முன்னுரை: மீண்டும் வந்தே மாதரம் பாடல் தேசபக்தியின் அடையாளமாய் பாடப்படவேண்டும் என சர்ச்சைக்குறியதாகியிருக்கிறது. இந்து மத தெய்வங்களின் பெயர்கள் அணிவகுக்கும் இந்தப்பாடல் உண்மையிலேயே தேசபக்திக்கு உரியதா? இதன் வரலாறு, காங்கிரசு கட்சி இந்தப் பாடலை பிரபலமாக்கிய பின்னணி, இதன் முசுலீம் எதிர்ப்பு உள்ளடக்கம் ஆகியவற்றை விளக்கும் இந்தக்கட்டுரை புதிய ஜனநாயகம் இதழில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. காலப் பொருத்தம் கருதி இங்கே பதிவு செய்கிறோம். இதற்கு ஆலோசனையும் உதவியும் செய்த தோழர் இரணியனுக்கு நன்றி – வினவு
சக மனிதர்களைக் கூட நம்ப மறுக்கும் அளவிற்கு நாட்டு மக்களை நிரந்தர பயத்தில் ஆழ்த்துவதற்காக “”முஸ்லீம் பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, முக்கிய தலைவர்களைக் கொல்ல தீவிரவாதிகள் சதி” என்ற வழக்கமான பீதியை மீண்டும் ஒருமுறை அனைத்து ஊடகங்களும் உரக்கச் சொல்லி ஓய்வதற்குள், அடுத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது “”தேசபக்தி” பஜனையும் அதையொட்டிய லாவணிக் கச்சேரிகளும்.
முன்னாள் மைய அமைச்சர் அர்ஜுன் சிங், “வந்தே மாதரம்’ பாடலின் நூற்றாண்டு விழாவினை முன்வைத்து, 2006′ செப்டம்பர் ஏழாம் தேதியன்று நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக “வந்தே மாதரம்’ பாடவேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதைத் தொடர்ந்து, தேசபக்தியை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.க. கும்பல், பாட மறுப்பதை தேசத் துரோகமாகச் சித்தரித்து, சிறுபான்மையினருக்கு எதிரான தனது வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. தான் ஆளும் மாநிலங்களில் இப்பாடலைப் பாடவேண்டியது கட்டாயம் என உத்தரவிட்டது. குறிப்பாக அம்மாநிலங்களில், அனைத்து மதரஸாக்களும் இந்தப் பாடலைத் தங்களது மாணவர்களைக் கட்டாயமாகப் பாடச் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் அடிமை வேலை செய்யும் “”அம்பி”கள் அனுப்பும் அமெரிக்க டாலரை நன்கொடையாக வாங்கிக் குவிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பன்னாட்டுத் தலைவரான அசோக் சிங்கால், “”வந்தே மாதரத்தைப் பாட மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று பேட்டி கொடுத்துள்ளார். மறுபுறம், “”சுதந்திரப் போராட்டக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த இந்தப் பாடலைப் பாட மறுப்பது தேசத்துரோகச் செயல்” என ஆட்சியாளர்களால் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
“திராவிட நாடு’ கேட்டுக் கொண்டிருந்தபோது, இதே பாடலை “வந்தே ஏமாத்துறோம்’ என நக்கலடித்த கருணாநிதியோ, இன்று பெருமுதலாளியாகி, தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதால், “பாட வேண்டியது கட்டாயமில்லை’ என்று இந்தப் பஜனைக்குச் சுருதி தப்பாமல் பின்பாட்டுப் பாடுகிறார். சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில், சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி ஒரு மைல் நீளத்துக்கு தேசியக் கொடியைத் தெருவெங்கும் பரத்திப் பரவசப்பட்டவர்கள்தானே இவர்கள்! சமயம் கிட்டும்போதெல்லாம் “கழக அரசுதான் கார்கில் நிதியை அதிகமாகக் கொடுத்தது” என்று தம்பட்டம் அடித்து இந்திய தேசியத்தில் மூழ்கவும் தயங்காத இவர்கள், இம்முறை பா.ஜ.க.வின் பஜனையில் கரைந்து போனது ஆச்சரியமில்லைதான்.
இவர்கள்தான் இப்படி என்றால், மே.வங்கத்தை ஆளும் போலி கம்யூனிஸ்டும், தரகு முதலாளிகளின் கையாளுமான புத்ததேவ் பட்டாச்சார்யாவும், “”அனைவரும் பாடலாம்; ஆனால் பாடவேண்டியது கட்டாயம் இல்லை” என்று கூறி ஒதுங்கிவிட்டார். மதச்சார்பின்மைக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், பா.ஜ.வின் இந்து தேசியவெறியை எதிர்க்கத் துப்பில்லாமல், காங்கிரசும் பா.ஜ.க.வோடு ஓரணியில் நிற்பதைப் பார்த்து அடங்கிப் போய் மவுனம் காக்கின்றனர்.
முதலில் இந்த ஆண்டு (2006), வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டே அல்ல. 1870களில் எழுதப்பட்டு 1882இல் ஒரு நாவலில் சேர்க்கப்பட்ட ஒரு பாட்டுக்கு இந்த ஆண்டுதான் நூற்றாண்டு எனத் திடீரென விழா எடுப்பதற்கு அவசியமென்ன வந்தது? அமெரிக்காவின் அடியாளாக மாறிக் கொண்டிருக்கும் இந்த அரசு சமீபத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு, அணுசக்தி விஞ்ஞானிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்து சேர்ந்து, தனது முகமூடி கிழிந்து தொங்கியதாலும், மறுகாலனியத் தாக்குதலால் உழைக்கும் மக்களிடம் வெறுப்பும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆத்திரமும் பெருகி வருவதாலும், பிரச்சினையைத் திசைதிருப்பி தேசபக்தித் தீயை மூட்டிக் குளிர்காய அரசு நினைத்தது. ஆளும் கட்சியினருக்கு இது ஒன்றும் புதியதல்ல; முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது தேசிய வெறியைக் கிளப்ப போக்ரானில் அணுகுண்டு வெடித்தும், பிரச்சினைகள் முற்றியபோது எல்லைப்புறத்தில் சிப்பாய்களைக் கொண்டு போய் நிறுத்தி தோட்டா ஒன்றைக் கூடச் சுடாமல் “போர் பீதி’யை கிளப்பியதும் யாவரும் அறிந்ததுதான்.
கட்சிக்குள் நிலவும் கோஷ்டி தகராறால் உமாபாரதி வெளியேற்றம், போதைப் பொருள் உபயோகித்துக் கையும் களவுமாய் மாட்டிய ராகுல் மகாஜன் விவகாரம், ஜார்கண்ட் மாநிலத்தில் பறிபோன ஆட்சி, முக்கிய தலைவர்களின் ஒழுக்கக்கேடுகள் “”வீடியோ சிடி”களாக வெளிவந்த விவகாரம் என அழுகி நாறிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.விற்கு, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வரப்போகும் உ.பி., போன்ற மாநிலங்களின் தேர்தலுக்கு உதவிட அருமருந்தாய் இந்த வந்தே மாதரம் விவகாரம் கிடைத்தவுடன் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது. “முஸ்லீம்கள் பாட மறுக்கிறார்கள், அதனால் அவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள்’ என மக்களிடையே இந்துமுஸ்லீம் பிளவைக் கூர்மைப்படுத்தி, தனது இந்துவெறி ஓட்டு வங்கியைத் தூசு தட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே “கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் வெடி போடுகிறார்கள்’ என்று முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லி வந்த அவதூறின் தொடர்ச்சியாக “வந்தே மாதர’ விவகாரத்தை அக்கட்சி கையில் எடுத்துக் கொண்டது. செப்டம்பர் 7ஆம் தேதியன்று காங்கிரசு தலைவி சோனியா “வந்தே மாதம்’ பஜனையில் கலந்து கொள்ளாததை ஊதிப் பெருக்கி “”சிறுபான்மையினரை தாஜா செய்கிறார்” என்று தனது மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.
வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?
1882ஆம் ஆண்டு வெளிவந்த “”ஆனந்த மடம்” எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் “வந்தே மாதரம்’. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.
1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்திரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது “வந்தே மாதரம்’ பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.
“இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்திவிட வேண்டும்” என்றும், “இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்” என்றும் “நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!” என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.
“இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை” என்றும் “இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்” என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, “”பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!” என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.
முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பன பாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?
வந்தே மாதரம் என்றால் “தாய்க்கு வணக்கம்’ என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.
இந்தத் தாயைப் “”அகண்ட பாரத மாதா”வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை “தேசிய கீதமாக்க’ காங்கிரசுக் கட்சி முயன்றது.
இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் “”வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது” என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் “”குடியரசு” பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.
நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் “பாரதமாதா’ என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?
முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக “ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்” என்றும் “இந்த சநாதன சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்” என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.
நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் “வந்தே மாதரம்’ பிறந்துள்ளது. இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.
வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் “”வண்டே… மாட்றம்” என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான “சோனி”தான் “இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக’ இருக்க முடியும்.
போலியான தேசபக்தி அரட்டைக் கச்சேரி செய்யும் காங்கிரசு கும்பலோ தாம் ஆண்ட ஐம்பது ஆண்டுகளில் அடுத்தடுத்து நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து, இந்திய ராணுவத்திற்கு போர் விமானம், போபர்சு பீரங்கி, நீர் மூழ்கிக் கப்பல் வாங்குவதிலும் ஊழல் செய்து திளைத்தது. அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, “வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி” எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேசபக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா?
ஒரு நாடு என்பது நாட்டு மக்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களையும் பண்பாட்டையும் குறிப்பதாகும். நாட்டு மக்களின் மீதும், நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுடன், அந்நிய ஆக்கிரமிப்புக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராகவும், நாட்டு மக்கள் நலன் மீது மாளாக் காதலுடனும் போராடுவதே உண்மையான நாட்டுப் பற்றாகும். இதைச் செய்யாமல் தேசத்துரோக ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து விட்டு, “வந்தே மாதரம்’ பஜனை பாடுவது நாட்டுப் பற்றாகாது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரத்தைவிட வேறு இரண்டு முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. அவை: சுபாஷ் சந்திரபோஸின் “”ஜெய்ஹிந்த்” மற்றும் பகத்சிங்கின் “”இன்குலாப் ஜிந்தாபாத்” 1929இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருந்த தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத்தைக் கண்டித்துப் போராடும் விதமாக வெடிகுண்டு வீசியபோதும், பின்பு ராஜகுரு, சுகதேவுடன் தூக்கிலிடப்பட்டபோதும் பகத்சிங் முழங்கியது இதே “இன்குலாப் ஜிந்தாபாத்’தான். அத்தகைய தேசப்பற்றாளனின், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் பிறந்தநாள் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.
“புரட்சி ஓங்குக!” (இன்குலாப் ஜிந்தாபாத்!) என பகத்சிங் முழங்கிய முழக்கம்தான் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் நூற்றாண்டும் புரட்சியின் நூற்றாண்டாக இருக்கப் போகிறதே அன்றி, இந்துவெறி தேசியவெறிக்கானதாக இருக்கப் போவதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் நாட்டுப்பற்றும் மதச்சார்பின்மையும் கொண்ட புரட்சியின் முழக்கம்தான் இனி நாடெங்கும் எதிரொலிக்கப் போகிறதே தவிர, ஏகாதிபத்திய கைக்கூலிகளின் வந்தேமாதரம் பஜனை அல்ல.
– புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2006
தொடர்புடைய பதிவுகள்
- உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!
- வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!
- “சுரணையற்ற இந்தியா”
- நாங்கள், அவர்கள்……….நீங்கள்?
- வந்தே ஏமாத்துறோம் – ஒரு தேச பக்தி பாடலா?- அசுரன்
- மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 1)
- மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 2 )
- மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம்- 3 )
- போலீசு, இராணுவம் – மக்களுக்கா, ஆட்சியாளர்களுக்கா ? (பாகம்- 4 )
- காஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் !(பாகம்- 5 )
- அமெரிக்கா ஊற்றி வளர்த்த ஜிகாதிப் பயங்கரவாதம் ! (பாகம்-6)
- மும்பை 26/11: விளக்கமும் விவாதமும் நூல் அறிமுகம்
இந்தப் பாடல் நல்லதா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. இந்தப் பாடலுக்கு வார்த்தைக்கு வார்த்தை பதவுரை கிடைத்தால் இந்தப் பாடல் பற்றி நாம் கருத்து கூற முடியும். நல்லதாக இருந்தாலும் இதை வற்புறுத்தி திணிப்பது தேவை இல்லாதது. இந்திய மக்களின் அடிப்படை சகிப்புத் தன்மை. ஒரு சாராசரி இந்தியன் பிறரை கட்டாயப் படுத்தி திணிக்க விரும்ப மாட்டான்.
அதே நேரம் இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள் சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது அவர்களுக்கும் நல்லது. உலகத்துக்கும் நல்லது. ஏன் பிற மார்க்கங்களை வெறுக்க வேண்டும்? இந்தியாவில் உள்ள 99 சதவீத இசுலாமியருக்கும், இசுலாத்தின் அடிப்படையில் நடத்தப் படும் பயங்கர வாதத்திற்க்கும் நேரடி தொடர்பு கிடையாது. ஆனால் ஒவ்வொரு இசுலாமியரும் மேலை நாடுகளில் தீவிரவாதியோ என சந்தெகப் படுத்தப் படுகிரார்கள்.
ஷாருக் கானை சந்தேகப் பட்டார்கள். நமது மதிப்பிற்க்குறிய கலாம் ஐயாவை கூட செக் செய்து விட்டனர்.
நான் அடிப்படியிலே ஒரு பகுத்தறிவு வாதி , பகுத்தறிவின் அடிப்படையிலே மதங்களை அணுகுபவன். மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க, சகிப்புத் தன்மையை வளர்க்க, வெறுப்பை விளக்கி அன்பை உருவாக்க நான் இசுலாமிய சகோதரர்களுடன் சேர்ந்து மசூதியில் தொழவும், நோன்பு இருக்கவும் (நிஜ நோன்பு) தயார். இசுலாமிய மார்க்கத்தை சேர்ந்த சகோதரர்கள் அதே போல சர்ச் சில் பிரார்த்தனை செய்யவும், இந்துக்களுடன் மத வூர்வலங்கக்ளில் கலந்து கொள்ளவும் முன் வருவார்களா?
ஐயா ஆர் எஸ் எஸ் காரரே,
வெள்ளாவியில் அவித்தாலும் போகாத உங்கள் கரைகளை சர்ஃப் எக்செல்லில் நனைத்து கொண்டுவரவேண்டாம்.
செங்கொடி
ஐயா செங்கொடி,
நான் ஆர். எஸ். எஸ். முதலான எந்த இந்து இயக்கங்களுடன் எந்த தொடர்பும் இல்லாதவன். அதோடு ஆர். எஸ். எஸ். முதலான இயக்கங்களின் பெரும்பாலான கொள்கைகளை கண்டிப்பவன். எந்த ஆர். எஸ். எஸ். முதலான இயக்கத்தவராவது-நான் அடிப்படியிலே ஒரு பகுத்தறிவு வாதி , பகுத்தறிவின் அடிப்படையிலே மதங்களை அணுகுபவன். மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க, சகிப்புத் தன்மையை வளர்க்க, வெறுப்பை விளக்கி அன்பை உருவாக்க நான் இசுலாமிய சகோதரர்களுடன் சேர்ந்து மசூதியில் தொழவும், நோன்பு இருக்கவும் (நிஜ நோன்பு) தயார்- இப்படி சொல்வாரா?
ஐயா ஆர் எஸ் எஸ் காரரே,
\\மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க, சகிப்புத் தன்மையை வளர்க்க, வெறுப்பை விளக்கி அன்பை உருவாக்க// நீங்கள் தரும் திட்டங்கள் ஆர் எஸ் எஸ் இன் திட்டங்கள். நான் பகுத்தறிவுவாதி என நீங்கள் எழுதிக்கொண்டால் மட்டும் அப்படி ஆகிவிட முடியாது.
செங்கொடி
ஐயா செங்கொடி,
சும்மா இருப்பவரை எல்லாம் R.S.S இயக்கத்தில் தள்ள நீங்கள் முயன்றாலும் நாங்கள் அந்த இயக்கத்திலோ, இல்லை அது போன்ற எந்த இயக்கத்திலும் சேர்ந்து கொள்ள மாட்டோம். நாங்கள் சுய சிந்தனை உடையவர்கள். நான் எழுதியதை மேற்கோள் காட்டி, எந்தக் கருத்து தவறு என்று கூற முடியுமா? நான் எங்காவது மக்களுக்கோ, நாட்டுக்கோ, உலகுக்கோ கேட்டினை உருவாக்கும் அமைதிக்கு எதிரான கருத்தை, மக்களை பிரிக்கும் கருத்தை கூறி இருக்கிறேனா? வெறுப்பை கருத்துக்களை விட்டு, நல்லிணக்க வழிக்கு திரும்பும் கருத்தை நான் கூறினால் உங்களுக்கு பொறுக்கவில்லை. நான் கூறிய
// நல்லதாக இருந்தாலும் இதை வற்புறுத்தி திணிப்பது தேவை இல்லாதது. இந்திய மக்களின் அடிப்படை சகிப்புத் தன்மை. ஒரு சாராசரி இந்தியன் பிறரை கட்டாயப் படுத்தி திணிக்க விரும்ப மாட்டான். // – இது R.S.S திட்டமா?
நான் ஒரு போதும் R.S.S இயக்க கூட்டங்களுக்கு போனதும் இல்லை. அவர்களின் திட்டங்கள் என்ன என்று எனக்கு தெரியவும் தெரியாது. உங்களுக்கு இவ்வளவு விவரங்கள் தெரிந்து இருக்கிறதே, நீங்க R.S.S. இயக்கத்தில் ஈடுபாடு உள்ளவரா?
மத நல்லிணக்கத்தை உருவாக்கும் சகிப்புத் தனமைக் கருத்துக்களை எதிர்த்து, நீங்கள் மறை முகமாக R.S.S.க்கு உதவுகிரீர்களா, இல்லை என்றால் ஏன் நான் எழுதும் சகிப்புத் தனமைக் கருத்துக்களை எதிர்க்கிறீர்கள்? நான் எழுதிய எந்தக் கருத்து பகுத்தறிவுக்கு விரோதமானது எனக் காட்ட முடியுமா?
ஐயா ஆர் எஸ் எஸ் காரரே,
இந்தப்பதிவு “வந்தே மாதரம்” எனும் பாடல் எங்கிருந்து பெறப்பட்டது? ஆனந்த மடம் நாவலின் கரு என்ன? அது எப்படி மக்களுக்கு எதிராக இருக்கிறது என்பன குறித்ததாக இருக்கிறது. முஸ்லீம்களுக்கு எதிராக வெறியை தூண்டி நஞ்சை கக்கும் நாவலிலிருந்து உருவப்பட்ட இந்தப்பாடல் இந்து மத கடவுளர்களை போற்றுவது போல் இருந்தாலும் அதன் உளக்கிடை இஸ்லாமிய வெறுப்பும், வெள்ளையர்களுக்கு வரவேற்புமாக இருகிறது. இது எப்படி தேசபக்திப்பாடலாகும்?
நீங்கள் பதிவின் மையமான இதை ஒரே வரியில் கடந்துவிட்டு அதுவும் பாடல் குறித்த கருத்தாக இல்லாமல் “நல்லதாக இருந்தாலும்” வற்புறுத்தக்கூடாது என நடுவில் நிற்பதாய் போக்கு காட்டிவிட்டு, முஸ்லீம்களுக்கு அறிவுரை கூறுகிறீர்கள்.இந்த பார்ரத மாதா எங்கள் மாதா, பார்ப்பனீய (இந்து) கலாச்சாரம் எங்கள் கலாச்சாரம், வந்தேரிகளான முஸ்லீம்கள் எங்கள் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு இரண்டாம் தரக் குடிமகன்களாய் வாழ வேண்டும் என்றுதான் ஆர் எஸ் எஸ் பாசிசங்கள் பரப்பித்திரிகின்றன. இதையே நீங்கள் சமய நல்லிணக்கம் என்கிறீர்கள். பின் உங்களை திருச்சிக்காரர் என்றா அழைக்க முடியும்?
உங்கள் சமய நல்லிணக்க உத்திகள் இந்தியச்சூழலில் எப்படி பகுத்தறிவாக இருக்கும் என்பதையும் கொஞ்சம் விவரித்தால்நாங்களும் தெரிந்துகொள்கிறோம்.
தோழமையுடன்செங்கொடி
சிகப்பு நிற போர்வையில் உள்ள R.S.S. சென்கொடியாரே, யாரயும் கட்டாயப் படுத்தக் கூடாது. கட்டாயப் படுத்துவது நமது அடிப்படைகளுக்கு எதிரானது என்று தெளிவாக கூறி விட்டோம். நான் பிற மார்க்கத்தவரை எனது சகோதரராகவே கருதுகிறோம், உங்களின் மறைமுக தோழர் R.S.S.காரர் போல நாம் யாரையும் இரண்டாம் தரக் குடிமகனாக வைக்க விரும்பவில்லை. அதனால் தான் நாமே முன் வந்து மசூதில் தொழ தயார் என்றும் கூறி இருக்கிறோம். கடவுள் இருக்கிறாரா என்பதை யாரும் காட்டவில்லை. ஆனாலும் அப்படி இருக்கிறார் என்று பெரும்பாலானவர் நம்புவதால் – ஆனாலும் அவர்கள் பார்க்காத கடவுளுக்கு , உணராத கடவுளுக்கு பல கற்பிதங்களை அளித்து அதனால் மனிதர்களுக்கு , மனிதத்துக்கு ஆபத்து வருவதால் – நாம் தலையிட்டு நாகரீக வாழ்க்கை முறையான சகிப்புத் தன்மையை பயிற்றுவிக்க எல்லா வழிபாட்டு தளங்களிலும் வெறுப்பு இல்லாமல் வழிபாடு செய்ய தயார் என்பதை கூறினோம். நீங்கள் உங்கள் R.S.S. பற்றை நீக்கி விட்டுப் பார்த்தால் விளங்கும்.
ஐயா ஆர் எஸ் எஸ் காரரே,
இங்கு நிகழும் குண்டு வெடிப்புகளுக்கு மதம் மட்டுமே காரணமல்ல. மத சகிப்புத்தன்மையின் தேவை ஏன் வந்தது? ஒருவர் மசூதியில் தொழுவதாலும் இன்னொருவர் கோவிலில் கும்பிடுவதாலுமா? இருவரும் இரண்டையும் செய்துவிட்டால் சகிப்புத்தன்மை வந்துவிடுமா? எல்லாவற்றையும் ஊடுருவிச்செல்வது அரசியல். இந்த மதவெறிப்பாடலை தேசபக்திப்பாடலாக்கியதும் அதே அரசியல். அதை உணராமல் உணரவைக்காமல் கோவிலில் தொழுவதாலும், மசூதியில் கும்பிடுவதாலும் எதுவும் மாறாது. தரீக்காக்களில் நாங்கள் கும்பிடுகிறோம் கோவில்களில் அவர்கள் கும்பிடுகிறார்களா? என்றுதான் பாசிசங்கள் முதலில் நுழைகின்றன. இதை எப்படி நல்லிணக்கம் என்கிறீர்கள்?
தோழமையுடன் செங்கொடி
செங்கொடி என்ற பெயரில் எழுதும் R.S.S. கமுக்க உறவு காரரே, //இங்கு நிகழும் குண்டு வெடிப்புகளுக்கு மதம் மட்டுமே காரணமல்ல. மத சகிப்புத்தன்மையின் தேவை ஏன் வந்தது? //
மத அடிப்படை வாதிகளுக்கு, மக்களைக் கொன்று இரத்தம் குடிக்கும் தீவிரவாதிகளுக்கு பல்லக்கு தூக்கும் உங்களின் மக்கள் துரோக வேலையை உங்கள் வார்த்தையின் மூலமே அம்பலப் படுத்தினீர்கள். இரண்டு பக்கமு முள்ள மத வெறியர்களின் கையை வலுப் படுத்தி அப்படியே உங்களை மக்கள் பாதுகாவலனாக காட்டிக் கொள்ளும் செயல- அறிந்தோ, அறியாமலோ செய்கிறீர்கள். In the civilised soceity, Any one who does not respect other religions, any one who does not have tolerance for other religions, any one who is not ready to socialise with functions other religios, he is nothing but a thorn in civilsed soceity. He indirectly developing hate in and around him. He teaches the hate principles among his progeny and soceity. A gentleman respect peoples customs and try to accomadate to that. வெறுப்பு கருத்துக்கள் நீங்கி அமைதிக் கருத்துக்கள் உருவாக நல்லிணக்கம் அவசியம். எல்லோரையும் பிரித்து வைத்தால் அரசியல்வாதிக்கு கொண்டாட்டம். உங்களுக்கும் மகிழ்ச்சி.
திருச்சிகாரரே, தங்களின் கீழ்கண்ட கருத்து ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரத்தின் விளைவாக பொதுபுத்தியில் புகுத்தப்பட்டதாகும். இந்தியா இஸ்லாமியர்கள் எல்லாரும் மத வெறியர்கள் என்பதே ஆர்.எஸ்.எஸ் வாதம். அதையே மென்மையாக இருக்கிறது உங்களது வாதம். பகுத்தறிவு முலாம் பூசப்பட்ட ஆர்.எஸ்.எஸ் வாதம் – அக்கிரகாரத்தார்கள் வாதம்.
>>இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள் சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அய்யா சுனா பானா , நீங்கள் R.S.S என்றோ அக்கிரகாரம் என்றோ இன்னும் எப்படி வேண்டுமானாலும் கூறினாலும், மக்கள் விரோத, அமைதி விரோத, ரத்த வெறிக் கருத்துக்களை அடையாளம் காட்ட நான் தயங்க மாட்டேன்.
இசுலாமியர்கள் நேரடியாக பயங்கர வாதத்திலே ஈடுபடுவதில்லை. ஆனால் பயங்கர வாத கருத்துக்களை உள்ளடக்கிய மார்க்கத்தை அவர்கள் அடி பணிந்து ஏற்றுக் கொள்கிறார்கள். இப்படியாக அவர்கள் வெறுப்புக் கருத்துக்களை மனதுக்குள் வைத்து , இரத்த வெறிக் படுகொலைகளை ஒப்புக்கு எதிர்ப்பவர்களாக , வெறுப்பு கருத்துக்களை தங்கள் அடுத்த தலைமுறைக்கும் பரப்பும் செயலை செய்கிறார்கள். இதை அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது என் கடமை. மத வெறியர்களின் ஆதரவுக்கு மண்டியிட்டுக் கொண்டு, பயங்கர வாததக்கு வக்காலத்து வாங்கும் மக்கள் விரோத, மக்கள் துரோக சந்தர்ப்ப வாத பிழைப்பு வாத கூட்டத்திடம் நல்ல பேர் வாங்க, உண்மைகளை பூசி மொழுகி நான் எழுத மாட்டேன்.
ஐயா ஆர் எஸ் எஸ் காரரே,
இன்னும் நீங்கள் உங்கள் திட்டம் எப்படி அமைதியை ஏற்படுத்தும் என விளக்கவில்லை. அமைதி ஏற்பட வேண்டுமென்றால் எப்படி அமைதியின்மை ஏற்பட்டது என்பதை அறிய வேண்டும். இது போன்ற துவேசப்பாடல்களை எல்லோருக்கும் பொதுவாய் முன்னிருத்துவது என்பது அமைதியின்மையை மேலும் வளர்க்கும் ஒரு செயல், அதைப்பற்றி கருத்துக்கூற கவனமாக மறுக்கும் நீங்கள், இஸ்லாமியரை சகிப்புத்தன்மையுடன் இருக்கச்சொல்கிறீர்கள். எதுவரை சகிப்புத்தன்மையுடன் இருக்கவேண்டும்? செத்து மடியும் வரையிலுமா?
\\இசுலாமியர்கள் நேரடியாக பயங்கர வாதத்திலே ஈடுபடுவதில்லை. ஆனால் பயங்கர வாத கருத்துக்களை உள்ளடக்கிய மார்க்கத்தை அவர்கள் அடி பணிந்து ஏற்றுக் கொள்கிறார்கள். இப்படியாக அவர்கள் வெறுப்புக் கருத்துக்களை மனதுக்குள் வைத்து , இரத்த வெறிக் படுகொலைகளை ஒப்புக்கு எதிர்ப்பவர்களாக , வெறுப்பு கருத்துக்களை தங்கள் அடுத்த தலைமுறைக்கும் பரப்பும் செயலை செய்கிறார்கள்.// இப்படி கருத்துவைத்திருக்கும் நீங்கள்; இவர்கள் கோவிலில் கும்பிட்டால் மத நல்லிணக்கம் வந்துவிடும் என்று எந்தப்பொருளில் கூறுகிறீர்கள்?
தோழமையுடன்செங்கொடி
செங்கொடி என்ற பெயரில் எழுதும் R.S.S. கமுக்க உறவு காரரே, மத வெறியை, மத அடிப்படை வாதத்தை நான் மட்டுப் படுத்த முயலும் போது , உங்களுக்கு இவ்வளவு ஆவேசம் வருவது ஏன்? இப்படியாக மத அடிப்படை வாதத்திற்கு, மத வெறிக்கு, மத பயங்கர வாதத்துக்கு பல்லக்கு தூக்கி, பாய் விரிக்கும் நீங்கள் செங்கொடி என்ற பெயரில் எழுதி அந்த பெயருக்கு களங்கத்தை உருவாக்குவது ஏன்?
செங்கொடி என்ற பெயரிலே எழுதும் R.S.S. கமுக்க உறவு காரரே , இந்தப் பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப் படுத்தக் கூடாது என்பதை பலமுறை தெளிவாக சொல்லி விட்டேன். இந்தப் பாடலைப் பற்றிய சரியான பதவுரை கிடைத்து இருக்கீறது. அதன் அடிப்படையில் இந்தப் பாடலின் மீதும் கருத்து கூறி இருக்கிறேன். சகிப்புத் தன்மை என்பது மனித நாகரீகத்தின் அடிப்படை. சகிப்புத் தன்மையும், அரவணைக்கும் தன்மையும், கலந்து வாழும் தன்மையும் மனிதத்தை அமைதிப் பாதையில் கொண்டு செல்லுகிறது. நான் இசுலாமியரகளை சகோதரராகவே எண்ணுகிறேன். நான் இசுலாத்தை எதிர்க்கவில்லை. இசுலாத்தில் உள்ள பிற மதத்தவர் மீதான வெறுப்புக் கருத்துக்களை, பயங்கர வாத வன்முறைக் கருத்துக்களை எடுத்து விடுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். //Surat Muĥammad (Muhammad) 47.4
//
So, when you meet (in fight Jihad in Allah’s Cause), those who disbelieve smite at their necks till when you have killed and wounded many of them, then bind a bond firmly (on them, i.e. take them as captives). Thereafter (is the time) either for generosity (i.e. free them without ransom), or ransom (according to what benefits Islam), until the war lays down its burden. Thus [you are ordered by Allah to continue in carrying out Jihad against the disbelievers till they embrace Islam (i.e. are saved from the punishment in the Hell-fire) or at least come under your protection], but if it had been Allah’s Will, He Himself could certainly have punished them (without you). But (He lets you fight), in order to test you, some with others. But those who are killed in the Way of Allah, He will never let their deeds be lost// இசுலாத்தை நிராகரிப்பவர்களை போரிலே சந்தித்து, அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள். இப்படியாக இந்த உலகிலே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அடி பணியாதவர்கள் மீது புனிதப் போரில் ஈடு படுங்கள் என்று ஆனடவனின் பெயரால் ஆணையிட்டு, இரத்த ஆறு ஓட விட்டு, உலகத்தையே கல்லறை ஆக்க வேண்டாம். எனவே வெறுப்பு கருத்துக்களை விடுங்கள் என்று கேட்கிறேன். பிற மதங்களை வெறுப்பதில் இசுலாம் முதலில் நிற்கிறது. அதை ஆரம்பித்தது யூதர்கள தான். ஆனால் இசுலாமியர் அவர்களிடம் கற்று வெறுப்பு கருத்துக்களுக்கு முழுதுமாக மூளை சலவை செய்து கொண்டு உள்ளனர். பிற மதத்தவரின் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அந்த வெறுப்பு குறைய நிச்சயம் வாய்ப்பு உண்டு.
//இதை வற்புறுத்தி திணிப்பது தேவை இல்லாதது. இந்திய மக்களின் அடிப்படை சகிப்புத் தன்மை. ஒரு சாராசரி இந்தியன் பிறரை கட்டாயப் படுத்தி திணிக்க விரும்ப மாட்டான்.//
திருச்சிக்காரரே, உங்களது இந்தியர்களின் சகிப்புத்தன்மை சாதி வெறியிலும், பார்ப்பனிய மோகத்திலும் நன்றாகவே தெரிகிறது.
ஆர் எஸ் எஸ் அரசியலைத்தான் வேறு வார்த்தைகளில் பேசுகிறீர்கள் நீங்கள்
நல்லது சாதி வெறியை அழித்து, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க தான் போகிறோம். அப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், “சாதியை நீங்கள் விட முடியாது, விடக் கூடாது, விடுவதற்கு நாங்கள் விட மாட்டோம், ஏனெனில் சாதியையும் சாதிக் காழ்ப்புணர்ச்சியையும் வைத்துதான் நாங்கள் அரசியல் செய்கிறோம்” என்று சொல்லப் போகிறீர்களா இல்லை சமத்துவத்தில் இணையப் போகிறீர்களா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
//
நான் இசுலாமிய சகோதரர்களுடன் சேர்ந்து மசூதியில் தொழவும், நோன்பு இருக்கவும் (நிஜ நோன்பு) தயார். இசுலாமிய மார்க்கத்தை சேர்ந்த சகோதரர்கள் அதே போல சர்ச் சில் பிரார்த்தனை செய்யவும், இந்துக்களுடன் மத வூர்வலங்கக்ளில் கலந்து கொள்ளவும் முன் வருவார்களா?
//
இதுக்கும் அந்த வெறியர்கள் சொல்லுவதற்கும் இடையே உங்களுடைய குள்ளநரித்தனம் ரொம்பவும் வெளிப்படுகிறது. அவர்கள் நான் படுகிறேன். துளுக்கனே நீயும் பாடு என்கிறார்கள். நீரோ பண்டமாற்று முறை மாதிரி பேரம் பேசுகிறீர்கள். உங்களை பகுத்தறிவாளர் என்று தவறாக விளங்கி வைத்துள்ளீர்கள். நாங்களோ ஒரேக் கொள்கையில் உறுதியுடன் இருக்கிறோம். அடிக்கடி கொள்கையை மாற்றிக் கொள்ளும் கயமைத் தனத்தை வெறுக்கிறோம். அதே சமயம் எங்களுடைய மசூதியில் வந்து வழிப்படத் தயாரா என்று நங்கள் சவால் விட்டதில்லை. அது எங்களுக்குத் தேவையுமில்லை. கூட்டம் சேர்ப்பது தான் எங்கள் வேலை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். எங்கள் வழியில் எங்களை விட்டுவிடுங்கள். உங்களை ஒருபோதும் நாங்கள் வலுக்கட்டாயமாக எங்கள் வழியில் திணிப்பதை வெறுக்கிறோம். இஸ்லாமும் அதை கண்டிக்கின்றது.
முஸ்லிம்கள் மார்க்கத்தின்படி இறைவன் ஒருவனை தவிர மற்ற எவரையும்,எதனையும் வணங்க மாட்டார்கள்.இஸ்லாத்தில் எம்மதமும் சம்மதம் கிடையாது.ஏனென்றால் ஓர் இறைக்கொள்கையை அது தகர்த்து விடும் நீங்கள் ஏன் முஸ்லிம்கள் கோயிலுக்கு வரவேண்டும் என்று அவர்கள் மீது திணிக்கின்றீர்கள். ஒருவன் எல்லாமத கோவிலுக்கும் செல்வது தான் மத நல்லினக்கணம் என்பது அறியாமையின் அடையாளம்.முஸ்லிம் களுக்கு சகிப்புத்தன்மை நிறைய அவர்கள் மார்க்கம் கற்று கொடுத்துள்ளது. மீரட்,பாகல்பூர்,மும்பை,குஜராத்,ஒரிசா,காஷ்மீர் என நாங்கள் இவ்வளவு அடிபட்டும் நீங்கள் சகிப்புடன் இருங்கள் என்று பேசும் அளவிற்கு.
முஸ்லிம்கள் மார்க்கத்தின்படி இறைவன் ஒருவனை தவிர மற்ற எவரையும்,எதனையும் வணங்க மாட்டார்கள்.இஸ்லாத்தில் எம்மதமும் சம்மதம் கிடையாது.ஏனென்றால் ஓர் இறைக்கொள்கையை அது தகர்த்து விடும் நீங்கள் ஏன் முஸ்லிம்கள் கோயிலுக்கு வரவேண்டும் என்று அவர்கள் மீது திணிக்கின்றீர்கள். ஒருவன் எல்லாமத கோவிலுக்கும் செல்வது தான் மத நல்லினக்கணம் என்பது அறியாமையின் அடையாளம்.
adai முட்டாள் நாங்க ஒரு கடவுள் இன்னுதன் சொல்லுரூம் பின எப்படி சர்ச்சிலோ
அல்லது கோவிலிலோ பிரார்த்தனை செய்யமுடியும் முட்டாள் முட்டாள்
//adai முட்டாள் நாங்க ஒரு கடவுள் இன்னுதன் சொல்லுரூம் பின எப்படி சர்ச்சிலோ
அல்லது கோவிலிலோ பிரார்த்தனை செய்யமுடியும் முட்டாள் முட்டாள்// இதுதான் பிரச்சினையே. நீங்கள் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா? இந்த உலகத்திலே இருக்கும் யாராவது கடவுளைப் பார்த்து இருக்கிறார்களா? அப்படிப் பார்த்து இருப்பதாக கூறுபவர்கள் யாராவது இருந்தால், எல்லோருக்கும் அந்தக் கடவுளைக் காட்ட முடியுமா? இப்படி காணாத கடவுளை இருப்பதாக நினைத்து வழி படுவது உங்கள் விருப்பம். ஆனால் இன்னும் சிலர் வேறு சிலரை கடவுளாக வழி படுகிறார்கள் – அவர்களும் கடவுளை பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் அப்படி வழி படுவது உங்களுக்கு ஒப்பில்லை. அதன் மேல் வெறுப்புணர்ச்சி வருகிறது. அந்த வெறுப்புணர்ச்சி அதிகமாகி ஆங்காங்கே அப்பாவி மக்களை கொல்லும் அளவுக்கு போகிறது என்பது தான் நான் சொல்ல வந்தது.
நான் சொல்வது உண்மைதான் என்பதை நீங்களே காட்டி விட்டீர்கள்.
நீங்கள் உங்கள் உயிரைப்பர்த்து இருக்கின்றீர்களா? அதற்காக உங்களை ஜடம் என்றுக் கூறிக்கொள்வீர்களா ? உங்கள் முப்பாட்டனுக்கும் முப்பாட்டனை பார்த்து இருக்கிறீர்களா? அதற்காக நீங்கள் திடீரென்று பூமியில் இருந்து முளைத்தீர்கள் என்று கூறுவீர்களா ? உங்களுடைய மூளையை பார்த்து இருக்கின்றீர்களா? அதற்காக உங்கள் மண்டையை உடைப்பீர்களா? உங்கள் தாயையே பிறர் சொல்லித்தான் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு தாயே இல்லை என்று கூறுவீர்களா? இதெல்லாம் எப்படி உங்களால் நம்ப முடிகிறது? சிந்தனையால் தெளிவடயாத நீங்கள் எப்படி பகுத்தறிவாதி? அதற்கு என்ன மூலம்?
நீங்கள் உள்ளர்ந்துப் பார்த்தீர்களானால் சாதாரண மக்கள் அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என் வழி எனக்குண்டு என்றுதான் இருப்பார்கள். அரசியல் வா(ந்)திகள் தான் அதில் கலகம் உண்டுபண்ணுவார்கள். அது இவ்வுலகில் மதம் இல்லையென்றாலும் இன்னொன்றை வைத்து கலகம் பண்ணுவார்கள். குரங்கு கிளை விட்டு கிளை தாவும் என்று உங்களுக்கு தெரியாதா? முதலில் இந்த வா(ந்)திகளை ஒழியுங்கள். எல்லாம் தானாக அடங்கும்.
//
வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?
//
தமிழ்த் தாய் வாழ்த்துக்கும் தமிழ் மொழிப்பற்றுக்கும் உள்ள சம்பந்தம் தான் வந்தே மாதரமுக்கும் நாட்டுப்பற்றுக்கும் உள்ள சம்பந்தம்.
பக்கிம் சந்தர் சாட்டர்ஜியின் அந்த புதினத்தில் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை இழிவுபடுத்தும் வசனங்களும் உண்டு.(திருடர்கள் என்று வரும்)
அந்த நாவலைப் படித்திருக்கிறீர்களா முட்டாள் தலைமுறை. இல்லாத பட்சத்தில் அதைப்பற்றி பேசாமல் இருப்பது உத்தமம்.
http://en.wikipedia.org/wiki/Anandamath
யோவ் முட்டாளானிமஸ் விக்கில ஒரு வெங்காயமும் இல்ல இன்னாத்துக்கு லிங்கு குட்த?
டேய் முட்டாள் மம்போ நம்பர் எட்டு,
விக்கில தெளிவா அந்த நாவலைப்பற்றி குறிப்பிட்டு இருக்கு. அதில் நீ சொல்வது போல் கீழ் சாதி மக்களைத் திருடர்கள் என்று விளித்திருந்தால் அதை விக்கியில் போட்டு விளாசியிருப்பார்கள்
விக்கி கட்டுரையாளர்கள். நீ சொல்வது பொய் என்றும். நீ அந்த நாவலைப் படிக்கவேயில்லை
சும்மா எவனோ ஒரு அப்பன் பெயர் தெரியாத துலுக்கனோ, கம்யூனிஸ்டு நாயோ சொன ஊத்திட்டு எடுத்த வாந்தியை நக்கிட்டு வந்து பேசிருக்கன்னு தெரியுது.
அட நாயே அனானிமசு உனக்கு பேரே இல்ல உங்கப்பன்
ஆறு?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் தமிழ்மொலி பற்றுக்கும் இன்னா சம்பந்தாம் அனானி. எனக்கு தெரிஞ்ச பச்ச டமிலர்கள் நெறயா பேருக்கு தமிழ்தாய் வாழ்த்து தெரியாது தமிழ தவிர வேற மொழியும் தெரியாது அதுக்கு இன்னா இப்போ.
மு.நம்பர் 8,
அவர்களெல்லாம் பச்சத் தமிழர்களா ? சிவப்புத் தமிழர்கள்? கருப்புத் தமிழர்கள் எல்லாம் இருகிறார்களா ?
அவர்களுக்குத் தமிழ் தவிற வேறு மொழி தெரியாமல் இருப்பதினால் யாருக்கு நட்டம் ? எனக்கா?
தமிழகத்தில் 6 கோடி பேர் உங்களைப்போல் உங்கள் நண்பர்கள் அதாவது “பச்ச டமிலர்களைப்போல்” இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் திருத்துவது என் வேலையல்ல.
அவனுகளுக்கு தம் தாயே தெரியாது. எப்படி தாய்மொழி அவனுகளுக்கு வரும்?
//adai முட்டாள் நாங்க ஒரு கடவுள் இன்னுதன் சொல்லுரூம் பின எப்படி சர்ச்சிலோ
அல்லது கோவிலிலோ பிரார்த்தனை செய்யமுடியும் முட்டாள் முட்டாள்// இதுதான் பிரச்சினையே. நீங்கள் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா? இந்த உலகத்திலே இருக்கும் யாராவது கடவுளைப் பார்த்து இருக்கிறார்களா? அப்படிப் பார்த்து இருப்பதாக கூறுபவர்கள் யாராவது இருந்தால், எல்லோருக்கும் அந்தக் கடவுளைக் காட்ட முடியுமா? இப்படி காணாத கடவுளை இருப்பதாக நினைத்து வழி படுவது உங்கள் விருப்பம். ஆனால் இன்னும் சிலர் வேறு சிலரை கடவுளாக வழி படுகிறார்கள் – அவர்களும் கடவுளை பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் அப்படி வழி படுவது உங்களுக்கு ஒப்பில்லை. அதன் மேல் வெறுப்புணர்ச்சி வருகிறது. அந்த வெறுப்புணர்ச்சி அதிகமாகி ஆங்காங்கே அப்பாவி மக்களை கொல்லும் அளவுக்கு போகிறது என்பது தான் நான் சொல்ல வந்தது.
நான் சொல்வது உண்மைதான் என்பதை நீங்களே காட்டி விட்டீர்கள்.
தாயே வணங்குகிறோம்
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்
கோடிக் கோடிக் குரல்கள்
உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! ‘அபலா ‘#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
அறிவு நீ
அறம் நீ
இதயம் நீ
உணர்வும் நீ
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்
ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்
திருமகளே
மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்
Source : தமிழ் wikipedia
dear bastard vinvu,
You are correct.We should ask muslims to salute mao and stalin you third rate son of a bitch.
why 3rd rate ? can be first rate SOB. Commies are always useful idiots. (http://en.wikipedia.org/wiki/Useful_idiot)
only this time they are useful to many more anti-national elements.
திருச்சிக்காரரே கீழே உள்ள வந்தே மாதர தமிழ் அர்த்தத்தை படித்து விட்டு மற்ற மதக்காரர்கள் இதை ஏன் பாட வேண்டும் என்பதை சொல்லுங்கள். வந்தே மாதரம் தேசியாடல் இல்லை. தேசிய பாடல் ஜனகனமனகனதான் இதை ஆர்.எஸ்.எஸ் பாட மறுப்பது ஏன் என்பதை சொல்லுங்கள்.
திருச்சிக்காரரே மேலே உள்ள வந்தே மாதர தமிழ் அர்த்தத்தை படித்து விட்டு மற்ற மதக்காரர்கள் இதை ஏன் பாட வேண்டும் என்பதை சொல்லுங்கள். வந்தே மாதரம் தேசியாடல் இல்லை. தேசிய பாடல் ஜனகனமனகனதான் இதை ஆர்.எஸ்.எஸ் பாட மறுப்பது ஏன் என்பதை சொல்லுங்கள்.
////////// அந்த வெறுப்புணர்ச்சி அதிகமாகி ஆங்காங்கே அப்பாவி மக்களை கொல்லும் அளவுக்கு போகிறது என்பது தான் நான் சொல்ல வந்தது.//////
திருச்சிக்காரரே அப்பாவி மக்களை கொல்வது யார் என்று தங்களின் மனசாட்சியை கேட்டுக்கொள்ளுங்கள் முஸ்லிம் வேடத்தில் திரியும் ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர் காவி கூட்டம் என்பது தெரியும். தன் சுயமுகவரியில் வெளியில் வராத காவி கயவர்களின் தீவிரவாதம் தான் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது என்பதை நடுநிலையோடு ஆய்வு செய்தால் தெரியும்.
அப்தல்லா, இந்த பாடலை பாட வற்புறுத்தக் கூடாது என்றே கூறி இருக்கிறேன். உலகம் முழுவதும் இசுலாமிய மார்க்கத்தின் பெயரால் பயங்கர வாதங்கள் நடப்பது உங்களுக்கு தெரியாதா? இந்தியாவிலே இருக்கும் இசுலாமிய சகோதரர்கள் சகிப்புத் தன்மையை கைக் கொண்டு அதை உலகின் பிற பகுதிகளில் வாழும் இசுலாமிய சகோதரர்களுக்கு பரப்புங்கள் என்றுதான் சொல்கிறேன். நான் உங்களிடம் இந்த கோரிக்கையை வைக்காமல் பாகிஸ்தானில் அல்லது இந்தோனேசியாவில் இருக்கும் இசுலாமிய சகதோரரிடமா இந்த கோரிக்கையை வைக்க முடியும்? இந்து மதத்திலே தீவிர வாதம் நுழைக்கப் படுவதை நாங்கள் எதிர்ப்போம். மூளையை அடகு வைத்த மூடரும், ரவுடிகளும் இந்து மதத்தை கைப்பற்றுவதை நாங்கள் எதிர்ப்போம்.
திருச்சிகார்… //உலகம் முழுவதும் இசுலாமிய மார்க்கத்தின் பெயரால் பயங்கர வாதங்கள் நடப்பது உங்களுக்கு தெரியாதா// எனக்கு தெரியாது எங்கங்க நடக்குதுன்னு கொஞ்சம் நீங்கதான் சொல்லுங்களேன்… பிளீஸ்
அப்பாவிகள் இறப்பது உங்கள் கண்களுக்குத் தெரியாது. மதம் எனும் போதை உங்கள் அறிவை மறைக்கும் வரையில்.
திருச்சி, உலகம் முழுவதும் இசுலாமின் பெயரில் பயங்கரவாதம் நடப்பதாக எழுதியது நீங்கள். விவரம் தெரிந்தால் சொல்லுங்க இல்லேன்னா போயிட்டேயிருங்க அத விட்டுட்டு மதவாதின்னெல்லாம் பினாத்தக்கூடாது ok
Dear Mr. Mumbo no.8, மனசாட்சி இல்லாத மத அபிமானி நீங்கள். நான் எதுவும் விளக்கி சொல்ல அவசியமே இல்லை. படிப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும். நமது நாட்டிலே மும்பையிலே, கோவையிலே, அமெரிக்காவிலே இரட்டைக் கோபுரங்கள், பிரிட்டனிலே மெட்ரோ ரயில், பாலித் தீவிலே, செசநியாவிலே ..இப்படி …. என்று உலகம் முழுவதும் இசுலாத்தின் கருத்துக்களின் அடிப்படியிலே நடை பெற்ற தாக்குதல்களை மூடி மறைத்து, ஒன்றும் நடக்கவில்லை என்று ஒத்தடம் கொடுக்க நான் ஒன்றும், ஓட்டுக்கு வாலாட்டி, கோடிகளை சுருட்டும் அரசியல் வாதியல்ல.
“Whenever something like Fort Hood happens you say, ‘This is not Islam.’ I believe that. But you keep telling us what Islam isn’t. You need to tell us what it is and show us how its positive interpretations are being promoted in your schools and mosques. If this is not Islam, then why is it that a million Muslims will pour into the streets to protest Danish cartoons of the Prophet Muhammad, but not one will take to the streets to protest Muslim suicide bombers who blow up other Muslims, real people, created in the image of God? You need to explain that to us — and to yourselves.”
Thomas freidmann from NY times.
//இந்து மதத்திலே தீவிர வாதம் நுழைக்கப் படுவதை நாங்கள் எதிர்ப்போம். //
ஹா.. ஹா… இந்து மதம் என்பதின் கீதாச் சாரமே இவர் எதிர்க்க விரும்பும் பயங்கரவாதம்தான்.
‘அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் நான் அவதரிப்பேன்’ எனப்தன் பொருள் சாதி அழியும் போதெல்லாம் அவதரிப்பேன் என்பதுதான்.
சாதி அழிந்து விடுமோ , அப்படி அழிந்து விட்டால் நாம் அதை வைத்து காழ்ப்புணர்ச்சி பிரச்சாரம் செய்வது எப்படி என்ற எண்ணத்திலே கும்மி அடிக்கும் நண்பர்களே, உங்களுக்கு பிடித்து இருக்கிறதோ, இல்லையோ சமத்துவ சமூகம் அமைப்போம். அது வரையிலே மனம் போல காழ்ப்புணர்ச்சி பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள்.
கடவுள் என்று ஒருவர் இருப்பதாக கூறி அவதாரம் எடுக்கும் வரைக்கும் சாதியை விடாமல் பிடித்து வைக்கப் பார்க்கலாம். ஆனால் மக்களின் மன நிலையை உயர்த்தி சமத்துவம் அமைப்போம்.
முட்டாள் தலைமுறை,
உலகில் எப்பொழுதெல்லாம் கம்யூனிசம் தலை தூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் கடவுள் அவதரித்து அதை அழிப்பார். சோவியத் கதி என்ன ஆச்சு ? பெர்லின் சுவர் என்ன ஆச்சு ? வட கொரியாவைப்பார்….சோத்துக்கு வழி இல்லாமல் பீ தின்கிறார்கள். தென்கொரியா பிச்சை போட்டால் தான் அங்கே அடுத்தவேளை கஞ்சி.
வெனிசூலாவைப்பார்….சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்கிறார்கள்.
க்யூபாவைப்பார்….நாட்டைவிட்டு எப்படா ஓடலாம் என்று இருக்கிறார்கள்.
இதெல்லாம் பார்க்கும் போதே கடவுள் உண்மையில் இருக்கிறார், அவர் கம்யூனிசம் தலைதூக்கும் நாடுகளின் மக்களை வதைத்தே தீருவார் என்று தோன்றுகிறது.
கம்யூனிஸ்டுகள் எல்லாம் வாழவே தகுதியற்றவர்கள்.
//ஆனால் மக்களின் மன நிலையை உயர்த்தி சமத்துவம் அமைப்போம்.//
இந்து மதத்தை பிரச்சாரம் செய்து கொண்டேவா?
அடா அடா இதில் இவ்வ்ள்வு வரலாறு, இது பஜ்ன் அல்லது பக்தி கீர்த்த்னை மாதிரி தெரிகிற்து. ஒரு இந்து பாடலை முஸ்ல்லிம் பாட யோசிப்பான். அத்ற்காக ஒரு பெரிய வடிவம் கொடுக்க வேண்டாம்