாக்களின் உடல் உறுப்பை ஏற்கமாட்டான். நண்பரே, ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தில் ஒரு அணு அளவைக்கூட கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதி இல்லை
         //
         u never buy anything from shops of ppl from other religions or other faiths?. afterall ahamadiyas or hindus or buddhists..all are KAFIRS for u..rite?…imagine what will happen if whole india stops buying goods from muslim shops.. Arabia has enough wealth and petrol to wipe the poverty in whole world (twice over!) but wudnt give u a penny…we know how they treat u when u go for Haj …come on..u r all slaves…..just imagine life as a muslim after PETROL WEALTH is finished in Arabia…

         //உங்களைப் போன்று கடவுளை மறந்து கேடுகெட்ட வாழ்க்கையை நாங்கள் இன்னும் தழுவாது நேர்வழியில் இருக்கிறோம்…….///
         “”கேடுகெட்ட வாழ்க்கை””???bloody lets see after the oil wealth is finished..the Westerners will SUCK all ur OIL and leave u and ur DESERT….EAT SAND!!!

         • // just imagine life as a muslim after PETROL WEALTH is finished in Arabia… //

          பெட்ரோல் காலியாருச்சுன்னா? அரேபியா என்ன வேன்னுனாலும் பண்ணட்டும்!!
          நீங்க என்ன பண்ணுவீங்க ? எல்லா இடத்துக்கும் நடந்து போவீங்களா ? சைக்கிள் லயே வெளிநாடு எல்லாத்துக்கும் போவிங்களா ? பவர் இல்லாம இருபிங்களா ?

          உங்களுடைய மனிதாபிமானத்தை நினைத்தால் எனக்கு புல் அரிக்குது!!

          • நிசாமு..
           பெட்ரோலுக்கு முந்தி யாரும் இருந்த இடத்தவிட்டு அசையவே இல்லயா?..பெட்ரோல் தீந்துபோனா..நடந்து போவேன்…சைக்கிள்,மாட்டு வண்டி..குதிரை…பல்லக்கு (!!) இதுலயெல்லாம் போவேன்….கப்பல்ல வெளிநாடு போவேன்…அட போகலேன்னாத்தான் என்ன கெட்டுப்போச்சு??!!..சும்மா வெவசாயம் பண்ணிட்டு வீட்ல கெடகேன்….

           நண்பரே…அரேபியாவில் உள்ள எண்ணை வளத்தை அரேபியர்கள் விற்பனை மட்டும் செய்யாமல் அறிவியல் ரீதியாக பயன்படுத்தியிருந்தால்..இன்று அரேபியா ஒரு “சூப்பர் பவர்” ….இப்போது என்ன நடக்கிறது..?..அரேபிய அரசு(!) அமெரிக்காவின் கைக்கூலி….ஒரு காலத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் செழித்த இடம் அரேபியா (middle east ..in general!)..இன்றைய மேற்கைய அறிவியலுக்கு அடித்தளமிட்டதே அரபிய மொழிபெயர்ப்பு நூல்கள்தான்…ஆனால் பின்னாளில் வந்த மதவெறியர்கள் அரபிய மனத்தையும் அறிவையும் குரானுக்குள் புதைத்துவிட்டார்கள்…….sorry..சொன்னால் நீங்கள் புரிந்துகொள்ளப் போவதில்லை…மதவாதி என்று தூற்றுவீர்கள்…மன்னிக்கவும்….

           அதுசரி..பெட்ரோல் தீந்த பின்னாடி ஹஜ் பயணம் எப்படிப் போவீங்க?..ஒட்டகத்திலயா…(இன்னேரம் குரான்ல இதுபத்தி என்ன போட்டிருக்குன்னு பலர் தேடுவீர்கள்…!!…) என்ன பொருத்தவரை ஒட்டக சவாரி நல்லாத்தான் இருக்கும்….இருந்தாலும் எருமை மாதிரி வராது…..மாடு ஒரு சடை புடிச்ச சனியன்..துள்ளும்…எருமை பல்லக்கு மாதிரி…என்ன டவுசர்ல கொஞ்சம் அழுக்கு ஒட்டும்…..
           நீங்க எதுக்கும் ஒட்டக நெறத்துல ரெண்டு பேண்ட் தச்சு வைங்க…அரேஏஏபியா வர போகவேண்டாமா…..

           //உங்களுடைய மனிதாபிமானத்தை நினைத்தால் எனக்கு புல் அரிக்குது!!//

           பெட்ரோலுக்கும் மனிதாபிமானத்துக்கும் என்ன உறவு?….தெனம் ஒரு லிட்டர் பெட்ரோல் குடிச்சா மனசுல மனிதாபிமானம் வருமா?..(குரான்ல என்ன போட்டிருக்கு?…)

           மதத்த சொல்லி மத சார்பின்மை சொல்லி ரொம்ப நாளைக்கி காலந்தள்ள முடியாது தம்பி……என்னைய “மத வாதின்னா” ..கண்டுக்கவே மாட்டேன்….என் பாலிஸி சிம்ப்பிள்….நீ இஸ்லாமிய வெறியன்னா…நான் தமிழ் வெறியன்..ஏன் இந்து வெறியன்னுகூட வெச்சுக்கலாம்…..நி உண்மையாவே மதசார்பற்றவன்னா…நானும் அங்கனமே….

           ச்ச்சூம்மா மதசார்பற்ற வேசம் போட எனக்கு தேவையில்ல…எனக்கென்ன உங்ககிட்ட ஓட்டா வேணும்…?…ஏதோ..இயக்குனர் அமீர் போன்ற நல்ல தமிழ் முஸ்லிம்கள் இருக்கறதால நான் இன்னும் முஸ்லிம்கள வெறுக்க ஆரம்பிக்கல….நீங்க பத்த வைக்காதீங்க…..இத மெரட்டலாவே எடுத்துக்கலாம்…

          • இளங்கோ அம்பிக்கு,

           //
           ஒரு நல்ல “ஹிந்து” எப்படி பிராமணருக்கு அடிமையோ அதுபோல நல்ல முஸ்லிம் அராபியருக்கு அடிமை….these people are religious slaves! ஆன்மீக உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அந்தரங்கமானது. இது இவர்களுக்கு புரியவே புரியாது. பிற மதத்தவரை “non-believers” என்பதிலிருந்தே இவர்களின் “சகிப்புத்தன்மை” புரியவில்லையா?..பார்க்கப்போனால் பிராமணர்கள் முஸ்லிம்களைவிட ஆயிரம் மடங்கு மேல் போலிருக்கிறது!
           //

           என்ன அம்பி, பருப்பு வாடை தூக்குது. பாத்து அந்தப்பக்கம் போனா கோவாலு உன்னை கோவனமாக்கிடும். என்னுடைய முந்திய பின்னூட்டத்தை ரிபீட்டு செய்றேன்.

           இறைவனையும் அவனது வேதத்தையும் அவனது தூதர்களையும் நம்பிக்கைக் கொண்டவனை இறை நம்பிக்கையாளன் என்று கூறும் இஸ்லாம் இவற்றை ஏற்காதவனை இறை நம்பிக்கையற்றவன் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது. இந்திய திருநாட்டில் பிறந்தால் இந்திய பிரஜை என்றும் வெளிநாட்டில் இருந்து விசிடிங் வந்தவனை அயல் நாட்டவன் என்று சொல்லுவது குற்றமா? அயல் நாட்டவன் தன்னை அப்படி கூறக்கூடாது என்றால் அவனும் இங்கே சிடிசன் ஆகினால் தானே அவனை இந்திய பிரஜை என்று கூறமுடியும். இந்த சிம்பிள் லாஜிக் புரியாமல் ஏன் தன விதண்டவாதம் பண்றீங்களோ தெரியலே.

           //
           நண்பரே…அரேபியாவில் உள்ள எண்ணை வளத்தை அரேபியர்கள் விற்பனை மட்டும் செய்யாமல் அறிவியல் ரீதியாக பயன்படுத்தியிருந்தால்..இன்று அரேபியா ஒரு “சூப்பர் பவர்” ….இப்போது என்ன நடக்கிறது..?..அரேபிய அரசு(!) அமெரிக்காவின் கைக்கூலி….ஒரு காலத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் செழித்த இடம் அரேபியா (middle east ..in general!)..இன்றைய மேற்கைய அறிவியலுக்கு அடித்தளமிட்டதே அரபிய மொழிபெயர்ப்பு நூல்கள்தான்…ஆனால் பின்னாளில் வந்த மதவெறியர்கள் அரபிய மனத்தையும் அறிவையும் குரானுக்குள் புதைத்துவிட்டார்கள்…….sorry..சொன்னால் நீங்கள் புரிந்துகொள்ளப் போவதில்லை…மதவாதி என்று தூற்றுவீர்கள்…மன்னிக்கவும்
           //

           விஷயம் தெரியாமல் உளறக் கூடாது. அரேபியா அறிவியலில் முன்னேற்றம் அடைந்தது எல்லாம் அங்கிருந்த மதரசாக்கள் மூலம் தான். முன்னெல்லாம் மதரசாக்களில் ஆன்மீகத்துடன் பௌதீகம், அறிவியல் மற்றும் கணிதம் அனைத்தும் குரான் மற்றும் ஹதீஸின் வழியில் பயிற்றுவிக்கப்பட்டு வந்ததது. பின்னர் மதரசாக்களில் மேலை நாட்டினர் சூழ்ச்சியின் காரணமாகத்தான் குரான் மற்றும் ஹதீஸ் மட்டும் பயிற்றுவிக்கப்பட்டு மற்றவை விடுக்கப்பட்டது. இப்பொழுது குரானும் ஹதீசும் தீவிரவாதியை வளர்க்கிறது என்று மேற்கு நாட்டின் சொறி நாய்கள் குலைக்குது. அதை உண்மை என்று கண்ண மூடிக்கிட்டு நீங்கள் எல்லாம் கனைக்கிறீங்க. நடு நிலைமையோடு ஆராய்ச்சி செய்தல் உண்மை விளங்கும் தம்பி.

           //
           மதத்த சொல்லி மத சார்பின்மை சொல்லி ரொம்ப நாளைக்கி காலந்தள்ள முடியாது தம்பி……என்னைய “மத வாதின்னா” ..கண்டுக்கவே மாட்டேன்….என் பாலிஸி சிம்ப்பிள்….நீ இஸ்லாமிய வெறியன்னா…நான் தமிழ் வெறியன்..ஏன் இந்து வெறியன்னுகூட வெச்சுக்கலாம்…..நி உண்மையாவே மதசார்பற்றவன்னா…நானும் அங்கனமே….

           ச்ச்சூம்மா மதசார்பற்ற வேசம் போட எனக்கு தேவையில்ல…எனக்கென்ன உங்ககிட்ட ஓட்டா வேணும்…?…ஏதோ..இயக்குனர் அமீர் போன்ற நல்ல தமிழ் முஸ்லிம்கள் இருக்கறதால நான் இன்னும் முஸ்லிம்கள வெறுக்க ஆரம்பிக்கல….நீங்க பத்த வைக்காதீங்க…..இத மெரட்டலாவே எடுத்துக்கலாம்…
           //

           இந்த கண்ணாமூச்சி விளையாட்டுக்கு பயந்திருந்தால் இஸ்லாம் இவ்வளவு தூரம் மிக குறுகிய காலத்தில் மக்களிடையே பொய் சேர்ந்து இருக்காது. நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுக்கிறேன். முஸ்லிமாக வந்து குரானிலும் ஹதீஸிலும் என்ன இருக்குன்னு அறியவும். முடியவில்லையா நடு நிலைமையோடு அறியவும். சும்மா ஆர் எஸ் எஸ் கோஷம் போட வேணாம் அம்பி

      • ஆர்வி அவர்களே உங்களுடைய எந்த தனிப்பட்ட வெறியையும் உங்கள் வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொள்வதும்,யார்யார் வரவேண்டும் என்று நீங்கள் உத்தரவு போடுவதும் சரிதான். ஆனால் ஊருக்கு நடுவே நூறு ஏக்கர் நிலம் வாங்கி அதில் ஒரு கோயிலைக் கட்டி அதற்கு சிவன் கோயில்,முருகண் கோயில் என பெயர் வைத்துவிட்டு இன்னாரின்னார் மட்டும் வாங்க மத்தவ்ங்கெல்லாம் போங்க என்று கூற முடியாது. இது எப்படியிருக்குன்னா ஒரு தனியார் முதலாளி சிதம்பரத்திற்கும் தஞ்சாவூருக்கும் பஸ் வுட்டுட்டு இந்தாப்பா நீ ஏறு, யோவ் நீ ஏறாதன்னு சொல்ற மாதிரியிருக்கு. அப்படி சொல்லமுடியாது. அப்படி சொல்லவும் மாட்டான். வேனுமிண்ணா ஆர்வி கோயில்னு வைங்க ஏதோ புது மதக்கடவுள் போலன்னு வரமாட்டாங்க. டூரிஸ்டு பஸ்னா யாரும் ஏற மாட்டாங்கள்ள(புக் செய்தவனைத் தவிர). சிவன் பொதுக்கடவுள் தானே. நூறு ஏக்கர் நிலம் வாங்கி நீ கும்பிட மட்டும் ஏன் கோயில் கட்டுற. அப்புறம் உண்டியல் வைக்கமாட்டே.

       • அஸ்கர்,

        // இது எப்படியிருக்குன்னா ஒரு தனியார் முதலாளி சிதம்பரத்திற்கும் தஞ்சாவூருக்கும் பஸ் வுட்டுட்டு இந்தாப்பா நீ ஏறு, யோவ் நீ ஏறாதன்னு சொல்ற மாதிரியிருக்கு. அப்படி சொல்லமுடியாது. அப்படி சொல்லவும் மாட்டான். //
        சிதம்பரத்துக்கும் தஞ்சாவூருக்கும் பஸ் ரூட் வாங்கி பிறகு பஸ் விட்டால் அதற்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் ஒரு பஸ் வாங்கி என் வீட்டு காம்பௌந்டில் வைத்து நான் விருப்பப்படும் இடத்துக்கு போக பயன்படுத்தினால் அதில் யார் ஏற வேண்டும் என்பது என் இஷ்டம். பஸ்சில் ஏன் ஏற்றவில்லை என்று நீங்கள் கேட்க முடியாது.

        // சிவன் பொதுக்கடவுள் தானே. நூறு ஏக்கர் நிலம் வாங்கி நீ கும்பிட மட்டும் ஏன் கோயில் கட்டுற. அப்புறம் உண்டியல் வைக்கமாட்டே. //
        சிவன் பொது கடவுள் என்பதற்காக என் வீட்டு பூஜை அறைக்குள் நுழைந்து கும்பிட முடியுமா என்ன? நான் கும்பிட மட்டும் கோவில் கட்டுவது என் இஷ்டம். எனக்கு கிறுக்கு என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்களேன்! அதை கேட்க நீங்கள் யார்? உங்களிடம் பணம் கேட்டால் மட்டுமே நீங்களும் உங்களுக்கு அங்கே என்ன உரிமை என்று பேச முடியும்.

        அப்புறம் ஆர்வி அவர்களே என்று ஆரம்பிக்கிறீர்கள். நீ வா போ என்று முடிக்கிறீர்கள். ஏதாவது ஒரே ஸ்டைலை வைத்துக் கொள்ளுங்களேன்!

        • ஆர்.வி.,
         முதலாளித்துவ ஜனநாயகம் பேசுகிறீர்கள். அது முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் பொருந்தி வரும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் அதை மீறுவது தான் சரி!

         • நொந்த குமாரன்,

          ஜனநாயகம் என்றால் என்ன என்று புரிகிறது. இந்த முதலாளித்துவ ஜனநாயகம் எல்லாம் என்ன என்று கூட தெரியாது.

          அப்புறம் சர்வாதிகாரம் – அது முதலாளித்துவ சர்வாதிகாரமாக இருந்தாலும் சரி, பாட்டாளி சர்வாதிகாரமாக இருந்தாலும் சரி – எனக்கு ஒத்து வராத விஷயம். எந்த வித சர்வாதிகாரமாக இருந்தாலும் அதை எதிர்க்கத்தான் செய்வேன்.

        • RV அண்ணே,
         உங்களது காம்பவ்ன்டிற்குள்ளேயும் பூஜையறையுனுள்ளேயும் நீங்கள் எதைவேண்டுமானாலும் செய்யுங்கள். நான் ஒன்றும் உங்களைக் கேட்கவில்லையே.
         கோயில் என்பது சிதம்பரத்திற்கும் தஞ்சாவூருக்கும் பஸ் விடுகிற மாதிரி யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்ற அர்த்தத்தில்தானே எழுதினேன்.
         நீங்கள் (மட்டும்) சாமி கும்பிட நூறு ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவது கிறுக்கு பய செய்ற வேலைன்னு ஒத்துக்கீட்டீங்க. இதற்கு பிறகும் நான் ஒன்னும் உங்ககிட்ட கேட்கலீங்கோ.

   • ஆர். வி.

    தனி நபர் உரிமை என்பதையே எதிர்க்கும் கூட்டத்தினரிடம் தனி நபர் சொத்து உரிமையைப் பற்றி எல்லாம் எப்படி ஐயா பேச முடிகிறது உங்களால் ?

   • கம்யூனிஸ்டுகளை காயடிப்பவர்,

    எல்லாம் பழக்கம்தான், இங்கே சில மாதங்ககளாக வந்து போகிறேனே! 🙂

   • நண்பர் ஆர்.வி, இங்கு நான் சொல்ல வந்தது வெறும் மனிதாபிமான அடிப்படையில் மட்டும்தான்… ஒரு இஸ்லாமியருக்கு உடலில் உள்ள உறுப்பை மாற்றினால்தான் அவர் உயிருடன் வாழமுடியும் என்ற நிலையில் அவர் இது என்னுடைய உடல் எனக்கு இஸ்லாமிய நபரின், அதுவுன் அஹமதிய அல்லாத இஸ்லாமிய நபரின் உறுப்பை தேடுங்கள் என யாரும் கேட்பார்களா என தெரியவில்லை…
    நீங்களும், நானும் ஏன் இங்கு விவாதிக்கும் இஸ்லாமிய நண்பர்களும் , தன உடலில் உள்ள ரத்தத்தை தானமாக கொடுப்பதன் மூலம் ஒருவரின் உயிர் காக்கப் படும் என்றால் நாம் அனைவரும் அதை நிச்சயம் செய்வோம்… இஸ்லாமை விட சிறிதளவு மாறுபட்ட கருத்துள்ள ஒருவரின் கருத்தை எதிர்க்காமல் அவரின் இறந்த உடலை கூட எதிர்ப்பது எனக்கு ஒரு மனிதனாய் ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் இல்லை.

    கம்யுனிசம், சோசலிசம் இதை எல்லாம் விட்டு விடுங்கள்.. ஒரு சாதாரண மனித பிறவியாக நாம் ஒருவருக்கு ஒருவர் மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவி செய்து கூட்டாக வாழ்வதினால் தான் நாம் மனித சமூகம் இவ்வளவு வளர்ச்சியை கண்டுள்ளது… அந்த மனிதாபிமான அடிப்படியில்தான் இறந்த பின்னும் மனிதன் சாதி மதம் கொண்டு பிரிக்கப்படுவதை நினைத்து வருந்துகிறேன்..