Friday, June 9, 2023
முகப்புகுடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு – பாடல்
Array

குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு – பாடல்

-

vote-012இந்திய தரகு முதலாளிகளில் சிலர் உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிற அதே நேரத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருக்கிறது. இப்படி இந்தியா முதலாளிகளின் இந்தியாவாகவும், ஏழைகளின் இந்தியாவாகவும் பிரிந்திருப்பதை எள்ளலுடன் உணர்த்துகிறது இந்தப்பாடல். முன்னுரையுடன் இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள்.

Adimai_Sasanam_03_Naadu

நாடு முன்னேறுதுங்குறான் – அட
மினு மினு மினுக்கா, ஜிலு ஜிலு ஜிலுக்கா
ஜெர்மன், அமெரிக்கா, ஜப்பானு கணக்கா
நாடு நம்ம நாடு முன்னேறுதுங்குறான்

தாகம்தீர கொக்கோ கோலா
போதை ஏற ஃபாரின் சீசா
மிக்சு பண்ணிக்கோ பெப்சி லெகரு
மிச்ச வேளைக்கெல்லாம் மினரல் வாட்டரு
குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு
அட்றா செருப்பால வீங்கிப்புடும் செவுளு
( நாடு….)

டீ.வியில் சிரிக்குது காம்ப்ளான் கேர்ளு – டாக்டர்
தினம் தரச்சொல்லுறான் பழம் முட்டைப் பாலு
வகை தெரியாமத் தின்னு அவன் புள்ள வீங்குது – வெறும்
விளம்பரத்தைப் பாத்தே நம்ம புள்ள ஏங்குது
சத்துணவு தீந்துடுன்னு தட்டோட ஓடுது – இவன்
தட்டுகெட்ட திட்டமெல்லாம் என்ன புடுங்குது
( நாடு…)

காலக் காப்பிக்கு மீனம்பாக்கம்
கக்கூசுக்குப் போறான் லண்டன் மாநகரம்
ஈசலாட்டம் தனியார் விமானம் – இதுக்கு
போலீசு கொடை ஒன்னு வேணும்
பேஞ்ச மழையில் எங்க ரோட்டையே காணோம் – பெருசா
பேச வந்துபுட்டான் தேச முன்னேற்றம்
( நாடு…)

பள்ளிக்கூடம்னு போர்டு தொங்குது
பாத்தா மூணு சுவருதான் நிக்குது
பசங்களெல்லாம் மரத்துல தொங்குது
பாடம் நடத்துற டீச்சரு தூங்குது
காசுக்காரன் புள்ள கான்வென்டு போகுது – நம்ம
கார்ப்பரேசன் பள்ளியில சரக்குத்தான் ஓடுது
( நாடு…)

அரசு மருத்துவமனைங்க இருக்குது
ஆரம்ப வியாதியே அங்கதான் தொத்துது
ஆப்பரேஷனுன்னு வச்சுருக்கான் பேரு
அறுத்துப் போட்டுபுட்டு இல்லேங்குறான் நூலு
காசுக்காரன் கூட்டம் அப்பல்லோ போகுது – நமக்கு
கவர்மண்டு இரக்கப்பட்டு போஸ்ட்மார்ட்டம் பண்ணுது
( நாடு…)

ஏசி கூண்டுக்குள்ள பொம்மை விரைக்குது
தங்க ஊசி சேலை அதன் உடம்பில் மினுக்குது
நல்லி, சாரதாஸ் கல்லா பிதுங்குது
வெள்ள எருமைங்கதான் உள்ளே உலாத்துது
பருத்தி நூலுக்கு கைத்தறி ஏங்குது – எங்க
பட்டினி சாவில் உன் பட்டு மினுக்குது
( நாடு…)

காடு, மரம், கடல், மீனும் தனியாரு
போடு கரண்டு, டெலிபோனும் தனியாரு – அரசு
ஆலைகள் அம்புட்டையும் கட்டிபுட்டான் கூறு – அதை
ஏலம் மூணுதரமுன்னு கூவுறான் சர்க்காரு
நம்ம நாடுன்னு சொல்லிக்கிற மிச்சமென்ன கூறு
இவன் ஆடுகிற ஆட்டுறவன் காட்டு தர்பாரு
( நாடு…)

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

அடிமைச் சாசனம்அடிமைச் சாசனம்
விலை ரூ. 30

இந்த ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர், இங்கே அழுத்தவும்


  1. ம.க.இ.க பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல். பல அமைப்புகளும் ம.க.இ.க- க்கு நன்றி சொல்லி, பல சமயங்களில் நன்றி சொல்லாமலும் பயன்படுத்தினார்கள். பயன்படுத்துகிறார்கள்.

    அமைப்பில் சேருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சியில் ஒரு தன்னார்வ அமைப்பு இந்த பாடலை ம.க.இ.க பாடல் என சொல்லாமல் பயன்படுத்தியதற்காக நண்பர்களுடன் போய், அவர்களுடன் சண்டை போட்டோம். அந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

    • //ஒரு தன்னார்வ அமைப்பு இந்த பாடலை ம.க.இ.க பாடல் என சொல்லாமல் பயன்படுத்தியதற்காக நண்பர்களுடன் போய், அவர்களுடன் சண்டை போட்டோம். அந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.//

      இவ்வாறு சண்டை போட்ட செயலோடு எனக்கு உடன்பாடில்லை என்பதைத் தோழமையுடன் இங்கே பதிவு செய்கிறேன்.

      • வணக்கம் தோழர் மயூ. இசையை களவாடி அப்படியே பாடினாலும் பரவாயில்லை சினிமா பாட்டுக்கு மாரியம்மன் டியூன் போடுவது போல கண்டபடி வார்த்தையை மாற்றிவிடுவது… நமது தீவிர அரசியல் கருத்துக்களை சென்சார் செய்து விடுவது..நேர் எதிர் அர்த்தத்துடன் பாடுவது போன்ற துன்பங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் போலி கம்யூனிஸ்டு கம்பேனி தமுஎகசவும் ம.க.இ.க வினருக்கு பல ஆண்டுகளாக கொடுத்து வருகின்றனர். இங்கே குருத்து செய்தை போல எதிர்த்து சண்டை போடவில்லையெனில் நாடு முன்னேறுதுங்கறான் பாட்டு மகளிர் சுய உதவி குழுவுக்கோ, அரிவாள் சுத்தியல் ஓட்டுக்கோ பயன்படும் அபாயம்

      • பாடலை சிதைத்தும் மாற்றியும் பயன்படுத்தியிருப்பார்கள் என்று நான் நினைத்திருக்கவில்லை அதனால்தான் அப்படி கருத்துச்சொன்னேன். பாட்டைச்சிதைத்தால் சண்டை போட வேண்டியதுதான். பாட்டை உள்ளபடி முழுமையாக எவர்போட்டாலும் பாட்டின் அர்த்தமும் பாட்டும் மக்களிடம் போய்ச்சேரட்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு அதுதான்.

      • george bush, போனமுறை போட்ட “காங்கிரஸ் என்றொரு கட்சி” அப்படியே வேறொரு பாட்டை எடுத்து வார்த்தையை மாத்தி தான பாட்டு ஆக்கி இருக்காங்க. ஏன் வேற யாராவது பண்ணினா கோவம் வரணும் ?
        உங்களுக்கு பாட்டை மாத்தி காங்கிரஸ் கட்சியை / முதலாளித்துவத்தை திட்டறதுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கோ அதே அளவுக்கு மகளிர் சுய உதவி குழுக்கு கிடையாதா ?

      • மணி… தாராளமா அவங்களும் நந்தவனத்திலோரு ஆண்டி பாட்ட மாத்தி பாடட்டுமே அதிலொன்னும் பிரச்சனையில்ல.. ஏன்னா அது காலம் காலமா மக்கள் சொத்தாகி போன பாட்டு…. ஆனா இந்த பாட்டு அப்படியில்ல இது எங்க உழைப்புல உருவானது, இதை சிதைக்கும் உரிமையை யாருக்கும் கொடுக்க முடியாது.

        இந்த பதில் உங்களுக்கு தெரியுமின்னு எனக்கும் தெரியும் இருந்தாலும் நீங்க எங்க போறீங்கன்னு பாக்குற ஆர்வத்துல நீங்க எதிர்பார்த்த்தையே சொல்லுறேன்

      • தவிர இது ஏதோ சினிமா பாட்ட எடுத்து சாமி பாட்டு போடுற மாதிரி இல்ல… அரசியல்.. எங்க அரசியல் தன்னார்வ தொண்டு நிறுவனங்களோட அரசியலுக்கு நேர் எதிரானது. அந்த அரசியலை நாங்க நிராகரிக்கிறோம்.. மக்களை ஏய்க்கும் தந்திரம்ன்னு சொல்லுறோம்.. எங்க மேடைங்கல்ல அவங்கள விமர்சனம் பண்ணுறோம்.. அவங்களே எங்க பாட்ட களவாண்டா ஜனம் குழம்பிடாது (அதுக்குத்தான் அவங்க அத செய்யறாங்க)… இதுவும் ஒரு முக்கிய காரணம்

      • நான் loaded question எல்லாம் கேக்கறது இல்லைங்க. நீங்க கோவபட்டவுடன கேக்கணும்ன்னு தோணிச்சு. அவ்வளவு தான். மக்களுக்கு முன்னாடியே பழகி போன மெட்டுல தான் கருத்து சொல்றது இயல்பு. 

    • aam sameebathil kooda pollachiyil jathi olippu manattil kaiyethukku ullaikirathukku padal pottargal niraya per nalla irukkuthunanga nan ithu ma ka ee ka padal endru avargalukku sonnathum appoluthan avargalukku therinthathu

  2. எம் மக்கள் ஒருவேளை க்க்ழுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் போது ம க இ க வெறி நாய்கள் தினம் இளங்கன்று கறி தின்று கொழிக்கிறார்க்கள்.போதாதற்கு மேல் நாட்டு விஸ்லி போதையேறிக்கொள்ள.சுட்டுத் தள்ள வேண்டு ம க் இ க நக்சல் தீவிரவாதிகளை

    • ஏய் பாலா!

      உன்னை ஒரு ரூமில போட்டு அடைச்சு வைச்சுருங்காங்க! வலையில் எது வேண்டுமென்றாலும் எழுது என ஒரு இன்டெர்நெட் கனெக்சனும் கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
      வெளியே வந்துராதே! பாலா!

      ஆமா!
      பாலா எப்பொழுது மருது ஆனாய்?

  3. அருமையான பாடல் 90% மக்கள் அனுபவித்த கொடுமைகளே பாடல் வரிகளாக, வெகுவாக மக்களை சென்றடைந்த பாடல் 10% maruthu- இருப்பார்கள் பட்டினியிலும். தொடரட்டும் இந்த பணி

  4. திரு செந்தழல் ரவி அவர்களே, உங்க நாடு மின்னேரியது போல இவங்க நாடு முன்னேறலையே… ஏன்?

  5. ம க இ க பாடல்களில் என்னை அதிகமதிகம் கவர்ந்த பாடல் இது. இலங்கைச்சூழலுக்கும் பொருந்துவதாக இருப்பதால் இங்கே நண்பர்களுடனும் நான் அதிகம் பகிர்ந்துகொண்ட பாடலும் இதுவே.

    ஒவ்வொரு சரணத்தினதும் கடைசி இரு அடிகள் அறிவின் நடுமண்டையில் போடும் அடியில் கண்கலங்கும். ஒவ்வொரு முறையும்.

    பாடல்களை வினவுத்தளத்தில் இவ்வாறு வரிகளோடு பகிர்வது சிறப்பான பணி.

    நன்றி.

  6. எனது விருப்பத்திற்குரிய பாடல்களில் ஒன்று இது.

    வேறு சில பாடல்கள்…(நேயர் விருப்பங்கள் :-))

    1/ எங்க நாடு ஆகுது வல்லரசு… அமெரிக்கா போலே எங்க நாடு ஆகுது வல்லரசு…
    2/ வெட்டரிவாள் எடுடா, ரத்தம் கொதிக்குதடா..
    3/ அண்ணே வற்றாரு வள்ளல் வற்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க..
    4/ ராமனுக்கு அவசரமா ஆளனுப்புடா, ஒரு அம்பு விட்டு அமெரிக்காவ நெம்பச் சொல்லுடா…
    5/ இந்து என்னடா, முஸ்லீமு என்னடா.. இணைந்து சொல்லுவோம் நாங்கள் பாட்டாளிகளடா…
    6/ நெருங்குதடா.. இருள் நெருங்குதடா…
    7/ சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம்…
    8/ நாமக்கட்டி ஆளப் போகுது உஷாரு.. நாட்டப் பிடிச்சு ஆட்டப் போகுது…
    9/ ஆயிரம் காலம் அடிமை என்றாயே.. அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே…
    10/ மறையாது மடியாது நக்சல்பரி
    11/ மேகம் பொழிவதற்குள் வியர்வை பொழிந்து மண்ணை வெட்டி வரப்பெடுப்பிரே
    12/ கையிருக்கு உழைக்கிறதுக்கு
    13/ காடு களைந்தோம்..
    14/ கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கவர்ன்மெண்டு
    15/ கூக்கலும், காகமும்
    16/ கடவுள் கடவுள் என்றுரைத்து கதறுகின்ற மனிதர்காள்
    17/ எச்சரிக்கை எச்சரிக்கை ஆர் எஸ் எஸுக்காரன் வற்றான் எச்சரிக்கை
    18/ விதியை வென்றவர்கள் யாரடா? அது நக்சல்பாரிகள் தானடா

  7. pala andugaluku mun ezhuthiya padal ithu.ippothu ulla samuga nilaikum sariyaga porunthugirathu.”kalai enbathu makkalukanathu”enbathai namathu amaipu mattume sariyaga segirathu,enbathil perumaiyaga ullathu.

      • யப்பா krishnaஅந்த structure மசுறு என்னான்னு நீதான் சொலலேன் jealous ஆவாம கேட்குகிறோம். அப்படியே Amartya Sen னுக்கும் ஒரு Email போடு ஏன்னா அவரு கூட உன் structure பத்தி தெரியாம இது மாதிரிதான் பேத்திக்கிட்டிருக்காறு

  8. expecting soon

    1
    . எங்க நாடு ஆகுது வல்லரசு… அமெரிக்கா போலே எங்க நாடு ஆகுது வல்லரசு…
    2. சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம்…

    3. விதியை வென்றவர்கள் யாரடா? அது நக்சல்பாரிகள் தானடா

    4. ஆயிரம் காலம் அடிமை என்றாயே.. அரிசனன்னு பேரு வைக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க