முகப்புதலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!
Array

தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!

-

vote-012திருச்சியில் கள்ளர் சாதியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா பி.எட் படிக்கும் போது அறிமுகமான தலித் இளைஞரான பத்ரகாளியை காதலிக்கிறார். பின்னர் செப்டம்பர் 29ஆம் நாள் இருவரும் சேலத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் பத்ரகாளியின் சகோதரி வசிக்கும் மடத்துக்குளம் என்ற உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஊரில் வாழ்கின்றனர்.

கடந்த 4.11.09 புதன்கிழமை அன்று ஸ்ரீபிரியாவின் தந்தையான சீனிவாசனும், அவரது இரண்டு உறவினர்களும் மடத்துக்குளம் வருகின்றனர். மகளிடம் அவளது அம்மா நோய்வாய்ப்பட்டிருப்பதால் திருச்சிக்கு வந்து பார்க்குமாறு சீனிவாசன் கேட்டிருக்கிறார். இந்த சென்டிமென்டுக்கு பின்னால் சாதிவெறி இருக்கும் என்பதை யூகிக்க முடியாத அந்த அப்பாவிப் பெண் தனது கணவன் வந்ததும் முடிவு செய்வதாக கூறியிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு தனது தந்தையின் சாதிவெறி மாறியிருக்கும் என்று அந்த பெண் மகிழ்ச்சியடைந்திருக்கலாம்.

பத்ரகாளியின் சகோதரி கணவர் சந்திரசேகர் கூறியபடி மகளை பார்க்க வந்த தந்தையும் இரண்டு உறவினர்களும் வெளியேறினர். சிறிது நேரம் கழித்து அந்த இரண்டு உறவினர்கள் மட்டும் திரும்பி வந்தனர். “எதற்கு திரும்ப வந்து தொந்தரவு செய்கிறீர்கள்” என்று சந்திரசேகரனது மனைவி ராணியும் பக்கத்துவீட்டுகாரரும் கேட்டிருக்கின்றனர். அந்த இரண்டு உறவினர்களில் ஒருவர் கத்தியைக்காட்டி மிரட்ட மற்றொருவர் ஸ்ரீபிரியாவைக் குத்திக் கொன்றார். கழுத்திலும், மார்பகத்திலும், வயிற்றிலும் குத்திக் கிழிக்கப்பட்ட ஸ்ரீபிரியா அங்கேயே துடி துடித்துக் கொல்லப்பட்டார்.

தற்போது சீனிவாசனும், அவரது உறவினர்களான ஆசைத்தம்பி, பண்ணாடி முதலியோர் கைது செய்யப்பட்டு 302 கொலை செய்தல் பிரிவின்படி வழக்கு பதியப்பட்டிருக்கிறது. தீண்டாமை வன்கொடுமையின் கீழ் போலிசார் வழக்குபதியவில்லை. (செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, 6.11.09)

திருமணம் முடிந்த உடனேயே ஸ்ரீபிரியாவின் பெற்றோர், உறவினர்கள் எல்லாம் சேர்ந்து இந்த புதுமணத்தம்பதியினரை மிரட்டி வந்தனர். இதற்காக பத்ராகாளியன் உறவினர்கள் போலிசிடம் சிலமுறை புகார் கொடுத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல போலிசு நடவடிக்கை எடுக்காமல் ஸ்ரீபிரியாவை அவரது தந்தையுடன் அனுப்ப பஞ்சாயத்து செய்தது. அதை அந்த பெண் மறுக்கவே அவரது தந்தையும், உறவினர்களும் ஆத்திரத்துடன் சென்றிருக்கின்றனர்.

முதலில் அவர்களுடைய திட்டம் பத்ரகாளியைக் கொல்வதுதான். ஆனால் அவர்கள் சென்ற  நேரத்தில் பத்ரகாளி இல்லாததால்  ஸ்ரீபிரியாவை மட்டும் கொடூரமாக கொன்றிருக்கின்றனர். அதுவும் மார்பகங்களை குத்தி கிழிக்குமளவுக்கு சாதிவெறி முத்தியிருந்தது.

கடந்த இருவருடங்களில் இதுபோல ஏழு கொலைகள் கலப்பு மணத்திற்காக நடந்திருக்கின்றன. தஞ்சை, திருச்சி முதலான மத்திய தமிழகத்தில் வாழும் கள்ளர் சாதியினர் தேவர் சாதி பிரிவில் ஒருவராவார்கள். பொதுவில் கடும் சாதிவெறி கொண்டதாகவே இந்த சாதியினர் நடந்து கொள்வார்கள். இந்த பகுதிகளில் எல்லா அரசியல் கட்சிகளிலும், ஏன் ரவுடிகளிலும் கூட இந்த சாதி மட்டுமே இருக்கும். தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்

மற்ற எல்லாவற்றையும் விட தனது சாதிப்பெண்கள் தலித்துக்களை மணம் செய்வதை இந்த உலகத்திலேயே மிகவும் இழிவான செயலாக ஆதிக்க சாதி வெறியர்கள் கருதுகின்றனர். இதனாலேயே மகள் தாலியறுத்தாலும் பரவாயில்லை என தலித் மருமகன்களை கொல்கின்றனர். தனது சாதி பெண் கலப்பு மணத்தில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அவளையும் கொல்வதற்கு அவர்கள் தயங்குவதில்லை.

சில ஆண்டுகளுக்கும் முன் விருத்தாசலத்தில் ஒரு வன்னிய பெண் தலித் ஆண் தம்பதியினர் கட்டிவைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். சென்ற ஆண்டு திருவாரூரைச் சேர்ந்த ஒருதலித் இளைஞன் கள்ளர் சாதி பெண்ணை மணந்ததற்காக அவளது அண்ணன்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இன்னும் வெளிச்சத்திற்கும், ஊடகங்களுக்கும் வராத செய்திகள் பல இருக்கும். இந்த பிரச்சினைகள் போலிசு தரப்பிற்கு வரும்போது அவர்கள் சமரசம்பேசி அந்த  திருமணங்களை ரத்து செய்து ஆதிக்க சாதியினரின் மனங்களை குளிர்விக்கவே முயல்கின்றனர். மாறாக அப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு பாதுகாப்பு தருவதில்லை. சமூகத்திலேயே ஆதிக்க சாதி கோலேச்சும் போது போலிசு மட்டும் விதிவிலக்கா என்ன?

இதுதான் தமிழகத்தின் உண்மையான முகம். இதுதான் தமிழக காதலர்களுக்கு உள்ள ஜீவாதாரமான பிரச்சினை. இதை வைத்தோ, அம்பலப்படுத்தியோ, ஆதிக்க சாதியினரை இடித்துரைத்தோ கதைகளோ, சினிமாவோ, தொலைக்காட்சி உரையாடல்களோ வருவதில்லை. மற்றபடி நடை, உடை, பாவனைகளை வைத்து எப்படி காதலிப்பது, கவருவது, கடலை போடுவது என்பதையே ஊடகங்கள் கற்றுத்தரும் பாடம்.

ஆதிக்க சாதி வெறி கிராமத்தில் மட்டும்தான் இருக்கும் நகரத்தில் இல்லை என்பதெல்லாம் மேம்போக்கான மதிப்பீடு மட்டுமே. இங்கே ஸ்ரீபிரியாவின் பெற்றோர் திருச்சியில்தான் வசிக்கின்றனர். கிராமங்கள் சூழ வாழும் நகரத்தில் மட்டும் சாதி புனிதமடைந்து விடுமா என்ன?

தலித் பெண்களை ஆதிக்கசாதி ஆண்கள் மிரட்டி பெண்டாளுவதெல்லாம் பிரச்சினை இல்லை. ஒரு ஆதிக்க சாதியின் திமிரான அந்த காமவெறியினால் சாதியின் புனிதம் கெட்டுவிடுவதில்லை. சொல்லப்போனால் அது பெருமையாக பார்க்கப்படுகிறது. தலித் பெண்களெல்லாம் அவர்களுக்கு படைக்கப்பட்ட சதைப்பிண்டங்களாக கருதப்படுகின்றனர். ஏனைய வேலைகளில் தலித் மக்களின் இலவச சேவைகளை பயன்படுத்தும் ஆதிக்க சாதி இந்த பெண்டாளுவதையும் ஒரு சேவையாக அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் திமிரில் செய்கிறது.

ஆனால் ஒரு ஆதிக்க சாதி பெண் மட்டும் ஒரு தலித்தை மணந்தால் அது சாதியின் கௌரவம் குலைந்த ஒன்றாக கருதப்படுகிறது. இவ்வளவு சமூக மாற்றத்திற்குப் பிறகும் ஆதிக்க சாதி வெறியர்கள் இந்த ‘கௌரவத்தை’ குலைக்கும் மணங்களை வாழவிடுவதில்லை. தமிழகம் முழுவதும் இதுதான் நீக்கமற நிரம்பியிருக்கும் சமூக யதார்த்தம். இதில் எந்தப்பகுதியும் விதிவிலக்கல்ல.

கல்வியும், வேலைகளும் சமூகமயமாகி வரும் வேளையில் இப்படி இருசாதிகளைச் சேர்ந்தோர் பழகுவதற்கும் காதல் வயப்படுவதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் எல்லா நவீன நுகர்பொருட்களோடும் வாழும் ஆதிக்க சாதி வெறியர்கள் இதை மட்டும் அனுமதிப்பதில்லை.

தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடும் டி.வி தொடர்களில் எதாவது இந்த உயிராதராமான பிரச்சினையை பேசுகிறதா?. வெற்றி பெற்ற காதல்படங்கள் இந்த வாழ்வா சாவா போராட்டத்தை பிரதிபலித்திருக்கிறதா? திறமை வாய்ந்த எழுத்தாளர்கள் எவராவது இதை நாவலாக எழுதியிருக்கிறார்களா? கேள்விகளை நிறைய இருக்கின்றன. ஆனால் பதிலென்னவோ ஒன்றுதான்.

நீங்க, வாங்க என்று பேசப்படும் கோவைத்தமிழின் உயர்ந்தபண்பாடு  குறித்தெல்லாம் அந்தப் பகுதியைச் சேர்ந்த பதிவர்கள் உயர்வாக பேசுகின்றனர். ஆனால் அங்குதான் அருந்ததி மக்களை நாயை விட கேவலாமாக நடத்தும் கொங்கு வேளாளக் கவுண்டர்களின் சாதி வெறி கோலேச்சுகிறது. தங்களது ஊரின் பழமைகளை மண்மணக்க பேசும் அந்த பதிவர்கள் எவரும் தமது பகுதிகளின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஏனென்றால் இவர்களும்  கூட சமூகயதர்த்தத்தின் உண்மைகளுக்கு முகங்கொடுப்பதாக இல்லை.

இப்படித்தான் ” இப்பெல்லாம் யாரு சார் சாதியை பார்க்குறாங்க” என்று நாகரீக நியாயம் பேசுபவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறோம். மார்பகங்கள் கிழித்து கொல்லப்பட்ட ஸ்ரீபிரியாவை இழந்து கதறிக்கொண்டிருக்கும் பத்ரகாளி ஊரோடு ஒத்து வாழ்ந்திருந்தால் இந்தப் பிரச்சினை இருக்காது என்று கூட அந்த நியாயவான்கள் பேசக்கூடும். அப்படி என்றால் இனி தலித் ஆண்கள் எந்த ஆதிக்க சாதி பெண்களையும் காதலிக்க கூடாது மீறீனால் மரணதண்டனை என்று ஒரு சட்டத்தை இயற்றிவிடலாம். அப்படி நடந்தால் தமிழகம் எந்த சாதி ‘மோதல்களும்’ இல்லாமல் அமைதிப்பூங்காவக திகழும்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

 1. ஹரிபிரியா என தினமணியில் போட்டிருந்தார்கள். தினமலரில் சாதியெல்லாம் குறிப்பிடாமல், செய்தி வந்தது. ஆனால், அந்த குறிப்பிட்ட தெருவை போடும் பொழுது, ‘தேவந்திர’ என குறிப்பிட்டிருந்தார்கள். அதன் மூலம் தெரிந்து கொண்டேன். கொடுமையான சம்பவம். அந்த பெண்ணின் அப்பாவுடன் உடன் பிறந்த அண்ணனின் பையன் தான் இந்த கொலையை செய்திருக்கிறார்.

  என்ன ஒரு கொடுமையான சாதி வெறி?

   • You fool, love is blind, love has no colour, no religion, no nationality, no caste, now in the globalization world if you say Iam Devar & it will continues is foolishness.

    • Hey u fool, you brain washed by the films.To respect your women your behavior first.Then you ll feel your your cast women good.you feel your cast is lowest and worse people because of that you trying to marry other cast.” thanoda sathiya kuraiva kevalama ninakira manusam kevalamana piravithan” “yarum thalthavarum illai uyarthavrum illai athanal ealam oreemathiyanvrgalahavum mudiyathu”

  • nam yhellam pallar sthy kallar sathy yhan mikaipaduthuvathalthan sathy veri varukirathu nam pallar kallarkal koalai seithanar nru sathy koori sathi valarkireerkal neengal kathalay vazharka veandumaanal oru sakiliyanuku nam sathy ponnai katti koadupoam sari sakiliyan yhandru oru sathyi kuripitathuku

  • இந்தியாவும் சரி விசேசமாக தமிழ் நாடும் சரி சாதிகள் ஒழிக்கப்பட்டால்தான் உருப்படும் … மனிதரில் தரம் பார்ப்பவர்கள் தாங்கள் உண்ணும் உணவு முதற்கொண்டு உடுத்தும் உடை வரை எத்தனையோ சாதிகளால் தானே உருவாக்கப்பட்டது…அதற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கும் சாதி வெறியர்கள் தங்கள் கழிவுகளைத் தாங்களாகவே அள்ளி போட வேண்டியதுதானே…..முட்டாள்தனமான சிந்தனைகளுக்கு விடுதலை கொடுத்து உண்மையான மனித நேயத்தோடு வாழ முற்படுவோம்.

 2. சாதிவெறி தன் மகளால் மானம் போனது என்று நினைக்க வைத்தது இப்போது இரணடு குடும்பங்கள், இரணடு ஊர்களுக்கு மற்றும் தெரிந்த இந்த செய்தி இகலோக முழுக்க தெரிந்துவிட்டது. மானத்தால் மாண்ட விட்டனர். கொலையால் மானம் மீண்டு விட்டது என அல்லவா நினைக்கின்றனர்.

  கொலையால் மனிதம் மடிந்து விட்டது. இந்த நிமிடம் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். தன் பெண் பேரக் குழந்தையை இருபாலர் படிக்கும் பள்ளியில் சேர்த்தால் நல்லதா ஒன்றும் ஆகி விடாதே என்ற ஆராய்சி கலந்த கவலையை தெரிவிக்கிறார்.

  படிமம் சிறுவயது முதலே,,,,,,,,, மதம், சாதி கலப்பு அகவுரம் என்று. மனிதனின் இன கலப்பால் என்ன நிகழும்.. சமுதாயம் மாற்றம்தானே வரவேற்போம். இதில் சாதி இனமா அல்ல திராவிட, ஆரிய,பார்சிய இப்படி பட்ட இன கலப்பா.. நாகரிக வளர்ச்சியை நோக்கி செல்லும் மனித இனம் இப்படி பட்ட இன கலப்பால் மேன்மையடையுமே தவிர தாழ்ந்து விடாது. சரி பண்ணாடி போன்றோரை என்ன செய்யலாம்..

  மற்ற பதிவர்களின் கருத்திற்காக காத்திருக்கிறேன்

 3. ம‌னசுக்கு ஆத்திரமா வந்த்து. இந்த நாட்டின் சாதி அமைப்பு சிறந்த்து எனக் கதறும் ஜெயமோகனின் அடிப்பொடிகளான அல்லது எதற்கெடுத்தாலும் அவரது சைட்டுக்கு லிங்க கொடுக்கும் அன்பர்கள் இந்தக் கொலையை நியாயப்படுத்துவார்களா அல்லது இதற்கு பொறுப்பேற்பார்களா.

  கட்டுரை சில வரிகளில் அதன் அரசியல் நோக்கத்தை சிதறடிப்பதாகப் படுகின்றது. மக்களை அணிதிரட்ட இது அறிவியல் ரீதியானது அல்ல•.////பொதுவில் கடும் சாதிவெறி கொண்டதாகவே இந்த சாதியினர் நடந்து கொள்வார்கள். இந்த பகுதிகளில் எல்லா அரசியல் கட்சிகளிலும், ஏன் ரவுடிகளிலும் கூட இந்த சாதி மட்டுமே இருக்கும். தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்//

  • ராசாத்தி மற்றும் நண்பர்ளுக்கு,

   தமிழகத்தின் ஆதிக்கசாதிகளில் முன்னணி வகிக்கும் கள்ளர் சாதியில் உள்ள ஆதிக்க சக்திகள் சசிகலா கும்பல்மூலம் அரசியல் ரீதியாகவும், கொல்லப்பட்ட முட்டைரவி, தி.மு.கவின் கலைவாணன் மூலம் தாதாயிசத்திலும் ஆதிக்கம் செய்கிறது. மற்ற சாதிகளை விட தலித்துக்களை குறிப்பாக காதல் மணம் செய்வோரை படுகொலை செய்யுமளவு இங்கு சாதிவெறி கோலேச்சுகிறது. அதைக் குறிப்பிடத்தான்

   //தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்//

   என்று எழுதியிருந்தோம். ஆனால் அப்படி எழுதியது தவறு என்பதை சுயவிமரிசனம் செய்து கொள்கிறோம். ஏனெனில் அந்த வரியின் பொருள் பிறப்பிலேயே சாதிவெறி என்ற பார்ப்பனியத்தின் பொருளை ஏந்தி வருகிறது. கள்ளர் சாதியிலும் ஏதுமற்ற உழைக்கும் மக்களும் இருக்கிறார்கள். சாதிவெறிக்கு அந்த சமூகம் பலியாகி இருந்தாலும் அதை மேற்கண்ட வரியில் இடித்துரைப்பது தவறு. தவறினைச் சுட்டிக்காட்டியமைக்கு தோழர் ராசாத்திக்கு நன்றி. இனி இத்தவறுகள் நிகழாத வண்ணம் கவனமாக இருப்போம்

 4. ஒன்றும் புதுமையில்லை. I am not shocked. இது வெறும் சாதிப்பிரச்னையில்லை.ஆணாதிக்கமும் சேர்ந்த ஒன்று. கள்ளர் ஜாதியினரோ, மற்றும் பலஜாதியனர், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும், கருதுவது என்னவென்றால், தங்கள் ஜாதி தங்களுக்கு எப்படி வந்ததோ அப்படியே வரும் தலைமுறைகளுக்கும் போய் சேரவேண்டும என்பதுதான். எப்படி சேர்ப்பது? அதற்குத்தான் இருக்கிறது கருப்பை. அது யாருக்கும் சொந்தம்? ஜாதிக்குத்தான் சொந்தம். அவளுக்கு அல்ல. கருக்கலைப்பு செய்யலாம். ஆனால் கருவைச் சுமந்தால் அது ஜாதிக்கருவாகத்தான் இருக்கவேண்டும். இல்லையெனில் ஜாதித் தொடர் அறுந்துவிடும். எனவே, இங்கு பெண் கொலைசெய்யப்பட்டாள்: தனக்குச் சொந்தமில்லா ஒன்றை சொந்தம் கொண்டாடுவது தவறு. ஊரார் சொத்துக்கு ஆசைப்படலாமா? எல்லா ஜாதியும் இப்படி நினைப்பது, மக்களின் குழுமனப்பான்மையே. சிறுசிறு குழுக்களாக இருந்தே பெரிய குழுவில் அடங்கமுடியும். இல்லை…இல்லை…நம் சிறு குழு மனப்பான்மையை அழித்துவிட்டு பெருங்குழுவில் காணாமல் போவோம் என்றால், நீங்கள் மட்டும் தனித்துவிடப்படுவீர். Musical chair மாதிரி இருக்கைகள் மற்றவருக்கு; உமக்கல்ல என்றாகி விடும். பெருங்குழு என்பது ஒரு தற்செயலான இலக்குகளுக்கு மட்டும்தான். சிறு குழு என்றும் காலம்காலமான ஆயிரங்காலத்துப் பயிர். தமிழ்ப்பார்ப்பனர்களை எடுத்துக்கொள்வோம். பார்ப்பன எதிர்ப்பு அலையோ அல்லது தங்களின் பேராசையோ தெரியவில்லை: அவர்கள் தங்கள் இனத்தையே அழித்துவருகிறார்கள். யாரையும் அவர்கள் பெண் காதலிக்கலாம். படித்தவனா, பண்பாளனா? தன் பெண் நன்றாக் இருப்பாலா? என்ற கேள்விகளுக்கு ஓரளவு positiveவான விடைகள் கிடைப்பின், அவர்கள் ok சொல்லிவிடுகிறார்கள் – ஒரு சிலர் மட்டும் ‘சாத்திரம், சம்பிரதாயம்’ எனத்த்டுத்தாலும், பெண்ணை விலக்கிவிடுவார்களே ஒழிய, கொலை போன்ற செயல்களில் இறங்கமாட்டார்கள். விளைவென்ன Mr வினவு? தமிழ்ப்பார்பனர் என்ற ஜாதி மெல்லமெல்ல அழிந்து வருகிறது. மற்றவரும் அழிய வேண்டுமா? அதுவா உங்கள் நோக்கமும் ஆசையும்?

  • தமிழ் பார்ப்பனர் என்ற சாதி தானே அழிந்த்து. அந்த சாதி இன மக்கள் அழியவில்லையே… பிறகு என்ன கவலை அய்யா..

   • பார்சிக்கள் பம்பாயில் இன்னும் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுள் மொத்தமே 25 குடும்பங்களே பார்சிக்கள் என அழைக்கப்படமுடியும். மற்றவர்களெல்லாம், பிற வகுப்பில் மணம் செய்து மாறிப்போனார்கள்.

    இதைப்போலவே, பார்ப்பனரெல்லாம் தங்கள் பெண்களைப் பிறவகுப்பார்களுக்குக் கொடுத்துவிட்டால், யாராப்பார்ப்பனர் என அழைப்பது? வாழ்வார்கள் நீங்கள் சொன்னதுபோல. அழிவதில்லை. ஆனால், பார்ப்பனர் என்ற ஜாதி காணாமல் போய்விடும்.

  • தமிழ் பார்ப்பனர்கள் அழிகிறார்களா இல்லை தங்க்ள் சாதியை அமெரிக்கா சென்றும் இறுக பற்றியிருக்கிறார்களா என்பதை அறிய இந்து பேப்பரின் மேட்ரிமோனியல் பக்கத்தை பார்க்கவும். அதில் சாதி தடையில்லை என்று ஒரு பார்ப்பான் கூட அறிவித்த்து கிடையாது. மற்றபடி குலம் கோத்திரம் எல்லாம் கச்சிதமாக குறிப்பிட்டே வரும். மற்ற சாதிகளிடம் கொஞ்சமாவது இருக்கும் நெகிழ்வுத்தன்மை பார்ப்பனர்களிடம் சுத்தமாக இருப்பதில்லை.

   • இந்த பக்கம் வந்து நாளாயிற்று என்று எட்டிப் பார்த்தேன். ஏண்டா வந்தோம் என்று நினைக்க வைக்கிறீர்கள்.

    உங்களிடமிருந்து இந்த பதிவிலும் மறுமொழிகளிலும் மூன்று ஸ்டேட்மெண்டுகள்:

    1. தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்.

    2. ஆனால் அப்படி எழுதியது தவறு என்பதை சுயவிமரிசனம் செய்து கொள்கிறோம். ஏனெனில் அந்த வரியின் பொருள் பிறப்பிலேயே சாதிவெறி என்ற பார்ப்பனியத்தின் பொருளை ஏந்தி வருகிறது.

    3. மற்ற சாதிகளிடம் கொஞ்சமாவது இருக்கும் நெகிழ்வுத்தன்மை பார்ப்பனர்களிடம் சுத்தமாக இருப்பதில்லை.

    மூன்றாவது ஸ்டேட்மெண்டில் பிறப்பிலேயே நெகிழ்வுத்தன்மை என்ற பொருளை ஏந்தி வரவில்லையா?

    இன்னும் சு. சாமி மற்றும் உ.போ. ஒருவன் விஷயத்தில் இரட்டை நிலைக்கு இன்று வரை பதில் இல்லை. பூணூல் போட்டவன் ஃபாசிஸ்ட் என்ற கருத்துபடத்துக்கும் இன்று வரைக்கும் விளக்கம் இல்லை.

    வினவிடம் இரட்டை நிலையும் போலித்தனமும் பெருகி வருகிறது.

    • ஆர்.வி, எப்போதும் நீங்களாகவே ஒன்றைக் கற்பித்துக் கொண்டு கேள்விகளைக் கேட்கிறீர்கள். ஹிந்து பேப்பரின் மேட்ரிமோனியல் விளம்பரத்தை பார்த்தால் பார்ப்பனர்களிடம் நெகிழ்வுத் தன்மை இருக்கிறதா இல்லையா என்று அறியலாம். இதற்கு பிறப்பிலேயே காரணமென்று நீங்களே கற்பனை செய்து கேட்கிறீர்கள். பார்ப்பனர்கள் பிறந்து தங்களது சமூக சூழலில் வளர்ந்து சாதி உணர்வை இறுக்கமாக பேணுபவர்களாகவே உள்ளார்கள். இதை எத்தனை முறை எழுதுவது

     அடுத்து சு.சாமி விவகாரத்தில் அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குபோட்டு ராமர் பாலம் என்ற புராணப் புரட்டை சொல்லி ஒரு அரசின் திட்டத்தையே நிறுத்துமளவு அதிகாரம் உள்ளது. அதாவது கருத்தை அமல்படுத்தும் அதிகாரம் அவரிடம் உள்ளது. எங்களுக்கு கருத்தை சொல்லுவதற்கு கூட உரிமை இல்லை. இதெல்லாம் ஏற்கனவே எழுதப்பட்ட விசயம்தான்.

     உன்னைப்போல ஒருவனில் ஆர்.எஸ்.எஸ் விரும்பும் ஆட்சிமுறை, நடைமுறைகளை காமன் மேன் செய்கிறார். மேலும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத தலைவர்களில் பெரும்பாலானோர் பூணூல் போட்டு வருணத்தருமத்தை நிலைநாட்டவும், முசுலீம்களை பூண்டோடு அழிக்கவும் விரும்பும் பயங்கரவாதிகள்தான். அதற்கு குஜராத் இனப்படுகொலை சாட்சியமாக உள்ளது. எனவே ஆர்.எஸ்.எஸ் கருத்தை தெரிவிக்கும் உ.போ.ஒ படத்தில் பூணூல் பயங்கரவாத படம் சரியானதே. எப்போதும் பார்ப்பனர்கள் பக்கம் நின்று விவாதிப்பதை விடுத்து சற்று விலகி நின்று பார்த்தால் உங்கள் ஓட்டைகள் உங்களுக்கே பொருந்தும். இந்தக்கருத்துக்களுக்கு பதிலாய் திரும்ப பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிப்பீர்கள். ரொம்பக் கஷ்டம்தான்

     • Poonul is the birth right.of Tamil brahmins – this is RV everywhere. What can one argue with him?

      All his arguments are written to prove his point that Tamil brahmins will continue to uphold their unique identity as a caste. Thevars are better than him: they are not hypocrites.

     • நேரம் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி மழுப்பல்களைப் பார்த்தால் எரிச்சலாக வருகிறது. என்ன செய்வது?

      நான்காவதாவகவும் நீங்கள் விட்ட ஒரு ஸ்டேட்மெண்டை இங்கே கொடுத்திருக்கிறேன்.

      /// தலித் மக்கள் படிக்கமாட்டார்கள், ஒழுக்கமாக இருக்கமாட்டார்கள், குளிக்கமாட்டார்கள், எனவேதான் அவர்கள் முன்னேறாமல் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி கும்பல் கூறுகிறது. //

      இப்படி எழுதிய நீங்கள் // பார்ப்பனர்கள் பிறந்து தங்களது சமூக சூழலில் வளர்ந்து சாதி உணர்வை இறுக்கமாக பேணுபவர்களாகவே உள்ளார்கள். இதை எத்தனை முறை எழுதுவது // என்று சொல்வதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்? ஒரு ஜாதியில் பிறந்த அத்தனை பேரும், – கவனிக்கவும் நீங்கள் சொல்வது அத்தனை பேரையும்! – தங்கள் பிறப்பால், இல்லை இல்லை வளர்ப்பால், “சாதி உணர்வை இறுக்கமாக பேணுபவர்கள்” என்று சொல்வதற்கு உங்களுக்கே நா கூசவில்லையா? உங்களுக்கும் நீங்கள் சொல்லும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கும் இந்த விஷயத்தில் என்ன வித்தியாசம்?

      ஹிந்து பேப்பரில் மாட்ரிமோனியல் என்கிறீர்கள். சரி பார்ப்பனர் அல்லாதவர்கள் கொடுக்கும் மாட்ரிமோனியல் விளம்பரங்களில் எத்தனை பேர் வேறு ஜாதியில் பெண்ணெடுக்க, மாப்பிள்ளை பார்க்க தயாராக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? அனேகமாக இதற்கு மவுனம்தான் பதில் என்று நினைக்கிறேன்.

      // அடுத்து சு.சாமி விவகாரத்தில் அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குபோட்டு ராமர் பாலம் என்ற புராணப் புரட்டை சொல்லி ஒரு அரசின் திட்டத்தையே நிறுத்துமளவு அதிகாரம் உள்ளது. அதாவது கருத்தை அமல்படுத்தும் அதிகாரம் அவரிடம் உள்ளது. எங்களுக்கு கருத்தை சொல்லுவதற்கு கூட உரிமை இல்லை. இதெல்லாம் ஏற்கனவே எழுதப்பட்ட விசயம்தான். //
      யார் இல்லை என்று சொன்னார்கள்? நான் கேட்பது உங்கள் இரட்டை நிலையைப் பற்றி. இதே போலத்தான் உ.போ. ஒருவனில் வரும் காமன் மானும் நினைக்கிறார். ஆனால் அந்த கற்பனைக் கதையில், வணிக நோக்கம் கொண்டு எடுக்கப்பட்ட சினிமாவில் அவன் சட்டத்தை கையில் எடுப்பது தவறு என்று வாதிட்ட நீங்கள் சாமி விஷயத்தில், நிஜத்தில், சட்டத்தை கையில் எடுப்பது சரி என்று வாதிடுகிறீர்கள். ஒன்று, சில நேரங்களில், சில சூழ்நிலைகளில் சட்டத்தை கையில் எடுப்பது சரி; இல்லை சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. நீங்கள் வினவு கை காட்டுபவர்கள் சட்டத்தை கையில் எடுக்கலாம் மற்றவர்கள் கதையில் கூட எடுக்கக் கூடாது என்று வாதிடுகிறீர்கள். இதைத்தான் நான் பல முறை திருப்பி திருப்பி கேட்டிருக்கிறேன், ஒன்றும் புரியாதவர் மாதிரி வெறும் சு.சாமி விஷயத்தில் உங்கள் நிலையை சுருக்கமாக எழுதுகிறீர்கள். மழுப்பலுக்கும் ஒரு அளவு இல்லையா?

      // உன்னைப்போல ஒருவனில் ஆர்.எஸ்.எஸ் விரும்பும் ஆட்சிமுறை, நடைமுறைகளை காமன் மேன் செய்கிறார். மேலும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத தலைவர்களில் பெரும்பாலானோர் பூணூல் போட்டு வருணத்தருமத்தை நிலைநாட்டவும், முசுலீம்களை பூண்டோடு அழிக்கவும் விரும்பும் பயங்கரவாதிகள்தான். அதற்கு குஜராத் இனப்படுகொலை சாட்சியமாக உள்ளது. எனவே ஆர்.எஸ்.எஸ் கருத்தை தெரிவிக்கும் உ.போ.ஒ படத்தில் பூணூல் பயங்கரவாத படம் சரியானதே. //
      அப்படியா? உலகில் முக்கால்வாசி பயங்கரவாத செயல்கள் செய்வது முஸ்லிம்கள். நீங்கள் இனி மேல் தீவிரவாதிகள் பற்றி கருத்து படம் போடும்போது அவர்கள் தலையில் ஒரு குல்லா வைத்து போடுவீர்களா? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்!

      எனக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் எத்தனை பேர் பூணூல் போட்டவர்கள் எத்தனை பேர் போடாதவர்கள் என்று தெரியாது. ஆனால் நீங்கள் சொல்வது உண்மை என்று வைத்துக் கொள்வோம். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் எல்லாரும் பூணூல் போடுபவர்கள் என்று சொல்வதற்கும் பூணூல் போட்டவர்கள் எல்லாரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்று சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவரா நீங்கள்? அப்படி வித்தியாசம் தெரியாதவர்தான் என்றால் இந்த இரண்டு ச்டேத்மேண்டுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி யோசிட்டுத்ப் பாருங்கள் – குல்லா போட்டவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் vs. தீவிரவாதிகள் எல்லாம் குல்லா போட்டவர்கள். அப்போது உங்களுக்கு நிச்சயமாக புரிந்துவிடும்!

      உங்கள் நிலை பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் மற்ற ஜாதியில் பிறந்தவர்களை விட “சாதி உணர்வை இறுக்கமாக பேணுபவர்கள்” என்பது. இது பல பதிவுகளில், மறுமொழிகளில், மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது. முடிந்தால் அதை நிரூபியுங்கள். இல்லாவிட்டால் பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்களை மட்டும் கேவலப்படுத்துவதை நிறுத்துங்கள்.

      • ஆர்.வி யதார்த்த்தை ஏற்க மறுக்கும் உங்கள் பதிலில் காழ்ப்புணர்வு தலைவிரித்தாடுகிறது.

       1. பார்ப்பனர்களில் பெரும்பாலானோர் எப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களை மதிப்படி முடியும். நீங்கள் தொடர்ந்து பார்ப்பனர்களை எதுவும் தெரியாத அப்பாவிகள் என்று வக்காலத்து வாங்குகிறீர்கள். இந்த நாட்டில் பலநூற்றாண்டை மேல்நிலையில் இருக்கும் அந்த சாதி எல்லா வசதிகளையும் வருண, சாதி அமைப்பின் பெயரில் அனுபவித்துக்கொண்டு எப்போதும் பேஷாக வாழ்க்கைய நடத்துகிறது. இந்த வசதி மற்ற சாதிகளை அடக்கி ஒடுக்கிய சுரண்டலில்தான் இருக்கிறது. அதனால்தான் பார்ப்பனர்கள் எவரையும் உடலுழைப்பு வேலைகள், விவசாயம் எதிலும் பார்க்க முடியாது. தன்னை உயர்வாக கருதிக்கொள்ளும் சாதி அதற்காக பல மடங்களையும், ஆர்.எஸ்.எஸ் முதலான பயங்கரவாத அமைப்புகளையும் வைத்து தன்னை இந்துக்களின் ரட்சகனாக காட்ட முயல்கிறது. இதற்கு சங்கராச்சாரி முதல் கோல்வால்கர் வரை பலரை சொல்லமுடியும். எல்லா மத, புராணங்களிலும் தனது மேன்மையை முன்னிருத்தி பிழைக்கும் இந்த ஒட்டுண்ணிகளை ஏதோ தலித்துகள் போன்று சித்தரிப்பது பச்சையான கயமைத்தனம். 50,100 ஆண்டுகளுக்கு முன்னால் வரை அவர்கள் செய்த அட்டூழியம் கணக்கில் அடங்காது. தற்போது ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தால் அந்த அடக்குமுறைகள் பெருமளவு ஒடுக்கப்பட்ட்டுள்ளது. ஆனால் இன்றும் பார்ப்பனர்கள் பாஜ.க மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி தங்களவா ஆட்சியை நிறுத்தவே விரும்புகிறார்கள். எனவே இந்த நாட்டின் மதவெறிக்கும், பிற்போக்கிற்கும், மற்ற சாதி மக்களை இழிவுபடுத்தியும், சுரண்டியும் வாழும் பார்ப்பனர்களை ஒன்னும் தெரியாத பாப்பா என அடிமுட்டாள் கூட கருதமுடியாது.

       2. ஹிந்து பேப்பரின் மேட்ரிமேனியலில் மட்டுமல்ல, வீடு வாடகைக்கு கூட பிராமின்ஸ் ஒன்லி என்று விளம்பரம் போடும் ஒரே சாதி பார்ப்பனர்கள்தான்.

       3.சு.சாமி விசயத்தில் சட்டத்தை கையிலெடுத்திருப்பது அந்த ஆள்தான். எங்களுக்கு சட்டத்தை விடுங்கள் கருத்தைக் கூட கையிலெடுப்பதற்கு அதிகாரமில்லை.

       4.இந்த உலகில் பயங்கரவாத செயல்கள் செய்வது முசுலீம்கள் என்பது உங்களுடைய இந்துத்வ மற்றும் அமெரிக்க அடிமைத்தன சிந்தனையைக் காண்பிக்கிறது. இந்த உலகில் பயங்கரவாத செயல்களை அதிகாரப்பூர்வமாகவும், அதிகமாகவும், பல இலட்சம் மக்களைக் கொன்றும் செயல்படும் ஒரே பயங்கரவாதி அமெரிக்காதான். ஆனால் அமெரிக்காவுக்கு வாழ்க்கைப்பட்டிருப்பதால் நீங்கள் இந்த உண்மையை ஏற்கமாட்டீர்கள்.

       5.டோண்டு ராகவன் என்ற பார்ப்பனர் கூட இந்தியாவில் மோடி பிரதமராக வரவேண்டும் என்று எழுதியிருக்கிறார். 2000 முசுலீம்களைக் கொன்ற அந்த பயங்கரவாதியை அவர் ஆதரிப்பதற்கு காரணம் டோண்டுவின் கண்ணோட்டம் பார்ப்பனியம் என்பதே. அத்தகைய டோண்டுவோடு நீங்கள் கொஞ்சிக் குலாவுவீர்கள். அதைக் கண்டிக்கிற வினவை வசைமாதிரி பொழிவீர்கள். இதற்கு காரணமென்ன? பார்ப்பன சாதிதான் மற்ற மக்களை கேவலப்படுத்துகிறது. அதை சாதிய பாசம் என்ற கண்களை மூடிக்கொண்டு உங்களால் ஒருக்காலும் உணரமுடியாது.

       6. மற்றபடி உங்களை பார்ப்பனியக் கண்ணோட்டத்திலிருந்து யாராலும் விடுதலை செய்ய முடியாது

       • // 2. ஹிந்து பேப்பரின் மேட்ரிமேனியலில் மட்டுமல்ல, வீடு வாடகைக்கு கூட பிராமின்ஸ் ஒன்லி என்று விளம்பரம் போடும் ஒரே சாதி பார்ப்பனர்கள்தான். //

        இரட்டை நிலை மிக அதிகமாக போகிறது என்று நினைத்தேன். பொய் சொல்லவும் ஆரம்பித்துவிட்டீர்களே! நான் சவால் விடுகிறேன். ஹிந்து மாட்ரிமொனியால்களில் பார்ப்பனர் அற்ற ஜாதியினரின் விளம்பரங்கள் எல்லாவற்றிலும் நாங்கள் ஜாதி பார்ப்பதில்லை என்று வருவதில்லை. முடிந்தால் என் கூற்று பொய் என்று நிரூபியுங்கள். ஒரே சாதி பார்ப்பனர்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள். பிற ஜாதிகளைப் பற்றியும்தான் பார்ப்போமே! ஹிந்து மட்டுமல்ல, தினத்தந்தி, தினகரன், டைம்ஸ் எந்த பேப்பர் ஆனாலும் எனக்கு சம்மதம். சவால்!

        இனி உங்கள் மிச்ச பாயின்ட்களுக்கு வருவோம்.
        1. // பார்ப்பனர்களில் பெரும்பாலானோர் எப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களை மதிப்படி முடியும். நீங்கள் தொடர்ந்து பார்ப்பனர்களை எதுவும் தெரியாத அப்பாவிகள் என்று வக்காலத்து வாங்குகிறீர்கள். //
        தாராளமாக தவறு செய்யும் பார்ப்பனர்களை கண்டியுங்கள். ஜாதி பார்க்கும் பார்ப்பனர்களை வலிமையாக கண்டியுங்கள். ஜாதீயம் என்ற கோட்பாட்டை கடுமையாக விமர்சியுங்கள். யார் வேண்டாம் என்று சொன்னது? ஆனால் பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் அனைவரையும் உங்கள் கண்ணில் பெரும்பாலோர், என் கண்ணில் கொஞ்சம் பேர் ஜாதி பார்க்கிறார்கள் என்று சொல்லி அவர்கள் எல்லாரையும் மதிப்பிடுகிறீர்கள் என்றால், கவனியுங்கள் எலாரையும் திட்டுகிறீர்கள் என்றால் அது மிக தவறான அணுகுமுறை. அந்த அணுகுமுறை தவறு என்பதால்தானே // கள்ளர் சாதியிலும் ஏதுமற்ற உழைக்கும் மக்களும் இருக்கிறார்கள். // என்று சுய விமரிசனம் செய்து கொள்கிறீர்கள்? கள்ளர் என்றால் கண் திறக்கும், பார்ப்பனர் என்றால் மூடிக் கொள்ளுமா?

        3. // ு.சாமி விசயத்தில் சட்டத்தை கையிலெடுத்திருப்பது அந்த ஆள்தான். எங்களுக்கு சட்டத்தை விடுங்கள் கருத்தைக் கூட கையிலெடுப்பதற்கு அதிகாரமில்லை. //
        ஒருவ மீது முட்டை வீச்சு என்பது சட்டத்தை கையில் எடுப்பது இல்லையா? உனகள் பதிவில் தேடித் பாருங்கள், எத்தனை முறை சு. சாமியை சட்டம் ஒன்று செய்யம் முடியவில்லை, அதனால்தான் சட்டத்தை, முட்டைகளை கையில் எடுத்தோம் என்று சொல்லி இருக்கிறீர்கள் என்று தெரியும்.

        4. // ந்த உலகில் பயங்கரவாத செயல்கள் செய்வது முசுலீம்கள் என்பது உங்களுடைய இந்துத்வ மற்றும் அமெரிக்க அடிமைத்தன சிந்தனையைக் காண்பிக்கிறது. //
        என்ன செய்யலாம், ஒசாமா, கசப் என்று பலர் இருக்கிறார்களே! அவர்கள் மதம் சார்ந்த தீவிரவாத செயல்களை செய்து தொலைக்கிறார்களே! அவர்கள் உத்தமர்கள் என்று நீங்கள் உளற விரும்பினால் சொல்லுங்கள். அவர்களை கம்யூனிஸ்டுகள் என்றா சொல்ல முடியும்?

        // 5.டோண்டு ராகவன் என்ற பார்ப்பனர் கூட இந்தியாவில் மோடி பிரதமராக வரவேண்டும் என்று எழுதியிருக்கிறார். //
        டோண்டு ராகவன் என்ன பார்ப்பனர்களின் பிரதிநிதியா? இல்லை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற நினைப்பா? அப்படி என்றால் ஒசாமா என்ற சோற்று பருக்கை, கசப், ஊட்தாபுரம், திண்ணியம், பாப்பாப்பட்டி, இம்மானுவேல் சேகரன் போன்ற சோற்றுப் பருக்கைகளை வைத்து என்ன முடிவுக்கு வருகிறீர்கள்? இல்லை குஜராத் மாநிலத்தில் மோடியை முதல்வர் ஆக்கி இருக்கும் எல்லாரும் பார்ப்பனர்களா?

        இதுதான் உங்கள் வாதம் என்றால் உக்ரேய்னின் நாடாளுமன்றத்தில் ஹோல்டோமோர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இன அழிப்பு என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்களே என்று சும்மாவா இருக்கிறீர்கள்? உக்ரேய்னில் நடந்தது என்ன என்று உக்றேநியர்களை விட உங்களுக்குத்தான் தெரியும் என்று நீங்கள் எழுதவில்லையா? ஒரு பார்ப்பனர் மோடிய ஆதரித்தால் போதும், பார்ப்பனர்கள் தாக்கப்பட வேண்டியவர்கள் என்று முடிவுக்கு வருவதை எப்படி நியாயப்படுத்தப் போகிறீர்கள்? சரி நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன்; மோடியை மட்டுமல்ல, பா.ஜ.க. கட்சிக்கே எதிர்ப்பாளன்; என்ன முடிவுக்கு வரப் போகிறீர்கள்?

        பிராமணர்கள் தாக்கப்பட வேண்டியவர்கள் என்று ஒரு முடிவு எடுத்துவிட்டீர்கள்; அதை சமாளிக்க இரட்டை நிலை, போலித்தனம், பொய் எல்லாம் தானாக பின்னால் வருகிறது. உங்கள் ஜாதி எதிர்ப்பு என்பதே வெறும் போலித்தனம். என் கருத்து என் ஜெநோடைப்பால் உருவானது என்று டாக்டர் ருத்ரன் சொன்னபோது ஜெநோடைப் என்றால் நான் வளர்ந்த சூழ்நிலை என்று வாய் கூசாமல் பொய் சொன்னீர்கள்; சரி இன்றைக்கு மறுபடியும் கேட்கிறேன், என் கருத்து என் ஜெநோடைப்பால் உருவானது என்று டாக்டர் ருத்ரன் சொன்னது சரியா தவறா? தைரியம் இருந்தால் வெளிப்படையாக சொல்லுங்கள்!

        • Dear, RV, உங்களுக்கும் வினவுக்கும் ஒரு மண்ணாங்கட்டி வித்தியாசமும் இல்லை. (வினவின் பார்வையில்)பெரும்பாலான (உங்கள் பார்வையில் சில)பார்ப்பனர்கள் பயங்கரவாதியாக இருப்பதால் எல்லா பார்ப்பனர்களும்  அப்படித்தான் என்கிறார்.
         ஒசாமாவும், கசாபும் முஸ்லிம்கள் என்பதால் உலகில் பயங்கரவாதம் செய்வது முஸ்லிம்கள் மட்டுமே என்கிறீர்கள், நீங்கள்.

         சபாஷ்..! சரியான போட்டி..!!  உங்கள் இருவர் பார்வையும் சார்பற்ற பார்வை கிடையாது என்பது நிரூபணம் ஆகிவிட்டது.  உங்கள் இருவரது பதிவும் நடுநிலையாளர் பார்வையில் வெற்றுக்குப்பைகளே அன்றி வேறில்லை.

         உலகின் ஒவ்வொரு தீவிரவாத இயக்கமும் ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்படும் சிறுபான்மை பிரிவிலிருந்து தம்மை ஆள்வோருக்கேதிராய் மட்டுமே துவங்குகிறது.  எல்லா இயக்கங்களும் நியாயமான காரணங்களுக்காகவே துவக்கப்படுகின்றன. சில நியாயமான வழியிலும் பல அநியாயமான வழியிலும் உரிமைகளுக்காக அந்தந்த அரசுக்கெதிராய் போராடுகின்றன.

         அப்படி அல்லாமல், இந்தியாவில் மட்டும் பெரும்பான்மை சமூகத்துக்கு – அதுவும் அடக்கி ஆளும் பிரிவினரால், பெரும்பான்மை இன அரசுக்கு ஆதரவாய் (!), சிறுபான்மை இன மக்களுக்கு எதிராய்(!) எதற்காக RSS என்ற ஒரு தீவிரவாத இயக்கம்? எதை சாதிக்க? ஒரே ஒரு நியாயமான காரணமாவது உண்டா? பெட்ரோலை ஊற்றி தீயை அணைக்கிறேன் என்று கூறுவதை எப்படி நம்புவது? 

         தேசத்தந்தை கொலை, சிறுபான்மையினர் மற்றும் அதே மதத்தின் கீழ் சாதி மக்கள் மீது வன்முறை வெறியாட்டம், எண்ணற்ற குண்டுவெடிப்புகளில் நேரடி மற்றும் மறைமுக தொடர்பு, மசூதி இடிப்பு, ராணுவம், நீதி, அரசு, காவல், ஊடகம், நிர்வாகம், கல்வி,  என அனைத்திலும் எதற்கு அதன் ஆதிக்கம்? மும்பை, கோவை குண்டுவெடிப்பு தவிர மற்ற ஏனைய எண்ணற்ற குண்டு வெடிப்புகள், கலவரங்கள், வன்முறை வெறியாட்டங்களில் விசாரணைக்கமிஷன் முடிந்தும் RSS குற்றவாளிகள் தண்டனை பெற முடியவில்லயே? பல விசாரணை கமிஷன்கள் சுட்டிய குற்றவாளிகளை கைது கூட செய்யவில்லையே? ஏன்?  ஏன்?  ஏன்?  ஏன்?  ஏன்?    

         • // Dear, RV, உங்களுக்கும் வினவுக்கும் ஒரு மண்ணாங்கட்டி வித்தியாசமும் இல்லை. (வினவின் பார்வையில்)பெரும்பாலான (உங்கள் பார்வையில் சில)பார்ப்பனர்கள் பயங்கரவாதியாக இருப்பதால் எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தான் என்கிறார்.
          ஒசாமாவும், கசாபும் முஸ்லிம்கள் என்பதால் உலகில் பயங்கரவாதம் செய்வது முஸ்லிம்கள் மட்டுமே என்கிறீர்கள், நீங்கள். //
          அடுத்தவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்று புரிந்துகொண்ட பிறகு பதில் எழுத வாருங்கள். ஒசாமாவும் கசபும் முஸ்லிம்கள் என்பதால் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்வது தவறு; அதே போலத்தான் யாரோ ஒரு பார்ப்பனர் என்னவோ சொன்னார் என்பதால் பார்ப்பனர்கள் ஃபாசிச்டுகள் என்பது தவறு, வினாவுக்கு முஸ்லிம்கள் பற்றி எழுதுவது தவறு என்று புரிகிறது, பார்ப்பனர்கள் பற்றி அப்படி எழுதவது தவறு என்று புரியவில்லை என்று பல மாதங்களாக கத்திக் கொண்டிருக்கிறேன். (சமீப காலமாக வினவுக்கு அது தவறு என்று புரிகிறது, ஆனால் இரட்டை நிலை எடுக்கிறார் என்று தோன்றிக்கொண்டிருக்கிறது.)

          உங்கள் அறிவு, புரிந்துகொள்ளும் திறன் பிரமிக்க வைக்கிறது. ஆனால் கவலைப்படாதீர்கள், அதனால் எல்லா முஸ்லிம்களும் முட்டாள்கள் என்று சொல்ல மாட்டேன்.

          • ஒசாமாவும் கசபும் முஸ்லிம்கள் என்பதால் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்வது தவறு; அதே போலத்தான் யாரோ ஒரு பார்ப்பனர் என்னவோ சொன்னார் என்பதால் பார்ப்பனர்கள் ஃபாசிச்டுகள் என்பது தவறு, வினாவுக்கு முஸ்லிம்கள் பற்றி எழுதுவது தவறு என்று புரிகிறது, பார்ப்பனர்கள் பற்றி அப்படி எழுதவது தவறு என்று புரியவில்லை என்று பல மாதங்களாக கத்திக் கொண்டிருக்கிறேன். (சமீப காலமாக வினவுக்கு அது தவறு என்று புரிகிறது, ஆனால் இரட்டை நிலை எடுக்கிறார் என்று தோன்றிக்கொண்டிருக்கிறது.)//

           ஒருசிலர் செய்யும் சில காரியங்களை வைத்து ஒட்டு மொத்தமாக குறை கூறுவது தவறு தான். இதை நாங்கள் யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதை விளக்கும் உங்கள் ஒப்பீடு தான் மிகத்தவறானது.

           இஸ்லாமியர்களில் சிலர் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதற்காக இஸ்லாமியர்களே பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறுதான்.

           இஸ்லாமியர்களை பார்பனர்களுடன் ஒப்பிடுவதற்கு பார்பனர்களில் சிலர் தான் சாதிபற்றோடு இருக்கிறார்களா??? அல்லது சிலர் தான் சாதியை கடைபிடிக்கிறார்களா???

           பூணுல் போட்ட படத்தை வினவு வெளியிட்டதற்கு கேள்வி கேட்கும் நீங்கள், பூணூல் அணிவதே இந்துக்களில் தான் தனித்த சாதி என்று அடையாளம் காட்டுவதற்காகத்தான் என்பதை மறுக்கிறீர்களா?

           பார்பனீயத்துக்கும் சாதிக்கும் சம்பந்தமே இல்லை நீங்கள் சொல்வீர்களேயானால், மற்ற நாடுகளில் இல்லாத சாதிப்பிணி இந்தியாவில் மட்டும் கான்கிரீட் கட்டிடம் போல் ஊன்றி இருக்க காரணம், மற்ற நாடுகளில் இல்லாத (ஒரு வேளை இருந்தாலும்) இந்து பார்ப்பனீயம் இந்தியாவில் மட்டும் ஊன்றி இருப்பதே காரணம் என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?

          • சர்வதேசியவாதிகள்,

           // ஒருசிலர் செய்யும் சில காரியங்களை வைத்து ஒட்டு மொத்தமாக குறை கூறுவது தவறு தான். இதை நாங்கள் யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதை விளக்கும் உங்கள் ஒப்பீடு தான் மிகத்தவறானது. // என்று நீங்கள் சொல்கிறீர்கள். நங்கள் என்பது யார் என்று தெரியவில்லை. அதில் வினவு உண்டா? வினவின் மறுமொழியிலிருந்து ஒரு quote . // டோண்டு ராகவன் என்ற பார்ப்பனர் கூட இந்தியாவில் மோடி பிரதமராக வரவேண்டும் என்று எழுதியிருக்கிறார். // இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? டோண்டு ராகவனின் கருத்துக்கு மொத்த பார்ப்பனர்களும் பொறுப்பா? இல்லை டோண்டு ராகவன், மற்றும் பார்ப்பனர்கள் வோட்டில்தான் மோடி முதல்வராகி உட்கார்ந்திருக்கிறாரா? அவர் கருத்து சரி தவறு என்பது இருக்கட்டும். ஆனால் டோண்டு ராகவன் போல கோடிக்கணக்கானவர்கள் நினைக்கிறார்கள். அந்த கோடிக்கனக்கானவர்களில் ஒருவரை மட்டும் – அவர் பார்ப்பனர் என்பதால் – தேர்ந்தெடுத்து அதனால் பார்ப்பனர்கள் ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று சொல்லாமல் சொல்லும் வினவின் செய்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா கண்டிக்கிறீர்களா? அதை முதலில் தெளிவாக, தைரியம் இருந்தால், சொல்லிவிடுங்கள்.

           // இஸ்லாமியர்களை பார்பனர்களுடன் ஒப்பிடுவதற்கு பார்பனர்களில் சிலர் தான் சாதிபற்றோடு இருக்கிறார்களா??? அல்லது சிலர் தான் சாதியை கடைபிடிக்கிறார்களா???//
           நான் கேட்கும் கேள்வி உங்கள் கண்ணில் படவில்லையா? பார்ப்பனர்கள் மட்டும் என்ன எக்ஸ்ட்ரா ஜாதிப் பற்றோடு இருக்கிறார்களா? எல்லா ஜாதிகளிலும் இருப்பதைப் போலத்தான் பிராமணர்களிலும். ஜாதி பார்ப்பவர்கள், பார்க்காதவர்கள் எல்லாரும் உண்டு. பார்ப்பனர்கள் தவிர்த்த மற்ற ஹிந்துக்கள் எல்லாரும் ஜாதியை விட்டுவிட்டதாகவும், பார்ப்பனர்கள் மட்டுமே ஜாதிப்பற்றொடு இருப்பதாகவும் உங்கள் கேள்வி பொருள் தருகிறது. ஜாதியின் நெகடிவ் கூறுகள் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த நாட்டில் பெரும்பாலோர் மனதில் ஜாதி பிரக்ஞையாவது இருக்கத்தான் செய்கிறது. பார்ப்பனர்கள் மட்டுமே மாட்ரிமொனியலில் ஜாதி பார்க்கிறார்கள் என்று வினவு எழுதுகிறார். இது பொய்யா உண்மையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வெளிப்படையாக சொல்ல முடியுமா?

           // பூணுல் போட்ட படத்தை வினவு வெளியிட்டதற்கு கேள்வி கேட்கும் நீங்கள், பூணூல் அணிவதே இந்துக்களில் தான் தனித்த சாதி என்று அடையாளம் காட்டுவதற்காகத்தான் என்பதை மறுக்கிறீர்களா? //
           நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? குடுமி வைத்தவன், நாமம் போட்டவன், பூணூல் போட்டவன் ஃபாசிஸ்ட் என்று பொருள் வரும்படி கருத்துப்படம் போட்டது சரியா தவறா?
           பூணூலுக்கு கடந்த காலத்தில் இருந்த ஒரு ஜாதியை உயர்த்தும் அர்த்தத்தை நான் மறுக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அது ஒரு சடங்கு மட்டுமே என்பது என் உறுதியான கருத்து. குலதெய்வம் கோவிலில் மொட்டை போடுவது, கடா வெட்டி பலி கொடுப்பது, கல்யாணத்தில் சில ஜாதிகளில் மாப்பிள்ளைக்கு முண்டாசு கட்டுவது, பெண் கழுத்தில் தாலி, முஸ்லிம்கள் குல்லா போடுவது போன்ற பல சடங்குகளில் இதுவும் ஒன்று. என்ன தாலி அடிமைத்தனத்தை குறிக்கிறது என்று வரிந்து கொண்டு வினவு எழுதுகிறாரா? இல்லை அடிமை படம் போட வேண்டுமென்றால் கழுத்தில் தாலியோடு ஒரு பெண்ணின் படத்தை போடுவாரா? யார் உடம்பில் என்ன இருக்க வேண்டும் என்று வரையறுக்க அடுத்தவருக்கு உரிமை இல்லை!

           // பார்பனீயத்துக்கும் சாதிக்கும் சம்பந்தமே இல்லை நீங்கள் சொல்வீர்களேயானால், மற்ற நாடுகளில் இல்லாத சாதிப்பிணி இந்தியாவில் மட்டும் கான்கிரீட் கட்டிடம் போல் ஊன்றி இருக்க காரணம், மற்ற நாடுகளில் இல்லாத (ஒரு வேளை இருந்தாலும்) இந்து பார்ப்பனீயம் இந்தியாவில் மட்டும் ஊன்றி இருப்பதே காரணம் என்பதை உங்களால் மறுக்கமுடியுமா? //
           நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சரியாக புரியவில்லை. பார்ப்பனீயம் என்ற சொல்லாட்சி தவறானது, பார்ப்பனர் மனதை புண்படுத்துவது. பார்ப்பனீயம் என்று நீங்கள் சொல்வதை நான் சாதாரணமாக ஜாதீயம் என்று பொருள் கொள்வேன். ஜாதீயத்துக்கும் சாதிக்கும் சம்பந்தம் இல்லாமல் எப்படி போகும்? ஜாதி இந்தியாவில் கான்க்ரீட் கட்டடம் போல ஊன்றி இருக்கிறது, அதற்கு காரணம் சாதீயக் கோட்பாடு என்று நீங்கள் சொல்வதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. ஆனால் context சரியாக புரியவில்லை. இந்த கோட்பாட்டில் பார்ப்பனர்களின் பங்கு பெரிது என்று சொல்ல வருகிறீர்களா? அதற்காக இன்றைய பார்ப்பனர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? உங்கள் முப்பாட்டன் நிச்சயமாக உங்கள் வீட்டு பெண்களை அடக்கி ஆண்டிருப்பான். அதற்காக உங்களுக்கு என்ன தண்டனை தரப்பட வேண்டும்? ஹிந்து மதவாதிகள் கஜினிக்கும், மொஹம்மது கோரிக்கும், பாபருக்கும், அவுரங்கசீப்புக்கும், ஏன் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் நடந்த Direct Action Day-க்கும், நவகாளிக்கும், ஜின்னாவுக்கும் இன்று பழி வாங்க வேண்டும் என்று சொல்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

          • //அவர் பார்ப்பனர் என்பதால் – தேர்ந்தெடுத்து அதனால் பார்ப்பனர்கள் ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று சொல்லாமல் சொல்லும் வினவின் செய்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா கண்டிக்கிறீர்களா? அதை முதலில் தெளிவாக, தைரியம் இருந்தால், சொல்லிவிடுங்கள்.//

           நீங்கள் திரும்ப திரும்ப, ”பூணூல் போட்டவர்களெல்லாம் சாதிவெறியர்களா?
           பார்பனர்களெல்லோரும் பாசிஸ்டுகளா?” என்னும் கேள்வியை கேட்பதன் மூலம்
           பூணூல் எதனால் அணிகிறார்கள், பார்பனர் சாதிய பற்றாளர் என்று எதனால் கூறுகிறார்கள் என்பதற்கான புரிதலை உள்வாங்காதரவராகத்தான் உங்களை காட்டுகிறது.

           பிறப்பின் அடிப்டையில் ஒருவரை பார்ப்பனர் என்று நாங்கள்(வினவு உட்பட) சொல்லவில்லை. சொல்லவும் கூடாது.

           பார்பனர்கள் என்று யாரை கூறுகிறோம்? சாதிய கட்டமைப்பில் மேல் தளத்தில் ஒய்யாரமாக கைகட்டி கொண்டு சமூகத்தின் சாதிபடிநிலைகளை சரியென்று கூறுகிறவர்கள், சாதிய படிநிலையில் தீண்டாமை குறித்து, சாதி கூறித்து எதிர்ப்பு கிளம்பும் போது அதை மனுதர்மப்படியும் சாஸ்திரங்களின் மேற்கோள்கள் காட்டி அதை நியாயம் என ஆதரிப்பவர்கள், சாதிகெதிரான சக்திகள் உருவாகும் போது அவ்வபோது அதை இந்து மத (அ)தர்மத்தின் படி தடுக்க அரும்பாடுபடுகிறவர்கள் எவரோ அவர்கள் பார்பனர்கள்.

           பார்பன குடுமபத்தில் பிறந்த ஒருவர் பார்ப்பன சாதிய கட்டுமானத்தை தகர்க்க போராடுகிறாரெனில் அவரை பார்ப்பனர் என்று கூறமுடியாது. ஆனால் பூணூல் அணியும் எத்தனை பேர் சாதியையே செங்கற்கல்லாய் கொண்டு கட்டப்பட்ட இந்துமதத்திற்கெதிராக போராடுகிறார்கள்?
           பார்ப்பனர்களில் எத்தனை பேர் இந்து மதவெறியை எதிர்க்கிறார்கள்?
           இந்து மதவெறியர்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள்?
           சாதிய வன்கொடுமைகள் நிகழும் போது எத்தனை பேர் கண்டித்திருக்கிறார்கள்? சாதியை ஒழிக்க எத்தனை பேர் போராடுகிறார்கள்?
           இவைகளுக்கெல்லாம் போராடுகிறவர்கள் பார்ப்பனர்கள் அல்ல!
           ஆனால் இதெற்கெல்லாம் கள்ளமௌனம் காத்து போராடாமல் அல்லது நேரடியாகவே ஆதரிப்பவர்கள் பார்ப்பனர்கள் இல்லை என்று உங்களால் கூறமுடியுமா?

           இனிமேலாவது பார்ப்பான் என்று சொல்லிவிட்டீர்களே என்று வாதிக்காமல் பார்பனர் என்றால் யார் என்ற புரிதலுடன் விவாதியுங்கள்.

           //நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சரியாக புரியவில்லை. பார்ப்பனீயம் என்ற சொல்லாட்சி தவறானது//

           மன்னிக்கவும், அதில் பார்பனர் என்பதற்கு பதிலாக பார்பனீயம் என்று தவறாக அடிக்கப்பட்டுள்ளது.

           //நான் கேட்கும் கேள்வி உங்கள் கண்ணில் படவில்லையா? பார்ப்பனர்கள் மட்டும் என்ன எக்ஸ்ட்ரா ஜாதிப் பற்றோடு இருக்கிறார்களா? எல்லா ஜாதிகளிலும் இருப்பதைப் போலத்தான் பிராமணர்களிலும். ஜாதி பார்ப்பவர்கள், பார்க்காதவர்கள் எல்லாரும் உண்டு. பார்ப்பனர்கள் தவிர்த்த மற்ற ஹிந்துக்கள் எல்லாரும் ஜாதியை விட்டுவிட்டதாகவும், பார்ப்பனர்கள் மட்டுமே ஜாதிப்பற்றொடு இருப்பதாகவும் உங்கள் கேள்வி பொருள் தருகிறது. ஜாதியின் நெகடிவ் கூறுகள் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த நாட்டில் பெரும்பாலோர் மனதில் ஜாதி பிரக்ஞையாவது இருக்கத்தான் செய்கிறது. பார்ப்பனர்கள் மட்டுமே மாட்ரிமொனியலில் ஜாதி பார்க்கிறார்கள் என்று வினவு எழுதுகிறார். இது பொய்யா உண்மையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வெளிப்படையாக சொல்ல முடியுமா?//

           எல்லோரும் தானே சாதி பார்க்கிறார்கள். பார்பனர்கள் மட்டுமா சாதி பார்க்கிறார்கள் என்று குழந்தைதனமாய் கேட்டாலும் உண்மையை மறைக்கும் விஷம் கக்கும் வார்த்தைகள் இவை. சாதியில், குலத்தில், கோத்திரத்தில் கறைபடிய கூடாது என்று அகமனமுறையை சமூகத்தில் தோற்றுவித்து இன்றும் அதை கடைபிடித்து, கோயிலில் ஒரு பிரிவனர் தான் உள்ளே நுழைய வேண்டும் ஒரு சிலர் நுழையக் கூடாது, மற்ற மொழி தீட்டு, இந்த மொழியில் தான் பாடவேண்டும் என்று விதிமுறைகளை வகுத்து அன்றும், இன்றும் அந்த விதிமுறைகளை கடைபிடிப்பவர்கள் யார்? இவைகளுக்கெல்லாம் எதிராக ஒரு பார்ப்பனர் பேசியிருப்பாரா?
           அப்படி பேசினால், இந்த சமூக அநீதிகளுக்கெதிராக குரல் கொடுத்தால் அதற்காக போரடினால் அவர் பார்ப்பனர் இல்லை.

           //நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? குடுமி வைத்தவன், நாமம் போட்டவன், பூணூல் போட்டவன் ஃபாசிஸ்ட் என்று பொருள் வரும்படி கருத்துப்படம் போட்டது சரியா தவறா?//

           குடுமி வைத்தவன், நாமம் போட்டவன், பூணூல் போட்டவன் எல்லாம் இந்துமதவெறியை எதிர்க்கிறானா? சாதியை எதிர்க்கிறானா? நிச்சயமாக இல்லை. இவைகளை எதிர்க்காமல் இந்துமதம் சரியானது. சாதியும் சரியானது என்பதால் தான் அணிகிறான்.

           //யார் உடம்பில் என்ன இருக்க வேண்டும் என்று வரையறுக்க அடுத்தவருக்கு உரிமை இல்லை!//

           உடம்பில் பூணூல் இருந்தால் என்ன? நெற்றியில் நாமம் இருந்தால் என்ன? அல்லது எதுவுமே இல்லாமல் அம்மனமாய் நிர்வாண சாமி போல் சாலையில் சென்றால் என்ன?

           ஆனால் இதேபோல் யார் உடம்பில், எது(?) இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன என்று எல்லோரையும் கோவிலில் அர்ச்சகராக்க அனுமதிக்க ஆதரவளிப்பீர்களா? ஆத்திகர்களின் மொழி எந்த மொழியாய் இருந்தாலும் பாட அனுமதிப்பீர்களா?

           //இந்த கோட்பாட்டில் பார்ப்பனர்களின் பங்கு பெரிது என்று சொல்ல வருகிறீர்களா? அதற்காக இன்றைய பார்ப்பனர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? உங்கள் முப்பாட்டன் நிச்சயமாக உங்கள் வீட்டு பெண்களை அடக்கி ஆண்டிருப்பான். அதற்காக உங்களுக்கு என்ன தண்டனை தரப்பட வேண்டும்? ஹிந்து மதவாதிகள் கஜினிக்கும், மொஹம்மது கோரிக்கும், பாபருக்கும், அவுரங்கசீப்புக்கும், ஏன் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் நடந்த Direct Action Day-க்கும், நவகாளிக்கும், ஜின்னாவுக்கும் இன்று பழி வாங்க வேண்டும் என்று சொல்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//

           அன்று செய்த பார்ப்பனர்களுக்காக இன்றுள்ள பார்ப்பனர்களையெல்லாம் பழிவாங்கவேண்டும் என்று சொல்லவில்லை. அன்று வகுத்த கோட்பாடுகளை இன்றும் இவர்கள் பின்பற்றுவதால் அதை பார்ப்பன வெறி என்கிறோம்.

           சரி. அன்று தவறிழைத்த பார்ப்பனர்களால் இன்றுள்ள பார்ப்பனர்கள் என்ன செய்வது என்று கேட்டால், இன்றும் அன்று வகுத்த சாதி தீண்டாமையை கடைபிடிக்கும் பழக்கத்தை என்னவென்று சொல்வது? திட்டினா மட்டும் அவர்கள் செய்தார்கள் என்று கைகாட்டி தப்பிக்கவேண்டியது. அதை மாற்றுங்கள் என்று சொன்னால் பாரம்பரியம் என்று சொல்லவேண்டியது.

           அன்று தவறிழைத்த பார்பனர்களால் அப்பாவியாய்(!) இன்று பழிச்சொல் வாங்கும் இன்றைய பார்ப்பனர்கள், அவர்கள் செய்த தவறையே செய்யாமல் அதை திருத்திக் கொள்ள தயாரா? சாஸ்திரம், மனு என்று அன்று முட்டாள்தனமாக மக்களுக்கு கற்பித்து விட்டார்கள். சாதியின் பெயரால் மக்களை பிரித்து வைத்து விட்டார்கள். இவைகள் தவறானவை. சாதியில்லை என்று கூறமுடியுமா?

           உங்களை கம்யூனிஸ்டுகளாக மாறுங்கள் பேசுங்கள் என்று வற்புறுத்தவில்லை; துன்புறுத்தவில்லை. குறைந்த விடயமாக, எல்லோரும் இந்து மததிற்குள்ளேயே பிராமணன் முதல் பஞ்சமன் வரை பெண் கொடுத்து பெண் எடுக்கலாம் என்று நீங்களோ, இன்றுள்ள பார்ப்பனர்களோ அல்லது பார்ப்பன அமைப்புகளோ அறிவிக்க தயாரா?

          • //இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? டோண்டு ராகவனின் கருத்துக்கு மொத்த பார்ப்பனர்களும் பொறுப்பா? //

           ஆமாம் என்று சொல்லுவேன், பார்ப்பான் இல்லையென்பவனுக்கு சுய சாதியில்லை எனும் போது அவன் ஏன் இந்த கூற்றைப் பார்த்து பயப்படவேண்டும்?

           அந்த சாதி அடையாளத்தை விட முடியாதவன் தான் ஏதாவது ஒரு வகையில் அதனை நியாயப்படுத்தி தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

           மேலும், பார்ப்பனியம் என்ற வார்த்தைக்கு மக்களிடம் தெருவில் இறங்கி பொருள் கேளுங்கள் நீங்கள் வரையறை செய்வதையெல்லாம் பேசாதீர்கள் என்று ஆர் வி வால்பிடிப்புவாதம் பேசுகிறார். நல்லது, இதே போல குஜராத்திற்கு சென்றால் அங்கு முஸ்லீம் எல்லாம் பயங்கரவாதி என்றே சொல்வார்கள். எனும் போது ஆர்வியின் நியாயப்படி பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு ஏற்ப குஜராத்தில் முஸ்லீம் என்ற வார்த்தையும், பயங்கரவாதமும் ஒன்று என்ற புரிதலை வைத்தே நாம் அந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.

          • //பூணூலுக்கு கடந்த காலத்தில் இருந்த ஒரு ஜாதியை உயர்த்தும் அர்த்தத்தை நான் மறுக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அது ஒரு சடங்கு மட்டுமே என்பது என் உறுதியான கருத்து. குலதெய்வம் கோவிலில் மொட்டை போடுவது, கடா வெட்டி பலி கொடுப்பது, கல்யாணத்தில் சில ஜாதிகளில் மாப்பிள்ளைக்கு முண்டாசு கட்டுவது, பெண் கழுத்தில் தாலி, முஸ்லிம்கள் குல்லா போடுவது போன்ற பல சடங்குகளில் இதுவும் ஒன்று. என்ன தாலி அடிமைத்தனத்தை குறிக்கிறது என்று வரிந்து கொண்டு வினவு எழுதுகிறாரா? இல்லை அடிமை படம் போட வேண்டுமென்றால் கழுத்தில் தாலியோடு ஒரு பெண்ணின் படத்தை போடுவாரா? யார் உடம்பில் என்ன இருக்க வேண்டும் என்று வரையறுக்க அடுத்தவருக்கு உரிமை இல்லை!//போகிற போக்கில் பூணூலை சாதாரண விசயமாக்கி விடுகிறார் ஆர்வி.. எல்லாப் பாப்பானுக்கும் தெளிவாகத் தெரிந்துதான் இதனை அணிந்துகொள்கிறானுக..யார் ஒடம்பில என்ன இருக்கணும்னு வரையறுக்க உரிமை இல்லையா? இதெல்லாம்..கொத்தி எறிய வேண்டிய கொழுப்பு இல்லையா? 50 வருசத்துக்கு முன்னாடியே பெரியார் கேட்டார்..ஒரு தெருவுல பல வீடுகள் இருக்கும்போது ஒரு வீட்டில மட்டும் ‘இது பத்தினிகள் வாழும் வீடு’ன்னு ஒரு குடும்பம் எழுதி வச்சிதுன்னா என்னா அர்த்தம்? அதுதாண்டா பூணூலுக்கும் அர்த்தம்..நீ முதுகுல் நூலைச் சுத்தினாலே..நான் இருபிறப்பாளன்..எல்லாத்தையும் விட நான் ஒசத்தி..நீ எல்லாம் எனக்கு கீழே என்று கொழுபோடு சொல்லும் திமிர் அது..அது சரி..அந்த நூலு மயிறுதான் சாதாரண சடங்குதானேப்பா..அதனை அறுத்துப்போடுறதுக்கு மட்டும் என்ன தேசப்பாதுகாப்புச் சட்டம் பாயுது? இந்த தேசம் என்ன பாப்ப்பான் முதுகுலயும் வயித்திலேயுமா சுத்துக்கிட்டு இருக்குது?

          • முஸ்லீமும், பார்ப்பனரும் ஒன்றா?

           ஆர் வியின் கருத்தில் சாதியும், மதமும் ஒன்று என்று ஆகிறது. இது மாதிரி சம்பந்தா சம்பந்தாமில்லாமல் முடிச்சு போட்டு ஆர் வி பார்ப்பனிய அடையாளத்தை காப்பாற்ற முனைவது அவரது சார்புநிலையையே காட்டுகிறது.

           ஒரு ஒடுக்குமுறை சமூகத்தில் மதம் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் தேவைப்படுகிறது என்பதுதான் உண்மை. மதத்தை நாடும் மக்களை அனுதாபத்துடன் தான் அணுக வேண்டியுள்ளது(அதே நேரத்தில் அதை நியாயப்படுத்துவதையும், அதை வைத்து தொந்தி வளர்ப்பவ்ரகளையும் இடித்துரைக்க வேண்டும்). ஆனால் சாதி? அது வரலாற்று வழி வந்த கொழுப்பு அதையெல்லாம் செருப்பு கொண்டு மட்டுமே அணுக வேண்டும்.

           இன்னிலையில் சாதி அடையாளத்தையும் மத அடையாளத்தையும் சமமாக பார்க்கக் கோரி வேண்டுகிறார் ஆர்வி… அப்படிச் செய்ய முடியாது.

        • Dear RV, I’m extremely sorry.

         ////4.இந்த உலகில் பயங்கரவாத செயல்கள் செய்வது முசுலீம்கள் என்பது உங்களுடைய இந்துத்வ மற்றும் அமெரிக்க அடிமைத்தன சிந்தனையைக் காண்பிக்கிறது.//// vinavu ////
         ———–இதை படித்துவிட்டு, 

         \\\\\\\\  4. // ந்த உலகில் பயங்கரவாத செயல்கள் செய்வது முசுலீம்கள் என்பது உங்களுடைய இந்துத்வ மற்றும் அமெரிக்க அடிமைத்தன சிந்தனையைக் காண்பிக்கிறது. // என்ன செய்யலாம், ஒசாமா, கசப் என்று பலர் இருக்கிறார்களே! அவர்கள் மதம் சார்ந்த தீவிரவாத செயல்களை செய்து தொலைக்கிறார்களே! \\\\\\    RV   \\\\————-இதை படித்தேன். (சுத்தமாய், நீங்கள் எனக்கிட்ட மறுமொழிக்கு-உங்கள் எண்ணத்திற்கு-எதிரான கருத்து)  உடன் மறுமொழி எழுதினேன்.

         //////அப்படியா? உலகில் முக்கால்வாசி பயங்கரவாத செயல்கள் செய்வது முஸ்லிம்கள். நீங்கள் இனி மேல் தீவிரவாதிகள் பற்றி கருத்து படம் போடும்போது அவர்கள் தலையில் ஒரு குல்லா வைத்து போடுவீர்களா? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்!////// RV ///// 
         ========இப்போதுதான் இதை படிக்கிறேன். கொஞ்சம் அசந்த நேரத்தில் முழுப்பூசணியை சோற்றுப்பருக்கையில் மறைத்துவிட்டாரே வினவு! 

          As a honest man, why not you reply on my remaining part of the comment? Is it against you?

         • நெத்தியடி முகம்மது,

          Apology accepted. தவறை தவறு என்று ஒத்துக் கொள்வது பெரிய விஷயம். வாழ்த்துக்கள்.

          ஆனால் உங்கள் கருத்துகளில் எனக்கு இசைவு இல்லை. வித்தகன் சொல்வது போல ஜெனோம் தியரி டார்வின் கொள்கைகளை கொன்றுவிடவில்லை. ஆதாமும் ஏவாளும் மனித குலத்தின் தாய் தகப்பன் என்பது இன்றைய அறிவியலின் புரிதல் இல்லை.

          ஆர்.எஸ்.எஸ். பற்றி கேட்டிருந்தீர்கள். எனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளைப் பற்றி அரசல் புரசலாகத்தான் தெரியும். ஆர்.எஸ்.எஸ். குற்றவாளியா இல்லையா என்பது பற்றி என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது. அப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது, அவ்வளவுதான். (மோடி குற்றவாளி, அத்வானி பாபரி மசூதியை இடித்த விஷயத்தில் குற்றவாளி என்று உறுதியாக சொல்ல முடியும்.) அவர்கள் என்ன, கருணாநிதி, ஜெயலலிதா, மாயாவதி, அந்துலே, அத்வானி, மோடி, யாருமே தண்டிக்கப்படுவதில்லை. ஏன் தண்டிக்கப்படுவதில்லை என்று என்னை கேட்டால் நான் என்ன பதில் சொல்லட்டும்?

          • //ஆர்.எஸ்.எஸ். பற்றி கேட்டிருந்தீர்கள். எனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளைப் பற்றி அரசல் புரசலாகத்தான் தெரியும். ஆர்.எஸ்.எஸ். குற்றவாளியா இல்லையா என்பது பற்றி என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது. அப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது, அவ்வளவுதான். (மோடி குற்றவாளி, அத்வானி பாபரி மசூதியை இடித்த விஷயத்தில் குற்றவாளி என்று உறுதியாக சொல்ல முடியும்.) அவர்கள் என்ன, கருணாநிதி, ஜெயலலிதா, மாயாவதி, அந்துலே, அத்வானி, மோடி, யாருமே தண்டிக்கப்படுவதில்லை. ஏன் தண்டிக்கப்படுவதில்லை என்று என்னை கேட்டால் நான் என்ன பதில் சொல்லட்டும்?//

           ஆர்வி,

           இவர்களையெல்லாம் ஆதரிக்கும் நோண்டு ராகவன் குற்றவாளியா? ஏன் ஆர்வி நீங்கள் இது வரை நோண்டு ராகவனுடைய பதிவில் சென்று அவரது சாதி வெறியை எதிர்த்து வாதடியதில்லை? இங்கு கூட அவரை கண்டு கொள்ளாமலேயே வலம் வருகிறீர்களே?

          • ஆர் வியின் சார்பு நிலைகள் வெளிவரும் இடங்கள்.

           //ஆர்.எஸ்.எஸ். குற்றவாளியா இல்லையா என்பது பற்றி என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது. அப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது, அவ்வளவுதான்.//

           //பிறகு டோண்டு சாதி வெறி பிடித்தவர் இல்லை. அவருக்கு வீம்பு உண்டு. அவரை விட வீம்பு பிடித்த எத்தனையோ பேரை இங்கே பார்க்கிறேன், அவர்களையும் ஜாதி வெறியர் என்று நான் கருதவில்லை.//

           இணையத்தில் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் நுழையாத காலத்திலிருந்தே சுயசாதிப் பெருமை பேசி திரிந்த பிண்டம்தான் இந்த பெரியவர் டோண்டு. இவரது சாதிவெறிதான் போலி டோண்டு உருவானதில் முக்கிய பங்கு ஆற்றியது.

           ஆனால் ஆர் வியின் கருத்தில் ஆர் எஸ் எஸ் செய்திருப்பதாக தோன்றுகிறதாம், டோண்டு சாதிவெறியர் இல்லையாம்… நல்ல அவதனிப்பு

        • //என் ஜெநோடைப்பால் உருவானது என்று டாக்டர் ருத்ரன் சொன்னது சரியா தவறா? தைரியம் இருந்தால் வெளிப்படையாக சொல்லுங்கள்!//

         ஆர்வி,

         டாக்டர அப்பாலிக்கா மொத்தமா கண்டிச்சுக்கலாம் மொத்தல்ல நொண்டு ராகவனை என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்

        • கண்டிப்பாக.. உங்கள் கருத்து அது வெளிப்படும் விதம் (ருத்ரன் கூறியபடி மறுப்பை கைக்கு எட்டும் தூரத்தில் இருந்து பதிவு செய்யாதது) கண்டிப்பாக ஜீனோடைப் சார்ந்தது..
         மேலும், பார்ப்பனர்கள் உடல் உழைப்பு செய்யாதது கூட ஜீனோடைப் சார்ந்ததே..

         அதே போல..
         பள்ளர்கள் கெட்ட வார்த்தை பேசுவதும், தேவர்கள் பீத்திக்கொள்வதும், கள்ளர்கள் பொய் பேசுவதும் , பிள்ளைகள் புறம் பேசுவதும், கோனார்கள் கோள்சொல்வதும் , நாயக்கர்கள் ஏமாற்றுவதும், முதலியார்கள் அடாவடி செய்வதும், வன்னியர்கள் வம்பளப்பதும், நாடார்கள் கலப்படம் செய்வதும் ஜீனோடைப் சார்ந்ததே..

        • நான் மணி

         1. சாதியத்தை படிநிலையாக மாற்றி அதற்கு த்த்துவ விளக்கம் தந்து அதன் மேல்நிலையில் இருந்தவர்கள் என்ற முறையில் அந்த அமைப்பு தவறானது எனக் கருதுபவர்கள் அதற்கு சாவு மணி அடிக்க வேண்டும். கள்ளர் அப்படி நிலையில் பின்னால் வருபவர்கள். கருத்து உருவாக்கத்தில் இவர்களது பங்கு எதுவும் கிடையாது என்பதோடு அவர்களும் பல சாதிகளுக்கு அடியில்தான் வருகின்றனர். மேல்நிலையில் இருந்து அதன் பய்னகளை நியாயமற்ற முறையில் அனுபவித்து வந்தவர்கள் மாறி வரும் ஜனநாயக கோட்பாடு தங்களது சமூகத்துக்கும் வேண்டும் என்று நம்புபவர்கள் தான் முதலில் திருமணம் போன்ற விசயங்களில் கலப்புமணத்தை ஊக்குவிக்க வேண்டும். மற்றவர்களை சாதி பார்க்க பழக்கியதற்காக பழக்கப்படுத்திய சாதியின் ஜனநாயக ஆதரவாளர்கள் மற்றவர்களையும் பார்க்க கூடாது என பிரச்சாரம் செய்யவும், அதனை பார்க்க தூண்டும் ஆச்சாரம் சடங்கு ஆகியவற்றை தமது குடும்பத்தில் இருந்தே எதிர்க்க துவங்க வேண்டும். இதனை
         விவாதிக்க வரும் நண்பர்கள் தமது குடும்ப அளவில் மாத்திரம் செய்யாமல் தமது உறவினர்கள் வரையிலும் நீட்டித்து இருப்பார்கள் என நம்புகிறேன். மதிப்பிடுவதையே குறை சொல்வது எனப் புரிந்து கொண்டாலோ அல்து பெண்களை ஒடுக்க தமது முன்னோர்கள் சொல்லிய புராணங்கள் காரணமல்ல என்று நம்பினாலோ சொலவத்த‍ற்கு ஒன்றுமில்லை.

         2. காமன் மேன் தீவிரவாதம்தான் பிரச்சினை என்று தானே முடிவுசெய்கிறார். ஜனநாயகவாதிக்ள் கவனிக்க வேண்டிய விசயம் இது. அதனை ரகசியமாகவும் செய்துமுடித்துவிட்டு பிறகு தன்னை நியாயப்படுத்துகிறார். மராரின் கருத்துடன் காமன் மேனின் கருத்து ஒன்றிணைகிறது. தற்செயலானது என்றே வைத்துக் கொள்வோம்.
         சுப்ரமணியசாமிக்கு முட்டையடித்து ஒரு செய்தி சொல்லப்பட்டது. ஏன் சுப்ரமணியசாமி அங்க வந்தாரு.. அப்புறம் ஏன் சிதம்பரம் போனாரு..12 ஆண்டுகளுக்கு முன் தீட்சதர்களை குற்றம் சொன்ன அவரே இன்று ஏன் அவர்களுக்கு ஆதரவா விசுவிந்து பரிசத் தலைவர்களுடன் உள்ள வர்றாரு.. இதெல்லாம் தனித்தானியா பாத்துவிட்டு அவர ஒரு டிராபிக் ராமசாமி மாதிரி பாருங்க அப்படின்னு நீங்க சொல்றீங்க•. கேக்குறவன் கொச்சம் கேணயனா இருக்கணும்..

         ஆயுதம்தான் பிரச்சனை என்பது உங்களது கருத்து.. முட்டையடி ஒன்றும் சட்டத்தை கையில் எடுப்பதும் அல்ல•. செருப்பு வீச்சு நடந்தே புஷ்ஷுக்கு அது கூட உங்கள் பார்வையில் எதிர்ப்பு இல்லை… அப்படின்னா எதிர்ப்ப எப்படி காட்டணும்னு பாடம் எடுங்கன்னு உங்கள கூப்பிட்ட்டுமா… கமான் மேன் எதிர்ப்பை காட்டவில்லை.. அரசின் ஜனநாயகம் என்ற நூலைப் பற்றிக் கொண்டு தீவிரவாதிகள் எப்படி தப்பிக்கிறார்கள் எனப் புரிந்துகொண்ட அவன் மீ அரசு வின் பாத்திரத்தை ஏற்றுக் கொள்கிறான். மரார் விரும்பிய அரசு அதுதான். இரண்டும் வேற அப்படினுன் புரியலையா

      • அரசாலும், நிதி மன்றத்தினாலும், ஆதிக்கசாதியாலும், பெரும்பான்மைவாதிகளாலும் முடக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுபவர்கள், அநீதி இழைக்கப்பட்டவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்கள் போராடுகிறார்கள்.
       அவர்களுக்காக இயக்கங்கள். சரி.
       தாங்களை யார் மிதிக்கிறார்கள். எதற்காக உங்களுக்காக ஒரு தீவிரவாத (RSS) இயக்கம்?

      • ///// தலித் மக்கள் படிக்கமாட்டார்கள், ஒழுக்கமாக இருக்கமாட்டார்கள், குளிக்கமாட்டார்கள், எனவேதான் அவர்கள் முன்னேறாமல் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி கும்பல் கூறுகிறது. //

       இப்படி எழுதிய நீங்கள் // பார்ப்பனர்கள் பிறந்து தங்களது சமூக சூழலில் வளர்ந்து சாதி உணர்வை இறுக்கமாக பேணுபவர்களாகவே உள்ளார்கள். இதை எத்தனை முறை எழுதுவது // //

       இதில் என்ன முரன்பாடு இருக்கிறது? தலித்துகள் முன்னேறாமல் இருப்பதற்கு முதன்மை காரணம் சாதியம் (தேவர் சாதி) மற்றும் அதன் சித்தாந்த வடிவமான பார்ப்பனியம்(ஒன்லி பிராமின்ஸ், வெஜ் ஒன்லி மற்றும் அனைவரும் அர்ச்சகர் ஆவதை எதிர்ப்போம்) எனும் போது ஆர் எஸ் எஸ் திட்டமிட்டு பார்ப்பனக் கொழுப்புடன் பொய் சொல்கிறது.

       ஆனால், பார்ப்பன சாதியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே அதன் பண்பாட்டு மேன்மை குறித்த பெருமிதங்கள் அவர்கள் மனதில் கட்டமைக்கப்படுவதற்கே வாய்ப்பு அதிகம் என்பது உண்மைதான். இது வினவு சொன்னது.

       ஆர்வி குழம்பிக் கிடக்கிறார் என்று நினைக்கிறேன்

      • //உங்கள் நிலை பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் மற்ற ஜாதியில் பிறந்தவர்களை விட “சாதி உணர்வை இறுக்கமாக பேணுபவர்கள்” என்பது. இது பல பதிவுகளில், மறுமொழிகளில், மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது. முடிந்தால் அதை நிரூபியுங்கள். இல்லாவிட்டால் பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்களை மட்டும் கேவலப்படுத்துவதை நிறுத்துங்கள்.//

       ஏன் அபாண்டமாக பொய் சொல்றீங்க ஆர்வி. பார்ப்பனியத்தை தாங்கிப் பிடிப்பவர்களைத்தான் இழிவுபடுத்துகிறோம் நாங்கள்

   • //3. மற்ற சாதிகளிடம் கொஞ்சமாவது இருக்கும் நெகிழ்வுத்தன்மை பார்ப்பனர்களிடம் சுத்தமாக இருப்பதில்லை.

    மூன்றாவது ஸ்டேட்மெண்டில் பிறப்பிலேயே நெகிழ்வுத்தன்மை என்ற பொருளை ஏந்தி வரவில்லையா?//ஆர்.வி. இந்த மூன்றாவது ஸ்டேட்மெண்டில் எங்கே பிறப்பு வருகிறது? எனக்கு விளங்கவில்லை.. ஒரு பேச்சுக்காக – புரிதலுக்காக – நான் இப்படிச் சொல்றேன்னு வச்சுக்குவோமா? நோய் நொடி வந்தால் டாக்டர்கிட்டப் போறது..கடவுளை மட்டும் நம்பிக்கிடாமல் வைத்தியம் செய்வது இதில் ஆர்.சி., பிராட்டஸ்டண்டுகள் சாதாரணமாச் செஞ்சு அறிவியலோடு ஒத்துப் போறாங்க,, ஆனா பெந்தகொஸ்தே கிட்ட இந்த நெகிழ்வுத் தன்மை இல்லை.” இதுதான் என் ஸ்டேட்மெண்டுன்னு வச்சிக்கிட்டா..இப்ப நான் சொன்னது பெந்தேகொஸ்தேயிடம் இருக்கும் அடிப்படைவாதத்தையா?? இல்லை..பெந்தேகொஸ்தேவின் பிறப்பைப் பத்தியா?
    இதே லாஜிக்கோடு பாருங்கள்.. 3 வது ஸ்டேட்மெண்டில் நீங்கள் கொடுக்கும் பொருளின் பொருத்தமின்மை புரியும்.

  • //பார்ப்பனர் என்ற ஜாதி காணாமல் போய்விடும்//

   சூப்பரப்பு.. இத இத இதத்தானே நாங்க எதிர்பார்க்கிறோம்..

 5. I am serioulsy concerned about late sripriya. She should have been killed like this. In this world we dont have any rights to kill anyone.
  If you go through the reason for this murder is affection or confident on their childerens. If parents will feel that they are going to loose this, then definitly they will do such kind of follishness. I would say the mistake is with that “BATHARA KALI”(idiot). He is the one cheated that girl and finally he was the sole reason for death also. Definitly he will get another SC girl to get marry after a month or two. I just wanted to know one thing… that is VINAVU wanted all the non SC girls should get marriage to SC boys? We can’t eliminate the castism just because of doing the marriage. Even within SC, a educated SC boy is very much relectunt to get marry with SC girl. Why? Whether VINAVU has taken any positive steps on this???? Here we always wanted critisize the other community/ people. First we have to stop this. Otherewise we will not have any kind of developments.

  Let GOD give peace to her soul.

  • Mr Nanban!

   If parents have affection and love their daughter, they will only ensure whether the boy whom she has chosen as her husband, –
   1) has good conduct
   2) well positioned economically.
   They won’t worry whether he is from the same caste and, neglect all other desirable characteristics.

   Do you mean to say that they should neglect the no. 1 and 2 and insist only on caste of the boy. And that, according to you, is the correct way to show affection to their daughter?
   Why you, the Thevars, look for caste? To preserve the caste line as Kallapiran says here.
   An educated SC man can marry any other SC? And a thevar girl can marry within her caste?
   What happens to romance? Why shouldn’t young people fall in love and choose their life partner? If you do, you desire to kill freedom of mind and consciousness and want a society of slaves. If a person is denied liberty to choose his or her partner, then, it is a society of tyrants and killers.

   Why does and educated SC become reluctant to marry within his caste?
   The root of the problem lies in their historical conditions. Historically, they were deprived of good things of life and were treated like animals. They accepted such animal life. Now, they may be rising. Indeed, many have. But to undo the impact of their animalistic past, will take centuries more. Even today, they are not allowed inside temples; and stand equal to you the thevars although some of them are more educated and cultured than you.
   The impact of the horrendous past is still seen: they are not handsome, they don’t dress handsomely, they don’t give importance to hygiene; they don’t have regulated life.
   If an educated SC gets married within caste, even if the bride is also educated, chances are that he will get the same old caste group of people with all the attributes the society hates. Her uncles, cousins, nephews, aunts, nieces and all other in family circle and other relations are the same old dalits, with the same old habits. His children will fall into the same group and grow up with the same habits.
   It will, therefore, take further centuries for them to evolve a refined and well regulated culture. Till then, it is natural for an educated SC to look for brides outside. Such things don’t happen to your Thevar community. Dalits boys and girls getting married outside their caste will sooner or later end the caste. Yes, dalits, as a caste, will become extinct. When it becomes extinct, everything associated with them, as I enlisted, will become a thing of the past. You, thevars, are scared to see such a society of well-clad and decent dalits, I am afraid.

  • பெற்ற அப்பனும் உடன் பிறவா ஒன்று விட்ட சகோதரனும் தங்கள் வீட்டு பெண்ணையே கோர கொலை செய்தது பெரிய விஷயமாக உங்களுக்கு தெரியவில்லை! ஆனால், தம்பதிகளின் பரஸ்பர காதல் மேட்டரை வேண்டுமென்றே மறைத்துவிட்டு, ‘ஓர் படித்துவிட்ட தலித் ஆண், ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்ய அவன் மனம் ஒப்புக்கொள்ளவில்லை’ என்று அநியாயமாக விஷயத்தை, விஷமத்துடன் திசை திருப்பி விடுகிறீர்கள். உங்களுக்கு, கொடுமையான கேவலமான மட்டமான சந்தர்ப்பவாதி புத்தி.

   ////We can’t eliminate the castism….//// — உங்களுக்கு தெரியுமா? இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் வெவ்வேறு ஜாதியிலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியவர்கள்தானே? எப்படி அவர்கள் தங்கள் ஜாதி படுகுழியிலிருந்து மீண்டு எழுந்து நிற்கிறார்கள். காரணம் இஸ்லாம்.! இப்போது எந்த முஸ்லிமிடமாயினும் போய் ‘என்ன ஜாதி’ என்று கேளுங்களேன். ‘தெரியாது’. எவருக்கும் தெரியாது. சத்தம் போடாமல் இப்படி சாதிப்பேயை அழித்துவிட்டு பெருமிதமாக வீற்றிருக்கும் முஸ்லிம்களை கண்டிப்பாய் மற்றவர்கள் முன்னுதாரணமாய் கொள்ளலாம். இப்படி தலித்கள் முஸ்லிம்களாய் மாறி அடுத்தகட்டத்துக்கு முன்னேறினாலும், அங்கே அதே வில்லன்கள் ஹிந்துத்வா ரூபத்தில் வந்து முஸ்லிம்கள் மீது கொடுஞ்செயல் புரிகிறார்கள். வாழ்க்கை என்பதே போராட்டமாகிவிட்டது ஒடுக்கப்பட்டவர்களுக்கு.!

   • இசுலாமில் சேரின் சாதிகள் போகும். பிளவுகள் போகா. தொழுகை மட்டுமே வாழ்க்கையா? இல்லையே. மனிதர்கள் சமூக மற்றும் தத்தம் தனிவாழ்க்கையில் பல மனிதர்களோடு உறவாடுகிறார்கள். அப்போது, இசுலாமில் அனைவரும் ஒன்று நினைத்து உறவாடுவதில்லை. பள்ளிவாசலில் உள்ளேதான் எல்லாரும் ஒன்று. அஃதாவது தொழுகையில். இறைவன் முன். அவ்வளுவுதான். நான் சொல்வது பொய்யென்றால், பாக்கிஸ்தானைப்பாருங்கள்…இந்தியாவிலுருந்த வந்த இசுலாமியரை (முகாஜியர்) அங்குள்ள பத்தான், மற்றும் பஞ்சாபி முஸ்லீம்கள் – இங்கு தலித்துகள் தேவர்களால் இழிவு படுத்தப்படுகிறார்களோ அதைப்போல – இழிவு படுத்தப்படுகிறார்கள். கராச்சியில் பலர் கொல்லபபடுகிறார்கள். இதற்கு ஊ\டகங்கள் சொல்லும் பெயர் sectarian strifes. பெயர்தான் வேறு. குணம் ஒன்றே. எம்மதமும் ஓரள்வுக்குத்தான் மனிதரை திருத்தமுடியும். அவனின் அடிப்படை மனப்போக்கான குழுமனப்பான்மையையும், அதை விடாப்பிடியாக பிடிக்கும் குணத்தையும் மாற்ற முடியாது.

    பெயர் மாறும், செயல் மாறாது.

   • honor killing என்று கூகிளிட்டுப் பாருங்கள். வருவதில் முக்கால்வாசி, துலுக்கப்பயலுவ செய்யும் கொலை தான்…
    இராக், பாகிஸ்தான், துருக்கி, காசா, போன்ற இடங்களிலிருந்து தான் வரும்.

   • நெத்தியடி முஹமத் அவர்களே,
    கள்ளபிரான் பாதி உண்மையை மட்டுமே சொல்லியுள்ளார். மீதி இங்கு தாழ்த்தப்பட்டவர்கள், அருந்ததியர்கள், இன்னும் சில சாதியினர் முஸ்லீம் மதத்தினருக்கு மாறியுள்ளார்கள். ஆனால் அந்த கிராமத்திலோ அல்லது பகுதியிலோ தாழ்த்தப்பட்ட, அருந்ததியர்களுக்கு தனி பள்ளி வாசல், தனி சர்ச் கூட ஊரில் தனி பள்ளி வாசல் என்பது கூட இருக்கிறது. போய் பாருங்கள். அதற்கு எதற்கு கள்ளபிரான் பாகிஸ்தான் போகிறார் என்று தெரியவில்லை. நம்மூரிலே இருக்க அவர் காசு செலவு செய்து உயிரை பணயம் வைத்து பாகிஸ்தான் பயனம் செய்வானேன். நகரத்தில் உள்ள பள்ளி வாசல், சர்ச்சில் மட்டுமே அனைவரும் சென்று தொழுவதற்கு பிரார்தனை செய்வதற்கு அனுமதி உண்டு, கிராமத்தில் அவ்வாறு இல்லை. அங்கு பள்ளி வாசலோ அல்லது சர்ச்சோ சாதி ரீதியாகவே ஏற்படுத்தியிருக்கிறார்கள். அங்கு அனைத்து மதமும் அந்த சாதியினை உள்வாங்கிக் கொண்டுவிட்டது. காரணம் அவர்களின் வாழ்நிலை. ஊர் சேரி என்று பிரிந்திருப்பது.
    இந்து மதம் இல்லாத மற்ற மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு மூன்று ஒடுக்குமுறை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒன்று சாதிய ஒடுக்குமுறை, இந்த அரசின் ஒடுக்குமுறை, இன்னொன்று மத ஒடுக்குமுறை.

    ஆனால் ஒன்று மறக்கக் கூடாது. இஸ்லாமில் கூட தன் மதத்தில் உள்ளவர்களை தவிர வேறு மதத்தில் காதலித்து திருமணம் செய்துகொள்பவரை கொள்கிறார்கள் என்பதை மறக்கக்கூடாது. அதையும் நாம் மாற்ற வேண்டும்.

   • கள்ள பிராமணனுக்கு,
    இஸ்லாம் மதத்தில் இருக்கும் ஒருவன் ஒரு செயலை செய்தால் இஸ்லாம் சொல்லியதாகத்தான் இருக்கும் என்று அர்த்தம் கொள்வது முட்டாள்தனம் .அடிமைகளாய் வைத்து இருந்த கருப்பு இன மக்களை விடுதலை செய்ய சொல்லி அவர்களை திருமணமும் செய்ய சொல்லி அடிமைத்தனத்தையே ஒழித்து கட்டியது இஸ்லாம் .சாதி நிற பேதங்களுக்கு இஸ்லாத்தில் இடம் கிடையாது .ஒரு அய்யர் ஒரு தலித்தை கல்யாணம் பண்ண உங்களுடைய வேதத்தில் அனுமதி தந்து இருக்கிறதா?? இருக்கிறது என்றால் உரக்க சொல் ! இல்லையென்றால் பொத்தி கொண்டு இருக்கவும் .அதை விட்டு அவன் பாகிஸ்தானில் அதை செய்கிறான் இதை செய்கிறான் காண்பிக்க வேண்டியது .சமத்துவமே இல்லாத ஒரு மதத்தில் இருந்து கொண்டு அதை மறைத்து சங்கராச்சாரி போன்ற பொம்பளை பொறுக்கிகளை தலைவராக நீங்கள் இன்னும் மதித்து காலில் விழுந்து கும்பிடும் கேடு கேட்ட ஜென்மங்கள் .தூ !!!!

   • வெட்டிக்கு
    உங்களை போன்ற ஆட்கள் ஒரு குற்றச்சாட்டை கூறும் போது ஆதாரத்தோடு எந்த இடத்தில் என்று கூற வேண்டும் .அவர்கள் அங்கே தனியாக தொழுகிறார்கள் என்று கதை விடுகிறாய் .அவர்கள் ஏரியாவில் அருகில் பள்ளிவாசல் இல்லையென்றால் அங்கு பள்ளிவாசல் கட்டி இருப்பார்கள் .அதனால் அது அவர்களுக்கென்று உள்ள தனி பள்ளிவாசல் உன்னை போன்ற கூமுட்டைகள் உளறலாம் .பள்ளிவாசல் என்று உருவாகி விட்டால் எந்த முஸ்லிமும் போய் தொழலாம்.கோவில் பிரச்சினைகளை போல நாறி போய் விடவில்லை. கிறித்துவ மதம் இந்தியாவில் முன்னேறாத காரணம் உருப்படாத ஜாதி பிரிவுகளை அப்படியே அந்த மதத்திலும் வைத்து கொண்டதுதான் .வந்துட்டானுக வெட்டிப்பெயலுங்க.

    • உங்களின் அவுளியா பி.ஜே. ஊரான தொண்டியிலேயே பக்கிர்ஷா ஜாதிக்கும் நாசுவன் (நாவிதர்) ஜாதிக்கும் தனிக் கல்லரை உள்ளதை நீங்கள் அறியாமல் இப்படி உளறுவது பூனை கண்ணைக் கட்டிக் கொண்டது போல் உள்ளது.

    • தோழர் சாதிக்,
     பார்ப்பனியத்திடம் சரண்டைந்த இசுலாம் பதிவுக்கும் வந்து விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள்.

     தோழமையுடன்

   • கள்ளபிரான், உங்களின் மொட்டைத்தலையும் பொய், முழங்காலும் பொய், முடிச்சு மட்டும் எப்படி ஆகும் மெய்? சாதித்தகராரும் ஊர்த்தகராரும் ஒன்றா?

    கண்ணில் காணும் உண்மையை கூறியுள்ளேன். எங்கோ கராச்சியாம், முஹாஜிராம், செக்டேரியன் ஸ்ட்ரைபாம். அதே பட்டாணியர்கள் தானே வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, மேல்விசாரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, பேரனாம்பெட் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ளனர்? என்ன நடந்து விட்டது அங்கேயெல்லாம்?.அவர்களில், இந்த தலைமுறையினர் தமிழ் கற்று தமிழ் முஸ்லிம்களை திருமணம் புரியவும் ஆரம்பித்து விட்டார்களே? முஸ்லிம் லீக்கில் தமிழக முஸ்லிம்களுக்கெல்லாம் தலைவராக சிலமுறை அவர்களுள் ஒருவர் ஆகவில்லையா? பலர் எம்.பி ஆகவில்லையா? ஏன் இந்த பொய்ப்பிரச்சாரம்?

    இரண்டு தலைமுறைக்கு முன் தலித்தாக இருந்து இஸ்லாத்தை ஏற்றவரின் வாரிசு தான் எங்கள் ஊர் பள்ளிவாசல் தலைவர்.

    ஒன்று புரிகிறது. தலித்தாகவே இருந்து மேல் சாதியின் கொலை மற்றும் அடக்குமுறையை அவர்கள் சகித்துக்கொள்ள வேண்டும், முஸ்லிம்களாய் மட்டும் மாறி சமத்துவம் பெற்றுவிடக்கூடாது..! என்னே உங்கள் எண்ணம்?

    நீங்களே ஒப்புக்கொண்ட ‘இஸ்லாமிய வழிபாட்டில் சமத்துவம்’ என்பது கூட அவர்களுக்கு கிடைத்துவிடக்கூடாது! உங்கள் எண்ணத்தை ‘தலித் விடுதலை’ எனும் தீயில் எரித்துவிட்டு வாருங்கள். மீனாட்சிபுரம் மறந்து விட்டதா?

    • ஈராக் நாட்டிற்குள்ளும், ஈரான் – ஈராக் போரின் போதும், பாக்கிலும் நடக்கும் ஷியா- சன்னி மோதலில் எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற கணக்கு தெரியுமா நெத்தியடி முகமது? இசுரேலை அடியாளக வைத்திருக்கும் அமெரிக்காவை உச்சி மோருவதுதான் அரேபியஷேக்குகளின் வழக்கம். இப்படி பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு துரோகம் செய்யும் ஷேக்குகளை என்ன செய்ய? இசுலாம் கோட்பாட்டளவில் சமத்துவத்தை போதித்திருக்கிறதா என்பதை விட நடைமுறையில் இசுலாமியர்கள் தேச,இன,மொழி இந்தியாவில் சாதியாகவும் பிரிந்தே இருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் சுதாக்கா என்ற கிராமத்தில் ஒரு தலித் முசுலீமை “மேல்சாதி” முசுலீம் பெண் காதலித்தாள் என்ற குற்றத்திற்காக அந்த தலித் முசுலீம் இளைஞனை “மேல்சாதி” முசுலீம்கள் கொன்றுவிட்டார்கள். பத்து ஆண்டுகளுக்குமுன்னர் இந்த சம்பவம் புதிய கலாச்சாரத்தில் வந்திருக்கிறது. எனவே பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை இசுலாமும் ஏற்றுக்கொண்டுதான் இந்தியாவில் வாழவேண்டியிருக்கிறது

     • பு.ஜ வில் சொல்லப்பட்டவை எல்லாம் உண்மை என்று நம்பும் உங்கள் அடிவருடிகளிடம் சொல்ல வேண்டிய கதை. “தலித் முஸ்லிம்” என்ற பெயரே இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாம் என்றால் என்ன என்று தெரியாதவர்களின் செயலுக்கு முஸ்லிம்கள் பொறுப்பல்ல. முடிந்தால் இஸ்லாம் என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். அதற்கப்புறம் இஸ்லாமிய கோட்பாடுகளிலிருந்து மாருபடிகிரவர்களை நம் இருவரும் சேர்ந்து எதிர்ப்போம். இதெல்லாம்விட, சாதி சண்டைக்கும் புரிந்துகொள்ளலில் ஏற்பட்ட பிரிவினை சண்டைக்கும் வித்தியாசம் நன்கு தெரிந்திருந்தும் இவ்விஷயத்தில் எழுத்து வியாபாரம் & பிழைப்புவாதம் புரியும் வினவு…. என் மனதில் ஒரு மூலையில் தங்களுக்காக கட்டி வைத்திருந்த சிறு குடிலையும் உங்கள் வஞ்சக வாந்தியால் அசிங்கப்படுத்தி பிய்த்தெறிந்து விட்டீர்க