முகப்புஇளித்தவாய் சுயநலவான்கள்!
Array

இளித்தவாய் சுயநலவான்கள்!

-

இளித்தவாய் சுயநலவான்கள்!

இந்தியாவில் வறட்சியே இல்லாத ஒரு விசயமென்னவென்றால் தகுதி தராதரத்துக்கேற்ப ஏமாறுவது. ஆயிரம் பெறாத மெத்தையை காந்தப் படுக்கை என இரண்டு இலட்சத்திற்கு வாங்கியவர்களும், அனுபவ் தேக்குமரத்தின் இலாபத்தை பளபளப்பு காகிதத்தில் பார்த்து இலட்சக்கணக்கில் ஏமாந்தவர்களும், பாலுஜூவல்லர்ஸ் துவங்கி ராயப்பேட்டை பெனிஃபிட் ஃபண்ட் வரை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஓய்வூதியத்தை பறிகொடுத்துவிட்டு பனகல் பார்க்கில் ஞாயிறு தோறும் சந்தித்து பொறுமுவர்களும், வளைகுடாவிற்கும், மலேசியாவிற்கும் பசையான வேலை கிடைக்குமென கந்து வட்டிக்கு கடன்வாங்கி பரிதாபமாக திரும்பி வருபவர்களும், குழந்தையின்மைப் பிரச்சனையை சிட்டுக் குருவி லேகியம் தீர்க்குமென சில ஆயிரங்களை விட்டெறிந்துவிட்டு பேந்தப் பேந்த விழிப்பவர்களும், மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் மனக் கோட்டை கட்டி பின்பு மண்கோட்டையென முழிப்பவர்களும் இப்படி முடிவேயில்லாத வழிகளில் ஏமாந்தவர்களை பட்டியலிட்டு மாளாது.

இந்த ஏமாறுதலில் கோடிசுவரன் முதல் தெருக்கோடி பாமரன் வரைக்கும் வேறுபாடில்லை. முந்தியவன் பங்கு சந்தையில் விட்டால் பிந்தியவன் மூனூ சீட்டில் விடுவான். விரலுக்கேற்ற வீக்கம், காசுக்கேற்ற தோசை!

பாண்டிச்சேரியில்  ராமலிங்கம் என்ற மெக்கானிக், வீரமணி என்ற பொதுப்பணித்துறை மஸ்தூர், மற்றும் முருகன் என்ற புரோக்கர் பேர்வழியும் இன்னும் வழக்கில் சிக்காத சில சிகாமணிகளும் சேர்ந்து புதுவை முழுக்க மூன்று வருடங்களாக அரசு வேலை வாங்கித் தருவதாக 80,000 முதல் 2.00.000 வரை பல இளைஞர்களிடம் சுருட்டியிருக்கிறார்கள். இதற்கு அரசு லெட்டர்பேடில் வேலை கிடைத்தது போன்ற போலி சான்றிதழ் கூட வழங்கியிருக்கிறார்கள். எல்லாருக்கும் கிடைத்த வேலை என்னவென்றால் பொதுப்பணித்துறை நீர் ஊழியர், (public water workers) என்பதாகும். மேலும் இவர்கள் புறநகரில் உள்ள நீர் தொட்டிகளை பராமரிக்க வேண்டுமென்றும், தற்போது அங்கு செல்ல வேண்டாமென்றும், ஆனால் அவர்கள் அங்கு வேலை பார்ப்பதாக சோதித்தறியும் அரசு ரிஜிஸ்டரில் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது.

சிகாமணிகள் இத்தோடு விடவில்லை. இரண்டு மூன்று மாதங்கள் தலா 3,300ரூபாய் தினசரி 110 வீதம் என சம்பளமும் கொடுத்து அதற்கு அரசுச்சான்றிதழ் போல ஒன்றில் கையொப்பமும் வாங்கியிருக்கிறார்கள். இதெல்லாம் எங்கு வைத்து நடந்தது என்றால் காந்தி சிலை அருகேயோ இல்லை கடற்கரையிலோ கன ஜோராக நடந்திருக்கிறது. பணத்தை கொடுத்த அறிவாளிகள் எவருக்கும் இப்படி அரசு அலுவலகம் தெருவும் திண்ணையுமாக நடக்கிறதே, வேலையே இல்லாமல் சம்பளம் வருகிறதே என்றெல்லாம் யோசிக்கவில்லை.

என்ன இருந்தாலும் அரசு வேலையென்றால் இன்னமும் ஒரு மதிப்பிருக்கிறதல்லவா? குறைந்த பட்சம் செமத்தியான வரதட்சணையுடன் பெண் கிடைத்து பேஷாக திருமணத்துடன் வாழ்வில் செட்டிலாகிவிடலாமே?

தலைக்கு இரண்டு இலட்சத்தை சுருட்டியவர்கள் அதில் சில ஆயிரங்களை விட்டெறிந்து விட்டு அப்புறம் கமுக்கமாக மறைய ஆரம்பித்தார்கள். பணத்தை அழுத கனவான்களோ நமக்காக எப்படியெல்லாம் இந்த சிகாமணிகள் கஷ்டப்படுகிறார்கள் எப்படியும் நமக்கு புதுவை அரசில் நிரந்தர வேலை கிடைக்கும் என விட்டுப் பார்த்திருக்கிறார்கள். வாழ்வை பாசிட்டாவாக பார்க்க வேண்டுமென அப்துல்கலாம் முதல் தலப்பாகட்டு தாடி ஜக்கி வாசுதேவ் வரை உபதேசத்தை யானைச்சாணி போல டன்கணக்கில் கழிக்கும் மண்ணில் இந்த இளைஞர்களும் நல்லதே நடக்கும் என நம்பியதை ஒரு பெரிய குறையாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஆயிற்று. ஒரு மாதம் இரண்டு நான்கு என பெருக்கல் வீதத்தில் சம்பளம் வராமல் இருக்க ஒரு வழியாக கனவான்களுக்கு கனவில் சுருக்கென்று கும்மாங்குத்து குடைய ஆரம்பித்திருக்கிறது. இரண்டு இலட்சத்தை அரசு பதவிக்காக எப்படியெல்லாம் புரட்டியிருப்பார்களோ “அது போல நாமும் ஏமாற்றப்பட்டிருப்போமோ” என்று யதார்த்தம் வயிற்றைப் புரட்ட ஆரம்பித்திருக்கிறது. இப்படி அக்மார்க் பச்சையாக ஏமாந்ததை எப்படி வெளியில் விடுவது என்று குழப்பம். இறுதியில் பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டுமென சில ஏமாளிகள் வேறுவழியின்றி போலீசுக்கு போக அப்புறம் தைரியம் பெற்ற மற்ற சுண்டெலிகள் வரிசையாக புகார் தர காவல்நிலையத்திற்கு படை எடுத்திருக்கிறார்கள். இதுவரை 150 பேர் இந்த அரசு வேலை மோசடியில் பலியாகியிருப்பதாக தினசரிகள் குறிப்பிடுகின்றன.

மோசடிக் கும்பலில் ராமலிங்கம் மட்டும் தலைமறைவாக மற்ற இருவரும் போலீசிடம் சிக்கியிருக்கிறார்கள். இன்னும் பல சிகாமணிகள் இருக்கலாம் என விசாரணை தொடர்கிறது. மொத்தத்தில் இரண்டு கோடி ரூபாயை இந்த சிகாமணிகள் சுருட்டியிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

நமது மக்களை ஏமாற்ற ரூம் போட்டெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை போலும். சும்மா டாஸ்மார்க்கில் ஒரு குவார்ட்டரை நீர் கலந்து அடிக்கும் நேரத்தில் யோசித்தால் போதுமானது. அடுத்த நாளே பேஷாக அரங்கேற்றலாம். ஏமாறுவதற்கு குறைவில்லாத நாடிது. டாஸ்மார்க் என்றதும் கொசுறு செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு பீர் 70 ரூபாயாம். புதுவையில் அதுவே 40 ரூபாய்க்கு விற்கிறதாம். தற்போது ஐந்து ரூபாய் விலையேறி 45க்கு கிடைக்கப் போகிறதென குடிமகன்களுக்கு கவலை தரும் செய்தியையும் இதே நாளேடுகள் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. ஆக ஊரை மலிவான மதுவில் மூழ்கி ஏமாற்றுவதற்கு பாண்டிச்சேரிக்கு ஒரு நடை போய்வந்தால் இத்தகைய சிகாமணிகள் விதம் விதமாக ஏமாற்றலாம்.

இன்றைய கல்வி முறையும், சமூக அமைப்பும், காரியவாதம் மேலோங்கி இருக்கும் தனிநபர்வாதமும் எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து இப்படி குறுக்குப் பாதையில் முன்னேறுவதற்கு வழி சமைக்கிறது. உண்மையான அரசு வேலையே இலட்சங்களில் பேசப்பட்டே கிடைக்கும் போது அதாவது “எழுத்து தேர்வு வரை உங்கள் சாமர்த்தியம், நேர்காணலில் வெல்ல வேண்டுமென்றால் அது பணம்தான் தீர்மானிக்கும்” என்ற நிலையில் இந்த இளைஞர்கள் ஏமாந்தது பெரிய விசயமே இல்லை. ஆசிரியப் பயிற்சி முடித்து விட்டு எம்.எல்.ஏக்களின் அல்லக் கைகளுக்கு பணத்தை அளித்து விட்டு காத்திருக்கும் பட்டியலில் எப்போது நம் பெயர் வருமென்று எத்தனை ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்? இந்த ஏமாறுதலில் ஏதோ தமிழ்நாடு மட்டும்தான் என்றில்லை. அறிவாளிகளுக்கு பெயர்போன அமெரிக்காவிலேயே சமீபத்தில் ஒரு பிளேடு பக்கிரி முதலீடு செய்த பணத்தை குறுகிய நாட்களில் மும்மடங்காக தருவதாக மில்லியன் டாலர் சேர்த்து விட்டு இப்போது கம்பி எண்ணுகிறான். அது கூடப் பரவாயில்லை, சிறையில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்த போது “இப்படியெல்லாம் மக்கள் ஏமாறுவார்கள் என நான் முதலில் நம்பவில்லை, எப்போதோ பிடிபட்டிருப்பேன் இவ்வளவு தாமதம் ஏனென்று தெரியவில்லை” என தெனாவெட்டாக பேட்டி கூட அளித்திருக்கிறான். அந்த கஸ்மாலத்தின் பெயர் நினைவில் இல்லை. முடிந்தால் பின்னூட்டத்தில் அவனது ஜாதகத்தை தருகிறோம். இது போக பல அமெரிக்க நிதி நிறுவனங்களும், வங்கிகளும் கள்ளக் கணக்கு காண்பித்து அது முடியாத போது திவாலென அறிவித்து விட்டு எஸ்ஸானது பெரிய கதை.

தான் மட்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று அதையே தன்னம்பிக்கை நெறியாக கொண்டிருப்பதே இன்றைய சமூகத்தின் உணர்வாக இருக்கும்போது இத்தகைய சுயநல இளித்தவாய கனவான்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள். இனி அடுத்த சிகாமணிகளிடம் சிக்கும் சுயநல கனவான்கள் யார் என்ற செய்திக்கு நாம் காத்திருப்போம். இதில் மட்டும் நாம் ஏமாறப்போவதில்லை.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

  1. இந்தியாவில் வறட்சியே இல்லாத ஒரு விசயமென்னவென்றால் தகுதி தராதரத்துக்கேற்ப ஏமாறுவது. ஆயிரம் பெறாத மெத்தையை காந்தப் படுக்கை என இரண்டு இலட்சத்திற்கு வாங்கியவர்களும்,… https://www.vinavu.com/2009/09/14/selfish-idiots/trackback/

  2. நல்ல பதிவு

    இந்த ஏமாறுதலில் கோடிசுவரன் முதல் தெருக்கோடி பாமரன் வரைக்கும் வேறுபாடில்லை. முந்தியவன் பங்கு சந்தையில் விட்டால் பிந்தியவன் மூனூ சீட்டில் விடுவான். விரலுக்கேற்ற வீக்கம், காசுக்கேற்ற தோசை!

    100/100 சரி

  3. //தான் மட்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று அதையே தன்னம்பிக்கை நெறியாக கொண்டிருப்பதே இன்றைய சமூகத்தின் உணர்வாக இருக்கும்போது இத்தகைய சுயநல இளித்தவாய கனவான்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள். இனி அடுத்த சிகாமணிகளிடம் சிக்கும் சுயநல கனவான்கள் யார் என்ற செய்திக்கு நாம் காத்திருப்போம். இதில் மட்டும் நாம் ஏமாறப்போவதில்லை.// romba karakkeeta sonna thalaiva…

  4. //தலப்பாகட்டு தாடி ஜக்கி வாசுதேவ்// indha aala pathi vilavariya oru article eludunga sir, ennoda friends ellam indha sitting samiyara pathi aaga ogonu pugalum podu patthikkitu varuthu..

  5. வேலை இல்லாததால் தானே அவர்கள் இப்படி காசு கொடுத்து எமாந்தார்கள். ஏன் சுயநலவான்கள் என சொல்ல வேண்டும்?.

  6. //ஆசிரியப் பயிற்சி முடித்து விட்டு எம்.எல்.ஏக்களின் அல்லக் கைகளுக்கு பணத்தை அளித்து விட்டு காத்திருக்கும் பட்டியலில் எப்போது நம் பெயர் வருமென்று எத்தனை ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்?//
    தமிழகத்தை பலகூறுகளாக பிரித்துக்கொண்டு ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவரை நியமித்து வசுலை சிறப்பாக செய்து கொண்டு உள்ளார்கள்,மன்னராட்சி விட சிறப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாக.

  7. //தெனாவெட்டாக பேட்டி கூட அளித்திருக்கிறான். அந்த கஸ்மாலத்தின் பெயர் நினைவில் இல்லை. முடிந்தால் பின்னூட்டத்தில் அவனது ஜாதகத்தை தருகிறோம்//
    நீங்கள் சொன்ன நபர் பெர்னார்ட் மேடாப் என்பவரின் கதையா?
    அப்படியென்றால்… கீழே உள்ள லிங்கைப் பாருங்கள்!

    //தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு, திடீர் திடீரென நிதி நிறுவனங்கள் தோன்றி… மக்கள் கொடுக்கும் பணத்திற்கு வருட வட்டியாக 36% வரை தருவதாக வாக்கு கொடுத்து, சேமிப்புகளை பெற ஆரம்பித்தன. அப்பொழுது தேசிய வங்கிகள் 12% வரை வட்டியாக அளித்துகொண்டிருந்தன.

    சொன்னபடி 1 ஆண்டுக்கு மேலாக கொடுக்கவும் செய்தன. மக்கள் அலை அலையாய் போய் முதலீடு செய்தார்கள். இரண்டாவது ஆண்டின் முடிவில்… இப்படி வாக்கு கொடுத்த எல்லா நிறுவனங்களும் இழுத்து மூடி, மக்கள் தலையில் பெரிய்ய துண்டை போட்டார்கள்.
    இதே முறையில் அமெரிக்காவில் ‘பெர்னார்ட் எல். மேட்ஆப் இன்ஸ்வெஸ்ட்மென்ட் செக்யூரிட்டீஸ்’என்ற நிறுவனம் 2 லட்சத்து 45 ஆயிரம் கோடிக்கு மக்கள் தலையில் துண்டை போட்டிருக்கிறது. இந்தியாவின் இந்த ஆண்டு பட்ஜெட் தொகையே 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்தான். மூன்றில் ஒரு பங்கு.

    பெர்னார்ட் மேடாப் தன்னுடைய 22 வயதில் 1960ல் இந்த பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தை நியூயார்க்கில் துவங்கினார்//

    http://socratesjr2007.blogspot.com/2008/12/blog-post_24.html

  8. நாம் நினைத்தது நடந்தது ! கீற்று நிர்வாகிகள் ‘இந்திய‌ ஜனநாய’கத்தின் கற்பை காக்கும் விதமாக அதற்கு தேவையான நேர்மையின்மையோடும், நாணயமற்ற முறையிலும் நடந்துகொண்டார்கள்.காலையில் இட்ட எமது பின்னூட்டம் இப்பொழுதுவரை வெளியிடப்படவில்லை.ஆனால் அதன் பிறகு வந்துள்ள பின்னூட்டங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டுள்ள‌ன.

    கீற்றுவின் யோக்கியதையில் ஏற்கெனவே எமக்கு முழு நம்பிக்கை இல்லாததால் முன் எச்சரிக்கையுடன் அங்கு இட்ட பின்னூட்டத்தை சிறு குறிப்புடன் வினவு தளத்திலும் பின்னூட்டமாக போட்டோம். இதோ அந்த பின்னூட்டம்.

    இந்த பின்னூட்டம் கீற்று இணையத்தில் “தியாகி,இம்மானுவேல் படுகொலை- கம்யூனிஸ்ட்களின் நிலைபாடு” எனும் கட்டுரைக்கு போட‌ப்பட்டது. ஒரு வேலை கீற்று அதை வெளியிடாமல் ‘தடை’ போடக் கூடும் என்று எண்ணியதால் பாதுகாப்பிற்காகவும், சாதி வெறிபிடித்த முத்துராமலிங்கனை பலர் அறிந்துகொள்ள ப‌யன்படும் என்று கருதியதாலும் அந்த பின்னூட்டம் இங்கு பதியப்படுகிறது.

    முத்துராமலிங்கம் என்பவன் ஒரு சாதிவெறி பிடித்த மிருகம். அன்றைக்கே அடித்து கொல்லப்பட்டிருக்க வேண்டிய காட்டுமிராண்டி.

    ஆதாரங்கள் வாசிக்க
    இணைப்புகள் கீழே

    பசும்பொன்: முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்.
    இந்த கட்டுரையின் பின்னூட்டங்களை(Comments) மிக முக்கியமாக படிக்கவும்.
    http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html

    சட்டக் கல்லூரி: பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை… அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!
    முத்துராமலிங்கம் ஒன்றும் பொதுவான தலைவரில்லை …
    http://www.keetru.com/literature/essays/vinavu_2.php

    தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்!
    http://mathimaran.wordpress.com/2009/08/27/article-233-2/

    கீற்றில் குறிப்பிட்ட அந்த கட்டுரைக்கு இந்த பின்னூட்டத்தை போட இயலவில்லை எனவே வேறு கட்டுரைக்கான பினூட்ட பகுதியில் எனது பின்னூட்டம் போடப்பட்டுள்ளது. அதை கீற்றுக்கும் தெரிவித்துள்ளேன்.

    /////////////

    கீற்றுக்கு வணக்கம்.
    எனது கமெண்ட்டை ‘இம்மானுவேல்’ பதிவில் போட இயலவில்லை அரைமணி நேரமாக லோட் ஆகிக்கொண்டே இருக்கிறது எனவே தான் இங்கு போட்டுள்ளேன். நீங்கள் வேண்டுமானால் மாற்றி போட்டுக்கொள்ளுங்கள்.
    நன்றி
    /////////////

    முத்துராமலிங்கம் ஒரு சாதிவெறியன் என்பது ஒன்றும் புதிய விசயம் அல்ல‌.தென் மாவட்டம் முழுவதும் மக்கள் அறிந்த விசயம் தான்.அந்த சாதிவெறியனைப் பற்றி ஒரு பின்னூட்டம் போட்டால் கீற்றுக்கு ஏன் வலிக்கிறது ? ஏன் குத்திக்குடைகிறது.ஏன் அந்த பின்னூட்டம் வெளியிடப்படவில்லை ? இதற்கு கீற்று நேர்மையுடன் பதிலளிக்க வேண்டும்.‌

    ஒரு பக்கம் எமது அமைப்பை அவதூறு செய்து எழுதுவதற்கு,இனவாத கும்பல் தமது காழ்புணர்வை கக்குவதற்கு களம் அமைத்துக்கொடுப்பது.அதற்கு தமிழ்தேசியம்,முற்போக்கு மண்ணாங்கட்டி என்றெல்லாம் விளக்கம் வேறு கொடுப்பது. இன்னொரு பக்கம் சாதிவெறியனான,தலித் மக்களையும் இம்மானுவேல் சேகரன் போன்ற த‌லைவர்களையும் கொன்ற கிரிமினலான பயலான‌ முத்துராமலிங்கத்தை காப்பாற்ற எமது கருத்தை இருட்டடிப்பு செய்வது.இது தான் இந்த தமிழ்தேசியம் பேசும் மண்ணாங்கட்டிகளின் யோக்கியதை. இதற்கு கீற்று அடுதத ஒரு மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்.மேலும் எமது பின்னூட்டம் அனுமதிக்கப்பட வேண்டும். பின்னூட்டம் ஏன் மட்டுறுத்தபட்டது என்பதற்கு விளக்கமும் வேண்டும். அந்த விளக்கத்தை கீற்று எப்படி வேண்ட்டுமானாலும் சொல்லலாம். எமது வார்த்தைகளில் ‘நாகரீகம்’ இல்லை என்றோ, ஒரு தலைவரை மரியாதை இல்லாமல் பேசினால் அவர் சார்ந்த சமூகத்தினரின் மனது புண்படும் என்றோ கீற்று கருதினால் அதை உள்ளது உள்ளபடி பொது அரங்கில் சொல்ல வேண்டும்.
    இல்லையெனில் நாமே ஒரு முடிவிற்கு வந்து கீற்று தளத்திற்கு இன்னொரு பெயரை சூட்ட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.

    http://supperlinks.blogspot.com/2009/09/blog-post_14.html

  9. பணம் ஒன்றே குறிக்கோள் என்றான பின் ஒழுக்கம் முதல் சுயமரியாதை வரை எல்லாம் விடை பெற்றுவிட்டன. ஏமாற்று என தெரிந்த‌ பின்னும் ஏமாரத்தயாராக இருப்பதை என்னவென்று சொல்வது? பத்து சதவீத பணம் கட்டினால் பதினைந்து நாள் கழித்து பொருள் உங்களுக்கு என்ற விளம்பரத்துடன் கடை போட்டனர் எங்கள் ஊரில். இதே போன்று சில வருடங்களுக்கு முன்பு கடை போட்டு அதில் பணம் கட்டி ஏமாந்தவர் பலர் மீண்டும் பணம் கட்டி ஏமாந்தனர். தெரிந்த பின்னும் ஏன் பணம் கட்டினீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். “ஆள் பிடிப்பதற்காக எப்படியும் சில நாட்கள் பொருள் கொடுப்பார்கள் அதில் நமக்கும் வந்துவிடும் என நினைத்தேன்” என்றார்கள். இது யாருக்கான பாடம்?

    தோழமையுடன்
    செங்கொடி

    • FLASH NEWS: தில்லைக்கோயிலை அரசு மேற்கொண்டது செல்லும்! தீட்சிதர் மனு தள்ளுபடி!

      இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

      மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் ம.க.இ.க உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய இடையறாத போராட்டத்தின் விளைவாக தில்லை நடராசர் கோயிலை தமழக அரசு மேற்கொண்டதை எதிர்த்து தீட்சிதர்கள் பெற்றிருந்த தடையாணையை நீதிபதி பானுமதி ரத்து செய்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோயிலை அரசு மேற்கொண்டது. உடனே இதற்கெதிராக தீட்சிதர்களும் சுப்ரமணியசுவாமியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். பிறகு முட்டையடி, வக்கீல்கள் மீது தடியடி….ஆகியவை நீங்கள் அறிந்ததே. தற்போது நீதிபதிகள் ரவிராஜபாண்டியன், ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்சின் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. மனித உரிமை பாதுகாப்பு மையம், ம.க.இ.க ஆகியோரது தரப்பை பிரிதிநிதித்துவம் செய்யும் வகையில் சிவனடியார் ஆறுமுகசாமி மற்றும் தில்லைக் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எம்.எஸ் ஆகிய இருவர் பெயரில் தலையீட்டு மனுக்கள் (impleading petitions) தாக்கல் செய்யப்பட்டன. மூத்த வழக்குரைஞர் காந்தி, வழக்குரைஞர் சகாதேவன் ஆகியோர் இவர்கள் சார்பாக வாதிட்டனர். தீட்சிதர்களின் சொத்து அல்ல தில்லைக்கோயில் என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவியதுடன் கோயில் சொத்துக்களான நிலங்களை திருட்டுத்தனமாக தீட்சிதர்கள் விற்பனை செய்திருப்பதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர். தீட்சித்தர்களோ “இந்த வழக்கில் மனித உரிமை பாதுகாப்பு மையத்துக்கு தொடர்பில்லை என்றும் ஆத்திகர் பிரச்சினையில் நாத்திகர்களான இவர்கள் தலையிட்டு குழப்புவதாகவும் வாதாடினர். வழக்கிலிருந்து ம.க.இ.கவினரை எப்படியாவது விலக்கி விட்டால் அரசாங்கத்தை சமாளித்துக்கொள்ளலாம் என்பது அவாளின் திட்டம். அந்த திட்டமும் தவிடுபொடியானது. இந்த வழக்கில் ஆறுமுகசாமி, வி.எம்.எஸ் ஆகியோர் தலையிடுவதற்கான உரிமை உண்டு என்பதையும் நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் பல லட்சம் ரூபாய் உண்டியல் வசூலாகியிருப்பதையும், இதற்கு முன்னர் தீட்சிதர்கள் காட்டிய வசூல் கண்க்கு மிகக் குறைவாக இருப்பதையும் அரசு தரப்பு எடுத்துக் காட்டியது. இந்தக் கிடுக்கிப் படியில் தப்ப முடியாமல் தீட்சிதர்கள் தோற்றுவிட்டனர். ஆனால் அவர்கள விடமாட்டார்கள். தற்போதைய தீர்ப்பு சு.சுவாமியின் தலையீட்டு மனுவையும் அங்கீகரித்திருப்பதால் நாளையே அவர்கள் டில்லிக்கு போவார்கள். அடுத்த சுற்று சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத்தில்….

      • கருணாநிதியின் செல்லப்பிராணி வீரமணி நடத்தும் ‘விடுதலை’ இதே செய்தியை கீழ்க்கண்டபடி வெளியிட்டுள்ளது.. அச்செய்தியில் வழக்கை நடத்திய ம.உ.பா.மையம் மறைக்கப்பட்டுள்ளது..

        //சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்தது சரியே
        சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

        சென்னை, செப். 15_ சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்துக் கெண்டது சரியே என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல முறை-கேடுகள் நடப்பதாக புகார்-கள் வந்ததை தொடர்ந்து, அதன் நிருவாகத்தை தமிழக அரசு மேற்கொண்-டது. இவ்வாறு மேற்-கொண்டது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.-பானுமதி சில மாதங்-களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கினார். எனவே தற்போது இக்கோயில் தமிழ்நாடு அரசால் நிய-மிக்கப்பட்ட செயல் அலு-வலர் நிருவாகத்தில் உள்-ளது.

        இந்த சூழ்நிலையில், நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என்றும், இந்த கோவிலை நிர்வகிக்க பொது தீட்-சிதர்களுக்கே உரிமை உண்டு என்றும் தீட்சிதர்-கள் சார்பில் உயர் நீதி-மன்றத்தில் அப்பீல் செய்-யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.ரவிராஜ-பாண்டியன், டி.ராஜா ஆகியோர் விசாரித்தனர். வழக்கறிஞர்கள் வாதம் முடிந்ததால் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்-நிலை-யில் அந்த வழக்கின் மீது இன்று தீர்ப்பளித்-தனர்.

        அதில் சிதம்பரம் கோயிலை இந்து அற-நிலையத்துறை எடுத்துக் கொண்டது சரியே என நீதிபதிகள் தெரிவித்தனர். தீட்சிதர்களின் மனுவை தள்ளுபடி செய்து அவர்-கள் உத்தரவிட்டனர்.//

  10. தி ஹிந்துவும், எம்.எஸ். சுவாமிநாதனும், நார்மன் போர்லாக்கும்

    க‌டந்த சனியன்று நார்மன் போர்லாக் (95) என்ற அமெரிக்க விவசாய அறிஞன்
    கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்து மரணமடைந்தான். இதுபற்றி மூன்றி
    செய்திகளை தி ஹிந்து கடந்த திங்களன்று வெளியிட்டுள்ளது(செப். 14).
    அதில் ஒன்றில் நார்மன் போர்லாக் இன் இந்திய சகாவான எம்.எஸ்.சுவாமி
    நாதனிடம் பேசியதன் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    மற்ற இரண்டு செய்தியிலும் நார்மன் போர்லாக் 1970 இல் அமைதிக்கான‌
    நோபல் பரிசை வென்றதாக செய்தி வந்துள்ளது. ஆனால் எம்.எஸ். சுவாமி
    நாதனோ, நோபல் பரிசு நார்மன் போர்லாக்கிற்கு மாத்திரம்தான் இதுவரையில்
    விவசாயத்திற்காக தரப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கிறான். தனது மற்ற‌
    இரண்டு செய்திகளில் அமைதிக்கான நோபல் பரிசு என்று இருப்பது எம்.எஸ்.
    சுவாமிநாதனால் விவசாயத்திற்கு என சொல்லப்படும்போது உண்மையை
    அவரிடம் எடுத்துச் சொல்ல தி ஹிந்து நிருபர் மறந்த்து தற்செயலானதா..
    திட்டமிட்டு மூடி மறைப்பதா..

    உல‌கம் முழுக்க பசுமைப் புரட்சி என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளைச்
    சுரண்ட 70 களில் தன்னுடைய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்ப‌
    அமெரிக்காவிற்கு உதவியது பசுமைப் புரட்சி. அதனை முதலில் மெக்சிகோவில்
    சோதனை செய்து 1968 இல் இந்திய அரசு க்கும் அறிமுகம் செய்தவன்
    நார்மன் போர்லாக். மரபணு மாற்றம் செய்து கோதுமை கதிர்களை குட்டையாக்கி
    அதன் வழியே நோய் தாக்காத விதைகளையும் உருவாக்கி, அல்லது உரம்
    பூச்சி மருந்தை அடிப்படையாக கொண்டு அதிக விளைச்சல் தரும் பயிர்களை
    (4 முதல் 8 மடங்கு வரை) கண்டறிந்து அதனை தன் நாட்டு மக்களுக்கு
    தராமல் ஏழை நாட்டுக்கு தந்து பரிசோதனை செய்தவன் அந்த நாய். அந்த‌
    தெருநாயோடு சேர்ந்து விவசாயிகளின் உயிரைப் பறித்தவன் நம்ம வீட்டு நாய்
    எம்.எஸ். சுவாமிநாதன்.

    70 களின் நெருக்கடியிலிருந்து மீட்டவனுக்கு முதலாளித்துவம் சமாதானத்திற்கு
    தானே நோபல் பரிசு தர முடியும். தந்தார்கள். சுவாமிநாதன் அதனை
    விவசாயம் என பார்க்க சொல்கிறார். பார்ப்போம். நோபல் ஏற்புரையில் உணவு
    சம்பந்தப்பட்ட விஞ்சானிகளை நோபல் பரிசு கொடுத்து கவுரவிக்க வேண்டும்
    என்றானாம் அந்த எட்டப்பன். நோபல் குழுவும் உலக உணவு பரிசை ஏற்படுத்தியது.
    முத‌ல் முறை பெற்ற‌து சாட்சாத் ந‌ம்ம‌ தொண்டைமான் சுவாமிநாத‌ன்தான்.
    எதுக்கு குறுகிய‌ கால‌ நெற்ப‌யிர்க‌ளை இந்திய‌ விவ‌சாயிக‌ள் த‌லையில்
    க‌ட்டிய‌த‌ற்காக•.

    நார்மன் போர்லாக்கைப் பொறுத்தவரை பசிக்கு தேசிய எல்லை கிடையாதாம்.
    உண்மை.. முற்றுலும் உண்மை.. முதலாளித்துவத்தின் கையாள் உண்மையை
    பேசுகிறான். அவர்களது சர்வதேச திட்டத்தின் அடிப்படையில் இயங்குகிறார்கள்.
    மா.லெனிய இயக்கங்களோ இப்படி சர்வதேசிய வேலைப்பிரிவினையில்
    இயங்க முடியாத நிலைமை. பாட்டாளி வர்க்கத்தின் கூட்டணிப்படையான‌
    விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியவன் பேசுகிறான் ..

    ஒரு கெமிக்கல் இஞ்சினியராக தனது வாழ்க்கையை துவங்கிய போர்லாக்
    விவசாய அறிஞனாக மாறியது இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில்.
    அதற்கு உதவியர்கள் ராக்பில்லர் பவுண்டேஷன்.

    ஆப்ரிக்க நாடுகளில் பசுமைப்புரட்சியை நடத்த முடியாத அரசியல் சூழல் இருப்பதாக‌
    சுவாமிநாதன் அங்கலாய்க்கிறான். நல்லவேளை அவர்களாவது தப்பித்தார்கள்.

    விதர்பா விவசாயிகளை, ஆந்திரத்தின்
    பருத்தி விவசாயிகளை, பஞ்சாபின் கோதுமை விவசாயிகளை என் தற்கொலைக்கு
    தள்ளிய ஒரு அமெரிக்க நாய் இறந்திருக்கிறது. இந்திய நாய் உயிரோடு
    இருக்கிறது. ஒருவேளை இந்திய விவசாயிகள் சேர்த்து கொண்டாடலாம் என்று
    காத்திருக்கின்றார்களா எனத் தெரியவில்லை.

    நார்மன் போர்லாக்கிற்கு கேன்சராம். மூட‌ந‌ம்பிக்கை என‌க்கு இல்லை.. ஆனால்
    வ‌யிறு எரிகிற‌து.. விஞ்ஞான‌ ரீதியாக‌ கேன்ச‌ரை செல்க‌ளின் வ‌ரைமுறையில்லாத‌
    வ‌ள‌ர்ச்சி என்று சொல்ல‌லாம். க‌ட்டுப்பாட‌ற்ற‌ செல்க‌ளின் வ‌ள‌ர்ச்சி தோற்றுவிக்கும்
    வீக்க‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ உறுப்பினை நோவுக்கு உள்ளாக்குகிற‌து. இந்திய‌
    விவ‌சாயிக‌ள் நோந்த‌து ம‌ட்டும‌ல்லாம‌ல், அறுவை சிகிச்சை செய்ய‌ப்ப‌டாத‌
    கேன்ச‌ர் எனும் ப‌சுமைப்புர‌ட்சியினால், ம‌ர‌ப‌ணு மாற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ விதைக‌ளால்
    த‌ற்கொலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டு உள்ளார்க‌ள். இதுவும் நார்ம‌ல் போர்லாக்கிற்கு
    ஏற்ப‌ட்ட‌தை போல‌ நாட்டுக்கே நிக‌ழ்ந்த‌துதான். ஒருவேளை இய‌ற்கையின்
    க‌விதை இதுதானா..

    -mani

  11. சுயநலங்கள், இளித்தவாயன்கள் போன்ற சொல்லாடல்கள் இங்கு பொருந்தவில்லை. “நேர்மையில்லாதவர்கள்” என்ற சொல்லாடல் தான் சரி. லஞ்சம் கொடுத்து அரசு வேலை வாங்க விழைவோர், தாங்களும் பின் லஞ்சம் வாங்கி, “நிரந்தர வேலை” பெற்று “சம்பாதிக்கலாம்” என்று எண்ணுவது அடிப்படை நேர்மையின்மையை காட்டுகிறது. தனியார் துறையில் வேலை தேடலாமே. அல்லது அரசு வேலைக்காக கொடுத்த லஞ்சப் பணத்தில் சிறுதொழில் செய்ய முனையலாமே. இதெல்லாம் செய்யாமல், குறுக்கு வழியில் செல்ல முனைந்தால் ஏமாற்றப்படுவது சகஜம்தான்.

    நமது நேர்மை குறைவு பற்றிய எமது பழைய பதிவு :

    http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_2745.html

    நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

    and mani, how do suppose India could have attained self sufficiency in food grains in the 70s ? what alternatives do you “experts” prsecibe ? we were terribly short of food grains and were importing from the West and literally living “ship to mouth” existence unitl then. i suppose you gentlemen would have preferred those glorious times to green revloution. or i suppose we shoud be starved like the Ukranians in 1930s. you are all crazy and irratonal in this issue and cannot come out of “US conspiracy” theory. fertiliser equipments is different from high yielding varieties. what is the conspiracy or gain for US or MNCs in prmoting high yielding varieties ? and again what alternatives do your “experts” prescrible. the Nobel committe were not fools or stooges to give Nobel prize for a great scientist. you are not even fit to remove his shoes.

    • மெரில் லின்ஞ்ச், கோல்டுமேன் சாக்ஸ், லெஹமான் பிரதர்ஸ், என்ரான் போன்ற பெரு முதலளாகளும், அவற்றின் நிர்வாகிகளும் இவ்வளவு நாள் கள்ளக் கண்க்கு காண்பித்து முதலீட்டாளர்களை பிராடு செய்தார்களே இவர்கள்தான் நேர்மையற்ற உலகமகா கிரிமனல்கள். தப்பு செய்து பெரும் பணம் ஈட்டலாம் என எல்லோருக்கும் தேவ செய்தியை பரப்பி விடுவபவர்களே இந்த முதலாளிகள்தான். சுறாமீன்களையும், திமிங்கலங்களையும் விட்டு விட்டு தம்மாத்துண்டு நெத்திலி மீன்களுக்கு நேர்மை பற்றி உபதேசிக்கிறார் அசட்டு அதியமான்.

  12. கிறுக்கு காளமேகம்,

    நேர்மை இல்லாத எந்த ஒரு தனி மனிதன் மற்றும் நிறுவனத்தை நான் எதிர்க்கவே செய்கிறேன். எனது பதிவை முழுசா படித்தால் தெரியும். அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவாலானதற்க்கு நேர்மை குறைவு காரணமல்ல. கட்டுபாடற்ற சூதாட்டமும், அதற்க்கு உதிவிய பண வீக்கமும், இன்னும் பல சிக்கலான காரணிகளும் தான். பார்க்க :
    http://athiyaman.blogspot.com/2009/04/distortions-in-money-markets-due-to.html

    நேர்மை இல்லாமல் பித்தலாட்டம் ஒரு சில நிர்வாகிகள் செய்துள்ளனர். அவர்கள் சட்டபடி தண்டிக்கப்படுவார்கள். (இந்தியா போல அல்ல). ஓ.கே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க