முகப்புஜூ.வி ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன்? - இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் - தெரியாத...
Array

ஜூ.வி ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன்? – இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் – தெரியாத செய்திகள்!

-

இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள்

தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக  வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து,  நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தியதில் பல லட்சமோ, கோடியோ மோசடி நடந்திருப்பது உறுதியானதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் விகேஷ் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதைக்காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டத்தக்க குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. அது விகேஷ் இலங்கைத் தூதரகத்துடன் வைத்திருந்த உறவு தொடர்பானது. இன அழிப்புப் போரின் போது தமிழகத்து அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும் ‘திறமையாக’க் கையாண்டதற்காக சென்னையில் இலங்கை அரசின் துணைத்தூதராக இருந்த அம்சாவுக்கு பதவி உயர்வு கொடுத்து இலண்டனுக்கு அனுப்பி வைத்தது, இலங்கை அரசு. தமிழ் ஊடகவியலாளர்களில் சிலர் அம்சாவோடு மிக நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார்கள். போருக்கு முன்னர்; இலங்கை அரசின் பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. போரின் வெற்றிக்குப் பின்னர், செய்த வேலைக்காக சன்மானமும் விருந்தும் வைக்கப்பட்டது.

Hamsaஅம்சாவிடம் கேள்வி எழுதிக் கொடுத்து ராஜபட்சேவிடம் பதில் வாங்கி, அதைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன, சில ஊடகங்கள். போர் தீவீரமாக நடந்த காலத்தில் வழக்கறிஞர்களும் மாணவர்களும் அரசியல் அமைப்புகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடிய காலத்தில், இலங்கைத் தூதரகம் துரோகி கருணாவின் நேர்காணலுக்கான ஏற்பாட்டைச் செய்து, இங்குள்ள எல்லா பெரிய ஊடக நிறுவனங்களிலும் அது வெளியானது. ஜூனியர் விகடன் இரண்டு வாரமாக துரோகி கருணாவின் பேட்டியை வெளியிட்டது. இந்த நேர்காணல்களை  வெளியிடும் சுதந்திரம் எல்லா ஊடகங்களுக்குமே உண்டு என்று வாதிடலாம்.  ஆனால், அதிர்ச்சிகரமான செய்தி என்ன வென்றால்,  புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் பா.நடேசனின் நேர்காணலை ஜூனியர் விகடனும், டெக்கான் குரோனிக்கலும் வெளியிட மறுத்து கருணாவின் நேர்காணலை வெளியிட்டதுதான்.

தமிழ் ஊடகங்களில் உள்ள கணிசமான பத்திரிகையாளர்கள் வளைக்கப்பட்டார்கள். சில மானமுள்ள பத்திரிகையாளர்கள் அம்சாவின் அன்பளிப்புகளைப் புறக்கணித்தும் இருக்கிறார்கள்.இலங்கை தூதரகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதிய ஊடகங்களும் உண்டு. போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலம் பேசும் ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டியும். தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை சென்னையிலேயே குளிப்பாட்டியதும் கூட நடந்திருக்கிறது.

இதில் விகேஷ் மட்டுமல்ல, ஜுனியர் விகடன் குழுமத்தில் இப்போதும் பணியாற்றிவரும் ஒருவர்தான் அம்சாவுக்கு அதிகமான தரகு வேலை பார்த்ததாகவும், இப்போது புதிதாக வந்திருக்கும் துணைத் தூதருக்கும் அவரே ஊடகத் தரகராக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இவரது பணி வித்தியாசமானது; யாராவது புலிகளை ஆதரித்து எழுதினால், உடனே இவர் விகடனின் தீவீர வாசகர் என்ற போர்வையில் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு விகடன் நிர்வாகத்தினரைப் பார்க்கச் செல்வார். இவர் அழைத்துச் செல்லும் நபர் இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்படுபவராக இருப்பார். இவர் போய் ‘விகடனில் ஒரே புலி ஆதரவு கட்டுரையாக வருகிறது’ என்று பற்ற வைப்பார். இலங்கை தூதரகத்தால் இவருக்கு வழங்கப்பட்ட பல பணிகளில் இதுவும் ஒன்று.

தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சென்னை அரசினர் தோட்டத்திற்குள் இருக்கும் பத்திரிகையாளர் மன்றம் என்கிற அமைப்பின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகவியலாளர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் போது ஒரு பைசாத் தமிழன் இதழை நடத்திய அயோத்திதாசப் பண்டிதரின் பெயர் முதல் தினத்தந்தி  ஆதித்தனார் பெயர் வரை, ஏதாவது ஒரு ஊடகவியல் சார்ந்தோரின் பெயரை வைத்திருக்கலாம்.

ஆனால், அக்கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? ” எஸ்.ஆர். எம். மாளிகை”. அதாவது, எஸ்.ஆர். எம். கல்லூரி முதலாளி பச்சைமுத்துவின் நிதியில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டதால், அவர் பெயரையே கட்டிடத்திற்கு வைத்து விட்டார்களாம். இலங்கை அரசின் முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் விருது வாங்கியவரும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கிவருபவருமான ஹிந்து ராமைக் கொண்டு ‘எஸ்.ஆர்.எம்‘  என்ற அந்தக் கட்டிடம் திறக்கப்படுகிறது என்றால், பத்திரிகையாளர் மன்றத்தின் இன்றைய சில துரோக நிர்வாகிகளுக்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை ஊடக நிறுவனங்கள் விசாரித்திருக்க வேண்டும்.

எஸ். ஆர்.எம். கல்லூரியின் மர்ம அறையில் மாணவர்களை அடைத்து வைத்துத் தாக்கியதும். அந்தக் கல்லூரியின் தொழில் நுட்பச் சான்றிதழ்கள் செல்லாதவை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்தது குறித்தும் எஸ். ஆர். எம். கல்லூரி நிர்வாகத்தின் கட்டணக் கொள்ளை குறித்தும் யோக்கியமான எந்தப் பத்திரிகையாவது வெளியில்  கொண்டு  வந்திருக்கிறதா? போர் கொடூரமாக நடந்த காலத்தில், போர் நிறுத்தம் கோரியோ சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை இந்த ஊடக அமைப்பு. காரணம் இதில் தலைமைப் பொறுப்பில் உள்ள சிலர் எது செய்தாலும் இந்து ராமிடம் கேட்டுத்தான் செய்வார்களாம்.

ஈழத்தமிழினத்திற்கெதிராக நடைபெற்ற ஒரு இன அழிப்பு போரை இருட்டடிப்பு செய்வதற்காகவும், சிங்கள இனவெறி அரசை நியாயப்படுத்துவதற்காகவும் கைநீட்டி காசு வாங்கிய பத்திரிகையாளர்களின் குற்றம் வெறும் ஊழல் குற்றமல்ல. அது போர்க்குற்றத்திற்கு இணையாக, தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றம். இவர்கள் இனப்படுகொலையின் கூட்டாளிகள்.

எண்ணிப்பாரக்கவே இயலாத இந்த அருவருப்பான நடவடிக்கை சிறு சிறு ஊழல்கள் வழியாகத்தான வளர்ந்து விசுவரூபமெடுத்திருக்கிறது. மாணவ நிருபராக இருந்து ஜுனியர் விகடனுக்கு நிர்வாக ஆசிரியராக வந்தவர்தான் விகேஷ். பொறுப்புக்கு வந்த மாணவ நிருபர்கள் மிக மிக தந்திரமாக செய்த ஒரு விஷயம், தங்கள் இருப்புக்கு இன்னொரு மாணவ நிருபர் உலைவைத்து விடாமல் பார்த்துக் கொண்டதுதான். ஒரு கட்டத்தில் மாணவ நிருபர்களின் வரவே குறைந்து ஒப்புக்கு மட்டும் அந்தத் திட்டம் இப்போது விகடனில் இருப்பதாக அறிய முடிகிறது.

நேர்மை, ஊடக தர்மம், எழுத்தை மட்டுமே நம்பி வாழ்கிற பத்திரிகையாளர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், ஊழல், செல்வாக்கை வளர்த்து அதிகார பீடங்களுக்கு  வருபவர்கள் திறமைசாலிகளாகச் சித்தரிக்கப்பட்டதும்  ஊழல்மயப்பட்ட ஊடக ஒழுக்கம் கட்டமைத்த கருத்தியலே. அந்தக் கருத்தியலின் ஒரு நவகால அடையாளம் மட்டுமே விகேஷ். ஒரு எல்லை வரை ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற இழி செயல்களை எல்லா ஊடக நிறுவனங்களும் அனுமதித்தே வந்திருக்கின்றன. தமிழ் மக்களின் மனச்சாட்சி. நாடித்துடிப்பு என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்த ஊடகங்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மிகவும் சொற்பமானது. உழைப்பைச் சுரண்டி ஊதியம் கொடுக்காத முதலாளிகள் ஒரு எல்லை வரை தனது நிருபர்கள் வெளியில் லஞ்சம் வாங்குவதை  அனுமதிக்கிறார்கள். இதுதான் பெரும்பலான தமிழக பத்திரிகையாளர்களின் நிலை.

தொடக்க காலத்தில் போலீசு அக்கிரமங்களை வெளிக்கொண்டு வந்த ஜுனியர் விகடன், நாளடைவில் போலீசு புகழ்பாடத் துவங்கியது. போலீசை வைத்து வாசகர்களுக்குச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலைக்கு அது வளர்ந்து சென்றது. சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த  பல்வேறு வழக்கறிஞர்கள் இருக்க, போலீசாரைக் கொண்டு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடங்குகிறது விகடன் நிருபர்களின் போலீசு கூட்டு. ரௌடி, போலீசு, அரசியல்வாதி கூட்டணியோடு பத்திரிகையாளர்களில் சிலரும் இணைந்து வளர்ந்த கதை சுவாரசியமானது. போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்துகளில் பத்திரிகையாளர்களும் கூட்டு சேர்ந்து தொழில் துரோகம் செய்த விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. காலம் தோறும் இத்தகைய மோசடிப் பேர்வழிகள் குமுதம், விகடன் குழுமம், நக்கீரன் என எல்லா ஊடகங்களிலுமே இருந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதிர்சியளிக்கும் விஷயமாக அத்தனை பேரும் பேசிக் கொள்வது விகடனுக்குள்ளேயே இது நடந்து விட்டது என்பதுதான்

பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் எங்களுடையது என்று மூச்சுக்கு முந்நூறு தடவைச் சொல்லிக் கொள்ளும் விகடன் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறான வகையில் பயன்படுத்திய மோசடிப் பேர்வழி விகேஷ் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்கிற கேள்வி இங்கே முக்கியமானது. சில வருடங்களுக்கு முன்பு இதே ஜுனியர்விகடனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றில் செய்தியை வெளியிடாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுகிற தொனியில் பேசி வகையாகச் சிக்கிக் கொண்டார். அப்போது ஜூனியர் விகடன் நிர்வாகத்தினர், அவரை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். விகேஷ் போன்றோரின் குற்றங்களை ஒப்பிடும்போது அது மிகச்சாதாரண குற்றம்.

இலங்கைத் தூதரின் விருந்தைச் சுவைத்தவர்கள் முதல் எலும்பைச் சுவைத்தவர்கள் வரையிலான எல்லா குற்றவாளிகளும் அடையாளம் காட்டப்படவேண்டும். இதனைத் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் உரிமை. ஆதாரங்கள் தெரியாத வண்ணம் இழைக்கப்படும் இத்தகைய குற்றங்களுக்கான ஆதாரங்களை அம்பலமாக்குவது நேர்மையான பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் கடமை.

-புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

 1. பிரபல இதழில் லங்கா உளவாளி – அதிர்ச்சி ரிப்போர்ட்!…

  ஜூ.வி ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன்? – இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் – தெரியாத செய்திகள்! https://www.vinavu.com/2009/09/04/spy/trackback/

 2. விகடன் குழுமம் இந்து பத்திரிக்கை போல பக்க சார்பாக எழுதும் என்பது தெரிந்தது தான். ஆனால் இலங்கையரசின் கைக்கூலியாக செயல்படுகின்றனர் என்பது அதிர்ச்சியாக உள்ளது.

  விகடன் பாரம்பரியமிக்க பத்திரிக்கை என சொல்கிறார்கள். கைக்கூலி பெறுவதும், காட்டி கொடுப்பதும், மக்களுக்கு துரோகம் தான் இவர்களின் பாரம்பரியம் போலும்.

 3. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  http://www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவண்
  உலவு.காம்

 4. கைக்கூலி பெற்றும், காட்டி கொடுத்தும் கருநாயையும் காங்கிரசையும் ஆட்சியில் அமர்த்தியதோடு இன்றும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் தமிழ்நாட்டு மக்களில் ஒருவர்தான் விகேஷ்

 5. U have brought out a good artilce that Vikesh got link with Hamsa. But most of bloggers will not obejct Vikatan or vikesh, becasue Vikatan only publishes bloggers’ articles, poems..

 6. இலங்கைப் பிரச்சனை மட்டுமல்ல – காவிரிப் பிரச்சனையில் கூட ஜீவி தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்த மத்திய குழு இங்கே மழைக்காலத்தில் ஓடிய வெள்ளத்தைப் பார்த்து, தமிழகத்தில் காவிரி பிரச்சனையால் பிரச்சனை இல்லை என்று பாசிசமாக எழுதியது.

 7. hi vinavu,really i wont like type a comment, but this is first time i put comment. becoz it is awesome news. keep it up…you are not intelligent,but you are making intelligents guys.byeeeeeeeeeeeeeeee.

 8. If vikesh dismissed for support to Lankan govt, it is totally wrong. Moreover, LTTE is organisation & it is enemy for not only srilanka & india , other peace loving people. if anyone support to osama, Can he run his Magazine i in US. BUt if vikesh is dismssed for his involvement in Katta Panchayat then it is no problem. Please not support to lanka govt is support action against terrorism only. It is for creating unity with in the unified srilanka

 9. பத்திரிக்கைகளின் லட்சணம் இதுதான். இவர்கள் பொதுவாகவே மக்களுக்கெதிரானவர்கள்தான், இலங்கையில் சிங்கள பாசிச வெறிநாய்கள் துப்பாக்கியால் செய்ததை இந்த நான்காவது தூண்கள் பேனாவால் செய்தன
  தமிழினத்தின் மீது மோசமான பேரழிவை தொடுத்த சிங்கள இனவெறி நாய் ராஜபட்சேயின் அடியாள் அம்சா உயிரோடு இங்கிருந்து வெளியே சென்றிருக்கிறான் என்றால்
  நம் அடிமைத்தனத்தையும்,கையாலாகாத்தனத்தையும் தமிழ்தேசியம் பேசும் ‘மாவீரன்களின்’ யோக்கியதையையும் என்னவென்று சொல்ல?

 10. புலிகள் மக்களை மனிதகேடயங்களாக
  பயன்படுத்துகிறார்கள் என்று எழுத
  இந்திய அரசு உங்களுக்கு எவ்வளவு
  கொடுத்தது என்று சொல்லவே இல்லை

  நம் அடிமைத்தனத்தையும்,கையாலாகாத்தனத்தையும் தமிழ்தேசியம் பேசும்
  ‘மாவீரன்களின்’ யோக்கியதையையும் என்னவென்று சொல்ல?

  ஏம்பா இந்தியதேசிய மாவீரனுகளா
  நீங்கள் அம்சாவின் மயிரைப் பிடுங்குவதை
  யார் தடுத்தது போய் பிடுங்கி இருக்க
  வேண்டியதுதானே

  அம்சாவிடம் கேள்வி எழுதிக் கொடுத்து ராஜபட்சேவிடம் பதில் வாங்கி, அதைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன, சில ஊடகங்கள்.//

  உங்க புதிய ஜனனாயகமும்தானே

  இலங்கை அரசின் பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. போரின் வெற்றிக்குப் பின்னர், செய்த வேலைக்காக சன்மானமும் விருந்தும் வைக்கப்பட்டது.//

  மருதையன் ஆஜராயிருந்தாரா

  உங்க அருமைத்தோழர் இரயாகரனின் இணையதில்
  இருந்து எடுத்த செய்திகளைத்தான் ஜூவி
  பெரும்பாலும் வெளியிட்டது.

  இப்ப மேட்டர் புரியுது

  விகேஸ் இலங்கை அரசின் கூலினா
  அப்போ இரயாகரன் யாரு?

  ஜூவிக்கு செய்தி தானம் செய்த
  இரயாகரன் இவர்களுக்கு தோழராம்
  செய்தியை எடுத்துப்போட்ட விகேஸ்
  மட்டும் துரோகியாம்

  அப்பாலிக்கா இராயாரனோட தோழர்கள்
  விகேசோட தோழர்கள் ஆகி இலங்கை
  அரசோட தோழர்களா மாறின
  மேட்டர் இப்பதான் புரியுது

 11. உண்மையை விசாரிக்காமல், எழுதப்பட்ட அவதூறான பதிவு இது. விகேஷ் நீக்கத்திற்கு காரணம் என்னவென்று விசாரிக்காமல், வதந்திகளை நம்பி வினவு இப்பதிவு எழுதியது மிகவும் வருத்தத்தை தருகிறது. காவல் துறை அதிகாரிகள் இவ்விஷயத்தில் எத்தனை விஷமத்தனமான விளையாட்டுக்களை விளையாடியுள்ளார்கள் என்பதை அறியாமல் தாங்கள் இவ்வாறு எழுதியுள்ளது, வருத்தமளிக்கும் விஷயம்.

  • ஜெயகாந்தன்,

   இந்தக்கட்டுரை குறித்து புதிய ஜனநாயகம் தோழர்களிடம் கேட்டபோது உறுதி செய்யப்பட்ட ஆதரப்பூர்வமான தகவல்களை வைத்தே எழுதியிருப்பதாக கூறியதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மற்றபடி இதில் என்ன அவதூறு, காவல் துறை அதிகாரிகளின் விசமத்தனமான செயல்கள் எல்லாம் பற்றிய விவரங்களை நீங்கள் தரலாமே? அல்லது ஜூ.வி நிர்வாகமே இதற்கு விளக்கமளிக்கலாமே?

   இலங்கைத் தூதர் அம்சாவால் இங்கு பல பத்திரிகையாளர்கள் குளிப்பாட்டப்பட்டதும், விலைக்கு வாங்கப்பட்டதும் எல்லோரும் அறிந்த ஒன்று. இதில் அவதூறு எங்கே உள்ளது?

 12. முதலில் பத்திரிக்கையாளர்கள் யார்? பொறி பறக்க வசனம் பேசி பறந்து பறந்து டைவ் அடித்து பின்னர் நாயகனாகவோ அல்லது மக்கள் பிரச்சினைகளை பல தடைகளைத்தாண்டி தீர்ப்பவர் என்று நம்பினால் அதற்கு 40 ரூ பணம் கொடுத்து சினிமாவுக்குத்தான் போக வேண்டும். எந்த ஒரு பிரச்சினையோ பத்திரிக்கையாளர்களுக்குத்(பலர்) தெரியாமலில்லை. அந்தப்பிரச்சினையால் தனக்கு ஆதயம் இருந்தால் தான் வெளிப்படும்.

  உதாரணத்துக்கு தேர்தல் நேரம் எனில் இந்தப்பத்திரிக்கையாளர்கள் பணத்தினை ஒரு அள்ளு அள்ளுவார்கள். ஒரு பேட்டி அல்லது கூட்டம் முடிந்தவுடன் யார் ‘கவர்’ வாங்காத பத்திரிக்கையாளரோ அல்லது செய்தி செய்திசேகரிப்பாளரோ வெத்தலையில் மை போட்டு ஒருவரை கண்டு பிடிக்க வேண்டும்.

  எனக்கு தெரிந்த ஒருவர் தொலைக்காட்சியில் செய்தி சேகரிப்பாளராக, பத்திரிக்கையாளராக இருந்தார். அவர் கூறுவார் ஒழுங்காக யாருக்கு ஓட்டு போடணும்னு தெரியாத முட்டாளுங்க என்பார் மக்களை. உங்க டீவியப்பத்தி பேசுங்க என்றார் என்னங்க பண்றது என்பார். பத்திரிக்கையில அவனைபோய் பேட்டி எடுத்து அவனை என்று ஆரம்பிப்பதற்குள்…..எல்லாம் தெரியுங்க என்ன பண்றது என்பார்.

  தான் தான் எல்லாம் என்ற மனப்பான்மை ஒரு புறம் மறுபுறம் பணம் கொடுத்தால் அல்லது விளம்பரம் கொடுத்தால் அந்த நிறுவனத்தைப்பற்றி நல்லபடியாக எழுதுவது என்று காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

  தங்கள் தொழிலுக்குக்கூட நேர்மையாய் இல்லாது மக்கள் பிரச்சினையின் போது ஆளும் வர்க்கத்தின் எச்சில் எலும்புக்கு பிளக்கும் அவர்களது வாய்கள் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசிடுமா என்ன?

  பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள் எனில் எனில் எல்லோரையும் சொல்லவில்லை சிலர் மட்டும் தான் அதிகமில்லை 100க்கு 99.9999999999% தான்!!!!!

  கலகம்

 13. Udaga Vibachaarigal
  Ithu avargal Kula thozhil… nammil Hindu padipavargal arivaaligal yendrum
  Hindu Raam periya arivu jeevi yendrum nam makkal ninaippathum muttalthanam….

 14. தோழர் வினவு!

  சிங்களவனிடம் பணம் வாங்கி கொண்டு பலர் எழுதுவது போல சிங்களவர் சிலரைவாவது இங்கு எழுத வைக்க முடியாதா? ஈழ தமிழர்கள் சுட்டு கொல்லபடும் காணோளியை வெளியிட்டதே சிங்கள படைவீரன் தான் அதை விலை கொடுத்து வாங்கியது சேனல் 4 தான் என அனைவருக்கும் தெரியும்.. இன்னும் பல கிளிப்புகள் ராணுவ வீரர்களிடம் உலவிகொண்டு உள்ளனவாம்.. யாரவது சிங்களம் கற்ற தமிழர்கள் ஒன்றிணைந்து அவற்றை மீட்டு உலகத்திடம் நீதி கேட்க வேண்டும்..

  இது போகட்டும்.. இங்குள்ள பொதுசன ஊடகங்கள் என்ன செய்கின்றன ஈழ தமிழர்கள் 50000 படுகொலை செய்யபட்ட அன்று திருடா திருடி படம் போட்டு கொண்டு இருக்கிறார்கள்.. இவர்கள் தமிழர்களை குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் விலைபோவார்கள் என மிகச்சரியாக கணித்தது தான் ..குறுக்குசால் ஓட்டுவது என்பார்களே அதில் நம்மவர்கள் கைதேர்ந்தவர்கள் என மிகச்சரியாக புரிந்து வைத்ததுதான்..

  மாற்றத்திற்கு என்ன வழி:

  தமிழக தமிழர்களுக்கு இன உணர்வினை ஊட்டுதலும் இங்கு அவசியமாகிறது.. தமிழக தமிழருடைய இன உணர்வினை தடுப்பது.. புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு ..அவர்கள் வீசும் எலும்பு துண்டுகளுக்கு..தமது சூடு சொரணை.. மனைவி..மக்கள் மற்றும் தமிழக தமிழர்களாகிய நம்மையும் விற்கும் திராவிட கட்சி கும்பல்களும் அவர்தம் தொல்லைகாட்சிகளும்தான்..தமிழனை சிந்திக்க விடாமல் மானாட மார்பாட,குத்தாட்டம்.பார்ப்பவர்களாகவும்..ரசிகர்களாகவும், பெண்களை சீரியல் பார்க்கும் அழு மூஞ்சிகளாகவும் வைத்திருக்கிறார்கள்..மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டால் இவர்கள் வாழ்வு அவ்வளவுதான் என இவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது..நன்றாக திட்டமிட்டே செய்கிறார்கள்..தமிழர் அவலங்களை காட்ட மறுக்கிறார்கள்..எவன் செத்தால் எனக்கென்ன என்ற மனப்பான்மையை வளர்க்கிறார்கள்.

  மதிய நேரத்தில் குறைந்த பட்சம் நம்முடைய தாய்மார்களுக்கு குடிசை தொழில் அல்லது நடுத்தர வர்க்கமானல் இணையத்தின் வழி எத்தனையோ முறைகளில் சம்பாதிக்க வழி உள்ளது. அவற்றினை கற்று கொடுங்கள்.இந்த சீரியல்கள் மற்றும் பிற ஈழவுகளில் இருந்து விடுபட செய்யுங்கள்.மராத்திய வீரன் சிவாஜியை அவனுடைய தாயார் உருவாக்கியது போன்று நம்முடைய தமிழ்நாட்டிலும் ஒரு இனத்திற்காக போராடும் ஒப்பற்ற வீரனை நம்முடைய தாய்மார்களாலும் உருவாக்க முடியும்.

  • “சிங்களவனிடம் பணம் வாங்கி கொண்டு பலர் எழுதுவது போல சிங்களவர் சிலரைவாவது இங்கு எழுத வைக்க முடியாதா? ”

   Where is the right to trurh. If every one bribes the other to get news in favour of each party who is the loser and what is lost? The ordinary people are denied the right information and truth becomes a fragile victim.

   • தோழர் தாங்கள் எந்த உலகத்தில் இருக்கீர்கள் என்று தெரியவில்லை.. இந்த நாடு லஞ்ச லாவணிய பேய்களின் கூடாரமாக போய்விட்டது ..அவர்கள் வழியில் சென்றுதான் அவர்களை மடக்கவேண்டும்..எந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும் என நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்-மாவொ

 15. http://www.vinavu.com என கூகிளில் அடித்ததும்… முதலாவதாக வந்து நிற்கிறது இப்படி!

  //வினவு, வினை செய்!Neenga solrathu 99.9% thamilanukku purithayu. kkr: Good article . it is having a very clear message. i think this is high time that vinavu should keep back …
  http://www.vinavu.com/ – Cached – Similar// ஒரு தகவலுக்காக!

 16. இலங்கைத் தூதரகத்தால், இங்கு பல பத்திரிக்கையாளர்கள் குளிப்பாட்டப் பட்டது உண்மையென்றாலும் கூட, விகேஷ் அவர்கள் பற்றி தாங்கள் எழுதியுள்ளது தான் அவதூறு என்கிறேன். அம்சா பணியிலிருந்து விடைபெற்ற பொழுது சென்று சந்தித்த பத்திரிக்கையாளர்கள் பட்டியலிலும், புதிய தூதர் பதவியேற்றவுடன் சென்று சந்தித்த பத்திரிக்கையாளர்கள் பட்டியலிலும் விகேஷ் இல்லை என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஜுனியர் விகடன் இதழுக்கு எதிராக மத்திய அமைச்சர் ராசா மற்றும் புறநகர் கமிஷனர் ஜாங்கிட் ஆகிய இருவரும் ஜுனியர் விகடன் இதழுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற அந்த இதழின் நிர்வாகம் ரகசியமாக செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விளைவே விகேஷின் நீக்கம். மீண்டும் ஒரு முறை தங்களை நன்கு விசாரணை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 17. vaNakkam, vikeesukku vakkaalaththu vaangkuvathil jeyakaawthan een ivvaLavu mun wiRkiRaar enbathu theriyavillai. vikeesh yookkiyamaanavar enbathaRku avar sollum kaaraNangkaL uutakaththuRaiyil allaathavarkaLai wambavaikkamutiyum. uurootu seerwthu amsaavais sawthikkum battiyalil vikeesh ebboothum illai. munnaaL thuNaiththuuthar wakathvala weebaaLaththukku maaRRal aaki, amsaa ingku vawthu oottal briisil muthal beeti aLiththathu muthal birivu ubassaara wikazvuvaraiyil vikeesh awthab battiyalil illai enbathu uNmaithaan. matrabati amsaavai vikeesh yaarutan engku ebboothu beesinaar enbathaRku vutlantS traiv innum taajum ataiyaar baarkkum vaay iruwthaal ootivawthu bathil sollum.////////////////////////////////// jeyakaawthan solvathai veeRu oru vakaiyil waan eeRRukkoLkiReen. thamiz uNarvaaLarkaL ena aRiyabbatum bothu aRivaRRa thamizarkaL wambuvathuboola amsaa thotarbukkaaka vikeesai vikatan wirvaakam wiikkavillai enbathee wijam. wuuRRukkum meeRbatta mirattal baththirikaiyaaLarkaLil oruvaraana vikeesukkum avar baNiyaaRRiya baththirikaikkum itaiyilaana eethoo oru birasnaiyileeyee avar ewthavitha mun aRivibbum illaamal vaayilil vaiththu kaar saavi bitungkabbattu tholaibeesi iNaibbu thuNtikkabbattu vikatan varalaaRRil ithuvarai wikazwthiraathabati mikavum avamaanakaramaaka veLiyeeRRabbattaar. vikatan wirvaakaththin iwtha baththirikaiyaaLar saddavirootha wadavadikkaiyai ethirththu, vikeesai vazakkaatumaaRu jeyakaawthan boonRavarkaL valiyuRuththalaam. ithai mattum vikeesh seythaal, avarai yookkiyar ena wambalaam.

 18. அவர் ரொம்ப யோக்கியம் என்று ஜெயகாந்தன் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்கு முன் இதற்கு பதில் சொல்லட்டும். ஆபிஸுக்குள்ள நுழையக்கூடவிடாம விகேஷை வாசலில்லயே நிறுத்தி வெச்சு வாட்ச்மேனைவிட்டு டிஸ்மிஸ் லெட்டரை கொடுக்கச்சொல்லி கழுத்தைப்பிடிச்சு தள்ளாத குறையா வீட்டுக்கு அனுப்பி வெச்சிருக்கு விகடன் நிர்வாகம். தன் மேல எந்த தப்பும் இல்லேனா ஏன் இன்னமும் விகேஷ் ஆபீஸுக்கு எதிரா எந்த நடவடிக்கையும் எடுக்கலை? இதுக்கு ஜெயகாந்தனோ விகேஷ் தரப்போ பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
  பதில் சொல்ல முடியாது. காரணத்தை வரிசையா நான் சொல்லட்டுமா? அவரோட பணத்தாசை அவர் கூட ஒர்க் பண்ற எல்லாருக்கும் நல்லாத் தெரியும். இது அவரோட பர்சனல் விஷயம். பப்ளிக்கா சொல்லக்கூடாதுதான். இருந்தாலும் சொல்றேன். அவர் மனைவிக்கு பார்வைல குறைபாடு இருக்கு. ஒரு வகைல அது ஊனம். அந்தப் பெண்மணியை இவர் திருமணம் செய்த்தே பணத்துக்காகத்தான்னு அவரே தன் நண்பர்கள்கிட்ட வெளிப்படையா பெருமையா சொல்லியிருக்கார். பொழைக்க தெரிஞ்சவராம். அந்தப் பெண்மணி வீட்டுக்கு ஒரே பொண்ணாம். அதனால அந்த வழில சொத்தெல்லாம் தனக்கே கிடைக்கும் என்று அவர் கணக்குச் சொல்லி சிரிச்சதை இப்ப அவரோட நண்பர்கள்ல பலபேரு சொல்லிச் சொல்லி வேதனைப்படறாங்க.
  அவர் இப்ப இருக்கற வீடு அவர் எவ்வளவு யோக்கியம்ங்கறதுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. பத்திரிகையாளர்களுக்குனு ஒதுக்கப்பட்டிருக்கற ஒரு குடியிருப்புலதான் இப்பவும் விகேஷ் வசிக்கறார். அங்க குடியிருக்க சில ரூல்ஸ் இருக்குது. அதாவது அங்க இருக்கறவங்களுக்கு தன் பெயரிலோ தன் மனைவி/ கணவன் பெயரிலோ எங்காவது சொந்த வீடு இருந்தா அந்த குடியிருப்புல இருக்க்க் கூடாது. ஆனா விகேஷ் என்ன செய்தார்ன்னு கேளுங்க? அவர் மனைவி பேர்ல சாலிகிராமத்துல சொந்தமா ஒரு வீடு வாங்கி வெச்சிருக்கார். இன்னைக்கு தேதிக்கு அதோட மதிப்பு அரை கோடி. அப்படி ஒரு வீடு இருக்கறதையே மறச்சு (கவனிக்க வேண்டியவங்கள கவனிச்சு) இப்பவும் குறைஞ்ச வாடகைக்கு இந்த வீட்டுல இருக்கறார். நியாயமா பார்க்கப்போனா ஏழைப் பத்திரிகையாளன் யாரோ ஒருத்தருக்கு சேரவேண்டிய வீடில்லையா அது. இதே இடத்துல முன்ன ஞானி இருந்தாரு. அப்புறமா திருவான்மியூர்ல அவருக்கு வீடு கட்டிகிட்டதும் முதல் வேலையா இந்தக் குடியிருப்பை காலி பண்ணிட்டார். இவருக்கு ஏன் அந்த எண்ணம் வரலை? ஏன்னா காசு ஆசை.
  இதையெல்லாம் விடுங்க. போன வருஷம் அண்ணாநகர் முகப்பேர்ல வீட்டு வசதி வாரியம் வசதி இல்லாதவங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பை ஒதுக்கியதே. அதுலயும் இவர் தன் பேர்லயும் தன் மனைவி பேர்லயும் அப்ளிகேஷன் போட்ட கேவலமும் நடந்திருக்கு. சொந்தவீடு, குறைந்த வாடகைல ஏற்கெனவே சலுகை வீட்டுல இருக்கறவங்க, அப்புறம் குறிப்பிட்ட அளவுக்கு மேல சம்பளம் வாங்கறவங்க இவங்கல்லாம் இதுல விண்ணப்பிக்க கூடாதுன்னு அந்த அப்ளிகேஷன்ல கிளியரா ரூல்ஸ் போட்டிருந்தும் அத்தனையும் தூக்கி குப்பைல போட்டுட்டு நம்ம விகேஷ் அண்ணாத்தே அப்ளிகேஷனை தட்டிவிட்டிருக்கார். அதையும் சொல்ற இட்த்துல சொல்லி வீடு வாங்கிருவேன்னு ஆபீஸ்ல ஜம்பமா சொல்லிட்டிருந்தார். யார் கொடுத்த அட்வைஸோ கடைசில சிபாரிசுக்கெல்லாம் போகாம அப்ளிகேஷனோட நிறுத்திட்டார். குலுக்கல்ல இவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. வீடு கிடைக்காமப் போயிடுச்சு. கிடைச்சிருந்தா தலைவரு அதுலயும் கணிசமா ஒரு லாபத்தைப் பார்த்திருப்பார். இதை நடக்கவே இல்லைனு விகேஷ் சொல்லட்டும் நான் நாண்டுகிட்டுச் செத்துப்போறேன்.
  இவரோட இன்னொருத்தரையும் சேர்த்து ஆபிஸ் கல்தா கொடுத்த கதைக்குபின்னால இருக்கற காரணம் தெரியுமோ? சொல்றேன். ஒரு பத்திரிகையில சம்பளம் வாங்கிட்டு இன்னொரு பத்திரிகைக்கு வேலை பார்த்தா எந்த முதலாளிதான் சகிச்சுக்குவார்? ஐயா விகேஷ் அவர்கள் அந்தக் காரியத்தையும் கூசாம செஞ்சார். தான் மட்டுமில்லை தனக்கு கீழ வேலை பார்த்தவங்களையும் அந்தக் காரியத்தை செய்யவெச்சார். இந்தியன் ரிப்போர்ட்டர் என்று ஒரு அரசியல் பத்திரிகை வருகிறது. அதன் ஆசிரியர் கிருஷ்ணகுமார் விகேஷுக்கு குடும்ப நண்பர். அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என்று குறுக்குவழியில் பேர் எடுக்க மெனக்கெடற ஆள் அந்த கி.கு. அவருக்கும் இவருக்கும் குடுக்கல் வாங்கல் பலவருஷமா கனஜோரா நடந்துட்டு வருது. அந்தப் பத்திரிகைக்கு மேட்டர் சப்ளை யார் தெரியுமில்ல அண்ணன் விகேஷ்தான். தான் மட்டும் அந்த சேவையை செய்தாப் போதாதுன்னு துணைக்கு இன்னும் ரெண்டு ஆளுங்களச் சேர்த்துக்கிட்டார். ஆரா, இரா.சரவணன் இவங்க ரெண்டு பேரும்தான் அந்த வழில இவருக்கு உடந்தை. அதக் கண்டுபிடுச்சுதான் ஆபீஸ் ஆராவுக்கும் வெச்சது ஆப்பு.
  ஜூவி போல கிருஷ்ணகுமார் இன்னொரு அரசியல் பத்திரிகைக்கு ஆசிரியர். அவரை முன்னிலைப்படுத்தி கடந்த ஒரு வருஷத்துல மட்டும் நாலஞ்சு முறை அவரப் பேட்டியெடுத்து போட்டோவோட போட்டிருக்கார் விகேஷ். ஜு.விய எடுத்துப் பார்த்தா இதெல்லாம் உண்மையா இல்லையானு தெரியும். இப்படியெல்லாம் வளத்துவிட்ட இந்த கிருஷ்ணகுமார்தான் விகேஷுக்கு அல்லக்கை, நல்லக்கை எல்லாம். விகேஷ் பேரைச் சொல்லி பல இடங்கள்ல கி.குமார் கையை நீட்டியிருக்கார் விளம்பரம்குடு, காசுகுடுன்னு. யாரும் மறுத்தா ஜுவி ல உன்னப்பத்தி தாருமாறா செய்தி வந்துரும். பொறுப்புல இருக்கறது யாரு தெரியும்ல நம்மாளுதான் என்று மிரட்டலும் வரும்.
  தமிழன் அங்க கொத்துக் கொத்தா செத்துகிட்டிருக்கான். இங்க இவரு சிங்கள அரச சேர்ந்த கருணாவை பேட்டி எடுத்து மாஞ்சு மாஞ்சு எழுதிகிட்டிருக்கார். அப்பவே, இனி அவரு வேலை பார்த்துச் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்ல. அந்தளவு மொத்தமா வந்துடுச்சுன்னு ஆபீஸ் முழுக்க வெளிப்படையாவே பேசிகிட்டாங்க. ஆனா அவர் கண்டுக்கலை. நம்மளப் பத்தி எல்லாரும் பேசுறதுல பிரபலம் ஆனதா அவருக்கு ஒரு மெதப்பு. நாம எல்லாருக்கும் மேல இருக்கோம் யாரு என்ன செஞ்சுட முடியும்னு தெனாவெட்டா இருந்துடாரு.
  அப்பவே ஆபிஸ் மேலிடம் அவரை கண்காணிக்க ஆள் வெச்ச விசயம் அவருக்கு தெரியாமப்போச்சு. இல்லேனா அந்த சித்த மருத்துவரப் பத்தி சேதி போடாம இருக்க கை நீட்டியிருப்பாரா? அவனவன் மேட்டரைப் போட பணம் வாங்குவான்னு கேள்விப்பட்டிருக்கோம். இவரு ஒரு மேட்டரை போடாம இருக்கவும் காசு கேட்ட விஷயம் கையோட மேலிடத்துக்குப் போயிடுச்சு. எம்.டி கூப்பிட்டு கண்டிப்போட நீங்களே நேர்ல போய் மேட்டரைப் பண்ணுங்கனு சொன்னப்புறம்தான் இவர் நியூஸை வெளியே கொண்டு வந்திருக்கார். நமது நிருபர்ங்கற பேர்ல அப்புறமா அந்த வைத்தியர் விசயம் வெளிய வந்து நாறுச்சு. இதெல்லாம் நிரூபிக்கப்பட்ட்தாலதான் கிட்டத்தட்ட இருவது வருஷம் வேலை பார்த்த இவரை உள்ள நுழைய விடாம வாசலோட வெளியேத்தியிருக்கு விகடன் நிர்வாகம். இல்லைனு அவர் நிரூபிக்கட்டும் பார்க்க்லாம்.
  இப்ப வாரம் முழுக்க நான் ஆபிஸே கதின்னு கிடந்தேனே இப்படி நன்றி மறந்துட்டாங்களேனு வர்றவங்க போறவங்ககிட்டயெல்லாம் புலம்பறார். எதுக்காக லீவு நாள்ல கூட அவர் ஆபீஸ் வந்தார்ங்கற விஷயம் தெரிஞ்சதாலதான் இந்த ஆக்‌ஷனே நடந்தது அப்படினு இவர் புலம்பலை கேட்கறவங்க எல்லாம் பின்னால நமட்டுச் சிரிப்போட சொல்றது பாவம் அவருக்கு தெரியலை.

  • ரோட்ல போனவன் வந்தவன் சொன்னதை எல்லாம் வைத்து நீளமாக எழுதிவிடடால் எல்லாம் உண்மையாகிவிடாது. சிக்கனமானனாவர் மாமனார் உதவியுடன் வாங்கிய சொத்தை மனைவி பெயரி்ல் வாங்காமல் ஊரான் பெயரிலா வாங்க முடியும். அட்டைப்படத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வாங்குபவனும், வீடு கட்ட அரசியல்வாதியிடம் கை நீட்டுபவனும், போலீசாரிடம் மாச சம்பளம் வாங்குபவர்களு்ம் இருக்கிறார்கள், யோக்கிய சிகாமனிகளை வைத்திருக்கு்ம் அவர்கள் விகேஷை மட்டும் நீக்க காரணம் என்ன…? ஏனெனி்ல் அவர் பூனுல் போடல… அதனால இது போன்ற கட்டுகதைகள் வரத்தான் செய்யும்.

   • //யோக்கிய சிகாமனிகளை வைத்திருக்கு்ம் அவர்கள் விகேஷை மட்டும் நீக்க காரணம் என்ன…? ஏனெனி்ல் அவர் பூனுல் போடல…//ஆமா.. அதானே…சங்கராச்சாரி எல்லாம் தில்லாலங்கடி வேலை செய்யும்போது பீர் சாமியாரையும் சுருட்டு சாமியாரையும் பத்தி கேவலமா எழுதுவதற்கு காரணம் என்ன..? ஏனெனி்ல் அவங்கெல்லாம் பூனுல் போடல..ஜீவஜோதிக்காக ஒரே ஒரு கொலை மட்டும் செய்த ராஜகோபால் அண்ணாச்சிய மட்டும் கேவலமா எழுதுவதற்கு காரணம் என்ன..? ஏனெனி்ல் அவர் பூனுல் போடல…நாட்டைக் காட்டிக்கொடுத்த வாஜ்பாயி இருக்கையில் மன்மோகன்சிங்கின் அமெரிக்க அடிவருடித் தனத்தை எழுத காரணம் என்ன..? ஏனெனி்ல் அவர் பூனுல் போடல…இப்படி எடுத்துகொடுக்கலாமா? மானமிகு!!

  • உண்மையில் நியாயமான ஆபிசாக இருந்தால், அவருடைய தரப்பை நியாயத்தை கேட்டிருக்க வேண்டாமா? ரவுடிகளுடன் தொடர்பு… கட்டப்பஞ்சாயத்து பற்றி பேசுகிறீர்களே… ரவுடிகள் பற்றிய எக்ஸ்குளுசசிவ் செய்தி தரும்போது, அவர்கள் தொடர்பு வேண்டாமா? கொஞ்சம் யோசியுங்கள்… கட்டபஞ்சாயத்து செயத

 19. நண்பர் சத்தியமூர்த்தியின் பதிலுரை மிகவும் தனிப்பட்ட தாக்குதலாக இருக்கிறது. இனி இது பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. மன்னிக்கவும்.

 20. நண்பர் சத்தியமூர்த்தியாரே… உங்களி்ன் ஒவ்வொரு வரிக்கும் பதில் சொல்ல முடியும்… நீங்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம் எவ்வளவு அபத்தமானவை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்து சொல்லுங்கள். அலுவலகத்தில் லஞ்சம் வாங்குபவர்களை நீக்குவதாக இருந்தால், அங்கு ஒருவர் கூட பணியி்லலிருகக முடியாது.முகப்பேறு வீட்டுக்கு மனு பண்ணாத பத்திரிகையாளர் யார்? அதற்காக இந்த நடவடிகையா? பணம் வாங்கி்னதுக்காக வெளியே அனுப்புவதாக இருந்தால் அந்த ஆபிசில் யாரும் மிஞ்ச முடியாது. பின் ஏன் அனுப்பினார்கள். பின்னணி என்ன? பத்திரிகையில் ஆசிரியராக இருக்கும் அசோகனுக்கு அவர் ஒருவர்தான் போட்டியாளர். எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய தலைக்கு அவரை வைத்து கத்தியை வைக்க முடியும் என்பதால், ரகசியமாக அவர் காய் நகர்த்தினார். சரவணகுமார் மூலம் ஏஜென்சியை தயார் செய்து பொய்யாக சில காரணங்களை சொல்லி வெளியே அனுப்பி விட்டார்.

 21. நண்பர்களே, நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், புறநகர் கமிஷனர் ஜாங்கிடுடன் ஏற்பட்ட உடன்பாட்டின் விளைவே விகேஷ் நீக்கம். ஜாங்கிட் தான் ஒப்புக்கொண்டது போல், ஜுனியர் விகடன் மீதான வழக்கை வாபஸ் பெறவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன் ஆசிரியர் அசோகன் மற்றும், சரவணக்குமார், ஜாங்கிட்டை அவரது அலுவலகத்தில் சந்தித்து வழக்கை வாபஸ் பெறச் சொல்லுமாறு கேட்டுள்ளனர். இதன் விளைவாக, இந்த வாரம் ஜுனியர் விகடன் இதழில் ஜாங்கிட் புகழ் பாடப்பட்டுள்ளது. ஜாங்கிட் போன்றதொரு அதிகாரி எங்கேயும் இல்லையாம். ஜாங்கிட் புறநகர் கமிஷனர் ஆனதிலிருந்து ரவடிகள் ஜாங்கிட்டின் என்கவுண்டர் துப்பாக்கிக்கு பயந்து புழல் சிறையில் தஞ்சம் அடைகிறார்களாம். புறநகரில் குற்றங்கள் குறைந்துள்ளதாம். ஜாங்கிட் ஊழல் அதிகாரி என்பது பொய்யாம். மணப்பாக்கத்தில் ஒரு க்ரவுண்ட் தவிர வேறு எங்கேயும் இடம் இல்லையாம்.

  எப்படி இருக்கிறது ?

  ஜாங்கிட், போலீஸ் வேலையைவிட, ரியல் எஸ்டேட் தொழில்தான் முக்கியமாக அவர் எஸ்பியாக ஆன நாளிலிருந்து செய்து வருகிறார் என்பது ஊரறிந்த விஷயம். இப்படி இருக்க ஜுனியர் விகடனின் நற்சான்றிதழ் எப்படி இருக்கிறது ?

 22. thangal katturai padiththaen. thamizhan engu ponaalum adi vaanguvaan. avanai innoru thamizhanae dhaan kaattik koduppaan. namakku veru yaarum kuzhi thonda vendiyadhe illai.

 23. தமிழ் பத்திரிகை யாளர் கள் மாத்திரம் இல்லை , வுயர் போலீஸ் அதிகாரிகள் , ராணுவ அதிகாரிகள் , மற்றும் சமுகத்தில் வுள்ள முக்கியமானவர்கள் அனைவர்களையும் வளைத்து இருகின்றனர் . இலங்கை வுளவு துறையினர் பெரிய அளவில் தமிழ் நாட்டில் வூடுருவி இருகின்றனர். புத்த துறவிகள் என்ற பேரிலும் கூட . இதற்கு ஆரம்பம் ஜெயலலிதா காலத்திலேயே துவங்கி விட்டது . தீவிரமாக விசாரித்தல் நெறைய தகவல்கள் வெளி வரும் . ஆனால் காவல் துறையிலேயே கருப்பு ஆடுகள் இருகின்றதே?.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க