முகப்புசீமான் உள்ளிட்ட 'முற்போக்கு' நரிகளின் தேவர் சாதிவெறி
Array

சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி

-

சீமான் உள்ளிட்ட முற்போக்கு நரிகளின் தேவர் சாதிவெறி

vote-012தமிழ்த் தேசியம், தமிழீழம், பெரியார் கொள்கை பற்றி எல்லாம் மேடைதோறும் முழங்குபவர்களும் சரி, தமிழகத்தில் “முற்போக்கு சக்திகள்’எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் இந்த உண்மைகள், அண்மைக்காலத்தில் ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளன.

மேடை தோறும் ஈழம், பிரபாகரன், தமிழ்த் தேசியம் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசியும், தன்னைப் பெரியாரின் பேரன் என்று முழங்கியும் வந்த திரைப்பட இயக்குநர் சீமான்,  பிரபாகரன் படம் பொறித்த சட்டையணிந்து வந்து தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு தன் சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார்.  சீமானின் தேவர் சாதிப் பற்றை பெரியார் தி.க. ஆதரவு இணையதளம் மட்டும் விமர்சித்துள்ளது. இதுவரை “தம்பி’சீமானை சீராட்டிவந்த மற்ற ஈழ ஆதரவு சக்திகளோ, இப்போது அவரைக்  கண்டுகொள்ளாது கைகழுவி விட்டுவிட்டன. இவர், ஏற்கெனவே தனது “தம்பி’ திரைப்படத்தில் தேவர் புகைப்படத்தை இடம்பெறச் செய்தபோதே விமர்சிக்கப்பட்டார். அதனைத் தவறென ஒத்துக் கொண்ட சீமான்,  இப்போது தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டதை, “இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டதை”க் குறிப்பிட்டு நியாயப்படுத்தியுள்ளார்.  அதாவது, சாதி ஒடுக்குமுறையாளருக்கும் ஒடுக்கப்பட்டவருக்கும் ஒரே மரியாதை. இதுதான், இந்தப் “பெரியாரின் பேரனது’சாதி ஒழிப்பு சமத்துவம்!

இதே பித்தலாட்டத்தைத்தான் புரட்சி பேசும் சி.பி.எம். கட்சியும் செய்திருக்கிறது. சி.பி.எம்-மின் “தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக உத்தப்புரத்தில் போராடுகிறது. அதே கட்சியின் பொதுச் செயலர் என்.வரதராசன், அறுவை சிகிச்சை முடித்து கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறே, சாதி ஒடுக்குமுறையின் சின்னமான தேவர் சிலைக்கு ஓடோடிப் போய் மாலை போட்டு மரியாதை செய்தார்.

சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தியை ஒட்டி, சாதிவெறியாட்டம் ஆடிய சட்டக் கல்லூரியின் ஆதிக்க சாதி மாணவர்கள், தாழ்த்தப்பட்டோரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், “ஒரு மாணவனைப் போய் இந்த அடி அடித்தார்களே’ என்று சுயசாதிவெறியோடு  ஒரு வருடமாக பேசியும் எழுதியும் வந்த வலது கம்யூனிஸ்டு கட்சியின் தா.பாண்டியன், தன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிங்கத்தை பசும்பொன்னுக்கே அனுப்பிவைத்து தேவருக்கு மரியாதை செய்தார். முதலாளிகளின் சீட்டாட்டக் கிளப்பான “லயன்ஸ் கிளப்”பில் முத்துராமலிங்கம் என்ற சொந்த சாதிக்காரர் இருப்பதால், அந்த கிளப்பின் விழாவை தா.பாண்டியன் வாழ்த்தும் விளம்பரம் “ஜனசக்தி”யில் வெளிவந்துள்ளது. தேவர் சாதிவெறித் தலைவர்களான முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர் போன்றோருக்கு அவ்வப்போது சிறப்புக் கட்டுரைகளை வெளியிடும் ஜனசக்தியில் பணிபுரியும் ஜீவபாரதியோ, டஜன் கணக்கில் தேவர் பெருமை பேசும் நூல்களையும் வெளியிடுபவர். ஜனசக்தி ஆசிரியர் தா.பாண்டியனோ, முக்குலத்தோர் சாதிகளில் ஒன்றான அகமுடையார் சங்க கல்வி அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்டு “அதில் என்ன தவறு?”என நியாயப்படுத்துபவர்.

“முதுகுளத்தூர் சாதிக் கலவரத்தை நிறுத்தவேண்டுமானால், முத்துராமலிங்கத்தைப் பிடித்துச் சிறைக்குள் தள்ள வேண்டும்”எனக் கோரியவர் பெரியார். அவர் ஆரம்பித்த தி.க.வின் “விடுதலை’”பத்திரிக்கையோ, வழக்கம்போல இந்த ஆண்டும் “தேவர் ஜெயந்தி’விழாவிற்கு விளம்பரம் வாங்கிப் பிரசுரித்துக் கொண்டது. சமூகநீதி, சாதி ஒழிப்பு, சமத்துவம் என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடும் வீரமணி கும்பலின் பித்தலாட்டம், தேவர் ஜெயந்தியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. திராவிடர் கழகத்தின் தென்மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவராக இருக்கும் தே.எடிசன் ராஜா, நாடார் சங்கத்திலும் செயல்படுகிறார். மும்பையில் நாடார் சங்கம் நடத்தும் காமராசர் நினைவுப் பள்ளி விழாவில் எடிசன் ராஜாவுக்கு “நாடார்”வால் முளைத்து, “எடிசன் ராஜா நாடார்’ஆக மாறினார். பாரம்பரியமான திராவிட இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தி.க.வின் தகவல் தொடர்பு செயலாளருமான வழக்கறிஞர் அருள்மொழியின் தாயார் சரசுவதி சென்ற ஆண்டு மறைந்தபோது, “இந்து” நாளேட்டில் தந்திருந்த அஞ்சலி விளம்பரத்திலும் தனது “உடையார்”சாதி அடையாளத்தைத் தெளிவாகவே காட்டியிருந்தார்.

தேவர் சாதியைச் சேர்ந்த திரைப்பட பிரபலங்கள், தங்கள் சாதி விழாக்களில் அண்மைக்காலமாகக் கலந்துகொண்டு சாதி வளர்க்கின்றனர். இவர்களில் செந்தில், மனோரமா, விவேக் வரிசையில் இப்போது தி.மு.க.வைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவும் இணைந்துவிட்டார். நகைச்சுவை நடிகர் கருணாஸ், தேவரைப் புகழ்ந்து “முக்குலத்தின் முகவரி”எனும் பாடல்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இதில் முகவரியை எழுதுவதற்கு வைரமுத்து “திருப்பாச்சி அறுவாளை’’த் தூக்கிக் கொண்டு குதித்திருக்கிறார்.

“ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்”என்ற கொள்கை முழக்கத்தைக் கொண்டிருக்கும் வே.ஆனைமுத்துவின் மார்க்சிய-பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியோ, “வன்னியர்களே ஒன்றுசேருங்கள்”என்று சொல்லவில்லையே தவிர, வன்னியகுல சத்திரிய “சமூகநீதி’யைத் தாண்டி வரவே இல்லை.

“அம்பேத்கரின் சாதி ஒழிப்பு செயல்திட்டங்களை ஆழமாகப் புரிந்து கொள்ள’ச் சொல்லி சி.பி.எம். கட்சிக்கு “பாடம் நடத்தும்”தலித் முரசில், “இந்து ஆதிதிராவிட மணமகனுக்கு அதே உள்பிரிவில் மணமகள் தேவை”என விளம்பரம் வருகிறது. சாதி காக்கும் இச்செயல் ஒவ்வோர் இதழிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“சாதியை மறந்து தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டும்”என கருணாநிதி பேசுகிறார். ஆனால், அவரின் மகள் கனிமொழியோ, திருப்பூர்-மல்லம்பாளையம் நாடார் சங்கக் கல்வி நிறுவன விழாவிற்கு நாடார் சாதி தி.மு.க. அரசியல்வாதிகளான சற்குணபாண்டியன், கீதாஜீவன், பூங்கோதை போன்றவர்களுடன் கலந்து கொண்டு “நாடார்களாக ஒன்றுபடுகிறார்’.

பெரியாரின் கொள்கைகளைத் தங்கள் கொள்கையாகக் கருதுவோரும், தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கக் களம் கண்டிருப்பவர்களும், சாதி ஒழிப்பிற்குப் பிறகுதான் சோசலிசம் எனத் தலித்தியம் பேசுபவர்களும், தாங்கள் கொண்டிருக்கும் இலட்சியத்திற்குக் கூட விசுவாசமாக இல்லாமல் சாதி உணர்வாளர்களாகவோ, வெறியர்களாகவோதான் இருக்கிறார்கள். தங்களின் தோலைக் கீறி சாதி இரத்தம் ஓடுவதை அவர்களாகவே ஒவ்வோர் நிகழ்விலும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியும் விடுகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தை சாதி எனும் நுகத்தடி அழுத்திக் கொண்டிருக்கிறது. மனிதநீதிக்கு எதிரான சாதி ஆதிக்கவெறியை அழிப்பதற்கு, மாபெரும் சமூகப் புரட்சியே தேவைப்படுகிறது. அப்புரட்சி, சாதி வெறியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, முற்போக்கு வேடம் போடும் இத்தகைய களைகளுக்கும் எதிரானதுதான். இத்தகைய சுயசாதி மோகம் கொண்டோர்களையும், சாதியத்தைப் பாதுகாத்துவரும்  ஓட்டுப் பொறுக்கிகளையும் களைந்தெறியாமல் சாதிவெறிக்கெதிரான போராட்டத்தில் முன்னேறிச் செல்லவே முடியாது.

-புதிய ஜனநாயகம், டிசம்பர்’ 2009

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. தமிழ் தேசியத்தின் எல்லை சாதியம் தான். இதை கடந்த தமிழ் தேசியவாதிகளே இல்லை என்று சொல்லலாம்.  தேசியவாதமே சாதிய மனப்பான்மை போன்றதே அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை. கட்டுரை மிக அருமை.

  • caste is everybody”s breath in our country.we cant eradicate that by this type of articales.no need to bark…through the education this disease will be cure.that is the only one solution

  • தேவர் சிலைக்கு வரதராசன் மரியாதை செலுத்தியதில்  எந்த தவறும் இல்லை…உதப்பபுரம் பிரச்சனையில் ம க இ க எத்தனை போராட்டம் நடத்துநிங்க?    

 2. சேதுராமனின் மூவேந்த்தர் முன்னேற்றக் கழகத்தின் புதிய மகளீர் அணி செயலாளராக பூனைக்கண் புகழ் புவனேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். பிரபலங்களுக்கு ‘சேவை’ செய்வதை தொழிலாகக் கொண்ட இந்த நடிகை கூட சாதிவெறியர்களுக்கு தேவைப்படுகிறார். இனி அடுத்த தேர்தலிலும், அல்லது பெண்கள் பிரச்சினைகளுக்காகவும் இந்த அம்மையாரிடம் முற்போக்கு முகாமின் ‘தோழர்கள்’ பேச்சு வார்த்தை நடத்துவதற்கு செல்வார்கள் என நம்பலாம்.

  • ////பூனைக்கண் புகழ் புவனேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்///

   ஆரியன் எங்க வரைக்கும் ரோடு போட்டு இருக்கான் என்பதற்கு பூனை கண்ணே ஆதாரம்

   • என்னப்பா, அரியன் ரோடு போட்டதுக்கு கவலை படறீங்களே.  Karl Marx, Mao,Stalin, Lenin இவங்க எல்லாம் திராவிடரா. 

 3. நெத்தியடி பதிவு! சீமான் போன்ற ஒரு கோமாளியை பார்க்க சகிக்கவில்லை..கோடம்பாக்கம் நல்லாத்தான் போயிட்டிருந்துச்சு… தேவையா இந்த தலைவராகும் ஆசை.. ஜெயா திசைக்கு கும்பிட்டதுலேருந்து சீமானுக்கு சுய புத்தி போச்சுன்னு வச்சுக்கலாம் அதுக்கப்புறம் ஆபாசம் தாங்கல … எல்லாம் அந்த காங்கிரஸ ்கபோதிங்கள சொல்லனும்.. உசுப்பேத்தி உசுப்பேத்தியே இந்தாள லூசாகிட்டாங்க இப்ப பித்தம் தலைக்கேறி அது நாம் தமிழர் பிரான்டாகி, தமிழன பிராண்டுது.. இதபாத்தா பொருக்குமா நம்ம அரசியல் மாமா தாப்பாவுக்கு … கூட்டனி வச்சு தேர்தலுக்கு சீமான இழுத்துக்கிட்டுவந்து விளக்குமாத்தடி வாங்கி கொடுக்காம ஓயப்போறதில்ல…

 4. எவன் தான் ஒழுங்கு என்று தான் கேட்க தோன்றுகிறது.அவன் தான் சொல்லிவிட்டானே  அவனும் தமிழன் தானே அவன் என்ன இத்தாளிகாரனா? என்று கேட்ட கேள்விக்கு ஒரு நாயும் பதில் சொல்ல வில்லை.மாறாக நக்கல் நடையில் பேசப்படும் கேள்விக்கு அறிவுள்ள எந்த மனிதனும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. புதிய சனநாயகம் என்கிற பெயரில் நீங்க மேற்கொண்டு வரும் புரட்டு சனநாயகம் தமிழ் நாடு அறியாததல்லவே?

  • porko, இரண்டு கேள்விகள், முத்துராமலிங்கம் தமிழனா – தேவர் சாதி வெறியனா? கருணாநிதி தமிழனா – அரசியல் துரோகியா ? இன்னும் நிறைய கேள்விகளும் நிறைய நிறைய பதில்களும் இருக்கு சார்…வாங்க

 5. அப்படி முத்துராமலிங்கம் என்னதாய செஞ்சாரு சொன்ன நாங்களும் தெரிஞ்சிபோமுள்ள

 6. பாவம் இனிமே இவங்க எப்படி கல்லா கற்றது… ஏதோ ஈழத்த வெச்சி கடை விரிச்சாங்க, அது சரியாய் போகலே இப்போ வேற பிசினஸ்… இதை போய் தப்புனா எப்படி தோழரே ??

 7. அய்யா ஒற்றுமை ரோம்ப முக்கியம் ஆதிக்கசாதி தலைவர்களின் புகழ்பாடி அவர்களுக்கு மாலை போட வேண்டும் இமனுவேல் கூட்டத்தில் கலந்துக்கொண்டு தமிழனனுக்கு மதமும் இல்லை அவனுக்கு சாதியும் இல்லை அவன் ஒருபோதும் சாதி வேறியோடு இருந்ததில்லை என்று பேசவோண்டும் மூதூரில் தமிழ் முஸ்லிம்களை அந்த ஊரை விட்டே துரத்தியடித்த பிராபகரனை தமிழினதலைவன் என்று கூறவேண்டும் நிங்கே சும்மா ஒற்றுமையை கேடுத்து கட்டுரை ஏழுதிக்கிட்டு இருக்கிங்கே ஒற்றுமைனா என்னனு தெரிஞ்சுகிறனும்ன இவர்களை பார்த்து தெரிஞ்சிகிங்கே பெழைக்க தெரியாத புள்ளைய இருக்கதிக

  • உன்னை மாதிரி அரைகுறை அறையவேககடுல்லாம் இருந்தா தமிழ் தேசியம் எங்க?

  • ஆம், ஒற்றுமை வேண்டும், எண்ணிலடங்கா வேற்று மதத்தின் வழிப்பாட்டு சின்னங்களையும், உயிர்களையும் அழித்து, இன்னமும் மதம் என்ற போர்வையில் செம்மனே செய்து கொண்டிருக்கும் ஒற்றுமை வேண்டும், பிறரை விமர்சிக்கும் முன் தங்கள் வரலாற்றை சற்று எண்ணி பார்க்க வேண்டும்,தாமே  மிகவும்   தூய்மையான பின்னணி கொண்டவர்போல் பிறரை விமர்சிப்பதால்,இருக்கும் பிரிவினை மேன்மேலும் அதிகரிப்பது தான் காலத்தின் நிலையாக மாறும்,வரலாறு  

 8. I am not sure what to say about the ignorance of the auther of this article. Seeman has gone to pay respect to a Devar person and a dalit person. So from this guy say he is a “Jathi veriyan”? Whether this auther knows that Seeman do not belong to these two groups and he is a Nadar?

  • //Seeman has gone to pay respect to a Devar person and a dalit person// Don’t just say a Devar person, he was a Jaathi veriyan. He does not deserve respect. He instigated his men to get rid off Immanuel. Read the things that happened few decades back

 9. Seeman will go and garland Kamraj statue also. He deserves to be called Jaathiveriyan. Anyone who believes in caste system and makes people believe in it, by attending the ceremonies of caste leaders like Gurpuja, is a jaathi veriyan. Seeman is a hypocrit.

 10. நம் தலைவர்கள் எல்லாம் இந்தியாவில் பிறந்ததனாலேயே ஏதாவது ஒரு சாதியில் இருந்திருப்பார்கள். ஆகவே ரஷியாவில் பிறந்த லெனின், ஸ்டாலின், சீனாவில் பிறந்த மாவோ, ஜெர்மனியில் பிறந்த காரல் மார்க்குசு போன்றவர்களே சாதிகளற்ற தலைவர்கள். அவர்களைத் தவிற எந்தத் தலைவருக்கும் யார் மருவாதை செலுத்தினாலும் அவன் சாதி வெறியன் தான்…

 11. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சாதிய உணர்வு கண்டிப்பாக இருக்கும். அதை மட்டும் வைத்துக்கொண்டு அவனுடைய இனவுணர்வை கொச்சைப்படுத்துவது தேவையற்றது.
  ஈழம் பற்றி எரியும் நீங்கள் எல்லாம் எங்கே போனீர்கள் .அந்த சாதி வெறியன் சீமான் மட்டும்தானே தமிழின எண்ணவோட்டத்தை உலக அரங்கத்திற்கு கொண்டுவந்தான்,இப்போதும் அதையே செய்து கொண்டிருக்கிறான்.வீடு பற்றிஎரியும் பொது வியாக்யானம் பேசிக்கொண்டு திரியக்கூடாது.நம்மிடையே உள்ள முரண்பாடுகளை ஒதிக்கி வைத்துவிட்டு இனவழிப்புக்கெதிராக முகம் கொடுப்பதே அறமாகும்.

  • நண்பர் திரு.Soundsarasolan,

   இன்றைய கால கட்டத்தில் தமிழகத்தில் ஈழத்திற்காக பகிரங்கமாக குரல் எழுப்பி முழுநேரப் பணியாக மக்களிடத்தில் தீவிரமாக செயல்படுபவர் சீமான் மட்டுமே என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில் அவர், பதவி அரசியல் தலைவர்களிடம் கலந்துரையாடுவது, சாதி விழாக்களில் பங்கேற்பது போன்றவை ஈழ விடயத்தில் மக்களை மேலும் அணி திரட்டுவதற்கு தடையாக இருக்கும்.

 12. சீமான் ‘தமிழீழம்’, ‘தமிழ்த் தேசியம்’ என்ற வட்டத்திற்குள் மட்டும் இருந்து செயல்பட்டால் நல்லது. அதையும் மீறி அவர் தமிழக சாதி(வெறி)த் தலைவர்கள் பங்கேற்கும் விழாக்களில் கலந்து கொள்வது சாதியை ஊக்குவிப்பதே ஆகும்.

 13. இந்த கம்மனாட்டி முக்குலத்தோர் கபோதிங்களுக்கு சுத்துப்போன ராமிலிங்க சாதி வெறியன் மட்டும்தான் உண்மையான ஆம்பிளையா தெரியாரு. அதனாலதான் அவனை வைத்து இப்போ இக்கலத்திய மிச்ச மீதி எச்சகலையெல்லாம் ஒரேடியா கூத்தடிக்கிறானுங்க. உன்மையில் சொல்லப்போனால், இப்போ இருக்கிற முக்குலத்தோர் பிசிநாறிங்க அனைத்தும் வெறும் பொட்டை பசங்க. வேரொண்றும் வசயம் இல்லை.

  • அதெப்படி மொத்த பசங்களும் poட்டப்பசங்கன்னு சொல்ற இது தப்பில்லையா? முக்குலதோர்னு சொல்லிகாமலே இன்னைக்கு வரையும் பெரியார ஏத்துக்கிட்டு வால்றவங்க நெறைய பேர் இருக்காங்க தெரியுமா? நீ எழுதுறத பார்த்தா நல்ல ஜாதி வெறியில எழுதுற மாதிரி தெரியுது.

   • எல்லத்தையும் பொட்டையனுங்கன்னு சொல்லமுடியாது சொல்லவும் கூடாதுஎல்லாம் ஒரு கோவத்துல எழுதுறதுதான் அந்த மாதிரி பாதிப்ப சாதிவெறிநாயுங்க ஏற்படுத்தியிருது, இன்னொன்னு பொட்டைன்னு எழதறது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான்

  • மனம் கேட்ட செயல்களை செய்த இம்மானுவேல் என்னகே, ஈழ தமிழனுக்கு பச்சை துரோகம் செய்த திருமா எங்கே, ஆம்பிலன்னு கட்டுறதுக்கு வெட்டியா அவுகனுகிற அவசியம் கிடையாது. சீமான் மறத்தமிழன். தமிழனுக்காக சாகும் வரை போராடுபவர்.

 14. அருமையான நேரத்தில் வந்துள்ள மிகச்சரியான கட்டுரை! மேலும் தமிழகம் முழுவதும் நீங்கள் சென்று ஒரு சர்வே எடுத்துப்பார்த்தால் தமிழினவாத குழுக்களின் தலைமைகள் முழுக்க முழுக்க ஆதிக்க சாதியின் கட்டுப்பாட்டிலியே உள்ளது என்பதே உண்மை. தமிழினவாதிகள் பெரும்பாலும் தான் சார்ந்த சாதிக்கு வெறியர்களாகத்தான் இருக்கிறார்களே ஒழிய இதில் புதிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை . சீமானை போன்றவர்கள் ஒன்றும் விதி விலக்கானவர்கள் இல்லை. தமிழ் ஈழம் என்ற ஒன்றை தவிர வேறு எதற்காகவும்(தமிழ் நாட்டில் பற்றி எரியும் விலைவாசி உயர்வு, ஆதிக்க சாதி கொடுங்கோன்மை,கல்வி தனியார்மயம், வேலை இல்லா திண்டாட்டம், அரசு மருத்துவமனைகளின் கேட்பாரற்ற தன்மை …. என்று இன்னும் பட்டியல் நீளும் ) இவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு ஆதரவாக எதையும் கிழித்ததில்லை என்பதே உண்மை.

 15. ஆதிக்க சாதி வெறியை அம்பல படுத்திய விதம் அருமை! சீமானை புரிந்துகொள்ள நல்ல சந்தர்ப்பம்.

 16. முதலில் தமிழக நெய்தல் நிலத்தின் தொன்குடிகளான பரதவர் (எ) பரவர் இனத்தை முன்னேற விடாமல் தன் சாதியாகிய நாடர் இனத்தின் முன்னேற்றத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு கடற்கரைப் பகுதியின் பரத இனத்தின் முன்னேற்றத்தினை கெடுத்த கர்ம வீரர் காமராஜரை என்னவென்று சொல்லுவீர்கள்…..

  • உங்களுக்கு காமராஜர் என்ன கெடுதல் செய்தார்? நீங்க இப்போது வினவுல கமெண்ட் போடுறதுக்கு மூலதனமே காமராஜர் கொண்டு வந்த கல்வி திட்டம் தான். அத மறந்துடாதிங்க…..

   • காமராசா என்ன கெடுதல் செஞ்சாரா? அடேங்கப்பா நல்ல விட்டு,ஏ கண்ணு ! நம்மூரு முள்ளுசெடி(அதானுங் வேலிகாத்தான் செடி) தெரிமா? அத எந்த பயித்தியகார திருட்டு நாயி கொண்டு வந்தான்னு தெரியுமா?வெசாரிச்சு பாத்துட்டு சொல்லுங்க மோவனு,

    • யோவ் வேலிகாத்தான் முள்ளு அடுப்புக்கு மக்கள் பயன் படுதுவதர்க்காக
     கொண்டு வந்தாரு யா
        

   • அய்யோ மக்களே!!! காமராஜர் இல்லாங்காட்டி தமிழ்நாட்டுக்கே படிப்பறிவு இருந்திருக்காதா?

  • யோவ் நீ யாருயா சைடு கேப்புல மாட்டுவண்டி ஓட்ட பாக்ற?என்னமோ பரதரு புரதருன்னுட்டு, காமராஜா ஒண்ணும் யேக்கியத இல்லநீ கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாம விவாதத்த கடலுக்கு திருப்பறியேகாமராஜாவுக்கு முன்னால அப்டியே பத்துகாலு பாய்ச்சல முன்னேறிட்டு இருந்திங்களாக்கும்? 

   • யோவ்! என்னய்யா இந்த வினவுல தேவரை மட்டுமே பத்தி எழுதுறீங்கோ. மொதல்ல தமிழ்நாட்டுல தன் சாதிப்பற்றோடு இருந்த மற்ற (காமராஜைப் போல) தலைவர்களைப் பற்றியும் எழுதுங்கோ!!!

    • அது சாதி வெறி பிடித்த ஒரு நாய் கர்ம வீரர் காமராஜரை பர்வர்களுக்கு எதிரியாக சித்தரிக்க தென்னகத்தில் நாடார்களிடம் அடிவாங்கி கொண்டிருக்கிற அந்த நாய்கள் தான் இப்போது காமராஜருக்கு பல்வேறு புனை பெயர்களில் வந்து ஐயா காமராஜருக்கு சாதி முத்திரை குத்த நினைக்கின்றன. . என்ன பண்ண பத்தொன்பதாம் நூர்ற்றண்டுகளின் தொடக்கத்தில் விருதுநகரில் கலவரங்களை தூண்டி விட்டு நாடார்களை சூறையாடி அவர்களது முன்னேற்றத்திற்கு முட்டு கட்டையாக நின்ற சக்திகள் தான் இப்போது அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதர்களை தூண்டிவிட்டு அதில் குளிர் காய நினைக்கின்றன. ஏற்கனவே அந்த எச்சிகலை நாய் முத்துராமளிங்கத்தை , தங்களது அறியாமையால் பின்பற்றிய மக்கள் வன்முறை பாதைக்கு இட்டு செல்லப்பட்டு அவர்களது முன்னேற்றமே தடை பட்டு கிடக்கிறது . இப்ப அந்த நாயோட வழியில இன்றைக்கு இன்னும் சில சொறஈ நாய்கள் அந்த மக்களை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்லுவதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது

 17. எங்கங்க பிடிக்கிறீங்க இவ்வளவு தகவல்களை! புதிய ஜனநாயகம் இப்படி ஆதார பூர்வமா எழுதுவதை, அம்பலப்படுத்துவதை பலரால் தாங்க முடியவில்லை. அதனால் தான் ஆதாரமே இல்லாமல் புறம் பேசி திரிகிறார்கள். அல்லது திட்டி தீர்க்கிறார்கள்.

 18. பாண்டியன் கிருத்துவருன்னு கேள்விப்பட்டேன். அவர் தேவரா? தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துக்கறவங்க எல்லாம் சாதி வெறி பிடிச்சவங்களா? வினவு பாராட்டுனும்னா தலித் மாநாட்டில் மட்டும் தான் கலந்துக்குனுமா? மணமகள்\மணமகன் விளம்பரம் என்ன நாம நினைச்சிக்கிற மாதிரி போடறதா? மணமகள்\மணமகன் வேண்டும் மாதிரி போடவேண்டாமா?. பெரியார் முத்துராமலிங்கத்தை சிறைக்குள் தள்ள சொல்லிட்டதால தற்போது விடுதலை விளம்பரம் போட கூடாதா?
  எல்லாம் கேள்விகளா வந்துருச்சு.

  • டே. நாதாரி. நீ தான் டா சாதி வெறியன். எந்த சாதியா இருந்தா என்ன ? ஓ.பன்னீர்செல்வம் நாட்ட ஆண்டப்ப நீ என்ன டா பண்ண? தற்கொலை பண்ணிக்க வேண்டியது தானே!!!?/
   பொறம்போக்கு

 19. ரஷ்யாவின் கொஞ்ச நிலா பரப்பை.., கொஞ்ச நாள் ஹிட்லர் புடிச்சான் அதுக்க அங்கே இருந்தவங்க எல்லாம் தற்கொலையா பண்ணிகிட்டாங்க ? அடுச்சி ஓட்டலே? கொஞ்சம் விவரமா பேசுங்க அன்பு…

 20. இதில் என்ன தவறு உள்ளது , மற்ற ஜாதியை மதித்தால் நல்லது என்பது குடவா வினாவுக்கு தெரியாது . தாழ்த்தப்பட்ட ஜாதியை காட்டி பதவி , இடஒதிக்கிடு போன்றவற்றை வாங்க வில்லையா . வினவு தான் எந்த ஜாதியையும் சேர்த்தவன் என்று சொல்ல முடியுமா !? தேவரை , ராமஸ்வாமி படையாச்சியை புகழ்ந்தால் ஜாதி வெறி . அம்பேத்கார புகழ்ந்தால் ஜாதி வெறி இல்லையா ?

  • புளிக்குட்டி,  ஜாதி என்பதையே மதிக்ககூடாது மிதிக்க வேண்டும் எனபதுதான்முற்போக்கு, சரி நீங்கள் சொல்வது போல மற்ற ஜாதியை மதிப்பது என்பது எப்படி? ஒரு ஜாதி இன்னொரு ஜாதிக்கு மேலாகவோ , கீழாகவோ இருக்கும்போதுஎப்படி மதிப்பது சமத்துவமில்லாத இடத்தில் எப்படி மதிப்பு வரும், அப்படி மதிப்பு வைப்பது என்பது அடிமை மனோபாவத்தில் அமைவது.
   ஆமாம் ஆ ஊனா எதுக்கு அம்பேத்கர இழுக்கறீங்க
   ஆதிக்க சாதியில் பிறந்தவன் ஆதிக்க சாதி கொழுப்பில் சங்கம் வைத்து தனது சாதி ஆதிக்கத்தை தக்க வைக்க முயல்கிறான், இப்படி சங்கம் வைப்பவன் தலைவனல்ல ரவுடிபரதேசி.  ஆனால் எந்த தவறும் செய்யாமல் இந்த மானங்கெட்ட இந்து மதத்தில் பிறந்ததற்காக தாழத்தபட்டவன் என்ற பெயரை சுமந்து தன்னைவிட திறமை குறைவான கேப்மாரிகளிடம் தாழ்ந்து போக நிலையில் வாழ்கிறானே மனிதன் அவன் தனது அடிமை சங்கிலியை உடைக்க சங்கமாய் இயக்கமாய் சேருவது ஒருவகையில் சரியானதுதான். அதற்கான நோக்கத்தில் சங்கம் ஆரம்பிப்பவர் உண்மையிலே தலைவர்தான், 

   • உண்மைதான். தாழ்த்தப்பட்டவன் சங்கம் வைப்பது, தான் சமுகத்தில்லும் பொருளாதாரத்திலும் முன்னேறத்தான். எத்தனை பள்ளன், பறையன் தான் யார் என்பதே வெளியில் சொல்லமுடியாமல் வாழ்க்கிறான் தெரியுமா? சங்கம் அவனுக்கு தான் தேவை. எல்லா வளங்களையும் சுரண்டி முன்னேரியர்வளுக்கு இல்லை.

   • ஏன்னே புலிக்குட்டி அவுரே பாவம் கார் கீய தொலச்ச மேரி நாதியத்து போய் சோகமா கேக்குறாரு அவராண்ட போய் கலாய்கிறியே

 21. புதிய ஜனநாயகத்தில் மனிதத்திற்கு இடமில்லையா? மனிதத்தை வெளிப்படுத்தும் மனிதர்களை ஆராய்ந்து அதனை வெறிநாய்களுக்கு உணவாக்கி அந்த நாய்கள் கடிபடுவதை கண்டுகளிக்கிறதே… செக்கு எது? சிவலிங்கம் எது? என்று தெரியாத நாய்களுக்கு உணவளிப்பதிலும் கவனம்தேவை.

 22. சீமான் அவர்களுக்கு,
   

  உங்களோடு நேரடியாக இந்த விடயத்தை விவாதிக்கும் அளவுக்கு என்னுடைய அரசியல் வட்டம் பெரியதல்ல என்பதாலும்; “அண்ணை” அல்லது “தம்பி” என்று பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் அன்பாக அழைக்கும் இன்னொரு நபர் நீங்கள் என்பதாலும்; இதை இங்கே எழுதுகிறேன். இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயம் பற்றிய உங்கள் மீதான குற்றச்சாட்டை இணையத்தளங்களில்  நான் படிப்பது இது முதல் தடவையல்ல. ஆனால், இதுபோன்ற விடயங்களில் இதுவே உங்கள் மீதான கடைசி குற்றச்சாட்டாக இருக்கவேண்டும் என்பது என் போன்றவர்களின்  எதிர்பார்ப்பு, விருப்பம். புரட்சி, விடுதலை பற்றிய சிந்தனைகள், செயற்பாடுகள் இயந்திரவாழ்க்கை வாழும் ஒரு சாமானியனுக்கு சுலபமாக பொங்கி பிரவகிப்பதில்லை. அதற்காக உங்களை போன்றவர்கள் நிறைய பேசவேண்டியிருக்கிறது. அதற்கு மேலாக எழுதவேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக, எத்தனையோ தடைகளையெல்லாம் தாண்டி அதற்கு செயல் வடிவம் கொடுக்க நீங்கள் நிறையவே விலை கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். மனதில் உள்ளதை உள்ளபடி மறைக்காமல் பேசுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான். உங்களுடைய சொல், செயல் இரண்டிற்கும் இடையே ஒருபோதும் வேறுபாட்டை என்னால் காணமுடிவதில்லை. இருந்தாலும், இடையில் இப்படியான உங்கள் பற்றிய விமர்சனங்களையும் கொஞ்சம் கருத்திற்கொண்டு செயற்படவேண்டுமேன்பது என்னைப்போன்றவர்களின் வேண்டுகோள். 

 23. இந்த கட்டுரைகளில் விமர்சிக்க பட்டவர்கள் சீமான் கனிமொழி பாண்டியன் ஜீவபாரதி அருள்மொழி பூங்கோதை ஆனைமுத்து .
  விமர்சிக்க பட்ட ஜாதிகள் தேவர் நாடார் வன்னியர் உடையார்.
  ஆனால் கட்டுரைக்கு தலைப்பு சீமானுக்கும் ஹேவர் சாதிக்கும்.’சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி’.
  வினவின் ஆசிரியர் குழுமத்தின் உல் நோக்கம் புரிகிறது.

 24. 1952 இல் முத்துராமலிங்க தேவர் அருப்புகோட்டை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.
  1957 பொது தேர்தலில் அந்த அருப்புகோட்டை பாராளுமன்ற தொகுதியையே கலைத்து விட்டு தொகுதி எல்லைகளை மாற்றி அமைத்து (இந்தியாவிலாயே அருப்புகோட்டை மட்டும்) திருவில்லிபுத்தூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டால் தோற்கடித்து விடலாம் என்று காமராஜ் நாடார் சதி திட்டம் தீட்டினார்.
  தேவ சகாய நாடார் (ஐ ஜி ) அருள் நாடார் ( ராமநாதபுரம் s p ) வேலுசாமி நாடார் 10 மேற்பட்ட நாடார் ஜாதியின் காவல் துறை அதிகாரிகாலை நியமித்தார்.இருந்து தேவர் வெற்றி பெற்றார்.
  முதுகுளதொர் இடை தேர்தலில் காங்கிரசுக்கும் பார்வார்ட் கடிக்கும் சண்டை . அதன் பிறகு நாடார் தேவர் சண்டை. அதன் பிறகு காமராஜ் தேவர் ஹரிஜன் சண்டையாக் மாற்றிவிட்டார்.
  தேவரை தோற்கடிக்க ஆப்படி என்ன காமராஜ் நாடாருக்கு வக்கிர புத்தி ?
  காமராஜ் தனது பதவியை தக்க வைக்க தேவர்கல்லுக்ம் பள்ளர்கல்லும் சண்டையை மூட்டினார். ஆனால் தெய்வம் அண்ணா எம் ஜி யார் கலைகர் வடிவில் இரண்டு ஜாதியையும் ஒன்று சேர்த்து காமராஜ் நாடாரையும் காங்கிரஸ் கட்சியையும் ஒழித்து விட்டது.

  2 . சிவகாசியில் கள்ளநோட்டு தொழில்சாலையை ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு உருவாக்கி கொடுத்தத்தி யார் ?
  3 . காமராஜ் நாடார் ஆட்சி காலத்தில் நாடார்களுக்கு ஆரம்ம்பிக்கப்பட்ட பள்ளிகள்/கல்லூரிகள் எத்தனை ?ஆசிரியர்கள் பணிக்கு எத்தனை நாடார்கள் அமத்தப்பட்ட்னர் ?
  4 .சந்தன மரங்களை வெட்டி மர பேட்டைகளை நாடர்கள் ஆரம்பிக்க அனுமதி கொடுத்தது யார் ?

  வினவு ஆசிரியர் குளுமத்திரிக்கு ,
  நீங்கள் உண்மையிலேயே நாடு நிலைமை யாளர்களாக இருந்தால் நான் கட்ட கேள்விகளுக்கு நேரிடையாக பத்தி கூறவும்.
  அல்லது விரிவான கட்டுரை எழுதவும்.மாட்டீர்கள் என்று தெரியும்

 25. பொதுவாகவே தமிழ் , தமிழினம் என்று பேசுபவர்கள் அவர்கள் எந்த முகாமில் இருந்தாலும் அடிப்படையில் சாதி வெறியர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் ஈழம் முல்லை பெரியார் போன்ற மக்களின் கவனத்தில் உள்ள சிக்கல்களுக்கு மட்டும் தமிழ் தமிழினம் என்று உணர்ச்சி பொங்க பேசுவதும் , குறிப்பாக ஈழப்பிரசசனையில் ஈழத்தமிழர்களை தமிழர்கக்லாக பார்த்ததை விட பண்டார வன்னியனின் குடிகள் என்றே ப.மா .கா பேசி வந்தது. “மறத்தமிழன்” வீரப்பன் கூட வன்னியர் தான் என்று பேசுவதும் , ஆங்கிலேயரை எதிர்த்த ஒரே “குற்றத்திற்காக ” சாதித் தலைவர்களாக மாற்றப்பட்ட கட்டபொம்மன் புலித்தேவன் ஆகியோரை கூட அந்தந்த சாதியின் குலப்பெருமை பேசவே பயன்படுதுகின்றனர். தமிழ்ப்பற்று என்று உரக்க கத்தும் இவர்கள் வன்னிய தமிழ்ப்பற்று தேவரினத் தமிழ்ப்பற்று நாடார் தமிழ்ப்பற்று என்று பிளவுபட்டே நிற்கின்றனர். தமிழ்ப்பற்றில் உயர்ந்து நின்ற சைவச் சாதிகள் லட்சக்கணக்கான நிலமற்ற ஒடுக்கப்பட்டசொந்த “தமிழ் ” மக்களை சாதியின் பெயரால் ஒடுக்கி வருவதை பற்றி இந்த தமிழ்ப்பற்றாளர்கள் மறந்தும் வாய் திறப்பதில்லை

 26. பார்ப்பாணும் மாவீரன் சீமானுக்கு விரோதி… வினவுக்காரணும் அண்ணன் சீமானுக்கு விரோதி. மானங்கெட்ட வினவே… சீமானின் தமிழர்ப் பற்றுக்கு நீ சான்று தர தேவையில்லை. மூடிக்கொள். வாழ்க சீமான்.. வளர்க “‍‍ நாம் தமிழர்” இயக்கம். ஒழியட்டும் தமிழின துரோகிகள்.

 27. பார்பன இந்து பாசிஸ்டுகள் : இந்துக்கள் மீதான அந்நிய!! (இவர்களுக்கு முஸ்லீம்களும், கிருத்தவர்கள் மட்டும் தான் அந்நியர். நாம எங்க இருந்து வந்தோம்னு மறந்துடுவாங்க…) ஒடுக்குமுறையை எதிர்க்க இந்துக்களாய் ஒன்றினைவோம்!

  தமிழினவாதிகள் : தமிழகள் மீதான ஒடுக்குமுறையை எதிர்க்க சாதி இந்துக்களாய் மண்ணிக்கவும், தமிழர்களாய் ஒன்றினைவோம்!

  உழைக்கும் மக்கள் : கொய்யால ரெண்டுபேரும் ஒரே விசயத்தை எப்புடி மாத்தி மாத்தி சொல்றானுங்க பார்ரா….
  ஒன்றுபட சொல்ற நீங்க தான டா, எங்களை பிரிச்சு வெச்சிருக்கீங்க!
  நாங்க தான் முதல்ல ஒன்றினையனும் உங்களை துரத்த…

  • indhukal engalluku ethirial alla , muthalil avargal tamilar endru ninaikadum appoluthu tamilar ottrumai oongum. Nam Tamilar eyakkam ennrum tamilarukaka padupadum. Vallka thalaivar Prabakaran, Valarka Tamilar otrummai.

 28. சீமான் தேவர் என்று நீ அவர் ஜாதி சான்றிதழ் பாத்து தெரிஞ்சிகிட்டீயோ – அட பதருன்களா – அவர் ஒரு தமிழன் – வீர தமிழன் 

 29. சீமான் எந்த ஒரு சாதிக்கும் அப்பாற்பட்டவர் – வினவு-ல முட்டாள் தனமா பரப்புரை செய்ஞ்சா மக்கள் நம்பிருவானகள??

  • அப்பறம் ஏனுங்க சீமானூ அந்த சாதி வெறுபுடிச்ச திருட்டு நாயி சிலைக்கு வோயி மாலை வோட்டாரு?

 30. தேவர் சத்திய பத்தி எழுதலைன்ன இவங்களுக்கு தூக்கம் வராது மொதல்ல இந்த இட ஒதுக்கீட தூக்கணும் 

  • [obscured] உனக்கு என்னடா இடஒதுகீடு செய்யுது .ஒதுக்கீட தூக்கிட்டு இன்னும் பல காலம் மங்களம் பாடலாம் என்று நினைக்கிறியா . 

 31. ஈ வி கே எஸ் இளங்கோவன் சீமானின் தாயை கேவலபடுத்தி பேசவில்லையா ?சீமான் தான் பெரியாரின் பேரன் என்று சொல்கிறார் ?
  இளங்கோவன் தான்தான் பேரன் என்றும் சீமான் தகாத வழியில் பிறந்து இருக்கலாம் என்றும் சொல்கிறான்.

  இந்த இளங்கோவனை வெட்டி சாய்க்க வேண்டாமா

  • சீமான் பல போராட்டங்கள ஈடுபட்டு ஜெயிலுக்கு போயிருக்காரு ..மருதையன் எத்தன தடவ ஜெயிலுக்கு போயிருக்காரு சொல்லுங்கங்கட    

   • மருதையன் நிறைய தடவை ஜெயிலுக்கு போயிருக்காரு, ஆனாசி.பி.எம் தலைவருங்க போயஸ் தோட்டத்துல பல ஆண்டு கைதிகளா இருக்கிறீர்களே!

    • மானம் கெட்டவர்களே…ந.வ. க்கு அருகில் இருப்பவர்களும் தலித்தான் தெரயுமா? மருதானை தவிர மட்டற்ற யாருமே மக்களுக்காக வாழ்ந்ததில்லையா? உங்களுக்கும் ஹிந்துத்துவ களுக்கும் வித்தியாசமில்லை

     வினாவில் நடக்கும் விவாதமே அதன் தரத்தை கட்டுகிறது

     • நண்பரே மன்னன், முகிலன் என்று பெயர்களை மாற்றி விவாதிப்பதால் உங்கள் கருத்துக்களுடன் மற்றவர்கள் விவாதிப்பது சற்று சிரமமாக இருக்கும். நாங்கள் கருத்தைத்தான் முக்கியமாக பார்க்கிறோம். அதனால் உங்கள் அடையாளத்தை அடிக்கடி மாற்றுவது எங்களை இழிவுபடுத்துது போலுள்ளது. நன்றி

 32. ஒரு பொது முயற்சியில் பாடுப்பட்டு வரும் சீமானை ஒன்றும்

  பேசாமல் விட்டுவிடவும். வினவுக்கு இதுவும் ஒரு காட்டிக்கொடுப்பே.

 33. சாதிக்குடையின் கீழ் தம்மை பகிரங்கமாக தம்மை இணைத்துக்கொள்ளும் கீழ்த்தரச்சிந்தனை மீண்டும் மேலோங்குகிறது.

 34. பிற மத்த்தையும் சாதியையும் தாழ்த்துவதால் எப்படி உயர்ந்தவர்களாக இருக்க முடியும்?

  அனைவரும் மனிதர்கள்தானே.

  அரசியல் தலைவர்கள் அனைவரையும் சாதி மத கண்ணோட்டத்துடன் வினவு விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. அனைவரும் ஒருவித்த்தில் மனித சமுதாயத்திற்கு நன்மை புரிந்தவர்களாகத்தான் இருக்கின்றார்கள். குறைபாடுகள் தவிர்க்க முடியாத ஒன்று.

 35. இந்த தா பாண்டியன் & நல்லகண்ணு போன்றவர்கள் கம்யூனிஸ்ட் அல்ல.. தேவர் சாதி வெறியர்கள்.. தென்காசி லோக் சபா தொகுதியில் இவர்களது சாதி திமிர்.. தென் மாவடங்களில் தேவர் சாதி திமிருக்கு எதிர போராடும் தேவேந்திர மக்கள் முன்னேற கூடாது என்று, கடந்த இரு முறையும் அவர்கள் சொல்லு ஏற்ப நடக்கும் தாழ்த்த பட்ட மக்களில் ஒரு பிரிவினரை மட்டுமே நிற்க வைத்தார்கள்,, ஏன் ORU அருந்ததி இன தமிழனை MP வேண்டியது தானே… அப்படி நிற்க வைத்தல் தேவர் மற்றும் ஆதிக்க சாதி ஓடுகள் கிடைக்காது..வீரன் சுந்தர லிங்கம் பஸ் ப்ரிச்சனையில் இந்த தேவர் சாதி வேரியல்களை அடைகியது தேவேந்திர மக்களே.அதனியோட்டி நடந்த கலவரங்களை மனசில் வைத்து இந்த தேவர் வெறியர்கள் தேவேந்திர மக்களை புர்க்கணிகிரர்கள் (DNT THINK THAT IM TALKING ABOUT INTER CASTE PARTIALLITY. BUT THE REAL TRUTH IS THE ADIDRVIDA ARE IN MINORITY IN saOUTH TAMILNADU AMONG THE DALITS, THE MAJORITY PEOPLE IS dEVANDRA. THEY ONLY OFTEN FIGHTING WITH UPPER CASTE DOGS FOR DALIT FREEDOM. SO ALL THE UPPER CASTE DOGS ARE AGAINST FRO DEVANDRAS IN IN VARIOUS OCCASTIONS..)

 36. யாழ் இணையத்தில் வெளிவந்த ஆசான் என்பவருடைய கருத்து.

  நாம் அடிக்கடி செய்யும் எமது ஒற்றுமையை குலைக்கும் செயற்பாடுகளில் ஒன்று:

  எந்த ஆதாரமும் இல்லாமல், சில நிகழ்வுகளை விருப்பத்துக்கு திரித்து அல்லது கோர்த்து, அவசரப்பட்டு கற்பனைகளின் உதவியுடன் எம்மவர்கள் மீது சந்தேக முத்திரை குத்தி இன்பமுறும் சிறுசெயல்.

  ஒரு சிலரின் இந்தப் புத்தியும், அதை உடன் நம்பி சேறு வீசும் அனைவரினதும் பின்புத்தியும் மாறும்வரை எம்முள் பிளவுகள் அதிகரித்துச் செல்லும்.

  எதிரிகளை கண்டபடி தாக்குங்கள், பிளவு படுத்துங்கள் – கவலையில்லை. இன்னும் எமது வீரர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பவர்களை தாக்குங்கள், அப்பாவித் தமிழர்களை கொலை செய்பவர்களை தாக்குங்கள், இதற்கு உதவுபவர்களை தாக்குங்கள்.

  ஆனால் கடந்த வருட படுகொலைகளின் பொது எதிர்க் குரல் கொடுத்தவர்களை, என்ன பின்புலமோ, தொடர்ந்து குரல் கொடுத்தவர்களை கற்பனை முடிச்சுகளின் அடிப்படையில் அவசரப்பட்டு தாக்காதீர்கள்.

  சில இணையத்தளங்கள் இந்த வேலைகளை செய்கின்றன. அதில் எம்மை உடைக்கும் வகையில் எழுதுபவர்களை அடையாளம் கண்டு அவதானமாக இருங்கள்.

  முதலில் திருத்த முயலவேண்டும். தொடர்ந்து பொறுமையுடன் முயலவேண்டும். முடியாவிட்டால் பின்னர் துரோகி ஆக்கிக்கொள்ளலாம்.

  ஈழத் தமிழர் மீது சந்தேக முத்திரை குத்த விரும்பினால், குத்துவதை பலதடவைகள் சிந்தித்து, உறுதியான ஆதாரங்களை தேடிப்பிடித்து, விளைவுகளையும் யோசித்து அதன் பின் செய்யுங்கள்.

  அவர்கள் அதை அறியாமையால் செய்திருக்கலாம். அதன் பாரிய பின் விளைவுகளை சிந்திக்காது சிறு – குறுகிய கால நன்மைக்காக செய்திருக்கலாம். நாம் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்களே. தவறுகளை பண்புடன் சுட்டி திருத்த முயல வேண்டும் – திருந்த சிறிது கால (சில மாதங்கள்) அவகாசம் கொடுக்க வேண்டும்.

  நீண்டகாலமாக சிங்கள, இந்திய பயங்கரவாதிகளுடன் இணைந்து தமிழரை அழிக்க தூண்டுதலாகவும், துணையாகவும் இருப்பவர்களை நான் இந்த எம்மவர்களினுள் அடக்கப் போவதில்லை. ஆனால் அவர்களுள் (எதிரிகளுடன் இணைந்து தமிழினப் படுகொலை செய்யாதவர்கள்) திருந்தி வந்தால், அதனை பகிரங்கமாக அறிவித்தபின் – குறிப்பிட்ட கால (சில வருடங்கள்) அவதானிப்பின் பின்னர் ஏற்றுக்கொள்ள தயாரானவர்களாக நாம் இருக்க வேண்டும்.

  அப்போது மட்டும் தான் நாம் பலமுள்ளவர்களாக மாறமுடியும்..

 37. [u]நிறைய நண்பர்கள்  சொல்ல நினைத்த  வார்த்தைகளை  ஆசிரியர் அப்பட்டமாக  சொல்லியிருப்பதற்கு  வாழ்த்துகிறேன் , தேவர்  ஒரு  சாதி வெறியன்  என்று  எல்லோருக்கும்  தெரிந்தும்  [/u]ஓட்டுக்காக  அவர்  பின்னால் செல்லுகிறார்கள் , அவர் மக்களுக்கு  செய்த  நன்மைகள்   என்று ஒன்றும்  இல்லை  , தலித்  மக்களை  அடிமையாக  வைதுகொல்லவே விரும்பியிருந்தார் . கள்ளர்  என்று  தான் சாதியின்  பெயராலேயே அவர்களின்  குணாதிசயம்  தெரியும்  மற்றவர்களுக்கு , முதுகுளத்தூர்  கலவரம்   ஓய  வேண்டுமென்றால்  தேவரை  பிடித்து சிறையில் தள்ளுங்கள்  என்று  “பெரியாரே ” சொல்லியிருப்பது  தேவரின்  உண்மை முகத்தை  அனைவரும்  அறிவீராக  (தேவர்  இளைஞர்கள்   உட்பட ) 

 38. பூனைக்கண் புவனேஸ்வரி அவர்களை வைத்து என்ன செய்ய போகிறார்கள் இந்த சேது ராமன் போன்றோர்கள், அவரை வைத்து கொண்டு ஒன்றே ஒன்று மட்டும் தான் செய்ய முடியும் , கைலாகாத தேவர் பேரவை போன்ற துண்டு துக்கடா கட்சிகளுக்கு பூனை கண் போன்றோர்கள் தான் சேருவார்கள் . நல்ல மனங்கேட்ட கட்சி டா அது , து .. 

 39. ஒடுக்கபட்ட மக்கள் -பற்றி -தமிழ் தேசியவாதிகளுக்கு அக்கறை -இல்லை

  -த சேகர்

 40.             சீமான் வாழ்க ……  சீமான் சாதியத்திற்கு அப்பாற்பட்டவர் அவர்மேல் இந்த புகார் ஏற்ற்று கொள்ள முடியாது ….    

  • யப்பா சாமி! கொஞ்சம் அடங்குறீங்களாஇப்டி சொல்லி சொல்லியே ஒரு ஆள (பிரபாகரன்) முடிச்சது பத்தாதா?
   சீமான பெரியார் முழக்கத்துல கிழி கிழின்னு கிழிச்சிருந்தாங்களே படிக்கலையா?

  • முத்துராமலிங்கம் எனும்  மூடனின் பின் செல்லாமல்பகுத்தறிவு போராளி தந்தை பெரியாரின் பாதையில் வாருங்கள் thavam

 41. மன வருத்தமாகவே உள்ளது . தமிழனின் தோல்வி சாதியில்தான் ஆரம்பிக்கிறது. கம்யுனிசம் பேசும் தோழர்களும் சாதியத்துடன் இருக்கும் போது இந்த இந்திய திரு நாட்டை திருத்தி கொண்டு வர முடியுமா என்று தோன்றுகிறது. இன்னொரு பக்கம் ஊழல் நாட்டை முழிங்கி கொண்டிருக்கிறது. இதை பார்க்கிற போது நம் போராட்டம் சாதி அழிப்பு, ஊழல் ஒழிப்பு, ……………………… என்ற வரிசையில் ஆரம்பிக்க வேண்டும். இப்படி பட்ட மனிதர்கள் முன் கம்யுனிச சித்தாந்தத்திற்கு வேலை இல்லை என்றே தோன்றுகிறது.

  • கம்யுனிசத்தை,மார்ச்சிய தத்துவத்தை ஒழுங்கா படிச்சிட்டு பேசுங்க சி பி எம் அளவுக்கு எந்த இயக்கமும் சாதி கொடுமைக்கு எதிரா போராடியதில்லை என்பது உண்மை வரலாறு…ம க இ.க வுக்கு சி பி எம் எ திட்ர துதான் பொழப்பு         

 42. சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தியை ஒட்டி, சாதிவெறியாட்டம் ஆடிய சட்டக் கல்லூரியின் ஆதிக்க சாதி மாணவர்கள், தாழ்த்தப்பட்டோரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை,…………….

  >>>>>>>>>>>>>
  இதில் ”வரும் வாங்கிக் கட்டிக்கொண்டதை” என்ற வரி உங்க வக்கிரத்தைக் காட்டுது.. கேவலமான எண்ணம். சிலவற்றை ஒத்துக் கொள்ளலாம்..

 43. தேவர் பத்தி பேசுனா ,ஜாதி வெரியன் , அம்பெட்கர் பத்தி பேசுனா சமத்துவம்…..என்னடா நாயம்?

 44. தேவர் , vannian பத்தி பேசுனா ,ஜாதி வெரியன் , அம்பெட்கர் பத்தி பேசுனா சமத்துவம்…..என்னடா நாயம்?