Wednesday, March 29, 2023
முகப்புமருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!
Array

மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!

-

மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!

vote-012கி.பி 1801- அக்டோபர் மாதம் 24ஆம்தேதி  பகல்பொழுது – இன்றைய சிவகங்கை மாவட்டம், திருப்பத்துர் நகரின் பேருந்து நிலையம், எதிர்புறம் நினைவுச்சின்னம் அமைந்துள்ள முச்சந்தியில் பெரியமருதுவும், அவரது தம்பி சின்னமருது என்று அழைக்கப்படுகிற சின்னப்பாண்டியனும் துக்கிலிடப்பட்டார்கள்.

அவர்களோடு சிறைப்பிடிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட அவரது உறவினர்களான நுற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். அன்றும் அதன் பின்னரும் பிரிட்டிஷாரால் கொலை செய்யப்பட்டவர்கள் மட்டும் சுமார் ஐநுறுபேர்களுக்கும் மேல் இருக்கும். தமிழக வரலாற்றில் அதற்கு முன்னரும், பின்னரும் நடந்திராத ஒரு கொடூர நிகழ்ச்சி அது.

24ஆம் தேதி துக்கிலிடப்பட்டு இரண்டு நாட்களாகத் தொங்கவிடப்பட்டிருந்த மருதிருவர்களின் உடல்கள் 27ஆம் தேதி கீழிறக்கப்பட்டது. அவர்களது தலைகள் துண்டிக்கப்பட்டு இன்று குருபூசை நடக்கிற காளையார்கோவில் கோவிலின் முன்பாக உள்ள சிறிய அறைக்குள் அடக்கம் செய்யப்பட்டது.

சற்று நேரம் நினைத்தாலுமே நெஞ்சைக் கீறிவிடுகிற இந்தத் துயரத்திற்கு அந்த மாவீரர்களை தள்ளிவிடக் காரணமாக இருந்தது இரண்டு விசயங்கள்.

  1. மருதிருவர்களின் விடுதலைப் போராட்டத் தன்மான உணர்வு.
  2. ஆங்கிலேய அடிவருடி புதுக்கோட்டைத் தொண்டைமான் கும்பலின் துரோகம். (ஆங்கிலேயருக்கு எழுதிய கடிதத்தில் சின்னமருதுவை நாய் எனத் திட்டுகிறான் துரோகி தொண்டைமான்.)

இந்தியத் துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் அன்னியருக்கு எதிராக முதன்முதலாக ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டது சின்னமருதுதான். நான்கு மொழிகள் தெரியும் அவனுக்கு. ஏழைமக்கள் கண்ணீரில்லாத வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் கும்பினியாரை எதிர்த்துப் போராடவேண்டும் என முழங்கியவன் அவன்.  உடம்பில் ஐரோப்பியரத்தம் ஓடாதவர்கள் எனது பேச்சைக் கேட்பார்களாக என்று அழைத்தான். ஆங்கிலேயருக்கு சேவகம் செய்பவர்கள் ஈனப்பிறவிகள் என்றான். கும்பினி ஆட்சி நமது நாட்டைப் பஞ்சத்திலும், பசியிலும் தள்ளிவிடும் என எச்சரித்தான். கும்பினியை இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தே விரட்டியடிக்க சாதி மத பேதமின்றி ஒன்றுதிரள வேண்டும் என அறைகூவினான்.

தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றைப் படிக்க நினைப்பவர்கள் முதலில் சின்னமருதுவின் ஜம்புத்தீவுப் பிரகடனம் 1801-லிருந்து துவங்குகள். நீங்கள் அதை அவசியம் படிக்க வேண்டும். காரணம், வரலாறு மீண்டும் திரும்புகிறது. 1990ல் இந்தியா கையெழுத்திட்ட காட்-டங்கல் ஒப்பந்தம் தன்னைப் பன்னாட்டு நிறுவனங்களின் அடிமையாக ஒப்புக் கொடுத்துவிட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் நலன்களுக்காக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற திட்டத்தை ஏற்றுக் கொண்டு இந்தியாவின் கதவுகளை அகலத் திறந்து வைத்து அள்ளிச் செல்லுங்கள் எனச் சொல்லி வீசும் எலும்பைக் கவ்வக் காத்திருக்கும் நாய்களைப் போல மண்டியிட்டுக் கிடக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.

அன்றைய காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய மருதிருவர்களின் தன்மானமும், வீரமும், நாட்டுப்பற்றும் இன்றும் நமக்குத் தேவைப்படுகிறது. அடிமைத்தனத்தை மாற்றம் (Change) வளர்ச்சி (Development) என்று சொல்லி, மறைத்துப் பேசும் கோழைத்தனம் கொண்டவர்களாக இந்திய இளைஞர்கள் வடிவமைக்கப்படும் இந்நேரத்தில் மருதிருவர்களின் வீரம் நமக்கு ஒரு வழிகாட்டியாகும் தகுதியுள்ளதாக இருக்கிறது. நம்மை தன்மானம் உள்ளவர்களாக மாற்றக் கூடிய சக்தியுள்ளதாகவும் இருக்கிறது.

ஆனால் இதற்கும் மருதுபாண்டியர் குருபூசைக்கும் மயிரளவும் தொடர்பில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் இந்த குருபூசைக் கலாச்சாரம் சிவகங்கையில் தொடங்கப்பட்டது. சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், சாதி உணர்வை, சாதிவெறியாக மாற்றவும் பசும்பொன்னில் குருபூசை நடைபெறுகிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளின் உரிமைக்கான குரல் எழுப்புதலில் படுகொலை செய்யப்பட்ட இமானுவேல் சேகரனாரின் நினைவை ஏந்தி ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலை உணர்வைப் பிரதிபலித்து பரமக்குடியில் குருபூசை நடைபெறுகிறது. இவ்விரண்டும் சமப்படுத்த முடியாத குருபூஜைகள்தான்.

என்றாலும் மருதிருவர்களின் குருபூசை என்பது முழுக்க, ஓட்டுக்கட்சி அரசியலில் நுழைந்து பதவி சுகத்தை அனுபவிக்கவும் மக்கள் பணத்தைச் சுருட்டவும் முடியாமல் ஏங்கித்திரியும் சாதிய அமைப்புகளால் பரபரப்பாக நடத்தப்படுகிற குருபூசையாகும். தேர்தல் காலம் அல்லாததால் இம்முறை நடந்த விதம் இதை விளக்கமாக வெளிப்படுத்துகிறது.

துயரமான முடிவிற்கு மருதிருவர்களை வெகுவிரைவாக அழைத்துச்சென்ற புதுக்கோட்டை துரோகி தொண்டைமானின் துரோகத்தின் பங்காளிக்கூட்டத்தினர்தான் இன்று மருதிருவர்களின் குருபூசைக்கு அணிதிரளுகிறார்கள். பசும்பொன் முத்துராமலிங்கம் படம் பொறித்த மஞ்சள் கொடிகளும், தேவர் வாழ்க! தேவர் படை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா! பனமரத்துக்கே வவ்வாலா! தேவருக்கே சவாலா! என்கிற முழக்கங்களும் இம்முறை அகமுடையார் சாதியினரை விடவும் வெகு அதிகமாகவே வெளித்தெரிந்தன.

மருதிருவர்களின், தன்மானத்தையும், வீரத்தையும், நாட்டுப்பற்றையும் தூசி அளவுகூட சிந்தனையில் கொள்ளாத இந்த வெற்றுச் சாதி வெறி ஆரவாரகும்பல்தான் போதையிலே கூச்சலிடுகிறது, கும்மாளமிடுகிறது. ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த போலீசோ, கத்தி ஓய்ந்துபோன கும்பலை அடித்துவிரட்டுவதைப் போல பாவனை செய்து முறுக்கேற்றிவிடுகிறது. வழியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடங்கள் இல்லதாதால் ஒரு தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்தின் கண்ணாடிகள் மட்டும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.

தனியார் பேருந்துகள் தங்களது போக்குவரத்தை நிறுத்திக் கொண்டாலும், அரசு பேருந்தின் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் பேருந்துகளை துணிச்சலாக எடுத்துச் சென்றனர். இருப்பினும் உடைக்கப்பட்ட பேருந்துகளைக் கொஞ்சமும் கவனியாமல் திரிந்தது போலீசு. இதனால் அதிருப்தி அடைந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இரவு 7மணிக்கு மேல் பேருந்துகளை எடுக்க மறுத்து முறையிட்டனர். கிராமங்களுக்குச் செல்லும் பலபேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. மதுரை போகும் தனியார் பேருந்துகள் மேலூர் வழியாகச் சென்றன. ஊர் திரும்ப முடியாமல் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பொதுமக்கள் பலரும் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் போலீசும், அரசும் இது குறித்து கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மேற்கே உசிலம்பட்டியைத் தாண்டியும், தெற்கே முதுகுளத்துரைத் தாண்டியும், கிழக்கே திருவாடனையைத் தாண்டியும், உள்ள கிராமங்களிலிருந்து நுற்றுக்கணக்கான இளைஞர்கள் வாகனங்களிலேயே வரவழைக்கப்பட்டிருந்தனர். தொடர் ஜோதி ஓட்டம் பலபகுதிகளிலிருந்தும் வந்தன. மஞ்சளும், பச்சையும், இணைந்த வண்ணங்களில் அவர்களின் சீருடைகள் இருந்தன. மூவேந்தர் முன்னேற்றக் கழக டாக்டர். சேதுராமனின் சங்கக் கொடியும், ஸ்ரீதர் வாண்டையாரின் சங்கக் கொடியும் கட்டிய வாகனங்கள் தான் அதிகமாகச் சென்றன. அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரசு கொடிகள் கட்டிய கார்கள் ஒன்றிரண்டே சென்றன. சென்ற வருடம் தேர்தல் காலம் ஆகையால் ஓட்டுக் கட்சிகளின் கொடிகள் கட்டிய கார்களும், ஒட்டுக்கட்சிகளின் தலைவர்களின் வருகையுமே மிக அதிகமாக இருந்தது.

நகரங்களில் நுழைந்தவுடன் சமீபத்தியச் சினிமா பாணியிலான ஆபாசக்  குத்தாட்டம் போட்டுக்கொண்டே இளைஞர்கள் ஊர்வலமாய் வந்தனர். அவர்களின் ஆட்டத்திற்கு தங்களது பறை மற்றும் டிரம் செட் மூலம் தாளம் இசைத்து வந்தனர் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள்.கொள்வினை கொடுப்பினை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் இரண்டு சாதியினரும் குத்து வெட்டுப் பலிகொடுத்தும் பலிகொடுக்கவும் காத்துக் கொண்டிருக்கிருக்கின்றனர். ஆனால் ஊர்வலத்தில் மூ.மு.கவினரோ, முக்குலத்தோர் வாழ்க என கோசம் போட்டுக் கொண்டு ஆடினர்.

இந்தக் குருபூசையின் பேரைச் சொல்லி கோடிக்கணக்கான ரூபாய்கள் நன்கொடையாகத் திரட்டப்பட்டுள்ளது. அவற்றில் சிறிதளவு மட்டும் செலவு செய்யப்பட்டு (டீசல், உணவு, வாடகை, சாராயம்) மீதம் அப்படியே சுருட்டப்படுகிறது. பெரிய சங்கங்கள் முதல் கல்லுரி மாணவர்கள் வரை இதுதான் நிலை. சாதி, பிழைப்புவாதிகளுக்கான தொழிலாகப் பயன்படுவதை இதிலிருந்தும நாம் அறியலாம். சாதியின் பெயரால் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளுக்கான திருவிழாவாக மருதிருவர்கள் குருபூசை நடக்கிறது. அந்த வீரமிக்க   மருதுபாண்டியர்களை இதைவிடக் கேவலப் படுத்தக் கூடியது வேறு எதுவும் இல்லை

வரும் ஆண்டுகளில் முறுகல், மோதல் எனத் துவங்கி பின்னர் பெரிய கலவரங்களும் நடைபெறலாம். எதிர்காலத்தில் அப்படியொரு நிலையை உருவாக்க சாதிய அமைப்புகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியொரு பகைச் சூழ்நிலையும், பீதியும் மக்களிடையே நிலவவேண்டுமென்று ஆடு நனைவதைப் பார்த்து அழும் ஓநாய் போல அரசாங்கமும் ஆர்வத்தோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வருகிறது.

இதைத்தடுக்க மருதிருவர்களின் வரலாற்றை அறிந்து, அன்னியமோகம் எனும் அடிமைப்புத்தியைச் சுட்டெரித்து, மறுகாலனி ஆதிக்கத்திற்கு எதிராய் போராட, மருதிருவர்களின் பெயரால் மக்களை அழைக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது.

குருசாமி மயில்வாகனன்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

தியாகி இம்மானுவேல்சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!

சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!

சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !

இந்து மதம் கேட்ட நரபலி !

ஆலயத்திற்குள் மட்டுமா, கருவறைக்குள்ளும் நுழைவோம்!

முத்துராமலிங்கன் என்கிற தேவர் சாதிவெறியனுக்கு கீற்று தளம் வக்காலத்து !

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

  1. //மேற்கே உசிலம்பட்டியைத் தாண்டியும், தெற்கே முதுகுளத்துரைத் தாண்டியும், கிழக்கே திருவாடனையைத் தாண்டியும், உள்ள கிராமங்களிலிருந்து நுற்றுக்கணக்கான இளைஞர்கள் வாகனங்களிலேயே வரவழைக்கப்பட்டிருந்தனர். தொடர் ஜோதி ஓட்டம் பலபகுதிகளிலிருந்தும் வந்தன.//
    கண்டிக்க வேண்டிய நடைமுறைக்கு ஏன் இத்தனை விவரங்கள். ஆபாசம்.

    //சாதி, பிழைப்புவாதிகளுக்கான தொழிலாகப் பயன்படுவதை இதிலிருந்தும நாம் அறியலாம். சாதியின் பெயரால் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளுக்கான திருவிழாவாக மருதிருவர்கள் குருபூசை நடக்கிறது. அந்த வீரமிக்க மருதுபாண்டியர்களை இதைவிடக் கேவலப் படுத்தக் கூடியது வேறு எதுவும் இல்லை//

    குடிப்பெருமையைச் சொல்லி காசுக்குக் கூவும் அப்பாவிகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். வன்மையாகச் சாட வேண்டிய போக்கு, இதுதான் குடிச் சிக்கல்களின் ஊற்றுக் கண்.

  2. மருதிருவர்கள் பற்றிய அருமையான வரலாற்றுத் பதிவு!

    “ஜம்புத்தீவுப் பிரகடனம்”- இதைப் பற்றி கொஞ்சம் சொல்லி இருக்கலாம் !

    எல்லா சாதிக்காரங்களும், ஒவ்வொரு சமயத்துல ஒவ்வொரு காரணத்துக்காக ஊர்வலம் போறாங்க. இவர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்ல முடியாது. ஒட்டுமொத்தமா எல்லாரையும் தான் சொல்லணும்!

  3. தேவர் சாதிவெறி – மதுரை டூ சென்னை வழி ஆண்டிபட்டி-

    சென்னையில் முன்பெல்லாம் பெரிய சாலைகளில் மட்டுமே தேவர் குருபூசை பேனர்கள் இருந்தன. இப்பொழுது சென்னை புறநகர்கள், நகர்கள், சந்துகள் என பல இடங்களிலும் வண்ணமயமான பேனர்களும் முளைத்துள்ளது. தேவர் பூசை முன்னிட்டு பேனர்கள் மட்டும் இல்லாது சில பகுதிகளில் புதிதாக தேவர் இளைஞர் சங்கங்களும் முளைத்துள்ளன. உள்ளூரில் பக்கத்து தெருவில் உள்ளவனை வெட்டுவதற்கு சங்கமா சேர்ந்தால் அது வீரமா? வீரத்தை காட்டுவதற்கு நம் நாட்டில் பிரச்ச்சனைகளுக்கா பஞ்சம். நல்ல விசயத்திற்காக சங்கம் அமைத்து போராடலாமே. அதை விடுத்து சாதி வெறியை மதுரையில் இருந்து அண்டிபட்டி, உசிலம்பட்டி வழியாக சென்னைக்கு பரப்புவதற்கு முனைந்துள்ளனர்.

    போராளிகள் மருதுபாண்டியர்களிடம் இருந்து பெற வேண்டிய தியாகம், பொதுநலம் போன்றவற்றை புறக்கணித்து, இந்திய நாட்டின் விடுதலைக்கு போராடிய மாவீரர்களின் நினைவு தினத்தை சாதி குருபூசைகளாக சுருக்கிக் கொண்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    • //ஏழைமக்கள் கண்ணீரில்லாத வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் கும்பினியாரை எதிர்த்துப் போராடவேண்டும் என முழங்கியவன் அவன்//
      வெள்ளையர் வருகைக்கு முன்னர் மருதிருவரின் ஆட்சி எவ்வாறிருந்தது யென்பதையும் விளக்க வேண்டும். வெள்ளையரை எதிர்த்தான் என்பதெல்லாம் சரி, ஆனால் ஏழைமக்கள் பால் கரிசனம் கொண்டிருந்தான் என்பதற்கு என்ன ஆதாரம்.
      தன்னுடைய சாம்ராச்சியம் தன் கண்முன்னே பறிபோவதை பொறுத்துக்கொள்ளாமல் கூட அவர்கள் போராடியிருக்கலாம் இல்லையா?

      • மருது சகோதரர்கள் எந்த ராஜ்யத்திற்கும் அதிபதிகள் கிடையாது. முதலில் வரலாற்றைத் தெரிந்து கொண்டு அதன் பிறகு விமர்சியுங்கள். இவர்கள் வரலாறு பற்றிய கட்டுரைகள் கூட புதிய கலாச்சாரம் இதழில் 2006 நவம்பரில் வந்துள்ளது.

  4. குருசாமி மயில்வாகன அண்ணாச்சி,

    மருது பாண்டியர் பூசைக்கு எந்தெந்த சாதிக்காரவுகள் வாராகன்னு கொஞ்சம் விளக்கணும்.
    புதுக்கோட்டை தொண்டைமான் பங்காளிகளும் வருதாகன்னு சொல்லியிருக்கீக. தொண்டைமான் பங்காளிக எந்த சாதி? மருதிருவரை எந்த சாதின்னு சேர்த்துருக்காக?கட்டுரையை நல்லா எழுதியிருக்கீக, தொடர்ந்து எழுதுங்க. நம்ம தென்மாவட்டங்களைப் பத்தி வினவுல எழுதுரதுக்கு ஆளு இருக்காகன்னு சந்தோசப்படுதேன்.

  5. மிக நல்லதோர் கட்டுரை. தேவர் பிறந்தநாள் என்று சொல்லி தொடர் சலசலப்புகளால் வெறுத்துப் போயிருந்த எனக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது இந்த கட்டுரை.

  6. அப்படியே இன்றைக்கு தேவர் குருபூஜைன்னு ஒரு கும்பல் கிளம்பி மதுரையில் அலம்பல் பண்ணிக் கொண்டு இருக்குமே அதப் பத்தியும் யாராவது நேர்முக வர்ணனை செய்தால் நல்லா இருக்கும்.

  7. மருது சகோதரர்களின் வீரமும் தியாகமும் இன மான உணர்ச்சியும் பாராட்டி வணங்கப்படவேண்டியது.

    &&அன்னியமோகம் எனும் அடிமைப்புத்தியைச் சுட்டெரித்து, மறுகாலனி ஆதிக்கத்திற்கு எதிராய் போராட^^

    இங்கதான், அந்த வீரத்தை தங்களது சுயலாபத்துக்காக சிலர் பயன்படுத்துவதாக தெரிகிறது.

    அன்னியர்கள் கண்டறிந்த தொழில்நுட்பமான மொபைல் போனை கட்டுரையாளர் விட்டெறியவேண்டும். கம்பூட்டரை கடாசவேண்டும். கரண்டை கட் பண்ணவேண்டும். என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    • அன்னியர்கள் கண்டறிந்த தொழில்நுட்பமான மொபைல் போன், கரண்டு மற்றும் கம்பூட்டருக்குகாக அவர்கள் கால் முதல் கு*டி வரை தனது நாவாலேயே கழுவி சுத்தம் செய்ய பரிந்துரைக்கும் திரு செந்தழல் ரவியின் ஆலோசனையை கட்டுரையாளர்கள் பரிசீலிக்கவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      • ஜார்ஜ் புஸ்,

        செந்தழல் ரவி அவருடைய புரிதலிலிருந்து சில கேள்விகளை முன்வைத்திருக்கிறார். அதற்கு நேர்மறையில் பதிலளிப்பதை விடுத்து விவாதத்தை திசை திருப்புவது போல இப்படி அடி, குடி என எழுதுவதால் எந்தப்பயனுமில்லை. மற்றபடி ரவி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு தோழர்களையும், வாசகர்களையும் கோருகிறோம்.

      • வினவு, எனக்கு என்னவோ இவர் தெரியாமல் கேள்வி கேட்பதை போல புரியவில்லை, வேண்டுமென்றே வெறுப்பேற்றுபவரைப்போல தெரிகிறார். இல்லையெனில் இப்படிப்பட்ட கேள்வியை கேட்பவர் அடிமுட்டாளக இருக்க வேண்டும். செந்தழல் ரவியின் 2 ஆண்டுகளாக படித்தவன் என்ற முறையில் அவர் முட்டாள்ள அல்ல என்பது என்கருத்து.

        • ஜார்ஜ் புஸ்,

          உலகமயமாக்கத்திற்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் செய்தால், நாடு மறுகாலனியாக்கப்படுகிறது என்று சொன்னால் ரவியின் கேள்விகள்தான் மக்களிடமிருந்து இயல்பாக வரும். குறிப்பாக நடுத்தர வர்க்கம் அப்படித்தான் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி மக்கள் கேட்கும்போது அவர்களை முட்டாள்கள் என்று நாம் கருதுவதில்லை. அல்லது அந்தக் கேள்விகளுக்காக கோபம் கொள்வதும் இல்லை. பொறுமையாகத்தானே விளக்குகிறோம். ரவிக்கும் அந்த அணுகுமுறையை பின்பற்றுவதில் என்ன தவறு? அவர் கேட்பதால் நீங்கள் ஏன் வெறுப்படைய வேண்டும்?

          • வினவு நீங்கள் சொல்வது சரிதான், இது போன்ற ஒன்றாங்கிளால் கேள்விகை நான் அவரிடத்திலிருந்து எதிர்பார்க்காததால் அவர் வேண்டுமென்றே வெறுப்பேற்றுகிறார் என்று கருதி கோபமாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும் ரவி மன்னிக்கவும் வினவு

    • செந்தழல் ரவி….நீங்களா இப்படி? ஆதம் & ஹவ்வா இருவரும் அந்நியர்களே! அதனால், இந்தியாவில் வாழும் நாம் அனைவரும் அந்நியர்களே!! ஆகையால், அந்நியர்கள் கண்டுபிடித்தது அனைத்தும் நாம் கண்டுபிடித்ததே ஆகும்!!! சிரிக்காதீர்கள், ரவி. உங்கள் மறுமொழி அவ்வளவு மொக்கையாக இருக்கிறது. மொட்டைத்தலைக்கும்… இல்லை இல்லை…ஒலிக்கும் ஒளிக்கும் முடிச்சு போட முயல்கிறீர்கள். இப்படி பாரளுமன்றம் முதல் டீக்கடை பெஞ்சு வரை தொண்டைமானாகவே வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களை எப்படி மருது பாண்டியராய் மாற்றுவது? அப்படி ஒருவரையாவது மாற்றும் முயற்சி தான் இந்த பதிவு. நன்மைகளையும் தீமைகளையும் பிரித்தறிய தெரிய பழக வேண்டும். வெள்ளையர்களை விரட்டினோம். அவர்கள் கட்டிய கட்டடங்களையும் போட்ட தண்டவாளங்களையும் பெயர்த்து எறிவது அறிவாளி செய்யும் செயலா? எப்போது ஒரு பொருளை நாம் விலை கொடுத்து வாங்கி விட்டோமோ அது நமது பொருளாகிவிடுமே? அதன் பின்னரும் தயாரிப்பாளனுக்கு சொந்தம் இருக்கிறது என்றால் உங்கள் கருத்தில் கருத்தே இல்லை.

        • விவாதத்தை ஆரோக்கியமான முறையில் கொண்டு சென்றதற்காக ஜார்ஜ் புஸ்ஸுக்கும், நெத்தியடி முகமதுவிற்கும், மணிக்கும் நன்றிகள். செந்தழல் ரவி இந்தக்கேள்விகளுக்கு பதிலளிப்பார் என நம்புகிறோம்.

    • ஏம்பா செந்ததழல் இரவி,
      இங்க‌ என்ன‌ தான் விவாதிக்கிறாங்க‌ன்னாவ‌து ஒன‌க்கு புரியுதா ?

      வெண்டைக்காய்ன்னா நீ ம‌ண்டைக்காய்ங்கிறீயே..

      கரண்டு கம்புயூட்டர் மட்டுமில்ல அப்புற‌ம் எல்லாத்தையும் தூக்கி க‌டாசிட்டு காட்டுக்குத்தான் போக‌னும். இங்க‌ அதையா சொல்லீறுக்காங்க‌. என்ன‌ பேசுறோம்ன்னு புரியாம‌ பேச‌க்கூடாது.. இல்லைன்னா நானும் பேசுறேங்கிற‌துக்காக‌ பேச‌க்கூடாது.

      • உங்க பெயரை சொல்லி இதை சொல்லியிருக்கலாம். இருந்தாலும் நீங்கள் எதிர்பார்த்த விடயத்தை நான் பேசவில்லை என்பதற்காக வருந்துகிறேன்.

  8. maruthu pandiar is history but this jeyanthi things are whisky.but do one thing set the direction for where the path leads you next.RANJAN AND DEVA ARE YOU HEAR ME?

  9. செந்தழல் ரவி அவர்களே! கப்பலையும் டிரைனையும் துப்பாக்கியையும் கண்டுபிடத்ததற்காக சின்னமருது என்ன வெள்ளையனுக்கு வெண்சாமராமா வீசிக்கொண்டிருந்தான்….. அப்படி வீசுபவர்களை தன் அடிமயிறுக்கு சமம் என்றல்லவா சொன்னான். வெள்ளையனை கொண்டாடியவர்களை வரலாறு தொண்டைமான்கள், எட்டப்பன்கள் என அடையாளம் காட்டுகிறதே… நீங்கள்?

  10. செந்தழல் ரவி அவர்களே! நமது நாட்டின் சாதிய இறுக்கத்தால் இன்னமும் விஞ்ஞானத்தில் பார்ப்பனர்களின் கொடிதான் பறந்து வருகிறது.. நீங்கள் சொல்லும் இணையம், கம்ப்யூட்டர், தொலைபேசி, எரிசக்தி, மென்பொருள் என ஏனைய துறைக்ளளின் விஞ்ஞானம் மற்றும் வளர்ச்சியில் அவர்கள் பங்கு மற்ற சாதியை சேர்ந்தவர்களை விட அதிகமாக உள்ளது. அதற்காக பார்ப்பனிய எதிர்ப்பு கொள்கையை காற்றில் பறக்க விட்டீர்களா?

  11. செந்தழல் ரவி

    பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள். பூஜ்ஜியம் மற்றும் ஒன்று என்ற பைனரி எண்களின் மூலம் இயங்கும் கணிணிக்கு , செல்லிடைப் பேசிக்கு ஐரோப்பியர்கள் உரிமை கொண்டாட முடியாது. இதனை அதில் வேலை செய்யும் நீங்கள்தான் சொல்ல வேண்டும் என சொல்ல முடியும். ஆனால் நான் அப்படி சொல்லப் போவதில்லை.

    வ‌ரலாறு என்பது வணங்கி பூஜை அறையில் சிலரை வைப்பதற்கு எனப் புரிந்து கொள்ளும் உங்களைப் போன்றவர்களை இளைஞர்களாகப் பெற்ற தேசத்தை எந்த நாயும் அல்லது ஒரு சீமாட்டியின் வைப்பாளன் கூட ஆட்சி செய்ய முடியும். வரலாறு என்பது கடந்த காலத்தின் சித்திரம் மட்டுமல்ல• நிகழ்காலத்திற்கு அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்பவர்கள்தான் சமூகத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்த முடியும். இதனை கடந்த புராஜக்டில் செய்த தவறுகளை களைய முயலும் இன்றைய கணிணி வல்லுநர்கள் அதனை சுயநலமில்லாத சமூகத்திற்கு என வரும்போது சரியான ஒன்றை தேர்வு செய்யாமல் இயன்றதைச் செய்வோம் என முடிவு செய்கின்றனர்.

    அடிமைத்தனத்திற்கும், தேவைக்கு பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. சூ அணிவது காலுக்கு பாதுகாப்பு என்பதால சில வேலைகளுக்கு சூ தேவை. சாதாரண சூ அணிய முடியாது நைக் சூ தான் அணிவேன் என்பது அடிமைத்தனம்.

      • நைக் சூ அணிவதுதான் பெருமை என இருப்பது… அடிமைப்புத்திதான்.. அதாவது ஒரு பொருளை அதனது பயன்பாட்டை வைத்து மதிப்பிடுவதுதான் மனிதர்கள் செய்யக்கூடியது. நாம் அன்றாடம் செய்யும் அனைத்து வேலைகளிலும் இது பொருந்தும். மாறாக வேறு சூ அணிவதை விட நைக் அணிவதுதான் நாகரீகம் என்றோ, அந்தஸ்து என்றோ கருதி அதற்காக அதனை அணிவது அடிமைத்தனம்தான்.

      • அடிமைத்தனம் என்பதைவிட ஆண்டைத்தனம் என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கிறது.

        எனக்கு ரப்பர் செருப்புதான் பிடிக்கும். பாட்டாவில் 49.99 பைசாவுக்கு வாங்கியே பயன்படுத்தினேன்.

  12. அன்புள்ள ஜார்ஜ் புஸ். (நல்ல பெயர்) நான் பெரிய அறிவுசீவி என்று நினைத்தால் அங்கேயே நீங்கள் தவறுசெய்கிறீர்கள். :))

    முகம்மது சார். //ஆதம் & ஹவ்வா இருவரும் அந்நியர்களே! அதனால், இந்தியாவில் வாழும் நாம் அனைவரும் அந்நியர்களே!! // பாதாம் அல்வாவை ஏன் இழுக்கிறீர்கள் ??

    மறுகாலனியாதிக்கம் என்ற சொல்லாடல் தான் நான் அப்படி எழுதியதுக்கு காரணம். கே எஸ் அதியமான் இருந்தால் நன்றாக ஓட்டியிருப்பார். அவரைப்போல என்னை (அதிகமாக) கடிச்சு விடாம கொஞ்சமாக கடிச்சதுக்கு நன்றி.

    உலகமயமாக்கலை கடுமையாக எதிர்ப்பவர்கள் பிஸ்கெட் கிடைக்காதவர்கள் தான் என்பது என்னுடைய கருத்து.  End of The Day அவர்களும் மாறித்தொலைவார்கள் அல்லது மாற்றப்படுவார்கள்.

    மறுகாலனியாதிக்கம், தரகு முதலாளித்துவம் என்று பஸ்வேர்ட் எல்லாம் எழுத பேச நல்லாயிருக்கு. ஆனா ப்ராக்டிக்கலா ஒத்துவருமா ?

    ஆயுதம் ஏந்தி போராடினால் ஆப்படிச்சுவாங்க. அகிம்சையில் உண்ணாவிரதம் இருந்து போராடினாலும் வாயில் உணவை திணிச்சுருவாங்க. அதனால அந்த சிஸ்டத்தோட ஒரு அங்கமாக உங்களை மாற்றிக்கொண்டு புத்தியா பிழைக்கிற வழியைப்பாருங்க.

    செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறினாலும், பூமி காலனியாக்கப்படுகிறது, அதனால் அவன் ராக்கெட்டை லேசர் கன் கொண்டு அடிப்போம். தரகு செவ்வாய்கிரக முதலாளிகளை எதிர்ப்போம் என்று ஒரு கூட்டம் வந்துவிடும் போலிருக்கிறது.

    • செவ்வாயில் ‘மனிதர்கள்’ இருந்து, அவர்களை மிரட்டி துன்புறுத்தி அடிமைப்படுத்திவிட்டு அவர்களின் நிலத்தை அபகரித்து காலனி கட்டினால் செவ்வாய் கிரகத்து அடிமைகளின் சார்பாய் ‘உங்களை’ எதிர்ப்போம். அங்கு அப்படி யாருமே இல்லையானால்-எவருக்கும் பாதிப்பில்லையானால், ‘தரிசு நிலத்தில்’ காலனி கட்ட வசதி இருந்தால் நானும் உங்களுடன் வரலாம்.

      ////ஆயுதம் ஏந்தி போராடினால் ஆப்படிச்சுவாங்க. அகிம்சையில் உண்ணாவிரதம் இருந்து போராடினாலும் வாயில் உணவை திணிச்சுருவாங்க. அதனால அந்த சிஸ்டத்தோட ஒரு அங்கமாக உங்களை மாற்றிக்கொண்டு புத்தியா பிழைக்கிற வழியைப்பாருங்க.//// —->> “நன்மைக்கு எதிராக தீமையின் கை ஓங்கி விட்டதால் எல்லாரும் தம் நல்லகொள்கைகளை கடாசிவிட்டு தீமையின் பக்கம் சேர்ந்து விடுங்கள்” என்று இவ்வளவு வெளிப்படையாக அறைகூவல் விடுக்கும் ஒருவரை நான் இன்றுதான் பார்க்கிறேன். ஹூம்…செந்தழல்..! அவமானம்…!

      • உலகமயமாக்கலையும் சந்தைப்பொருளாதாரத்தையும் தீமை என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ம்ஹும் எனக்கு அவமானமாகவே இல்லை.

    • செந்தழல் ரவி, இந்த சமூக அமைப்போடு ஒன்றி பிழைப்பது பற்றி மிகவும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள். அதற்க்கு எனது நன்றிகள். சில சந்தேகங்கள் எனக்கு..
      1. இந்த சமூகத்தில் ஒரு நல்ல வேளையில் உள்ள ஆண் மகன் திருமணத்தின் போது வரதட்சணையாக சில லட்சங்களில் இருந்து சில கோடிகள் வரை பெற்று.. நல்ல வாழ்க்கை வாழ்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்… நீங்கள் கண்டிப்பாக வரதட்சணை வாங்கி இருப்பீர்கள் அல்லது வாங்க உள்ளீர்கள் என நம்புகிறேன்.
      2. ஒரு மருத்துவ மனை , சாதாரண வியாதிக்கே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்லி நன்றாக காசு பார்ப்பதைப் நீங்கள் எதிர்க்க மாட்டீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.
      3. இறுதியாக ஊரோடு ஒட்டி வாழ்தல் என்ற பழமொழிக்கு ஏற்ப நமது ராஜ பக்சே அமைத்து கொடுத்து இருக்கும் “தமிழர் மறுவாழ்வு” மையங்களில் ஈழத்து தமிழ் மக்கள் தமது வாழ்கையை வாழ கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தை , சிங்கள இனவெறிக்கு எதிராக போராடாமல் வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை நீங்கள் வினவின் வாசகர்களுக்கு எடுத்து உரைத்தால், மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

      • அன்புள்ள பகத். நன்றி.

        1. வரதட்சணை வாங்குவதை நான் எதிர்க்கிறேன். என்னுடைய சொந்த வாழ்க்கையில் என்னுடைய திருமணம் காதல் கலப்பு மணம்.  ரெஜிஸ்டர் ஆபீஸில் நடந்தது. புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். சொல்லப்போனால் திருமணத்தின் போது என்னுடைய மனைவி அணிந்திருந்த சில நகைகளை , தோடு கம்மல் மூக்குத்தி எக்ஸட்ரா, அவருடைய குடும்பத்தினருக்கு  திருப்பி அனுப்பிவிட்டேன்.

        2. எதிர்க்கிறேன். அரசு மருத்துவமனையில் இலவசம் தானே ? ஏன் உங்களுக்கு வழி தெரியாதா அங்கே போக ? அல்லது அப்பல்லோவில் தான் போய் படுப்பீர்கள், அங்கேயுள்ள கேரள நர்சிடம் தான் ஊசி போட்டுக்கொள்வீர்கள் என்று சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

        3. மக்கள் கவுரவமான வாழ்க்கை வாழவேண்டும். சிங்கள கொட்டடியை எதிர்க்கிறேன். அந்த கொட்டடியின் பின்னால் உள்ள புலிகளின் அரசியல் தோல்வியை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது அதன் நீட்சி. அதனால் அது ஒற்றை வார்த்தை விவாதப்பொருள் அல்ல. அது பற்றி பேசும் தகுதி இப்போதைக்கு எனக்கில்லை. மற்றபடி, மறு காலனியாத்திக்கத்தை எதிர்த்து மக்களை தூண்டி சீன உதவியோடு ஆட்சியை பிடித்த மாவோயிஸ்டு தீவிரவாதிகள் இனிமேல் புலிகளுக்கும் ஆயுதம் தருவார்களாம். அதே சமயம் ராஜபட்சேவுக்கும் சிவப்பு கம்பளம் விரிப்பார்களாம். என்ன நடிப்பு ? இது போன்றதொரு பொரட்சியை வினவு வலியுறுத்தவில்லை என்பதை வினவின் வாசகராகிய நீங்கள் எப்படி தெளிவடைந்தீர்கள் என்று விளக்குங்களேன்.

      • நண்பர் செந்தழல் ரவி, என்னங்க நீங்க ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யறீங்க ஆனால் நடை முறையில ஒன்னும் பண்ண மாட்டேங்கறீங்க…
        1. உங்கள் திருமணம் எளிமையை நடந்ததற்கு வாழ்த்துக்கள். ஆனால் உங்களைப் போல எல்லோரும் இருப்பாங்களா… நம்ம ஊர் பசங்க எல்லாம் பத்து வருஷம் வேலை செய்து கிடைக்கும் பணத்தை ஒரே நாளில் வரதட்சனையை வாங்கி வாழ்க்கையில் செட்டில் ஆக ஆசைப்படறாங்களே.. அதை நம்ம எப்படி எதிர்க்க முடியுங்க… ஒரு உதாரணத்திற்கு ஒரு ஆண் மகனுக்கு உகந்த இரு பெண்களில் ஒரு பெண் கேட்ட வரதட்சணையை கொடுக்க இருக்கும் போது அவன் பிழைக்க வழி தெரியாமல் , தன்மானம் ஒரு வெங்காயம் என சொல்லி வரதட்சணையோடு திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆவதுதான் சிறந்ததுதானே..?
        2. எனக்கு எதாவது சீக்கு வந்த நம்ம ஊர் ஆஸ்பத்திருக்கு தானுங்க போவேன். ஆனால் ஒரு மருத்துவர் சில லட்சங்கள் கொடுத்து மருத்துவ சீட் வாங்கி, படித்து பட்டம் பெற்று எல்லோருக்கும் குறைந்த காசுல மருத்துவம் பார்த்த அவர் எப்பங்க போட்ட பணத்தை எடுப்பாரு… நல்ல வசதி உள்ள நோயாளிகளிடம் பத்து, நூறு அதிகமாக வாங்க சின்ன ஆப்பறேசன்னு பொய் சொன்ன ஒன்னும் ஆகாதுங்க… காசுக்கு காசு, அதே சமயம் நோயாளிக்கு நோயும் குணம் ஆயிடும்.. இதுல என்னங்க தப்பு..?
        3. புலிகள் தோத்து போய்ட்டாங்க… ஆனா அதைவிட அவங்கள நம்பி இருந்த, நம்பாத மக்களும் தோத்து போய்ட்டாங்க அதாங்க வருத்தமாக இருக்குது… இப்போதைக்கு நீங்க சொன்ன மாதிரி பேசாம ஈழ தமிழ் மக்கள் , ராஜ பக்சே போடறதை தின்னுட்டு, சோமாலியாவில் உள்ள மக்கள் இதைவிட மோசமான நிலைமையில் உள்ளதை நினைத்து ஆறுதல் படவேண்டும், அல்லது அவர்களுக்கு கிடைத்ததை கொண்டு திருப்தி அடைய வேண்டும்… அதுதானுங்க சரி…? வினவு என்ன சொல்றாருன்னு இருக்கட்டுங்க.. எதோ நீங்க ஒழுங்கா பிழைக்கிற வழியை பாருங்கன்னு சொன்னதை நான் முடிஞ்ச அளவுக்கு கத்துக்க நினைகிறேனுங்க..

      • ஓ..! பகத்..!இதுதான் போட்டு…வாங்குறதா? நீங்க வச்ச ஆப்பு எங்கே இருக்குன்னு தேடிப்போய் அவரு உட்கார்ந்த மாதிரி உள்ளது. 
        கலக்கிட்டீங்க பகத்.  

  13. செந்நழல் ரவி அவர்களே, நீங்கள் முன்வைக்கின்ற அரசியலுக்கு பெயர் பிழைப்புவாதம். இந்த பிழைப்புவாதம் ஒன்றும் சர்வரோக நிவாரணியல்ல… அது மக்களில் ஒரு பிரிவினருக்கு மட்டுமே வேலை செய்யும். உலகமயம் டவுன் மற்றும நகர்புறத்து இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பை வழங்கியிருப்பதை ஆதிரிக்கிற அதே நேரத்தில் கிராம்பபுறங்களில் லட்சக்கணக்கான விவசாயிகளை தற்கொலைக்கும் திவாலுக்கும் தள்ளியிருப்பதை நீங்கள் நியாயப்படுத்தினால் உங்களின் பிழைப்புவாத அரசியல் பரிணாம வளர்ச்சியடைந்து பாசிசமாக மாறிக்கொண்டிருக்கிறது அதாவது நீங்களும் காமன்மேனாக மாறிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

    பின்குறிப்பு, திருமாவின் பிழைப்புவாதத்தை 2 வாரத்திற்கு முன் கிண்டல் செய்து பதிவு போட்டது நீங்களா அல்லது வேறு ஒரு செந்தழல் ரவியா.

    • அடி தூள்…! சும்மா பட்டய கிளப்புறீங்க நண்பா..! Hats off to you..!

    • காமன்மேன்கள் எல்லாம் பாசிசவாதிகள் என்கிறீர்களா ? கிராமத்துல கூலிக்கு ஆள் கிடைக்கலை. ட்ராக்டர் தேவையாயிருக்கே ? இன்றைக்கு நகரங்கள் விரிவடைந்து கிராமங்களை விழுங்கிவிட்டதே ? கிராமத்திலும் செல்போனும் டிவியும் தேவைப்படுதே ?நீங்கள் கற்பனை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமில்லை. சும்மா பூச்சாண்டி காட்டாதீர். தமிழகத்தில் எந்த விவசாயி தற்கொலை செய்துகொண்டார் ?

  14. கட்டுரை பேச வரும் விஷயம் என்ன? இவர் கேட்கும் கேள்வி என்ன? செந்தழல் ரவியின் கேள்வி மகா மொக்கையாக இருக்கிறது.

    • அன்பு நந்தா. இவ்வளவு காலம் என்னை அறிந்தபிறகு என்னுடைய கேள்வி மொக்கையாக இருக்கிறது என்று சொல்கிறீர்களே ? நானே ஒரு மரண மொக்கை ஆசாமிதான் அய்யா.

  15. ரவி,

    அதியமான் ஓட்டிடுவாரு என்று சொல்வது அபத்தம். உலகம் முழுவதும் முதலாளித்துவம் பல்லை இளித்தாலும் தாங்கிப்பிடிப்பவர்களை ஒருவித மனநோய் உள்ளவர்களாகத்தான் பார்க்க முடியும். இந்த லச்சணத்தில் செவ்வாய்க்கு விண்கலம் போனாலும் என அறிவியல் வளர்ச்சியை வியந்து உள்ளீர்கள். அதற்கு இன்பச்சுற்றுலா நூறு கோடிக்கு விடப்படுகிறதே அதுபற்றி பேச மாட்டீர்களா. செலக்டிவ் அம்னீசியாவா…

    இதன் அங்கமாக மாறி பிஸ்கட் வாங்கி பிழைக்க வேண்டும் எனச் சொன்னீர்கள். இப்படி நடக்காமல் போராடினால் தோல்விதான் மிஞ்சும் என்றீர்கள். இப்படி ஸ்பார்ட்டகஸ் நினைத்திருந்தால், பிரஞ்சு முதலாளிய புரட்சியின் நாயக்ர்கள் நினைத்திருந்தால், ஐன்ஸ்டீன் நினைத்திருந்தால், கலிலியோ நினைத்திருந்தால் இந்த கண்டுபிடிப்புகளை நாம் வந்தடைந்திருக்க முடியுமா…

    • யாருக்கு மனநோய், யார் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எம்மை பொருத்தவரை, எவாஞலிஸ்ட் க்ருஸ்துவ பிரச்சாகர்களும், வினவு தோழர்களையும் ஒரே போல பார்க்கிறேன். இருவரும் தங்கள் வழிதான் ஒரே வழி, சிறந்த வழி என்று மனப்பூர்வமாக நம்புகின்றனர். பொன்னுலகத்தை கட்டமைக்க தன்னலமற்ற தியாக வாழ்க்கை வாழ்கின்றனர். இரு சாரசையும் நான் வெறுக்கவோ, இகழ்ச்சியாக பார்க்கவோ இல்லை. மூளை சலவை செய்யப்பட்ட லட்சியவாதிகள் என்ற ஒரு வகையாக அனுதாபம் தான் எழுகிறது. அவர்களிடம் விவாதம் செய்து ‘புரிய’ வைக்க முடியாது.

      ////1990ல் இந்தியா கையெழுத்திட்ட காட்-டங்கல் ஒப்பந்தம் தன்னைப் பன்னாட்டு நிறுவனங்களின் அடிமையாக ஒப்புக் கொடுத்துவிட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் நலன்களுக்காக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற திட்டத்தை ஏற்றுக் கொண்டு இந்தியாவின் கதவுகளை அகலத் திறந்து வைத்து அள்ளிச் செல்லுங்கள் எனச் சொல்லி வீசும் எலும்பைக் கவ்வக் காத்திருக்கும் நாய்களைப் போல மண்டியிட்டுக் கிடக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்///// இது போன்ற வரட்டுத்தனமான பொதுப்படுத்தல்களுக்கு பல தடவை மறுப்பு எழுதி அலுத்துவிட்டது. ஆர்வம் உள்ளவர்கள் பார்க்க : ‘மறுகாலனியவாதம்’ என்னும் பிதற்றல்

      http://nellikkani.blogspot.com/2008/01/blog-post.html http://nellikkani.blogspot.com/2008/05/1991.html

    • இன்றைக்கு தகவல் தொழில்நுட்பம் நீட்சிஅடைந்துள்ள வேகத்தில் மாவிரன் பிரபாகரனாலேயே தாக்குபிடிக்க முடியாமல் போய்விட்டது. இனி ஒரு ப்ரெஞ்சு புரட்சி சாத்தியமில்லை. புரட்சி செய்பவர்கள் ஓட்டை துப்பாக்கியை தூக்கிக்கொண்டு காடுகளில் அலையவேண்டியதுதான்…

  16. மூளைச்சலவை செய்யப்பட்ட லட்சியவாதிகள் என்ற பட்டத்தை வினவு தோழர்களுக்கு கொடுத்திட்டீங்களா அதியமான் ? அதுவும் நல்லாத்தான் இருக்கு. என்ன அவங்க பேரு ஊரு தெரியாததால மொத்தமா வினவு தோழர்கள் என்று அழைக்கவேண்டியதா இருக்கு. வாய்ப்பு கிடைத்தால் அவர்களை சந்தித்து கட்டியணைத்து பாராட்டி கைவலிக்க குலுக்கி மகிழ்வேன். 

  17. ஜார்ஜூ புஸ்,

    நீங்கள் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து.

    வினவு,

    நடுத்தர வர்க்கத்திடமிருந்து இயல்பாக வரும் கேள்விக்கும் செந்தழல் ரவியின் கேள்விக்கும் நிறைய வேறுபாடு உண்டு.

    உலகமயமாக்கம், மறுகாலனியாதிக்கக் கொள்கைகளால் அன்றாடம் வாழ்க்கையில் நெட்டித் தள்ளப்படும் மக்கள் அதிகாரத்தின் பின்புலத்தோடு
    தம்முன் நிற்கும் எதிரியைப் பார்த்து மலைத்துப் போய் கேட்கும் கேள்வியையும்.. ஏதோ ஒரு நிறுவனத்தில் ஒரு நல்ல வேலையில் இருந்து
    கொண்டு ஓவராக சேர்ந்து விட்ட அல்லைக் கொழுப்பைத் தடவிக்கொண்டே – “இவாளெல்லாம் போராடராளாம்… பொழைக்கர வழியப்
    போய்ப் பாருங்கோ” என்று திமிர் தெரிக்கப் பேசும் பேச்சையும் நீங்கள் எப்படி ஒரே தட்டில் நிறுத்திப் பார்க்கிறீர்கள்?

    ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் முன் அந்தக் கேள்வி எங்கேயிருந்து எழுகிறது, எந்த வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறது என்பதைக் கவனிப்பது அவசியமாகிறது. கட்டுரை தெளிவாக
    உள்ளது. மருதுவின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வின் இன்றைய வாரிசுகள் புரட்சிகர கம்யூனிஸ்டுகளே. அன்றைக்கு அவரிடம் இருந்த – இன்றைக்கு நாம் எடுத்துக் கொள்ள
    வேண்டியதும் அதுவே. ஆயின் நடைமுறையில் சாதி வெறியர்கள் இதுபோன்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளை சொந்தம் கொண்டாடுவதை இடித்துக் காட்டுகிறார்
    கட்டுரையாளர். அன்றைக்கு மருது யாரை ‘அடி மயிருக்கு’ சமானம் என்றான்? இன்றைய செந்தழல் ரவிகளைத் தான்.

    அன்றைக்கு ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்தியர்களை கூலிகளாக மொரிஷியசுக்கும், இலங்கைக்கும், மலேசியாவுக்கும், தென்னாப்ரிக்காவுக்கும் இன்னும் உலகின் பல
    பாகங்களுக்கும் விரட்டியடித்தது..

    இன்றைக்கோ மேலதிகமாக உள்நாட்டுக்குள்ளேயே விவசாயிகளையும் உழைக்கும் மக்களையும் கூலிகளாய் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொன்றிற்கு – கிராமத்திலிருந்து நகரத்துக்கு என்று விரட்டிக் கொண்டிருக்கிறது மறுகாலனியாதிக்க பொருளாதாரக் கொள்கைகள்.

    ரவி என்ன சொல்வார்? அவர்களுக்கெல்லாம் இன்றைக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்திருப்பதே இந்த பொருளாதக் கொள்கைகள் தானென்று சொல்வார். அவர் குரல்வளையிலிருந்து
    தொண்டைமானின் குரல் தான் ஒலிக்கும்.

    ஒரிசாவில், சத்தீஸ்கரில் சுரங்கங்களில் கணி வளங்களைச் சுரண்டிச் செல்ல தடையாய் இருக்கும் பழங்குடிகளை முகாம்களில் தங்க வைத்திருப்பதைச் சொன்னால், அவர்களை அரசு
    காடுகளில் இருந்து மீட்டு வந்திருக்கிறது என்றும் கூட சொல்லக்கூடும்.. வேறு வழியில்லை ‘அவங்கெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போக வேண்டியது தான்’ என்று அவர்களுக்கு
    அறிவுரையும் கூட சொல்லுவார்.

    இன்றைக்கு மருது இருந்திருந்தால் இன்னும் கேவலமான வார்த்தைகளில் விளித்திருப்பார்..

    அதியமானோ, ஆர்.வியோ அவர்கள் ஏதோவொன்றை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைப் பற்றி நின்று வாதாடுகிறார்கள்.

    இவரின் கேள்வியில் ‘நானும் ரவுடி தான்’ எனும் தொனியே தொக்கி நிற்கிறது.

    செந்தழல் ரவி / லக்கிலூக்… மற்றும் இவர்கள் பாணியில் ‘லூசுத்தனமே’ மேண்மை என்று கருதிக்கொண்டு எழுதும் பாணி ஒன்று இங்கே
    பதிவர்கள் மத்தியில் உண்டு. சுமார் ஒரு ஆண்டு முன்பு இந்த ரக பதிவர்கள் ‘கழிந்த’ பதிவுகளுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருப்பது போல ஒரு தோற்றத்தை இவர்களே மாற்றி மாற்றி புண்ணூட்டங்கள் போட்டு ஏற்படுத்தி வைத்திருந்தனர்.. அது பீயைச் சுற்றிப் பறக்கும் ஈ கூட்டம் போல ஒரு ஆபாசமான ஒரு நிலையாக இருந்ததென்பது தமிழ்பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்குத்
    தெரியும்.

    அடிப்படையில் மொக்கை, லும்பன் தனம் கொண்டு எழுதப்படும் அந்தப் பதிவுகளில் ஒரு டாப்-அப்புக்காக கொஞ்சம் பெரியார் – தமிழ் – பகுத்தறிவு – பார்ப்பன எதிர்ப்பு என்று எல்லாவற்றிலும் ஒரு ஸ்கூப் சேர்த்துக் கொள்வார்கள். சமீபமாக மாற்றி மாற்றி சொறிந்து கொண்டதில்
    நகம் தேய்ந்து போனதாலும் வெளியாட்களிடம் போணியாகாததாலும் அவர்கள் ‘முற்போக்கு’ உண்மையான புரட்சிகர கருத்துக்களின் முன் மங்கிப் போய் தெரிவதாலும் இது போல அவ்வப்போது காரியக் கிறுக்குத்தனமான பின்னூட்டங்கள் மூலம் அரிப்பை தீர்த்துக் கொள்கிறார்கள்

    • சங்கு, ////அதியமானோ, ஆர்.வியோ அவர்கள் ஏதோவொன்றை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைப் பற்றி நின்று வாதாடுகிறார்கள்.///// அய்யா, அதை நாங்க சொல்லனும், உங்கள பத்தி !!! பரவாயில்ல.. a famous saying : “man will do the rational thing after trying all other options” :)))))

      • அதியமான்,

        உண்மை தான் அவரவரும் அவரவர் வர்க்கம் சார்ந்தே சிந்திக்கவும் பேசவும் முடியும். 🙂

      • சங்கு, நானும் தொழிலாளி ‘வர்கமாக’ இருந்தவன் தான். பல முறை இரு வர்கத்திற்க்கும் மாறும் ‘யோகம்’ பெற்றவன் !! அதனால இந்த வர்க லேபில் எல்லாம் வேண்டாமே. வர்கம் என்ன சாதி போல மாற்றா முடியாத லேபில் என்ன ? தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை பற்றிய அக்கரை, கவலை எமக்கு உம்மை விட அதிகம்தான் என்றால் உங்களால் நம்ப முடியாதுதான்..