Wednesday, June 7, 2023
முகப்புதோழர் ஸ்டாலின் 130- வது பிறந்தநாள் சிறப்பு கவிதைகள்.
Array

தோழர் ஸ்டாலின் 130- வது பிறந்தநாள் சிறப்பு கவிதைகள்.

-

தோழர் ஸ்டாலினைப் பற்றி பேசுகிறேன்!

vote-012ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
ஒரு ரூபா புழுத்த அரிசிக்கு
ஏங்கி இரைஞ்சும் வாழ்வை வியந்தோதும்
பார்ப்பன பனித்திரையை விலக்கி,

ஓங்கி முதலாளித்துவத்தின் முகத்தில் அறைந்து
உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிறுவி,
கம்யூனிச பேரடியால் உண்மையில் உலகளந்த
தோழர் ஸ்டாலினின் ஆளுமை கண்டு
சிலிர்க்கிறது மார்கழி!

கடும் புயலாலும் கடல் சீற்றத்தாலும்
உலுக்கும் பூகம்பத்தாலும், பொசுக்கும் தீக்கிரையாலும்
எந்தச் சக்தியாலும்…
பெயர்க்க முடியாதது முதலாளித்துவம்
என்றிருந்த ஏகாதிபத்திய இறுமாப்பை,

கடும் உழைப்பால், பாட்டாளிவர்க்க அமைப்பால்
மார்க்சியத் துடிப்பால், லெனினிய நடப்பால்
தன்னிரக்கம் பாராத வாழ்வால்… தகர்த்தெறிந்த
ஸ்டாலின் இயக்கம் கண்டு
வியந்துபோய் இமைக்க  மறந்த
அண்டத்தின் விழிகளாய்…
அந்த சூரியனும், சந்திரனும்!

பற்களை இழந்த உள்நாட்டு நரிகள்…
சொற்களை இழந்த சுரண்டல் எழுத்தாளர்கள்…
இறக்கைகள் முறிந்த ஏகாதிபத்திய வல்லூறுகள்…
ஒப்பனை கலைந்த முதலாளித்துவப் பொய்கள்…
ரசிய புது செருப்பால் அடிவாங்கிய ஆரிய இட்லர்…
இத்தனை பகையும் சுற்றித்திரிந்தும்…
ஏகாதிபத்தியம் திராவகம் தெளித்தும்
கற்களை பிளந்தெழும் பசுந்தளிர்போல-எதிரியின்
கண்ணைப் பறிக்க அரும்பியது சோசலிசம்.

ஸ்டாலின் தலைமையில்
பாட்டாளிவர்க்க ரசியாவின் வளர்ச்சியைப் பார்த்து
ஆச்சரியத்தில் இயற்கை உயர்த்திய புருவங்களாய்
அழகிய மலைத்தொடர்கள்!

எதையும் தாங்கும் நெஞ்சழுத்தம்…
அலட்டிக்கொள்ளாத ஆழம்…
அலை, அலையாய் புரட்சிகர பிடிவாதம்…
ஏறி அடிக்கையில் எதிரியை மிச்சம் வைக்காத போர்க்குணம்…
தனக்கென துரும்பளவும் வாழாத தூய்மை…
நான் கடலைப்பற்றி பேசவில்லை…
தோழர் ஸ்டாலினைப் பற்றி பேசுகிறேன்!

பேசிக்கொண்டே போக
“ஸ்டாலின்” என்பது வெறும் பேச்சல்லவே…
முதலாளித்துவ சுரண்டலுக்கெதிரான வீச்சு!
அந்த… வீச்சோடு கொண்டாடுவோம்
ஸ்டாலின் பிறந்தநாளை.

தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடலாம்?

தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை
எப்படிக் கொண்டாடலாம்?
யோசனையோடு நடந்து போனேன்,

இனிப்பு வாங்கி
இயன்றவரை கொடுக்கலாமா…

எஸ்.எம்.எஸ். அனுப்பி
நண்பர்களிடம் பகிரலாமா…

புத்தாடை உடுத்தி
சேர்ந்துண்டு மகிழலாமா…

ஒரு இசை…
ஒரு கவிதை…
ஒரு நிகழ்ச்சி…

ஏதாவது ஒன்று என்ற எனது நினைவுகளைக் கலைத்தது
கூவக்கரையோரம் பிய்த்தெறியப்பட்ட
குடிசைப் பகுதியிலிருந்து ஒரு குரல்;

“டேய் உழைக்காத உங்களுக்கு இவ்ளோன்னா,
எங்களுக்கு எவ்ளோ இருக்கும்.
அடிச்சா புடுங்குறீங்க… இப்படியே போயிடாது
உங்களுக்கு இருக்குடா ஒருநாள் வேட்டு!”

அடக்கும் லத்திக்கம்பை விலக்கித் தெறித்தது
அந்தப் பெண்ணின் குரல்

இப்போது கற்பனை குறுகுறுத்தது.
ஸ்டாலின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பது
அந்தப் பெண்ணின் எதிர்ப்பார்ப்பில்
மண்டையில் உரைத்தது.

தோழர் ஸ்டாலினுக்கு யாரைப் பிடிக்கும்?

தோழர் ஸ்டாலினை எனக்குப் பிடிக்கும்
என்பது சரிதான்,
ஆனால் ஸ்டாலினுக்கு யாரைப் பிடிக்கும்?

படிக்கும் மாணவப் பருவத்தில்
மதம்பிடிக்கும் கருத்துக்களை
நீங்கள் வெறுப்பவரா…

துடிக்கும் இளமையின் காதலை
நீங்கள்
போராடும் தொழிலாளி வர்க்கத்திடம் போய் சேர்ப்பவரா…

கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி
தன்னலம், தன்குடும்பம் என நெருக்கும்
தாய், தந்தை கண்ணீரையும் உடைக்கும்
சமூகபாசம் படைக்கும் நபரா நீங்கள்…

சாதியெனும் பரம்பரை அழுக்கை
முதலில்
தன்முதுகில் சுரண்டி எறிய
சம்மதிப்பவரா நீங்கள்…

பாட்டாளிவர்க்க விடுதலை லட்சியத்திற்காக
கூடவே வந்த பலர் பாதிவழி போனாலும்…
“ஊர்வம்பு நமக்கெதுக்கு, நம் வழியைப் பார்ப்போம்” என
சொல்லிப்பார்த்து உறவுகள் தள்ளிப்போனாலும்…
எதிர்ப்பின் ஏளனம், துரோகத்தின் கவர்ச்சி
உரிய வர்க்கமே இன்னும் உணராமல்… தனியாய் ஆனாலும்
உலகத்தின் மரியாதையே
தன் கையிலெடுப்பதாய் நினைத்து…
உழைக்கும் மக்களின் உயரிய வாழ்வுக்காய்
கம்யூனிச இதயமாய் துடித்து…
ஓயாமல் போராடும் மனிதரா நீங்கள்…

உங்களைத்தான்
அட! உங்களைத்தான்
தோழர் ஸ்டாலினுக்குப் பிடிக்கும்!

-துரை.சண்முகம்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  • வினவு!  தோழர் ஸ்டாலின் 130வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் சிறப்பாகவே இருக்கின்றன, இன்னு எதாவது ஸ்பெஷலா add பண்ணலமே,ஆனால் ஒரு குறை பேனரை இன்னும் அழகாக செய்திருக்கலாம் ரொம்ப சுமாராகதான் இருக்கிறது,  

 1. போராட்டம் தான் ஸ்டாலின்னுக்கு நாம் செலுத்தும் மரியாதையை என்பதை உணர்த்திய துரைஷன்முகம் அவர்களுக்கு நன்றி.

 2. இங்க மட்டும்தான் என்ன மாதிரி சாதாரண ஆளுங்களுக்கும் புரீர மாதிரி கவிதை படிக்க முடியும். ஆனா இதையெல்லாம் கவித மாதிரியில்லாம வசனமா படிச்சா இன்னும் நல்லா புரியும்

 3. மேல்தட்டு வர்க்கம் கொண்டாடும் ஆடம்பர பிறந்தநாள் கொண்டடதிற்கு நடுவே ஸ்டாலின் பிறந்தநாள் கவிதை உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது .நன்றி வினவு .

 4. மிகவும் நேர்த்தியான் எளிமையான நடை. உழைக்கும் மக்களுக்கான எளிதில் புரியக்கூடிய கவிதை இப்படித்தான் இருக்கவேணும். கவிதை என்றாலே வார்த்தைகளுடன் விளையாடுவதிலும், காசு சம்பாதிப்பதிலுமே கவிதைகரர்கள் இருக்கிறார்கள். மக்களுக்கான கவிதை என்றும் தோற்றதில்லை.

 5. தோழர் ஸ்டாலின் கவிதைகள் அருமை. தோழர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாற்றப்பட்டுள்ள தளத்தின் வண்ணமும், படமும் நன்றாக உள்ளது.

 6. அருமையான கவிதை.தோழர் துரை.சண்முகம் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.

 7. தோழர் ஸ்டாலின் 130வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் அனைவருக்கும்வாழ்த்துக்கள், தோழர்கள் பார்வைக்குhttp://vitudhalai.wordpress.com/

 8. தோழர் உண்ணதமிக்க மனிதகுல மீட்டபாளர். தோழரின் அரசியல் தந்திரம்> யுத்ததந்திரத்தின் மூலமே நாசிக்களிடம் இருந்து மனித குலத்தை பாதுகாத்த வீரனின் செயலை வரலாற்றில் என்றும் இருட்டடிப்புச் செய்ய முடியாது.
  தோழரின் பிறந்த தினத்திற்கு எமக்கு நாமே வாழ்துக்களை சொல்லிக் கொள்வோம்.
  அருமையான கவிதை

 9. ஸ்டாலின் is a mass murderer. Ivar Thozharaa ? . I can say this in Old Russia or current China. this is not fascism ? . What is Socialism – distributing the wealth. Without wealth what are they going to distribute . I mean China, India and all… You need capitalism to raise wealth and then automatically socialism blooms from it. Irukravan kuduthaa thaan socialism, irukravanta irunthu pidindinaa fasicm.

  • லூஸ் பண்ணி உனக்கு சோசியலிசம் பத்தி என்ன தெரியும் பாசிசம் பத்தி என்ன தெரியும் உனக்கு ஏன் இவ்வளவோ வாய் கொழுப்பு வாய் முடு என்ன சரியாய்

 10. ஏப்ரல் 22 தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவோம், தோழருக்கு நன்றி.

 11. எது.எப்படியோ?தோழர் ஸ்டாலின் மாதிரி நெஞ்சுரத்தை வளர்த்துக்கொள்வதே!பிறந்தநாள் வாழ்த்தாக இருக்கும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க