டெண்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி!

  127

  சச்சின் டென்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி

  vote-012தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவை பார்ப்பனியத்தின் சாதி அமைப்பு, கிரிக்கெட் மோகம் என இரண்டு விசயங்கள் வலிமையாக இணைக்கின்றன. ஒன்று நிலப்பிரபுத்துவம் என்றால் மற்றது முதலாளித்துவம். இரண்டுக்கும் இரண்டு நாயகர்கள் ஒரு பிராண்டு மதிப்புடன் இந்தியாவெங்கும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனியத்திற்கு ராமன், முதலாளித்துவத்திற்கு டெண்டுல்கர்.

  ராமனுக்கு கோவில் என்று பாபர் மசூதியை இடித்து ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ( இன்றைக்கு இந்தப் பருப்பு வேகவில்லை என்பது வேறுவிசயம்). ஆனால் முதலாளிகளால் முன்னிறுத்த்தப்பட்ட டெண்டுல்கரால் நுகர்வு கலாச்சாரப் பொருள்களின் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த முதலாளிகள் இன்றைக்கும் இந்த நட்சத்திர நாயகனுக்கு ஒளிவட்டம் போட்டே வருகிறார்கள்.

  அதிலொன்றுதான் சச்சினின் இருபதாண்டு கிரிக்கெட் வாழ்க்கை. ஊடகங்கள் இதையே பல்வேறாக வியந்தோதி மாய்ந்து மாய்ந்து எழுதின, காட்டின. இந்த ஒளிவட்ட அத்தியாத்திற்கு ஏதாவது பேட்டி கொடுக்க வேண்டுமென்ற சடங்குப்படி சச்சின் சில வாக்கியங்களை கடமைக்காக உதிர்த்தார். அதிலொன்றும் புதுமையில்லை. “நான் மராட்டியன் என்பதற்கு பெருமைப்படுகிறேன், ஆனால் முதலில் நான் இந்தியன், மும்பை மாநகரம் எல்லா இந்தியர்களுக்கும் சொந்தமானது” இவைதான் நட்சத்திர நாயகன் உதிர்த்த தத்துவ முத்துக்கள். காலணாவுக்கு பிரயோசனமில்லாத இந்த வாக்கியங்களை பயங்கரமான அரசியல் சவடால்களாக ஊடகங்கள் கட்டியமைத்தன. அதற்கு உகந்த விதத்தில் காலாவதியான கிழட்டு நரி பால்தாக்கரே சில கருத்துக்களை சச்சினுக்கு எதிராக உதிர்த்தார்.

  “சச்சின் தேவையில்லாமல் ஆடுகளத்திலிருந்து அரசியலுக்குள் நுழைகிறார். மராட்டியர்களுக்கு சொந்தமான மும்பையை இந்தியர்களுக்கு என்று சொன்னதால் அவர் மராட்டிய இதயங்களில் ரன் அவுட்டாகி விட்டார். மும்பையை பெறுவதற்காக 105 மராட்டியர்கள் உயிர் தியாகம் செய்திருக்கின்றனர். அந்தப் போராட்டம் நடைபெறும்போது அவர் பிறக்கக்கூட இல்லை.” இவைதான் வேலைவெட்டியில்லாத கிழடு பால்தாக்கரே சொன்ன பதிலடி.

  இதை வைத்து சச்சின் மதவெறி, இனவெறி அமைப்புகளுக்கு எதிராக பெரும் போர் நடத்துவது போன்று ஊடகங்கள் பில்டப் கொடுத்தன. இந்த பில்டப்பில் மாதவராஜூம் சரண்டராகி நாயகனுக்கு தாங்கமுடியாத பாராட்டு பத்திரங்களை அள்ளி வீசுகிறார். வேறு எந்தப் பதிவர்களெல்லாம் இந்த ஜோடனையில் மனதை பறிகொடுத்தார்களோ தெரியவில்லை. அது என்னவோ போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும், நமக்கும் எல்லா பிரச்சினைகளிலும் மலையளவு வேறுபாடு இயல்பாகவே வருகிறது. போகட்டும். விசயத்திற்கு வருவோம்.

  பால்தாக்கரேவின் சிவசேனா இயக்கம் தனது ‘வரலாற்றுக்’ கடமைகளை முடித்துவிட்டு, அதாவது இனவெறி, மதவெறிக் கலவரங்களை நடத்தி ஆட்சியைப் பிடித்து, இப்போது சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்து அய்யோ பாவம் என நாதியற்று கிடக்கிறது. பிரிந்து போன மருமகன் ராஜ்தாக்கரே சம்சா விற்கும் பீகாரி மக்களை மிருகத்தனமாக அடித்து தான்தான் மராட்டியர்களின் சேம்பியன் என சில சில்லறைகளை வைத்து காட்டிக்கொண்டார். அதன் தொடர்ச்சிதான் சட்டசபையில் இந்தியில் பதவிப்பிராமணம் எடுத்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபுஆஷ்மியைத் தாக்கி ரகளை செய்தது.

  வளர்த்த கடா மார்பில் பாய்வது ஒரு புறம் என்றால் எந்த இனவெறியை வைத்து அரசியல் ஆதாயம் செய்தோமோ அதையே மருமகப்பிள்ளை அப்பட்டமாக போட்டிக்கு செய்வதை தாக்கரேவால் தாங்கமுடியவில்லை. இனவாதம் மராட்டியத்தில் இனிமேலும் எடுபடாது என்றாலும் அதற்கும் போட்டி என வந்து விட்ட பிறகு தாக்கரேவும் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. இச்சூழலில்தான் டெண்டுல்கரின் ஒண்ணுமில்லாத விசயத்திற்கு தாக்கரே பதிலடி கொடுத்து தான்தான் மராட்டியர்களின் நாட்டாமை என காட்டுவதற்கு முயன்றார்.

  70களில் மும்பையில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கை முறியடிக்க காங்கிரசாலும், முதலாளிகளாலும் வளர்த்து விடப்பட்ட இனவெறி சிவசேனா இப்போது முதலாளிகளுக்கு தேவைப்படவில்லை. போலிக் கம்யூனிஸ்டுகளும் தங்கள் செயல்பாடுகளால் முதலாளித்துவத்தை வெளிப்படையாக ஆதரிக்தகும் நிலைமைக்கு முன்னேறியிருக்கிறார்கள். இதுபோக  மராட்டிய மக்களும் பெரும்பான்மையாக இனவெறிக்கு  முன்பு போல ஆதரவு தருவதில்லை. இப்படி ஒரு சூழலில்தான் தாக்கரே எதாவது அவ்வப்போது பேசி நானும் உள்ளேன் ஐயா என்று காட்ட வேண்டியிருக்கிறது.

  ஆனால் டெண்டுல்கரின் சூழலோ வேறுமாதிரி. கிரிக்கெட்டில் தனது ஆட்டத்தால் பிரபலமான அவரை முதலாளிகள் இந்திய அளவில் ஒருவெற்றிகரமான பிராண்டாக மாற்றி விட்டு ஆதாயம் பார்த்துவிட்டார்கள். சச்சினுக்கும் கிரிக்கெட் மூலம் வந்த வருவாயை விட விளம்பரங்கள் மூலம் வந்த வருவாய்தான் பல நூறு கோடிகள் இருக்கும். இப்படி தன்னை ஒரு பில்லியனராக மாற்றியது இந்திய அளவிலான சந்தை என்பதும் அவருக்கு புரியாத ஒன்றல்ல. அதனால்தான் தான் முதலில் இந்தியன் அப்புறம்தான் மாரட்டியன் என்று அவர் சொல்கிறார். அவரது இந்தியப் பற்றின் பின்னே ஒளிந்திருப்பது இந்தியாவின் நுகர்பொருள் சந்தையின் மதிப்பு.

  காரணம் அவருக்கு மாபெரும் வருவாய் அளித்தது மராட்டிய இனமல்ல, இந்திய மக்கள். இந்திய அளவிலான புகழே அவரது பிராண்டு மதிப்பை பல மடங்கு உயர்த்தியது. இந்திய அளவிலான ரசிகர்களின் செல்வாக்கே சச்சினது மதிப்பை முதலாளிகளின் உலகத்தில் கொண்டு போய்சேர்த்தது. அவரது உடலில், உடையில் எல்லா பன்னாட்டு நிறுவனங்களது முத்திரையும் உள்ளன. அவர்   பெப்சிக்கும், அடிடாசுக்கும் மாய்ந்து மாய்ந்து போஸ் கொடுப்பதன் பொருள் என்ன?

  மற்றபடி இந்த நாட்டின் ஜீவாதாரமான பிரச்சினைகள் எதற்கும் அவரிடமிருந்து ஒரு சொல் கூட அல்லது ஒரு சொட்டு கண்ணீர் கூட வந்ததில்லை. முக்கியமான பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்ட அவரது திருமணத்தின் வி.ஐ.பியே பால்தாக்கரேவின் குடும்பத்தினர்தான். அதற்கு முன்னர்தான் மும்பையில் பலநூறு முசுலீம் மக்களைக் கொன்று சிவசேனா பெரும் கலவரத்தை முடித்திருந்தது. அந்த அநீதிக்காக கோபம் கொண்டிருந்தால் தாக்கரேவை எப்படி தனது திருமணத்திற்கு அழைத்திருக்க முடியும்? அப்போது மட்டுமல்ல பாபர்மசூதி இடிப்பை பற்றியோ, குஜராத் இனப்படுகொலை பற்றியோ, அல்லது விதர்பாவில் கொத்து கொத்தாய் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை பற்றிய இந்த இந்திய தேசபக்தர் ஒரு சொல் கூட சொல்லாதது மட்டுமல்ல அந்தக்காலங்களில் பன்னாட்டு முத்திரைகளுடன் கூடிய தனது உடையில் அகமதாபாத்திலும், மும்பையிலும் பவுண்டரி, சிக்சர்கள் அடித்து தனது நாயக இமேஜை கூட்டிக் கொண்டிருந்தார்.

  இதுதான் டெண்டுல்கரின் தேசபக்தி எனும்போது அதை காறி உமிழ்வதை விடுத்து அவருக்கு புகழாரம் சூட்டுவதைத்தான் சகிக்க முடியவில்லை. டெண்டுல்கர் தனது வருவாய்க்கு விசுவாசமாக இருக்கிறார். அது முதலாளிகளின் கைக்குள் இருக்கும் இந்தியாவின் தேசபக்தி. மாறாக இந்திய மக்களின் இரத்தமும், சதையுமாய் இருக்கும் இந்திய மக்களது வாழக்கையோடு தொடர்புள்ள தேசபக்தியல்ல.

  இந்துமதவெறியை எதிர்த்து எத்தனை அமைப்புகள், தனிநபர்கள் போராடி வருகிறார்கள்? அவர்களுக்கெல்லாம் இல்லாத விளம்பரம் ஒரு வாக்கியத்தை சொன்ன சச்சினுக்கு கிடைக்கிறது என்றால் இந்த நாட்டில் இந்துமதவெறியர்கள் யாரும் வெல்ல முடியாது என்றே அர்த்தம். ஏற்கனவே தோற்றிருக்கும் தாக்கரேவுக்கு எதிராக மாபெரும் போராளியாய் டெண்டுல்கரை நிறுத்துவதிலிருந்தே ஊடகங்களின் யோக்கியதை தெரிகிறதல்லவா? ஊடகங்களுக்கும் விளம்பரங்களின் வழி வரும் வருவாய்க்கு சச்சினும் காரணாமாக இருக்கிறார் என்பதால் அப்படி தாங்கமுடியாத அளவிற்கு சச்சினே வெட்கப்படுமளவுக்கு ஊதிப்பெருக்குகிறார்கள்.

  டெண்டுல்கரை வைத்துத்தான் இந்திய தேசபக்தி அளவிடப்படும் என்றால் இந்தியாவை எந்த ‘கடவுளாலும்’ காப்பாற்ற முடியாது.

  vote-012

  தொடர்புடைய பதிவுகள்

  சந்தா செலுத்துங்கள்

  ஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்!

  127 மறுமொழிகள்

  1. //டெண்டுல்கர் தனது வருவாய்க்கு விசுவாசமாக இருக்கிறார். அது முதலாளிகளின் கைக்குள் இருக்கும் இந்தியாவின் தேசபக்தி. //

   ரொம்ப சரி

  2. http://www.youtube.com/watch?v=OVReet6b2ks

   இந்தக் காட்சிகளை பார்த்து விட்டு ‘நான் ஒரு இந்தியன்’ என்று சொல்லிக் கொள்வதில் டெண்டுல்கர் பெருமை படுவாரா? இல்லை அவருடைய ரசிகர்கள் தான் பெருமை படுவார்களா? அவர்களுக்கே வெளிச்சம்.

   • அண்ணா மும்பைக்குள்ள வேறு யாரும் இருக்க கூடாதுன்னு இந்தியன் பல் தாக்கரே சொல்லுரார் அது எப்படி ? மும்பை வேற நாடா? நம்ம காஷ்மீர்ல இடம் வாங்க முடியாதாமே   அப்போ அது? அஸ்ஸாம் பக்கம் போகமுடியதமே  சிக்கிம் ல சம்பளத்துல 5% எல்லாரும் காவல்துறை அதிகாரி கூட அங்குள்ள இயக்கத்துக்கு கமிசன் கொடுக்கனுமமே அது அப்போ இந்தியாவா?இன்னும் இந்திய பிரதமேரே செல்லமுடியாத  இடங்கள் நிறைய இருக்குது அண்ணா அப்புறம் இந்தியன்னு சொல்லமுடியும் வெளிநாடு போயிட்டு வந்தால் கூட ஒரு நாட்டுக்கு போயிட்டு வந்த மாதிரி தான் இருக்கும் ஆனால் இந்திய முழுவதும் போயிட்டு வந்தால் ௩௫ நாட்டுக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கும் அண்ணா 

  3. லெனின்,

   இதுவரை எந்த செய்தியிலுமே வந்ததில்லையா, இல்லை நான் பார்க்கவில்லையா? கொடுமை.

   என்ன புடுங்கிட்டிருக்கு இந்த அரசாங்கமும், நீதிமன்றங்களும்? இந்த மயிருக்கு இந்த நாட்டுக்கு ஜனநாயகம் ஒரு கேடு. நாசமா போவானுங்க.

   ஒரு நாய் அடிபட்டா மட்டும் உடனே அந்த புளூ க்ராஸ் நாய்ங்க வந்துடுவானுங்க. அந்த ஹட்ச் விளம்பர நாய ஓட வெச்சு கஷ்டப்படுத்திட்டாங்கன்னு என்ன பிரச்சன பன்னினானுங்க. அந்த நாய்ங்க எல்லாம் எங்க போனாங்க?

   வாயில அசிங்க அசிங்கமா வருது. தே…பசங்க…

  4. Vinavu let me know, As of now who is the best in our country..

   வேற யார்?ஹூ ஜின்டாவ்,வர வர ராவ்,போக் போக ரெட்டி,தோழர் மருதையன்,வினவு.இவங்க தான் நம் நாட்டின் சிறந்த குடி மகன்கள்

  5. நான் மணி

   மும்பை நட்சத்திர விடுதியின் மீது தீவிரவாதிகள் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து கருத்து சொன்ன டெண்டுல்கருக்கு மும்பையின் அரசு ஹோட்டல் ஒன்றை தரகுமுதலாளிகள் குறைந்த விலைக்கு வாங்கி உடனடியாக நல்ல லாபத்துடன் கைமாற்றியது கண்ணில் படவில்லை.

   க‌டந்த ஆண்டுநடந்த மும்பை நட்சத்திர விடுதி மீதான தாக்குதலுக்கு அடுத்த கிரிக்கெட் போட்டியில் ஒரு வர்க்கம ஃஎன்ற முறையில் அஞ்சலி செலுத்த தெரிந்த டெண்டுல்கருக்கு அவர் அணியும் பருத்தி ஆடைகளுக்கான பருத்தியை உற்பத்தி செய்த அவரது மாநிலத்தை மும்பைக்கு அருக்இல் உள்ள விவசாயிகளே இலட்சக்கணக்கான பேர் வாழ வழியில்லாமல் தற்கொலை செய்த்து தெரியாதா.. அந்த விவசாயிகள் மராட்டியர் இல்லையா.. இந்தியர் இல்லையா…

   அந்த விவசாயிகளின் துயரத்தை தி ஹிந்து பத்திரிக்கையில் பத்திரிக்கையாளர் சாய்நாத் தகுந்த ஆதாரங்களுடன் எழுதி ஒரு கல்லுளிமங்கன் பிரதமரே வந்த பிறகும் வாய் இன்றுவரை திறக்காத டெண்டுல்கரை மனித ஜெனம்மாக எப்படிக கருதமுடியும்

   • நான் மணி இல்லை. மணிகண்டன்.

    நீங்கள் கூறி இருப்பது உலக மக்கள் அனைவரின் சிந்தனையும் தூண்டுவதாக இருக்கிறது மணி. ஏன் சச்சின் இதை புரிந்துக்கொள்ளவில்லை ? துரோகி சச்சின் :)-

    வினவு குழுமத்தின் ஒரு சில பதிவுகள் நன்றாக இருந்தன / இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கிறேன். ஆனால் அவ்வப்பொழுது ஹிட்ஸ்க்காக ஒரு சில ஜிமிக்ஸ் செய்யவேண்டி உள்ளதோ ? அட்லீஸ்ட் மாதவராஜ் அவர்களுக்கு நீங்கள் உங்கள் நன்றியை கூறலாம். (உன்னைப் போல் ஒருவன், தீபாவளி, சச்சின் – மூன்று பதிவுகளுக்கு ஐடியா கொடுத்து இருக்கிறாரே)

    • மணிகண்டன், FYI, மேலை காணும் கிராபிக்சு 3-4 ஆண்டுகளுக்கு முன்னரே ம.க.இ.க வினர் நடத்திய கொக்கோ கோலாவுக்கு எதிரான ஓவியக்கண்காட்சியில் இடம் பெற்றது.

     இந்த பதிவு மட்டுமல்ல எல்லா பதிவுமே ஹிட்சுக்குத்தான் எழுதப்படுகின்றது. யாருமே இல்லாத கடையில டீயாத்த நாங்க என்ன ****?

     மாதவராஜை விட நாம் சச்சினை பெற்றவர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

     சச்சினை சிறந்த கிரிக்கெட் மட்டைக்காரர் என்று யாராவுது சொன்னால் மறுக்க முடியாது ஆனால் அவரை போய் தேச பக்தர் என்று பில்டப் கொடுத்தால் அதைவிட சிறந்த காமிடி உண்டா?

     உங்களுக்கு பதிவின் கருத்துக்களில் விமரிசனம் இருந்தால் அதை எழுதவும், மெக்கை பின்னூட்டங்கள் போடத்தான் 100 தளம் இருக்கிறதே 🙂 இங்கேயாவது கொஞ்சம் சீரியசா…. பிளீஸ்….

     • பின்னூட்டம் எழுத தோன்றினால் நான் எழுதுவேன். பிடித்தம் இருந்தால் வினவு வைத்துக் கொள்ளலாம் இல்லையென்றால் எடுத்துவிடலாம் !! எனக்கு மகா மொக்கை பதிவாக தோன்றினால் மொக்கை பின்னூட்டம் தான் வரும். :)-
      இந்த இந்தியன் / மும்பைக்காரன் கருத்து சச்சின் ஒரு கேள்விக்கு பதிலாக கூறினார். அவர் உடனே அதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள பருத்தி ஆலை விவசாயிகள் குறித்து பதில் சொல்ல வேண்டும் என்று “நான் மணி” எதிர்ப்பார்க்கிறார். அது எனக்கு சிரிப்பாக இருந்தது. சச்சின் ஒரு சாதாரண மட்டையாளர். அவர் என்ன புரட்சியாளரா ? :)- இந்த பதிவு / மணியின் பின்னூட்டம் பில்ட் அப் கொடுத்தவர்களை விமர்சனம் செய்வதை விட சச்சினை விமர்சனம் செய்வதே அதிகம். புரிகிறதா ?

      அடுத்தது – உங்களின் கருத்தை வினவின் கருத்தாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.

     • //இந்த பதிவு / மணியின் பின்னூட்டம் பில்ட் அப் கொடுத்தவர்களை விமர்சனம் செய்வதை விட சச்சினை விமர்சனம் செய்வதே அதிகம். புரிகிறதா ?//

      இல்லை உங்கள் கருத்து எனக்கு ஏற்புடைய்தல்ல. சச்சினுடைய கருத்துக்கும் தேசப்பற்றுக்கும் தொடர்பில்லை என்பதைத்தான் கருத்தும், கருத்துப்படமும் சொல்கிறது.

      //அடுத்தது – உங்களின் கருத்தை வினவின் கருத்தாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.//

      என் கருத்து என் கருத்துதான் அதை ஏன் நீங்கள் வினவின் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும்? புரியவில்லை?

     • ***
      யாருமே இல்லாத கடையில டீயாத்த நாங்க என்ன ***

      பன்மையில எழுதி இருந்தீங்க ! அதுனால அப்படி புரிஞ்சிக்கிட்டேன்.

      அடுத்தது மற்றுமொரு கேள்வி – ஊடகத்தில் இப்படி ஒரு கேள்வி கேட்கப்படும் போது சச்சின் சொன்ன பதிலில் அப்படி என்ன குளறுபடி கண்டீர்கள் ! அவர் தேசத்தின் நாயகனாக இருக்கவேண்டாம். அட்லீஸ்ட் ஒரு பால் தாக்கரே போன்ற பிரிவினைவாதம் பேசாமல் இருந்தாரே. அதில் என்ன பிரச்சனை ? அவர் என்ன பதில் சொல்லி இருக்கவேண்டும் ? மராத்தி தான் முக்கியம் என்றா ?

     • இந்த பதிவிலேயே சொல்லியிருப்பது போல
      @@@காலணாவுக்கு பிரயோசனமில்லாத இந்த வாக்கியங்களை பயங்கரமான அரசியல் சவடால்களாக ஊடகங்கள் கட்டியமைத்தன. @@@

      இதுதான் என் கருத்து. மற்றபடி அவர் விரும்பியிருந்தால் கூட அவர் மராத்திதான் முக்கியம் என்று சொல்லியிருக்க முடியாது. அதர்காண காரணங்களும் பதிவில் விளக்கப்பட்டுள்ளன.

      மீடியாவின் சவடாலும் அதை வைத்து சச்சின் மேல் கட்டப்படும் தேசபக்தி பில்டப்பையும் உடைப்பதுதான் பதிவின் நோக்கம், அதை செய்திருக்கிறது என்று தான் நான் நினைக்கின்றேன்.

      உங்கள் கருத்து என்ன சச்சின் உண்மையிலேயே பிரிவினைவாதத்துக்கு எதிரானவர், தேசப்பற்றாளர் என்றா? அதுவும் இல்லை என்று பதிவில் விளக்கப்பட்டுள்ளது.

      பால்தாக்கரேவின் கருத்துக்கு காரணம் – அதுவும் உண்டு.

      இப்படியாக பண்முகத்தன்்மையோடு ஒரு பிரச்சனையை அணுகி அதிலுள்ள உண்மைகளை எடுத்தியம்பும் பதிவை நீங்கள் மொக்கை என்று கருதுவது ஏன்? இதில் உள்ள கருத்துக்களோடு நீங்கள் எதில் வேறு படுகிறீர்கள். அதையே விவாதிக்கலாமே…

      @@@நாங்க@@ அதை ஒரு தோழையுடன் குறிப்பிட்டேன்… மற்றபடி என் கருத்து என்னுடைய கருத்துதான்

     • கேள்விக்குறி – வினவின் பதிவில் பலமுறை வினவு சொல்லிவருவது என்னவென்றால் வினவின் தோழர்கள் நடைமுறையில் ஒரு பிரச்சனையை அணுகும்போது வினவின் பதிவில் பதில் எழுதும்போது இருக்கும் அதே பாங்கில் செயல்படமாட்டார்கள். அங்கங்கு உள்ள மக்களுடன் எப்படி பிரச்னையை கையாலவேண்டுமா அப்படியே செயல்படுவார்கள் என்று. அதே போன்று வடஇந்திய டாக்ஸி ஓட்டுனர்களை அடித்தும் / விரட்டியும் வரும் இந்த சூழ்நிலையில் சச்சினின் இந்த பதில் தைரியமான பதிலாகவும் / எனக்கு  சந்தோசம் அளிக்கும் பதிலாகவும் தெரிகிறது.  சூழ்நிலைக்கு ஏற்ற பதிலாகவும் தெரிகிறது. சொல்லப்பட்டு இருக்கும் உள்ளர்த்தங்களை யோசித்து அவர் பதில் கூறினார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. ஒருவேளை அந்த கேள்வி கேட்டவரை சச்சின் செட் செய்து கேள்வி கேட்க வைத்து இருந்தால் நீங்கள் சொல்லும் கருத்து சரியானதாக இருக்கும். அவ்வளவே. 
      அதைத்தவிர, அவரை நான் தேசத்தலைவராக எல்லாம் பார்க்கவில்லை. ஆனால் இந்த பதில் பிரிவினைக்கு எதிரானது தான். 
      இந்த பதிலுக்கு ஊடகங்கள் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தருகிறது என்பது எல்லாருக்கும் தெரிகிறது. எனக்கும் கூட. 

     • சச்சின் போன்ற ‘நாயகர்கள்’ தனது சொந்த மூளையை கொண்டு எதுவுமே பேச முடியாது. அவர் என்ன பேச வேண்டும் என்பதை அவ்ரது காரியதரிசியும், ஏஜென்டுமே தீர்மானிக்க உரிமை படைத்தவர். தாக்கரேவின் தாக்குதலுக்கு பின்னான மௌனம் அதை உங்களுக்கு சொல்கிறது.

      இதை பிரிவினைக்கு எதிரான கருத்தாக நீங்கள் கண்டால் இது ஏன் பிரிவினை கலவரங்கள் நடத்தப்படும் போது சொல்லப்படவில்லை சிந்திக்கவேண்டியிருக்கும்.

      சம்பந்தமில்லாதது? தாக்கரே சச்சினின் குடும்ப நண்பர்

     • இது ஒரு பைசா கு கூட பயன் இல்லாத விவாதம். பெப்சி ,
      விளம்பரம் நடிக்கிறார் நு அவரை குறை சொல்றத விட்டுட்டு
      அத குடிக்காம இருக்க வேண்டியது தான?

     • இது என்ன கொடுமை. இந்த கட்டுரை ஆசிரியர் “அந்நிய பொருள்” எதையும் பயன்படுதுவதில்லையா? உங்கள் வீட்டில் நீங்கள் மண்பாண்டங்களை பயன் படுதுகிறிர்கள் இல்லையா?

      அவர் விளம்பரத்தில் நடிப்பது அவருடைய தொழில். நீங்கள் அதை பார்க்கவேண்டாம்.

      “நீ பெரிய ஆள் ஆகவேண்டும் என்றால் ஒரு பெரிய ஆளை விமர்சனம் செய்.” இந்த கட்டுரை ஆசிரியருக்கு இது பொருந்தும்.

   • டொண்டுல்கர் வெறும் அம்பா இல்லையா?, அவருக்கு அம்பைபோல எந்த நலனும் இல்லையாங்கிறது வேற விசயம்….

    எய்தவன் எங்கோயிருக்க உங்களை குத்தின அம்பை புடுங்கி ஒடிச்சு போடமாட்டீங்களா?

    • இப்படி சொல்லியிருக்கலாமோ ?

     வீசியவன் எங்கோ இருக்க புல்டாஸை நோவதேன் ?

     நம்மை எப்படி திடீரென குத்தும் ? குத்தி குத்தி வலி பழகிட்டதாலே, இப்போ குத்தினாலும் வலிப்பதில்லை. புரிகிறதா ?

     • என்னத்த செய்ய ரவி, அம்புக்கு நாமதான அம்புயரா இருந்து அவுட் குடோக்கோணும்

  6. பன்னாட்டு நிறுவனங்கள் மும்பையை பலவிதங்களில் சூறையாடுகிறார்கள். அதைப் பற்றியெல்லாம் கேட்க பால்தாக்கரேவுக்கு நா வரவில்லை. தெண்டுல்கரின் தேசபக்தியை கேள்வி எழுப்பியதும், பலருக்கு தாங்க முடியவில்லை. பின்ன! தங்களுடைய ஆதர்ஷ ஆட்களை எல்லாம் நீங்கள் திட்டினால், கோபம் எகிறுகிறது. வினவின் அம்பலப்படுத்தலகள் தொடரட்டும். படம் அருமை.

  7. இந்த இந்திய ஆளும் காங்கிரஸ் நாய்கள் சிங்கள இன வெறி நாய்களோடு கூட்டுச் சேர்ந்து எத்தனை தமிழ் உயிர்களை கொன்றிருப்பார்கள். அப்பெல்லாம் இந்தியாவை நேசிப்பதாக சொல்லும் இந்த டெண்டுல்கரோ (மும்பை காரரு) கிரிக்கெட் ரசிகர்களோ இந்திய முதலாளிகளோ இந்திய அரசை கண்டனம் செய்யல. கவலையும் படல. ஏன் அப்பலாம் இந்த டெண்டுல்கருக்கு நான் பெருமையா நெனைக்கிற இந்தியா இப்படி இன அழிப்புக்கு துணை போகுதேன்னு மனுசுல உருத்தலயா? ரெம்ப ஜாலியாக இலங்கை சென்றும் இலங்கை அணியை இங்க வரவச்சும் கிரிக்கெட் விளையாடி துட்டு சம்பாதிச்சு மகிழ்ந்தாணுக (இந்தியா, இலங்கை செல்லக் கூடாது என இங்குள்ள தமிழ் உணர்வாளர்கள் சிலர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும் அதை தமிழக அரசு நிராகரித்தது என்பதெல்லாம் வேறு விடயம்).

   அட வொண்ணும் வேண்டாங்க இந்த பாகிஸ்தான் காரனுக இந்தியாவில் பல தடவை தாக்குதல் நடத்தீருக்காணுக. கடந்த 2006ஆம் ஆண்டு கூட மும்பை ரயில் குண்டு வெடிப்பில் 200ற்கு மேற்பட்டோர் இறந்தனர். அப்பக் கூட இந்த தேச பக்தருக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் ஒன்று தோனல. ஏன் மராட்டியக்காரன் கொல்லப்பட்டான் என்ற உணர்வு கூட இந்த தேச பக்தருக்கு வரவில்லையா? அந்த குண்டு வெடிப்புக்குப் பிறகும் பாகிஸ்தானை இங்க வரவச்சு கிரிக்கெட் விளையாடி துட்டு சம்பாதிச்சானுக (இந்த பார்ப்பன மீடியாக்களும் சேர்ந்து தான்).

   ஆனா அதே பாகிஸ்தான் இந்திய முதலாளித்துவத்தின் அடையாளங்களான தாஜ் மற்றும் ஓபராய் ஓட்டல்களில் தாக்குதல் நடத்திய உடன் பார்ப்பன மீடியாக்கள், இந்திய ஆளும் வர்க்கத்தினர், சினிமா கழிசடைகள் எல்லாத்துக்கும் மேலாக இந்த தேச பக்தர் டெண்டுல்கர் எல்லாம் ஒன்னு சேர்ந்து பாகிஸ்தானிடம் இனிமேல் கிரிக்கெட் விளையாடக் கூடாதுன்னு கத்துராணுக. ஏம்பா நான் தெரியாமல் தான் கேட்கறேன் 100000ற்கு மேலான மக்கள் இலங்கையில் கொல்லப்பட்ட போது கிரிக்கெட் விளையாடினீர்கள், 2006ஆம் ஆண்டு 200ற்கு மேலான மக்கள் மும்பையில் கொல்லப்பட்ட போதும் கிரிக்கெட் விளையாடினீர்கள்… இப்போது மட்டும் ஏன்யா விளையாட மாட்டேன் என்று சொன்னீர்கள்??? ஏன் அவர்களெல்லாம் உங்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு sponsor செய்வதாலா? ஏங்க மிஸ்டர் டெண்டுல்கர் உங்களுக்கு இந்த முதலாளிகள் சொத்துக்கு பங்கம் விளைந்தால் மட்டும் தான் உங்களிடம் தேசப் பற்று வெளிப்படுமா??? இதுதானய்யா உங்களுடைய போலி தேசப் பற்று…

   இதெல்லாம் பாக்கும் போது ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணி கேட்பது தான் ஞாபகம் வருது… அதான் “இவனுக மட்டும் தான் (பணக்காரர்கள்) பொறந்தானுகளா இந்தியாவுல? நாமெல்லாம் அனாவசியமா பொறந்துட்டோமா?”

   போங்கடா நீங்களும் உங்க புளுத்துப் போன தேசப் பற்றும்!

   லெனின்.

  8. //அந்த குண்டு வெடிப்புக்குப் பிறகும் பாகிஸ்தானை இங்க வரவச்சு கிரிக்கெட் விளையாடி துட்டு சம்பாதிச்சானுக (இந்த பார்ப்பன மீடியாக்களும் சேர்ந்து தான்).//

   எனக்கு வந்த ஒரு மெயில்…

   Who owns the media in India ?

   Let us see the ownership of different media agencies.

   NDTV: A very popular TV news media is funded by Gospels of Charity in
   Spain Supports Communism. Recently it has developed a soft corner
   towards Pakistan because Pakistan President has allowed only this
   channel to be aired in Pakistan . Indian CEO Prannoy Roy is co-brother
   of Prakash Karat, General Secretary of the Communist party of India .
   His wife and Brinda Karat are sisters.

   India Today which used to be the only national weekly which supported
   BJP is now bought by NDTV!! Since then the tone has changed
   drastically and turned into Hindu bashing.

   CNN-IBN: This is 100 percent funded by Southern Baptist Church with
   its branches in all over the world with HQ in US.. The Church annually
   allocates $800 million for promotion of its channel. Its Indian head
   is Rajdeep Sardesai and his wife Sagarika Ghosh.

   Times group list:

   Times Of India, Mid-Day, Nav-Bharth Times, Stardust, Femina, Vijay
   Times, Vijaya Karnataka, Times now (24- hour news channel) and many
   more…

   Times Group is owned by Bennet & Coleman. ‘World Christian Council¢
   does 80 percent of the Funding, and an Englishman and an Italian
   equally share balance 20 percent. The Italian Robertio Mindo is a
   close relative of Sonia Gandhi.

   Star TV: It is run by an Australian, who is supported by St. Peters
   Pontifical Church Melbourne.

   Hindustan Times: Owned by Birla Group, but hands have changed since
   Shobana Bhartiya took over. Presently it is working in Collaboration
   with Times Group.

   The Hindu: English daily, started over 125 years has been recently
   taken over by Joshua Society, Berne , Switzerland .. N. Ram’s wife is
   a Swiss national.

   Indian Express: Divided into two groups. The Indian Express and new
   Indian Express (southern edition) ACTS Christian Ministries have major
   stake in the Indian Express and latter is still with the Indian
   counterpart.

   Eeenadu: Still to date controlled by an Indian named Ramoji Rao.

   Ramoji Rao is connected with film industry and owns a huge studio in
   Andhra Pradesh.

   Andhra Jyothi: The Muslim party of Hyderabad known as MIM along with a
   Congress Minister has purchased this Telugu daily very recently.

   The Statesman: It is controlled by Communist Party of India.

   Kairali TV: It is controlled by Communist party of India (Marxist)

   Mathrubhoomi: Leaders of Muslim League and Communist leaders have
   major investment.

   Asian Age and Deccan Chronicle: Is owned by a Saudi Arabian Company
   with its chief Editor M.J. Akbar.

   > > Gujarat riots which took place in 2002 where Hindus were burnt alive,

   > > Rajdeep Sardesai and Bharkha Dutt working for NDTV at that time got around 5 Million Dollars from Saudi Arabia to cover only Muslim victims, which they did very faithfully.. Not a single Hindu family was interviewed or shown on TV whose near and dear ones had been burnt alive, it is reported.

   Tarun Tejpal of < Tehelka.com regularly gets
   blank cheques from Arab countries to target BJP and Hindus only, it is
   said.

   The ownership explains the control of media in India by foreigners.
   The result is obvious.

   PONDER OVER THIS. NOW YOU KNOW WHY EVERY ONE IS AGAINST TRUTH, HOW VERY SAD.

   Please pass this on to as many as possible. Let them know who feeds
   them with biased news and information- yet call themselves secular

   என்னங்க லெனின். எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க? விட்டா சச்சின் எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் கண்டனம் தெரிவிச்சுட்டு தான் இத பத்தி பேசனும்னு சொல்லுவீங்க போல இருக்கே? இந்த தடவை ஏதாவது பத்திரிக்கையாளன் கேட்டிருப்பார், அவர் பதில் சொல்லியிருப்பார். அவ்வளவுதான். இருந்தாலும் எங்க தலைவர பத்தி இப்படி தப்பா சொல்லிட்டீங்க. பொழச்சி போங்க 😉

    • ?,

     படித்தேன். அங்கும் (மாற்றுக்) கேள்விகள் தாம். பதிலில்லை… 🙁 அதுவும் வெகு சில பாய்ன்ட்கள் மட்டுமே அந்த பதிவரின் கண்ணுக்கு தெரிந்தது போலும். (ஒருவேளை, சும்மா கணக்கு காட்ட போட்டிருப்பாரோ? ;))
     அங்கே இருந்த பின்னூட்டங்களை படித்தீர்களா?

     • That was FYI . உங்கள் எதிர்வினையை அங்கோ, இங்கோ, எதிர்பார்க்கிறேன்.

     • இந்த மீடியாவின் இலட்ச்சனங்களை பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்றால், கொஞ்ச நாட்கள் அந்த சேனல்களை பார்த்தாலே போதும். என்னால் நிறைய சொல்லமுடியும் இதை போன்று…
      இதிலும் சுத்த கிருத்துவ மயமாக்கப்பட்ட சேனல் என்று வெளிப்படையாக தெரிவது என்.டி.டி.வி-ஹிந்து சேனல் தான். சும்மா 2 நாள் பாருங்க. தெரியும்…;)

  9. தன் உடல் முழுதும் பன்னாட்டு கம்பெனிகளின் விளம்பரங்களை சுமக்கும் இந்த தேசநாயகன், முன்பு ஒரு சமயம் ஈரோட்டில் நடைபெற்ற கண்காட்சி கிரிக்கெட் டுல்கர்போட்டியின்போது ஆவல் மிகுதியில் ஒரு ரசிகர் அன்பளிப்பாக வழங்கிய கைக்கடிகாரத்தை மைதானத்திலேயே தூக்கி எறிந்து அவமாப்படுத்தியவன்.  

  10. i agree with சீனு. இதற்கு முன் இந்த தளத்திற்கு வந்ததில்லை கேள்விப்பட்டதுண்டு ஆனால் வந்தபின் தான் தெரிகிறது நீங்கள் எடுத்திருக்கும் விசயத்தைப்பற்றிக்கூட யோசிக்கவில்லை ஆனால் உண்மைகளை திரித்து அதை ஊதும் விதத்தில்தான் நான் மனதார காயப்படுகிறேன். நீங்கள் கூறும் வியாபாரத்தனமான சச்சினை நானும் விரும்பவில்லை ஆனால் மொத்த கட்டுரையைப் பார்க்கும் போது ஒரு தேசத்தை மட்டப்படுத்துமுகமாகவுள்ளது.

   • அன்புள்ள first comer , நீங்கள் எதை வைத்து இந்த கட்டுரை ஒரு தேசத்தை மட்டப்படுத்துவது போல இருப்பதாக நினைக்கிறீர்கள் என்பதை எழுதினால். நாம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.

  11. அவர் தனக்குத் தோன்றியதைக் கூறிவிட்டார்.மற்றப்படி சச்சின் காமன் மேன் தான், ம.க.இ.க வினர் போல் அல்ல.தன் வருவாயில் ஒரு பகுதியை பொது நலக்காரியங்களுக்குக் கொடுக்கிறார். தினசரி அறிக்கைவிடும் கருத்து கந்தசாமியல்ல அவர்.புஜ/புக மராட்டியில் இல்லை என்பதால் அவருக்கு உண்மை எதுவும் தெரியவில்லை :)உங்கள் கருத்துப்படி நீங்களும்,உங்களுடைய ஆதரவாளர்களும்தான் உண்மையான மனிதர்கள், பிறர் எல்லாம் முதலாளித்துவ அடிவருடிகள்.அப்படியே இருக்கட்டும். புரட்சிக்கு பிந்தைய சமூகத்தில் கிரிகெட் கூடாது என்பீர்களா?

  12. படம் (கமல்) நடித்தும், கிரிக்கெட் (சச்சின்) விளையாடியும் பேர் வாங்குவோர் இருக்க, குத்தம் சொல்லியே பேர் வாங்கின ஆளுங்கோ நீங்கோ.. பரபரப்பா எழுத அடுத்தது “பாவம் புவனேஸ்வரி.. பார்ப்பனியத்தின் உச்சக்கட்டம்”. “கசாபின் சமுதாய எழுச்சி.. முதலாளித்துவத்திற்கு சவால்” அப்படின்னு எழுதுங்க. உங்களுக்கும் ஒத்துப் பாட ஒரு கும்பல் உண்டு.

   • //“பாவம் புவனேஸ்வரி.. பார்ப்பனியத்தின் உச்சக்கட்டம்”. “// இக்கட்டுரைக்கான கதைக்கருவை நீங்கள் தரவேண்டிய இடம் பெரியார் திடல்.. சூத்திரன் செய்யும் ஊழல்களை நியாயப்படுத்த சூத்திரன் எதிர் பார்ப்பனன் பார்முலாவை வைத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஹிட்களை தொடர்ச்சியாகத் தயாரிக்கும் ஒரே ஸ்தாபனம் அதுதான்.. ‘களவாணி’ப் பயல் நீதிபதி ராமசாமியைக் காப்பாற்ற நம் நாயகன் சொல்லும் பஞ்ச் டயலாக்கை ரசித்துப் பாருங்க “ராமசாமிக்காக தூக்கில் தொங்கவும் தயார்” (குறிப்பு: இந்த ராமசாமி, ஈ.வெ.ராமசாமி அல்ல.)

  13. வினவு,

   சஞசய் காந்தி தியேட்டரில் “வினவு தளத்தில் ஒரு நாள்”,மற்றும் “புரட்சி செய்யலாம் வாங்க ” என்ற டாக்டர் நோ தாயரிப்பில் வெளிவந்த படம் காட்டறாங்களாமே.மக்களும் ரொம்ப ரசித்து பாக்கிறதா கேள்வி.நீங்களும்,மற்ற நக்சல் கும்பலும் பார்த்து ரசித்தீர்களா?

   • ஏன்டா பர*சி maruthu, அங்கதான் உங்க டுபாக்கூர் NO வ ஒரு ஆள் கூட மதிச்சு, ஒரே ஒரு பின்னூட்டம் போடல…நீதான் அவருக்கு உன் நாக்க டிஸ்யு பேப்பரா கடன் குடுக்கறியே அட்லீஸ்டு அத படிச்சியா? வந்துட்டானுங்க நாக்க தொங்க போட்டுகினு….போயி நாலு பேருல நீயாச்சும் போய் பின்னூட்டம் போடுடா பொ***க்கு.

   • Puratchiya eluthureennu….loosu mathiri eluthi irukkan…poi polappa paaaruda…
    Neeyellam indiannnu solarappo…Sachin solrathula thappe illa…
    Thru sponsorship..sachin sambarincha..athu avaroda thiramai..
    unnala mudiyalenna enna venumnaalum eluthuviya…poda..loosu..

    • ‘.sachin sambarincha..athu avaroda thiramai..’
     theru orathilla irukira peddi kadaila tea master super ah tea poduvanga… avaruku kooda than thiramai irruku.. tendulkar ai appadi tea poda sollunga paakalam.. tea master ukkkum 100 kodi kodunga.. othukirom…
     thiramaiyam thiramai.. yaruku thiramai illa…

  14. முண்டம் கேள்விக்குறி.உனக்கு ஏன் கோபம் வருகிறது.உனக்கு படத்துல ஒரு சின்ன ரோல் கூட கொடுக்கவில்லை என்றா?முண்டம் முண்டம்.

   • அட பாலா என்கிற‌்‌‌ பரதேசி முன்டமே
    உனக்கு எப்பவும் கோவமே வராதாட முட்டாள்
    ரோக்ஷமே கொப்பளிக்காதாடா மடையா..

    எப்பப்பார்த்தாலும் ஒரே பாட்டைப்பாடும்
    உனக்கு சலிப்பே வராதாடா சனியனே.

    பாலா என்கிற இவன் ஒரு பார்ப்பனீய வெறி நாய்
    தோழர்கள் எங்கே பார்த்தாலும் கல்லைக்கொண்டு எறியுங்கள்.

  15. dai,

   Naatula edhu patri venna easy kurai solringada, evan paadupatalum pudikadhu, neengalum paadupamatinga, nermaiyana enna artham oru defination sollitu karathai sollunga. Oru thalaivan eppadida irrukanum, Kamarajar nermaiyathane irundhar avarai yenn thorkadichinge? Ungalakku vera velai illa, poi engachum villungo

  16. Dear vinavu, There are people who will say if they are ‘out’ also, it is a ‘no’ ball. there are some bloggers who know the entire truth but PRETEND themselves as they are ignorant….. some bloggers are really honest and it is happy to see them …but some are reluctant to admit the truth and they are spoIling the match …. MY URGENT AND IMPORTANT REQUEST TO V I N A V U IS PLS DO NOT PUT UR VALUABLE ARTICLES JUS LIKE THAT. There are some areas called non-negotiables…. you cannot have a blog for 1 + 1 = 2 ok.
   so give space for some articles … and for some articles there should be NO “marumozhika “…

   • அப்பாவி, நீங்க என்ன சொல்ல வருகிறீங்க? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குமா? இந்தக் கட்டுரையில் அப்படி எந்த இடத்திலே முடீச்சுப் போட்டிருக்குன்னு சொன்னீங்கன்னா உங்களோட கருத்தை கச்சிதமாப் புரிஞ்சுக்க வசதியா இருக்கும். தயவு செய்து விளக்குங்கள்.

  17. முண்டம், பொறுக்கி, பரதேசி… இது கையாளாகாதவர்களின் ஆயுதங்கள். இது போன்ற தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவோரை சீண்டாமல் விடுவதே சாலச்சிறந்தது. ஏனெனில், இது கட்டுரையின் உண்மையான சாரத்தை திசைதிருப்பிவிடுகிறது.

   தயவு செய்து வினவை – கட்டுரைகளை ஆதரிப்பவர்களாவது இதுபோன்ற வசவு வார்த்தைகளைத் தவிர்த்து, கட்டுரையின் மீதான உண்மையான, ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு மட்டுமே பின்னூட்டம் போட்டால் சிறப்பாக இருக்கும்.

  18. //பாலா என்கிற இவன் ஒரு பார்ப்பனீய வெறி நாய்தோழர்கள் எங்கே பார்த்தாலும் கல்லைக்கொண்டு எறியுங்கள்//

   நக்சல் தீவிரவாத சொறி நாய் சூப்பர் லின்க்ஸ்,

   உன்னை மாதிரி நக்சல் வெறி நாய்களை மக்கள் கல்லால் அடித்து சட்டீஸ்கருக்கு ,விரட்டி விடும் காலம் சீக்கிரமே வருமடா, முண்டம்..சாராயத்துக்கு சந்தா வசூலிக்கும் சில்லறை ரெள்டிப் பசங்க..வந்துட்டானுங்க பெரிசா நீட்டி முழக்கிக் கொண்டு..

   • பாலா என்கிற மருது!

    பாலா என்கிற பெயர் தான் ரெம்ப பிரபலமாச்சே! ஏன் பேர் மாத்திகிட்டீங்க!

    என்ன தான் நக்சல் மேலே இவ்வளவு காண்டு இருந்தாலும், வினவை தொடர்ச்சியாக படிக்கிறீர்களே! இது வினவுக்கு கிடைத்த வெற்றி தான்.

    படிச்சா மட்டும் பரவாயில்லை. பின்னூட்டம் கூட போடுறீங்களே! நல்லது. ஒரு ரிக்வெஸ்ட். மோசமா திட்டுறதுன்னு மட்டும் இல்லாம, கொஞ்சம் மெனக்கெட்டு, ஆதார பூர்வமா, விவாத பூர்வமா பின்னூட்டமிடுங்களேன்

  19. ஆக்கபூர்வமான வீமர்சணம். யோசிக்க வேண்டிய கருத்து.

  20. இது வரை எதுவும் பேசாத அவர், ஒரு பிரச்சினை பற்றி முதல் முறையா பேசிருகார், அந்த பாணியில் தான் Media வும் பதிவர்களும் நிறைய பேர் எழுதினாங்க, உங்களுடைய புரிதல் வேற மாதிரி போயிரிச்சு….முதல் முறையா அவர் வெளிய ஒபேனா சொன்னதுக்கான பாராட்டுகள் தான்….

   // அப்போது மட்டுமல்ல பாபர்மசூதி இடிப்பை பற்றியோ, குஜராத் இனப்படுகொலை பற்றியோ ///
   ஏற்கனவே cnn-ibn ஒன்றில் இந்த கேள்வி ஒருவர் கேட்டார், அவர் எப்படி கேட்டார் அப்படினா அப்ப அவர் எதனாச்சு சொல்லிருந்தா நல்ல இருந்திருக்ம்னு சொன்னார்…நீங்க அதை கேட்டுட்டு ஏன் அப்படி சொல்லலைன்னு கேட்கறீங்க.

   …………………
   அது எப்படிங்க… கம்யூனிஸ்ட் முறியடிக்க யாராவது அவர்களுக்கு எதிரா வளர்த்து விட்டா முரியடஞ்சிடுமா…

  21. //அப்போது மட்டுமல்ல பாபர்மசூதி இடிப்பை பற்றியோ, குஜராத் இனப்படுகொலை பற்றியோ, அல்லது விதர்பாவில் கொத்து கொத்தாய் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை பற்றிய //

   சிங்குரில் ஏழை மக்கள் ஏமாற்ற பட்ட போதும், லால்கரில் மக்கள் கொல்லப்பட்டதும், சிங்குரில் போராட்டம் பண்ணவர்கள் சுட்டு கொல்லப்பட்ட போதும் ……..அப்ப எந்த வித அறிக்கையும் கொடுக்காத சச்சினும், அந்த சம்பவங்களுக்கு காரணமான கட்சியும் ….தேசபக்தி இல்லாதவர்கள்…இது சரியா ?

  22. சாம் ஐயா,

   நக்கச்ல் தீவிரவாத நாய்களெல்லாம் தேச பக்தி உள்ள நாய்கள் இல்லையா?அதனால் தானே சொந்த மக்களையே கடித்து குதறி போடுகின்றன.

   • Cinema la kaatura maari naxal moolamaaga makkalukku endha thondaravum erpattdhu illai thozha!! MEDIA oru poi kinnam! nambaadhirgal!! UNMAI therindhal ippadi pesa maatirgal!

  23. இந்த பதிவின் எந்த கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை… மேலும் இது சச்சினை குறைசொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனேயே எழுதப்பட்டது போல உள்ளது…

   ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்… சச்சினின் தொழில் கிரிகெட்.. அதை அவர் சிறப்பாக செய்கிறார்.. அவர் வந்து என்னை பார் என்று சொல்லவில்லை… நாமாக சென்று பார்க்கிறோம்… இங்கு எத்தனை பேர் தங்களுடைய தொழிலை மீறி நீங்கள் மேற்சொன்ன பிரச்சனைகளுக்கெல்லாம் குரல் கொடுத்து இருக்கிறார்கள்???? அது அரசியல் கட்சிகளின் வேலை.. அவர்கள் சரி செய்ய வேண்டியது.. இதற்க்கெல்லாம் எல்லோரும் சென்றுவிட்டால் மற்ற வேலைகளை யார் கவனிப்பது???

   அவர் சொன்ன கருத்துகளை (உண்மையோ, பொய்யோ) வெளிபடுத்தி தங்களுடைய சர்குலேஷன்க்ளை ஏற்றி கொண்ட மீடியாவை நீங்கள் சாடலாமே தவிர, சச்சினை அல்ல…

  24. அனானி, (ஏன் அனானி ஆப்சன் ?),

   //முதலாளித்துவ புரட்சி நடந்த காலத்தில் முதலாளிகள் சொன்னது “அனைவரும் சமம், அனைவருக்கும் கல்வி, திறமைக்கேற்ற வேலை” etc… ஆனால் இன்று வரையில் முதலாளித்துவத்தால் அதை சாத்தியப்படுத்த முடிந்திருக்கிறதா? ///

   முதலாளித்துவ புரட்சியா ? எப்ப நடந்தது ? தொழில் புரட்சியை செல்றீகளா ? கம்யூனிச அறிக்கை வாசகங்கள் இவை. குழம்பியிருக்கீக.

   மனிதர்கள் அனைவருக்கும் சம அடிப்படை உரிமைகளை (fundamental rights) அளிப்பதே ஜனனாயகம். மனிதர்கள் அனைவரும் சமம் என்பதற்க்கு சரியான அர்த்தம் இதுதான்.

   மே.அய்ரோப்பா, வட அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் கடந்த 100 ஆண்டுகளில் வறுமை அளவை மிக மிக அதிகமாக குறைத்துள்ளன. 100 % வறுமை இல்லா அமைப்பு நடைமுறையில் சாத்தியம் இல்லை. ஆனால் பசி, பட்டினி கொடுமைகளை அறவே ஒழிக்க முடியும். அதற்க்கு free markets based on liberal democracy with a genuine welfare state உலகெங்கும் உருவானால் முடியும். ஸ்வீடன் போன்ற நாடுகளில் உள்ள அமைப்பு.

   ///பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதும் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் என்பதும் ஒன்று தான் – பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும் போது தன்னை இதுகாறும் ஒடுக்கிய / சுரண்டிய வர்க்கத்தின் மேல் (சிறுபான்மை பெரு முதலாளிகள் – உங்களைப் போல சிறு முதலாளிகள் மேல் அல்ல) சர்வாதிகாரமாயும் – தனது சக வர்க்கத்தின் மேல் ஜனநாயகமாயும் நடந்து கொள்ளும்.///

   அப்படியா ? tell it the birds annoy. பாட்டளிகளையும் அடிமைகளாக நசுக்கும் ஒரு வகை ‘சர்வாதிகாரம்’ தான் உங்க முறையில் சாத்தியம். அதிகாரம் ஒரு முனையில் குவியும் போது இதுதான் நடக்கும் / நடந்தது.

   ///உங்களுக்கு சமூக வளர்ச்சிப் போக்கு பற்றிய புரிதல் குறைவாக உள்ளது.///

   இந்த டைலாக் நான் சொல்ல வேண்டியது !! முந்திக்கிடீக :)))

   ///முடிந்தால் சென்னையில் நடக்கும் மார்க்சிய வகுப்புகளுக்கு சென்று வாருங்கள்.. நீங்கள் கம்யூனிஸ்டாகிறீர்களோ இல்லையோ ஆனால் உங்களோடு இணையத்தில் விவாதிக்கவாவது எங்களுக்கு சிக்கல் இருக்காது.. மீண்டும் மீண்டும் ஒரே வட்டத்தை நீங்கள் சுற்றிக் கொண்டிருக்க மாட்டீர்கள்..///

   No, thanks comrade. I was once an ardent marxist in my collage days.
   இப்ப ‘தெளிந்துவிட்டது’ ;
   வேண்டும் என்றால் நீங்களும், உங்க தோழர்களும் எம்மிடத்திற்க்கு வாங்க.
   நான் வகுப்பெடுக்கிறேன் !!

   ///நீங்களும் முதலாளி அம்பானியும் முதலாளி – ஆனால் நிதர்சனத்தில் இந்திய ஜனநாயகம் உங்களையும் அம்பானியையும் ஒன்றாகத் தான் நடத்துகிறதா? அம்பானிக்கு இணையாக உங்களால் வரி ஏய்ப்பு செய்து விட முடியுமா? இல்லை அவரைப் போல ஏதாவது ஒரு பொதுத்துறை நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கிவிட முடியுமா? ///

   //அம்பானிக்கு இணையாக உங்களால் வரி ஏய்ப்பு செய்து விட முடியுமா?//

   எதோ எம்மால் முடிந்த அளவிற்க்கு முயற்சிக்கிறேன் !!! :)))

   ஸ்டாலின் அளவிற்கக்கு உங்களால் ‘புரட்சி’ செய்ய முடியுமா என்ற நான் கேட்டால் ?

   இந்திய ஜனனாயகம் எம்மை நடத்தும் விதம் பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம். I can take care of myself and my comapny. In fact, we get excellent and cheap supplies of polypropelye from Reliance Industries as raw material for our unit. and R-comm made cell phone cheapest by making incomming calls free for the first time in india.
   but for relience, many products and services would not be this cheap and plentiful. (that Ambani brothers are unethical and dishonest is a different matter).

   //இந்திய ஜனநாயகத்தைப் பொருத்தளவில் தேசிய முதலாளிகளைவிட தரகு முதலாளிகளுக்குத் தான் பூர்ண ஜனநாயகம்! ///

   nonsense. பிரகாஷ் கரத் சொன்னதை படிங்க. தரகு முதலாளி என்ற சொல் ஒரு மாயை. அதில் மாட்டி கொண்டிருக்கிறீர்கள். சொன்ன புரி்யாது உங்களுக்கு. ஒரு evangilist Christian Preacher இடம் சென்று, கடவுளை அடைய பல மார்க்கங்கள் உண்டு என்று வாதாட முடியாது. brain washed people இடம் எந்த தர்க்கமும் எடுபடாது. வெறும் உணர்ச்சி குவியல் தான். (அற்ச்சீற்றம் என்ற பெயரில்)

   .///தமிழ் பதிவுலகிலும் சில மனநிலை பாதிக்கப்பட்ட பரிதாப்பத்திற்குறிய பிறவிகள் ஸ்டாலின்-சர்வாதிகாரம்- சோவியத்- கமிசார்கள் என்று பினாத்திக்கொண்டு இணைய வெளிகளில் அலைந்து திரிகின்றன. இவ்வாறு அவதூறு செய்கிறவர்களில் இரண்டு வகை உண்டு ஒன்று அ.மார்க்ஸ்,எஸ்.வி. ராஜதுரை அறிவாளி வகையறா, இரண்டாவது ஜெயமோகன், K.Rஅதியமான்,அரவிந்தன் நீலகண்டன் போன்ற இந்துத்துவ கோமாளிகளின் கூட்டம்.இந்த‌ இரண்டு தரப்புக்கும் இடையே பல கருத்துவேறுபாடுகள் இருப்பினும் இரண்டும் ஒன்றுபடும் ஒரு புள்ளி இருக்கிறது, அது தான் கம்யூனிச எதிர்ப்பு. பித்தம் தலைக்கு ஏறிப்போய் கம்யூனிச எதிர்ப்பு பதிவுகளை மட்டுமே எழுதும்//

   இல்லை. யாருக்கு மனநிலை பாதிப்பு என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ! )

   ஆதாரமில்லாமல் பேசுவதுதான் அவதூறு. ஸ்டாலினால் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை பற்றிதான் சர்ச்சை. மிகைபடுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் மிக பெரும் கொலைகாரர் என்பதில் மிகை இல்லை. வரலாறு பொய்களால் உருவாக்க முடியாது. பழைய சேவியத் மற்றும் கிழக்கு அய்ரோப்பிய
   மக்களிடம் சென்று பேசிப் பாருங்க.

   ///கம்யூனிச எதிரிகளோ ஸ்டாலின் என்கிற பெயரை கேட்டால் அச்சமும் பீதியும் கொண்டு அலறுகிறார்கள்.////

   ////எங்கே மீண்டும் ஸ்டாலினுடைய ஆவி எழுந்து வந்துவிடுமோ என்று அஞ்சி இறந்து ஐம்பது ஆண்டுகள் ஆன‌ பிறகும் அவரைப்பற்றிய அவதூறுகளை முதலாளித்துவ தொடை நடுங்கிகள் உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்கள்./////

   You are crazy yaar. Actually no one cares to remember Stalin anywhere. No need for anti-communists
   to expose Stalin’s deeds, etc. This kind of ranting shows who is demented and crazy !!

   எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் : இவர்கள் இருவரும் மார்க்ஸியவாதிகள் தாம்.
   ஸ்டாலின் காலத்து வரலாற்றை அறிந்து எழுதுவதாலேயே, அவர்களை கம்யூனிச எதிர்ப்பாளர்கள் என்று நீங்க கருதுவது உமது அறியாமையையும், மேலோட்டமான அறிவையும் வெளிப்படுத்துகின்றன.

   இறுதியாக யான் ஒரு இந்துதுவவாதி அல்ல. சாதி, மத, இன, மொழி பேதங்களை
   வெறுப்பவன். ஓ.கே.

   And JeMo and A.Neelakanttan are not the usual RSS type hinduthvaaists. That is my perception.

   சச்சின் பற்றிய கார்ட்டுன், படுகீழ்தரமாக உள்ளது. சிம்பாளிக்காக கை காட்டுவது பற்றிய வாசகம் கேவலமானது. கண்டனங்கள்.

   பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர மாடலாக இருந்தால், அவருக்கு ’தேச பக்தி’
   இருக்க முடியாதா என்ன ? What a brilliant logical deduction !!! crazy. சச்சின் வருமான
   வரி ஏய்ப்பு செய்தார் ; பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு வெளிநாட்டு கார்
   இறக்குமதி செய்யும் போது, சுங்க வரி கட்ட மறுத்தார் : இவை போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தலாம். உண்மை அது. மற்றபடி, அவரின் ஒரு
   Casual ஆன கருத்தை இப்படி ‘அர்த்தப்படுத்துவது’ அறிவீனம். முக்கிய பிரச்சனைகளை பற்றி அவர் இதுவரை ‘கருத்து’ கூறவில்லை என்பதால், அவர் மனித நேயமற்ற சுயனலவாதி என்று முடிவு செய்வது : jumping into hasty conclusions.

   மாவோயிஸ்டுகள் இரு தினங்களுக்கு முன் ஒரு ரயிலை தகர்தனர். இரு அப்பாவிகள் பலி. அதை பற்றி வினவு ’கருத்து’ ஒன்றும் சொல்லவில்லை. மாவோயிஸ்டுகளின் செயல்களை பற்றி வெளிப்படையாக, விலாவாரியாக விமர்சித்து, இதுவரை பதிவு எதுவுமில்லை. அதனாலேயே, வினவு ஒரு போலி மனிதனேயவாதி என்று முடிவு கட்டுவது எத்தனை முட்டாளதனமானதோ, அதே போல் தான் சச்சின் பற்றியும்.

   ///////இப்படி தன்னை ஒரு பில்லியனராக மாற்றியது இந்திய அளவிலான சந்தை என்பதும் அவருக்கு புரியாத ஒன்றல்ல. அதனால்தான் தான் முதலில் இந்தியன் அப்புறம்தான் மாரட்டியன் என்று அவர் சொல்கிறார். அவரது இந்தியப் பற்றின் பின்னே ஒளிந்திருப்பது இந்தியாவின் நுகர்பொருள் சந்தையின் மதிப்பு.///////

   இது உண்மை என்றால், சச்சின் எந்த ‘கருத்தும்’ தெரிவிக்காமல், அமைதியாக இருந்திருப்பார். கேனை போல ஏன் பேச வேண்டும் ? cynicalஆன, வனிக ரீதியான பார்வை ‘மட்டும்’ கொண்டிருப்பவர், இப்படி கேனை மாதுரி பேசி, வம்பை விலைக்கு வாங்கமாட்டார். உங்க interpretation and ascribing motives for this is crazy and illogical.

   சரி, இருக்கட்டும். இந்த பன்னாட்டு ‘ஏகாதிபத்திய’ நிறுவனங்களை 1991க்கு பின் இந்தியாவிற்க்குள் அனுமதித்த ‘பாவத்தால்’ தான் இன்று இந்த வினவு தளத்தை மிக மிக மலிவான விலையில் ஒரு பன்னாட்டு நிறுவன server இல் host செய்ய முடிந்தது.
   இணைய வசதி, கம்யூட்டர்கள் மற்றும் இதர தொலைதொடர்பு சாதனங்கள் அனைத்தும் மிக மிக மலிவாக கிடைக்கிறது. இது மிக மிக தவறுதான். 80கள் வரை இருந்த நிலையே தொடர்ந்திருந்து, இந்தியா ஒரு closed economy ஆகவே இன்றும் இருந்திருந்தால் ? அப்ப இந்த ‘பதிவுகளை’ சுலபமாக படிக்கும் வாய்ப்பு இருந்திருக்காது. அச்சிட்ட பிரசுரங்களை மட்டும் தான் சாத்தியம். இந்த ‘உலகமயமாக்கல்’ பெரிய தவறுதான். வேண்டும்தான் இந்த கொடுமையெல்லாம். பன்னாட்டு நிறுவனங்களின் serverகளை உபயோகித்தே அவர்களை எதிர்பதுதான் ’யுத்த தந்திரம்’ போலும் !!

  25. Sorry for the wrong comment. as i type in word and paste here, old comments too were added in my last comment. pls ignore that. the correct comment is as follows :

   சச்சின் பற்றிய கார்ட்டுன், படுகீழ்தரமாக உள்ளது. சிம்பாளிக்காக கை காட்டுவது பற்றிய வாசகம் கேவலமானது. கண்டனங்கள்.

   பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர மாடலாக இருந்தால், அவருக்கு ’தேச பக்தி’
   இருக்க முடியாதா என்ன ? What a brilliant logical deduction !!! crazy. சச்சின் வருமான
   வரி ஏய்ப்பு செய்தார் ; பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு வெளிநாட்டு கார்
   இறக்குமதி செய்யும் போது, சுங்க வரி கட்ட மறுத்தார் : இவை போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தலாம். உண்மை அது. மற்றபடி, அவரின் ஒரு
   Casual ஆன கருத்தை இப்படி ‘அர்த்தப்படுத்துவது’ அறிவீனம். முக்கிய பிரச்சனைகளை பற்றி அவர் இதுவரை ‘கருத்து’ கூறவில்லை என்பதால், அவர் மனித நேயமற்ற சுயனலவாதி என்று முடிவு செய்வது : jumping into hasty conclusions.

   மாவோயிஸ்டுகள் இரு தினங்களுக்கு முன் ஒரு ரயிலை தகர்தனர். இரு அப்பாவிகள் பலி. அதை பற்றி வினவு ’கருத்து’ ஒன்றும் சொல்லவில்லை. மாவோயிஸ்டுகளின் செயல்களை பற்றி வெளிப்படையாக, விலாவாரியாக விமர்சித்து, இதுவரை பதிவு எதுவுமில்லை. அதனாலேயே, வினவு ஒரு போலி மனிதனேயவாதி என்று முடிவு கட்டுவது எத்தனை முட்டாளதனமானதோ, அதே போல் தான் சச்சின் பற்றியும்.

   ///////இப்படி தன்னை ஒரு பில்லியனராக மாற்றியது இந்திய அளவிலான சந்தை என்பதும் அவருக்கு புரியாத ஒன்றல்ல. அதனால்தான் தான் முதலில் இந்தியன் அப்புறம்தான் மாரட்டியன் என்று அவர் சொல்கிறார். அவரது இந்தியப் பற்றின் பின்னே ஒளிந்திருப்பது இந்தியாவின் நுகர்பொருள் சந்தையின் மதிப்பு.///////

   இது உண்மை என்றால், சச்சின் எந்த ‘கருத்தும்’ தெரிவிக்காமல், அமைதியாக இருந்திருப்பார். கேனை போல ஏன் பேச வேண்டும் ? cynicalஆன, வனிக ரீதியான பார்வை ‘மட்டும்’ கொண்டிருப்பவர், இப்படி கேனை மாதுரி பேசி, வம்பை விலைக்கு வாங்கமாட்டார். உங்க interpretation and ascribing motives for this is crazy and illogical.

   சரி, இருக்கட்டும். இந்த பன்னாட்டு ‘ஏகாதிபத்திய’ நிறுவனங்களை 1991க்கு பின் இந்தியாவிற்க்குள் அனுமதித்த ‘பாவத்தால்’ தான் இன்று இந்த வினவு தளத்தை மிக மிக மலிவான விலையில் ஒரு பன்னாட்டு நிறுவன server இல் host செய்ய முடிந்தது.
   இணைய வசதி, கம்யூட்டர்கள் மற்றும் இதர தொலைதொடர்பு சாதனங்கள் அனைத்தும் மிக மிக மலிவாக கிடைக்கிறது. இது மிக மிக தவறுதான். 80கள் வரை இருந்த நிலையே தொடர்ந்திருந்து, இந்தியா ஒரு closed economy ஆகவே இன்றும் இருந்திருந்தால் ? அப்ப இந்த ‘பதிவுகளை’ சுலபமாக படிக்கும் வாய்ப்பு இருந்திருக்காது. அச்சிட்ட பிரசுரங்களை மட்டும் தான் சாத்தியம். இந்த ‘உலகமயமாக்கல்’ பெரிய தவறுதான். வேண்டும்தான் இந்த கொடுமையெல்லாம். பன்னாட்டு நிறுவனங்களின் serverகளை உபயோகித்தே அவர்களை எதிர்பதுதான் ’யுத்த தந்திரம்’ போலும் !!

   • //சரி, இருக்கட்டும். இந்த பன்னாட்டு ‘ஏகாதிபத்திய’ நிறுவனங்களை 1991க்கு பின் இந்தியாவிற்க்குள் அனுமதித்த ‘பாவத்தால்’ தான் இன்று இந்த வினவு தளத்தை மிக மிக மலிவான விலையில் ஒரு பன்னாட்டு நிறுவன server இல் host செய்ய முடிந்தது.//
    ஒரு திருடன் வீட்டை கொள்ளையடிக்க வந்தானாம். காவலுக்கு இருந்த நாய் குலைக்காம இருக்கிறதுக்கு, நாலு சத்துள்ள ஹார்லிக்ஸ் பிஸ்கெட போட்டானாம். அப்புறம் உள்ளே புகுந்து எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டானாம். அப்புறம், நாய்க்கு டாட்டா காட்டி போயிட்டே இருந்தானாம்.
    கொள்ளையடிச்சுட்டு போனாலும், நாலு ஹார்லிக்ஸ் பிஸ்கெட் கிடைச்சுதல்லா! அவன் எவ்வளவு நல்லவன்னு அதியமான் அண்ணாச்சி ஆச்சரியபடுறார்!

    • நொந்குமாரன்,

     எம்மை நாய் என்கிறீர்களா ? அதை நேரடியாகவே சொல்லியிருக்கலாமே. பொருளாதரம் மற்றும் practical reality பற்றி உமக்கு என்ன வெங்காயமா தெரியும் ? உம்மை போன்ற அரைவேக்காடுகளோடு கதைப்பது தான் தவறு. உம்மால் முடிந்த்தால் எமது பதிவு எதற்க்காவது, ஆதாரத்துடன், தர்க்கபூர்வமாக மறுக்கவும்.

     • அதியமான்,

      உங்களுடைய தவறான வாதத்தை புரிய வைக்க ஒரு கதை சொன்னா, அதில நாய் கதாபாத்திரத்தை எடுத்துகிட்டு என்னை நாய் என்கிறீர்களா? எனக் கேட்டால், சிரிப்பு தான் வருகிறது.

      அவசரப்பட்டு, அரைவேக்காடு என நீங்கள் சொன்னதை, வாபஸ் வாங்க வேண்டும். இவ்வளவு கோபம் வரக்கூடாது. உங்களுக்கும் நல்லதில்ல! விவாதிக்கிற எனக்கும் நல்லதில்ல!

      //உம்மால் முடிந்த்தால் எமது பதிவு எதற்க்காவது, ஆதாரத்துடன், தர்க்கபூர்வமாக மறுக்கவும்.//
      உங்க மனசுல பெரிய பொருளாதார புலின்னு நினைப்போ! உங்க பிளாக்குக்கு வர்றேன். விவாதிக்கிறேன்.

   • அதியமான்,இறுதிவரை இந்தியா தரகு வேலை செய்துகொண்டே இருக்கவேன்டும் என்கிறீர்களா?

    • சித்திக், முதலில் தரகு வேலை என்றா என்னவென்று தெளிவாக சொல்லவும். இந்த இணையமும், மலிவான டெலெகாம் வசதிகளும், நாம் இங்கு உரையாடுவதும், இந்த உலகமயமாக்கலில் விளைவுதான். பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்தால் விளைந்த்து. அது தரகு வேலை என்கிறீர்களா ? பிரகாஸ் கரத் ஒரு போலியாக இருக்கலாம். ஆனால் யாதர்த்ததை உணர்ந்தவர். அவர் மிக சரியாக சொன்னது :
     இந்தியா ஒரு அரை காலானி, அரை நிலப்பிரவுத்தவம் என்பது மிக மிக தவறான கோசம். இந்திய முதலாளிகள் இன்று உலக அளவில் பெரு முதலாளிகளாக வளர்ந்துவிட்டனர். அய்ரோப்பிய நிறுவனங்களை வாங்கும் அளவிற்க்கு..

     தரகு வேலை என்பது மிக மகத்தான மாயை. உங்களை பொருத்தவரை யார் சுரண்டினால் என்ன ? சுரண்டல் தானே தவறு. சர்வதேசியவாதிகள் என்று வேறு சொல்லிக்கொள்கிறார்கள். செம்புரட்சிக்கு பிறகு உங்க திட்டப்படி அனைத்தையும் மாற்றி கொள்ளுங்கள். அதுவரை உங்க ’மேலான ஆலோசனைகளை’ உங்களோடே வைத்துகொள்ளுங்களேன். முதலாளித்துவம் அதன் போக்கின் சென்று அழியட்டும், மார்க்ஸ் கூறியபடி. நடுவில் ஏன் குழப்புகிறீர்கள்.

     • FII முதலீடு (CMIE புள்ளிவிவரத்தின்படி)
      http://www.indianexpress.com/news/fiis-cut-stakes-in-indian-companies/326167/
      (புள்ளிக்கு பிறகு உள்ள எண்களை ரவுண்டு செய்துள்ளேன்)

      மார்ச் 2008 டிச 2007
      ரிலையன்ஸ் 17% 18%
      ONGC 7 8
      மஹிந்திரா 15 26
      பார்தி 24 25
      டாடா ஸ்டீல் 19 20
      டாடா மோட்டார்ஸ் 16 17
      ரிலையன்ஸ் காம்யு 10 10
      எல் அண்ட் டீ 16 18

      http://www.rediff.com/money/2009/feb/20family-stakes-back-indian-debt.htm
      Joe Leahy in Mumbai | February 20, 2009
      பெரும்பான்மையான இந்திய தரகு முதலாளிகள் தங்களது பங்குகளை கடன் துணைப்பிணையாக(collateral) கொடுத்துள்ளனர். (டாடா, அம்பானி, சராய மல்லையா மற்றும் பலர்)

      இதன் அளவு:
      Almost 500 companies revealed pledges that are worth about $13.5bn at latest prices.

      இதில் கால் பங்கு அளவிற்கு டாடாவே கடனில் மூழ்கியுள்ளார்.

      ரியல் எஸ்டேட் கம்பேனிகள் பல தங்களது பங்குகளில் 50% மேல் துணைப்பிணையாக வைத்துள்ளனர்.

      இதன் அர்த்தம் கடன் கொடுத்த நிறுவனங்களின் முதலீடுதான் இங்கு விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதுதான்.

      ஒரு நிறுவனத்தின் முடிவுகளில் தலையிடுவதற்கு 25% ஸ்டேக் இருந்தாலே போதும்.

      மெர்ஜர் மற்றும் அக்யுசிசன் கதை இங்கே படிக்கவும்(http://74.125.47.132/search?q=cache:OQ37OXuB3FEJ:www.businessworld.in/bw/2009_10_24_Its_All_About_Size.html+CMIE+statistics+on+stakes+in+Indian+companies&cd=16&hl=en&ct=clnk&gl=us). டவுசர் கிழிந்து தொங்குவது தெரியும். மேலும் தொழில்துறையை கையகப்படுத்துவதை விட நிதி மூலதன மேலாதிக்கம் செய்வதுதான் ஏகாதிபத்தியத்தின் இன்றைய பிரதான போக்காக உள்ளது. இதனை வைத்து பார்க்கும் பொழுது இந்திய தரகு முதலாளிகளின் நிறுவனங்களில் அந்நிய நிறுவன முதலீட்டை சேர்த்துப் பார்த்தால் ஓட்டையில் டவுசர் இருப்பது தெரியும்.

      இவ்வாறு ஏகாதிபத்திய மூலதனம் இந்தியா போன்ற நாடுகளின் வளங்களை சுரண்டவும், சந்தை உறிஞ்சவும் மாமா வேலை பார்ப்பதாலேயே இவர்களை தரகு வர்க்க முதலாளிகள் என்கிறோம்.

      அசுரன்

     • No one worries about this stat. in fact it is a sign of confidance in Indian economy and Indian system. When compared to the FDI into China, this is peanuts.

      ///இவ்வாறு ஏகாதிபத்திய மூலதனம் இந்தியா போன்ற நாடுகளின் வளங்களை சுரண்டவும், சந்தை உறிஞ்சவும் மாமா வேலை பார்ப்பதாலேயே இவர்களை தரகு வர்க்க முதலாளிகள் என்கிறோம்//// அது உங்க viewpoint. நாங்க அதை ஏற்றுக்கொள்வதில்லை. தரகு, மாமா வேலை என்பதெல்லாம் இங்கு பேச மட்டும் தான் பயன்படும். CII or Indian companies will laugh at these terms; so will the MNCs who invest into India. Anyway all these cross broder investements and mergers, etc are part of the free market system and is legal and approved by law and legislatures. If there is any illegal or corruption, that is the problem of law enforcement and good governance. otherwise, this kind of capital flows actually helps both nations. Maoists of Nepal too have ‘welcomed’ these FDIs, (with some ‘conditions’, it is said).

      சரி, இருக்கட்டும். 1991க்கு முன்பும், இதே பல்லவிதான் இடதுசாரிகளிடமிருந்து. இன்றும்தான். அன்று நிலை ?

     • அதியமான்,புதிய பொருளாதார கொள்கையினால் நடுத்தர மக்களில் சிலர் பலன் மற்றும் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் என்பதனை மறுக்கவில்லை. ஆனால் இது தற்காலிகமானதுதான். இம்முன்னேற்றம் புதுப்புது சிக்கல்களை அன்றாடம் உருவாக்கிக்கொண்டேயிருக்கிறது. செலவுபிடிக்கும் உயர்கல்வி,உயரும் வீட்டுக்கடன்வட்டி, மருத்துவ செலவுகள்,வாகனக் கடன்கள், காப்பீட்டுச் செலவுகள்,மூச்சுத் திணற வைக்கும் விலைவாசி உயர்வு இவையெல்லாம் சேர்ந்து நடுத்த்ர வர்க்கத்தின் நிம்மதியைக் குலைத்துக்கொண்டுள்ளது. மறுபுறம் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கையை விரைவாக அழித்து வருகிறது. 
      சொந்தமான வீடும் நான்கு கார்களும் உடைமையாக வைத்திருந்தாலே அதை முன்னேற்றம் என்று கூறுவது போலியானது. நகரவாழ்க்கையானது,பரபரப்பு,போட்டி,பொறாமை,சதி,வஞ்சகம்,பாலுணர்வு வக்கிரம், இயலாமை,மனஅழுத்தம்,இரத்தஅழுத்தம்,மனச்சிதைவு,முதுமையில் வரவேண்டிய‌ சர்க்கரை நோயும் மாரடைப்பும் இளமையை காவுகேட்பது,என அலைக்கழிக்கிறது. வாழ்வின் பிரச்சினைகள் சிந்தனையில் சீர்குலைந்து சமூகத்தை சீரழிக்கிறது. தன்னால் வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லையே  எனும்போது சீரழிவுகள் மேலும் மூர்க்கமடைகின்றன. நீங்கள் கூறும் முன்னேற்றம் ஏற்கனவே இருந்த ஏற்றத்தாழ்வை மேலும் விரிவடையவைத்திருக்கிறது. பன்னாட்டுநிறுவனங்கள் வீசியெரியும் எலும்புத்துண்டை கவ்விக்கொள்ள, மக்களை பிளவுபடுத்துதல்,வன்முறை, படுகொலை, என மக்களை பயபீதியில் ஆழ்த்தும் அரசுகள். இவையெல்லாம் ஒன்றோடொன்று தொடர்பற்றவை என்கிறீர்களா? அச்சத்துடனும் மனநோயாளியைப்போலவும் உலவும் மக்கள். இதைத்தான் முன்னேற்றம் என்கிறீர்களா. உங்களின் பன்னாட்டு நிறுவனங்கள் வறுமையையும் வேலையின்மையையுமே எச்சங்களாக விட்டுச்செல்லப்போகின்ற. பொறுத்திருங்கள். 

     • ////சொந்தமான வீடும் நான்கு கார்களும் உடைமையாக வைத்திருந்தாலே அதை முன்னேற்றம் என்று கூறுவது போலியானது//// சித்திக், இல்லை. நான் பரம் ஏழைகளின் நிலை பற்றிதான் பேசிகிறேன். 110 கோடி ஜனத்தொகையில், 1980களின் விகுதமே இன்றுன் இருந்திருந்தால், இன்று இன்னும் பல பத்து கோடி மக்கள், கடும் வறுமையில் இருந்திருப்பர். எனது சுட்டியின் இறுதி கேள்வியை பார்க்கவும். நிலைமையை கொஞ்சம் கொஞ்சமாக சீர் செய்துகொண்டிருக்கிறோம். நூற்றாண்டுகள் ஆகலாம். யாராலும் சுலபமான தீர்வு கொண்டுவர முடியாது. புரட்சியாளர்களாலும் தான்.

   • 1700ல் இந்தியாவுக்கு மட்டும் பிரிட்டிஷ்க்காரன் வரவில்லையென்றால் இந்தியாவில் கரண்டு கிடையாது, ரயிலு கிடையாது, ஜனநாயகம் கிடையாது இன்னும் பின் தங்கிய நிலையிலேயே இருந்திருப்போம். எனவே பிரிட்டிஷ் ஆட்சி நமக்கு கிடைத்த வரம். அது தொடர்ந்து இருந்திருந்தால் நாம் என்றைக்கோ ஜொயிங் என்று வல்லரசாக ஆகியிருப்போம். பாலாப் போன பகத்சிங், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸு தொண்டர்கள், பல பிரிவு மக்கள் எல்லாம் போராடி கெடுத்துட்டாய்ங்க….

    அவிங்க போட்ட ரயில்லையே ஏறி, அவிங்க போட்ட பஸ்ஸுலேயே போயி, அவிங்க கண்டுபிடிப்பான துப்பாக்கி, குண்டுகளையே வைச்சி பிரிட்டிஷ்க் காரனை விரட்டிய நம்பிக்கைத் துரோகிகள் இந்திய மக்கள். இந்த நம்பிக்கைத் துரோகிகள், நயவஞ்சகர்கள், உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த கயவர்களின் நாடுதான் இந்தியா என்று 1947ல் ஏதாவது ஒரு பிரிடிஷ் எருமை புலம்பியிருக்கும். அதில் ஒரு நியாயம் உள்ளது. அதியமானும் அதே போல புலம்புகிறார் எனில்…

    இப்படி பிரிட்டிஷ்க்காரனை ஏமாற்றி விரட்டிவிட்டோம் நாம். அந்த தோல்வியடைஞ்ச் யுத்த தந்திரத்தை நாம் பாலோ செய்வதைவிட இன்றைய ஏகாதிபத்தியமான அமெரிக்காவிற்கு நேரடி அடிமையாகிவிடுவதன் மூலம் உடனடியாக வல்லரசுகள் லிஸ்டில் நாம் சேரலாம் என்று ஐடியா கொடுக்கிறார் அதியமான்.

    இதைத்தான் மன்மோகன் சிங் சொல்கிறார், உலக வங்கியும் சொல்லுது, ஒபமாவும் சொல்றார், நாங்களும் மறுகாலனியம் என்று சொல்கிறோம்.

    அசுரன்

    • அந்நிய நிறுவன மூதலீடு புரோமட்டர்ஸ் வடிவில் இந்திய தொழில்துறையயை ஆதிக்கம் செய்வது குறித்த புள்ளிவிவரம் தொடர்ச்சி…

     http://bv-stockmarket.blogspot.com/2009/05/promoters-hike-stakes-in-2-out-of-5-cos.html

     மர்ச் 2008 மார்ச்2009
     யூடிவி சாப்ட்வேர் 32 83
     ஏஸ்ஸார் 47 83
     ஏரா இன்ப்ரா 24 58
     ஷண்டு பார்மா 42 73
     ரான்பாக்ஸி 35 64
     யுகோ வங்கி 75 63
     யுனிடெக் 74 64
     கோஹினூர் புட்ஸ் 44 35
     ஐடியா செல் 57 49
     எய்சர் மோட்டார்ஸ் 68 53

     • அசுரன், இந்த புள்ளிவிவரங்களுக்கு நன்றி. ஆனால் இவை 1991கு பின் ஏற்பட்ட மாற்றங்களை தான் பிரதிபலிக்கின்றன. அதற்க்கு முன், பல பத்தாண்டுகள், இந்தியாவில் அன்னிய முதலீடுகள் ஏறக்குறைய இல்லை. அய்.பி.எம், ஷெல் போன்ற நிறுவனங்கள் துரத்தப்பட்டன. ஆனால் உங்களை போன்றவர்கள் அன்றும் இதே பல்லவியைதான் பாடினீர்கள் : ’இந்தியா ஒரு அரை காலனி, அரை நிலப்பிரவுத்துவம்.’ ; இன்றும் அதே பல்லவி. இன்றைய நிலைமை பற்றிய புள்ளிவிவரங்கள் சரி. ஆனால் அன்று இருந்த நிலையிலும், இதே கோசம் என்ன அடிப்படையில் ? ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் எச்சங்கள் என்று ஏதாவது கதை சொல்லாமல், அன்றைய புள்ளிவிவரங்களை இட்டு, அதை உறுதிபடுத்துங்கள்.

     • //அன்றும் இதே பல்லவியைதான் பாடினீர்கள் : ’இந்தியா ஒரு அரை காலனி, அரை நிலப்பிரவுத்துவம்.’ ; இன்றும் அதே பல்லவி. இன்றைய நிலைமை பற்றிய புள்ளிவிவரங்கள் சரி. ஆனால் அன்று இருந்த நிலையிலும், இதே கோசம் என்ன அடிப்படையில் ?//

      இந்தக் கேள்வியை ஏதோ இப்போதுதான் புதிதாக எழுப்புவ்து போல பேசுகிறார் அதியமான். இவை குறித்து பலமுறை பதில் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை நியாபகப்படுத்தும் விதமாக இந்தியாவில் 1991க்கு முன்பு, 1947க்கு பின்பு ஏகாதிபத்திய மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு – சுனிதி குமார் கோஷ்னுடைய கட்டுரைக்கும் சுட்டி கொடுக்கப்பட்டது, இன்னும் பல விவரங்களுக்கு கொடுக்கப்பட்டது அவருக்கு(ஒரு முறையல்ல, பல முறை).

      வழக்கம் போல அரைகுறையாகவே, தனது மன எழுச்சிக்கு ஏற்பவே விசயங்களை கிரகிக்கும் அலாதியான திறமை பெற்ற அதியமான் இந்த விவரங்களையும் அவ்வாறே கிரகித்திருப்பார் என்பதை அவரது தொடர் கேள்விகளிலிருந்து புரிந்து கொள்ள இயலுகிறது.

      1991க்கு முன்பு நவீன காலனியாதிக்கம் – சோசலிச முகாம் என்ற பெயரில் இரட்டை துருவ போராட்டம் இருந்த கால கட்டம் எனவே இன்று இருப்பது போல நேரடியான சுரண்டல் வடிவம் அன்று சாத்தியமில்லை.

      1991க்குப் பிறகு மறு காலனியாதிக்கம் – அமெரிக்க தலைமையிலான ஒற்றை துருவ ஏகாதிபத்தியம் நேரடி காலனியாதிக்க நோக்கத்திற்கு உலகை இட்டுச் செல்லும் நிகழ்ச்சிப் போக்கு.

      அசுரன்

     • ///1947க்கு பின்பு ஏகாதிபத்திய மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு – சுனிதி குமார் கோஷ்னுடைய கட்டுரைக்கும் சுட்டி கொடுக்கப்பட்டது, இன்னும் பல விவரங்களுக்கு கொடுக்கப்பட்டது அவருக்கு(ஒரு முறையல்ல, பல முறை). /// அசுரன், அந்த சுட்டியை நான் அப்போதே படித்துவிட்டு, அதை போன்ற ‘analysis’ களை நாங்களும், பல மார்க்சிய ஆய்வாளர்களும் ஏற்பதில்லை என்று விளக்கியிருந்தேன். மேலும் பிபின் சந்திர என்னும் மார்க்சிய ஆய்வாளர் எழுதிய நூல்களை பற்றியும் சொல்லியிருந்தேன். http://en.wikipedia.org/wiki/Bipan_Chandra

      1.India after 1947

      2.India’s Struggle for Independence. His interpretation of Indian history is very different from your ‘God’ ; both are Marxists. and Bipan Chandra is highly acclaimed historian and JNU Professor (Emeritus). Very valued books. try them, if you can.

     • அதியமான் அவர் முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சம்ப்ந்தமில்லாமல் பேசுவதன் மூலம் மட்டுமே தனது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்கிறார்.

      சுனிதிகுமார் கோஷும் சரி, அல்லது முன்பு நாங்கள் கொடுத்த வேறு பல ஆதாரங்களும் சரி அதியமான் கொடுக்கும் சுட்டிக்ளில் இருப்பது போல தொடர்பில்லா தகவல்கள் அல்ல. ஆணித்தரமாக இங்கு ஏகாதிபத்திய மூலதனம் செயல்பட்டதை புள்ளிவிவரங்களுடன் எடுத்தியம்பின.

      ஆனால், அவற்றை அதியமான் ஒற்றை வரியில் பின்வருமாறு மறுப்பார்
      //அதை போன்ற ‘analysis’ களை நாங்களும், பல மார்க்சிய ஆய்வாளர்களும் ஏற்பதில்லை //

      இது ஒரு வசதி, படிக்காமலேயே சும்மா எதையாவது போட்டு வைப்பது. இந்த அனுகுமுறைக்கு வலு சேர்க்கும் வகையில் தமது மேதாவிலாசத்திற்கு என்று சில சுட்டியையும் போட்டு வைப்பது.

      இங்கேயும் இதே வேலையை அவர் செய்துள்ளார்.

      ஒரு எடுத்துக்காட்டுக்கு, நாங்கள் முன்பு கொடுத்த விவரங்களில் ஒன்று போபால் விசவாயு கம்பனியான யூனியன் கார்பைடு நிறுவனம் விசவாயு கசிய விட்டு ஆயிரக்கணக்கான மக்களை கொன்று விட்டு இங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பட்டது 1984ல், அன்றைய அரசல். அது ஒரு அமெரிக்க நிறுவனம். இன்று டௌ கெமிக்கல்ஸ் என்ற பெயரில் அது மீண்டும் இங்கே வருவதற்கு டாடாவும், மன்மோகனும் காலை நக்குகிறார்கள்.

      இது தவிர்த்து, பசுமை புரட்சியின் மூலம் வேண்டாத ராணுவக் கழிவுகளை இங்கு உரமாக, பூச்சிக் கொல்லியாக விற்றது, பெரிய அணைகட்டுகள், அணு மின் நிலையங்களில் அமெரிக்க, ரஸ்ய அரசு மற்றும் தனியார்(எ-கா: GE) மூலதனங்கள் செயல்பட்டது உள்ளிட்ட பல விவரங்கள் ஏகாதிபத்திய மூலதனம் இங்கு அந்தந்த அரசு ஆத்ரவுடன் இங்கு சுரண்டின. இவற்றை யாராலும் மறுக்க இயலாது. (சுரண்டவில்லை அவை நமக்கு நன்மை செய்தன என்று வேண்டுமானல் சொல்லலாம். அந்த வகையில் பார்த்தால் இன்றைய காலத்திலும் அதைத்தான் சொல்கிறார்கள் மேற்படி ஆட்கள்). ஆனால், அதியமானோ ஒரேயடியாக 1990க்கு முன்பு இங்கு ஏகாதிபத்தியமே செல்வாக்கு செலுத்தவில்லை என்று புளுகுகிறார்.

      இரண்டாவது விசயத்திற்கு உதாரணம், இங்கு பேசப்பட்டுள்ளது 1990க்கு முன்பு ஏகாதிபத்தியம் இங்கு செல்வாக்கு செலுத்தியதா இல்லையா என்பது குறித்து ஆனால் அறிவுஜீவி அதியமான் கொடுத்துள்ள பிபின் சந்தாரா சுட்டி இந்திய சுதந்திரம் குறித்தது. இவ்வாறு சம்பந்தமில்லாமல் சுட்டி கொடுப்பதன் நோக்கம் திசை திருப்பி தப்பிக்கும் வடிவேலு தந்திரம்தான்.

      அதியமானின் முக்கியமான செயல் தந்திரங்களில் ஒன்று இது

      அசுரன்

     • இல்லை. தொடர்புடைய புத்தகங்கள் தாம் நான் கொடுத்தது. India after 1947 மிக முக்கியமான நூல். மிகவும் சிலாகிக்கபட்டது. பிபன் சந்திரா மிக மதிக்கப்படும் ஆய்வாளர். மார்க்சியவாதி. அரசியல் வரலாறு மட்டுமல்ல, இந்திய முதலாளிகளின் நிலைபாடு, சார்புனிலை, ஏகாதிபத்தியத்துடன் அவர்களுக்கு இருந்த உறவு மற்றும் முரண், அன்னிய முதலீடுகள் மற்றும் நிறுவனங்களுடன் அவர்களுக்கு இருந்த உறவு, முரண் மற்றும் போட்டிகள், அவற்றை எதிர்கொண்ட விதம் மற்றும் பல இதர விசியங்கள் பற்றி அந்த இரு நூல்களிலும் விரிவாக ஆய்வுகள் மற்றும் அலசல்கள் உள்ளன. அவற்றை படிக்காமலே, இப்படி
      பொதுப்படையாக பேசுவதுதான் தவறு.

      சுனித் குமார் கோஸ் இன் கருத்துகள் மற்றும் interpretation of past events தான் மிக சரியானது, ‘விஞ்ஞானபூர்வமானது’ என்று நீங்களே சொல்லிக்கொண்டு திரியலாம். அறிவுலகம் அப்படி ஏற்பதில்லை. ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய முதலாளி வர்கம் பற்றி வலுவான மாற்று கருத்துகள் மார்க்சியர்களிடமும் உண்டு. முதலில் படியுங்கள்.
      கோஷ் பட்டியலிட்ட நிகழ்வுகள் 1946 48கள் வரை. அதற்க்கு பல பத்தாண்டுகள் முன்பும், பின்பும் நிகழ்ந்தவை பற்றியும் சந்திரா ஆய்ந்து எழுதுகின்றார்.

      பசுமை புரட்சி பற்றி..

     • பசுமை புரட்சி பற்றிய நியாயமான critisim, அது ரசாயன உரங்களை அதிகம் இடுவதால் நிலத்தின் fertility பாதிப்படைகிறது என்பதுதான். ஒரு வேளை, இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டும் அனைத்து புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் technologyகளை உருவாக்கி, அதை கொண்டு மட்டும் பசுமை புரட்சி செயல்படுத்தப்பட்டிருந்தால், அது ஏகாதிபத்திய சதி ஆகாது அல்லவா ? ஆனால் நிகர விளைவுகள் ஒன்றுதான். 60களில் இந்திய உணவு உற்பத்தி பற்றாகறை பயங்கரமாக இருந்தது. தானிய இறக்குமதி இல்லை என்றால் கடும் பஞ்சம் உருவாகும் நிலை தொடர்ந்தது. அன்று உம்மை போன்றவர்கள் என்ன மாற்று வழி சொல்லியிருப்பீர்கள் ? பல கோடி மக்கள் பட்டினியால் செத்தாலும் பரவாயில்லை, அன்னிய technology கூடாது என்று ‘மனிதாபிமானத்துடன்’ மிக ‘விஞ்சானபூர்வமாக’ பேசியிருப்பீர்கள். பசுமை புரட்சிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகள், அதிகாரிகள், தலைவர்கள், ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் : இவர்கள் அநைவரும் மடையர்களோ அல்லது அயோகியர்களோ அல்ல. ஆனால் உருப்படியான மாற்று வழி சொல்ல துப்பில்லாமல், ஏகாதிபத்திய சதி என்று வெற்று கூச்சல் மட்டும் போடுபவர்கள் தான் உண்மையான் புரட்சியாளர்களா ? tell it to the birds, Comrade.

      அணைகள் மிக தேவையாக இருந்தன. கம்யூனிச புரட்சி அரசு உருவானாலும் அணை கட்டி, ரசாயன உரங்கள் தயாரித்து, பெரும் கூட்டு பண்ணைகள் (மிக பெரும் கார்பரேட் விவசாய பண்ணைகளுகு இணையாக) உருவாக்கி, உணவு உற்பத்தியை மிக மிக அதிகரிக்கவே முயற்சித்திருப்பீர்கள். என்ன, ஆரம்ப காலகட்டங்களில் forced collectivsation and deportation of marginal farmers and ‘kulaks’ would have killed millions due to starvation (caused by sudden fall in food production). அதற்கு பின் ‘விஞ்ஞானபூர்வமான’ விளக்கங்கள் கொடுத்தால் போச்சு..

     • //அதற்க்கு முன், பல பத்தாண்டுகள், இந்தியாவில் அன்னிய முதலீடுகள் ஏறக்குறைய இல்லை. //

      //அன்றும் இதே பல்லவியைதான் பாடினீர்கள் : ’இந்தியா ஒரு அரை காலனி, அரை நிலப்பிரவுத்துவம்.’ ; இன்றும் அதே பல்லவி. //

      அதியமான் ஆட்சேபம் தெரிவிப்பதாக நினைத்து எதிர்வினை புரிந்திருந்தது மேலேயுள்ள இரண்டு விசயங்களைத்தான். இவை உண்மைதான் என்பதற்கு ஆதாரமாகத்தான் பசுமை புரட்சி, சுனிதிகுமார் கோஷ் புத்தகத்தில்/கட்டுரையில் உள்ள புள்ளிவிவரங்கள், போபால் கேஸ், அணைக்கட்டுக்களில் அன்னிய மூலதனம், இன்னும் சில விவரங்களைக் கொடுத்திருந்தேன்.

      மேலும், அரைக் காலனியம்/அரை நிலபிரபுத்துவத்தில் அல்ல பிரச்சினை, அவற்றில் மாற்றமில்லை. ஏகாதிபத்திய மூலதனம் இந்தியாவின் வளங்களை சுரண்டுகின்ற வடிவத்திலும், அளவிலும்தான் வித்தியாசம் உள்ளது அது குறித்துதான் எமது வரையறைகளில் வித்தியாம் என்றும் குறிப்பிட்டு சில கருத்துக்களைச் சொல்லியிருந்தேன்.(நவ காலனியம், மறு காலனியம்)

      இவையெல்லாவற்றையும் விட்டு விட்டு சம்பந்தேமேயில்லாமல் பின்வருமாறு தொடர்ந்து எஸ்கேப் ஆகிறார் அதியமான். எதைச் சொல்கிறார்கள், எதைப் பேசுகிறோம் என்று எந்த வரைமுறையும் இன்றி பரவசமாகவே பேசுவது அதியமானின் ஆரம்ப காலம் தொட்டு நடைமுறையாக உள்ளது. அது இன்றும் தொடர்கிறது.

      அன்னிய மூலதனம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தியது என்பதை இது வரை அவர் மறுக்கவில்லை, மறுக்க இயலாது. எனவேதான் சம்பந்தமில்லாமல் பின்வருமாறு உளறுகிறார்,

      //India after 1947 மிக முக்கியமான நூல். மிகவும் சிலாகிக்கபட்டது. பிபன் சந்திரா மிக மதிக்கப்படும் ஆய்வாளர். மார்க்சியவாதி. அரசியல் வரலாறு மட்டுமல்ல, இந்திய முதலாளிகளின் நிலைபாடு, சார்புனிலை, ஏகாதிபத்தியத்துடன் அவர்களுக்கு இருந்த உறவு மற்றும் முரண், அன்னிய முதலீடுகள் மற்றும் நிறுவனங்களுடன் அவர்களுக்கு இருந்த உறவு, முரண் மற்றும் போட்டிகள், அவற்றை எதிர்கொண்ட விதம் மற்றும் பல இதர விசியங்கள் பற்றி அந்த இரு நூல்களிலும் விரிவாக ஆய்வுகள் மற்றும் அலசல்கள் உள்ளன. அவற்றை படிக்காமலே, இப்படி
      பொதுப்படையாக பேசுவதுதான் தவறு. //

      இந்திய தரகு முதலாளிகளுக்கு, ஏகாதிபத்திய மூலதனத்துடன் இருந்த உறவு குறித்தா எனது முந்தைய பின்னூட்டங்கள் பேசின?

      மேலும், பசுமை புரட்சி போன்ற விவசாயத்தை சீரழிக்கும் நிகழ்வுகள் ஏன் மேற்கு நாடுகளில் நடக்க வில்லை? இங்கு மட்டும் ஏன் அதே பழைய துண்டு துக்கடா நில அடிப்படையிலான விவசாயம் நடக்கிறது? ஏன் மேற்கு நாடுகளில் விவசாயத்தில் அன்னிய மூலதனம், நிறுவனங்களின் ஆதிக்கம் இல்லை? இங்கு உள்ளது? அணை கட்டுக்களில், அணு நிலையங்களில், அமெரிக்க/ரஸ்ய அரசு மூலதனங்களும், பன்னாட்டு தனியார் மூலதனங்களும் இந்தியாவில் எப்படி அனுமதிக்கப்பட்டது?

      இந்த கேள்விகளுக்கு விடை சொல்கிறேன் என்று அடுத்த திரிபு வேலையில் அதியமான் இறங்குவார்(இறங்கியுள்ளார்). ஏனேனில், என்றைக்குமே அவர் ஒரு விசயத்தில் ஊன்றி நின்று வாதிட்டதாக எனக்கு நினைவில்லை. இப்படி வெட்டுக்கிளி போல பாயந்து பறந்து, பரவசமாக்வே விவாதம் செய்வார்.

      மேற்சொன்ன கேள்விகளுக்கு விடை ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த கேள்விகளில் கிடைக்கும் செய்தி அந்நிய மூலதனம் இந்தியாவில் வினையாற்றியது என்பதுதான். இதைத்தான் நான் வலியுறுத்துகிறேன். இதை இது வரை அதியமானால் மறுக்க இயலவில்லை.

      அசுரன்

    • //பிரிடிஷ் எருமை புலம்பியிருக்கும். அதில் ஒரு நியாயம் உள்ளது. அதியமானும் அதே போல புலம்புகிறார் //
     ஒரு கதை சொன்னதற்கே, அதியமான் கோபப்பட்டு என்னை நாய் என்கிறீர்களா? என்றார். (பார்க்க 40.1.1) நீங்கள் எருமை என்றதற்கு என்ன சொல்லப்போகிறாரோ!
     அசுரன்,
     நீங்களும் அதியமான் ஸ்டைலில் லிங்க் கொடுத்து பேசுகிறீர்களே!
     அதியமான்,
     இந்திய தரகு முதலாளிகளால் வாங்கப்படும் நிறுவனங்கள் எல்லாம், அவர்களின் கண்ணோட்டத்தில் காலாவதியாகி போன நிறுவனங்களாம். டாட்டாவும், மிட்டலும் இரும்பு உருக்காலைகளை வாங்கியிருக்கிறார்கள். சரி! உலக அளவில் இரும்பு தாது வளம் குறைவதால் தானாம். இந்திய நிறுவனங்கள் வாங்கியிருக்கிறவை இப்பொழுது நட்டத்தினால், கையை கடிக்கிறதாம். செய்திகள் வருகின்றன. இனி நானும் லிங்க் தருவேன். நீங்க படிக்கனும். (அப்ப! தர்க்கப்பூர்வமா,ஆதாரப்பூர்வமா அதியமான் கிட்ட பொருளாதாரம் பத்தி விவாதிச்சாச்சு)

     • ///அந்நிய நிறுவன மூதலீடு புரோமட்டர்ஸ் வடிவில் இந்திய தொழில்துறையயை ஆதிக்கம் செய்வது குறித்த புள்ளிவிவரம் தொடர்ச்சி…

      http://bv-stockmarket.blogspot.com/2009/05/promoters-hike-stakes-in-2-out-of-5-cos.html///

      Good and it is not enough. like China it is should grow more. ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியை தான் எதிர்த்து போர். ஆங்கிலேய நிறுவனங்களையோ, கண்டுபிடிப்புகளையோ, பாராளுமன்ற ஜனனாயக கொள்கைகளையோ, இதர விசியங்களை எதிர்க்கவில்லை. இது சில செம்பன்றிகளுக்கு புரியாதுதான். ஆனால் இந்த செம்பன்றிகள், பன்னாட்டு நிறுவனங்களை சுரண்டல்வாதிகள் என்று எதிர்த்துவிட்டு, அவற்றின் செர்வரில், இணையதளங்களை பதிக்கின்றன. இரண்டும் ஒன்றா என்ன ? மேலும்..

     • இன்றும் ஆங்கிலேய நிறுவனங்கள், கண்டுபிடிப்புகளை தாரளமாக அனுமதிக்கிறோம். பிரட்டன் நேச நாடுதான். பகை நாடல்ல. ஏகாதிபத்திய பிரிடிஸ் சாம்ராஜ்யத்தை தான் எதிர்த்தோம். அது இன்று இல்லை. ஆனால் இதர பிரிடிஸ் institutions and products and concepts and ideas : ஏற்றுக்கொள்கிறோம். so ? செம்பன்றிகளின் பகுத்தறிவு இவ்வளவுதான் போல ! :)))))))

      மேலும் பார்க்க :

      http://nellikkani.blogspot.com/2008/01/blog-post.html

      ‘மறுகாலனியவாதம்’ என்னும் பிதற்றல்

     • செம்பன்றிகளோடு வாழாதிங்கோ, வெள்ளைபன்றிகளோடு வாழுங்கோ, யாரும் இந்தியாவிலே இருந்துண்டு வெள்ளைகாரனக்கு கொடி பிடிக்கான்டா. அவா தேசத்துக்கோ போங்கோ. அங்கே போய் திருப்பூர் காரன் செஞ்ச பெர்முடாஸ வால் மார்ட்டில்வாங்கி போடுங்கோ

   • ஏன்னா, ஒன்னு சேர்க்க மறந்துட்டேள், உங்களை மாதிரி அமெரிக்க அம்பிகளலெல்லாம் சேர்ந்து செய்த கூகிள் தளத்தை குறைந்த விலைக்கு வினவுகாரனுங்க குத்தகைக்கு எடுத்துட்டான்னு சொல்லியிருக்கப் பிடாதோ

  26. I was shocked to see the video link posted on ‘Atrocities against Adivasis’. However, a deeper investigation leads to more complex truths. The people who had attacked the adivasis are STs themselves. This could be deduced as a direct impact of reservation politics.

   http://www.countercurrents.org/prakash171207.htm

   I would request Vinavu to be more objective in their analysis of issues. There is no point in degrading nationalism as an uniting factor in India. Otherwise, we’d have ended up as another Balkans.
   Thanks.

   • ஹலோ சங்கம்,அப்படி என்னத்த கார்டூன்ல பார்த்துடீங்க,உங்க பார்வைக்கு சென்சார் இல்லையா?சின்ன திருத்தம் “சச்சுன்”இல்ல சச்சின்….

    • ஹலோ கரடிமுத்து சச்சின் படத்துல எல்லா எடமும் முதல் ளித்துவ விளம்பரம் தான் இருக்கு.எந்த இடத்துல தேசபக்தி இருக்கு?

  27. ஹலோ கரடிமுத்து சச்சின் படதில் எல்லா இடமும் முதலாளிகளுக்கு இதில் என்த இடம் தேசபக்தி இன்னைக்கி மாணவர்கள் இளைஞர்கலின் கானவு நாயகன் சச்சின் அந்த நாயகன் இவர்களுக்கு உணவு வேளை இல்லை ஆனால் முதலாளிக்கு விளம்பர முலம் லாபம்

   • அன்னிய முதலீடுகள் மற்றும் நிறுவனங்களை இந்தியாவிற்க்குள் 1991க்கு பின்
    ’தாரளமாக’ அனுமதித்ததால் நன்மையா அல்லது தீமையா ? இதை பற்றியும்,
    1991இல் இருந்த மிக அபாயகரமான பொருளாதார நிலை பற்றியும் முன்பு, யான் எழுதிய முக்கிய பதிவு இது :

    http://nellikkani.blogspot.com/2008/05/1991.html

    1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?
    இப்பதிவில் இறுதியில் ஒரு மிக முக்கிய வினாவை எழுப்பியுள்ளேன். இதுவரை
    அதற்க்கு யாரும் straight answer / தக்க பதிலை அளிக்கவில்லை. ’புரட்சியாளர்கள்’
    முயற்சிக்கலாம். விவாதிக்க நான் எப்போதும் தயாராக உள்ளேன்.

    • 1191 ல் இன்ன இன்ன வகையில் திவாலாகும் சூழ்நிலை இருந்ததாக எங்கேயும் குறிப்பிடவில்லையே நீங்கள். கனவு கொண்டிருக்காதீர்கள். ஊகமாக கேள்விகளை வைக்காதீர்கள் அதற்கு அதியமான் போன்றவர்களால் கூட பதிலளிக்க முடியாது.

  28. ஹெல்மெட்ல இருக்கிற தேசியக்கொடியைக்காணோம். ஆமாம் குறைமட்டுமே கண்டுபிடிப்பவர்களின் காமாலைக்கண்களுக்கு நல்லவைகள் எங்கே தெரியப்போகிறது.

  29. Hey those ranting against Sachin. Tell me for your conscience sake, have you never had a Pepsi or have you never had Boost and other foreign products in your life? Just don’t bark just because you haven’t amassed wealth like Sachin or any other famous and wealthy rich people. If you are a real swadeshi, you should avoid wearing shirts and pants and instead go for langot as that is what the attire of the common man some centuries back. You should never embark on a bus or ride a 2-wheeler as everything were invented in the foreign countries and till now we end up paying the royalty for these inventions.

   So, better shut up and try to lead a normal life with whatever you have got. If you want more, then work better and smarter instead of accusing others as traitors.

  30. அசுரன்,

   யார் உளருகிறார்கள் என்பதை வாசகர்கள் முடிவு செய்துகொள்ளட்டும். ஓ.கே.

   //அன்னிய மூலதனம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தியது என்பதை இது வரை அவர் மறுக்கவில்லை, மறுக்க இயலாது. எனவேதான் சம்பந்தமில்லாமல் பின்வருமாறு உளறுகிறார்,///

   அன்னிய மூலதனம் சரி. ஆனால் இந்த ‘ஆதிக்கம்’ என்ற சொல்லை பற்றிதான் விவாதமே. ஆதிக்கமும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை. இந்திய நிறுவனங்களுடன் சம அளவில் போட்டியிட்டுதான் அவை தம் சந்தையை இங்கு
   நிலைனிருத்துகின்றன. ஆங்கிலேய ஆட்சியின் போதுதான் அவை, ஏகாதிபத்திய
   ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் செல்லப் பிள்ளைகளாக, பல சலுகைகள் அளிக்கபட்டு,
   (இந்திய நிறுவனங்களுக்கு இல்லாத) வளர்க்கப்பட்டன. அந்த கால கட்டத்தை ஏகாதிபத்தியம், ஆதிக்கம் என்று சொல்வதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

   ஆனால் சுதந்திரத்திற்க்கு பின்பு நிலைமை அப்படி இல்லை. நீங்க வேண்டுமானால்
   தொடர்ந்து கூவலாம். ஏகாதிபத்தியம், ஆதிக்கம் எல்லாம் ஒரு வெங்காயமும் இல்லை.
   Try that excellent volume : “Business Legends” by Gita Piramal ; a 800 page book.

   ////மேலும், பசுமை புரட்சி போன்ற விவசாயத்தை சீரழிக்கும் நிகழ்வுகள் ஏன் மேற்கு நாடுகளில் நடக்க வில்லை? இங்கு மட்டும் ஏன் அதே பழைய துண்டு துக்கடா நில அடிப்படையிலான விவசாயம் நடக்கிறது? ஏன் மேற்கு நாடுகளில் விவசாயத்தில் அன்னிய மூலதனம், நிறுவனங்களின் ஆதிக்கம் இல்லை? இங்கு உள்ளது? அணை கட்டுக்களில், அணு நிலையங்களில், அமெரிக்க/ரஸ்ய அரசு மூலதனங்களும், பன்னாட்டு தனியார் மூலதனங்களும் இந்தியாவில் எப்படி அனுமதிக்கப்பட்டது?/////

   ஏன் இல்லை. இந்தியாவில் உபயோகப்படுத்தப்படும் ரசாயன் உரங்கள் என்ன ஸ்பெஸலா என்ன ? அல்லது அமெரிக்கா, அய்ரோப்பா, சீனா, சோவியத் ரஸ்ஸியா,
   கூபா, மற்றும் இதர நாடுகளில் இதே போன்ற ரசாயன உரங்களுக்கு பதிலாக
   ‘இய்ற்க்கை உரங்கள்’ மட்டும்தான் உபயோகப்படுத்தப் படுகின்றனவா ? மண் வளம்,
   உலகெங்கும் பாதிப்படைகிறதுதான். ஆனால் 40 வருடங்களுக்கு முன் நம் அவசர
   தேவைகளுக்கு அன்று சமயமில்லை. ஒரு emergency situation when the nation faced
   Famine and starvation due to acute shortage of food grains. We had to live on US wheat donations and we lived from ship to mouth.

   //// ஏன் மேற்கு நாடுகளில் விவசாயத்தில் அன்னிய மூலதனம், நிறுவனங்களின் ஆதிக்கம் இல்லை? இங்கு உள்ளது?/// உளருவது நீர் தான் இங்கு. பின் அன்னாடுகளில்
   சந்திர மண்டலத்தில் இருந்து வரும் நிறுவனங்களா ”ஆதிக்கம்” ()) செலுத்துகின்றன ?

   சரி, நான் கேட்ட மிக முக்கிய கேள்வியான, பஞ்சத்தை போக்க மாற்று வழிகள் பற்றி ஒரு பதிலும் இல்லை. பசுமை புரட்சி, அணைகட்டுகள், வாய்கால்கள், இதர ஆக்கங்கள் அன்னிய உதவிகளோடு அல்லது கூட்டு முயற்சிகளோடு, ’ஆதிக்கம்’ என்ற பொய்யான
   மாயை சொல்லுக்கு பதிலானவை) உருவாக்காமல், உங்களை போன்ற ‘செம்புரட்சியாளர்களின்’ மேலான ஆலோசனைகள் படி சும்மா இருந்திருந்தால், விளைவுகள் என்ன ஆயிருக்கும் ? கடும் பஞ்சம் ; பல கோடி மக்கள் மடிந்திருப்பர்.
   நீர் பிறந்திருக்கவே மாட்டீர். (அப்பாடி, நிம்பதி !!)

   விவசாய நிலம் துண்டு, துக்காடவாக மாறியதற்க்கு நில உச்சவரம்பு சட்டம் தான் அடிப்படை காரணி. கார்பரேட் பண்னைகளே உருவாக தடை. எஸ்கார்ட்ஸ் நிறுவனம்
   700 ஏக்கர்களின் உருவாக்கிய மிக அருமையான experimental farm and tranining institute
   அரசின் முட்டாள்தனமான கொள்கைகளால் மூடப்பட்டது.

   அணுசக்தி, அணைகள், மட்டுமல்ல, பலவேறு இதர துறைகளிலும் தான் பன்னாடு
   மூலதனம், டெக்நாலஜி, கூட்டுமுயற்சிகள் உள்ளன. அதில் என்ன தவறு அல்லது
   அயோக்கியத்தனம் கண்டீர் ? ஏன், இந்த இணையம், நாம் டைப் அடிக்கும் இந்த
   கம்ப்யூட்டர், டெலிகாம் வசதிகள், செல்போன்கள், போக்குவரத்தில் உபயோகப்படுத்தும்
   பஸ்கள், கார்கள், ஆட்டொக்கள், லாரிகள், டெம்போக்கள், சைக்கிள்கள், பைக்குகள்,
   இதர வண்டிகள், tractors, earth moving equipments, mining equipments, fishing boats, diesel and petrol engines, machine tools, pumps, pharma products and drugs, surgical equipments, printing presses, etc, etc :
   இவை அனைத்தும் இந்திய நிறுவனங்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு,
   விற்க்கப் படவில்லை. They were all invented and manufactured abroad and later imported into India. Much later they were manufactured in India.

   நவீன வாழ்க்கையில் பெரும்பாலான கருவிகள், சேவைகள், உபகாரணங்கள், இவை அனைத்தும் பன்னாட்டு மூலதனங்களே இந்தியாவிற்க்குள் கொண்டு வந்தன. படிப்படியாக நாமும், கல்வி மற்றும் technologyகளை கற்று, Develop செய்துகொண்டோம். பன்னாட்டு மூலதனும், நிறுவனங்களும் இங்கு உள்ளது. அவர்களுடன் போட்டி போடுகிறோம். இது சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை.
   இதில் என்ன பெரிய ‘ஆதிக்கம்’ , ’ஏகாதிபத்தியம்’ என்ற ஈரவெங்காயம் ?

  31. //இந்த ‘ஆதிக்கம்’ என்ற சொல்லை பற்றிதான் விவாதமே. ஆதிக்கமும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை. இந்திய நிறுவனங்களுடன் சம அளவில் போட்டியிட்டுதான் அவை தம் சந்தையை இங்கு
   நிலைனிருத்துகின்றன. ஆங்கிலேய ஆட்சியின் போதுதான் அவை, ஏகாதிபத்திய
   ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் செல்லப் பிள்ளைகளாக, பல சலுகைகள் அளிக்கபட்டு,
   (இந்திய நிறுவனங்களுக்கு இல்லாத) வளர்க்கப்பட்டன. அந்த கால கட்டத்தை ஏகாதிபத்தியம், ஆதிக்கம் என்று சொல்வதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.//

   இன்றும்கூட நீங்க இதத்தான்(அதாவது அன்னிய மூலதனம் ஆதிக்கம் செலுத்தவில்லை) சொல்றீங்க. எந்த காலத்திலும் நீங்க அன்னிய மூலதன மேலாதிக்கத்தை ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அதப்பத்தியா இங்க பேசினோம்?

   நீங்க சொன்னது கீழ இருக்கு,

   //அதற்க்கு முன், பல பத்தாண்டுகள், இந்தியாவில் அன்னிய முதலீடுகள் ஏறக்குறைய இல்லை. //
   //அன்றும் இதே பல்லவியைதான் பாடினீர்கள் : ’இந்தியா ஒரு அரை காலனி, அரை நிலப்பிரவுத்துவம்.’ ; இன்றும் அதே பல்லவி. //
   ////

   மேலே அன்னிய மூலதனமே இல்லையென்று சொல்லியுள்ளீர்கள், பிறகு அதன் அடிப்படையில் நாங்கள் பல்லவி பாடுவதாக ஒரு நக்கல் செய்துள்ளீர்கள்.

   இதோ இப்பொழுது போன பின்னூட்டத்தில் அந்நிய மூலதனம் இருந்தது என்று ஒத்துக் கொண்டீர்கள். நான் நிறுவ விரும்பியது இதைத்தான்.

   முன்னுக்குப் பின் முரனாக பேசும் அதியாமான்,

   எதை விவாதிக்கிறோம் என்றே தெரியாமல் பொத்தாம் பொதுவாக விவரங்களை பட்டியலிடும் பரவசவாதி அதியமான்

   பல்லவி பாடுவது நாங்கள்லல நீங்கள் என்பதை

   அந்நிய மூலதனம் அன்றும் இருந்தது, இன்றும் உள்ளது அதன் தன்மை,. வடிவம், அளவில்தான் வேறுபாடு என்பதை.

   மற்றபடி, ஆதிக்கம், சுரண்டல் போன்றவற்றையெல்லாம் உங்களிடம் விவாதம் செய்து ஏற்றுக்கொள்ள வைக்க இயலும் என்ற நம்பிக்கை எனக்கு கிஞ்சித்தும் கிடையாது

  32. அசுரன்,

   /////நீங்க சொன்னது கீழ இருக்கு,

   //அதற்க்கு முன், பல பத்தாண்டுகள், இந்தியாவில் அன்னிய முதலீடுகள் ஏறக்குறைய இல்லை. //
   //அன்றும் இதே பல்லவியைதான் பாடினீர்கள் : ’இந்தியா ஒரு அரை காலனி, அரை நிலப்பிரவுத்துவம்.’ ; இன்றும் அதே பல்லவி. //
   ////

   மேலே அன்னிய மூலதனமே இல்லையென்று சொல்லியுள்ளீர்கள், பிறகு அதன் அடிப்படையில் நாங்கள் பல்லவி பாடுவதாக ஒரு நக்கல் செய்துள்ளீர்கள்.

   இதோ இப்பொழுது போன பின்னூட்டத்தில் அந்நிய மூலதனம் இருந்தது என்று ஒத்துக் கொண்டீர்கள். நான் நிறுவ விரும்பியது இதைத்தான்.

   முன்னுக்குப் பின் முரனாக பேசும் அதியாமான்,

   எதை விவாதிக்கிறோம் என்றே தெரியாமல் பொத்தாம் பொதுவாக விவரங்களை பட்டியலிடும் பரவசவாதி அதியமான்
   /////

   ரொம்ப்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைப்பா ? 1947 முதல் 1991 வரை சுமார் 45 ஆண்டுகள் மட்டும் இந்திய்விற்க்குள் அன்னிய முதலீடுகள் ஏறக்குறைய தடை செய்யப்பட்டன. ஏற்கெனவே இருந்த நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. ஆனால் அதற்க்கு முன்பும், பின்பும் அப்படி இல்லை. Foreign direct investment and portfolio investment. ok. ஆனால் நீங்க தான் ஏகாதிபத்தியம் என்ற ஒரே பல்லவியை தொடர்ந்து பாடுகிறீர்கள். முன்பு நீங்க அளித்த ‘புள்ளிவிவரங்கள்’ 1991க்கு பின் ஏற்பட்ட விளைவை ‘மட்டும்’ தெளிவாக்கின. சரி, இருக்கட்டும், நான் கேட்ட மிக மிக மிக மிக முக்கிய கேள்வியான பஞ்சத்தை எப்படி தவிர்த்திருப்பீர்கள் ? பசுமை புரட்சிக்கு பதிலாக என்ன ‘புரட்சி’ செய்து பட்டினியை தவர்திருப்பீர்கள் ? அல்லது பஞ்சம் உருவாவது மிகவும் நல்லது, அன்னிய ‘உதவிகளுடன்’ பசுமை புரட்சி செய்வதை விட செத்து மடிவதே மேல் என்று அமைதியாக இருந்திருக்க அரிய ஆலோசனை சொல்லியிருப்பீர்களா ?

   • //ரொம்ப்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைப்பா ? 1947 முதல் 1991 வரை சுமார் 45 ஆண்டுகள் மட்டும் இந்திய்விற்க்குள் அன்னிய முதலீடுகள் ஏறக்குறைய தடை செய்யப்பட்டன. ஏற்கெனவே இருந்த நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. ஆனால் அதற்க்கு முன்பும், பின்பும் அப்படி இல்லை.//

    இது இப்போ நீங்க சொல்வது.

    இதுக்கு முந்தின பின்னூட்டத்துல நீங்க சொன்னது:

    //அன்னிய மூலதனம் சரி. //

    //பசுமை புரட்சி, அணைகட்டுகள், வாய்கால்கள், இதர ஆக்கங்கள் அன்னிய உதவிகளோடு அல்லது கூட்டு முயற்சிகளோடு, ’///

    //அணுசக்தி, அணைகள், மட்டுமல்ல, பலவேறு இதர துறைகளிலும் தான் பன்னாடு
    மூலதனம், டெக்நாலஜி, கூட்டுமுயற்சிகள் உள்ளன.//

    ஆக, பசுமை புரட்சி காலத்தில் அன்னிய மூலதனம் இங்கு இருந்தது, அது ஆரோக்யமான போட்டி என்று ஒரு இடத்தில் சொல்கிறீர்கள். இன்னொரு இடத்தில், அந்நிய மூலதனம் தடை செய்யப்பட்டது என்று சொல்வீர்கள். இது முரன்பாடா இல்லையா?

  33. /////பசுமை புரட்சி, அணைகட்டுகள், வாய்கால்கள், இதர ஆக்கங்கள் அன்னிய உதவிகளோடு அல்லது கூட்டு முயற்சிகளோடு, ’//////
   உதவிகள் மற்றும் டெக்னாலாஜி உதவி என்று தான் சொன்னேன். foreign investment was allowed in very very few sectors under rigid and very strict controls and conditions in those 45 years. unlike post 1991 or pre 1947. ok. Indian fertiliser and pesticide companies (both in private and public sectors) used the help of foreign companies for technology and minimum capital requirements. but there were no stand alone MNC companies (except Union Carbide, which was permitted in late 70s for specific purpose of shortage of one type of pesticide / fertiliser. the Bhopal disaster is a different story. later).
   அசுரன், இது இருக்கட்டும். நான் கேட்ட மிக மிக மிக முக்கிய கேள்வியான மாற்று வழி (பசுமை புரட்சிக்கு பதிலாக என்ன ‘புரட்சி’ செய்து பஞ்சத்தை தவரித்திருபீர்கள் ?) பற்றி பதில் சொல்லாமல் டபாய்கிறீர்களே தம்பி !!!!!

   • //ஆக, பசுமை புரட்சி காலத்தில் அன்னிய மூலதனம் இங்கு இருந்தது, அது ஆரோக்யமான போட்டி என்று ஒரு இடத்தில் சொல்கிறீர்கள். இன்னொரு இடத்தில், அந்நிய மூலதனம் தடை செய்யப்பட்டது என்று சொல்வீர்கள். இது முரன்பாடா இல்லையா?//

    அப்போ நீங்க முரன்பாடு முத்தன்னா என்று ஒத்துக் கொள்கிறீர்கள் அப்படித்தானே?

    விவசாயம குறித்த உங்களது கேள்விக்கு பதில்

    இந்தியாவின் ஜனநாயகமும் – விவசாயமும், சிறு தொழில் துறையும்
    http://poar-parai.blogspot.com/2007/02/blog-post.ஹ்த்ம்ல்

    உங்க தரகு முதலாளிகளுக்கு மீசை வேண்டும், நீங்களோ கூழ் வேண்டும்(விவசாயம் சிறக்க வேண்டும்) என்று சொல்கிறீர்கள்.

    ரெண்டும் சாத்தியமில்லை ஏதாவது ஒன்றுதான் சாத்தியம. எனவேதான் விவசாயத்தையும், மக்களையும் கூட்டிக் கொடுத்து நாட்டை நாசம் செய்கிறீர்கள்.

    மேலும், இந்தியாவில் ஒரு தலைக்கான உணவு அளவு 1990க்கு முன்பு இருந்ததை விட குறைந்து விட்டது. இதன் பொருள் நீங்கள் கூறிய சிக்கல்களை LPG தீர்க்கவில்லை என்பதுதான்.

    • அசுரன்,

     நான் கேட்ட கேள்விக்கு direct ஆன பதிலை கூறும் நேர்மை உமக்கு இல்லை. 60களில் இருந்த பஞ்ச நிலைக்கு, பசுமை புரட்சியை அமலாக்காமல், வேறு என்ன மாற்று வழி சொல்வீர்கள் ? முதலில் இதற்க்கு சுருக்கமாக, தெளிவாக பதில் சொல்லுங்க.

     LPG பற்றி ஏற்கெனவே உம்மோடு விரிவாக விவாதம் செய்தாயிற்று. அது இல்லாவிட்டால், விவசாயம் இன்று இருப்பதை விட படு மோசமாக இருந்திருக்கும். ரூபாயின் மதிப்பு, பல மடங்கி வீழ்ந்து, பெட்ட்ரோலிய பொருட்கள் மற்றும் இதர இறக்குமதிகளின் விலை பல மடங்கு அதிகரித்து, அதனால் விலைவாசி பல மடங்கு அதிகரித்து, வட்டி விகுதங்கள் மேலும் அதிகரித்து, விவசாயிம் இன்னும் படு மோசமாக இருந்திருக்கும். இன்று உருவாயிருக்கும் வேலை வாய்ப்புகள் கூட சாத்தியமாகியிருக்காது. விவசாயத்தில் எந்த LPGயும் நடக்கவில்லை. உற்பத்தி துறையில் நடந்ததால் தான் விவசாயிகள் இன்று தற்கொலை செய்துகொள்கின்றனர் என்பது பிதற்றல். மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது. சி.பி.எம் போலிகளாக, அயோக்கியர்களாக மாறிவிட்டார்கள் தாம். ஆனால் இந்திய பொருளாதாரம் பற்றிய யதார்த்தை உணர்ந்த அனுபவசாலிகள். அவர்கள் யாரும் இப்படி பிதற்றுவதில்லை.

  34. அசுரன்,

   எல்லா வகை விவசாயமும் நஸ்டமா என்ன ? எல்லா பகுதிகளிலும், எல்லா காலங்களிலும் நஸ்டமா என்ன ? மிக முக்கியமாக நான் சொன்னது, பி.டி காட்டன் பயிர நஸ்டத்தை மட்டும் அளித்தால், விவசாயிகள் அதை தொடர மடையர்கள் அல்ல என்றேன்.
   விவசாயத்தில் லாபம் இன்று பொதுவாக குறைவுதான். ஆனால் அனைத்து வகையான பயிர்கள், பகுதிகளிலும் இல்லை. காரணிகள் சிக்கலானவை.

  35. ஆமா மகஇக -காரனுங்களுக்குதான் ரொம்ப தேச பக்தி. சைனாகரனுங்கள தலைவரா எதுபீங்க; இந்தியர்களை மரியாதை இல்லாம பேசுவீங்க; ஜாதி உணர்வில் தூண்டும் விதம் கட்டுரை எழுதுவீங்க.

  36. poi velaiya parunga da neenga eppada thiramaiya madhichu irukinga
   thevidiya pasangaley…..
   idhu namma naatu thala vidhi…
   bat kuuda pudikka theriyadha dhoni ya paarutuvinga

  37. IT’S OVER. SACHIN IS A CRICKET PLAYER. WE CANT EXPECT THE OPINION OF HIM WHICH WILL BE RELIABLE TO US. IT IS HIS COMMENT. WILL YOU ARE DOING AWARENESS ABOUT THIS? IF HE DOES’NT HAVE NATIONAL PATRIOTISM HE WILL NOT PLAY WELL. HE THINKS THAT INDIA IS MY COUNTRY, THAT’S WHY HE IS NOT DOING THE THINGS WHICH MAKE INDIA TO BE SHAME. UNDERSTAND. DONT BLAME OTHERS. FIRST DO YOUR WORK, IF YOU ARE IN A CORRECT WAY THEN TALK ABOUT OTHERS.

  38. “நல்ல பார்ம்ல இருக்கேன் – அடுத்த உலகக் கோப்பை வரை ஆடணும்- ஓய்வு பத்தி பேசாதீங்க! : சச்சின்“

   பெரும்பாலும் அதி திறமை சாலிகள்- குணத்திலும்/நாட்டுப்பற்றிலும்/ வாரிசுகளை உருவாக்கும் முன்னோடி குணத்திலும்/நடைமுறையிலும்/ பைசா விஷயத்திலும் -ரொம்ப -ரொம்ப -ரொம்ப சீப்பா தான் இருக்கிறார்கள்.”. ஹி..ஹி..ஹி.. இவ்வளவு வருமானம் வந்தும்-பரிசாக கிடைத்த விலையுர்ந்த காரை சுங்கவரி இல்லாமல் பெற்றதிலும், வருமான வரி குறைக்க எடுத்த நடவடிக்கைகளும் நாடு அறிந்ததே!!! மீசை நரைத்தும் ஆசை நரைக்காத அரசியல் வாதிகளைப்போல???அவர்களைத் தானே நம்மக்கள் தலை மேல் தூக்கிக்கொண்டு ஆடுகிறார்கள்.

  39. “ஐபிஎல் ஊழல் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது” – சச்சின்

   கிரிக்கெட் என்ற சூதாட்டத்தை மக்கள் மூளையில் முதலாளிகள் புகுத்த அதிகம் உழைத்த இந்த யோக்கியர் சம்பாதித்த பணத்திற்கு அளவே இல்லை.

   ஜட்டி முதல் விளம்பரம் போட்டவருக்கு ஐபில் முறைகேடு அதிர்ச்சி அளிப்பது வியப்பாக இருக்கிறது.

   2 ஜீ , நிலக்கரி ஊழல் எல்லாம் அதிர்ச்சி அளிப்பதாக மன்மோகன் சிங் கூறினால் கோபம் வருமோ அதுபோல தான் இருக்கிற்து சச்சினின் அதிர்ச்சியும்.

  விவாதியுங்கள்

  உங்கள் மறுமொழியை பதிவு செய்க
  உங்கள் பெயரைப் பதிவு செய்க