Wednesday, November 29, 2023
முகப்புதீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!
Array

தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!

-

தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்

தீபாவளி தமிழன் பண்டிகை இல்லை என்று தமிழ் ஓவியா கிட்டத்தட்ட ரவுண்டு கட்டி அடித்தார். தமிழச்சி பெரியாரின் கட்டுரையை பிரசுரித்தார். மதிமாறனும் தனது பதிவில் ராவணண், நரகா அசுரனைக் கொன்ற இராமன் மற்றும் கண்ணனை பழிதீர்க்க உறுதி எடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். எனினும் பதிவுலகில் தீபாவளி குறித்த கொண்டாட்டத்தில் பெரிய மாற்றம் இல்லை. இரண்டுக்கும் நடுவில் ஊசாலடும் சில முற்போக்காளர்களின் நிலை? லக்கி லுக் சென்ற ஆண்டு ரோசா வசந்தால் எழுதப்பட்ட கட்டுரையை மீள்பதிவு செய்து இனி குழந்தைகளுக்காக தானும் தீபாவளியைக் கொண்டாடும் மனநிலைக்கு வந்து விட்டதாக சோகமான தொனியில் குறிப்பிடுகிறார். மாதவராஜூம் மகனுக்காக தீபாவளியைக் கொண்டாட வேண்டியிருக்கிறது என்கிறார். வாசகர்கள் இந்தப் பதிவுகளை படித்து விட்டு இந்த பதிவை தொடருங்கள்.

குத்துமதிப்பாக சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட தீபாவளி பெரும்பான்மை தமிழ் மக்களின் பண்டிகையாக இல்லை. கிராமங்களும், விவசாயமும் கோலேச்சிய அந்தக் காலத்தில் இயல்பாக பொங்கல்தான் வாழ்க்கையுடன் இணைந்து கொண்டாடப்பட்டு வந்தது. அப்போதும் சரி அதற்கு முன்னரும் சரி தீபாவளி, நவராத்திரி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலான பண்டிகைகளை பார்ப்பன – ‘மேல்’சாதியினர்தான் கொண்டாடி வந்தனர். இன்றும் கூட தீபாவளியைக் கழித்து விட்டுப்பார்த்தால் மற்ற பண்டிகைகள் ‘மேல்’ சாதியினர் மட்டுமே கொண்டாடுகின்றனர்.

அகில இந்திய அளவிலும் நிலைமை அன்று இதுதான். இன்றும் கூட கேரளாவில் ஓணத்தையும், வங்கத்தில் துர்கா பூஜையையுமே பிரதானமாக கொண்டாடுகிறார்கள். இப்படி இந்தியா முழுவதும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் என்று சொல்ல இயலாது.

இந்தியாவில் இருந்த பூர்வ பழங்குடி மக்களை ஆரியர்கள் வென்று ஆக்கிரமித்த தொல்குடி கதைகளே புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் எழுதப்பட்டன. அவ்வகையில் பார்ப்பன இந்து மதப் பண்டிகைகள் அனைத்தும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரான செய்திகளையே கொண்டிருக்கின்றன. வருண, சாதி, பாலின ரீதியாக அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் எவரும் இந்து மதப்பண்டிகைகளை கொண்டாட முடியாது. மனித குலம் தான் கடந்து வந்த பாதையின் வெற்றிப்படிகளை நினைவுகூரும் வண்ணம் கொண்டாடப்பட வேண்டிய பண்டிகைகள் இங்கே இந்தியாவில் எதிர்மறையாகவே இருக்கின்றன.

இந்தக் கருத்தை ஒப்புக்கொண்டாலும் இன்று தீபாவளி என்பது மக்கள் பண்டிகையாக மாறிவிட்டது என்பதையும் ஒப்புக் கொள்ளவேண்டும். தீபாவளிக்கென்று தனி சந்தை உள்ளதைக் கண்டு கொண்ட முதலாளிகள் அதன் வீச்சை கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரிக்க வைத்திருக்கின்றனர். ஊடகங்கள் வாயிலாக தீபாவளியின் மகத்துவம் நுகர்வு கலாச்சாரச் சந்தையை குறி வைத்து உப்ப வைக்கப்பட்டது. சமீப ஆண்டுகளாக புத்தாண்டு மற்றும் காதலர் தினத்தையே இளைஞர்கள் மத்தியில் மாபெரும் கொண்டாட்டமாக மாற்றிய முதலாளிகள் தீபாவளியை மட்டும் விட்டு விடுவார்களா என்ன?

இனிப்பு, புத்தாடை, பட்டாசு என குழந்தைகள் உலகம் தீபாளியை மையமாக வைத்து சுழல்வதும் உண்மைதான். தீபாவளி அன்று உலகமே கொண்டாடுவதான பிரமையிலிருந்து தன் குழந்தைகளுக்கும் ஏதாவது செய்ய வேண்டுமென்பதை ஏழைகளே ஏற்றுக் கொள்ளும் வண்ணம் தீபாவளி உருவெடுத்து விட்டது.

எனினும் தீபாவளி நகரம் சார்ந்த நடுத்தர வர்க்கத்தின் பண்டிகையாகத்தான் இன்னமும் இருக்கிறது. தீபாவளியன்று வீட்டில் இட்லி, தோசை சுடுவதையே கொண்டாட்டமாக நினைக்கும் கிராமங்கள், நகரங்கள் போன்று தீபாவளியை கொண்டாட முடிவதில்லை. ஒருபுறம் நிலவுடைமையின் ஆதிக்க சிந்தனைகள், மறுபுறம் முதலாளித்துவத்தின் நுகர்வுக் கலாச்சார அடிமைத்தனம் இரண்டின் கூட்டு விளைவான தீபாவளியை முற்போக்கு சிந்தனையை ஏற்றுக் கொண்டோர் கொண்டாட வேண்டிய பண்டிகை அல்ல. எனினும் குழந்தைகளுக்காக அதை கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் என்ன, இல்லையென்றால் அறியாத குழந்தைகள் மீது நாம் வன்முறை ஏவ முடியுமா என்பதே அந்த முற்போக்காளர்களின் ஊசலாட்டம்.

சமூக மாற்றத்திற்கான மதிப்பீடுகள் சூழலின் விளைவாக பின்பற்றப்படும் ஒன்றல்ல, மாறாக சூழலின் மீது எதிர்வினையாற்றும் தன்மையுடையவை. உலகமே கொண்டாடுகிறது எனினும் அது தவறென்றால் தவறென்றே கூற வேண்டும். அதில் கொஞ்சம் விட்டுக்கொடுப்பது என்பது நாம் நமது போராட்டத்தை கொஞ்சம் விட்டுக்கொடுப்பதும் ஆகிவிடுகிறது.

வரதட்சணை வாங்குவது தவறு, எனக்கு அதில் ஒப்புதல் இல்லை, ஆனால் உலகமே வாங்குவதால், என் பெற்றோர் என்ன விரும்புகிறார்களோ அதுவே என் விருப்பம் என்பதால் நானும் வாங்குகிறேன் என்று ஒருவன் சொன்னால் உங்கள் பதில் என்ன? சமூகத்தில் நமது நட்பு வட்டாரத்தில் யாரெல்லாம் வரதட்சணை வாங்கவில்லை, அல்லது கொடுக்கவில்லை என்று பாருங்கள் இறுதியில் நீங்களாவது மிஞ்ச வேண்டுமென விரும்புகிறீர்களா இல்லையா? இதை உலக வழக்கு தீர்மானிக்கட்டும் என்று விட்டுக்கொடுத்தால் உங்களிடம் பின்னாட்களில் காரியவாதம் பிழைப்புவாதம் எல்லாம் கொடிகட்டிப் பறக்கும். வரதட்சணை வாங்குபவன் எனது நண்பனாக இருக்க முடியாது என்று சொல்வதற்கு கூட பலர் தயாரில்லை. நட்பு வட்டாரத்திற்கு இத்தகைய மதிப்பீடுகள் இருக்க முடியாது. ஆனால் தோழமைக்கு இருக்கிறது. இன்னும் கூடுதலான மதிப்பீடுகள் இருக்கிறது.

பொதுவுடமை சிந்தனையில் அழுத்தமாக வாழும் எங்களுக்கு சாதி மறுப்புத் திருமணம், தாலி மறுப்பு திருமணம், தீபாவளிக்கு பதிலாய் நவம்பர் புரட்சி தினம், பள்ளியில் சாதியில்லாமல் குழந்தைகளை சேர்ப்பது, பார்ப்பனியத்தின் பண்பாட்டுகெதிராக மாட்டுக்கறி உண்பது முதலானவை சகஜமான விசயங்கள்தான். ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் அதற்கென போரடியதன் பக்கங்கள் நிறைய உண்டு. இதில் உலக வழக்கை அமல்படுத்தினால் இறுதியில் சமூக மாற்றமும் புரட்சியும் கூட கதைக்குதவாதவையாக மாறி விடும். போலிக் கம்யூனிஸ்டுகளின் வாழ்வில் அதைக் காணலாம். தீபாவளிக்கும், திருவண்ணாமலை தீபத்துக்கும் அவர்களின் தினசரியான தீக்கதிர் சிறப்பிதழ் வெளியிடுகிறது. ஆட்டோ தொழிலாளர்கள் ஆயத பூஜையை நேர்த்தியாக கொண்டாடுகிறார்கள். த.மு.எ.க.ச கூட்டத்தில் தாலிகளும், மல்லிகையும் ‘மணம்’ பரப்புகின்றன.

இவற்றையெல்லாம் கேள்வி கேட்டால் மக்கள் எப்படி வாழ்கிறார்களோ அதைத்தான் பின்பற்ற முடியும் இல்லையென்றால் மக்களிடம் இருந்து தனிமைப் பட்டுவிடுவோம் என்ற பதில் ரெடிமேடாய் வரும். அண்டை வீட்டு முசுலீமை எதிரியாகப் பார்க்கும் குஜராத்தின் சராசரி இந்து கூட தன்னை நியாயப்படுத்த அதே பதிலைச் சொல்லலாம். அதனால்தான் இரண்டாயிரம் முசுலீம்கள் கொல்லப்பட்டும் அதன் நாயகனான மோடி மீண்டும் முதல்வராக தெரிவு செய்யப்படுகிறார். எனவே பெரும்பான்மை எப்படி வாழ்கிறதோ அப்படித்தான் நாமும் வாழ முடியும் என்ற வாதமே அடிப்படையில் தவறு.

பெரும்பான்மை மனித குலத்தின் இழுக்குகள் அத்தனையும் சிறுபான்மை மனித இனம் நடத்திய விடாப்பிடியான போராட்டங்கள் மூலமாகவே அகற்றப்பட்டன. இல்லையென்றால் ‘சதி’ எனப்படும் உடன் கட்டை ஏறுவதும், பால்யவிவாகமும், பார்ப்பன விதவைப் பெண்களுக்கு மொட்டை அடிப்பதும் இன்றும் தொடர்ந்திருக்கும். தேவதாசி முறையை தடை செய்வது பெரும்பான்மை இந்துக்களை புண்படுத்தும் செயல் என்று வாதாடினார் சத்யமூர்த்தி அய்யர். மறுத்து போராடினார்கள் ராமாமிருதம் அம்மையாரும்,  பெரியாரும். இறுதியில் வரலாற்றில் வென்றது யார்?

இன்று உடன்கட்டை ஏறுவது சட்டரீதியாகவும், சமூகரீதியாகவும் தடை செய்யப்பட்டிருந்தாலும் ரூப்கன்வரை ராஜஸ்தானத்து இந்துக்கள் இன்றும் போற்றும் நாட்டில் நாம் பார்ப்பன இந்துமதத்தின் பிற்போக்குகளையெல்லாம் வீழ்த்தி விட்டதாக எண்ண முடியாது. பெரியார், அம்பேத்கர் எண்ணியதெல்லாம் செயலுக்கு வந்து விட்டதாகவும் கூற முடியாது. இந்தச் சூழ்நிலையில் நாம் நமது மதிப்பீடுகள் குறித்து எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்?

மாட்டுப் பொங்கலுக்கு கூட தனது மாடுகளுக்கு கருப்பு சிவப்பு வர்ணமடித்து, அழகு பார்க்கும் தி.மு.க வின் இலட்சியவாதத் தொண்டன் இன்றில்லை. பார்ப்பன எதிர்ப்பு மரபை கொண்டாடிய அவனது நேற்றைய பெருமையில் சிறு துளி கூட இன்று காணக்கிடைப்பதில்லை. ரஜினி ரசிகர்கள், இந்து முன்னணி தொண்டர்கள், ஆதிக்கசாதி வெறியர்கள் முதலானோருக்கும் ஒரு தி.மு.க தொண்டனுக்கும் இன்று அடிப்படையில் என்ன பெரிய வேறுபாடு உள்ளது? அவ்வப்போது கருணாநிதி விழிப்படைந்து ஆதிசங்கரன் பொட்டு வைத்ததையெல்லாம் கண்டித்தாலும் கோபாலபுரமே தீபாவளியைக் கொண்டாடும்போது, சன் டி.வியும், கலைஞர் டி.வியும் போட்டி போட்டுக்கொண்டு தீபாவளியை கொண்டாடும்போது கலைஞரின் பகுத்தறிவு மரபு யாரைப்பார்த்து அழும்? ‘தீ பரவட்டும்’ பரப்புவதை மறந்த உடன்பிறப்புகள் இன்று பட்டாசைத்தான் பரப்புகிறார்கள்.

முற்போக்கு மதிப்பீடுகளை ஒரு இயக்கமாய் பின்பற்றி வாழும் பலம் ஒரு தனிநபராய் நின்று ஒழுகுவதில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை. பொதுவில் ஒரு கட்சி இயக்கத்தில் சேருவதை சிறுபத்திரிகை மரபு ஏளனமாக பார்க்கும் வியாதி அப்பத்திரிகைகளை படிப்பவர்களையும் தொற்றுவதற்கு தவறுவதில்லை. இதே போல அம்பேத்காரையும், பெரியாரையும் தனியே படித்து வாழ்பவர்கள் கூட இறுதியில் தனிமை காரணமாக இந்துத்வ ‘பெரு’மரபில் சங்கமித்து விடுகிறார்கள். அதற்கு தோதாக அப்பெரியவர்கள் கண்ட இயக்கங்கள் இன்று தோற்றிருக்கின்றன. வீரமணியின் பகுத்தறிவு அவரது மகனை பட்டாபிஷேகம் செய்து பார்ப்பதற்கே சரியாக இருக்கும் போது பெரியாரை பரப்புவதெல்லாம் எங்கனம் சாத்தியமாகும்?

தீபாவளிக்கு புதிய உள்ளடக்கத்தை கொடுக்கலாம் என்கிறார் ரோசா வசந்த். ஏதோ நல்லது வெல்லட்டும், கெட்டது தோற்கட்டும் என்றாவது மக்களின் இந்த பண்டிகை மனோபாவத்தை ஆதரிக்கலாமே என்பதுதான் இந்த வாதம். கூடுதலாக குழந்தைகளின் கொண்டாட்டத்தையாவது அங்கீகரிக்கலாம் என்பது இதன் உட்கிடை. பார்ப்பனியத்தின் பண்பாட்டு ஆக்கிரமிப்பையெல்லாம் கட்டுடைத்து உண்மைகளை புதிய உள்ளடக்கத்தில் கொண்டு சேர்க்கும் பணிதான் நமக்குத் தேவையான ஒன்று. பார்ப்பன எதிர்மரபை சாருவாகனர் தொடங்கி, சம்புகன், நந்தன், பெரியார் வரைக்கும் நாம் கண்டுபிடித்து ஒன்று சேர்த்து பெரும் தீயாய் பற்றவைக்கும் கடமை இருக்கும் வேளையில் தீபாவளியை எப்படி அங்கீகரிப்பது? தீபாவளியை மக்களிடம் புரியவைக்கும் முயற்சிக்கு பதிலாக அதற்கு புதிய கதை ஒன்றை கதைக்கும் முயற்சியின் அவசியம் என்ன?

நமது குழந்தைகளுக்கு பார்ப்பனியத்தின் பண்பாட்டு ஆக்கிரமிப்பு கதைகளை சொல்லித் தரவேண்டும். அதிலிருந்து விடுபடும் அவசியத்தை தொடர்ந்து கற்பிக்க வேண்டும். மனித குலம் பெருமைப்படும் தினங்களின் முக்கியத்துவத்தை சொல்லித் தரவேண்டும். இதையெல்லாம் செய்யாமல் தீபாவளியின் பட்டாசு, புதுத்துணிகளுக்கு அடிபணியவேண்டுமென்றால் குழந்தைகள் வளர்ந்த பிறகு குஜராத்’இந்துக்கள்’ போலத்தான் இருப்பார்கள், பரவாயில்லையா?

மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புக்களின் தோழர்களது குடும்பத்தின் குழந்தைகளை அப்படித்தான் வளர்க்கிறோம். கோடை விடுமுறையில் அவர்களுக்கென்று விசேட முகாம்களை தமிழகம் எங்கும் நடத்துகிறோம். அதில் அவர்கள் பற்றியொழுக வேண்டிய மதிப்பீடுகளை குழந்தைகளுக்கேற்ற வடிவில் கொண்டு செல்கிறோம். எங்கள் குழந்தைகளிடம் தீபாவளி குறித்த ஏக்கம் இருப்பதில்லை. ஏனெனில் அங்கே நவம்பர் புரட்சி தினம் என்ற மாற்று உள்ளது. மாற்று இல்லாதவர்கள்தான் தீபாவளிக்கு புது கதை வசனம் எழுத வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளாகிறார்கள்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் இப்படி சொல்லத் தோன்றுகிறது. மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவதால் அஞ்சத் தேவையில்லை. அதை நமது முயற்சியால் இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் மாற்ற முடியும். இந்திய உழைக்கும் மக்கள் பார்ப்பனியத்தை வென்று பெற்ற உரிமைகளே அதற்கு சான்று. சுருங்கக்கூறின் இந்தியாவில் பார்ப்பனியத்தின் இந்து மத மரபு, அதை எதிர்க்கும் புரட்சிகர மரபு என்று இரண்டுதான் இருக்க முடியும். புரட்சிகர மரபைத் தெரிவு செய்தவர்களிடம் ஊசலாட்டம் இருக்க வாய்ப்பில்லை. இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒரு இல்லாத இடத்தை தேடிக்கொண்டிருக்கும் ‘முற்போக்காளர்கள்’தான் இங்கே பரிதாபத்திற்குரியவர்கள். தீபாவளியின் கொண்டாட்ட வெள்ளத்தில் மூழ்கி கரைசேர முடியாமல் தத்தளிப்பவர்கள் இவர்கள்தான்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

 1. தோழர்! என் குடும்ப பாரம்பரியத்தில் முற்போக்காக சிந்திக்க முற்பட்ட முதல் தலைமுறையே எனது தலைமுறைதான். புரட்சிகர மரபில் வந்த உங்களின் பார்வைக்கு நாங்கள் பரிதாபத்திற்குரியவர்களாக தெரிவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்த முற்போக்குக்கு நாங்கள் கொடுக்கும் விலை கொஞ்சம் அதிகமானது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வாய்ப்பேயில்லை.ம் 🙂

  • லக்கி, உங்க தலைமுறையே கடைசி முற்போக்கு தலைமுறையாக போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் இந்த பதிவு எழுதப்பட்டதாகவே எனக்கு புரிகிறது.

  • லக்கி…மகன் தந்தையை வெல்வான்னு சொல்லுவாங்க, நீங்கவென்டுட்டீங்க,ஏன்னா ஒங்க தலை முறைல முற்போக்கா சிந்திக்க ஆரம்பிச்சதே நீங்கதான்,இப்ப நீங்க மகன் கிட்ட தோத்துட்டீங்க, முற்ப்போக்கா தோத்திருந்தீங்கன்னா மகிழ்ச்சி,பிர்ப்போக்காதோத்துட்டீங்களே,பரவாயில்லை நேத்தோட தீபாவளி முடிஞ்சிபோயிடல, நாளையும் வரும் அப்ப செயிச்சி காட்டுங்க லக்கி.[முற்போக்கா சிந்திச்ச மொத பரம்பரை நீங்கதான்னு சொல்ரது எப்படி இருக்குன்னா?அம்மணமா பொறந்த மொத கொழந்தையே..நாந்தான்னு[நீங்க‌]சொல்ரமாதிரியிருக்கு.

  • தோழர் லக்கிலுக்,

   இங்கு சில தோழர்கள் கூறியிருப்பது போல புரட்சிகர மரபை ஏற்றிருக்கும் எங்களில் பெரும்பான்மையினருக்கு இதுவே முதல் தலைமுறை. உங்களைப்போல திராவிட இயக்கத்தின் செழிப்பான பின்புலம் மா.லெ இயக்கத்திற்கு இல்லை. ஆதலால் நாங்கள் நடத்தும் புதிய பண்பாட்டிற்கான போராட்டம் பல பிரச்சினைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இங்கே பழமையின் பிற்போக்கு பிய்த்தெரியப்படும் செயல் மிகுந்த வலிகளோடும், இழப்புகளோடும் இறுதியில் உத்வேகத்தையும் அளிப்பதாகத்தின் இருக்கிறது.

   இந்த முற்போக்குக்கு நாங்கள் கொடுக்கும் விலை கொஞ்சம் அதிகம் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதிலேயே பிரச்சினை உள்ளது. மற்றவர்கள் பார்ப்பதற்காகவா நாம் முற்போக்கை ஏற்றுள்ளோம்? நமக்கே அதுதான் சரியானது என்பதால்தானே இந்த்ப் போராட்டம்? இதன் மூலம் நாம் பெறுகின்ற இழப்பு என்பது புதிய தலைமுறை பெறப்போகும் புதிய சமூகத்திற்கான அஸ்திவாரம். ஆதாலால் உண்மையில் இழப்பில்லை.

   ஒரு தீபாவளிக்கே நாம் சரண்டர் ஆகிவிட்டால்……..? அப்புறம் நாம் என்ன சமூக விளைவுகளைத் தோற்றுவிக்க முடியும்?

 2. தீபாவளி கொண்டாடுறதுல என்ன தப்பு இருக்குன்னு புரியல..
  அது எங்கள் சமயப் பண்டிகை, அதை கொண்டாடுகிறோம். அவ்வளவே!
  இதுல யாருக்கும் தீங்கு இழைக்கலையே! பிறகென்ன தவறு?
  ஏன் கிறிஸ்துமஸ்,ரம்ஜான் கொண்டாடனும்னு கேட்பீர்களா?

  • கபிலன்,

   நரகாசுரன் உங்கள் சமயத்தின் எதிரியா? அவர ஏனப்பா கொன்றீர்கள்? அவரை ஏன் கெட்டவன் என்று சொல்கிறீர்கள்?

   அவர் என்னுடைய முன்னோர்களில் ஒருவர். அவரை கொன்றதை கெட்டதை அழித்ததாக அறிவித்துக் கொண்டாடப்படும் ஒரு விழாவை நான் எதிர்ப்பேன். கபிலன் போன்றோரின் சொக்காயைப் பிடித்து காரணம் கேட்பேன்.

   • அப்படி என்றால் ராமாயணம் என்பது உண்மை, நடந்த சம்பவம் என்பதை நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். ராமரையும் ஒப்புக் கொள்கிறீர்கள். ஹையா…நம்ம வேலை சுலபமா ஆயிடுச்சே : )

    தவறு செய்பவன், தீங்கு இழைப்பவன் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும். அது உங்கள் பரம்பரையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி என் பரம்பரையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி.

    சொக்காயைப் பிடித்து கேள்வி கேட்டாலும் இதைத் தான் சொல்ல முடியும் : )

   • //தவறு செய்பவன், தீங்கு இழைப்பவன் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும். அது உங்கள் பரம்பரையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி என் பரம்பரையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி.//

    யோவ் என்ன தப்பு செஞ்சான்னு சொல்லுயா?

    உன்னோட ராமனோட யோக்யதைய இங்க வந்து பாரு.

    http://terrorinfocus.blogspot.com/2007/10/rama-rama.html

    #8) is it possible to follow the customs of Ramayana in today’s life?

    Laxmanan cut Soorpanagai’s (an Aboriginal Girl) nose and breast because a Suthra girl proposed her love to a Kshatriya Man. If we have to follow Ramayana customs today then we have to give the same punishment to one Woman. Her name is Umabharathi, who is a Suthra girl proposed Brahman Man Govindacharya. (http://www.tribuneindia.com/2000/20001010/nation.htm#10)

    #9) if somebody believes that Ramayan is an historical event, we can compare other kings with king RAM.

    Karikalan’s achievement is kallanai.

    Alexander – Greek impact to all civilizations thro his
    invasion.

    RajaRajan’s achievement is Big Temple.

    King Ashoka’s achievement – Saranath stupi, preaching
    Buddhism across the world.

    Agbar’s achievement – modern revenue department

    Rama just lost his wife, fought for her chastity and did nothing to people, where as the great kings of our past did lots of good things to the people.

    Rama’s achievements (Crimes) include:

    · Suspected his Wife Seedha and insulted her in front of everybody with ugliest words we could find in dictionaries. He asked her to prove her chastity. (It is the first SATI case). He even suspected Lakshman, Bharadhan, and Hanuman etc.

    · Killed Sampookan only because he is a Suthra, who tried to worship god directly, which is against Brahmanism.

    · Killed many innocents (tribal people) only because they are against Varnasrama dharma and only because they are against their land being used for Brahmanic rituals.

    · Lakshman killed Dadagai’s son. Raman solace Lakshman that he killed a Suthra so no need to worry.

    · Before building the bridge he destroyed a Village at the request of Sea king, because untouchable (Panjamas) people of the village have used a common Well in that village.

    · Rama himself and by other characters been projected as a Diehard protector of Varnasrama Dharma. The whole text of Valmiki Ramayana is a proof for this. And Ramayana is the literary symbol of re-establishment of the caste society. All other personal characters of him are common to any praised historic beings.

    · Killed Vali and Dadagai in a most cowardly manner.

    · Lakshman cruelly cut Soorpanagai’s nose and breast when she
    expressed her love. It is definitely inhuman act.

    · He insulted and chafed old woman kooni. This is surely not a Noble character to embrace.

    We cannot consider one as a God only because he is good for his friends, brothers and he is loyal to his father. And when he is anti people, Anti women and pro caste, Pro Sati society, we should actually cast him away from our Society. Rama actually deserves this and that is one of the ways to redeem our old pride of casteless society. He is not a model to be followed.

    #10) Rama committed suicide. It is even disgraceful and sure it is not a noble character to embrace.

    Rama never felt guilty when he tortured Seeta. But he only bereaved for his brother’s demise and committed suicide. Did he really love his wife? Did he really put faith on his half-in-life, Seeta?

    When he was roaming around forest after Seeta was missing, He bereaved with lustful memories of Seeta. He worried about he is missing the pleasures of Seeta and he worried about Seeta changes his love towards Ravana. He even says “if he were in Ayodya he may not worry about Seeta is missing, because there are alternatives for pleasure available.” It is only the pleasure of flesh that defines Seeta to him. That is why didn’t bereave for her. Instead he bereaved for his brother, where true love bond them. Is this a right attitude to follow in today’s society?

    #11) as per a famous folklore version of Ramayana, Lakshman’s wife
    Urmila died during her long-sleep. Urmila went into a trance and fell unconscious when Laxman was serving his brother Rama in the forest. When Lakshman came back to Ayodya he searched for his wife and found only her Skeleton remains in her bed. Lakshman’s concern about his wife was mentioned nowhere in the Ramayana. Like his brother Rama, Lakshman also considered his wife just as an object.

    Last but not the least question: Those who are protesting against breaking the Sand Bridge are the ones who gave rebirth to this project (During the BJP government this project again came in to picture. Before BJP it is the British rulers who thought about this project). Why did they do that? When they rule, is Rama not a God to them? When they rule, is Ramayana not a true story to them?

    “paritranaya sadhunam

    vinasaya ca duskrtam

    dharma-samsthapanarthaya

    sambhavami yuge yuge”

    “Whenever Adharma rules the world I will born and annihilate”

    Is Rama a God?

    Rama born to annihilate the casteless society and to reestablish the Varnasrama caste society, That is to say he born to reestablish the Dharma of Brahmanism. We will reject this anti people demon called Rama and strive for the reestablishment of Adharma – ie, casteless society.

   • தம்பி கபிலன்,

    நீதான் ரொம்ப நியாயவான் ஆச்சே, நேர்மையானவன் ஆச்சே, தவறு செய்தவன் உன் பரம்பரல இருந்தாலும், என் பரம்பரல இருந்தாலும் மசிரே போச்சின்னு தண்டனை கொடுப்பே இல்லையா?

    ராமன் என்கிற கேடு கெட்டவனின் தீய செயல்களை பட்டியலிட்டுள்ள கட்டுரைக்கு தொடர்பு கொடுத்துள்ளேன். ராமன் என்ற அயோக்கியன் இருந்ததை நீயும், நானும் நம்புகிறோம், எனில் அவனை தூற்றுவதற்கு ஒரு விழா ஏற்பாடு செய்யேன். (ஏற்கன்வே ஒன்னு இருக்கு அது பேரு ராவணலீலா)

    http://terrorinfocus.blogspot.com/2007/10/rama-rama.html

   • ஐயா முதல் தலைமுறை,

    நீண்ட ஆயுளைப் வரமாகப் பெற்ற நரகாசுரன், தன் வலிமையால், தான் பெற்ற வரத்தால் பல அரசர்களை கொன்று அங்குள்ள மக்களைக் கொடுமைப் படுத்தினான். பல்லாயிரக் கணக்கான பெண்டிரை கொடுமைப் படுத்தினான். பூலோகத்தை வென்று, சொர்க்க லோகத்தையும் வெல்ல நினைத்தான், அதனால் அழிக்கப்பட்டான். இறப்பதற்கு முன்பு, என் பெயர் நிலைத்திருக்க, உலகமே இந்த நாளை விழாவாக கொண்டாட வேண்டும் என்று வரம் பெற்றான். அப்படிப்பட்ட, நரகாசுரனை கொல்வது என்ன தவறு. நம்ம ஊர்ல இபிகோ 302 படி தூக்கு தண்டனை கொடுத்திருப்பாங்க ஐயா : )

    #8) is it possible to follow the customs of Ramayana in today’s life?

    பிறன் மனை நோக்காமை என்பது இன்றும் பொருத்தமான ஒன்றே !

    அந்த காலத்துல குதிரை வண்டி, மாட்டு வண்டி போன்றவற்றைப் பயன்படுத்தி தொலைதூர ஊர்களுக்கு போனாங்க. இப்போ கார், பஸ், ரயில், விமானத்தைப் பயன்படுத்தி ஊர்களுக்கு போறாங்க. வேறு வகையைப் பயன்படுத்தினாலும், இன்றும் அவர்கள் செல்வது என்னவோ அதே ஊருக்குத் தான் !

    “Laxmanan cut Soorpanagai’s (an Aboriginal Girl) nose and breast because a Suthra girl proposed her love to a Kshatriya Man”

    இந்த மாதிரி திரித்து சொல்ற பல பெரியாரிஸ்ட்(திராவிட பதிவர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்கள்)பதிவுகளை படிச்சிருக்கோம். இதெல்லாம் புதுசு கிடையாது. பிறருடைய கணவனை கவர நினைத்தவள் சூர்ப்பனகை. எவ்வளவு சொல்லியும் கேட்காமல், அடைய நினைத்தாள். மூக்கறுபட்டாள். அந்தக் காலத்துல இபிகோ சட்டம் என்பதெல்லாம் இல்லையே. மனு தர்மம் தான். இதுல சாதி புகுத்தி ஜிகுனா காட்டுற வேலை எல்லாம் அப்பாவி ஜனங்க கிட்ட போய் சொல்லி ஏமாத்துங்க : )

   • //நீண்ட ஆயுளைப் வரமாகப் பெற்ற நரகாசுரன், தன் வலிமையால், தான் பெற்ற வரத்தால் பல அரசர்களை கொன்று அங்குள்ள மக்களைக் கொடுமைப் படுத்தினான். பல்லாயிரக் கணக்கான பெண்டிரை கொடுமைப் படுத்தினான். பூலோகத்தை வென்று, சொர்க்க லோகத்தையும் வெல்ல நினைத்தான், அதனால் அழிக்கப்பட்டான். இறப்பதற்கு முன்பு, என் பெயர் நிலைத்திருக்க, உலகமே இந்த நாளை விழாவாக கொண்டாட வேண்டும் என்று வரம் பெற்றான். அப்படிப்பட்ட, நரகாசுரனை கொல்வது என்ன தவறு. நம்ம ஊர்ல இபிகோ 302 படி தூக்கு தண்டனை கொடுத்திருப்பாங்க ஐயா : )//

    நரகாசுரன் வரலாறு என்று எனக்கு தெரிந்து, அவன் தான் சார்ந்த நாட்டை மிக சுபிட்சமாகவே வைத்திருந்தான் என்பதுதான். மற்றபடி சொர்க்கத்தை கைப்பற்றுவது, வேத எதிர்ப்பு என்ற அடிப்படையில்தான் அவன் கொல்லப்பட்டான்.

    ராவணன் விசயத்திலும், ராமன் வெகு தெளிவாக் இந்த அவதாரம் வந்ததே ராவணனை அழிக்கத்தான் என்று சொல்கிறது. ராவணன் சீதாவை கடத்தினான் என்பதெல்லாம் சும்மா சாக்கு போக்கு அல்லது கட்டுக் கதை(பிடிக்காதவனை கொன்றுவிட்டு சொல்லுவது போல).

    //பிறன் மனை நோக்காமை என்பது இன்றும் பொருத்தமான ஒன்றே !//

    ராமன் தனது அயோத்திய ஆடம்பரங்கள் பற்றி வால்மீகி ராமாயணத்தில் பேசும் போது, தனக்கு பரிசாக வந்த பெண்டீரையும் குறிப்பிடுகிறான். வால்மீகி ராமாயணத்தின்படி ராமன் ஏகப்பட்ட பத்தினிகளை வைத்திருந்தவன். பிறன் மனை நோக்காமை என்பதற்கு மரண தண்டனை எனில்,

    – தலித் கிராமத்தை அழித்த ராமனுக்கு,
    – சீதாவை தீயிலிட்டு கொல்ல முயன்று பிறகு முடியாமல் பூமியில் அடித்து புதைத்து கொன்ற ராமனுக்கு
    – சாம்புகனை, அவன் சூத்திர யோனியிலிருந்து வந்தவனா என்று கேட்டு அவன் ஆம் என்று சொன்னவுடன் வெட்டிக் கொன்றதற்கு
    – இன்னும் பல சூத்திரர்களை(அசுரர் எனப்பட்ட இன மக்கள்) எந்த நியாயமும் இன்றி கொன்ற ராமனுக்கு

    என்ன தண்டனை கொடுக்கலாம்?

    //பிறருடைய கணவனை கவர நினைத்தவள் சூர்ப்பனகை. எவ்வளவு சொல்லியும் கேட்காமல், அடைய நினைத்தாள். மூக்கறுபட்டாள். அந்தக் காலத்துல இபிகோ சட்டம் என்பதெல்லாம் இல்லையே. மனு தர்மம் தான். இதுல சாதி புகுத்தி ஜிகுனா காட்டுற வேலை எல்லாம் அப்பாவி ஜனங்க கிட்ட போய் சொல்லி ஏமாத்துங்க : )//

    சூர்பனகை லட்சுமனணுக்கு ஐ லவ் யூ சொல்லும் போது லட்சுமணன் மணமானவன் என்ற விவரம் அவளுக்குத் தெரியாது. ஏனேனில் காட்டுக்கு போகும் போது சீதாவை கூட கூட்டிக் கொண்டு வந்த ராமன், லட்சுமனணின் செக்ஸ் தேவைகள் குறித்து கவலைப்பட வில்லை.

    அன்றைக்கு மனுதர்மம் இருந்தது எனவே சரி எனில், அன்றைக்கு ராவணனின் சமூகத்தில் கந்தர்வ மணம்தான் இருந்தது. (தமிழ் இலக்கியங்களில் படித்திருப்பீர்கள்). எனவே அவன் அடிப்படையில் அது சரியே. மேலும், சூர்ப்பனமை மூக்கை வெட்டியதால்தான் சீதாவை கடத்தினான் ராவணன்.

    ஆக, அந்த காலத்திலேயே ராமன் ஒரு மொள்ளமாறி, கொடும் கொலைகாரன், சாதி வெறியன் எனும் பொழுது அவனுக்கு என்ன தண்டனை?

    மேலும், கபிலன் அந்த குறிப்பிட்ட ராமன் கட்டுரையில் உள்ள ஒவ்வொரு பாயிண்டுக்கும் பதில் சொன்னால் அவர் ஒரு நல்ல சுத்த பத்தமான இந்து என்பதை நான் அறிந்து கொள்வேன். அவர் மனம் புண்படாமல் வினையாற்ற இந்த விவரம் எனக்குத் தேவைப்படுகிறது

   • //இதுல சாதி புகுத்தி ஜிகுனா காட்டுற வேலை எல்லாம் அப்பாவி ஜனங்க கிட்ட போய் சொல்லி ஏமாத்துங்க : )//

    தம்பி கபிலன் அவர்களே,

    1)
    ராமன் தலித் கிராமத்தை எரித்தது ராமயணத்தில் இருக்கிறது. காரணம் தீண்டத்தகாத மக்கள் பொது நீர்நிலையில் தண்ணீர் எடுத்து விட்டனர் எனவே அந்த தீட்டை போக்க வேண்டும் என்று சமுத்திர ராஜன் ராமனிடம் கோரிக்கை வைத்தான். ராமனும் ஒரு அம்பு விட்டு தலித் கிராமத்தை எரித்தான்.

    2)
    அயோத்தியில் இருந்த பார்ப்பனர் தனது மகன் இறந்ததற்கு சாம்புகன் எனும் சூத்திரன் நேரடியாக கடவுளை தவம் செய்துதான் காரணம் என்று ராமனிடம் முறையிட ராமன் அங்கு சென்று ஒக்கே ஒக்க கேள்வி கேட்டான்:
    ‘நீ சூத்திர யோனியில் பிறந்தவனா?’

    இதற்கு சாம்புகன் ஆம் என்று பதில் சொல்லவும், அடுத்த நிமிடம் கொல்லப்பட்டான் சாம்பூகன்.

    இதுவும் ராமாயணத்தில் உள்ளது.

    ஞாயிற்றுக் கிழமை ராமயணம் சீரியல் பார்த்தும், ஆர் எஸ் எஸ் குப்பைகளின் மூலமும் வரலாற்று அறிவை வளர்த்துக் கொண்டால் கபிலன் போல மூளையில் இந்துத்துவ காண்ஸ்டிபேசன் வந்து கஸ்டப்பட வேண்டியிருக்கும்.

   • //மனு தர்மம் தான்.//

    மனு தர்மம்தான் என்று சொல்லிவிட்டு அடுத்த இடத்திலேயே இதுல சாதிப்புத்தி இல்ல என்று கபிலன் சொல்கிறார்.

    பார் யுவர் கைண்டு இன்பர்மேசன், மனுதர்மம் சாதிய சட்டம்தான்

   • “மனு தர்மம்தான் என்று சொல்லிவிட்டு அடுத்த இடத்திலேயே இதுல சாதிப்புத்தி இல்ல என்று கபிலன் சொல்கிறார்.

    பார் யுவர் கைண்டு இன்பர்மேசன், மனுதர்மம் சாதிய சட்டம்தான் ”

    மனுதர்மத்தில் உள்ள வர்ணாசிரமத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சொல்கிறீர்கள். வர்ணாசிரம் என்பதே அவரவரின் குணங்களை வைத்து மனிதனை வகைப்படுத்துவது தான். சாதி அடிப்படையிலோ, பிறப்பின் அடிப்படையிலோ கிடையாது. அதுமட்டுமல்ல அது பரம்பரை பரம்பரையாக வருவது என எந்த நூலிலும் இல்லை. இப்போ நம்ம எப்படி நல்லவன் கெட்டவன் பொறாமை பிடிச்சவன், கொலைகாரன், திருடன் என்று சொல்றோம்,,, அதே மாதிரி தான் வர்ணாசிரமும். உலகில் உள்ள ஆத்மாக்கள் அனைத்தும் நானே, அனைத்து ஆத்மாக்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கீதை கூறுகிறது. வர்ணாசிரம், சாதி அடிப்படையில் என்று வைத்துக் கொண்டால், இதை ஏன் சொல்ல வேண்டும்? அனைத்து பிராமணனின் ஆத்மாவிலும் நான் இருப்பேன் என்று தானே சொல்லி இருக்க வேண்டும்.

    இந்த டாபிக்கைப் பற்றி இப்போ தான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன், கூடிய சீக்கிரம் புள்ளி விவரங்களோட சொல்றேங்க : ) கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ…

   • //மனுதர்மத்தில் உள்ள வர்ணாசிரமத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சொல்கிறீர்கள். வர்ணாசிரம் என்பதே அவரவரின் குணங்களை வைத்து மனிதனை வகைப்படுத்துவது தான். சாதி அடிப்படையிலோ, பிறப்பின் அடிப்படையிலோ கிடையாது. அதுமட்டுமல்ல அது பரம்பரை பரம்பரையாக வருவது என எந்த நூலிலும் இல்லை. இப்போ நம்ம எப்படி நல்லவன் கெட்டவன் பொறாமை பிடிச்சவன், கொலைகாரன், திருடன் என்று சொல்றோம்,,, அதே மாதிரி தான் வர்ணாசிரமும். உலகில் உள்ள ஆத்மாக்கள் அனைத்தும் நானே, அனைத்து ஆத்மாக்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கீதை கூறுகிறது. வர்ணாசிரம், சாதி அடிப்படையில் என்று வைத்துக் கொண்டால், இதை ஏன் சொல்ல வேண்டும்? அனைத்து பிராமணனின் ஆத்மாவிலும் நான் இருப்பேன் என்று தானே சொல்லி இருக்க வேண்டும்.//

    வர்ணாஸ்ரமம் சாதியமாகத்தான் மாறும். ஏனேனில், ஒருவன் பிறக்கும் போது எந்த வர்ணத்தில் பிறக்கப் போகிறான் என்று தெரியாது. ஆனால் பிறந்த பிற்பாடு அவன் ஒரு குறிப்பிட்ட வரணத்தைச் சேர்ந்தவனுக்கு மகன், அந்த வர்ணத்துக்கே உரிய சமூக உரிமைகள், சலுகைகள், வசதிகள் எனவே அதற்கேயுரிய வளர்ச்சி வாய்ப்பு என்று வர்ண அமைப்பு பிறப்பின் அடிப்படையில் ஆனதாக மாறும் என்பதுதான் உண்மை. அதற்கு உதாரணம் நமது சாதிய அமைப்பு,

    மேலும், வர்ண அமைப்பு என்பதற்காக சூத்திரனை ராமன் கொல்வது சரியா?

   • ஐயா முதல் தலைமுறை,

    1)ராமன் தலித் கிராமத்தை எரித்தது ராமயணத்தில் இருக்கிறது
    தலித் என்ற வார்த்தை எப்பொழுது வந்தது என்று பாருங்கள்.

    “2)அயோத்தியில் இருந்த பார்ப்பனர் தனது மகன் இறந்ததற்கு சாம்புகன் எனும் சூத்திரன் நேரடியாக கடவுளை தவம் செய்துதான் காரணம் என்று ராமனிடம் முறையிட ராமன் அங்கு சென்று ஒக்கே ஒக்க கேள்வி கேட்டான்:
    ‘நீ சூத்திர யோனியில் பிறந்தவனா?’”

    ஏதோ ஒரு சைட்ல போட்டு இருக்கறத சொல்லி இருக்கீங்களா…இல்லை நிஜமாவே ராமாயணத்துல இருக்கான்னு பாக்குறேங்க..இந்த மேட்டரை வெரிஃபை பண்றேன்.

    “ஞாயிற்றுக் கிழமை ராமயணம் சீரியல் பார்த்தும், ஆர் எஸ் எஸ் குப்பைகளின் மூலமும் வரலாற்று அறிவை வளர்த்துக் கொண்டால் கபிலன் போல மூளையில் இந்துத்துவ காண்ஸ்டிபேசன் வந்து கஸ்டப்பட வேண்டியிருக்கும்.”

    ஐயா, இப்போ தாங்க கத்துக்குறேன். எல்லாம் தெரிஞ்ச ராமசாமியா நாம : ) கொஞ்சம் கொஞ்சமா படிச்சு, இந்த மாதிரி விவாதம் செஞ்சி, அதற்கு பதில் தேடி தான் நிறைய மேட்டர் தெரிஞ்சிக்குறேன்.

    முற்போக்கு, சைடுபோக்கு குரூப்பிற்காகவே…நிறைய படிக்கணும் போல இருக்கே : )

    “மேலும், கபிலன் அந்த குறிப்பிட்ட ராமன் கட்டுரையில் உள்ள ஒவ்வொரு பாயிண்டுக்கும் பதில் சொன்னால் அவர் ஒரு நல்ல சுத்த பத்தமான இந்து என்பதை நான் அறிந்து கொள்வேன்.”

    சுத்த பத்தமான இந்து என்று சொல்வதை விட,வீரத் தமிழன் என்று சொல்வதை விட,இந்தியன் என்று சொல்வதை விட, நல்ல மனுஷன்னு சொன்னீங்கன்னா சந்தோஷப் படுவேன் ஐயா : )

    • ///தலித் என்ற வார்த்தை எப்பொழுது வந்தது என்று பாருங்கள்.////
     இந்து என்ற வார்த்தை எப்போது வந்தது ?.. எதாவது புராணத்தில் இருக்கிறதா ?

   • //சுத்த பத்தமான இந்து என்று சொல்வதை விட,வீரத் தமிழன் என்று சொல்வதை விட,இந்தியன் என்று சொல்வதை விட, நல்ல மனுஷன்னு சொன்னீங்கன்னா சந்தோஷப் படுவேன் ஐயா : )//

    நல்ல விசயம்.. வாழ்த்துக்கள் கபிலன்.

    • அட அப்ப ராமாயணம் நெசமாலுமே உண்மை சம்பவமா? மொதல்லா எந்திரன் பாத்தாங்க..அடுத்து தீபாவளி கொண்டாடினாங்க.. இப்ப ராமாயணத்தை பத்தி அதை உண்மைச்சம்பவம் அப்படிங்கிற மாதிரி ஒரு பெரிய விவாதம்.. வாழ்த்துக்கள் தோலர்ஸ்….அடுத்து புத்தாண்டு வருது ஸ்வீட் எடு கொண்டாடு..

  • கபிலன் உங்களையெல்லாம் யாரு முற்போக்கு லிஸ்டுல சேத்தது? நீங்க ஆர்எஸ்எஸ் கம்பேனியின் கொ.ப.செ மாதிரி பேசுற ஆளாச்சே? பதிவு திராவிட, கம்யூனிச மரபு முற்போக்காளர்கள் கொண்டாடுவதை விமர்சனம் செய்து எழுதியிருக்காங்க. நீங்க வழக்கம்போல தலைப்பை மட்டும் படிச்சுட்டு வந்து கருத்து செல்லுறீங்க.

   • ஹி ஹி…முற்போக்கு, பிற்போக்கு, சைடுபோக்கு, வயிற்றுப்போக்கு என எந்த அடை மொழியும் நமக்குத் தேவை இல்லை. அதை நீங்களே பங்குபோட்டு எடுத்துக்கோங்க : ) அதுக்குள்ள இன்னும் 10 பிரிவுகள் வச்சுக்கோங்க…

    இந்து சமயத்தைப் பற்றி சாதாரண ஆளுங்க பேசவே கூடாதா ? உடனே நாம ஆர்.எஸ்.எஸ்., விஎச்பி கொபசே வா ?

    அமாவாசைப் பூஜையில், செருப்பு காலோடு, சாமி படத்தின் மீது கால் வைத்து உதைத்தவர் என் தந்தை, ஓய்வு பெற்ற தமிழ்த் துறைத் தலைவர், திக விலும், கம்யூனிஸ்டிலும் இருந்திருக்கிறார் ஒரு காலத்தில். அதனால நானும் கொஞ்சம் கலந்துக்குறேங்க விவாதத்துல : )

   • //ஹி ஹி…முற்போக்கு, பிற்போக்கு, சைடுபோக்கு, வயிற்றுப்போக்கு என எந்த அடை மொழியும் நமக்குத் தேவை இல்லை. //

    ஏன்னா கபிலன் ஒரு காமன்மேன்.

   • ஐயா பார்வை,

    என்னங்க நீங்க…கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, டாபிக்கை மாற்றுவதிலேயே சீரியசா இருக்கீங்க….: )

    பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு வேற என்ன சொல்றதுன்னு நீங்க கேக்குறீங்க..புரியுது சார்…

   • //பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு வேற என்ன சொல்றதுன்னு நீங்க கேக்குறீங்க..புரியுது சார்…//

    நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் ப்ளீஸ் கபிலன்

  • //இப்போ நம்ம எப்படி நல்லவன் கெட்டவன் பொறாமை பிடிச்சவன், கொலைகாரன், திருடன் என்று சொல்றோம்,,, அதே மாதிரி தான் வர்ணாசிரமும்.//

   சாதி வெறி புத்தகம் கீதையில் மனிதர்களை கெட்டவன் பொறாமை பிடிச்சவன் என்று மட்டும் பிரிக்கவில்லை. அப்படி பிரித்த ஒவ்வொரு பிரிவுக்கும் கடமை என்று ஒன்றை ஒதுக்கியுள்ளது. அது மீறப்படும் போது ராமன் போன்றோர் அவதரித்து மீண்டும் தர்மத்தை நிலைநாட்டுவார்கள். அதாவது சாதியத்தை நிலைநாட்டுவார்கள்.

 3. //தோழர்! என் குடும்ப பாரம்பரியத்தில் முற்போக்காக சிந்திக்க முற்பட்ட முதல் தலைமுறையே எனது தலைமுறைதான். புரட்சிகர மரபில் வந்த உங்களின் பார்வைக்கு நாங்கள் பரிதாபத்திற்குரியவர்களாக தெரிவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்த முற்போக்குக்கு நாங்கள் கொடுக்கும் விலை கொஞ்சம் அதிகமானது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வாய்ப்பேயில்லை.ம் :)//

  எங்க குடும்பம் எல்லாம் பரம்பரை பரம்பரையாக புரட்சிக்கு வாக்கப்பட்ட குடும்பம் போலவும். புரட்சி என்பதும் முற்போக்கு என்பதும் பரம்பரை சொத்து போலவும் பேசுகிறார் லக்கி.

  அவரது அப்பாவாவது ஏதோ ஒரு வகையில் திராவிட பின்னணி உள்ளவர். எனது குடும்பமோ சுத்தமான பிற்போக்குக் குடும்பம். ஆனால், தொடர்ந்து எனது த்ரப்பு நியாயங்களை வலியுறுத்திப் போராடியதன் விளைவு என்னுடைய குடும்பத்தில் கூட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

  லக்கி போன்றவர்கள் முற்போக்குக்கு கொடுக்கும் விலை என்னவென்று தெரியவில்லை. அவர் அப்படி விலைமதிப்பில்லாத அல்லது அதிக விலையுள்ள சிலவற்றை முற்போக்கு நடைமுறைகளை கடைபிடிப்பதற்காக இழக்கிறார் என்றால் அது எனக்கு மகிழ்ச்சிதான். அத்தகைய கொள்கைப் பிடிப்புள்ளவராக லக்கி இருக்கிறார் எனில் அது எனக்கு இன்ப அதிர்ச்சிதான்.

  காரணங்களை வெளியே தேடியலையும் ஜீவாத்மாக்கள், இவ்வாறு எதையாவது சொல்லிக் கொண்டு சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

 4. தீபாவளி என்றாலே எங்களுக்கு நினைவுக்கு வரும் அரக்கன் : “வெடி,பட்டாசு,மத்தாப்பு” (என்ற நரகாசுரன் தான்). – இதனால் ஏற்படும் உயிர் அழிவு, உடமை நாசம், படுகாயம், அங்கசெதம்,  காற்று-நிலம்-நீர்-அமைதி என சுற்றுப்புற சுகாதார சீர்கேடு, இன்னல்கள், பணவிரயம், குழந்தை தொழிலாளர் பிரச்சனை, ஆரோக்கிய பாதிப்பு – இப்படி பலவற்றை சேர்த்து சொல்லி இருக்கலாம்.

 5. அவசியமான பதிவு. இதுபோன்ற உரையாடலை தூண்டும் பதிவுகளே இன்றையே தேவை.

 6. பார்ப்பனீயத்தின் தோலை உரிக்க வேண்டிய “முற்போக்கு” பதிவர்கள் தீபாவளி கொண்டாடுவதற்கு மெனக்கட்டு பதிவிட்டு வந்தது அதிர்ச்சியாகவே இருந்தது. தீபாவளி கொண்டடுவதற்கு கொடுக்கும் விலை நம்முடைய மானம் என்கிறபோதும், அதை பொருட்படுத்தாமல் தீபாவளி ஆதரவு பதிவுகள் இட்டிருப்பது அவலம்.

  இன்று தீபாவளி. நாளை எந்த பார்ப்பனீய பண்டிகையோ?

 7. தீபாவளி என்ற பெயரில் மக்கள் நிறைய நரகாசுரன்களை இன்று உருவாக்கி விட்டார்கள். எத்தனை விபத்துகள், உயிரிழப்புகள், காசைக் கரியாக்கும் காரியங்கள், இதற்கெல்லாம் மேலாக – சூழல் சீர் கேடுகள் (நிலம், நீர், காற்று மற்றும் ஒலி மாசுகள்). குடிமகன்களின் கூத்துகள் தனி (இவர்களைக்கென சிறப்பு மதுவகைகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்!!! என்னே அரசாங்கத்தின் பொறுப்பு – மக்கள் கூனிக் குறுகும் ஒரு ஈனத்தனமான வேலையை வெட்கமின்றி அரசு செய்கிறது). இவ்வளவு சிறப்பான(??) இந்த பண்டிகையைக் கொண்டாடத்தான் வேண்டுமா? வருங்காலத்தில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?

  • ஐயா சந்திராஸ்,

   இது ஒரு நியாயமான விஷயம். சுற்றுச்சூழல் மாசுபடுதுன்னு சொல்றது சரிதான். அதுக்கு ஒரு வழி செய்யணும்.

   ஆனா, “குடிமகன்களின் கூத்துகள் தனி ” இப்படி சொல்வதெல்லாம் ஓவர் சார்..
   சார் ஜோக் அடிக்காதீங்க ….ஏதோ தீபாவளிக்கு தீபாவளி தான் எல்லாரும் குடிக்குற மாதிரி சொல்றீங்க…
   சனிக்கிழமை போய் பாருங்க சார்….எந்த பார்லையும் இடம் கிடைக்காது…..புதுசா ஒரு பனியன் வாங்கினா கூட ட்ரீட்னு டாஸ்மாக் போற காலம் சார் இது…
   எந்த ஒரு விழாவாக இருந்தாலும், அதைப் பெரும்பாலானவர்கள் கொண்டாடும் போது சின்ன சின்ன இன்னல்கள் இருக்கத் தான் செய்யும்.

   திராவிட அரசியல் சிங்கம் ,ஒருத்தர், ரோட்டுல போனா கூட கால் மணி நேரம் டிராபிக் நிறுத்தி, மக்களை தினம் தினம் இன்னல் படுத்துகிறார்களே…அதை முதல்ல கேப்போம் சார்..

   • அப்புறம் ஏன் இந்த அரசாங்கம் தீபாவளிக்கு என்று ஒரு இலக்கு (150 கோடி) வைத்து சிறப்பு மது வகைகளை அறிமுகப் படுத்தியதாம்?? ஆனால் விற்பனை, இலக்கை மீறியது (220 கோடி!!!) அரசுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும். இந்தச் செய்தி தினமணியில் “குடித்துத் தீர்த்தனர் குடிமகன்கள்” எனவும், தினமலத்தில் “குஷியில் குடிமகன்கள்” எனவும் தீபாவளிக்கு அடுத்த நாள் வெளியானது, நீங்கள் புரட்டிப் பார்க்கலாம்.

 8. இந்தியாவில் கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளின் பின்னாலும் பார்ப்பனீய வெற்றியின் வடிவம் தான் இருக்கிறது. ஊரோடு ஒத்து ஒழுகல் என்பதை எவரும் தாம் விரும்பிச்செய்யும் ஒன்றிற்கு எதிராக எடுப்பதில்லை, தாம் செய்யும் செயலை நியாயப்படுத்தும் நோக்கில் தான் அது கையாளப்படுகிறது. பண்டிகைகளை அதன் பார்ப்பனீய வேரை அடையாளப்படுத்தி எதிர்ப்பது தான் சரியான செயலாக இருக்கும். மாறாக சுற்றுச்சூழல் கேடு, தீ விபத்துகள் எனும் ரீதியில் எதிர்ப்பதும் சரியான செயலாகாது வேறு வடிவங்களில் அதன் உள்ளீடு கொண்டாட்டமாகவே தொடரக்கூடும்.

  தோழமையுடன்
  செங்கொடி

 9.   அய்யா பகுத்தறிவு தீபாவளி எதிர்ப்பாளர்களே.நீங்கள் ஏன் மொகலாயர்களின் இறக்குமதியான ரம்ஜான்,பக்ரித்,மற்றும் வெள்ளைக்காரர்களின் இறக்குமதியான கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகையை எதிர்ப்பதில்லை ?

 10. என்னது லக்கி லுக் என்ற யுவ கிறிஸ்னா முற்போக்கு வாதியா ?? என்ன கொடுமை சார் இதெல்லாம் !! அவர் ஏதோ ஒரு “ஜன ரஞ்ச” பத்திரிக்கை எழுத்தாளர். அம்புட்டு தான் !!

  இந்த தீவாளி சமயத்தில் ரெம்ப மகிழ்ச்சியாக இருந்தவர் தமிழ் ஓவியா தான். தீபாவளி கிடைத்ததால் அது பற்றி பதிவு மூச்சு விடாமல் எழுதி தள்ளினார். கொஞ்சம் மூச்சு விட்டால் எல்லோரும் வீரமணி வாரிசு பற்றி கேள்வி கேட்டுவிடுவார்கள் என்று பயந்து அவர் உலக நாடுகள் தூர பார்வையில் அண்டார்டிக்கா பற்றி எழுதி கொண்டிருக்கிறார் !!!

 11. தீபாவளியை தெரியாமத்தான் நிறைய பேரு கொண்டாடிகிட்டு இருந்தாங்க

  தாலி எப்படி அடிமைச்சின்னம் என தெரியாமல் கட்டிகொள்ளும் மனைவிகளை போல

 12. ஐயா கபிலன், ” தீபாவளி கொண்டாடுறதுல என்ன தப்பு இருக்குன்னு புரியல..அது எங்கள் சமயப் பண்டிகை, அதை கொண்டாடுகிறோம். அவ்வளவே!” வினவு தன் பதிவை படிப்பதற்கு முன் மற்ற‌வர்களின் பதிவை படித்துவிட்டு தொடருங்கள் என்றுதான் எழுதியுள்ள‌து. மேலும் தீபாவளி கொண்டாடப்படுவத்தின் நோக்கத்தையும் விளக்கியுள்ளது. நீங்க என்னாடான்னா என்ன தப்பு இருக்குன்னு கேக்குறீங்க. எனது மனைவி வேறொருவனால் கற்பழிக்கப்பட்டதை எனது கல்யாணநாளாக நான் கொண்டாடுவது சரியா? 

  • அனைத்துப் பண்டிகைகளும் சிம்பிளா பூஜைகளோடு முடித்துக் கொள்ளலாம். இப்படி காசை வாரி இரைக்கத் தேவையில்லை என்பது சரி தான். ஆனால், இப்படிப்பட்ட பண்டிகைகளே நாட்டின் மைக்ரோ எகனாமிக்ஸ் தன்மையை வளர்க்கிறது. சாதாரண பூ வியாபாரி முதல் பெரிய நகைக்கடை வரை அனைவரும் பயனடைகின்றனர். நம் வீட்டிலும், அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். உலகமே பொருளாதார வீழ்ச்சியில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருக்க, பல பில்லியன் டாலர்கள் மானியம் கொடுத்து உயர்த்த பல நாடுகள் திட்டம் தீட்டி வருகிறது. ஆனால், இந்தியாவிலோ, மன்மோகன் சிங் அரசு ஒரு சிறு முயற்சி கூட எடுக்காத நிலையிலும், பொருளாதாரம் ஓரளவு தாக்குப்பிடிப்பதற்கு பண்டிகைகள் ஒரு முக்கிய காரணம்.

   இதை திராவிடர் Vs ஆர்யன் எனக் கருதுவதோ, அல்லது சாதி Vs சாதி எனச் சொல்லுவதெல்லாம் இந்து சமயத்தவரைப் பிரித்தாளும் சூழ்ச்சி. ஆங்கிலேயரும், பெரியாரும் இதைத் தான் செய்தனர்.

   மாதவ்ராஜ் ஐயா அவர்களின் பதிவைப் படித்திருக்கிறேன்.

   • நண்பர் கபிலன்
    முதல் தலைமுறை கேட்ட கேள்விகளுக்கே பதிலில்லை. இதற்குள் அடுத்த சப்ஜக்ட் போய்விட்டீர்கள். ஆனாலும் இப்படி வசமாக மாட்டக்கூடாது!

    //இதை திராவிடர் Vs ஆர்யன் எனக் கருதுவதோ, அல்லது சாதி Vs சாதி எனச் சொல்லுவதெல்லாம் இந்து சமயத்தவரைப் பிரித்தாளும் சூழ்ச்சி. ஆங்கிலேயரும், பெரியாரும் இதைத் தான் செய்தனர்.//

    அக்ரகாரம், மேலத்தெரு, கீழத்தெரு, சேரி, அய்யர் முதல் அருந்த்தி வரை ஆயிரத்து எட்டு சாதிகள் இதெல்லாம் ஏற்கனவே இருப்பதுதான். இதை உருவாக்கியவர்கள் அனந்தராம அய்யரா இல்லை அந்தோணிசாமியா? ஏதோ இந்து சமயத்தை பெரியாரும், வெள்ளைக்காரனும் வந்தா பிரிக்கனும்? ஏற்கனவே அது அப்படித்தானே உள்ளது. இது கூட தெரியாமல் இருக்கும் உங்கள் புலன்றிவை நினைக்கும் போது வெட்கமாக உள்ளது.

    இந்துக்களெல்லாம் ஒன்றாக குடிநீர் கூட பிடிக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். இல்லாத ஒற்றுமையைக் கட்டியமைக்க முசுலீமை எதியாக காட்டுவதுதான் ஆர்.எஸ்.எஸ் தந்திரம். நீங்களும் இந்த எளிய மோசடிக்கு பலியாகி இருக்கீறீர்கள்.

    துக்ளக் படிப்பதை நிறுத்திவிட்டு புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இல்லையினா வினவையாவது தினசரி படிக்கவும். அறிவை மேம்படுத்திக் கொள்ளவும்.

   • ஐயா வினவு,

    மறுமொழிக்கு நன்றி!

    “முதல் தலைமுறை கேட்ட கேள்விகளுக்கே பதிலில்லை. இதற்குள் அடுத்த சப்ஜக்ட்”

    முதல் தலைமுறை கேட்டிருக்கும் கேள்விகள் மிகவும் விரிவானவை. அவற்றில் தெரிந்தவற்றை பதில் சொல்லி இருக்கிறேன். தெரியாதவைகளை தேடிப் படித்து ஆராய்ந்து மறு சந்தர்ப்பத்தில் பதில் தருவேன். அதுமட்டுமல்ல அடுத்த சப்ஜெக்ட்டும் இந்த பதிவுக்கு சம்பந்தமான சப்ஜெக்ட் தானங்க வினவு…முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரம், தீபாவளிச் சந்தை என நீங்கள் பதிவு செய்திருக்கிறீரே..!

    தேவர் தெரு, முதலியார் தெரு, கவுண்டர் தெரு, பிள்ளை தெரு என்றெல்லாம் கூட இருக்குதுங்களே? சாதிக்குள்ளேயே உட்பிரிவுகள் இருக்குங்களே? அதுவும் அனந்தராம ஐய்யர் தான் டிசைன் செஞ்சாரா?

    “இந்துக்களெல்லாம் ஒன்றாக குடிநீர் கூட பிடிக்க முடியாது என்பதுதான் யதார்த்தம்.”

    சாதிக் கொடுமைகள் பெருமளவில் இருந்தது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால்,கல்வியறிவு, பொருளாதார முன்னேற்றம் காரணமாக, பல்வேறு மக்கள் பல்வேறு தொழில்களுக்கு செல்வதனால் அந்த நிலைமை இப்பொழுது மாறி வருகிறது என்பதும் யதார்த்தம் தான் ஐயா.

    ” இல்லாத ஒற்றுமையைக் கட்டியமைக்க முசுலீமை எதியாக காட்டுவதுதான் ஆர்.எஸ்.எஸ் தந்திரம். நீங்களும் இந்த எளிய மோசடிக்கு பலியாகி இருக்கீறீர்கள். ”

    என்னுடைய மறுமொழிகளில்,மற்ற சமயத்தவரை எதிரியாக சொல்லவே இல்லை. தவறாகவும் சொல்லவில்லை. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். எங்க இருக்கு ? அப்படியே இருந்தாலும் லட்சிய திமுகவை விட அதில் தொண்டர்கள் மிகக் குறைவாகத் தான் இருப்பார்கள். இதுல, அவங்க எங்க நம்மல வந்து மோசடி செய்றது?

    “துக்ளக் படிப்பதை நிறுத்திவிட்டு புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இல்லையினா வினவையாவது தினசரி படிக்கவும். அறிவை மேம்படுத்திக் கொள்ளவும்.”

    தினமும் சாம்பார் சாதத்தையே சாப்பிட்டோம்னா, உலகத்திலேயே சாம்பார் சாதம் தான் உசத்தின்னு சொல்லிடுவோம். அதனால, சாம்பார், பிரியாணி, பிட்சா என எல்லாவற்றையும் பார்த்த பிறகு தான் எது நல்ல உணவுன்னு தெரியுங்க ஐயா : )

    மேலும், ரதி அவர்கள் சொன்னதுக்கு கருத்து தெரிவிக்கவில்லை.அதற்கான காரணம் இந்த வரிகள்.

    “அது தவிர, நாங்கள் ஈழத்தில் சுதந்திர காற்றை சுவாசிக்கும் நாள் தான் எங்களுக்கு தீபாவளி, பொங்கல் எல்லாமே. “

   • //தேவர் தெரு, முதலியார் தெரு, கவுண்டர் தெரு, பிள்ளை தெரு என்றெல்லாம் கூட இருக்குதுங்களே? சாதிக்குள்ளேயே உட்பிரிவுகள் இருக்குங்களே? அதுவும் அனந்தராம ஐய்யர் தான் டிசைன் செஞ்சாரா?//

    வெள்ளைக்காரனும், பெரியாரிஸ்டுகளும் கண்டுபிடிச்ச மாதிரி நீங்க சொல்றீங்க?

    அனந்தராம அய்யர் உருவாக்கவில்லை. ஆனால் அனந்தராம அய்யரை உயர்வான ஒரு அந்தஸ்த்தில் வைப்பதற்கு காரணமாக ஒரு சித்தாந்தம், அதற்கான ஒரு மதம்(பார்ப்பனிய மதம்) உருவாக்கியதுதான் இந்த பிரிவினை.

    //அனந்தராம ஐய்யர் தான் டிசைன் செஞ்சாரா?

    “இந்துக்களெல்லாம் ஒன்றாக குடிநீர் கூட பிடிக்க முடியாது என்பதுதான் யதார்த்தம்.”

    சாதிக் கொடுமைகள் பெருமளவில் இருந்தது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால்,கல்வியறிவு, பொருளாதார முன்னேற்றம் காரணமாக, பல்வேறு மக்கள் பல்வேறு தொழில்களுக்கு செல்வதனால் அந்த நிலைமை இப்பொழுது மாறி வருகிறது என்பதும் யதார்த்தம் தான் ஐயா.//

    கபிலன் சாதி மறுப்பு திருமணம் செய்வார் அல்லது செய்தார் என்று நம்புவோமாக.

    இந்தியாவில் அன்றாடம் நடக்கும் தலித்துக்கள் மீதான வன்முறை(இவற்றில் பெரும்பாலானவை இந்துத்துவ சங் பரிவார சக்திகளால் செய்யப்படுகின்றன)

    http://atrocitynews.wordpress.com/category/dalit-atrocity/

    பூனை கண்ணை மூடிக் கொண்டது போல இல்லாமல் அடுத்த மனிதர்களின் சமூகத்தின் அவலங்களுக்கு விடை தேட முயல வேண்டும்.

    //என்னுடைய மறுமொழிகளில்,மற்ற சமயத்தவரை எதிரியாக சொல்லவே இல்லை. தவறாகவும் சொல்லவில்லை. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். எங்க இருக்கு ? அப்படியே இருந்தாலும் லட்சிய திமுகவை விட அதில் தொண்டர்கள் மிகக் குறைவாகத் தான் இருப்பார்கள். இதுல, அவங்க எங்க நம்மல வந்து மோசடி செய்றது?//

    ஆர் எஸ் எஸ் பார்ப்பனிய சித்தாந்தத்தின் அமைப்பு வடிவம். அது ஒரு சித்தாந்தமாக உங்களிடம் கூட பெரியளவில் வெளிப்படுகிறது. இந்திய அரசே அப்படியொரு சித்தாந்தத்தை அடியொற்றும் ஒன்றுதான்(நீதிமன்றங்களின் பல்வேறு தீரி(ர்)ப்புகள். சமீபத்தில் மிக அதிகமாக ஆர் எஸ் எஸ் குரலிலேயே பேசும் நீதிமன்றங்கள் இதற்கு ஒரு துளி உதாரணம்).

    //தினமும் சாம்பார் சாதத்தையே சாப்பிட்டோம்னா, உலகத்திலேயே சாம்பார் சாதம் தான் உசத்தின்னு சொல்லிடுவோம். அதனால, சாம்பார், பிரியாணி, பிட்சா என எல்லாவற்றையும் பார்த்த பிறகு தான் எது நல்ல உணவுன்னு தெரியுங்க ஐயா : )//

    சாதம் சாப்பிடுவதில், உண்ணக் கூடியவற்றை சாப்பிடுவதில் பிரச்சினையில்லை. இல்லையென்றால் கான்ஸ்டிபேசன் முதல் பல சிக்கல் உருவாகும்.

 13. தீபாவளி – தமிழர்களின் திருவிழா அல்ல! ‘இந்துக்களின்’ திருவிழா.

  பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான், நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார்

  – பண்பாட்டு துறை ஆய்வாளர் தொ. பரமசிவன், இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தார், பிறகு, திருநெல்வேலியில் உள்ள மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியராகவும், பதிவாளராகவும் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.

  ****

  தீபாவளி

  இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, என்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் ‘தேசிய திருவிழா’ போலக் காட்டப்படுகிறது. ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவே தான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில் கூடத் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் ‘இந்து’க்களின் திருவிழாவாக அமைகிறது.

  தமிழர் திருவிழா – இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்கைன் பழைய மதங்களாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலைபெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

  தீபாவளி, தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியின் அடையாளமான வெடி, அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளீ) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருகார்த்திகைத் திருவிழாவே.

  நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். இந்த நாளே பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் இருபத்து நாலாம்
  தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும். தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுகொண்டார். ஆகவே, பிராமணீய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மாகாவீரர் இறந்த நாளையே அக்கும். விசயநகரப் பேரரசான, ‘இந்து சம்ராஜ்ஜியம்’, தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

  இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் ‘பக்தி சிரத்தை’யுடன் கொண்டாடுகின்றனர். வடநாட்டு இந்துக்களிடமும் சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ்நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும் சடங்காகும். தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல ‘கங்கா ஸ்நானம்’ செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

  ‘நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா’ என்று பாரதி தாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

  – தொ.பரமசிவன் எழுதிய பண்பாட்டு அசைவுகள்’ லிருந்து. பக்.58, 59

  ****

  http://socratesjr2007.blogspot.com/2009/10/blog-post.html

  • தீபாவளி தமிழர் திருவிழா ஆகாது என்ற ஆய்வை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டமைக்காக தோழர் குருத்துவுக்கு நன்றி

 14. அரசியல் ரீதியாக ஒன்றுபடும் பலர், பண்பாடு எனும் பொழுது, நிறைய சறுக்குகிறார்கள். தன்நிலை உரசிப் பார்க்க நல்ல கட்டுரை.

  //முற்போக்கு மதிப்பீடுகளை ஒரு இயக்கமாய் பின்பற்றி வாழும் பலம் ஒரு தனிநபராய் நின்று ஒழுகுவதில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை.//

  உண்மை தான். அதுவும் அந்த இயக்கத்தின் பார்ப்பினிய எதிர்ப்பையும் சார்ந்ததாக இருக்கிறது.

 15. I dont understand why you are against Diwali. I firmly believe Ramyana is a story. It is not history. If i believe in Ramayana then i will not celebrate Diwali but i am not believe in it so i am celebrating with my kids.

 16. அட இது பண்டிகை சீசனா! தீபாவளி வந்து போய்விட்டதா. சரி, நானும் என் பண்டிகை பற்றிய அனுபவத்தை சொல்கிறேன். எனக்கு விவரம் தெரியாத வயதில் நான் ஈழத்தில் இருந்தபோது ஓர் வேளாள சமூகத்தை சேர்ந்தவர் கேட்டார், நீங்கள் தான் வேளாளர் இல்லையே பிறகேன் தைப்பொங்கல் கொண்டாடுகிறீர்கள் என்று. நியாயமான கேள்விதான் என்று என் மனதுக்கு தோன்றியது. சரி, தீபாவளி ஏன் நாங்கள் கொண்டாடுகிறோம்? எனக்கு புராண இதிகாச கதைகள் எல்லாம் தெரியாது. ஆனாலும் செவிவழியே கேட்டதில் முருகனோ அல்லது சக்தியோ யாரோ ஒரு அசுரனை கொன்று அப்பாவிகளை காத்தார்களாம். நான் என் தாயாரிடம் கேட்டேன் நாங்கள் முருகனின் டீமா அல்லது அசுரனின் டீமா? என்று. என் தாயாரின் புரிதல் நாங்கள் எப்படி அசுரனின் டீமாக இருக்கமுடியும். நாங்கள் முருகனின் டீம் தான். ஆனால், நான் பிற்காலத்தில் தெரிந்துகொண்டேன் நான் முருகனின் டீமில் இருக்கவேண்டுமானால் குறைந்தபட்சம் பிராமண அல்லது வேளாள சமூகத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டுமாமே? தவிர நாங்கள் அசுரனின் டீமாகத்தான் புராண புருடாக்களில் விவரிக்கப்பட்டிருக்கிறோமாமே. ம்ம்ம்ம்ம்…. இருக்கட்டும், இருக்கட்டும்.   
  பிறகு, இந்த தமிழ் வருடப்பிறப்பு அதில் கூட ஈழத்தமிழர்களுக்கு குழப்பம் தான். எங்கள் புதுவருடம் தமிழ் தைமாதமா அல்லது சித்திரை மாதமா? ஏனென்றால் சித்திரை மாத தொடக்கம் தான் சிங்கள சமூகத்திற்கும் வருடப்பிறப்பாக இருக்கிறது. அது தமிழர்களுக்கு புதுவருடம் கிடையாது. தைப்பொங்கல் தான் புதுவருடம் என்கிறார்கள். ஆக இதிலும் குழப்பமா? தைப்பொங்கல் உழவர் திருநாள் என்று ஒரு வழக்கு ஈழத்தில் இருக்கிறது. நான் தான் உழவர் ஜாதியும் கிடையாதே. அப்ப, எனக்கென்று ஓர் பண்டிகை கிடையாது. இது தான் யதார்த்தம். 
  நான் பிறப்பால், இறப்பால், இருமினால், தும்மினால் ….என்று எல்லாவகையிலும் தமிழ் தான். ஆனால், பண்டிகை என்று வரும் போது அதை கொண்டாட எனக்கென்று ஓர் அடையாளம் தேவைப்படுகிறது. அதற்கென்று ஓர் புராண அல்லது புராதன புருடா கதை தேவைப்படுகிறது. அது எங்களிடம் மிஸ்ஸிங். அன்று முடிவெடுத்தேன், நான் எந்தவொரு பண்டிகையும் கொண்டாடுவதில்லை என்று. போங்கப்பா! நீங்களும் உங்கள் பண்டிகைகளும். 
  நான் உழைத்ததில் நாலு காசு கையில் மிஞ்சி இருக்கிற நாள் மட்டுமே எனக்கு இன்றுவரை பண்டிகை நாள். 
  அது தவிர, நாங்கள் ஈழத்தில் சுதந்திர காற்றை சுவாசிக்கும் நாள் தான் எங்களுக்கு தீபாவளி, பொங்கல் எல்லாமே. ஆனாலும், பெரும்பாலான ஈழத்தமிழர்கள் போல்  நான் என் வாழ்நாளில் மிகவும் மதிக்கும் ஓர் நாள் கார்த்திகை 27 ம் நாள். 

  • ஈழத்திலும் தீபாவளி கொண்டாடுவதற்கு ‘மேல்சாதி’யாக இருக்க வேண்டும் என்ற உண்மையை பகிர்ந்து கொண்டமைக்காக ரதிக்கு நன்றி! திருவாளர் கபிலன் இதை யார் செய்த சதி என்பதை ஜீக்களிடம் கேட்டுக்கொண்டு தெரிவிப்பார்.

 17. what is the true story of deepavali? naragasuran or ramayanam? y two stories ? either both are wrong. or one of them is wrong?

  who goes to temple for deepvali? i dont know anyone who does that . in north india they do some pooja. as far as i know in tamilnadu , it is celebrated aas a funday for kids, eat sweets, be friendly with neighbors and have fun with fireworks.

  in usa too, people celebrate christmas as holiday, not as religious thing. thye dont go to church mostly. only indian christians and indian television bore you with jesus christ songs during christmas.

  may be we can tel karunanidhi to shift depavali to pongal day. just like tamil new year. kids will enjoy.

  another idea. we can still celebrate deepavali day as ‘THE DAY JAYENDRAN WENT TO JAIL’ and celebrate with fireworks 🙂 🙂 🙂 🙂

  • //it is celebrated aas a funday for kids, eat sweets, be friendly with neighbors and have fun with fireworks.//

   yeah!!!!!, it would be really nice to have a festival like that. No religion, No God, No politics.  

 18. இதுல நகைச்சுவை என்னான்னா அவவன் தீபாவளி பத்தி ஒரு கதை சொல்றான் வட நாட்டுகறான் ஒன்னு சொல்றான் தென் நாட்டுக்காரன் ஒன்னு சொல்றான். அகமொத்ததில் எல்லாம் ஒரே பார்ப்பனிய கன்றாவி தான். நல்ல கட்டுரை வினவு வாழ்த்துகள்.

  http://theanarchyfix.wordpress.com

 19. ம.க.இ.க குடும்பங்கள் நவம்பர் புரட்சி தினத்தினை வெடி வெடித்து, புதுத் துணி உடுத்தி, பலகாரங்கள் தின்று கொண்டாடக் கூடாது என்று யாரும் சொல்லவில்லையே. தீபாவளி கொண்டாடுபவர்கள் எல்லாம் முஸ்லீம்
  விரோதிகள் அல்லது இந்த்துவ ஆதரவாளர்கள் என்றால் நவம்பர் புரட்சியைக்
  கொண்டாடுபவர்கள் எல்லாம் ஸ்டாலின் போல் கொடுங்கோலராக மாறுவார்கள் என்று சொல்ல முடியுமே.கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறித்துவர்கள், தீபாவளி
  கொண்டாடும் இந்துக்கள், ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளும் முஸ்லீம்கள் உங்களைப் போல் நினைப்பதில்லை. ஒருவர் கொண்டாட்டத்தை இன்னொருவர் மதிக்கும் பண்பு இருக்கிறது. அது உங்களிடம் இல்லை. யாரும் தீபாவளியன்று நரகாசுரன் ஒழிக, மருதையன் ஒழிக, கம்யுனிசம் ஒழிக என்று உரத்து கூவுவதில்லை. உங்களுடைய நவம்பர் புரட்சி கொண்டாட்டத்தையும் தீபாவளி கொண்டாடுபவர் மதித்து வாழ்த்தினால் அவர்(களை) என்ன செய்வீர்கள்?.

  அவரை மோடி என்று திட்டுவீர்களா 🙂

  “அதற்கு சான்று. சுருங்கக்கூறின் இந்தியாவில் பார்ப்பனியத்தின் இந்து மத மரபு, அதை எதிர்க்கும் புரட்சிகர மரபு என்று இரண்டுதான் இருக்க முடியும்.”

  கிறித்துவம்,பெளத்தம்,இஸ்லாம் ஆகிய மார்க்கங்களை பின்பற்றுவோர் இதில் எந்த மரபில் இருக்கிறார்கள் என்பதை விளக்குங்கள். வீரமணி பார்பனிய இந்து மரபை எதிர்க்கிறார்.ஆகவே அவர் புரட்சிகர மரபில் அதாவது உங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவரா?. அவர் நவம்ப்ர புரட்சியைக் கொண்டாடுகிறாரா? ரத்தன் டாட்டா பார்சி ஆகவே புரட்சிகர மரபை சேர்ந்தவர் என்று எடுத்துக் கொள்ளலாமா?

  “த.மு.எ.க.ச கூட்டத்தில் தாலிகளும், மல்லிகையும் ‘மணம்’ பரப்புகின்றன.”

  ம.க.இ.க வில் உள்ள பெண்கள் மாவோ விதித்த உடை,முடி அலங்காரத்தினைத்தான் பின்பற்றுகிறார்களா?. புடவை/சுடிதார் அணிவதில்லையா?.தலைமுடியை ஆண்கள் போல் கிராப் கட் செய்துவிட்டார்களா.
  இப்போது பல ஆண்கள் நீள முடி வளர்த்து அதை சிறிதாக பின்னிக் கொள்கிறார்கள் அல்லது முடிகிறார்கள். அவர்களையும் திட்டி அதுவும் பார்பனியம் என்று வினவு எழுதக் கூடும் .

 20. தமிழ் பண்டிகையோ இந்து பண்டிகையோ, மக்கள் சந்தோசமா இருந்த சரி தாணு விடாம, இந்த ஆராய்ச்சி தேவையா?

  வருடத்துல ஒரு நாள் சந்தோசமா எதனை பேர் தீபாவளி கொண்டாடுறாங்க.

  • //தமிழ் பண்டிகையோ இந்து பண்டிகையோ, மக்கள் சந்தோசமா இருந்த சரி தாணு விடாம, இந்த ஆராய்ச்சி தேவையா?//

   இத இதத்தான், டெங்கு குட்ட படவாப்பய, ” பூனை கறுப்பா இருந்தா என்ன? வெள்ளய்யா இருந்தா என்ன? எலியப் புடிச்சிச்சினா நல்ல பூனைதான்னு சொன்னான். (” It doesn’t matter if a cat is black or white, so long as it catches mice”) சரி தானே தோழர் வினவு?

   • தோழர் ui, சரியான நேரத்தில் சீனத்தின் டெங்கு கிருமியை நினைவூட்டியமைக்கு நன்றி

 21. தீபாவளியை அதன் உண்மை அர்த்தம் புரியாதவர்கள் பெரும்பான்மையோர் கொண்டாடி கொண்டு தான் இருக்கிறார்கள்.

  அதன் உண்மை அர்த்தம் புரிந்த பலர் தீபாவளியை கொண்டாட ஆரம்பிப்பது, ஊசலாட்டம் தான். வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் முடிவெடுக்கும் பொழுது, கொள்கையை முன்நிறுத்துவதா! அல்லது விட்டுக்கொடுப்பதா? என்ற போராட்டம் வரத்தான் செய்யும். கொள்கையை இறுக பற்றி பிடிப்பவர்கள் புரட்சிகர மரபுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருகிறார்கள். விட்டுக்கொடுப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து, சராசரிகளாக மாறிவிடுகிறார்கள்.

  ‘என் வாழ்வில் விட்டுக்கொடுக்காமல் போராடிய காலங்கள் எல்லாம், இப்பொழுது நினைத்துப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது” என்று எங்கள் பேராசிரியர் ஒருமுறை சொன்னது இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

 22. பத்மாசுரன் நம் உறவாளி
  நரகாசுரன் ஒரு போரளி
  பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த
  நாம் பங்களியை
  பார்ப்பனியம் தீர்த்துக் கட்டியதே-தீபாவளி
  “அடப்பாவி! எம் தொல்குடியை அழித்தவனே” என்று இதயம் சூடாகி பார்ப்பனியத்திற்கெதிராகப்
  படை கட்டித் திரளாமல்
  நன்றிக்கடனைக் காட்டாமல்….
  காலைக்கடனும் கழிக்காமல்
  கொன்றவனை வணங்கி
  இதயம் நல்லெண்ணெய்யில்
  வடைதட்டி கொலை நாளை
  வரவேற்கும் கேவலமே!
  கோபாவளி கொள்ளாமல்
  தீபாவளி கொண்டாடும்
  திராவிட அவமானம்
  (நன்றி தோழர். துரை.சண்முகம்)

  பதிவளர்கள் அனைவருக்கும்
  கோபாவளி வாழ்த்துக்கள்

 23. கொல்லப்பட்டவன்/கெட்டவன்லாம் உங்க உறவுனு சொல்லிக்கிறது கூட ஒரு வகையில் தாழ்வு மனப்பான்மைதான்…

  வருஷா வருஷம் தவறாம தீபாவளிக்கு பதிவு போடுறீங்க பாருங்க, அது கூட ஒரு சம்பிரதாயம் தான். வாழ்க தீபாவளி…

  அனைவருக்கும் தீபஒளி நல்வாழ்த்துக்கள். நம்பாதவங்களுக்கு (இருக்கவே இருக்கு) விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்… 😀

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க