Friday, June 2, 2023
முகப்புபள்ளி மாணவி மாரியம்மாள் தற்கொலை: குற்றவாளியைப் பாதுகாத்த போலீசாருக்குத் தண்டனை கொடு!
Array

பள்ளி மாணவி மாரியம்மாள் தற்கொலை: குற்றவாளியைப் பாதுகாத்த போலீசாருக்குத் தண்டனை கொடு!

-

 	பள்ளி மாணவி மாரியம்மாள் தற்கொலை: குற்றவாளியைப் பாதுகாத்த போலீசாருக்குத் தண்டனை கொடு!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்களை கடத்திச் சென்று கற்பழித்த கண்டோன்மென்ட் போலீசு; ஆட்டோ டிரைவர் செல்வத்தை விசாரணைக்கு அழைத்து சென்று ‘கொட்டடிக் கொலை’ செய்து பிணத்தை வெளியில் வீசிய உறையூர் போலீசு; சட்டக்கல்லூரி மாணவி பொன்னம்மாளைத் தற்கொலைக்குத் தள்ளிய கோட்டை போலீசு – என தினவெடுத்துத் திரியும் திருச்சி போலீசின் அட்டூழியங்களுக்கு மற்றுமொரு சாட்சியமாய், தன்னை தூக்கிலிட்டு மரித்து கொண்டுள்ளார் பள்ளி மாணவி மாரியம்மாள்.

திருச்சி தென்னூர் அண்ணாநகரில் வசித்துவரும் கூலித் தொழிலாளி ராணியின் மகள், 9-ஆம் வகுப்பு மாணவி மாரியம்மாள். இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் மளிகைக்கடை வைத்திருக்கும் பொறுக்கி ஆனந்த், மாரியம்மாளிடம் முறைதவறி நடக்க முயற்சித்திருக்கிறான். இதனையறிந்த மாரியம்மாளின் அண்ணன் இராசா பொறுக்கி ஆனந்த்தை கண்டித்திருக்கிறார். காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறியதால், மன்னித்தும் விட்டிருக்கின்றனர்.

அடுத்த நாள், “மன்னிப்பு கேட்க சோன்னியாமே, நான்தாண்டா உன் தங்கச்சிகிட்ட அனுப்பினேன். நாளைக்கும் அனுப்புவேன்” என மாரியம்மாளின் அண்ணன் ராசாவை மிரட்டியுள்ளான், கட்டப்பஞ்சாயத்து பேர்வழியும், புதிய தமிழகம் கட்சியின் பிரமுகருமான மாரியப்பன். இக்கும்பலின் மிரட்டலை கண்டு அஞ்சிய மாரியம்மாளின் குடும்பத்தினர், உடனே, சிறீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மறுநாள் காலையில், தில்லைநகர் உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான கும்பல் “மாரியப்பன் மேலேயை புகார் தர்றீயா?” என புகார் தந்த ராசாவையே துப்பாக்கியை காட்டி மிரட்டி இழுத்து சென்றுள்ளது.
தில்லைநகர் காவல்நிலையம் சென்று நடந்த விவரத்தைக் கூற முயன்ற ராசாவின் தாயாரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காக்கி மிருகங்கள், ராசாவின் கால்களை ஏறி மிதித்தும், பிரம்பால் அடித்தும் சித்ரவதை செய்துள்ளனர். “உன் புள்ள உசுரோட வேணுமுன்னா ரூ. 5000/- பணத்தைக் கொடு” என பேரம் பேசி பணத்தை கறந்திருக்கிறார், உதவி ஆய்வாளர் மனோகரன்.

தன்னால் தன் அண்ணனும், தாயாரும் அவமானப்படுத்தப்பட்டு அலைக்கழிக்கப்படுவதைக் கண்டு கலங்கிய பொன்னம்மாள் தனியாளாகச் சென்று சிறீரங்கம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வளர்மதியிடம் கெஞ்சியிருக்கிறார், “கேசு கீசுன்னு திரும்ப வந்த… உன் அண்ணன் கதைதான் உனக்கும், ஓடுடி வெளியே” என வெறிநாயாக கத்தவே, விரக்தியுற்ற மாரியம்மாள், மனம் வெதும்பித் தூக்கிலிட்டு தன்னை மரித்துக் கொண்டார்.

“தன் சாவுக்கு ஆனந்த் மற்றும் மாரியப்பன்தான் காரணம்” என்று மாரியம்மாள் தன் கைப்பட எழுதிய கடிதம் ஆதரமாக உள்ள போதும், “உடல்நிலை சரியில்லாமல்தான் மாரியம்மாள் இறந்தார்” என போலீசு இதனை மூடி மறைக்க எத்தணித்துள்ளது.

இந்நிலையில், திருச்சி போலீசின் அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடரந்து உறுதியோடு போராடி வரும் ம.க.இ.க., மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர் இதில் தலையிட்டு, “சாவுக்கு காரணமான குற்றவாளிகளையும், காவல்துறையினரையும் வழக்கு போட்டு கைது செய்யும் வரை, உடலை வாங்க மாட்டோம்” என பொதுமக்களை அணிதிரட்டி திருச்சி தலைமை அரசு மருத்துவமனை எதிரே மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

நிலைமை கைமீறிப் போனதையடுத்து, புரட்சிகர அமைப்புகள் களத்தில் இருப்பதை கண்டு பீதியடைந்த போலீசு, குற்றவாளிகளை உடனே கைதுசெய்ததோடு, தில்லைநகர் போலீஸ் ஆய்வாளர் கென்னடி, உதவி ஆவாளர் மனோகரன், சிறீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வளர்மதி ஆகியோரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

முதற்கட்ட வெற்றியை ஈட்டியுள்ள இவ்வமைப்பினர், தொடரும் திருச்சி போலீசின் அட்டூழியங்களைப் பட்டியலிட்டும், ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்திரவிடக்கோரியும் கடந்த 06.07.09 அன்று பெருந்திரளான மக்களுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

ஆனந்த் போன்ற பொறுக்கிகளுக்கு எதிராகவும், இப்பொறுக்கிகளின் புகலிடமாய்த் திகழும் சட்டப்பூர்வ கிரிமினல்களான போலீசுக்கெதிராகவும் வீதியிலறிங்கிப் போராடுவதொன்றே தீர்வு என்ற அறைகூவலோடு மக்களை திரட்டிவரும் இவ்வமைப்பினர், அடுத்தகட்டப் போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

புதிய ஜனநாயகம், ஆகஸ்டு -2009

புதிய ஜனநாயகம் ஆகஸ்டு  2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

…..

தொடர்புடைய பதிவுகள்

ஆணாதிக்கத்தின் அமிலக் காதல் !

ஈழம்: போலீசு இராச்சியமாகிறது தமிழகம்! கருத்துப்படம், முழக்கங்கள்!

இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்படும் காஷ்மீர்!!

  1. தன் சொந்த இன ஏழை எளியவர்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினர்களும் மற்ற அதிகார வர்க்கங்களும் இப்படி அநியாய கொலை கார கும்பல்களாக இருக்கிறார்களே! இதுபோன்ற (காக்கி சட்டை) நாய்களா இலங்கை தமிழர்கள் போன்றவர்களைப்பற்றி கவலை பட்டிருக்கும்?

    நம் இனத்தை அழிப்பதற்கு வேறு எவனும் வெளியில் இருந்து வரவேண்டிய அவசியமே இல்லை. இவர்களை போன்ற பஜாரிகள் ஒன்றே போது, தமிழினம் முழுதும் அழிவதற்கு. இவர்களை இன துரோக குற்றத்திற்காக நடுத்தெருவில் கம்பத்தில் கட்டி வைத்து பொது மக்கள் அனைவரின் சாட்சியுடன் சுட்டு பொசுக்க வேண்டும். இதுவே மக்களின் நீதி!

  2. மக்களை கட்டுக்குள் வைக்க அரசு போலீசை வேட்டை நாயாக வளர்த்து வருகிறது. போலீசும் தன்னிஷ்டத்திற்கு நடக்கிறது. அரசு, போலீசு, ரவுடி, அரசியல்வாதி என இந்த கள்ள கூட்டணியை எதிர்த்து போராடி ஆரம்பகட்ட வெற்றியை ஈட்டியுள்ளனர். அடுத்தகட்ட வெற்றிபெற புரட்சிகர அமைப்பினருக்கும், பெருந்திரளாக போராடிய மக்களுக்கும் வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க