Sunday, October 1, 2023
முகப்புசென்னையில் நேபாள மாவோயிஸ்ட் கட்சி பொலிட்பீரோ தோழர் சிறப்புரை!
Array

சென்னையில் நேபாள மாவோயிஸ்ட் கட்சி பொலிட்பீரோ தோழர் சிறப்புரை!

-

நேபாள புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள்!

அரங்கக் கூட்டம்

செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி

இடம்: தென்னிந்திய நடிகர் சங்கம், அபிபுல்லா ரோடு, வள்ளுவர் கோட்டம் அருகில், தி.நகர்

தலைமை: தோழர் அ. முகுந்தன்
தலைவர்: பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை: தோழர் பசந்தா
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,
நேபாள ஐக்கியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

  • மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம் மன்னராட்சியை அகற்றிய நேபாள மாவோயிஸ்ட் கட்சி தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் ஆட்சியிலிருந்து விலகியது ஏன்?
  • புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கான தடைகள் என்ன?

கூட்ட ஏற்பாடு: இந்திய – நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்

தொடர்புக்கு: அ.முகுந்தன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, 110, 2வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24 தொலைபேசி: 94448 34519

புதிய கலாச்சாரம் – 99411 75876

வினவு – 97100 82506

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

  1. சமீபத்திய நேபாள கட்டுரைகளையும் இணைப்புகளாக தந்தால், வாசகர்களுக்கு படித்து புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

  2. தற்போதைய நேபாள நிலவரம் மற்றும் அது சார்ந்த சர்வதேச சூழலை அறிய பல முயற்சி எடுத்து சரியான நிலவரம் கிடைக்காமல் இருந்த போது.தற்போது இந்த அறிவிப்பு சர்வதேச சூழலை அறிய வாய்ப்பாக அமையும். தோழரின் உரையை வினவில் வெளியிடவும்.

  3. NEPAL – CRUCIAL CHALLENGES OF NEW DEMOCRATIC REVOLUTION!

    HALL MEETING

    19-09-2009 – 5 PM

    Place : South Indian Film artist union building,
    Habibullah Road,
    Near Valluvar Kottam,
    T.Nagar, Chennai

    SPEAKER :

    COM. BASANTHA,
    POLITBURO MEMBER,
    UCPN (Maoist)

    Convened by

    INDO NEPAL PEOPLE’S SOLIDARITY FORUM

    pH : 9444834519

    All are welcome

    இந்த செய்தியை வாய்ப்புள்ளவர்கள் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் அனுப்புங்கள்

  4. நேபாள புரட்சியும் சர்வதேச உறவுகளும்: ஜோன் மாக்

    நேபாளத்தின் புரட்சிகர உள்நாட்டு யுத்தமானது ஏப்பிரல் 2006 இல் மன்னர் கயேந்திரா மீதான மக்களது வெற்றியுடன் உண்மையிலேயே முடிவுக்கு வந்தது. 2006 நவம்பரில் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையின் மூலமாக இந்த வெற்றியானது சட்டபூர்வ அந்தஸ்தையும் பெற்றுக்கொண்டது.
    இந்த உடன்படிக்கையானது தற்போது நேபாள இராணுவம் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் நேபாள அரச இராணுவம், நேபாள கொன்யூனிஸ்ட்டு கட்சி (மாவோ) யையும் உள்ளடக்கிய புதிய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் தன்னை ஜனநாயகமயப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த கட்டுரை எழுதப்படும் வரையில் இது நடைபெறவில்லை……..

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5986:2009-07-14-06-39-02&catid=75:2008-05-01-11-45-16

  5. நேபாள ஆட்சிக் கவிழ்ப்பு: இந்திய மேலாதிக்கச் சதி, ஓட்டுக்கட்சிகளின் துரோகம்!

    அண்டை நாடான நேபாளத்தில் இடைக்கால அரசின் பிரதமரான தோழர் பிரசண்டா கடந்த மே 4ஆம் தேதியன்று பதவி விலகியதையடுத்து, அந்நாட்டில் கொந்தளிப்பான அரசியல் போராட்டங்கள் தொடர்கின்றன.
    மன்னராட்சி ஒழிக்கப்பட்டு அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் முடிந்து, ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்கான பாதையில் அந்நாடு அமைதியாகப் பயணித்துக் கொண்டிருப்பதாக நிலவும் கருத்தைத் தகர்த்து, அந்நாடு மீண்டும் அரசியல் போராட்டங்களால் குலுங்குகிறது. இந்தியாவின் மேலாதிக்கச் சதிகளுக்கும் இந்தியக் கைக்கூலி அரசியல் சக்திகளுக்கும் எதிராக, “அந்நிய எஜமானர்களிடம் சரணடையாதே! நாட்டு விரோத சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கைக்கூலி இராணுவத் தளபதியைப் பதவி நீக்கம் செய்! சதிகார அதிபர் ஒழிக!” என்ற முழக்கங்களுடன் வீதியெங்கும் மக்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்களாலும் சாலை மறியல் போராட்டங்களாலும் அந்நாடு அதிர்கிறது.

    நேபாள மன்னராட்சிக் கொடுங்கோன்மைக்கு…

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5851:2009-06-09-19-26-57&catid=278:2009

  6. நேபாளம், ஒரு நம்பிக்கையூட்டும் புரட்சிகரமான முன்னெடுப்பு. : சமிர் அமின்

    உண்மையான புரட்சிகர முன்னேற்றம். விவசாயிகளின் பொதுவான புரட்சியை ஆதரித்து வரும் ஒரு விடுதலை இராணுவம் தலைநகரத்தின் வாயிலை எட்டுவதாகவும், நகர்ப்புற மக்கள் தம்பங்கிற்கு கிளர்ந்தெழுந்து மன்னராட்சியை அதிகாரத்திலிருந்து துரத்தியடித்துவிட்டு, தமது மீட்பர்களாக இந்த புரட்சிகர இராணுவத்தை வரவேற்பதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

    நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சியினரின் (மாவோ) புரட்சிகர மூலோபாயத்தின் திறமைக்கு வேறு சான்றுகள் தேவையிருக்காது. எமது சகாப்தத்தின் மிகவும் தீவிரமான, வெற்றிகரமான புரட்சிகர முன்னெடுப்பை இது வெளிப்படுத்துவதனால், இது மிகவும் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.
    நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சியினரின் இந்த வெற்றியானது நேபாளத்தில் தேசிய மற்றும் மக்கள் ஜனநாயக புரட்சிக்கான நிலைமைகளை..

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5790:2009-05-27-05-10-50&catid=75:2008-05-01-11-45-16

  7. நேபாளத்தில் கலகம் – மருதன்

    பிரசந்தா மட்டுமல்ல ஜனநாயகமும் நேபாளத்தில் ராஜிநாமா செய்துவிட்டது. நேபாளத்தில் ஒரு பகுதியினரும் இந்தியாவில் ஒரு பகுதியினர் தவிர அனைவரும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். பிரசந்தா ஆட்சியில் அமர்ந்த மறு கணமே படபடப்பு தொடங்கிவிட்டது. இவர் எப்போது விலகுவார்? என்ன செய்தால் இவர் ஆட்சி கலையும்? எப்போது மீண்டும் மன்னராட்சி வரும்? எப்போது நேபாளத்துக்கு சுபிட்சம் கிடைக்கும்? ஜனநாயகம், நாடாளுமன்றம், காபினெட், பொதுக்குழு, விவாதம் போன்ற உபத்திரவங்கள் எப்போது ஒழியும்?

    இருளுக்கு மட்டுமே பழக்கமாகிவிட்ட கண்கள் வெளிச்சத்தை விரும்புவதில்லை. தலைமுறை தலைமுறையாக மன்னர்கள்..

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5760:2009-05-16-14-15-13&catid=75:2008-05-01-11-45-16

  8. நேபாளச்சிவப்பு சாயம் போகாது

    நேபாளம், அண்மைக்காலங்களில் மன்னராட்சியிலிருந்து விடுபட்டு மக்களாட்சி முறைக்கு திரும்பிய நாடு. மிக நீண்ட காலமாய் முடியாட்சியின் இன்னல்களை சகித்துக்கொண்டிருந்த மக்கள், எதிர்க்கத்துணிந்தபோது அதை பயன்படுத்திக்கொண்ட அங்குள்ள அரசியல் கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் மன்னர்களோடு சமரசம்
    செய்து கொண்டு, அதிகாரத்திற்கு வந்து சுகித்தனர். ஒரு கட்டத்தில் இந்த அரசியல் கட்சித்தலைவர்களையெல்லாம் கைது செய்து சிறையிலடைத்துவிட்டு மன்னர் ஞானேந்திரா தானே நேரடியாக பொறுப்பேற்ற போது, ஏற்கனவே முடியாட்சியை எதிர்த்து மக்கள் திரள் போராட்டங்கள் மூலமும் மக்கள் விடுதலை ராணுவம் என்ற ராணுவ அமைப்பின் மூலமும் போராடிக்கொண்டிருந்த மாவோயிஸ்டுகள் மேலிருந்தும் கீழிருந்தும் போராட்டத்தை தொடர்வது என்னும் யுத்த தந்திர முறையில் அந்த அரசியல் கட்சிகளோடு இணைந்து மன்னராட்சியை நேபாளத்திலிருந்து தூக்கி எறிந்…

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5754:2009-05-15-05-49-40&catid=281:2009-01-18-17-21-15

  9. நேபாள மக்கள் போராட்டத்தின் 13வது ஆண்டு நிறைவு: நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

    நேபாள மாஓவாதிகள் தங்களது மக்கள் போராட்டங்களை தொடங்கி இன்றுடன் 13 வருடங்கள் ( 1996 பெப்ரவரி 13) முடிவடைன்றன. நேபாள மக்களாலும் மாஓவாதிகளாலும் பத்து வருட இடைவிடாத மக்கள் போராட்டத்தின் விளைவாக மிகப் பெரிய மாற்றத்தை நேபாளத்தில் கொண்டு வர முடிந்து இருக்கிறது.

    தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்று ஒரு மிக முக்கியமான சந்தியில் நிற்கிறது. நேபாள மக்கள் போராட்டத்தின் 13வது ஆண்டு நிறைவின் நினைவாக இக் கட்டுரை எழுதப்படுகிறது.

    சீன, வியற்நாமிய, பிலிப்பினிய கம்யூனிஸ்றுக்கள் உட்பட்ட மாக்ஸிய லெனினியர்கள் யாவரும் எல்லாக் காலத்திலும் அமைதியான முறையில் நியாயமான தீர்வுகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் பெற ஆயத்தமாகவே இருந்துள்ளனர். வீணான..

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4993:-13-&catid=146:2008-07-21-12-50-08

  10. பசுபதி நாதர் ஆலயப் பிரச்சினை : பாரம்பரியமா? பிராந்திய ஆதிக்கமா?

    மக்களின் பேராதரவுடன் ஆயுதப்போராட்டம் நடத்தி, மன்னர் ஆட்சியைத் தூக்கியெறிந்த நேபாள மாவோயிஸ்ட் கட்சியை அரசியல் நிர்ணய சபையில் இருந்து வெளியேற வைத்து, மீண்டும் ஆயுதப் போராட்ட பாதைக்குத் திருப்பித்
    தனிமைப்படுத்துவது எனும் செயல் உத்தியை நேபாளத்தில் இருக்கும் எதிர்ப்புரட்சி கும்பல்கள் ஒன்றுபட்டு செயல்படுத்தி வருகின்றன. நேபாளத்தில் அன்றாடம் நடக்கும் அற்ப விசயங்களைக் கூடப் பூதாகரமாக்கி மாவோயிஸ்டுகள் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி எரிச்சலூட்டுவதில் அங்கிருக்கும் போலி கம்யூனிஸ்ட் கட்சியும் நேபாள காங்கிரசு கட்சியும் கை கோர்த்துச் செயல்படுகின்றன. இதற்கு இந்திய அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அன்னிய சக்திகளும், கிரீடத்தை இழந்த மன்னரும் துணை நிற்கின்றனர். அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட காத்மண்டு பசுபதிநாதர் கோவில் விவகாரம் இதைத்தான் உணர்த்துகிறது.

    நீண்ட காலமாக தென்னிந்திய பார்ப்பனர்களைத்தான் பசுபதிநாதர் சிவாலயத்தின் தலைமை அர்ச்சகர்களாக நேபாள மன்னராட்சி நியமித்து…

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4963:2009-02-09-19-47-51&catid=278:2009

  11. முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க! பொதுக்கூட்ட உரைகள் லட்சுமண் பந்த் – நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்புக் குழு

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4319:2008-11-02-19-24-20&catid=111:speech

  12. முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க! பொதுக்கூட்ட உரைகள் சி.பி.கஜீரேல்-நேபாள் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4318:2008-11-02-19-23-26&catid=111:speech

  13. நேபாளம் பற்றிய சமீபத்திய தகவல்கள் ஏதும் தெரியாத நிலையில் இருக்கும் பொழுது, மாவோயிஸ்ட் தோழர் வந்து நிலைமையை விளக்குகிற கூட்டம் முக்கியமான கூட்டம். கண்டிப்பாக வருகிறேன்.

  14. நாங்க எல்லாம் வந்துட்டோம் எல்லாம் சீக்கிரம் வாங்க, ஸ்பெஷல் வெல்கம் நம்ம லக்கிக்கு

  15. நேபாளக்குண்டு வெடிப்பு : இந்துமதவெறி பயங்கரவாதிகளின் சதிகள்!
    இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுக்குத் தெற்கேயுள்ள புறநகரான லலித்பூரின் தேவாலயத்தில் அன்று அமைதியாக வழிபாடு நடந்து கொண்டிருந்தது.

    ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட கிறித்தவர்கள் வழிபாட்டுக்குத் திரண்டிருந்தனர். தலைமைப் பாதிரியார் பைபிளை மேற்கோள் காட்டிப் பிரசங்கம் செய்தபொழுது, திடீரென பேரொலியுடன் குண்டுகள் வெடித்தன

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6257:o-&catid=278:2009

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க