முகப்புதிருப்பதி ஏழுமலையானை கைது செய்!
Array

திருப்பதி ஏழுமலையானை கைது செய்!

-

திருப்பதி ஏழுமலையானை கைது செய்!

“சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் எஸ்.ஜீவன் 12.10.2009 அன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் புறக்காவல் நிலையம் அருகே விஷம் அருந்திய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது சட்டைப்பையில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி எழுதிய கடிதத்தில்..’ வெங்கடாஜலபதி முன்பாக இறக்க வேண்டும் என்று விரும்பி இந்த முடிவை எடுத்தேன். எனது சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. எனது மரணத்தால் பெற்றோரும் உறவினர்களும் அழவேண்டாம். மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை தேடிக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.”

–          இது 13.10.2009 தினத்தந்தியில் வெளிவந்த ஒரு செய்தித் துணுக்கு.

ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு மனிதனுக்கு மட்டுமல்ல மனிதன் உருவாக்கிய கடவுளர்களிடமும் உண்டு என்பதற்கு விசுவரூப சாட்சி திருப்பதி வெங்கடாசலபதி. தஞ்சை மாவட்டத்தின் பிரம்மாண்டமான சிவன் கோவில்களெல்லாம் வௌவால் நாற்றத்தில் ஆளில்லாமல் நாறும் போது திருப்பதி ஏழுமலையான் மட்டும் தங்கத்தில்தான் குளிப்பார். இந்தியாவின் இருபதாம் நூற்றாண்டில் சாதாரண நிலையிலிருந்து பில்லியனர் நிலைக்கு உயர்ந்தவர்கள் இரண்டுபேர். ஒருவர் அம்பானி, மற்றொருவர் வெங்கடாசலபதி. அம்பானி மோசடி செய்து பில்லியனரானார் என்றால் மோசடி செய்த பணக்காரர்களின் கருப்பு நோட்டை வைத்து பில்லியனாரானவர் ஏழுமலையான்.

முனி, இசக்கி, சுடலைமாடன், மதுரைவீரன், முத்தாரம்மன் என நாட்டுப்புறத் தெய்வங்களை வணங்கும் உழைக்கும் மக்கள் தமது காணிக்கையாக அவர்களது வாழ்வில் கிடைக்கும் பொருட்களை படைப்பார்கள். கிடாவை வெட்டினால் அது படைக்கப்பட்டு பலருக்கும் உணவாய் போய்ச்சேரும். எதுவும் வீணாவதில்லை.

நகர்ப்புறத்து நடுத்தரவர்க்கம், மேட்டுக்குடியின் தெய்வமான ஏழுமைலையானுக்கு மட்டும் தங்கமும், புதுமணம் மாறாத கரன்சி நோட்டுக்களும்தான் பிடிக்கும். இப்போது ஒரு உயிரையே காணிக்கையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். மன உளைச்சலால் அவதியுற்ற ஜீவன் என்ற மாணவன் தனக்கு பிடித்த கடவுளின் சன்னதியில் வைத்தே உயிரை துறந்திருக்கிறான். பட்டை நாமம் போட்டு கண்மூடிய நிலையில் இருந்தாலும் முழு உலகையும் விழிப்புடன் ஆளுவதாக நம்பப்படும் வெங்கடாசலபதி இந்த மாணவனின் உயிரைப் போய் ஒரு காணிக்கையாக ஏன் பறித்துக் கொண்டார் என்பது நம் கேள்வி.

முடியைத் துறப்பதிலிருந்து, 24 காரட் சவரன், அமெரிக்க டாலர் என விதவிதமாக காணிக்கைகளை கொட்டும் பக்தர்கள் பதிலுக்கு தங்களுக்கு நடக்கவேண்டிய, அல்லது வேண்டி நடந்த நிகழ்வுகளுக்காக ஏழுமலையானுடன் பிசினஸ் ஒப்பந்தம் போட்டுக் கொள்வது வழக்கம். ஆனால் ஜீவன் மட்டும் தனது உயிரைக் காணிக்கையாக அளித்து பதிலுக்கு ஏதும் பெறாமலேயே இறந்து விட்டார். அல்லது அவர் வேண்டியது வெங்கடாசலபதியின் தயவில் நடப்பதாக இருந்தாலும் அதைப் பார்ப்பதற்கு அவரிடம் உயிரில்லை. தனது மகனின் உயிரை காணிக்கையாக பறித்துக் கொண்ட அந்த இறைவனிடம் ஜீவனின் பெற்றோர் என்ன கோரிக்கை வைக்க முடியும்? அவர்களைப் பொறுத்தவரை திருமலை என்பது இனி புண்ணியத் தலமல்ல, மகனைப் பறிகொடுத்த இழவுத் தலம்.

ஜீவன் தனது ஜீவனையே காணிக்கையாக கொடுத்திருந்தாலும் அந்த இறந்த உடல் ஏழுமலையானின் சன்னதிக்கு செல்லப்போவதில்லை. திருப்பதியின் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களால் அறுத்து பிரதேப் பரிசோதனை செய்யப்படும் அவரது உடல் சென்னையின் ஏதோ ஒரு சுடுகாட்டில் சாம்பலாகப் போகிறது. லவுகீக சமாச்சாரங்களை பேஷாக எடுத்துக் கொள்ளும் திருமலையான், ஜீவனின் உடலையோ அல்லது இறைப்பற்றாளர்கள் நம்பும் அந்த உடலுக்குள் இருக்கும் ஆன்மாவையோ சட்டை செய்யப் போவதில்லை. விஷம் பாய்ந்த அந்த உடலை விட கருப்புப் பணமே இந்த காஸ்ட்லியான கடவுளின் விருப்ப காணிக்கை. கரன்சிக்கும், தங்கத்துக்கும் மத்தியில் அந்த மனித உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.

ஜீவனின் மரணத்தை வெளியிட்டிருக்கும் தினத்தந்தியில் மற்றொரு செய்தியும் வந்திருக்கிறது. ஏழுமலையானை தரிசிப்பதற்கு நாடு முழுவதும் தினசரி பல்லாயிரம் பேர் வருகிறார்கள். தர்ம தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்கு பல மணிநேரம் வரிசையில் நின்றால்தான் சாமி தரிசனம் செய்ய முடியும். அதிகாலை சுப்ரபாத சேவையில் தொடங்கி தோமாலா சேவை, அர்ச்சனா, ஆனந்த தரிசனம் என்று பல்வேறு தரிசனங்களுக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி வழிபடுகிறார்கள். இதற்கான சுதர்சன டோக்கன் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறதாம். 15,000 பேர்கள் தினசரி சுதர்சன டோக்கன் பெற்று வழிபடுகிறார்கள்.

இப்போது இந்தக் கட்டண முறைகளை ஒழித்து விட்டு ‘சீக்கிர தரிசனம்’ என்று 300 ரூபாய்க்கு அறிமுகப்படுத்துகிறார்களாம். திருமலையான் கவலைப்படாத ஏழைகள் தர்மதரிசனத்தில் புழுங்கும் போது பணமுள்ளவர்களுக்கு மட்டும் சீக்கிர தரிசனம். இப்படி வழிபாட்டிலேயே பணமுள்ளவனுக்குத்தான் முன்னுரிமை என்று அப்பட்டமான பேதத்தை கடைபிடிக்கும் ஏழுமலையானின் சன்னிதியில் ஜீவன் ஏன் உயிரை விட்டார்?

தென்னிந்தியாவில் இறைவழிபாட்டை ஒரு நவீன பாணியாக்கிய இரண்டு இடங்களில் திருப்பதிக்கும், சபரிமலைக்கும் முக்கிய இடமுண்டு. சபரிமலையில் கூட சிலமாதங்கள் மட்டும்தான் சீசன் என்றால் திருப்பதியிலோ தினசரி சீசன்தான். இந்தியாவில் தாராளமயம் வளர்ந்து வந்த அதே காலத்தில் திருமலையானும் செழிப்பாக வளர்ந்து வந்தார். ஆந்திராவில் நிலவும் நிலவுடமை பிற்போக்குத்தனத்தின் உரிமையாளர்கள் அத்தனை பேருக்கும் ஏழுமலையான்தான் ஸ்பான்சர். பதவி இழந்த சந்திரபாபு நாயுடுவோ, அவருக்கு வழி ஏற்படுத்திய ராமாராவோ, நேற்று கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவியோ அத்தனை பேரும் தமது அரசியல் வாழ்வில் வெங்கடாசலபதியை தொழுது விட்டே பணிகளை ஆரம்பிப்பார்கள்.

வெள்ளத்தில் மூழ்கித் தவிக்கும் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்து கிராம மக்கள் இன்னும் நிவாரண உதவி கிடைக்காமல் அவதிப்படும் அந்த மக்கள் பார்வையிட வரும் முதல்வர் ரோசய்யாவின் கார்மீது கல்வீசி தமது ஆத்திரத்தை காண்பித்தார்கள். இப்படி புறநிலையான வாழ்வில் அதிகாரம் செலுத்துவோர் மீது வெறுப்புறும் மக்கள் அதே அதிகாரத்தில் உள்ளவர்கள் பிரலப்படுத்திய ஏழுமலையான்மீது மட்டும் வெறுப்பு கொள்வதில்லை. இது ஆந்திராவுக்கு மட்டுமல்ல. தென்னிந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மக்களின் சர்வரோக நிவாரணியாக வெங்கடாசலபதி மாறிவிட்டார். வாழ்வின் வலிகளை பட்டுத்தெரிந்து கொண்டாலும் அதை விழிப்புணர்வாக மாறும் வளர்ச்சியை அழிக்கும் வேலையை வெங்கடாசலபதி செய்து வருகிறார்.

திருப்பதியில் டன் கணக்கில் குவிக்கபடும் தலைமுடிகள் சவுரியாக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பலகோடி அன்னியச்செலவாணியை வழங்குகிறதாம். இந்த ஏற்றுமதிக்காக மொட்டையடிக்கும் மக்கள் தமது முடியோடு மூளையையும் சேர்த்துத்தான் இழக்கிறார்கள். சின்னப் பிரச்சினையோ, பெரிய பிரச்சினையோ எல்லாவற்றுக்கும் திருப்பதியும், அங்கு அடிக்கப்படும் மொட்டையும் நிவராணம் என்றால் அந்த நாடு உருப்படுமா? சில ஆயிரம் கந்து வட்டி கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் இருக்கும் ஆந்திராவில் ஒரு பணக்காரத்தெய்வம் மட்டும் பலகோடிகளை தினசரி வருமானமாகப் பெறுகிறது என்றால் தற்கொலை செய்து கொள்ளும் உயிரின் மதிப்பு என்ன?

ஜீவனின் மன உளைச்சலுக்கான காரணங்கள் என்ன? காதலா, படிப்பா, நட்பா, பாலியல் பிரச்சினையா எதுவென்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் தன்னுயிரை துறப்பதற்கு அவர் தெரிவு செய்த இடத்தை வைத்து அவரது ஆளுமையை நாம் யூகிக்க முடியும்.

இந்த உலகில் நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உண்டு என இறைவனை அழுத்தமாக நம்பும் ஆத்திகர்கள் இந்த உலகின் சரி, தவறுகளெல்லாம் கடவுள் மேலுள்ள பயத்தினாலே ஒரு ஒழுங்கைப் பெறுகின்றன, இந்த நம்பிக்கை இல்லையென்றால் மக்கள் தறுதலையாக மாறிவிடுவார்கள் என வாதம் செய்வார்கள். இப்படி இல்லாத ஒன்றினை வைத்துத்தான் இந்த உலகம் ஏதோ ஒரு ஒழுங்கில் இயங்குகிறதா? நாத்திகம் பேசுவோர் எல்லாம் தாறுமாறாக வாழக்கூடியவர்களா என்ன?

ஆத்திகம் ஆழமாக வேர்விட்டிருக்கும் மனிதர்கள் தமது வாழ்வின் பிரச்சினைகளுக்கு இறைவனிடம் சரணடைகிறார்கள். நாத்திகர்களோ அத்தகைய பிரச்சினைகளை தமது அறிவின் துணை கொண்டு தீர்க்க முனைகிறார்கள். பொதுவுடைமைத் தத்துவத்தை நம்பும் நாத்திகர்களோ அந்த பிரச்சனைகளின் சமூகவேரை கண்டறிந்து அகற்ற முனைகிறார்கள்.

இவ்வகையில் ஆத்திகம் ஒரு மனிதனின் முன்முயற்சி, போராட்டம், முனைப்பு, அத்தனையையும் ரத்து செய்கிறது. புறநிலைமையாக வாழ்க்கை உண்மைகளை கற்றுத் தந்தாலும் அவர்கள் அவற்றை ஆத்திகத்தின் வழியேதான் பார்க்கிறார்கள். இத்தகைய நம்பிக்கை எப்போதும் நல்ல செய்திகளை மட்டும் கொண்டு வருவதில்லை. ஜீவனின் பிரச்சினைகளை அவர் உயிர் வாழ்ந்து சந்திக்கும் வல்லமையை அவரது இறைபக்தி வழங்கிடவில்லை. மாறாக அதற்கு புறமுதுகிட்டு ஓடும் கோழமையைத்தான்  கற்றுக் கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் ஜீவனது தற்கொலையை தூண்டிய குற்றத்திற்காக வெங்கடாசலபதி கைது செய்யப்படவேண்டும். அவர் மீது கொலை முயற்சிகளின் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். இந்த தற்கொலைக்கு தூண்டியவர் என்ற முறையில் திருப்பதி ஏழுமலையான்தான் இதற்குப் பொறுப்பு. இது அவர் செய்த கொலை!

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவுகள்

சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !

கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்!

 1. //அந்த வகையில் ஜீவனது தற்கொலையை தூண்டிய குற்றத்திற்காக வெங்கடாசலபதி கைது செய்யப்படவேண்டும்.//

  அடேய் பூசாரி எப்போதுடா பேசினால் உன் அம்பாள்? என்ற கலைஞரின் வசனம்தான் நினைவுக்கு வருகின்றது. சில வருடங்களுக்கு முன் புட்டபர்த்தியில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது ஞாபகம் வருகின்றது. கடவுள் மறுப்பாளர்களின் வாதங்கள் இந்த சமுதாயத்தில் எப்போது எடுபடுமோ? இறந்தவரின் குடும்பத்திற்கு என் அனுதாபங்கள்.

 2. வரதராஜனை கொலைக்கு சாட்சியாக முன்பு அழைத்தபோதும் அவர் வரவில்லை.தற்கொலைக்கு எப்படி இவரைக்கைதுசெய்வது?

  • வணக்கம் டாக்டர், வினவு தளத்துல உங்களை பார்க்கவே முடியவில்லை? எப்பொழுது உங்கள் கட்டுரை தொடரும்… நம்பிக்கை மற்றும் கையறுநிலை குறித்த பிர்ச்சனை உங்கள் கட்டுரைகளில் விளக்கப்படும் என்று நம்புகிறேன்

  • What I liked about this essay is the way it ends: How religion suffocates or rather stifles an individual’s initiative, struggle, and aim! And, doctor, nice to see you here. Looking forward to your thought-provoking analysis.

 3. It is rididculous to think that Lord Venkatachalapathi instigated him.How can we assume that the dead guy was sane and in his senses.These comments only make us suspect the mental acumen of the one who wrote the blog

   • Then what about Dmk cadres who offer the same to there Leader Kalanigar Karunanidhi why he is wearing yellow towel why cant he wear black like that of vaiko, what is the tamil culture one man one wife or one man n wife pls clarify what is the earning of dravidian leader before entering politics and after entering politics

    • I guess this is the problem with whole of tamil ppl.. I believe this is the one of the very good articles which questions all the wrongs which we do for God’s sake.. And with the background of a lost person.. Why do we INCLUDE the so called politicians who doesn’t care about any good for the ppl?

  • Sundar, are in communication with ‘Lord’ Venkatachalapathi? If you are, do tell him it’s time for him to taxed! Jokes apart, the mental stability of Jeevan must be analyzed, and the essay is trying to just that! How mindlessly following a religion makes an individual a complete idiot and how this idiocy is filling the coffers of the upper classes! Try to re-read the essay with more empathy (towards the human who died) and clarity (towards the structures that operate in this class society!).

  • அம்பானிக்கு வீட்டுல போயி கூட ஸ்பெசல் தரிசனம் கொடுப்பாறு நம்ம வெங்கி… சங்கராச்சாரியே போகும் போது ஒரு சிலை போகாதா?

   • Vinavu and other who accepts this article,
    Do you have guts to ask or write other community places here.Ex : Velankani , Nagoor and how they convert our ppl to their community. I liked few articles in this , but still opposing this.

 4. மன்னிக்க வேண்டும் வினவு. இந்த பதிவு எனக்கு முட்டாள்தனமாக தெரிகிறது. திருப்பதி வெங்கடாசலபதியை கைது செய் என்பதன் மூலம் வெங்கடாசலபதியின் இருப்பை ஒத்துக் கொண்டதுபோலிருக்கிறது. இது பகுத்தறிவிற்கு முரணானது.

  • ஏழுமலையானைக்கைதுசெய்வதுஎன்பதுஎன்ன? அவரைப் பாதுகாக்கிற, குளிப்பாட்டுகிற, குண்டிகழுவிவிடுகிற,உண்டியல் காசைத்திங்கிற கூட்டத்தைக் கைது செய்வதுதான். சுப்ரபாதம் கேட்டுத்தான் ஏழுமலையான் கண்விழிக்கிறார் என்பதை நம்புகிற‌ கூட்டத்திடம் இப்படித்தான் சொல்லவேண்டியதிருக்கிறது நண்பரே!ஏழுமலையான் என்பதை வெறும் சிலையாக அல்லது கடவுளாக மட்டுமே பார்க்காதீர்கள். அது மிகப் பெரியகூட்டத்தின் குடுமிக் குறீயீடு. குருசாமிமயில்வாகனன்.

 5. என்ன வினவு ஒன்னும் தெரியாத ஆளா இருக்கீங்க. ஜீவன் என்ன சும்மாவா உசுர வுட்டாரு.இல்ல ஏழுமலையாந்தான் இவர கவனிக்காம உட்ருவாரா! மேலோகத்திலே இவருக்கு ஸ்பெசலா சொர்க்கம்,ரம்பைகள், கஞ்சா,எல்லாம் அயிட்டங்களும் ரெடி. இதைவிட ஒரு மனுசனுக்கு என்னா வேணும் சொல்லுங்க. 

 6. ஜீவன் என்பவர் இறந்ததற்கு எப்படி வெங்கடாஜலபதி பொறுப்பாக முடியும்? அதுக்கு கைது செய்யனும்னு கிளம்பிட்டீங்க. ம்ம்ம்ம்ம்… ஒருவர் தற்கொலைக்கு தூண்டியதற்கு காரணம் என்னவாய் இருக்கும் என்று ஆராயாமல், தற்கொலை செய்து கொண்ட இடத்தை காரணம் கூறுகிறீர்கள். இப்போ நீங்கள் அதிகமா போடும் பதிவுகள் எல்லாம் மதத்தை தூற்றுதான், கடவுள் இல்லை மதம் இல்லை என்று கூறும் கூட்டம் எதற்கு எடுத்தாலும் மதத்தை குற்றம்சாற்ற ஆரம்பித்துவிடுகிறீர்கள். மனிதனால் ஏற்படும் தவறுக்கு மனிதனே பொறுப்பாவான்.

  • மஸ்தான், கெட்டதுக்கு கடவுளை பொறுப்பாக்க முடியாது என்ற வாதத்துடன் ஒட்டிப்பிறந்த இன்னொரு வாதம் ‘நல்லதுக்கும் கடவுளை பொறுப்பாக்க முடியாது’ என்பது.
   நீங்கள் இறைவினின் விருப்பம் இருந்தால் நல்லது நடக்கும் என்று நம்பினால், ஜீவனின் தற்கொலையும் இறைவனின் விருப்படிதான் நடந்தது என்பதை நம்புவதுதான் நேர்மை. நல்லது நடந்தால் வெங்கிக்கு ?காணிக்கை போடுவது சரியென்றால், கெட்டதுக்கு கைது செய்வதும் சரி. What do you think?

  • பிறகு என்ன மயிருக்கு கோவில்,கடவுள் . ஒரு தற்க்கொலையை கூட தடுக்க முடியத தட்டுக்கெட்ட கடவுள் எதுக்கு? வாருங்கள் இடித்து தள்ளுவோம் . Mãstän .

 7. “சீக்கியர்களின் அராஜகம்…”, பின்பு  “அஹ்மதியா…” பின்பு,  “அல்லுளுயா…”,,! இப்போது “ஏழுமலையான்…” ! நடத்துங்க வினவு. தூள் கிளப்புங்க. 

  இது எப்படி இருக்கிறதென்றால், சரியான கமல் பட ‘முற்றிலும் மாறுபட்ட’ மசாலா  தொடர் ஃபார்முலா –  ‘மசாலா தளம்’ இது..! இந்த ‘மசாலா கலவை தொடரில்’  பெரியாருக்கும் காரல் மார்க்சுக்கும் இடமிருக்காது.(!?!) அந்த ‘மசாலா’, மற்ற தளங்களில்தான் கிடைக்கும்.

  இவ்வளவு பேசும் வினவு, அந்த எழுமலையானுக்கு சேரும் அவ்வளவு பணங்களுக்கும் செல்வத்துக்கும்  முறையான கணக்கு இருக்கிறதா, இருந்தால் யாரிடம்  எந்த அக்கௌண்டில் எந்த வங்கியில் இருக்கிறது, அவை அனைத்தும் யார் யாருக்கெல்லாம் செல்கிறது, எங்கு-எப்படி-யாரால் செலவிடப்படுகிறது என இதே தளத்தில் எழுதுமா? அந்த துணிவு-திராணி-தெகிரியம், சமூக அக்கறை  எல்லாம் வினவிடம் இருந்தால்தான் வினவு எதிர்பார்க்கும் மாற்றம் இந்த சமூகத்தில் வரும். இல்லையேல் இது ஒரு ஒன்றுக்கும் உதவாத மசாலா தளம்தான்…! மறுக்க முடியாது.   

  • ஏம்பா வினவு, இந்தாளு நீங்க பதில் சொல்லாத காண்டுல வந்து உளரிக்கொட்டிகிட்டு இருக்காரு..தயவு செஞ்சு இவர கொஞ்சம் கவினிங்க.. தாங்கல… முன்னூறு கட்டுரை இருக்குற தளத்துல முனு கட்டுரைய படிச்சுட்டு ஒரே கொடச்சல்….ஐயா நெத்தியடி மொதல்ல அஹமதியா கட்டுரையில உங்களுக்கு வந்த கோவத்த ஒதுக்கி வச்சுட்டு வினவுல வந்திருக்குற மத்த கட்டுரைகளையும் படிங்க ஐயாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

   • ஐயா கேள்விக்குறிஈஈஈஈஈ….!
    உங்களுக்கு நான் சில ஆச்சர்யக்குறிகளை சொல்லட்டுமா? 

    மேலே  உள்ள வினவின் முகப்பு-சுட்டுவில் இவர்களின் “கொள்கையான” ‘கம்யூனிசம்’ எனும் தலைப்பில், ‘கல்வி’, ‘கேள்வி-பதில்’, ‘செவ்வியல்’…என வரிசையாக உள்தளைப்புகளில் ‘கிளிக்’ செய்தால் “நீங்கள் தேடும் பக்கத்தைக் காண இயலவில்லை”  என்று “ஈ” என்று தளம் பல்லு இளிக்கிறது. இதிலெல்லாம் பதிவு போட இவர்களுக்கு விஷயம் இல்லை…! (?)  

    ஆனால்,  சமூகம் என்ற தலைப்பில் எங்கோ ஒரு மூலையில் உள்ள மதம் என்ற உள் தலைப்பில் மட்டும் பக்கத்துக்கு பத்து பதிவுகளாக நான்கு  பக்கங்களுக்கு வத வத வென்று எண்ண்ண்ண்ண்ண்ண்ணற்ற – தளத்திலேய அதிக அளவிலான-பதிவுகள்..!
    “இப்படியொரு இந்தியா இருப்பது…” போன்ற எத்தனை சமூக அக்கறை கொண்ட- அனைவருக்கும் பொதுவான- ஆக்கப்பூர்வமான- சிந்தனையை தூண்டக்கூடிய- அதிக மறுப்பும்  எதிர்ப்பும் இல்லாத எத்தனை நேர்மையான  பதிவுகள் வந்தன?இவர்களின் நிலையும் நோக்கமும் இப்போதாவது புரிகிறதா? எல்லாமே ஒரு விளம்பர பரபரப்பு தானே ஒழிய சமூக அக்கறையா?

    இவர்களுக்கு-இவர்களின் பதிவுகளுக்கு, நிறைய  பார்வைகளும் நிறைய பின்னூட்டங்களும் தேவை. அவ்வளவுதான்.! வேறு ஒரு புண்ணாக்கும் கிடையாது. கம்யூனிசத்தை பதிவாய்  போட்டால் எவன் பார்க்கப்போகிறான் என்பது இவர்களுக்கும் தெரியும்; மற்ற எல்லா கம்யூனிச ‘செங்கொடி தள’ வகையறாக்களுக்கும் மிக நன்றாகவே புரிந்துவிட்டது…! 

  • என்ன உளர்றாருன்னுதான் புரியலை. சரி நெத்தியடி, முதல்ல சாகுரநாயாக்,ஜெயாஆபிதீன் இவங்களுக்கு பைசா எங்கிருந்து வருது எங்க போவுது என்னா பண்றாங்கோ இதல்லாத்தையும் விலாவாரியா தைரியமா சொல்லு. அப்பால வினவுகிட்ட தைரியம் இருக்கான்னு பார்ப்போம். நெத்தியடி முகம்மது,உங்க மதத்துல சூனியமெல்லாம் இருக்காமே. உங்களால வினவுக்கு சூன்யம் வைக்க முடியுமா? அப்படி வைச்சீன்னா புண்ணியமாப் போவும் உனக்கு.

   • ஐயா, paarvai!  கேட்டிருக்கிறோம். ஆதாரத்துடன் பதில் சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் மட்டுமல்ல, சூனியம் என்பதே கிடையாது என்று,  ///உங்களால வினவுக்கு சூன்யம் வைக்க முடியுமா?/// இந்த கேள்வியை வைத்தே  பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

   • ஐயா, paarvai!  
    நிறைய கேட்டிருக்கிறோம். ஆதாரத்துடன் அவ்வப்போது  பதில் சொல்லப்பட்டுள்ளது.

    இஸ்லாத்தில் மட்டுமல்ல, சூனியம் என்பதே கிடையாது என்று,
    //எனக்கு( PJ )  சூன்யம் வைக்க முடியுமா?//
    இந்த கேள்வியை வைத்தே  பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

    சாகுரநாயாக்  பற்றி எனக்கு தெரியாது. 

  • தத்தனேரி,ஓயாமாரி,காசிமேடு,இவை சுடுகாட்டுப்பெயர்கள்,பெயர்கள் வேறு வேறு மொத்தத்தில் அது சுடுகாடு, இது மதங்களுக்கும் பொருந்தும்.தத்தனேரியை தொட்டவுடன் ஓயாமாரி பற்றி எரிகிறது,மதங்கள் வேறு மூளை ஒன்று,சிந்திக்கத்தெரிந்தவன் அறிவாளி,சிந்திக்கதெரியாதவன் மூடன்,சிந்திக்க மறுப்பவன் மதவாதி என்றார் தந்தை பெரியார்.இதர்க்கு நல்ல உதாரணம் நெத்தியடிமுகம்மது.

   • இப்போது அறிவியல் சான்றுகளின் படியே இறைவன் இருப்பதை நிரூபிக்கிறார்கள் என்பதாவது தெரியுமா?  பெரியாரையும், நாத்திகவாதிகளையும்  கடவுள் மறுப்பு கோட்பாட்டையும் துவைச்சி காயப்போட்டதை கண்டுகளிக்க இங்கெ சுட்டலாம்.  இனி இஸ்லாமியரே பகுத்தறிவு வாதிகள் என்று சொல்ல ஆரம்பித்து விடலாம்.   

  • பி.ஜெ யின் உளரலைத்தான் அறிவியல்னு சொன்னீங்கலா.. ந‌ல்லது கடவுள் இருக்காருன்னு அறிவியல் பூர்வமா நிரூரூரூபிச்ச பி.ஜெ ய,கூப்பிட்டு ,அந்த கடவுள செருப்பால நாலு சாத்துசாத்தி ,எத்தியோபியாவுல,சோமாலியாவுல கஞ்சிக்கு இல்லாம தினமும் செத்துக்கிட்டிருக்கிர பல்லாயிரக்கணக்கான முசுலீம் குழந்தைகளுக்கு கஞ்சி ஊத்த சொல்லுங்க, அப்படியே இந்தோனேசியா போயி விபச்சாரம் பன்னாத்தான் கஞ்சி குடிக்க முடியும்ங்ர நெலைல உள்ள இசுலாமிய பெண்களையும் கொஞ்சம் பாக்க சொல்லுங்க,இன்னும் நெரைய்ய்ய இருக்குங்க மொதல்ல அதெ ரெண்டயும் சரிபண்ண சொல்லுங்க, அப்பரமா வாங்க விவாதிப்போம், பொது மேடையில்[அரங்கிலல்ல] முச்சந்தியில் அப்ப தெரிஞ்சிருமுங்க ஒங்க டுபாகூர்வேல…. நாங்க தயார், நீங்க?

   • “பசி” என்ற ஒரு ‘மகா கொடுமையை’ வைத்து மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளையும் படைத்து ‘அநியாயம்’ செய்த ///அந்த கடவுள செருப்பால நாலு சாத்துசாத்தி/// தண்டிப்பதற்கு முன் பெட்ரோல்(டீசல்,கேஸ்,சூரிய சக்தி…) போட்டால்தான் வாகனம் ஓடும், பெடல் மிதித்தால்தான் சைக்கிள் நகரும் என்ற மனிதனால் உருவாக்கப்பட்ட அநியாயமான சித்தாந்தத்தை ஒழிப்பது எப்படி, நாகராசன்?

   • நாகராசன், நான் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்செல்லாம் போடவில்லை. அதில் சிந்திக்க தத்துவம் உள்ளது. ‘பிரேக் டவுன்’ ஆன வாகனக்காரர்களுக்கு லிஃப்ட் தருவதும் செயின் அறுந்து போனவரை டபுள்ஸ் ஏத்துவதும் மனிதாபிமானம். அதுதான் மனிதன் மேல் ஏவப்படுகிறது. அதுதான் செயலுக்குறிய கூலி. ‘அப்படி மனிதாபிமானம் செய்வதால் எனக்கு என்ன நன்மை’ என்று கேட்பவருக்கு ‘சொர்க்கம்’ என்ற விருது உறுதியளிக்கப்படுகிறது. பிரேக் டவுன் ஆக்கப்பட்டது பின்னல் வரும் கார்காரரின் எண்ணத்தை சோதிப்பதற்கு. அதே நேரம், இவருக்கு காரில் ஏற்பட்ட சோதனை அவரின் சிறு பாவத்திற்கு தண்டனை. அவ்வளவுதான் நான் சொல்ல விரும்புவது.

 8. //அந்த துணிவு-திராணி-தெகிரியம், சமூக அக்கறை எல்லாம் வினவிடம் இருந்தால்தான்//
  i am also expecting this from VINAVU!!!!

 9. I enjoyed reading this blogpost. Thank you.

  Our friend Vinavu has a tremendous power of imagination.

  Thirupathi Venkatachalapathi has caused the death of the boy Jeevan! How can a God cause a death? If he has such powers to be omnipresent, why cant he cause the deaths of anyone living anywhere? Why only in Tirupathi? Does his jurisdiction end at the borders of Thirumala or Tirupathi only? Beyond that border, who takes over? Sivan? Murugan? Ambaal?

  Vinavu should explore the territories allocated to every Hindu god and goddess. Only after that, we can fix the responsibility on each and every god, including Thirupathi Venkateshwara?

  Since he accepts that a God, who does not exist, according to atheists, has caused the death, his arguments for atheism in the rest of the post, and its benefits to human beings fall squarely flat – a fact already pointed out by someone here.

  Either be here or be there!

  Obviously, the blogpost is not a product of rational thinking.

  Let me think rationally – no matter whether I am an atheist or a believer.

  Late Mr Jeevan was an engineering student. He went to Tirupathi and committed suicide and, that, as Vinavu said here, was according to his own wishes i.e he wanted to die there. What distraughted him enough to decide to take his life – as Vinavu says, no one knows yet. So, we are in the shadow territory and can indulges only in wild guesses here.

  Love failure? Exam fear? Parental pressure? Though these are questions, yet, they can be possible causes of a young mind.

  People commit suicide and it is common in a society of people who are generally timid. (I mean, Tamils in general). They are sentimental people and quite often buckle under pressure. Such nature is exploited by public men, like cine actors, god men, politicians and sundry confidence tricksters.

  Psychologists, analysising the minds of suicides, say that the suicides, in most cases, are genetically prone to depression and melancholia, and exaggerate their fears and develop weak minds that crash at the slightest disappointment.

  Jeevan may have been such a personality. These people perceive God and his blessings very differently from others. They expect God to do something DEFINITELY for them.When that wont happen, they are deeply disappointed.

  In certain cases, they enter into secret contact with God in their minds being cocksure that all their misses and hits will be taken care of by God.

  Jeevan’s perception of God may have been thus unique.

  Psychological cases have been reported detailing bizarre conduct of people, not only in Hindu religion, but in other religions as well. For e.g. girls wanting to marry Jesus or Siva or Murugan are common abnormal behaviour that is given respectable religious coating.

  A rational approach to God and religious worship is quite possible. Rationalism is not the preserve of those who boast of their rationalism like Vinavau here. It can be that of believers as well. Since we live in a fools’ paradise, the atheists assume they are rational and the believers presume there is nothing rational about belief.

  Believe. But believe rationally. It is possible to delectably dovetail Reason and Belief.

  Trust in God but tie up your caravan.

  KaLLapiRaan.

  • //Believe. But believe rationally. It is possible to delectably dovetail Reason and Belief.//

   Read the three last paragraph of this post – https://www.vinavu.com/2009/01/15/sabice/

   • இல்லாதகடவுளை எப்படி கைது பண்ண முடியும்?
    இல்லாத் கடவுள் எப்படி ஒருவரின் மரணத்தைத்தூண்டி விட்டவராவார்?

  • I believ that the crux of the argument is getting lost in analyzing the provocative title! The title is only meant to provoke! This kind of hijacking the entire debate to as something about arresting the god, is rather too simplistic! We need to get deeper into the argument of how religion is yet another instrument that keeps the class structure (different types of queques on the basis of money), how temples as these serve as places to whiten your black money, etc…It’s also about how this kind of screwed up of religious ideas and thoughts emasculate (forgive my sexist language) an individual’s independent faculties….please try to understand the actual intent of the article that hovering on the periphery!

 10. திருப்பதி கோயிலுக்கு கொடுக்கப்படும் பணத்தினை கொண்டு மருத்துவமனை, கல்லூரிகள் உட்பட பல நிறுவங்கள் சேவை செய்கின்றன. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இது. இக்கோயிலின் வருவாயைக் கொண்டு பல கோயில்களுக்கு உதவுகிறார்கள், பக்தியை
  பரப்புகிரார்கள், மக்களுக்கு உதவும் தொண்டுகளைச் செய்கிறார்கள். திருப்பதி நகரில் எத்தனை பள்ளிகள்,கல்லூரிகளையும்,மருத்துவமனைகளையும் நடத்த கோயில் மூலம் கிடைக்கும் வருவாய் பயன்படுத்தப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா. தங்களைத் தவிர பிறர் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைக்கும் கும்பல் இப்படி எழுதலாம். மக்களிடையே இருக்கும் கடவுள் நம்பிக்கை ஒழிய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். சோவியத் யுனியன் வீழ்ந்த பின் அங்கு என்ன ஆனது, திருச்சபை வலுப்பெற்றது. இறை நம்பிக்கை குறைவாக உள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்க்கைத் தரம் அதிகம். அடிப்படைத் தேவைகள் எப்போதோ பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன.வேலை இல்லாவிட்டால் அடுத்த வேளை பட்டினி என்று இல்லை. முதலாளித்துவ அரசுகள் அங்கு எழ்மையும், பசியும் இல்லாமல் ஒழித்துவிட்டன.அந்த நிலையும்,வாழ்வில் அச்சம் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டால் இறை நம்பிக்கை குறையும் வாய்ப்பு உண்டு. கடவுளை அகற்ற வேண்டுமானால் சிலையை உடைத்து எதுவும் நடக்காது, சமூக மாற்றம்,
  பொருளாதார மாற்றம் வேண்டும்.

  • அப்படியே உழைக்கும் மக்களுக்கு பட்டைநாமம் போடுறாங்கன்னு சொல்லு.”சோவியத் யுனியன் வீழ்ந்த பின் அங்கு என்ன ஆனது, திருச்சபை வலுப்பெற்றது” அப்படின்னா முதலாளித்துவம்தான் மக்களிடம் மூடநம்பிக்கையை வளர்ப்பதுன்னு சொல்ல வர்ரீங்க‌. உண்மையைச் சொன்னீங்களே கோவிந்தா. கொஞ்சம் சத்தமா சொல்லுங்க. கோவிந்தா! கோவிந்தா!.

 11. ஐயா கேள்விக்குறிஈஈஈஈஈ….! உங்களுக்கு நான் சில அச்ச்ரியக்குரிகளை சொல்லட்டுமா? 
  மேலே  உள்ள வினவின் முகப்பு-சுட்டுவில் இவர்களின் “கொள்கையான” ‘கம்யூனிசம்’ எனும் தலைப்பில், ‘கல்வி’, ‘கேள்வி-பதில்’, ‘செவ்வியல்’…என வரிசையாக உள்தளைப்புகளில் ‘கிளிக்’ செய்தால் “நீங்கள் தேடும் பக்கத்தைக் காண இயலவில்லை”  என்று “ஈ” என்று தளம் பல்லு இளிக்கிறது. இதிலெல்லாம் பதிவு போட இவர்களுக்கு விஷயம் இல்லை…! (?)  ஆனால்,  சமூகம் என்ற தலைப்பில் எங்கோ ஒரு மூலையில் உள்ள மதம் என்ற உள் தலைப்பில் மட்டும் பக்கத்துக்கு பத்து பதிவுகளாக நான்கு  பக்கங்களுக்கு வத வத வென்று எண்ண்ண்ண்ண்ண்ண்ணற்ற – தளத்திலேய அதிக அளவிலான-பதிவுகள்..!
  “இப்படியொரு இந்தியா இருப்பது…” போன்ற எத்தனை சமூக அக்கறை கொண்ட- அனைவருக்கும் பொதுவான- ஆக்கப்பூர்வமான- சிந்தனையை தூண்டக்கூடிய- அதிக மறுப்பும்  எதிர்ப்பும் இல்லாத எத்தனை நேர்மையான  பதிவுகள் வந்தன?இவர்களின் நிலையும் நோக்கமும் இப்போதாவது புரிகிறதா? எல்லாமே ஒரு விளம்பர பரபரப்பு தானே ஒழிய சமூக அக்கறையா?

  இவர்களுக்கு-இவர்களின் பதிவுகளுக்கு, நிறைய  பார்வைகளும் நிறைய பின்னூட்டங்களும் தேவை. அவ்வளவுதான்.! வேறு ஒரு புண்ணாக்கும் கிடையாது. கம்யூனிசத்தை பதிவாய்  போட்டால் எவன் பார்க்கப்போகிறான் என்பது இவர்களுக்கும் தெரியும்; மற்ற எல்லா கம்யூனிச ‘செங்கொடி தள’ வகையறாக்களுக்கும் மிக நன்றாகவே புரிந்துவிட்டது…! 

  • இதிலிருந்து என்னா தெரியுதுன்னா உங்கள மாதிரி மூடநம்பிக்கை ஆட்கள் நிறைய பேர் உலகத்தில இருக்காங்கன்னு தெரியுது. உங்க‌ளையெல்லாம் திருத்த வினவுன்னு ஒரு தூதரை அல்லா அனுப்பியிருக்காரு அல்லது வினவு அவதாரம் எடுத்து இருக்காரு கிருஷ்ண பரமாத்மா அல்லது மூடநம்பிக்கையாளர்களை காப்பாற்ற வந்த மேசையா வினவு அல்லது மூடநம்பிக்கையுள்ள பாவிகளை இரட்சிக்க வந்த வினவு அல்லது அல்லது அல்லது எவ்ளோ இருக்கு பார்த்தீர்களா,அதனாலதான் மதத்திற்கு அவ்ளோ பதிவு. அவசரஅடி ரங்கா, நெத்தியடி பில்லான்னு கேடிங்க மாதிரி நெத்தியடி முஹம்மதுன்னு பேரு வச்சிருக்குறீங்க. உங்கள் தூதர் பெயரை கொச்சைப்படுத்துற மாதிரி இருக்கு. 

   • ஹலோ மந்தப்பார்வை,அப்படி என்ன சொல்லி விட்டார் நெத்தியடி? தன் நாத்திக கருத்தை சொல்ல எந்த அளவுக்கு வினவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவு மற்றவருக்கும் ஆத்திக கருத்தை  சொல்ல உரிமை  உள்ளதை நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.

    நானும் பல்வேறு சமய தளங்களுக்கு சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் அவரவர் சித்தாந்தங்களே நிறைய பதிவுகளாக இருக்கின்றன. அப்படியே ‘மாற்று சித்தாந்த எதிப்பு’  இருந்தாலும் அப்பதிவுகளின்  நடுவிலே ஒரு சில வரிகளில் அல்லது ஓரிரு பத்தியில் “தங்கள் சித்தாந்தம் எந்த அளவு இவர்களின் கூற்றை விட மென்மையாக உள்ளது பார்த்தீரா” என்ற அளவிலேயே இருக்கிறது. எங்கோ ஒரு சில தனிப்பதிவுகள் அப்படி இருந்தாலும் இது போல இங்கிருப்பது போல  தளத்தில்  சரிபாதி அளவுக்கு எல்லாம் பதிவுகள் இல்லை. 

    வினவு இச்சமத்தில் சற்று ஆழ்ந்து யோசித்து தன் சித்தாந்த கருத்துகளை அதிகரிக்க வேண்டியது சூழ்நிலை அவசியம். இல்லையேல் மதங்கள் தான் விருட்சமாய் வளரும்.

 12. குடி குடியை கெடுக்கும். புகைத்தல் உடல் நலத்திற்கு கேடு. இப்படியெல்லாம் சின்னதா ஒரு செய்தியை கொடுத்துவிட்டு மது, சிகரெட் இதையெல்லாம் அரசுகள் விற்பனை செய்ய அனுமதிக்கிறேதே, காரணம் வரி வருமானம். அதுதான் சாமி விடயத்திலும் நடக்கிறது. மது, சிகரெட், கடவுள் இந்த மூன்று வழிகளிலும் அரசுக்கு வருமானம் வரும் என்றால் அரசு அம்பானியை அல்ல வெங்கடாசலபதியை கூட ஒன்றும் செய்ய முடியாது, செய்யவும் விரும்பாது. 

 13. கோவிலோ, தர்காவோ, குருத்வாரவோ, சர்ச்சோ அல்லது கம்யூனிச (மற்ற அனைத்து கட்சி) தேர்தல் நிதி உண்டியல்களோ –  உண்டியலில் போடப்படும் அனைத்து செல்வங்களுக்கும் பணங்களுக்கும் பில் போட்டுவிட்டு, உண்டியல் கலக்-ஷன்களுக்கு வரி போட எந்த அரசுக்காவது  துணிவு-திராணி-தெகிரியம், சமூக அக்கறை  உண்டா? அப்படி கேட்க இது போன்ற சமூக அக்கறை கொண்ட(?) வினவு தளத்துக்கு துணிவு-திராணி-தெகிரியம் உண்டா?

 14. மஸ்தான்,

  மனிதனின் தவறுக்கு மனிதன்தான் பொறுப்பு மதம் பொறுப்பல்ல என்றால் அந்த மதம் எதற்கு? எது நமக்கு பொறுப்புணர்வைக் கற்றுத்தருகிறதோ அதை கடைபிடிக்கலாமே? இல்லை பொறுப்புணர்வை மதம்தான் கற்றுத் தருகிறது என்றால் தவறுகளுக்கும் மதத்தைத்தானே கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது?

  நெத்தியடி முகமது

  சில கட்டுரைகளுக்கான விவாதத்தில் நீங்கள் பலபெயர்களில் வந்ததால் உங்களுக்கு பதிலளிக்கவில்லை. எல்லா விவாதங்களிலும் ஒரே பெயரில் வந்து கருத்து சொன்னால் விவாதிப்பதற்கு உதவியாக இருக்கும்.

  திருப்பதி உண்டியல் மட்டுமல்ல வாத்திகன், மெக்கா என எல்லா உண்டியல்களிலும் பில்லியன் கணக்கில் பணம் விழுகிறது. அந்தப் பணத்திற்கு கணக்கு இருக்கிறதா என்று கேட்பதை விட அது வாழக்கைப் பிரச்சினைகளை உணர்ந்து கொள்ளாமல் இருக்கும் வண்ணம் இறை நம்பிக்கையை அல்லது மூடநம்பிக்கையை பரப்புவதற்கு பயன்படுவதுதான் நமது கவலைக்குரியது.

  இந்தக்கட்டுரை ஒரு விளம்பர பரபரப்புக்காக வெளியிடப்படவில்லை. ஜீவன் என்ற அந்த மாணவனின் கடிதத்தை படித்து அதிர்ச்சியுற்றதன் விளைவாகத்தான் எழுதப்பட்டது. எல்லா துறைகளிலும் புகுந்து அவநம்பிக்கையை நம்பிக்கை என்ற பெயரில் கட்டியமைக்கும் மதம் ஒரு தற்கொலையில் கூட நுழைய முடியுமென்றால் வாழ்க்கை எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

  கம்யூனிசம், கேள்வி பதில், செவ்வியல் போன்ற பகுதிகளை நீங்கள் படிப்பதற்கு ஆர்வமாக இருப்பதற்கு நன்றி. அவையெல்லாம் நிறைய எழுதப்படவேண்டுமென்பது எங்கள் கனவு. நிச்சயம் நிறைவேற்றுவோம். பொறுத்திருங்கள். ஆனால் அப்படி எழுதப்பட்டால் வரவேற்பு இருக்காது என்பதற்காக இதுவரை எழுதவில்லை என்று சுயதிருப்தி அடைகிறீர்கள். கம்யூனிசம் குறித்து தெரிந்து கொள்வதற்கு முன் மதங்களைப்பற்றி நிறைய தெரிந்து கொள்வது அவசியமானது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். எல்லாவற்றையும் விட வாழ்க்கை உண்மையானது. அந்த உண்மையில் ஒன்றியிருக்கும் வரை வினவின் கட்டுரைகளை வாசகர்கள் வரவேற்பார்கள்.

  கருப்பன்

  ஏழுமலையானை கைது செய்வதைக்கோரினால் கடவுளை நம்புவதாக பொருள் இல்லை. இதற்கு பதில் சொல்ல வேண்டியது அந்த கடவுளை நம்புகிறவர்கள். நாத்திக பிரச்சாரத்தை நாம் பல கோணங்களில் வாழக்கையிலிருந்து செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு தற்கொலையிலிருந்து இந்த பிரச்சினையை வாசகருக்கு உணர்த்துவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

  கோவிந்தா,

  திருப்பதி வருமானத்தில் செய்யப்படும் சேவைக்காரியங்கள் எல்லாம் சிறு துளிகள்தான். வெள்ளமென செலவிடப்படும் பணம் உண்மையில் திருப்பதி எனும் கோவிலின் அன்றாட நடவடிக்கைகளுக்காக, வெங்கடாசலபதியின் மகத்துவத்தை பரப்புவதற்காகத்தான் அதிகம் செல்கிறது.

   • ///////மெக்கா என எல்லா உண்டியல்களிலும் பில்லியன் கணக்கில் பணம் விழுகிறது//////  —–?????!!!!இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற காமடி !!!!!!???? —— வினவின் இஸ்லாமிய  உலக அறிவை பறை சாற்றும் வாக்கியம். இஸ்லாம் பற்றிய தங்கள் அறிவிற்கு – ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு…!

    முஹம்மது என்ற முஸ்லிம் பெயருக்கு பதிலளிக்காததால்தான் சுய கவுரவத்திற்காக வேறு பெயர்களின்  தேவை ஏற்பட்டது. இன்று கூட மற்றவர்களின் வேண்டுகோளிற்கு இணங்கித்தான் பதில் சொன்னீர்கள் என்று கூற விரும்பவில்லை.  

    மீண்டும் மீண்டும் தவறான பார்வையிலேயே செல்கிறீர்கள் வினவு. இதுவரை எந்த நாத்திகனும் தற்கொலை செய்து கொண்டது கிடையாதா?
    இதுவரை எந்த கம்யூனிச வாதியும் தற்கொலை செய்து கொண்டது கிடையாதா?
    தற்கொலை செய்து கொள்ளச்சொல்லி ஏழுமலையான் கோவிலில் எழுதிப்போட்டு உள்ளார்களா?
    இதுவரை எத்தனை ஆயிரம் பக்தர்கள் அப்படி தற்கொலை செய்து கொண்டார்கள்?

    மூட நம்பிக்கையால் உந்தப்பட்டு உண்டியலில் அவ்வளவு பணம் கொட்டுகிறார்களே என்ற ஆங்கார வயிற்றெரிச்சல்  மட்டுமே பதிவு பூராவுமே தென்படுகிறது.

    இதுபோல நூறு செய்திகள் – கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மோசடி, கள்ளக்காதல், விபச்சாரம், லஞ்சம்-  தினம் தினம் இதுபோன்ற செய்தி வியாபார நாளிதழ்களில் வரும். அவற்றில் ஈடுபட்டவர்கள் எல்லாம் இறைவனுக்காகத்தான் செய்தேன் என்றால்   எல்லாவற்றுக்கும் அவரவர் மதம்தான் காரணம் என்று தினம் தினம் நூறு பதிவு போடுவீர்களா?  

    தலைமை காஜி “இப்படித்தான் எங்கள் இஸ்லாமிய மதத்தில்- குரானில்/ஹதீஸில்-சொல்லி இருக்கு” என்று சொல்லவில்லையே? இனியும் நீங்கள் எழுதியவற்றை ‘சரி’ என்று போலியாக வக்காலத்து வாங்கிக்கொண்டு இருக்காமல் உங்கள் பாதையை மீண்டும், நல்லோர் அனைவரும் விரும்பும் பதிவுகள் பக்கம் திருப்பி நாட்டுக்கு ஆக்கப்பூர்வமாய் எழுதுங்கள். படிக்க ஆவலாய் உள்ளோம்.

    (பல தளங்களில் வெறும் “ஹி ஹி” என்று பின்னூட்டம் இட்டாலே பல வரிகளில் வருகைக்கு நன்றி அறிவிக்கிறார்கள். உங்களிடம் நியாயமான கேள்விக்கே  பதில் பெற இத்தனை போராட்டமா?)  

    • நெத்தியடி முகமது,

     முதலில் பல பெயர்களில் வருவதை நிறுத்துங்கள், இங்கு கூட ஆப்ரோ என்ற பெயரில் தனி ஆவர்த்தனம் எதற்கு?
     நாத்திகர்களும், கம்யூனிஸ்டுகளும் தற்கொலை செய்து கொண்டால் அது அவர்களது சொந்த அல்லது சமூகப் பிரச்சினை. அதை அவ்வாறே சீர்தூக்கி பார்ப்பது பிரச்சினையில்லை. ஆனால் தன் உயிரை கடவுளக்காக காணிக்கையாக தந்திருக்கும் பக்தனின் தற்கொலையை மத நம்பிக்கையின் அடிப்படையில்தான் பரிசீலிக்க முடியும். உலகில் நடக்கும் குற்றச்செயல்கள் ஏன் நாட்பட அதிகரித்து வருகின்றது, இதை பார்த்துக்கொண்டு கடவுள் இரசித்தவாறு அமைதி காப்பது ஏன் என்ற கேள்விக்கு எல்லா இறைபற்றாளர்களும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

     • “வினவு ஏன் என் கேள்விகளுக்கு இத்தனை காலம்  பதில் சொல்ல வில்லை என்று நொந்துபோய் அதனால்தான் இந்த தற்கொலை” என்று எழுதி வைத்து விட்டு நான் முந்தாநாள் தற்கொலை செய்து கொண்டிருந்திருந்தால் அதற்கு நீங்கள்  பொறுப்பேற்று இருப்பீர்களா? உங்களை கைது செய்ய (அப்படி ஒரு கூமுட்டை போலிசும் சட்டமும் இருப்பதாய் வைத்துக்கொள்வோம்) அனுமதித்து இருப்பீர்களா?

     • //இதை பார்த்துக்கொண்டு கடவுள் இரசித்தவாறு அமைதி காப்பது ஏன் என்ற கேள்விக்கு எல்லா இறைபற்றாளர்களும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்//

      Really Good Question. Everyone has an end date No one can stay here permanent. It happens as per their fate. God never asked him to do so. It is his misunderstanding (May be) . I agree we should not encourage this kind of attitude in any form. Suicide’s in the name of God or Leader’s or inability etc… Please let us know how we can stop this?

 15. yes ஒரு தற்கொலையிலிருந்து இந்த பிரச்சினையை வாசகருக்கு உணர்த்துவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.
  as rathi said மது, சிகரெட், கடவுள் இந்த மூன்று வழிகளிலும் அரசுக்கு வருமானம் வரும் என்றால் அரசு அம்பானியை அல்ல வெங்கடாசலபதியை கூட ஒன்றும் செய்ய முடியாது, செய்யவும் விரும்பாது.

 16. Sariyana loosa nee…enna katturai ithu..stupidity to the core…indha latturai pathi vimarsanam eluthurathe wastennu ninaikkuran..irundhalum..indha mathir panningalukku uraikattumnu than eluthuran..

  Poi velaiaya parungada…

 17. கடவுள் நம்பிக்கை என்பது மனிதனை உள்ளீடற்ற ஒன்றாக மாற்றும் ஒருவகை புற்று. உண்டியல் என்றில்லை மதத்திற்காக மனிதன் செலவு செய்தபணத்தை கணக்கிட்டால் உழைப்பில் பாதியை விழுங்கியிருப்பது தெரியவரும். முதலாளிகளைப்போலவே கடவுளும் உழைப்பை சுரண்டுபவர்தான், கிடைப்பது என்ன? செத்தபிறகு எமலோக பதவியும் பரலோக பிதாவின் அன்பும் பலாறும் தேனாறும் ஓடும் சொர்க்க வாழ்வும் என்று வெறும் வாக்குறுதிகள். வேறென்ன பலன் மதங்களினால்?

  தோழமையுடன்

  செங்கொடி

 18. விவாதம் செய்து முடிவெடுப்பது ஒரு வகை , ஒரு முடிவை எடுத்து விட்டு அதற்க்காக விவாதம் செய்வது இன்னொரு வகை.
  இந்த பதிவில் பெரும்பாலான இடுகைகள் தங்களின் முடிவிற்காக விவாதிப்பது போல் தோன்றுகிறது. பலனாக என்னால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.

 19. எங்கள் பூர்வீக வீடு, அது கடைத்தெரு மற்றும் பேருந்து நிறுத்த பரபரப்பான சூழலில் இருந்ததால், வீட்டை  காலி செய்துவிட்டு  ஊருக்குள்ளே அமைதியான சூழலில் என் தந்தை வேறு ஒரு வீடு கட்டி குடியேறிவிட்டோம். அந்த பேருந்து நிலையம் அருகில் சந்தையில் இருந்த அந்த வீட்டை ஐந்து சிறு பகுதிகளாய் பிரித்து  தடுப்பெழுப்பி   என் தந்தை தன் பால்ய கால சினேகிதர்களுக்கு கடைகள் நடத்திக்கொள்ள வாடகைக்கு தந்து விட்டார். இதில் இருவர் முஸ்லிம், ஒரு கிருத்துவர் ஒருவர் ஹிந்து மற்றொருவர் கம்யூனிஸ்ட். நான் ஊர் சென்றிருக்கும் சமயம் வாடகை வசூல் செய்ய அந்த – எங்கள் ‘காம்ப்ளக்ஸ்’-க்கு செல்வது உண்டு. மற்ற நால்வரும் தந்து விடுவார்கள். அந்த கம்யூனிஸ்டை  தவிர.(அவர் கம்யூனிஸ்ட் என்று எப்படி தெரியும் என்றால், அவர் கடையில் காரல் மார்க்ஸ் பெரிய அளவு பிரேம் போடப்பட்ட படத்தில்  சுவரில் மாட்டப்பட்டிருப்பார். நெறைய கம்யூனிச சித்தாந்த சஞ்சிகைகள் அங்கு படிக்க கிடைக்கும். ஊரில் உள்ள கம்யூனிசவாதிகளை எல்லாம் அங்கே காணலாம்.நேரம் கிடைக்கும்போதெல்லாம் கூப்பிட்டு உட்காரவைத்து கம்யூனிச – காரல் மார்க்ஸ் கொள்கைகளை பிரச்சாரம் செய்வார். தனது கடை ஊழியர்களுக்கு(இரண்டு பேர்தான் !) போனஸ் எல்லாம் தரும் தன் பொறுப்புணர்வு –  நாணயத்துக்கு கம்யூனிசம்தான் காரணம் என்பார்).   எந்த ஒரு தடவையும் அவர் என்னிடம் வாடகை தந்ததே இல்லை என்பதால் என் தந்தையிடம் அவரை பற்றி கேட்டபோது: ஒவ்வொரு மாதமும் பத்து பத்து நாட்கள் தள்ளி தள்ளி வாடகை கொடுத்து வந்துள்ளார். எப்படிஎன்றால், கடந்த வருடம், ஒன்பது மாதங்களுக்கு மட்டும் தந்துவிட்டு அந்த வருடம் முழுக்க தான் கொடுத்து விட்டேன் என்கிறாராம். அவருடைய ஒரு  மாதம் என்பது நாற்பது நாட்கள்! நான் கேட்டால் ஒவ்வொரு மாதமும் தந்திருப்பதாகவும் பனிரண்டு மாதங்களுக்கும் பாக்கி இல்லாமல் வாடகை தந்து விட்டதாகவும் கூறுகிறார். நான் ஒன்றும் கறாராகவெல்லாம் கேட்க முடியாது. அப்பாவின் நண்பராயிற்றே! என் தந்தையும் இவர் இப்படி கூறுவது கேட்டு நொந்து போயுள்ளார். அவர் கடையை காலி செய்யயுமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறோம்.

  இப்போது, நம் பிரச்சனைக்கு வருவோம்.  மற்ற அணைத்து மத நம்பிக்கையாளர்களும் சரியான வாடகை தந்து விட்டதால் மதங்ககள் சரியானவை என்றாகி விடுமா? இவர் மட்டும் இப்படி ஏமாற்றுவதால் கம்யூனிசமும் காரல் மார்க்சும் குற்றவாளியாகி கைது செய்யப்படுவார்களா? நான் சொல்வது உங்களுக்கு நகைப்புக்கு உரியதாக தென்பட்டால், வினவு,  மஸ்தானுக்கு இட்ட மறுமொழியை ஒருமுறை வாசித்துக்கொள்ளவும். 

  //// மஸ்தான்,மனிதனின் தவறுக்கு மனிதன்தான் பொறுப்பு மதம் பொறுப்பல்ல என்றால் அந்த மதம் எதற்கு? எது நமக்கு பொறுப்புணர்வைக் கற்றுத்தருகிறதோ அதை கடைபிடிக்கலாமே? இல்லை பொறுப்புணர்வை மதம்தான் கற்றுத் தருகிறது என்றால் தவறுகளுக்கும் மதத்தைத்தானே கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது?/////

  • நெத்தியடி முகமது,

   நீங்கள் கட்டியமைத்த கதையைப் படிக்கும் போது ஒரு மனிதனை நான்கு கடைகளுக்கு சொந்தக்காராகவும், நான்குபேரை அவரிடம் வாடகைக்கும் இருக்கும் சொத்தில்லாதவர்களாகவும் கடவுள் ஏன் படைத்தான் என்ற கேள்விதான் முதலில் வருகிறது. அதனால்தான் சமத்துவத்தை நிலைநாட்ட கடவுள் அந்த ‘கம்யூனிஸ்டுக்காரரை’ அப்படி நடக்க சொல்லி வழிநடத்துகிறாரா என்பதும் தெரியவில்லை.

   மற்றபடி அவர் போலிக் கம்யூனிஸ்டே ஆனாலும் ஒரு கம்யூனிஸ்டு தவறு செய்கிறார் என்று யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம். நேர்மையான கம்யூனிஸ்டுகளும் தங்களது தவறுகளை சுயவிமரிசனம் செய்து கொள்வது உலகெங்கும் உள்ள மரபுதான். இறைப்பற்றாளர்கள் போல சப்பைக்க்ட்டு கட்டமாட்டார்கள்.

   • நன்றி  வினவு !  அருமையான சமாளிப்பு !  ஆனால் என்ன செய்ய? கடும் சிந்தனை வறட்சி. சரி போகட்டும். விஷயத்துக்கு வருவோம்.

     ////// ஒரு மனிதனை நான்கு கடைகளுக்கு சொந்தக்காராகவும், நான்குபேரை அவரிடம் வாடகைக்கும் இருக்கும் சொத்தில்லாதவர்களாகவும் கடவுள் ஏன் படைத்தான் என்ற கேள்விதான் முதலில் வருகிறது///////. —- வினவு !

    நாளை முதல் உலக மக்கள் அனைவருக்கும் அவரவர் கையில் மில்லியன் அமெரிக்கன் டாலர் இருப்பதாய் உங்கள் சோஷலிச  ஆசைப்படியே வைத்துக்கொள்வோம். ஒருத்தனும் பணக்காரன் இல்லை ; ஒருத்தனும் ஏழை இல்லை!  மற்றபடி அதே உலகம். ஆச்சா. அடுத்த நொடியில் இருந்து உலகின் இயக்கத்தை அதன் போக்கில் அனைத்து மனித அத்தியாவசிய தேவைகளுடன் மற்றும் உலகாதாய தேவைகளுடனும் இயற்கையான முறையில் கற்பனை செய்து  பாருங்களேன். நியாபகம் இருக்கட்டும், உலகின் ஒவ்வொரு மனிதனும் – உலகின் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் – மில்லியனர். சரியா? காலை தூங்கி எழுந்தவுடன் இருந்து இரவு தூங்கப்போகும்வரை உங்கள் சமத்துவ – சோஷலிச உலகை கற்பனயில் ஒருமுறை எப்படி இயங்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். அந்த இயக்கம் எப்படி இருக்கும் – எல்லாருக்கும் திருப்தியாக இருக்குமா அவ்வளவு என்? முதலில் இயங்குமா அல்லது ஸ்தம்பித்து முடங்க்குமா  என்பதனை நடுநிலையுடன் சிந்தித்து  சொல்லவும். அப்படி சிந்தித்தீர்களாயின் உங்கள் கேள்விக்கு உங்கள் சிந்தையில் பதில் உள்ளதே வினவு. 

    உங்கள் மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது வினவு. மக்காவில் உண்டியல் உள்ளது என்றெல்லாம் புளுக வேண்டாம். 

    ///// அதனால்தான் சமத்துவத்தை நிலைநாட்ட கடவுள் அந்த ‘கம்யூனிஸ்டுக்காரரை’ அப்படி நடக்க சொல்லி வழிநடத்துகிறாரா என்பதும் தெரியவில்லை //////  —–  கடவுளை   ஒத்துககொன்டீர்களா ?     

   • ///// அதனால்தான் சமத்துவத்தை நிலைநாட்ட கடவுள் அந்த ‘கம்யூனிஸ்டுக்காரரை’ அப்படி நடக்க சொல்லி வழிநடத்துகிறாரா என்பதும் தெரியவில்லை ////// 
    Muhammad!! He is in dilemma seems…. Your explanation regarding equality good.
    One question related to this equality. Is it really possible to follow equality in reality. 8 hrs duty for everyone in this world and equally paid?? will it works?

   • Thanks karuthu kandasamy..!
    ////// Is it really possible to follow equality in reality. 8 hrs duty for everyone in this world and equally paid?? will it works?////// — > It is never possible. Please, also read my reply to thozhar Nagarajan. 
    cheeres!!! have a happy day!!!!

   • ஒரு ஃபிளாஷ் நியூஸ் வினவு!
     
    வாடகை வாங்க்குகிரவரை விட வாடகை கொடுப்பவர்களே ஏழ்மையாநவர்களாக   இருக்க முடியும் என்று எப்படி முடிவு செய்து   கொண்டீர்கள் வினவு?  

    அந்த ஐவரில் யாருமே என் தந்தையை விட வசதி குறைந்தவர்கள் அல்ல. (பல வருஷம் அரசுக்காக உழைத்து ஓடாய் தேய்ந்து  கிடைத்த பி எப் , கிராஜுவிட்டி, சேமிப்பு   பணத்தை போட்டு வீடு கட்டினார் என்தந்தை). சந்தை மற்றும் பேருந்து நிலையம் அருகில் இடம் கிடைத்த ஒரே காரணத்தால் தான் தங்கள் கடையை மற்ற இடங்களில் இருந்து மாற்றிக்கொண்டு இங்கே வந்தார்கள்.

    இவர்களில் யார் மதி நுட்பத்துடன் வியாபாரம் செய்து பெரும்  பணக்காரர் ஆவாரோ, அவர், தன்னிடம் வந்து அதிக விலைக்கு வீட்டை கேட்பார் என்று என் தந்தை நினைத்திருந்தார்.  அந்த ஐவரில் ஒருவர் அவர்தம் வியாபார விருத்திக்காக அடியாள் பலம்  காட்டி தங்களிடம் இடத்தை கட்டாயமாக விற்க வேண்டும் என தற்போது தன அரசியல் அடியாட்களுடன் வந்து ஊரில் எங்கள் வீட்டு வாசலில் நிற்கிறாராம். (இதுதான் அந்த ஃபிளாஷ்  நியூஸ்) அவர் யாராய் இருக்கும் என யூகிக்க முடிகிறதா?

    நீங்கள் என்னடாவென்றால் நேர்மையாக வாடகை கொடுக்காமல் அநியாயமாய்  ஏமாற்றியவருக்கு அவர் ‘உங்கள் ஆள்’ என்பதால் கடவுளை எல்லாம் உங்களுடன்  துணைக்கு சேர்த்து (??) சப்பைக்கட்டு கட்டுகிறீர்களே…………….  

    /////  இறைப்பற்றாளர்கள் போல சப்பைக்க்ட்டு கட்டமாட்டார்கள்  //// 

    —- என்று சொல்லிவிட்டு…!? வினவு,,,இது தகுமா? 

    இனவெறி, ஜாதிவெறி, மதவெறி, மொழிவெறி, நாட்டுவெறி, மாநிலவெறி …..என்றவரிசையில் இப்போது கொள்கைவெறியும் புகுந்து விட்டதோ? (பற்றுக்கும் வெறிக்கும் இஸ்லாம் சொல்லும் வித்தியாசம்: தன்னுடைய ஆள் தவறே செய்தாலும் தெரிந்தே சப்பைக்கட்டு கட்டுவது) 

 20. ஏழுமலையானுக்கு ரூ.3.7 கோடியில் தங்கப் பீதாம்பரம்

  திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு ரூ.3.7 கோடி மதிப்புள்ள தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பீதாம்பரத்தை அளித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. மேகபதி ராஜமோகன் ரெட்டி. ஆந்திர மாநிலம் நெல்லூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராஜமோகன் பெட்டி, 21 கிலோ எடையுள்ள இந்த பீதாம்பரத்தை சுவாமிக்கு அணிவிக்க வேண்டி தங்களிடம் ஒப்படைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

  முன்னதாக கடந்த ஜூன் மாதம் கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர் ஜனார்தன் ரெட்டி ரூ. 45 கோடி மதிப்புள்ள வைரம் பதிக்கப்பட்ட தங்க கீரிடத்தை பெருமாளுக்கு அணிவிக்க வேண்டி வழங்கினார்.
  -தினமணி, 16.10.2009

  ஆந்திராவும், கர்நாடகமும் வெள்ளத்தில் தத்தளிக்கும் இந்நேரத்தில் இரண்டு கருப்புப்பண ரெட்டி முதலைகள் ஏழுமலையானுக்கு கோடிகளில் குளிப்பாட்டும் இந்த செயலை விட ஆபாசமானது வேறு ஏதும் உண்டா?

 21. Good one!!!
  This shows how much you are uneasy with the Donation given to the temple. Will you please let us know what are the social activities done by people like you? Apart  from drinking and abusing the people’s sentiments. Also you have good humor sense, to get arrest warrant. If this is case so many suicide’s in the name political leaders, So can you get arrest warrant for the leader’s? Be smart but don’t think / say other’s are fools. Do good things we will support n follow you if we feel it is good. But you people forcing others to follow you Since you think you are smart than others! Possible do good things and gain people’s mind to follow you. It is very easy to hurt you n your policies but we never force /hurt others. All the best – I hope your thoughts will do good things to the society.

  Cheers!!! – Happy Diwali!!!

 22. I like to add one more recent incident. A guy suicided since he is unbearable about the living conditions at Srilanka. Is it right? can we encourage this? or can we arrest Rajapaskya who is induced to do so??? It is easy for me to question (Vinavu) 

  Cheers….

 23. .மனிதன் துன்புறுவதை கடவுள் ரசிக்கின்றானா? முதன்முறையாக கடவுள், எனது பிரதிநிதியாக மனிதனை பூமியில் படைக்கப் போகின்றேன் எனக் கூறியவுடன்,அவருடன் இருந்த வானவர்கள் பூமியில் குழப்பம் செய்து இரத்தங்கள் ஓடச் செய்பவர்களையா நீ உண்டாக்கப் போகிறாய்? எனக் கேட்டனராம். அதற்கு இறைவன் “நான் நீங்கள் அறியாதவற்றை அறிந்திருக்கிறேன்” என்றாராம். பின்னர் ஆதமை படைத்து அவருக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களை நோக்கி இறைவன் கட்டளையிட்டானாம். ஷைத்தானைத் தவிர மற்ற வானவர்கள் சிரம் பணிந்தார்களாம். பின்பு கடவுளுடனான வாக்குவாதத்தில் பூமியில் நல்லடியார்களைத்தவிர(தூதர்கள்)மற்ற‌வர்களை வழிகெடுப்பேன் என ஷைத்தான் கூற இதனை ஆமோதித்து கடவுளும் கையெழுத்து இட்டுள்ளார். பின்பு ஷைத்தானால் வழிகெடுட்க்கப்பட்ட நல்லடியார்! ஆதமை சுவனத்திலிருந்து பூமிக்கு இறங்கச் சொன்ன‌ கடவுள் ஆதமிடம் “நீங்கள் இங்கிருந்து இறங்குங்கள். (பூமியில்) உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள் என்கிறார். ஆதமும் கடவுளிடமிருந்து சிலவற்ரைக் கற்றுக்கொன்டு இறங்கிவிடுகிறார். அப்படியென்றால் மனிதனை கடவுள் படைப்பதற்கு முன்பே பூமியில் மனிதன் இப்படித்தான் இருப்பான் என திட்டமிடப்பட்டுள்ளது அல்லது சதி செய்யப்பட்டுள்ளது. கடவுளிடமே சவால் விடும் ஷைத்தான் சுயமாக சிந்திக்கும் அறிவுள்ள‌வனா? கடவுளைப் போன்ற பேராற்றல் உடையவனா? மனிதனை படைக்கும்போதே அவன் விதியை எழுதிடும் இறைவன் ஷைத்தான்தான் மனிதனை வழிகெடுக்கிறான் என்று நாடகமாடுகிறாரா.  இதன் மூலம் மனிதன் துன்புறுவது தவிர்க்க முடியாதது என்றாகிறது. படங்களில் கதாநாயகனை துன்புறுத்தி மகிழும் வில்லனைப் போல! நாம் துன்புறுவதை பார்த்து கடவுள் ரசிக்கிறாரா! கடவுள் வில்லனா? சிந்திக்கும் மதவாதிகளே பதில் கூறுங்கள்.  இந்து மதத்தில் அதன் ஆன்மீக சாரங்களை யாரும் வாழ்க்கை நெறியாக்கிக்கொள்வதில்லை. கிருஸ்துவர்களில் கூட மதத்தையும் சமூகத்தையும் பிரித்துப்பார்க்கும் போக்கு இருக்கிறது, ஆனால் இஸ்லாத்திலோ அதை பின்பற்றுபவர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. இவர்களிடம் தங்களது மதம் சரியானது என்பதும் அது எக்காலத்திலும் நடைமுறைக்கு ஏற்றது என்ற எண்ணமும் அதிகம்.

 24. தோழர் நாகராசன்..! எங்கிருந்தாலும் உடன் மேடைக்கு வரவும். 

  ஏழை-பணக்காரன், வலிந்தவன்-மெலிந்தவன், படித்தவன்-படிக்காதவன், கொடுப்பவன்-வாங்குபவன், அறிவாளி-முட்டாள், ஆத்திகன்-நாத்திகன், அரசு-பொதுமக்கள், உழைப்பாளி-சோம்பேறி, முதலாளி-தொழிலாளி, தயாரிப்பவன்-பயனாளி, வீரன்-கோழை, வள்ளல்-கஞ்சன், தர்மகர்த்தா-பிச்சைக்காரன்,  நல்லவன்-கெட்டவன், அன்பானவன்-அன்பில்லாதவன், பண்பானவன்-பண்பில்லாதவன், ஆள்பவன்-ஆளப்படுபவன், ஆசிரியர்-மாணவன், விற்பவன்-வாங்குபவன்,  ஆண்-பெண்,  வி ன வு === நா ம்….!   இப்படி எல்லாமும் அதனதன் சரிவிகிதத்தில் இருந்தால்தான் அது உலகம்! அப்படி இருப்பதால்தான் இது இயங்குகிறது!!

  உலகின் எல்லா செருப்பு தயாரிக்கும் நிறுவனமும் “சமத்துவம் பேணுகிறேன் பேர்வழி”  என்று வலது அல்லது இடது  கால் செருப்பு என்று ஏதாவது ஒரு ஒற்றைக்கால் செருப்பு மட்டும் செய்வதாய் வைத்துக்கொள்வோம். என்னவாகும்?

  இந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் நம் உலகம் சீராக இயங்க வேண்டும் என்பதற்காகவே இறைவனின் அல்லது உங்கள் பாஷையில் இயற்கையின்  ஏற்பாடு !  சிந்தனை வறட்சி வேண்டாம், தோழர்.

  மற்றபடி, பசியால் வாடுவோர்க்கு உணவளிப்பது நல்லோர் பண்பாடு. நாமும் செய்து பிறரையும் செய்ய இன்னும் ஊக்கப்படுத்துவோம் அந்த பண்பை. 

  •  “நல்லவன்-கெட்டவன், அன்பானவன்-அன்பில்லாதவன், பண்பானவன்-பண்பில்லாதவன்,  ஆத்திகன்-நாத்திகன்,  இப்படி எல்லாமும் அதனதன் சரிவிகிதத்தில் இருந்தால்தான் அது உலகம்! அப்படி இருப்பதால்தான் இது இயங்குகிறது!”அப்படியென்றால் கெட்டவன், பண்பில்லாதவன்,நாத்திகன் போன்றோர்க்கு தண்டனை ஏன்”

   • இவ்வருடம் பனிரண்டாம் வகுப்பு  தமிழக அரசு பொதுத்தேர்வில் தேர்வெழுதிய அனைவரின் மதிப்பெண்ணும்  இறைவனின் மகத்தான அருளால் 1200 / 1200 என்றால்,  அனைவருக்கும் அதிக பணம் சம்பாதிக்க உபயோகப்படும் மருத்துவ படிப்பை படிக்கவே ஆசை. எத்தனை மெடிக்கல் காலேஜ் புதிதாய் திறப்பீர்கள்? இந்த ரிசல்ட்  இறைவனின் அருள் என்பீர்களா? அல்லது 5% – 1200/1200  மீதம்  தோல்வி அடைந்தவர்கள் என்று ரிசல்ட் வருவது இறைவனின் அருளா? மீதம்  குறைந்த மதிப்பெண் பெற்று பொறியியல், அறிவியல், கலை கல்லூரிகளில் சேர்கின்றனர். அதுகூட சேர முடியாத குறைந்த மதிப்பெண் பெற்றவர்களாலேயேஅதிக மதிப்பெண் பெற்றவரின் வண்டி ஓடுகிறது. இவர்கள் இல்லையேல் அவர்கள் இல்லை. அதேநேரம் அனைவரும் படிக்காமல் சைபர் மார்க் வாங்கினாலும் உலகம் எந்த முன்னேற்றமும் இன்றி சமுதாயம் முடங்கிவிடாதா? இதுதான் தத்துவம். இந்த இடத்தில், எல்லாரும் அதிக மதிப்பெண் எடுத்தால் அதோகதி என்று தெரிந்து கொண்டே அதிக மதிப்பெண் எடுக்க பாடுபட வேண்டும். இது ஒரு   மாதிரி balanced  see – saa.. எந்த ஒரு பக்கமும் எடை கூடி விடக்கூடாது. கூடினால் உலகம் இயங்காது கவிழ்ந்துவிடும். இதில் அனைவரும் நல்லோர்-சிறந்தோர்  பக்கம் போவது என்பதில் போட்டி போடா வேண்டும். போட்டியில் தோற்பவர்கள் இல்லையேல் போட்டியே பொய்யாகிவிடும். ஆனாலும், வெல்ல வேண்டும் என்பது ஆசிரியரின் கட்டளை. அந்த கட்டளைக்கு மாறு செய்வதினால்தான் டாக்டர் வீட்டுக்கு காலை பேப்பர் விழுகிறது, பால் பாக்கெட் வருகிறது, வேலைக்காரி காய்கறி வாங்கி வருகிறாள், டிரைவர் காரை துடைத்து வைக்கிறான், சமையல் காரன் காலை உணவு செய்து தருகிறான், இத்யாதி இத்யாதி எல்லாமும். நான் வினவிடம் வினவின மாதிரி அனைவரும் மில்லியனர் என்றால் அவர்கள் யாரும் தங்கள் வேலையை செய்ய மாட்டார்கள்.  எதுவும் நடக்காது. உலகம் இயங்காமல் ஸ்தம்பித்து முடங்கிப்போகும். இப்படி ஆகக்கூடாது என்றுதான்  அனைவரும்  மதிப்பெண் வாங்க முடியாதவாறு சிலபஸ், வினாத்தாள், எல்லாம் கல்வி இயக்குனரகத்தால் கடினமாக்கப்படிகிறது. இதை குறைவாக முயற்சி எடுப்பவர்கள் எதிப்பார்கள், கேள்வி கேட்பார்கள். அதன் தத்துவத்தை புரிந்தவர்கள் வென்றோர் கூட்டத்தில் சேர அதிக முயற்சி எடுப்பார்கள்.

   • சரியாய் சொன்னீங்க நெத்தியடி…உங்க வாதத்த அப்படியே வளர்த்து கொண்டு போய் எப்படி எப்படியெல்லாம் பண்ணுலாமுன்னு பாருங்க. இந்தியாவுல முசுலீம் தொந்தரவு தாங்கல, அவன் அவன் மூனு பொண்டாட்டி கட்டி 30 புள்ள பெத்துகறாங்க இறைவன் அருளாள இத இப்படியோ விட்டோமுன்ன இந்தியா இந்தோனேசியாவா ஆயிடாதா?. இந்து சமுதாயமே முடங்கிடாதா? அதான் அப்பப்ப மதக்கலவரம் நடத்தி முசுலீமா பாத்து கொன்னு ஒழிக்கறோம். முசுலீம் பெண்களை கற்பழிச்சு அவங்க உதரத்துல இந்து விந்த விதைக்கறோம். இது ஒரு மாதிரி balance, see-saw எந்த ஒரு பக்கமும் எடை கூடி விடக்கூடாது. கூடினால் உலகம் இயங்காது கவிழ்ந்துவிடும். இந்தியா இந்து நாடு, முசுலீம் சிறுபான்மையினர் பெரும்பான்மைக்கு கட்டுப்பட்டு அடிமையா இருக்கணும் இத்யாதி இத்யாதி எல்லாம்…நீங்க வினவு கிட்ட வினவுன மாதிரி எல்லோருமே பெரும்பான்மையானா அப்புறம் ஒன்னும் உருப்புடாது. எவனுக்கும் மரியாத இருக்காது. உலகம் இயங்காமல் ஸ்தம்பித்து முடங்கிப்போகும். இப்படி ஆகக்கூடாது என்றுதான் அப்பப்ப இறைவன் அருளாள மதக்கலவரம் நடக்கிறது. இதை புரியாதவர்கள் எதிப்பார்கள், கேள்வி கேட்பார்கள். அதன் தத்துவத்தை புரிந்தவர்கள் புத்திசாலிகள்

   • நன்றி. பட்டாகத்தி பாலா. கெட்டவர்கள் உலகில் குறையும் போதெல்லாம் உங்களைப்போன்றவர்கள் பட்டாகத்தியுடன் வந்து மிகுந்து கொண்டு போகும் நல்லவர்களை கொள்வதன் மூலம் “நல்லவன்-கெட்டவன்” , “குழப்பம்-அமைதி” போன்ற இயற்கை சமநிலையை பேணுகிறீர்கள். இதுவும் இறைவன் ஏற்பாடு. நான் முன்னரே சொல்லியபடி  நல்லதோ  அல்லது கெட்டதோ செயலுக்குத்தான் அதற்குரிய கூலி.  இங்கு கொல்லப்பட்டவர்கள் பாவிகள் இல்லை. கொன்றவர்களுக்கு ஆனால்  என்ன தண்டனை?  

   • டேய் பாலா, பாய்தான் லூசு மாதிரி உளரிக்கொடுறாருன்னா நீ சந்துல சிந்து பாட வந்திட்டியா? ஓடிப்போ நாயே…

  • நெத்தியடி முகம்ம்மது போன்றவர்களேஎல்லோரும் பணக்கரார்களாகி விட்டால் பிறகு எப்படி பெயிண்ட் அடிக்க ஆள் கிடைக்கும் என்று ஜெயினாலுபுதீன் உளறுவது போல் உளராதீர்கள். முரன்பாடு பற்றி அப்துற்ரகுமான் எழுதியுள்ள முரண்பாடு பற்றிய கட்டுரையையும் அதன் உளரலையும் எனது “அடிமை அது அல்லாவின் ஆணை” (இரண்டாம் பதிப்பு) என்ற நுலில் விளக்கமாக எழுதுயுள்ளேன். அதனை படியுங்கள்.  

   • நன்றி. சாகித்.
    ////சேரும் அவ்வளவு பணங்களுக்கும் செல்வத்துக்கும் முறையான கணக்கு இருக்கிறதா, இருந்தால் யாரிடம் எந்த அக்கௌண்டில் எந்த வங்கியில் இருக்கிறது, அவை அனைத்தும் யார் யாருக்கெல்லாம் செல்கிறது, எங்கு-எப்படி-யாரால் செலவிடப்படுகிறது///
    சமூகம் என்ற தலைப்பில் எங்கோ ஒரு மூலையில் உள்ள மதம் என்ற உள் தலைப்பில் மட்டும் பக்கத்துக்கு பத்து பதிவுகளாக நான்கு பக்கங்களுக்கு வத வத வென்று எண்ண்ண்ண்ண்ண்ண்ணற்ற – தளத்திலேய அதிக அளவிலான-பதிவுகள்..!
    “இப்படியொரு இந்தியா இருப்பது…” போன்ற எத்தனை சமூக அக்கறை கொண்ட- அனைவருக்கும் பொதுவான- ஆக்கப்பூர்வமான- சிந்தனையை தூண்டக்கூடிய- அதிக மறுப்பும் எதிர்ப்பும் இல்லாத எத்தனை நேர்மையான பதிவுகள் வந்தன?////
    தலைமை காஜி “இப்படித்தான் எங்கள் இஸ்லாமிய மதத்தில்- குரானில்/ஹதீஸில்-சொல்லி இருக்கு” என்று சொல்லவில்லையே? ////
    ////மக்காவில் உண்டியல் உள்ளது என்றெல்லாம் புளுக வேண்டாம்.////
    ////வாடகை வாங்க்குகிரவரை விட வாடகை கொடுப்பவர்களே ஏழ்மையாநவர்களாக இருக்க முடியும் என்று எப்படி முடிவு செய்து கொண்டீர்கள் வினவு?//////
    //// நேர்மையாக வாடகை கொடுக்காமல் அநியாயமாய் ஏமாற்றியவருக்கு அவர் ‘உங்கள் ஆள்’ என்பதால் கடவுளை எல்லாம் உங்களுடன் துணைக்கு சேர்த்து (??) சப்பைக்கட்டு கட்டுகிறீர்களே……///////தேர்வெழுதிய அனைவரின் மதிப்பெண்ணும் 1200 / 1200 என்றால், …///// /////இப்படி ஆகக்கூடாது என்றுதான் அனைவரும் மதிப்பெண் வாங்க முடியாதவாறு சிலபஸ், வினாத்தாள், எல்லாம் கல்வி இயக்குனரகத்தால் அவ்வப்போது கடினமாக்கப்படிகிறது. இதை குறைவாக முயற்சி எடுப்பவர்கள் எதிப்பார்கள், கேள்வி கேட்பார்கள். அதன் தத்துவத்தை புரிந்தவர்கள் வென்றோர் கூட்டத்தில் சேர அதிக முயற்சி எடுப்பார்கள்.///// ////நல்லதோ அல்லது கெட்டதோ செயலுக்குத்தான் அதற்குரிய கூலி.//////

    /////“வினவு ஏன் என் கேள்விகளுக்கு இத்தனை காலம் பதில் சொல்ல வில்லை என்று நொந்துபோய் அதனால்தான் இந்த தற்கொலை” என்று எழுதி வைத்து விட்டு நான் முந்தாநாள் தற்கொலை செய்து கொண்டிருந்திருந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பேற்று இருப்பீர்களா? உங்களை கைது செய்ய (அப்படி ஒரு கூமுட்டை போலிசும் சட்டமும் இருப்பதாய் வைத்துக்கொள்வோம்) அனுமதித்து இருப்பீர்களா?/////

    ===>>> இதற்கெல்லாம் பதில் இல்லை. இந்த கேள்விகள் எல்லாம் அர்த்தமற்றது என நம்புவோர் தெளிவாய் சான்றுகளுடன் மறுங்களேன்..!