முகப்புபா.ம.க இராமதாஸ் + பச்சோந்தித்தனம் = புதுப்படம் ரிலீஸ்!!
Array

பா.ம.க இராமதாஸ் + பச்சோந்தித்தனம் = புதுப்படம் ரிலீஸ்!!

-

பா.ம.க இராமதாஸ் + பச்சோந்தித்தனம் = புதுப்படம் ரிலீஸ்!!

சூழ்நிலைமைகளுக்கேற்ப தனது வண்ணத்தை பச்சோந்தி மாற்றிக்கொள்ளும். சுயநலத்திற்காக தனது அரசியல் கூட்டணி வண்ணத்தை இராமதாஸ் அடிக்கடி மாற்றுவார். இராமதாஸின் இந்த சாதனைச் செயலை கின்னஸ் உலக சாதனைக்கு இன்னும் ஏன் அனுப்பாமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஒரு சீட்டுக்காக தி.மு.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க கூட்டணிக்கு மாறிய பா.ம.க ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியது. மத்திய அமைச்சரவையில் கடைசி நிமிடம் வரை பொறுக்கித் தின்றுவிட்டு பின்பு ஈழப்பிரச்சினைக்காக நடுவண், மாநில அரசுகள் ஒன்றுமே செய்யவில்லை என்று அதற்கு துணை போயிருந்த பா.ம.க கூச்சமில்லாமல் கூச்சலிட்டது. தேர்தலுக்கு முந்தைய நாள் வரைக்கும் ஈழத்தின் பிணங்களைக் காட்டி வாக்குகளை அள்ளிவிடலாமென்று குரூரமாக முயன்றது.

பாசிச ஜெயாவை ஈழத்தாயாக சித்தரிக்கும் வரலாற்று கொடுமைக்கு துணை போனது. ஆனாலும் இந்த நாடகத்தை மக்கள் நிராகரித்து விட்டார்கள். இந்தத் தோல்விக்கு தி.மு.க அரசின் பணபலமும், வாக்கு எந்திரங்களின் முறைகேடும்தான் காரணங்களென இராமாதாஸ் புகார் வாசித்தார்.

வெற்றிபெரும் கூட்டணிகளில் இடம்பெற்று மத்திய அமைச்சரவையில் சேர்ந்து பா.ம.க இதுவரை சம்பாதித்ததற்கு என்ன கணக்கு என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இவர்களும் வாக்களார்களுக்கு பணம் வழங்கினார்கள் என்பதும், அதில் தி.மு.கவோடு போட்டிபோட முடியவில்ல என்பதை விட எப்படியும் ஈழப்பிரச்சினைக்காக மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்று அலட்சியமாக பச்சோந்தி தலைவர் சிந்தித்தார். எப்படியும் வர இருக்கும் வெற்றிக்காக ஏன் பணத்தை வீணாக செலவழிக்க வேண்டுமென்பதே அவரது எண்ணம்.

ஏழு தொகுதிகளிலும் தோற்றபிறகு ஒப்பந்தப்படி பா.ம.கவிற்கு அளிக்கப்பட விருந்த ராஜ்ஜிய சபா தொகுதியும் இப்போது கேள்விக்கிடமானது. அதை ஜெயாவிடம் வலியுறுத்தும் அளவிற்கு பா.ம.கவிற்கு தைரியமில்லை. தோல்விக்குப் பிறகு இடதுசாரிகள் மற்றும் வைகோவை சந்தித்த ஜெயா பா.ம.க தலைவர்களை மட்டும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவில்லை.

இந்நிலையில் சென்ற சட்டமன்ற தேர்தலின் போது திண்டிவனத்தில் உள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டின் முன்நடந்த கொலைவழக்கில் இராமதாசு குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல பா.ம.கவினர் மீது வழக்கு தொடரப்பட்டது. கீழ் கோர்ட்டில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் சி.வி. சண்முகம் அவர்கள் வழக்கில் சேர்க்கக்கூறி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதை தடுக்க வேண்டுமென்பதற்காக பா.ம.கவின் கோ.க.மணியும், தன்ராஜும் கொடநாட்டில் அம்மையாரை சந்தித்து பேசினர்.

அப்போது அம்மா என்ன பேசினார் என்பது தெரியாவிட்டாலும் வழக்கின் மீது தலையிட அவர் விரும்பவில்லை என்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறது. சரி ஜனநாயக நாட்டில் இத்தகைய வழக்குகளை சட்டபூர்வமாக எதிர்கொள்வதுதானே சரியாக இருக்கும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை நிறுத்துவதற்காக மத்திய ஆட்சியையே கவிழ்த்த ஜெயா அதே அளவுகோலின்படி தனது கூட்டணி கட்சிக்காகவும் வழக்கை விட்டுக்கொடுக்க சண்முகத்திற்கு கட்டளையிடுவார் என்பதே பா.ம.க கணக்கு. இந்த கணக்குதான் தற்போது பிழையாகியிருக்கிறது.

பாசிஸ்டுகள் எப்போதும் தமக்கு ஒரு வழிமுறையைக் கையாண்டால் அதை மற்றவர்கள் பின்பற்றுவதை விரும்பமாட்டார்கள். அவ்வகையில் சட்டம், வழக்கு, நீதிமன்ற விவகாரங்களில் பா.ம.கவிற்காக தலையிட அன்னையார் விரும்பவில்லை. இப்படித்தான் ‘ஜனநாயக’ நெறிமுறை பா.ம.க விவகாரத்தில் பாசிச ஜெயாவால் நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

எப்படியும் கொடநாட்டிலுருந்து நல்ல சேதி வருமென்று காத்திருந்த பா.ம.க இராமதாஸ் இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்திருந்தார். அப்படியும் அம்மா அருள்பாலிக்கவில்லை. எனவே அவசரமாக கூட்டப்பட்ட பா.ம.கவின் நிர்வாகக்குழு கூட்ட முடிவின்படி அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதாக இரமாதாஸ் அறிவித்து விட்டார். இராமதாஸின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் எனபதற்காகவே கட்சி கூட்டணி மாறுகிறது என்றால் கட்சியின் நிர்வாகக் குழுவும் இராமதாஸின் குடும்ப நலனுக்காகத்தான் செயல்படுகிறது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வழக்கு குறித்த பிரச்சினயை சட்டப்பூர்வமாக சந்திக்கமாட்டோமென்ற ஜனநாயக விரோதத் தன்மையும் இங்கே குடும்ப அரசியலுக்காக வெளிப்பட்டிருக்கிறது.

அடுத்த சட்டமன்றத்தேர்தலுக்காக இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது, இப்போது விரட்டப்பட்ட பா.ம.க மீண்டும் வாலை ஆட்டியவாறு தன்னிடம்தான் வரும், அப்போது பார்த்துக்கொள்ளலாமென்பது ஜெயாவின் எண்ணம்.

இதில் தி.மு.க நிலை என்ன என்பதை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், “பா.ம.விற்கு இந்த ஞானோதயம் வர காரணம் கொள்கை ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ கிடையாது. தனிப்பட்ட சொந்தக் காரணங்களுக்காக அவர்கள் கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறார்கள்” என்று  தெரிவித்திருக்கிறார். இதை வைத்துப்பார்த்தால் முந்தைய பா.ம.க கூட்டணிகளெல்லாம் அரசியல் ரீதியிலானது என்று பொருளாகிவிடுகிறது.  இதுவரை பா.ம.க இடம்பெற்ற எல்லாக்கூட்டணிகளிலும் எத்தனை சீட்டு என்பதே இராமதாஸின் கொள்கையாக இருந்தது. எது எப்படியோ தி.மு.கவும் இப்போது அய்யா கட்சியை தமது கூட்டணியில் சேர்க்கத் தயாரில்லை என்பதை மறைமுகமாக அறிவித்திருக்கிறது. கருணாநிதியும் ஜெயா போல இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அய்யா வாலை ஆட்டிக்கொண்டு வருவார் என்று அலட்சியமாக சிந்திக்கலாம்.

இதற்கு ஆதரமாக பா.ம.கவின் கடந்த கால வரலாறு கட்டியம் கூறுகிறது. 1991, 1996 சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்துப்போட்டியிட்ட பா.ம.க 1998 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து 4 தொகுதிகளில் வென்றது. 1999 மக்களவைத் தேர்தலில் தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து 5 இடங்களை வென்றது. 2001 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 20 தொகுதிகளில் வென்றது. 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க கூட்டணிக்குத் திரும்பிய பா.ம.க., 6 தொகுதிகளில் வென்றது.

2006 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் நீடித்து 18 தொகுதிகளில் வென்றது. 2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.

இப்போது அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. 2011 சட்ட மன்றத்தேர்தலில் இந்த பச்சோந்தி யாரிடம் சேருவார் என்ற முடிவு போயஸ் தோட்டத்திடமும், கோபாலபுரத்திடமும் உள்ளது.

ஆனால் அந்த தேர்தலில் மட்டும் இருவரும் பா.ம.கவிற்கு இடமில்லை என்று அறிவித்து விட்டால் ஒரு வரலாற்றுப் புகழ்பெற்ற பச்சோந்தியை நாம் தமிழக அரசியலிலிருந்து ஒழிக்கப்படுவதை காணலாம். பச்சோந்தியை வளர்த்து விட்ட இருகழகங்களும் அதை ஒழிப்பதையும் செய்து விட்டால் தைலாபுரத்தின் அரசியல் அனாதையாக மாறிவிடும். ஆனால் அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள். எனினும் இனியும் பேரம்பேசும் வலிமையை இழந்து அடிமை போல நடப்பதே இரமாதாஸின் விதி.

ஏனெனில் தற்போது வன்னிய சாதி நலன் என்ற பெயரில் வெறியை மீண்டும் வளர்த்து தனது சாதிய ஓட்டுவங்கி செல்வாக்கை கைப்பற்ற பா.ம.க முயல்கிறது. ஆனால் இக்காலம் 80கள் அல்ல என்பதை அவர்கள் உணரவில்லை. பெரும்பாலான வன்னியர்களே பா.ம.கவை  இராமதாஸின் குடும்பச் சொத்து என்று புரிந்துகொண்டு புறக்கணித்து வரும் வேளையில் இந்த சாதிய அரசியல் எடுபடாது.

இப்பேற்பட்ட பச்சோந்திதான் ஈழத்திற்காக குரல் கொடுத்தது என்று இன்னமும் அப்பாவித்தனமாய் நம்பி வரும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள் இனியாவது புரிந்து கொள்வார்களா என்பதே நமது கேள்வி.

இறுதியாக ஒரிரு மாதங்களுக்கு முன்னர் இராமதாஸின் பச்சோந்தி கார்ட்டூனை நண்பர் ராஜா அனுப்பியிருந்தார். அதை எப்போது வெளியிடலாம் என்று காத்துக்கொண்டிருந்த நேரத்தில் இப்போது வெளியிடுவதற்கு வாய்ப்பளித்த இராமதாஸுக்கும் அதற்கு வழியமைத்துக் கொடுத்த பாசிச ஜெயாவிற்கும் எமது ‘நன்றி’யைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

எங்கே தமிழன்? எங்கே எட்டாவது சீட்டு? ராமதாசு சீற்றம் !

ஈழத்தின் இரத்தத்தை வியாபாரம் செய்யும் பா.ம.க ராமதாஸ் !

  1. கார்ட்டூன் அட்டகாசம்!
    அன்புமணியைப் பற்றியும் ஏதாவது சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் : )
    ஈழத்தமிழரின் படுகொலைக் காட்சிகளை மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் நேரத்தில், திமுக அரசு மின்வெட்டு செய்தததையும், பல இடங்களில் மக்கள் தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்ததையும் மறக்க முடியுமா என்ன ?

  2. தோழர்களே! 
    எனக்கு டாக்டர் ராமதாஸ் என்றாலே நினைவுக்கு வருவது இதுதான்.

    2001 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 20 தொகுதிகளில் வென்றது. பிறகு ஜெயலலிதாவுடன் சண்டை போட்டுவிட்டு கூட்டணியிலிருந்து பிரியும் பொது ராமதாஸ் சொன்னதாக பல செய்தித்தாள்களில் வந்தது என் நினைவில் இன்றும் உள்ளது.

    என்ன சொன்னார்?

    எண்ணற்ற ஊடகவியலாளர்களுக்கு முன்னிலையில், ” மீண்டும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்வது என்பது, ஒரு மகன் தன் தாயை புணர்வதற்கு சமமானது ” என்று கூறி ‘இனி அதிமுகவுடன் கூட்டு என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என்பதை அறிவித்தார்.
    ஆனால், ஒரு சீட்டு அதிகம் கிடைக்கிறது என்பதற்காக, 2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்து போட்டியிட ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்த பொழுது யாரும் இது பற்றி கேட்டதாய் தெரியவில்லை.
     
    ஜெயலலிதாவுக்கு வேண்டுமானால் எந்த சொரணையும் இல்லாமல் இருக்கலாம். இதனை கேட்டுக்கொண்டு இருந்த வாக்காளர்களுக்குமா சொரணை இல்லாமல் போயிருக்கும்? படு கேவலமாய் அனைத்து தொகுதியிலும் தோற்றிருந்தாலும் செய்தி ஊடகங்கள் நியாபகமாய் இதுபற்றி அப்போதே மக்களிடம் எடுத்து வைத்திருந்தால் இவ்வளவு ஒட்டு வாங்கி இருந்திருக்க மாட்டார். அவைகளில் மிகப்பெரும்பாண்மை  அதிமுக ஓட்டுகளே என்பது என் கருத்து.

    இவரை சித்தரிக்க, இந்த பச்சோந்தி கார்ட்டூன் மட்டும் போதாது. இன்னும் சிறந்த முறையில் இவரின் உண்மை கோலம் வெளிப்படுமாறு வேறு ஒரு கொடூர கார்ட்டூன் தேவை. தோழர் ராஜா முயல்வாரா? 

    • //2001 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 20 தொகுதிகளில் வென்றது. பிறகு ஜெயலலிதாவுடன் சண்டை போட்டுவிட்டு கூட்டணியிலிருந்து பிரியும் பொது ராமதாஸ் சொன்னதாக பல செய்தித்தாள்களில் வந்தது என் நினைவில் இன்றும் உள்ளது.

      என்ன சொன்னார்?

      எண்ணற்ற ஊடகவியலாளர்களுக்கு முன்னிலையில், “ மீண்டும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்வது என்பது, ஒரு மகன் தன் தாயை புணர்வதற்கு சமமானது ” என்று கூறி ‘இனி அதிமுகவுடன் கூட்டு என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என்பதை அறிவித்தார்.//

      அதோடு நின்றுவிடாமல் ‘இதன் பிறகும் நாம் அ.தி.மு.க வுடன் கூட்டு சேர்ந்தால் மக்கள் என்னை நடுரோட்டில் நிற்க வைத்து செருப்பால் அடியுங்கள்’ என்றார். அதை அவரும் மறுகணமே மறந்துவிட்டார் மக்களும் மறந்துவிட்டனர்……… நல்ல அரசியல் தலைவன்! நல்ல மக்கள்!……. வாழ்க ஜனநாயகம்….. மன்னிக்கவும் பணநாயகம்.

  3. One thing that is very sure about Ramdoss is he cannot find a place in Tamil Nadu if he goes alone in the elections. But Thirumavalavan may play the role of a Good Samaritan to bring Ramadoss into the fold of DMK alliance. And Ramadoss will give him chance for appearing on the dais of Srilanka Tamil Protection Movement. As of now the situation is more fluid.

  4. அவ்வை சண்முகியில் தெளிய வைச்சு தெளியவைச்சு வெளுப்பார்களே! அந்த காட்சி நினைவுக்கு வருகிறது.

    கார்ட்டூன் அப்படி ஒரு தெளிவு! புதிய ஓவியரா ராஜா? வாழ்த்துக்கள்.

    என்ன தான் 2009ல் மோசமாக தோற்றிருந்தாலும், அம்மா (!) பேசிய படி ஒரு மேலவை எம்.பி. சீட்டு கொடுத்திருக்கனும் கொடுத்திருந்தால், அம்மாவின் நேர்மையை எல்லோரும் பாராட்டியிருக்கலாம்! அம்மாவிடம் நேர்மையில்லை!

    இவ்வளவு நடந்தும், இராமதாஸ் அம்மாவை (!) தனியாக சந்திக்க ஒரு அப்பாயின்மென்ட் கேட்டாராம். தனியாக சந்தித்தவர்கள் எல்லாம் என்னா அடி வாங்கியிருக்கிறார்கள். அப்படி இருந்தும் தனியாக சந்திக்க அனுமதி கேட்டால்… ராமதாஸை தெகிரியத்தை நாமெல்லாம் பாராட்டனும்!

    • ராமதாஸை தெகிரியத்தை நாமெல்லாம் பாராட்டனும்! //

      ராமதாஸ்: என்ன ரொம்ப நல்லவனு சொல்லிட்டாங்க…அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  5. PMK always wanted to project itself as the party working for the welfare of common man , minorities,SC/STs etc but the MBC division and its other ways of working have shown it as the castist outfit whereas some castist outfits on the outer really work for the welfare of all the people.
    Everywhere PMK wants vanniars to be installed like judiciary etc but merit must play the role in Judiciary ,IIT etc
    Even we heard that many contractors have returned back to kongu region from NLC etc as sons of the soils were not allowing persons from other districts to work and have contract jobs there!

  6. சாதி உணர்வை தூண்டி வயிறு வளர்த்த பா.ம.க விற்கு ஆப்படித்தது போல் பார்ப்பனீய உணர்வைத் தூண்டி வயிறு வளர்க்கும் பரிவாரத்திற்கும் ஆப்படிக்கப் பட்டால் நாடும் சமூகமும் இன்னொரு படி முன்னேறிவிடும்.

    கேலிசித்திரம் கலக்கல் நண்பரே (ஆனாலும் உன்னைப் போல் ஒருவன் போல் வராது)

  7. ராமதாஸ் போன்ற பச்சோந்திகளை புரியாதவர்களல்ல புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள். யாராவது காப்பாற்றுவார்கள், யாராவது காப்பாற்றுவார்கள்…….. ஒருவராவது எங்களின் அழிவினை தடுத்து நிறுத்துவார்கள் என்று கையறுநிலையில் இருந்த நாங்கள்  சர்வதேசம் முதற்கொண்டு பச்சோந்தி ராமதாஸ் வரை எல்லோரையும் “நம்பவில்லை”……வாய்கிழிய பேசும் இவர்களெல்லாம் அந்த வாய்வார்தைகளில் ஒன்றையாவது காப்பாற்றுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தோம்; குறைந்தபட்சம் அவர்கள் மரியாதையை காப்பாற்றிக்கொள்ளவாவது…. மூன்று லட்சம் உயிர்கள் வன்னியில் அழிவின் விளிம்பிலிருந்தபோது யாரையாவது, எந்த பச்சோந்தியையாவது நம்பித்தொலைக்கவேண்டிய அவலநிலை புலம்பெயர்ந்த தமிழனுக்கு. ஆனால், அந்த நிலையெல்லாம் மாறி, இப்போது, ஈழத்தமிழர்களை குழப்ப ஈழத்தமிழர்களே கிளம்பிவிட்டார்கள். அதனால் ராமதாஸ், ஜெயலலிதா போன்றோருக்கு வேலை மிச்சம். கூடவே ஜெயலிதாவின் சாத்தான்களுக்கும் (ஈழத்தமிழர் விடயத்தில்) வேலை மிச்சம். 
    அவங்க, அவங்க அரசியல் அவங்களுக்கு. 
    இலங்கையில் வதை முகாம்களில் மூன்று லட்சமாக இருந்த அப்பாவித்தமிழர்களின் எண்ணிக்கை இப்போது இரண்டு லட்சத்து எண்பதினாயிரமாய் ஆகிவிட்டது. இதுவரை யாரும் மீள்குடியேற்றம் செய்யப்படாமலேயே. இதுக்கு  போய் யாராச்சும் கணக்கெல்லாம் கேட்பாங்களா என்ன? இந்த கணக்கெல்லாம் கேட்கவேண்டியவன் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழன் தான். ஆனால், அவர்களையும் மிக நுணுக்கமான முறையில் பரப்புரை செய்து திசை திருப்ப முயற்சிகள் நடந்துகொண்டுதானிருக்கிறது. இப்போது இலங்கையில் தேர்தல் கூத்துகள் வேறு தொடங்கிவிட்டது. இனி என்னென்னவெல்லாம் நடக்குமோ என்று தெரியாமல் அது வேறு கலக்கம். இந்த தேர்தல் வியாபாரத்தில் லாபம் ஈட்ட என்னென்ன முயற்சி நடக்கலாம் என்பதை வீரகேசரி வெளியீடு விளக்குகிறது. 
    http://www.yarl.com/forum3/index.php?showtopic=64701

    நான் சொல்ல விளைவது என்னவென்றால் புலம் பெயர்ந்த தமிழர்கள் ராமதாஸ் போன்றோரை நம்புவதில்லை என்பது தான் பொதுவான கருத்து. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வெட்டிப்பேச்சை ஆவென்று வாயைப்பிளந்து கேட்டுக்கொண்டு நின்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. புலம் பெயர்ந்துவாழும் தமிழர்களின் முன்னால் இப்போது அவர்களாகவே உணர்ந்து செய்யவேண்டிய வேறு கடமைகள் விரிந்து கிடக்கிறது. 

  8. உங்களுக்கு இரக்கமே கிடையாதா? ராமதாசைப் போய் பச்சோந்தியோடு ஒப்பிட்டு விட்டீர்களே… அதைப் (பச்சோந்தியை) பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது…பாவம்.

  9. இனி, பா ம க -வின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசிப்போம். கடந்த தேர்தலில் இக்கட்சிக்கு மக்களிடம் ஒன்றும் செல்வாக்கு இல்லை என்பது பட்டவர்த்தனமாய் வெளிப்பட்டுவிட்டது. (wash out – zero for seven). அதிமுக தோற்ற மற்ற தொகுதிகளின் வாக்கு வித்தியாசத்தை விட அவர்களின் “பெல்ட்டில்” தோற்றது,  வாக்கு பலமடங்கு.

    அதேநேரம் திமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் அதிமுகவினருக்கு எதிராய் பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட பாமகவிற்கு எதிராய் பெற்ற வாக்கு வித்தியாச வெற்றி பல பல மடங்கு.

    பாமக பெற்ற வாக்குகள் கூட அதிமுகவின் வாக்குகள்தான். தனித்து நின்றால் டெபாசிட் வாங்கி இருக்குமா என்பது பட்டிமன்ற டாப்பிக்.

    இந்நிலையில், பாமக கோபாலபுரத்தில்தான் பிச்சை எடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் சேர்த்துக்கொள்ள வில்லை என்றால் நிலைமை என்னாகும். தனித்து நின்றால் அதோகதி. அரசியலில் பாமகவுக்கு இறுதி ஊர்வலம்தான் நடைபெறும். சரி. இதை தவிர்க்க என்ன செய்வது?

    நான் சொல்லப்போவது பலருக்கு சிரிப்பை வரவழைக்கலாம் என்றாலும் பாமகவுக்கு படு சீரியசான அறிவுரை. தயவு செய்து யாரும் என்னை கேலி பண்ணக்கூடாது. ஆமாம்.

    பாமகவுக்கு நேரவிருக்கும் அரசியல் மரணத்தை தவிர்க்க ஒரேவழி விஜயகாந்த்துடன் கூட்டணி போடுவதுதான்!!!. ஆனால், அதற்கு முன்னரே அவர் (அதிமுக/திமுக) இரண்டில் ஏதாவது ஒரு கூட்டணியில் இருப்பார்!??! (என்பது என் கணிப்பு). அப்படி அல்லாத பொழுதும் அவர், ராமதாசை ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகமே.  

    இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால்,….ராமதாஸ்……ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது ஒரு சுயேச்சையுடன்(!!!??) கூட்டு சேர்வது உட்பட……எதுவும் செய்வார், தனித்து நிற்பதை தவிர….!!!

  10. Namma tholar kovan paadiyadu poal ”highwaysil rottoram thavukira monkey nee”……..eandra paadal ninaivukku varukirathu mothathula ramadass kaattula irukka veandiyavaru.

  11. Naxal Vinavu,
                   First few questions:

    Can you post your photo in this website?
    Can you let everyone know that you (vinavu, mugilan, marudhaiyan, rahim, pandiyan, kalagam, sengodi) are naxals , interested in killing innocent people?
    Can you let everyone know how you are getting money for this website?
    Can you let everyone know who is your leader?
    Can you let everyone know on what will be your policies once you become the head of the state?
    Can you let everyone know on “ANNIHILATION”??
    Can you let everyone know on who your “CLASS ENEMIES” are?

    Last one:
               I am sure that you eat the ration rice given by the Indian govt. What right you hve to eat that rice , when you want to destroy the Indian nation?

    Come out in open Naxals, nothing wrong. It is going to be US only. You will be shown your place once you come out of hiding places!!!!!
    Come out, let the fight begin!!!!

      • Hello Anti capitalist,
                      I am not running a blog criticising each and everyone in the world.
                      I am not supporing the naxals and LTTE without showing my face.

        When you support Naxalites, Ma ka i ka, , pu ja tho mu, you must show your face and tell your idealogy. then people can either stay from you or be with you.

        People who are with you will be killed like roaches and Eelam tamils. Got it???

    • My Dear Proud Capitalist,
      We know when you become arrogant, when the share price falls, When you don’t get medical college seat even you prepared to pay bribe. When you lost the money in NBFC with the thought of getting higher interest. When people agitating for their wants. At the same time when you become humble that also we know, to get bone from the Govt. We are not ashamed to get ration rice. Because it is ours. Our farmers produced.
      Dear capitalist, you read only The Hindu, Economic times or Thuclak, or Vikatan, Read other papers also. These are fighting openly. ex: latest Chidabaram Natarajar Temple issue Do you have any evidence that they have killed innocent or any other people. You may not who they are because you won’t come beyond this web. We know people like you don’t come to this world because you are white color. we are blue color. If you want to see come, where we can meet, I am ready to meet you dear.

  12. I don’t have any words to say about the ——–(the patchonthi) But I have to say some thing about the cartoon. Becouse it is very nice, Weldone Raja! Please attac all PP (political porukkes)
    With friendly
    Ravi……

  13. பச்சோந்தி எதிரியிடமிருந்து தன் உயிர் காக்கவே நிறம்மாறுகிறது,இராமதாசு தன்பிள்ளை,தன்குடும்பம், சுகபோக ஊதாரி உல்லாச வாழ்க்கை வாழ ,மக்கள் சொத்தை கொள்ளையடிக்க ,எவம்பொண்டட்டி எவனோட போனாலும் லெவைக்கு அஞ்சு பணம் என்பதைப்போல, எவன் ஆட்சிக்கு வந்தாலும் பதவி சுகம் அனுபவிப்பது ,கொள்கை..பொடலங்கா..புண்ணக்கு..மயிறு..மட்டை..எதுவும்கெடையாஆஆது…. உலகின் சிற்ந்தவேடதாரிக்கான கின்னஸ் பதிவுக்கு நாம் பரிந்துரை செய்யலாம்

  14. வினவு குழுவினருக்கு,

    ராமதாஸ் பற்றி நீங்கள் எழுதி இருப்பது அனேகமாக ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால் அவர் அரசியல் செய்யும் ஜெ, கலைஞர் மாதிரி யாரையும் விட மோசமோ (இல்லை நல்லவரோ) இல்லை என்று தோன்றுகிறது. இங்கே சொல்லப்படும் குறைகள் நமது அரசியல் அமைப்பின் குறைகளா இல்லை ராமதாஸ் என்ற தனிப்பட்ட மனிதரின் குறைகளா என்று எனக்கு ஒரு கேள்வி உண்டு.

    ராமதாஸ், பா.ம.க. இவற்றால் வன்னியரின் வாழ்வு நிலை உயர்ந்திருக்கிறதா? களத்தில் இறங்கி வேலை செய்யும் வினவு குழுவினருக்கு இதை பற்றி ஏதாவது insight உண்டா? வன்னியர்களிடையே ஜாதி பற்றிய பிரக்ஞை நிச்சயமாக அதிகரித்திருக்கும் என்று தோன்றுகிறது.

    பொதுவாக இசைவு இருந்தால் ஒரு பதிவுக்கு நான் மறுமொழி எழுதமாட்டேன். அதியமானின் கமென்ட் – பட்டினி சாவுக்கு மறுமொழி எழுதாமல் எல்லாரும் உன்னைப் போல் ஒருவன் பதிவுக்கு மறுமொழி எழுதுவது ஏன் – இந்த பதிவுக்கு என்னை மறுமொழி எழுத வைத்திருக்கிறது. சரியான பாயிண்டை எடுத்து சொன்ன அவருக்கு நன்றி!

    • பா.ம.கவும், வன்னியர்களும்

      பா.ம.கவினால் வன்னிய மக்கள் சமூக, பொருளாதார ரீதியாக எந்த பயனையும் அடையவில்லை. சிறுபான்மை வன்னிய நடுத்தர வர்க்கம் மட்டும் இட ஒதுக்கீட்டால் சற்று பயனடைந்ததாகக் கூறலாம். மத்திய அமைச்சரவையில் பங்கேற்றதன் மூலம் சில எடுபிடிகள் ஆதாயம் அடைந்திருக்கலாம். மற்றபடி வாழ்க்கை என்ற அளவில் பெரும்பான்மை வன்னிய மக்கள் தலித் மக்களைப்போல வறுமையில்தான் வாழ்கிறார்கள். 80 ,90 களில் பா.ம.கவுக்கு இருந்த வன்னிய வாக்கு வங்கி இன்று இல்லை. காரணம் ராமதாசின் சுயநல குடும்ப அரசியல், மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதங்கள் முதலியனவற்றால் அந்த கணிசமான வாக்கு வங்கி இன்று கலைந்து விட்டது. மேலும் ராமாதசுக்குஆதரவு இருந்த காலங்களில் கூட அவர் கூட்டணி மூலமே ஆதாயங்களைப் பெற்றார். இன்று தனித்துப் போட்டியிட்டால் அவர் கட்சிக்கு டெப்பாசிட் கிடைப்பதே கடினம். இன்னும் தலித்துக்களை அடக்க வேண்டுமென்ற ஆதிக்க சாதி உணர்வு வன்னிய மக்களிடம் இருந்தாலும் அவர்கள் இப்போது சாதிய அரசியலுக்கு முற்றிலுமாக ஆதரவளிப்பதில்லை. இந்த சாதி பெருமையை வைத்தும், இட ஒதுக்கீட்டிற்கான போராட்டத்தை வைத்துமே பா.ம.க வளர்ந்தது. ஆனால் அத்துடன் அதன் காலம் முடிந்து விட்டது. தற்போது மீண்டும் வன்னியர்களுக்கும் மட்டும் இட ஒதுக்கீடு கோரிக்கையை ரமாதாசு எழுப்பினாலும் மக்களிடம் அது எடுபடாது. ராமதாசின் தவறுகளில் அமைப்பின் தவறுகள் பாதி என்றால் மீதி அவரது சந்தர்ப்பவாதத் தவறுகள்.

      • ஏன்டா அரைகுறை ,

        கருணாநிதி என்ன நாட்டு மக்களுக்க உழைக்கிறார். நீ எந்த சாதி டா ? இது மாதிரி கீழ் தனமான பதிவு எழுதுறதா நிறுத்து.

  15. என்னதான் சொல்ளுங்கள் காங்கிரஸ் மாதிரி கொஞ்சகாலம் கழித்து திரும்ப வந்துருவாங்க,ஏன்னா? ஓட்டுபோடும் யந்திர நிலம ரொம்ப மோசமா இருக்கு,
    சாஞ்சா சாயறபக்கமுங்க,

    • வினவு நீ எல்லாம் கட்டுரை எழுதிதான் எங்களுக்கு ராமடச்ஸ் பற்றி தெரிய வேண்டும் என்று இல்லை. கருணாநிதியை விடவோ , ஜெயலலிதாவை விடவோ ராமதாஸ் மோசமானவர் இல்லை. உன்சாதி புத்தி உன்ன விட்டு போவது. போ ..போய் கருணாநிதி நாத்தத்த கழுவு.

      ராமதாஸ் வன்னிய இனத்துக்கு பண்ணியது போதும். இப்போ நாங்கள் அவர் பின்னல் நின்று அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். உன் சாதி புத்திய உன்ன மாதிரி கீழ் புத்தி உள்ள நாய்கள் படித்து புளங்காகிதம் அடையும்.

      • கழக உடன் பிறப்புக்களே இன்னும் கண்ணும் கருணாநிதிய நம்பி கிட்டு இருக்கும் போது , ராமதாஸ் தான் வன்ன்யர்களின் ஒரே நம்பிக்கை , அய்யாவ நாங்கள் நம்புவதில் வியப்பென்ன இருக்கு.

  16. ஆனால் அந்த தேர்தலில் மட்டும் இருவரும் பா.ம.கவிற்கு இடமில்லை என்று அறிவித்து விட்டால் ஒரு வரலாற்றுப் புகழ்பெற்ற பச்சோந்தியை நாம் தமிழக அரசியலிலிருந்து ஒழிக்கப்படுவதை காணலாம். பச்சோந்தியை வளர்த்து விட்ட இருகழகங்களும் அதை ஒழிப்பதையும் செய்து விட்டால் தைலாபுரத்தின் அரசியல் அனாதையாக மாறிவிடும்

    -supper-

  17. அந்த கொயா எத்தன தடவைதான் அவனோட தாய புணர போறான்னு (அதான் அதி முகவுடன் கூட்டு)தெரியல..தன குடும்பத்துல யாரவது பதவி வகிச்ச முச்சந்தில நிக்க வச்சி சவுக்கால அடிக்க சொன்னான்…யாரவது அவன வெளுத்து வாங்குங்க…எண்பத்தி ஏழுல மரத்த வெட்டி போட்டப்பவே எந்கௌந்தர்ல போட்டு தள்ளியிருந்தா இந்த பிரச்சனையே கிடையாது..

  18. நண்பர் குழலி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

    டாக்டர் கொய்யாவின் கொள்கைக் குலவிளக்கு, பச்சோந்திக்கு பட்டுக்குஞ்சம் கட்டிவிட இணையத்தைப் பயன்படுத்திவரும் குழலிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ராமதாசின் பச்சோந்தி வரலாறு மாறாது. அது மேன்மேலும் தன்னை மெருகேற்றிக் கொண்டு, ராமதாசுக்கு பச்சோந்தியை உதாரணம் காட்டியகாலம் போய் பொய் பித்தலாட்டம், முடிச்சவிக்கித்தனம் என அனைத்து ‘அரசியல்’ நடவடிக்கைக்கும், ஏன் பச்சோந்திக்கே கூட ராமதாசையே உதாரணமாகக் காட்ட வேண்டிய காலம் வரும். ராம்தாசின் முன்னேற்றம் அதுவரை நிச்சயமாகச் செல்லும் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் குழலிக்காக நான் காத்திருக்கிறேன்.

  19. இது மக்கள் aயோக்கிரகளை தலிவர்கள் ஏற்று கொண்டதல் தான் அனைவரும் பச்சோந்தித்தனம் செய்கிறாகள் என்பது என் கருத்து. ஒரு உண்மை அரசியல் தலிவனி தமிழ் நாட்டில் காட்டுங்கள் பார்போம்.

  20. _____மக்கள் ஆயிரம் பிரச்சனையில் இருப்பதற்கு ‘நாங்க வந்தா திருந்திடும்’ என அரசியல் நடத்துபவர்கள் ஒரு புறம் என்றால் பிரச்சனையினை மறைத்து, திசைதிருப்பி சாதி அரசியல் நடத்தி அதிகாரத்துக்கு வர துடிக்கும் ராம்தாஸ் ஐயா போன்றவர்கள் மறுபுறம். ராமதாஸ் கண்டுப்பிடிப்பு என்ன தெரியுமா?

    அனைத்து பிரச்சனைக்கும் ஒரு வன்னியன் ஆட்சிக்கு வந்தா தீர்ந்திடும் என்கிறார். அதுவும் அந்த வன்னியர் அவர் செல்ல பிள்ளை அன்புமணி ராமதாஸ் ஆக தான் இருக்க வேண்டும் என்கிறார்.

    ராமதாஸ் சாதி அரசியலுக்கு……. கையப்புடுச்சு இழுத்தியா (‘நாங்க வந்தா திருந்திடும்’ ) அரசியலே எவ்வளவோ மேல் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க