Sunday, July 3, 2022
முகப்பு பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!
Array

பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!

-

பதிப்புரை

ஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய மன்னர்களும் உலேமாக்களும் இச்சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்தி கட்டிக் காத்து வந்துள்ளனர். இந்த உண்மையையும், மனுவாத அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு இந்தியாவில் உருத்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் வரலாற்றுப் பின்னணியுடன் வெளிக்கொணர்கிறார், இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி.

தற்போது டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் அரபுமொழித் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவராக உள்ள இவர், ஜாமியா உல்ஃபலா மதரசாவில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் படித்து முடித்தவர். இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி மற்றும் சாதி அடிப்படையிலான இழிவுபடுத்தல்கள் பற்றி இவர் விரிவாக ஆய்ந்தெழுதியுள்ளார். கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் “”ஃபிராண்டியர்” (பிப்ரவரி 511, 2006) என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர், இவை குறித்து அலசுகிறார். புறக்கணிக்கப்படும் பிரச்சினை குறித்த இச்சிறுவெளியீடு இந்துமதத்தின் கொடுமைகளை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திலும் மனு”தர்ம’ அடிகொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சாதியத்திற்கு எதிராகவும் விடாப்பிடியாகப் போராட விரிந்த பார்வையை அளிக்குமென்று நம்புகிறோம்.

-கீழைக்காற்று

இஸ்லாத்தில் மனுவாதிகள் : (இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி – தீண்டாமை குறித்து ஆய்வு செய்து, மசூத் ஆலம் ஃபலாஹி அளித்த நேர்காணல்)

vote-012கேள்வி:இந்திய முஸ்லீம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையை ஆய்வு செய்வதில் நீங்கள் எவ்வாறு அக்கறை காட்டத் தொடங்கினீர்கள்?

பதில்: பீகார் மாநிலத்திலுள்ள சீத்தாமரி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கிழக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள மவுனத் பான்ஜன் என்ற ஊரில் எனது பள்ளிப் படிப்பை நான் முடித்தேன். பின்னர், இஸ்லாமிய உயர் கல்வி பெறுவதற்காக, ஆஜம்கார் மாவட்டத்தின் பிலாரியாகன்ஜ் எனும் ஊரிலுள்ள ஜாமியா உல்ஃபலா மதரசாவுக்குச் சென்றேன். 1999ஆம் ஆண்டில் ஃபசிலத் கல்வியை முடித்த நான், இளங்கலை பட்டப்படிப்புக்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதன்பின்னர், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றேன்.

1996ஆம் ஆண்டில், ஜாமியா உல்ஃபலாவில் நான் மாணவனாக இருந்தபோது, “”குரானைப் பற்றிய ஓர் அறிமுகம்” என்ற ஒரு வார கால நிகழ்ச்சியை ஜமாத்இஇஸ்லாமிஹிந்த் என்ற அமைப்பு உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, முஸ்லிம்கள் அல்லாதோர் வாழும் பகுதிகளில் இஸ்லாமிய மதம் பற்றி விளக்குவதற்காக ஜமாத் தலைவர்கள் சென்றனர். குறிப்பாக, தலித்துகள் வாழும் பகுதிகளில் அவர்கள் கவனம் செலுத்தினர். இஸ்லாத்தின் பொதுக்கருத்தான சமூக ரீதியிலான சமத்துவம் பற்றி தலித்துகளிடம் அவர்கள் பேசினர்.

ஹக்கிம் அப்துர்ரவூஃப் என்ற மூத்த ஜமாத் தலைவர், பிலாரியாகன்ஜ்இல் உள்ள தலித்துகள் வாழும் சேரிப் பகுதிக்கு வந்தார். நான் படித்துக் கொண்டிருந்த மதரசாவும் இந்த ஊரில்தான் இருந்தது. இஸ்லாம் சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்றும் சாதி, தீண்டாமை ஆகிய இழிவுகளுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான் என்றும் தலித்துகளிடம் அவர் கூறினார். தலித்துகள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டு மதம் மாறுவார்களானால், முஸ்லிம்கள் அவர்களைக் கட்டித் தழுவி வரவேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

அவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு தலித் இளைஞர் எழுந்து நின்று, அவரை நோக்கி, “”இஸ்லாம் என்பது சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களுடைய முஸ்லிம் சமுதாயம் சாதிகள் மலிந்ததாகவே இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தமது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்வதில்லை; மற்ற பகுதிகளிலும் அநேகமாக இதே நிலைமைதான். இந்நிலையில், தலித்துகளாகிய நாங்கள் முஸ்லிம்களாக மதம் மாறினால், எங்களுடன் யார் மணஉறவு வைத்துக் கொள்வார்கள்? எங்களுடன் சமமாக அமர்ந்து யார் உணவருந்துவார்கள்?” என்று கேட்டார்.

அந்த இளைஞரின் வாதம், எனது நெற்றிப் பொட்டில் தாக்கியதைப் போலிருந்தது; என்னைச் சிந்திக்கத் தூண்டியது. அவர் கூறியது பெருமளவு உண்மை என்பது எனக்குத் தெரியும். அது முதற்கொண்டு, சாதிய அமைப்பின் வரலாறு பற்றிய பல்வேறு நூல்களை நான் படிக்கத் தொடங்கினேன். பல்வேறு இந்திய உலேமாக்களின் நூல்களையும் நான் ஆழ்ந்து படித்தேன். இந்த உலேமாக்கள், அவர்களது சீடர்கள் பலராலும் மிகச் சிறந்த அறிஞர்கள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். மௌலவி அகமத் ரசாகான் பரேல்வி, மௌலவி அஷ்ரப் அலி பரூக்கி தான்வி முதலான இத்தகைய அறிஞர்களின் நூல்களையும் நான் படித்தேன்.

இந்த உலேமாக்களில் பலரும், பிறப்பு அடிப்படையிலான சாதிய மேன்மையை நடைமுறையில் ஆதரித்து வாதிடுவோராக இருப்பதைக் கண்டேன். இந்தச் சாதியக் கருத்தாக்கத்தின் அடிப்படையில், குரானுக்கு முற்றிலும் எதிரான வகையில் இவர்கள் ஃபத்வா வழங்கியுள்ளதை கண்டறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். அரபு மொழியில் காஃபா என்றழைக்கப்படுவதன் கருத்தாக்கத்தைத் துணையாதாரமாகக் கொண்டு, சாதியப் படிநிலை வரிசைப்படி, குழுக்களுக்கிடையே சாத்தியப்படும் மணஉறவுகளைப் பற்றிய விதிகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இதன்படி, அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்த முஸ்லீம்கள் (சையத்துக்கள், ஷேக்குகள்), அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட அதாவது அஜாமி முஸ்லிம்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்தவர் என உரிமை பாராட்டும் ஒரு ஆண், அஜாமி முஸ்லிம் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால் அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண், அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன், ஜுலாஹா (அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இனப் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால், அன்சாரி, ராயின், மன்சூரி, குøரஷி ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் ஆணும், பத்தான் முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சாதிகள் அனைத்தும் பத்தான்களுக்குக் கீழானவை — இவ்வாறாக இந்த உலேமாக்கள் வாதிட்டனர். ஒருவர் தமது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வதுதான் சாலச் சிறந்தது என்று உலேமாக்களில் பலரும் நம்பினர்.

இஸ்லாமைப் பற்றிய எனது புரிதலுக்கு முற்றிலும் நேரெதிரானதாக அவர்களுடைய கருத்துக்கள் இருந்தன. அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ள, அவர்களுடைய நூல்கள் எனக்குப் பெரிதும் உதவின. இந்தியாவில் உள்ள பல உலேமாக்கள் சாதிய அமைப்புக்குத் தவறாக இஸ்லாமியத் தன்மை வழங்குவதன் மூலம் அல்லது மதரீதியில் இசைவாணை வழங்குவதன் மூலம் சாதியத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். இதை அறிந்த போது நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். இந்து மதத்தில் இன்னமும் நீடித்து வரும் சாதிய நடைமுறையிலிருந்து இது வேறுபட்டதல்ல. ஏனென்றால், இந்துமதம்தான் சாதிய வேறுபாட்டுக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் மதரீதியாக இசைவாணை வழங்குகிறது.

சாதியம் பற்றிய எண்ணற்ற இந்திய உலேமாக்களின் நூல்களைப் படித்த பிறகு, ஜமாத்இஇஸ்லாமி தலைவரிடம் அந்த தலித் இளைஞர் முன்வைத்த கேள்வி கிட்டத்தட்ட முழுமையாக சரியானதுதான் என்பதை நான் புரிந்து கொண்டேன். சாதிய அமைப்பை நியாயப்படுத்துவதற்கு இத்தகைய உலேமாக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இப்படித் தவறாக வியாக்கியானம் செய்வார்களானால், இஸ்லாம் மதத்துக்கு மாறுவது பற்றி எந்த தலித் அக்கறையோடு பரிசீலிப்பார்? இந்த மௌலவிகளால் திரித்து முன்வைக்கப்படும் இஸ்லாமிய மார்க்கத்தை எந்த தலித் ஏற்றுக் கொள்வார்?

இந்திய முஸ்லிம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையானது, ஏதோ இந்து மதத்தின் தாக்கத்தினால் மட்டும் ஏற்பட்டதல்ல; சாதிய அமைப்பை இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரீஅத் இன் ஓர் அங்கம் எனத் தவறாகக் கருதும் பெரும்பாலான இந்திய உலேமாக்களின் செல்வாக்கும் இதற்குக் காரணமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை முற்றிலும் தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் இந்த மௌலவிகள் இஸ்லாத்துக்கு எவ்வளவு பெரிய இழுக்கைக் கொண்டு வந்துள்ளனர் என்பதை உணர்ந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

கேள்வி: முஸ்லிம்களிடையே சாதிய பாரபட்சம் என்ற பிரச்சினையைப் பற்றி நீங்கள் எவ்வாறு எழுதத் தொடங்கினீர்கள்?

பதில்: சாதியையும் சாதிய பாரபட்சம் இழிவுபடுத்துதலையும், அப்பட்டமாக நியாயப்படுத்தி, மதரீதியில் சட்டபூர்வமாக்குவதற்கு இந்த உலேமாக்கள் முயற்சித்ததை அறிந்தபோது, இதைப் பற்றி எழுதுவது முக்கியத்துவம் வாய்ந்ததென நான் உணர்ந்தேன். இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுத முற்பட்டபோது, ஜாமியா உல்ஃபலாவில் பணியாற்றிய மௌலவி அனீஸ் அகமது சித்திகி ஃபலாஹி மதானி என்ற எனது மதிப்புக்குரிய ஆசிரியர், எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருந்தார். அவர் எங்களுக்கு மதங்கள் குறித்த ஒப்பீடு என்ற பாடத்தைக் கற்பிப்பவராக இருந்தார். படிநிலையாக உள்ள சாதிய அமைப்பு முறையை இந்திய முஸ்லீம்கள் எவ்வாறு இஸ்லாத்தின் உள்ளார்ந்த ஆன்மீகமாக மாற்றிவிட்டார்கள் என்பதையும், இந்து மதத்தின் தாக்கம் இதற்கு ஓரளவுக்குக் காரணமாக இருந்தது என்பதையும் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.

இருப்பினும், முஸ்லிம் பத்திரிகைகளில் இந்தச் சாதியப் பிரச்சினை பற்றி அபூர்வமாகவே விவாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையைப் பற்றி அவை முற்றாக மௌனம் சாதிக்கின்றன. இந்தியாவிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் பத்திரிகைகள் சுயநலவாதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன; வெளியிடப்படுகின்றன. மதரசாக்களில் அளிக்கப்படும் குறுகிய கண்ணோட்டமுடைய பயிற்சியின் காரணமாக, உண்மையிலேயே அவர்கள் விரும்பினாலும் கூட, இத்தகைய பிரச்சினைகளைப் பற்றி எழுத இயலாத நிலையிலேயே உலேமாக்கள் உள்ளனர்.

மேலும், இந்திய உலேமாக்கள் பெரும்பாலும் ஹனாஃபி மரபில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். சாதி அடிப்படையிலான பாரபட்சம் காட்டுவதற்கு இந்த ஹனாஃபி மரபானது, மதரீதியில் புனித இசைவைத் தவறாகக் கற்பித்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இது நடந்து வருகிறது. ஹனாஃபி மரபுவழி சார்ந்த அறிஞர்களின் படைப்புகளைப் பரிசீலித்தால் இது தெளிவாகத் தெரியும்.

இதனால்தான், மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டும் மிகப் பெருமளவுக்கு விவாதத்திற்குரியதுமான இச்சாதியப் பிரச்சினையைப் பற்றி எழுதும் தார்மீகக் கடமை எனக்கிருப்பதாக நான் உணர்ந்தேன். எனவே “”இந்தியாவில் முஸ்லிம்களும் தீண்டாமையும்” என்ற தலைப்பில் பல கட்டுரைகளை நான் தொடர்ச்சியாக எழுதினேன். அலிகாரைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரும் ஜமாத்இஇஸ்லாமியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் ஃபரிடி என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “”ஜிந்தகிஇநவ்” என்ற பத்திரிகையில் இவை வெளியாயின. பேரன்பு கொண்ட டாக்டர் ஃபரிடி இவற்றை வெளியிட்டு உதவினார். சாதிய பாரபட்சம்இழிவுபடுத்தலுக்கு மதரீதியில் இசைவாணை வழங்கும் உலேமாக்களைக் கடுமையாக விமர்சிப்பவையாக எனது சில கட்டுரைகள் இருந்தன.

கேள்வி: இந்தக் கட்டுரைகளின் மூலம் நீங்கள் வாதிட்டு நிலைநாட்ட முயற்சித்தது என்ன?

பதில்: இந்திய முஸ்லிம்களிடையே சாதி மற்றும் சாதிய அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதற்கான வரலாற்றுக் கண்ணோட்டத்தை அளிக்க நான் முயற்சித்தேன். இந்தியாவில் சாதிகளின் தோற்றம், சாதியை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பன மதத்தின் வளர்ச்சி; பவுத்தம், சீக்கியம், பக்தி இயக்கம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சாதிய எதிர்ப்பு இயக்கங்களின் பாத்திரம்; இந்தியாவில் இஸ்லாமிய மதம் பரவுதல்; குறிப்பாக, இஸ்லாத்தின் சமூக சமத்துவம் காரணமாக, அதன்பால் ஈர்க்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளிடையே இஸ்லாமிய பரவுதல் ஆகிய இவை பற்றி நான் ஆய்வு செய்தேன்.

மறுபுறம், இந்திய வரலாற்றில் “இஸ்லாமிய ஆட்சி’ என்று சொல்லப்படும் காலத்தில் எழுதப்பட்டு வெளியான நூல்களிலிருந்து பல்வேறு மேற்கோள்களை முன்வைத்து, முஸ்லிம் மன்னர்களும் பொதுவில் இஸ்லாமிய மேட்டுக்குடி ஆளும் கும்பல்களும் சாதிய அமைப்பை எவ்வாறு கட்டிக் காத்தனர் என்பதை நான் விளக்க முயற்சித்தேன். இந்துக்களில் “உயர்சாதியினர்’ என்று சொல்லப்படுபவர்களுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து, இந்து மற்றும் முஸ்லிம் மக்களில் “கீழ் சாதியினர்’ என்று சொல்லப்பட்டவர்களை எவ்வாறு ஒடுக்கினர் என்பதையும் நான் எடுத்துக் காட்ட முயற்சித்தேன்.

இந்த முஸ்லிம் மன்னர்களும் மேட்டுக்குடி ஆளுங்கும்பலும் கீழ்ச் சாதியினர் அல்லது ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுவர்களை அவர்கள் இந்துக்களானாலும், முஸ்லிம்களானாலும் கல்வி கற்க அனுமதித்ததில்லை; தங்களது அரசவைகளில் நுழையக்கூட அனுமதித்ததில்லை. இவை இந்து மற்றும் முஸ்லிம்களில் உயர்சாதியினருக்கு மட்டுமே என்று ஏகபோக உரிமை கொண்டாடினர். இந்த உண்மைகளை, முல்லா அப்துல் காதிர் பாவாயுனிஇன் “”முன்டாகாப் அல்தாவாரிக்”, மௌலவி சய்யத் ஜியாவுதீன் பார்னிஇன் “”தாரிக்இஃபிரோஸ் ஷாஹி”, குன்வர் மொகம்மத் அஷ்ரப்இன் “”இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்” ஆகிய நூல்கள் மிகத் தெளிவாகவே நிரூபித்துக் காட்டுகின்றன. இந்த மன்னர்களுக்கும் மேட்டுக்குடி ஆளுங்கும்பல்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி முழுநிறைவாகத் தெரியாது. இஸ்லாமிய மார்க்கம் போதிக்கும் சமத்துவத்துக்கு அவர்கள் செவி சாய்த்ததுமில்லை.

இல்டுமிஷ், பால்பன் ஆகியோர் துருக்கிய அடிமை வம்சத்திலிருந்து வந்த சுல்தான்களாவர். அவர்களாவது சாதிய விவகாரங்களில் வேறுபட்டு நடந்திருக்க வேண்டுமென நாம் கருதலாம். ஆனால், அவர்களும்கூட கீழ்சாதியினர் என்றழைக்கப்பட்ட முஸ்லிம்களை அரசாங்கப் பணிகளில் அனுமதிக்க மறுத்தனர்.
இஸ்லாமிய அரசுகள் என்று சொல்லப்பட்ட அரசவைகளில் இருந்த எண்ணற்ற அறிஞர்களும் உலேமாக்களும் பராணி, ஃபரிஷ்டா இன்னும் இவர்களைப் போன்றவர்களும் “கீழ்’ சாதி அல்லது ரஸில் சாதி முஸ்லிம்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு மத ரீதியாக இசைவாணை வழங்கவே முயற்சித்தனர். ரஸில் (கீழ்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள், அஷ்ரஃப் (மேல்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்றுகூட பராணி வாதிட்டுள்ளார். கீழ் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்பட்டவர்களின் குழந்தைகள் தமது முன்னோர்களின் பரம்பரைத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு மாறாக, தமது குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க எவராவது துணிந்து செயல்பட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“”குரான், தொழுகை, நோன்பு ஆகியவற்றுக்கு அப்பால், மேலான அறிவை ரஸில் என்றழைக்கப்படும் கீழ் சாதியினருக்கு அளிக்கக் கூடாது; இவ்வாறு செய்வது நாய்கள், பன்றிகளின் முன்பு விலையுயர்ந்த முத்துக்களைப் பரப்பி வைப்பதைப் போன்றதாகும்!” இவ்வாறு மக்தும் ஜஹானியான்இஜஹாங்கஷ்ட் என்றழைக்கப்பட்ட சையத் ஜலாலுதீன் புகாரி என்ற பிரபலமான சூஃபி அறிஞர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதைப் பற்றி காஸி சஜ்ஜத் ஹுசைன் தனது “”சிராஜுல் ஹேதயா” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மது அருந்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள் மட்டுமின்றி, நாவிதர்கள், பிணம் கழுவுபவர்கள், சாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள், தோல் பதனிடுபவர்கள், செருப்பு தைப்பவர்கள், வில் செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள் முதலானோருடன் சேர்ந்து மேல்சாதி முஸ்லிம்கள் உணவருந்தக்கூடாது என்று இந்த பிரபலமான சூஃபி அறிஞர் வலியுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் தமது வாதத்துக்கு வலுவூட்டுவதற்காக, இறைத்தூதர் முகமது நபிகளார் கூறியதாக ஒரு போலியான மரபை சான்றாதாரமாகக் கற்பிதம் செய்துக் காட்டியுள்ளார்.

மேல் சாதியினர் என்று கூறப்படுபவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்காகவே கீழ் சாதியினர் கடவுளால் படைக்கப்பட்டுள்ளனர் என்ற பார்ப்பனக் கோட்பாட்டைப் போன்றதுதான் இந்தக் கருத்து. பார்ப்பனர்களின் வேத நூலான மனுதர்மத்தின் நேரடி நகலைப் போன்றதுதான் இது! இதனால்தான் சாதிய பாரபட்சத்தை உயர்த்திப் பிடிக்கும் இத்தகைய உலேமாக்களை “”மனுவாதிகள்” என்று நான் அழைக்கிறேன். ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் பார்ப்பனர்கள் எத்தகைய மனப்பான்மையைக் கடைபிடிக்கிறார்களோ, அதிலிருந்து இந்த உலேமாக்களின் மனப்பான்மையை வேறுபடுத்திப் பார்க்கவே முடியாது.

“மாபெரும்’ மொகலாயப் பேரரசரான அக்பர், ரஸில் சாதியினர் என்றழைக்கப்படுவோருக்குக் கல்வி அளிக்கப்பட்டால், பேரரசின் அடித்தளமே ஆட்டங்கண்டுவிடும் என்று பிரகடனப்படுத்தியுள்ளதாக அப்துல் காதிர் படாயுனி தனது “”முன்டகாப்அல்தாவாரிஹ்” நூலில் குறிப்பிட்டுள்ளார். பேரரசர் ஒளரங்கசீப்இன் ஆணைப்படி தொகுக்கப்பட்ட “”ஃபடாவாஇஆலம்கிரி” என்ற ஹனாஃபி சட்டவியல் கருத்துரைத் தொகுதியில் “கீழ்’ சாதியினர் பற்றி இதேபோன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. கடைசி மொகலாயப் பேரரசரான பகதூர்ஷா ஜாஃபரும் இவற்றிலிருந்து வேறுபட்டவராக இல்லை.

பல நூல்களைத் தேடிப்படிக்கும்போது, 24.5.1857 நாளிட்ட “”டெல்லி உருது அக்பர்”இல் ஒரு செய்தி அறிக்கையைக் கண்டேன். அது பின்வருமாறு கூறுகிறது: பிரிட்டிஷாருக்கு எதிரான எழுச்சியைத் தொடர்ந்து 500 பேர் கொண்ட படையொன்றைக் கட்டியமைக்க தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு மாமன்னர் பகதூர்ஷா ஆணையிட்டார்; ஆனால், அந்தப் படையினர் அஷ்ரஃப் (மேல்) சாதியினராக இருக்க வேண்டும்; “கீழ்’ சாதியினர் எவரும் அதில் இருக்கக் கூடாது என்று குறிப்பாக உத்தரவிட்டார். —இதிலிருந்து தெரிவது என்ன? இந்தியாவில் “இஸ்லாமிய’ ஆட்சிக் காலத்தின் “பொற்காலம்’ என்று மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் எழுத்தாளர்கள் சளைக்காமல் ஏற்றிப் போற்றிய காலத்தின் நிலைமையே இதுதான். சாராம்சத்தில் இப்”பொற்கால’ ஆட்சிகள், மனுவாத முஸ்லிம்கள் மற்றும் இந்து மேட்டுக்குடியினரின் ஆட்சிகளாகவே இருந்தன. இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இருந்த “கீழ்’ சாதியினர் என்று சொல்லப்படும் மக்களை, இந்த மேட்டுக்குடி கும்பல் ஆதிக்கம் செலுத்தி ஒடுக்கினர் என்பதே உண்மை.

பல மன்னர்களும், உலேமாக்களும் சாதிய அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த போதிலும், அவர்களில் சிலர் இதற்கு எதிராகவும் இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சுல்தான் முகமது காஸ்நவி தமது அடிமையான அயாஸ் என்பவரை பஞ்சாபின் ஆளுநராக நியமித்தார். ஹஜ்ஜம் எனப்படும் நாவிதர் சாதியைச் சேர்ந்த இந்துவான திலக் என்பவரைத் தமது தலைமைத் தளபதியாக நியமித்ததுடன் “”ராஜா” என்ற பட்டத்தையும் அவர் வழங்கினார். சுல்தான் சகாபுதீன் கோரி, தமது அடிமையான குத்புதீன் ஐபக் என்பவரை இந்தியாவில் தனது ஆளுநராக நியமித்தார். ஐபக், தனது அடிமையான சம்சுதீன் அல்டுமிஷ் என்பவரை குவாலியர், புலந்த்சாகர், படாயுன் ஆகிய பகுதிகளுக்கான ஆளுநராக நியமித்தார்.

சுல்தான் அலாவுதீன் கில்ஜி, பல உயர் பதவிகளில் சையதுகள் மற்றும் அஷ்ரஃப் என்றழைக்கப்பட்ட “மேல்’ சாதியினரை அமர்த்திய போதிலும், தனது வேலையாளான மாலிக் உத்துஜ்ஜார் ஹமீதுத்தீன் முல்பானி என்பவரைத் தலைமை நீதிபதியாக (காஸி உல் காஸட்) நியமித்தார். குஜராத்தின் புர்வா எனப்படும் சாமர் சாதியைச் சேர்ந்தவரும் இஸ்லாமிய மதத்துக்கு மாறியவருமான மாலிக் காபூர் என்பவரைத் தனது தலைமை அமைச்சராகவும் அவர் நியமித்தார். சுல்தான் முகமது பின் துக்ளக், சுல்தானா ரஸியா, சுல்தான் குத்புதீன் முபாரக் ஷா கில்ஜி ஆகியோரும் “கீழ்’ சாதியினர் என்று கூறப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினர்.

கேள்வி: இந்திய வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த “”மனுவாதி உலேமாக்கள்என்று உங்களால் அழைக்கப்படுபவர்கள், பார்ப்பனர்களைப் போலவே சாதிய பாரபட்சத்தை ஈவிரக்கமின்றி உறுதியாக உயர்த்திப் பிடித்த போதிலும், கீழ் சாதியினர் என்று கூறப்படும் கோடிக்கணக்கான இந்துக்கள் இஸ்லாமிய மதத்தை எப்படி ஏற்றுக் கொண்டனர்?

பதில்: இதற்கான காரணம், சாதிய பாரபட்சம் இந்துக்களிடம் இருப்பதைவிட, முஸ்லிம்களிடம் எப்போதும் கடுமை குறைவாக இருப்பதேயாகும். மேலும், இஸ்லாமிய மார்க்கத்தில் சாதிக்கு மதரீதியில் எப்போதுமே இசைவாணை கிடையாது என்பது இன்னொரு காரணமாகும். இந்திய முஸ்லிம்கள் மத்தியில் சாதி வேறுபாடுகள் பலமாக நீடித்து வந்துள்ள போதிலும், தீண்டாமை என்பது நடைமுறையில் அவர்கள் அறியாத விசயம்தான். இருப்பினும், மத்திய காலத்தைச் சேர்ந்த பல இஸ்லாமிய மன்னர்கள் கீழ்வர்க்கத்தினரை தமது அரசவைகளில் அடியெடுத்து வைக்க அனுமதித்ததில்லை; அல்லது, அப்படி ஒரு சிலர் அனுமதித்தாலும், அவர்கள் வாய்திறந்து பேசுவதற்கு அனுமதித்ததில்லை. ஏனெனில், அவர்கள் “புனித’ மற்றவர்களாக “அசுத்த’மானவர்களாகக் கருதப்பட்டனர் என்று பிரபல வரலாற்று ஆசிரியரான கன்வர் மொகம்மத் அஷ்ரஃப், தனது “”இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்” நூலில் குறிப்பிடுகிறார்.

கேள்வி: “இஸ்லாமியஆட்சிக் காலத்தைச் சேர்ந்த “மேல்சாதி முஸ்லிம் எழுத்தாளர்களும் உலேமாக்களும் சாதிய அமைப்புக்கு மதரீதியாக இசைவாணை வழங்க முயற்சித்திருக்கலாம். ஆனால், அதற்குப் பிந்தைய காலத்தில் இந்த நிலையிலிருந்து நிச்சயம் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமே?

பதில்: இப்போது அந்த விசயத்துக்கு நான் வருகிறேன். “”ஜிந்தகிஇநவ்” இதழுக்கு நான் எழுதிய சில கட்டுரைகளில், காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்த பிரபலமான உலேமாக்கள் பற்றியும், இப்போதைய சமகால இந்தியாவிலுள்ள உலேமாக்கள் மற்றும் உலேமாக்களின் அமைப்புகள் பற்றியும் நான் பரிசீலித்தேன். பாரெல்விஸ், தியோபண்டிஸ், ஹல்இஹதித், ஜமாத்இஇஸ்லாமி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் போன்ற அமைப்புகளைப் பரிசீலித்தேன். குறிப்பாக, திருமண உறவு பற்றிய விசயங்களில், இவர்கள் சமூக சமத்துவம் அல்லது காஃபா பற்றிய கருத்தாக்கத்தை எப்படிக் கையாண்டனர் என்பதைப் பரிசீலிப்பதில் நான் கவனத்தைக் குவித்தபோது, அவர்களுக்கிடையில் வியப்பிற்குரியதொரு கருத்தொற்றுமை நிலவுவதைக் கண்டேன்.

சாதியைச் சட்ட சம்மதம் கொண்டதாக்குவதற்கு காஃபா பற்றிய கருத்தாக்கத்தைத் தமது ஹனாஃபி மரபில் பாரெல்விஸ் மற்றும் தியோபண்டிஸ் அமைப்பினர் பயன்படுத்துகின்றனர். அஷ்ரப் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் மேன்மையையும் ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் தாழ்நிலையையும் இவர்கள் சட்ட மரபாக்குகின்றனர். சமூகத் தகுதி பற்றிய விசயத்தில் ஹனாஃபி மரபினர் மிகவும் கறாராக இருக்கின்றனர். எனவே, காஃபா பற்றிய விசயத்தில் பிறப்பு அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாக்குகின்றனர். ஹனாஃபி சிந்தனை மரபு உருவான ஈராக்கைச் சேர்ந்த குஃபாவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் மலிந்திருந்ததும், அவற்றை அது நியாயப்படுத்த முனைந்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். சன்னி சட்டப்பள்ளியைப் பின்பற்றுகின்ற அராபிய மையத்துக்கு வெளியில் உருவாகி வளர்ந்த ஷஃபி, ஹன்பாலி போன்ற மரபுகளும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளன.

ஆனால், இமாம் ஷஃபி, இமாம் அகமது பின் ஹன்பால் ஆகிய இருவரும் பிறப்பு அடிப்படையிலான காஃபாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறப்பு அல்லது குடும்பத்தை அடிப்படையாக்குவதற்கு நேர்மாறாக, மாலிகி சிந்தனைப் பிரிவு விதிவிலக்காக நிமிர்ந்து நிற்கின்றது. காஃபாவைத் தீர்மானிப்பதில் பிறப்பை ஒரு காரணியாகக் கொள்ளாமல், கடவுட்பற்றையே அடிப்படைக் காரணியாக மாலிகி சிந்தனைப் பிரிவு கருதுகிறது. இதுதான் உண்மையான இஸ்லாமிய அளவுகோலாகும். மாலிகி சிந்தனைப் பிரிவைத் தோற்றுவித்தவரான இமாம் மாலிக் உண்மையான இஸ்லாமிய போதனையின் மையமான மெதினாவில் வாழ்ந்தது ஒருவேளை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஹனாஃபி மரபினர் தமது பெரும்பாலான மதரசாக்களில் பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற மடமையை இன்னமும் போதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நான் பயின்ற மதரசாவில் சாதி என்பது இஸ்லாமியத் தன்மையற்றது என்றும், அதை நாம் தகர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கப்பட்டோம். ஆனால் தியோபண்டி மரபு மதரசாக்களில், பிறப்பை அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாகக் கொண்ட காஃபா என்ற பொருளில், “”சாதி என்பது இஸ்லாமியத் தன்மையுடையது” என்று கற்பிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவிலுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான பாரம்பரிய மதரசாக்கள், இந்த விசயத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு உண்மையானவையாக இல்லாமல், ஹனாஃபி சட்டவியல் விதிகளின் அடிப்படையில் போதிப்பவையாக இருப்பதுதான். இதற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷா வலியுல்லா, இந்தியாவின் பிரபலமான முன்னணி இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவர்; சன்னி பிரிவைச் சேர்ந்த சிந்தனை மரபினர் பலர், இவரைப் பெரிதும் மதித்தனர்; இவர் பிறப்பு அடிப்படையிலான காஃபாவை உறுதியாக ஆதரித்து உயர்த்திப் பிடித்தவராவார். காஃபா என்பது ஒருவரின் இயற்கையிலேயே உள்ளார்ந்து உறைந்திருப்பது என்றும், தமது சொந்த காஃபாவுக்கு வெளியில் மணஉறவு கொள்வதானது, கொலை செய்வதை விடவும் அபாயகரமானது என்றும் அவர் தனது “”ஹுஜ்ஜாத்துல்லா அல் பாலிகா”, “”ஃபிக்இஉமர்” ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இறை தூதருடன் இருந்த அவரது சகாக்களில் பலர் அடிமைப் பெண்களை மணந்த பல நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் காணப்பட்ட போதிலும், இந்த அறிஞர் அதைப் பொருட்படுத்தவில்லை. இறைதூதர் நபிகளார், தமது அத்தை மகளான ஜைனப் பிந்த்இஜஹாஷ்க்கு விடுவிக்கப்பட்ட தனது அடிமையான சையத்ஐ மணமுடித்து வைத்தார். தனது மாமன் மகளான ஜுபா ஏ பிந்த்இஜுபைர்க்கு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த மிக்தாத் என்பவரை மணமுடித்துள்ளார்.

தீவிர ஹனாஃபி ஆதரவாளர்களான தியோபண்டி மரபினர், பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற கருத்தாக்கத்தைத் தீவிரமாக ஆதரித்துச் செயல்படுத்துவோராக உள்ளனர். “”தியோபண்ட் இயக்கமும் சஹரான்பூர் முஸ்லிம்களும்” என்ற நூலின் பாகிஸ்தானிய ஆசிரியரான குலாம் முஸ்தஃபா, அதில் பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்லியுள்ளார். தியோபண்ட் மதரசாவை நிறுவியவர்களில் ஒருவரும், ஷேக் சாதியைச் சேர்ந்தவருமான மௌலவி காசிம் நானோத்வி, நான்கு சாதியினரை மட்டுமே இறைவன் தமது மதத்துக்குச் சேவை செய்யப் படைத்துள்ளார் என்று அறிவித்துள்ளாராம்; சையத், ஷேக், மொகல், பத்தான் ஆகியவையே இந்நான்கு சாதிகளாம்!

தியோபண்டி மரபைச் சேர்ந்த மற்றொரு நூலாசிரியரும், தியோபண்ட் மதரசாவின் முதல் முஃப்தியுமான மௌலானா அஸிசுர் ரஹ்மான் உஸ்மானி, பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்கிறார். அஷ்ரஃப் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது தந்தை, பாட்டன் போன்ற தனது ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதியின்றி, ரஸில் சாதியைச் சேர்ந்த ஒரு ஆண்மகனைத் திருமணம் செய்வாரானால், அந்தத் திருமணம் உண்மையிலேயே நடந்ததாகக் கருத முடியாது; எனவே, அந்தத் திருமணத்தை முறிப்பது (ஃபஸ்க்இநிக்காஹ்) என்ற பிரச்சினைக்கே இடமில்லை என்று அவர் அறிவிக்கிறார். தியோபண்ட் மதரசாவால் வெளியிடப்பட்ட “”ஃபடாவா இ தார்உல்உலும் தியோபண்ட்” என்ற தியோபண்டி ஆணைகளின் (ஃபத்வா) தொகுப்பில் இந்த விசயம் கூறப்பட்டுள்ளது.

அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அவருடைய வாதத்திலிருந்து தெரிவது என்னவென்றால், இத்தகைய மண உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் முறைகேடாகப் பிறந்தவர்கள்; இத்தம்பதியினரும் ஒழுக்கக் கேடானவர்கள்; இவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி, நூறு கசையடி தரப்பட வேண்டும்! இருப்பினும், ஒரு “கீழ்’ சாதிப்பெண் தனது நெருங்கிய ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதி இல்லாமலேயே “மேல்’ சாதி ஆண்மகனைத் திருமணம் செய்து கொள்ள இந்த உஸ்மானி அனுமதித்திருப்பார் என்பதை நாம் துணிந்து கூற முடியும். உண்மையில், இது பார்ப்பனிய மனோபாவத்தையும் அதேபோல முஸ்லிம்களிடம் உள்ளார்ந்து ஆழப்பதிந்துள்ள மூத்த குல ஆணாதிக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

தியோபண்டி மரபைச் சேர்ந்த இன்னுமொரு இஸ்லாமிய அறிஞரான மௌலவி முகம்மது சகாரியா சித்திகி என்பவர், இன்றைய உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கமான தப்லிஹி ஜமாத் இன் தலைமைச் சித்தாந்தவாதியாவார். “”மெய்யான சமயப் பணிகளின் நற்பேறுகள்” என்ற தமது நூலில் அவர், “”முஸ்லிம்களின் ஒரு குழு, மெக்காவுக்குப் புனிதப் பயணம் (ஹஜ்) அல்லது வேறிடத்துக்குப் பயணம் மேற்கொள்ளுமானால், அவர்கள் தம்மில் ஒருவரைத் தலைவராக (அமிர்) நியமிக்க வேண்டும்; இந்தக் குழுவில் குரைஷி (சைய்யத் அல்லது ஷேக்) சாதியைச் சேர்ந்தவர் எவராவது இருப்பின், அவரையே தலைவராக நியமிப்பது சிறந்தது” என்று கூறுகிறார். அவர் முஸ்லிம்களை அஷ்ரஃப் (“மேல்’ சாதி) என்றும் அர்ஸல் (“கீழ்’ சாதி) என்றும் வகைப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முதலாவது அரசாங்க முஃப்தியாக (முஃப்திஇஆஜம்) பின்னாளில் அமர்த்தப்பட்ட தியோபண்டி முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி எழுதிய, “”நிஹாயத் அல்அராப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற சர்ச்சைக்குரிய சாதி பற்றிய நூலையும் இவர் ஆதரித்தார். தியோபண்டி உலேமாக்கள் பலராலும் ஆதரிக்கப்பட்ட இந்த நூலில், அஷ்ரஃப் சாதிகள் என்றழைக்கப்பட்ட நான்கு வகை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் தனிச்சிறப்பாகக் கருணை காட்டுவார் என்று இந்த உஸ்மானி கூறியிருக்கிறார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி தமது இந்த நூலில், சக தியோபண்டி அறிஞரான அகமத் உஸ்மானி என்பவரின் ஒரு கட்டுரையும் இடம்பெறச் செய்திருந்தார். அந்தக் கட்டுரையில், “கீழ்’ சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள் கல்வி கற்கத் தொடங்கியதால்தான் எல்லாவகையான இடர்ப்பாடுகளும் ஆரம்பித்தன என்று அகமது உஸ்மானி எழுதியிருக்கிறார்!

இன்னுமொரு முன்னணி தியோபண்டி அறிஞரான மௌலவி அஷ்ரஃப் அலி ஃபரூக்கி தான்வி என்பவர், முஸ்லிம் நெசவாளர்களைச் சிறுமைப்படுத்தும் சொற்களில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் நெசவாளர்கள் தொழுகை செய்வது பற்றி தனது “”அல்ரஃபிக் ஃபிசவாய் அல்தாரிக்” நூலில் அவர் எள்ளி நகையாடினார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி என்பவரின் “”நிஹாயத் அல்அரப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற நூலை ஆதரித்து, அவர் எழுதி “”வாஸ்லஸ் சபாப் ஃபி ஃபாஸ்லின் நஸ்ப்” என்ற தனது நூலில் நெசவாளர் சாதியினரை வெறுப்புடன் “”ஜுலாஹா” என்று குறிப்பிட்டார். அன்சாரிகள் (“”உதவி செய்பவர்கள்”) என்று நெசவாளர்கள் தம்மை அழைத்துக் கொள்வதை அவர் கண்டனம் செய்தார்.

இவ்வாறு அவர்கள் தம்மை அழைத்துக் கொள்வது, ஒருவர் தமது குடும்ப மரபை அல்லது பரம்பரையை மாற்றிக் கொள்ளும் செயலாகும்; மெக்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்று அங்கு இறைதூதர் வாழ்ந்தபோது அவருக்கு உதவி செய்த மெதினாவைச் சேர்ந்த அன்சார்களின் வழித்தோன்றல்கள் என்று உரிமை பாராட்டுவதாகும்; இது தவறானதும் தடை செய்யப்பட்டதுமாகும் என்று தான்வி வாதிட்டார். தமது வாதத்துக்கு வலுசேர்க்க, இறைதூதர் கூறியதாக ஒரு வழிவழிச் செய்தியை இட்டுக்கட்டி கூறினார். தனது தந்தையைத் தவிர வேறொருவருக்கு மகன் என்று உரிமை பாராட்டும் ஒருவன் விண்ணுலகை அடையமாட்டான் என்பதே இறைதூதர் கூறியதாகச் சொல்லப்படும் அந்த வழிவழிச் செய்தியாகும்.

ஷப்பிர் அகமது ஹக்கீம் என்ற முஸ்லிம் அறிஞர், தான்வியின் “மசாவத்இ பகார்இ ஷாரியத்” என்ற இன்னொரு நூலிலிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாண்டுள்ளார். ஜுலாஹாஸ் (நெசவாளர்கள்), நயிஸ் (நாவிதர்கள்) ஆகியோரைத் தூய முஸ்லிம்கள் தமது இல்லங்களில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று தான்வி அதில் வாதிடுகிறார். மேலும், சைய்யது சாதி தந்தைக்கும் சைய்யது அல்லாத தாய்க்கும் பிறக்கும் குழந்தை தூய சைய்யது தம்பதியினருக்குப் பிறக்கும் குழந்தையைவிட சமூகத் தகுதி குறைந்தது என்று தான்வி “”பாஹிஸ்டி ஜேவார்” என்ற தனது நூலில் வன்மத்தோடு வாதிடுகிறார். இதே விசயத்தைத்தான் பிராமணர்கள் ஏற்றிப் போற்றும் மனுவும் தனது மனுதர்ம சாஸ்த்திரத்தில் (மனுஸ்மிருதி) சொல்லியிருக்கிறார்! சைய்யதுகள், ஷேக்குகள், மொகல்கள், பத்தான்கள் ஆகியோர் “மரியாதைக்குரிய மேல்குடி’ (ஷரிப்) சாதியினர் என்றும், எண்ணெய் பிழிபவர்கள் (டெலி), நெசவாளர்கள் (ஜுலாஹா) ஆகியோர் “கீழ்’ சாதிகள் (ரஸில் அக்வம்) என்றும் “”இம்தாத் உல்ஃபடாவா” என்ற தனது நூலில் தான்வி அறிவித்தார்.

இவர், இஸ்லாத்துக்கு மதம் மாறிய அராபியர் அல்லாதவர்களை “”நவ்முஸ்லிம்கள்” என்று குறிப்பிடுகிறார். காந்தானி முசல்மான் எனப்படும் பாரம்பரியமாக உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் திருமண உறவுக்கான காஃபாவுக்கு, நவ்முஸ்லிம்கள் கருதத்தக்கவர்களே அல்ல என்று இவர் வாதிடுகிறார். பத்தான்கள் அரபுவழி வந்தவர்கள் அல்ல என்பதால் அவர்களும் நவ்முஸ்லிம்கள்தாம் என்கிறார். அரபுவழி வந்தவர்களான சையத்துகள், ஷேக்குகளின் காஃபா வேறானது; எனவே அவர்களுடன் நவ்முஸ்லிம்களான பத்தான்கள் கலப்பு மணம் புரியக்கூடாது என்று எச்சரிக்கிறார்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் முதலாவது தலைவரும், தியோபந்த் மதரசாவின் துணைவேந்தருமான மௌலவி காரி மொகம்மது தய்யீப் சித்திகி என்பவரும்கூட, சாதியத்தின் ஆதரவாளராக இருந்தார். — இவை எனது ஆய்வில் நான் கண்டறிந்த உண்மைகளாகும்

நூல்: இஸ்லாத்தில் மனுவாதிகள் – வெளியீடு: கீழைக்காற்று பதிப்பகம் – விலை ரூ. 6.00

கிடைக்குமிடம்:
கீழைக்காற்று. 10, ஔலியா சாகிப் தெரு,  எல்லீசு சாலை, சென்னை – 600 002 தொலைபேசி – 044 2841 23677
மேலும் விவரங்களுக்கு

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

 1. இஸ்லாமை வாகாபிசத்துக்கு கொண்டு செல்ல இது ஒரு வழி ,

  எந்த இஸ்லாம் அறிஞன்(?) பெண்களுக்கெதிரான கொடுமையை பற்றி பேசுகிறான் ?

  சூபியசத்தை நாசமாகிய கையோடு அடுத்த குறி சற்று இந்திய தன்மையுள்ள இஸ்ஸாமை அரபிமயமாக மாற்ற இது போன்ற ஆய்வுகள்(?)

  • மதி இண்டியா,

   இந்தக்கட்டுரையாளர் இசுலாத்தில் சாதி பார்க்கும் பழக்கம் இந்தியாவிலுள்ள இந்து மதத்தின் பாதிப்பு என்பதையும் விளக்கியுள்ளார். எனவே இந்து மதம் தலித்துகளுக்கும், சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் இழைத்திருக்கும் கொடுமைகளை முதலில் நீங்கள் பேசுங்கள். அந்த வகையில் இசுலாத்தை விமரிசிப்பதற்கு முன் உங்கள் வண்டவாளங்களை திரும்பிப் பாருங்கள். அம்மணமாக நடமாடுபவன் கோவணம் கட்டியவனை கேலிசெய்தது போல இருக்கிறது உங்கள் ஆதங்கம்.

   • டேய் கம்யூனிஸ்டுக் கம்மினாட்டி.
    இசுலாத்தை விமர்சிக்கும் தகுதி யாருக்குமே கிடையாது, அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்பது தானே துலுக்கத் தீவிரவாதிகள் வைக்கும் வாதம்.
    அதையே நீ வேறுவிதமாகச் சொல்வதனால் யாருக்குடே நன்மை ?
    யாருட்ட காசு வாங்கிட்டு வலையில எழுதுற ?
    துரோகி நாயே.

   • என்னங்க…தி.மு.க. அன்ட் அ.தி.மு.க மாதிரி பேசுறீங்க? ‘நீ தப்பு செய்யிரியே?’ என்றால், ‘நீ மட்டும் தப்பு செய்யலியா?’ என்று… 😉

   • ஈராக்கியப் பழக்கமும் மநுவாதந்தானோ? ஷியா, ஸுன்னியும் இந்து மதத்தின் பாதிப்பு தானோ?

 2. விரிவானதொரு கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி வினவு.

  இஸ்லாமில் சாதிப்பார்க்கும் பழக்கம் இருப்பது உண்மைதான். பெண் கொடுத்து எடுப்பது இல்லை என்பதெல்லாம் முன்பிருந்த காலத்தில் இருந்திருக்கலாம். இப்போதைய காலத்தில் அப்படி கீழான சாதி என்று பார்ப்பதில்லை. அதற்கு பதிலாக அந்தஸ்து மாத்திரமே முக்கியப்படுத்தப்படுகிறது. அதிகப் பணம் உடையவர்கள், ஏழைகள் என்ற வித்தியாசம் மாத்திரமே தற்சமயத்தில் நிறுவப்பட்டு கொடுக்கல் வாங்கல் உறவுகள் நிகழ்கின்றன.

  • it is very difficult to overcome caste feeling. if one have more knowledge in Islam he only overcome the caste feeling.it is impossible  to have enough knowledge in Islam for all Islamics who are living in India.Islam means love,kind,humanity

 3. ‘என்னடா இது, “தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!” பதிவில் நம் கருத்து வினவின் அடிமடியிலேயே கை வைக்கிறதே, இவர் அவ்வளவ்வாய் கண்டுகொள்ளவில்லையே’ என்று ஆச்சரியப்பட்டேன். என் ஆச்சரியம் வீண் போக வில்லை. copy & paste செய்து தனி பதிவே போட்டு விட்டார். இது வினவின் ஒரிஜினல் ஆர்.எஸ்.எஸ். முகம் ..! முழுசாய் வெளிப்பட்டுவிட்டது…! ஹிந்துக்களிடம் ஏற்பட்ட சாதிப்பிரிவினைக்கு அதன் அடிப்படை வருணாசிரம சித்தாந்தம் காரணம். இது தெரியாமல் யாரும் இருக்க முடியாது. தன் மதத்தின் அடிப்படையை தவறென்று ஒருவர் எதிர்த்தால் அவர் அந்த மதத்தை விட்டு வெளியேறியவர் ஆவார். அனால், ‘முஸ்லிம்களிடம் சாதி இருக்கிறது அதை ஒழிக்கிறேன் பேர்வழி’ என்று ஒருவர் இலகுவாக முனைவர் பட்டம்வாங்க முயல்கிறார். அதில் கவனிக்கவேண்டிய விஷயம் “இஸ்லாத்தில்…” என்று சொல்லவில்லை. “முஸ்லிம்களிடம்….” என்று சொல்கிறார். கேள்வியே அப்படித்தான் கேட்கப்படுகிறது. அதை அவர் இஸ்லாமிய சித்தாந்தம் மூலம் தான் ஒழிக்கப்போவதாயும் சொல்கிறார். ஒரு பெண்ணுக்கு இரண்டு தலை மூன்று கைகள் நான்கு கால்களுடன் பிறக்கும் குழந்தையை பார்த்துவிட்டு ‘மனிதர்கள் எல்லாரும் இப்படித்தான் இருப்பார்கள்’ என்ற முடிவுக்கு வருபவர் ஒரு வேற்றுகிரக வாசியாக இருக்கலாம் அல்லது வினவாக இருக்கலாம்.

  http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3636:2008-09-05-20-03-45&catid=185:2008-09-04-19-46-03

  —-இதில் ஒரிஜினல் பதிவு உள்ளது. அங்கு சென்று அதற்கு இடப்பட்டுள்ள மறுமொழிகளை படிக்கலாம்.

  வினவின் கருத்து :

  கம்யூனிஸ்டுகள் (ஒரு கொள்கையில் இருப்பவர்கள்-அதன்படி நடக்க வேண்டியவர்கள்), கம்யூனிசம் (அந்த கொள்கையில் ) சொல்லாததையும் சொல்லியதுக்கு எதிராகவும் செய்யும் செயல்களுக்கு கம்யூனிசம் (அந்த கொள்கை) பொறுப்பேற்காது. அவர்களுக்கும் கம்யூனிசத்துக்கும் சம்பந்தம் இல்லை. இவர்கள் அடிக்கும் கூத்துக்கு கம்யூனிசம் குறை கூறப்படக்கூடாது. அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள்…!

  பல வருடங்களாக இஸ்லாத்தின் எதிரிகளிடம் சொல்லப்பட்ட உண்மை முஸ்லிம்களின் கருத்தே என் கருத்து :

  “முஸ்லிம்கள் (ஒரு கொள்கையில் இருப்பவர்கள்-அதன்படி நடக்க வேண்டியவர்கள்) இஸ்லாத்தில் (அந்த கொள்கையில் ) சொல்லாததையும் சொல்லியதுக்கு எதிராகவும் செய்யும் செயல்களுக்கு இஸ்லாம் (அந்த கொள்கை) பொறுப்பேற்காது.”
  —– இது வினவு எனும் ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’.

  முஸ்லிம்களில் குற்றம் செய்பவர்கள் உண்டு. அதனால், குறை மதியாளர் வினவுக்கு டிப்ஸ்: அடுத்தடுத்த “புரட்சிகர ஆக்கங்களின் தலைப்புக்கள்” ….!!!!???

  “நாசிசத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
  “பாசிசத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
  “கம்யூனிசத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
  “மாவோயிஸத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
  “ஆர்.எஸ்.எஸ்.இடம் சரணடைந்த இஸ்லாம்”
  “வட்டியில் சரணடைந்த இஸ்லாம்”
  “விபச்சாரத்தில் சரணடைந்த இஸ்லாம்”
  “கொலை,கொள்ளை,கற்பழிப்பிடம் சரணடைந்த இஸ்லாம்”
  “லஞ்ச ஊழலில் சரணடைந்த இஸ்லாம்”
  “வரதட்சனையிடம் சரணடைந்த இஸ்லாம்”
  “அடிமைத்தனம் & பெண்ணடிமைத்தனத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
  “சூதாட்டம், குடி, போதையிடம் சரணடைந்த இஸ்லாம்”
  “கிருஸ்துவத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
  “ஜுடாயிசத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
  “புத்திசத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
  “ஜைனத்திடம் சரணடைந்த இஸ்லாம்”
  ………… ……….. …………
  last but not least …..

  “வினவி ‘ஷ’ த்திடம் சரணடைந்த இஸ்லாம்”

  • வாங்க நண்பர் நெத்தியடி முகமது,

   உங்களைத்தான் ஆர்வமாக எதிர்பார்த்தோம். ஆனால் கொஞ்சம் வெயிட்டாகவும் இருக்கும் என்று நினைத்தோம். கட்டுரையை முழுக்க படித்துவிட்டு விவாதித்தால் சரியாக இருக்கும். இசுலாத்தில் சாதி தீண்டாமை பின்பற்றப்படுகிறது, அதை இசுலாத்தின் அத்தாரிட்டகளான பல உலோமாக்கள் நியாயப்படுத்துவதையும் கட்டுரையாளர் விரிவாகவே குறிப்பிட்டுள்ளார். இதனால் இசுலாத்தை தவறாக நினைக்கக்கூடாது என்றால் சாதி பாராட்டும் முசுலீம்களை இசுலாத்தில் இருந்து நீக்கம் செய்யலாமே, அதை யார் தடுத்தது?

   • மீண்டும் மீண்டும் அறிந்துகொண்டே உங்கள் ‘அறியாமையை’யே வெளிப்படுத்துகிறீர்கள், உயர்திரு வினவு அவர்களே!

    இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட ஒரு முஸ்லிம், இஸ்லாத்தின் அடிப்படை விஷயமான ஒன்றை, ‘இறைவன் இல்லை’ எனறு சொன்னவுடன் அந்த கணம் அவன் ‘முஸ்லிம் இல்லை’ என்று இறைவன் கணக்கில் ஆகி விடுகிறான். யார் அவனை நீக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மீண்டும் தவறை உணர்ந்து திருந்தி முழுமனதுடன் உண்மையான உள்ளத்துடன் ‘அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை,முஹம்மத் நபி அவனின் தூதர்’ என்றால் அவன் முஸ்லிம்! யாரும் அவனை சேர்க்க வேண்டுமா?

    இஸ்லாத்தில் இல்லாத ஒரு விஷயத்தை ஒரு முஸ்லிம் செய்வதை பார்த்தால், நாம் அனைவரும் சேர்ந்து அவரிடம், “எப்பா! உன் மதத்தில் இதெல்லாம் கிடையாது. இறைவனை பயந்து இதனை விட்டுவிடு. உண்மை முஸ்லிமாய் திருந்தி விடு” என்று சொல்வோம். அதை விட்டுவிட்டு, “நீ இப்படி செய்கிறாயா? சரிதான், அப்போ இஸ்லாம் இதைத்தான் கூறுகிறது, எல்லாரும் வாருங்கள் இஸ்லாத்தை ஒழிக்கலாம்” என்று நீங்கள் கூப்பிடுவது முட்டாள்தனமான கேலிக்கூத்து – வேடிக்கை.

    தன் முந்தய மத சாதி நம்பிக்கையுடன் உள்ளவரை அறிவுரை கூறி திருத்தி அவரை நல்வழிப்படுத்துவதை விட்டுவிட்டு அவரை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இஸ்லாத்திலும், ஒரு கிராம கட்டைப்பஞ்சாயத்தில் (அல்லது ம.க.இ.க. வில் ? ) ஊர்நீக்கம் செய்யப்படுவதுபோல் செய்யக்கோருவது, வினவு போன்ற தன்னை ஒரு முற்போக்காளர் என்று ‘விளம்பரப்படுத்திக்கொள்ளும்’ நபர்க்கு அழகாய் தெரியவில்லை.

    • // ’முஸ்லிம்களில் சாதி ஏற்றத்தாழ்வு’ – ஒரு முஸ்லிமால் அப்படி நினைத்துப்பார்க்கவே முடியாது- ஏனென்றால் மனிதப்பிறப்பில் இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படை அப்படி! அப்படி எவரேனும் நினைத்தாலே பாவம். ஆதாரத்துடன் உங்கள் மறுமொழி வந்தால், அங்கே உடனடி கொள்கை சுத்திகரிப்பு உண்டு. TNTJ, TMMK, Jamathe Islaami, INTJ, இவர்களெல்லாம் எதற்கு இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? சும்மா நெட்டி முறிக்கவா? //
     நண்பர் முஹமது, நீங்கள் மன்பு இட்ட மறுமொழியில், இஸ்லாமிய அமைப்புகள் தவறு நடந்தால் பார்த்துக் கொள்ளும் என கூறி இருந்தீர்கள், இப்பொழுது ,அல்லாவே இறைவன் என்றால் அவன் முஸ்லீம், இல்லை என்றல் அவன் முஸ்லீம் இல்லை என்கிறீர்கள்.. இப்படி எளிதாய் இஸ்லாம் இருந்தால் ஏன் முகமதியா, அகமதியா, சியா, சன்னி இப்படி வேறுபாடுகள் நிறைந்த இஸ்லாமியர் இருக்கிறார்கள்.
     இங்கே உங்களின் கூற்றுப்படியே நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் அமைப்புகள் எல்லாம் நெட்டிமுரிக்க மட்டும்தான் உள்ளனர் என பொருள் கொள்ளலாமா..

    • Mr. நெத்தியடி முகமது,

     1927ஆம் ஆண்டு பார்பன வெறியன் காந்தி பிராமணர்களை வேண்டுமானால் கண்டியுங்கள்; ஆனால் பிராமணியத்தைத் தாக்காதீர்கள் என்று கூறினார். அதே போல நீங்கள் இங்கு வாதிடுவது முஸ்லிம்களை வேண்டுமானால் கண்டியுங்கள்; ஆனால் இஸ்லாமியத்தை தாக்காதீர்கள் என்பது போல் உள்ளது.

     இக்கட்டுரை என்ன சொல்கிறது? வினவு இஸ்லாமியத்தை ஒழிக்க வேண்டும் என்றா சொல்கிறது? இல்லையே… இஸ்லாமியத்திலும் மக்கள் சாதி பார்க்கிறார்கள் என்று சொல்கிறது. அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இஸ்லாமியத்தில் சாதி பார்க்கவில்லை; இஸ்லாமிய மதம் சாதியை போற்றவில்லை என்று நிரூபிக்க வேண்டும், இல்லை முஸ்லிம்கள் சாதி பார்க்கிறார்கள் என்றால் அவர்களை நீங்கள் திருத்த முயல வேண்டுமே அன்றி அவர்கள் இஸ்லாமியர்களே இல்லை அவர்கள் அப்படி செய்தால் அதற்கு இஸ்லாமியம் பொறுப்பேற்காது என்று நீங்கள் கூறுவது சரியென்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை நீங்கள் இஸ்லாமிய மதத்தை தீவிரமாக பின்பற்றுகிறீர்கள் அதனால் அதை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் அப்படியா? அப்படியானால் கிறிஸ்துவ மதத்திலும் சாதி பார்க்கிறார்களே. அவர்களை நீங்கள் என்ன சொல்வீர்கள்? தயவு செய்து மதம் எனும் போதையில் இருந்து வெளியே வந்து பதில் சொல்லுங்கள்.

    • Anna vanakkam,, appuram nengallam

     Rawthar, Maraikair, pattans , urdu muslim, kerala muslim nu pera vachikuringa

     Oru URDU muslim orun tamil muslimukkku ponna tharuvana !????

    • Hai, Vanniyan,
     you asked : /////Oru URDU muslim orun tamil muslimukkku ponna tharuvana !????////

     my answer is : oru thamil communist oru seena communistukku … ada avvalavu venaam, oru bengaali communistukku than ponnai tharuvaanaa?

    • பாவம் நெத்தியடி முகமது பாகம் 1

     தமிழ்நாட்டில் இருக்கும் உருது முசுலீமும், தமிழ் முசுலீமும் மண உறவு கொள்ளமாட்டார்களாம். ஆனால் தமிழகத்திலிருக்கும் ஒரு கம்யூனிஸ்ட்டு சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட்டை மணக்கவேண்டுமாம். நண்பரே அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நிச்சயம் மணம் புரிவோம். எதுவும் எங்களுக்கு தடையில்லை. ஆனாலும் உங்கள்மீசையில் மண் ஒட்டவில்லை.

    • @vinavu

     முஹம்மதை விரட்டுவதில் என்ன உங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி ? :(- வன்னியனின் கேள்வி குழந்தைத்தனமானது. சாதீயம் பற்றி பேசும் பதிவில் வந்து மொழி புரியாத ஒருவருக்கு பெண் கொடுப்பீர்களா என்று கேட்பது தமிழ் சினிமாவில் வரும் தனி ட்ராக் காமெடி போல :)-

     • மணிகண்டன், முகமதுவை நெருக்கமான நண்பர் என்ற முறையில் நட்பாகத்தான் விவாதிக்கிறோம். அதில் விரட்டுவது எங்கே வந்த்து? தமிழகத்தில் உள்ள உருது முசுலீம்களுக்கு தமிழ் நன்றாக தெரிந்தாலும் அவர்கள் தமிழ் முசுலீம்களை கீழானவர்கள் என்றே கருதுகிறார்கள். இது அப்பட்டமான உண்மை, காமடி இல்லை.

      • ஆஹா! என்ன ஆச்சரியம்..! வினவுக்கு என் கேள்வியில் இருந்த பதில் புரிந்து விட்டது. அதற்கு சப்பைக்கட்ட இப்போது ஒரு புதிய ‘சாதியை'(?) உருவாக்குகிறார்..! அவருக்கே தான் சொல்வது காமடி என்பதும் புரிகிறது. நம்பிவிடுங்கள், பாவம் அவர்!. வினவுக்கு BPபார்த்தால் மட்டும் போதாது…

    • சீன கம்யூனிஸ்டை இந்திய கம்யூனிஸ்ட் மணப்பது வெறும் வார்த்தை ஜாலமே .நடைமுறையில் ஒரு பயலும் அப்படி செய்தது இல்லை .ஊமை பாஷையில் குடும்பம் நடக்குமோ ??உருதுகாரர்கள் பலர் தமிழ் பேசும் பெண்ணையோ அல்லது ஆணையோ மணம் முடித்து இருக்கிறார்கள். ஒரு பார்ப்பான் ஒரு பறச்சியையோ பறயனையோ எங்காவது கல்யாணம் பாணி இருக்கிறார்களா ? அப்படி செய்திருந்தால் உண்மையிலேயே அது ஒரு சாதனை .அவரவர் தாய் மொழியில் சம்பந்தம் பேசுவதே சிறப்பு .தொந்தரவில்லாததும் கூட .அவரவர் மொழி அவர்களுக்கு உசத்தி .தமிழ் மொழி மட்டும் தெரிந்த ஒருவன் வேற்று மொழி மாநிலத்தில் பிச்சை கூட எடுக்க முடியாது .எம் பி ஏ படிப்பு படித்துவிட்டு பிரான்சில் ரெஸ்டாரன்டில் தட்டை கழுவும் வேலை செய்பவர் பலரை நான் பார்த்திருக்கிறேன் .இன்னும் இருக்கிறார்கள் .தமிழையும் இங்கிலீசையும் வைத்துகொண்டு நாக்கு வழிக்க வேண்டியதுதான் .பிரான்சில் குப்பை கொட்ட முடியாமல் இங்கிலாந்திற்கு ஆயிரக்கணக்கில் இந்தியர்கள் ஓடியிருக்கிறார்கள் .ஏன் இங்கிலீஷ் மொழி உசத்தி என்றா ?அல்லது தமிழ்மொழி மட்டம் என்றா ?எங்கே எந்த மொழியில் பேசினால் பிழைக்க முடியுமோ அதை செய்வதுதான் அறிவுடைமை .சீனப்பெண்ணை கட்டுவேன் என்பதெல்லாம் கேனப்பேச்சு.

    • //உருதுகாரர்கள் பலர் தமிழ் பேசும் பெண்ணையோ அல்லது ஆணையோ மணம் முடித்து இருக்கிறார்கள். ஒரு பார்ப்பான் ஒரு பறச்சியையோ பறயனையோ எங்காவது கல்யாணம் பாணி இருக்கிறார்களா ? அப்படி செய்திருந்தால் உண்மையிலேயே அது ஒரு சாதனை .//

     உருதுகாரர்கள் – பார்ப்பனர், தமிழ் பேசும் பெண் – பறச்சி? தூ…

     உங்களின் இந்த ‘கேவலமான ‘கம்பேரிசனே, இந்த தலைப்பு 100% உண்மை என்பதை உணர்த்திவிட்டது. ஒத்துக் கொண்டைமைக்கு நன்றி.

   • Dear Mr. Vinavu,

    Before you comment about Islam, I would request you please read about Islam. If you do not read about Islam please dont comment about Islam.

    Please read the history of Islam, history of Prophet and the Holy Quran. If you find something wrong then, you can comment on it. Hope you will agree with me.

  • //“முஸ்லிம்கள் (ஒரு கொள்கையில் இருப்பவர்கள்-அதன்படி நடக்க வேண்டியவர்கள்) இஸ்லாத்தில் (அந்த கொள்கையில் ) சொல்லாததையும் சொல்லியதுக்கு எதிராகவும் செய்யும் செயல்களுக்கு இஸ்லாம் (அந்த கொள்கை) பொறுப்பேற்காது.”//
   —– இது இந்துக்களுககும், இந்துமதத்துககும் மடடும் பொருந்தாதோ?

 4. சகோதரர் வினவு அவர்களே, உங்களின் தலைப்பு தவறானது. இஸ்லாத்தில் ஒரு போதும் சாதி கிடையாது. இஸ்லாத்தை பின்பற்றுவதாகக் கூறும் ஒரு சில கூட்டத்தார்களிடம் சாதி உள்ளதைத்தான் மேலுள்ள கட்டுரையாளர் விளக்குகின்றார். இஸ்லாம் அப்படி அறிவுருத்துவதாக அவர் கூறவே இல்லை. சரியாக படித்து உங்களின் தலைப்பை மாற்றவும்.

  இப்படியான மனப்பான்மையை உடைப்பதற்காகத்தான் நம் தமிழகத்தில் உள்ள ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள் போராடி வருகின்றன. 

  குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு இஸ்லாத்தில் இல்லாததை இஸ்லாமாக கூறிப் பிரச்சாரம் செய்து வரும் ஆலிம்களை கடுமையாக சாடி மக்களிடத்தில் சரியான இஸ்லாதை 20 ஆண்டு காலமாக எடுத்து வைத்து வருகின்றனர். இதன் பலனாக அனேக முஸ்லிம்களை நேர்வழியின் பால் மக்களை அழைப்பதே தனது கொள்கையாக கொண்டுள்ளனர்.

  தங்களால் முடிந்தால் கீழ்கண்ட வலைத்தளங்களுக்கு சென்று பாருங்கள்.

  http://www.onlinepj.com
  http://www.tntj.net

  நன்றி.

  • உழைக்கும் இசுலாமிய மக்கள் நாகூரிலும், ஏர்வாடியிலும், பொட்டல்புதூரிலும் உள்ள தர்காக்களில் வழிபாடு செய்வது இசுலாத்திற்கு விரோதமானது என்று உங்கள் தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்கிறதே இது கூட மேட்டுக்குடி மனோபாவம்தான். மக்கள் விரும்பிய முறையில் வழிபாடு செய்வதைக்கூட அனுமதிக்காத நீங்கள் சாதி ஆதிக்கத்திற்கு மட்டும் எதிராக போராடுகிறீர்கள் என்பதை நம்ப முடியவில்லை.

   • Dear Vinavu, The owner of the company expect the employees to work for him in the way how he expected. It is not the employees’ individual freedom.
    Similarly God (the Creator) created the human beings and ordered them to worship him in the way how he expected, not in their own way. And individuals are not having their own wish to worship anybody. They should worship the creator, not the creation. I hope you are clear with the Islam concept. If not please raise your comments, we can help you to understand and send you more explanations.

   • அய்யா வினவு அவர்களே… உங்களின் இந்த கருத்து உங்களின் அறியாமையையே காட்டுகின்றது.  மேற்குறிப்பிட்ட கட்டுரையாளர் கூறிய சாதி வழியை உருவாக்கியவர்களைத்தான்  மக்கள் அவ்லியாக்கள், நல்லடியார்கள் எனக்கூறி அவர்களின் அடக்கத்தலத்தில் தர்ஹாக்களை உருவாக்கி இவரிடம் பாவ மன்னிப்பு கேட்டால் அவர் அல்லாஹ்விடம் உங்களுக்காக பரிந்துரைச் செய்வார் எனக் கூறி மக்களை ஏமாற்றி தங்களின் வயிரை வளக்கின்றனர். இவர்களை நாடிச் செல்பவர்கள் எல்லாம் உழைக்கும் மக்கள் இல்லை. மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் பெரும் பணக்காரர்கள் தான் தங்களின் பாவங்களுக்கு இந்த தர்ஹா வழிபாடு மூலம் தங்களின் தில்லு முல்லுகளுக்கு பாவ மன்னிப்பு தேட முயற்சிக்கின்றனர். 

    முதலில் ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள். இஸ்லாத்தில் யாரும் தங்களின் சொந்த விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப சட்டத்தையோ அல்லது தனது வழிபாட்டையோ மாற்ற முடியாது. இந்த சட்டம் நடைமுறையில் உள்ளதால் தான் உலகம் முழுவதும் இஸ்லாமிய வணக்க வழிபாடு ஒரே மாதிரி உள்ளது. 

    இதில் குருக்குசால் ஓட்ட முற்படுபவர்களைத்தான் கட்டுரையாளர் வெளிச்சம் போட்டு காட்டுகின்றார்.

    எந்தப்பள்ளியில் உழைக்கும் மக்களுக்கு தன்னுடைய வழிபாடு உரிமையை தடுத்தார்கள்? நாகூர், ஏர்வாடி மற்றும் பொட்டல் புதூர் போவதற்கு?

    ஆமாம். நீங்கள் இந்த மாதிரியான இடங்களுக்கெல்லாம் சென்றீர்களா? முதலில் சென்று வாருங்கள். உங்களையெல்லாம் யாரும் தடுக்கமாட்டார்கள். பிறகு எழுதுவீர்கள் என்ன என்ன அநியாயம் எல்லாம் நடக்கிறது இந்த நாகூரிலும், ஏர்வாடியிலும். ஏன் ஏர்வாடியில் நடந்ததை மறந்து விட்டீர்களா? 

    இந்த மாதிரியான இடங்களில் நடைபெறும் வழிபாடுகளை எந்த அடிப்படையில் சரி என்கின்றீர்கள்?

   •  என் அறிவுக்கு எட்டிய வரை , ஒரு இசுலாமியர் அல்லா வை தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது. தர்காஹ் என்பது இசுலாமிய வழிபெரியவர்கல்  கல்லறை போன்றது .
    http://en.wikipedia.org/wiki/Dargah   
    இதில் உழைக்கும் மக்கள் என்ற பினாத்தல் எதற்கு ?? உங்களுக்கு தோற்றிய படி வழிபட வேணும்னா நீங்க புதுசா ஒரு மதததை  உண்டுபன்னுங்கள் . எப்படி வென கும்பிடலாம்னு ஒரு மதம் இருக்கு ?? தெரியுமா ? கடவுளே இல்லேங்கற மதத்துக்கு கூட வரையறை இருக்கு.
    ஊரு ரெண்டு பட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டமாம் 

 5. ஒரு கட்டுரை/பேட்டியை வைத்துக் கொண்டு இப்படி ஒரு தலைப்பு.சிறு நூல். நீங்களாக எதையும் படித்து, ஆராய மாட்டீர்களா. இந்த இடுகைக்கு நன்றாக வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறீர்கள். ஏனென்றால் அவர் பீகார் போன்ற மாநிலங்களில் உள்ளதன் அடிப்படையில் பேசுகிறார். அது இங்குள்ளவர்களுக்கு
  புரியாது. ஜாகீர் ராஜா எழுதியதை தோப்பில் முகமது மீரான் எழுதியதை சல்மா எழுதியதை நீங்கள் படித்து விட்டு, கானம் ஷெரீப் போன்றவர்களிடம் கேட்டறிந்து விட்டு தமிழ் நாட்டு நிலவரம் இது என்று எழுதியிருந்தால் அதில் அர்த்தமிருக்கும்.
  ஆங்கிலத்தில் இருந்த தலைப்பு என்ன? தலைப்பே தவறு. பார்பனியத்திடம் இஸ்லாம் சரணடைந்திருந்தால் இந்த்துவ அமைப்புகள் ஏன் அதை எதிர்க்கிறார்கள்.

 6. @ நெத்தியடி முகமது & கோ..

  இவர்கள் சாரமாகச் சொல்வது –

  1)”இசுலாத்தில் சொல்லாத ஒன்றை ஒரு இசுலாமியன் செய்தால் அது இசுலாமின் குற்றமல்ல”

  2)”அப்படி இசுலாத்தில் சொல்லாத / தடைசெய்யப்பட்ட ஒன்றை ஒரு இசுலாமியன் செய்யும் போது அவன் முசுலீம் இல்லை என்றாகிறது;
  அப்படியிக்க, நீங்கள் ஏன் இசுலாத்தின் மேல் குற்றம் சாட்டுகிறீர்கள்?”

  3) அப்படி ஒருவன் இசுலாத்தில் இல்லாத ஒன்றை ஒருவன் செய்யும் போது அவனை நல்வழிப்படுத்துவதை விட்டுவிட்டு ஏன் இசுலாத்திலிருந்து
  வெளியேறுமாரு சொல்ல வேண்டும்?

  4) இசுலாத்தை விமர்சணம் செய்தால் அது ஆர்.எஸ்.எஸ் மனப்பான்மையைத் தான் காட்டுகிறது!

  ம்… உலகின் எந்த மதமும் / தத்துவமும் நேரடியாக இன்னொரு மனிதனைத் துன்புறுத்து என்றோ; கொல்லு என்றோ; சுரண்டு என்றோ; ஒடுக்கு
  என்றோ சொல்வதில்லை – இந்து மதத்தை “மதம்” எனும் வரையறைக்குள்ளேயே நான் கருதாததால்; அது மக்களை ஒடுக்கவென்றே
  உருவாக்கப்பட்ட ஒரு தத்துவக் கோர்வை என்பதில் எனக்கு சந்தேகமேதும் இல்லாததால் இதில் இந்து ‘மதத்தை’ நான் கணக்கிலெடுத்துக்
  கொள்ளவில்லை.

  ஆனாலும் கூட இதே விதியை ஒரு இந்து சனாதனவாதியும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். சதுர் வர்ணம் மயா சிருஷ்ட்டம் என்று அந்த
  பகவானே சொல்லி விட்ட பிறகு, நீங்கள் ஏன் படிநிலை படிநிலை என்று கூப்பாடு போடுகிறீர்கள்? அதான் பகவானே சொல்லிட்டானே?
  சக்கிலியும் பரப்ரும்மம்; பரயனும் பரப்ரும்மம்; மறவனும் பரப்ரும்மம்; கவுண்டனும் பரப்ரும்மம்; பாப்பானும் பரப்ரும்மம்! முடிஞ்சது மேட்டரு…
  எல்லாரும் ஒன்னு தான் எல்லாரும் ஹிந்து தான்.

  மதம் எப்போதும் நீக்குப்போக்குகளுடன் தான் தன்னை பின்பற்றும் கூட்டத்தை அணுகுகிறது. அது எந்த மதமாயிருந்தாலும் அப்படித்தான். பாவ
  மன்னிப்பு இத்தியாதி இத்தியாதி… மதம் என்பது ஒரு தேங்கிய குட்டை! இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட விவிலியமும் ஆயிரத்து
  நானூறு வருடங்களுக்கு முன்பு இறங்கிய குரானும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் பிரச்சினைகளுக்கும் மதவாதிகளுக்கு இருக்கும் ஒரே
  ரெஃபரன்ஸ் பாயிண்ட். அது தன்னைப் புணருத்தாரணம் செய்து கொள்வதுமில்லை – அது அனுமதிக்கப்படுவதுமில்லை.

  வரலாற்றின் வளர்ச்சிப்போக்கில் மனிதர்களின் வாழ்வடிப்படைகள் மாறிவருவதைக் கணக்கிலெடுத்து தனது அனுபவங்களைத் தொகுத்து புதிய
  அணுகுமுறையை வைப்பதோ – தனது அடியார்களின் தவறுகளில் இருந்து சுயவிமர்சனம் செய்து கொள்வதோ மதம் என்று வரும் போது வாய்ப்பே
  இல்லாதவொன்றாகிவிடுகிறது.

  இவ்வகையில் மதம் எப்போதும் மனிதனைப் பின்னோக்கியே இழுக்கிறதேயன்றி அது எப்போதும் ஒரு மனிதனை முன்னோக்கித் தள்ளுவதில்லை.

  ஒரு கம்யூனிஸ்ட்டின் வேலை சாதிபார்க்கும் இசுலாமியனிடமும் வரதட்சினை வாங்கும் இசுலாமியனிடமும் ( ஓக்கே ஓக்கே.. பெயர் தாங்கிகள்னே வச்சிக்குவோமே) போய் இசுலாமை சரியாகப் பின்பற்றச் சொல்வதாக இருக்க வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? ஒரு சமுதாயத்தை
  முன்னோக்கிச் செலுத்திச் செல்ல வேண்டுமானால் பழைய குட்டைகளை காலி செய்தாக வேண்டும் – மதத்தை உடைத்து நொறுக்க வேண்டும்.
  எனவே கம்யூனிஸ்டு ஒரு மதத்திற்கு சாதகமாகவும் ஒரு மதத்திற்கு பாதகமாகவும் நடந்து கொள்ள முடியாது – மொத்தமாக எல்லா நாத்தத்தையும்
  ஒழிச்சுக் கட்டத்தான் முனைவான்.

  எனவே தான் மத வேறுபாடுகளைக் கடந்து எல்லா மதவாதிகளும் கம்யூனிஸ்ட்டை தனது எதிரியாக வரித்துக் கொள்கிறார்கள். நெத்தியடி
  முகமதுவுக்கு எங்கள் தோழர்கள் மேல் இருக்கும் அதே கோபம், அதே அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் மோஹன் பாக்வத்துக்கும் இருக்கும். இந்த
  அம்சத்தில் இவர்கள் இருவரும் எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் எங்களை ஒழித்துக் கட்ட தோளோடு தோள் சேரவும் தயங்க மாட்டார்கள்.

  இசுலாத்தில் சொல்லாதவற்றை செய்யும் நபர்களின் தனிப்பட்ட செயல்களுக்கு கம்பேனி பொறுப்பல்ல என்கிறீர்களே.. சரிங்க இந்த ஆயிரத்து
  நானூத்தி சொச்ச வருசத்தில இந்தியாவுக்கு வந்து ஒரு ஆயிரத்து சொச்ச வருசம் இருக்குமா? இந்த ஆயிரம் வருசத்தில ஏன் ஐடியல் முசுலீம்கள்
  உருவாகவில்லை? அப்படி உருவாகியிருக்கிறார்கள் என்றால்.. மற்றவர்களை ஒரு லிட்மஸ் டெஸ்ட் வச்சி தூக்கி வெளியே கடாச வேண்டியது
  தானே? ஆயிரம் தான் இருந்தாலும் நமக்கு அல்லா தானுங்களே முக்கியம்? அவரு சொன்ன வார்த்தைகள் தானேங்க முக்கியம்? இந்த கழிசடைப்
  பசங்க பன்ற தப்பெல்லாத்துக்கும் ‘நல்ல’ முசுலீம்களும் இசுலாமும் ஏன் கெட்ட பேரு வாங்கிக்கனும்?

  அதனால முதல்கட்டமா வட்டி வாங்கறவனும், வரதட்சினை வாங்கறவனும், பிறப்பினடிப்படையில் பிரிவினை பார்க்கறவனும் இசுலாத்திலிருந்து
  கெட் அவுட் அப்படின்னு அறிவிச்சுடுங்களேன்?

  அதச் செய்ய மாட்டீங்க! நீங்க மட்டுமில்ல வேறு மதத்திலயும் செய்ய மாட்டாங்க! அப்படிச் செய்யவும் முடியாது. மீறி செய்தா.. நெத்தியடி
  மொகமதுவும் கூட ஒரு நாலஞ்சி பேரும் தான் முசுலீமாவே தேறுவீங்க.

  தனது சித்தாந்தத்தை பின்பற்றும் ஒரு மக்கள் கூட்டத்தில் நடக்கும் தவறுகளை / இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களையவோ, தனது அணுமுறையை
  மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லாத – அதன் விளைவுகளுக்கு சுயவிமர்சனம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத மதத்தைத்
  தான் அதைப் பின்பற்றுபவர்கள் அதன் பேரில் செய்யும் செயல்களுக்குப் பொறுப்பாக்க முடியும் – அந்த வகையில் இந்திய இசுலாமியர்களில்
  பெரும்பான்மையாகக் காணப்படும் சாதி (நடப்பில் வலிமையாக உள்ள பார்ப்பனிய மத்திடமிருந்து சுவீகரித்துக் கொள்ளப்பட்டதாகவே இருந்தாலும்)
  களையப்படாததற்கு இசுலாத்தின் மேல் தான் குற்றம் சுமத்த முடியும்.

  எல்லாம் சரிதாங்க.. ஆனா பேட்டில சொல்லப்பட்ட விஷயங்களுக்காக நீங்கள் ஏன் பார்ப்பனியத்திடம் இசுலாம் சரணடைந்தது என்று
  தலைப்பிட்டீர்கள்? என்கிறார் ஒருவர். இசுலாமாகட்டும் கிருத்துவமாகட்டும் – இங்கே பரவ தனக்கு முன்னேயிருந்த ஒரு சமூக அமைப்பின்
  கூறுகளை தன்னுள் வரித்துக் கொண்டிருக்கிறது என்பது தானே மேலே உள்ள பேட்டியின் மூலம் சாராம்சமாகத் தெரிவது? எனில் இந்தத்
  தலைப்பு தான் பொருத்தமானது!

 7. சங்கு, நீங்கள் எழுதி இருப்பவதை படிக்க நன்றாக தான் இருக்கிறது. ஆனால், கோடிக்கணக்கான மனிதர்கள் பின்பற்றும் மதம், அவற்றை பின்பற்றுபவர்கள் எல்லாம் ஒரேவிதமாக நல்லவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது சும்மா பேச்சுக்கு தான் உதவும். மதம் மீது இன்றைய இந்தியாவின் மக்களில் தொண்ணூறு சதவீதம் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆதலால், அவற்றுள் எது சிறந்தது / எவ்வாறு தீமைகள் களையப்படவேண்டும் என்பதை குறித்து தான் விவாதங்கள் இருக்கவேண்டும். அப்படி செய்யும் போது ஒருவேளை மதத்தின் தேவையே மறுபரிசீலனைக்கு உட்படும். அதை விட்டுவிட்டு இதுபோன்று முகமதுக்காக கட் & பேஸ்ட் செய்து provocate செய்வது எல்லாம் எதற்கும் உதவாது.

  இல்லையென்றால் நீங்கள் கேட்டுள்ள கேள்விகளை உங்களிடம் திருப்புவது மிகவும் எளிதானதே ! கம்யூனிஸ்ட் என்று சொல்லிகொள்பவர் ஏதாவது ஒரு தவறு செய்தால் நீங்கள் போலி கம்யூனிஸ்ட் என்று கூறுகிறீர்கள். முகம்மது அவருக்கு தெரிந்த வழியில் அவன் முஸ்லிம் இல்லை என்று கூறுகிறார். ஒரு வித்தியாசமும் இல்லை.

  • மணிகண்டன், இது முகம்மதுக்காக கட்டு அன்டு பேஸ்டு செய்தது அல்ல. இந்த பேட்டியை எங்கள் அமைப்பு சார்பாக நாங்கள் சிறு வெளியீடாக கொண்டு வந்துள்ளோம். தவிர அப்படியே செய்தாலும் என்ன தவறு, எனக்கு தெரிந்த இசுலாமியரிடத்திலெல்லாம் நான் இந்த நூலை வாங்கிக்கொடுதது விவாதித்திருக்கிறேன். இந்த கட்டுரையும் அதே போன்ற ஒரு விவாதத்தை இங்கே தூண்டினால் அது நல்லதுதானே.

   இந்த கட்டுரையில் எழுதப்பட்டிருப்பது இந்தியாவில் நடக்கும் உண்மை. அதைப்பற்றி முகம்மதோ நீங்களோ பேசவில்லை ஆனால் சம்பந்தமே இல்லாமல் எங்கள் நோக்கத்தை கேள்விகேட்பது விவாதத்தை திசை திருப்புதாகவும் தனிநபர் தாக்குதலுக்கும் தான் வழிவகுக்கும்.

   • ஹலோ, புஷ்…! பிரச்னையை நானா திசை திருப்புகிறேன்? இங்கு தலைப்பு தான் நடுநிலை நல்லோர் அனைவராலும் எதிக்கப்படும் அம்சம். புரியவில்லையா?
    வினவும், அவரின் ஒரு முஸ்லிம் தோழரும் செக்ஸ் படம் பார்க்கப்போகிறார்கள் என்று வைப்போம். மஜாவாக பார்த்துவிட்டு வந்து, அடுத்தநாள், வினவு, தன் தளத்தில், தன் முஸ்லிம் தோழரை மைண்டில் வைத்து, “ஷகிலாவிடம் சரணடைந்த இஸ்லாம்” என்று பதிவு போட்டால்? “தோழர்கள்” வேண்டுமானால் பரவசப்பட்டு ஆனந்தக்கூத்தாடி கொண்டாடி மகிழலாம். நடுநிலை நல்லோர் எதிக்காமா எப்படி இருப்பது? வேண்டுமானால் “ஷகிலாவிடம் சரணடைந்த ஒரு முஸ்லிம்” என்று போட்டுக்கொள்ளட்டுமே? (முஸ்லிம்கள் என்று போட்டாலும் கூட, அதையும் எதிர்த்து, வினவுக்கு, ஒருமை/பன்மை பற்றி எல்லாம் வகுப்பு எடுக்க வேண்டிவரும்.) இப்படி தலைப்பிடுவதேல்லாம் எதற்காக? ஏற்கனவே, இதுவரை யாரையும் பற்றி நல்லதாய் எழுதாத வினவு தமிழ்மணத்தை மட்டும் காகாபிடித்து எழுதி, அதன்மூலம், ஏகப்பட்ட ஹிட்ஸ் வரவேண்டும், அதரவு வோட்டுகள் வர வேண்டும், வினவின் புகழை எல்லாரும் பாட வேண்டும், அதன் மூலம் அதன் “TRP rating” (?) எகிற வேண்டும்….இதுதானே? அதற்குத்தான் நான் நிறைய ‘டிப்ஸ்’ ////வினவுக்கு டிப்ஸ்: அடுத்தடுத்த “புரட்சிகர ஆக்கங்களின் தலைப்புக்கள்” ….!!!!??? ///// கொடுத்துள்ளேனே..!.

    இந்நிலையில் அந்த வினவின் அப்பாவி முஸ்லிம் தோழர், “ஏனையா வினவு, நிரும்தானே என்கூட வந்தீர், ஷகிலாவை ரசித்து ஜொள்ளு விட்டீர், எனவே, “ஷகிலாவிடம் சரணடைந்த ம.க.இ.க” என்று நான் சொல்லலாமா?”, என்று பாவம், அந்த பரிதாபத்திற்குரிய வினவின் முஸ்லிம் தோழர் வினவினால்,….. துல்லியமான இந்த லாஜிக்…. பாவம், வினவுக்கு புரியுதோ இல்லையோ, ம.க.இ.க. வின் ஒரு தோழருக்கும் புரியாது என்பதை மிகவும் உறுதியுடன் நம்பலாம்.

    • நெத்தியடி பாய்

     1) நீங்கள் நடுநிலையாளர் அல்ல
     2) இந்த தலைப்பு மிகச்சரியானது
     3) வினவை விமர்சித்து நாலனாவுக்கு பயனில்லை கட்டுரையில் உள்ள கருத்துக்களை ஒன்றொன்றாக மறுத்து எழுதினால் உங்கள் அறிவு மற்றவர்களுக்கு பயன்படும்

    • நெத்தியடி முகமது பாய் அண்ணாச்சி, 

     ஷகிலா படத்தை மஜாவாக பாத்த்தப்பத்தி ஜாலியா எழுதுதீகளே நீங்கள் ஒரிஜனலா இல்லையா? ஒரு நல்ல பாய் அண்ணாச்சி ஷகிலா பெயரைச் சொல்லுத்துக்கு உரிமை இல்லையிலா? முதல்ல இந்த பிரச்சினைக்கு பதில் சொல்லுங்க. 

    • இசுலாமியர்கள் சாதி பாராட்டுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ முயலாமல் சம்பந்தமில்லாமல் ‘ஷகிலாவை வைத்து திசை திருப்பி என்ன ஆதாயம் அடையப் போகிறீர்கள் நெத்தியடி முகமது?

    • வினவு,
     நான் பார்த்த அளாவில் முஸ்லீம்கள் ஒரு கருத்து பரிமாற்றம் என்று வரும் பொழுது, ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் முன்னேற முடியவில்லை. அதனால், அத்துடன் காணாமல் போய்விடுகிறார்கள். (அல்லது) அவர்களால் எதையும் தர்க்கத்துடன் பேச முடிவதில்லை. இது அவர்களின் ‘இது தான் சரியானது’ என்ற மனோபாவம் தான் காரணம் என்பது என் கருத்து. இதை நான் 100% உருதியுடன் சொல்கிறேன்.

   • புச்சு, நான் வினவின் சமீபத்திய பதிவுகளை படித்து வருகிறேன். அதில் முகமது எழுதும் பின்னூட்டங்களும் / அவற்றுக்கு வினவு குழுவினரின் பதில்களையும் படித்தேன். இந்த சூழ்நிலையில் இந்த பதிவு விவாதத்தின் தொடர்ச்சியாக தெரிந்தது. அதைத்தவிர வினவின் பதிலாகிய “உங்களை தான் எதிர்பார்த்து இருந்தோம்” என்பதும் அந்த எண்ணத்தை வலுபடுத்தவே செய்தது. அதனால் எனக்கு தோன்றியதை கூறினேன் சம்பந்தமே இல்லாமல் உங்கள் நோக்கத்தை கேள்வி கேட்பதாக நினைத்தால் “ஓகே”. ஆனால் இந்த விவாதத்தை மேலும் திசை திருப்பாமல் இருக்க ஒதுங்கி கொள்வதில் ஒரு பிரச்னையும் இல்ல எனக்கு.

    • மணிகண்டன், நீங்கள் செல்லதும் சாத்தியமே ஏனென்றால் இந்தியாவின் சாதி பிரச்சனைக்கு இசுலாமை தீர்வு என்றார் பாய்… அதற்கு பதிலாக இந்த பதிவு ஏற்றப்பட்டிருக்கலாம் அப்படியே ஆனாலும்… அதற்காக வினவைதிட்டினால் சாதி ஒழியுமா? விவாதம் இசுலாமில் ஏன் சாதி இருக்கிறது என்பதை ஒட்டி நடந்தால் நலம்

    • அந்த ஆராய்ச்சியாளர் கூட class & caste வித்தியாசத்தை ரொம்பவே குறுக்கி எழுதிட்டாரோன்னு தான் தோனுது. எனக்கு தெரிந்த நண்பர்களின் (முஸ்லிம்) கல்யாணத்தில் இந்த ஜாதி வைத்து பெண்/பையன் தேடும் படலங்களை பார்த்ததில்லை. தீண்டாமை கொள்கை இருந்தால் தான் ஜாதி தவறு.

     மதம் இருக்கிறதோ / இல்லையோ, என்றுமே இந்த சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அதற்கு basic standard of living நல்ல நிலையை அடைந்தால் ஏற்றத்தாழ்வினால் பிரச்சனைகள் இருக்காது.

     மற்றுமொன்று – நான் நேதேர்லாந்தில் வசிக்கிறேன். இந்தியாவிலிரிந்து சுரினாமிர்க்கு(Dutch Colony) அடிமைகள் (Slave labours) ஆக 150 / 200 வருடங்கள் முன்பு பீஹார் மற்றும் உத்திர பிரதேசத்ரிலிருந்து பலரும் விற்கப்பட்டனர். அங்கு உள்ள மக்கள் (சுரினாமில்) இன்றளவிலும் ஜாதிகளை கடைபிடிக்கின்றனர். அதே சுரினாமில் இருந்து நெதெர்லாந்து வந்து குடியேறிய மக்கள் (இந்து) யாரும் ஜாதியை கட்டிக்கொண்டு அழவில்லை. திருமணங்களும் ஜாதி வைத்து நடப்பதில்லை. என்ன காரணமாக இருக்கும் ?

    • Mr. மணிகண்டன்,

     //தீண்டாமை கொள்கை இருந்தால் தான் ஜாதி தவறு.//
     அப்படியென்றால் இந்து வேத முறை இந்தந்த சாதியினர் இந்தந்த தொழில்தான் செய்ய வேண்டும் என்று சொல்கிறதே அந்த இடத்தில் சாதி சரி என்றாகிவிடுமா???

     //மதம் இருக்கிறதோ / இல்லையோ, என்றுமே இந்த சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அதற்கு basic standard of living நல்ல நிலையை அடைந்தால் ஏற்றத்தாழ்வினால் பிரச்சனைகள் இருக்காது.//
     According to New Internationalist (July 2005), In India, Brahmins, who are 3.5 per cent of the population, hold 78 percent of the judicial positions and approximately 50 per cent of parliamentary seats. இந்த அதிகாரப் போக்கிற்கு எந்த மாதிரியான basic standard of living தேவை என்று சொல்லுங்கள்.

     //மற்றுமொன்று – நான் நேதேர்லாந்தில் வசிக்கிறேன். இந்தியாவிலிரிந்து சுரினாமிர்க்கு(Dutch Colony) அடிமைகள் (Slave labours) ஆக 150 / 200 வருடங்கள் முன்பு பீஹார் மற்றும் உத்திர பிரதேசத்ரிலிருந்து பலரும் விற்கப்பட்டனர். அங்கு உள்ள மக்கள் (சுரினாமில்) இன்றளவிலும் ஜாதிகளை கடைபிடிக்கின்றனர். அதே சுரினாமில் இருந்து நெதெர்லாந்து வந்து குடியேறிய மக்கள் (இந்து) யாரும் ஜாதியை கட்டிக்கொண்டு அழவில்லை. திருமணங்களும் ஜாதி வைத்து நடப்பதில்லை. என்ன காரணமாக இருக்கும்?//
     இக்காரணத்தைப் புரிந்து கொள்ள முதலில் நீங்கள் அம்மக்களை வைத்து வேலை வாங்குபவர்கள் சாதி பார்ப்பவர்களா என்று பாருங்கள்… பின்னர் அதிலிருந்தே நீங்கள் ஒரு முடிவுக்கு வருவீர்கள்.

    • lenin, my answer was in response to the perceived casteism in islam where the author has accepted that there is no untouchability in it ! In this case, caste is nothing but a class of people. So, your first part of the answer does not make any sense w.r.t what i write.

     I just don’t understand on why you have mentioned that statistics when i talk about basic standard of living. And if possible, kindly give me the link. It is like someone saying that all the kings before independence belong to what is termed today as most backward class. And also, if you see the last parliamentary term, we had 40 MP’s, 9 central ministers, cm of tamilnadu and so many state ministers from castes other than brahmins and ended up blaming 3 malayali higher caste bureaucrats for the injustice in eezham saying that they hold all the powers. (which i refuse to believe)

     i don’t really know the answer for third one. you might be right but it may not be all that simple too. It is probably the only place  where the hindus as a group is not following any casteism. That is why i wrote.

     ( i don’t have any tamil writers and google transliterate is failing me )

    • மணிகண்டன்,

     வாழ்க்கைத்தரம் கூடிவிட்டால் சாதி பார்க்கமாட்டார்கள் என்பது உண்மையில்லை. இந்தியாவில் தீவிரமாக சாதி பார்க்கக்கூடிய பார்ப்பன மற்றும் ‘மேல்சாதியினர்’ வர்க்க ரீதியாகவும் மேட்டுக்க்குடியாகத்தான் இருக்கின்றனர். உங்கள் வாதப்படி இவர்கள் சாதியை மறந்திருக்கவேண்டும். யதார்த்தமோ நேரெதிராகத்தானே உள்ளது?

    • வினவு, தவறான புரிதல். நான் கூற வந்தது அடிமட்ட மக்களின் வாழ்க்கை தரம் குறித்து. Basic standard of living ஒரு நல்ல நிலையில் (அனைவருக்கும்) இருக்கும்பொழுது மாறலாம் என்று நினைக்கிறேன். அப்பொழுதும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஆனால் ஏற்றத்தாழ்வினால் பிரச்சனைகள் வராது. சோ, இந்தியா குறித்து நீங்கள் செய்து இருக்கும் comparison சரியாக வராது.

    • மணிகண்டன், Basic Standard of Living நன்றாக இருக்கும் நாடுகளில் நிறவெறி இருப்பதில்லையா? 

    • சாதி வெறி / மத வெறி / இன வெறி / மொழி வெறி / நிற வெறி – இவற்றை நீங்கள் எப்படி அளவீடு / மதிப்பீடு செய்கிறீர்கள் என்று தெரியாது. ஆனால் நான் அவற்றால் ஏற்படும் பாதிப்பை வைத்து பார்க்கிறேன். அப்படி பார்த்தால் மேற்கு ஐரோப்பாவில் நிறவெறி இருக்கலாம். ஆனால் அவற்றினால் பாதிப்பு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு தான். (எனது அனுபவம் சார்ந்த கருத்து…தவறாகவும் இருக்கலாம்)

 8. very good article….. its rare in tamil to read like this…..let others shout….but truth is truth….no body can deny that….. as chairman mao said ‘ they can pluck and throw the flowers but they cannot hold and stop the spring to come’ … i am worried only about one trend that is really paining .. that is where are these gentlemen so called defenders of islam gone when marxist leninst comrades stood honestly without any occilation and ready to sacrifice their life for the minority community against the facist rss and rightist forces…they escape at that time and come suddenly …i think they are the real danger than the right wing rss forces..because enemy has name but these bloggers who scribble dangerously does not have name they are the enimies of the people ….

 9. //இந்து மதம் தலித்துகளுக்கும், சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் இழைத்திருக்கும் கொடுமைகளை முதலில் நீங்கள் பேசுங்கள். அந்த வகையில் இசுலாத்தை விமரிசிப்பதற்கு முன் உங்கள் வண்டவாளங்களை திரும்பிப் பாருங்கள். அம்மணமாக நடமாடுபவன் கோவணம் கட்டியவனை கேலிசெய்தது போல இருக்கிறது உங்கள் ஆதங்கம்.//
  This is equally applicable to Vinavu and other criminals in Naxal movement like ma ka i ka.Do they have the honesty or guts to criticize the naxals who have mortgaged themselves to the chinese villains and also fervently wish to handover the country to China;do they have the honesty to condemn the marxists and naxalites killing hundreds of innocent people.people like vinavu do not have the moral right to criticize islam or for that matter any other institution.

   • பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டு. நக்ஸலைட்டுகளோ, இஸ்லாமிய பயங்கரவாதிகளோ உலகில் இல்லவே இல்லை.

 10. I feel Sangu is correct. instead of arguing about which religion is best or what to do to change religios, we need to remove all the religions from India. It is hard but if you start planning and execute perfectly like JESUS and MOHAMAD we can also get rid of this religion from India even from WORLD. If you want peaceful WORLD then we should not any religion. I am firmly believe BRAHMINS, MUSLIMS and CHRISTIN are the only people following religion. If you convert these people to NO RELIGION then the world become PEACEFUL.

  • மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தினானாம்.

 11. PAKISTAN is the place in earth creating terrorist to destroy WORLD. It is due to they are following ISLAM. Nowadays in the world all knows that those who follow ISLAM, they are against humanity and they all are converted in to terrorist. Just another Victim is Fort Hood in Texas.

 12. Hindu religion is Indian whereas Christianity and Islam foreign.  The foreign religions, when it comes to India, the Indians impose on them the Indian ethos and Indian manners on it and adopt the religions, differently.  Hence, we see the same discrimination, which Hindus have been doing,  among the followers of the two foreign religions in India.

  Islam preaches no division; and anyone who wants divisions, is not a Muslim.  It is good to hear; but it is just theory.  The practice is as I said in the first para.

  In Bihar, the people who converted to Islam are mostly from the poorer sections of society, that too, the former untouchables of Hinduism.  The few who converted to Islam from upper castes, never accept their untouchables as their equal. Islam is in theory. Not in practice here,

  That is why Bihar Politicians like Lallu Yadav and UP politicians like Mulaymsing Yadav want reservations in jobs for those former untouchables among Muslims.

  Nethiyadi Mohamaad and his company of friends here, do not want to see the stark realities that face a sociologist who study societies in India.

  • யோவ் கேனஸ்வாமி

   இஸ்லாமில் ஜாதி இல்லை என்று சொல்கிறீர் .ஆனால் அது வெறும் தியரி மட்டும் என்கிறீர் .ஜாதிகுப்பைகளின் கலவையில் உருவான நீர் என்னத்தை நக்கி சுவாமி ஆனீர் .தீர்த்தம் என்ன கோமியமா?? கோகோ கோலா கோமியம் எப்போ ரிலீஸ் ??

   • நாடோடி, விவேகானந்த சாமி சரியாகத்தானே சொல்லியிருக்கிறார். வெளிநாட்டிலிருந்து வந்த இசுலாமும், கிறித்தவமும் பார்ப்பனிய இந்து மதத்தின் சாதியத்தை ஏற்றுக்கொண்டே வளர முடிந்த்து என்பதில் என்ன தவறு என்பதைக் கூறவும். இசுலாத்திதன் சரியை அதை பின்பற்றுபவரின் அளவுகோலின்படிதானே மதிப்பிட முடியும்?

    • வினவு says : ////இசுலாத்திதன் சரியை அதை பின்பற்றுபவரின் அளவுகோலின்படிதானே மதிப்பிட முடியும்?////

     சர்தான்…அப்போ…..

     கம்யூனிசத்தின் சரியை அதை பின்பற்றுபவரின் அளவுகோலின்படிதானே மதிப்பிட முடியும்? பிறகெதற்கு வண்டி வண்டியாய் உங்களின் “போலி கம்யூனிஸ்டுகள்” பதிவுகள்? உங்களின் இவ்வாதப்படி “கம்யூனிசம் போலி” என்றே நாங்கள் இனி புரிந்து மதிப்பிட்டுக்கொள்கிறோம். நன்றி வினவு.

    • முஹம்மது, நான் பொதுவாக மத நம்பிக்கையாளர்களிடம் (இஸ்லாம் / கிருஸ்துவர்களிடம்) அவர்கள் நம்பிக்கை குறித்து விவாதிப்பதில்லை. ஆனாலும் கம்யூனிசம் / இஸ்லாம் பதிலை நீங்கள் கொடுப்பதற்கு உதவி செய்துவிட்டேனோ என்று நெருடுவதால் ஒரே ஒரு கேள்வி. உங்கள் கேள்விக்கு வினவு குழுவினர் “ஆம். நீங்கள் சொல்வது சரி. கம்யூனிசம் போலி” என்று கூறினால் நீங்களும் இஸ்லாம் போலி என்று ஒத்துக்கொள்வீர்களா ?

    • பாவம் நெத்தியடி முகமது பாகம் – 2

     நாங்கள் போலி கம்யூனிஸ்டுகள் என்று மதிப்பிட்டு விமரிசிப்பது போல நீங்கள் இசுலாத்தை சரியாக பின்பற்றாதவர்களை போலி இசுலாமியர்கள் என்று அழைப்பதில்லையே? வக்கிரம் பிடித்த அரபு ஷேக்குகள் முதல் சாதிவேற்றுமை பாராட்டும் இந்திய உலமோக்கள் வரை எல்லோரையும் இசுலாமியர் என்றே கொஞ்சி குலாவுகிறீர்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும் நண்பா!

    • //////உங்கள் கேள்விக்கு வினவு குழுவினர் “ஆம். நீங்கள் சொல்வது சரி. கம்யூனிசம் போலி” என்று கூறினால் நீங்களும் இஸ்லாம் போலி என்று ஒத்துக்கொள்வீர்களா ?////// —– ஒருக்காலும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் திரு.மணிகண்டன். நானும் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்பதில் என்ன சந்தேகம் தங்களுக்கு? எனக்காகவே ஒரு copy & paste பதிவை போட்டுவிட்டு, என்னையே எதிர்பார்த்து ரத்தக்கொதிப்புடன் தவம் கிடக்கும் வினவிடமிருந்து பதில் வரட்டும் என்றுதான் உங்களுக்கு பதிலளிக்க தாமதித்தென், திரு.மணிகண்டன். (இன்று நாட்டுக்கு உபயோகமான வேறு எந்த பதிவும் கிடையாதாம்! நான் மட்டும் தான் இலக்கு போலும்!பாகம் பாகமாய் அவரின் அவரின் சின்னபுள்ளத்தனமான பதிலை பார்த்தீர்கள் அல்லவா?) தன் பதிவிற்கு பொருந்தமில்லாத தலைப்பிட்ட வினவின் தவறான புரிதலிலிருந்து அவரை வெளிக்கொணரவே அந்த கேள்வியை கெட்டேன். நேற்றய எனது 3 மறுமொழிகளில் எங்காவது இந்த பதிவில் வந்தவை எல்லாம் பொய் என்று கூறி இருக்கிறேனா? அப்படி ஒரு அலிபியை உருவாக்கி இருக்கிறார். அப்போதுதான் அவரின் கருத்து சாகாமல் நிற்கும் என்பதற்காக. தலைப்பு மட்டுமே இவரின் சொந்த சரக்கு. அதனை மட்டுமெ எதிர்க்கிறேன். ஏற்கனவெ தமிழ் சர்க்கிளில் நான் முழுதாக படித்த பதிவுதான் இது என்பதை 4 வரிகளிலேயே புரிந்து கொண்டேன். (உள்ளெ வேறு என்ன தகிடுதத்தங்கள் செய்திருக்கிறார் என்று ஒரிஜினலோடு ஒப்பிட்டால் தான் தெரியும்). இவரையெல்லாம் ஒரு சிந்தனாவாதியாக நினைத்தது என் தவறு.

 13. கவிஞர் இன்குலாப் (சாகுல் ஹமீது) அவர்களின் கட்டுரைத் தொகுப்பு – “கவிதா” படித்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களில் அனுசரிக்கப்படும் சாதி வேற்றுமைகள் தெரியவரும்.

  சாதி வேற்றுமைகள் இஸ்லாமிய மதக்கோட்பாடுகளின் அனுமதிக்கப்படுவதாக யாரும் கூறுவதில்லை. ஆனால் நடைமுறையில் இருக்கும் சாதியக் கொடுமைகளை மரபுவழி இஸ்லாமியர்கள் யாரும் பகிரங்கமாக எதிர்க்க முற்படுவதில்லை என்பதே பரவலான குற்றச்சாட்டு. 

  தற்போதைய இஸ்லாமியர்கள் சில மாற்றங்களை செய்ய நினைக்கலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் பல சறுக்கல்கள் – உதாரணம்: தமுமுக-வின் புதிய அரசியல் கட்சி மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்கவிழாவிலோ, அழைப்பிதழிலோ ஒரு பெண் பெயர்கூட, பெயரளவுக்குக்கூட இல்லை. 

  மற்ற மதங்களை, அந்த மதம் சார்ந்தவர்களே விமர்சிக்கும்போது ரசிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள், இஸ்லாமிய மதம் (அ) மார்க்கத்தை மட்டும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றாக நினைப்பதுகூட மேற்கூறிய சறுக்கல்களுக்கு காரணமாக இருக்கலாம்.

  • நண்பர் சுந்தர்ராஜன் மற்றும் வினவு அவர்களுக்கு நான் புதிதாஹ இணைந்துல்லேன் இந்த வெளிஈடு குறித்து பல பதில்களையும் படித்தேன், இந்த விவாதம் இஸ்லாம் சம்பந்தப்பட்டதாக இருப்பதினால் சில எனக்கு தெரிந்த தகவல்களை பங்கிட்டுக்கொல்கிறேன். முதலாவது இஸ்லாம் என்பது இறைவனால் அருளப்பட்டது இன்னும் அதை மனிதர் வாழ்வுக்கு ஏற்புடையது என்று நபிகள் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியும் சென்றுள்ளார்கள் அது அல்லாத அனைத்தும் இஸ்லாம் அல்ல என்று திருக்குர்ரான் சான்று பகர்கின்றது. இன்னும் இஸ்லாம் ஒரு குறித்த மொழியிலேயோ அல்லது வர்கதினாற்கோ அருளப்பட வில்லை மாறாக மனித குலத்திற்கு அருளப்பட்டது. இந்த தூய இஸ்லாத்தின்படி இந்த மனித இனம் ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து படைக்கபட்டுள்ளவர்கள் இப்படி எங்கள் இறைவன் கூறும் போது இவுழகில் மனிதனாக பிறந்த நம் போன்ற அறிவிழிகள் கூறும் சாதியத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுத்து இஸ்லாத்தை வம்புக்கு இழுக்குகிரீர். உங்கழுடைய தலைப்பை மாற்றுங்கள் இதுபோல இந்திய முsலீம்களிடம் சாதியம் இருந்து உள்ளது (இப்பொழுது முற்றிலும் maari உள்ளது)

 14. ஐயா இதில் விவாதிப்பவர்கள் அனைவருக்கும்,
  நீங்கள் பெரும்பாலும் மதத்தை அடிப்படையாக வைத்து சமூகத்தை விமர்சிக்கிறீர்கள். இது மிகவும் தவறு. இங்கு எதுவும் மதத்தை வைத்து சமூகம் தீர்மானிக்கப்படவில்லை. ஒரு சமூகத்தில் ஒவ்வொரு மதமுமும் அதன் ஏற்றத்தாழ்வை எப்படி உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் கணக்கிலெடுக்காமல் இதை ஏதோ மனம் சம்மந்தப்பட்டதாகவும், உணர்வாகவும் சித்திரிப்பதை நிறுத்தவும்.

  எந்த மதமும் பெண்ணடிமையை எதிர்த்தது இல்லை. தன் பெண்ணடிமைத் தனத்திற்கு ஏதோ ஒரு வகையில் தன் சமாதானத்தை ஞாயங்களை சொல்கின்றன. அதே போல் எந்த மதமும் விஞ்ஞான முன்னேற்றத்தை ஏற்றுக்கொண்டதில்லை. இவையெல்லாம் மதத்தை மீறியே வந்திருக்கின்றன.

  எந்த மதமும் ஆன்மீக சமத்துவத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழு, சாதி சமத்துவத்தையோ சொல்லியிருக்கலாம். ஆனால் எதுவும் அரசு அதிகாரம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்று கோரவில்லை. எந்த மதமும் சுரண்டலை ஒழிக்கக் கோரவில்லை.

  அப்படி இருந்தாலும் அந்ததந்த மதத்தை எதிர்த்துத்தான் அந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. வெறும் அடையாளங்களையும், சடங்குகளையும் வைத்து விவாதம் நடத்தினால் அது விதண்டாவதம்தான் மிஞ்சும். சமூகத்தில் இன்று இந்தியாவை எடுத்துக்கொண்டால் எப்படி அது அமெரிக்காவின் அடிமையாகவோ அல்லது ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி அடிமையாகவோ சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு எப்படி எல்லா அரசுகளும் சேவை செய்கிறது. எப்படி மக்களை கொள்கிறது என்பதை விளக்க வேண்டியுள்ளது. எல்லா இஸ்லாமிய நாடுகளையும் எடுத்துக்கொள்ளுங்கள், அரசதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி கொலைவெறி அமெரிக்காவிற்கு உதவிசெய்து கொண்டிருக்கிற்து, அதை எதிர்த்து ஒரு குழு இஸ்லாமிய மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகியது. இதில் யார் உண்மையான இஸ்லாமியனாக இருந்தால் என்ன? இந்துவாக இருந்தால் என்ன? இன்று பிரச்சனை அதுவல்ல. உண்மையான இந்துவாக இருந்தாலும், உண்மையாக இஸ்லாமியனாக இருந்தாலும் அவன் மக்களுக்காக இல்லாவிட்டால் அடிமைத்தனத்தை எதிர்க்காவிட்டால் அவன் எப்படி இருந்தால் மக்களுக்கு என்ன? அதனால் சில பேர் நாட்டையே கூட்டிக் கொடுத்து வளரலாம். ஆகையால் யார் மக்கள் நண்பர் யார் மக்கள் எதிரி என்பதை விவாதிக்கலாம். அதையும் மத அடிப்படையில் விவாதிப்பதால் எந்த தீர்வும் ஏற்படப்போவதில்லை.

  இரண்டாவது சாதி அடிப்படையிலான பிரச்சனைப் பற்றி இஸ்லாம் நிலை என்ன என்பதல்ல இங்கு பிரச்சனை. அந்த மதத்தை தழுபவர்களிடத்தில் இஸ்லாம் எப்படி வந்தது என்றுதான் கேள்வி? அதை விடுத்து அவன் உண்மையான இஸ்லாமியனா, இஸ்லாம் அப்படி சொல்லி இருக்கிறதா என்றெல்லாம் விட அது அந்த சமூகத்தில் இன்னும் ஒதுக்கப்பட்ட காலனியாகவும் ஊர் மக்களாகவும் இருப்பதற்கு காரணம் என்ன என்பதே இங்கு கேள்வி. அது இஸ்லாமில் சொல்லாமல் இருந்தால் என்ன? கிருத்துவ மதத்தில் சொல்லியிருந்தால் என்ன? ஏன் அந்த மக்களிடம் அந்த பிரிவினை இருக்கிறது என்பதே.

  1500 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட விஷயங்கள் அப்படியே இருக்கவில்லை. அல்லது அப்படியே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த வளர்ச்சி மனித வரலாற்றின் மேம்பாடு இந்த மதத்தால் வந்ததா? நிச்சயமாக எந்த மதத்தாலும் வளரவில்லை. அது விஞ்ஞானத்தினால் வந்தது. இப்பொழுது என் கேள்வி இப்படி இந்த விஞ்ஞானத்தினாலும், சமூகப் புரட்சியினாலும் வந்த இந்த வளர்ச்சியை ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்துக்கொண்டு தூய்மையான மதம் பற்றி பேசுவதான் வேடிக்கை. இங்கு எல்லோரும் அவரவர் மதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு நேரதிராகத்தான் இந்த விஞ்ஞான சமூக வளர்ச்சியை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். ஆகையால் இன்றைய நிஜம் எது பழைய படிமம் எது என்பதை தெளிவாக அறிந்தாலே இந்த சமூகத்தில் மதம் என்பது வெறும் கருத்துத்தான் (சித்தாந்தம்தான்) ஆனால் அதன் உண்மையான வேர் இந்த சமூகம் எந்த தன்மை கொண்டிருக்கிறது என்பதைப் பொருத்துத்தான்.

  இந்து மதம் பின்பற்றுபவர்களாக இருந்தாலும், கிருத்துவ மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும், இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும் இவையாவும் மாறி மாறியே எவ்வளவோ திருத்தங்களுடனே மாறி வந்திருக்கிறது. இதில் எது தூய்மையானது என்பதை அவரவர்களின் பிரிவினையை (சாதி அடிப்படை, வருண அடிப்படை, இன அடிப்படை, சுன்னி, ஷியா, ஷபி, கேதலிக், புரட்டஸ்டண்ட், பெந்தகோஸ்த் என்று வேறு வேறு வகையில்) இதனை பிரிவுகள் இருக்கக் காரணம் ஏன். எதுவுமே மாறமல் இருக்கவில்லை. அப்படி பார்ப்பவன் வேறு யாருமல்ல குருடன், அதைவிட முரடன் அதைவிட மடையன். இந்த மாற்றம் ஏன் வந்தது என்பதைப் பார்த்தாலே இந்த சமூகத்தின் வளர்ச்சியின் கட்டம்தான் மதத்தை தீர்மானிக்கிறது. பிரிவினையை தீர்மானிக்கிறது.

  ஆகையால் இந்த மாற்றத்தை அங்கீகரித்து இன்னும் எப்படி வளர்ச்சியை கொண்டுவருவது என்பதை தீர்மானிக்கவும். அதை விடுத்து முட்டாள்களின் தத்துவமான கருவாட்டை மீனாக்கவும், கறந்த பாலை மடி புகவும் முயற்சிக்கவேண்டாம்.

 15. இஸ்லாத்தில் சாதி இருக்கிறதா? முஸ்லீம்களின் தவறுகளுக்கு இஸ்லாம் பொறுப்பேற்காதா?

  இஸ்லாம் என்று வந்துவிட்டால் முஸ்லீம்களின் சிந்தனை தட்டையாகிவிடும் என்பதற்கு இங்குள்ள பின்னூட்டங்களே ஆதாரம். முஸ்லீம்களின் தவறுகளுக்கு இஸ்ல்லாம் எப்படி பொறுப்பேற்கும் என்பது ஏற்க முடியாதது. இஸ்லாமிய வேதத்தில் பார்ப்பனீய வேதங்களைப்போல் சாதிப்பிரிவினைகள் இல்லை என வைத்துக்கொண்டாலும் இஸ்லாத்தை முஸ்லீம்களிடமிருந்து தவறுகளின்போது மட்டும் பிரித்துவிட வேண்டுமா? ஒரு நீதிபோதனை நூல் நல்ல நடத்தைகளை கூறுகிறது அதன்படி மக்கள் நடக்கவில்லை அதற்கு அந்த நூல் பொறுப்பேற்க முடியாது என்பதற்கும்; இஸ்லாத்தில் சாதி கூறப்படவில்லை முஸ்லீம்களில் இருக்கிறது என்பதால் அவைகளுக்கு இஸ்லாம் பொறுப்பேற்காது என்பதற்கும் வித்தியாசம் உண்டு. எவ்வாறெனில் ஒரு நீதிபோதனை நூலைவிட இஸ்லாமின் வேதத்திற்கு மதிப்பும் தகுதியும் மிகமிக அதிகம். இது சரியானது என்றால் நீதிபோதனை நூலைவிட வேதத்திற்கு கடப்பாடும் அதிகம் இருக்கவேண்டும் என்பது தானே சரியாக இருக்கமுடியும்? இஸ்லாத்திற்கு பொறுப்பில்லை எனக்கருதினால் நீதிபோதனை நூலுக்குள்ள மதிப்புதான் வேதத்திற்கும் என்று இவர்களின் வாதப்படி பொருளாகும். இதை இவர்கள் ஏற்பார்களா? அடுத்து இஸ்லாமிய சித்தாந்தப்படி மனிதர்களின் (அல்லது முஸ்லீம்களின்) செயல்களை இயக்குவது கடவுளின் விருப்பமேயன்றி மனிதர்களின் விருப்பமல்ல. ஆக மனிதர்களின் சிந்தனைப்படி அமையாத அவர்களின் தவறுகளுக்கு அவர்களை இயக்கிய கடவுளின் புறத்திலிருந்துவந்த(!) மதத்தை பொறுப்பாக்க முடியாது என்பது எந்த விதத்தில் சரியாகும்?

  பார்ப்பனீய இந்துமதத்தின் வடிவத்தில் இருந்தால் மட்டும்தான் அது சாதியாகுமா? இஸ்லாத்தில் அல்லது முஸ்லீம்களிடம் இருக்கும் சாதியின் வடிவம் வேறுவிதமானது. அது தீண்டாமை என்பதில் இல்லாமல் ஒடுக்குமுறை வடிவங்களில் தொடர்கிறது. சுதந்திர உணர்வுகளை எளிய இசைப்பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டுசென்ற பிரிவினர் இன்று பக்கீர் சாயிபுகள் என்ற பெயரில் நோன்பு மாதத்தில் அதிகாலையில் எழுப்பிவிட்டு அதற்குக்கூலியாக நோன்புப்பெருநாளில் துணியும் அரிசியும் பணமுமாய் பெற்று ஏனைய காலங்களில் பிச்சைஎடுக்கும் கூட்டமாய் இருக்கிறது. பள்ளிவாசலில் தோளோடு தொள் நின்று தொழுதுகொள்ள முடியும் என்பதால் மட்டும் இது சாதி இல்லை என்பதாக ஆகிவிடுமா? முடிதிருத்தும் தொழில் செய்யும் முஸ்லீம்களை நாசுவக்குடிகள் என்ற பெயரில் ஒதுக்கி வாரிசுவழி அத்தொழிலை செய்துவருவதில்லையா? வீட்டுக்குள் வந்து விருத்தசேதனத்தையும் அவர்கள் தான் செய்கிறார்கள் என்பதால் சாதி இல்லை என்பதாக ஆகிவிடுமா? தமிழகத்தில் இவைகள் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை என்றாலும் வடமாநிலங்களில் குறிப்பாக உபி யில் சாதிய அடுக்குகள் வெளிப்படையானவை. முஸ்லீம்களின் ஏழ்மைநிலையை வெளிப்படுத்தியதற்காக முஸ்லீம்களால் பாராட்டப்படும் சச்சார் அறிக்கை உபி அர்சால் முஸ்லீம்களின் அவல நிலையையும் பட்டியலிட்டுள்ளது. சன்னி ஷியா பிரிவுகளுக்கு இடையில் கொள்வினை கொடுப்பினை உண்டா? ஷாபி, ஹனபி, ஹம்பலி, மாலிக் பிரிவுகளின் உறவுகளை விளக்க முடியுமா? அரேபியாவில் பொது இடங்களில் கட்டிப்பிடித்து சகோதரத்துவத்தை வெளிப்படுத்திக்கொண்டாலும் கஹ்தானிகளும் அஸ்மரிகளும் தங்களுக்குள் மண உறவு கொள்ளமுடியுமா?

  இஸ்லாமிய வேதமான குரானில் ஒரு அடிமையும் சுதந்திரமானவனும் சமமாகவே முடியாது என்று தெளிவாகவே கூறியிருக்கிறது. முஸ்லீம் அடிமை என்றாலும் நிலை இது தான், இது சாதியத்தின் தொடக்கப்புள்ளி இல்லையா? குரான் அத்தியாயம் அல் பகரா வசனம் 60 “……..அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்துகொண்டனர். அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள் பருகுங்கள். பூமியில் குழப்பம் விளைவித்துத்திரியாதீர்கள்” இந்த வசனத்திலுள்ள ‘ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்துகொண்டனர்’ என்பதன் பொருள் என்ன என்பதை இங்கு பின்னூட்டமிட்டுள்ள நண்பர்கள் விளக்குவார்களா?
  தோழமையுடன்செங்கொடி

  • செங்கொடி சொல்லுவது விமர்சனபார்வையாக இருந்தாலும் சில உண்மைகள் இருக்கின்றன.

   இந்த கட்டுரை சொல்லும் அடிப்படையே தவறானது. இந்திய முஸ்லீம்களிடையே சாதி இருப்பதன் காரணம் பார்ப்பனிய இந்து மதத்தின் தாக்கத்தில் ஏற்பட்டது என்று சொல்வதில் எள்ளளவும் உண்மை இல்லை.

   //இதன்படி, அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்த முஸ்லீம்கள் (சையத்துக்கள், ஷேக்குகள்), அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட அதாவது அஜாமி முஸ்லிம்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்தவர் என உரிமை பாராட்டும் ஒரு ஆண், அஜாமி முஸ்லிம் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால் அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண், அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன், ஜுலாஹா (அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இனப் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால், அன்சாரி, ராயின், மன்சூரி, குøரஷி ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் ஆணும், பத்தான் முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சாதிகள் அனைத்தும் பத்தான்களுக்குக் கீழானவை — இவ்வாறாக இந்த உலேமாக்கள் வாதிட்டனர். ஒருவர் தமது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வதுதான் சாலச் சிறந்தது என்று உலேமாக்களில் பலரும் நம்பினர்.
   //

   இந்த உலேமாக்களுக்கு தெரியாதது, இங்கிருக்கும் நெத்தியடி முஹம்மத் போன்றவர்களுக்கு தெரிந்துவிட்டதா? உலேமாக்கள் ஹதீஸ், குரானின் வழியேதான் ஜாதிகளையும் இனக்குழுக்களையும் அணுகுகின்றனர். அவர்கள் இந்தியாவின் இந்து மதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. கோத்திரங்களையும் பிரிவுகளையும் உருவாக்கியது அல்லாஹ்வே என்று அல்லாஹ் அல்குரானில் தெளிவு படுத்துகிறான். உலக மக்களிலேயே அரபியர் மேலானவர்கள். அவர்களிலேயே மேலானவர்கள் குரேஷிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அறிவித்துள்ளார். மேலும் கீழ்ஜாதி ஆணை திருமணம் செய்யவிரும்பும் பெண் குடும்பத்துக்கு இழுக்கு கொண்டுவருகிறாள் என்றும் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அறிவித்துள்ளார்.

   குரேஷி, அன்சாரி, ஆகிய ஜாதிகள் இந்தியாவின் ஜாதிகள் அல்ல. அவை அரபிய ஜாதிகள். சையதுகள் ஷேக்குகள் ஆகியோர் இந்திய ஜாதியினர் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குரேஷி சாதியை சேர்ந்தவர். மேல் ஜாதி ஆண்கள் கீழ் ஜாதி பெண்களை திருமணம் செய்வது ஹலாலானது. ஆனால், மேல் ஜாதி பெண்கள் கீழ் ஜாதி ஆண்களை திருமணம் செய்வது ஹராமானது. நபிகள் நாயகம் (ஸல்) தன் மகளான பாத்திமா(ரலி)யை பிலாலுக்கு திருமணம் செய்து தரவில்லை. சமமான அந்தஸ்து உள்ள சாதியிலேயே திருமணம் செய்துதந்துள்ளார். ஆனால், அவர் கீழ்ஜாதி பெண்களான பலரை திருமணம் செய்துள்ளார். ஒரு பெண் மாற்று மதத்திலிருந்து வந்தால் அவளை திருமணம் செய்யமுடியாது. அவளை அடிமையாகத்தான் வைத்திருக்க முடியும். அந்த பெண் இஸ்லாமில் சேர்ந்தால் மட்டுமே அவளை திருமணம் செய்யலாம். இதுதான் ஷரியா சட்டப்படியான விஷயம்.

   ஆகவே ஷரியா சட்டத்தை இந்து பார்ப்பன பழக்க வழக்கங்களின் பாதிப்பால் மாறுதலடைந்துள்ளது என்று சொல்வது இஸ்லாமியர்களை அவமானப்படுத்துவதாகும்.

   இன்றும் சவுதி அரேபியாவில் மேல்ஜாதி அரபுப் பெண் ஒருவர் கீழ்ஜாதி அரபு ஆணை திருமணம் செய்யமுடியாது. நிச்சயமாக ஒரு கருப்பின முஸ்லீமை (அப்த்) திருமணம் செய்யமுடியாது. செய்யவும் கூடாது. அப்படி செய்தால், அது ஷரியா சட்டப்படி செல்லாது. ஆகவே இது தெரியவந்தால், கட்டாய விவாகரத்தே வழங்கப்படும்.

   http://www.arabnews.com/?page=1&section=0&article=120152&d=11&m=3&y=2009

   ஆகவே, ஷரியா சட்டம் பார்ப்பன சட்டத்தால் மாறுபாடு அடைந்துள்ளது என்று கூறுவது சரியல்ல.

  • //இஸ்லாமிய வேதத்தில் பார்ப்பனீய வேதங்களைப்போல் சாதிப்பிரிவினைகள் இல்லை

   என வைத்துக்கொண்டாலும் இஸ்லாத்தை முஸ்லீம்களிடமிருந்து தவறுகளின்போது மட்டும் பிரித்துவிட வேண்டுமா?//

   ரொம்பத்தெளிவு.

   • ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான குணங்களில்தான் இருக்கும் .ஒருவன் நல்லவனாகவும் ஒருவன் தீயவனாகவும் வந்தால் அது யார் தவறு ?.அதற்காக தாய் சரியில்லை என்று சொல்ல முடியுமா?வாத்தியார் பிள்ளை மக்கு என்றால் அது யார் தவறு ?? இந்தியாவையே எடுத்து கொண்டாலும் தமிழன் /மலையாளி /கன்னடன் /சீக்கியன் /மராட்டியன்/தெலுங்கன் என்று பிரிந்துதான் இருக்கிறான் .அது இந்தியாவின் தவறா ??மராட்டியன் தமிழ் பெண்ணை மணந்தால் என்ன நடக்கும் ? சீக்கியன் தெலுங்கு பெண்ணை மணந்தால் என்ன நடக்கும் ??நாம் இந்தியன் என்று வாயால் சொல்லிக்கொள்ளலாம் .ஒரு பயலும் இந்தியன் கிடையாது .இன மொழி வாரியாக நாம் பிரிந்து இருந்தாலும் சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம் என்று சொல்லிக்கொள்ளலாம் .ஆனால் சட்டமே பணக்காரன் பக்கம்தான் எப்போதும் .அதற்காக இந்தியா சரியில்லை என்று சொன்னால் பைத்தியக்காரத்தனம் .இஸ்லாத்தை முகம்மது நபி எடுத்து சொன்ன போது அதை எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்று கொண்ட முதல் மூன்று நபர்களில் அலியும் ஒருவர் . தன் மகள் பாத்திமாவை அலிக்கு மணம் முடித்து கொடுத்ததில் என்ன தவறு காண முடியும் ?கம்யூனிசம் பேசும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள் வேடதாரிகளே .வசனம் நன்றாக பேசுவார்கள் .ஆட்சி என்று வந்துவிட்டால் சர்வாதிகாரமே அதன் எல்லை .ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள் .கியூபாவில் காஸ்ட்ரோவை எடுத்து கொள்ளுங்கள் .கிழம் சாகும்வரை ஆட்சியில் இருக்க விரும்புகிறது .அவருக்கு பிறகு அவர் தம்பிதான் வருகிறார் .சீனாவோ சொல்ல தேவையில்லை எல்லாமே அடக்குமுறைதான் .ஆடு மாடைவிட கேவலமாக மனிதர்களை நடத்தும் வேலை வாங்கும் ஈனப்பிறவிகள் .சீனனை வேலைக்கு வைத்து கொண்டால் ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் கூட வேலை வாங்கலாம் என்று கிண்டலாக சொல்லலாம் .எல்லாருக்கும் எல்லாம் பொது என்பதே முட்டாள்தனமான வாதம் .உழைப்பாளியையும் சோம்பேறியையும் ஒரே அளவில் எப்படி வைக்க முடியும் ? நூறு பேரில் இருபது சோம்பேறி என்றால் அவர்களுக்கு யார் உழைப்பில் யார் கொட்டி கொடுப்பது ? நடைமுறைக்கு ஒத்தே வராத ஒரு கேனத்தனமே கம்யூனிசம் .சர்வாதிகாரிகளின் கூடாரம் கம்யூனிசம் .கொள்ளைக்காரர்களின் கூடாரம் முதலாளித்துவம் .நாய்க்கு ரொட்டி போட்டால் வாலை ஆடுவது போல் நமக்கு சுதந்திரம் /ஜனநாயகம் என்ற ரொட்டி.கிடைப்பதை வைத்து சந்தோசப்பட்டு கொள்ள வேண்டியதுதான் .எல்லாவற்றையும் குறை சொல்வது எளிது .மண்ணில் பிறப்பதே சாவதற்குதான் எனும்போது வாழ்வதே தேவை இல்லாத ஒன்றுதான் .சாவதற்குள் மண்ணாசை /பொன்னாசை /பெண்ணாசை /புகழாசை /பதவி ஆசை என்று எத்தனை ஆசைகள் மனிதனை ஆட்டுகிறது ! அவரவர் நம்பிக்கைபடி யாருக்கும் தொந்தரவு தராமல் நல்லவிதமாக வாழ்ந்து மடிவதே நல்லது .அதை விட்டுவிட்டு என் நம்பிக்கை உசத்தி உன் நம்பிக்கை மோசம் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் அடித்துக்கொண்டு சாக வேண்டியதுதான் .

    • //இஸ்லாத்தை முகம்மது நபி எடுத்து சொன்ன போது அதை எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்று கொண்ட முதல் மூன்று நபர்களில் அலியும் ஒருவர்//
     கேள்வியே கேக்கக்கூடாது என்கிறீர்கள்.
     //.ஆட்சி என்று வந்துவிட்டால் சர்வாதிகாரமே அதன் எல்லை .ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள் .//
     ஆமாம். கம்யூனிஸ்டாக இருந்து கொண்டு எப்படி ஜனநாயகவாதியாக இருக்க முடியும்?
     //கியூபாவில் காஸ்ட்ரோவை எடுத்து கொள்ளுங்கள் .கிழம் சாகும்வரை ஆட்சியில் இருக்க விரும்புகிறது .அவருக்கு பிறகு அவர் தம்பிதான் வருகிறார் .//
     காஸ்ட்ரோவின் ஆட்சி எப்படி என்பதை வெளியாளான நீங்கள் சொல்லக்கூடாது. அந்த க்யூபா மக்கள் சொல்லவேண்டும். அவர் ஆட்சி நன்றாக இருப்பதால் தான் இந்தனை வருடம் ஆட்சியில் இருக்கிறார். அவர் கொடுத்ததை போன்ற ஆட்சியை ஏன் ஈரான், ஆப்கான், பாகிஸ்தான், பங்களாஅதேஷ் போன்ற நாடுகளால் கொடுக்க முடியவில்லை (பனக்கார அரபுதேசங்கள் சப்போர்ட் இருந்தும்)?.
     //அவரவர் நம்பிக்கைபடி யாருக்கும் தொந்தரவு தராமல் நல்லவிதமாக வாழ்ந்து மடிவதே நல்லது.//
     🙂

  • அருமை தோழர் அருமை..

   இதே போல் நேர்த்தியாக அம்மதத்தின் உள்முரண்பாடுகளை – எழுதப்பட்ட vs நடைமுறையில் உள்ளது என எடுத்து அவர்கள் முன்னெ வைத்து.. நடைமுறை யதார்த்தத்தின் கேள்விகளில் இருந்து மதம் தனது பொறுப்புகளைக் கைகழுவி விட்டு தப்பித்துப் போவதை தடுக்க வேண்டும்..

   வார்த்தைகளில் கவனம் நன்பர்களே… இது போன்ற மதவாதிகள் விவாதத்தின் போக்கில் அதன் மைய்யத்தை விட்டுவிட்டு ஏதேனும் சில வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்க வாய்ப்புகள் அதிகம்..

  • நெத்தியடி முகமது, தோழர் செங்கொடியின் விமரிசனங்களுக்கு பதிலளிக்கவும்.

   • யாருக்கு பதில்சொல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யக்கூட எனக்கு – என்னளவில் உரிமை இல்லையா, வினவு? அதனை முடிவு செய்து கட்டளையிடுவது, என் மீது நீங்கள் சர்வாதிகாரம் & வல்லாதிக்கம் செலுத்துவது, எந்த தத்துவத்தின் அடிப்படையில்?

    • பாவம் நெத்தியடி முகமது பாகம் – 3

     நியாயப்படுத்த முடியாத தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுவதற்கு இப்படி ஒரு விளக்கம். கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்று கோருவது சர்வாதிகாரம் என்றால் நெத்தியடி முகமது எவ்வளவு பயங்கரங்களுக்கு மத்தியியல் காலம் தள்ளுகிறார் என்பது புரிகிறது. இந்த அவலத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • செங்கொடி அவர்களே, இஸ்லாம் சம்பந்தமாக உங்களின் தேடலைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது. ஆனால், நீங்கள் தீர்மானித்துப் போகும் பாதைதான் தவறாக உள்ளது.

   ஃஃஇஸ்லாமிய வேதமான குரானில் ஒரு அடிமையும் சுதந்திரமானவனும் சமமாகவே முடியாது என்று தெளிவாகவே கூறியிருக்கிறது. முஸ்லீம் அடிமை என்றாலும் நிலை இது தான், இது சாதியத்தின் தொடக்கப்புள்ளி இல்லையா? குரான் அத்தியாயம் அல் பகரா வசனம் 60 “……..அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்துகொண்டனர். அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள் பருகுங்கள். பூமியில் குழப்பம் விளைவித்துத்திரியாதீர்கள்” இந்த வசனத்திலுள்ள ‘ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்துகொண்டனர்’ என்பதன் பொருள் என்ன என்பதை இங்கு பின்னூட்டமிட்டுள்ள நண்பர்கள் விளக்குவார்களா?ஃஃ

   மூசாவின் சமூகத்தார்கள் யார் தெரியுமா? அவர்கள் தான் யாகூபின் 12 பிள்ளைகளின் சந்ததிகளாவார்கள். இவர்களைத்தான் இஸ்ரேலவர்கள் என்பார்கள். இந்த 12 பிள்ளைகளின் சந்ததிகளைத்தான் திருமறைக் குர்ஆன் மேற்கண்டவாறு கூறுகின்றது. நீங்கள் கணித்தமாறு சாதி அடிப்படையில் அல்ல. ஒரு தகப்பனுக்குப் பிறந்த பிள்ளைகளின் சந்ததிகளை எப்படி இஸ்லாம் சாதி அடிப்படையில் பிரித்து அறிவிக்கின்றது எனக் கூறுகின்றீர்கள்?

   சிந்திக்கவும்.

 16. கட்டுரையாளர் மேலே சொன்னது உண்மையாகவே இருக்கட்டும் .அவர் சொன்னது இந்தியாவில் ஆண்ட முகலாயர் ஆட்சி காலத்திலிருந்து முஸ்லீம்களிடம் இன்றும் கூட ஜாதி பார்க்கும் தன்மை இருக்கிறது என்கிறார் ,இருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை .நல்லவேளையாக தமிழ் நாட்டில் முஸ்லிம்களிடம் முன்பு இருந்த ராவுத்தர்/மரைக்காயர்/சாயபு என்று தொழில் சார்ந்த அடையாளங்களை போட்டு கொள்ளும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது .அது தேவை இல்லாத ஒன்று என்ற உண்மையை புரிந்து கொண்டதால்தான் .ஆனால் இந்தியாவில் ஜாதிகள்தான் இந்தியர்களின் அடையாளம் .இந்துமதம் அல்ல .இன்றைக்கும் சாதி மாறி கல்யாணம் செய்தால் கொலை விழுகிறது .இனியும் விழும் .
  கருத்துக்களை பரிமாறி கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் .முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் .

  தவறு செய்பவர்கள் மனிதர்கள் .தவறு செய்யாத மனிதர்கள் என்று எவரும் கிடையாது . ஒருவனுடைய தவறினால் மற்றவர்களுக்கு பாதிப்போ அல்லது இழப்போ ஏற்பட்டிருந்தால்,தவறை செய்தவன் தன தவறை உணர்ந்து வருந்தி பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு அதற்கு பிராயசித்தம் செய்ய விரும்பினால் அதை எந்த மதமும் மதத்தினரும் குறை சொல்ல மாட்டார்கள் .

  ஆனால் இந்தியாவில் மட்டும் ஜாதி வேறுபாட்டை கொண்டு மனித இனத்தை நான் உயர்ந்த ஜாதி நீ தாழ்ந்த ஜாதி என்று பிரித்து மனித இனத்தையே கேவலப்படுத்தும் ஒரு செயலை தவறு என்று ஒப்புக்கொள்ளாதவர்களே உணராதவர்களே அதிகம் .அதை சரி என்று நியாயபடுத்தும் கேவலமான மிருக ஜென்மங்கள்தான் இந்தியர்கள் .சாதிகள் இல்லையென்று சொல்லும் மதங்களான கிறித்துவத்தை நூறு சதவிகிதத்திலும் இஸ்லாமை கொஞ்சம் குறைவாகவும் வளைக்க முடிந்த திறமைசாலிகள் .இந்து மதத்திலோ சொல்லவே தேவை இல்லை.பிறப்பிடம் வளர்ப்பிடம் உறைவிடம் எல்லாமே அதுதான் .அதனால்தான் இந்தியாவில் ஆண்ட முஸ்லிம் மன்னர் முதல் இன்றைய இந்திய மற்ற மாநில முல்லாக்கள் வரை அந்த கேவலமான ஜாதி என்ற வியாதியின் தாக்கம் படிந்திருக்கிறது .தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்ல முடியும் .இந்தியாவில் பல நூறு ஆண்டுகள் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்ய முடிந்ததற்கு அந்த இந்து வியாதியின் சாயலுடன் இருந்ததால்தான் என்றும் கூட சொல்லலாம்.அதை சரியானது தான் என்று ஒரு முஸ்லிமும் சொல்ல முடியாது சொல்ல மாட்டார்கள் .

  ஒரு முஸ்லிம் ஒரே இறைவன் அவன் உருவமில்லாதவன் நிரந்தரமானவன் அவனுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. அவனுடைய இறுதி தூதர் முஹம்மது நபிகள் நாயகம் .இறைவன் ஒருவன்தான் அனைத்து விதமான பாவங்களுக்கும் தண்டனையும் மன்னிப்பும் தரும் வல்லமை பெற்றவன் .ஆனால் தனக்கு இணை வைக்கும் ஒரு குற்றத்திற்கு மட்டும் எந்த மன்னிப்பும் கிடையாது என்று தெளிவாக குரானில் சொல்லி விட்டவன் .இதை ஒப்புக்கொண்டவன் மட்டுமே முஸ்லிமாக இருக்க முடியும் .இதை மீறுபவர்கள் மறுப்பவர்கள் முஸ்லிமாக இருக்க முடியாது .இங்கேதான் பெரும்பாலான மாற்றுமத நண்பர்கள் குழப்பி கொள்கின்றனர் .அல்லது புரியாமல் பேசுகின்றனர் .இந்து மதத்தினரை முஸ்லிம் கல்யாணம் பண்ணினால் என்ன தவறு என்று கேட்கின்றனர் ? மனிதன் தான் உருவாக்கிய எந்த ஒரு சிலையையும் கடவுள் என்று வணங்கும் ஒரு மூடத்தனமான பழக்கம் உள்ள ஒருவனையோ அல்லது ஒருத்தியையோ ஒரே இறைவன் என்ற கொள்கையுள்ளவர் மணந்தால் தன் கொள்கையை மீறுகிறார் அல்லது மறுக்கிறார் என்றுதானே அர்த்தம் .அதற்கு மன்னிப்பே தரமாட்டேன் இறைவன் தெளிவாக அறிவித்து விட்ட பிறகும் .அதனால்தான் மன்னிப்பு கூட கேட்க முடியாத ஒரு செயலை ஒரு முஸ்லிம் ஆணோ பெண்ணோ செய்யும் போது
  சக முஸ்லிம்கள் பதறுகிறார்கள் வேதனைப்படுகிறார்கள்.மனித சட்டத்தில் ஒருவனை கொலை செய்தால் ஒரு முறைதான் தூக்குதண்டனை .நூறு பேரையோ அல்லது லட்சம் பேரை கொன்ற கொடியவனாக இருந்தாலும் ஒரு முறைதான் சட்டத்தால் தண்டிக்க படுகிறான் கொல்லப்படுகிறான் .ஆனால் இஸ்லாமிய தண்டனை சட்டம் வேறு மாதிரி கணக்கு .ஒருவன் ஒரு நல்ல காரியம் செய்கிறான் அந்த காரியத்தால் பலரும் நல்ல பயனடையும்போது அதற்கு பகரமாக அவனுக்கு நன்மைகள் அவனுடைய கணக்கில் ஏறிக்கொண்டே போகும். ஒரு தீமை அல்லது அநியாயம் காரணமாக பலர்பாதிக்கப்படும்போது அதற்கான தீமையின் தன்மைகளும் பலன்களும் அவன் கணக்கில் ஏறிக்கொண்டே இருக்கும் .நூறு கொலை செய்தவனை நூறுமுறை தண்டனை கொடுத்தால்தானே சரி .அது மறுமை தீர்ப்புநாளில் அப்படி கிடைக்கும் என்பதே இஸ்லாமியரின் நம்பிக்கை . எந்த ஒரு செயலுக்கும் (நல்ல செயலோ கெட்ட செயலோ)அதற்கு தன்மைக்கு ஏற்றபடியே கூலி கிடைக்கும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் .

  • எல்லா மதத்து கடவுள்களையும் மனிதன்தான் உருவாக்கினான். அதில் ஒன்று உண்மை மற்றொன்று பொய் என்று ஆகிவிடாது. பாவம், புண்ணியம், கருமவிதி, சொர்க்கம், நரகம் எல்லாம் இந்து மதத்திலும் உண்டு. இதே ஃபார்முலா இசுலாத்திலும் உண்டு என்றால் அதுவும் மூடநம்பிக்கையே. சிலையை வழிபாடு செய்பவர்கள் மூடர்கள் என்றால் தர்காக்களில் இருக்கும் சமாதிகளை வணங்குபவர்களை குண்டு போட்டு கொல்வீர்களா?

   • //சிலையை வழிபாடு செய்பவர்கள் மூடர்கள் என்றால் தர்காக்களில் இருக்கும் சமாதிகளை வணங்குபவர்களை குண்டு போட்டு கொல்வீர்களா?// வினவு, இஸ்லமியர்களில் பலர் குறிப்பாக வகாபி அல்லது ஓர் இறைக் கொள்கையை முழுதாக பின்பற்றுபவர்கள் தர்கா வழிபாட்டை ஏற்றுக் கொள்வது கிடையாது. தர்காவழிபாடு தவறு மறுமையில் தண்டனை கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.
    இணை வைத்தல் பெரும்பாவம் என்று சொல்லப்பட்டு, தர்காவழிபாடு பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எங்க ஊருக்கு பக்கத்தில் நாகூர் தர்காவில் இப்போதெல்லாம் பெருங்கூட்டங்கள் திருவிழாவின் போது கூடுவதில்லை. ஏஆர்ரகுமான் தர்கா வழிபாடு செய்யும் பழக்கம் உடையவர் என்பதால் பல இஸ்லாமிய சகோதரர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து மனம் திருந்த/திரும்பச் சொல்லி இருந்தார்கள்

    • மக்களிடம் உள்ள நாட்டார் மரபின் தொடர்ச்சியே தர்ஹாக்கள். நீங்கள் சொல்வது போல தமிழகத்திலுள்ள தர்ஹாக்களில் எல்லா மதத்தையும் சேர்ந்த சாதாரண மக்கள் வழிபடத்தான் செய்கிறார்கள். இது இசுலாத்திற்கு விரோதமென்பது மேட்டிமைத்தனமான பார்வை. இதனால் ஒன்றும் இந்த மக்கள் வழிபாடு நிற்கப் போவதில்லை.

   • vinavu says : /////சிலையை வழிபாடு செய்பவர்கள் மூடர்கள் என்றால் தர்காக்களில் இருக்கும் சமாதிகளை வணங்குபவர்களை குண்டு போட்டு கொல்வீர்களா?//// —– தோழர் வினவு, இதெல்லாம் உங்கள் மாவோஇஸ (ம.க.இ.க ?) நம்பிக்கை, இதுபோல் மாவோயிசத்திடம் சரணடைந்த முஸ்லிம்கள் (அதாவது வினவிசத்தின்படி, “மாவோயிசத்திடம் சரணடைந்த இஸ்லாம்???)தான் இஸ்லாத்தின் பெயருக்கு கலங்கம் சேர்க்கிறார்கள். இவர்களையெல்லாம் “இடைவிடாத இஸ்லாமிய பிரச்சாரத்தின் மூலமாகத்தான் மனமாற்றம் ஏற்படுத்தி நல்வழிப்படுத்த வேண்டும்” என்பதை (நன்மையை ஏவி தீமையை தடுத்தல்) இஸ்லாம் எங்களுக்கு போதிக்கிறது. எங்களின் விடாமுயற்சியின் பயனாய் என்றாவது ஒரு நந்நாள் உண்மை மேற்படி நபர்களுக்கு விளங்கும் போது அவர்களே இடித்து விடுவார்கள். இவர்கள் மீது உங்களின் “அழித்தொழிப்பு” தத்துவம் உதவாது! அப்படி செய்தால், அவர்களிலிருந்து முஸ்லிம்கள் உருவாக மாட்டார்கள், மாறாக, மேலும் மேலும் பயங்கரவாதிகளே உருவாவார்கள். இவ்வரும்பணியைத்தான் சங்பரிவார்/ஆர்.எஸ்.எஸ். கும்பல் செய்து கொண்டு இருக்கிறார்களே! நாங்கள் வேரு எதற்கு? நாடு ஒரளவாவது நல்லா இருப்பது பிடிக்கலையா வினவு உங்களுக்கு?

 17. அன்பு “வினவு” தலைப்பை மாற்றலாமே…

  “பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!”

  கட்டுரைக்கும் தலைப்பிற்கும்
  பொருத்தமாக இல்லை!

  வினவு மீது பல முஸ்லிம்களுக்கு நல்ல கருத்து உண்டு!

  உங்கள் கொள்கை நிலைப்பாட்டில் இருந்து எழுதியுள்ளீர்கள். விசயமறிந்தவர்கள் வேண்டிய பதில் தரக்கூடும்.
  ஆனால், பொருத்தமற்ற தலைப்பு என்பதுதான் எம் கருத்து!

  இதனை புரிந்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு…

  கடைசியாக…


  மதி இண்டியா,

  இந்தக்கட்டுரையாளர் இசுலாத்தில் சாதி பார்க்கும் பழக்கம் இந்தியாவிலுள்ள இந்து மதத்தின் பாதிப்பு என்பதையும் விளக்கியுள்ளார். எனவே இந்து மதம் தலித்துகளுக்கும், சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் இழைத்திருக்கும் கொடுமைகளை முதலில் நீங்கள் பேசுங்கள். அந்த வகையில் இசுலாத்தை விமரிசிப்பதற்கு முன் உங்கள் வண்டவாளங்களை திரும்பிப் பாருங்கள். அம்மணமாக நடமாடுபவன் கோவணம் கட்டியவனை கேலிசெய்தது போல இருக்கிறது உங்கள் ஆதங்கம்.”
  என மதி இண்டியாவிற்கு நீங்கள் கொடுத்த விளக்கமே நீங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் நோக்கம் இல்லை என்பதையும் அறிகிறோம்!-

  தோழமையுடன் அதிரைpost

  http://www.adiraipost.blogspot.com

 18. இஸ்லாமில் சாதியம் பற்றி ஏற்கனவே தந்தை பெரியார் கூகுள் குழுமத்தில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.
  “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“. (குர்ஆன் 49:13) – மனிதர்களில் இனம், கோத்திரம் ஆகியவற்றை தாமே படைத்தாக குரானில் இறைச் செய்தி இருக்கிறது. இது பற்றிய கட்டுரை
  என்னதான் கடுமையான சட்டங்கள் இயற்றினாலும், ஒரு அரசு சிறப்பான சட்டங்கள் வைத்திருந்தாலும் அவை பயன்படுத்தப்படவில்லை அல்லது மக்கள் அச்சட்டங்களை மதிக்கவில்லை என்றால் சட்டத்தினால் பயன் எதுவும் இல்லை. சிறப்பான சட்டம் இருக்கிறது என்பது வெறும் பெருமை பேசும் செயலாகிவிடும். இவை மதங்கள் வைத்திருக்கும் கொள்கைகளுக்கும் பொருத்தமானவையே, பின்பற்றுபவர்களே கொள்கைகளை மதிக்கவில்லை என்றால் கொள்கைகள் யாருக்காக என்ற கேள்வி எழும்.

 19. //ஒரு தீமை அல்லது அநியாயம் காரணமாக பலர்பாதிக்கப்படும்போது அதற்கான தீமையின் தன்மைகளும் பலன்களும் அவன் கணக்கில் ஏறிக்கொண்டே இருக்கும் .நூறு கொலை செய்தவனை நூறுமுறை தண்டனை கொடுத்தால்தானே சரி .அது மறுமை தீர்ப்புநாளில் அப்படி கிடைக்கும் என்பதே இஸ்லாமியரின் நம்பிக்கை//

  தீமை, நன்மை என்பது இந்த இத்தனை நூற்றாண்டுகளும் அப்படியே இருக்கிறதா. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த சொல்லின் பொருள் அன்று சொல்லப்பட்ட நிலையிலிருந்து எவ்வளவோ மாறியிருக்கிறது. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும். இல்லையென்றால் ஒவ்வொரு மதத்தினுடைய மூல நூலினையும் பல்வேறு தடவை திருத்தி வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.

  சரி தவறு செய்பவர்களை மறுமை தீர்ப்புநாளில் கிடைக்கும் என்று கூறும் கூற்று வெட்கப்பட்ட வேண்டியது. அது எல்லா மத்திலும் இருக்கிறது. இது தான் மக்களை அடிமையாக்கும் கருவி.

  எல்லா அரசுகளுமே இன்று ஒடுக்கி அது இஸ்லாம் அடிப்படைவாதத்தை வைத்திருக்கும் அரசாக இருந்தாலும், அடக்கி ஒடுக்கி மக்களை தன் நிலையிலிருந்து ஒடுக்கி சுரண்டுகிறார்கள். இந்த சுரண்டலை ஒழிக்க எந்த மதமும் தயாரில்லை. மக்களுடைய பெரும்பாண்மை மக்களுடைய வாழ்க்கை நிலையை உயர்த்த, குறைந்தபட்சம் ஒரு அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளக் கூடிய அந்த வாழ்கைத் தரத்தை உருவாக்கிக்கொடுக்க எந்த மதமும் தயாரில்லை. அதனால் எப்படி முடியும். இம்மையில் உணவின்றி, மருத்துவமின்றி வாழும் நரக வாழ்க்கையில் இருக்கும் மக்கள் மறுமையில் சொர்க்கம் கிடைத்து என்ன செய்யப் போகிறார்கள். அவர்களுக்கு மறுமையிலும் நரகமே இருந்தாலும் என்ன? ஆனால் அப்படி வாழும் மக்கள்தான் உண்மையில் மனிதாபிமானத்தோடு வாழ்கிறார்கள். ஆனால் நம்மை ஒடுக்கும் அரசுகள், நம்மை ஏறிமிதிக்கும் சுரண்டல்காரர்கள் எல்லாம் இங்கு சொர்கத்தில் வாழ்கிறார்கள். மறுமையில் என்ன ஆனார்கள் என்று நீங்கள் எல்லாம் அந்த புத்தகத்தில் பார்த்து சமாதானம் ஆகிறீர்கள். அவ்வளவே.

  உங்களைப் பொருத்தவரையில் அவர்களை இம்மையில் ஒழிக்க வழிகோல சொல்லித்தரவில்லை. நீங்கள் இப்படியே அரை பட்டினாயகவும், உங்கள் பிள்ளைகள் நோய்நொடியோடும், ஒதுங்கக் கூட குடிசை இல்லாமல் வாழுங்கள், பரவாயில்லை உங்களை சுரண்டுபவர்களை உங்களை ஒடுக்குபவர்களை எதிர்த்து போராடாதீர்கள் என்று கற்றுத்தருகிறீர்கள். நீங்கள் இறை துதருக்கு பிரச்சாரகரா அல்லது இங்குள்ள சுரண்டல்காரர்களுக்கு ஏஜண்டா. நீங்கள் இங்கு கொலைவெறி, அடிமைசெய்யும் ஆட்களுக்கு கங்கானியா. மக்களை இம்மையில் இவ்வுலகில் அமைதியாக வாழுங்கள் நீங்கள் கடவுளிடம் சேருவீர் என்று சொல்வதின் மூலம் எதை சாதிக்கப் போகிறீர்கள்.

  கோவி.கண்ணன் அவர்கள் //ஒரு அரசு சிறப்பான சட்டங்கள் வைத்திருந்தாலும் அவை பயன்படுத்தப்படவில்லை அல்லது மக்கள் அச்சட்டங்களை மதிக்கவில்லை என்றால் சட்டத்தினால் பயன் எதுவும் இல்லை.// என்று கூறுகிறார். இவர் எதை சிறப்பான சட்டம் என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. இங்குள்ள சட்டம் சராசரி பொதுமக்களானதா அல்லது இங்குள்ள ஆட்சியாளர்கள் தங்கள் சுரண்டலை, தன் அதிகாரத்தை தக்கவைத்துகொள்வதற்கானதா. இந்த வித்தியாசம் தெரியாமல் மக்கள் அதை மதிக்கவில்லை என்கிறீர்கள். ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடுவதின் ஒரு பகுதிதான் அந்த சட்டத்தை மதியாமல் அதை மாற்ற போராடுவது என்பது பொருள்.

  இதே போல்தான் மதமும். எல்லா மதமும் சுரண்டலை ஆட்சியாளர்களின் சுரண்டலை ஞாயப்படுத்துகிறது. எல்லா மதமும் இம்மையில், இன்றைய உலகத்தில் உள்ள வளமான வாழ்வை பெற போரடுவதற்கு மறுக்கிறது. ஆனால் மதம் மாறுவதை எதிர்க்கிறது. மக்களை சிந்தனை ரீதியான அடிமையாக ஆட்சியாளர்கள் வைத்துக்கொள்வதற்கு, அடிமையாக்குவதற்கு மதம் பயன்படுகிறது அதன் சித்தாந்தங்கள் பயன்படுகிறது. ஏன் என்றால் அது இன்றைய உலகத்தில், இம்மையில் சுரண்டல்காரர்களை எதிர்த்துப் போராடுவதை பாவம் எண்கிறது. கடவுள் பார்த்துப்பார், உங்களை மறுமையில் ஒரு சொர்க்க வாழ்க்கை கொடுக்கிறேன் என்று சிந்தனை ரீதியாக அடிமையாக வைத்துக்கொள்கிறது. அப்படி சிந்தனை ரீதியான அடிமைக்கு உட்படாதவர்களை இராணுவம் போலீசு கொண்டு உடல் ரீதியாக துன்புறுத்தி அடக்கி ஒடுக்குகிறது. இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல.

  இந்துமதம் வேத மதம், ஆகம மதம், வேதாகமம் மதம் என்று மாறியிருக்கிறது. இது சமூக மாற்றத்திற்கு ஏற்றவாறு தன்னையும் மாற்றிகொண்டு ஆள்பவர்களை ஆதரித்தும் மக்களையும் ஒடுக்கி வந்திருக்கிறது. அது போல் சமூகம் எந்தளவுக்கு ஜனநாயகத் தன்மை இருந்திருக்கிறதோ அந்தளவுக்கு மதமும் ஜனநாயகத் தன்மை அடைந்திருக்கிறது. மதம் அரசு இல்லாமல் அதிகாரம் இல்லாமல் சொத்து இல்லாமல் மடம் போன்று சொத்துக்களுடன் இயங்கமால் அதனால் நிலைத்து நிற்க முடியாது. எந்த மதமும் சொத்தில்லாம் வழிப்பாட்டு முறைமட்டும் வைத்துக்கொண்டில்லை. இதை மறந்து பேசுவது உங்கள் பேதமை. ஆகையால் சிறப்பான சட்டம் அதை மக்கள் பின்பற்றுவதில்லை என்பதெல்லாம் வெத்து வேட்டுக்கள். மக்களின் அடிப்படை வாழ்க்கையை தீர்மானிக்கும் அரசுக்கு தனக்கு தேவையானதை எப்படி சிந்தனை ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ ஒடுக்கத் தெரியும். மீண்டும் சொல்கிறேன் எல்லாம் மதத்தால் படைக்கப்பட்டது, எல்லாம் மதத்தாலே மாறும் என்பதும், அதை இப்போதே ஒழித்தால்தான் எல்லாம் மாறும் என்பதும் கற்பனாவாதமே அன்றி வேறல்ல. சமூகத்தை சமத்துவமாக்குவோம், சுரண்டலற்றதாக மாற்றுவோம். அதற்கு எது தடையாக இருந்தாலும் அதை அகற்றுவோம்.

 20. இந்த மன்னர்களுக்கும் மேட்டுக்குடி ஆளுங்கும்