முகப்புஇப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?
Array

இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

-

இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

அப்துல் கலாம் சென்னை வரும்போதெல்லாம் விரும்பிச் சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ருபா. எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020-இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அவர் கோருகின்ற இந்தியக் குழந்தைகளோ 2 ருபா கொடுத்து ரேசன் அரிசி வாங்க இயலாத வறுமையால் பட்டினியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“பருவ மழை பொத்து வறட்சி ஏற்பட்டாலும் நமது மக்கள் எவரும் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட அனுமதிக்க மாட்டோம்” எனக் கடந்த மாதம் மன்மோகன் சிங் முழங்கிக் கொண்டிருந்தபோதே, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பட்டினிச் சாவுச் செய்திகள் வெளிவரத் தொடங்கியிருந்தன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில மட்டும் ஜூலை 2008 முதல் ஜனவரி 2009 வரை, சத்தான உணவின்றி உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 676. அங்கு கர்ப்பிணிகளுக்குப் போதிய ஊட்டச்சத்தான உணவு இல்லாததால், ஒவ்வொரு நாலு நிமிடத்திற்கும் ஒரு குழந்தை இறந்தே பிறக்கிறது. தப்பிப் பிழைக்கும் குழந்தைகளில் 14 சதவீதம், தங்களது ஆறு வயதிற்குள் மடிந்து போகின்றன. ஊட்டச் சத்தின்மையால் வாடும் குழந்தைகளின் சதவீதம் 45-இல் இருந்து 60-ஆக இப்போது உயர்ந்துள்ளது.

அம்மாநிலத்தில் கிராமங்களைப் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கொழிந்து, பசியின் கொடுமையால் அண்மையில் இறந்து போன குழந்தைகளின் எண்ணிக்கையைக் கொண்டு அழைக்கும் வழக்கம் உருவாகி உள்ளது. அவற்றை “ஆறு பிள்ளைகளின் கிராமம்” என்றும் “பத்து பிள்ளைகளின் கிராமம்” என்றும் அழைப்பதைக் கேட்கவே கொடுமையாக உள்ளது. அந்தக் கிராமங்களில் உள்ள குழந்தைகள், உப்பிய வயிறோடும் வதங்கிய கை-கால்களோடும் பிதுங்கிய விழிகளோடும்  அவை மனிதக் குழந்தைகள்தானா என்று சந்தேகம் எழும் அளவு பட்டினியால் ஒடுங்கிப் போக் காணப்படுகின்றன.

இவ்வாறு குழந்தைகள் பட்டினியால் சாவது குறித்து அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான கணேஷ் சிங், “எதற்கெடுத்தாலும் அரசாங்கம்தான் வர வேண்டுமென இந்த மக்கள் ஏன் எதிர்பார்க்கிறார்கள்?”, “தன் கையே தனக்குதவி என இருப்பவர்களுக்குத்தான் அரசு உதவும்” என திமிரோடு கூறுகிறான்.

கணேஷ் சிங்கின் தொகுதியைச் சேர்ந்த மக்கள், எதற்கெடுத்தாலும் அரசை எதிர்பார்த்திருப்பவர்களும் அல்லர். கிராமங்கள் மீது எவ்வித அக்கறையுமில்லாத அரசு, விவசாயம் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்திவிட்ட பிறகு, சொத்துக்கே வழியில்லாத மக்கள் தங்களது நிலங்களை முதலில் அடமானம் வைத்தார்கள். வேறு வேலையும் கிடைக்காத நிலையில் ஒரு கட்டத்தில் மொத்த கிராமமுமே கடனில் மூழ்கி, பசிப் பிணியால் குழந்தைகள் செத்து மடியும் சூழல். அப்போதுதான் வேறுவழியின்றி அரசின் உதவியை அம்மக்கள் நாடினர். மக்கள் பிரதிநிதிகளாகக் கருதப்படுவோரோ அம்மக்களைப் பிச்சைக்காரர்களைப் போலச் சித்தரிக்கின்றனர்.

“உணவுக்கான உரிமை” என்ற பிரச்சார குழுவைச் சேர்ந்த சச்சின் ஜெயின், “இனம், மொழி, நிற பேதமின்றி அனைத்து தேசங்களிலும், குழந்தைகளுக்கு உணவளிப்பதைத்தான் தமது முதல் கடமையாகப் பெற்றோர்கள் கருதுகின்றனர். இங்கே குழந்தைகள் பஞ்சத்தில் மடிகிறார்கள் எனில், அதுதான் பஞ்சத்தின் உச்சம். இங்கு ஒட்டுமொத்த சமூகமே உணவின்றி வாடுகிறது என்று பொருள்” என்கிறார்.

இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா

மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பட்டினிச் சாவுகள் நடந்தவண்ணம் உள்ளன. நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டோம், நமது கிடங்குகளில் உள்ள தானிய மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் நிலவுக்கே கூட போய் வரலாம் எனப் பொருளாதார மேதைகள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் போதே, திசைகள் எங்கும் பட்டினிக் கொடுமை நீக்கமற நிறைந்திருக்கிறது. நெல்லின் பிறப்பிடமான ஒரிசாதான் இந்தியாவிலேயே பட்டினிக் கொடுமையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச இறப்பு விகிதம் உள்ள மாவட்டம் ஒரிசாவின் காலகந்தி ஆகும் (ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 140 பேர் செத்துப் போகிறார்கள்). பட்டினிக் கொடுமையின் இறுதி நிகழ்வான வயிற்றுப் போக்கால் இங்கு மக்கள் மடிந்து போவது வழமையாக உள்ளது. “இந்த கிராமத்தில் ஒருவன் நோயில் படுத்தால் அவன் செத்து போக வேண்டியதுதான்” என்கிறார், தனது மனைவியையும், குழந்தையையும் அடுத்தடுத்து பறிகொடுத்த மதன் நாயக் என்பவர். இவ்வாறு பட்டினியால் மக்கள் சாகும் காலகந்தி-போலன்கிர்-கோராபுட் பகுதியில் இருந்துதான் ஏழு கோடீஸ்வர வேட்பாளர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர் என்பது முரண்நகை.

காலகந்திக்கு அருகிலே உள்ள காசிப்பூர் பகுதியில் விவசாயம் பொத்துப் போனதால், உணவுக்கு வழியின்றி மக்கள் அல்லாடுகின்றனர். ஒரு காலத்தில் தமக்கென சொந்தமாக நிலம் வைத்திருந்த பழங்குடியினரும், சிறு விவசாயிகளும் கொஞ்சம் கொஞ்சமாக பெரு விவசாயிகளிடம் அற்ப விலைக்குத் தமது நிலங்களை விற்று விட்டு விவசாயக் கூலிகளாக மாறிப்போயுள்ளனர். விவசாயம் பொத்துப் போகும் போது உணவுக்கு வழியின்றி மாங்கொட்டைகளை அரைத்து உண்கின்றனர். பூஞ்சை படர்ந்து நஞ்சாகிப் போன மாங்கொட்டைகளை உட்கொண்டதால் 2001-இல் இந்தப் பகுதியில் 54 பேர் வாந்தி-பேதிக்கு பலியானார்கள்.

கடந்த சில வருடங்களில், இதுவரை 540 பேர் வரை பட்டினியால் மடிந்து போனது குறித்து ஒரிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கிடம் கேட்ட பொழுது “இங்கு பட்டினிச்சாவே இல்லை” என்று ஒரே வரியில் கூறி மழுப்பிவிட்டார். ஆனால் ஒரிசாவின் பழங்குடியினரும், விவசாயிகளும் வயிற்றுப் பிழைப்புக்காக சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களுக்குப் படையெடுக்கும் காட்சியோ, அவர் கூறுவது முற்றிலும் பொ என்பதை நிரூபிக்கிறது. அவர்கள் அந்நகரங்களில் கூலி வேலை பார்த்து சம்பாதிப்பதில் 70 சதவீதத்தை அந்நகரங்களில் செலவழித்தது போக, மிஞ்சும் அற்பத் தொகைதான் ஒரிசாவிலுள்ள அவர்களது குடும்பத்திற்கு உணவுக்குச் செலவிடப்படுகிறது.

நிலச் சீர்திருத்தத்தை முறையாகச் செய்த ஒரே மாநிலம் என சி.பி.எம். கட்சியினர் பெருமையுடன் பீற்றிக் கொள்ளும் மேற்கு வங்கத்தின், மேற்கு மித்னாபூரில் உள்ள அம்லாசோல் கிராமத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்தே பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து வருகின்றன. மேற்கு வங்க போலி கம்யூனிஸ்டு அரசு பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கதையளந்தாலும், இன்றும் அம்லாசோல் அதே நிலைமையில்தான் உள்ளது. பட்டினிச் சாவுகளை வெளிக் கொணர்ந்த அம்லாசோல்-ஐச் சேர்ந்த சி.பி.எம். கட்சி உறுப்பினரான கைலாஷ் முண்டா என்பவர், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார் என்ற ஒரேயொரு மாற்றம் தவிர்த்து, எதுவும் மாறிவிடவில்லை. அதேபோல, லால்கரை ஒட்டிய பகுதிகளில் உணவுப் பற்றாக்குறையும், குழந்தைகள் ஊட்டச்சத்தில்லாமல் தவிப்பதும் நிரந்தரமாக நிலவுகிறது.

இம்மூன்று மாநிலங்களில் மட்டுமல்லாது இன்னும் பிற மாநிலங்களிலும் விவசாயக் கூலிகளும் அவர்களது குழந்தைகளும் பட்டினியால் மரணமடைந்து வருகின்றனர். விஷம் போல ஏறும் விலைவாசி அவர்களது மரணத்தைத் துரிதப்படுத்திவருகிறது. இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்றிவருவதாக ஆளும் வர்க்கம் கூறி வருகிறது. ஆனால் உண்மையில் “மக்களின் வாழ்கைத் தரத்திலும், சுகாதாரத்திலும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்திலும் இந்தியா பஞ்சத்தில் அடிபட்ட ஆப்பிரிக்காவின் சஹாராப் பாலைவனப் பிரதேசங்களைப் போன்று நலிவுற்று உள்ளது” என நோபல் பரிசு பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் அமர்த்யா சென் கூறியுள்ளார். இதுதான் வல்லரசுக் கனவுகளோடு நோஞ்சான் தலைமுறையை அடைகாக்கும் இந்தியாவின் நிலைமை. வயிற்றை நிரப்ப உணவின்றிப் பச்சிளங்குழந்தைகள் ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருக்கும்போது நாட்டை வல்லரசாக்குவதையும், சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதையும் பற்றி மேதாவிகள் அளந்து கொண்டிருக்கின்றனர். கும்பி கூழுக்கு அழுததாம்! கொண்டை பூவுக்கு அழுகிறதாம்!

புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2009

புதிய ஜனநாயகம் செப்டம்பர்  2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

  • எவன் சொன்னான்,?தமிழ் நாட்டுல பட்டினி சாவா? ஒவ்வொரு கோவில் வாசல்லயும்,பார்த்தால் தெரியும் சாவை தள்ளிப்போட பிச்சை எடுக்கும்கூட்டத்தை,இராமேசுவரம் அக்கினி தீர்த்த கடலுக்கு போய் பாருங்க சந்தேகமுன்னா,அப்துல்கலாமை கேளுங்க,…..ஒரு சோறு பதமுங்க..மதி[பட்டிணி]இண்டியா.

 1. இங்கு இப்படியொரு பட்டினிச் சாவுகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் போதும் கூட மத்திய அரசும் ஆளும் வர்க்கத்தினரும் கிரிக்கட்டிற்கும், விண்வெளி நிலவு ஆராய்ச்சிக்கும், கட்சித் தலைவர்களின் வெளியூர் பயணங்களுக்கும் பணத்தை கண்டபடி செலவழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

  இங்கு இப்படியொரு பட்டினிச் சாவுகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் போதும் கூட மேட்டுக்குடிக் குடும்பங்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் எந்தக் கவலையுமின்றி ‘நான் சம்பாதித்த பணத்தை நான் செலவு செய்கிறேன்’ என்ற மமதையில் உணவு விடுதிகளிலும் சினிமா மற்றும் மற்ற கேளிக்கைகளிலும் பணத்தை கண்டபடி செலவழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

  இதுதான் இன்றைய இந்தியா – வசதி படைத்தவர்களுக்கு மட்டும் வல்லரசாகத் தெரியும் நாடு, ஆளும் வர்க்கத்தினரை அனுசரித்து, வால் பிடித்து போகத் தெரிந்தவர்கள் மட்டும் உணரும் சுதந்திர நாடு.

  தோழமையுடன்,

  செந்தில்.

 2. இப்படி பிச்சை எடுத்து தின்பதைவிட மடிவதே மேல் அப்படியே பிச்சை எடுக்க வந்தாலும்
  கொலுப்பெடுத்த கூட்டம் கர்ப்பம் ஆக்கி விடுமடா சாமி

 3. பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தங்கள் வறிய நிலையில் கையேந்தி நிற்கும் வரைக்கும், அவர்கள் திமிராய் என்ன வேண்டுமென்றாலும், பேசுவார்கள்!

  சுயமரியாதையுடன் போராட துவங்கினால்… பிறகு அவர்களே இறங்கி வருவார்கள்.

  நக்சல்பாரிகளின் தேவையை அரசே கண்ணும் கருத்துமாய் பார்த்து கொள்கிறது.

 4. ஆம். இதில் சொன்னபடி, இந்தியாவில் பல பகுதிகளில் சகாரா பாலைவன பகுதிகளை விட பட்டினியும், குறைந்த உணவு உட்கொள்ளும் நிலையும் உள்ளது.

  இதற்கான காரணிகள் பற்றி ஏற்கெனவெ இதர பதிவுகளில் விவாதம் நடந்துள்ளது.
  தாராளமயமாக்கல் தான் காரணமா, அல்லது அதை அமலாக்காமல் இருந்திருந்திருந்தால் நிலைமை இன்னும் மேம்பட்டிருக்குமா அல்லது இதை விட படு மோசமாக இருந்திருக்காமா என்ற கேள்விக்கும் விவாதம் நடந்தது. இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பொருளாதார அறிஞர் அமர்தியா சென், இக்கேள்விக்கு அளித்த பதில்களும், விளக்கங்களும் முக்கியமானவை. இந்தியாவில் அனைத்து மாநில‌ங்க‌ளும் ஒரே போல‌ பாதிப்ப‌டைய‌வில்லை. ஒரிஸாவை ஒப்பிடும் போது த‌மிழ‌க‌ம் எவ்வ‌ள‌வோ மேல். ஏன் ? ப‌ட்டினிசாவுக‌ள் ந‌ட‌க்கும் ஒரிஸா ப‌குதிக‌ள் வ‌ற‌ண்ட‌ ப‌குதிக‌ள் அல்ல‌. நீர் வ‌ள‌ம் நிறைந்த‌ ப‌குதிக‌ள் தாம். (எம் ந‌ண்ப‌ர் அப்ப‌குதியில் அர‌சு அதிகாரியாக‌ ப‌ணியாற்றுகிறார். அவ‌ரிட‌ம் தொட‌ர்து விவாத‌ம்).
  மேலும் ப‌ல‌ கார‌ணிக‌ள் உண்டு.

  ஆனால் இதைவிட முக்கியம், தீர்வுகள் மற்றும் செய்ய வேண்டியவை :

  1.180 வருடங்களுக்கு முன் அய்ரோப்பாவும், வட அமெரிக்காவும் ஏறக்குறை இன்றைய இந்தியா போல இருந்தன. கடுமையான வறுமை, பசி, கொடுமையான வேலைகள், குழந்தை தொழிலாளர்கள், பாதுகாப்பற்ற பணியுடங்கள், என்று பல விசியங்களில் இன்றைய இந்தியாவை ஒப்ப இருந்தது. அந்நாடுகளில் இன்று இந்தியா அளவு பசி, பட்டினி, வறுமை இல்லை. எப்படி அவை வளர்ந்தன, எந்த பொருளாதார, அரசியல் கொள்கைகளை பின்பற்றின என்று ஒப்பிடலாம்.

  2.////கும்பி கூழுக்கு அழுததாம்! கொண்டை பூவுக்கு அழுகிறதாம்!//// சரியான பழமொழி. இந்திய அரசு பல வேறு வழிகளில் மக்களின் வரிப்பணத்தை
  வீணடிக்கின்றது. முதல் விரயம் ராணுவ செலவு. ஆண்டுக்கு சுமார் 1.5 லச்சம் கோடிகள். இதை கால்வாசியாக குறைக்க முடியும். முதலில் அதற்க்கு காஸ்மீர் ‘பிரச்சனையை’ தீர்க்க வேண்டும். ஒரே வழி, ஜம்முவை (இந்துக்கள் வசிக்கும் பகுதி)காஸ்மிரிலிருந்து பிரித்துவிட்டு, பின் கஸ்மிர் பிரச்சனையை அய்.நா சபைக்கு அனுப்பி, அய்.நா மேற்பார்வையில் அங்கு ஒரு ஒட்டெடுப்பு நடத்த வேண்டும். இல்லாவிட்டால் விமோச்சனம் இல்லை. தொடர் கொலைகள் மற்றும் விரய செலவுகள். அதே போலதான் வட கிழக்கு மாநிலங்கள்லிலும். ஆனால் இதெல்லாம நடக்கிற காரயமா ? மதவாதம் ஒழிய, முதலில் இந்த மதவதவாதம்
  அழிக்கப்பட வேண்டும். 1980க்கு முன் பி.ஜெ.பி, வி.ஹெச்.பி போன்றவை செல்வாக்கில்லாம இருந்தன. மதக்கலவரங்கள் ஒரு சில வட இந்திய நகரங்களில் (கிராமங்களில் இல்லை) அவ்வப்போது நிகழ்ந்தன. இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடலே அன்று இல்லை. காஸ்மீர் மற்றும் இந்துத்வா சக்திகளில் எதிர்வினை தான் இது. இவற்றை எதிர்க்க அரசு எந்திரம் மற்றும் மக்கள் கொடுக்கும் விலை மிக மிக அதிகம்.

  இவை போன்ற‌ செல‌வுளை க‌டுமைகயாக‌ குறைத்தால் வருட‌த்திற்க்கு ப‌ல‌ ல‌ச்ச‌ம் கோடிக‌ள் விர‌ய‌மாவ‌தை த‌டுத்து, அர‌சினால் உருவாகும் ப‌ண‌ வீக்க‌த்தை வெகுவாக‌ குறைத்து, விலைவாசி உய‌ர்வை முற்றாக‌ த‌விர்க்க‌லாம். (அப்ப‌டி 2 % அள‌விற்க்கு குறைத்த‌ நாடுக‌ளும் உண்டு). நிர்வாக‌ செல‌வுக‌ள் மிக‌ அதிக‌ம். ப‌ல‌ தேவையில்லாத‌
  அமைச்சர‌க‌ங்க‌ள், இய‌க்குன‌ர‌க‌ங்க‌ள், ப‌ல‌ ஆயிர‌ம் கோடிக‌ளை வெட்டியாக‌ செல‌வு செய்கின்ற‌ன‌. ச‌ந்ரேய‌ன் ம‌ற்றும் இத‌ர‌ விண்வெளி ஆய்வுக‌ளும் வெட்டி செல‌வுதான்..

  3.விவ‌சாயிக‌ளின் விலைபொருட்க்களுக்கு ‘ந‌ல்ல‌’ விலை வேண்டும் ; அதே நேர‌த்தில் ம‌க்க‌ளுக்கு அவை ம‌லிவாக‌ கிடைக்க‌வும் வேண்டும். இவை இர‌ண்டும் முர‌ணான‌ கோரிக்கைக‌ள். இதை ச‌ம‌ப்ப‌டுத்த‌வே அர‌சின் மான்ய‌ங்க‌ள். வ‌ள‌ர்ந்த‌ நாடுக‌ளின் அள‌வு, இங்கு போதியா மான்ய‌ம் அளிக்க‌ முடிய‌வில்லை. போதிய‌ நிதி இல்லை என்ப‌து ஒரு கார‌ண‌ம் தான். (மேலே குறிப்பிட்ட‌ வ‌ழிக‌ளில் அர‌சின் வெட்டிச்செல‌வுக‌ளை குறைத்தால், ‘போதிய‌’ நிதி திர‌ட்ட‌ முடியும்). ம‌ற்றொரு முக்கிய‌ கார‌ணி : ஊழ‌ல். மான்ய‌ங்க‌ள் ‘த‌குதியான‌’ ஏழைக‌ள் ம‌ற்றும் சிறுவிவ‌சாயிக‌ளுக்கு போய் சேராம‌ல் இடையில் இருக்கும் அர‌சு ஊழிய‌ர்க‌ள், அர‌சிய‌ல்வாதிக‌ள் ம‌ற்றும் காண்ட்ராக்ட‌ர்க‌ளால் திருட‌ப்ப‌டுகிற‌து. இத‌ன் அள‌வு மிக‌ மிக‌ மிக‌ அதிக‌ம்.

  செம்புரட்சி இதற்கெல்லாம் தீர்வல்ல. அது சாத்தியமும் இல்லை. அப்படி செம்புரட்சி வந்தாலும், எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதே வரலாறு தரும் பாடம். விவசாயத்தை கூட்டுப்பண்ணை முறைக்கு மாற்றும் போது, ஆரம்ப காலங்களில், விவசாய உற்பத்தி பல‌ ம‌ட‌ங்கு வீழ்ந்து, ப‌ஞ்ச‌மும், ப‌ட்டினிச்சாவுக‌ளும் ப‌ல‌ கோடி ம‌க்க‌ளை கொல்லும் சாத்திய‌ம் மிக‌ அதிக‌ம்.

  ஆனால் ஜ‌ன‌னாய‌க‌ முறையில் இங்கு நேர்மையான‌ தீர்வும் சாத்திய‌ம் போல‌ தோன்ற‌வில்லை. விமோச்ச‌ன‌மே இல்லாம‌ல் தொட‌ர் ப‌ட்டினிதான் இந்திய‌ர்க‌ளுக்கு..

  தொட‌ர்ந்து ‘விவாத‌ம்’ ம‌ட்டும் நாம் செய்துகொண்டிருக்க‌லாம். இணைய‌த்திலும், வெளியிலும்…

  • அதியமான், வலதுசாரிகளின் வலது கோடியில் இருப்பவர் கீழே (OMPC )பின்னூட்டம் எழுதியிருக்கிறார். அவர் வலதுசாரிதான், நீங்கள்?

  • //1.180 வருடங்களுக்கு முன் அய்ரோப்பாவும், வட அமெரிக்காவும் ஏறக்குறை இன்றைய இந்தியா போல இருந்தன. கடுமையான வறுமை, பசி, கொடுமையான வேலைகள், குழந்தை தொழிலாளர்கள், பாதுகாப்பற்ற பணியுடங்கள், என்று பல விசியங்களில் இன்றைய இந்தியாவை ஒப்ப இருந்தது. அந்நாடுகளில் இன்று இந்தியா அளவு பசி, பட்டினி, வறுமை இல்லை. எப்படி அவை வளர்ந்தன, எந்த பொருளாதார, அரசியல் கொள்கைகளை பின்பற்றின என்று ஒப்பிடலாம்.

   2.////கும்பி கூழுக்கு அழுததாம்! கொண்டை பூவுக்கு அழுகிறதாம்!//// சரியான பழமொழி. இந்திய அரசு பல வேறு வழிகளில் மக்களின் வரிப்பணத்தை
   வீணடிக்கின்றது. முதல் விரயம் ராணுவ செலவு. ஆண்டுக்கு சுமார் 1.5 லச்சம் கோடிகள். இதை கால்வாசியாக குறைக்க முடியும். முதலில் அதற்க்கு காஸ்மீர் ‘பிரச்சனையை’ தீர்க்க வேண்டும். ஒரே வழி, ஜம்முவை (இந்துக்கள் வசிக்கும் பகுதி)காஸ்மிரிலிருந்து பிரித்துவிட்டு, பின் கஸ்மிர் பிரச்சனையை அய்.நா சபைக்கு அனுப்பி, அய்.நா மேற்பார்வையில் அங்கு ஒரு ஒட்டெடுப்பு நடத்த வேண்டும். இல்லாவிட்டால் விமோச்சனம் இல்லை. தொடர் கொலைகள் மற்றும் விரய செலவுகள். அதே போலதான் வட கிழக்கு மாநிலங்கள்லிலும். ஆனால் இதெல்லாம நடக்கிற காரயமா ? மதவாதம் ஒழிய, முதலில் இந்த மதவதவாதம்
   அழிக்கப்பட வேண்டும். 1980க்கு முன் பி.ஜெ.பி, வி.ஹெச்.பி போன்றவை செல்வாக்கில்லாம இருந்தன. மதக்கலவரங்கள் ஒரு சில வட இந்திய நகரங்களில் (கிராமங்களில் இல்லை) அவ்வப்போது நிகழ்ந்தன. இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடலே அன்று இல்லை. காஸ்மீர் மற்றும் இந்துத்வா சக்திகளில் எதிர்வினை தான் இது. இவற்றை எதிர்க்க அரசு எந்திரம் மற்றும் மக்கள் கொடுக்கும் விலை மிக மிக அதிகம்.

   இவை போன்ற‌ செல‌வுளை க‌டுமைகயாக‌ குறைத்தால் வருட‌த்திற்க்கு ப‌ல‌ ல‌ச்ச‌ம் கோடிக‌ள் விர‌ய‌மாவ‌தை த‌டுத்து, அர‌சினால் உருவாகும் ப‌ண‌ வீக்க‌த்தை வெகுவாக‌ குறைத்து, விலைவாசி உய‌ர்வை முற்றாக‌ த‌விர்க்க‌லாம். (அப்ப‌டி 2 % அள‌விற்க்கு குறைத்த‌ நாடுக‌ளும் உண்டு). நிர்வாக‌ செல‌வுக‌ள் மிக‌ அதிக‌ம். ப‌ல‌ தேவையில்லாத‌
   அமைச்சர‌க‌ங்க‌ள், இய‌க்குன‌ர‌க‌ங்க‌ள், ப‌ல‌ ஆயிர‌ம் கோடிக‌ளை வெட்டியாக‌ செல‌வு செய்கின்ற‌ன‌. ச‌ந்ரேய‌ன் ம‌ற்றும் இத‌ர‌ விண்வெளி ஆய்வுக‌ளும் வெட்டி செல‌வுதான்..

   3.விவ‌சாயிக‌ளின் விலைபொருட்க்களுக்கு ‘ந‌ல்ல‌’ விலை வேண்டும் ; அதே நேர‌த்தில் ம‌க்க‌ளுக்கு அவை ம‌லிவாக‌ கிடைக்க‌வும் வேண்டும். இவை இர‌ண்டும் முர‌ணான‌ கோரிக்கைக‌ள். இதை ச‌ம‌ப்ப‌டுத்த‌வே அர‌சின் மான்ய‌ங்க‌ள். வ‌ள‌ர்ந்த‌ நாடுக‌ளின் அள‌வு, இங்கு போதியா மான்ய‌ம் அளிக்க‌ முடிய‌வில்லை. போதிய‌ நிதி இல்லை என்ப‌து ஒரு கார‌ண‌ம் தான். (மேலே குறிப்பிட்ட‌ வ‌ழிக‌ளில் அர‌சின் வெட்டிச்செல‌வுக‌ளை குறைத்தால், ‘போதிய‌’ நிதி திர‌ட்ட‌ முடியும்). ம‌ற்றொரு முக்கிய‌ கார‌ணி : ஊழ‌ல். மான்ய‌ங்க‌ள் ‘த‌குதியான‌’ ஏழைக‌ள் ம‌ற்றும் சிறுவிவ‌சாயிக‌ளுக்கு போய் சேராம‌ல் இடையில் இருக்கும் அர‌சு ஊழிய‌ர்க‌ள், அர‌சிய‌ல்வாதிக‌ள் ம‌ற்றும் காண்ட்ராக்ட‌ர்க‌ளால் திருட‌ப்ப‌டுகிற‌து. இத‌ன் அள‌வு மிக‌ மிக‌ மிக‌ அதிக‌ம்.

   செம்புரட்சி இதற்கெல்லாம் தீர்வல்ல. அது சாத்தியமும் இல்லை. அப்படி செம்புரட்சி வந்தாலும், எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதே வரலாறு தரும் பாடம். விவசாயத்தை கூட்டுப்பண்ணை முறைக்கு மாற்றும் போது, ஆரம்ப காலங்களில், விவசாய உற்பத்தி பல‌ ம‌ட‌ங்கு வீழ்ந்து, ப‌ஞ்ச‌மும், ப‌ட்டினிச்சாவுக‌ளும் ப‌ல‌ கோடி ம‌க்க‌ளை கொல்லும் சாத்திய‌ம் மிக‌ அதிக‌ம்.

   ஆனால் ஜ‌ன‌னாய‌க‌ முறையில் இங்கு நேர்மையான‌ தீர்வும் சாத்திய‌ம் போல‌ தோன்ற‌வில்லை. விமோச்ச‌ன‌மே இல்லாம‌ல் தொட‌ர் ப‌ட்டினிதான் இந்திய‌ர்க‌ளுக்கு..

   தொட‌ர்ந்து ‘விவாத‌ம்’ ம‌ட்டும் நாம் செய்துகொண்டிருக்க‌லாம். இணைய‌த்திலும், வெளியிலும்…//

   முதல் முறையாக மிகப் பெரும்பான்மையாக அதியமானுடைய கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன்.

   ///
   ஆனால் ஜ‌ன‌னாய‌க‌ முறையில் இங்கு நேர்மையான‌ தீர்வும் சாத்திய‌ம் போல‌ தோன்ற‌வில்லை. விமோச்ச‌ன‌மே இல்லாம‌ல் தொட‌ர் ப‌ட்டினிதான் இந்திய‌ர்க‌ளுக்கு..

   தொட‌ர்ந்து ‘விவாத‌ம்’ ம‌ட்டும் நாம் செய்துகொண்டிருக்க‌லாம். இணைய‌த்திலும், வெளியிலும்…//
   இதில் மட்டும் வேறுபடுகிறேன்.

   அதியமான்,

   உங்களது விருப்பம் ஒரு உண்மையான ஜனநாயகத்தை, மக்களுக்கான ஜனநாயகத்தை அமைப்பதுதான் எனில் எங்களுக்கும் அதுதான் நோக்கம். சோசலிசம் அதற்குப் பிறகுதான்.

   நேபாள் கூட்டத்தில் கலந்து கொண்டீர்களா? அங்கு மாவோயிஸ்டுகள் சுயச்சார்பான ஒரு ஜனநாயக குடியரசை அமைக்கவே போராடுகிறார்கள் என்பது விளக்கப்பட்டதே. அது உங்களுக்கு ஏற்புடையதுதானா?

   உங்களது பாயிண்ட் நம்பர் 3ல் ஒரு சின்ன கேள்வி கேட்கிறேன்.

   உற்பத்தியில் இரண்டு விசயங்கள் உள்ளன – ஒன்று உற்பத்தி செய்யும் முறை, இன்னொன்று உற்பத்தி செய்யும் கருவி.

   இதில் கருவி மட்டும் முன்னேறுவதால் உற்பத்தி அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு செல்லுமா? விவசாயப் பிரச்சினையை வெறுமனே விளைபொருளுக்கான விலை என்ற விசயத்தை மட்டும் வைத்து சுருக்குவது தவறு(அதுவும் முக்கியம்தான்). அடிப்படையான பிரச்சினையே விவசாயத்தில் இன்னும் பழைய உற்பத்தியை கையாளுவதும், அதை அடுத்தக்கட்டத்துக்கு வளர்ப்பதற்கு நிலத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் பெரிய பண்ணையார்கள், பெரும் பணக்கார விவசாயிகள், மடங்கள் ஆகியன தடையாக இருப்பதுமே ஆகும். இதை இன்னும் தெளிவாகச் சொல்லுவது என்றால், நிலத்தின் மீது எந்த உரிமையும் அற்ற பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் – குத்தகை விவசாயம், கூலி விவசாயி என்ற அடிப்படையில் – தமது உழைப்பைச் செலுத்தியே இந்தியாவில் விவசாயம் நடைபெறுகிறது.

   இந்த விகிதாச்சாரத்தை மாற்றியமைத்தாலே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான பல பாதைகள் திறக்கும். நிலத்தில் கால் பாவிக்காத சிலரின் கையில் பெரும் பரப்பில் நிலம். நிலத்தில் உழைப்பவனிடமோ மிகச் சிறிய அளவில் நிலம் என்ற விகிதாச்சாரத்தை சரி செய்தால் தீர்வு கிடைக்கும்.

   பாயாசம்

   • பாயாசம்,

    இல்லை. இந்திய விவசாயம் இரண்டுங்கெட்டான் நிலையில் உள்ளது. பெரிய பண்ணையார்கள் இருக்கும் நிலப்பிரபவுத்தவமும் இல்லை ; உண்மையான முதலாளித்துவ வகை கார்ப்ரெட் பெரும் பண்ணைகளும் (மேனாடுகள் போல்)இல்லை. சராசரி விவசாயின் நில அளவு வெறும் 2.5 ஏக்கர் தான். அல்லது அதை விட
    குறைவான துண்டுகள். இதனால் உற்பத்தி திறன் மிக மிக குறைவு. மேலும் பல சிக்கலான காரணிகள். பார்க்கவும் : http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்

    நேபாள‌த்தில் நில‌பிர‌வுத்திய‌ பாணி ம‌ன்ன‌ராட்சியும், ஊழ‌ல் அர‌சிய‌ல் அமைப்பையும் எதிர்த்து போராடிய‌ மாவோயிஸ்டுக‌ள், த‌ற்போதைக்கு ச‌ந்தை பொருளாதார‌மே ச‌ரி, (சில‌ நிப‌ந்த‌ணைக‌ளுக்கு உட்ப‌ட்டு) என்ற‌ நிலை கொண்டுள்ள‌ன‌ர். இந்திய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக‌ளின் நிலையும் அதுதான்.

    இந்திய‌ ஒரு அரை ஜ‌ன‌னாய‌க‌ம், அரை முதலாளித்துவ‌ நாடு. (தோழ‌ர்க‌ளின் கூற்றை ச‌ற்றே மாற்றி !).
    மேலும் முக்கிய‌ பிர‌ச்ச‌னை ஊழ‌ல், ஊழ‌ல், ஊழ‌ல்.

   • //நிலத்தின் மீது எந்த உரிமையும் அற்ற பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் – குத்தகை விவசாயம், கூலி விவசாயி என்ற அடிப்படையில் – தமது உழைப்பைச் செலுத்தியே இந்தியாவில் விவசாயம் நடைபெறுகிறது.//

    அதியமான், மேலே உள்ளதைப் பற்றி உங்க கருத்து என்ன? இந்தியாவின் மிக முக்கிய விவசாய முறை குத்தகை விவசாயம் என்பது குறித்து உங்க கருத்து என்ன?

    //நிலத்தில் கால் பாவிக்காத சிலரின் கையில் பெரும் பரப்பில் நிலம்//

    பெரும் பரப்பில் நிலம் வைத்திருந்தாலும் அதை துண்டு துண்டாக்வே வைத்துள்ளனர். துண்டு துண்டாகவே விவசாயம் செய்கிறார்கள்.

   • பாயாசம்,

    இது போன்ற sweeping statements சர்வசாதாரணமாக தோழர்கள் இங்கு விடறாக.
    மொத்த இந்திய விவசாயத்தில் எத்தனை சதம் குத்தகைக்க்கு விடப்பட்ட நிலங்கள் ?
    100 ஏக்கர் வைத்திருக்கும் (பிணாமி பெயரிலும்) ‘பண்ணையார்கள்’ எத்தனை சதம் ?
    நீங்க சொல்ற விசியமெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பு சகஜமாக இருந்தது. இன்று இல்லை. நிலம் சிறு துண்டுகளாக பிரிந்து கிடக்கிறது. இன்று 10 ஏக்கர் நஞ்செய் நிலம் வைத்திருப்பாவர் ‘பெரிய விவசாயி’.

    குத்தகைக்கு நிலத்தை கொடுத்தால் திருப்புவது மிக மிக கடினம். வேண்டுமானால் தஞ்சை மாவட்டத்தில், ஒரு 5 ஏக்கர் நஞ்சை நிலத்தை வாங்கி, ஒரு நிலமற்ற விவசாயிக்கு குத்தகைக்கு விட்டு பாருங்க. ஒரு 5 வருடம் கழித்து நிலத்தை மீட்ட முயலுங்க, புரியும். நடைமுறை எதார்த்தம் வேறு, சித்தாந்தம் வேறு..

   • ////நிலத்தின் மீது எந்த உரிமையும் அற்ற பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் – குத்தகை விவசாயம், கூலி விவசாயி என்ற அடிப்படையில் – தமது உழைப்பைச் செலுத்தியே இந்தியாவில் விவசாயம் நடைபெறுகிறது.///

    மேற்சொன்னவற்றை வலுப்படுத்தும் புள்ளி விவரங்கள்:

    A major concern in rural India is the huge number of landless or near-landless families, many of whom are wholly dependent on a few weeks of work at the peak planting and harvesting seasons. The number of landless rural families has grown steadily since independence, both in absolute terms and as a proportion of the population. In 1981 there were 195.1 million rural workers: 55.4 million were agricultural laborers who depended primarily on casual farm work for a livelihood. In the early 1990s, the rural work force had grown to 242 million, of whom 73.7 million were classified as agricultural laborers. Approximately 33 percent of the employed rural workers were classified as casual wage laborers.
    (http://www.indianchild.com/india_land.htm)

    1)
    In 1951, of the total families dependent on agriculture, as many as 23.6 per cent families belonged to the tenant class. The National Sample Survey (8th round) indicated that the lands leased out varied from 11 per cent to 26 per cent of the total, in different states. The tenants were exploited by the land owners by way of heavy rents (50 per cent or even 2/3rd of the produce). There was no protection of tenure (evictions on minor pretexts). Thus, there were no incentives for tenants to make land improvements or to increase production.
    (http://www.indiaagronet.com/indiaagronet/agri_economics/CONTENTS/Land%20Tenure.htm)

    2)
    a)
    Empowering the PowerlessOn the tenancy front the picture is quite dark. The NSS figure of 6 to 7 per cent is generally admitted to be an underestimate.
    Tenancy being illegal in many states respondents often do not disclose the truth. Many micro-studies indicate that incidence of tenancy could vary between 15 per cent and 35 per cent. These are all concealed tenancies with very exploitative terms of oral contract.
    (http://www.rdiland.org/RESEARCH/Does%20Land%20Still%20Matter.pdf)

    b)
    Tenancy reform is failure:
    (http://www.inwent.org/E+Z/zeitschr/de202-8.htm)
    Dr. K. Venkatasubramanian, member of India’s Planning Commission.

    His analysis (carried in the Commission’s website) succinctly lists some of the key factors behind the tardy implementation of tenancy reforms in this country:

    * tenancy reforms have excluded the share croppers who form the bulk of the tenant cultivators;
    * ejection of tenants still takes place on several grounds;
    * the right of resumption given in the legislation has led to land-grabbing by the unscrupulous;
    * fair rents are not uniform and not implemented in various states because of the acute land hunger existing in the country;
    * ownership rights could not be conferred on a large body of tenants because of the high rates of compensation to be paid to the tenants.

    c) குத்தகை விவசாயம் எனச் சொல்லப்படும் – tenancy இந்தியாவில் மிக முக்கியமானதொரு விவசாய முறையாக உள்ளது. tenancy reformன் தோல்வி மற்றும் அந்த சட்டத்தின் கேடான விளைவுகள் குறித்து:
    http://www.ektaparishad.com/pdf/tfr.htm

    d)
    (http://www.legalserviceindia.com/articles/tena_agr.htm)
    The tenancy cultivation suffers from three main defects; they are insecurity of tenure, rack-renting and lack of incentives of the actual cultivator. The National Sample Survey (8th round) had estimated that in 1953-54 about 90 percent of agriculture land was under tenancy system. The percentage of area leased out varied from 11 to 26 percent, though the all India average was 20 percent. It showed that about one-fifth of the total area was held under tenancy and thus it was not possible to ignore a problem affecting such a wide area. According to the 1961 census, 77 percent of the total-cultivating households were in the nature of ownership holdings, 8 percent of pure tenancy and 15 percent in mixed tenancy.

    Besides this open tenancy, there is a considerable amount of land leased out on the basis of oral or hidden tenancy that accounts for anything between 35-40 percent of the total cultivated area. The informal or the oral tenancy has been a common feature of traditional agricultural societies. Although attempts have been made to provide security of tenure, redistribution of land and fixation of fair rents, yet informal or oral tenancy has continued to exist even to this day. The term informal tenancy is referred to as oral tenancy which refers to tenancy without legal sanctions and permissions, or without any written agreement. The principal of shifting to informal tenancy is to extract higher land rents from the tenants. This is primarily done so as to get high yielding varieties programme that has brought a realization among the landlords that land is a very valuable asset and promises high rates of return. India, which is marked by land hunger, it is possible here to take advantage of the situation by charging higher rents. Also, informal tenancy arrangements are a convenient device with the landlords for nullifying tenancy reforms. Thus, unrecorded or clandestine tenancy perpetuates a semi-feudal land system that was sought to be abolished by measures of land reforms.

    The most important beneficial result of the reform is that it put an end to the system of parasitic intermediaries. On the other hand it has not put an end to absentee ownership of land nor has it lead to the disappearance of tenancies. All in all, although the contribution of tenancy reforms could not be totally neglected but the programmes including these reforms since independence did not lead into any significant redistribution of land, or the removal of all the obstacles to increasing agricultural production. The policies adopted in case were ambivalent and there were large gaps between policy and legislation and implementation.

    3)
    Land farm is a farce:
    All the states instituted programs to force landowners to sell their over-the-ceiling holdings to the government at fixed prices; the states, in turn, were to redistribute the land to the landless. But adamant resistance, high costs, sloppy record keeping, and poor administration in general combined to weaken and delay this aspect of land reform. The delays in legislation allowed large landowners to circumvent the intent of the laws by spurious partitioning, sales, gifts to family members, and other methods of evading ceilings. Many exemptions were granted so that there was little surplus land.
    (http://countrystudies.us/india/102.htm)

    4)
    More than 60 % of population still engaged in Agriculture which contributes very very less to the GDP.
    ஒரு பக்கம் வேலையை உருவாக்காத உற்பத்தி வளர்ச்சி இன்னொரு பக்கம் விவசாயத்தின் அழிவால் உருவாகும் மனித வள உபரி.
    (http://agmarknet.nic.in/scan777.pdf)
    The report takes a note of the
    revelation made in a recent Survey by National Sample Survey Organisation
    (NSSO) that nearly 400/0 of farmers would like to quit farming, if they have
    the option to do so.

    ஏன் அவர்களால் வெளியேற முடிவதில்லை? வேலைவாய்ப்பு இல்லை எனவே ஆற்றுக்கும் இல்லாமல், சேற்றுக்கும் இல்லாமல் விவசாயத்தில் தொங்கிக் கொண்டுள்ளனர்.

   • பாயாசம்,

    இந்த புள்ளிவிவ்ரங்கள் எல்லாம் 1950களி, 60களில் இருந்த நிலைமைய சொல்கிறது. இன்று எப்படி ?

    நில உச்சவரம்பு சட்டமே பைத்தியக்காரத்தனமானது. திருப்புர் / கரூர் பகுதிகளில் ஸ்டிச்சிங் யூனிட்டுகள் உண்டு. குறைந்த பட்சம் 50 அல்லது 100 தையல் மிசின்கள் ஒரே கூரையின் கீழ் இருக்கும். ஜாம் ஒர்க் ஆர்டர்கள் செய்வார்கள். தையல் மிசின் இல்லாதா ஏழை தொழிலாளர்கள் அங்கு வேலை செய்வார்கள். (தமிழகத்தின் இதர பகுதிகளை விட அங்கு தைப்பவர்கள் நல்ல சம்பளம் பெறுகிறார்கள்). நில உச்சவரம்பு சட்டத்தை போல, தையல் மிசின் உச்ச வரம்பு சட்டம் ஒன்று கொண்டு வந்து, இரண்டு தையல் மிசினுக்கு மேல் யாரும் வைத்துக்கொள்ள முடியாது என்று செய்து, உபரி தையல் மிசின்களை, ஏழை தொழிலாளர்களுக்கு வழங்கினால் என்ன ஆகும் ?
    உற்பத்தி செலவு மிக மிக அதிகம் ஆகுகி, உற்பத்தி திறன் படு மோசமாக வீழ்ந்து,
    தொழிலே அழியும் நிலை உருவாகும். இன்னும் பல கேடுகள் உருவகும். ஏறக்குறைய அதே நிலைதான் விவசாயத்திலும்.

    ////ஏன் அவர்களால் வெளியேற முடிவதில்லை? வேலைவாய்ப்பு இல்லை எனவே ஆற்றுக்கும் இல்லாமல், சேற்றுக்கும் இல்லாமல் விவசாயத்தில் தொங்கிக் கொண்டுள்ளனர்.////

    மிக நல்ல கேள்வி. இதைதான் அய்யா நாங்களும் பல காலமாக கேட்கிறோம். முன்னேறிய நாடுகள் அனைத்திலும், ஏன் சீனா போன்ற நாடுகளிலும், படிப்படியாக‌
    விவசாயம் நவீனமயமாக்கப்பட்டு, பண்ணைகளின் அளவு மிக பெரியதாக ஆகி,
    விவசாயத்தில் இருந்து, பெரும்பான்மையான மக்கள் படிப்படியாக உற்பத்தி துறைக்கும், பிறகு சேவை துறைக்கும் மாறினர் / மாறுக்கின்றனர். இந்தியாவில் 1991 வரை உற்பத்தி துறை லைசென்ஸ் ராஜ்ஜியத்தால் முடக்க பட்டதன் நிகர விளைவு (குமுளேட்டிவ் எஃபெக்ட்) தான் அடிபப்படை காரணம். விவசாயமும் நவின பண்ணைகளாக மாறாமல், உற்பத்தி துறையிலும் போதிய வேலை வாய்ப்பு உருவாகாமல் இப்படி நிலைமை சீரழந்தது. சீனாவுடன் ஒப்பீடுதான் சரி. அதுவும் இந்தியா போன்ற மக்கட்தொகை மிக மிக அதிகம உள்ள, பெரிய நாடு. அங்கு படிப்படியாக மக்கள் உற்பத்தி துறைக்கு மாறினார்கள். கம்யூனிசமோ அல்லது என்ன பெயரோ, இந்த மாற்றம் இயல்பாக நடக்காவிட்டால், நம் கதிதான்.

    10,000 தொழிலாள‌ர்க‌ள் ஒரே இட‌த்தில் அமைதியாக‌ அங்கு வேலை செய்யும் நிலை உள்ள‌து. இங்கு நினைத்துப்பார்க்க‌ முடியாது. தொழிலாளர் நலச்சட்டங்கள், சங்கங்கள் மற்றும் அதன் மூலம் விளைந்த சீர்கேடுகள். அத‌னால் பெரும் தொழிற்சாலைக‌ள், பெரிய‌ அள‌வில் (எந்திர‌ங்க‌ளை குறைவாக‌ கொண்டு) மிக‌ அதிக‌ அள‌வில் தொழிலாள‌ர்க‌ளை வேலைக்கு அம‌ர்த்தி, உற்ப‌த்தி செய்யும் முறை உருவாக‌வில்லை.
    மேலும்..

  • //மிக நல்ல கேள்வி. இதைதான் அய்யா நாங்களும் பல காலமாக கேட்கிறோம். முன்னேறிய நாடுகள் அனைத்திலும், ஏன் சீனா போன்ற நாடுகளிலும், படிப்படியாக‌
   விவசாயம் நவீனமயமாக்கப்பட்டு, பண்ணைகளின் அளவு மிக பெரியதாக ஆகி,
   விவசாயத்தில் இருந்து, பெரும்பான்மையான மக்கள் படிப்படியாக உற்பத்தி துறைக்கும், //

   சீனாவில் 45% மக்கள் விவசாயத்தில் உள்ளனர்.

  • //இந்த புள்ளிவிவ்ரங்கள் எல்லாம் 1950களி, 60களில் இருந்த நிலைமைய சொல்கிறது. இன்று எப்படி ?//

   அவை இன்றைய நிலைமையைத்தான் பேசுகின்றன. டெனான்ஸி இன்னும் பெரியளவில் (35% டூ 45%) உள்ளதைத்தான் குறிப்பிடுகிறார்கள். 65% மக்கள் விவசாயத்தில் உள்ளனர் என்பது 2005க்குப் பிறகான புள்ளிவிவரம்

  • //ஏன் சீனா போன்ற நாடுகளிலும், படிப்படியாக‌
   விவசாயம் நவீனமயமாக்கப்பட்டு, பண்ணைகளின் அளவு மிக பெரியதாக ஆகி,
   விவசாயத்தில் இருந்து//

   செய்தது மாவோ தலைமையிலான கம்யுனிஸ்டுகள்

   • பாயாசம்,

    ஆம், சைனாவின் மாவோவும் இதர காம்ரேடுகளும் தான் அந்த ‘சாதனையை’ செய்தனர். ஆனால் அதன் விலை என்ன ? பல லச்சம் மக்கள் பட்டினியால் செத்து மடிந்தனர். அது பற்றி விரிவாக படித்து பார்க்கவும். பல பத்தாண்டுகளில், மெதுவாக, இயல்பாக, எந்த நிர்பந்தமோ, அரசின் திட்டமோ இன்றி, இயற்க்கையான போக்கில்தான் மேற்கு அய்ரோப்பா, வட அமெரிக்காவில் இது போன்ற நவின பெரும் பண்ணைகள் உருவாயின. செயற்க்கை பஞ்சமோ, உயிரிழப்போ இல்லாமல். முக்கிய வித்யாசம் இது.

   • உலக ஜனத்தொகையில் 10% இருக்கும் அறிவாளிகள், கம்யூனிஸ்டுகள் இன்னபிற இஸங்களை கடைபிடிக்கும் ஜந்துக்கள் மீதியிருக்கும் 90% ஜனத்தொகையை அழிக்கவே நினைக்கிறார்கள்.

   • மாவோ செய்த கலாச்சார புரட்சியால் சீனா இழந்த மக்கள் தொகை 1500000. ஆனால் அதை அவர்கள் உலக மக்கள் தொகையில் முதலில் வந்து இன்று ஈடுகட்டிவிட்டார்கள்.

 5. குழந்தைகள் பஞ்சத்தில் மடிகிறார்கள் எனில், அதுதான் பஞ்சத்தின் உச்சம். இங்கு ஒட்டுமொத்த சமூகமே உணவின்றி வாடுகிறது என்று பொருள்………… இதுதான் உண்மை.

 6. Athiyaman
  I agree with you partly. The solution to this problem is unbridled capitalistic spirit. The Government is not the solution it is the problem. The Govt. needs to get out of everything except these core areas. 
  Defense
  Infrastructure
  Healthcare
  Education
  Running welfare schemes for well targeted poor people(Not the kind we have right now)
  The Govt should exit out of everything else. The private sector should be given a free hand to run their enterprises as they see fit. (Within the law ofcourse).
  The other thing should be power must be decentralized to the village/township  level. The Central and State Government should let the cities and villages to manage their resources as they see fit. They should not interfere with their affairs. The villages and towns should have the power to raise their own resources and allocate them to the village people wish not to be dictated by some central Government bureaucrat. The villages should provide and control basic services such as Police, Water,Sanitation, and maintaining local infrastructure.This would solve a lot of corruption and eliminate a lot of waste.
  Also all the Govt ministries should be consolidated in to 5 or 10 core areas every other ministers should be fired and the ministries eliminated. The current Govt size could be cut down by 50% without affecting any core services. They should privatize railways,Oil companies, all the factories they are running should be either shut down or sold of to private investors. The enormous money we get out of it should be used to educate all our children to world standard for free. Also we can make sure no starvation death occurs by providing food stamps and other programmes.This is all possible only when the Govt get out of the way not thru Sempuratchi. 
  Anyway The thing I don’t agree with you is regarding military spending we are spending much less than China or Pakistan as a % of GDP. Even that monies don’t get spend fully. The millitary returns portion of the money unspent. We need to keep spending like this because of our neighbors China and Pakistan. However rich as country we become if we can’t protect ourselves we will be robbed of our riches like what happened when the Mughals and the British invaded and occupied us.
  The other thing is Hindu fundamentalism started as a reactionary force against the Islamic fundamentalism especially after the Shah Bano case. So it is not tight  to blame the Hindu fundamentalism without blaming Islamic terrorism. Also we do have deep rooted history of islamic oppression in North India going back to hundreds of years from Gagini to Aurangazeb. So you need to take that in to account like the same way you take in to account the Dalit fury against the upper caste and Brahmin’s society.
  For Kashmir the solution should be not to give up the state but keep growing the Indian economy and they will eventually see the benefits of being with India than a failed terrorist state of Pakistan. This is already happening Violence is already way down in the last couple of years and life is very slowly returning to normalcy. 
  I know it is a longish post. But thought I would say What I want to say. 

 7. //அப்துல் கலாம் சென்னை வரும்போதெல்லாம் விரும்பிச் சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ருபா. எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020-இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அவர் கோருகின்ற இந்தியக் குழந்தைகளோ 2 ருபா கொடுத்து ரேசன் அரிசி வாங்க இயலாத வறுமையால் பட்டினியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்//

  What you intend to say? Do you mean Mr.Kalam also need to stand in ration shop for 2 Rs Rice?
  So meant to say, those who have talent or those who are in power want to give idea or suggestion, then they should be either poor or they have to live like poor people.? 

  • அன்புள்ள தோழருக்கு,

   அதிரடியான் என்பவர் பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி தனது கட்டுரைகளை வெளியிடுகிறார். ம.க.இ.கவின் மேல் ஏதாவது விமரிசனங்களை அள்ளி வீசினால் பரபரப்பாக பலரும் படிப்பார்கள் என்று கீற்று தளமும் இதை உள்ளநோக்கத்தோடு வெளியிடுகிறது. எனவே இவருடன் விவாதிப்பது என்பது இவருக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்குவதாக கருதுகிறோம். இவர்களையெல்லாம் சட்டை செய்யாமல் புறக்கணிப்பதே சரியானது. பொதுவில் தமிழினவாதிகள் அனைவரும் தீவிரமான நடைமுறையில் இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே கட்சி என்ற பெயரில் காலம் தள்ளுகின்றனர். புறநிலையாக ஈழம், காவிரி என்று ஏதாவது பிரச்சினை வந்தால் மட்டுமே இவர்கள் விழித்துக் கொண்டு ஏதாவது பேசி செய்து விட்டு தங்களது பலத்தை அதாவது பலவீனத்தை மிகையாக கற்பித்துக் கொள்கிறார்கள். மேலும் இவர்களுடன் நமது அமைப்புத் தோழர்கள் நேரடியாகவே பல வருடங்கள் பேசி எந்தப் பலனையும் கண்டதில்லை என்பதே அனுபவம். இவர்களை அற்பவாதிகளாக நினைத்து புறக்கணிப்பதே புத்திசாலித்தனமானது. நாம் புதியவர்களையும், இன்னும் புரட்சிகர அரசியலுக்கு அறிமுகமாகதவர்களையும் தேடிபிடித்து வென்றெடுப்பதற்கே இணையத்தை பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். இதனால் தமிழினவாதிகளை விமரிசனம் செய்யக்கூடாது என்பதல்ல. அதை நூற்றுக்கணக்கான பிரச்சினைகளில் ஒன்றாக கருதி மட்டும் பார்க்க வேண்டும் என்கிறோம்.தற்போது அதிரடியானுக்கு வாய்ப்பு வழங்கினால் இவரைப்போல பல அட்டைக்கத்தி வீரர்கள் பலர் இருக்க்கஃகூடும். அவர்களும் இதை ஒருபாணியாக மேற்கொள்வார்கள். இதில் நேரத்தை விரையமாக்கவேண்டாம் என்பது எமது கருத்து.

   தோழமையுடன்
   வினவு

 8. அன்னலட்சுமியின் சாப்பாடு விலை 750 ரூபாய் என்பதே ஒரு டுபாக்கூர் பொய். அதில் அப்துல் கலாம் சென்று சாப்பிட்டார் என்பது ஒரு Table Journalism செய்தியாக இருக்கக் கூடும். கொள்ளையடிப்பவர்களையெல்லாம் விட்டுவிட்டு கனவு காணுங்கள் என்று சொன்ன ஒரே ஒரு நல்ல குடியரசுத் தலைவரை இழுத்துத் தான் உங்களது வாதத்தை (உண்மை இருக்கிறது அதில், சந்தேகமில்லை) நிரப்ப வேண்டுமா? ஏன் உங்கள் நாத்திக கூட்டத்துடன சேர்ந்து கொண்டு நாட்டுக்கு நல்லது பண்ண வேண்டியது தானே? பெரியார் சிலைகளை கோயில் முன்னால் நிறுவுவதை விட அது மிகுந்த பலனைத் தரும். 

 9. 14 சதவீதக் குழந்தைகள் 6 வயதிற்குள் தங்களுடைய வாழ்க்கையை (பட்டினியால்)முடித்துக்கொள்ளும் ஒரு நாட்டின் முதற்குடிமகன் கனவுகானச் சொல்வது கோமாளித்தனமில்லையா!

 10. //அப்துல் கலாம் சென்னை வரும்போதெல்லாம் விரும்பிச் சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ருபா.//
  Could you give more details of the Annalakshmi restaurant you are referring to? To my knowledge, they don’t charge for the food served. The patrons pay voluntarily.

  Don’t tarnish your argument with false charges.

 11. முண்டம் வினவு,

  நாட்டில் இவ்வளவு வறுமையும் துயரமும் இருக்கும் போது, ம க இ க நக்சல் கும்பலின் பொலிட் பீரோ நாய்களும்,அவர்களின் தொண்டரடிப்பொடிகளும் வேளா வேளைக்கு சிலி பீஃப்,சாராயம் என்று கும்மாளம் போடுவது கேவலமில்லையா.சொல்லு முண்டம்,சொல்லு;அதுவும் ஏழைகளிடமிருந்து கட்டாய சந்தா வசூல் செய்து.உங்களுக்கெல்லாம் மனசாட்ட்சி என்பதே கிடையாதா?தூ…

  • அட நீ வந்துட்டியாடா, வாடா வாடா.
   உன்னோட ரொம்ப பெரிய காமெடிடா ரொம்ப நாளா ஒன்னோட பின்னூட்டம் எதையும் படிக்கலையா அதனால இப்ப படிச்சவுடனே பொளீர்ன்னு சிரிப்பு வந்துருச்சு.‌
   எங்க பிளாக் பக்கம் வந்தா உனக்கு சில்லி பீப்
   பத்தி பேசாம இருக்க முடியாதே, ஏன் தெரியுமா தோழர்களே
   நாம் தான் பார்ப்பன பயங்கரவாத மாநாட்டில் இளங்கன்று கறி
   போட்டோமே, இவனுங்களுக்கு அதனால தான் எறியுது

   இந்த பய யார் தெரியுமா ?
   பாலா அப்படின்னு ஒரு பண்ணாடை தான் இவன்!

   இவனுக்கு அப்பப்ப இந்த மாதிரி கத்தலைன்னா தூக்கம் வராது.
   இது ஒரு நோய், அதாவது தமிழ்மணி என்கிற பார்ப்பனமணிக்கு
   வந்திருக்கே அந்த மாதிரி நோய் இது.

   அது சரிடா பாலா பைய்யா‌
   சில்லி பீப்போட பீரையும் சேர்த்துல்ல சொல்லுவ இந்த வாட்டி
   அத விட்டுட்ட, ஞாபகமறதியா ?‌

 12. அய்யா,

  750-ரூபாய்க்கு சாப்பாடு சாப்பிடும் மனிதரை இவ்வளவு சொல்லும் நீங்கள் தினசரி அறை வாடகையாக அரசு பணம் ஒரு லட்சம் கொடுத்த வெளியுறவுத்துறை அமைச்சரை எதுவும் சொல்ல வில்லை. அந்த உதாரணத்தை எடுக்காமல் அப்துல் கலாம் உதாரணத்தை எடுத்து இருக்கறீர்கள்.உண்மையில் அப்துல் கலாம் என்ற மனிதரை சுற்றி உள்ள புனித பிம்பத்தை (அந்த புனித பிம்பம் இந்த மண்ணின் சாபம், கரிகால சோழனில் இருந்து வரும் Hero worship) நீங்கள் உடைக்க முயற்சிக்கறீர்கள் வாழ்த்துக்கள் ஆனால் அதனை சற்று முதிர்ச்சியுடன் செய்யுங்கள்.

 13. உணவை துல்லியமாக துப்பரவு செய்து உண்ணுகிறோம் ஆனாலும் நாற்றத்துடன் கழிவு வருவதை தவிர்க்கமுடியாது. அதுபோல நல்ல செயற்பாடுகளில் தவறுகள் ஏற்படுவதும் இயல்பானது. நல்லவைகளிலிருன்து பரவும் மணத்தைவிட கெட்டவைகளிலிருன்து வரும்நாற்றமே விரைவாக வேகமாக பரவும். இன்றைய பல செய்தித் துறையானது கெட்டவைகளையே பரப்பி விரைவாக வளர முற்படுவது தெரிகிறது. இதற்கு அப்துல் கலாம் போன்ற நல்ல மனிதர்களின் தவறுகளை விமர்ச்சிக்க முனைவது நல்லதொரு உதாரணம்.

  • //அப்துல் கலாம் போன்ற நல்ல மனிதர்//
   அய்யா..கட்டுரை பேசுவதோ பசிக்கொடுமையால் மடியும் உழைக்கும் மக்களையும் குழந்தைகளையும்தான்..அப்துல்கலாம் எனும் நல்ல மனிதரைப் பற்றி அல்ல..ரெண்டு வேளை என்ன ஒருவேளைக் கஞ்சிக்கே இயலாதவர்களைப் பற்றிதான் கட்டுரையே தவிர 700ரூ சாப்பாடு சாப்பிடும் நல்ல மனிதரைப் பற்றி அல்ல..கட்டுரை பேசுவது உழைத்துழைத்து ஓய்ந்து போன வர்க்கத்தின் வயிறுகளைப் பற்றியதே தவிர ஏவுகணைக் கொலைக்கருவிகளை உருவாக்கிய நல்ல மனிதர்களின் வயிறைப் பற்றி அல்ல..குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம்களை மோடி கசாப்புப் போட்டுக் கொண்டிருந்தபோது எல்லைக்கு அப்பால் உள்ள மக்களைக் கருக்கும் ஆயுதங்களை உருவாக்கிக் கொண்டிருந்த நல்லமனிதரைப் பற்றி அல்ல..நெல்களஞ்சியமான தஞ்சைத் தாய்மண்ணில் அமெரிக்காவுக்காக காட்டாமணக்கு பயிர் செய்யச் சொன்ன நல்ல மனிதரைப் பற்றி அல்ல.. அவர் எப்பேர்ப்பட்ட அறிஞர்! நல்ல மனிதர்…அறிவாளி…அமெரிக்காவுக்காக நாட்டை அடகுவைக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்காக அரை மணி நேரத்திலேயே அமர்சிங்குக்கும் முலாயமுக்கும் நியுக்ளியர் சயன்சு சொல்லிக் கொடுத்த நல்லவராச்சே… அவர் நல்லா 700 ரூபாய்க்கு சாப்பிட்டு கனவு காணச்ச்சொல்லும் ஏப்பம் விட்டால்தானே நாம வல்லரசாக முடியும்!! யாரது..லியாகத் அலிகானா…அவரின் சீட்டைக் கிழித்து விட்டு அப்துல் கலாம் அய்யா அவுகளை வஜனம் எழுதச் சொல்லிடு…காட்டாமணக்கு சலசலக்க….அணுகுண்டு கிடுகிடுக்க…ஏவுகணைகளை அடுக்கிவைப்போம்…ஒழித்துக் கட்டுவோம்..பசியை அல்ல..பசி என்று குமுறுபவர்களை…ஆகிடுவோம்ம்வல்லரசு..வாஞ்சிநாதன்..ரமணா..

 14. நக்சல் தீவிரவாத் நாய் சமரன் அய்யா,

  வீரபாண்டியன் கேட்ட கேள்வியே அது தானே?எம் மக்கள் ஒரு வேலை கூழுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருக்க, நக்சல் தீவிரவாதிகள் மட்டும் வேளா வேளைக்கு இளங்கன்று கறி,இளம் பன்னி கறி,பூனை கறி என்று உல்லாசமாக உண்டு கொழுப்பது என்னவகையில் நியாய்ம்.சொல்லு முண்டம் சொல்லு.

  • அடே பாலா, உன்னைய போய் திட்டுற‌தா என்னால முடியலடா சாமி, உன்னோட கமெண்ட்ட படிச்சவொடனே எனக்கு ஒரே சிரிப்பா வருது முண்டம் சிரிப்பா வருது :).

   உன்னையெல்லாம் வீட்ல எப்படி வளர்க்கிறாங்க ?

 15. வாடா பாலா,

  இத்தனை நாள் அண்டர் கிரவுண்டுல சாக்கடைய மோந்து பாத்துக்கிட்டு இருந்த உங்க குரூப்பு ஆளுங்க ஒவ்வொருத்தரா வெளிய வற்றீங்க போல இருக்கு.

  பாலா, வக்ரா பஞ்சர்(அல்லது டிஞ்சர்) போன்ற ஆட்களேல்லாம் கரப்பான் பூச்சி மாதிரி, பன்னி மாதிரி பயந்து பதுங்கி ஒதுங்கி இருந்தீங்க. இப்போ திரும்ப வந்துருக்கீங்க.. வாங்க.. வாங்க…

  அடுத்த ரிலீசு யாரு ஓ.போ அரவிந்தன் புளுகுகண்டனா?(ஓ.போ என்றால் ஓடிப் போன என்று அர்த்தம்)

 16. Dear , Bala or Veera Paandiyan, Others easily identify you, because, you are changing your name, but not the e-mail id. So, see, same cartoon figure is coming. So, don’t repeat you mistakes. Go ahead.

 17. நக்சல் தீவிரவாத நாய்களான சமரன் மற்றும் பாயசம் அய்யாமர்களே,

  கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால் நேர்மையாக  ஒத்ய்துக்கொண்டு போவது தானே.அதை விட்டு சேற்றை வரி இறைப்பது தான் நக்சல் தீவிரவாத நாய்களின் வழக்கம் என்று திரும்ப திரும்ப நிரூபிப்பானேன்?கேள்வி என்னவென்றால் எம் மக்கள் வறுமையில் வாடி வதங்கும் போது உங்களைப் போன்ற நக்சல் நாய்களுக்கு இளங்கன்று கறி,இளம் பன்னி கறியெல்லாம தேவையா என்பது தா.நேர்மையாக பதில் குரைங்களேன் ஒரு மாறுதலுக்காவாவது..

  • Bala,
          Dont insult the dogs.
    
           These naxals are worser than Humans or Animals. 

           Just roaches as Kamal tells in UPO, waiting to be crushed.

 18. கட்டுரை பேசுவது உழைத்துழைத்து ஓய்ந்து போன வர்க்கத்தின் வயிறுகளைப் பற்றியதே என்பதான பதில்கருத்து ஏற்புடையதாக இல்லை. அதிகார வர்க்கத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையே உள்ள மனிதத்திற்கு ஒவ்வாத வேறுபாட்டை வெளிச்சம்போட்டு மக்களுக்கு காட்டுவதே வினவு வெளியிட்டுள்ள கட்டுரையின் நோக்கம் என கருதுகிறேன். அதிகார வர்க்கத்தில் அங்கத்துவம் பெற்றுவிட்ட அப்துல்கலாம் போன்ற மனிதர்களால்தான் இன்றைய இந்தியமக்கள் தங்கள் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து வாழமுடிகிறது. டில்லியை துவம்சம் செய்ய இரண்டுநாட்கள் போதும் என்று சீன நாடு இன்று திமிராக அறிவித்தமைக்கு எதிராக, முடிந்தால் செய்துபார் என இந்தியா மார்தட்டுவதற்கு காரணம், அப்துல்கலாம் போன்ற மனிதர்களின் செயற்பாடுகள்தான். ஆன்மீகம், சோதிடம், மகாகாளியின் கோரப்பற்கள், இராமபாணம், கீதை இவை எதனைக்கொண்டும் இந்தியாவால் இன்று வீரம்பேச முடியாது.
  இன்று இந்திய வாழ்வியல் மட்டுமல்ல, உலக சமூகத்தின் வாழ்வியலே விபரீதமானதொரு வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. பண்புடன் இணையவேண்டிய மனித உறவுகள் அதிகார உறவுகளாக இணையவேண்டிய கட்டாயத்தில் வாழ்வு நகர்ந்து செல்கிறது. மனிதவாழ்வை மேம்படுத்த வேண்டிய அறிவுலகமும் அதிகார வர்க்கத்துடன் இணைந்து, செல்வந்தர் என்றொரு வர்க்கத்தை உருவாக்கி, அதில் மூழ்கித் திளைக்கிறது. உழைக்கும் ஏழை எளிய மக்களை முன்னைய காலங்களைப்போல் இரும்புச் சிறைக்குள் வைத்துப் பூட்டப்படாது திறந்த வெளியில் உலாவ விட்டிருகிறது. உலக சமூகத்தால் கேடு என ஒதுக்கப்பட்ட அத்தனை வழிகளையும் பின்பற்றி உழைக்கும் வர்க்கமும் இன்று அதிகார வர்க்கத்துள் நுளைவதற்குரிய ஏணியையும் கொடுத்து உதவியும் வருகிறது.
  உழைக்கும் வர்க்கத்திலிருந்து அதிகார வர்க்கத்துக்குள் இணைய முடிந்த மக்கள், தாங்கள் அதிகார வர்க்கத்தால் முன்பு அனுபவித்த, சொல்வதற்கு வாய்கூசும் கொடுமைகளையும் மறந்து, தங்களுடைய முன்னைய உறவுகளான உழைக்கும் வர்க்கத்தை தாங்களும் சுரண்டி வாழ தொடங்குவதுதான் 21ம் நூற்றாண்டின் மனித நாகரீகமாக உள்ளது. இதுதான் அரசியல் என்று சொல்லி உலக சமூகமும் அதனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது. மிகவும் கவர்ச்சிகரமாக அதற்கு சனநாயகம் என்று பெயர்சூட்டி உழைக்கும் வர்க்கத்தை சுரண்டி உலர்த்தி சாகடித்தும் வருகிறது. ஆனாலும் இந்த சனநாயகம் என்ற பொக்கிஷத்தை பயன்படுத்தி தங்கள் வாழ்வை பண்படுத்த தெரியாத அடக்கப்பட்ட அல்லது அடிமைப்பட்ட மக்கள்கூட்டம் அந்த மாபெரும் பொக்கிஷத்தை அதிகார வர்க்கத்திடமே ஐந்துக்கும் பத்துக்கும் விலைபேசி விற்றுவிட்டு அதிலிருந்து வரும் ஒரு அற்ப சந்தோஷத்தை அனுபவித்துவிட்டு தொடர்ந்தும் வறுமையால் பட்டினியில் செத்துக் கொண்டிருப்பதுதான் வேதனை. இதற்கு மிகப்பெரும் உதாரணம் இந்தியநாடு.
  போலர்ந்து நாட்டை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டால் ஒரு தொழிற்சங்க தலைவன் அந்த நாட்டின் அதிபராகி அரசாட்சிசெய்ய முடிந்தது. அதன்பின்புதான் அங்கு உழைக்கும் வர்க்கம் அதிகமாக சுரண்டப்பட்டுவதாக அந்த நாட்டைவிட்டு வெளியேறி வந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக நகர்ந்துவந்த மனித நாகரீகங்கள் 21ம் நூற்றாண்டில் உச்சம் பெற்றிருப்பதாக கூறப்பட்டாலும் தற்போதுதான் நாகரீகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் படுபாதகமான நிகழ்வுகள் நடந்தேறிவருகிறது. வர்க்கபேதங்கள் மிகப்பெரிய மாறுபாடுகளை அடைந்துள்ளது. முதலாளிவர்க்கம் தொழிலாளிவர்க்கம் என்பன இன்று வளர்ச்சிபெற்று 1ம், 2ம், 3ம் உலகமென அதிகாரம், அரசியல், அறிவு, செல்வம், ஆணவம் எல்லாம் ஒன்றுசேர்ந்து மனிதத்திற்கு ஒவ்வாத பெரும் வர்க்கபேதங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
  வர்க்கபேதங்கள் ஆழமாக வேரூன்றிவிட்ட இன்றைய உலகில் அதற்க்கு எதிராக புரட்சிசெய்தோ போராடியோ உயிரைக்கொடுத்தோ மாற்றம் கண்டுவிட முடியாது. ஆனாலும் அதனுடன் ஒரு உடன்பாட்டை மேற்கொண்டு அதன் போக்கை மென்மையாக்கிக் கொள்ளலாம். முதலாளி என்ற வர்க்கத்தின் ஆதரவுடன் தோற்றம்பெறும் அரசுகளால் ஆளப்படும் செல்வந்த நாடுகளில் இது யதார்த்தமாகியுள்ளது. இந்தியாவில் இழிநிலை தொழிலாக கருதப்படும் ஒரு கடைநிலைத் தொழிலை செய்பவன் ஒரு வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் அதனை செய்து ஊதியம் பெற்றுக்கொள்வதற்கு அங்குள்ள அரசியல் சாசனம் இடமளிக்கிறது. அத்தொழிலாளி தொழில் தொடங்கும்போதும் முடிக்கும்போதும் முதலாளியுடன் கைகுலுக்கி சிலவேளைகளில் ஒன்றாகத் தேநீர் அருந்தி விடைபெறுவதும் சமூக வாழ்க்கையாகியுள்ளது. அத்தொழிலாளி நடந்தும் வருவான் பென்ஸ்காரிலும் வருவான். தொழில் அற்றவர்களுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் உறங்க வீடும் கொடுத்து பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகியுள்ளது. அவர்களுக்கு தொழில் கிடைக்கும்போது அக்கடனை அரசாங்கம் மீட்டுக்கொள்ளும். எத்தனை பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் கல்வித்தகமையும் அரசியலறிவுமற்ற ஒருவன் அரசியலுக்குள் நுழைய சமூகம் இடமளிக்காத தன்மைகள் அங்கு வர்க்கபேதத்தை மென்மையாக்கியுள்ளன.
  எங்களுடைய இந்தியா ஏழ்மையான நாடு செல்வந்த நாடல்ல என்று உள்ளிருந்து யாரோ சொல்வது கேட்கிறது. அதெப்படி ஒரு இனத்தை அழிக்கும்போதுமட்டும் கோடி கோடியாக இந்தியாவால் செல்வத்தை அள்ளிக்கொடுக்க முடிகிறது.

 19. கலாமின் முகநூல் புதையல் சட்டியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட பொன்னான முத்துக்களில் ஒன்று :
  Youth of India… have the confidence… “I can do it! We can do it! India will do it!”

  Nike செருப்புக் கம்பெனி ‘Just Do it… ‘ அப்படீங்கறான்!

  ஒபாமா ‘Yes, We can’ அப்படீங்கறான்!!

  அதாவது, ‘என்னான்னு’ விஷயத்தை சொல்லாமலே do it, do it, we can அப்படீன்னு சொல்றது ஃபேஷனாப் போச்சோ?

  கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. எனக்கு கொஞ்சம் அர்ஜெண்ட்.

  I am gonna just do it and I will be back!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க